EPI 237
மரகதமும் அபியும் வந்ததிலிருந்து விசாலாட்சி தன் அறையை விட்டு அவ்வளவாக வெளியே வருவதே இல்லை எங்கே வந்தால் அவர்களை நேருக்கு நேராக பார்க்க நேரிடும் அதனால் எதுவும் சங்கடமாகிவிடும் என நினைத்து தன்னரைக்குள்ளேயே அடைந்து கிடந்தார் விசாலாட்சி.
அவர் இப்படி அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பதை பார்த்த கனகாவும் செண்பகமும் விசாலாட்சியைக் காண அவர் அறிக்கை சென்றனர்.
கட்டிலில் வெறுமனே படுத்திருந்த விசாலாட்சி அவர்கள் இருவரும் வந்ததும் எழுந்து அமர்ந்தவர். என்ன ரெண்டு பேரும் இந்த பக்கம் வந்திருக்கீங்க என்று கேட்டார்.
ஏய் அண்ணி முன்ன மாதிரி வீட்டுக்குள்ள சகஜமா பேசி சிரிச்சு கேட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சு அதனால தான் நாங்களே உங்க ரூமுக்கு வந்து உங்க கூட கொஞ்ச நேரம் இருக்கலாம்னு வந்தோம் என்றார் செண்பகம்.
அவரைப் பார்த்து சிரித்த விசாலாட்சி சும்மாதான் நான் வரல செண்பகம் ஒரு மாதிரி டயர்டா இருந்துச்சா அதனால தான் இந்த ரூம்லயே இருந்துட்டேன் என்றார்.
ஏன் அண்ணி பொய் சொல்றீங்க… இந்த அபியும் மரகதமும் நம்ம வீட்டுக்கு வந்ததிலிருந்து தான் நீங்க ரூம விட்டு வெளியே வரவில்லை எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டீங்களா என்றார் கனகா.
உடனே அதை மறுத்த விசாலாட்சி அதுக்காக எல்லாம் நான் வராமல் இல்லை என்று சொல்ல…
அப்போ ஏன் ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குறீங்க வாங்க நம்ம மூணு பேரும் சேர்ந்து கோயிலுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு அப்படியாவது போய் எதுவும் சந்தோசமா பேசிட்டு வரலாம் என கனகா விசாலாட்சி அழைக்க….
விசாலாட்சிக்கும் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்க ஒரு மாதிரியாக இருக்கவும் அவர்களுடன் கிளம்பி கோயிலுக்கு சென்றார்.
ஆதி டென்மார்க் சென்று விட கதிர் அவனுடைய பர்னிச்சர் பிசினஸ் பார்த்துக் கொண்டே இருக்க ஆபீஸ் வேலைகளில் மூழ்கி இருந்த வெங்கடாசலம் மாலை வேளையில் சற்று ஓய்வெடுப்பதற்காக வீட்டிற்கு வந்தவர் ஹலில் அமர்ந்தபடியே விசாலாட்சி ஒரு காபி என்றார்.
அவர் கோயிலுக்கு சென்றது வெங்கடாசலத்திற்கு தெரியாது. கிச்சனிலிருந்து வேலையால் வெங்கடாசலப்பிடம் வந்து அம்மா கனகா அம்மா, செண்பகம் அம்மா கூட கோயிலுக்கு போய் இருக்காங்க என்று கூற.
சரி நீயே எனக்கு ஒரு காபி கொஞ்சம் ஸ்ட்ராங்கா போட்டு எடுத்துட்டு வா என் தலை ரொம்ப வலிக்குது என்றார் வெங்கடாசலம்.
சரிங்கய்யா காபி போட்டு எடுத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு வேலையால் கிச்சனுக்குள் செல்ல அங்கே தங்களுக்காக ஈவினிங் ஸ்நாக்ஸ் தயாரிக்க அபியுடன் வந்திருந்த மரகதம் வெளியே வெங்கடாச்சலம் வந்து அமர்ந்து காபி கேட்பதை கேட்டுக் கொண்டு இருந்தவர் தானாகவே அவருக்கு காபி போட்டுக் கொண்டு போய் அவரிடம் நீட்டினார்.
முதலில் யார் என்று பார்க்காமல் நீட்டிய காபியை வாங்கிய வெங்கடாசலம் அதை குடிக்க போக அப்போதுதான் அவர் இதுவே நின்றிருந்த மரகதத்தை கவனித்தார்.
நீயா நீ எதுக்கு எனக்கு காபி போட்டு எடுத்துட்டு வர எனக்கு காபியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று சொல்லி அவர் கொடுத்த காபியை அருகில் இருந்த டேவிலில் வைக்க.
ஏங்க என்ன பார்த்ததும் எப்படி எரிஞ்சு பேசறீங்க நான் காபி போட்டு கொடுத்த நீங்க குடிக்க மாட்டீங்களா என்றார் மரகதம்.
யாரு எனக்கு காபி போட்டு கொடுக்க நீ காபி போட்டு கொடுத்தா நான் குடிக்கணுமா என அவர் கோபமாக மரகதத்திடம் பேச.
உடனே அவர் சட்டென தன் முகத்தை சோகமாக வைத்திருப்பது போல நடித்தவர் இப்படித்தான் என்னை கண்டாலே ஆரம்பத்தில் இருந்து நீங்க வெறுத்து ஒதுக்குனீங்க உங்களுக்கு வீணா நான் சிரமம் கொடுக்க கூடாதுன்னு தான் உங்ககிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கிட்டு போனேன் என்று அப்படியே அவர் செய்ததை வெங்கடாஜலம் செய்தது போல மாற்றி போட்டு மரகதம் பேச…
அவர் பேசியதை கேட்டு அதிர்ந்த வெங்கடாசலம் சோபாவில் இருந்து எழுந்தவர் நீ என்ன வேணும் நினைச்சுட்டு போ அத பத்தி எனக்கு கவலை இல்லை என்னை வேண்டாம் என்று ஒதுங்கிட்டு ஒதுக்கிட்டு போனவ கூட எனக்கு எந்த பேச்சும் கிடையாது என்று சொல்லிவிட்டு தன்னரைக்குச் சென்றார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த அபி கிச்சனிலிருந்து வந்தவள். அவன் அம்மாவிடம் வந்து மம்மி அப்பா பேசுறதுக்கு நீ பீல் பண்றியா என்றால்.
செச்சே… இந்த ஆள் பேசுறதுக்கு எல்லாம் நான் பீல் பண்ணுவேனா என்ன என்றவர் சோபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து அங்கே வைத்திருந்த காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.
டாடி தான் உங்கள பார்த்தாலே டென்ஷன் ஆகுறாரு நீங்க ஏன் மம்மி மறுபடி மறுபடி அவர்கிட்ட போய் பேசுறீங்க என்று அபி கேட்க.
நீயும் நானும் இங்கே எதுக்காக வந்திருக்கும் அபி என்றார் மரகதம்.
ஏன் மம்மி உங்களுக்கு தெரியாதா என்ன பிளான் போட்டதே நீங்க தானே என்று அபி கேட்க.
அந்த பிளான சரியா நடத்தணும்னா உன் அப்பா கிட்ட கொஞ்சம் நல்லவன் மாதிரி நடிக்கணும் அப்போதான் நம்மளோட பிளான் சீக்கிரமா எந்த பிரச்சனையும் இல்லாம நமக்கு சாதகமா கொண்டு போக முடியும் என்றார் மரகதம்.
அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே தன் அறையில் இருந்து வந்த சங்கவி ஆமாம் அபி ஆன்ட்டி சொல்றதும் சரிதான் நம்ம போட்ட பிளான் எக்ஸிட் பண்ணனும்னா முதல்ல வெங்கடாசலம் உன்னையும் உன் அம்மாவையும் நம்பனும்.
அவர் உங்கள நம்பினால் தான் நம்ம நினைக்கிற விஷயம் நடக்கும் என்றால் சங்கவி.
சும்மா நம்ம இப்படி பேசிக்கிட்டே இருந்தா நம்ம நினைக்கிற எல்லா விஷயமும் நடந்துடுமா என்ன அதுக்கான வேலையில் இறங்கினா தானே எல்லாம் நடக்கும் என்றால் அபி.
சரிதான் அதுக்குத்தான் நான் ஒரு நல்ல யோசனையோட இங்கே வந்திருக்கேன் என்றால் சங்கவி.
அப்படி என்ன யோசனையோட வந்து இருக்க என்று அபி சங்கவியை பார்த்து கேட்டால்.
இங்கே பாரு நான் என்னதான் வெங்கடாசலம் அங்கிள் ஆண்டியை டைவர்ஸ் பண்ணி இருந்தாலும். அவருக்கு உன் மேல இன்னும் பாசம் இருக்கு அதனாலதான் இத்தனை வருஷம் கழிச்சும் நீங்க இங்கே வந்தப்ப அவர் உங்கள இங்கேயே தங்க அனுமதிச்சு இருக்காரு என்ற சங்கவி நீ அவரோட பொண்ணுங்கற உரிமையை எடுத்துக்க வேண்டாமா இப்படியே யாரோ போல இந்த வீட்ல ஒதுங்கியே இருக்க போறியா என்று கேட்டால் சங்கவி.
நான் தான் அவர் பொண்ணுன்னு இங்க இருக்கிறவங்க எல்லாருக்குமே தெரியுமே, அப்பறோம் நான் என்ன பண்ணனும் என்று அபி கேட்க…
நீதான் அவங்க பொண்ணுன்னு இந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு மட்டும் தானே தெரியும் ஆனால் அங்கிளுக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகி அவருக்கு ஒரு பொண்ணு இருக்குங்கிறது அவரோட ரொம்ப நெருங்கிய சொந்தத்தையும் தவிர வேற யாருக்குமே தெரியாது அவங்களுக்கெல்லாம் நீதான் அவரோட பொண்ணு உனக்கும் அவரு அவர்கிட்ட உரிமை இருக்குன்னு எல்லாரும் முன்னாடியும் நீ காட்டிக்க வேண்டாமா என்றால் சங்கவி.
அவள் சொன்னதை கேட்ட அபிக்கு சங்கவி சொல்வது சரிதான். உன்னைப் பற்றியும் தன் அம்மாவை பற்றியும் வெளியுலகத்திற்கு அவ்வளவாக யாருக்குமே தெரியாது சங்கவி சொல்வது போல தங்கள் உறவு முறையை வெளிக்காட்டி கொண்டால்தான் தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியும் என நினைத்த அபி அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தாள்.
தான் வந்த வேலை முடிந்து விட்டது என்று நினைத்த சங்கவி இருவரிடமும் சொல்லிவிட்டு ஷாப்பிங் செல்வதாக வெளியே சென்று விட்டாள்.
❤️
ஷிவுவிற்கு இது ஐந்தாம் மாதம் அவள் கர்ப்பமாக இருப்பதால் இந்த கோடை வெயில் அவளை சுட்டெரித்தது அவளால் இந்த சூட்டை தாங்கவே முடியவில்லை ஆபீஸில் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டால்.
ஷிவு சிரமப்படுவதை பார்த்த ரூபேஷ் மாலை வீட்டிற்கு வந்ததும் ஷிவுவை அழைத்தவன் நீ இனிமேல் ஆபிஸுக்கு போக வேண்டாம் என்றான்.
அவன் சொன்னதை கேட்டு அவனை முறைத்த ஷிவு நான் ஆபீசுக்கு போகாம விட்டுட்டா அங்க இருக்குற வேலையெல்லாம் யார் நீயா வந்து பார்ப்ப என்று கேட்டால்.
நீ ஆபீசுக்கு போய் தான் வேலை பார்க்கணும்னு எந்த அவசியமும் இல்லையே வீட்டில் இருந்தபடியே ஆபீஸ்ல நடக்கிற விஷயத்தை எல்லாம் உன்னால கவனிக்க முடியுமே என்றால் ரூபேஷ்.
நான் ஆபீஸ் போறதுனால உனக்கு என்ன பிரச்சனை வந்துச்சு என்று ரூபேஷிடம் கேட்டால்.
நீ ஆபீஸ் போறதுனால எனக்கு எதுவும் ஆகப் போறதில்ல இந்த வெயில்ல நீ இங்கேயும் அங்கேயும் அலையுறத பார்த்தா எனக்கு கஷ்டமா இருக்கு அதனாலதான் உன்னை ஆபீஸ் போகாம வீட்டிலேயே இருந்து வேலை பார்க்க சொல்றேன் என்று ரூபேஷ் பேசிக்கொண்டு இருக்க….
அப்போது அங்கே வந்த அவன் அம்மா அவன் சொல்வதைக் கேட்டு ஆமா ஷிவு நீயும் எத்தனை நாள் வீட்டுக்கும், ஆபீஸுக்கும் அலைஞ்சுக்கிட்டே இருப்ப… உனக்கும் குழந்தைக்கு கொஞ்சமாவது ஓய்வு கிடைச்சா தான் நல்லா இருக்கும்.
நீ நல்லா ரெஸ்ட் எடுத்தாத்தான் உன் வயிற்றில் வளர உன்னோட குழந்தையும் நல்லா எந்த குறையும் இல்லாமல் வளரும். பிசினஸை எப்ப வேணாலும் பாத்துக்கலாம். ஆனா உடல் ஆரோக்கியம் என்பது ரொம்ப முக்கியம். அதேபோல குழந்தையும் நல்லபடியா பெத்து எடுக்கிறதும் ரொம்ப முக்கியம் என்றார் ரூபேஷின் அம்மா.
அவர் சொல்வதை கேட்ட ஷிவு லுகேஷன் அவன் அம்மா சொல்வதும் சரிதான் என்பதை உணர்ந்தவள் சரியத்த நான் இனிமேல் வீட்டில் இருந்தே ஆபீஸ் வொர்க் பாத்துக்குறேன். வேற எதுவும் வேலை இருந்தா நர்மதாவை வரச் சொல்லி அவகிட்ட வேலையை கொடுத்து விடுகிறேன் என்றால்.
தான் சொல்வதை கேட்டு ஷிவு ஒத்துக் கொண்டதும் சந்தோஷம் அடைந்த ரூபேஷ் ரொம்ப தேங்க்ஸ் ஷிவு என்று சொல்ல..
நீ சொன்னதுக்கெல்லாம் நான் சம்மதிக்கல அத்தை இவ்வளவு தூரம் சொன்னதுனால தான் நான் ஆபீஸ் போகலைன்னு ஒத்துக்கிட்டேன் ரொம்ப சந்தோஷப்படாதே என்று அவனைப் பார்த்தால்.
நான் சொன்னா என்ன ….அம்மா சொன்னா என்ன.. எப்படியோ நான் சொல்ற விஷயத்தை அம்மா உன்கிட்ட எடுத்துச் சொன்னாங்க . அப்படி பார்த்தா நான் சொன்னதை கேட்டு தான் நீ இந்த முடிவு எடுத்தேன்னு எனக்கு தெரியும் என்று சிரித்தவன்.
அம்மா எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு நான் போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு ஷிவுவை ஓரக்கண்ணால் சைட் அடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.
பார்த்தியா ஷிவு என் மகனுக்கு நீ அவன் சொல் பேச்சை கேட்டுட்டேனு எவ்வளவு சந்தோசம் என்று சொல்லி அவன் அம்மா சிரிக்க…
அவன் அதுக்கு எல்லாம் சந்தோஷப்படல நான் டெய்லியும் ஆபீஸுக்கு போய் அவனை வேலை வாங்கி டார்ச்சர் பண்றேனு தான் பிளான் பண்ணி நீங்க இருக்கும்போது பேசி என்ன வீட்டிலேயே இருக்க வச்சுட்டான் அவனுக்கு நான் ஆபீசுக்கு போனாலே அவனை வேலை வாங்கிட்டே இருக்கிறேன் என்று பயம் அதான் என்று சொல்லி ஷிவு சிரிக்க.
அப்போ என் மகனை இங்கே டார்ச்சர் பண்றது பத்தாம ஆபீஸ்லயும் நீ அவனை டார்ச்சர் பண்றியா? என்று செல்லமாக தன் மருமகளை முறைத்தார் ரூபேஷின் அம்மா.
என்ன செய்ய அத்தை உங்க மகன் தலையெழுத்து என்கிட்ட வந்து மாட்டிக்கனும்னு இருக்கு என்று சொல்லி ஷிவு சிரிக்க.. அவளுடன் சேர்ந்து ரூபேஷன் அம்மாவும் சிரித்தார்.
