Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 255

உன் ரகசிய ரசிகை நான் 255

by Layas Tamil Novel
111 views

Epi 255

காலையில் ஆபீஸ் கிளம்பி டைனிங் டேபிளுக்கு சாப்பிட வந்தான் ஆதி அவனுக்கு முன்பே அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க துர்காவும், விசாலாட்சியும் எல்லோருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

சேலையை தூக்கி இடுப்பில் செருகிக்கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தவர்களுக்கு பார்த்து பார்த்து உணவு பரிமாறிக் கொண்டு இருந்த துர்காவை பார்த்து சிரித்தவாறு வர விஷாலக்ஷி ஆதியை பார்த்துவிட்டு “ரெடி ஆயிட்டியா ஆதி சரி வா.. நீயும் வந்து சாப்பிடு. இன்னைக்கு உனக்கு பிடிச்ச ஐட்டமா உன் பொண்டாட்டி செஞ்சு வச்சு இருக்கா” என்று சொல்லி துர்காவை பார்த்து விசாலாட்சி சிரித்தார்.

“அது என்ன அத்தை அவருக்கு மட்டும் தான் இந்த ஐட்டம் பிடிக்குமா? இங்க பாருங்க எல்லாருமே அதை விரும்பி தான் சாப்பிடுகிறாங்க. என்னமோ நான் அவருக்கு மட்டும் சமைச்ச மாதிரி பேசுறீங்க. நான் இங்க இருக்க எல்லாருக்கும் சேர்த்துதான் சமைச்சேன்” என்றால் செல்லமாக அவரை கோபித்துக் கொண்டு.

“சரி சரி நான் எதுவும் சொல்லலப்பா” என்றவர்.

” நான் உனக்கு தானே உனக்கு சப்போர்ட் பண்ணி பேசினேன்” என்றவர்.

“ஆதி இந்த காலத்தில் நல்லதுக்கு இடமே இல்லப்பா நீ வா வந்து உக்காரு அம்மா உனக்கு சாப்பாடு பரிமாருறேன் ” என சொல்லி அவனை அமர வைத்து உணவு பரிமாறினார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த சங்கவிக்கு எரிச்சலாக இருந்தது.”ஆமா பெரிய மருமக இவ…ஊர் உலகத்துல இல்லாத மருமக ரொம்பத்தான் இவளை இந்த கிழவி தாங்குது. அப்படி என்னதான் சொக்குப் பொடி போட்டு வச்சிருக்கான்னு தெரியல. இந்த வீட்ல இருக்குற எல்லாருமே அவளுக்குத் தான் ஃபர்ஸ்ட் பிரிபரன்ஸ் குடுக்குறாங்க. இவன் எது சொன்னாலும் கேட்டுக்குறாங்க. இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு ரொம்ப இரிட்டேட் ஆகுது. இவளுக்கு ஏதாவது ஒரு வகையில ஆப்பு வைக்கணும் .அப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கும்” என மனதிற்குள் துர்காவை பார்த்து வஞ்சம் வளர்த்தினாள் சங்கவி.

கதிர் தன் அருகில் அமர்ந்திருந்த கீர்த்திகாவை நோண்டிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டு இருக்க..

அவளோ “கொஞ்ச நேரம் கைய கால வச்சுக்கிட்டு சும்மா இருடா. எல்லாரும் நம்மள பாத்துட்டு போறாங்க. கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா?” என அவனை திட்டிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தால்.

“நீ என் பக்கத்துல இருந்தாலே ஏன் மூளையே வேலை செய்ய மாட்டேங்குது பொண்டாட்டி. என்ன பண்றது என் கையும் காலும் சும்மா இருக்க மாட்டேங்குதே … உன்ன சும்மா சும்மா நோண்டிக்கிட்டே இருக்க சொல்லுது” என்றான் கிறக்கமாக அவளை பார்த்து.

இவர்கள் இருவரும் பேசுவது யாருக்கும் கேட்கவில்லை என்றாலும் ஆனால் கதிர் கீர்த்திகாவை ஏதோ சொல்லி சீண்டுகிறான் என்று மட்டும் அனைவருக்கும் தெரிய அதை கண்டும் காணாதவர்கள் போல தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென செண்பகம் துர்காவை பார்த்து “துர்கா உன் கழுத்துல ஏதோ சிவந்து இருக்கு பாரு. ஏதாவது உன்ன கடிச்சு வச்சுருச்சு போல” எனச் சொல்லி சாப்பிட்டு கொண்டிருந்தவர் எழுந்து துர்காவிடம் சென்று அவள் கழுத்தில் இருக்கும் தழும்பை பார்த்தார்.

செண்பகம் அப்படிச் சொன்னதும் சட்டென தன் கையால் கழுத்தில் இருந்த அந்த தழும்பை மறைத்துக் கொண்டவள், ” அது ஒன்னும் இல்லம்மா நேத்து நான் தோட்டத்துல பூ பறிச்சிட்டு இருக்கும்போது ஒரு வண்டு வந்து என்ன கடிச்சிடுச்சு.அதான் இப்படி தழும்பான மாதிரி இருக்கு”என்றாள்.

“வண்டு கடிச்சிருச்சுன்னு சொன்ன..ஆனா இதை பார்த்தா வண்டு கடிச்ச மாதிரி தெரியலையே வேற எதுவும் கிடைத்திருக்க போகுது. நீ வா நம்ம உடனே ஹாஸ்பிடல் போகலாம் ” என செண்பகம் துர்காவை ஹாஸ்பிடல் போக அழைத்தார்.

“ஐயோ அம்மா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் மருந்து போட்டுட்டேன்.அதுவே தானா சரி ஆயிடும்” என துர்கா ஏதோ சொல்லி சமாளித்தவள் செண்பகத்தை மீண்டும் சாப்பிட சொல்லி அமர வைத்தாள்.

செண்பகத்தை அமர வைத்தவள் அங்கே அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்த ஆதியை பார்த்து முறைத்தாள்.

துர்கா தன்னை முறைப்பதைப் பார்த்த ஆதி “இவ இப்போ எதுக்கு சம்பந்தமில்லாமல் என்ன முறைக்கிறா. நான் என்ன பண்ணினேன்” என்பது போல யோசனையாக சாப்பிட்டு முடித்தவன். எழுந்து கை கழுவி விட்டு வந்தவன் “அப்பா நான் ஆபீஸ் கிளம்புறேன்” என்று விட்டு துர்காவை பார்த்தவன்.

” வெளியே வா” என்பது போல கண்களால் ஜாடை செய்ய..

துர்காவோ “வர முடியாது போடா” என அவனுக்கு கண்களாலேயே பதில் கூறினாள்.

துர்கா, ஆதி இருவரும் பார்வையாலேயே ஏதோ பேசிக் கொள்வதைப் போல உணர அதை பார்த்த சங்கவிக்கு வயிற்றுவச்சலாக இருந்தது “பொண்டாட்டிய எப்பவும் கண்ணுக்குள்ளேயே வெச்சிருக்கணும். அவன் எங்க இருந்தாலும் அவன் கவனம் முழுக்க அவ மேல தான் இருக்கு.அப்படி என்னதான் ரெண்டு பேரும் கண்ணாலேயே ஜாட செஞ்சு பேசுகிறார்களோ தெரியல ச்சே இந்த கண்டறியெல்லாம் நான் பார்க்க வேண்டி இருக்கு ” என்று சங்கவி என உள்ளுக்குள் புலம்பி கொண்டாள்.

ஆதி துர்காவை பார்த்ததும் அதை கவனித்துவிட்ட விசாலாட்சி உடனே “துர்கா நான் மத்தவங்களுக்கு பரிமாறன் நீ போய் ஆதியை அனுப்பிட்டு வாம்மா” என துர்காவை ஆதியை வழியனுப்ப சொல்லச் சொல்ல

“அதானே என்னடா இந்த கிழவி இன்னும் எதுவும் சொல்லலையேன்னு பார்த்தேன் அப்படியே மகனுக்கும் மருமகளுக்கும் இடையில தூதுதான் இந்த கிழவி. பாரு அவன் அவளை பார்த்ததும் எதுக்கு பார்க்கிறேன் என்று புரிந்துகொண்டு அவளை அவன் கூட அனுப்பி வைக்கிறத. கொஞ்சம் கூட வெக்கமே இல்லை இந்த கிழவிக்கு” என விசாலாட்சியையும் திட்டினாள் சங்கவி.

செண்பகம் சொன்னதும் கனகாவும், கீர்த்திகாவும் துர்காவின் கழுத்தில் இருந்த அந்த வடுவை பார்த்தனர்.

கனகாவிற்கு தன் மகள் கழுத்தில் இருந்த வடு என்ன என்று புரிந்து இருக்க.. அவரை போலவே விஷாலாட்சிக்கும் அது புரிய இருவரும் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக் கொள்ள…

கீர்த்திகாவோ சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் எழுந்து துர்கா அருகில் வந்து “அக்கா நீ சொன்னதை பார்த்தா இது வண்டு கடிச்ச மாதிரி தெரியலையே வேற ஏதோ கடிச்ச மாதிரி இல்லை இருக்கு” என்று சொல்லி வேண்டுமென்றே துர்காவை கிண்டல் செய்தாள்.

கீர்த்திகா இப்படி தன் தழும்பை பார்த்து கேட்டதும் துர்காவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது “எல்லாம் இந்த ஆதியால வந்தது. இவன் பண்ணின வேலையால நான் எப்படி இவங்களையெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு” என உள்ளுக்குள் புலம்பியபடி ஆதியை முறைத்தவள்.

கீர்த்திகாவிடம் “நீ போய் முதல்ல சாப்பிடு சும்மா தேவையில்லாமல் பேசி உளறிக்கிட்டு இருக்காத” என சொல்லி அவளை திசை திருப்ப நினைக்க

“அக்கா நீ மத்தவங்கள வேலை சமாளிக்கலாம் ஆனால் என்ன சமாளிக்க முடியாது. மாமா தானே உன்னை கடிச்சு வச்சாரு செண்பக அம்மா கேட்டதும் என்ன சொல்றதுன்னு தெரியாம சமாளிச்சு தானே வண்டு கடிச்சுருச்சுன்னு பொய் சொன்னே” என்று சொல்லி சிரித்தாள்.

“அதான் தெரியுது இல்லடி அப்புறம் என்ன எல்லார் முன்னாடியும் அதைக் கேட்டு என் மானத்தை வாங்குற, ஒழுங்கா போடி” என கீர்த்திகாவை துர்கா அதட்ட கீர்த்திகா சிரித்துக் கொண்டே மீண்டும் கதிரிடம் வந்து அமர்ந்து கொண்டாள்.

“இதோ வந்துட்டா அக்காவுக்கு ஜால்ரா போடுறவ துர்கா கிட்ட என்னதான் இருக்குன்னு எல்லாரும் இப்படி அவளை தாங்கு தாங்கன்னு தாங்குறாங்க. என்னால இதையெல்லாம் பார்த்துட்டு இங்கே உட்காரவே முடியல” என்று நினைத்தவள் சட்டென எழ அனைவரும் திரும்பி சங்கவியை ஒரு சேர பார்த்தனர்.

“ஸ்ஸ்…அப்பா .. இதுங்க வேற ஒக்காந்தா பார்க்கிறது.. நின்னா பார்க்கிறது … என்ன பாடா படுத்துதுங்க தினமும் இதுங்கள சமாளிக்கிறதே எனக்கு வேலையா போச்சு “என சலித்துக் கொண்டவள்.

” என்ன எல்லாரும் என்னையே பாக்குறீங்க” என்றால்.

” இல்லை நீ திடீர்னு எந்திரிச்சியே அதான் ஏதோ வேணும்னு நினைச்சு பார்த்தோம் ” என சொல்லி விசாலாட்சி கேட்க.

“நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன் கை கழுவ போறேன். இது இல்ல என்ன இருக்கு” என்றவள் வேகமாக டைனிங் டேபிளை விட்டு எழுந்து சென்றாள்.

மற்றவர்களுக்கு சங்கவியின் திடீரென சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் ஏன் எழுந்து கைகழுவ சென்றால் என புரியவில்லை. ஆனால் துர்காவிற்கு நன்றாக புரிந்தது. தன்னிடம் அனைவரும் அன்பாக பேசி பழகுவது சங்கவிக்கு கண்டிப்பாக எரிச்சலை தந்திருக்க வேண்டும். அதனால் தான் அவள் இங்கே சாப்பிட முடியாமல் எழுந்து சென்று விட்டால் என்பதை புரிந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டால் துர்கா.

ஆதி துர்காவை பார்த்து வரச் சொல்லி கண்களாலேயே ஜாடை செய்தவன் கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு செல்ல…

ஆதியை முறைத்துக் கொண்டு அவன் பின்னால் சென்ற துர்காவை கார் அருகில் வந்ததும் சுற்றி ஒரு முறை தங்கள் அருகில் யாரும் இருக்கிறார்களா? என்று பார்த்த ஆதி.

துர்காவை இடையோடு சேர்த்து வளைத்து தன் அருகில் நிறுத்திக் கொண்டவன் “ஏய் பொண்டாட்டி செண்பகம் அத்தை உன்கிட்ட வண்டு கடிச்சது பத்தி பேசிட்டு இருக்குறப்போ நீ ஏன் என்ன சம்பந்தமே இல்லாம முறைச்ச” என்றான்.

‘என்ன சொன்ன சம்பந்தம் இல்லையா உனக்கு சம்பந்தம் இருந்ததுனால தானடா உன்னை நான் முறைச்சேன்” என்றவள்.

” நான் சொன்ன அந்த வண்டு நீதான் . . நேத்து நைட் நீ கடிச்சதுல இந்த தழும்பு ஆயிடுச்சு அதைத்தான் செண்பகம் அத்தை கேட்டாங்க. அவங்க கிட்ட நீதான் என்ன கடிச்சு வச்சிட்டேன்னு நான் என்ன சொல்லவா முடியும். அதனாலதான் வண்டு கடிச்சிருச்சுன்னு பொய் சொன்னேன். பாரு எல்லாம் உன்னால தான் ” என சொல்லி துர்கா அவனைத் திட்ட..

“இப்போ நான் கடிச்சு வச்சது தான் உனக்கு பிரச்சனை. அந்த தழும்பை எல்லாரும் பாத்துட்டு உன்ன கேக்குறாங்கன்னு தானே நீ என்ன முறைச்ச அப்படித்தானே” என்றான் ஆதி.

“ஆமா பின்ன இல்லையா?” என அவனை முறைத்த துர்காவை “ஒரு நிமிஷம் இங்க வா” என சொல்லி அவள் கையைப் பிடித்து அங்கிருந்து தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.

” டேய் என்னடா பண்ற விடு பட்ட பகலில் அதுவும் வெளியில வச்சு என்னடா பண்ற கையை விடு” என அவன் கையில இருந்து தன் கையை உதற..

“பேசாம வாடி இல்லன்னா மறுபடியும் எல்லாருக்கும் தெரியிற மாதிரி உன் உதட்டை கடிச்சு வச்சுருவேன் ” என ஆதி சொன்னதும்.

இவன் செய்தாலும் செய்து விடுவான் என உடனே துர்கா தன் வாயை கைகளால் மூடிக்கொண்டு “வேண்டாம்” என்பது போல தலையாட்ட.

அவளை இழுத்துக்கொண்டு கார்டனுக்குச் சென்றவன் வேகமாக தன் சட்டை பட்டனை கழட்டினான்.

அதைப் பார்த்து அதிர்ந்த துர்கா “டேய் என்னடா பண்ற..இப்போ எதுக்கு சட்டையை கழற்ற ” என துர்கா பதற.

” பேசாம இருடி” என்றவன். வேகமாக தன் சட்டையில் இருந்து முதல் நான்கு பட்டனை கழட்டி சட்டையை பின்னால் இறக்கியவன். தன் தோள்பட்டையையும் முதுகையும் அவளிடம் திரும்பி காட்ட..

அதில் துர்காவின் நகக்கீரல்களும் பத்தரங்களும் வரி வரியாக இருந்தது அதை காட்டி “இப்போ சொல்லு இதை மத்தவங்க பார்த்தா நான் என்ன சொல்லி சமாளிக்கிறது ஒரு பூனை வந்து என்ன கீறிடிச்சின்னு சொல்லவா? ” என கேட்டான்.

அவன் முதுகில் இருந்த நகக்கிரல்களும் தோள்பட்டையில் இருந்த பல் தடங்கலையும் பார்த்தவளுக்கு நேற்று இரவு நடந்தது நினைவிற்கு வர முகம் எல்லாம் முகம் எல்லாம் சிவந்துவிட்டது.

அதைப் பார்த்தவன் “என்ன பொண்டாட்டி இதெல்லாம் பார்த்ததும் நேத்து நைட்டு நடந்ததெல்லாம் ஞாபகம் வந்திருச்சா உன் முகம் இப்படி செவந்திருச்சு” எனச் சொல்லி அவள் கண்ணம் கிள்ள..

” போடா” என அவன் மார்பில் கைவைத்து தள்ளியவள். வேகமாக அங்கிருந்து ஓடி வெளியே வந்தால்.

அப்போது அவளுக்கு எதிரே வந்த முத்து தாத்தா “பாப்பா ஏன் இப்படி ஓடுறீங்க” என அவளிடம் கேட்க.

” ஒன்றும் இல்லை தாத்தா “என்று பின்னால் திரும்பி ஆதியை பார்த்து சிரித்துவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

துர்கா பார்த்த திசையை முத்து தாத்தா பார்க்க அங்கே ஆதி சட்டை பட்டணங்களை எல்லாம் அவிழ்த்துவிட்டு கோலத்தை பார்த்து முத்து தாத்தாவிற்கு சங்கடமாக போய்விட சட்டன அவர் திரும்பி வேகமாக வீட்டிற்குள் ஓடி விட்டார்.

முத்து தாத்தா தன்னை இந்த நிலையில் பார்த்து மனதிற்குள் என்ன நினைத்து இருப்பாரோ என நினைத்த ஆதிக்கு வெட்கமாக போய்விட்டது. தன் தலையில் அடித்துக் கொண்டவன் “இவளால என் மானமே போகுது” என புலம்பியவள் வேகமாக சட்டை பட்டனை போட்டுவிட்டு காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured