EPISODE 53
துர்காவை டாக்டர் பார்த்துவிட்டுச் சென்றதும், அறைக்குள் வரத் தயங்கியவன், ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே வந்த ஆதி துர்காவைப் பார்க்க.
அவள் படுத்திருந்த கோலம் கண்டவன் அதிர்ந்து, என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே உறைந்து போய் நின்றான்.
அவள் சேலை முட்டிக்கு மேல் தூக்கப்பட்டு, அவள் கால்கள் இரண்டும் தெரிய, அவள் இடுப்பில் இருந்த சேலை விலகி, அவள் மொத்த முதுகும், இடுப்பும் அந்த அறையில் இருந்த நியோன் விளக்கு ஒளியில் மேலும் பிரகாசமாக, பளபளப்பாக அவள் இடுப்பு வெளியே தெரிந்தது.
அவள் இடுப்பு மொத்தமும் வெளியே தெரிய, அதையும், காலில் தூக்கி இருந்த சேலையையும் சரி செய்யத் துர்கா படுத்துக்கொண்டே போர்த்திக் கொள்ளப் போராடிக் கொண்டு இருந்தாள்.
அவள் நிலைமை உணர்ந்த ஆதி, அவளை இந்த நிலையில் ரசிப்பது சரி அல்ல என்று தன் தலையைக் குலுக்கிக்கொண்டவன், நேராக அவள் அருகில் வர, ஆதி தன் அருகில் வருவதை உணர்ந்த துர்கா அவனிடம் தன்னை மறைத்துக்கொள்ளப் போராட வேண்டி, தன் சேலையைச் சரி செய்ய வேகமாக எழுந்தவள், சுளுக்குப் பிடித்த இடத்தில் அசைவு கொடுக்கவும், வலியில் “அம்மா…” என்று கத்திக்கொண்டே மீண்டும் படுத்துக்கொண்டாள்.
அவள் சிரமப்படுவதைக் கவனித்த ஆதி, “துர்கா… இப்போ எதுக்கு ஸ்ட்ரெயின் பண்ற? நான் தான் இருக்கேன்ல, அப்புறம் எதுக்கு இப்படிப் பண்ற? உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட சொல்லு, நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்றான்.
“இல்லை ஆதி, பரவாயில்லை, நானே பார்த்துக்கிறேன்” என்று எழப் போக, வலி தாங்காமல் “ஆ…” என்று கத்தியவள் மீண்டும் படுத்துக்கொண்டாள்.
“இப்போ எதுக்கு துர்கா வீணா எழுந்து உன்னை நீயே ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற? இப்போ நான் என்ன புதுசாவா உன்னைப் பார்க்குறேன்? ஏற்கனவே கல்யாணம் ஆன பிறகு நான் தான் உன்னை முழுசாப் பார்த்துட்டேனே” என்றான் ஆதி.
அவன் இவ்வாறு கூறியதும் அதிர்ச்சியில் திரும்பி அவனைப் பார்க்க, அவன், “என்ன, நான் சொல்வது சரி தானே?” என்று தன் புருவத்தை உயர்த்தி கேட்டவன். “உனக்கு இப்போ என்ன வேணும் துர்கா… சொல்லு” என்றான்.
அவள் ‘ஒன்றுமில்லை’ என்று தலையை ஆட்டினாள். “ஒன்றுமில்லாமலா அசைஞ்சுட்டே படுத்திருக்க?” என்றவன், “சொல்லு துர்கா… என்னனு சொல்லு” என்றான்.
“அது… அது… வந்து ஆதி, எனக்கு…. எனக்கு…. பாத்ரூம் போகணும். யாரையாவது வரச் சொல்றியா எனக்கு ஹெல்ப் பண்ண?” என்று கேட்டாள் தயங்கிக் கொண்டே.
“இதற்கு எதுக்கு இவ்ளோ தயங்குற துர்கா… என்கிட்ட சொன்னா நானே கூட்டிட்டு போவேன்ல?” என்றவன் அவளைத் தூக்கப் போக, “ஆதி…. ஆதி, வேண்டாம்… யாரையாவது ஹெல்பிற்கு வரச் சொல்லேன்” என்றாள்.
“ஏன் துர்கா… நான் உனக்கு ஹெல்ப் பண்ணக் கூடாதா?” என்றான் ஏக்கமாக. “அவங்களை எல்லாம் ஹெல்ப்பிற்கு கூப்பிட்டா, அப்புறம் அம்மா கிட்ட போய் நமக்குள்ள ஏதும் பிரச்சினை என்று சொல்லிருவாங்க. அப்புறம் நீயும் நானும் கல்யாணம் ஆகியும் இவ்வளவு நாள் ஆகியும் நீயும் நானும் அன்யோன்யமாக இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்துவிடும். வீணா அவங்க நமக்காக வருத்தப்படுறதை நான் விரும்பலை” என்றான்.
அவன் இப்படிச் சொன்னதும் துர்கா, ‘அவன் நம்மை இன்னும் தள்ளி வைத்துத் தான் பார்க்கிறான் போல’ என்று நினைத்தவள்.
“நாம அன்யோன்யமாக இல்லை என்பது என்றாவது அவர்களுக்குத் தெரியத்தானே போகிறது? தெரிந்தால் எப்படியும் கவலைப்படத்தானே போகிறார்கள். அதை இப்போவே தெரிந்து கொள்ளட்டும்” என்று சொன்னவள், “பரவாயில்லை, அவங்களையே வர சொல்லு ஆதி” என்றாள் துர்கா.
“அவங்களுக்கு என்றாவது இல்லை என்றைக்குமே அந்தக் கவலையை நான் தர விரும்பவில்லை” என்றான் ஆதி. அவனைப் புரியாமல் பார்த்த துர்காவை, “என்ன பார்க்கிறே? இவ்வளவு நாள் தான் நமக்குள்ள அன்யோன்யம் இல்லாமல் இருந்தது, இனிமேல் அதற்குப் பஞ்சமே இருக்காது” என்றவன், அவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டு போய் பாத்ரூமில் விட்டுவிட்டு வெளியே வந்து கதவைச் சாற்றிக் கொண்டான்.
அவன் சொல்வதை எல்லாம் நம்ப முடியாமல் திகைப்பிலேயே இருந்த துர்காவுக்கு, ஆதி சொன்னது காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. அவன் சொன்னதற்கு என்ன அர்த்தம்? ஏன் இப்படிச் சொன்னான்? என்று யோசித்தவளுக்கு ஏதோ புரிந்தது போலத் தோன்ற, அவள் வயிற்றில் ஏதோ பட்டாம்பூச்சி பறப்பது போல இருந்தது அவளுக்கு.
சிறிது நேரம் கழித்துக் கதவைத் தட்ட, ஆதி கதவைத் திறக்க, துர்கா தடுமாறிக் கொண்டே நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் உள்ளே இருந்தே சத்தம் போட்டிருக்கலாமே என்றவன், அவளை அப்படியே கையில் தூக்கியவன் நேராகப் பெட்டிற்குப் போக, “ஆதி அங்கே இல்லை, அங்கே” என்று தன் கையை நீட்டினாள். அவள் நீட்டிய திசையைப் பார்க்க, டிரெஸ்ஸிங் ரூம் இருந்தது.
ஆதி “சரி” என்று தலையை ஆட்டியவன், அவளை டிரெஸ்ஸிங் ரூமிற்குள் அழைத்துச் சென்றவன், அங்கிருந்த சோபாவில் அவளை அமர வைத்தவன், “எந்த டிரஸ் வேணும்னு சொல்லு நான் எடுத்துக் தரேன். நீ எழுந்து இங்கேயும் அங்கேயும் நடக்காதே” என்றான்.
அவனை அதிசயம் போலப் பார்த்துவிட்டு, அவள் கையை உயர்த்தி, தான் இரவு அணிவதற்காக எப்போதும் போட்டுக்கொள்ளும் பனியனும், ஷார்ட்ஸும் காட்டி, அதற்குள் இருக்கும் ஒரு செட்டை எடுத்துத் தரச் சொன்னாள்.
அவள் சொன்ன இடத்தில் இருந்த டிரெஸ்ஸில் ஒன்றை எடுத்து அவள் கையில் கொடுத்தான். “நீயே போட்டுக்குவியா இல்லை நான் வேணும்னா உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?” என்றான்.
அவன் அப்படிச் சொன்னதும், கையில் இருந்த உடையைத் தன் நெஞ்சில் வைத்தவாறு, “நானே போட்டுக்கிறேன். நீ முதல்ல வெளியே போ… ஆதி” என்று துர்கா அவனை விரட்ட.
“நான் இப்போ என்ன சொன்னேன், நீ இப்படிக் கோச்சுக்கறே? உனக்கு நான் ஹெல்ப் பண்ணாம வேற யாரு ஹெல்ப் பண்ணுவா…” என்று ஆதி பாவமாகக் கேட்பது போலத் துர்காவைப் பார்க்க.
“நானே மாத்திக்கிறேன். முதல்ல நீ வெளியே போ ஆதி” என்று கத்தினாள். “சரி சரி… கத்தாதே. நான் வெளியே வெயிட் பண்றேன். நீ டிரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு எனக்குச் சொல்லு. நீயா நடந்து வராதே” என்றவன் வெளியே சென்று கதவைச் சாற்றிக்கொண்டான்.
அவன் சென்றதும், ‘இவனுக்கு என்ன ஆச்சு? கொஞ்ச நாளாகவே ஒரு மார்க்கமாவே இருக்கான்’ என்று யோசித்துக் கொண்டே உடைகளை மாற்ற, சேலையைக் கழட்ட, அதில் குத்தி இருந்த பின்னை அவளால் கழட்ட முடியவில்லை.
இடுப்பை வளைத்துக் கையை உயர்த்தி முதுகில் குத்தி இருக்கும் பின்னை கழட்ட எவ்வளவோ முயற்சி செய்தும் அவளால் முடியவில்லை.
வெளியில் நின்றிருந்த ஆதி, ‘என்ன இவ்வளவு நேரம் ஆகியும் இவ இன்னும் கூப்பிடவே இல்லை’ என்று யோசித்தவன். “என்ன துர்கா… ஆச்சா… உள்ளே வரட்டுமா…” என்று வெளியில் இருந்து கத்த.
‘இவன் வேற அவசரப்படுத்துறானே’ என்று நினைத்தவள், வேறு வழி இல்லாமல் அவனைத் தான் கூப்பிட வேண்டும் போல என்று நினைத்தவள். ‘ஆபத்திற்குப் பாவம் இல்லை’ என்று நினைத்தவள் வேறு வழியில்லாமல், “ஆதி” என்று அவனை அழைத்தாள்.
அவனை அழைத்ததும்தான் தாமதம், அடுத்த நிமிடம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான், இதற்காகவே காத்திருப்பவன் போல.
உள்ளே வந்தவன், துர்கா இன்னும் உடை மாற்றாமல் இருப்பதைப் பார்த்தவன், “ஏன் துர்கா… இன்னும் டிரஸ் மாத்தலையா? நீ அப்படியே உட்கார்ந்திருக்கே?” என்று ஆதி கேட்க.
அவனிடம் முதுகு காட்டி லேசாகத் திரும்பி அமர்ந்தவள், தன் முதுகில் இருக்கும் ஹூக்கைக் காட்ட, அதைப் பார்த்தவன், “இதுக்குத் தான் அப்போவே நான் சொன்னே, நானே ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு” என்றவன் பேசிக் கொண்டே அவள் பின்னை கழட்ட, அவன் பின்னை கழட்டியதும் சேலைத் தலைப்புச் சட்டெனச் சரிந்து கீழே விழுந்தது.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத துர்கா, குனிந்து சேலையை எடுக்கப் போக, வேகமாகக் குனிந்ததில் மறுபடியும் பிடித்த இடத்திலேயே இடுப்புப் பிடித்துக் கொண்டது.
“ஆ….” என அவள் கத்த, “இப்போ எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை? நான் பாத்துக்கிறேன், நீ பேசாம இரு” என்று அவளை அதட்டியவன், அவளுக்கு வலிக்காமல் சேலையைக் கழற்றியவன், அவள் பிளவுஸைக் கழட்டக் கையை கொண்டு போக, சட்டெனத் தன் மார்புக்குக் குறுக்கே கையை கொண்டு சென்றவள் அவனை முறைக்க.
தன்னை முறைக்கும் அவளைப் பார்த்து குறும்பாகச் சிரித்தவன். “சும்மா சும்மா அந்தக் குட்டி கண்ணை உருட்டி முறைக்காதே துர்கா…. அப்புறம் அந்தக் கண்ணைக் கடிச்சுத் தின்னிருவேன் பார்த்துக்கோ” என்றவன்.
“சரி, நீ டிரெஸ் மாத்து, நான் இங்கேயே இருக்கேன்” என்றான். “நீ வெளிய போ ஆதி. நீ இங்கே இருந்தா நான் எப்படி டிரெஸ் மாத்துறது?” என்று துர்கா அவனை வெளியே போகச் சொல்ல.
“நான் இங்கேயே தான் நிற்பேன்” என்று கையை கட்டிக்கொண்டவன் நிற்க. “உன்னை…” என்று அவனை முறைத்தவளிடம், “நான் வெளியே போன நேரம், நீ மறுபடியும் எதுவும் பண்ணி சுளுக்கு பிடிச்சிட்டா அப்புறம் என்ன செய்றது? நான் இங்கேயே தான் நிற்பேன்” என்றான் ஆதி.
“ஆதி….” என்று அவள் கெஞ்சுவது போல அவனை அழைக்க, “சரி, நீ இவ்ளோ கெஞ்சுறதுனால நான் வேணும்னா திரும்பி நின்னுகிறேன். நீ டிரெஸ் மாத்திக்கோ” என்றான்.
அவள் அவனையே வெறி கொண்டு முறைக்க, “என்ன, வேணாமா? நான் இப்படியே நிற்கவா? நீ இப்படியே டிரெஸ் மாத்திக போறியா?” என்றான்.
“சரி, திரும்பித் தொலை. நான் டிரெஸ் மாத்துற வரை நீ இந்தப் பக்கம் திரும்பக் கூடாது” என்றாள்.
“சரி, டீல். நீ டிரெஸ் மாத்திட்டு என்னைக் கூப்பிடு. அதுவரை நான் திரும்ப மாட்டேன்” என்ற ஆதி திரும்பி நின்று கொண்டான்.
அவன் தன்னைப் பார்க்கிறானா இல்லையா என்று உறுதிப்படுத்தியவள், தன் உடைகளை வேக வேகமாக மாற்ற ஆரம்பித்தாள். அவள் அசைகையில் லேசாக அடிபட்ட இடம் வலித்தாலும், கடகடவென தான் அணிந்திருந்த ஆடைகள் அனைத்தையும் கழட்டிப் போட்டவள் இரவு உடைக்கு மாறினாள்.
துர்கா உடை மாற்றிவிட்டு நிமிரவும் ஆதி சரியாக அவள் புறம் திரும்பவும் சரியாக இருந்தது.
அவன் சரியாகத் திரும்பியதும், “ஆதி, நான் கூப்பிடாம எப்படி நான் டிரெஸ் மாற்றினதும் திரும்பினே?” என்று துர்கா கேட்டாள்.
“அதெல்லாம் அப்படிதான் எனக்குத் தெரியும்” என்றவன், அவளை அப்படியே தூக்கிக்கொண்டு போய் அவளை மெத்தையில் படுக்க வைத்தவன். அவளுக்குச் சாப்பிடக் கொண்டு வரச் சொல்லி அவளைச் சாப்பிட வைத்துவிட்டு, அவளுக்குத் தேவையான மருந்துகளைக் கொடுத்தவன், அவள் சொல்ல சொல்லக் கேட்காமல், துர்காவுக்குச் சுளுக்குப் பிடித்த இடத்தில் டாக்டர் கொடுத்த ஆயின்மென்ட்டை அவள் முட்டியிலும் இடுப்பிலும் தடவ, கூச்சத்தில் நெளிந்துகொண்டே ஆதியைப் பார்த்து, “ஆதி….. போதும்ம்…. ப்ளீஸ்” என்று அவள் நெளிந்துகொண்டே கெஞ்ச. ‘சரி, போனால் போகட்டும்’ என்று அவளை விட்டான்.
“சரி, கொஞ்ச நேரம் தூங்கு துர்கா…” என்று அவளுக்குப் போர்த்தி விட்டவன். அருகில் இருந்த சேரில் போய் அமர்ந்தவன் லேப்டாப்பில் வேலையில் மூழ்கி விட்டான்.
வேலையில் மும்முரமாக இருந்த ஆதியையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள் துர்கா. அவள் தூங்காமல் தன்னையே பார்ப்பதை உணர்ந்த ஆதி, துர்காவை நிமிர்ந்து பார்க்காமல், “என்ன துர்கா, நான் என்ன அவ்ளோ அழகா இருக்கேனா என்ன? என்னையே அப்படிப் பார்க்கிறே?” என்று கேட்டான்.
‘அடப்பாவி! என்னைப் பார்க்காமலேயே நான் என்ன பண்றேன்னு கரெக்ட் ஆஹ்… சொல்றானே’ என்று யோசித்தவள். “அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்” என்றாள் துர்கா.
தன்னிடம் அதிசயம் போலப் பேசும் துர்காவை நிமிர்ந்து பார்த்தவன், “என்ன கேட்கணும் துர்கா…?” என்றான்.
“நான் டிரெஸ் மாற்றின உடனே எப்படி நீ திரும்பிச் சரியா என்னைப் பார்த்தே?” என்று கேட்டாள்.
அவள் அப்படி கேட்டதும் லேப்டாப்பை கீழே வைத்தவன், வேகமாக அவள் அருகில் வந்து அவளைத் தூக்கியவன், நேராக டிரெஸ்ஸிங் ரூமிற்கு அழைத்துச் சென்றான்.
“இங்கே எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தே ஆதி?” என்று துர்கா புரியாமல் கேட்க. “நீ கேட்ட கேள்விக்குப் பதில் வேணுமா வேண்டாமா?” என்றான். அவன் அப்படி கேட்டதும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ‘ஆம்’ என்பது போலத் தலையை மேலும் கீழும் அழகாக ஆட்ட.
‘ஐயோ… என்ன ரொம்ப டெம்ட் பண்றாளே! நானே என்னைக் கண்ட்ரோல் பண்ண முடியாமல் என்னை நானே டைவேர்ட் பண்ணிட்டு இருக்கேன். ஆனா இவ என்னடான்னா இப்படி அழகழகா இந்தக் குட்டி முகத்தை வெச்சுட்டு எத்தனை எக்ஸ்பிரஷன் கொடுக்கிறா!’ என்று நினைத்தவன்.
அவளை முன்பு நிறுத்திய இடத்தில் இறக்கி விட்டவன், “நீ இப்படி திரும்பி நின்னு டிரெஸ் மாத்திட்டு இருந்தியா? நான் உன்னைப் பார்க்காமல் இப்படி திரும்பி நின்னேனா. அப்போ இந்தக் கண்ணாடியைப் பார்த்தேன்” என்று கூறி அவனுக்கு எதிரே இருந்த கண்ணாடியைத் துர்காவிடம் காட்ட.
அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. அவனை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்தவள். “ஆதி….” என்று கோபமாகக் கத்தியவள், “அப்போ…. அப்போ…. நீ… நீ… என்னை….” என்று அவனை முறைத்துக்கொண்டே கேட்க.
“ஆமாம் துர்கா, நான் சொன்ன மாதிரியே உன்னைத் திரும்பிப் பார்க்கவே இல்லை பார்த்தியா?” என்று குறும்பாக அவன் சிரிக்க, அவனை வெறி கொண்டவள் போல முறைத்தவள். ஆதியை அடிக்கக் கையை ஓங்க… அவளுக்குச் சுளுக்குப் பிடித்திருந்த இடம் ‘வின்…’ என்று வலியை உண்டாக்க, அவளால் முடியாமல் “அம்மா….” என்று தன் இடுப்பைப் பிடித்துக்கொண்டு நின்றவளைப் பார்த்துச் சிரித்தவன், “இதுக்குத்தான் அவசரப்படக் கூடாதுன்னு சொல்றது” என்றவன், அவள் அருகில் வந்து அவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டு போய் பெட்டில் படுக்க வைத்துப் போர்வையைப் போர்த்தி விட, அப்போதும் அவனையே முறைத்துக்கொண்டு படுத்திருந்தவளைப் பார்த்து, “இப்படியே என்னை முறைச்சுட்டு இருந்தேன்னு வை…”
“ஏற்கனவே நான் உன்னைக் கண்ணாடியில் பார்த்ததில் இருந்து என்னை நானே கண்ட்ரோல் பண்ண முடியாமல் இருக்கேன். இப்படி முறைச்சுட்டே இருந்தேன்னா அப்புறம் நடக்குற எதுக்கும் நான் பொறுப்பு இல்லை பார்த்துக்கோ” என்றான்.
“என்ன நடக்கும்?” என்றால் கோபமாக துர்கா. “என்ன வேணும்னாலும் நடக்கலாம்” என்றவன் குனிந்து, “சாம்பிள் காட்டவா?” என்றவனைப் புரியாமல் துர்கா பார்த்த துர்காவின் நெற்றியில் தன் நெற்றியை முட்டியவன், குனிந்து அவள் இதழைச் சிறை செய்தான்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத துர்கா கண்களை அகல விரித்தவள், அவனையே பார்க்க, அவன் கண்கள் மூடி துர்காவுக்கு முத்தம் கொடுப்பதில் முழுமூச்சில் இறங்கி இருந்தான்.
அவனை எவ்வளவு தடுத்தும் அவளால் முடியாமல் போகவே, ஆதியின் நெருக்கம் அவளுக்குப் பிடிக்கும் என்பதாலும், அவன் மீது அவள் கொண்ட காதலினாலும், அவனை அதற்கு மேலும் அவளிடம் இருந்து பிரிக்க மனம் இல்லாமல், அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாகக் கோர்த்துக்கொண்டு அவன் முத்தத்திற்கு இணங்கிப் போனாள்.
அவனும் அவள் இணக்கத்திற்கு ஏற்ப அவளுக்குத் தன் முத்தத்தை அள்ளி இறைத்தான்.
