EPISODE 77
நிலானியின் அக்கா அவளைப் பார்க்க ஹாஸ்பிடல் வந்திருக்க… அங்கே நிலானிக்கும் விக்கிக்கும் திருமணம் ஆன விஷயம் நர்ஸ் சொல்லித் தெரிந்து கொண்ட நிலானியின் அக்கா மது, விக்கியிடம் தன் தங்கையை அவள் கணவனிடம் இருந்து காப்பாற்றி அவளுக்கு நல்லது தான் செய்திருக்கிறீர்கள் என்று சொல்லி அவனுக்கும் நிலானிக்கும் திருமணம் ஆனது தனக்குச் சந்தோசமே என்று மது சொல்லிக்கொண்டு இருக்க.
அப்போது நிலானி இருந்த அறைக் கதவை படாரென்று திறந்து கொண்டு அவர்கள் அறைக்குள் வந்த மதுவின் கணவன் ரவி. அங்கே நின்று கொண்டு இருந்த விக்கியையும், மதுவையும் பார்த்தவன், “என்னடி சொல்லிட்டு இருக்கே… என் கிட்டே இருந்து உன் தங்கச்சி வாழ்க்கையை இவன் காப்பாத்தி இருக்கானா…” என்று எகத்தாலமாகச் சொன்னவன்.
அவர்களைத் தாண்டி பெட்டில் இருந்த நிலானியை எட்டிப் பார்த்து, “இன்னைக்குக் காலையில் என்கூடக் கல்யாணம் பண்ணினாள் தான் உன் அக்கா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லியும் நீங்க வேற யாரையோ கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்குறே…” என்றவன் தன் மனைவியிடம் திரும்பி.
“இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சீக்கிரம் இந்த டிவோர்ஸ் பேப்பரில் கையெழுத்துப் போட்டுக் கொடு…” என்று மதுவின் முன் டிவோர்ஸ் பேப்பரை நீட்ட…
அவனைப் பார்த்துப் பெட்டில் இருந்த நிலானி, “மாமா… அவசரப்பட்டு எதுவும் முடிவெடுத்துடாதீங்க மாமா… இந்தக் கல்யாணம் எனக்கே தெரியாம நடந்திருச்சு. என்னால அக்கா வாழ்க்கை வீணா போயிடக் கூடாதுனு தான் நான் உயிரோட இருந்தால் என்னைக் காரணம் காட்டி என் அக்காவை மிரட்டுவீங்கன்னு தான் நான் என் உயிரை விடவே துணிஞ்சேன்.”
“நீங்க அக்காவுக்கு டிவோர்ஸ் கொடுத்துடாதீங்க மாமா… அக்கா பாவம், அவளுக்கு டிரீட்மென்ட் கொடுத்தால் எல்லாம் சரி ஆகிரும். கொஞ்சம் பொறுத்துக்கோங்க. அவளுக்கு டிரீட்மென்ட் பண்றதுக்கு எல்லாச் செலவும் நானே செய்றேன். எனக்கு உடம்பு சரி ஆனதும் நான் வேலைக்குப் போய்ப் எப்படியாச்சும் என் அக்காவுக்கு டிரீட்மென்ட் பார்த்து அவளைச் சரி பண்ணிடறேன் மாமா…” என்று நிலானி கதறி அழ.
அதைப் பார்க்க முடியாமல் விக்கி அவள் அருகில் வந்தவன் அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்று தெரியாமல் நிற்க…
அப்போது ரவி, “நான் நேத்து சொன்னது தான் இப்பவும்… நீயும் உன் அக்காவும் ஒரே வீட்டில் இனிச் சந்தோசமா இருக்கணும்னா… அவன் கட்டின தாலியைக் கழட்டிப் போட்டுட்டு நான் கட்டுற தாலியைக் கட்டிக்கிட்டு என்கூடக் குடித்தனம் நடத்துற வழியைப் பாரு…” என்றான்.
அவன் அப்படிச் சொன்னது தான் தாமதம், “மாமா…” என்று கத்தியவள் தன் கழுத்தில் இருக்கும் தாலியைப் பிடித்துக்கொண்டு. “என் தாலியை கழட்டச் சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு… என் அக்காவைக் கல்யாணம் பண்ணி அவ வாழ்க்கையைச் சீரழிச்சது போதாதுனு என் வாழ்க்கையை முடிவு பண்ற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?” என்று நிலானி அவனிடம் ஆத்திரம் பொங்கப் பேச…
அவள் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த விக்கிக்கு உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டது மனசு. தான் கட்டிய தாலியைக் கழட்டச் சொன்னதும் அவள் காட்டிய கோபம் அவள் அக்கா மதுவும் ரவியுமே அவளை இதுவரை பார்த்திராதது.
ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் பின் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ரவி அவளிடம், “ஏய்… என்னடி…. வாய் அதிகம் ஆகிடுச்சு என்ன… புதுசா ஒருத்தன் வந்து தாலி கட்டியதும் தைரியம் வந்திருச்சோ… அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா…” என்று நிலானியிடம் சண்டை இட வர…
அப்போது ரவியின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விழுந்தது. தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தவன் அங்கே கோபமே உருவாக மது நின்று இருந்தார். அவர்தான் தன்னை அறைந்தது என்று தெரிந்ததும் ஆத்திரம் வந்தவனாக…
“என்னடி…. உனக்கும் உன் தங்கச்சிக்கும் குளிர் விட்டுப் போயிருச்சா…. ரொம்பப் பண்றீங்க ரெண்டு பேரும்… என்ன அவன் உன் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்னை வெச்சுகிறேன்னு சொன்னா… அதனால தான் அக்காவும் தங்கச்சியும் ஓவரா ஆடுறீங்களா…” என்று கேட்டவன் மதுவை அறையக் கையை ஓங்க…
மதுவை அறைய வந்த கையைப் பிடித்துத் தடுத்த விக்கி, “பொம்பளையை கை நீட்டி அடிக்கப் போறியே… நீங்க எல்லாம் ஆம்பளையா… உனக்கு வெக்கமா இல்லை…” என்று விக்கி கோபமாகக் கேட்க…
“என்னடா… ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசம் சொல்ற மாதிரி இவளைக் கல்யாணம் பண்ணிட்டு என் பொண்டாட்டியை ஃப்ரீயா வெச்சுக்கலாம்னு நினைச்சுட்டியா…” என்று நாக்கூசாமல் ரவி பேச…
“ஐயோ… ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க மாமா…” என்று தன் காதில் கைவைத்து பொத்திக்கொண்டு அவன் பேசுவதைக் கேட்க முடியாமல் கத்திய நிலானி அப்படியே மயங்கிப் படுக்கையில் சரிந்தாள்.
அவள் திடீரென்று மயங்கி விழுந்ததும் பதறிய விக்கியும், மதுவும்… “நிலானி நிலானி…” என்று அவள் அருகில் வந்து அழைக்க… விக்கி நிலானியின் கன்னம் தட்டி… அவளை எழுப்ப அவன் கண் திறக்காமல் போகவே டாக்டரை அழைக்க… வெளியே செல்லப் போக சரியாக ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் அவர்கள் அறைக்குள் நுழையவும் விக்கி டாக்டரிடம் நடந்த விபரங்களைக் கூற…
அவர் வந்து நிலானியைச் செக் செய்து பார்த்துவிட்டு விக்கியிடம் திரும்பி… “என்ன மிஸ்டர் நேற்று இவங்களைக் காப்பாற்றச் சொல்லி அவ்வளவு தூரம் கெஞ்சிவிட்டு இன்று இவரைக் கொள்வதற்காக வேலை பார்க்கிறீர்களா… என்ன…”
“இவருக்குத் தலையில் அடிபட்டு ஆபரேஷன் பண்ணி இருக்கு… இந்த நேரத்தில் அவங்களை டென்ஷன் பண்ற மாதிரியான விஷயங்களைச் செய்து இவரது ஹெல்த் கண்டிஷனை மோசமாகப் பார்க்கிறீங்களா…” என்று விக்கியிடம் கடிந்து கொண்டவர். “அவங்களுக்குப் பிரஷர் ஆகுற மாதிரியான விஷயங்கள் எதையும் செய்யாதீங்க,” என்றவர் நிலானிக்கு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு, “அவங்க கொஞ்ச நேரத்தில கண் விழிச்சிருவாங்க,” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
அவர் வெளியே செல்லும் வரை அமைதியாக இருந்த ரவி… மதுவிடம் வந்து, “ஏய் வாடி…” என்று அவர் கையைப் பிடித்துக்கொண்டு வெளியே செல்லப் போக… அவன் கையை உதறிய மது.
“எப்போ நீங்க என்னை இன்னொருத்தர் கூட அதுவும் என் தங்கச்சி புருஷன் கூடச் சேர்ந்து பேசுனீர்களோ… அப்போவே உன் மேல நான் வெச்சு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிருச்சு…..” என்ற மது கீழே கிடந்த டிவோர்ஸ் பேப்பரை எடுத்துத் தன் கைப்பையில் இருந்து பேனாவை எடுத்து… டிவோர்ஸ் பேப்பரில் கையெழுத்துப் போட்டவள், “இந்தா…. இதை வெச்சுத் தானே நீ என்னையும் என் தங்கச்சியையும் பிளாக் மெயில் பண்ணிட்டு இருந்தே…”
“இந்தா… இதுல நீயும் கையெழுத்துப் போட்டுட்டா… எந்தப் பிரச்னையும் இல்லாம… பிரிஞ்சிரலாம். நானும் என் தங்கச்சியும் நிம்மதியா இருப்போம்,” என்று சொல்லி அவன் முகத்தில் டிவோர்ஸ் பேப்பரை வீசி எறிந்தவள். “இனிமேல் என் புருஷன்னு சொல்லிட்டு இந்தப் பக்கம் வந்துடாதே… முதல்ல இந்தா பேப்பரை எல்லாம் பொறுக்கிட்டு வெளியே போ…” என்று மது கத்த…
இத்தனை வருடமாகச் சாதுவாக இருந்த மதுவை இப்படிப் பத்ரகாளியாக பார்த்த ரவி அவளிடம் மேலும் வாய்க் கொடுக்காமல் தனக்கு வேண்டியது கிடைத்து விட்டது என்று டிவோர்ஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
அவர்கள் இருவரையும் அதிர்ச்சியாகப் பார்த்த விக்கி மதுவிடம், “என்னங்க…. யோசிக்காம கையெழுத்து போட்டுட்டீங்க…” என்று விக்கி கேட்க.
“நான் என்னைக்கோ இவனை விட்டு வந்திருப்பேன். ஆனா என் தங்கச்சி வாழ்க்கையை நினைச்சுட்டு தான் எனக்குன்னு ஒரு அங்கீகாரம் இருந்தால் தான் அவ வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் வராதுன்னு இருந்தேன்.”
“இப்போதான் அவளுக்குன்னு நீங்க இருக்கீங்களே…. இனியும் அவனால நிலானிக்கு எதுவும் பிரச்சனை வந்தால்… அவளைப் பார்த்துக்க நீங்க இருக்கீங்கள்ல,” என்றால் மது.
“நான் நிச்சயமா நிலானியை நல்லாப் பார்த்துக்கிறேன்,” என்றான் விக்கி.
“சரிங்க நான் கிளம்புறேன். நீங்க என் தங்கையை நல்லாப் பார்த்துக்கோங்க… என்னால் என் தங்கையை நல்லாப் பார்த்துக்க கூட முடியாத பாவி ஆகிட்டேன். நான் டிவோர்ஸ் பேப்பரில் கையெழுத்துப் போட்டது அவளுக்குத் தெரிய வேண்டாம்,” என்று மது சொல்ல…
“என்ன அக்கா எனக்குத் தெரிய வேண்டாம்? என்ன ஆச்சு?” என்று அப்போது தான் கண் விழித்த நிலானி பதட்டமாகக் கேட்க…
அவளிடம் என்ன சொல்லிச் சமாளிப்பது என்று தெரியாமல் நின்ற மது… எப்படியும் ஒரு நாள் நிலானிக்கு உண்மை தெரியத்தான் போகிறது என்று நினைத்தவர்.
“நான் ரவிக்கு டிவோர்ஸ் கொடுத்துட்டேன்…” என்றாள் மது.
“அக்கா!! என்ன சொல்றே?” என்று அதிர்ச்சியானவளை மது அருகில் சென்று அவள் கையைப் பிடித்து… “நீ… எதைப் பற்றியும் கவலைப்படாம நல்லா ரெஸ்ட் எடு… நான் பார்த்துகிறேன். இனியும் என்னால் அவன் கூட வாழ முடியாது. நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்திருக்கேன்,” என்று சொன்னவர்.
“நீ… இவர் கூட நல்லாச் சந்தோசமா… வாழற வழியைப் பாரு… இனியும் என்னைப் பற்றி நீங்க கவலைப் படாதே…” என்றவர் அவள் தலையை வருடி கொடுத்துவிட்டு… “சந்தோசமா இரு… நான் போய்ட்டு வரேன்,” என்று சொல்லி மது கிளம்பப் போக… “அக்கா எங்கே போறே…. நில்லு….” என்று நிலானி மதுவின் கையைப் பிடித்து நிறுத்த…
“கவலைப்படாதே நிலானி…. நான் தப்பான முடிவுக்கு எதுவும் போக மாட்டேன். நான் இங்க வரும்போது அந்த ரவியை டிவோர்ஸ் பண்ணனும்னு முடிவெடுத்துட்டு தான் வந்தேன்.”
“எப்போ நீ உயிருக்கு போராடிட்டு இருக்கிற அப்ப கூட உன்னைப் பார்க்கவோ உன் கூட இருக்கவோ விடாம என்ன வீட்டுக்குள்ள போட்டு அடிச்சு வச்சானோ….. அப்போவே நான் முடிவு பண்ணிட்டேன். அவன் இனிமேல் எனக்கு வேண்டாம்னு…. அதுவும் இல்லாம இன்னைக்கு என்னையும் உன் புருஷனையும் வெச்சு ரொம்பப் பேசிட்டான். அவன் இப்படிப் பேசுறது ஒண்ணும் புதுசு இல்லை.”
“ஆனா எனக்கு அதெல்லாம் ரொம்பச் சங்கடமா போயிடுச்சு. என்னால் இனிமேல் அவன் கூட வாழவே முடியாது. அதுக்காக நான் தப்பான முடிவுக்கு எதுக்கும் போக மாட்டேன் நிலானி, சரியா…. நீ உன் புருஷன் கூடச் சந்தோஷமா இரு… உங்க ரெண்டு பேருக்கு இடையில நான் இருக்க விரும்பல. நான் போயிட்டு வரேன்….” என்று சொல்லி அவள் கையைத் தன் கையில் இருந்து பிரிக்க அப்போது விக்கி அவரிடம் வந்து, “ஒரு நிமிஷம் இருங்க,” என்றான்.
அவனைப் புரியாமல் பார்த்த மதுவைப் பார்த்து… “நீங்க எங்கயும் போக வேண்டாம்… எங்க கூடவே இருங்க… நான் எப்படியும் இன்னும் ரெண்டு ஒரு நாளில் நான் டென்மார்க் போக வேண்டி இருக்கு.”
“என் ஃபிரெண்ட் கிட்டே எனக்குக் கல்யாணம் ஆன விஷயம் இன்னும் நான் சொல்லலை. அதனால அவன் கிட்ட நான் ஊருக்கு வர முடியாதுன்னு என்னால சொல்ல முடியாது. நான் எப்படியும் டிஸ்சார்ஜ் பண்ணினதும் நிலானியை ஹாஸ்டலில் இருந்து தனியா வீடு பார்த்து வைக்கணும்.”
“நான் அவளைத் தனியா விட்டுட்டு எப்படிப் போறதுன்னு யோசிச்சுட்டு தான் இருந்தேன். நீங்க தப்பா எடுக்கலைன்னா… எங்க கூட எங்க வீட்டிலேயே இருந்துருங்களேன். எனக்கும் நிலானியை நீங்கப் பார்த்துக்கிறீங்கன்னு நிம்மதியா ஊருக்குப் போவேன். உங்களுக்குப் பிரச்சனை இல்லைனு நினைச்சா. எங்க கூட இருங்க,” என்று சொல்ல…
மது என்ன சொல்வது என்று அமைதியாக இருக்க… “அக்கா…. ப்ளீஸ்… நீ எங்க கூடவே இருந்திரு…. எப்படியும் நீ திரும்ப ரவி கூடப் போக முடியாது இல்லையா… என் கூடவே இரு அக்கா ப்ளீஸ்….” என்று நிலானி கெஞ்ச.
விக்கியும், “உங்க தங்கச்சியை நீங்கப் பக்கத்துல இருந்து பார்க்கிற மாதிரி வேறு யாரையும் பார்க்க முடியாது. எங்க கூடவே இருந்திருங்க,” என்று மறுபடியும் சொல்ல…
இருவரின் வேண்டுகோளையும் தட்ட முடியாமல் சரி என்று மது ஒப்புக்கொண்டார்.
நிலானிக்கு மிகவும் சந்தோசமாகப் போய்விட்டது. அவள் நன்றியுடன் விக்கியைத் திரும்பிப் பார்க்க… அவன் நிலானியை ஒரு பார்வை பார்த்துவிட்டு மதுவிடம், “நீங்க கொஞ்ச நேரம் நிலானியைப் பார்த்துக்குங்க. நான் போய் நீங்க தங்குறதுக்காக எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
அவன் சென்றதும் நிலானியின் அருகில் வந்த மது…. “உன் வீட்டுக்காரர் ரொம்ப நல்லவரா இருப்பாரு போல… உன்னை நல்லாப் பார்த்துக்கணும்னு அவர் நினைக்கிறது எனக்கு நல்லாவே புரியுது….” என்ற மது.
“உனக்கு எப்படி அவர் பழக்கம் ஆனாரு?” என்று அவளிடம் விக்கியைப் பற்றிக் கேட்க… விக்கியைப் பற்றித் தயங்கிக் கொண்டே… நிலானி சொல்ல ஆரம்பித்தாள்.
கோவிலில் இருந்து சிவகாமி வீட்டிற்குச் சென்று மதிய உணவையும் முடித்துக்கொண்டு முத்து ஊருக்குக் கிளம்பத் தயாராக… வேதாசலமும்… சிவகாமியும் அவரை இங்கேயே இருக்கச் சொல்லி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் விடாப்பிடியாக ஊருக்குக் கிளம்பினார்.
சந்தோஷ் முத்துவுடன் கிளம்ப… அவனிடம் வந்த சிவகாமி, “ராஜா… என் அண்ணன் தான் நான் சொல்றதைக் கேட்க மாட்டேங்குது. நீயாவது வாரத்திற்கு ஒரு முறை ஆச்சும் வீட்டுப் பக்கம் வந்துட்டுப் போ ராஜா….” என்று சொல்ல…
“அத்தை நீங்க கவலையே படாதீங்க… நான் காலேஜ் எப்போ எல்லாம் லீவ் இருக்கோ அப்போ எல்லாம் தவறாம இங்கே வந்திடுறேன்,” என்றான்.
பிறகு அங்கிருந்து கிளம்பி அவன் அப்பா முத்துவை ஊருக்குப் பஸ் ஏற்றிவிட்டுவிட்டு வீட்டிற்கு வர… மணி நான்கு ஆகிவிட்டது…
வெளியில் சென்று வந்ததினால் வியர்த்து ஊற்றி கசகசவென இருக்க… ஒரு குளியலைப் போட்டு வந்தவன். ஷார்ட்ஸும் கை இல்லாத பனியனும் மாட்டிக்கொண்டு வந்து பெட்டில் விழுந்தவன் அசதியில் நன்கு தூங்கி விட்டான்.
இங்கு வீட்டில் ராதா எவ்வளவோ சொல்லியும் துரை அவளை டியூஷனுக்குச் சந்தோஷிடம் தான் போக வேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லிவிட… வேறு வழியே இல்லாமல் ராதா வீட்டில் அனைவரிடமும் சொல்லிவிட்டு அவருடன் டியூஷன் கிளம்பினாள்.
செல்லும் வழி எல்லாம் புலம்பிக் கொண்டே வந்தவள் அவன் சொன்ன அட்ரஸிற்குத் தன் அப்பா சரியாக வந்து வீட்டின் வெளியில் நின்று கொண்டு அவன் இருந்த வீட்டைப் பார்த்தவர். ஆவென வாயைப் பிளந்தார்.
‘இவ்வளவு பெரிய வீட்டில் இவன் மட்டும் தனியாக இருக்கிறானா!! அவ்வளவு வசதியோ…’ என்று நினைத்த துரை… ராதாவை அழைத்துக்கொண்டு வாசலின் கேட்டைக் தாண்டிச் செல்ல…
தூங்கிக்கொண்டு இருந்த சந்தோஷ் மாலை ஆனதும் எழுந்து முகம் கழுவிவிட்டு டவளால் முகத்தைத் துடைத்துக் கொண்டே… வெளியே கதவைத் திறந்து கொண்டு வர…
சரியாக ராதாவும் துரையும் உள்ளே வந்து கொண்டு இருந்தனர். அவர்களைப் பார்த்ததும் தான் ராதாவை டியூஷன் வரச் சொன்னதே நினைவிற்கு வர… அவர்களைப் பார்த்ததும், “வாங்க மாமா….” என்று அவரை உள்ளே அழைத்துக்கொண்டு செல்ல…
அவர் வீட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவர். “ஏன் தம்பி இவ்வளவு பெரிய வீட்டில் நீங்க மட்டும் தான் இருக்கீங்களா?” என்று கேட்க…
“ஆமாம் அங்கிள் நான் மட்டும் தான் இங்கே இருக்கேன். இது என்னோட மாமாவுடைய வீடு…. நான் வெளியில் தங்க வேண்டாம்னு சொல்லி என்னை இங்கே இருக்க வெச்சிட்டாரு,” என்றான்.
“சரிங்க தம்பி…. நீங்க டியூஷன் எடுங்க… நான் போய்ட்டுப் பிறகு வரேன். எனக்குக் கொஞ்சம் வெளியே வேலை இருக்கு,” என்று சொன்னவர். ராதாவிடம் திரும்பி, “ஒழுங்கா… படிக்கணும் என்ன..” என்று மிரட்டுவது போலச் சொன்னவர் இருவரிடமும் சொல்லி விட்டுக் கிளம்பினார்.
அவரை வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்த சந்தோஷ்… வீட்டிற்குள் வந்தவன் அவன் எடுக்க வேண்டிய பாடத்தைச் சொல்லி அவளை ஒரு முறை படிக்கச் சொல்லி விட்டு உள்ளே செல்ல…
உள்ளே செல்லும் வரை அவனையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ராதா… ஷார்ட்ஸ் அணிந்து இருந்ததால் முட்டிக்குக் கீழ் அவன் கால்களைப் பார்த்தவள்… ‘எவ்வளவு முடி… அவனுக்கு’ என்று நினைத்தவள் அப்படியே தன் பார்வையை மேலே உயர்த்த…
கை இல்லாமல் அணிந்து இருந்த பனியன் அவன் கட்டுக்கோப்பாக வைத்திருந்த உடலைப் பாதி பாதியாகக் காட்ட… அதைப் பார்த்தவள் மிடறு விழுங்கிக் கொண்டே நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்க… அதுவரை அவன் உள்ளே போகாமல் அவளைப் பார்த்துக் கொண்டு நின்று இருந்ததை ராதா கவனிக்கவே இல்லை.
அவன் முகத்தைப் பார்த்ததும் அவன் தன்னைத் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்று தெரிந்ததும் சட்டென்று தன் தலையைக் குனிந்து கொள்ள…
“என்ன என்னை நல்லா சைட் அடிச்சுட்டியா… படிக்கலாமா இப்போ?” என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் வர…
“நான் எங்கே உங்களை சைட் அடிச்சேன்? அதெல்லாம் ஒண்ணுமில்லையே…” என்று அவள் பதட்டமாகப் பேச…. “சரி சரி நம்பிட்டேன். புக்கை எடு,” என்றான்.
அவளை அங்கு இருந்த படிப்பதற்காக இருக்கும் அறையில் சென்று இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றவன் வேறு டி ஷர்ட்டைப் போட்டுக்கொண்டு வந்தவன் அவள் அருகில் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தவன்.
அவளுக்குப் பாடம் எடுக்க ஆரம்பித்தான். முதலில் கவனமாக இருந்த ராதா அவன் சொல்லிக் கொடுக்கும் போது அவ்வப்போது அவன் தோள்கள் ராதாவின் தோளை உரச… அவளுக்கு அவனின் இந்தச் சிறிய தீண்டல்… உடல் எங்கும் மின்சாரம் போலப் பாய்ந்தது.
உள்ளுக்குள் அவள் இதயம் படபடவெனத் துடிக்க… அதைச் சமன் செய்ய முடியாமல் அவள் திண்டாடிக் கொண்டு இருப்பது தெரியாமல் சந்தோஷ் தீவிரமாகப் பாடம் எடுத்துக்கொண்டு இருந்தான்.
அவன் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்க… அவளின் கவனம் பாடத்தில் இல்லாமல் இருப்பதை உணர்ந்தவன் நிமிர்ந்து ராதாவைப் பார்க்க… அவள் புக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் ஏதோ சரி இல்லை என்பதை உணர்ந்தவன். அவள் முகத்தை நன்கு உற்றுப் பார்க்க… அவள் முகத்தில் இருந்து வியர்வை வழிந்து கொண்டு இருந்தது.
அதைப் பார்த்தவன் எழுந்து சென்று ஓடிக் கொண்டு இருந்த மின்விசிறியின் வேகத்தை அதிகப் படுத்தியவன். கையில் புக்கை எடுத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டே… அவளுக்குப் பாடத்தில் முக்கியமான குறிப்புகளைச் சொல்லி எழுதச் சொல்லிக்கொண்டு இருந்தான்.
முகத்தில் வழிந்த வியர்வையைத் தன் தாவணித் தலைப்பில் முகத்தைத் துடைத்தவள் டேபிளில் கையை வைத்து எழுதிக்கொண்டு இருக்க…
மின்விசிறியின் காற்று அவள் தாவணிக்குள் சென்று அவள் இடுப்பை இவ்வளவு நேரம் மறைத்து இருந்த… தாவணியை விலக்க…
சரியாக சந்தோஷும் திரும்பி ராதாவைப் பார்க்க… அவள் பளிங்கு போன்ற இடுப்பு அவன் கண்களில் பட… இவ்வளவு நேரம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தவன் அப்படியே நிற்க… அவள் இடையையேப் பார்த்திக்கொண்டு நின்று இருக்க…
எழுதிக்கொண்டு இருந்த ராதா… நிமிர்ந்து அவனைப் பார்க்க… சட்டெனத் தன் தலையைக் குனிந்து கொண்டு புத்தகத்தைப் பார்ப்பவன் போல நடித்தவன் அடுத்து எழுதுவதற்காகச் சொல்ல ஆரம்பிக்க…. ராதா குனிந்து மீண்டும் எழுத ஆரம்பித்தாள்.
அவளுக்கு எழுதச் சொல்லிக் கொண்டே…. சந்தோஷ் காற்றில் ஆடும் அவள் தாவணி எப்போது விலகும்? அவள் இடுப்பை எப்படிப் பார்ப்பது என்று ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு இருக்க…
தன் இடுப்பு அப்பட்டமாக வெளியே தெரிவது கூடத் தெரியாமல் அமர்ந்து இருந்தவளை ஒரு முறை பார்த்தவன். தன்னைத் தானே நிதானித்துக் கொண்டு தலையைத் திருப்பிக் கொண்டான்.
இப்படியே நீண்ட நேரம் செல்ல…. சொல்லிக் கொண்டே… அவள் முகத்தைப் பார்க்க… சரியாகக் காற்றில் ஆடிக்கொண்டு இருக்கும் அவள் தலை முடியை இடது கையால் ஒதுக்கிக் கொண்டே ராதா எழுத…
கொஞ்சம் கொஞ்சமாகக் காட்சி அளித்துக் கொண்டு இருந்த அவள் இடுப்பு மொத்தமும் அவன் பார்வைக்கு விருந்தாக… அவ்வளவு தான் நடந்து கொண்டு இருந்தவன் அப்படியே நிற்க…
எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவே ராதா திரும்பி சந்தோஷைப் பார்க்க… அவன் ராதா தன்னை கவனிப்பது கூடத் தெரியாமல் அவள் இடுப்பையே வெறித்துக்கொண்டு இருந்தவனைப் பார்த்தவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது…. சட்டெனத் தன் தாவணியை இழுத்துத் தன் இடுப்பை மறைத்துக் கொண்டவள்.
“சார்… என்ன பண்ணிட்டு இருக்கீங்க….” என்றவள் அவள் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தவள் அந்த அறையை விட்டு எழுந்து சென்றாள்.
தான் அவள் இடுப்பைப் பார்த்து விட்டதை ராதா கவனித்து விட்டாள் என்று தெரிந்ததும் சந்தோஷிற்கு அவனை நினைத்து அவனுக்கே வெட்கமாகப் போய்விட்டது….
தன் தலையை அழுந்தக் கோதிய சந்தோஷ்… புக்கைத் மேஜை மீது வைத்து விட்டு வெளியே வர ராதா ஹாலில் இல்லாமல் போகவே அவளைத் தேடிக் கொண்டு வெளியே வர அவள் கோபத்துடன் வெளியே இங்கும் அங்கும் நடந்து கொண்டு இருக்க…
அவள் அருகில் சென்றவன் தயங்கிக் கொண்டே அவளை அழைக்க…. அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “இப்படி தான் உங்க கிட்டே டியூஷன் படிக்கிற பொண்ணுங்களை எல்லாம் தப்பாப் பார்ப்பீங்களா?” என்று அவனிடம் எரிந்து விழ…
அதுவரை அவளிடம் மன்னிப்புக் கேட்கலாம் என்று வந்தவன் அவள் படபடக்கும் கண்களையும்… சுண்டி இழுக்கும் விழிகளையும் பார்த்தவன் அப்படியே அதில் கிறங்கிப் போய் நின்று இருந்தவனின் முன்னாள் தான் கையை ஆட்டி ஆட்டி அவனிடம் பேசிக்கொண்டு இருந்தவளின் கையைப் பிடித்து இழுத்தவன் அப்படியே அவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டு போய்த் தனி அறைக்குள் விட்டவன் கதவைத் தாளிட அதில் பயந்து போனவள்.
“ச… சார்… இப்போ எதுக்குக் கதவைச் சாத்துறீங்க….” என்று பின்னால் நகர்ந்து கொண்டே…. கேட்டவளை ஒரே எட்டில் பிடித்து இழுத்தவன் அவன் அருகில் அவளை நிறுத்தி விட்டு… “என்கிட்டே டியூஷன் வரப் பொண்ணுங்களை எல்லாம் இப்படி நான் பார்க்க மாட்டேன்.”
“எனக்கு உரிமையானவளை மட்டுமே இப்படிப் பார்ப்பேன்,” என்றவன் அவள் இடுப்பில் கைவைத்து அவள் தாவணியை விளக்கிவிட்டு இடுப்பின் இருபுறமும் கைகொடுத்து அவளைத் தலைக்கு மேல் தன் முகத்திற்கு நேராக அவள் இடையைத் தூக்கியவன். அவன் மீசையை வைத்து அவள் வயிற்றில் கோலமிட…. அதுவரை திமிறிக் கொண்டு இருந்த…. ராதா…. உறைந்து போய் அப்படியே அசையாமல் இருந்தாள்.
