Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 240

உன் ரகசிய ரசிகை நான் 240

by Layas Tamil Novel
118 views

EPI 240

வெங்கடாசலம் விசாலாட்சிக்கு அறுபதாம் கல்யாணத்திற்கு நாள் நெருங்கிக் கொண்டு இருக்க டென்மார்க்கில் இந்த ஆதியும் துர்காவும் அவர்கள் இருவரிடமும் வீடியோ காலில் பேசினர்.

துர்கா தன் அத்தை விசாலாட்சி இடம் “அத்தை உங்களுக்கு எதுவும் வேணுமா நான் இங்கே இருந்து வாங்கிட்டு வரேன்” என்றால். “எனக்கு என்னம்மா வேணும் எதுவும் வேண்டாம் நீங்க நல்லபடியா அங்க சந்தோஷமா இருந்துட்டு வாங்க அதுவே போதும்” என்றார் விசாலாட்சி.

“இப்படி சொன்னா எப்படி அத்தை உங்களுக்கு ஏதாவது வாங்கணும்னு ஆசை கண்டிப்பா இருக்கும் அது என்னன்னு சொல்லுங்க நான் வாங்கிட்டு வரேன்” என்றால் துர்கா. “நான் சொன்னா நீ கேட்க மாட்டேன்” என்றவர் “அந்த ஊரிலேயே எதையாவது பார்க்கும்போது என்னோட நினைவு வந்தா அதை எனக்காக நீ வாங்கிட்டு வா” என்றார் விசாலாட்சி.

“அவ்வளவுதானே சொல்லிட்டீங்க இல்ல அத்தை ஊருக்கு வரும்போது பாருங்க உங்களுக்கு பிடிச்சதா கண்டிப்பா வாங்கிட்டு வருவேன்” என்ற துர்கா வெங்கடாசலத்தை பார்த்து “மாமா உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க” என்றாள். “நீ உன் அத்தைக்கு எது வாங்கிட்டு வந்தாலும் அது எனக்கு வாங்கினதா நான் நினைச்சுக்கிறேன் எது வாங்கினாலும் எனக்கு சரிதான்மா” என்று சொல்லி சிரித்தார்.

நால்வரும் வீடியோ காலில் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருக்க… இப்போது வெங்கடாசலத்தின் அறைக்குள் மிகவும் பதட்டமாக அவரை அழைத்தபடி உள்ளே வந்தான் கதிர். அவன் பதட்டமாக வருவதை கவனிக்காத விசாலாட்சி “வா கதிர்… நானும் உன் அப்பாவும் உன் அண்ணா அண்ணி கிட்ட தான் வீடியோ கால்ல பேசிட்டு இருக்கோம் நீயும் பேசு” என்று போனை அவன் புறம் திருப்ப…

பதட்டமாக வந்த கதிர் வீடியோ காலில் சிரித்து முகமாக இருந்த துர்காவையும் ஆதியையும் பார்த்து, தன் பதட்டத்தை மறைத்துக்கொண்டு அவர்களிடம் சிரித்து முகமாக பேசினான். “ஆமா ரெண்டு பேரும் அம்மாவுக்கு மட்டும்தான் வீடியோ கால் பண்ணி பேசுவீங்களா ஏன் நாங்க எல்லாம் இல்லையா எங்க கிட்ட போன் பண்ணி பேச முடியாதா?” என்றான் கதிர்.

உடனே துர்கா “ஏண்டா நாங்க தான் உனக்கு போன் பண்ணி பேசணுமா ஊருக்கு வந்து நாங்க எவ்வளவு நாளாச்சு ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கோம் எப்படி இருக்கோம்னு ஒரு வார்த்தை நீ போன் பண்ணி கேட்டு இருப்பியா?” என்றால் பதிலுக்கு. “ஆமா நான் அப்படியே போன் பண்ணதும் நீங்க ரெண்டு பேரும் முதல்ல போன எடுத்து பேசிட்டு தான் மறுவேலை பாருங்க” என்றான் கதிர். “டேய் அன்னைக்கு நீ கால் பண்ணி இருந்தப்போ நான் ஷூட்டிங்ல இருந்தேன் அதனால தான் எடுக்கல” என்றால் துர்கா.

“சரி சூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் நீ எனக்கு போன் பண்ணி இருக்கலாமே” என்றான் கதிர். “அதுக்கப்புறம் உங்க அண்ணா எங்கே என்னை விட்டது ஊர் சுற்றி பார்க்க போகலாம்னு எந்த நேரமும் என்னை எங்காவது கூட்டிட்டு போயிட்டு தான் இருக்காரு இந்த கேப்ல நான் எங்கடா உனக்கு போன் செய்யறது?” என்றால் துர்கா.

“உனக்கு என் அண்ணன் கூட ஊர் சுத்த எல்லாம் நேரம் இருக்கும் ஒரு அஞ்சு நிமிஷம் ஒதுக்கி என்கிட்டயோ கீர்த்திகா கிட்டயோ பேச உனக்கு டைம் இல்ல அப்படித்தானே?” என்றான் கதிர். “டேய் நீ என்ன இப்போ வேணும்னே என்கிட்ட வம்பை இழுக்கறியா நான் ஒன்னும் வேணும்னே உன்கிட்டயும் கீர்த்திகாகிட்டயும் பேசாம இல்ல” என்றால் துர்கா.

அவர்கள் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருக்க இவர்கள் சண்டை இடுவதை பார்த்து இந்த பக்கம் விசாலாட்சியும் வெங்கடாசலமும், அந்த பக்கம் ஆதியும் ரசித்துக் கொண்டு இருக்க அப்போது வெங்கடாசலத்தின் அறை கதவை தட்டி “உள்ளே வரலாமா?” என்றான் விக்கி.

“வா விக்கி நீயும் வந்துட்டியா இங்கே வா வந்து என்னன்னு கேளு பாரு கதிர் துர்கா கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கான்” என்று விசாலாட்சி விக்கியை அழைக்க… ஏதோ சாப்பிட்டேன் மா என்று சொல்லிக்கொண்டே கட்டில் அருகில் வந்து விக்கி கதிரை பார்க்க.. கதிர் விக்கியிடம் கண்களை காட்டி எதையும் காட்டிக் கொள்ளாதே என ஜாடை செய்ய விக்கிக்கு அவன் சொன்னது புரிந்தது போல தலையை ஆட்டியவன் கதிர் கையில் இருந்த போனை வாங்கி ஸ்க்ரீனில் தெரிந்த ஆதி துர்காவைப் பார்த்து “ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரித்தான் விக்கி.

“நாங்க நல்லா இருக்கோம் அங்க நிலானி நீ எல்லாரும் எப்படி இருக்கீங்க உடம்பு நல்லா இருக்கா?” என்று துர்கா விசாரித்தாள். “அவளுக்கு என்ன நல்லா உடம்பு போட்டுட்டா அவ நல்லாத்தான் இருக்கா” என்றான் விக்கி. “நான் கொடுத்த அந்த பாக்ஸை பிரிச்சி பார்த்தீங்களா இல்லையா?” என்றான் விக்கி.

“அந்த கிப்ட் அப்படியே இருக்கு அதுக்கு நாங்க ரெண்டு பேரும் இன்னைக்கு தான் கொஞ்சம் ஃப்ரீயானோம் இனிமேல் தான் பிரிச்சு பார்க்கணும்” என்றான் ஆதி. “நான் அதை கொடுத்து விடும்போது என்ன சொன்னேன்… நீங்க ரெண்டு பேரும் ஹனிமூன் ஸ்டார்ட் பண்ணுவதற்கு முன்னாடி அந்த கிஃப்ட்ட பிரிச்சு பார்த்துட்டு ஸ்டார்ட் பண்ணுங்கன்னு சொன்னேன் இல்லையா?” என்றான்.

“அதனால தானே சொன்னேன் இன்னைக்கு பிரிச்சி பார்க்க போறோம்னு” என்று ஆதி சொல்லி சிரிக்க.. ஆதி வெளிப்படையாக இன்று தாங்கள் இருவரும் ஹனிமூன் கொண்டாட போகிறோம் என்று சொல்ல, அதைக் கேட்ட அனைவர் முகமும் மகிழ்ச்சியில் ஸ்க்ரீனில் தெரிந்த ஆதி துர்கா முகத்தை பார்த்து சந்தோஷப்பட்டனர்.

“ஆதி நீ என்ன பேசினேன்னு தெரிஞ்சி தான பேசுறியா அங்க பாரு அவங்க எல்லாம் நம்மளை எப்படி பார்க்கிறார்கள்” என்றவள் வெட்கப்படுக் கொண்டே “அத்தை மாமா நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து ஓடினாள். அவள் எழுந்து ஓடுவதைப் பார்த்த ஆதி, துர்காவின் கையை பிடித்துக் கொண்டு “ஏய் எங்க ஓடுற நில்லு விக்கி கொடுத்த பாக்ஸ் ஓபன் பண்ணி பார்க்க வேண்டாமா?” என்று அவளை ஓட விடாமல் பிடித்துக் கொள்ள…

“அதெல்லாம் ஒன்னும் பார்க்க வேண்டாம் முதல்ல என் கையை விடுங்க” என்று வெட்கப்பட்டாள் துர்கா. இந்த பக்கம் இருந்து ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டு இருந்த விக்கி, “டேய் முதல்ல போன கட் பண்ணிட்டு அதுக்கப்புறம் உன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணுடா எங்களால பாக்க முடியல” என்றான்.

“பார்க்க முடியலன்னா போன கட் பண்ணுடா” என்று சொல்லிவிட்டு ஆதி துர்காவைப் பார்த்து சிரிக்க… “இதுக்கு மேல போன பாத்துட்டு இருந்தா நமக்கு மரியாதை இருக்காது” என்ற விக்கி போனை கட் செய்தான்.

“ஆதி என் கையை விடு” என்று வெட்கப்பட்டுக் கொண்டு அவன் கைக்குள் இருந்த தன் கையை விடுவித்தவள் பால்கனியை நோக்கி ஓட… அவள் பின்னால் வந்த ஆதி, துர்காவை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டவன் “என்ன துர்கா இப்படி வெட்கப்படுற இது என்ன புதுசா என்ன?” என்றான். “போ ஆதி புதுசா பழையதான்னு முக்கியம் இல்ல எப்பவுமே இத பத்தி பேசினா எனக்கு வெட்கமா தான் இருக்கு நான் என்ன செய்வேன்” என்றால் துர்கா.

அவள் மிகவும் வெட்கப்படுவதை உணர்ந்த ஆதி அவளைத் தன் வசப்படுத்த வானில் தெரிந்த நிலவைக் காட்டி “இன்னைக்கு நிலா ரொம்ப அழகா இருக்கு இல்ல துர்கா” என்றான். உடனே தலையை நிமிர்த்தி வானில் தெரிந்த நிலவைப் பார்த்து “ஆமாம் ஆதி எவ்வளவு அழகா இருக்குல்ல” என்றாள்.

உடனே ஆதி அந்த நிலவைப் பார்த்து பாட ஆரம்பித்தான்.

வெண்ணிலவே வெண்ணிலவே

விண்ணை தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை

வெண்ணிலவே வெண்ணிலவே

விண்ணை தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை

தாண்டி வருவாயா விளையாட

ஜோடி தேவை இந்த பூலோகத்தில்

யாரும் பாா்க்கும் முன்னே உன்னை

அதிகாலை அனுப்பி வைப்போம்

வெண்ணிலவே

வெண்ணிலவே விண்ணை

தாண்டி வருவாயா விளையாட

ஜோடி தேவை இந்த பூலோகத்தில்

யாரும் பாா்க்கும் முன்னே உன்னை

அதிகாலை அனுப்பி வைப்போம்

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

ராஜாவின் ரோஜா

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

ஆண் : இது இருளல்ல அது

ஒளியல்ல இது இரண்டோடும்

சேராத பொன் நேரம் இது

இருளல்ல அது ஒளியல்ல

இது இரண்டோடும் சேராத

பொன் நேரம்

ஆண் : தலை சாயாதே

விழி மூடாதே சில

மொட்டுக்கள் சட்டென்று

பூவாகும் பெண்ணே பெண்ணே

பூலோகம் எல்லாமே தூங்கிபோன

பின்னே புல்லோடு பூவிழும் ஓசை

கேட்கும் பெண்ணே நாம் இரவின்

மடியில் பிள்ளைகள் ஆவோம்

பாலுாட்ட நிலவுண்டு

பெண் : வெண்ணிலவே

வெண்ணிலவே விண்ணை

தாண்டி வருவாயா விளையாட

ஜோடி தேவை இந்த பூலோகத்தில்

யாரும் பாா்க்கும் முன்னே உன்னை

அதிகாலை அனுப்பி வைப்போம்

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

நீயும் நானும் ஒன்றாக போகும்

போது நீளூம் பாதை இன்னும் நீளமாக

என்று என் நெஞ்சம் ஏங்குதடா!!!

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

பெண் : எட்டாத உயரத்தில்

நிலவை வைத்தவன் யாரு

கையோடு சிக்காமல் காற்றை

வைத்தவன் யாரு

ஆண் : இதை எண்ணி எண்ணி

இயற்கையை வியக்கிறேன்

எட்டாத உயரத்தில் நிலவை

வைத்தவன் யாரு

பெண் : பெண்ணே பெண்ணே

பூங்காற்று அறியாமல் பூவை

திறக்க வேண்டும் பூக்கூட அறியாமல்

தேனை ருசிக்க வேண்டும்

ஆண் : அட உலகை ரசிக்க

வேண்டும் நான் உன் போன்ற

பெண்ணோடு

 : வெண்ணிலவே

வெண்ணிலவே விண்ணை

தாண்டி வருவாயா விளையாட

ஜோடி தேவை

: இந்த பூலோகத்தில்

யாரும் பாா்க்கும் முன்னே உன்னை

அதிகாலை அனுப்பி வைப்போம்

❤️

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured