Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 69

உன் ரகசிய ரசிகை நான் 69

by Layas Tamil Novel
407 views

EPISODE 69

துர்கா சங்கவியிடம் அவள் ஹீல்ஸ் சரியாக இல்லை என்று எவ்வளவோ சொல்லியும்… அவள் பேச்சைக் கேட்காமல் “எல்லாம் எனக்குத் தெரியும்” என்று மேடை ஏறினாள்.

மேடை ஏறியதும் ராம்ப் வாக் செய்ய ஆரம்பித்திருந்தால் சங்கவி…

விளக்கு ஒளி அவள் பாதத்தில் இருந்து அங்குலம் அங்குலமாக அவள் ஆடையையும், அதில் உள்ள வேலைப்பாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டு இருந்தது….

விளக்கின் ஒளி பரவப் பரவ…. சங்கவியைக் முழுதாகக் காட்டிய போது ஆதி…. சங்கவியைப் மேடையில் எதிர்பார்க்காததினால் அதிர்ச்சி அடைந்தவன் அவளையே பார்த்துக் கொண்டு இருக்க…. திடீர் என்று அவள் நடையில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்த ஆதி கதிருக்கு போன் செய்ய அவன் எடுக்காததினால் விக்கிக்கு போன் செய்தான்.

போனை அட்டென்ட் செய்த விக்கியிடம்…. “என்ன விக்கி என்ன ஆச்சு ஏன் சங்கவி மேடையில் இருக்கிறாள்” என்றான். “அது வந்து…” என்று விக்கி இழுக்க…. “அதைப் பிறகு நான் தெரிந்து கொள்கிறேன்… நீ முதலில் மேடைக்குப் போ…. அங்கே சங்கவி ஏதோ சொதப்புகிறாள்… அவளால் எதுவும் பிரச்சனை ஆகப்போகிறது” என்று ஆதி விக்கியை அவசரப்படுத்த….

“என்ன சொல்ற ஆதி எனக்குப் புரியலை” என்றான் விக்கி. “நீ முதலில் மேடைக்குப் போ…” என்று போனை வைத்தான். ஆதி சொன்னதும் விக்கி நேராக மேடைக்கு ஓடினான்.

போனை வைத்து விட்டு ஆதி டிவியில் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.


ஸ்டேஜில் முதலில் சங்கவி நன்றாக நடந்து வந்து கொண்டு இருக்க …. திடீர் என்று அவள் அணிந்திருந்த ஹீல்ஸ் உடைந்து விட…. மேடையில் அப்படியே தடுமாறி… கீழே விழப் போனால் சங்கவி….

அப்போது அந்த அரங்கமே…. சங்கவி விழப்போகிறாள் என்று பதட்டத்தில் இருக்க… மொத்த மீடியாவின் கண்களும் சங்கவியையே ஃபோகஸ் செய்திருந்தது…. அரங்கத்தில் இருந்த மொத்த வெளிச்சமும் சங்கவியின் மீது இருக்க….

அவளைச் சுற்றிலும் கும்மிருடாக இருந்தது….. சங்கவியைச் சுற்றிலும் பிரகாசமாக விளக்குகள் மிலிரிக் கொண்டு இருக்க… இருட்டை கிழித்துக்கொண்டு தங்க நிற ஆடையில்…. இருட்டில் இருந்து ஒரு உருவம் அந்த அரங்கம் முழுதும் பரவி இருந்த… புகையைத் தாண்டி…. ஜொலித்துக்கொண்டே… படு ஸ்டைலாக… அதையும் விட வேகமாக அந்த இருட்டைத் தாண்டி வெளிச்சத்தில் ஒரு கால் வைத்து எட்டி….

சங்கவி கால் இடறி கீழே விழும் சமயம் அவளைக் கீழே விழாமல் ஒரு கரம் வந்து பிடித்துக்கொண்டது…. தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்ற சங்கவி தன் காலில் இருந்த ஹீல்ஸைப் பார்க்க அது ஒரு புறம் உடைந்து போய் இருந்தது.

ஹீல்ஸ் உடைந்த ஆத்திரத்தில் இருந்த சங்கவி தன்னைத் தாங்கிப் பிடித்திருந்தது யார் என்று நிமிர்ந்து தனக்கு எதிரே இருந்தவரைப் பார்க்க… அப்படியே அதிர்ச்சியில் சங்கவி உறைந்து போய் நின்றாள்.

கீழே விழப்போன… சங்கவியை விழாமல் அவள் கையைப் பிடித்து இழுத்துத் தன் அருகில் அவளுக்கு ஆதரவாக நிறுத்தி வைத்துக் கொண்டு சுற்றி உள்ளவர்களைப் பார்த்து ஒரு சிறு புன்னகையை உதிர்த்து விட்டுச் சங்கவியின் கையை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு அவளைப் பார்க்க….

சங்கவி தன் எதிரே தன்னை விழாமல் பிடித்துக்கொண்டு நின்றிருந்தவரைப் பார்த்து முதலில் அதிர்ச்சியும்…. பின் கோபமும் அடைந்தாள்.

எதிரில் நின்றிருந்த நபரைப் பார்த்து….. “நீயா? நீ.. நீ… எப்படி…. இங்கே?” என்று கேட்க…

“நாம் இப்போது மேடையில் நின்று இருக்கிறோம்… இங்கு இருப்பவர்கள் மட்டுமல்ல… உலக நாடுகள் மொத்தமும் நம் இருவரையும் தான் ஃபோகஸ் செய்து இருக்கிறது…. நீ முகத்தை இப்படி வைத்துக் கொள்ளாமல் சகஜமாக இருக்க… முயற்சி செய்… நம் பிரச்னையை நாம் பார்த்துக் கொள்வோம்” என்று சங்கவியின் இடுப்பில் கைப்போட்டு அவளுடன் சிநேகமாகப் பேசிக்கொண்டு நிற்பது போல நின்று மீடியாவிடம் சிரித்துக்கொண்டு பேசிக்கொண்டு நின்று இருந்தால் துர்கா…..

மொத்த அரங்கம் வெளிச்சமும் இவர்கள் இருவரின் மேல் இருந்த போதிலும் இப்போது சங்கவியின் அருகில் இருந்த துர்காவையும் அவள் அணிந்திருந்த ஆடையிலுமே… அனைவரது கவனமும் இருந்தது…

துர்கா மெல்ல சங்கவியுடன் நடந்தவள் அவளை ஸ்டாஜிற்கு வெளியில் கொண்டு வந்து கீழே இறங்க உதவி செய்ய… அப்போது அங்கு வந்தா விக்கி…. சங்கவியின் கையைப் பிடித்துக்கொண்டு அவளை கீழே இறக்கியவன். துர்காவைப் பார்த்து… “துர்கா… சூப்பர்” என்று தன் கட்டை விரலை உயர்த்தி காட்ட அவனைப் பார்த்து அழகாக ஒரு புன்னகை சிந்திவிட்டுத் திரும்பி நிமிர்ந்து நின்று… அதே அழகான சிரிப்புடன் தான் அணிந்திருக்கும் விலை உயர்ந்த லெகங்காவை விட… விலை மதிப்பற்ற… சிரிப்புடன் மேடையில் ராம்ப் வாக் செய்ய… ஆரம்பிக்க….

அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவளின் அழகான நடையும் அதில் இருந்த மிடுக்கும்… அனைவரையும் கவர்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

முற்றிலும் தங்க வேலைப்பாடுகள் நிறைந்த…. தங்க நூல் இலைகளால் செய்யப்பட்ட… முத்துக்களாலும் நவரத்ன கற்களாலும் செய்யப்பட்ட வேலைப்பாடுகளுடன்… அதற்க்குத் தகுந்தாற் போல் நகைகள் அணிந்து…. அதற்க்குத் தகுந்தார் போல மேக் அப் போட்டு தங்கச் சிலை என மேடையில் நடந்து வந்தாள்.

மேடையில் விளிம்பு வரை ராம்ப் செய்து வந்த… துர்கா அங்கே நின்று தன் ஆடையை முழுவதுமாக அனைவர்க்கும் பார்வைக்குக் கொண்டு வரும் பொருட்டு… லேசாகத் தன் ஆடையை ஒரு சுழற்று சுழற்றி…. திரும்பி நடக்க… அவள் ஸ்டைலாக இதைச் செய்ததும் அதைப் பார்த்துக் கொண்டு இருந்த…. அரங்கம் மொத்தமும் எழுந்து நின்று கை தட்டினர்.

அரங்கம் மட்டும் அல்ல… டிவியில் லைவாகப் பார்த்துக் கொண்டு இருந்தவர்களும் ஆர்வத்தில் துள்ளிக்குதித்து துர்காவையும் அவள் அணிந்து இருந்த ஆடையையும் பார்த்து கைகள் தட்டி துர்காவை வரவேற்றனர்.

தனது ராம்ப் வாக்கை முடித்துக்கொண்டு துர்கா நடுநாயகமாக நின்று இருக்க… அவளைச் சுற்றி சங்கவியைத் தவிர அனைத்து மாடல்களும் வந்து நிற்க… அந்த ஆடைகளை வடிவமைத்த… அவர்களது வடிவமைப்பாளரும்…. அதனுடன் ஆதியின் கம்பெனி சார்பில் கதிரும் விக்கியும் துர்காவும் இருபுறமும் வந்து நின்றனர்.

அரங்கமே எழுந்து நின்று அவர்கள் அனைவரையும் பார்த்துக் கைத்தட்டியது.

இங்கு ஒருவன் மட்டும் துர்கா மேடைக்குள் வந்ததில் இருந்து இமைக்க மறந்து அவளையே… பார்த்துக் கொண்டு இருந்தான் வேற யாருங்க நம்ம ஹீரோ ஆதி தான்.

ஆதியின் அருகில் அவனுடன் அமர்ந்து இந்த ஷோவைப் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் எழுந்து நின்று கைத்தட்டி.. ஆதியின் கையைப் பிடித்து அவனுடைய கம்பெனியின் டிசைன்கள் எல்லாம் மிக அருமையாக இருந்ததாகவும்…

இவனுடன் சேர்ந்து ஆதியின் புதிய ப்ராஜெக்ட்டில் தங்களையும் இணைத்துக் கொள்வதாகவும் கூறியவர்கள். தங்கள் ப்ரோடக்டை விளம்பரப் படுத்த மாடலாக துர்காவையே பரிந்துரைந்தனர்.

அவர்கள் பேசியதெல்லாம் ஆதியின் மூளைக்கு எட்டினாலும்… அழகுப் பதுமையாக இருக்கும் தன் மனைவியைப் நேரில் பார்க்க வேண்டும் என்று மனதில் எழுந்த ஆவலைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்று இருந்தான்.


ஷோ முடிந்து… மேடையில் இருந்து கீழே இறங்கிய மாடல்களுடன் துர்காவும் அவர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டே இறங்கி வர… மேடையின் கீழ் நின்று கொண்டு இருந்த சங்கவி பளார்… என்று துர்காவின் கன்னத்தில் அறைந்தாள்.

அவள் அப்படி அறைந்ததும்… துர்காவுடன் சேர்ந்து அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியில் அப்படியே நின்றனர்.

கதிரும், விக்கியும் இதைப் பார்த்துவிட்டு வேகமாகச் சங்கவியின் அருகில் வர… அவளை வந்த வேகத்தில் கதிர் அறைந்து இருந்தான்.

அவன் அறைந்ததும் சங்கவி கதிரிடம், “ஏய்…. எவ்வளவு தைரியம் இருந்தா என்னை அறைந்து இருப்பே..” என்று சொல்லிக்கொண்டு சங்கவி கதிரிடம் சண்டைக்குப் போக…

“இப்போ எதுக்காக நீ துர்காவை அடிச்சே… அவளை அடிக்க.. உனக்கு என்ன உரிமை இருக்கு…” என்றான் கதிர் கோபத்தோடு.

அவன் கோபம் கண்ட சங்கவி அப்படியே பயந்து போய் நின்றவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “இவளால் தான் நான் மேடையில் விழப் போனேன். இதனால் எனக்கு எவ்வளவு அவமானம் ஆகிவிட்டது என்று உனக்குத் தெரியும்?” என்றால் சங்கவி.

அவள் அப்படிச் சொன்னதும் துர்கா, “என்னால் நீ… கீழே விழப் போனியா? நல்லா யோசிச்சு சொல்லு. நான் உன்கிட்ட நீ போட்டிருக்க…. ஹீல்ஸ்யில் ஏதோ பிரச்சனை இருக்கு… அதை கொஞ்சம் சரி பாரு என்று எவ்வளவு முறை சொன்னேன். ஆனா அப்போது எல்லாம் என் சொல்வதைக் கேட்காமல் விட்டு விட்டு இப்போ வந்து என் மேல் குறை சொல்றியா…”

“இன்னைக்கு உன்னால இந்த ஷோ மொத்தமும்…. கேட்டுப் போயிருக்க வேண்டியது…. நீ செய்த காரியத்திற்கு… நியாயப்படி நான் தானே உன்னை அரைஞ்சு இருக்கனும்” என்று சொல்லிக்கொண்டே துர்கா சங்கவியின் கன்னத்தில் அறைய…

“ஏய்… துர்கா….” என்று தான் கன்னத்தில் கைவைத்து இன்னோரு கையால் அவள் முன் விரல் நீட்டி “என்னை எதுக்குடீ… இப்போ அடிச்சே” என்றால் சங்கவி.

“எதுக்கு அடிச்சேனா…. உன்னைக் கொன்னு போட்டிருக்கணும்” என்று சொன்னவள் “நான் சாப்பிட வைத்திருந்த ஜூசில் நீ என்னை கலக்க மருந்து வெச்சிருந்தே…” என்றால் துர்கா…. துர்கா இப்படிச் சொன்னதும் சங்கவிக்குத் தான் செய்த காரியம் வெளியே தெரிந்து விட்டதோ என்று பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது…

துர்கா அருகில் நின்று கொண்டிருந்த கதிரும் விக்கியும் புரியாமல் துர்காவைப் பார்த்து, “துர்கா என்ன சொல்ற எங்களுக்கு ஒண்ணுமே புரியல” என்று கேட்க..

“சாரா வரவேண்டிய இடத்தில் நான் ஏன் வந்தேன்னு நீங்க யாராவது கொஞ்சமாவது யோசித்து பார்த்தீர்களா?” என்றால் துர்கா.

துர்கா இப்படிச் சொன்னதும்தான் அங்கிருந்து அனைவருக்குமே சாராவின் நினைவே வந்தது. “ஆமாம் …. முதல் மாடலாக சாரவை தானே நியமித்திருந்தார்கள்.”

அவள் அணிய வேண்டிய உடையை தானே துர்கா அணிந்து கொண்டு மேடையில் வலம் வந்தால். இதை ஏன் யாரும் கவனிக்காமல் யோசிக்காமல் விட்டு விட்டோம் என்று அங்கு இருந்தத அனைவரும் குழம்ப.

இப்போது இவர்களின் பின்னால் நின்றிருந்த ஒருவரைப் பார்த்து துர்கா கைக் காட்ட அவர் தன் கையில் லேப்டாப் உடன் அவள் அருகில் வந்தார்.

அவர் அருகில் வந்து துர்கா முன் லேப்டாப்பை நீட்ட “நீங்களே அதுல இருக்கிற வீடியோவை இவங்க எல்லாருக்கும் ப்ளே பண்ணி காட்டுங்க” என்று சொல்ல.

துர்கா மாடலாக வருகிறாள் என்று தெரிந்ததுமே கோபத்தில் அவள் அறைக்கு வர இருந்த சங்கவி அவர்கள் இருந்த அறைக்கு வரும்போது அங்கே ஒரு வேலையாள் கையில் ஒரு ஜூஸ் டம்ளருடன் வந்தார். அவரைப் பார்த்து இந்த ஜூஸ் யாருக்கு என்று கேட்க “துர்கா மேடமுக்கு அவங்கதான் டயர்டா இருக்குன்னு ஜூஸ் கொண்டு வரச் சொன்னாங்க” என்று சொல்ல….

அந்த வேலையாளிடம் இருந்து இந்த ஜூசை வாங்கிவிட்டு நீங்க போங்க என்று அனுப்பியவள் தன் பேக்கிலிருந்து எதையோ எடுத்து அதை அதற்குள் கலப்பது அந்த வீடியோவில் தெரிந்தது.

பின் அந்த டம்ளரை அங்கே வந்த வேறு ஒரு வேலையாள் இடம் இந்த ஜூசை கொடுத்து… உள்ளே துர்காவிடம் இந்த ஜூசை கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்துவிட்டு… அவளுக்குத் தெரியாமல் வெளியே நின்று துர்கா அந்த ஜூசை குடிக்கிறாளா என்று பார்க்க…

வேலையாள் கொண்டு வந்து ஜூசை துர்காவின் கையில் கொடுக்க… அதை வாங்கி குடிப்பதற்காகத் தன் உதட்டருகே கொண்டு சென்றாள் துர்கா. இதை எல்லாம் கதவின் இடுக்கில் பார்த்துக் கொண்டு இருந்த சங்கவி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அந்த வேலையாள் வெளியே வந்து கதவை சாற்றி விட்டுச் செல்ல… எப்படியும் துர்கா குடித்து விடுவாள் என்று நினைத்தவள் தான் மொபைலை எடுத்து யாருக்கோ… கால் செய்து பேசினால்.

அதன் பின் சிறிது நேரம் கழித்து சங்கவி உள்ளே சென்று துர்காவிடம் சண்டை இட்டதும் அவளை வேலை வாங்கியதும் தான் நமக்கு தெரியுமே…

ஆனால் துர்கா அந்த ஜூசை குடிக்கப் போக.. அவளுடன் பேசிக்கொண்டு இருந்த சாரா… தண்ணீர் குடிப்பதற்காக பாட்டிலை எடுக்க… அதில் தண்ணீர் இல்லாமல் போகவே துர்கா தான் கையில் இருந்த ஜூசை சாராவிற்குக் கொடுத்து விட்டால். சாராவும் அதை குடித்து விட்டால்.

துர்காவும் வேலைப் பளுவில் இங்கும் அங்கும் ஓட…. காலையில் இருந்து சரியாகச் சாப்பிடாமல் இருந்ததால் லேசாகத் தலை சுற்றுவது போல துர்கா இருக்க… இதைப் பார்த்த சங்கவி தான் கொடுத்த மருந்து இப்போது தானே வேலை செய்ய ஆரம்பிக்கும் போல என்று தவறாக நினைத்துக் கொண்டால்.

ஷோ நடப்பதற்கு முன்… துர்கா சங்கவியிடம் வந்து பேசிவிட்டு சாராவைப் பார்க்க… ரூமிற்குச் செல்ல…. அங்கே… சாராவைக் காணவில்லை… அவளுக்காக வைத்திருந்த ஆடையும் அனைத்துப் பொருட்களும் அங்கு இருக்கவே… சாராவை மட்டும் காணாமல் துர்கா அவளைத் தேடி அந்த அரங்கம் முழுதும் தேடி விட்டாள். எங்கு தேடியும் சாரா கிடைக்காததால் வேறு வழி இல்லாமல் துர்காவே அந்த ஆடையை அணிய வேண்டிய சூழல் வந்து விட்டது.

இதை எல்லாம் வீடியோவிலும்… சிலதை துர்காவும் கூற…. இப்போது அந்த வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் துர்கா போட்டுக் காட்டினால். அதில் துர்காவும், சாராவும் இருந்த அறையில் இரண்டு பெண்கள் உள்ளே செல்வது இருந்தது… சென்ற சிறிது நேரத்தில் அந்தப் பெண்களுடன் மூன்றாவதாக ஒரு பெண் உடல் முழுவதும் மூடிய படி ஒரு ஆடையை அணிந்து கொண்டு அவர்கள் கைதாங்களாக அந்த நபரை கூட்டிச் செல்வது தெரிந்தது.

இப்போதை இந்த விடியோவைப் பார்த்த.. அனைவர்க்குமே புரிந்தது அவர்கள் அழைத்துச் சென்ற அந்த நபர் சாராவாகத் தானே இருக்க வேண்டும் என்று.

இதைப் பார்த்த சங்கவியும் ஸ்டேஜில் துர்கா இவளிடம் பேசிவிட்டுச் சென்றதும் தனது போனை எடுத்து “நான் சொன்னதைச் சரியாகச் செய்துவிட்டு எனக்கு மெசேஜ் பண்ணுங்கள்” என்று சொல்லிவிட்டு வைத்தது நினைவில் வர…

சங்கவியின் முகம் மாறுவதைக் கவனித்த துர்கா அவள் அருகில் வந்து “சொல்லு சாராவை எங்கே வெச்சிருக்கே…” என்றால்.

சங்கவி பதட்டத்துடன் துர்காவைப் பார்க்க… கதிரும், விக்கியும் மறுபுறம் வந்து அவள் முன் கையைக் கட்டிக்கொண்டு நிற்க… இவர்கள் நிற்பதைப் பார்த்த சங்கவிக்கு மேலும் பயம் தொற்றிக் கொள்ள….

“என… எனக்கு…. தெரியாது…” என்று தடுமாறிக் கொண்டே… சொல்ல…. “பொய் சொல்லாதே… ஒழுங்கா உன் ஆளுங்களுக்கு போன் பண்ணி இன்னும் அரை மணி நேரத்தில் சாராவை இங்க கூட்டிட்டு வர சொல்லு…” என்று துர்கா சொல்ல….

சங்கவி அமைதியாக நிற்க… “ஏய்… இப்போ போன் பண்ணிச் சொல்லப் போறியா… இல்லை” என்று சொல்லி கதிர் கையை ஓங்கிக் கொண்டு வர….

கதிர் அடிக்க வருவதைப் பார்த்துப் பயந்த சங்கவி…. “வெயிட்… வெயிட்…. நான் கால் பண்றேன்” என்று சொல்ல… மற்றவர்களைப் போகும்படி சொல்லி விட்டு… சங்கவியை அழைத்துக்கொண்டு சாரா வரும் வரை அவளை பிணைக்கைதி போலப் பார்த்துக் கொள்ள விக்கியிடம் சொல்லிவிட்டு… துர்காவுடன் ஷோ முடிந்ததும் துர்காவையும், அவள் ஆடையையும் காண்பதற்காகக் காத்திருந்தவர்களைப் பார்க்க வந்தனர்.

பெரிய பெரிய விஐபிக்களும் மீடியாக்களும் இவர்களுக்காகத் தான் காத்திருந்தனர்.

துர்காவும், கதிரும் அங்கே வந்ததும் இவர்கள் இருவரையும் அனைவரும் சூழ்ந்து கொண்டனர். செய்தியாளர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க… துர்கா சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

இப்போது அவள் ஆடையைப் பற்றிப் பேச்சு வரவும் அதை வாங்குவதற்காக நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு கேட்க…. அப்போது கதிருக்கு ஒரு போன் வந்தது…. இப்போதைய ஷோவில் வரும் ஆடைகளை விற்றுக்கொண்டு இருந்த அவர்களுடைய ஆன்லைன் சைட்டில் துர்கா அணிந்திருந்த ஆடையை ஒருவர் ஏலத்தில் அதை உருவாக்கிட்டா விலையை விட அதிகமாக விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் என்று இவர்களின் ஆஃபீஸில் இருந்து சொன்னார்கள்.

அதைக் கேட்டதும் அதிர்ச்சியானவன் பின் “ஓகே…” என்று சொல்லிவிட்டு அனைவரிடமும் “இந்த ஆடை விற்றுவிட்டது” என்று அனைவரிடமும் சொல்ல….

அங்கே நின்றிருந்தவர்கள் இதை நம்பாமல் ஓ….. என்று சோகம் ஆக…. கூட்டத்தில் இருந்தவர், “இவ்வளவு விலை உயர்ந்த இந்த ஆடையை யார் வாங்கினார்கள் என்று தெரிந்து கொள்ளலாமா” என்று கேட்க….

“ஒரு நிமிடம்” என்றவன் தன் மொபைலைத் திறந்து யார் வாங்கினார்கள் என்று பார்க்க…. அதில் இருந்த விவரங்களைப் பார்த்தவன்.

“அவர் பெயர் போதி…” என்று மட்டும் சொல்லிவிட்டு துர்காவை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.

யார் அந்த போதி….

இந்தியாவிலேயே டாப் இருபது பணக்காரர்களில் ஆதியின் குடும்பம் முதல் இடத்தில் இருக்கிறது என்றால். இந்தப் போதியின் குடும்பம் ஆதியின் குடும்பத்திற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

ஆதியின் குடும்பம் கார்மெண்ட்ஸ் துறையிலும் ஃபேஷன் துறையிலும் கொடி கட்டிப் பறப்பது போல… இந்தப் போதியின் குடும்பம் தகவல் தொழில்நுட்பதிலும், பி டிவி உலக அளவில் பிரபலமான ஒரு சானல். அந்த அந்த நாடுகளில் அவர்களது கலாச்சாரதிற்கு ஏற்றாற்போல பி.டி.வி. மிகவும் பெரியது.

பி. டிவி நிறுவனத்தின் ஒரே செல்ல மகன் போதி… இது அவனது தாத்தாவின் பெயர். அவர் நினைவாக இவனுக்கும் வைத்து விட்டனர்.

தொழிலில் அவன் குடும்பத்தை போலவே மிகவும் கெட்டிக்காரன். அவன் அப்பா அம்மா என்றால் கொள்ளைப் பிரியம் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

அத்தனை சொத்திற்கும் ஒரே வாரிசு…. அவன் இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லை என்பதே இவனுடைய பெற்றோரின் ஒரே கவலை.

அப்படி இருந்த போதி… எதற்காக துர்கா அணிந்திருந்த லெகங்காவை அதன் உற்பத்தி விலையில் இருந்து இரண்டு மடங்கு விலை கிட்டத்தட்ட இருபத்தைந்து லட்சம் கொடுத்து வாங்கி இருக்கிறான் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured