EPI 269
போதியின் வீட்டில் அனைவரும் வெங்கடாச்சலம் விசாலாட்சி அறுபதாவது திருமணத்திற்குச் செல்வதற்காக கிளம்பி கொண்டு இருந்தனர்.
சரள பாட்டியும் போதியின் அம்மா அப்பாவும் முன்னமே கிளம்பி மண்டபத்திற்குச் சென்றிருக்க.. தீபா ரெடியாகி தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு விசேஷத்திற்குச் செல்லக் கிளம்ப… அப்போது வேகமாக அவளிடம் வந்த ராகவ், “ஏய் தீபா! எங்க? ஆதி சார் வீட்டு விசேஷத்துக்கு கிளம்பிட்டேன்” என்றான்.
“ஆமாம் அண்ணா, ஏன்?” என்றால் தன் வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டே.
“இல்ல, அம்மா அப்பா எல்லாம் முன்னாடியே போயாச்சு. நீ தனியாவா போற?” என்றான்.
“ஆமாம், ஏன்? நான் தனியா போறது என்ன புதுசா? ஒரு அண்ணன் என்னடா, பொண்டாட்டி வந்ததிலிருந்து என்ன கண்டுக்கிறது இல்ல. இன்னொரு அண்ணன் எனக்கு என்னன்னு அவன் வேலையைப் பாத்துட்டு இருக்கான். அப்போ நான் எங்கேயும் போறதா இருந்தா உங்க யாரையுமே எதிர்பார்க்காம நானே தானே போயிட்டு வர வேண்டி இருக்கு” என்று சலித்துக் கொண்டாள் தீபா.
“என்ன தீபா, இப்படி சொல்லிட்ட? உன் அண்ணன் நான் இருக்கும்போது உன்னை அப்படி எல்லாம் எங்கேயும் தனியா போக விட்டுடுவேனா?” என்றான் ராகவ்.
“அன்னைக்கு என்னைக் காலேஜ்ல கொண்டு போய் விடச் சொன்னதுக்கு, என்னைப் பஸ் ஏறிப் போக சொன்னவன் தானே நீ? இப்ப என்னவோ நல்லவன் மாதிரிப் பேசுற” என்றால் தீபா.
“அது… அது வந்து… அன்னைக்கு நான் ஆபீஸ் போற அவசரத்துல அப்படி பேசிட்டேன். சாரி தீபா. இப்போ என்ன, உனக்கு அந்த ஃபங்ஷனுக்குப் போகணும். அவ்வளவுதானே? வா, நான் உன்னைக் கூட்டிட்டு போறேன்” என்றான்.
“இல்லண்ணா, உனக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கும். இதுக்கெல்லாம் உனக்கு எங்க டைம் இருக்கப் போகுது? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நானே போகிறேன். நீ உன் ஆபீஸ்க்கு கிளம்பு” என்று விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து தீபா கிளம்பப் போக. வண்டியைப் பிடித்துக் கொண்டு அதை ஆஃப் செய்த ராகவ், அதிலிருந்து சாவியை கையில் எடுத்து வைத்துக் கொண்டவன் தீபாவை பார்த்து, “நான் தான் உன்னைக் கொண்டு போய் விடுவேன். நீ இன்னைக்கு என் கூடத் தான் பைக்ல வரப் போற. அடம் பண்ணாமல் ஒழுங்காக கூட வா” என்றான்.
“அண்ணா! சாவியை குடு. என்ன இன்னைக்கு நீ ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க. இன்னைக்கு ஒரு நாள் என்னைக் கொண்டு வந்து நான் போற இடத்துக்கு விடுவேன் என்று சொல்லுவ. அப்புறம் நாளைக்கு எங்காவது போகணும்னு கூப்பிட்டா, ‘வர முடியாது போடி’ன்னு என்கிட்ட வந்து பண்ணுவ. அதெல்லாம் எதுவும் வேண்டாம். நானே போகிறேன். நீ என் வண்டி சாவியை மட்டும் கொடு” என அவன் கையில் இருந்த வண்டி சாவியை தீபா பறிக்கப் போக.
அதைத் தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்ட ராகவ், “நான் எதுவும் பண்ண மாட்டேன். நீ ஒழுங்கா என் கூடக் கிளம்பி வா” என்றான்.
திடீரெனத் தன் மேல் அக்கறையோடு நடந்து கொள்ளும் ராகவை பார்த்து தீபாவிற்குச் சந்தேகமாக இருந்தது. தன் கையை கட்டிக்கொண்டு ராகவனைப் பார்த்தவள், “உண்மையில நிஜமாவே என்னைக் கொண்டு போய் மண்டபத்தில் விடுவதற்குத் தான் இவ்வளவு கலாட்டா பண்றியா? இல்ல உனக்கு வேற எதுவும் வேலை அங்கே ஆக வேண்டி இருக்கா?” என நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் தீபா.
‘எப்படி கரெக்டா கண்டுபிடிச்சுட்டா!’ என நினைத்த ராகவ். ‘எப்படியும் இன்னைக்கு அந்தக் கல்யாணத்துக்கு நர்மதா வருவா. அதுக்காகத்தான் நான் இவ்வளவு பிளான் போடுவேன்னு தீபாவுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்’ என்று நினைத்துக் கொண்ட ராகவ் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தீபாவை பார்த்தவன், “அது எல்லாம் எதுவும் இல்ல. எப்படியும் நானும் அந்த ஃபங்ஷன்க்கு வந்து தானே ஆகணும். என்ன, ரெண்டு பேரும் தனித்தனியா வண்டியில போய் பெட்ரோலை வேஸ்ட் பண்ணனும்? அதனால தான் நான் உன்னைக் கூட்டிட்டு போறேன்னு சொன்னேன். வேறு எதுவும் இல்லை” என்றான்.
“ஓஹோ! பெட்ரோல் மிச்சப்படுத்துவதைப் பற்றி நீ பேசுற? இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல?” என்ற தீபா, “சரி வா. நான் வரலைன்னா நீ என்ன விடவா போற? நம்ம ரெண்டு பேருமே சேர்த்து கிளம்பலாம்” என்றவள், “இரு நான் போய் அண்ணிகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்” என வீட்டிற்குள் நுழையப் போக… அவள் கையைப் பிடித்து நிறுத்தி வைத்த ராகவ்.
“நான் ஏற்கனவே அண்ணிகிட்ட சொல்லிட்டு தான் வெளியவே வந்தேன். நீ வா. அவங்க இப்பதான் ரெடியாகவே ரூமுக்கு போறாங்க. எப்படியும் கிளம்பி வர டைம் ஆகும்” என்ற ராகவ் தன் புல்லட்டை ஏறி ஸ்டார்ட் செய்ய, அவன் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள் தீபா. நர்மதாவைப் பார்க்கும் ஆவலில் வண்டியைப் புயல் வேகத்தில் மண்டபத்தை நோக்கிச் செலுத்தினான் ராகவ்.
இங்கே இவ்வளவு நேரம் வெளியில் நடப்பது எல்லாம் கேட்டுக்கொண்டு ஹாலில் பேப்பர் படிப்பது போலப் பாவனை செய்து அமர்ந்திருந்த போதி, தீபா, ராகவ் மற்றவர்கள் அனைவரும் கிளம்பிச் சென்றிருக்க, வேகமாக வந்து வாசற் கதவை உள் பக்கமாகத் தாளிட்டவன், தன் ரூமுக்கு ரெடியாகச் சென்றிருந்த மாதவியைக் காண வேகமாகப் படிகளில் ஏறி அவன் அறைக்குச் சென்றான்.
தன் அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன் கதவை உள் பக்கமாகத் தாளிட்டவன் மாதவியைத் தேட… அவள் அப்போதுதான் குளித்து ஃபிரஷ் ஆகிவிட்டு நைட்டியோடு தலையில் ஈரம் சொட்ட சொட்ட வெளியே வந்தாள்.
வந்தவள் தன் ஈர தலையைத் துவட்டிக்கொண்டு நின்று இருக்க… உள்ளே ஆடைகள் எதுவும் அணியாமல் வெறும் நைட்டியை அணிந்து கொண்டு நின்ற, தலையை துவட்டிக் கொண்டு இருந்த மாதவியைப் பார்த்ததும். “ஏன் அழகு பொண்டாட்டி! நீ எந்த டிரஸ் போட்டாலும் அழகாகவே தெரியலடி” எனச் சொல்லிக்கொண்டே கைகள் இரண்டையும் பரபரவெனத் தேய்த்துக்கொண்டு மாதவியை நோக்கிச் சென்றான்.
அவன் எதற்காக இப்படிப் பேசிக்கொண்டு தன்னருகில் வருகிறான் என்பதைப் புரிந்து கொண்ட மாதவி, வேகமாகத் தன் கைகளால் நீட்டி அவனைத் தடுத்தவள். “ஐயோ என்னங்க இது? ஃபங்ஷனுக்குப் போக வேண்டாமா? நீங்க எதுக்காக என்கிட்ட இப்படி குழைஞ்சு பேசிட்டு வரீங்கன்னு நல்லாவே எனக்குத் தெரியும். நீங்க என்ன நினைச்சாலும் இன்னும் மூணு நாளைக்கு எதுவும் நடக்காது” என்றால் மாதவி.
அவள் மூன்று நாட்கள் என்று சொன்னதும், மாதாந்திரப் பிரச்சனை வந்துவிட்டது உணர்ந்த போதி, “எப்போ?” என்றான் அவளைப் பார்த்து. “இப்போதாங்க. அதனாலதான் குளிச்சிட்டு வந்திருக்கேன் தெரியலையா?” என்றால் தன் தலையைத் துவட்டிக் கொண்ட… அவள் தலையை துவட்டும் பொழுது நைட்டியைத் தாண்டித் தழும்பிக் கொண்டிருந்த அவள் முன்னழகைப் பார்த்தவன் தன் கைகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டு இருந்தவன் அவளை ஏக்கமாகப் பார்த்து, “அப்போ இன்னைக்கு எதுவுமே கிடையாதா?” என்றான்.
“ஏங்க! நான் தான் சொன்னேன், இன்னைக்கு இல்ல, இன்னும் மூணு நாளைக்கு எதுவும் கிடையாது” என்ற மாதவி டிரெஸ்ஸிங் ரூமை நோக்கிச் செல்லப் போக. அவள் கையைப் பிடித்து இழுத்துக் கட்டிப்பிடித்து நின்று கொண்ட போதி, “நீ இந்த மாதிரி எல்லாம் சொன்னா நான் உன்னை அப்படியே விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா?” என்றான்.
“ஏங்க! நான் வேணும்னேவா வேண்டாம்னு சொல்றேன்? இந்த மாதிரி டைம்ல தான் எப்படிங்க அது?” என்றால் அவனைப் புரியாமல் பார்த்து.
“ஏய்! நான் நிறைய டாக்டர்ஸ் இந்த மாதிரி கேள்வி பதில் டிவியில ஓடுறப்போ சொல்றத எல்லாம் கேட்டு இருக்கேன். உங்களுக்கு மத்த நாள விட இந்த மாதிரி நாட்களில் தான் அதிகமா மூடு வரும்னு. நாங்க அந்த டைம்ல ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா பொண்ணுங்களுக்கு ரொம்ப சாட்டிஸ்ஃபை ஆகும்னு சொல்லி கேட்டிருக்கேன்” என்றான்.
“டாக்டருங்க ஏதாவது ஒன்னு சொல்லிக்கிட்டே தான் இருப்பாங்க. அதுக்காக அதைக் கேட்டுட்டு வந்துட்டு, அதை எல்லாம் என்கிட்டச் செய்து பார்க்கணும்னு நினைக்காதீங்க” என்றவள் வேகமாக அவனை கைப்பிடியில் இருந்து விலக முயன்று கொண்டே சொன்னாள் மாதவி.
“இன்னைக்கு நீ என்ன சொன்னாலும் நான் உன்னை விடப் போறதா இல்ல” என்ற போதி பின்னால் இருந்து அணைத்துக் கொண்டிருந்தவன் அவளை வேகமாகத் தன்னை நோக்கித் திருப்பியவன், “டேஸ்ட்டி! ஒருவாட்டி ட்ரை பண்ணி தான் பார்ப்போமே! உனக்கு எப்படி இருக்கு? நீ எப்படி ஃபீல் பண்றேன்னு நான் பார்க்க வேண்டாமா? எப்பவும் நான் மட்டுமே உன்கிட்டச் சந்தோஷத்தை அனுபவிச்சா போதுமா? நீ முழுமையாகச் சந்தோஷப்படுவதை நான் பார்க்க வேண்டாமா?” என்றான் போதி.
“ஏங்க! அதுக்குன்னு ஒரு நேரம், காலம் கிடையாது. இந்த மாதிரி டைம்ல அதையெல்லாம் செய்துகிட்டு… ச்சீ… நம்ம என்ன விடுங்க. நான் போய் ஃபங்ஷனுக்குக் கிளம்ப ரெடி ஆகிறேன்” என்றால் மாதவி.
“இங்க பாரு. நீ எதுக்காக வேண்டாம்னு சொல்றேனு எனக்கு நல்லா புரியுது. அந்த ஒரு துளி ரத்தம் என்னை ஒன்னும் செய்திடப் போறது இல்ல. சும்மா ட்ரை பண்ணி பார்ப்போம். உனக்குப் புடிக்கல எதுவும் தொந்தரவா இருந்துச்சுன்னா, நான் அப்பவே உன்னை விட்டுறேன். ப்ளீஸ்டி” என அவளைக் கெஞ்ச.
“அப்படி இல்லைங்க. இந்த மாதிரி நேரத்துல அப்படியெல்லாம் ஒண்ணா இருந்தா கசகசன்னு ஒரு மாதிரியா…” என மாதவி தயங்கிக் கொண்டே போதியைப் பார்க்க.
“அதைப்பற்றி நீ ஏன் கவலைப்படுற? எனக்கே அது எல்லாம் பெருசாத் தோணுது. அப்போ நீ ஏன் அதையெல்லாம் யோசிச்சிட்டு இருக்க? உனக்குச் சம்மதமா இல்லையா என்று மட்டும் சொல்லு. உனக்கு வேண்டான்னா நான் உன்னை டிஸ்டர்ப் செய்யல” என்றான்.
“அப்போ எனக்கு வேண்டாம்னு சொன்னா என்ன விட்டுட்டு நீங்க அப்படித்தானே?” என்றால் மாதவி.
“ஆமா கண்டிப்பா… அப்புறம் இந்த மாதிரி நேரத்துல நான் உன்னைத் தொல்லை பண்றதா நீ நினைச்சிட்ட அப்புறம் உனக்கும் எனக்கும் இடையில இருக்கிற புரிதல் வீணா போயிடும். அப்படி ஒன்னும் எனக்கு இது தேவையில்லை. உன்னோட சந்தோசத்தைப் பார்க்கணும் என்பதற்காகத் தான் நான் கேட்டேன். வேற எதுவும் இல்ல” என்றான்.
அவள் தயங்கியபடி நின்று இருக்க… “சரி அப்போ வேணாம் விடு. நீ போய் கிளம்பி வா. நம்ம ஃபங்ஷனுக்குப் போகலாம்” என்றான் போதி.
“ஏங்க! ஏன், உங்களுக்கு என் மேல எதுவும் கோபம் இல்லையே?” என்றால் மாதவி.
“ஏய் லூசு! இதுக்குப் போய் யாராவது கோபிச்சுக்குவாங்களா? என்னைப் பார்த்தா உனக்கு என்ன அவ்வளவு கொடுமைக்காரன் மாதிரியே தெரியுது?
நான் சில டாக்டர் சொன்னதையெல்லாம் கேட்டு, உனக்கு அந்த மாதிரி நேரத்துல நான் உன்கூட ஒன்னா இருந்தா எப்படி இருக்கும்னு பார்க்கத்தான் நினைச்சேன். மத்தபடி அப்படி இருந்தே ஆகணும்னா எந்த அவசியமும் எனக்கு இல்ல. இந்த மூணு நாள் கூட நான் உனக்காகப் பொறுத்துக்க மாட்டேன்னா?” என்றான் போதி.
அவன் விருப்பத்தைத் தன்னிடம் மறைக்காமல் சொன்ன பிறகும் கூட, தான் அதை வேண்டாம் என்று நிராகரித்தும், தன் மீது கோபம் கொள்ளாமல் ஒரு பெண்ணிற்கான மனநிலையைப் புரிந்து கொண்டு, அதற்குத் தகுந்த மாதிரி நடந்து கொள்ளும் தன் கணவனை நினைத்து பெருமை கொண்டாள் மாதவி.
அவன் கழுத்தில் தன் கையை மாலையாகப் போட்டுக் கொண்ட மாதவி. “ரொம்ப தேங்க்ஸ்ங்க” என்று அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
“உனக்காக நான் எவ்வளவு பெரிய விஷயத்தை வேண்டாம் என்று சொல்லிட்டு இருக்கேன். இப்படி கஞ்சத்தனமாக கன்னத்தில் முத்தம் கொடுக்கிற…. இப்படி கஞ்சமா முத்தம் வைக்காம, கஞ்சா சாப்பிடுற மாதிரிப் போதையா ஒரு முத்தம் கொடு. வாடி” என்றவன் அவள் முகத்தைப் பிடித்து இழுத்து அவள் இதழில் முத்தம் வைத்தான்.
பின் அவளை விட்டவன், “சரி, போய் சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா. ஆதிக்கு இன்னைக்குப் பெரிய பிளான் வச்சிருக்கிறதா சொன்னானே. அதை போய் நாம என்னன்னு பார்க்க வேண்டாமா? நம்மாலையும் அவனுக்குச் சில உதவிகள் தேவைப்படும்னு சொல்லி இருந்தான். சீக்கிரம் வா” என்றான் போதி.
“ஓஹோ! ஆதி அண்ணா சொன்னதெல்லாம் உங்களுக்கு இவ்வளவு நேரம் ஞாபகம் இல்லையா? நான் வேண்டாம்னு சொன்னதும் ஞாபகம் வந்துருச்சு” என்று சிரித்தவள், “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. நான் ரெடியாகிட்டு வரேன்” திருமணத்திற்குச் செல்வதற்காகத் தயாராகச் சென்றாள்.
