Home Uncategorized உன் ரகசிய ரசிகை நான் 258

 உன் ரகசிய ரசிகை நான் 258

by Layas Tamil Novel
61 views

EPI 258

நீங்கள் கேட்டபடி, கதையில் உள்ள ‘கார்த்திக்’ என்ற பெயரை ‘ஆதி’ என்றும், ‘லட்சுமி’ என்ற பெயரை ‘துர்கா’ என்றும் மாற்றியும், மற்ற பெயர்களை மாற்றாமல் பிழைகளைத் திருத்தியும் கதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மதுவை மணமகள் அறையில் பியூட்டிஷியன் திருமணத்திற்கு தயார் செய்து கொண்டு இருக்க… அவளுக்கு வேண்டியதை எல்லாம் எடுத்துக் கொடுத்து உதவியவள் ரியா. நிலானி, ராதா, கீர்த்தி மூவரும் திருமணத்திற்கு வந்திருந்தவர்களை கவனித்துக் கொண்டு இருக்க.

நிலானி வயிற்றைத் தள்ளிக்கொண்டு மண்டபத்தில் இங்கேயும் அங்கேயும் ஓடி ஒட்டி வேலை பார்ப்பதைப் பார்த்த விக்கி அவளிடம் வந்து, “உன்கிட்ட என்ன சொல்லி நான் மண்டபத்துக்கு உன்னை கூட்டிட்டு வந்தேன்? வந்தா மண மேடைக்கு பக்கத்துல ஒரு சேரை போட்டு பேசாம உட்காரச் சொன்னேனா இல்லையா?” என்றான் கோபமாக.

“ஏங்க! இது என் அக்காவோட கல்யாணம். வந்திருக்குறவங்களை நான் கவனிக்காம ஒரு இடத்துல போய் என்னை உட்காரச் சொல்றீங்களா? அதெல்லாம் என்னால் முடியாது,” என்றாள் நிலானி.

“ஏன்டி! நான் சொன்னதுக்கு எல்லாம் வீட்டுல தலையை தலையை ஆட்டிட்டு இங்கே வந்ததும் ‘முடியாது’ன்னு என்கிட்டயே சொல்றியா? உன்னை…” என்றவன் சுற்றும் முற்றும் பார்க்க… அங்கே பவனின் அம்மாவுடன் அமர்ந்து சிவகாமி பேசிக்கொண்டு இருந்தார்.

“நான் சொன்னா நீ கேட்க மாட்டே… இரு,” என்றவன் அவளை இழுத்துக்கொண்டு போய் சிவகாமியின் முன்பு இருக்க வைத்தவன், “அம்மா! இவளை கொஞ்சம் என்னன்னு கேளுங்க… வயித்துல புள்ளையை வெச்சுட்டு இங்கயும் அங்கேயும் நடந்துட்டு இருக்கா. நான் சொன்னா கேட்க மாட்டாள். நீங்களாச்சும் கொஞ்சம் இவளுக்கு எடுத்து சொல்லுங்க,” என்றான் விக்கி.

“அட நீ வேற ஏன்டா? நான் மண்டபத்துக்குள்ள வந்ததுல இருந்து இவ கிட்டே ஆயிரம் முறை சொல்லி இருப்பேன் ஒரு இடத்துல இருக்கச் சொல்லி. நீயே சொல்றதை கேட்காதவ. நான் சொல்லியா கேட்கப்போறா?” என்றார் சிவகாமி.

அவன் நிலானியைத் திரும்பிப் பார்க்க… “அப்போ உன்னை யார் தாண்டி அடக்கி ஒரு இடத்துல உட்கார வெக்குறது?” என்று விக்கி பாவமாக அவளைப் பார்த்தான்.

நிலானி சிரித்துக்கொண்டே, “என்னை அடக்க யாராலயும் முடியாது” என்று சொல்லி வாயை மூடவில்லை. அப்போது அங்கு வந்த ராதாவும், கீர்த்தியும், “இங்க என்ன பிரச்சனை?” என்றவாறே அவர்களிடம் வந்தனர்.

“வா கீர்த்தி, ராதா. நீங்களாவது இவளை ஒரு இடத்துல உட்கார வையுங்க. காலையில் இருந்து எதுவும் சாப்பிடாம வேலை செஞ்சுட்டே இருக்கா… அப்புறம் நைட் ஆனா கை வலிக்குது, கால் வலிக்குது, இடுப்பு பிடிக்குதுன்னு என்கிட்டே சொல்லி என்னை தூங்க விடாம புலம்பிட்டே இருப்பா,” என்றான் சலிப்பாக.

“அண்ணா! எங்க கிட்டே சொல்லிட்டீங்கல்ல? நாங்க இவளை பார்த்துக்கறோம். நீங்க போய் வேலையை பாருங்க,” என்ற ராதா திரும்பி கீர்த்தியைப் பார்க்க… நிலானியின் பக்கம் வந்த இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக வந்தவர்கள் அவள் கையை இறுக்கமாய் பிடித்துக்கொண்டு, “வாடி நிலா! எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பிட்டு வந்துடலாம்” என்று அவளை இழுத்துக்கொண்டு செல்ல…

“ஆமாடி! காலையிலிருந்து எனக்கு சரியான பசி. என் புருஷன் என்னை சாப்பிட விடாம வேலை வாங்கிட்டே இருக்காரு. நல்லவேளை நீங்க ரெண்டு பேரும் வந்தீங்க…” என்று சொல்லி அவர்கள் மூவரையும் வாயைத் திறந்து பார்த்துக்கொண்டு இருந்த விக்கியைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தாள்.

தன் மனைவியின் குறும்புப் பேச்சும், அவள் செல்ல சிரிப்பையும் பார்த்து மெய் மறந்து நின்று இருந்தவனை, அவர்களோடு வந்து அமைதியாக நின்று கேட்டுக்கொண்டு இருந்த சந்தோஷ், “நமக்கு எல்லாம் கடைசில இது தான் கதி. நீங்க வாங்க, நாம போய் வேலையை பார்ப்போம்” என்று விக்கியை இழுத்துக்கொண்டு சென்றான்.

மது தான் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் விஷயம் யாருக்காவது தெரிந்து வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று பயத்திலேயே இருந்தாள். கல்யாணப் பெண் என்ற களை சிறிதும்கூட இல்லாமல் மது அமர்ந்து இருக்க… அவளிடம் வந்த ரியா,

“ஏய் மது! இப்போ எதுக்கு இப்படி முகத்தை தொங்க போட்டுட்டு இருக்க? அதுதான் நடந்தது நடந்து போயிருச்சே… இனி அதை பற்றி யோசிச்சு என்னடி நீ பண்ணப் போற? அதான் பவன் எல்லாத்தையும் ‘நான் பார்த்துக்கறேன்னு’ சொல்லிட்டானே. நீ ஏன் கவலைப்படுற? முகத்தை கொஞ்சம் சிரிச்சா மாதிரி வெச்சுக்கோடி,” என்று அவள் கன்னத்தைக் கிள்ளினாள் ரியா.

“நீ சொல்லிட்டேடி. ஆனா எனக்கு தான் ரொம்ப பயமா இருக்கு. என் அத்தை, அவரோட தங்கச்சி எல்லாம் நான் கர்ப்பமா இருக்கிற விஷயம் தெரிஞ்சா என்னை பற்றி கேவலமா நினைக்க மாட்டாங்களா?” என்றால் சோகமாக.

“ஏய்! முதல்ல உன்னோட கல்யாணத்தை நல்லபடியா முடிக்கப் பாரு. அதுக்கு அப்புறம் இவங்களை எல்லாம் நினைச்சு நீ கவலைப்படலாம். புரியுதா? ஏதாவது யோசிச்சு, நீ இப்படியே கவலைப்பட்டு நீயே எல்லாருக்கும் நீ கர்ப்பமா இருக்கிற விஷயத்தை சொல்லிடுவ போல இருக்கு,” என்றாள் ரியா.

“அது இல்லை ரியா…” என்று மது அடுத்து பேச வர… உடனே அவள் வாயில் அங்கே சாப்பிடுவதற்காக வைத்திருந்த பிஸ்கட்டை எடுத்து மது வாயில் வைத்து, “இதை முதல்ல சாப்பிடு. நீ காலையில் இருந்து தண்ணி கூட குடிக்கலை. உனக்கு இல்லையின்னாலும் உன் வயித்துல வளர இந்த குட்டித் தங்கத்துக்காவது சாப்பிடு” என்று மதுவின் வயிற்றைத் தடவி முத்தம் வைத்தாள் ரியா

சிறிது நேரத்தில் ஐயர் வந்து பெண்ணை அழைப்பதாகக் கூறி அவர்கள் இருந்த அறைக்கு வந்தான் ஸ்ரீ.

மதுவை அழைத்துக்கொண்டு ரியா மணமேடையில் அவளை அமர வைத்துவிட்டு அவள் அருகில் நிற்க… ஸ்ரீ மெதுவாக ரியாவின் அருகில் வந்து அவள் தோளைத் தொட்டான்.

அவனை திரும்பிப் பார்த்தவள், “டேய்! நீ இங்கே என்ன பண்ற? போய் எதுவும் வேலையிருந்தால் பாரு” என்றாள்.

“எனக்கு இங்கே என்னடி வேலை இருக்கப் போகுது? உன்னை பார்ப்பதைத் தவிர்த்து,” என்றான் ஸ்ரீ.

அவன் அப்படிச் சொல்லவும் ரியாவிற்கு வெட்கம் வந்துவிட…

“ஏய்! ஏற்கனவே நீ சேலை கட்டிட்டு வந்து உன் மேல இருந்து என் கண்ணை எடுக்க விடாம செஞ்சுட்ட. இப்போ இப்படி வெட்கப்பட்டேன்னு வை, அப்புறம் நான் டோட்டல் பிளாட் தான்டி,” என்றான் ஸ்ரீ.

“அதுக்கு நான் என்னடா செய்றது? கல்யாணத்துக்கு வரும்போது சேலை கட்டாம எப்பவும் போல சுயிட், ஜீன்ஸ்ன்னு போட்டுட்டு இங்கயும் வர சொல்றியா?” என்றவள், “என் அம்மா தான் என் அண்ணாவோட மச்சான் கல்யாணம், அதனால அடக்க ஒடுக்கமா பொண்ணு லட்சணமா சேலை கட்டிட்டு வரச் சொல்லி கம்பெல் பண்ணினாங்க. நானும் வேற வழி இல்லாம கட்டிட்டு வந்துட்டேன். இப்படி நீ என் பின்னாடியே சுத்திட்டு இருந்தேன்னு தெரிஞ்சா நான் வேற டிரஸ் போட்டுட்டு வந்திருப்பேன்,” என்றாள்.

“நீ எந்த டிரஸ் போட்டுட்டு வந்தாலும் அழகா தான்டி இருப்ப…” என்றவன், “கொஞ்சம் என்கூட வாயேன்” என்றான் ஸ்ரீ.

“எங்கே? எதுக்கு?” என்றாள் ரியா.

“உன்னை மண்டபத்துக்குள்ள வரும்போதே சேலையில் பார்த்ததும் அப்போவே உனக்கு முத்தம் கொடுக்கணும்ன்னு தோணிச்சுடி… அப்படியே என்கூட வந்தேன்னா உன்னக்கு ஒரு கிஸ் கிடைக்கும்,” என்றான்.

“ஓஹோ! என்னவோ நான் கிஸ் வேணும்ன்னு கேக்குற மாதிரி எப்படி சொல்றடா நீ? ஒழுங்கா ஓடிப் போயிரு இங்கே இருந்து. இல்லே அந்த ஹோம குண்டத்துக்குள்ள பிடிச்சு உன்னைத் தள்ளி விட்டுருவேன்,” என்றாள்.

“ஐயோ! நீ செய்தாலும் செய்வேடி…” என்றவன் அவளை விட்டு நகர்ந்து பவன் அருகில் நின்று கொண்டான்.

தாலியை அனைவரிடமும் கட்டி ஆசீர்வாதமும் வாங்கிய பிறகு வெங்கடாச்சலம், விசாலாட்சி இருவரும் சேர்ந்து பொன் தாலியை எடுத்து பவன் கையில் கொடுக்க… அதை வாங்கிய பவன் மது கழுத்தில் கட்டி அவளையும், அவள் வயிற்றில் வளரும் பிள்ளையையும் அக்னி சாட்சியாக தன்னில் பாதியாகவும், தன் உயிர் பாதியாகவும் ஏற்றுக்கொண்டான்.

அவன் மது கழுத்தில் தாலி கட்டியதும் தன் முதல் திருமணம் நடந்த போது இருந்த அழுத்தம், பயம் இருந்தது போல இல்லாமல் பவன் அருகில் ஒருவித பாதுகாப்பை உணர்ந்தாள் மது.

தன் அருகில் அமர்ந்து இருந்தவனின் கையைப் பிடித்துக்கொண்டு அவனைத் திரும்பிப் பார்த்த மது, “THANKS பவன்” என்றாள் கண்களில் கண்ணீரோடு.

மேடைக்கு கீழே அமர்ந்து இருந்த ஆதி, துர்கா, கதிர், கீர்த்தி, சந்தோஷ், ராதா அட்சதை தூவி இவர்களை வாழ்த்த… பெரியவர்களும் வந்திருந்தவர்களும் இவர்களுக்கு அட்சதை தூவி ஆசி வழங்கினர்.

இங்கே மேடையில் சேரில் அமர்ந்து இருந்த நிலானி தன் அக்காவிற்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து விட்டதை எண்ணி சந்தோஷம் அடைந்தவள் எழுந்து வந்து தன் அக்காவைக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

பின் ஐயர் எழுந்து பவன், மது இருவருக்கும் அடுத்தடுத்த சம்பிரதாயங்களைச் செய்ய அவர்கள் இருவரையும் பார்க்க…

“ஐயரே! ஒரு நிமிஷம்,” என்றவன் மேடையில் இருந்து எழுந்து நின்றான். அவன் திடீரென்று மேடையில் இருந்து எழுந்ததும் அனைவரும் புரியாமல் அவனைப் பார்க்க… மதுவோ, ‘இவன் எதுக்கு இப்போ சம்மந்தமே இல்லாம எழுந்து நிக்கிறான்?’ என்று அவளும் அவனோடு சேர்ந்து எழுந்து நின்றாள்.

மதுவின் கை பிடித்து மேடையில் இருந்து கீழே அழைத்து வந்தவன் அவன் அம்மாவின் முன்பு வந்து நின்றான். பவன் அவன் அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்க வந்து இருக்கிறான் என்று நினைத்து அவன் அம்மா மேடையில் இருந்த ரியாவைப் பார்த்து, “அட்சதை எடுத்துட்டு வாம்மா” என்றார்.

அவளும் அட்சதை தட்டோடு வந்து அவரிடம் நீட்ட, அதில் இருந்த அட்சதையை எடுத்து பவன், மது இருவரையும் பார்த்தார். மது உடனே அவர் காலில் விழப் போக… அவளைத் தடுத்து நிறுத்திய பவன்,

“அம்மா! நாங்க உங்க கால்ல விழுந்ததும் நீங்க என்ன சொல்வீங்க?” என்றான்.

“என்ன சொல்வேன்? உங்க ரெண்டு பேருக்கும் பதினாறு செல்வமும் கிடைக்கணும். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லபடியா அமையணும்னு சொல்லுவேன். ஏன்டா இந்த நேரத்துல இதை கேட்டுட்டு இருக்க… இப்போ கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க தானே வந்தே? அப்புறம் என்ன கேட்டுட்டு இருக்க?” என்றார் புரியாமல்.

“அம்மா! அப்போ எங்க ரெண்டு பேரை மட்டும் ஆசீர்வாதம் செய்யாதீங்க. மூணு பேருன்னு சொல்லி நல்லா இருக்கணும்ன்னு ஆசீர்வாதம் பண்ணுங்க,” என்றான் பவன்.

அவன் அப்படிச் சொன்னதும் மதுவிற்கு தூக்கி வாரிப் போட்டது. தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பொறுமையாக நேரம் பார்த்து தன் குடும்பத்தாரிடமும், பவன் குடும்பத்தாரிடமும் சொல்லிவிட நினைத்து இருந்த மதுவிற்கு, அவன் இப்படி இத்தனை பேர் முன்னிலையில் வந்து தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அனைவர் முன்னிலையிலும் சொல்லப் போவதை எதிர்பாராதவள், அவன் கையைப் பிடித்து இழுத்து, “டேய்! என்னடா பண்ணிட்டு இருக்க?” என்றாள்.

“நீ அமைதியா இரு மது. நான் பார்த்துக்கிறேன்,” என்று அவளை சமாதானம் செய்தவன் திரும்பி அவன் அம்மாவைப் பார்க்க….

“என்னப்பா சொல்ற? எனக்கு எதும் புரியலை,” என்று அவர் குழப்பமாக பவனைப் பார்க்க… அங்கே அவர்கள் அருகில் நின்று இருந்த விக்கி, “ஏண்டா பவன்? நீ மூணு பேருன்னு சொல்றியே, அந்த மூணாவது ஆள் யாரு? ஒருவேளை மது மாதிரியே வேற ஏதும் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டியா? அதான் மூணு பேரை ஆசீர்வாதம் வாங்க சொல்லி சொல்றியா?” என்றான்.

“ஐயோ… சார்! என்ன இது? நான் ரொம்ப நல்ல பையன். என்னை போய் இப்படி சொல்லிட்டீங்களே!” என்றான் வருத்தமாக.

“அப்போ அந்த மூணாவது ஆள் எங்கே இருக்குனு சொல்லுடா… எனக்கு யாருனு தெரியலைன்னா தலையே வெடிச்சிரும் போல இருக்கு,” என்றான்.

“இருங்க சார்! அதை தானே நான் இப்போ சொல்ல வந்தேன்,” என்றவன் அவன் அம்மாவைப் பார்த்து, “அம்மா! விக்கி சார் கேட்ட அந்த மூணாவது ஆள் இங்க என் மது வயித்துக்குள்ள இருக்கு” என்று சொல்லி அவள் வயிற்றைத் தொட்டுக் காட்டினான்.

முதலில் எதுவும் புரியாமல் அவனையும் அவன் மது வயிற்றில் வைத்து இருக்கும் கையையும் பார்த்தவருக்கு எதும் புரியவில்லை. பிறகு அவன் ‘மூன்றாவது உறவு’ என்று சொல்லி மது வயிற்றைத் தொட்டுக் காட்டியதைப் பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சியாகி விட்டது.

அவரை விட அதிர்ச்சியாக நின்றது விக்கி தான். “டேய் பவன்! என்னடா சொல்றே நீ? கல்யாணத்துக்கு முன்னையே அப்பா ஆகிட்டியா?” என்று சத்தமாகக் கேட்டான்.

பவனும் சிரித்த முகமாக மதுவை தன் கைக்குள் அணைத்துக் கொண்டு, “ஆமாம் சார்! ஆனா அப்பா ஆகிட்டேன்” என்று சிரித்த முகமாக நின்று இருந்தான்.

அவனைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்தோடு நின்று இருக்க, அவன் கைக்குள் இருந்த மதுவோ தன் மனதில் இருந்த பாரம் இறங்கியது போல உணர்ந்தவள், அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்ணுக்கு, அவன் இன்னும் உயரமாக தன் மனதில் அமர்ந்து விட்டான் என்றே அவளுக்குத் தோன்றியது.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured