EPI 238
கதிர் தன்னுடைய பர்னிச்சர் பிசினஸில் மிகவும் பம்பரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க அவன் அந்த வேலையிலும் தன் அப்பாவின் அறுபதாம் திருமணத்தின் வேளையிலும் இப்போது பிஸியாகிவிட வீட்டிற்கு சரியாக வருவதே இல்லை.
கீர்த்திகாவிற்கு அவனை மிகவும் மிஸ் செய்வது போல தோன்ற இன்று எவ்வளவு நேரம் ஆனாலும் கதிரை பார்த்து விட்டு தான் உறங்க வேண்டும் என்று தூங்காமல் நல்லிரவாதியும் அவனுக்காக காத்திருந்தாள்.
ஆபீஸ் வேலை வீட்டில் நடக்கும் விசேஷம் என அனைத்து வேலைகளையும் பார்த்துவிட்டு மிகவும் சோர்வுடனும் களைப்புடனும் கதிர் அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தான்.
கதிரின் கார் சத்தம் கேட்டதுமே தன் அறைக்குள் இருந்து வேகமாக ஆளுக்கு ஓடி வந்தவள் கதிரி பார்க்க வாசலுக்கு போக வெட்கப்பட்டு கொண்டு ஹாலிலேயே நின்றுவிட…
காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்த கதிர் ஹாலில் நின்றிருந்த கீர்த்திகாவை பார்த்தவன். ஏய் கீர்த்தி நீ இன்னும் தூங்காம என்னடி பண்ணிட்டு இருக்கீங்க என்றான்.
இவ்வளவு நேரம் அவனை பார்க்க வேண்டும் என்று ஆர்வம் மேலோங்க அவனுக்காக காத்திருந்த கீர்த்திகா இப்போது கதிரை பார்த்ததும் அவன் மீது செல்ல கோபம் கொண்டு…
அவனே முறித்துவிட்டு என் புருஷனுக்கு தான் என் நினைப்பே இல்லாம போயிடுச்சு அதான் எங்க வீட்ல பொண்டாட்டி நிறுத்தி இருக்கிறார்கள் என்று காட்டுவதற்காக தூங்காம வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அதான் நீ இப்ப வந்து உன் பொண்டாட்டி நிறுத்தி இருக்கிறார்கள் என்று பார்த்துட்டு இல்ல சரி நான் போய் தூங்குறேன் போ என்று சொல்லிவிட்டு திரும்பி தன்னரைக்கு செல்ல….
கீர்த்திகா தன்மீது கோபமாக இருக்கிறாள் என்று அப்போதுதான் உணர்ந்தவன் கையில் இருந்த லேப்டாப் பேக்கை சோபாவில் வீசிவிட்டு தன் மனைவியின் பின்னால் ஓடியவன் அவளை அப்படியே தன் கைகளில் ஏந்தினான்.
கதிர் தன்னை தூக்கி ஏதும் அவன் கையில் இருந்த கிருத்திகா வேண்டுமென்றே அவன் கையில் இருந்து துள்ளிக்குறித்து கீழே இறங்கியவள் இப்போ எதுக்குடா என்னை வந்து தூக்கின இப்பதான் உனக்கு பொண்டாட்டி ஞாபகம் வந்துச்சா போ போய் உன்னோட ஆபீஸையே கட்டிட்டு அழு. என்கிட்ட எதுக்கு வர என்று வீம்பு பிடித்துக் கொண்டு கோபமாக தன் அறைக்கு செல்ல போக…
கோச்சுக்காதடி கீர்த்தி குட்டி… உனக்கே தெரியும் ஆதி அண்ணாவும் ஊரில் இல்ல விக்கியும் நிலானியை பாக்குறதுக்கு அடிக்கடி ஆபீசுக்கு லீவு போட்டுடுறான். எல்லா வேலையும் நான் ஒருத்தனை பார்க்க வேண்டியது இருக்கு என்ன செய்ய என்று கதிர் தன்னிலை விளக்கம் கூறிக் கொண்டே மீண்டும் கீர்த்திகாவை தன் கைகளில் ஏந்தி கொள்ள…
அதுக்காக என்ன சுத்தமா மறந்துடுவியா டா உனக்காக நான் ஒருத்தி இங்கே காத்துக்கொண்டிருக்கிறேன் என்று உனக்கு கொஞ்சம் கூட ஞாபகம் வரலயா? என்றால் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு.
உன்னோட ஞாபகம் இல்லாம இருக்குமா என்றவன் கீர்த்திகாவை தூக்கி வந்து தன் அறைக்குள் கீழே இறக்கி விட்டவன் திரும்பி அறை கதவை சாற்றி விட்டு அவள் அருகில் வந்து…
தன் பக்கத்தில் இதுவரை மறைத்து வைத்திருந்த மல்லிகை பூவையும் அல்வாவையும் எடுத்து உன் ஞாபகம் இல்லாமையா நான் இதெல்லாம் உனக்காக வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லி அவளிடம் நீட்ட…
எனக்காக மல்லிகை பூ வாங்கி வந்திருக்கிறான் என்று அதை பார்த்து சந்தோஷமடைந்த கீர்த்திகா அதனை அதனை வாங்க போனவள் உடனே தன் கையை பின்னே இழுத்துக் கொண்டு நீ எதுக்காக மல்லிகை பூவும் அல்வாவும் வாங்கிட்டு வந்து இருக்கேன்னு எனக்கு தெரியாது நினைச்சியா நீ உன் காரியத்தை சாதித்து கொள்வதற்காக இது இரண்டையும் வாங்கிட்டு வந்துட்டு என்னவோ பெருசா எனக்காகத்தான் இதெல்லாம் வாங்கிட்டு வந்தவன் மாதிரி சீன் போடுற இதெல்லாம் என்கிட்ட நடக்காது போய் வேற எதுவும் வேலை இருந்தா பாரு இந்த மாதிரி ஏதாவது நினைப்பு வந்தா மட்டும்தான் இவனுக்கு பொண்டாட்டியோட ஞாபகமே வருது. மத்த நேரமெல்லாம் திரும்பி கூட பாக்க மாட்டான் என்று முறுக்கிக் கொண்டு போய் கீர்த்திகா பெட்டில் அமர்ந்து கொள்ள.
ஏய் என்னடி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட நான் என்னவோ எப்ப பாரு அதுக்காக மட்டும் தான் உன் கிட்ட வர மாதிரி பேசுற என்ன பாத்தா உனக்கு அப்படித்தான் தெரியுதா என்று கதிர் சற்று நான் கோபமாக அவளிடம் வந்து கேட்க…
ஆமா பின்ன வேற எதுக்காக நீ என்கிட்ட வரையாமா… உனக்கு அந்த நெனப்பு வந்தா தான் நானே ஞாபகம் வரேன் அதனால தானே நீ இப்போ மல்லிகை பூவும் அல்வாவும் வாங்கிட்டு வந்த என்று கீர்த்திகா அவனிடம் மேலும் வம்பு பேச…
தன் கையில் இருந்த பூவையும் அல்வாவையும் அவள் முன்பு வைத்தவன் இங்க பாரு கீர்த்து உண்மையாவே சொல்லு உனக்கு பூவும் அல்வாவும் பிடிக்காதுன்னு என்று கேட்டான்.
அவனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு இந்த ரெண்டுமே எனக்கு பிடிக்கும் தான் யாரும் இல்லைன்னு சொன்னது என்றால் கீர்த்திகா.
அப்புறம் என்னடி என்னவோ உனக்கு பிடிக்காதத நான் வாங்கிட்டு வந்த மாதிரியும் அதை வைத்து நான் உன்னை கரெக்ட் பண்ற மாதிரியும் இல்லை நீ பேசுற என்றான் கதிர்.
அப்போ எனக்கு பிடிச்ச பூவையும் அல்வாவையும் வாங்கிட்டு வந்து என்ன கரெக்ட் பண்ண பாக்கல நீ அப்படித்தானே என்றால் கீர்த்திகா.
யார் சொன்னது என் பொண்டாட்டி கண்டிப்பா என் மேல கோவமா இருப்பா அவளை சமாதானம் பண்ணலாம்னு தான் பூவையும் அல்வாவையும் நான் வாங்கிட்டு வந்தேன் என்று கதிர் குழைவாக பேச…
ஓஹோ அப்போ நான் கோபமா இருப்பேன்னு உனக்கு ஒண்ணுமே தெரியுமா என்றால் கீர்த்திகா.
ரொம்ப கோபமா இருக்க மாட்ட ஆனா நான் உன்ன இந்த ரெண்டு மூணு நாளா சரியாவே கவனிக்கல உன்கிட்ட சரியா பேசவும் இல்ல அதனால கண்டிப்பா நீ என்னை மிஸ் பண்ணி இருப்ப…
சோ… உன்ன பாக்க வரப்போ உனக்கு பிடிச்சதா எதுவும் வாங்கிட்டு வருவோம் என்று தான் இந்த அர்த்த ராத்திரியிலும் பூக்கடையும் அல்வா கடையும் தேடிப் பிடிச்சு உனக்காக வாங்கிட்டு வந்தேன் தெரியுமா என்றான் கதிர்.
எனக்காக இந்த லேட் நைட்ல அலைஞ்சு திரிஞ்சு வாங்கிட்டு வந்தாயாடா என்று கீர்த்திகா ஆர்வமாக கதிரை பார்க்க…
ஆமா கீர்த்தனா என் பொண்டாட்டிக்கு புடிச்சத வாங்கிட்டு போய் அவளை சந்தோசப்படுத்தினால் தானே எனக்கும் சந்தோஷமா இருக்கும் அதுக்காக தான் இந்த இரண்டையும் வாங்கிட்டு வந்தேன் என்றான் கதிர்.
உடனே அவனை பார்த்து சிரித்தவள் ரொம்ப தேங்க்ஸ்டா கதிர் என்று சொல்லி பெட்டியில் இருந்து அல்வாவை எடுத்து கீர்த்திகா சாப்பிட போக…
இரு இரு நீ சாப்பிடாத நானே உனக்கு ஊட்டி விடுவேன் என்று சொல்லி அவள் கையில் இருந்த அல்வாவை வாங்கி கீழே வைத்தவன் அதற்கு அருகில் இருந்த பூவை எடுத்து பிரித்து கீர்த்திகாவை திரும்பச் சொல்லி அவள் தலையில் வைத்து விட்டவன்.
அவளை பின்னால் இருந்து அனைத்து கொண்டே அருகில் இருந்து அல்வாவை எடுத்து கீர்த்திகாவிற்கு ஊட்டி விட்டவன் சந்தோஷமாக டி பொண்டாட்டி என்று கேட்டான்.
நீ இதெல்லாம் வாங்கிட்டு வரலைன்னாலும் எனக்கு பிரச்சனை இல்லை என் கதிர் நீ என் பக்கத்தில் இல்லை என்கிறது தான் எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு என்றால் கீர்த்திகா உண்மையாகவே.
எனக்கும் உன் நினைப்பு இல்லாம இல்ல கீர்த்து…ஆனால் வொர்க் அவ்வளவு டைட்டா இருந்துச்சு நான் என்ன செய்வேன் என்றால் கதிர்.
சரி பரவாயில்லை விடு ஆனா எப்படியும் ஆதி மாமா வரவரைக்கும் உனக்கும் கொஞ்சம் வேலை இருக்குதான் செய்யும் எனக்கு அது புரியுது நானும் கொஞ்சம் புரிந்து நடந்து பார்க்கிறேன். சாரிடா நீ வந்ததும் வராமல் நான் உன்னிடம் சண்டை இழுத்துக்கு என்றால் கீர்த்திகா.
இதுக்கு எதுக்குடி சாரி சொல்ற நீ என்கிட்ட சண்டை போடறது எனக்கு பிடிச்சிருக்கு நீ உரிமையா என்னை ஏண்டா கவனிக்கலைன்னு கேக்குறப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா என்றவன் மீண்டும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொள்ள…
அவன் சொன்னதை கேட்டு சிரித்தவள் அப்போ இனிமேல் அடிக்கடி உன் கூட சண்டை போடுறேன் என்றாள்.
அப்போ நீ எப்போ எல்லாம் என் கூட சண்டை போட போறியோ அப்போ எனக்கு சொல்லிடு நான் வரும்போது மறக்காம பூவும் அல்வாவும் வாங்கிட்டு வரேன் என் பொண்டாட்டிய சமாதானப்படுத்த என்றான்.
கீர்த்திகா சிரித்துக்கொண்டே அப்போ நான் கோபமா இருந்தாதான் நீ போகும் அல்வாவும் வாங்கிட்டு வருவேன் என்மேல ஆசை இருக்கும்போது இதெல்லாம் செய்யணும்னு உனக்கு தோணாது அப்படித்தானே என்றால்.
உன் மேல ஆசை வரும்போது எனக்கு மொத்தமும் மருந்து போயிடுதடி நேரா உன் கிட்ட தான் வந்துடுறேன் எதைப்பற்றியும் யோசிக்காம அந்த நேரத்துல நான் எங்க போய் பூவும் அல்வாவும் வாங்குவதை பற்றி யோசிச்சிட்டு இருப்பேன் உன்னை எப்படி மொத்தமா சாப்பிடணும் தானே எனக்கு யோசனையா இருக்கும் என்று சொல்லி அவள் வெற்று முதுகில் தன் மீசையை கொண்டு குறுகுறுப்பை ஏற்படுத்த….
அதில் கூச்சமடைந்தவள் நெளிந்து கொண்டே… சீ.. போ… கதிர் நீ வர வர ரொம்ப மோசமா பேச ஆரம்பிச்சிட்டேன் என்று சொல்லி வெட்கத்தில் தன் முகத்தை மூடி கொண்டாள் கீர்த்திகா.
ஏய் என்னடி இது நான் எதுவுமே பேசல அதுக்குள்ள இப்படி வைக்கப்பட்டா எப்படி இன்னும் நிறைய இருக்கு பேசுறதுக்கு என்று சொல்லி அவளை தன் பக்கம் திருப்பியவன் அவள் முகத்தில் இருந்த கையை விலக்கி கீர்த்திகாவின் முகத்தை தன் கைகளில் ஏந்தி அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அப்படியே அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு கீர்த்திகாவின் இதழில் வந்து தஞ்சம் புகுந்தான்.
கீர்த்திகாவிற்கு இரண்டு மூன்று நாட்களாக என் கதிரின் அருகாமை இல்லாமல் போகவே அவனின் இந்த முத்தம் அவளுக்கு மிகவும் தேவைப்பட்டது போல அவன் முத்தம் வைத்ததும் கீர்த்திகா கதிரின் இடையே கட்டிக் கொள்ள…
அதை கவனித்த கதிர் அவளை முத்தமிடுவதை நிறுத்திவிட்டு கீர்த்திகாவின் கண்களை பார்த்து என் பொண்டாட்டிக்கு அவ்வளவு அவசரமா என்று சொல்லி சிரிக்க…
உன் மார்பில் குத்தியவள் அவசரம் இல்லடா உன் மேல அவ்வளவு ஆசை என்று சொல்லி அவன் மார்பில் தன் முகம் புதைத்தால்.
என் பொண்டாட்டி ஆசைய நிறைவேற்ற வேண்டியது தான் என்று சொல்லி சட்டை பட்டன்களை வேகமாக கழட்டியவன் மெத்தையில் கீர்த்திகாவுடன் சரிந்தான்.
கீர்த்திகாவும் கதிரும் தங்கள் அறையில் சந்தோசமாக இருக்க….
அந்த நள்ளிரவில் ஒரு உருவம் ஆள் இருக்கு யாருக்கும் தெரியாமல் வந்தது ஆளுக்கு வந்ததும் அந்த உருவம் நேராக சோபாவில் வைத்துவிட்டு போன அவன் லேப்டாப்பை அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றது.
அந்த லேப்டாப்பை எடுத்துச் சென்ற சில மணி நேரத்தில் மீண்டும் அதை கொண்டு வந்து இருந்த இடத்திலேயே வைத்து விட்டு அங்கிருந்து சென்றது அந்த உருவம்
அட அது வேற யாருங்க எல்லாம் இந்த சங்கவியோட வேலை தான் கதிரோடு லேப்டாப்பை இந்த நேரத்துல எடுத்துட்டு போய் என்ன பண்ண போறாளோ அதனால பின்னாடி என்ன பிரச்சனை வரப் போகுதோ…
