EPI 264
நர்மதாவை ஒருவழியாகப் பேசி சம்மதிக்க வைத்து காபி ஷாப்பிற்கு அழைத்து வந்திருந்தான் ராகவ்.
அவள் காபி குடிக்கும் வரை பொறுமையாக இருந்தவன் நர்மதாவையே சிரித்தபடி பார்த்துக் கொண்டு இருக்க…
‘இவன் என்ன இப்படிப் பார்க்கிறான்? நானும் பஸ் ஸ்டாப்பில் இருந்து பார்த்துட்டே தான் இருக்கேன். என்னப் பார்த்துப் பல்லை எல்லாம் காட்டுறானே! ஒருவேளை என்ன இங்க கூட்டிட்டு வந்தது ப்ரொபோஸ் பண்றதுக்காகத் தான் இருக்குமோ?’ என நர்மதா யோசித்துப் படியே அமர்ந்திருந்தவள், “என்ன சார்? ஏதோ பேசணும்னு கூட்டிட்டு வந்துட்டு இப்படி எதுவும் பேசாமல் அமைதியா என்னையே பார்த்துட்டு இருக்கீங்க? என்கிட்ட சொல்ல எதுவும் இல்லைன்னா சொல்லுங்க, நான் கிளம்புறேன். ஆட்டோ வேற வெளியே வெயிட் பண்ணிட்டு இருக்கு. நான் மீட்டரை கட் பண்ணாமல் வந்திருக்கேன்” என்றாள்.
“ஏன் நர்மதா இவ்வளவு அவசரப்படுறீங்க? ஆட்டோ தானே? அவங்க வெயிட் பண்ணுவாங்க. மீட்டருக்கு மேல எவ்வளவு கேட்டாலும் அதை கொடுக்க நான் தயாராக இருக்கேன். நீங்க நான் சொல்றதை முதல்ல கேட்டு உங்க முடிவு என்னன்னு சொல்லுங்க, அதுக்கப்புறம் இங்கிருந்து போகலாம்” என்றான் ராகவ்.
“நானும் வந்ததிலிருந்து அதேதான் கேட்டுட்டு இருக்கேன். என்கிட்ட என்ன சொல்லணும்னு நினைச்சீங்களோ அதைச் சொல்லுங்க. இப்படி சும்மா உட்கார்ந்து என்னப் பார்த்துட்டு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காதீங்க” என சற்று கோபமாகக் கூறினாள் நர்மதா.
“நீங்க இதுக்கு மேல நான் உங்களை வெயிட் பண்ண வைக்க விரும்பல. நேரடியா விஷயத்துக்கு வரேன்” என்றுடன், “நீங்க இப்போ வாங்கிக்கிட்டு இருக்கிற கம்பெனியை விட அதிகமா அஞ்சு மடங்கு போட்டு சம்பளம் நான் தரேன். நான் புதுசா ஆரம்பித்து இருக்கிற என்னோட கம்பெனிக்கு நீங்க வேலைக்கு வர முடியுமா?” எனக் கேட்டான்.
தன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லித்தான் காபி ஷாப்பிற்கு ராகவ் அழைத்து வந்திருக்கிறான் என்று நினைத்திருந்த நர்மதாவுக்கு ராகவின் இந்தப் பேச்சு அதிர்ச்சியாக இருந்தது.
“என்ன சொல்றீங்க ராகவ்? உண்மையாவே நீங்க உங்களோட கம்பெனிக்கு என்னை வேலைக்குக் கேட்டுத் தான் இங்கே பேச கூட்டிட்டு வந்தீங்களா? அப்போ…” என அவள் யோசனையாக அவனைப் பார்க்க.
“ஆமா நர்மதா. நான் இப்போதான் புதுசா ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி டெவலப் பண்ணிட்டு இருக்கேன். அங்கே என்னோட ஃப்ரெண்ட்ஸ் சில பேர் என்னோட வேலை பார்க்குறாங்க. உங்களைப் போல அனுபவம் இருக்கிற ஆட்களும் என் கூட இருந்தா என்னோட பிசினஸை டெவலப் பண்ண எனக்கு ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்னு தான் கேட்டேன். இதைக் கேட்கத் தான் எனக்கு ரொம்பத் தயக்கமாக இருந்தது. என்ன… நீங்க ஏற்கனவே ஒரு கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருக்கீங்க. அப்படி இருக்கும்போது நான் உங்களைக் கேட்கக் கொஞ்சம் யோசனையா இருந்துச்சு. அதனால தான் உங்களை இங்கே கூட்டிட்டு வந்து பொறுமையா உட்கார வைத்துப் பேசலாம் என்று…” என அவன் இழுக்க…
அவன் தன்னை வேலைக்கு அழைக்கிறான் என்று அவளுக்குக் கோபமாக இல்லை. ஆனால் தன்னைக் காதலிக்கப் போவதாக ப்ரொபோஸ் செய்வேன் என்று எதிர்பார்த்து வந்தவளுக்கு அது ஏமாற்றமாகிவிட, விருட்டென டேபிளில் இருந்து எழுந்தவள் கோபமாக அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து வேக வேகமாக வெயிட் செய்து கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி தன் ஆபீசுக்கு கிளம்பச் சொன்னாள்.
பின்னாலேயே ஓடிவந்த ராகவ், “நர்மதா! தயவுசெய்து என் மேல கோபப்படாதீங்க. வேற ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிற உங்களை என்னோட கம்பெனிக்குக் கூப்பிட நான் ரொம்பத் தயங்கி இருந்தாலும், என்னோட முயற்சியை செய்யாமல் நானா இதுவும் முடிவெடுத்திடக் கூடாதுன்னு தான் உங்ககிட்ட நேரடியாகவே விஷயத்தைக் கேட்டேன். உங்களுக்குப் பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிடுங்க. எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. அதுக்காக இவ்வளவு கோவமாக் கிளம்பிப் போகாதீங்க. எனக்கு அது வருத்தமா இருக்கு” என்றான் ராகவ்.
ஆட்டோ செல்ல விடாமல் வழிமறித்து நின்று கொண்டு ராகவ் நர்மதாவிடம் பேசிக் கொண்டு இருக்க.
“யோவ்! நான் அதுக்காக கோபமாகப் போகல” என்றால் நர்மதா.
“அப்போ ஏன் கோபமாகப் போறீங்க நர்மதா? அந்தக் காரணத்தையாவது சொல்லுங்க. எனக்கு என்னன்னு புரியல” என ராகவ் குழப்பமாக அவளைப் பார்க்க.
“ம்ம்ம்… உங்களைப் போலப் பொண்ணுங்க கிட்ட பேசத் தெரியாதவன் கிட்ட நான் நினைச்சதைச் சொல்லி எனக்கு எதுவும் ஆகப் போறதில்லை. முதல்ல வழியை விடு. எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு. இப்படி வெட்டியா நின்னு பேசி என் நேரத்தை வீணாக்காத. ஏன்னா ஏற்கனவே பயங்கரக் கடுப்புல இருக்கேன்” என்றால் நர்மதா.
“நர்மதா, நீங்க உன் மனசுல நினைக்கிறது எதுவாக இருந்தாலும் என்கிட்ட வெளிப்படையா சொல்லுங்க. எனக்குப் புரியும்” என ராகவ் மீண்டும் அவளிடம் பேச முயற்சி செய்ய…
“இங்க பாருங்க, நான் எங்க கம்பெனியை விட்டு வேறு எங்கயும் வேலைக்கு வர ஐடியாவில் இல்லை. போதுமா?” என்றாள்.
“சரிங்க, நான் உங்க முடிவுக்குத் தலை வணங்குறேன். அதுக்காக ஏன் இவ்ளோ கோபமா கிளம்புறீங்க…” என்றான்.
“டேய் டியூப் லைட் மண்டையா! நான் ஏன் கோபமா இருக்கேன்னு சொன்னா மட்டும் உனக்கு என்ன புரியவா போகுது? மூடிட்டு இப்போ வழியை விடப் போறியா? இல்லை போலீஸ்க்கு கால் பண்ணி ‘நீ என்கிட்டே தப்பா நடந்துக்கப் பார்க்குறேனு’ சொல்லி உன்னைப் போலீசில் பிடிச்சுக் கொடுக்கட்டுமா?” என்றாள் கோபமாக.
அவள் அப்படிச் சொன்ன அடுத்த நிமிஷம் ஆட்டோவை விட்டு விலகி நின்றவன், கைக் எடுத்துக் கும்பிட்டு, “அம்மா தாயே, நீங்க கிளம்புங்க மா…” என்றான்.
“டிரைவர் அண்ணா, வண்டியை எடுங்க…” என்றாள் நர்மதாவும் கோபமாக.
ஆட்டோ அங்கிருந்து கிளம்பி இருக்க, “ச்சே… என்னைப் பார்த்தா இவனுக்குக் கொஞ்சம் கூடப் பொண்ணு மாதிரி தோணலையா? என்ன இப்படிக் காபி ஷாப் கூட்டிட்டு வந்து கடைசியில் என்ன அவன் கம்பெனிக்கு வேலைக்குக் கூப்பிடுறான்” என்று புலம்பியப்படியே சென்றாள்.
இங்கே நர்மதா சென்றதும், “ஏய் கோபகாரி! நான் உன்னைக் காபி ஷாப் கூட்டி வந்ததும் நான் உன்கிட்டே காதல் சொல்லி ப்ரொபோஸ் பண்ணுவேன்னு தானே நினைச்சே… எனக்குத் தெரியும்டி. நீ என்னைப் பார்க்குற அப்போ உன் கண்ணுல ஒரு வெளிச்சம்… மின்னல் வெட்டுச்சு. அதை நான் பார்த்தேன்.
எப்படியும் நான் என் மனசுல இருக்குறதை உனக்குச் சொன்னா நீ உடனே ஒத்துக்கப் போறது கிடையாது. என்னைக் கழுவி ஊத்தி என்னவோ நல்லவ மாதிரி ஆக்ட் பண்ணுவ. அதனால் தான் நான் இப்படி என் கம்பெனிக்கு வேலைக்கு வரியான்னு உன்கிட்டே பொய்யா கேட்டேன். கூடிய சீக்கிரமே என் மனசுல உள்ளதைச் சொல்லி உன்கிட்டே என் காதலுக்குப் பச்சை கொடி காட்ட வைக்கல…” என்று ஆட்டோவைப் பார்த்துச் சிரித்தபடி அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
😱 ஆபிஸின் வருகையும் அபியின் அதிர்ச்சியும்
ஆதி வீட்டில் இருந்து வந்ததில் இருந்து அவனிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லையே என்று யோசனையில் இருந்த அபி, அவனுக்குக் கால் செய்து விபரம் கேட்டாகலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அவள் அம்மாவும், ஆதி அவர்கள் இருவருக்காகவும் அங்கே கொடுத்து இருந்த அபார்ட்மெண்ட்டில் தான் இருவரும் தங்கி இருக்கின்றனர்.
அவள் யோசனையோடு மரகதத்திடம் விபரம் சொல்லி, “அம்மா என்ன செய்யலாம்? நாம ஆதிகிட்டே கால் பண்ணி நமக்குச் சேர வேண்டியதை எப்போ தரான்னு கேட்கலாமா? இல்லை அப்பாவோட 60 ஆம் கல்யாணம் வரைக்கும் காத்திருக்கலாமா?” என்றாள்.
“இங்க பாரு அபி! உன் அப்பாவோட 60 ஆம் கல்யாணத்துக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கு. நாளை மறுநாள் காலை இந்த நேரம் எல்லாம் அவர் கல்யாணம் முடிஞ்சிரும். நாம அதுக்கு முன்னாடி நமக்குச் சேர வேண்டியதை எல்லாம் சரியாக் கேட்டு அந்தக் ஆதிகிட்டே கேட்டு வாங்கிக்கிடணும். இல்லை… பங்ஷன் முடிஞ்சதும் நமக்கு எதுவும் கொடுக்காமல் அவன் ஏமாத்தினாலும் ஏமாத்திடுவான். நீ பேசாமல் இப்போ கிளம்பு. நாம ரெண்டு பேரும் நேராவே ஆதி ஆபீஸ்க்கு போய் பேசிட்டு வந்துடலாம்” என்றார் மரகதம்.
“சரிம்மா, இருங்க நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்” என்று அபி சோபாவில் இருந்து எழுந்திருக்கப் போக…
“அதுக்கு எந்த அவசியமும் இல்லை” என்ற படியே அவர்கள் வீட்டிற்குள் ஆதி, துர்கா, விக்கி, கதிர், கீர்த்திகா ஐவரும் உள்ளே வந்தனர்.
அவர்கள் அனைவரும் ஒன்றாக வருவதைப் பார்த்ததும் ஒன்றும் புரியாமல் மரகதமும், அபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள…
“என்ன? நாங்க எல்லாரும் சேர்ந்து ஏன் உங்க வீட்டுக்கு வந்து இருக்கோம்னு உங்களுக்குத் தோணுதா என்ன?” என்றாள் துர்கா சிரித்தபடியே.
“ஆமாம், இல்லையா பின்னே… எங்களைக் கண்டாலே ஆகாதவங்க. எனக்கும் ஆகாதவங்க எல்லாரும் ஒன்னு கூடி என் வீட்டுக்கு இல்லை வந்து இருக்கீங்க… அதான் எனக்கு ஆச்சர்யமா ஆயிருக்கு” என்றாள் அபி.
“அதுல ஒரு சின்னத் திருத்தம். உனக்கு எங்களைப் பிடிக்காதுன்னு சொன்னதும், எங்களுக்கு உன்னைப் பிடிக்காதுன்னு சொன்னது எல்லாம் உண்மை தான். ஆனா இது உன் வீடுன்னு சொன்னே பாரு, அதுல ஒரு சின்ன மாற்றம். இவ்ளோ பெரிய அபார்ட்மெண்ட்டை உனக்கு ஃப்ரீயா தூக்கிக் கொடுக்க எங்க ஆதி மாமா ஒன்னும் லூசு கிடையது” என்றாள் கீர்த்திகா.
அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு இருந்த ஆதி கதிர்டம், “டேய் என்னடா, கீர்த்து இப்படிப் பொசுக்குன்னு என்னை லூசுன்னு சொல்லிட்டா? இப்படி என்னைத் டேமேஜ் பண்ணுவான்னு தெரிஞ்சு இருந்தா நான் கீர்த்துவை நம்ம கூட அழைச்சிட்டு வந்து இருக்கவே மாட்டேன்” என்றான்.
“அவ சொன்னதுல என்ன தப்பு இருக்கு… எல்லாரும் சேர்ந்து கஷ்டப்பட்டுச் சம்பாதிச்ச இத்தனையையும் தூக்கி இவளுக்குச் சும்மா கொடுக்க வந்து இருக்கியே. அதை நினைத்தால் தான் எனக்கு வருத்தமா இருக்கு” என்றான் விக்கி.
அவனைத் திரும்பி முறைத்த ஆதி, “உனக்கு அப்பறோம் இருக்குடா” என்றவன் திரும்பி அபி இடம், “நாங்க உனக்குக் கிடைச்சிருக்க அந்த டெண்டர் பத்தியும் உனக்குச் சேரவேண்டிய சொத்துக்கள் பத்தியும் உன்கிட்டே பேசத் தான் இங்கே வந்து இருக்கோம். ஏன்னா அந்தச் சொத்துக்களில் இவங்க எல்லாருக்கும் பங்கு இருக்கு, அதான்” என்றவன்.
“கொஞ்சம் உட்கார்ந்து பேசலாமா?” என்றான்.
“சரி” என்றுத் தலையாடி விட்டு அபி ஒரு சோபாவில் நடுநாயகமாக அமர்ந்தவள், அனைவரையும் பார்த்து எதிரே போடப்பட்டு இருந்த சோபாவைக் காட்டி அமரச் சொன்னாள் அபி.
அதில் அமர்ந்த ஆதி, விக்கியைப் பார்க்க… அவன் கொண்டு வந்த பையில் இருந்து ஒரு டாகுமெண்டை எடுத்து அவளிடம் நீட்டியவன், “இதில் இருக்கிறதை எல்லாம் நீயும், உன் அம்மாவும் படித்துப் பார்த்து உங்களுக்கு அதில் இருக்கும் கண்டிஷன்களுக்கு எல்லாம் சரி என்றாள் நீங்கள் இருவரும் அதில் கையெழுத்துப் போட்டுக் கொடுங்கள்” என்றான்.
அவன் நீட்டிய பிரவுன் கவரைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள்.
மரகதமும் அவள் அருகில் அமர்ந்து அந்த டாகுமெண்டில் இருப்பதைப் படிக்க ஆரம்பித்தார்கள். இருவருக்கும் அதை முழுவதும் படிக்கப் படிக்க… தங்கள் கண்ணையே தங்களால் நம்ப முடியாமல் போனது. இருவரும் திரும்பித் தங்களுக்கு எதிரே இருந்தவர்களைப் பார்த்துவிட்டு மீண்டும் டாகுமெண்ட்டை ஒரு முறைப் படித்துப் பார்த்துவிட்டு மரகதமும், அபியும் நம்ப முடியாமல் ஆச்சரியமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
