Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 253

உன் ரகசிய ரசிகை நான் 253

by Layas Tamil Novel
161 views

EPI 253

போதி, மாதவி, ஸ்ரீ, ரியா நால்வரும் டென்மார்க்கிலிருந்து இந்தியா வந்துவிட்டனர்.

ரியா, ஸ்ரீ இருவருமே போதி மாதவியிடம் சொல்லிவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்று விட.. போதி மாதவி இருவரையும் பிக்கப் செய்ய மித்திரனும் அவனோடு ரதியும் வந்திருந்தனர்.

காரிலிருந்து இறங்கிய இருவரும் போதி மாதவியிடம் இருந்த லக்கேஜை வாங்கிக்கொண்டு அவர்கள் இருவரையும் வரவேற்றனர்.

மித்திரனோ மாதவியிடம் “டிராவல் எல்லாம் ஈஸியா இருந்துச்சாம்மா ஒரு பிரச்சினையும் இல்லையே” என்று பாசமாக கேட்டான்.

“அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல அண்ணா” என்றாள்.

அவளிடம் நன்றாக பேசிய மித்திரன் போதியை பார்த்து முறைத்து விட்டு லக்கேஜ்களை காரில் வைத்தவன் வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து கொள்ள போதியும் மாதவியும் பின்னால் அமர்ந்து கொண்டனர். ரதி டிரைவர் சீட்டிற்கு அருகில் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

காரில் ஏறி அமர்ந்த போதியும் மித்திரனை கவனித்தான். அவன் வந்ததிலிருந்து தன்னிடம் பேசாமல் முகத்தை உர் என்று வைத்திருக்கிற “என்ன ஆச்சு உனக்கு? நானும் வந்ததுல இருந்து பாத்துட்டு இருக்கேன் என்கிட்ட மட்டும் பேச மாட்டேங்குற என் மேல எதுவும் கோவமா?” என்றான்.

அதற்கு மித்ரன் எந்த பதிலும் பேசாமல் காரை ஸ்டார்ட் செய்து அவர்கள் வீட்டை நோக்கி ஓட்டிக்கொண்டிருக்க, அதை கவனித்த ரதி பின் சீட்டில் இருந்த போதியிடம் “மாமா அவர் உங்க மேல பயங்கர கோபத்துல இருக்காரு. அதான் உங்ககிட்ட பேசாம முகத்தை தூக்கி வெச்சிட்டு இருக்காரு” என்று சொல்லி சிரித்தாள்.

“என்னது கோபமா? எதுக்கு என் மேல கோபமா இருக்கான் இவன்?” என்று ரதியிடம் கேட்டான் போதி.

“அதுவா அது ஒன்னும் இல்லண்ணா ஒரு சாதாரண விஷயம் தான் அதுக்கு போய் அவரு இப்படி முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருக்காரு” என்று சொல்லி கார் ஓட்டிக் கொண்டிருந்த மித்திரனை பார்த்து சிரித்தாள் ரதி.

“எது இவன் ஊருக்கு போனதிலிருந்து எனக்கு ஒரு வாட்டி கூட போன் பண்ணி பேசலையே அது உனக்கு சாதாரண விஷயமா? அவனும் நானும் எவ்வளவு க்ளோஸா இருந்தோன்னு உனக்கு தெரியும் தானே? அப்படி இருக்கிறவன் ஊருக்கு போன பிறகு ஒரு வார்த்தை போன் பண்ணி என்ன பண்ற எப்படி இருக்குன்னு கேட்டிருப்பானா?” என கோபமாகப் பேசியவாறே காரை ஓட்டினான் மித்ரன்.

மித்ரன் சொன்னதை கேட்டதும் அப்போதுதான் போதிக்கும் தான் செய்த தவறு புரிந்தது. “அடடா ஊருக்கு போனதிலிருந்து அட்லீஸ்ட் ஒரு கால் கூட நான் இவனுக்கு போன் பண்ணி பேசலையே! அச்சச்சோ இவனை எப்படி நான் மறந்தேன்” என்றவன் காரின் முன் சீட்டில் இருந்த கண்ணாடி வழியாக மித்ரனை பார்த்தான்.

மித்ரன் அவனைப் போலவே அதே கண்ணாடியில் பின் சீட்டில் அமர்ந்திருந்த போதியை பார்த்துவிட… இருவரும் சட்டென்று தன் பார்வையை விலக்கிக் கொண்டனர்.

“சாரிடா நான் அங்கிருந்த வேலையில உனக்கு கால் பண்ணி பேசணும்ங்கிறதையே மறந்துட்டேன் என்ன மன்னிச்சிடுடா” என்றான்.

“சாருக்கு அப்படி என்ன முக்கியமான வேலை? எங்ககிட்ட போன் பண்ணி பேச கூட நேரம் இல்லாத அளவுக்கு?” என்றான் நக்கலாக மித்ரன்.

“டேய் என்னடா கேள்வி இது? ஹனிமூன் போனவன் கிட்ட என்ன வேலை செஞ்சிட்டு இருந்தேன்னு கேட்டா நான் என்னன்னு சொல்லி உனக்கு விளக்கம் கொடுக்கிறது?” என்ற போதி தன்னருகில் அமர்ந்திருந்த மாதவியை ஓரக் கண்ணால் பார்க்க..

அதை முன்னால் இருந்த கண்ணாடி வழியாக பார்த்த மித்ரன், “அவ்ளோ பிஸியா இருந்துட்டு தான் இந்த பிரண்டை மறந்துட்டீங்களா? இருக்கட்டும் இருக்கட்டும் புது பொண்டாட்டி வந்ததும் என்ன டீல்ல விட்டுட்ட இல்ல?” என்று போதியை முறைக்க…

“ஐயோ அண்ணா என்ன நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஜாடையா பேசி காட்டுற மாதிரி இருக்கு! இவர் அங்கே போனதிலிருந்து முதல் நான்கு நாள் ஆபீஸ் வேலையைத்தான் கட்டிக்கிட்டு அழுதாரு. அதுக்கப்புறம் நானா தான் இவர்கிட்ட ஹனிமூன் வந்துட்டு ஆபீஸ் வேலையா பார்க்கிறீங்களா என்று சண்டை போட்டேன். மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை அண்ணா” என்றாள் மாதவி.

“ஐயோ மாதவி நான் உன்னை எதுவுமே சொல்லல டா. உன் புருஷன் இருக்கானே அவனைத்தான் சொன்னேன். சும்மா அவனை வேணும்னே வம்பு இழுத்தேன் அவ்வளவுதான் நீ சீரியஸா எடுத்துக்காத” என்றான்.

உடனே முன் சீட்டில் இருந்த ரதி பின்னால் இருந்த மாதவியிடம், “மாதவி இவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறாங்கன்னு நீ குறுக்க போய் இவங்க ரெண்டு பேரையும் சமாதானம் பண்ண நினைக்காத. இப்போ இப்படி சண்டை போட்டுக்கிட்டவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு எப்படி ஒண்ணா இருப்பாங்கன்னு. குறுக்கே நம்ம போனா நமக்கு தான் சரியான பல்பு கிடைக்கும் அதனால இவங்களே பேசி சண்டை போட்டுக் தீர்த்துக்கட்டும்னு நீ ஃப்ரீயா விடு” என்றாள்.

மாதவியும் ரதி சொல்வது சரிதான் என்பது போல தலையாட்டியவள் சீட்டில் சாய்ந்து கண்மூடி அமர்ந்து கொண்டாள். போதியும் மித்ரனும் வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு சண்டையிட்டபடி இருந்தனர். மாதவி கண்கள் மூடி இவர்கள் பேசுவது எல்லாம் கேட்டுக் கொண்டே சிரித்தவாறு அமர்ந்திருக்க ரதியோ தன் காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இவர்கள் பேசுவதையே சுத்தமாக கேட்பதை தவிர்த்து இருந்தாள்.

❤️

இரவு மிகவும் சோர்வாக தன் அறைக்கு வந்தான் கதிர். அவனுக்காக பெட்ரூமிலேயே டிபன் எடுத்து வைத்து காத்திருந்தாள் கீர்த்திகா. மிகவும் சோர்வோடும் களைப்போடும் அறைக்குள் வந்த கதிரை பார்த்ததும் பெட்டில் படுத்து புக் படித்துக் கொண்டிருந்த கீர்த்திகா வேகமாக எழுந்து அவனை நோக்கி வர… அப்போது தான் கதிரை நன்றாக கவனித்தாள்.

கதிர் குடித்துவிட்டு தள்ளாடியபடியே நடந்து வந்தான். அவன் அருகில் வந்த கீர்த்திகா, “டேய் கதிர் என்னடா இது நீ குடிச்சிருக்கியா?” என்றாள்.

கீர்த்திகாவின் குரலை கேட்டதும் தலையை நிமிர்ந்து தனக்கு எதிரே இருந்தவளைப் பார்க்க அவளுக்கு உருவம் சரியாக தெரியவில்லை. மீண்டும் தன் கண்கள் தேய்த்துக்கொண்டு நன்றாக பார்த்ததும் அவள் தன் மனைவி கீர்த்திகா தான் என்று தெரிந்ததும் சிரித்த முகமாக “ஏய் கீர்த்தி நீ எப்போ இங்கே வந்த?” என்றான் குடிபோதையில்.

“சரிதான் என்னடா கேள்வி இது? நான் இங்கே இருக்காம வேற எங்க இருப்பேன்? நீ தானே என் புருஷன்?” என்று சொல்லி அவனை முறைத்தாள் கீர்த்தி.

“ஆமா ஆமா நீ என் பொண்டாட்டி ஆயிட்டல்ல.. அப்போ என் வீட்ல என் கூடத்தானே நீ இருக்கணும்” என்றவன் நேராக சோபாவில் சென்று படுக்கப் போக… “டேய்.. டேய்… எங்கடா தூங்க போற? எழுந்திரு சாப்பிட்டு தூங்கலாம்” என்றாள்.

“ம்ஹும்… எனக்கு சாப்பாடு எல்லாம் எதுவும் வேண்டாம்” என்றவன் கட்டிலில் படுத்தவாறே தன் கால்களில் இருந்த ஷூவை கழற்ற முயன்றான். ஆனால் அவன் போதையில் அந்த ஷூவை கூட அவனால் கழற்ற முடியவில்லை. அதை பார்த்த கீர்த்திகா தன் சேலையை இடுப்பில் சொருகியவள் தரையில் அமர்ந்து அவன் கால்களில் இருந்த ஷூவைக் கழட்டி வைத்தவள், எழுந்து வந்து அவன் கழுத்தில் அணிந்திருந்த டை-யைக் கழட்டி சட்டை பட்டன்களை கழற்றினாள்.

அதை போதையிலேயே கவனித்த கதிர் சட்டென கீர்த்திகாவின் கையைப் பிடித்துக் கொண்டு “ஏன் இப்போ எதுக்கு என் சட்டை பட்டன கழற்ற? நீ என்னை என்ன செய்யப் போற?” என்றான் குறும்பாக.

“உன்னை நான் எதுவும் பண்ணலடா. பாரு நீ காலையில போட்ட டிரஸ்ஸோட அப்படியே தூங்க போற, அதான் உனக்கு டிரஸ் மாத்த ஹெல்ப் பண்ணலாம்னு… சரி வா முதல்ல நீ குளிச்சிட்டு வா… கொஞ்சமா சாப்பிடு அதுக்கப்புறம் படுத்து தூங்கலாம்” என்றாள்.

“ம்ஹும்… குளிக்கணுமா? முடியாது எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் குளிக்கல. எனக்கு தூக்கம் வருது” என்று அவளை கழுத்தோடு சேர்த்து இழுத்து தன் அருகில் படுக்க வைத்தவன் அவளை கட்டிக்கொண்டு அவளோடு சேர்த்து கதிரும் படுத்துக் கொண்டான்.

“கதிர் என்ன பண்ற? என்னை விடு முதல்ல எழுந்திரு. நீ போய் குளிச்சிட்டு வா வந்து கொஞ்சமாவது சாப்பிடு. இப்படி குடிச்சிட்டு வந்து வெறும் வயித்தோட படுத்து தூங்கினா உடம்புக்கு என்ன ஆகுறது?” என்று அக்கறையாக கேட்டவள், “இப்ப என்ன திடீர்னு இன்னைக்கு குடிச்சிட்டு வந்திருக்க?” என்றாள் கீர்த்திகா.

கதிர் குடித்து வந்ததற்கான காரணத்தை கீர்த்திகா கேட்டதும், இரண்டு நாட்களாக தான் கோட் செய்திருந்த டெண்டரை அபி சங்கவி இருவரும் திட்டம் போட்டு தங்களிடமிருந்து பறித்துக் கொண்டது மனதிற்குள் உறுத்திக்கொண்டே இருக்க கீர்த்திகா கேட்டதும் அவளிடம் அந்த விஷயங்களை எல்லாம் சொல்லி வருத்தப்பட்டவன், “என் அண்ணாவுக்கு முதல் முறையா என்னால லாஸ் ஆகியிருக்கு. என்னால் அதை தாங்கிக்கவே முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு கீர்த்தி” என்றான்.

“உன்னோட வருத்தம் நியாயமானது தான். ஆனால் உன் அண்ணன் (ஆதி) அவர்களுக்கான பணத்தை கொடுத்து அந்த டெண்டரை எடுத்துக்க சொல்லிட்டாரு அப்படின்னா அந்த டெண்டர் அவருக்கு அவ்வளவு பெரிய விஷயமா தெரியல. அது ஏண்டா நீ யோசிக்கல?” என்றாள்.

அவள் சொன்ன விஷயத்தை யோசித்தவன் “ஆமா நீ சொன்னது சரிதான் நான் ஏன் இதை இந்த மாதிரி யோசிக்காம விட்டுட்டேன்” என்றான் கதிர். “பாத்தியா ஒன்னும் இல்லாத விஷயத்தை ஏன் நீ மனசுல போட்டு குழப்பிக்கிட்டு உன்னையே வருத்திக்கிற? இப்போ அதை நினைச்சு தான் இவ்வளவு குடிச்சிட்டு வந்தியா?” என்றாள் சிறு கோபத்தோடு.

அவள் வயிற்றில் தன் கையை வைத்து தடவியபடியே “ஆமாம்” என்று அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்தான். அதில் கூச்சமாக இருக்க, நெளிந்து கொண்டே அவன் முகத்தை தன்னிடம் இருந்து பிரித்தவள் அவன் நெற்றியில் முத்தம் வைத்து “உன்னை என்னடா பண்றது?” என கீர்த்திகா அவனைப் பார்த்து கேட்க.. உடனே கட்டிலில் இருந்து எழுந்த கதிர் தன் கைகள் இரண்டையும் காற்றில் பரப்பிக்கொண்டு “என்ன வேணா செஞ்சுக்கோ நான் உனக்குத்தான்” என்றான்.

அவன் எழுந்து இப்படி சொல்லவும் அவனைப் பார்த்து சத்தமாக சிரித்த கீர்த்திகா, “முதல்ல குளிச்சிட்டு வா அதுக்கப்புறம் மத்ததெல்லாம் பாத்துக்கலாம்” என்று அவனை பாத்ரூம் நோக்கி தள்ளிக்கொண்டு சென்றாள். “ம்ஹும்… நான் தான் குளிக்கலைன்னு சொல்றேனே எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு” என்றான் கதிர்.

“அப்படியா டயர்டா இருக்கா? சரி போ அப்ப நீ போய் தூங்கு நான் சாப்பிட்டு வந்து படுக்கிறேன்” என்றாள் வேண்டுமென்றே. “தூங்கணுமா? எதுக்கு? எனக்கு இப்போ தூங்க மூடே இல்ல வேற மாதிரி தான் இருக்கு” என்று அவள் இடையில் தன் கையை வைக்க.. தன்னை இடுப்பில் இருந்த அவன் கையை தட்டி விட்டவள் “இப்போ தானே உனக்கு டயர்டா இருக்குன்னு சொன்ன? இவ்வளவு டயர்டுல எங்க மத்ததெல்லாம் செய்யப் போற? பேசாம போய் படுத்து தூங்கு” என்றாள்.

“ம்ஹும்… நான் தூங்க மாட்டேன் நீ வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தூங்கலாம்” என்றான். “ச்சே… ச்சே… நீ குடிச்சிட்டு வந்திருக்க உன்கிட்ட ஒரே வாசனை வருது. நீ வேற குளிக்க மாட்டேங்குற அப்புறம் எப்படி நான் வந்து உன் கூட தூங்குறது? அதனால இன்னைக்கு நான் உன் கூட படுக்க மாட்டேன் நான் சோபால தான் படுக்க போறேன்” என்று கீர்த்திகா கட்டிலில் இருந்த போர்வையை எடுத்துக்கொண்டு சோபாவை நோக்கி படுக்க போக…

“ஏய் கீர்த்து அங்கே எப்படி தூங்க போற? என்கூட வந்து பெட்ல படுத்துக்கடி ப்ளீஸ்” என்று கெஞ்சினான். “நான் உன் கூட வந்து தூங்கணுமா?” என்றாள் கீர்த்திகா. கதிர் “ஆமாம்” என்று தலையை மேலும் கீழும் ஆட்ட.. அதை ரசித்தவள் அவனிடம் “அப்போ போய் குளிச்சிட்டு வா அப்படித்தான் நான் வந்து தூங்குவேன்” என்றாள்.

“ம்ஹும்… நான் சொன்னேனே எனக்கு இப்போ குளிக்கிறதுக்கு மூடு இல்ல நீ வா நம்ம போய் தூங்கலாம்” என்று அவள் கைப்பிடித்து பெட்டிற்கு அழைக்க போக அவன் கையை தட்டி விட்டவள் “அப்ப நான் இன்னிக்கு சோபாவில் தான் படுத்து தூங்க போறேன்” என்று சொல்லி சோபாவில் பெட் ஷீட்டை விரித்தாள்.

“நான் பெட்ல வந்து தூங்குன்னு சொல்லிட்டு இருக்கேன் என் பேச்சைக் கேட்காமல் அங்கே படுக்கிறேன்னு சொல்றியா?” என்றவன் தன் கைகள் இரண்டையும் தேய்த்துக்கொண்டு கீர்த்திகாவிடம் வந்தவன் அவள் இடையில் கை வைத்து அப்படியே அவளை மொத்தமாக தூக்கினான். இதை எதிர்பாராத கீர்த்திகா பயத்தில் “ஆ” என்று அலறிவிட, அவளை கதிர் தூக்கிக் கொண்டு பெட்டிற்கு சென்றான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured