EPISODE 279
நர்மதாவின் அலுவலகம்
திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கும் நிலையில் தன் ஆஃபீஸில் அனைவரிடமும் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பாகவே வரச் சொல்லி அவள் வேலையை ரிசைன் செய்வதாகக் கூறி ராஜினாமா கடிதத்தை ரூபேஷிடம் கொடுத்துவிட்டு ஆஃபீஸில் இருந்து கிளம்பினாள் நர்மதா.
ஷிவுவின் வீடு
அங்கிருந்து நேராக ஷிவுவை பார்க்க அவள் வீட்டிற்கு தான் சென்றாள்.
அவள் வருவதை ஏற்கனவே சொல்லி இருக்க, ஷிவு நர்மதாவிற்காக காத்திருந்தாள்.
“வா நர்மதா! ஆஃபீஸ்ல எல்லார்கிட்டயும் பேசியாச்சா?” என்றால் ஷிவு சிரித்தபடி அவளை வரவேற்று.
“எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன் மேடம். என்னோட ரெசிக்னேஷன் லெட்டரை சார்கிட்ட கொடுத்துட்டேன்” என்றாள்.
“என்கிட்டக் கூடச் சொல்லாம என்னைக் டிஸ்கஸ் பண்ணாம உன்னை யாரு ரெசிக்னேஷனை கொடுக்கச் சொன்னது?” என்றால் ஷிவு சற்று கோபமாக.
“மேடம், என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவருக்கு நான் வேலைக்குப் போறது சுத்தமா பிடிக்கல. அவர் கல்யாணத்துக்கு முன்னாடி வேலையை ராஜினாமா பண்ணனும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. அதனால தான் நான் இந்த வேலையை வேண்டாமேன்னு எழுதி கொடுத்துட்டேன்” என்றால்.
“என்ன நர்மதா! புரிஞ்சுதான் பேசுறியா? இது உன்னோட ட்ரீம் ஜாப்னு எனக்கு நல்லாவே தெரியும். இந்த வேலைக்காக நீ எவ்வளவு உழைச்சிருக்க, மனக்கட்டு இருக்கேன்னு நம்ம ஆஃபீஸ்ல இருக்குற எல்லாருக்குமே உன்னோட உழைப்பைப் பற்றி நல்லா தெரியும். அப்படி இருக்கிறப்போ உனக்குப் பிடிச்ச வேலையை நீ தொடர்ந்து செய்ய வேண்டியதுதானே?” என்றாள் ஷிவு.
“இல்ல மேடம், நான் வேலை வேண்டாம்னு முடிவு எடுத்துட்டேன். இனி திரும்பி அதைக் மாத்திக்கிற எண்ணம் எனக்கு இல்ல. முதல்ல என் கல்யாணம் முடியட்டும், அதுக்கப்புறம் பார்த்துக்கொள்ளலாம்” என்றால் நர்மதா விரக்தியாக.
“நீ பேசுறது வெச்சே உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னு எனக்குத் தோணுது. அப்படின்னு விருப்பம் இல்லாத ஒரு விஷயத்தை நீ இவ்வளவு தூரம் கட்டாயப்படுத்தி உன்னையே அதுக்குள்ள திணிச்சுக்குறே” என்றாள்.
“மேடம், அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. எனக்கு ஏற்கனவே இந்தச் சம்பந்தம் பேசி முடிச்சு ரொம்ப நாளாச்சு. நான் தான் கல்யாணம் உறுதியான பிறகு எல்லார்கிட்டயும் சொல்லிக்கலாம்னு அமைதியா இருந்துட்டேன். மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல. நான் ரிசைன் பண்ணின விஷயத்தை உங்ககிட்ட நேர்ல சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன். உங்க உடம்பு எப்படி இருக்கு மேடம்?” என்றால் நர்மதா.
“எனக்கென்ன நான் நல்லாத்தான் இருக்கேன். இன்னும் பத்து பதினைந்து நாள்ல டெலிவரி ஆகிடும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க” என்றால் ஷிவு.
“ஓகே மேடம், குழந்தை பிறந்ததும் மறக்காம எனக்குச் சொல்லி அனுப்புங்க. நான் தான் முதலாள வந்து உங்க குழந்தையைப் பார்ப்பேன்” என்றால் சிரித்துக் கொண்டே.
“கண்டிப்பா சொல்றேன்” என்ற ஷிவு. “சரி வா, நம்ம போய் சாப்பிட்டு வரலாம்” என்று அவளைச் சாப்பிட அழைத்தாள்.
“இல்ல மேடம், எனக்குப் பசிக்கல. நீங்க சாப்பிடுங்க. எனக்கு நான் நிறைய பர்சேஸ் இருக்கு. போகும்போது அது எல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்குப் போகவே லேட் ஆயிடும். அதனால நான் கிளம்புறேன்” என்று சோஃபாவில் இருந்து எழுந்தாள்.
ஷிவுவும் நர்மதாவைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தவில்லை. “சரி அப்போ உன் கல்யாணம் முடிஞ்சதும் உன் வீட்டுக்காரரையும் அழைச்சிட்டு வா… ரெண்டு பேருக்கும் சேர்ந்து விருந்து வச்சிடறேன்” என்றாள்.
“ஓகே மேடம், நீங்களும் உடம்பைப் பத்திரமாப் பாத்துக்கோங்க. குழந்தை பிறந்ததும் மறக்காம எனக்குச் சொல்லி அனுப்புங்க” என்று விட்டு ஷிவுவிடமும் அவள் அத்தையிடமும் விடைபெற்ற நர்மதா சென்றாள்.
நர்மதா கிளம்பிச் செல்லும் வரை அமைதியாக இருந்த ரூபேஷின் அம்மா, “ஏன் ஷிவு, அந்தப் பொண்ணு எப்பவுமே கலகலன்னு சிரிச்சுப் பேசிகிட்டு தானே இருக்கும். ஆனால் இப்போ ஏன் அவ முகம் ரொம்ப வாட்டமா இருக்கு? அவளுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையா? எதுவும் நீ அவ கிட்ட பேசினியா?” என்றார்.
“நானும் கேட்டுப் பார்த்துவிட்டேன் அத்தை. அவ என்கிட்ட ஒன்னும் இல்லைன்னு சொல்லிச் சமாளிக்கிறா” என்றாள்.
“நீ இருக்கும் கொஞ்ச நேரம் பொறுத்து அந்தப் பொண்ணுக்கு போன் போட்டுப் பேசு. அவள் மனசுல என்ன நினைக்கிறான்னு நீயாவது கேட்டுத் தெரிஞ்சுக்க. பாவம், எனக்கு அவளும் முகத்தைப் பார்த்தாலே என்னவோ போல இருக்கு” என்றவர் உள்ளே சென்றுவிட, ஷிவுவும் அதே யோசனையில் இருந்தவள் தன் மொபைலை எடுத்து ரூபேஷிற்கு அழைத்தாள்.
அவள் அழைத்த இரண்டாவது நிமிடத்தில் போனை அட்டென்ட் செய்தவன், “சொல்லு ஷிவு! வலி எதுவும் வந்திருச்சா? ஹாஸ்பிடல் போகணுமா? நான் கிளம்பி வரட்டுமா?” என்றான் பதட்டமாக.
“டேய் டேய்! நான் எவ்வளவு முறை சொல்லி இருக்கேன்? நான் போன் பண்ணினா முதல்ல என்னப் பேச விடு. அதுக்கு அப்புறம் நீ கேள்வி கேளுன்னு சொன்னேனா இல்லையா? போன் அட்டென்ட் பண்ணுனதும் வரிசையா எழுதி வைத்து மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிற மாதிரி கேள்வியாக் கேட்டுட்டு இருக்க” என்று அவனை அதட்டினால் ஷிவு.
“சாரி சாரி. நீ சொல்லு நான் எதுவும் பேசல” என்று அமைதியாக ரூபேஷ் இருக்க.. மெல்லச் சிரித்த ஷிவு, “முட்டாள்! நான் மிரட்டினால் உடனே சரின்னு அடங்கிப் போயிடனுமா? திருப்பி என் கூட சண்டை போடுடா” என்றாள்.
“ஏன்? என் பொண்டாட்டிகிட்ட தானே நான் அடங்கிப் போறேன். இதுல என்ன இருக்கு?” என்றவன், “சரி சொல்லு, நீ எதுக்காகப் போன் பண்ணின?” என்றான்.
“சரி, நர்மதா உன்கிட்ட ரெசிக்னேஷன் லெட்டர் கொண்டு வந்து கொடுத்தாளா?” என்றாள்.
“ஆமா ஷிவு. நானே உனக்குக் கால் பண்ணலாம்னு இருந்தேன். நர்மதா தான், ‘நான் வீட்டுக்குத் தான் போறேன் சார். நானே மேடம்கிட்ட நேர்ல சொல்லிக்கிறேன்னு’ என்னைச் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டா” என்றான்.
“அவ நம்ம ஆஃபீஸ்ல யார்கிட்டயாவது ரொம்ப க்ளோஸா பழகுறாளா உனக்கு எதுவும் தெரியுமா? நான் என்ன நான் இருக்கிற வரைக்கும் அவ என் பின்னாடி தான் சுத்திக்கிட்டு இருப்பா. வேற யாரு கூடையும் அவ்வளவா அட்டாச் ஆக மாட்டா. நானும் இப்ப ஆஃபீஸ் வருவதில்லையே. அதனால தான் கேட்கிறேன்” என்றாள்.
ஷிவு சொன்னதைச் சிறிது யோசித்தவன், “ஆமாம் ஷிவு, ஒரே ஒரு பொண்ணு கிட்ட மட்டும் அப்போ நர்மதா பேசுறதைக் கேட்டு இருக்கேன். அதுவும் அந்தப் பொண்ணு கூடப் பேசும்போது இவ ரொம்பச் சோகமா இருப்பா. அப்ப மட்டும் தான் கவனிச்சு இருக்கேன்” என்றான்.
“அந்தப் பொண்ணு யாரு என்னன்னு விசாரிச்சு, அவகிட்ட போன் நம்பர் வாங்கி எனக்குச் சென்ட் பண்ணு” என்றால்.
“ஏன் ஷிவு? எதுவும் பிரச்சனையா?” என்றான்.
“ஆமாடா. இப்போ நர்மதா ஆஃபீஸ்ல ரிசைன் பண்ணிட்டுப் போயாச்சு. இனி அடுத்தது நீ வேற ஆளை கண்டிப்பா எடுத்து தானே ஆகணும். அதனால நீ அடுத்து உனக்கு அசிஸ்டென்டா அப்பாயிண்ட் பண்ணப் போறவங்க ஆம்பளையா பொம்பளையா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.”
“நீ செலக்ட் பண்றது ஒரு பொண்ணா இருந்தா அந்தப் பொண்ணு கிட்ட நீ எப்படிப் பேசுற, பழகுற, உன்னோட மோட்டிவ் என்னங்கறத நான் தெரிஞ்சுக்க வேண்டாமா? இத்தனை நாள் நர்மதா அங்க இருந்தா, உன்னைப்பத்தி எல்லாமே எனக்கு அப்டேட் வந்திட்டே இருக்கும். இப்பதான் அவளும் இல்லையே. அதனாலதான் அந்தப் பொண்ணோட போன் நம்பர் கேட்கிறேன். அவ போன் நம்பரை நீ எனக்கு முதல்ல அனுப்ப. உன்னை நான் ஃபாலோ பண்ணுவேன் வீட்டிலிருந்தே” என்றால்.
“அப்போ இத்தனை நாள் நீ எனக்குத் தெரியாம நர்மதாவை ஸ்பையா வச்சிருந்தியா? அவதான் உன்கிட்ட எல்லா விஷயத்தையும் வந்து போட்டு கொடுத்துட்டு இருந்தா? இல்ல? இது இத்தனை நாள் எனக்குத் தெரியாமப் போயிடுச்சே. தெரிஞ்சிருந்தா…” என அவன் கோபமாகப் பேசுவது போல ஷிவுவிடம் பேச.
“ஆமாம், அப்படித்தான் செஞ்சேன். இப்ப என்னடா உனக்கு? என்ன சரக்கு கோபம் வேற வருது? என்கிட்டச் சண்டைக்கு வரியா நீ?” என்றால் அவளும் பதிலுக்கு.
“ஹே ஹே! இப்ப எதுக்கு டென்ஷன் ஆகுற? டென்ஷன் ஆனா உனக்குப் பிபி ஏறும். பிபி ஏறும். அது உனக்கு உடம்புக்கு நல்லதில்ல. உனக்கு உடம்பு எதுவும் ஆச்சுன்னா வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் எதுவும் பிரச்சனை வரும். நான் சும்மாதான் உன்னிடம் கோவமா இருக்கிறது போலப் பேசினேன். நீ தேவையில்லாமல் டென்ஷன் ஆகாதே. உனக்கு என்ன இப்போ அந்தப் பொண்ணோட போன் நம்பர் வேணும் அவ்வளவு தானே? இன்னும் அஞ்சு நிமிஷம் உன் வாட்ஸ்அப்புக்கு அந்தப் பொண்ணோட போன் நம்பர் இல்ல, அந்தப் பொண்ணு ஜாதகத்தை அனுப்பி வைக்கிறேன்” என்றான்.
“அந்தப் பொண்ணு ஜாதகத்தை வாங்கி நான் என்ன அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறேன்? ஒழுங்கா சொன்னது மட்டும் செய்டா” என்று போனை வைத்து விட்டாள்.
ஷிவு தன்னிடம் எப்படிப் பேசினாலும் அவனுக்கு அவள் தன்னிடம் அன்பாகப் பேசுவது போல எப்போதுமே தோன்றும் போல. அவள் போனை வைத்ததும் சிரித்துக் கொண்டே தன் கேபினிலிருந்து ரிசப்ஷனுக்கு அழைத்தவன், நர்மதா பேசும் அந்தப் பெண்ணின் அடையாளத்தைச் சொல்லி அவளைத் தென்ரூவிற்கு வரச் சொன்னான்.
அவள் வந்ததும், நான் அவளிடம் அவள் போன் நம்பரை கேட்டு விபரங்களைச் சொல்லிவிட்டு அவளை அனுப்பி வைத்து, அதை ஷிவுவிற்கும் whatsapp செய்தான்.
எங்கே செண்பகமும், கபிலனின் அம்மா அப்பா சங்கர், சரஸ்வதியும் ஜோசியரைப் பார்த்து விட்டு வந்த பிறகு அவர் குறித்துக் கொடுத்த நாளில் சங்கவிக்கும், கபிலனுக்கும் சாந்தி முகூர்த்தத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தனர்.
ராதாவும் கீர்த்திகாவும் சங்கவியை தயார் செய்து கொண்டு இருக்க… அவர்களோடு கபிலனின் வீட்டிற்கு வந்திருந்த துர்கா சரஸ்வதியிடம் பேசி பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளைப் பூஜை அறையில் செய்து கொண்டு இருந்தாள்.
ராதாவும் கீர்த்திகாவும் கிண்டல் பேசிக்கொண்டே சங்கவியைத் தயார் செய்து கொண்டிருக்க, ஆனால் சங்கவியோ இதில் ஒட்டாமல் யோசனையாக அமர்ந்திருந்தாள்.
அவள் அப்படி அமர்ந்திருந்ததைப் பார்த்த ராதா கீர்த்திகாவை ஜாடையாக அழைத்து சங்கவியைக் காட்டி, அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என கேட்டாள்.
“எனக்குத் தெரியாது” என்று கீர்த்திகா உதட்டைப் பிதுக்கித் தோலைக் குலுக்கினாள்.
“கீர்த்தி என்ன ஆச்சுன்னு கேளு” என்று ஜாடை பேசினால் ராதா.
“ம்ஹும்… மாட்டேன் பா. இவ கிட்ட பேசுறதுக்கு எனக்குப் பயமா இருக்கு. இந்த நேரத்தில் நல்லா பேசுவா, இந்த நேரத்துல திட்டுவான்னு எனக்குத் தெரியாது” என்றால்.
“மச்… அதெல்லாம் ஒன்னும் திட்ட மாட்டா. நீ கேளு” என்று ராதா கீர்த்திகாவை இடித்தால்.
“ஏன் இவ்வளவு சொல்றியே, நீ அவகிட்ட கேட்க வேண்டியதுதானே?” என்று பதிலுக்கு ராதாவை இடித்தால் கீர்த்திகா.
அவர்கள் இருவரும் தனக்குத் தெரியாமல் இரகசியம் பேசுவதாக நினைத்துக் கொண்டு சங்கவியின் பின்னால் நின்று பேசிக் கொண்டிருக்க, அவர்கள் இருவரையும் கண்ணாடி வழியாகப் பார்த்த சங்கவி.
“ரகசியம் பேசுவதென்றால் இரண்டு பேரும் வெளியே போய் பேசுங்க. இப்படி எனக்குத் தெரியுற மாதிரி பேசாதீங்க” என்றால்.
அவள் பேசியதும் சட்டெனத் திரும்பி இருவரும் சங்கவியைக் கண்ணாடி வழியாகப் பார்க்க.
அவர்கள் இருவரையும் முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சங்கவி.
அவளைப் பார்த்த கீர்த்திகா, “இல்லை நாங்களும் வந்ததுல இருந்து பார்த்துட்டே இருக்கோம். உனக்குக் கல்யாணமான சந்தோஷம் கொஞ்சம் கூட முகத்தில் இல்லையே. ஏன் முகத்தைத் தூக்கி வச்சிட்டு இருக்க? ஏதோ கவலையா இருக்கிற மாதிரி, என்னமோ யோசனையாக இருக்கிற மாதிரி இருக்கு” என்று கேட்டாள் கீர்த்திகா.
“என்னதான் மாமா அவசரப்பட்டு உனக்குக் கல்யாணம் செய்து வச்சாலும், உனக்குப் பிடிச்சவர் தானே நீ செலக்ட் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்ட. அப்புறம் ஏன் முகத்தை இப்படி வச்சிருக்க? உனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்குதா இல்லையா?” என்றால் ராதா.
“யார் சொன்னா எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கவில்லை என்று? நான் புடிச்சு தானே கபிலனை கல்யாணம் செய்து விட்டேன்” என்றால் சங்கவி.
“ஏன் இப்படி முகத்தை வச்சுட்டு இருக்க? ஒரு வெட்கமில்லை, ஒரு சந்தோஷம் இல்லை. ஏதோ முடியாதவ மூஞ்சியை வெச்சிருக்கிற மாதிரி இல்ல நீ வச்சிருக்க?” என்றால் ராதா.
அதைக் கேட்டு ராதாவை சங்கவி முறைக்க..
“சரி கோவிச்சுக்காத” என்ற ராதா, “சும்மா தெரிஞ்சுக்கத் தான் கேட்டோம். சொல்ல விருப்பம் இல்லைன்னா சொல்ல வேண்டாம்” என்றால்.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நான் இதுவரைக்கும் கபிலன் கிட்ட நிறைய முறை பேசி இருக்கேன், பழகி இருக்கேன். ஆனா அப்போ எல்லாம் அவனை நான் ஒரு ஃபிரண்டா தான் பார்த்திருக்கேன். அதைத் தாண்டி எந்த ஒரு ஃபீலிங்க்ஸும் எனக்கு அவன் மேல வந்ததில்ல. ஆனால் இப்படித் திடீர்னு அவனையே கல்யாணம் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. அதுதான் அவன் கூட எப்படி நான் ஒண்ணா…” என யோசனையாக இருக்கு என்று தயங்கினால் சங்கவி.
“ஏன்? யாருமே ஃபிரண்ட்ஸ் கல்யாணம் செய்துகொண்டதே இல்லையா? நீ ஏன் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டிருக்க? எதைப் பற்றியும் ஃபீல் பண்ணாம உன்னோட வாழ்க்கையை எப்படி வாழனும்னு நீ நினைக்கிறாயோ, அது போல வாழ ஆசைப்படு. இத்தனை நாள் தான் தேவையில்லாம விஷயங்களை எல்லாம் செய்து உன்னோட நேரத்தை நீ வேஸ்ட் பண்ணிட்ட… இனியும் இப்படி கண்டதைப் போட்டு குழப்பிக்கிட்டே இருந்தீன்னா உனக்கான அழகான வாழ்க்கையையும் நிறைய நினைவுகளையும் நீ மிஸ் பண்ணிடுவ” என்றால் கீர்த்திகா.
யார் சொன்னது திருமணத்திற்கு முன்பாக சங்கவி, ஆதியும் அவன் குடும்பத்தையும் பழிவாங்க நினைத்ததைச் சொல்லிக் காட்டுகிறாள் என்று கீர்த்திகாவை சங்கவி முறைக்க.
“என்ன முறைக்கிற? நீ முறைச்சாலும் அதுதான் உண்மை. உண்மையாவே இவ்வளவு அழகா, திறமையா இருக்கிற நீ ஒரு பெரிய பிசினஸை பெருசா நடத்திட்டு வர நீ… சாதாரண விஷயத்துக்காக உன் வாழ்க்கையைப் பாதிய தொலைச்சுட்ட. நீ எவ்வளவு விஷயத்தை மிஸ் பண்ணி இருக்கேன்னு உனக்கு இப்ப தெரியாது. உனக்கான நீ வாழ்க்கையை வாழ்ந்து திரும்பி பார்க்கும் போதுதான் அதைப் பற்றி எல்லாம் தெரியும்” என்றவர்கள், “ஏதோ நடந்தது நடந்து போச்சு. இனி நடக்கப்போறது நல்லதா நடக்கணும்னு நினைச்சுக்கோ. சந்தோசமா உன் லைஃபை ஸ்டார்ட் பண்ணு. உடனே நீ உன் வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. அதுக்காக ரொம்ப நாள் தள்ளிப்போட்டு நீயும் கவலைப்பட்டு வேஸ்ட் பண்ணிடாதே.”
“கொஞ்ச நாளைக்கு வேண்டாம்னாலும் இந்த விஷயத்தை ஒத்திப் போடலாம். நீ அவனை விட்டுத் தள்ளி இருக்க இருக்க அவனுக்கு உன் மேல இருக்கிற நாட்டம் குறைஞ்சு போயிடும். அதனால அவன் உன்கிட்ட நெருக்கமாப் பேசிப் பழகுற விஷயத்தை நீ புரியும்போது அவன் கூட நீயும் நெருங்கிப் பழக முயற்சி பண்ணு. எல்லாமே மாறிடும்” என்றால் கீர்த்திகா.
தன்னைவிட வயது குறைவாக இருந்தாலும் தனக்கு அட்வைஸ் செய்யும் கீர்த்திகாவை ஆச்சரியமாக சங்கவி பார்க்க. “சரி சரி சீக்கிரம் வா. டைம் ஆயிடுச்சு. எல்லாம் வெளியே காத்திருக்காங்க” என்றவள், “ராதா, நீ எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு சங்கவியை வெளியே கூட்டிட்டு வா. நான் போய் அக்காவுக்கு எதுவும் ஹெல்ப் பண்ணனும்னு பார்க்கிறேன்” என்று விட்டு வெளியே சென்றாள்.
கீர்த்திகா சென்றதும் ராதா சங்கவியைப் பார்த்து. “இங்க பாருக்கா, நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ. இந்த ஆம்பளைங்க இருக்காங்களே, அவங்களை நம்ம முந்தானைக்குள்ளே சொருகி வைத்திருக்கிற வரைக்கும் தான் நம்ம பேச்சைக் கேப்பாங்க. அதிலிருந்து அவங்க கழண்டுட்டாங்கன்னு வையி, திரும்ப அவங்களைப் பிடிச்சு இடுப்புல சொருக்கிக்கிறது ரொம்பக் கஷ்டம். சொன்னது உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். உன் புருஷனை ரொம்ப நாளைக்குக் காக்க வைக்காதே. அப்புறம் அது உனக்குத் தான் பின்னாடி கஷ்டமா இருக்கும்” என்று விட்டு, “சீக்கிரம் வா” என்று ராதாவும் வெளியே சென்று விட.
‘சரியா வளராதவன் எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணிட்டுப் போறா. இது எல்லாம் எனக்குத் தேவைதானா? பெண்ணாக இந்த நேரம் நான் மட்டும் இன்னும் பழைய சங்கவியா இருந்திருந்தால் இவள் ரெண்டு பேரும் என்கிட்ட இவ்வளவு சாதாரணமா வந்து அட்வைஸ் பண்ணிட்டுப் போவார்களா?’ என நினைத்தவள், ‘ச்சேய்! சங்கவி மாறினது மாறிட்ட. அப்படியே மெயின்டெயின் பண்ணிக்க. நீயும் வெள்ளியா இருந்து என்னடி பண்ணப் போற?’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் எழுந்து அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.
வெளியில் வந்ததும் கபிலன் பட்டு வேஷ்டி, சட்டையோடு பூஜை அறை முன்பு நின்று இருக்க, சங்கவியும் வந்து அவன் எதிரில் நின்று கொண்டாள்.
“அங்க ஏம்மா நிக்கிற? வந்து என் பையன் கிட்ட நில்லு” என சரஸ்வதி அழைக்க, சரியென தலையாட்டியவள் மெல்ல நகர்ந்து அவன் அருகில் சற்றுத் தள்ளி நின்றாள்.
அவள் தன்னை விட்டு விலகி நிற்பதைப் பார்த்த கபிலன். மெல்ல அவளிடம் குனிந்து சங்கவிக்கு மட்டும் கேட்கும் வகையில், “ஏன் என் பக்கத்துல வந்து நின்னா மேடம்க்கு வலிக்குமோ?” என்றான்.
அவனை நிமிர்ந்து முறைத்தவள், ஏற்கனவே நின்ற இடத்தில் இருந்து கபிலனை விட்டுச் சற்றுத் தள்ளி நிற்க..
ஏற்கனவே இருந்த இடைவெளியை மேலும் அதிகரித்து சங்கவி தள்ளி நிற்க, அவளைத் திரும்பி கபிலன் முறைத்தவன், அவள் கையைப் பிடித்து இழுத்துத் தன்னருகில் நிற்க வைத்தான்.
இதைச் சற்றும் எதிர்பாராமல் சங்கவி 6 அடிக்கு மேல் உயரமாக இருந்த கபிலனை நிமிர்ந்து பார்க்க. “இங்க என்ன பார்வை? திரும்பிச் சாமியை கும்பிடு” என்று அவளை அதட்டினான்.
‘எல்லாம் என் நேரம் டா’ என நினைத்துக் கொண்டு சங்கவி பூஜையறையில் சாமியைப் பார்த்து கண்கள் மூடிப் பிரார்த்தனை செய்து கொண்டாள்.
பூஜை எல்லாம் முடிந்து இருவரும் ஆரத்தி எடுத்த பிறகு, அறைக்குச் செல்லச் சொல்லிவிட்டு, சங்கவியின் கையில் செம்பில் பாலைக் கொடுத்து அவளை கபிலனின் அறைக்கு துர்கா, ராதா, கீர்த்திகா மூவரும் அழைத்துச் சென்றனர்.
கபிலனின் அறைக்குள் சங்கவியை அனுப்புவதற்கு முன்பு கீர்த்திகாவும் ராதாவும் சங்கவியைப் பார்த்து, “நாங்க சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா இல்லையா?” என்றனர்.
சங்கவி இருக்கிறது என்பது போலத் தலையை ஆட்ட.. “சரி நீ உள்ளே போ” என பால் செம்போடு சங்கவி உள்ளே அனுப்பி கதவைத் தாளிட்டனர்.
அவர்கள் இருவரையும் ஆச்சரியமாகப் பார்த்த துர்கா, “ஏன் என்னடி, அவகிட்ட இவ்வளவு சாதாரணமாப் பேசிட்டு இருக்கீங்க? சொல்லப் போனா இன்னும் அவளுக்கு ஆர்டர் போடுற மாதிரி இல்ல நீங்க ரெண்டு பேரும் பேசுறீங்க” என்றால் துர்கா.
“ஐயோ அக்கா! இந்த சங்கவி பார்க்கத்தான் ரொம்ப டெரரா இருக்கா. அவகிட்டக் கொஞ்சம் மாறி பேசினாலும் சரி சரின்னு தலையை ஆட்டுவா” என்று சிரித்த கீர்த்திகா, “சும்மா கிடைச்ச கேப்ல நாங்களும் கொஞ்சம் யூஸ் பண்ணிக்கிட்டு இருந்தோம்” என்றவள், “சரி வாக்கா, ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு. வீட்டுக்குக் கிளம்பலாம்” என்று கபிலனின் வீட்டு ஆட்களிடம் சொல்லிவிட்டு செண்பகத்தையும் அவர்களோடு அழைத்துச் சென்றனர்.
இங்கே கையில் பால் செம்புவுடன் இன்னமும் யோசனையில் கபிலனின் அறைக்குள் வந்தவள் கதவைத் தாளித்துவிட்டு கதவருகே நின்றிருந்தால்.
அவள் வருவதைப் பார்த்ததும் கட்டிலில் அமர்ந்திருந்த கபிலன், “என்னடா, அப்படியே வாசலிலேயே நிற்கிறதா? அதிசயமா” என்றான்.
அவனை முறைத்தவள் வேகமாக அவனிடம் வந்து கையில் இருந்த செம்பை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு, “டேய்! என்னடா நெனச்சிட்டு இருக்க உன் மனசுல? நான் உன் ஃபிரண்ட், அது ஞாபகம் இருக்கா இல்லையா? என்னவோ நீ ரொம்பத் தான் என்னை அதட்ட எல்லாரும் இருக்காங்கன்னு நான் பொறுமையாப் போனேன். ஞாபகத்துல வச்சுக்கோ. மறுபடியும் மறுபடியும் என்ன இதே போல டெஸ்ட் பண்ணிட்டு இருந்தா நான் சும்மா இருக்க மாட்டேன்” என்றால் இடுப்பில் கை வைத்து கபிலனை முறைத்துக் கொண்டு.
“நான் அன்னைக்கே சொல்லிட்டேன். முதல்ல வேணா நீயும் நானும் ஃபிரண்ட்ஸா பழகி இருக்கலாம். ஆனா நாள் போகப் போக எனக்கு அந்த மாதிரி எண்ணமே மனசுல வரல. நீ இன்னமும் அப்படியே நினைச்சிட்டு இருந்தா, அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது” என்றவன், “என் பொண்டாட்டிய நான் கிஸ் பண்ணினா நீ ஏன் கோபப்படுற?” என்றான் அவளையே.
அவனை முறைத்தவள், “பொண்டாட்டி பொண்டாட்டின்னு சொல்லாதடா. எனக்கு என்னவோ போல இருக்கு” என்றால் சங்கவி.
“எப்படி இருக்கு?” என்று அவள் அருகில் நெருங்கி வந்தான்.
“டேய்! இப்போ எதுக்குப் பக்கத்துல வர? எதுவா இருந்தாலும் தள்ளி நின்னு பேசு” என்று அவனை விட்டுப் பின்னால் தள்ளி நின்றால் சங்கவி.
“இனியும் பேச என்ன இருக்கு? வந்த வேலையைப் பார்க்கலாம். இந்த நேரத்தில் என்ன பேச வேண்டி இருக்கு நமக்குள்ள? செயலில் காட்ட வேண்டாமா?” என்றவன், “சரி சரி சீக்கிரம் உன் டிரஸ்சை கழட்டு” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து சங்கவி அவனைப் பார்த்தாள்.

1 comment
Akka episode super 😍