EPI 236
டென்மார்க்கில் துர்காவின் சூட்டிங் சென்ற அடுத்த நாளை ஆரம்பமானது இந்த முறை அவருடைய பாதுகாப்பை 100 சதவீதத்திற்கு தானே நேரில் இருந்து உறுதி செய்து கொண்டான் ஆதி.
துர்கா தானே சூட்டிங் சென்று வருவதாக எவ்வளவோ கூறியும் ஆதி கேட்பதாக இல்லை.
ஒரு முறை அவளுக்கு விபத்து நேர்ந்து நினைவை மறந்து அவள் அவளை நெருங்க முடியாமல் ஆதி மிகவும் சிரமப்பட்டான் அந்த நிலை மீண்டும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
அதே 12 அடி உயரத்தில் இருந்து துர்கா கீழே பறந்து வர வேண்டும் அவள் பறந்து வரும் பொழுது எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க விக்ரம் மிகவும் ஜாக்கிரதியாக துர்காவையும் அவளை சுற்றி இருந்த அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்தான்.
ஆக்சன் என்று சொன்னதும் துர்கா வானிலிருந்து பறந்து வரும் தேவதை போல மிகவும் அழகாக ஸ்லோ மோஷனில் கீழே இறங்கி கொண்டு இருந்தாள்.
டென்மார்க்கின் பெயர் பெற்ற ஒரு பிரபல நகை தயாரிக்கும் நிறுவனத்திற்காக தான் இந்த ஷூட்டிங் எடுக்கப்பட்டு கொண்டு இருந்தது.
அவள் அணிந்திருந்த நகைகள் எல்லாம் மிகவும் அழகாகவும் நிறுத்தியுடனும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
துர்காவின் கழுத்து காது கை விரல்கள் என வைரத்தால் இழைக்கப்பட்ட புது வகையான டிசைன்கள் செய்யப்பட்ட நகைகளை அணிந்திருந்தாள்.
அவள் மேலே இருந்து பறந்து வரும் பொழுது ஏதோ ஒன்று குறையாக இருப்பது போல ஆதிக்கு தோன்றியது.
மேலே இருந்து பறந்து வந்த துர்கா தரையில் வந்து இறங்கும் பொழுது ஒரு அழகான குளத்திற்குள் இறங்குவது போல வடிவமைத்து இருந்தார்கள்.
கயிற்றில் தொங்கி கொண்டு வந்த துர்கா மெது மெதுவாக கீழே இறக்கி சரியாக அந்த குளத்தின் நடுவில் அவளை இறக்கினர்.
துர்காவின் கால்கள் இரண்டும் குளத்தை தொடும்பொழுது தான் ஆதி அந்த குறையை கண்டுபிடித்தான்.
ஷூட்டிங் நடத்தும் ப்ரடியூசர் இடம் சென்று தன்னுடைய எண்ணத்தைச் சொல்ல….
ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டிருந்த கிளிப்புகளை வரிசையாக போட்டு பார்த்த அந்த ப்ரொடியூசர் தனக்கு எதுவும் குறை தெரியவில்லை என்று கூற ஆதி பேசிக் கொண்டிருப்பதை பார்த்த துர்கா அவர்கள் அருகில் வந்தவள் “என்ன ஆதி எதுவும் பிரச்சனையா? ஏன் ஏதோ ஒரு டென்ஷனா இருக்கீங்க “என்று கேட்டாள்.
துர்கா நீ மேலே இருந்து பறந்து வரும் போது நீ போட்டிருக்க நகைகளை எல்லாம் ஃபோக்கஸ் பண்ணி ஷூட்டிங் எடுத்தாங்க ஆனா அதுலயும் ஏதோ ஒன்னு மிஸ் ஆகற மாதிரி எனக்கு தோணுது அதைத்தான் நான் ப்ரொடியூசர் கிட்ட சொல்லிட்டு இருந்தேன் என்றான் ஆதி.
அப்படி என்ன குறை ஆதி என்று கேட்டுக் கொண்டே ப்ரொடியூசர் பார்த்துக் கொண்டிருந்த சிறிய மானிட்டரில் சூட்டிங் எடுக்கப்பட்டிருந்த கிளிப்பிங்கை துர்கா ஆதியுடன் சேர்ந்து பார்த்தாள்.
துர்காவின் கண்ணிற்கும் எதுவும் பெரிதாக தெரியவில்லை. ஆதி எனக்கு எதுவும் பெருசா குறை இருக்கிற மாதிரி தெரியலையே நீயே சொல்லு அப்படி என்ன வித்தியாசம் இந்த கிளிபிங்கில் இருக்குன்னு என்றாள்.
மீண்டும் ஒருமுறை அந்த கிளிப்பை ஓட விடச் சொல்லி உன்னிப்பாக கவனித்த ஆதி உன்னோட காலைத்தானே துர்கா முதலில் சூப் பண்ணாங்க ஆனா பாரு உன்னோட கால் ரெண்டும் வெறுமனே இருக்கு எதுவுமே போடாம இருக்கு அது தான் எனக்கு குறையா தெரியுது என்றான்.
மீண்டும் ஆதி சொன்ன அந்த பிழையை துர்கா பார்க்க அவர்களுக்கும் ஆதி சொல்வது சரிதான் என்பது போல தோன்றவும் ஆதியைப் பார்த்த துர்கா இந்தியாவா இருந்தா நம்ம கொலுசு மாதிரி ஏதாவது ஒரு நகையை காலில் போட்டுக்கலாம் ஆதி ஆனா இங்கே அந்த பழக்கம் எல்லாம் எதுவும் இல்லையே அது எப்படி அவங்க யோசிச்சி இருப்பாங்க என்றால்.
பழக்கம் இங்கே இல்லை என்றால் என்ன நாம அதை மாத்திடுவோம் என்று சொல்லி சிரித்தவன் அந்த நகையை அவளுக்காக கொண்டு வந்த நபரை அழைத்தான். அவருக்கு அதில் ஏதோ சொல்ல அவர் சரி என்று தலையாட்டி விட்டுச் சென்றவர் சரியாக அரை மணி நேரத்தில் மீண்டும் வர அவர் கையில் ஒரு சிறிய பெட்டியை வைத்திருந்தார். அந்த பெட்டியை ஆதியின் முன்பு நீட்ட…
வாங்கிய ஆதி திறந்து பார்த்தான் அதில் அழகாக நிறைய நிறைய டிசைன்களில் சிறியதும் பெரியதுமாக நகைகள் இருந்தது.
அதில் அழகாக வைரக்கல் பதித்த ஒரு ஜோடி செயின் அவன் கண்ணை பறித்தது.
அந்த செயினை பார்த்ததும் இது துர்காவின் கால்களுக்கு மிகவும் அழகாக இருக்கும் என்று நினைத்தவன் அவளை அதில் அமர்த்தி அவளுக்கு கீழே அமர்ந்தவன் துர்கா காலை தூக்கி தன் மடியில் வைத்து அந்த வைர செயின்களை துர்காவின் கால்களில் மாட்டி அவள் காலை லேசாக தூக்கி அது அவளுக்கு அழகாக இருக்கிறதா என்று பார்த்தான்.
ஆதிக்கு மிகவும் திருப்தியாக போகவே அந்த வைரச் செயல்களையே துர்காவின் கால்களில் அணியச் செய்து அந்த ப்ரொடியூசர் இடம் வந்து மீண்டும் அதேப்போல ஒரு முறை ஷூட்டிங் எடுக்க சொல்லி கோரிக்கை வைத்தான்.
ப்ரொடியூசரும் ஆதியின் வேண்டுகோளுக்கு இணங்கி மீண்டும் ஒருமுறை துர்காவை தயார் படுத்தினர்.
அதேபோல மேலே இருந்து மெது மெதுவாக பறந்து வந்த துர்காவின் கால்களில் இருந்து போக்கஸ் செய்து படம் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் கடைசியாக அவள் பாதம் இரண்டும் குளத்தின் மேல் படுவது போல சூட்டிங் எடுத்து முடித்தனர்.
அந்த கிளிப்புகளை போட்டு பார்த்த போது அவை மிகவும் அழகாக வந்து இருந்தது அதை பார்த்த துர்கா ஆதியைப் பார்த்து எப்படி ஆதி இந்த ஐடியா உனக்கு தோணுச்சு இந்த செயினை என்னோட கால்ல மாட்ன பிறகு ரொம்ப அழகா இருக்கு என்றால்.
அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே என் பொண்டாட்டிக்கு எது போட்டா அழகாய் இருக்கும் என்று எனக்கு தெரியாதா என்றவன் சரி போலாமா என்றான்.
வெயிட் பண்ணு ஆதி நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன் என்றாள்.
துர்கா ஆதியிடம் சொல்லிவிட்டு உடைமாற்றம் உள்ளே செல்ல அவளுக்கு உதவி செய்ய ரியாவும் துர்காவுடன் சென்றாள்.
ஷூட்டிங் இருந்த போது அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கவனமாக கழட்டி ஒரு பெட்டியிலும் அவள் அணிந்திருந்த ஆடையை கழட்டி வைத்துவிட்டு வேறு ஆடை அணிந்தவள் தன் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து வெளியே வந்து ஆதியுடன் புறப்பட ரியாவும் ஸ்ரீயுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டு அவனோடு கிளம்பினாள்.
துர்காவை அழைத்துக்கொண்டு நேராக வீட்டிற்கு செல்லாமல் அங்கே இருந்த ஒரு பார்க்கிற்கு துர்காவை அழைத்துச் சென்றான்.
ஏன் ஆதி இங்கே கூட்டிட்டு வந்துட்ட என்றால் துர்கா.
அதான் ஷூட்டிங் முடிஞ்சிடுச்சி துர்கா இனி நம்ம இங்கே இருக்கிற நேரம் முழுவதும் நீயும் நானும் தனியா எங்கெல்லாம் சுத்த முடியுமோ அங்கே எல்லாம் போயிட்டு வரலாம் என்றான்.
உனக்கு ஆபீஸ் ஒர்க் இல்லையா ஆதி என்றால் துர்கா.
அதெல்லாம் நான் இப்பதான் முடிச்சிட்டேன் என்றான்.
இருவரும் கைகோர்த்தபடி பார்க்கில் நடந்து வந்து அங்கு போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தனர்.
ஆதியின் கையை பிடித்துக் கொண்டு அவன் அருகில் அமர்ந்த துர்கா, “ஆதி அந்த வைரச்சையின் ரொம்ப அழகா இருந்ததில்லை எனக்கு அது ரொம்ப பிடிச்சி இருந்துச்சு” என்றால்.
ஆமா துர்கா நானும் கவனிச்சேன் அந்த செயின் உன் காலுக்கு ரொம்ப அழகா இருந்துச்சு என்றான்.
ஆமாம் என்று தலையாட்டிய துர்கா ஆதியின் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
இருவரும் பார்க்கில் அமர்ந்து அங்கே வந்திருந்தவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
இது அவர்களுக்கு சற்று தள்ளி இருந்த இடத்தில் இரு இளம் ஜோடிகளும் அவர்களுடன் ஒரு சிறிய குழந்தையும் இருந்தது. அந்த குழந்தை கையில் பாலை வைத்துக் கொண்டு அவள் அம்மா அப்பாவுடன் விளையாடிக் கொண்டிருந்தது.
அதை பார்த்துக் கொண்டிருந்த துர்கா ஆதியை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனும் அந்த காட்சியை பார்த்துவிட்டு சரியாக துர்கா திரும்பிப் பார்க்க, துர்கா தான் எதற்காக பார்க்கிறோம் என்பதை அவன் புரிந்து கொண்டான் என்றதும் வெட்கத்தில் சட்டென தன் தலையை குனிந்து கொண்டாள்.
தன் தோளில் சாய்ந்திருந்த துர்காவின் முகத்தை தொட்டு தன்னை பார்க்குமாறு திருப்பியவன் “இப்போ எதுக்காக துர்கா வெட்கப்படுற, நீ நினைச்சதுல வெட்கப்பட என்ன இருக்கு” என்றான்.
துர்கா அவனைப் பார்த்து சிரித்தவள் “நமக்கு இதே மாதிரி ஒரு குட்டி பாப்பா இருந்தா ரொம்ப அழகா இருக்கும் இல்ல ஆதி” என்றாள்.
ஆதியும் சிரித்துக் கொண்டே ஆமாம் என்று தலையாட்டியவன் “சீக்கிரமா அதற்கான வேலையை ஆரம்பிச்சுடலாமா” என்றான்.
அவனைப் பார்த்து வெட்க புன்னகை சிந்தியவள் “நீ இருக்கியே ஆதி” என்று அவன் தோளில் அடித்தவள். “ஆதி எனக்கு ரொம்ப பசிக்குது” என்றால்.
அவர்கள் அமர்ந்திருந்த பார்க்கில் இருந்த ஒரு கடையை பார்த்துவிட்டு துர்காவை அந்த பெஞ்சிலேயே அமர வைத்தவன் சென்று துர்கா சாப்பிட வாங்கி வந்தான்.
“ஆதி இந்த ஷூட்டிங் பிறகு வேறு எதுவும் முக்கியமான வொர்க் நமக்கு இருக்கா” என்று கேட்டாள்.
இல்லையே துர்கா இந்த ஷூட்டிங்காக தான் நம்ம இங்க வந்தோம் என்றான்.
அப்போ நம்ம ஊருக்கு போகலாமா ஆதி அத்தை மாமா கல்யாணத்துக்காக நிறைய வேலை இருக்குமே என்றால் துர்கா.
அதையெல்லாம் கதிரும் கீர்த்திகாவும் மத்தவங்களும் பாத்துக்குவாங்க இப்போ நம்ம இங்கே வெறும் ஷூட்டிங்காகவா வந்தோம். ஹனிமூன்க்காக தானே வந்தோம். ஹனிமூன் முடிச்சிட்டு தான் போறோம். அதை என்ஜாய் பண்ணாம நான் உன்னை இங்கிருந்து அழைச்சிட்டு போக மாட்டேன் என்று கூறி குறும்பாக சிரித்தான்.
அவனை முறைத்தவள் “நான் சொன்னா நீ எங்கே கேட்கவா போற” என்றாள்.
நீ எந்த விஷயம் என்கிட்ட சொன்னாலும் நான் கேட்பேன் இந்த ஒரு விஷயத்தை தவிர என்று சொல்லி சிரித்தான் ஆதி.
பிறகு இருவரும் பேசிய படியே ஆதி வாங்கிய உணவை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி தங்கள் வீட்டிற்கு சென்றனர்.
❤️
ஆதி துர்கா ரியா ஸ்ரீ என அனைவரும் சூட்டிங் சென்று விட மாதவி மட்டும் வீட்டில் தனியே இருந்தாள் ஆஃபீஸ் விஷயமாக போதியும் வெளியே சென்று விட்டான்.
நீண்ட நேரம் கழித்து தான் வேலைகளை முடித்துவிட்டு போதி வீட்டிற்கு வர ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த மாதவி போதி வரவும் சந்தோசமாக எழுந்து அவனிடம் ஓடினாள்.
தன்னைப் பார்த்ததும் சிரித்த முகமாக வரும் தன் மனைவியை கண்டு சந்தோஷமாக வந்த போதி, சோர்ந்து போய் வீட்டிற்கு வந்தவன் மாதவியின் சந்தோசமான முகத்தை பார்த்ததும் புத்துணர்வு பெற்றவன் சிரித்துக் கொண்டே அவளை நோக்கி வந்தவன் தன்னை நோக்கி ஓடி வந்தவளை அப்படியே தூக்கி சுற்றினான்.
அவன் கழுத்தை கட்டிக்கொண்டு “மாதவி இன்னைக்கு இவ்வளவு லேட் நான் மட்டும் தனியா இங்கே இருக்க எனக்கு ரொம்ப போர் அடிக்குது நீ என்ன ஹனிமூன் கூட்டிட்டு வரேன்னு தானே இங்க அழைச்சிட்டு வந்த இங்க வந்ததும் ஆபீஸ்” என்று மாதவி அவன் கைகளில் இருந்து கீழே இறங்கியபடி போதியிடம் கேட்க.
சரி செல்லக்குட்டி இனிமேல் நான் ஆபீசுக்கு போக மாட்டேன் இங்கிருந்து நம்ம வீட்டுக்கு போற வரைக்கும் ஹனிமூன் ஜாலியா கொண்டாடிட்டு தான் போறோம் என்று சொல்லி சிரித்தவன் மீண்டும் அவளை தூக்கிக்கொண்டு தங்கள் அறையை நோக்கி சென்றான்.
“போதி என்ன பண்ற என்ன கீழே இறக்கி விடு வந்ததும் வராததுமா என்ன ரூமுக்கு கூட்டிட்டு போய் என்ன பண்ண போற” என்றால் மாதவி.
உன்ன ரூமுக்கு கூட்டிட்டு போய் நான் என்ன பண்ண போறேன்னு உனக்கு தெரியாதா என்று சொல்லி போதி சிரிக்க.
அவன் கைகளில் இருந்தவளின் முகம் சிவந்துவிட… அதை அவனிடம் மறைத்தபடி வேறு புறம் திரும்பிய மாதவி “இறக்கிவிடும் போது ப்ளீஸ் எல்லாரும் நம்மள பாக்குறாங்க” என்று சொல்ல…
சரி என்று தலையாட்டியவன் ஒதுங்கிய மாதவியின் சேலையை தாண்டி தெரிந்த அவளது இடுப்பில் தன் ஈர முத்தத்தை அழுந்த பதித்துவிட்டு மாதவியை கீழே இறக்கினான்.
அவன் அப்படிச் செய்ததும் மாதவி வெட்கப்பட்டுவிட போதியை பார்க்க வெட்கப்பட்டு கொண்டு தன் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடினாள்.
அவள் பின்னால் சிரித்தபடி உள்ளே சென்ற போதி அவர்கள் அறையின் கதவடைத்தான்.
“என்ன போதி இது இப்படி இந்த நேரத்துல ரூம் கதவை சாத்தினா வெளியே இருக்கிறவங்க நம்மள பத்தி என்ன நினைப்பாங்க” என்றால் மாதவி.
அங்க என்ன நினைக்கிறாங்கன்னு எனக்கு முக்கியம் கிடையாது நான் என் பொண்டாட்டிய கொஞ்சறதுக்காக ரூம் கதவை சாத்திட்டு வரேன் இதுல என்ன இருக்கு என்றவன் அவளை பிடித்து தன் அருகில் இழுத்தவன் மாதவியின் இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.
