Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 247

உன் ரகசிய ரசிகை நான் 247

by Layas Tamil Novel
155 views

EPI 247

ஆதி, துர்கா உடன் கதிர், விக்கி அவர்கள் வீட்டிற்கு வந்தனர். வந்ததிலிருந்து ஆதி துர்காவுடன் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தான்.

விசாலாட்சி மரகதம் அபி இருவரும் வீட்டை விட்டு கிளம்பியதிலிருந்து சட்ட நிம்மதியாக இருந்தார் அவர் முகமே அதை காட்டிக் கொடுத்தது.

ஆதி துர்கா இருவரும் காலையில் வீட்டுக்கு வந்து விடுவார்கள் என ஏற்கனவே கதிர் விசாலாட்சி இடம் கூறியிருக்க அவர்கள் இருவருக்கும் மணக்க மணக்க காலை உணவு செய்து தயாராக வைத்திருந்தார்..

துர்கா வந்ததும் நேராக துறையையும் கனகாவையும் தேடிக்கொண்டே ஆனால் உள்ளே வந்தால் அவர்கள் இருவரும் துர்கா பார்த்ததும் கட்டிக்கொண்டு தங்களுக்கு எதுவும் ஆகவில்லை என அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

துறையையும், கனகாவையும் அபியும் சங்கவியும் சேர்ந்து கடத்தியது அவர்கள் இருவருக்குமே தெரியாது. ஆதிக்கு சொல்லி போட்டியாக இருக்கும் யாரோ தான் தங்களை இப்படி கடத்தி விட்டார்கள் என இருவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வெங்கடாசலம் செண்பகம் கீர்த்திகா கதிர் என டைனிங் டேபிள் ஆதி துர்காவுடன் அமர்ந்து அனைவரும் சிரித்து பேசப்படும் விக்கி மட்டும் எதுவும் பேசாமல் உன் முகத்தை உம்மேன்று வைத்தவாறு உணவு அருந்திக்கொண்டு இருந்தான்.

அதை கவனித்துவிட்ட விஷாலக்ஷ்மி விக்கிதும் வந்து அவன் தலையை வருடி கொடுத்தவர் “ஏன்டா? என்ன ஆச்சு? ஏன்? முகத்தை இப்படி தூக்கி வெச்சி இருக்க” என்று கேட்டார்.

“அம்மா நீயே சொல்லு ஆதியும் துர்காவும் எங்கே இருந்து ஹனிமூனுக்காக டென்மார்க் கிளம்பினப்போ… நான் அவங்களுக்கு ஒரு கிஃப்ட் கொடுத்து அதை அங்க போய் ஓபன் பண்ணி பார்க்க சொன்னேனா? இல்லையா?” என்றான்.

“ஆமாடா ஒரு சின்ன பெட்டியை அவங்க ரெண்டு பேர் கையிலயும் கொடுத்து இதை அங்க போய் ஓப்பன் பண்ணி பார்க்க சொன்னியே ஏன்? அதுக்கு என்ன இப்போ?” என்றார் விசாலாட்சி.

“அந்த கிப்ட் நான் எப்படி கொடுத்தேனோ அதே மாதிரி கிஃப்ட் பேக் பிரிக்காமல் அப்படியே கொண்டு வந்து இருக்காங்க அம்மா. இவங்கள நான் என்ன செய்றது” என்றான்.

“அப்போ நீ கொடுத்த கிப்ட் அவங்க ரெண்டு பேரும் பார்க்கவே இல்லையா? அப்படியே கொண்டு வந்துட்டாங்களா?” என்றார் விசாலாட்சி.

“ஆமாம்மா அதனாலதான் நான் கோபமா இருக்கேன். அப்போ எனக்கு இங்கே என்ன மரியாதை இருக்கு” என்று வேண்டுமென்றே தன் கோபம் அதிகமாக இருப்பது போல காட்டிக் கொண்டான் விக்கி.

உடனே விசாலாட்சி ஆதி துர்காவிடம் திரும்பி “டேய் ஆதி ஏண்டா விக்கி கொடுத்த கிப்ட் ஓபன் பண்ணி பாக்கல” என்றார்.

“அம்மா நாங்க ஒன்னும் வேணும்னே அவன் கொடுத்ததை ஓபன் பண்ணாம வெச்சிருக்கல. அதை நாங்க மறந்தே போயிட்டோம். எங்களுக்கு அங்க வேலை பிசியாக இருந்ததினால் அந்த கிப்ட் பத்தி ஞாபகம் இல்லாம போயிடுச்சு ம்மா” என்றான்.

“விக்கி கொடுத்த அந்த சின்ன கிப்ட் பற்றி கொஞ்சம் கூட ஞாபகம் இல்லாமல் அப்படி என்னடா வேலை உனக்கு” என்றவர், “துர்கா அந்த கிப்ட் எங்க?” என்றார்.

அவளோ தன் ஹாண்ட் பேக்கில் இருப்பதாக விசாலாட்சி இடம் கூற.. வேகமாக ஹாலில் சோபாவில் இருந்த துர்கா ஹேண்ட்பேக்கை போய் எடுத்து வந்த விசாலாட்சி டைனிங் டேபிள் வைத்து அவள் ஹேண்ட்பேக்கில் கைவிட்டு விக்கி கொடுத்த கிப்ட் தேடி எடுத்தார்.

அதை எடுத்த விசாலாட்சி “இந்த கிப்ட் தான் நீ ஆதி துர்காவுக்கு கொடுத்தியா” என்றார்.

“ஆமா அத்தை இதே கிப்ட் தான் பாருங்க நான் கொடுத்த பேப்பர் கூட பிரிக்காமல் அப்படியே வச்சிருக்காங்க” என்று துர்காவை மீண்டும் முறைத்தான்.

“சரிடா சும்மா முறைச்சுட்டு இருக்காத நான் தான் சொன்னேன் நான் வேணும்னு அதை பண்ணலன்னு” என்றாள் துர்கா.

“உனக்கு என்ன பத்தி ஞாபகமே இல்ல அதனால தான் நான் கொடுத்ததை நீ திறந்து பாக்கல. சும்மா சப்பக்கட்டு சொல்லி காரணம் தேடாத” என்றான் விக்கி.

“டேய் ஏன்டா சொன்னதையே சொல்லிட்டு இருக்க” என்று துர்கா மீண்டும் விக்கியிடம் பேச வர.. “அடடா காலைல சந்தோசமா நிம்மதியா ரெண்டு பேரும் சாப்பிட வரீங்களா, மாத்தி மாத்தி சண்டை போட்டுட்டு இருக்கீங்க” என்றார் துரை.

உடனே துர்கா முகத்தை அழுவது போல வைத்துக்கொண்டு “அப்பா பாருங்க இவன் நான் ஊர்ல இருந்து வந்ததுல இருந்து என்கிட்ட மூஞ்சியை காட்டிக்கிட்டு இருக்கான் என்ன திட்டிட்டே இருக்கான்” என்று விக்கியை துரையிடம் போட்டுக் கொடுத்தாள்.

தன் மகள் மீது இருந்த பாசத்தில் என்ன ஏது என்று கேட்காமல் விக்கியை பார்த்து முறைத்து தள்ளினார். உடனே விக்கி விசாலாட்சியிடம் “அம்மா பாரு உன் தம்பி என்னை ஏதுன்னு கூட கேட்காம என்ன முறைச்சுட்டு இருக்காரு” என்றான்.

உடனே விசாலாட்சி “சும்மா என் பையனையே எல்லாரும் குத்தம் சொல்லிட்டு இருக்காதீங்க. அதான் ஆசையா கொடுத்த கிப்ட் நீங்க ஓபன் பண்ணி பார்க்காம விட்டது உங்க தப்பு, அதைத்தானே அவன் சொல்லிட்டு இருக்கான்” என்றவர், “டேய் விக்கி விடுடா அந்த கிப்ட் அவ திறந்து பார்க்கலைன்னா என்ன நாம திறந்து பார்ப்போம்” என்று கையில் இருந்த கிப்டை வேகமாக பிரிக்க ஆரம்பித்தார்.

அதைப் பார்த்ததும் விக்கிக்கு ஷாக் ஆகிவிட்டது. “ஐயோ அம்மா அந்த கிப்ட் அவங்க ரெண்டு பேரும் தனியா இருக்கிற அப்போ தான் பிரிக்க சொன்னேன். நீங்க என்ன எல்லாரும் முன்னாடியும் அத பிரிச்சிட்டு இருக்கீங்க அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அதை துர்கா கிட்டே குடுங்க அவங்க எப்ப ஃப்ரீயா இருக்காங்களோ அப்போ பிரித்து பார்க்கட்டும்” என்று சொல்லி அவர் கையில் இருந்து கிப்ட் விக்கி வாங்க போக…

அதற்குள் விசாலாட்சி அந்த பாக்ஸை சுற்றி இருந்த கிப்ட் பேப்பர் பிரித்து பாக்ஸை திறந்து உள்ளிருந்த கிப்ட் வெளியே எடுத்து விட்டார்.

அதைப் பார்த்ததும் டைனிங் டேபிளில் இருந்த அனைவருக்கும் ஷாக் ஆகிவிட்டது. துர்காவுக்கோ அந்த கிப்ட் பார்த்ததும் முகம் எல்லாம் வெட்கத்தில் சிவந்துவிட்டது. அந்த கிப்ட்டில் ஒரு ஆண் பெண் இருந்த சிலையும் அதனோடு சேர்ந்து ஒரு கைவிலங்கும் இருந்தது.

விக்ரமும் துர்காவும் தனியாக இருக்கும் போது அந்த கிப்டை திறந்து பார்க்க விக்கி சொல்லி இருக்க, ஆனால் விசாலாட்சி அதற்குள் அனைவர் முன்பும் அந்த கிப்டை திறந்து விட்டார். அந்த கிப்ட் பார்த்ததும் துர்காவுக்கு வெட்கம் பிடுங்கி தின்ன சாப்பிடடுவதை நிறுத்திவிட்டு வேகமாக எழுந்து தன் அறைக்கு ஓடிவிட… அவளைப் போலவே கீர்த்திகாவும் மற்ற பெண்களும் அங்கே இருக்க கூச்சப்பட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டனர்.

விசாலாட்சியோ தன் கையில் வைத்திருந்த அந்த கிப்ட்டை என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டத்தில் அதை கீழே போட போக… அவர் அருகில் சாப்பிட அமர்ந்து இருந்த ஆதி அதை கீழே விழாமல் பிடித்துக் கொண்டான். அவனும் சாப்பிடுவதை பாதியிலேயே விட்டுவிட்டு அந்த கிப்டோடு எழுந்து தங்கள் அறைக்கு சென்று விட்டான்.

அவன் சென்றதும் விசாலாட்சி விக்கியை பார்த்து “ஏண்டா அறிவு கெட்டவனே இப்படித்தான் கிஃப்ட் வாங்கி கொடுப்பியா? நமக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்ல? இது வேற நாங்க எல்லாரும் முன்னாடியும் திறந்து எனக்கு அவமானமாக போயிருச்சு” என்று சொல்லி அவன் தலையில் நங்கு என்று ஓங்கி கொட்டினார்.

“ஷ்… அம்மா வலிக்குது” என்ற விக்கி, “நான் தான் ஆரம்பத்தில் இருந்து சொன்னேனே அவங்க ரெண்டு பேரையும் அந்த கிப்ட் தனியா தானே திறக்க சொன்னேன். உங்களை யாரு முந்திரிக்கொட்டை மாதிரி இத்தனை பேர் முன்னாடி அந்த கிப்டை திறக்க சொன்னது” என்றான்.

“வந்ததிலிருந்து நீ துர்கா ஆதிக்கு கொடுத்த கிஃப்ட் பார்க்கவே இல்லைன்னு புலம்பிட்டு இருந்ததுனால தான் உனக்காக அந்த கிப்ட்டை நான் பிரிச்சேன். அதுக்குள்ள இப்படி ஒரு பரிசு இருக்குனு தெரிஞ்சிருந்தா நான் அதை திறந்து இருக்கவே மாட்டேன்” என்றார் விசாலாட்சி.

“சரி விடுமா அதான் நீ அந்த கிஃப்ட் பிரிச்சிட்டியே இனி என்ன, விடு என்று எனக்கு கொஞ்சம் பொங்கல் வை ரொம்ப பசிக்குது” என்றான்.

விக்கிக்கு அருகே இருந்த கதிர் விக்கியிடம் யாருக்கும் கேட்காத விதமாக “சும்மா இருந்த என் அண்ணனை அந்த கிப்ட் மேட்டர் ஓபன் பண்ணி உசுப்பேத்தி விட்டுட்ட… அவர் வேற அந்த கிப்டோட ரூமுக்கு போயிருக்காரு. அங்கே பாவம் துர்காவை என்ன பாடு படுத்த போறாரோ” என்று சொல்லி கிண்டலாக சிரித்தான்.

“சரி விடுடா விடுடா டென்மார்க்கில் ஹனிமூன் கொண்டாடாமல் இங்கே அவள் ரூம்ல வச்சு ஹனிமூன் கொண்டாடிட்டு போகட்டும்” என்றான் விக்கி கதிருக்கு மட்டும் கேட்கும் விதமாக. அவர்கள் இருவரும் பேசிய சிரிப்பதை பார்த்த மற்றவர்கள் என்ன என்று கேட்டுக் கொள்ளவில்லை.

இங்கே விக்கி கொடுத்த கிஃப்ட் உடன் தன் அறைக்கு வந்த ஆதி துர்காவை தேட, அவளோ விக்கி கொடுத்த கிப்ட் பார்த்ததிலிருந்து கூச்சப்பட்டு கொண்டு அறைக்குள் வந்திருக்க… அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் ஜன்னலுக்கு அருகில் நின்றிருந்தவள் திரும்பி வாசலை பார்க்க, ஆதி விக்கி அவர்களுக்காக கொடுத்த கிப்டோடு அறைக்குள் நுழையவும் அவளுக்கு மேலும் வெட்கம் பிடுங்கி தின்ன ஆதியை பார்க்காமல் ஜன்னல் வழியே வெளியே வெறித்தாள்.

துர்கா வெட்கப்பட்டு கொண்டிருக்கிறாள் என ஆதிக்கு நன்றாக புரிந்தது. மெல்ல தன் கையில் இருந்த கிப்ட் கொண்டு வந்து கட்டிலுக்கு அருகில் இருந்த டேபிள் மேல் வைத்தவன் துர்காவை பின்னாலிருந்து கட்டிக் கொண்டான்.

ஆதி பின்னாலிருந்து அணைக்கவும் துர்காவுக்கு உடல் சிலிர்த்தது. அவள் உடல் இருகுவதை கண்ட ஆதி, “என்ன துர்கா வெட்கமா?” என்றான். அவனை திரும்பி பார்க்காமலேயே “ஆமாம்” என்று தலையை ஆட்டினாள்.

“இந்த விக்கிக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை. இப்படி எல்லாரும் முன்னாடியும் கிஃப்ட் பத்தி பேசி அத்தையும் அதுக்குள்ள என்ன இருக்குன்னு தெரியாம ஓபன் பண்ணி எல்லாரும் முன்னாடியும் காட்டிட்டாங்க. எனக்கு ஒரே வெட்கமா போயிடுச்சு ஆதி” என்று விக்கியை குறை கூறினாள் துர்கா.

“ஆமா துர்கா, இந்த கிப்ட் பத்தி முதலிலேயே அவன் அழுத்தி சொல்லி இருந்தா நம்ம அங்கயே ஓபன் பண்ணி பார்த்திருந்து இருக்கலாம். அந்த கிப்ட் மாதிரியே அங்க நம்ம என்ஜாய் பண்ணி இருக்கலாமே” என்றான்.

“ஆதி…” என்று அவன் கைக்குள் இருந்து துர்கா வெட்கப்பட்டு கொண்டு நழுவ போக… அவளை விடாமல் பின்னிருந்து இருக்க கட்டிக்கொண்ட ஆதி, “இப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல நம்ம இங்கேயே மறுபடியும் ஸ்டார்ட் பண்ணலாம்” என்றான்.

“ஆதி என்ன இது பட்டப்பகல்ல இப்படித்தான் பேசுவியா” என்றாள் துர்கா.

“துர்கா… ஹனிமூன் கொண்டாட ராத்திரி பகல் எதுவும் இருக்கா என்ன? எனக்கு அதை பத்தி எல்லாம் கவலை இல்லை. இப்ப கூட பாரு அவன் கொடுத்த அந்த கிப்ட் மாதிரியே நானும் உன்ன பின்னாடி இருந்து கட்டிப்பிடிச்சுட்டு தானே இருக்கேன்” என்றான்.

ஆதி சொன்னதும் துர்காவின் பார்வை தானாக டேபிளில் இருந்த அந்த கிப்டை பார்த்தது. அதைப் பார்த்ததும் துர்காவின் முகம் மேலும் சிவந்து விட…

“என்ன அந்த கிப்ட்ல ஒரு பையனும் பொண்ணும் உடம்புல டிரஸ் இல்லாம, பொண்ணு பின்னாடி இருந்து அந்த பையன் இருக்கமா கட்டி பிடிச்சிருக்கான். நம்ம ரெண்டு பேரும் டிரஸ் ஓட கட்டிப்பிடித்து இருக்கோம் அவ்வளவு தான் வித்தியாசம்” என்றான். பிறகு “ஆமா துர்கா அந்த கை விலங்கை எதுக்கு அவன் கொடுத்து இருக்கான்” என்றான் வேண்டுமென்றே எதுவும் தெரியாதவன் போல.

“ஐயோ ஆதி கொஞ்ச நேரம் பேசாம இரு. ஏன் இப்படி அதை பத்தி விளக்கமா பேசிக்கிட்டு இருக்க” என்றாள்.

“அந்த கிப்ட் பத்தி விளக்கமா பேசிக்கிட்டு மட்டும் தானே என்னால இருக்க முடியுது துர்கா. அந்த கிப்ட்ல இருக்குற மாதிரி உன் கூட இப்போ என்னால இருக்க முடியலையே” என்றான்.

“ஆதி என்ன இது என்ன விடு இப்படி எல்லாம் பேசாத” என்று அவன் கைக்குள் இருந்து துர்கா நழுவப் பார்க்க…

“எங்க துர்கா ஓடுற? அந்த கிப்ட்ல இருக்க மாதிரி நம்ம என்ஜாய் பண்ண வேண்டாமா?” என்று அவள் கட்டி இருந்த சேலையை அவிழ்க்க பார்க்க… அவனை தன் பலம் கொண்டு வேகமாக தன் இடமிருந்து தள்ளிவிட்ட துர்கா அங்கிருந்து செல்ல போக… ஆதி அவள் சேலை தலைப்பை பிடித்துக் கொண்டு துர்காவை பார்த்தான். அவளோ வெட்கத்தோடு அவனை பார்த்தவாறு தன் தோளில் கைவைத்து சேலை அவிழ்ந்து விடாமல் பிடித்துக் கொண்டவள் “விடு ஆதி” என்று பார்வையாலேயே கெஞ்சினாள். ஆதியோ “ம்ஹும்…” என்று தலையை இடவலமாக ஆட்டியவன் அவள் சேலையை தன் கையில் சுற்றிக் கொண்டே அவளை தன் அருகில் இழுத்தான்.


You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured