EPISODE 65
கீர்த்திகா டிபார்ட்மென்டிற்கு சென்று வரலாம் என்று விக்கி சொல்ல, அவனை வலுக்கட்டாயமாக கேன்டீன் போகலாம் என்று கீர்த்தி இழுத்துச் செல்ல…
கதிர், விக்கி சோகமாக வருவதைப் பார்த்து, “நீ உன் ஆளைப் பார்க்கத் தான் காலேஜ் வந்தியா மச்சான்… நம்ம ராதாவைக் காலேஜில் ஜாயின் பண்ண வரலை அப்படிதானே” என்று சத்தமாகக் கூறி கிண்டல் செய்ய…
அவன் சொன்னதைக் கேட்டு முன்னால் சென்று கொண்டிருந்த மூன்று பெண்களும் இவர்கள் இருவரையும் திரும்பிப் பார்க்க….
“டேய், நீ கொஞ்சம் பேசாம வாடா…” என்று கதிரிடம் விக்கி கெஞ்சுவது போலக் கேட்க…. “சரி… சரி… வாடா… மச்சான் நாம போய்த் டீ.. சாப்பிடலாம்” என்று கூறி விக்கியின் தோளில் கைபோட்டு அவனை அழைத்துக்கொண்டு சென்றான்.
கேன்டீன் வந்த ஐவரும் ஒரு டேபிளில் அமர… யார் யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்ட கீர்த்தி தன் மொபைலில் ஏதோ டைப் செய்ய…
“கீர்த்திமா… எங்களுக்குச் சாப்பிட என்ன வேணும்னு கேட்டுட்டே…. நீ போய்ப் வாங்கிட்டு வரணும்… இல்லை எங்களுக்கு யாராவது வாங்கிட்டு வரணும்…. அதுவும் இல்லைன்னா யாராவது வந்து ஆர்டர் எடுக்கணும்.”
“இது எதுமே இல்லாம எங்க கிட்ட என்ன வேணும்னு கேட்டுட்டு பிறகு உட்கார்ந்து மொபைலை நோண்டிட்டு இருக்கே…” என்றான் விக்கி.
“அதுவா அண்ணா… எங்க காலேஜ்ல கேன்டீன் வந்தா… சாப்பிட என்ன வேணும்னாலும் டேபிள் நம்பர் போட்டு சாப்பிட வேண்டியதை வாட்ஸ்அப் மூலமா அனுப்பிட்டா ஆர்டரை டேபிளிற்கே கொண்டு வருவாங்க” என்றால்.
அவள் கூறியதைக் கேட்டு, “இது என்னடா… புதுசா…. இருக்கு…” என்று நினைத்த விக்கி..
ஒரு பெருமூச்சொன்றை விட்டவன்.. “ம்ஹும்…. என் ஆளைப் பார்க்க வரலாம்னு தான் உங்களை நான் இங்க கூட்டிட்டு வந்தேன். நான் எதுக்கு வந்தேன்னு என் தங்கச்சிக்குத் தெரியும். ஆனாலும் அண்ணன் வருத்தப்படுவானே, ஒருவாட்டி அவனைக் கூட்டிட்டுப் போய் உன்னோட டிபார்ட்மென்ட்டைச் சுற்றிக் காட்டலாமே. அண்ணனும் இவ்வளவு தூரம் ஆர்வமா வந்ததுக்கு இந்த ஒரு வேலையாவது செய்யலாமே…” என்று விக்கி அழுதுக் கொள்ள…
அவனைப் பார்த்துச் சிரித்த துர்கா… “டேய் விக்கி, இப்போ என்ன உனக்கு நிலானியைப் பார்க்கணும் அதானே… அதுக்கு தானே இப்படிப் புலம்பிட்டு இருக்க…”
“சரி, டீ, ஸ்னாக்ஸ் எல்லாம் வரட்டும். சாப்பிட்டுட்டு நானே உன்னை கீர்த்தியோட டிபார்ட்மென்ட்க்கு கூட்டிட்டுப் போறேன் சரியா…” என்று சொல்ல…
“துர்கா… நீ தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்…” என்று அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான்.
அனைவரும் பேசிக் கொண்டு இருக்க…. “உங்க ஆர்டர்” என்று சொல்லி டேபிளிற்கு அவர்கள் ஆர்டர் செய்ததெல்லாம் கொண்டு வந்து வைக்க…
“கீர்த்திமா பரவாயில்லையே… ஒண்ணு கூட மிஸ் ஆகாமல் எல்லாமே கரெக்டா வந்திடுச்சு… பரவாயில்லையே… இங்கே சர்வர் நல்லா வேலை பார்க்குறாங்க போல” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த ஸ்னாக்ஸை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு நிமிர்ந்தவன் வாயில் வைத்திருந்த ஸ்னாக்ஸோடு வாயை பிளந்து கொண்டு அப்படியே இருந்தான்.
அவன் எதிரே… இடுப்பில் கை வைத்து அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் நிலானி..
அவளை அங்கு எதிர்பார்க்காத விக்கி சேரில் இருந்து எழுந்து நிற்க… “என்னை பார்த்தா சர்வர் மாதிரி தெரியுதா உங்களுக்கு… எல்லாரும் இங்கே வந்திருக்கீங்க. கேன்டீன் போறோம் நீயும் வான்னு கீர்த்தி சொன்னான்னு வந்தேன்.”
“சரி வந்ததே வந்தோம், நானே ஸ்னாக்ஸ் வாங்கிக்கொண்டு வரலாம்னு ஆசையா உங்க எல்லாருக்கும் வாங்கிட்டு வந்தேன். ஆனா என்னை… என்னைப் பார்த்து எப்படி அப்படி சொல்லலாம்” என்று அவனிடம் சண்டைக்கு வர…
“ஐயோ… நிலாக்குட்டி…. நான் உன்னைப் பார்த்து சொல்லலை, இதோ இவ தான்” என்று கீர்த்தியைப் பார்க்க… “அண்ணா.. நான் என்ன பண்ணினேன்? என்னை மாட்டிவிடுறீங்க…” என்று எதுவும் தெரியாதவள் போல நடிக்க..
“தங்கச்சிமா….” என்று கீர்த்தியைப் பார்க்க… அவள் விக்கியைப் பார்த்துக் கண்ணடித்தவள், “என்ன அண்ணா… இப்படி சொல்லிட்டீங்களே…” என்று அவனிடம் பழிப்புக் காட்ட…
விக்கியை முறைத்துக்கொண்டு வந்து அவன் அருகில் காலியாக இருந்த சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தாள். அவளிடம், “நிலாக்குட்டி….” என்று கெஞ்ச… “என்னை இப்படிச் சொல்லி கூப்பிடாதீங்கன்னு எத்தனை முறை சொல்றது” என்றால் நிலானி..
“எனக்கு இப்படி கூப்பிட தான் பிடிச்சிருக்கு… அதுவும் இல்லாம உன் பேரு நிலானி….ன்னு பெருசா இருக்கு.”
“ஆனா பாரு நிலாக்குட்டி… எவ்ளோ குட்டியா க்யூட்டா.. இருக்கு. கூப்பிட எவ்ளோ அழகா இருக்கு” என்று அழகாக முகத்தை வைத்துக்கொண்டு கொஞ்சுவது போலச் சிரித்துக்கொண்டே அவளிடம் சொல்ல…
அவன் பேசுவதைத் தன்னை அறியாமல் ரசித்தவள் அதற்கு மேல் விக்கியை எதுவும் சொல்லாமல் அமைதி ஆகிவிட்டாள்.
“அப்பாடி எப்படியோ… என் ஆள் கிட்ட அதையும் இதையும் சொல்லி சமாளிச்சாச்சு” என்று நினைத்தவன் பெருமூச்சு விட, பக்கத்தில் அமர்ந்து இருந்த கதிர், “ஒருவழியா சமாளிச்சுட்டே போல மச்சி…” டேபிளில் ஒரு கையை வைத்து அதில் தன் கன்னத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு கேட்ட கதிரைப் பார்த்து…..
“ஆமாம்டா… மாப்பிளை. நீ உன் ஆள் கூட மட்டும் ஃபோகஸ்ல இருடா… என்னைப் பார்த்துட்டு இருக்குறதே வேலையா வச்சிட்டு இருக்காதே….” என்று கூறிய விக்கி கதிரின் முகத்தைப் பிடித்துக் கீர்த்திகாவைப் பார்க்குமாறு திருப்ப…
டேபிளில் இருந்து நிமிர்ந்து அமர்ந்தவன், “டேய், துர்கா கிட்ட நீயே என்னையும் கீர்த்தியையும் மாட்டி விற்றுவ போல…” என்று யாருக்கும் கேட்காமல் கதிர் விக்கியை முறைக்க…. “தெரியுதுல்ல…. அப்போ….” என்று சொன்ன விக்கி தன் கையை வாய் மேல் வைத்து மூடியவாறு காட்டி பின் “பேசாமல் உக்காரு” என்று கதிரை ஏகத்துக்கும் வெறுப்பேற்றிவிட்டு திரும்பி அமர்ந்து கொண்டான்.
ராதாவை நிலானிக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு பெண்கள் நால்வரும் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டு இருக்க… அவர்கள் பேசுவதையே வாயைத் திறந்து பார்த்துக் கொண்டு இருந்தான் விக்கி.
துர்கா நிலானியிடமும், கீர்த்தியிடமும், “ராதாவுக்கு நம்ம ஊர் புதுசு. அவ சிட்டி லைஃப்க்குள் இப்போதான் வரா… நீங்க ரெண்டு பேரும் ராதாவைக் கொஞ்சம் பத்திரமா பார்த்துக் காணோங்க… அவளுக்குச் செட் ஆகுற வரைக்கும் அவளை கைடு பண்ணுங்க” என்று சொன்னாள்.
இதைக் கேட்ட கதிர், “யாரு இவளா…? இவளுக்கா ஒண்ணும் தெரியாது.. இவ வாய்க்கு நீங்க எல்லாம் தான் ஜாக்கிரதையாக இருக்கனும். இல்லைன்னா…. ராதா வாய் பேசியே இவங்க ரெண்டு பேரையும் விட்ருவிடுவாள்” என்று கிண்டல் செய்தான்.
“அக்கா… பாருங்க அக்கா… கதிர் மாமா எப்படிச் சொல்றாங்க என்னைப் பார்த்து” என்று சிணுங்கிக் கொண்டே… ராதா துர்காவிடம் புகார் அளிக்க… “விடு விடு ராதா, நம்ம கதிர் தானே… உன் மாமா உன்னை கிண்டல் செய்யாமல் வேற யாரைக் கிண்டல் செய்யப் போறான்” என்று அவளைச் சமாதானம் செய்தால்.
அனைவரும் மாறி மாறி கிண்டல் செய்து கொண்டு கொண்டு வந்த ஸ்னாக்ஸ், டீ, கூல் ட்ரிங்க்ஸ் எனக் குடித்துக்கொண்டு இருக்க…
அப்போது கதிர் கீர்த்திகாவைப் பார்க்க… அவளும் அவனைப் பார்த்து, “என்ன” என்று புருவம் உயர்த்தி கேட்டாள்.
அவள் குடித்துக்கொண்டு இருந்த கூல் ட்ரிங்க்ஸை தனக்கு வேண்டும் என்று கதிர் சொல்ல… “ம்ம்ஹும்…” என்று மறுப்பாக கீர்த்தி தலையை ஆட்ட… அவன் “ப்ளீஸ்…” என்று யாருக்கும் தெரியாத வண்ணம் கீர்த்தியிடம் கெஞ்ச… தான் பக்கத்தில் இருந்த துர்காவையும் ராதாவையும் தன்னைப் பார்க்கிறார்களா என்று கவனிக்க, அவர்கள் இருவரும் நிலானியுடன் பேசிக்கொண்டு இருக்க…
கீர்த்தி முதலில் டேபிள் மேல் இரு முழங்களையும் ஊன்றி அவர்களுடன் பேசுவது போலப் பேசிக்கொண்டே… தன் வலது கையால் அவர்களுக்குத் தன்னைக் தாண்டித் தெரியாதது போல மறைத்து, இடது கையால் கூல் ட்ரிங்க்ஸை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, கதிர் இருக்கும் இடத்திற்கு அவன் அருகில் கொண்டு சென்றால்.
கதிரும் தன் அருகில் கீர்த்தியின் கை வந்ததும் சட்டென்று அவள் கையில் இருந்த கூல் ட்ரிங்க்ஸை எடுத்துக்கொண்டு தான் கையில் இருந்த கூல் ட்ரிங்க்ஸ்யை வைத்துவிட்டான்.
பிறகு இருவரும் ஒன்றும் தெரியாதது போல நிமிர்ந்து தங்கள் கையில் இருந்த கூல் ட்ரிங்க்ஸ்யை எடுத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தனர்.
கீர்த்தி எதுவும் தெரியாதவள் போல கூல் ட்ரிங்க்ஸ்யை குடிக்க… கதிர் கீர்த்தியைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து கூல் ட்ரிங்க்ஸ்யை வாயில் வைக்கப் போக… அவன் முகத்தருகே தன் முகத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு நேரம் இவர்கள் செய்து கொண்டு இருந்ததைப் பார்த்துக் கொண்டு விக்கி அமர்ந்து இருந்தான்.
விக்கியை இவ்வளவு அருகில் பார்த்ததும் கதிருக்குக் குடித்துக்கொண்டு இருந்த கூல் ட்ரிங்க்ஸை வாயில் இருந்து துப்பி விட்டான். மற்றவர்கள் “என்ன ஆச்சு” என்று கேட்க, “ஒன்றுமில்லை” என்று சமாளித்த கதிர் விக்கியைப் பார்க்க…
“மஹ்ம்ம்… நடத்து நடத்து… நான் எதுவும் பார்க்கலை” என்று சொன்னவன். “நீ மட்டும் தான் உன் ஆள் கூட ரொமான்ஸ் பண்ணுவியா… நாங்களும் ரொமான்ஸ் பண்ணுவோம்” என்று விக்கி கதிரிடம் சொல்ல..
“டேய், எனக்கு என் ஆளுக்கும் லவ் செட் ஆகிருச்சுடா… ஆனா நீ அப்படியா… நீ மட்டும் தான ஒன் சைடா லவ் பண்றே.. இன்னும் நிலானிகிட்ட இருந்து லவ் வரலையே” என்று கதிர் சொல்ல… “வெயிட் அண்ட் வாட்ச் டா மாப்பிள…” என்ற விக்கி.
திரும்பி நிலானியைப் பார்த்தான். கண்ணாடி போட்டுக்கொண்டு நல்ல அமுல் பேபி போல இருக்கும் தன் ஆளை உள்ளுக்குள் ரசித்தவன்.
“ஐயோ… இப்படி கொழு…கொழுன்னு… பன்னு மாதிரி இருக்காளே அந்த கன்னத்தைப் பாரு மொழு மொழுன்னு எவ்ளோ ஷைனிங்கா.. கண்ணாடி மாதிரி இருக்குன்னு…”
“கண்ணாடியை தேவை இல்லை. என் ஆளை நிக்க வெச்சு அவ கன்னத்துல முகம் பார்த்துத் தலை வாரலாம் போலயே….” என்று அப்படியே தன் கண்ணைக் கீழே கொண்டு வர, அவள் வாயில் கூல் ட்ரிங்க்ஸ்யை வைத்துச் சிப் சிப்பாக் குடித்துக்கொண்டு இருக்க….
“ச்சோ…. அந்த லிப்ஸைப் பாரு ஸ்ட்ராபெரி மாதிரி எவ்வளவு சிவப்பா இருக்கு… அந்த லிப்ஸ் ஸ்ட்ராபெரி மாதிரியே என்ன டேஸ்டா… இருக்குமோ” என்று உள்ளுக்குள் நிலானியை ரசித்தவன்.
அவள் தோளைத் தன் விரலால் சுரண்டினான். நிலானி திரும்பி “என்ன” என்று கேட்க.. “இங்கே வா…” என்று தன் அருகில் ஜாடை செய்து அழைத்தான்.
அவள் “என்ன” என்று அவன் முகத்தருகில் தன் முகத்தைக் கொண்டு சென்று கேட்க… “ஒன்னுமில்லை எனக்கு வாங்கின கூல் ட்ரிங்க்ஸ் எனக்குப் பிடிக்காத ஃபிளேவர்… உங்க கையில் இருக்குறது எனக்குப் பிடிக்கும்” என்றான்.
“சரி, அதுக்கு என்ன இப்போ…” என்றால் நிலானி… “ஒன்னுமில்லை. நான் என்னோட ட்ரிங்க்ஸ்யை தரேன். நீங்க உங்களோடதை எனக்குத் தரீங்களா… இல்லைன்னா மறுபடியும் எழுந்து போய்ப் வாங்கிட்டு இருக்கணும். எதுக்கு அவங்களைச் சிரமப்பட வெச்சுட்டு…” என்றான்.
“ச்சீ… எச்சில்…” என்றால் நிலானி. “இல்லை இல்லை நான் இன்னும் குடிக்கவே இல்லை. இங்கே பாருங்க நான் இன்னும் ஓபன் பண்ணக்கூட இல்லை” என்று தன் ட்ரிங்க்ஸ்யைக் காட்ட… “நீங்க ஓபன் பண்ணலை ஓகே… ஆனா நான் ஓபன் பண்ணிக் குடிச்சுட்டேனே…” என்று நிலானி சொல்ல…
“அதெல்லாம் ஒன்னும் இல்லை. நமக்குள்ள என்ன…” என்று சொன்னவன், அவள் கையில் பிடித்திருந்த பாட்டிலை வலுக்கட்டாயமாக அவளிடம் “ப்ளீஸ்” என்று தன் முகத்தைக் கெஞ்சுவது போலக் கண்களையும், வாயையும் வைத்துக்கொண்டு வாங்கி விட்டு, அவன் வைத்திருந்த… பாட்டிலை அவள் கையில் திணித்தான்.
அவனை முறைப்பது போலப் பார்த்தவள், அவன் கொடுத்த பாட்டிலை திறந்து குடித்தால். அவள் குடிக்கும் வரை பார்த்துக் கொண்டு இருந்த விக்கி… “அப்பாடா… குடிச்சுட்டா” என்று நினைத்தவன், நிலானியை அசடு வழியப் பார்த்துச் சிரித்துக்கொண்டே அவள் குடித்த பாட்டிலை பொக்கிஷமாகக் கையில் எடுத்துத் தன் வாயில் வைத்துக் குடித்து… அமிர்தத்தைக் குடித்தது போல முகத்தை கண்கள் மூடி தலையை மேலே தூக்கி… “ப்பா… என்ன ருசி.. என்ன ருசி…” என்று சொல்லி குடிக்க… அவன் செய்வதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே திரும்பிக் கொண்டால்.
அவள் திரும்பியதும் கதிரைப் பார்த்து, “எப்புடி….” என்று துள்ளளுடன் கூற… “நீ… பலே ஆள் தான் மச்சி…” என்றான் கதிர்.
அனைவரும் பேசிவிட்டு கிளம்ப… நிலானி மதியம் கிளாஸ் இருப்பதால் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டால்.
அவள் செல்வதை ஏக்கமாகப் பார்த்தவன் நிலானி மறையும் வரை அவளையே பார்த்துக்கொண்டு அவளுக்குக் கைகாட்டிவிட்டுச் செல்ல மனம் இல்லாமல் அங்கிருந்து கிளம்பினான்.
காலேஜில் தன்னுடைய அப்பாயின்மென்ட் ஆர்டரைக் கொடுத்துவிட்டு அவன் டிபார்ட்மென்ட் பற்றிக் கேட்டுவிட்டுச் சங்கவியின் வீட்டிற்கு வரும் வரை முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு வந்தான் சந்தோஷ்.
வரும் வழி எல்லாம் சங்கவி சந்தோஷை கிண்டல் செய்து அவனை வெறுப்பேற்றிக் கொண்டே வந்தாள்.
ராதா சொன்னதை விட இவள் செய்ததில் தான் சந்தோஷிற்கு அதிகம் கோபம் ஆனது. ஆனால் இப்போது அந்தக் கோபம் மொத்தமும் ராதாவின் மேல் திரும்பி இருந்தது.
இப்போது அவன் இருக்கும் கோபத்திற்கு ராதா மட்டும் இப்போது சந்தோஷின் எதிரில் இருந்தாள் அவளை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டிருப்பான் சந்தோஷ்.
அதே கோபத்தில் சங்கவியின் வீட்டின் முன்பு வந்து காரை நிறுத்திவிட்டு உள்ளே வேகமாக வர… உள்ளே இருந்த சிவகாமி கார் வரும் சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவர் சந்தோஷைப் பார்த்ததும் சிரித்த முகமாக வந்து, “டேய்…ராஜா… எப்படி டா.. இருக்கே… இந்த அத்தையைப் பார்க்க உனக்கு இவ்வளவு வருஷம் ஆகிருச்சா..” என்று குரல் தழு தழுக்கக் கேட்டுக்கொண்டே சந்தோஷைப் பாசமாகக் கட்டிக்கொண்டார்.
அவ்வளவு நேரம் உர் என்று வந்தவன் சிவகாமியைப் பார்த்ததும் கவலை எல்லாம் மறந்தவனாக “அத்தை எப்படி இருக்கீங்க” என்று அவரைக் கட்டிக் கொண்டான்.
“நான் நல்லா இருக்கேன் ராஜா… நீ என்ன ராஜா… ஆளே மாறிட்டே…” என்று கேட்க.. “பின்னே அப்படியேவா… இருக்க முடியும் அத்தை… நாம கொஞ்சம் மாறினால் தானே எல்லாம் நமக்குத் தகுந்த மாதிரி மாறும்” என்றான்.
“என்னவோ சொல்றே… நீ இங்கேயே தான் வேலை பார்க்கப் போறதா அண்ணா சொன்னாரு பா… இனிமேல் அத்தை கூடவே இருக்கியா இங்கேயே…” என்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு போய்த் டைனிங் டேபிளில் அமரச் சொல்லிவிட்டு அவனுக்கு உணவு பரிமாறிக்கொண்டே கேட்டார்..
“நான் இந்த ஊரில் தான் இருக்கப் போறேன் அத்தை. அப்போ அப்போ வந்து உன்னைப் பார்த்துக்கிறேன்” என்று நாசுக்காக அவர் கேள்விக்கு மனம் கோணாமல் பதில் அளித்தான்.
தான் என்ன சொன்னாலும் அவன் தங்களுடன் இங்கே ஒரே வீட்டில் இருக்க மாட்டான் என்று சிவகாமிக்குப் புரிந்தது. அதனால் அவனை அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை.
சந்தோஷ் வருவதனால் விருந்து தடபுடலாக இருக்க… அதையெல்லாம் பார்த்த சங்கவி. “ஏன் மா… நானும் அப்பாவும் இந்த வீட்டுல தான் இருக்கோம். இத்தனை வருஷத்தில் நீ எங்களுக்கு ஒரு முறை கூட இப்படி விருந்து வைத்ததில்லை… இது எல்லாம் உனக்குச் செய்யத் தெரியுமா என்று எனக்கு இன்னைக்கு தான் தெரியும்” என்றால்.
“நீ பாதி நேரம் படிக்கப் போறேன், ஹாஸ்டல்ல இருந்துகிறேன், டயட் அப்படி இப்படின்னு இருந்துட்டே…”
“உங்க அப்பா பிசினஸ், மீட்டிங், ஆபீஸ் என்று சுத்திக்கிட்டே இருக்காரு.”
“அப்படியும் ரெண்டு பேரும் ஒன்னா இருக்கீங்களே எதுவும் சமைச்சுத் தரலாம்னு வந்தா நீயும் உன் அப்பாவும் என்னை ஏதாவது திட்டி என் மூடை ஸ்பாயில் பண்ணிறீங்க… அப்புறம் எங்க இருந்து இப்படி வித விதமா சமைச்சுப் போடுறது உங்களுக்கு” என்றார்.
அவர் சொன்னதும் எதுவும் பதில் பேசாமல் அமைதியாகிவிட்டாள் சங்கவி.
“என்னடீ… சொல்லிட்டு இருக்க என் பொண்ணை” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்த வேதாச்சலம் சந்தோஷைப் பார்த்ததும் “அடடே… வாப்பா… சந்தோஷ் நல்லா இருக்கியா…” என்று அவனிடம் நலம் விசாரித்து விட்டு சிவகாமியைப் பார்த்து, “என் பொண்ணை என்னடீ… சொல்லிட்டு இருந்தே” என்று அவரிடம் கேட்க, “நான் என்ன உங்க பொண்ணை சொல்லப்போறேன்… வாங்க வந்து சாப்பிடுங்க” என்று அவரையும் அமர வைத்து பரிமாறினார்.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் ஹாலில் வந்து அமர்ந்தவர், சந்தோஷ் எந்த காலேஜில் சேர்ந்திருக்கிறான் என்று அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவர், அவனை இங்கேயே தங்கச் சொல்ல… அவரிடமும் நாசுக்காக வேண்டாம் என்று சொல்லிச் சமாளித்தான்.
உடனே வேதாச்சலம், “நீ தனியா இருக்கணும்னு நினைச்சு தான் நீ… இப்படிச் சொல்றேன்னு எனக்குப் புரியுது. வயசுப் பையன் வெளிய தனியா இருக்கத் தான் ஆசைப்படுவான்” என்று சொன்னவர் தன் வேலை ஆளை அழைத்து ஏதோ சொல்லி அனுப்ப அந்த ஆள் கையில் சாவியுடன் வந்தவர் கொண்டு வந்து வேதாச்சலம் கையில் கொடுக்க…
அவர் அந்தச் சாவியை வாங்கி சந்தோஷ் கையில் கொடுத்தார். சந்தோஷ் புரியாமல் அவரைப் பார்க்க, “என்ன பாக்குற சந்தோஷ்… நீ தான் இங்கே தங்க மாட்டேன்னு சொல்லிட்டே… அதான் இது உங்க காலேஜ் பக்கத்துல ஒரு அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்க என்னோட இன்னோரு வீட்டோட சாவி. நீ அங்கேயே தங்கிக்க… வெளிய வீடு தேடிச் சிரமப்பட வேண்டாம்” என்றார்.
“இல்லை மாமா பரவாயில்லை உங்களுக்கு எதுக்குச் சிரமம். நான் வெளிய வேற வீடு பார்த்துக்குறேன்” என்று சொல்ல.
“நான் உன்கிட்ட அங்கே தங்கிக்கிறியானு கேட்கலை… அங்க தங்கிக்கச் சொல்லிச் சாவியை கொடுத்தேன் சரியா…” என்று கட்டளையாகச் சொல்ல…. அதன் பின் அவனால் அவர் சொல்லைத் தட்ட முடியாமல் சரி என்று தலையை ஆட்டினான்.
“சரி, நீங்க பேசிட்டு இருங்க. எனக்கு ஆபீஸ் விஷயமாக் சங்கவி கிட்டே கொஞ்சம் பேச வேண்டி இருக்கு” என்று கூறி சங்கவியைத் தனியே அழைத்துச் சென்றார்.
சங்கவியை அழைத்துக்கொண்டு அவள் அறைக்கு வந்தவர் கதவைச் சாற்றி விட்டு அவளை பெட்டில் அமர வைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தார்.
“என்ன அப்பா என்ன விஷயம். எதுவும் முக்கியமான விஷயமா….” என்று கேட்டாள் சங்கவி.
“ஆமாம்மா…. முக்கியமான விஷயம் தான். எல்லாம் அந்த ஆதியை பற்றித் தான்” என்றார்.
“ஆதியா…. என்ன விஷயம் சொல்லுங்க அப்பா..” என்றால் ஆர்வமுடன்.
“ஆதி இப்போ இந்தியாவிலேயே இல்லை தெரியுமா?” என்றார்.
“என்ன அப்பா சொல்றீங்க… ஆதி இங்கே இல்லையா?” என்று அதிர்ச்சியாகக் கேட்டவள் “என்ன ஆச்சு அவன் எங்கே இருக்கான்” என்று கேட்டாள்..
“டென்மார்க்கில் இருக்கிற அவனுடைய ஃபேக்டரியில் ஒரு தீ விபத்து. அதைக் கவனிப்பதற்காக ஆதியும், வெங்கடாச்சலமும் டென்மார்க் சென்று இருக்கிறார்கள்” என்றார்.
“அப்படியா அப்பா.. அப்போ ஆஃபீஸில் அந்தக் கதிரும், விக்கியும் மட்டும் தான் பார்த்துக் கொள்கிறார்களா?” என்று கேட்டாள்.
“ஆமாம் அம்மா… அவர்கள் இருவரின் பொறுப்பில் தான் ஆஃபீஸயும் மற்ற ஃபேக்டரிக்களையும் அவர்கள் இருவரிடமும் தான் விட்டிருக்கிறான்.”
“அப்போ… அந்த துர்கா…” என்று கேட்டாள். “அவள் இன்னும் ஆபீஸ் வரவில்லை என்று கேள்விப்பட்டேன். ஒருவேளை இனிமேல் வரலாம்” என்றார்.
“சரி அப்பா… என்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டீங்களே இனி நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சங்கவி சொன்னாள்.
“என்னம்மா… பண்ணப் போறே…” என்று வேதாச்சலம் கேட்க… “வெயிட் அண்ட் வாட்ச் அப்பா…” என்றால்.
