Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 82

உன் ரகசிய ரசிகை நான் 82

by Layas Tamil Novel
325 views

EPISODE 82

ஆதி அலுவலகம் சென்றிருக்க, மாளிகையில் சங்கவி வேலை ஆட்களிடம் தேவையில்லாமல் ‘அதைச் செய், இதைச் செய்’ என்று அவர்களை வேலை சொல்லி கொடுமைப்படுத்திக் கொண்டு இருந்தாள்.

வீட்டின் எஜமானி போல ஹாலில் சோபாவில் அமர்ந்து கொண்டு வேலை ஏவிக்கொண்டு இருக்க… முக்கியமான வேலையாக வீட்டிற்கு வந்த ஆதி வாசலில் வரும்போதே சங்கவி செய்து கொண்டு இருக்கும் அலப்பறைகளை எல்லாம் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவன் அவளைக் கண்டுகொள்ளாமல் மேலே செல்லப் போக…

அப்போது, “ஆதி” என்று அழைத்துக் கொண்டு அவன் அருகில் வந்த சங்கவி… “நான் காலையில எழுந்து வருவதற்குள் எனக்கு முன்னமே நீ ஆஃபீஸ் கிளம்பி போயிட்ட ஆதி. என்னையும் உன் கூட ஆஃபீஸ்க்கு கூட்டிட்டுப் போகச் சொல்லி மாமா சொன்னார் இல்லையா…. நானும் எவ்வளவு நேரம்தான் இங்க சும்மா தனியா உட்கார்ந்து டிவியையே பார்த்துட்டு இருக்கிறது. எனக்கு ரொம்ப போர் அடிக்குது ஆதி நானும் உன்கூட ஆஃபீஸ் வரேன்,” என்று சொன்னாள் சங்கவி.

“உனக்குப் போர் அடிக்குது என்பதற்காக எல்லாம் என்னால உன்னை ஆஃபீஸ் கூட்டிட்டுப் போக முடியாது,” என்றான் ஆதி.

அவன் இப்படிச் சொன்னதும் சங்கவிக்கு அவமானமாகப் போய்விட்டது. இருந்தும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவன் அருகில் வந்தவள்… அவன் கோபங்கள் நிறைந்த முகத்தைப் பார்த்து… ‘ச்சே… இவனை என் வலையில் விழ வைப்பதற்கு எதை எல்லாம் நான் சகித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது,’ என்று சலித்துக் கொண்டாள் சங்கவி.

ஆதியின் அருகில் வந்து, “என்னை மன்னிச்சிரு ஆதி. நான் நேற்று ஷாப்பிங் செய்துவிட்டு லேட்டாகத் தான் வந்து படுத்தேன். அதனால் தான் என்னால சீக்கிரம் எழுந்து கொள்ள முடியுவில்லை,” என்றாள் சங்கவி.

ஆனால் அவள் ஷாப்பிங் மட்டும் செல்லவில்லை… இரவு பப்பிற்குச் சென்று வயிறு முட்டக் குடித்து ஆட்டம் போட்டுவிட்டுத் தான் வந்திருக்கிறாள் என்று ஆதிக்கும் தெரியும். அதை அவளிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னிடமே நடிக்கும் அவளைப் பார்த்து அமைதியாக நின்றான்.

“நான் இனிமேல் சரியான டைம்க்கு வந்துடறேன் ஆதி. என்னைத் மன்னிச்சுடு,” என்றாள்.

“உண்மையாவே வேலை கத்துக்கணும்னு நினைச்சா நீயே கிளம்பி ஆஃபீஸ் வந்து சேரு… இந்தியாவில் இருந்து டென்மார்க் வரைக்கும் தனியா வரத் தெரிஞ்சவங்களுக்கு இங்க இருந்து ஆஃபீஸ் வரத் தெரியாதா என்ன…. நீ வர வரைக்கும் நான் வெயிட் பண்ணி உன்னைக் கூட்டிட்டுப் போகணுமா?” என்று அவள் முகத்தில் அறைந்தார் போல் சொல்லிவிட்டு ஆதி தன் ரூமுக்குச் சென்று விட்டான்.

தான் கேட்டதற்கு முகத்தில் அறைந்தார் போலப் பதில் சொல்லிய ஆதியை நினைத்துக் கடுப்பான சங்கவி தன்னைச் சுற்றிலும் பார்க்க அதுவரை அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த வேலைக்காரர்கள் சங்கவி திரும்பியதும் இதுவரை அங்கு நடந்ததை எதுவும் காணாதது போல வேலை செய்வது போல நடித்துக் கொண்டு நின்றிருந்தனர்.

அவர்களை ஒரு பார்வை பார்த்தவள் பின் வேகமாகத் திரும்பித் தன் அறைக்குள் சென்று ரெடியாகிவிட்டு வெளியே வந்து சோபாவில் அமர்ந்து விட்டாள்.

ஆதிக்கும் தன் அறைக்குச் சென்றவன் கையில் ஃபைலுடன் கீழே வர சங்கவி அவனுக்காகக் காத்திருந்தவள் வேகமாக எழுந்து “ஆதி நானும் உன் கூட ஆஃபீஸ் வரேன்,” என்று சொல்ல அவளைக் கீழே இருந்து மேலாகப் பார்த்தவன். “போர் அடிக்குது அப்படிங்குறதுக்காக ஆஃபீஸ் வரியா…. இல்ல வேலை கற்றுக் கொள்வதற்காக ஆஃபீஸ் வரியா?” என்று கேட்டான்.

“என்ன ஆதி இப்படிக் கேட்கிற? கண்டிப்பா நான் வேலை கத்துக்கிறதுக்காகத் தான் ஆஃபீஸ் வரேன் ஆதி,” என்று சொல்ல… சங்கவியை ஒரு பார்வை பார்த்தவன் “சரி வா,” என்று சொல்லிவிட்டு வேகமாக முன்னே செல்ல அவன் பின்னால் ஓடினாள் சங்கவி.

டிரைவர் காரை எடுக்க ஆதி அமர்ந்திருக்க அவன் அருகில் இருக்கும் கதவைத் திறந்து கொண்டு சங்கவி அவன் அருகில் உட்கார வர… தன் அருகில் அமர வந்த சங்கவியைப் பார்த்து எரித்துவிடுவது போல ஆதி பார்க்க…. அவன் பார்வையில் காட்டிய கோபத்திலேயே பயந்து கொண்டவள் காரின் பின் சீட்டின் கதவைச் சாத்திவிட்டு வந்து டிரைவர் சீட்டின் அருகில் இருந்த கதவைத் திறந்து கொண்டு முன்னால் அமர்ந்தாள்.

எதுவும் பேசாமல் அமைதியாக வந்த சங்கவி தன் மனதிற்குள் ‘நான் பின்னாடி உன் கூட உட்கார்ந்து வந்தால்….. உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா…. உன்னை எப்படியாவது அந்த துர்கா கிட்ட இருந்து பிரிச்சு… நான் உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு இதே மாதிரி நான் உன் கூட கார்ல பின்னாலே உனக்கு ஜோடியாக உட்கார்ந்து வர நான் இல்லையா பாரு,’ என்று தனக்குள்ளேயே சபதம் எடுத்துக் கொண்டாள் சங்கவி.

திடீரெனத் தன் மொபைலில் நோட்டிஃபிகேஷன் சவுண்ட் கேட்கவும் யார் என்று பார்க்க நோட்டிஃபிகேஷனில் ஷிவு என்று வந்திருந்தது. ‘ஷிவு கிட்ட இருந்து என்ன மெசேஜ்?’ என்று யோசித்துக் கொண்டே அந்த மெசேஜை ஓபன் செய்து பார்க்க அதில் வரிசையாக நான்கைந்து படங்கள் துர்காவும் விக்கியும் ஒன்றாக பெட்டில் நெருக்கமாக இருப்பது போன்று ஃபோட்டோ வந்திருந்தது. அதைப் பார்த்ததும் சங்கவிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஏனென்றால் துர்காவும் விக்கியும் நல்ல நண்பர்கள் என்று அவளுக்குத் தெரியும். இருந்தும் வேண்டுமென்றே ஷிவுவிடம் துர்கா விக்கியும் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று பொய் சொல்லி இருந்தால் சங்கவி.

ஆனால் இன்று இவள் அனுப்பி இருந்த ஃபோட்டோவைப் பார்த்த சங்கவிக்கே இதை நம்ப முடியவில்லை. நிஜமாகத்தான் இருவரும் ஃபிரண்ட்ஸ் என்று சொல்லிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் இப்படி நெருக்கமாக இருக்கிறார்களோ என்று சங்கவிக்குத் தோன்ற ஆரம்பித்தது.

ஒவ்வொரு ஃபோட்டோவையும் ஓபன் செய்து பார்த்த சங்கவியால் அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை.

சங்கவி தன் அருகில் ஆதி இருந்ததால் ஷிவுவிடம் கால் செய்து பேசாமல் அவளுக்கு மெசேஜ் செய்தால். “என்ன ஷிவு இந்த மாதிரி ஃபோட்டோஸ் எல்லாம் அனுப்பி இருக்க?” என்று மெசேஜ் அனுப்பி இருக்க…..

அவள் அனுப்பிய அடுத்த நிமிடமே ஷிவு மெசேஜைப் பார்த்துவிட… உடனே சங்கவிக்குப் பதில் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தாள்.

“சங்கவி அக்கா நீங்க இந்தப் ஃபோட்டோஸ் எல்லாம் பார்த்தீர்களா? இது எல்லாம் நீங்க ஃபோட்டோல பாக்குறதுக்கு உங்களுக்கு அதிர்ச்சியா இருந்திருக்குதா…. ஆனா இந்தக் கன்றாவியை எல்லாம் நான் என் கண்ணால பார்த்தேன்,” என்று ஷிவு சொல்ல…

“உண்மையாத் தான் சொல்றியா நீ? உண்மையா அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா கட்டிலிருந்ததைப் பார்த்தியா…. இது உண்மை தானா?” என்று கேட்டாள் சங்கவி.

“என் ரெண்டு கண்ணால நேரில் இந்தக் கன்றாவியை எல்லாம் பார்த்தேன் அக்கா… என்னால இதைப் பார்த்துட்டு சும்மா இருக்க முடியலை… அதனால தான் நான் உங்களுக்கு இந்தப் ஃபோட்டோவை எல்லாம் அனுப்பி வச்சேன்,” என்றால் ஷிவு.

“நீங்க இந்தப் ஃபோட்டோவை எல்லாம் பார்த்தீங்கல்ல அக்கா… அன்னைக்கு நாம் எடுத்த ஃபோட்டோவைக் காட்டிக் சொன்ன கூட யாரும் நாம சொல்றதை நம்ப மாட்டாங்க…. ஆனா… இப்ப எடுத்த ஃபோட்டோவை யார் பார்த்தாலும் கண்ணை மூடிட்டு நம்பிருவாங்க…. நீங்க ஆதி மாமாகிட்ட இந்தப் ஃபோட்டோவை எல்லாம் காட்டுங்க…. ஆதி மாமா ஊரில் இல்லாத போது அந்தக் விக்கியும் துர்காவும் ஒண்ணாச் சேர்ந்து இங்கே கூத்தடிச்சிட்டு இருக்கிறது அவருக்குச் சொல்லுங்க சங்கவி அக்கா. என்னால இதையெல்லாம் பார்த்துட்டு இங்க இருக்கவே முடியல… எனக்கு ரொம்பக் கடுப்பா இருக்கு,” என்று மெசேஜ் அனுப்பி இருந்தால்.

“நான் சமயம் பார்த்துக் ஆதி கிட்டச் சொல்லிக்கிறேன் ஷிவு,” என்று சொல்லி அவளுக்கு மெசேஜ் அனுப்பி வைத்துவிட்டு துர்காவும் விக்கியும் இருந்த ஃபோட்டோவை எடுத்து ஜூம் செய்து பார்த்துக் கொண்டிருந்த சங்கவி இதை எப்படி ஆதி கிட்டே சொல்றது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டு இருக்க…

காரின் பின் சீட்டில் அமர்ந்து இருந்த ஆதி சங்கவி தன் மொபைலில் எதையோ தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவன் அவளைப் பார்த்துவிட்டுத் திரும்பப் போனவன் ஏதேச்சையாக அவள் மொபைலைப் பார்க்கவும் அதில் துர்காவின் ஃபோட்டோ இருந்ததும் ‘இவ எதுக்கு லக்ஷு ஃபோட்டோவைப் பார்த்துட்டு இருக்கா….’ என்று யோசித்தவன்.

சற்றும் தாமதிக்காமல் வேகமாகப் பின் சீட்டிலிருந்து வந்தவன் அவள் கையில் இருந்த போனை வெடுக்கென்று பிடுங்கி அந்த ஃபோட்டோவைப் பார்க்கப் போக….

அப்படியே உறைந்து போய்ச் அமர்ந்து இருந்தான் ஆதி. அதைப் பார்த்த சங்கவி ‘இனி என் வேலை முடிந்தது’ என்று நினைத்துக் கொண்டால்.


காலை நேரமே நிலானியை டிஸ்சார்ஜ் செய்ய ஹாஸ்பிடல் சென்ற விக்கி நிலானியின் அறைக்கு வர….

மதுவும் ஏற்கனவே கிளம்புவதற்காக அனைத்தையும் பேக் செய்துவிட்டு அமர்ந்திருக்க…

நிலானி கட்டிலில் படுத்துக்கொண்டு போனை நோண்டிக் கொண்டு இருந்தவள், கதவைத் திறந்து கொண்டு விக்கி வரவும் அவனைப் பார்த்தவள் தன் மொபைலை ஆஃப் செய்து வைத்துவிட்டு அவனைப் பார்க்க…..

உள்ளே வந்த விக்கியும் முதலில் நிலானியைத் தான் பார்த்தான். அவன் பார்த்ததும் சட்டென்று தன் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு போன் நோண்டுவது போலப் பாவனை செய்தால் நிலானி.

அவளைப் பார்த்துச் சிரித்தவன் மதுவைப் பார்த்ததும் “எல்லாம் ரெடியா இருக்கும் போலயே.. நீங்களே பேக் பண்ணிட்டீங்களா?” என்று கேட்டான் விக்கி.

அவனைப் பார்த்ததும் எழுந்து நின்ற மது “நாங்க ரெடியா இருக்கோம். நீங்க எப்போப் போலாம்ன்னு சொல்றீங்களோ அப்போ கிளம்பிடலாம்,” என்று மது சொல்ல….

“சரி,” என்று தலையாட்டியவன் “நீங்க இனிமேல் என்னைத் ‘நீங்க’, ‘வாங்க’, ‘போங்கன்னு’ சொல்லாதீங்க. என் பேர் சொல்லி ‘விக்கி’ன்னு கூப்பிடுங்க,” என்றான்.

அதற்கு மதுவும் “அப்போ நீங்களும் என்னை பேர் சொல்லிக் கூப்பிடுங்க. நானும் உங்களை பேர் சொல்லியே கூப்பிடுறேன்,” என்றாள் மது.

சிரித்துக் கொண்டே விக்கி “சரி மது,” என்றான். மதுவோ “நான் உங்களைப் பேர் சொல்லிக் கூப்பிட்டால்….. நிலானி என்னிடம் கோபித்துக்கொள்ளப் போகிறாள்.”

“என் வீட்டுக்காரர் பேரை எதுக்குச் சொல்லிக் கூப்பிடுறேன்னு சொல்லிப் பேசுவா…” என்று மது சொல்ல…

அப்போது அவர்கள் அறைக்குள் வந்த துர்காவும் கீர்த்திகாவும் … “நிலானி எதுவும் சொல்ல மாட்டாள். நீங்க விக்கியை பேர் சொல்லியே கூப்பிடுங்க,” என்றாள் துர்கா.

அவர்கள் இருவரையும் பார்த்ததும் நிலானி சிரித்துக் கொண்டே “வாங்க லக்ஷு அக்கா… வா… கீர்த்து…” என்றவள் அவர்களோடு சேர்ந்து “நான் எதுவும் சொல்ல மாட்டேன்,” என்று மதுவைப் பார்த்துச் சொன்னாள்.

“அப்புறம் என்ன? உங்க தங்கச்சியே ஓகே சொல்லிட்டா.. நீங்களும் என்னைத் ‘விக்கி’ன்னு சொல்லியே கூப்பிடுங்க,” என்றான் விக்கி.

நிலானியிடம் வந்த விக்கி “போகலாமா?” என்று கேட்க…. அவள் “ம்ம்ம்” என்று வெட்கப்பட்டுக் கொண்டு தலையை ஆட்டவும் மெல்லச் சிரித்த விக்கி நிலானியைத் தூக்கி வீல் சேரில் அமர வைத்தவன் சேரைத் தள்ளிக்கொண்டு அவன் கார் அருகில் சென்றவன்.

மது துர்கா கீர்த்திகா மூவரும் மற்ற பொருட்களை எடுத்துக் கொண்டு அவனுடன் சென்றனர்..

நிலானியைச் சௌகரியமாகக் காரில் அமர வைத்தவன். மதுவைத் துர்கா வந்த காரில் வரச் சொன்னான்.

அவன் சொல்வதைக் கேட்டதும்… “பொண்டாட்டி வந்ததும் நம்மளை எல்லாம் இப்பவேக் கழட்டி விட்டுட்டுப் போறான்,” என்று கிண்டல் செய்த துர்கா அவர்கள் இருவருடனும் சேர்ந்து விக்கியின் புதிய வீட்டிற்குப் புறப்பட்டாள்.

நிலானியை மட்டும் அழைத்துக் கொண்டு விக்கி முன்னே செல்ல…. அவர்களைப் பின் தொடர்ந்து துர்காவின் கார் வந்ததும். வரும் வழி முழுவதும் விக்கியும் நிலானியும் எதுவும் பேசவில்லை.

விக்கியின் கார் அவன் அப்பார்ட்மென்ட்க்கு வரவும் துர்கா வந்த காரும் சரியாக ஒன்றாக வந்து நிற்க விக்கி நிலானியைத் தூக்கி வீல் சேரில் அமர வைத்தவன். அவளைத் தள்ளிக் கொண்டு லிஃப்டில் சென்று முதல் தளத்திற்கு அனைவரையும் அழைத்துச் சென்றான்.

அவன் வீடு இருக்கும் முதல் தளம் வந்ததும் லிஃப்டில் இருந்து வந்து அவன் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே போகப் போனவனை துர்கா “ஒரு நிமிஷம் இங்கேயே இருங்க,” என்று சொன்னவள் தன் கையோடு கொண்டு வந்திருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு கிச்சனுக்குள் சென்று வேகமாக ஒரு தட்டில் நீரை ஊற்றி ஆரத்தி கரைக்க எடுத்து வந்த பொருட்களைப் போட்டு ஆரத்தி கரைத்து எடுத்து வந்தாள்.

மதுவையும், கீர்த்திகாவையும் தன்னுடன் அழைத்து நிலானியையும் விக்கியும் ஒரு சேர நிற்கச் சொல்லி ஆரத்தி எடுத்து இருவருக்கும் பொட்டு வைத்து அவர்களை வலது காலை எடுத்து வைத்து உள்ளே செல்லுங்கள் என்று சொன்னவள் கீர்த்திகாவிடம் ஆரத்தித் தட்டைக் கொடுத்து வெளியில் ஊற்றி வரச் சொன்னாள்.

“என்ன இங்கேயே இருக்கீங்க ரெண்டு பேரும்? வலது காலை வெச்சு உள்ளே வாங்க,” என்றாள் துர்கா.

அவளை விக்கி நக்கலாகப் பார்த்து “நான் எடுத்து வலது காலை வச்சு வந்திடுவேன். இவ எப்படி வருவா?” என்று சொல்ல….

“ம்ம்ம்… சும்மா சும்மா உன் பொண்டாட்டியைத் தூக்கிட்டு வரேல்ல…. இப்பவும் அப்படியேத் தூக்கிட்டு உள்ள வாடா….” என்று சொல்லிவிட்டு மதுவை அழைத்துக்கொண்டு துர்கா உள்ளே சென்றாள்.

விக்கிக்கு இவ்வளவு நேரம் நிலானியைத் தூக்கிக் கொண்டு வந்தது கூடப் பெரிதாகத் தெரியவில்லை.

ஆனால் அவளைத் தன் மனைவியாக முதன் முதலில் தன் வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறோம் என்ற நினைப்பே அவனுக்குள் சந்தோஷத்தை வரவழைத்து இருந்தது….

அதே சந்தோஷத்தோடு நிலானியைப் பார்க்க அவள் வெட்கத்தோடு தலைகுனிந்தவாறு அமர்ந்திருந்தால்… விக்கிக்கு அவளுடைய நிலை புரிந்ததால் எதுவும் சொல்லாமல் மெல்லக் குனிந்து அவளைத் தன் கைகளில் ஏந்தியவன் தன் வலது காலை வைத்து நிலானியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவன் நேராக அவர்கள் இருக்கும் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெட்ரூமில் கொண்டு போய்ச் நிலானியைப் படுக்க வைத்தவன் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு வெளியே வந்தான்.

மற்ற அனைவரும் வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வீட்டை மிக அருமையாக மாற்றி அமைத்து இருந்த விக்கியைப் பார்த்து “வீடு ரொம்ப அழகா இருக்கு விக்கி. உன் பொண்டாட்டி வரான்னு சொல்லிட்டு வீட்டை எவ்வளவு வேகமா மாத்தி இருக்க…. ஒரே நாள்ல இத்தனை வேலையும் நீ தனியாச் செஞ்சியா?” என்று துர்கா ஆவலாகக் கேட்க…. “நான் எப்படித் தனியாச் செய்ய முடியும்? ஆள் வச்சுத் தான் செஞ்சேன்,” என்றான் நக்கலாக….

“உனக்கு ரொம்பக் குறும்பு ஆகிருச்சுடா…” என்று அவனை அடித்த துர்கா நிலானியைப் பார்க்க பெட் ரூமிற்குள் சென்றுவிட்டாள். அவளுடன் மதுவும், கீர்த்திகாவும் சென்றுவிட்டனர்.

அனைவரும் கதை பேசிக்கொண்டு இருக்க… மதியமும் வந்துவிட…. மதிய உணவு அனைவரும் அங்கேயே ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு மாலை ஆனதும் துர்கா கீர்த்திகாவும் “எங்களுக்கு நேரமாச்சு நாங்க கிளம்புறோம்,” என்ற துர்கா.

கீர்த்தியிடம் “கீர்த்தி நாளைக்கு இன்னிக்கு ஈவ்னிங் நானும் விக்கியும் டென்மார்க் போறோம். நீ அப்பப்போ வந்து நிலானியையும் மதுவையும் பார்த்துட்டு அவளுக்கு ஏதாவது வேணும்னா கேட்டு நீயும் கதிரும் அப்பப்போ வந்து பாத்துக்கோங்க,” என்று சொல்ல “சரி அக்கா நான் வந்து பாத்துக்கிறேன்,” என்றாள்.

பின் இருவரும் நிலானியிடம் சொல்லிவிட்டு கிளம்பப் போன துர்கா விக்கியிடம் திரும்பி “டேய் கல்யாணம் ஆகிவிட்டது என்று உன் பொண்டாட்டியை கொஞ்சிட்டு இங்கேயே இருந்துடாதே…. ஊருக்குப் போறது மறந்துடாத. கரெக்டா டைமுக்கு வந்துரு,” என்று சொல்லிவிட்டு துர்கா சென்றாள்.

மாலை வரை விக்கிக்கும், நிலானிக்கும் தனிமை கிடைக்கவே இல்லை… ஒருவர் மாற்றி ஒருவர் அவளுக்குச் சாப்பாடு கொடுப்பதும்… மருந்து கொடுப்பதும் என்று வந்து கொண்டே இருக்க இப்போதுதான் நிலானியுடன் இருப்பதற்கு விக்கிக்கு நேரம் கிடைத்தது.

மது கிச்சனில் பொருட்களை எடுத்துவைத்துக் கொண்டு இருக்க… ‘இதை விட்டால் நிலானியைத் தனியாகப் பார்க்க முடியாது’ என்றவன் ஹாலில் இருந்தவன் நைசாக நிலானியைப் பார்க்க வந்தான்.

உள்ளே வந்தவன் பெட்ரூம் கதவைச் சாத்திவிட்டு வந்து நிலானியின் அருகில் அமரவும் அவளுக்குப் பதட்டம் தொற்றிக் கொண்டது.

விக்கி அவளைப் பார்க்க நிலானிக்கு அவனை இவ்வளவு அருகில் பார்க்கவும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தாள்.

அவள் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க விக்கி தன் தொண்டையைச் செருமிக் கொண்டு அவளைப் பார்க்க…. அவனை நிமிர்ந்து பார்த்த நிலானி…. தன்னைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் விக்கியைப் பார்த்ததும்…. வெட்கம் வந்துவிடச் சட்டென்று தன் தலையைக் குனிந்து கொண்டாள் நிலானி.

மேலும் அவள் அருகில் நெருங்கி வந்து அமர்ந்த விக்கி “நிலாக்குட்டி…” என்று அழைக்க…. அவள் எதுவும் பேசாமல் அமைதியாகத் தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்தால்.

தன்னை நிமிர்ந்து பார்க்காமல் அமர்ந்து இருந்தவளின் முகத்தைத் தன் ஆட்காட்டி விரலால் லேசாகப் பிடித்து அவள் முகத்தை உயர்த்த…… அவனை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் அவள் தவிப்பது அவள் முகத்தில் தெரியவே…

நிலானியைத் தன்னைப் பார்க்கச் சொல்லி வற்புறுத்தாமல் பேச ஆரம்பித்தான் விக்கி…. “எனக்குப் புரியுது நிலாக்குட்டி…. நம்ம ரெண்டு பேருக்கும் திடீர்னு கல்யாணம் ஆனதும் என்கிட்ட எப்படிப் பேசுறது… பழகுறதுன்னு எதுவும் தெரியல அப்படித்தானே…..” என்றான் விக்கி.

அவள் “ம்ம்ம்….” என்று மட்டும் கண்கள் மூடித் தலையை ஆட்ட… “நீ எதையும் போட்டு குழப்பிக்காம உன்னோட உடம்பு சரியாகுறதைப் பற்றி மட்டும் யோசி… சரியா… நாம ரெண்டு பேரும் அவசரப்படாமப் பொறுமையா லவ் பண்ணலாம்… அதுக்கப்புறம் நம்ம வாழ்க்கை ஆரம்பிக்கலாம். எனக்கு வேற எதுவும் வேண்டாம். இப்ப நீ எனக்கு உரிமையானவன்னு ஆகிட்டே… அதனால இனிமேல் நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியா இருக்கப் போறேன். ஏன் தெரியுமா?” என்றவன் எதுவும் பேசாமல் நிறுத்த.

அவன் பேசுவதை நிறுத்தியதும் தன் கண்கள் திறந்து நிலானி விக்கியைப் பார்க்க…

“நீ என்னைக் லவ் பண்றேன்னு எனக்குத் தெரியும்,” என்றான்.

நிலானி அதிர்ச்சியாக விக்கியைப் பார்த்தவள் “உ.. உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்க…

“உன்னோட வார்டன் பையன் கணேஷ் இருக்கானே… அவன் தான் என்கிட்டே சொன்னான்,” என்றான் விக்கி. அவன் அப்படிச் சொன்னதும் நிலானிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அவனைப் பார்க்க…. நிலானியைப் பார்த்து மெல்லச் சிரித்த விக்கி…

அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன் நிலானியின் நெற்றியில் லேசாக இதழ் பதித்தவன். அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தி “நிலாக்குட்டி ஐ லவ் யூ….” என்றவன் அவளை விட்டுச் சட்டென்று எழுந்து கொள்ள….

விக்கி சட்டென்று தன்னிடம் இருந்து விலகவும் நிலானி என்னவோ என்று அவனைப் பார்க்க…..

“சாரி நிலாக்குட்டி. இன்னும் கொஞ்ச நேரம் நான் இங்கே இருந்தேன்னா என்னோட கண்ட்ரோலை நான் இழந்துவிடுவேன்,” என்றான்.

பின் தலையை அழுந்தக் கோதி தன்னைச் சமன் செய்து கொண்டவன். அவளைப் பார்த்து “எனக்கு டைம் ஆகுது. நான் இப்போக் கிளம்பினால் தான் ஏர்போர்ட் போகச் சரியா இருக்கும். நீயும் உன் அக்காவும் பத்திரமா இருங்க,” என்றவன் அங்கிருந்து நிலானியை ஏக்கமாகப் பார்த்தவாறே வெளியில் வந்தான்.

ரூமை விட்டு வெளியே வர ஹாலில் மது அமர்ந்துகொண்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்தால். அவளைப் பார்த்ததும் மது “நாளைக்குக் காலையில வேலைக்கு ஆள் வந்திடுவாங்க. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. நைட் இரண்டு பேரும் தனியா இருக்கணும்னு வருத்தப்பட வேண்டாம். உங்க பாதுகாப்புக்காக எல்லா ஏற்பாடும் நான் செஞ்சு வச்சுட்டுத் தான் போறேன். அதனால பயம் இல்லாம நிம்மதியா இருங்க,” என்று சொன்னவன்.

“சரி நான் கிளம்புறேன். இப்போக் கிளம்புனால் தான் எனக்கு ஏர்போர்ட் போக டைம் சரியா இருக்கும். நீங்களும் நிலானியும் இன்னைக்கு ஒரு நாள் நைட் மட்டும் கடையில் ஆர்டர் பண்ணிச் சாப்பிட்டுக்கோங்க. நாளைக்குக் காலைல வேலைக்கு ஆட்கள் வந்து விடுவாங்க. வேற எதுவும் வேணும்னா வெளிய இருக்க நம்ம ஆளுகிட்ட சொல்லி என்ன வேணுமோ வாங்கிக்கோங்க. இதுதான் அவங்களோட போன் நம்பர்,” என்று வேலைக்கு வரும் ஆட்களின் நம்பரை அனைத்தையும் கொடுத்தவன்.

“இங்கே உங்க ரெண்டு பேருக்கும் பாதுகாப்பு இல்லைன்னு நீங்க பயந்துக்காதீங்க. அந்த ரவியால் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இங்கே வராது. எல்லாம் பாதுகாப்பா இருக்கிற மாதிரி நான் ரெடி பண்ணி வச்சுட்டுத் தான் கிளம்புறேன்.”

“நீங்க பயமில்லாமல் காலையில வேலைக்குப் போயிட்டுச் சாயங்காலம் வரலாம். நிலானியும் இங்கே பத்திரமா இருப்பா,” என்று சொல்லிவிட்டு அவளிடம் விடை பெற்று விட்டு அங்கிருந்து ஏர்போர்ட் கிளம்பினான் விக்கி.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured