Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 27

உன் ரகசிய ரசிகை நான் 27

by Layas Tamil Novel
683 views

EPISODE 27

துர்காவின் அம்மா, அப்பா, கீர்த்திகா மூவரும் விசாலாட்சி அனுப்பி இருந்த காரில் கிளம்பி இருக்க, அப்போது கீர்த்திகாவிற்கு துர்காவிடம் இருந்து கால் வந்தது.

போனை எடுத்துப் பார்த்தவள், துர்கா தான் அழைத்திருக்கிறாள் என்று திரையில் அவள் பெயர் தெரியவும் சந்தோஷமாக போனை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டாள்.

“ஹலோ, இங்க கீர்த்திகா பேசுறேன். அங்க யாருங்க பேசுறது?” என்றாள். அவள் வேண்டுமென்றே துர்காவிடம் வம்பு பேசுகிறாள் என்று புரிந்துகொண்ட துர்கா சிரித்துக்கொண்டே.

“ஹலோ, இந்த பக்கம் தி கிரேட் துர்கா பேசுகிறேன்,” என்றால் துர்காவும். “ஓஹோ… யாருங்க அந்த துர்கா? ரெண்டு நாள் முன்ன மறுவீடு முடிஞ்சு வீட்டுக்கு கிளம்பி போயிட்டு, இப்போ வர எதுவும் பேசாம, போன் பண்ணாம இருக்காங்களே, அவங்களா?” என்றால் கீர்த்தி.

“ஓஹோ… இதனால தான் மேடம் மூணாவது மனுஷங்க போல என்கிட்ட பேசுறியா?” என்றவள், “ஏய் கீர்த்தி, நான் வேணும்னு உன்கிட்ட பேசாம இருப்பேனா டி?” என்றால் குழைவாக துர்கா.

துர்கா கீர்த்தி என்று சொன்னதும் தான் காதுகளை கூர்மையாக்கிய கதிர், துர்கா என்ன பேசுகிறாள் என்று காரை ஓட்டிக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தான்.

“சும்மா ஏதோ ஒன்னு சொல்லி சமாளிக்காத அக்கா. ரெண்டு நாள் முன்னாடி வீட்டுக்கு போனது தானே நீ? இப்ப வரைக்கும் எனக்கு ஒரு போன் பண்ணி பேசிருப்பியா? கல்யாணம் பண்ணி போனதும் உனக்கு எங்கள எல்லாம் மறந்துருச்சு. அப்படித்தானே?” என்றால் சோகமாக.

“அச்சோ! அப்படி இல்லை கீர்த்து மா… ஏன் இப்படி எல்லாம் பேசுற? எனக்கு உடம்பு சரி இல்லை டி. அதனால தான் நான் யாருக்குமே போன் பண்ணலை,” என்று துர்கா சொன்னாள்.

துர்காவுக்கு உடம்பு சரி இல்லை என்று சொன்னதும், “அக்கா, என்ன ஆச்சு உனக்கு? எதுவும் ப்ராப்ளமா? ஏன் உடம்பு சரி இல்ல? த்ரீ டேஸ் ப்ராப்ளமா உனக்கு? அப்போ தான உனக்கு ரொம்ப உடம்பு முடியாம இருக்கும்?” என்று கீர்த்திகா கேட்க, அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை எல்லாம் அருகில் இருந்த ஆதிக்கு துர்கா போனை ஸ்பீக்கரில் போடாமல் இருந்தும் நன்றாகவே கேட்டது.

கீர்த்திகா அவ்வளவு பதட்டமாக சத்தமாக பேசினாள். அவள் அவ்வளவு பதட்டப்படவும், “ஏய் கீர்த்தி, எனக்கு அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ கொஞ்சம் பதட்ட படாம இரு முதல்ல,” என்றவள், “நீங்க எல்லாரும் கிளம்பிட்டீங்களா?” என்று கேட்க தான் நான் கால் பன்னினேன் என்று துர்கா கேட்க. கீர்த்திகாவிடம் இருந்து போனை வாங்கிய துர்காவின் அம்மா வடிவு, “துர்கா, ஏன்டா உடம்பு முடியலையா? நல்லா இருக்கியா இப்போ?” என்று விசாரிக்க, “அம்மா எனக்கு உடம்பிற்கு எதுவுமில்லை அம்மா. நான் நல்லா தான் இருக்கேன். நீங்க எல்லாரும் கிளம்பிட்டீங்களா?” என்று கேட்க, “ஆமா டா. நாங்க கிளம்பி வந்துட்டு தான் இருக்கோம்,” என்று வடிவு கூறினார். “சரி மா.. அப்போ நாம எல்லாம் அங்கே கல்யாணத்தில் சந்திக்கலாம்,” என்று கூறியவள், “சரி மா, நீங்க கீர்த்திகா கிட்ட போனை கொடுங்க,” என்றால்.

“சொல்லு துர்கா,” என்று கீர்த்திகா கூற, “எல்லாமே எடுத்து வெச்சுட்டேன் தானே? நாம போறது ஒரு பெரிய இடத்து வீட்டு கல்யாணத்திற்கு. நான் ஏற்கனவே அவங்க வீட்டு விசேஷத்திற்கு போயிருக்கேன். எல்லாருமே பெரிய பெரிய ஆளுங்க. அதான் கேட்டேன்,” என்று துர்கா மெதுவாக யாருக்கும் கேட்காத வண்ணம் மெதுவாகக் கேட்க.

“அக்கா, நீ ஒண்ணும் கவலை படாத. எல்லாமே அத்தை காலையிலேயே பேக் செய்து எங்களுக்கு முன்னமே கொடுத்து விட்டுட்டாங்க. நாங்க அதை எடுத்துட்டு தான் வந்திருக்கோம். கவலை படாதே,” என்று கூற, “சரி டி, நான் போனை வைக்கவா?” என்று கூற.

இவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விக்கி, உடனே “துர்கா, என்கிட்ட போனை குடு,” என்று போனை வாங்கியவன், அதை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு கதிரைப் பார்க்க, கதிருக்குத் தான் நண்பன் தன்னக்காக உதவுவதை நினைத்து மகிழ்ந்து கொண்டவன், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தவன்.

இதுவரை இவர்கள் ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று ஓட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டு வந்த கதிர், துர்கா போனை வைக்கிறேன் என்று சொன்னதும் திடீர் என்று இருமல் வருவது போல தொண்டையை செரும, துர்காவிடம் பேசிக் கொண்டிருந்த கீர்த்தி அது கதிர் தான் என்று தெரிந்து கொண்டவள், “அக்கா, யாரு கா இருமுறது? மாமா வா? அவருக்கு குடிக்க தண்ணி கொடுங்க அக்கா,” என்று மிகவும் அக்கறையோடு இருப்பது போல கூற.

“இல்லை கீர்த்தி, அவர் என் பக்கத்துல தான் உக்காந்திருக்காரு. கதிருக்கு தான் புரை ஏறிருச்சு,” என்று கூற. “அவனுக்கா? சரி சரி என்னவோ பண்ணுங்க. நான் போனை வைக்கிறேன்,” என்று கூற.

“ஏய்… என்ன கீர்த்து நீ? உங்க மாமாவுக்கு தம் புரை ஏறிருச்சு நினைச்சு அவ்வளவு அக்கறையா கேட்ட. ஆனா இப்போ கதிர் என்று தெரிந்ததும் பேருக்கு கூட அவனுக்கு தண்ணி கொடுங்க என்று கூட சொல்லலாமா? நீ பாட்டுக்கு போன் வைக்குறேனு சொல்ற,” என்று கேட்க.

“அவனுக்கு புரை ஏறினா எனக்கு என்ன அக்கா? நான் எதுக்கு அவனை பற்றி எல்லாம் அக்கறை படனும்?” என்று கதிரை பிடிக்காதவள் போல கீர்த்தி பேச.

“ஏய், அப்படி எல்லாம் சொல்ல கூடாது. ஆதி எப்படி உனக்கு மாமாவோ, அதே மாதிரி கதிரும் உனக்கு அதே முறை தான். நீ முதல்ல அவன், இவன்னு சொல்லாம கதிரை மாமா என்று கூப்பிட்டு பழகு,” என்று கூற. “அக்கா, அவனை எல்லாம் என்னால அப்படி மாமா என்று சொல்ல முடியாது,” என்று கீர்த்தி சொல்ல.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கதிருக்கு, இவள் தன்னை எப்படி வாருகிறாள் துர்காவிடம் என்று கோபமாக வந்தது.

கதிர் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்று தெரியாமல் கீர்த்தி வேண்டுமென்று பேச, ஆனால் இதைக் கேட்ட கதிர், “ஏய் கீ… நீ கல்யாணத்திற்கு வருவேல்ல? உன்னை அங்க வெச்சு கவனிச்சுக்கறேன்,” என்று மனதிற்குள் அவளை கழுவி ஊற்ற, அவன் நிலையைப் பார்த்த விக்கி தான் சிரிப்பை அடக்க பெரும் பாடு பட்டான்.

“ஏய் கீர்த்து, நீ பேசுறதை எல்லாரும் கேட்டுட்டு இருகாங்க டி,” என்று துர்கா கீர்த்திகாவிடம் சொல்ல. “ஏய் லூசு அக்கா, உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா? போனை ஸ்பீக்கரில் போட்டேனு சொல்ல மாட்டே? லூசு லூசு,” என்று திட்ட இம்முறை ஆதி கீர்த்திகா பேசுவதைக் கேட்டு, துர்காவை லூசு என்று சொன்னதைக் கேட்டு லேசாக சிரித்தான்.

அவனை ஒரக் கண்ணால் பார்த்த துர்கா, அவனை மனதிற்குள் திட்டினாள். இவர்களை எல்லாம் பார்த்த விக்கிக்கு சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாக சிரிக்க, அவனை பின் சீட்டில் இருந்த துர்கா விக்கியின் தலையில் கொட்டினாள். “ஷ்… ஆ… வலிக்குது துர்கா…” என்றவன், “கீர்த்து மா.. நான் விக்கி பேசுறேன் டா. என்ன டா நீ இப்படியா பேசுவ? உங்க அக்கா வீட்டுக்காரர் உடைய தம்பின்னு கொஞ்சம் மரியாதையா பேசலாமே,” என்று கேட்க.

“அண்ணா, என் அக்கா வீட்டுக்காரருக்கு அதாவது என்னோட மாமாவுக்கு மட்டும் தான் நான் மரியாதை கொடுப்பேன். மற்றவங்க எல்லாம் என்கிட்ட நடந்துக்றதைப் பொறுத்து தான் நான் அவங்களுக்கு மரியாதை கொடுக்கலாமா வேண்டாமா என்று நான் முடிவு செய்யணும்,” என்று சொல்ல.

இதை கேட்டுக் கொண்டிருந்த கதிர், “எனக்கு எல்லாம் யாரும் மரியாதை கொடுக்கணும் என்று அவசியம் இல்லை. இவ மரியாதை கொடுத்து தான் நான் இருக்கணும்னு ஒண்ணும் அவசியம் இல்லை,” என்று பதிலுக்கு கதிரும் கீர்த்தியின் மீது கோவப்பட.

“அக்கா, அவனை என்ன அவ, இவன்னு கூப்பிடற வேலை வெச்சுக்க வேணாம்னு சொல்லுங்க அக்கா,” என்றால்.

“ஏய், யாரைப் பாத்து டி அவன்னு சொல்ற?” என்று காரை ஓட்டிக்கொண்டே கதிர் கீர்த்தியிடம் மல்லுக்கு நிற்க. இருவரும் ஒருவரை ஒருவர் கழுவி ஊற்றுவதை காது கொடுத்து இரு பக்கமும் இவர்களுடன் பயணம் செய்து கொண்டு இருப்பவர்களால் கேட்க முடியவில்லை.

இவர்கள் பேசுவதைக் கேட்க பொறுமை இழந்த ஆதி, “போதும் நிறுத்துங்க,” என்று கத்த, கார் ஓட்டிக்கொண்டிருந்த கதிர் காரை சடன் பிரேக் போட்டு நிறுத்த, விக்கி வேகமாக டேஷ் போர்டில் தான் தலையில் முட்டிக்கொள்ள. துர்கா சீட்டில் சாயாமல் முன்னாள் நகர்ந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவள்.

கார் சடன் பிரேக் போடவும் முன் சீட்டின் பின் பகுதியில் முட்டிக்கொண்டு பின் சீட்டில் வந்து விழ, ஆதியின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டால்.

துர்கா தான் விழாமல் இருக்க ஆதியின் கையை ஆதரவாக கெட்டியாக பிடித்துக் கொள்ள, ஆதி தன் கையையும் துர்காவையும் மாறி மாறி பார்க்க, அவள் கண்களை இருக்க மூடி அமர்ந்திருந்தவள், கார் நின்றது புரிய கண்களை திறந்து பார்க்க, அப்போதுதான் அவள் ஆதியின் கையைப் பிடித்திருப்பதை உணர்ந்தவள், பட்டென ஆதியைப் பிடித்து இருந்த கையை விட்டவள், அவனிடம் இருந்து தள்ளி சென்று காரின் கதவருகில் அமர்ந்து கொண்டாள்.

தன்னைத் தொட பிடிக்காமல் தான் துர்கா தன்னிடம் இருந்து விலகி தள்ளி சென்று அமர்ந்திருக்கிறாள் என்று நினைத்துக் கொண்ட ஆதிக்கு துர்காவின் மேல் கோபத்துடன் அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

ஆதி கத்தியதால் காரை நிறுத்தி இருந்த கதிர், இப்போதுதான் பின்னாடி திரும்பி ஆதியைப் பார்த்து, “அண்ணா, எதுக்கு அண்ணா இப்ப கத்துனீங்க?” என்று கேட்க, ஆதி, துர்கா மீது இருந்த அதே கோபத்தோடு கதிரிடம், “ஒழுங்காக ரோட்ட பார்த்து வண்டியை ஓட்ட முடியுமா முடியாதா? அப்படி இல்லைன்னா இறங்கி கீழே வா. நான் வண்டி ஓட்டுறேன். இப்படி போன் பேசிக்கிட்டு வண்டி ஓட்டிட்டு இருந்தா எப்படி ஊருக்கு பத்திரமா போய் சேர்வது? உனக்கு அறிவு இல்லையா? கொஞ்சம் கூட இப்படித்தான் நடந்து கொள்வாயா?” என்று கத்த, மறுமுனையில் இருந்த கீர்த்திகா ஆதி மிகவும் கோபமாக பேசுவதை கேட்டவள், ஃபோனை தானாகவே அனைத்துவிட்டு அமைதியாக தன் காரில் அமர்ந்திருக்க, அவளுடைய அம்மா, “இதெல்லாம் உனக்கு தேவையா? பாரு, மாப்பிள்ளை எவ்வளவு கோபத்தோட பேசுறாருன்னு. உனக்கு எதுக்கு இந்த மாதிரி வம்பு இழுக்கற வேலை? நீ தான் வாயாடி இருக்க,” என்று வடிவு அவளை திட்டினார்.

ஆதி திட்டியதும் எதுவும் பேசாமல், “சாரி அண்ணா, நான் இனிமேல் கரெக்ட்டா ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுறேன்,” என்று சொன்னவன் காரை ஸ்டார்ட் செய்ய, இப்போது காருக்குள் இறுக்கமாக இருக்க, யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக அவரவர் அமர்ந்து கொண்டு கிளம்பினர்.

நீண்ட நேரம் பயணத்திற்குப் பின் பூமிகாவின் வீட்டிற்கு ஆதி குடும்பத்துடன் வந்து சேர்ந்தனர். அவர்களை வாசலில் வந்து வரவேற்ற அருணாச்சலம், வெங்கடாசலத்திடம், “என்னடா? என்கிட்ட சொல்லாம திடீர்னு பொண்ண மாத்தி கல்யாணம் பண்ணி வெச்சுட்டேன்னு கேள்வி பட்டேன். என் பொண்ணு கல்யாணம் இருக்கறதுனால தான் என்னால ஆதியின் கல்யாணத்துக்கு வர முடியல. பொண்ணு மாறிடுச்சுன்னு நான் கேள்விப்பட்டேன். சரி எப்படியும் நீ பூமிகா கல்யாணத்துக்கு வருவியா? அப்பவே பார்த்துக்கலாம் நான் வராம விட்டுட்டேன். நான் வரலைன்னு சொல்லிட்டு என் மேல கோவிச்சுக்காத,” என்று அருணாச்சலம் வெங்கடாசலத்திடமும், விசாலாட்சியிடமும் மன்னிப்பு கேட்டார்.

“அருணாச்சலம், நான் உன் மேல கோவமா தான் இருந்தேன். ஏதோ பூமிகாவுக்காக தான் உன்ன விட்டு வைக்கிறேன்,” என்று சிரித்துக் கொண்டே வெங்கடாசலம் கூற, “சரி சரிடா கோபப்படாத. வா, எல்லாம் சரியாயிடும்,” என்று கூறியவர் அனைவரும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

“எங்கடா? நீயும் விசாலாட்சியும் மட்டும் தான் வந்து இருக்கீங்க? இன்னும் ஆதி, கதிர் எல்லாம் காணோம்?” என்று அவர் கேட்க, “வந்துட்டே இருக்காங்கடா. எங்க பின்னாடி தான் வந்தாங்க. இன்னும் ஒரு டென் மினிட்ஸ்ல வந்துடுவாங்கன்னு சொன்னாங்க. நான் இப்பதான் பேசினேன்,” என்று வெங்கடாசலம் கூறினார்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, வாசலுக்கு எழுந்து சென்ற அருணாச்சலம், ஆதி வருவதைப் பார்த்தவர், ஆதியுடன் விக்கி, கதிர், துர்கா வர, துர்காவை பார்த்ததும் அருணாச்சலத்திற்கு மிகவும் பிடித்துப் போனது. அவளைப் பார்த்ததும் அவள்தான் ஆதியின் மனைவியாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர், “ஆதி, வாப்பா,” என்று அழைக்க, துர்கா தயங்கிக் கொண்டு காரிலிருந்து இறங்கியவள் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, ஆதி துர்காவைத் திரும்பிப் பார்த்து, “உனக்கு தனியா வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா? ஒழுங்கா கூட வரமாட்டியா?” என்று அவளை கடிந்து கொள்ள, அவள் எதுவும் பேசாமல் சரி என்று தலையாட்டிக் கொண்டு ஆதியின் பின்னாலே சென்றாள்.

விக்கி, கதிரிடம், “உங்க அண்ணன் ஏன்டா துர்கா கிட்ட எப்போ பாரு எரிஞ்சு விழறான்? அவ ஆதியிடம் பி.ஏ-வாக வேலை செஞ்சிட்டு இருக்கும்போது கூட இவ்வளவு திட்டு வாங்கிருக்க மாட்டா. எப்போ இவனை கல்யாணம் பண்ணாளோ, அன்னில இருந்து இவனை நானும் பார்த்துக்கொண்டே தான் இருக்கேன். துர்காவை எப்ப பார்த்தாலும் ஒரு மாதிரி முறைச்சுப் பார்த்துக்கிட்டே இருக்கான். ஒரு மாதிரியா தான் இருக்கா. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்டா சீக்கிரமா. பாவம் துர்கா. எதுவும் பேசாம, எது திட்டினாலும் சரி, சரின்னு கேட்டுட்டு அமைதியா போறதுனால இவனுக்கு இவ்ளோ லொள்ளு. ஆதிக்கு ஒரு நாளைக்கு என் கிட்ட இருக்கு. அவளுக்கு கேட்கிறது யாரும் இல்லை என்று நினைத்துவிட்டானா ஆதி? நான் பேசிக்கிறேன் டா,” என்று கதிரிடம் சொல்லிக்கொண்டு ஆதியை முறைக்க, ஆதி திரும்பிப் பார்த்து, “என்ன?” என்பது போல தலையாட்ட, “ஒண்ணும் இல்லையே,” என்று விக்கி சொல்ல, கதிர் சிரித்துக் கொண்டு, “உனக்கு எதுக்கு இந்த வேலை எல்லாம்? அவன் உன்னை பார்த்து ‘என்ன’னு கேட்டதுக்கு ‘ஒண்ணும் இல்லை’ன்னு பயந்துட்டுட்டு சொல்ற. நீ போய் தைரியமா எங்க அண்ணன் கிட்ட, ‘துர்காவை ஏன்டா இப்படி திட்டுன’ன்னு கேக்க போறியா? பேசாம வாடா,” என்று விக்கியின் தோல் மேல் கை போட்டு கதிர் விக்கியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

உள்ளே சென்று அனைவரும் அமர, துர்கா தயங்கியபடி ஆதியின் அருகில் அமர்ந்திருந்தாள். அவனிடம் ஒட்டாமல் அவனிடமிருந்து சற்று விலகி அமர்ந்திருக்க, ஆதி துர்காவை மனதில் வருத்தெடுத்துக் கொண்டிருந்தான். “பாரு, இங்கே இத்தனை பேர் இருக்காங்க. ஒரு ஃபேமிலி டிக்காவது என் பக்கத்துல உக்காந்தா என்ன? இவ்வளவு தூரம் தள்ளி உட்கார்ந்து இருக்கா பாரு,” என்று மனதில் நினைத்தவன், “இரு உனக்கு ஒரு நாளைக்கு இருக்கு,” என்று நினைத்துக் கொண்டிருக்க, அருணாச்சலம் அனைவரிடம் பேச, பூமிகாவும் அப்போதுதானே பியூட்டி பார்லர் சென்று இருந்தவள் உள்ளே வர, ஹாலில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்ததும், அருணாசலத்தையும், விசாலாட்சியையும் பார்த்ததும் வேகமாக அவர்கள் இருவரும் ஓடி வந்தவர், “விசு ஆன்ட்டி! எப்படி இருக்கீங்க?” என்று அவரின் அருகில் சென்று அவரை கட்டிக்கொண்டு பேச, “வாடா… பூமி, எப்படி இருக்க? நல்லா இருக்கியா? என்ன பாத்து எவ்வளவு நாளாச்சு? அன்னைக்கு நம்ம அந்த ட்வின் கல்யாணத்தில் பார்த்தோம். அதுக்கப்புறம் இப்பதான் பார்க்கிறோம். எப்படிடா இருக்க?” என்று அவர் கேட்க, “நல்லா இருக்கேன் ஆன்ட்டி. பாருங்க, நான் இப்பதான் பியூட்டி பார்லர் போயிட்டு வந்தேன். அழகா இருக்கேனா?” என்று கேட்க.

“உனக்கு என்னடா ராஜாத்தி? ரொம்ப அழகா இருக்க. ஆனா அத்தை ஒன்னு சொன்னா நீ கோவிச்சுக்க மாட்டியே?” என்று கேட்க, “சொல்லுங்க ஆன்ட்டி,” என்று கூற, “என் மருமகளை விட நீ கொஞ்சம் அழகு கம்மிதான்,” என்று அவர் துர்காவை புகழ, துர்காவிற்கு இப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு பூமிகாவையும், விசாலாட்சியையும் மாறி மாறி பார்க்க, பூமிகா எதுவும் தன்னை தப்பாக நினைத்துக் கொள்வாளோ என்று பயந்து கொண்டே பூமிகாவை பார்த்தால் துர்கா.

விசாலாட்சி துர்கா பூமிகாவை விட அழகு என்று சொன்னதும், “அப்படியா சொன்னிங்க? அப்ப நான் அழகா இல்லையா?” என்று அவரிடம் கோபப்பட்டவள் வேகமாக அவரிடம் இருந்து எழுந்து துர்காவைப் பார்க்க, விசாலாட்சி நிஜமாகவே பூமிகா கோவித்துக் கொண்டால் என்று வேகமாக எழுந்து, “டேய், நான் சும்மா தாண்டா சொன்னேன்,” என்று சொல்ல வர, “நீங்க பேசாதீங்க என்கூட,” என்று சொன்னவள்.

விசாலாட்சியிடம் இருந்து சென்று துர்கா அருகில் சென்றவள், துர்காவை பார்க்க, துர்கா பயந்தவாரே பூமிகாவை பார்க்க, பூமிகா துர்காவை தலையிலிருந்து கால் வரை பார்க்க, துர்காவிற்கு ஏனோ மிகவும் கூச்சமாக இருக்க, குனிந்து கொண்டு நின்றிருந்தால். துர்காவை பூமிகா பார்வையாலேயே அளந்தவள், அவள் அருகில் வர துர்கா மறுண்ட விழிகளில் பூமிகாவை பார்க்க.

“ஆண்ட்டி….” என்று சத்தமாக அழைக்க அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் பூமிகாவையே பார்க்க, அவள் அருகில் வந்த விசாலாட்சி, “சொல்லு டா கண்ணு,” என்று பூமிகாவைப் பார்த்து என்ன சொல்ல போகிறாளோ என்று யோசனையுடனே பார்க்க.

“என்னை விட உங்க மருமகள் இந்த துர்கா அழகா இருக்கான்னு தான சொன்னிங்க?” என்று கேட்க. “அது இல்ல டா.. கண்ணு. நான் என்ன சொன்னேன்னா….” என்று அவர் பேச வர, “உண்மையாவே உங்க மருமகள் அழகா தான் இருக்கா,” என்று கூறியவள் துர்காவைப் பார்த்து, “ஹாய் துர்கா… யூ ஆர் லுக்கிங் ரீயலி பியூட்டிஃபுல்,” என்று கூறியவள் துர்காவை கட்டிக்கொண்டு அவள் கண்ணத்தில் முத்தமிட்டாள்.

இப்போதுதான் அனைவருக்கும் உயிரே வந்தது போல இருந்தது. அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, துர்காவும், பூமிகாவும் சீக்கிரமாகவே நன்றாக பேசி பழகிக்கொள்ள, பூமிகா அனைவரிடமும் சொல்லிக்கொண்டு துர்காவை அலைத்துக்கொண்டு உள்ளே சென்றால்.

இவர்கள் இருவரும் சந்தோசமாக பேசி சிரித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த ஒரு ஜோடி கண் பொறாமை தீயில் வெந்து கொண்டு இருந்தது.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured