Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 249

உன் ரகசிய ரசிகை நான் 249

by Layas Tamil Novel
146 views

EPI 249

விக்ரம் ஆபீஸ் சென்று வீட்டிற்கு வர… துர்கா கார்டனில் நடந்து கொண்டு இருந்தாள். அவளை அவளுக்கு தெரியாமல் அவள் பின்னே வந்த ஆதி அங்கே முத்து தாத்தா இருப்பதை பார்த்ததும் முத்து தாத்தாவிற்கு தெரியாமல் காரின் பின் சென்று ஒளிந்து கொண்டதை அவர் பார்த்துவிட்டு உள்ளே சென்று விட அவர் சென்றதும் துர்காவுக்கு தெரியாமல் பூனை நடை போட்டு மெதுவாக துர்கா பின் சென்றான் ஆதி.

ஒரு கையில் தன் சேலையை பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் ரோஜாக்களை பிடித்துக் கொண்டு அங்கிருந்த கார்டனை ஆசையாக சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள் துர்கா. மெது மெதுவாக எட்டு வைத்து கார்டனில் இருந்த ஊஞ்சலில் சென்று துர்கா அமர முயற்சிக்க… செடியின் மறைவில் இருந்து துர்காவை பார்த்துக் கொண்டு இருந்தவன் துர்கா ஊஞ்சலில் அமர முயற்சித்துக் கொண்டு இருப்பதை பார்த்தவன் அவளுக்கு உதவலாம் என்று செல்ல போனவன், பின் அவளாகவே முயற்சித்து அமரட்டும் என்று பொறுமையாக துர்காவை பார்த்துக் கொண்டு இருந்தான்.

கையில் இருந்த ரோஜா கொத்துக்களை ஊஞ்சலின் ஓரம் வைத்தவள் ஒரு கையால் ஊஞ்சலை தன் புறம் இழுத்து மற்றொரு கையால் ஊஞ்சலின் மற்றொரு புற சங்கிலியை பிடித்தவள் தன் சேலையை மேலே உயர்த்தி இடுப்பில் சொருகியவள் ஊஞ்சலில் ஒருவாறு அமர்ந்துவிட்டாள். தூரத்தில் இருந்து துர்கா ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் அழகை ரசித்தபடி அவள் பின்னால் மெதுவாக வந்தான் ஆதி.

அருகில் வந்ததும் தான் துர்காவின் பின்னழகை பார்த்து அப்படியே சொக்கி போய் நின்றான். அழகாக பூனம் சேலை கட்டி விரித்துவிட்ட கூந்தலை இருபுறமும் சிறு முடிக்கட்டுகளை எடுத்து அதில் அழகாக கிளிப் குத்தி…. அதன் இருபுறமும் சரமாக தொங்கிய மல்லிகை பூ மணம் அவன் நாசியை எட்டியது. இடை வரை இருந்த கூந்தலை எடுத்து துர்கா முன்னே போட்டுக்கொள்ள…. அவள் அணிந்திருந்த பிளவுஸ் மறைத்தது போக பாதி தெரிந்த அவள் முதுகும் மொத்தமாக தெரிந்த அவள் இடையும் அவன் கண்ணையும் கையையும் அவள் இடையை பார்த்த பின்னும் தொட துடிக்கும் தன் கையை அடக்க முடியாமல் ஆட்டி படைத்தது. சிவந்த அவள் தேகத்தை கருப்பு நிற ஜாக்கெட் மேலும் எடுப்பாக காட்டிட இடுப்பு சுற்றி இருந்த சிவப்பு நிற சேலை அவள் இடுப்பின் வளைவுகளை அப்பட்டமாக வெளியே காட்டிவிட….

அவற்றை எல்லாம் ரசித்தவாறு மெதுவாக துர்காவின் பின்னால் வந்த ஆதி வெறுமனே ஊஞ்சலில் அமர்ந்து ஆடாமல் அமைதியாக அமர்ந்திருந்த துர்கா இடையில் கை கொடுத்து அவளை தன்னோடு சேர்த்து இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டான். தன் பின்னால் இருந்து திடீரென்று யாரோ கட்டி அணைக்கவும் முதலில் அதிர்ந்த துர்கா அவன் ஸ்பரிசம் பெற்றதும் அது ஆதி தான் என்று உணர்ந்தவள், ஊஞ்சலை பிடித்திருந்த தன் இரு கைகளையும் தன் இடையோடு ஒட்டி இருந்த அவன் கைகளுக்குள் அதன் கையை நுழைத்து பிடித்துக் கொண்டவள், தன் இடது தோள் மீது முகம் புதைத்திருந்த ஆதியைத் திரும்பி பார்த்து “நீ எப்போ வந்த ஆதி?” என்று கேட்டாள்.

“என் பொண்டாட்டி கார்டனில் இருந்த பூக்களை எல்லாம் ரசித்தபடியே வரும்போது பார்த்து விட்டேன்” என்றான். துர்காவுக்கு அவன் மீசை முடி தன் தோள்களில் பட்டு குறுகுறுக்க…. நெளிந்து கொண்டே “ஆதி கூச்சமா இருக்கு” என்று சிறுபிள்ளை போல சிரித்தாள். சில சமயங்களில் வளர்ந்த பெண் போல அவன் அருகில் வரும் போது நடந்து கொள்கிறாள், சில சமயங்களில் சிறுபிள்ளை போல என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறாள். அவள் எப்படி இருந்தாலும் அவள் அழகில் ஆதியைக் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தாள்.

“அப்படியா!! உனக்கு கூச்சமா இருக்கா?” என்று சொல்லிக் கொண்டே தன் மீசை முடியால் அவள் முதுகில் கோலம் போட… அமர்ந்திருந்த துர்கா அவன் செய்யும் சேட்டையை தாங்க முடியாமல் கூச்சத்தில் நெளிய ஊஞ்சலிலிருந்து நழுவி கீழே விழப்போனாள். கீழே விழப் போகிறோம் என்று பயந்த துர்கா கண்களை இறுக மூடியவள் பயத்தில் தன் இடையே சுற்றி இருந்த ஆதியின் கையை இறுக்கமாக பற்றிக்கொள்ள…. ஊஞ்சலில் இருந்து நழுவி விழப் போனவளை அப்படியே அவள் இடையோடு சேர்த்து வளைத்து தூக்கிய ஆதி, தன்னோடு சேர்த்து துர்காவைத் தூக்கியவன் ஊஞ்சலை சுற்றி வந்து அதில் அமர்ந்து தன் மடியில் துர்காவை அமர வைத்துக் கொண்டான்.

கீழே விழாமல் ஆதியின் மடியில் அமர்வதை உணர்ந்து துர்கா கண்களைத் திறந்து திரும்பி ஆதியைப் பார்த்து “நல்லவேளை நீ என்ன பிடிச்சுக்கிட்டியா நான் கூட கீழே விழுந்துடுவேன்னு பயந்துட்டேன் ஆதி” என்றாள். “நான் இருக்கும் போது உன்னை அப்படியே கீழ விழ விடுவேனா துர்கா?” என்றான் ஆதி.

அவன் சொன்னதைக் கேட்டு சிரித்துக் கொண்ட துர்கா, “என்ன ஆதி நேரத்துல வீட்டுக்கு வந்து இருக்கே… என்னை பார்க்கத்தான் வந்தியா?” என்று கேட்டாள். “இல்ல துர்கா ஒரு ஃபைலை வீட்டில் மறந்து வச்சிட்டு போயிட்டேன் அதை எடுக்கத்தான் வந்தேன். உள்ளே வரப்ப நீ கார்டன்ல நின்னு முத்து தாத்தா கிட்ட பேசிட்டு இருக்கிறதை பார்த்ததும் உன்னை பார்க்க வந்துட்டேன்” என்று ஆதி சொல்ல… “ஓஹோ அப்போ நீ என்னை பார்க்க வரல ஃபைலை எடுக்கத்தான் வந்தேன் அப்படித்தானே ஆதி” என்று சொல்லி என்னை பிடித்திருந்த ஆதியின் கையை தட்டி விட்டு அவன் மடியிலிருந்து இறங்கியவள் அங்கிருந்து செல்லப் போனாள்.

“என்ன ஆச்சு துர்காவுக்கு திடீரென்று கோபமாக இறங்கி போறா” என்று யோசித்த ஆதிக்கு அப்போதுதான் அவன் சொன்னது புரிந்தது. அவளை பார்க்க வரவில்லை ஃபைலை எடுக்கத்தான் வந்தேன் என்று சொன்னதால்தான் துர்கா தன் மீது கோபமாக செல்கிறாள் என்பதை உணர்ந்த ஆதி, இடத்திலிருந்து எழுந்து வேகமாக துர்காவின் அருகில் சென்று பின்னிருந்து அவளை கட்டிக்கொண்டு… “ஹே துர்கா என் மேல கோபமா?” என்று கேட்டான்.

“ம்ஹும்… இல்லையே” என்று தலையை இடவலமாக துர்கா ஆட்ட.. “ஏன் என் மடியில் இருந்து எழுந்து போன?” என்று கேட்டான். “ம்ம்ம்ம்… சும்மா….” என்றவள் தன்னை கட்டிக் கொண்டிருந்த ஆதியின் கையை தட்டி விட்டு “பின்னாடி போங்க என் பக்கத்துல வராதே” என்றாள். “என் மேல கோபம் இல்லைன்னு சொன்ன ஆனா இப்படி கோபப்படுறியே துர்கா” என்றான் ஆதி.

“நீதான் என்னை பார்க்க வரலைன்னு சொல்லிட்டியே அப்புறம் என் பின்னாடி வரப்போய் ஏதோ ஃபைல் எடுக்கணும்னு சொன்னியே அந்த ஃபைலை எடுத்துட்டு முதல்ல இங்கிருந்து கிளம்பு” என்று துர்கா சீரியஸாக அவனிடம் பேச… தன் மீது உரிமையாக கோபப்படும் துர்காவை பார்த்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்ட ஆதி, “சரி நீதான் சொல்லிட்டியே…. உன் பேச்சை மீறுவேனா?” என்று சொல்லிவிட்டு துர்காவைத் தாண்டி ஃபைலை எடுப்பதாக சொல்லிவிட்டு வீட்டிற்குள் செல்ல… “நான் போகச் சொன்னா உடனே போயிடுவானா?” என்று கோபமான துர்கா, “வரட்டும் இனிமே நான் உன் கூட பேசப் போறது இல்ல” என்று வாய்விட்டு புலம்ப…

ஆதி வீட்டிற்குள் சென்று விட்டான் என்று நினைத்து துர்கா புலம்பியதை கதவோரம் தெரியாமல் மறைந்து நின்றிருந்த ஆதி அவள் பேசியதை கேட்டு சிரித்தவன் வெளியே வந்து துர்காவைத் தன் கையில் ஏந்தி சுற்றினான். அவள் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு கீழே இறக்கியவன், “துர்கா எனக்கு இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நீ இவ்வளவு உரிமையா சண்டை போடுவியான்னு எனக்கு தெரியல ஆனா இந்த துர்கா எனக்கு ரொம்ப புதுசா இருக்கா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று சொல்லி மீண்டும் அவள் நெற்றியில் முத்தம் வைக்க…

அவன் சொல்வதைக் கேட்டு துர்காவுக்கு புரிந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “என் கூட பேசாத நான் உன் கூட உன் மேல கோபமா இருக்கேன்” என்று சொல்ல… “என் பொண்டாட்டி என் மேல கோவமா இருக்கீங்களா?” என்றான் ஆதி. “ம்ம்ம்.. கோவமா இருக்கேன்” என்று துர்கா சொல்ல… “நான் என் பொண்டாட்டி கோபத்தை தணிக்கட்டுமா?” என்றான் ஆதி.

அவனைப் பார்க்காமல் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு துர்கா திரும்பிக் கொள்ள… அவள் முன்பு வந்து நின்றவன் துர்காவின் முகத்தை பிடித்து சட்டென்று அவள் இதழில் முத்தம் வைத்தவன், பின் நிமிர்ந்து துர்காவின் கண்களை பார்த்து “இப்போ என் பொண்டாட்டிக்கு என் மேல இருக்க கோபம் போயிடுச்சா?” என்று குறும்பாக கேட்டான் ஆதி. அவன் முத்தம் தந்த அதிர்ச்சியில் இருந்த துர்கா, “எல்லாம் நீ என் மேல கோபப்படுறதே இல்ல என்னதான் கோவப்படுத்தி பார்க்குற …. என்ன முத்தம் கொடுத்து சமாதானப்படுத்தணும்னு நினைக்கிறியா?” என்று சொல்ல…

“ஓ…. அப்படியா உனக்கு கோபம் குறையலன்னா அந்த கோபம் குறையுற வரைக்கும் நான் என் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்துக்கிட்டே இருப்பேன்” என்று சொன்னவன் நொடியும் தாமதிக்காமல் துர்காவின் இதழை கவ்வினான். தனக்கு அவன் மீது கோபம் இருப்பது தெரிந்தும் வேண்டும் என்று ஆதி தன்னை முத்தமிட அதில் மேலும் கோபம் கொண்ட துர்கா அவன் மார்பில் தன் இரண்டு கைகளாலும் அடிக்க…. அவள் அடிப்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து அவளுக்கு முத்தம் கொடுத்தவன் நீண்ட நேரம் கழித்து அவள் இதழை விடுவித்தான்.

அவளுக்கு முத்தமிட்ட பின் அவளை விடுவித்து துர்காவைப் பார்க்க… அதுவரை அவனிடம் சண்டை இட்டு இருந்தவள் அவன் முத்தத்தில் கரைந்து அவனோடு இணங்கிப் போயிருந்தாள். கண்கள் மூடி இன்னமும் அவன் தந்த முத்தத்தை மனதால் அனுபவித்துக் கொண்டிருந்த துர்கா முகத்தை ஆதி பார்க்க…. அவள் கன்னங்கள் இரண்டும் ரோஜா பூ நிறத்தில் சிவந்திருக்க அவள் இதழ் அவன் முத்தம் கொடுத்ததில் லேசாக கன்னிப் போய் நன்றாக ஏற்கனவே சிவந்திருந்த உதடு மேலும் சிவந்து இருக்க அதை பார்த்து சிரித்தவன், தன் விரல்களால் அவள் இதழை வருடியவன் அவள் இதழை பிடித்து இழுத்து துர்காவை பார்க்க… அப்போதும் அவள் கண்கள் மூடி அப்படியே நின்று இருந்தாள்.

அவள் கீழுதட்டை இழுத்தவன் ஏற்கனவே கன்னி போய் சிவந்திருந்த துர்காவின் உதட்டை தன் பற்களால் லேசாக கடிக்க…… அப்போதுதான் ஆதி செய்வதை உணர்ந்த துர்கா அவன் கடித்ததில் வலிக்க…. “ஷ்….” என்று வலியில் சத்தமிட்டவள் கண்ணை திறந்து அவனைப் பார்க்க… அவன் வேண்டும் என்று தன்னை சீண்டி பார்க்கிறான் என்பதை உணர்ந்து தன்னிடம் இருந்து அவனை விலக்கிவிட்டு வேகம் வேகமாக வீட்டுக்குள் நுழைந்து கொண்டாள்.

துர்காவைத் துரத்திக் கொண்டு வந்த ஆதிக்கு அவள் வேகமாக ஹாலிற்குள் வந்து செண்பகத்தின் அருகில் சென்று அமர்ந்ததும், ஆதி எதுவும் பேசாமல் உள்ளே வர… செண்பகம் அவனைப் பார்த்து “வாப்பா.. என்ன இந்த நேரத்துல வந்து இருக்க?” என்று கேட்டார். “ஒன்னும் இல்லை அத்தை ஒரு ஃபைலை மறந்து விட்டுட்டு போய்ட்டேன் அதை எடுக்கத்தான் வந்தேன்” என்று சொல்லிவிட்டு நேராக தன்னறைக்குச் சென்று ஃபைலை எடுத்தவன் கீழே வந்து செண்பகத்திடம் சொல்லிவிட்டு துர்காவைப் பார்க்க அவள் முறைத்துக் கொண்டு ஆதியைப் பார்த்தாள்.

அவளைப் பார்த்து சிரித்த ஆதி தன்னை செண்பகம் பார்க்கிறாரா என்று கவனித்தவன் அவர் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்த பின் துர்காவை பார்த்து கண்ணடித்துவிட்டு காற்றில் அவளுக்கு ஒரு முத்தத்தையும் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான். ஆதியைப் பார்த்து துர்கா முறைப்பதும் அவளை சமாதானம் செய்ய ஆதி காற்றிலேயே அவளுக்கு முத்தத்தை பறக்க விடுவதையும் கண்டும் காணாதவர் போல செண்பகம் இருந்துவிட்டார்.

❤️

கார்டனில் துர்காவுடன் கழித்த நேரத்தை நினைத்து தன் மனதிற்குள் அசைப்போட்டுக் கொண்டே சந்தோஷமான சிரித்த முகத்தோடு ஆபீஸிற்குள் வந்த ஆதியை அனைத்து ஸ்டாஃப்களும் அதிசயம் போல பார்த்தனர். ஆதி முன்பெல்லாம் எப்போதும் முகத்தை உம்மென்று வைத்து கடுகடுவென்று தான் ஆபீசுக்கு வருவான். அப்போதெல்லாம் அவனைப் பார்த்தாலோ அல்லது அவரிடம் சென்று பேச வேண்டும் என்றாலும் அனைவருக்கும் பயமாகத்தான் இருக்கும். முகமூடியால் தன் முகத்தை மூடிக்கொண்டு வரும் ஆதியின் கண்களை பார்த்தாலே மிரண்டு ஓடியவர்கள் நிறைய பேர்.

இப்போது அதே முகமூடி அணிந்த ஆதி அவன் கண்களாலேயே அனைவரையும் அவனை திரும்பிப் பார்க்க வைத்திருந்தான். அவனுடைய மனதில் இருந்த சந்தோஷம் அவன் கண்ணில் அப்படியே அப்பட்டமாக பிரதிபலித்தது. ஆதி சிரித்தவாறு தன் கையில் இருந்த ஃபைலை தூக்கிப்போட்டு பிடித்து விளையாடிக்கொண்டு தன் கேபினுக்குள் வர…. இவ்வளவு நேரம் லிஃப்டில் இருந்து தன் கேபினுக்குள் வரும் வழியில் செய்து கொண்டு வந்த அட்டகாசங்களை எல்லாம் ஆதியின் கேபினுக்குள் இருந்த மானிட்டரில் சிசிடிவி கேமரா மூலமாக அவனை பார்த்துக் கொண்டிருந்த கதிரும் விக்கியும் ஆதி கதவை திறந்து கொண்டு உள்ளே வரவும் அவனை அதிசயம் போல பார்த்தனர்.

இவ்வளவு நேரம் சந்தோஷமாக வந்த ஆதிக்கு இவர்கள் இருவரையும் பார்த்ததும் முகத்தை அப்படியே உம்மென்று மாற்றிக் கொண்டான். எதுவும் தெரியாதவன் போல ஆதி தன் சேரில் வந்து அமர… “ஏன் கதிர் இங்க ஆதி என்று ஒரு ஹிட்லர் இருந்தானே அவனை நீ பார்த்தியா?” என்று கேட்டான் விக்கி. “இல்லையே விக்கி இப்போ இருக்கிறது ஹிட்லர் ஆதி இல்ல ரொமான்டிக் ஹீரோ ஆதி” என்றான் கதிர்.

இவர்கள் இருவரும் பேசுவதை கேட்ட ஆதி, “என்னடா ரெண்டு பேருக்கும் வர வர வாய்க் கொழுப்பு ரொம்ப அதிகமாகிட்டே போகுது” என்று கேட்டான். “எங்களுக்கு வாய் கொழுப்பு தான் அதிகமாகுது. ஆனா நீ கைய கால வச்சுக்கிட்டு சும்மா இருக்காமல் ரொம்ப ஓவரா துர்காவை பாடா படுத்துறியாமே” என்றான் விக்கி. “என்னடா சொல்ற?” என்று ஆதி விக்கியை கேட்க… “சும்மா இருக்கிற துர்காவை போகும்போதும் வரும்போதும் அவளை உன் கை கால் வச்சுக்கிட்டு சும்மா இல்லாம எதுவும் செஞ்சு அம்மாவா ஆக்க ட்ரை பண்றியாமே உண்மையா?” என்று விக்கி ஆதியிடம் கேட்க…

ஆதி எதுவும் பேசாமல் விக்கியையும் கதிரையும் பார்த்து ஒரு மார்க்கமாக விழிக்க… “என்னடா யாருக்கும் தெரியாம பால் குடிச்சிட்டு முழிக்கிற திருட்டு பூனை மாதிரியே எங்க ரெண்டு பேரையும் பார்க்கிற?” என்றான் விக்கி. “டேய் இடியட் இப்படித்தான் வந்து என்கிட்ட பேசுவியா? நீ எல்லாம் உன் பொண்டாட்டிய கொஞ்சுவதே இல்லையா? என்னமோ நான் மட்டும்தான் உலக அதிசயமா என் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ற மாதிரி பேசுற….” என்ற ஆதி, “இப்போ எதுக்கு நீங்க என்னோட கேபின்ல ரெண்டு பேரும் இருக்கீங்க உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டான்.

“அப்போ உனக்கு விஷயமே தெரியாதா?” என்றான் கதிர். “என்ன விஷயம்? என்ன சொல்ல வரீங்க சொல்லுங்க எனக்கு புரியல” என்றான் ஆதி. “அப்போ உனக்கு விஷயம் தெரியலன்னு எங்களுக்கு நல்லா புரிஞ்சு போச்சு” என்ற விக்கி ஒரு நிமிஷம் இரு என்று சொல்லி முன்னிருந்த கணினியில் சிசிடிவியை ஆன் செய்தவன் அதில் ஒரு கேமராவை மட்டும் ஓபன் செய்து காட்ட… அந்த கேமராவில் தெரிந்த வீடியோவை பார்த்த ஆதி விக்கியிடம் திரும்பி “இதுக்கு என்ன இப்போ?” என்று கேட்டான்.

“என்னடா காலையிலேயே நீ கிளம்புனதுமே சங்கவி ஆபீசுக்கு வந்துட்டா. நீ பார்த்தா ஷாக் ஆவேன்னு நினைச்சேன் ஆனா இவ்வளவு கூலா இருக்கியே” என்றான் விக்கி. “சங்கவி எப்படியும் ஆபீஸ் வருவாள் என்று நான் ஏற்கனவே எதிர்பார்த்தது தான்” என்றான் ஆதி. “என்னடா சொல்றே… அவ ஆபீஸ் வருவான்னு உனக்கு ஏற்கனவே தெரியுமா?” என்றான் விக்கி.

“ஏற்கனவே தெரியாதுடா ஆனா வருவான்னு நான் எதிர்பார்த்தேன்” என்ற ஆதி, “சரி உன் தங்கச்சி ஆபீஸ்க்கு வந்து இருக்கா நீ அவள போய் கவனிக்காம என் கேபின்ல இருந்து என்ன பண்ற?” என்று விக்கியை பார்த்து நக்கலாக கேட்டான். “என்ன நான் உன்ன இவ்வளவு நேரம் கிண்டல் பண்ணி பேசினேன். அதுக்கு இப்ப நீ ஸ்டார்ட் பண்றியா?” என்றவன் அதெல்லாம் என்கிட்ட நடக்காது என்று சொல்லிவிட்டு “டேய் கதிர் வாடா.. நம்ம கேபின்க்கு போலாம். தங்கச்சியாம்ல தங்கச்சி… இப்படி எல்லாம் பேசினா நாங்க உடனே பாச மழை பொழிஞ்சிருவோமா என்ன… போடா…” என்று ஆதியைப் பார்த்து பேசிவிட்டு வெளியே சென்றான்.

விக்கியை பார்த்து சிரித்த ஆதி திரையில் தெரிந்த சங்கவியை பார்த்து இப்போது என்ன பிளான் செய்து வந்திருக்கிறார் என்று யோசனையில் மூழ்கினான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured