EPISODE 31
“உன்னை பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. உன்னைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கிறது. என்னை தொடாதே. எனக்கு நீ தொட்டால் உடல் எல்லாம் நெருப்பைப் பற்றவைத்தது போல இருக்கிறது,” என்று கூறி வெளியேறப் போன துர்காவை, “என்னடி சொன்னே? நான் தொட்டால் உனக்கு எரிகிறதா? நானும் போனால் போகட்டும் என்று பார்த்தால் நீ… என்னை மிகவும் கேவலமாக நினைச்சுட்டே போற. இப்போ நான் ஒரு இடம் விடாமல் தொட்டுத் தடவுகிறேன். அதன் பிறகு மீண்டும் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லித் திட்டிக்கொள்,” என்றவன் துர்காவை நெருங்கினான்.
அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியான துர்கா, ஆதி அவள் அருகில் நெருங்கி வரவும், அவனைத் தள்ளிவிட்டு வெளியே செல்லப் போக… “எங்கடி ஓடுற?” என்றவன் அவள் சேலைத் தலைப்பை இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் அவள் அவன் மார்பின் மீது மோதி நிற்க, அவளை அப்படியே இழுத்த வேகத்தில் தன் கையில் தூக்கிப் படுக்கையில் போட்டான்.
படுக்கையில் துர்காவைப் போட்டவன், அவள் எழுந்திருக்கப் போக, அவளைத் திரும்பவும் படுக்க வைத்து சட்டென்று அவள் மேல் படுத்துவிட்டான். அவன் செயலில் அதிர்ச்சியான துர்கா, “ஆதி, என்ன பண்ற? விருப்பம் இல்லாத ஒரு பொண்ணுகிட்ட இப்படி எல்லாம் நடந்துகிறியே? உனக்கு வெட்கமா இல்லையா? முதல்ல என் மேல இருந்து எழுந்திரு, ஆதி. ப்ளீஸ்,” என்று கெஞ்சினாள்.
“இப்போதான் அவ்வளவு திமிரா பேசின. இப்போ நான் இப்படி எல்லாம் பண்ணுவேன்னு தெரிஞ்சதும் கெஞ்சுற மாதிரி நடிக்கிறியாடி?” என்றவன் தாமதிக்காமல் குனிந்து அவள் இதழை சிறை செய்தான்.
துர்கா முதலில் ஆதி முத்தம் கொடுத்ததில் அதிர்ந்தாலும், பின் சுதாரித்து அவன் முதுகில் அடித்து அவனைத் தன்னிடம் இருந்து விலக்கப் போராடினாள். ஆனால் ஆதி துர்காவின் மேல் படுத்திருந்ததால் அவளால் அவனை அசைக்கக்கூட முடியவில்லை. தன்னை அடித்துக் கொண்டிருந்த துர்காவின் கையை அவன் கைகளால் இருபுறமும் இழுத்து, தன் கைகளை அவள் கைகளுடன் கோர்த்து அசையவிடாமல் இருபுறமும் அழுத்திப் பிடித்தான். துர்கா அவனிடம் தன் இதழைப் பிரிக்கத் தலையை இங்கும் அங்கும் ஆட்ட, அவன் ஒரு கையை விடுத்து அவள் தலையை அசையவிடாமல் பிடித்துக்கொண்டு முத்தத்தை தீவிரமாக்கினான்.
அவனிடம் போராட முடியாமல் வலுவிழந்த துர்காவின் கைகளும் உடலும் துவண்டு போக, இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் ஆதி இல்லை. அவள் மேல் இருந்த கோபத்தை முழுமையாக அவளிடம் காட்டிக் கொண்டிருந்தான். தான் தொடுவது தீயாய் எரிவது போல இருப்பதாக துர்கா கூறியதைக் கேட்டதில் இருந்து, ஆதிக்கு துர்காவை இதற்கு மேலும் சும்மா விட்டுவைக்க அவன் மனம் விரும்பவில்லை. இனி என்ன ஆனாலும் சரி, இவளைத் தன்னிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானமாய் தன் மனதில் முடிவெடுத்தவன், அவனுக்கு அவள் மீது என்ன உரிமை இருக்கிறது என்று அவள் கேட்ட கேள்விக்கு பதில் தரும் விதமாக, “நான் உனக்கு உரிமையானவன். நீ எனக்கு உரிமையானவள். உன் கழுத்தில் இருக்கும் தாலியே அதற்குச் சாட்சி,” என்று மனதில் நினைத்துக்கொண்டே அவள் இதழை வன்மையாகச் சுவைக்க ஆரம்பித்திருந்தான்.
ஆனால் இங்கு மீனுவின் நிலையோ வேறு மாதிரி இருந்தது. தான் காதலித்த அந்த யதார்த்தமான ஆதி இவன் இல்லை. பெண்களை மதித்து அவர்களுக்கு மரியாதையைத் தரும் ஆதி இவன் இல்லை. இவன் குணம் இதுவல்ல. இப்படிப்பட்ட ஆதி எனக்குத் தேவை இல்லை. இனிமேல் என்ன ஆனாலும் சரி, சீக்கிரமாகவே இவனிடம் இருந்து பிரிந்துவிட வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்திருந்தாள். ஆனாலும் அவள் இன்னொரு மனம், தான் காதலித்தவனே தானாக வந்து தனக்கு முத்தமிடுவதை நினைத்து சந்தோஷப்பட்டது. அவன் அருகாமையும் அவன் வாசமும் துர்காவிற்குப் பிடிக்கத்தான் செய்தது.
“சீ… மானம் கெட்ட மனதே, உனக்கு வெட்கமாக இல்லை? உன்னை ஒரு காதலியாக வேண்டாம்… ஏன், அவன் மனைவியாகக்கூட எண்ணாமல், நான் கோபத்தில் சொன்ன ஒரு வார்த்தைக்காக என்னை சித்ரவதை செய்ய நினைக்கும் ஆதி இவன். உனக்காக ஒரு நண்பனாகக்கூட இருக்க நினைக்காத ஆதி இவன். இப்படிப்பட்ட எண்ணம் எல்லாம் உன் காதலன் ஆதிக்குத் துளியும் கிடையாது. உன் காதல் என்றோ செத்துப்போய்விட்டது,” என்று இப்படி எல்லாம் நினைத்துக்கொண்டு, அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாமல் தன்னையே நொந்துகொண்ட துர்காவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்துகொண்டிருந்தது.
ஆதி துர்காவிற்கு முத்தம் கொடுத்துக்கொண்டே மேலும் மேலும் தன் பாரம் முழுவதையும் அவள் மேல் போட்டு, அழுதுகொண்டிருந்த துர்காவிற்கு மூச்சுவிடக்கூட இடம் கொடுக்காமல் அவள் இதழைச் சுவைத்தான். அவன் வெறியில் அவள் உதட்டைக் கடித்துவிட, அவள் சூடான ரத்தம் அவன் நாவில் சுவையை கூட்ட, அவன் உடல் சூட்டை அது அதிகப்படுத்த, அவன் கைகள் தானாக அவள் கைகளில் இருந்து விடுபட்டு அவன் உடலில் ஊர்வலம் செய்ய ஆரம்பித்தது.
அவன் கைகள் அவள் இடுப்பில் இருந்து ஒவ்வொரு படியாக மேலே உயர, அவள் சருமத்தின் மென்மையை அவன் கைகள் உணரவும், அவளை இப்போதே தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற வேகம் அவனுக்குள் தோன்ற, இடுப்பில் இருந்த கை மேலே ஏறி, அவள் மென்மையை சேலையோடு சேர்த்து முதல் முறையாகத் தொட… ஆதி அவள் மென்மையின் மென்மையில் பித்தனானான். அவன் கை அவள் இடது மார்பை வன்மையாகத் தீண்ட, அவன் தன் மார்பில் கை வைத்ததும் அதிர்ச்சியில் உறைந்த துர்கா, அவன் கைகளை தன் மீதிருந்து விலக்க நினைக்க, அவன் தன் மார்பில் வைத்திருந்த கையை விளக்க நினைத்து அவன் கையைப் பிடித்துக்கொண்டு, ‘வேண்டாம்’ என்பது போலவே தலையை ஆட்டி அவன் விழிகளை கண்ணீருடன் பார்த்தாள். அதே நேரம் கண்களில் கோபமும் காமமும் சிறிதும் குறையாமல் துர்காவின் கண்களை பார்த்த ஆதிக்கு, அவள் கண்களில் தெரிந்த வலி அப்பட்டமாகக் காட்ட, அவன் மூளைக்குள் யாரோ சம்மட்டியால் அடித்தது போல அவனுக்கு உரைக்க, சட்டென்று அவளை விட்டு விலகியவன் எழுந்தான். தான் நடந்துகொண்டதை நினைத்து தன்னைத் தானே கடிந்துகொண்டவன், துர்காவைத் திரும்பியும் பாராமல் தன் உடல் சூட்டைக் கட்டுப்படுத்திக்கொள்ள பாத்ரூமிற்குள் நுழைந்தான்.
அவன் பாத்ரூம் சென்று கதவை சாற்றியதைப் பார்த்த துர்கா, அவன் விட்டுச் சென்ற அதே நிலையில் படுத்திருந்தவள், எழுந்திருக்கக்கூட மனம் இல்லாமல் தன் கைகளால் முகத்தை மூடி, ஓவென்று கத்தி அழ ஆரம்பித்தாள்.
துர்கா அழுவதை பாத்ரூமில் இருந்து கேட்டவனுக்கு இதயம் ஏனோ கனத்தது. தன் மீதே தனக்கு கோபம் வர, பாத்ரூம் சுவற்றில் ஓங்கிக் குத்திக்கொண்டே இருந்தான். தனக்குத் தண்டனையாக இது போதாது என்று நினைத்தவன், அங்கிருந்த கண்ணாடியில் ஓங்கிக் குத்த, அது சுக்குநூறாக உடைந்து சிதறியது. அவன் கையையும் பதம் பார்த்திட, கைகளில் இருந்து ரத்தம் வழிந்தது.
அழுது கொண்டிருந்த துர்கா, பாத்ரூமிற்குள் ஏதோ உடையும் சத்தம் கேட்கவும் பதறியவள், படுக்கையில் இருந்து இறங்கி பாத்ரூம் கதவைத் தட்டினாள். உள்ளிருந்த ஆதிக்கு அவள் கதவு தட்டும் சத்தம் கேட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக, உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் தெரிந்த காயங்கள் நிறைந்த தழும்புகளும், கொப்புளங்களும் நிறைந்த தன் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். ‘இந்த முகம் தானே இவளுக்குப் பிடிக்கவில்லை? இதனாலதானே அவள் என்னை வெறுத்து ஒதுக்குகிறாள்? இந்த முகத்தையே இவளுக்குப் பிடிக்க வைத்து இவளை என் மீது காதல் கொள்ள வைக்கிறேன்,’ என்று மனதிற்குள் சபதம் எடுத்துக்கொண்டான்.
கதவு தட்டியும் உள்ளிருந்து எதுவும் சத்தம் கேட்காமல் இருக்கவும் பயந்துபோன துர்கா, அழுதுகொண்டே “ஆதி… ஆதி… என்ன ஆச்சு? ஏன் கதவைத் திறக்க மாட்டேங்குற? கதவைத் திற ஆதி,” என்று கத்திக்கொண்டே இருக்க, அவள் சத்தம் கேட்டு தன்னிலை வந்த ஆதி, தன் கைகளைக் கழுவிக்கொண்டு முகத்தையும் கழுவி விட்டு கதவைத் திறந்தான்.
அவனை கேள்வியுடன் பார்த்த துர்கா, “ஆதி, ஏதோ உடைந்த சத்தம் கேட்டது,” என்று கேட்டுக்கொண்டே பாத்ரூமிற்குள் எட்டிப் பார்க்க, அங்கே கண்ணாடி உடைந்து சிதறிக் கிடந்தது. அதைப் பார்த்ததும் பதறிய துர்கா, ஆதியை மேலிருந்து கீழாகப் பார்க்க, அவன் என்னதான் கைகளைக் கழுவி இருந்தாலும் கண்ணாடி கிழித்த இடத்தில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டு தரையில் விழுந்துகொண்டிருந்தது.
இதைப் பார்த்த துர்கா பயந்துவிட்டாள். “என்ன ஆதி இது? உன் கையில் இருந்து ரத்தம் வருகிறது?” பதறிக்கொண்டே அவன் கைகளைப் பிடித்து அழுதுகொண்டே பார்க்க, ரத்தம் நிற்காமல் வழிந்துகொண்டு இருக்க, அவன் கைகளைப் பிடித்து இழுத்து வந்தவள், அவனை மெத்தையில் அமர வைத்துவிட்டு, பதட்டத்துடன் அந்த அறையில் எதுவும் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்கிறதா என்று தேடினாள். கடைசியில் கதவின் அருகில் இருந்த ஒரு அலமாரியில் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸைப் பார்த்ததும் எடுத்துக்கொண்டு வேகமாக வந்து, அவன் கால் அருகில் முட்டி போட்டு அமர்ந்தவள், அவன் கைகளில் வழிந்த ரத்தத்தைச் சுத்தம் செய்து, காயத்திற்கு மருந்து போட்டு, அழுதுகொண்டே கட்டு போட்டுக்கொண்டிருந்தாள்.
‘தான் தொட்டால் எரிகிறது என்று சொல்லி விலகிப் போக நினைப்பவளா இவள்? தன் கையில் வழிந்த ரத்தத்தைப் பார்த்து பதறிப்போய் அழுதுகொண்டு இவ்வளவு அக்கறையாகத் தனக்கு மருந்து போட்டு விடும் துர்காவை’ பார்த்துக்கொண்டிருந்த ஆதி, ‘இவளுக்கு என் மேல் பிரியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது வெறும் மனிதாபிமான அடிப்படையில் அவள் எனக்குச் செய்யும் முதலுதவி இல்லை. துர்காவின் மனதில் கண்டிப்பாக எனக்கென்று ஒரு இடம் இருக்க வேண்டும். இவள் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் என்னை வெறுப்பது போலவே நடிக்கிறாள்,’ என்று நினைத்தவன், அந்தக் காரணத்தைக் கண்டுபிடித்து அவளுக்கு என் மேல் இருக்கும் காதலை அவள் வாயாலேயே சொல்ல வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டவன் அவளையே விழி அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்குக் கட்டு போட்டு முடித்துவிட்டு நிமிர்ந்து ஆதியைப் பார்க்க, அவன் தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றதும் சட்டென்று எழுந்து சென்றவள், கடுப்போடு எடுத்த பொருட்களை எல்லாம் அங்கேயே வைத்துவிட்டு வந்தவள், பாத்ரூம் சென்று உடைந்த கண்ணாடித் துகள்களைக் கிளீன் செய்யப் போக… “எங்கே போற?” என்றான் ஆதி. “கண்ணாடியெல்லாம் பாத்ரூம்ல சிதறி இருக்கு. அதை கிளீன் பண்ண போறேன்,” என்றாள்.
“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நான் ரூம் சர்வீஸ்க்கு கால் பண்ணி சொல்றேன். அவங்க வந்து கிளீன் பண்ணிக்குவாங்க,” என்றான். “இல்லை, பரவாயில்லை. அவங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? நானே கிளீன் பண்றேன்,” என்று உள்ளே செல்லப் போக, எழுந்து வந்து அவள் கையைப் பிடித்து இழுத்தவன், “நான் சொல்வதைக் கேட்கவே கூடாது என்று முடிவில் இருக்கியா? நீ கிளீன் பண்ண போய் உன் கையெல்லாம் காயம் ஆகணுமா? அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அவர்களை அழைத்து நான் சொல்லிக்கொள்கிறேன். நீ பேசாமல் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு,” என்றான் கனிவாகச் சொல்லிவிட்டு, ரூம் சர்வீசிற்கு கால் செய்து விஷயத்தைச் சொல்லிவிட்டு போனை வைத்தான்.
இவ்வளவு நேரம் கடுமையான கோபத்துடன் இருந்தவனா இவன்? இப்போது எவ்வளவு கனிவாகப் பேசுகிறானே, என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் துர்கா.
ரூம் சர்வீஸிலிருந்து வந்து கிளீன் செய்துவிட்டுப் போக துர்காவின் போன் அடித்தது. யார் என்று எடுத்துப் பார்க்க விசாலாட்சிதான் அழைத்திருந்தார். போனை அட்டென்ட் செய்து, “ஹலோ அத்தை,” என்றால். “என்ன டா கண்ணு பண்ற? நான் எதுவும் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றார். “அதெல்லாம் ஒன்றும் இல்லை அத்தை. நான் சும்மாதான் இருக்கேன்,” என்றால் துர்கா.
“சரி டா கண்ணு… உனக்கும் ஆதிக்கும் சாயங்காலம் அப்புறம் காலையில் போட்டுக்கொள்வதற்கு டிரஸ்ஸும், நகைகளும் கொண்டு வந்திருக்கேன். வெளியேதான் நிற்கிறேன்,” என்றார். “என்ன அத்தை? நீங்க முதல்லயே இதையெல்லாம் சொல்லியிருக்கணும்,” என்றவள் எழுந்து செல்ல, அவள் செல்வதைப் பார்த்த ஆதி என்ன என்பது போலவே துர்காவைப் பார்க்க, “அத்தை வெளியே நிக்கிறாங்க,” என்றாள் தயங்கியபடியே. “ம்ம்ம்… சரி போ…” என்றான். ‘இவன்கிட்ட யாரு பெர்மிஷன் கேட்டா இப்போ? அதெல்லாம் ஆபீஸ்ல மட்டும் வெச்சுக்கிட்டா போதும். வீட்லையுமா?’ என்று முனகினாள்.
சோபாவில் சென்று அமர்ந்த ஆதி, “ஆபீஸ், வீடு எதுவா இருந்தாலும் என்கிட்ட கேட்டு தான் நீ செய்யணும், புரியுதா?” என்றான் அழுத்தமாக அவளைப் பார்த்து. ‘அவனுக்கு நான் பேசியது கேட்டுவிட்டதோ’ என்று நினைத்தவள் எதுவும் பேசாமல், “சரி” என்று தலையை ஆட்டிவிட்டு, “இப்போ நான் போய் கதவைத் திறக்கவா? இல்லை வேணாமா?” என்றாள் வேண்டுமென்றே. அவளை ஆதி முறைக்க, அவள் அவனை முறைத்துவிட்டு, “ஒவ்வொண்ணுக்கும் உன்கிட்ட கேட்டுட்டு எல்லாம் என்னால செய்ய முடியாது,” என்று அவனை முறைத்துவிட்டு கதவைத் திறந்தாள்.
வெளியில் சிரித்த முகமாக விசாலாட்சி நின்றிருக்க, அவரைப் பார்த்துவிட்டு உள்ளே அப்படியே திரும்பிப் பார்த்த துர்கா, ஆதியைப் பார்த்துவிட்டு அவன் அம்மாவையும் பார்க்க, “எப்படி அத்தை உங்களுக்குப் போய் இப்படி ஒரு பிள்ளை? நீங்க எப்படி சிரிச்ச முகமா சந்தோஷமா இருக்கீங்க? உங்க மகனும் தான் இருக்காரு, எப்ப பார்த்தாலும் மூஞ்சி தூக்கிவச்சுட்டு ‘உர்..’ன்னு இருக்காரு,” என்றாள் வேண்டுமென்று.
“அதுதான் உன்னை கல்யாணம் பண்ணி வச்சிருக்கேனே. நீ வந்து என் மகனை மாத்திட்டு இருக்கிற நம்பிக்கையிலதான். என்ன மாதிரி அவனையும் சிரிச்ச முகமா மாத்திக்கிடுவே தங்கம்,” என்றவர் ஆதியைப் திரும்பிப் பார்க்க, அவன் இவர்கள் இருவரையும் முறைத்துக்கொண்டு இருந்தான். “ஏண்டா, துர்கா சொன்ன மாதிரி இப்படித்தான் மூஞ்சி உம்முன்னு வச்சுக்கிட்டே இருப்பியா? கொஞ்சம் சிரியேன், உன் முகமும் சிரிச்சுப் பாரு எவ்வளவு அழகா இருக்கும்,” என்றார் விசாலாட்சி.
“போதும் போதும், உங்க மருமகள் கூட சேர்ந்துட்டு நீங்களும் என்னை எதுவும் சொல்லாதீங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு,” என்று எழுந்து வெளியேப் போக, “இவனுக்கு எங்க வந்தாலும் வேலை வேலை. புதுசா கல்யாணம் ஆயிருக்கே. பொண்டாட்டி கூட நேரம் செலவழிச்சு அவளை நல்லாப் பார்த்துக்க வேணாமா?” என்றவர் துர்காவிடம் திரும்பி, “இந்தாடா, உனக்கும் அவனுக்கும் டிரஸ். அப்புறம் நீ நைட், காலைல போட்டுக்க நகை எல்லாம் வச்சிருக்கேன். நல்லா அழகா ரெடி ஆகி இதெல்லாம் போட்டுட்டு ராணி மாதிரி வரணும்,” என்றார். “சரி அத்தை, அப்படியே வரேன்,” என்று துர்கா கூற, அவர் எதுவும் பேசாமல் துர்காவையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.
“என்ன அத்தை அப்படிப் பாக்குறீங்க?” என்றால் துர்கா. “உனக்கும் அவனுக்கும் ஏதாவது பிரச்சனையா டா?” என்றார். “இல்லையே, ஏன் அத்தை இப்படி கேட்கிறீங்க?” என்றால் துர்கா.
“பொய் சொல்லாதடா, ஒரு அம்மாவுக்குத் தெரியாதா தன் பொண்ணோட முகத்தை பார்த்ததுமே என்னனு? கண்டு பிடிக்க மாட்டாங்களா என்ன? நீ என் மருமகளா இருந்தாலும் நான் உன்னை என் மகள் மாதிரிதான் நினைச்சுட்டு இருக்கேன். உன் முகமே சரியில்லையே. உன் முகம் அழுது நல்லா வீங்கி இருக்கு. உன் உதட்டில் வேற காயமா இருக்கு. இதெல்லாம் பார்க்கும் போது எனக்குத் தெரிஞ்சிருச்சு. அதனாலதான் ஆதி இருக்கிறப்ப எதுவும் கேட்க வேண்டாம்னு விட்டுட்டேன்,” என்றவர், “என்ன ஆச்சுடா?” என்று கேட்க, அவர் இதெல்லாம் கண்டுபிடித்துவிட்டார் என்று நினைத்த துர்கா என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக நின்று இருக்க, அவள் அருகில் வந்து நின்றவர் அவள் தலையை வாஞ்சையாகத் தடவி கொடுத்துவிட்டு, “என்னடா நான் இப்படி சொல்றேன்னு நீ நினைக்காத டா. ஆதி கொஞ்சம் கோபக்காரன் தான். அவனுக்குப் பிடிக்காத மாதிரியோ அல்லது அவனுக்குக் கோபம் வர்ற மாதிரி ஏதாவது ஒரு விஷயத்தைப் பேசிட்டோம்னா, அவன் அதை பிடிச்சுக்கொண்டு ரொம்பக் கூப்பிடுவான். அதை மனசுல வச்சுட்டு இருந்துட்டு, ரொம்ப நாள் கழிச்சாலும் அதை விடாமல் பிடிச்சுட்டு அதுக்கான தண்டனை கொடுத்துட்டுத்தான் மறு வேலை பார்ப்பான். நானும் எவ்வளவு சொல்லிப் பார்த்துட்டேன் இந்த விஷயத்தில் இப்படி எல்லாம் இருக்காதுன்னு. ஆனா அவன் மாத்திக்கிற மாதிரியே தெரியல. ஆனா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறணும்னு நான் நம்பிக்கையில் இருக்கேன். அதுக்கு முக்கிய காரணமே நீதான். நீ கண்டிப்பா அவனை மாத்தி விடுவாய் என்று நம்புறேன்டா. எனக்காக கொஞ்ச நாள் அமைதியா போடா. பிறகு உன்னைப் பத்தி நல்லாப் புரிஞ்சுக்கிட்டானா, அவன் உன் காலடியில் இருப்பான். அவனுக்கு ஒருத்தரைப் பிடிச்சுப் போயிருச்சுன்னா, யாரு நினைச்சாலும் அவங்களை எங்கேயும் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டான் டா,” என்றார்.
விசாலாட்சி கூறியதெல்லாம் கேட்டு அமைதியாக இருந்த துர்கா, மனதிற்குள் சற்று முன் அவனைப் பற்றிய எண்ணம் அவளுக்குத் தோன்ற, ‘இப்போதுதான் இவனை விட்டுப் பிரிந்து போக வேண்டும் என்று நினைத்தேன். ஆனா அது இந்த மாதிரி இப்படி சொல்றாங்க. நான் ஆதியை விட்டுப் பிரிந்து போறப்ப அத்தையோட மனசு எவ்வளவு கஷ்டப்படுமோ? கடவுளே… இவங்களுக்கு நீதான் தைரியத்தைக் கொடுக்கணும்,’ என்று மனதில் கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்.
“என் மனசுல இருக்குறத நான் சொல்லிட்டேன் டா. எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க,” என்று விசாலாட்சி கூற, “அத்தை, அப்படி எல்லாம் நீங்க சொல்லாதீங்க. நீங்க எனக்கு அம்மா மாதிரி. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்டுக்குவேன். நான் பொறுமையா போகிறேன் அத்தை. நான் இனிமேல் ஆதிகிட்ட பார்த்து நடந்துக்கிறேன்,” என்று கூறினாள் துர்கா.
அவளைக் கட்டிக்கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டவர், “சரிடா, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, அதுக்கப்புறம் சாயங்காலம் ரெடி ஆகி சீக்கிரமா வந்துருங்க. ரிசப்ஷனுக்கு போலாம்,” என்றவர், “அதே மாதிரி நான் கீர்த்திகாவுக்கும், அம்மா, அப்பாவுக்கும் எல்லாத்துக்கும் டிரஸ், நகை எல்லாம் கொடுத்துட்டேன் டா, சரியா? நீ அவங்க கிட்டயும் ஒரு வாட்டி ஏதாவது வேணும்னா கேட்டுக்கோ. அவங்க என்கிட்ட ஏதாவது வேணும்னு சொல்ல தயக்கப்படுவாங்க. நீ போய் கேட்டுக்க அவங்க கிட்ட எதுவும் வேணுமா என்னன்னு. நம்மள நம்பி வந்திருக்காங்க. அவங்களுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது, சரியா?” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
அறையை விட்டு வெளியே வந்த விசாலாட்சி, அங்கே ஆதி வெளியே நின்று கொண்டிருந்திருப்பதைப் பார்த்தவர், அவன் அருகில் வந்து, “கண்ணா, ஏதோ வேலை இருக்குன்னு வெளிய வந்த. ஏன்டா இங்கே நின்னுட்டு இருக்கே?” என்று கேட்க, “அது எல்லாம் ஒண்ணும் இல்லம்மா. போன் பேசிட்டு வந்தேன். போன் பேசிட்டேன் அப்படியே சும்மா நின்னுட்டேன்,” என்றான் ஆதி.
அவனிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவன் கையைப் பார்க்க, அவன் கையில் கட்டுப் போடப்பட்டிருக்க, விசாலாட்சி பதறிப்போய், “டேய் கண்ணா, என்னடா ஆச்சு உன் கையில? காயம்… கட்டு போட்டு இருக்கு. எப்படி அடி பட்டுச்சு?” என்று கேட்டார். “அது ஒண்ணும் இல்லம்மா. பாத்ரூம்ல கண்ணாடி உடைந்து கையை கிழிச்சுடுச்சு, அதுதான்,” என்றான் கையைப் பார்த்துக்கொண்டு. “சரிப்பா, கொஞ்சம் கவனமா இரு சரியா?” என்றால் விசாலாட்சி. “சரிம்மா,” என்றான் ஆதி.
“சரிப்பா, உனக்கு டிரஸ் துர்காகிட்ட கொடுத்து இருக்கேன். சாயங்காலம் ரெண்டு பேரும் நல்லா டிரஸ் பண்ணிட்டு ரிசப்ஷனுக்கு வந்துருங்க. உங்க ரெண்டு பேரையும் பார்த்தா எல்லாரும் பொறாமைப்படணும் இப்படி ஒரு ஜோடியானு…. சரியா? அவ்வளவு அழகா வரணும் ரெண்டு பேரும். இதை மட்டும் செய் டா,” என்றவர், “சரி, அம்மா ரூமுக்கு போறேன்,” என்று செல்லப் போனவர், திரும்பி ஆதியிடம் வந்து, “கண்ணா, அம்மா ஒண்ணு சொன்னா நீ என்ன தப்பா எடுத்துக்க மாட்டியே?” என்றார்.
“என்னம்மா இப்படிச் சொல்றீங்க? நீங்க ஏதாவது சொல்லுங்க, நான் அப்படி ஏதாவது உங்களுக்கு நடந்துக்குவேன்? அதெல்லாம் இல்ல, என்னன்னு சொல்லுங்க நான் கேட்கிறேன்,” என்றான் ஆதி.
அவன் சொன்னதைக் கேட்டு சந்தோஷப்பட்ட விசாலாட்சி, “நம்மளை நம்பி ஒரு பொண்ணு, சொந்த பந்தத்தையும் எல்லாரையும் விட்டுட்டு உன் கூட வந்திருக்கா அப்படின்னா, அவளுக்கு உன் மேல அவ்வளவு நம்பிக்கை இருக்குனு அர்த்தம். அப்படி நம்மள நம்பி வந்த பொண்ணுகிட்ட நம்மளோட கோபத்தை, ஈகோவை எதையும் காட்டக்கூடாது. அவங்களை நம்ம நல்லாப் பார்த்துக்கணும்கிறது மட்டும்தான் இருக்கணும். ஏன்னா நம்மள நம்பி வந்திருக்கவங்களும் நம்ம தானே பார்த்துக்கணும்? நீ எல்லார்கிட்டயும் எப்படி நடந்துக்குவேன்னு எனக்கு அம்மாவுக்குத் தெரியும். அதே போலத்தான் துர்காகிட்டயும் நடந்துக்கணும்னு நினைக்கிறேன். ஆனா மத்தவங்களும் துர்கா ஒண்ணு கிடையாது. அவ உன்னை கல்யாணம் பண்ணி இருக்கா. உன் வாழ்க்கை முழுக்க உன் கூட வரப்போறா. அப்போ அவகிட்ட நீ எப்படி இருக்கணும்னு உனக்கு தெரிஞ்சுக்க வேண்டாமா? அவளை கொஞ்சம் பார்த்து நடத்துடா, பாவம் டா அந்த பொண்ணு. அழுது முகமெல்லாம் வீங்கி, ரொம்ப மனசு வாடிப்போய் இருக்கா. அவ முகத்தைப் பார்க்கவே எனக்குக் கஷ்டமா இருக்கு. இதுவே நம்ம வீட்ல ஒரு பொண்ணு இருந்து அவளை கல்யாணம் பண்ணிக் கொடுத்த இடத்தில் இப்படி இருந்தா அவளைப் பார்க்கும்போது நமக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்? துர்காவோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவளை இந்த மாதிரி பார்த்தா எவ்ளோ கஷ்டப்படுவாங்கன்னு கொஞ்சம் யோசி டா…. நீ கொஞ்சமாவது உன் கோபத்தை குறைச்சுக்க,” என்று கூறிவிட்டு வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றார்.
அவர் செல்வதையே எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த ஆதி, அவன் அம்மா கூறியது எல்லாம் கேட்டதும், ‘என் அம்மா வந்து என்னிடம் ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள் என்று சொல்லும் அளவுக்கு நான் நடந்துவிட்டேனா?’ என்று தனக்குத் தானே கேள்வி எழுப்பியவன், ‘இனியும் அவரை சங்கடப்படுத்தும் படி நான் நடந்துகொள்ளவே கூடாது,’ என்று மனதில் நினைத்துக்கொண்டு அறைக்குள் சென்றான்.
அவன் உள்ளே சென்று பார்க்கும் போது துர்கா கட்டிலில் ஒரு ஓரமாகப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து அவள் முகத்தை நன்றாக உற்றுப் பார்க்க, அவள் நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் அம்மா சொன்னது போலவே அவள் முகம் எல்லாம் அழுது வீங்கி இருந்தது. துர்கா அவ்வாறு பார்க்கவே ஆதிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இனிமேல் துர்காவிடம் என் கோபத்தைக் காட்டிக்கொள்ளவே கூடாது என்று நினைத்தவன், அவள் முகத்தைப் பார்த்தவரே அவள் அருகில் படுத்து அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தவன் அப்படியே அவனும் தூங்கிப் போனான்.
