EPISODE 86
கதிரின் ஆஃபீஸில் மது ரிசப்ஷனில் காத்திருக்கிறாள் என்று தெரிந்ததும் கதிர் பவனிடம், “அவங்க தான் இன்னிக்கு நான் வரச் சொன்ன நியூ ஜாயினி. அவங்களை உள்ள விடவேணாம்னு சொல்லிட்டு வந்திருக்கே லூசு….” என்று பவனைத் திட்டியவன்.
ரிசப்ஷனிற்கு கால் செய்து மதுவை மேலே அவன் இருக்கும் தளத்திற்கு அனுப்பச் சொல்லிப் போனை வைத்த கதிர்.
“பவன்…. போ… போய்ப் மது வந்ததும் அவங்களை என் கேபினுக்குக் கூட்டிட்டு வா….” என்று கதிர் அவனைப் போகச் சொல்ல…
“பாஸ் நான் போகலை அவங்களை கூப்பிட…. நான் போனா அந்தப் பொண்ணு என்னைக் கண்டாலே எரிஞ்சு விழுது… நான் என்னவோ அவங்களை ஏமாத்திக் கூட்டிட்டுப் போற மாதிரிப் பேசுறாங்க…” என்று அங்கேயே நின்று கொண்டான்.
“டேய் அவங்க அந்த மாதிரி எல்லாம் பேசி இருக்க மாட்டாங்க…” என்றான் கதிர்.
“பாஸ் நான் போய்ச் சொல்லலை அவங்க நிஜமாவே என்னைத் திட்டுனாங்க… நீங்க யாரு எனக்கு ஹெல்ப் பண்ண… நான் உங்களைக் கேட்டேனா அப்படி இப்படின்னு திட்டினாங்க பாஸ்,” என்றான் பவன்.
கதிர் பவனிடம், “அவங்க அப்படிப் பேசினதுக்குக் காரணம் இருக்கு டா… ஏன்னா அவங்க வாழ்க்கையிலப் பெரிய ஏமாற்றத்தைச் சந்திச்சுட்டு அதைத் தாண்டி வரணும்னு முடிவோடு வெளி உலகத்துக்கு வந்திருக்காங்க… அப்படி இருக்க அப்போ அவங்களுக்குப் பாக்குற எல்லாமேப் பயத்தை தான் கொடுக்கும்.”
“நீ தேவையில்லாமப் பேசிட்டு நின்னுட்டு இருக்காதே… நான் அவங்களைப் பத்தி நேரம் வரும்போது சொல்றேன். நீ முதல்ல போய்ப் அவங்களைக் கூட்டிட்டு வா…” என்றான் கதிர்.
பவன் தயங்கிக் கொண்டே…. “பாஸ்….” என்று கதிரைப் பார்க்க…
“யூ… இடியட்.. போய்க் கூட்டிட்டு வாடா… போ…” என்று கூச்சலிட… “ஓகே பாஸ்” என்று விரைப்பாக நின்று கதிருக்குச் சல்யூட் அடித்துவிட்டு வெளியே சென்றான் பவன்.
அவன் சென்றதைப் பார்த்துக் கொண்டு சிரித்துவிட்டு வேலையைப் பார்த்தான் கதிர்.
ரிசப்ஷனில் மதுவைப் பதினாறாவது தளத்திற்குப் போகச் சொல்ல… அவள் லிஃப்ட்டில் ஏறிப் பதினாறாவது தளத்திற்கு வந்ததும் லிஃப்ட் கதவு திறக்க…
கதவு திறந்ததும் மது லிஃப்ட்டை விட்டு வெளியே வரவும் அவள் எதிரில் பவன் சர்ரென்று வந்து நிற்க நினைத்தவன் பேலன்ஸ் தவறி மதுவை இடிப்பது போல அவள் முன்னே வந்து நின்று அவள் மீது விழுந்து விடாமல் நிதானித்து நின்றான்.
தன் மீது வேண்டும் என்றே வந்து விழுகிறான் என்று மது பவனைத் தப்பாகப் புரிந்து கொண்டு அவனைப் பார்த்து முறைத்தவள்.
“ஏய்… இப்படித் தான் மேலே இடிக்குற மாதிரி வந்து நிக்குறது… கொஞ்சம் கூட அறிவே இல்லையா உனக்கு…” என்று மது அவனைத் திட்ட…
“ஹலோ… ஹலோ… நான் வந்து வேணும்னு உங்களை இடிக்குற அளவுக்கு அங்க ஒன்னுமில்லை,” என்றவன். அவள் முகத்தைப் பார்த்து ஏனோ அதற்கு மேல் அவளை எதுவும் சொல்ல விரும்பாமல் “ஸ்லிப் ஆகித் தான் வந்து விழுந்தேன்,” என்றான் பவன்.
அவனை முறைத்துவிட்டு பவனைத் தாண்டி உள்ளேச் செல்ல… அங்கே பதினாறாவது தளம் முழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது.
கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு இயங்கிக் கொண்டு இருந்த அந்தத் தளத்தைப் பார்த்ததும் மதுவின் முகம் சந்தோஷமாக மாற…
அவளைப் பார்த்ததில் இருந்து முகத்தைச் சோகமாக… உம்மேன்று வைத்திருந்ததைப் பார்த்து இருந்த பவன்.
இப்போது சிரித்த முகமாக அவள் இருப்பதைப் பார்த்ததும் அவனுக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது அவன் சிரிப்பை ரசித்துக் கொண்டே அவள் அருகில் வந்தவன்.
“இப்படியே இங்கேயே நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம் வாங்க என் பின்னாடி,” என்று பவன் முன்னே செல்ல…
அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தவள் “யாரு சார் நீங்க தேவையில்லாம வந்து வந்து என்கிட்டே பேசிட்டு இருக்கீங்க… நீங்க சொல்றதை எல்லாம் கேட்க நான் வரலை….. இங்கே வேலைப் பார்க்க வந்திருக்கிறேன்,” என்று சொல்லி அவனிடம் சிடு சிடுத்துவிட்டு அவனைத் தாண்டி உள்ளேச் சென்றால்.
நேராக உள்ளேச் சென்றவள் எங்குச் சென்று யாரைப் பார்ப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தவளைப் பார்த்து…
அவள் அருகில் வந்த பவன் ‘என்னவோ எல்லாம் எனக்குத் தெரியும்னு வந்தா இப்படித்தான்’ என்று முணுமுணுத்துக் கொண்டே… அவளைத் தாண்டிச் சென்றவன் நேராகக் கதிரின் கேபின் பக்கம் வந்தவன் “இது தான் நீங்க கேட்ட எங்க பாஸ் ஓட கேபின். உள்ளே போங்க…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்துச் சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் பவன் சொன்ன அறையைத் தட்டிவிட்டு உள்ளே வந்த மதுவைப் பார்த்த கதிர்.
“வாங்க மது… உட்காருங்க,” என்று தனக்கு முன்னாள் இருந்த சேரைக் காட்டி அவளை அமரச் சொன்னவன் வாசல் பக்கம் பார்க்க…. பவனைக் காணாமல் கடுப்பான கதிர் ‘இவனை….’ என்று உளுக்குள் திட்டி விட்டு… இன்டெற்காமில் அவனை உள்ளே வரச் சொல்லிவிட்டு மதுவிடம் திரும்பி… “நீங்க அனுப்பின மெயிலில் உங்க டீடெயில்ஸ் எல்லாம் பார்த்தேன் மிஸ்ஸஸ்…. மது…” என்று இழுத்தவனை
“கால் மீ மிஸ் மது,” என்றாள் சிரித்துக் கொண்டே… “நான் அதில் இருந்து முழுவதுமாக வெளியே வர நினைக்கிறேன் என் பெயரின் இருந்து,” என்றாள் மது.
அவளைப் பார்த்துச் சிரித்த… கதிர் “ஓகே மிஸ் மது… நீங்க இன்றிலிருந்து வேலைக்கு ஜாயின் பண்ணிக்கோங்க. இவர் உங்களுக்கு என்ன ஒர்க்ன்னு சொல்வார்,” என்று அவள் பின்னால் கையை நீட்டிக் காட்ட…
கதிரிடம் சிரித்துக் கொண்டேத் திரும்பிப் பார்த்த.. மது அவள் பின்னால் கதவைத் திறந்து கொண்டு வந்த பவனைப் பார்த்ததும் முகம் சுருங்கி விட்டாள்.
அதைப் பவனும் கவனிக்கத்தான் செய்தான். அவளைப் பார்த்து “வாங்க,” என்று அவளை அழைக்க… கதிரிடம் சொல்லிவிட்டு அவன் பின்னால் வேண்டா வெறுப்பாகச் சென்றாள்.
வெளியே வந்ததும் மதுவை அழைத்துக்கொண்டு. போய்ப் அவள் டேபிளைக் காட்டி அவள் செய்ய வேண்டிய வேலை எல்லாம் சொல்லிவிட்டு ரியாவை அழைத்து அவளுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு அவன் வேலையைப் பார்க்கப் போய் விட்டான்.
ஆதி விக்கியிடம் தன்னிடம் எதையும் மறைக்கவில்லையா என்று கேட்க…
“ஆமா… டா… இதுல என்ன சந்தேகம்? இப்போ நடந்த என் கல்யாணம் மட்டும் தான் உன்கிட்டச் சொல்ல முடியாமப் போயிருச்சு. அதுவும் சூழ்நிலை அப்படி இருந்ததினால் தான். அதைத் தவிர நான் எதுவுமே உன்கிட்டே மறைச்சது இல்லை,” என்றான் விக்கி.
“அப்படியா…. அப்போ நீ என்கிட்டே எதுவுமே மறைச்சதில்லை அப்படித்தானே?” என்றான் ஆதி.
“ஆமா டா…. ஆதி நான் எதுவுமே உன்கிட்டே மறைச்சது இல்லை,” என்று சொல்லி முடிக்கும் முன் விக்கியின் கன்னத்தில் பளார்……. என ஒரு அறை விழுந்தது.
“டேய் ஆதி எதுவா இருந்தாலும் சொல்லிட்டு அடிடா… இப்படித் திடீர் திடீர்னு அடிச்சா… நான் என்னன்னு நினைக்குறது… நான் இங்கே இருந்து ஊருக்குப் போறதுக்குள்ளே என் கன்னம் ரெண்டும் பண்ணு மாதிரி வீங்கிரும் போல…”
“அப்பறோம் ஊருக்குப் போனா என் நிலாக்குட்டி என்னைப் பார்த்து அடையாளம் தெரியாம யாருன்னு கேட்பா டா… இப்போ எதுக்கு என்னை அடிச்சே?” என்று விக்கி பாவம் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க.
“நீ கொஞ்சம் முன்னே என்ன சொன்ன? இதுவரை என்கிட்டே இருந்து எதையுமே மறைச்சது இல்லையின்னு தான சொன்னே…” என்றவன் ஸ்டடி ரூமில் இருந்த டிராயரைத் திறந்து அதில் இருந்து துர்காவின் டைரியைத் தூக்கி விக்கியின் முன் போட்டான் ஆதி.
அதைப் பார்த்த விக்கி “இது என்ன டா… டைரி மாதிரி இருக்கு… உனக்குத் தான் இதெல்லாம் பழக்கமே இல்லையே,” என்று சொல்லிக் கொண்டே அந்த டைரியை எடுக்க…
ஆதி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.
அதில் “உன் முதல் பார்வை” என்று எழுதி இருந்தது. அதைப் பார்த்ததும் ‘இந்தக் கையெழுத்தை எங்கேயோப் பார்த்தது போல இருக்கிறது’ என்று யோசித்துக் கொண்டே அடுத்தப் பக்கத்தைத் திருப்பியவன் அதில் எழுதி இருந்ததைப் படித்ததும் இது துர்காவின் டைரி என்று அதில் இருந்ததைப் படித்ததுமே புரிந்தது. ஆதியைப் நிமிர்ந்துப் பார்த்த விக்கியைப் பார்த்துவிட்டு, “அதில் இருக்கும் இருபத்தி ஒன்றாவது பக்கத்தை எடுத்துப் பார்,” என்று போட்டிருந்தது.
வேகமாக ஆதி சொன்னப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தவன் அதில் இருந்த தலைப்பைப் பார்த்ததும் அது தன்னைப் பற்றித் தான் என்றுப் புரிந்து கொண்டான்.
“என் உயிர் தோழன்” என்று அந்தத் தலைப்பைப் பார்த்தவன் அடுத்தப் பக்கத்தைத் திருப்ப…
“ஆதியின் உற்ற நண்பன் இப்போது என் உயிர் தோழன் ஆகிவிட்டான்.”
“என் ஆதியைப் பற்றி அவனிடம் என்னால் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத விஷயங்களை என் உயிர் தோழன் விக்கியின் வாயிலாகத் தான் தெரிந்து கொண்டேன்.”
இதைப் படித்ததும் அதிர்ந்துப் போய் ஆதியைப் நிமிர்ந்துப் பார்க்க…. ஆதி எதிரில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
“ம்ம்ம்… என்னை ஏன் பாக்குறே… படி,” என்று அவன் கையில் இருந்த டைரியைக் காட்டச் சொல்ல… குனிந்துப் படிக்க ஆரம்பித்தான்.
“முதன் முதலில் நான் ஆதியின் மீது கொண்ட காதலைத் தெரிந்து கொண்டது என் உயிர் தோழன் விக்கி தான்.”
“இன்று ஆதியின் பிறந்தநாள். எப்போதும் ஆதிக்குத் தன் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டான்.”
“இன்று நானும் விக்கியும் கேட்டுக் கொண்டதிற்காக எங்கள் இருவருடன் மட்டும் பிறந்தநாளைக் கொண்டாடச் சம்மதித்து இருந்தான் ஆதி.”
“மாலையில் ஒரு பெரிய ஹோட்டலில் பிறந்த நாள் விழா…. விக்கி ஆதியுடன் அங்கு வந்துவிட.. நான் மட்டும் தனியாக அந்த ஹோட்டலிற்குள் நுழைந்தேன். என்னை வாசலில் வந்து வரவேற்ற ஆதி உள்ளே அழைத்துச் சென்றான்.”
“ஆதி நான் விக்கி மூவர் மட்டுமே இருக்க… நான் சென்ற சிறிது நேரத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கேக் வெட்டி ஆதியின் பிறந்தநாளைக் கொண்டாடினோம்.”
“அவன் பிறந்தநாளுக்காக நான் ஆதிக்கு ஒரு வெள்ளிச் செயின் ஒன்று பரிசளித்தேன். அதை வாங்கிய ஆதி ‘தேங்க்ஸ் துர்கா… என்னுடைய முதல் பிறந்தநாள் பரிசு இது’ என்று சொல்லி ‘இதை நான் பத்திரமாக வைத்துக் கொள்வேன்’ என்று சொன்னான்.”
“நாங்கள் மூவரும் நீண்ட நேரம் பேசிவிட்டு கிளம்பத் தயாராக இருக்க… ஆதி ரெஸ்ட் ரூம் சென்று வர உள்ளேச் செல்ல… அவன் சென்றதும் விக்கி என் அருகில் வந்து அமர்ந்து துர்காவைப் பார்க்க…”
“என்ன விக்கி அப்படிப் பாக்குறே… என்ன ஆச்சு..” என்று கேட்டாள் துர்கா.
“இல்லை என்னிக்கும் இல்லாம இன்னிக்கு உன் முகத்தில் ஒரு ஒளி தெரியுதே….” என்றான் விக்கி.
“என்ன டா… உளறுற? அப்படி எல்லாம் ஒன்னுமில்லையே,” என்றாள் துர்கா.
“நான் நிஜமாத் தான் சொல்றேன் துர்கா…. நீ என்னைப் பார்த்துப் பேசுறதுக்கும் ஆதியைப் பார்த்துப் பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு,” என்றான் விக்கி.
அவன் சொன்னதைக் கேட்டு உடனேப் பதறிய துர்கா. “அப்படி எல்லாம் ஒன்னுமில்லை. சும்மா எதுவும் சொல்லிட்டு இருக்காதே,” என்றாள் துர்கா.
“நான் சும்மா எதுவும் சொல்லலை,” என்றவன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து துர்காவின் முன் நீட்டினான்.
அதை வாங்கிப் பார்த்த துர்கா அந்தப் பேப்பர் முழுவதும் “துர்கா ஆதி” என்று எழுதி இருந்ததைப் பார்த்தும் அதிர்ந்தவள் விக்கியைப் பார்க்க… “என்ன முழிக்கிறே… நீ உன்னோட நோட் முழுக்க ஸ்ரீ ராம ஜெயம் மாதிரி உன் பேரையும் ஆதி பேரையும் எழுதி வெச்சிருக்குறது எனக்கு எப்படி கிடைச்சுட்டுதுன்னு பார்த்தியா…”
“கிளாஸ்ல எனக்கு எழுத நோட் இல்லையின்னு கேட்டதும் மேடம் நீங்க துர்கா ஆதி என்று எழுதுன நோட்டை என்கிட்டேக் கொடுத்துட்டீங்க. அதில் இருந்து ஒரு பேப்பரைத் தான் நான் எடுத்து வெச்சேன்,” என்று சொல்ல.
“டேய்… விக்கி… இப்போ உனக்குத் தெரிஞ்சது எதையும் ஆதி கிட்டேச் சொல்லிடாதே… அவன் இப்போதான் என்கிட்டப் பிரென்ட்லியா பேச ஆரம்பிச்சிருக்கான். நீ இதை எல்லாம் சொன்னால் ஆதி என்கூடப் பேசாமப் போயிடுவான். அதுவும் இல்லாம நான் அவன் பணத்துக்காகக் கூடப் பழகுறேன்னுத் தப்பா புரிஞ்சுக்கிட்டால் என் மொத்தக் காதலும் வீண் ஆகிடும்,” என்று கண்களில் கண்ணீரோடு விக்கியிடம் கெஞ்ச…
“என்ன வீண் ஆகிடும்?” என்று கேட்டுக் கொண்டே வந்த ஆதி துர்காவின் அருகில் அமர அவன் அவன் வருவது தெரிந்ததும் தன் கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்ட துர்கா “ஒன்னுமில்லை ஆதி.”
“விக்கி சரியா எதுவுமே சாப்பிடலை. அதனால் தான் தட்டில் இருந்து வீண் ஆகிடும் நீ சாப்பிடுன்னு சொல்லிட்டு இருந்தேன்,” என்றாள்.
விக்கியைப் பார்த்து “ப்ளீஸ் சொல்லிவிடாதே,” என்று அவனிடம் கெஞ்ச…. விக்கி எதுவும் சொல்லாமல் ஆதியிடம் நார்மலாகப் பேச.. அப்போது தான் துர்காவிற்கு ‘அப்பாடா…’ என்று இருந்தது.
அன்று நடந்த விஷயத்தைக் கொஞ்சம் கூட மறந்து போகாமல் அப்படியே எழுதி இருந்த துர்காவை… மனதிற்குள் மெச்சிக் கொண்டாலும்.
இப்படித் தன்னைக் ஆதியிடம் மாட்டி விடும் அளவிற்கா எழுதி வைப்பால் என்று அவளைத் திட்டிக் கொண்டே நிமிர்ந்து ஆதியைப் பார்த்தான் விக்கி.
“என்ன எல்லாம் படிச்சுட்டியா…. இப்போ சொல்லு நீ என்கிட்டே இருந்து எதையும் மறைக்கலை அப்படித் தானே?” என்றான் ஆதி.
“டேய் ஆதி…. அது அப்படி இல்லை டா.. அது வந்து துர்கா… துர்கா…. தான் வந்து உன்கிட்டேச் சொல்ல வேணாம்னு சொன்னா டா…”
“அவளோடக் காதலை அவளே உன்கிட்டேச் சொல்லி அதுக்கு நீ எப்படி ரியாக்ட் பண்ணுறேன்னு உன் முகத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கணும்னு அவ ரொம்ப ஆசைப் பட்டா. உன்கிட்டேச் சொல்லணும்னு நிறைய முறை முயற்சியும் பண்ணினா.”
“ஆனா ஒரு தடவை உன்கிட்டே அவ காதலைச் சொல்ல வர அப்போ தான் உன்கிட்டே அந்த ரோஜா ஞாபகம் இருக்கா… அதுதான் நம்ம கூடக் காலேஜ் படிச்சாலே… அவதான்.”
“நீ உன்னோட பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி பீக்ல இருந்த நேரம் அப்போ உன்னோட ஆஃபீஸ்க்கு அந்த ரோஜா உன்னைப் பார்க்க வந்திருந்தா ஞாபகம் இருக்கா…” என்றான் விக்கி.
விக்கி சொன்ன அந்த ரோஜா வந்த நாளை யோசித்த ஆதி…. “ஆமா அவ என்னோடப் பணத்தைப் பார்த்துட்டு என்னை காதலிக்குறேன்னு சொல்லிட்டு வந்த அவளை நான் அப்போவே பேசி விரட்டிட்டேனே,” என்றான் ஆதி.
“நீ அவளை விரட்டும் போது தான் துர்கா அவ லவ்வை உன்கிட்டேச் சொல்ல வந்தா…”
“நீ அந்த ரோஜாவை விரட்டிய விரட்டில் உன் பேச்சில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்ட துர்கா இன்று வரை தன் காதலை உன்னிடம் சொல்லவே இல்லை,” என்றான் விக்கி.
“டேய் அந்த ரோஜாவும் துர்காவும் ஒன்னா?” என்றான் ஆதி.
“நீ அப்படி நினைக்கலை ஆனா துர்கா அவ்வளவு வசதி வாய்ப்பு இருந்த ரோஜாவை நீ விரட்டிய விரட்டில் தன்னையும் அதே போல நினைத்துவிட்டால் என்ன செய்வது என்று அவ உன்கிட்டே சொல்லாமயே விட்டுட்டா,” என்றான் விக்கி.
“எனக்கு இப்போதான் இது எல்லாம் புரியுது விக்கி. துர்கா என் மேல எவ்வளவு காதல் வெச்சிருக்கான்னு அவ டைரியைப் படிக்கும்போது தெரிஞ்சுக்கிட்டேன்.”
“இனியும் அவளை என்கிட்டே இருந்துத் தள்ளி வைக்கக் கூடாதுன்னு தான் இந்தப் பேஷன் ஷோவை காரணமா வெச்சு நான் துர்காவை இங்கே வர வெச்சேன் ஆனா திடீர்னு ஸ்விட்சர்லாந்துப் போக வேண்டி வந்திருச்சு,” என்று வருத்தப்பட்டவன்.
விக்கியிடம், “விக்கி துர்காவின் காதல் எனக்குத் தெரிந்து விட்டது என்று நான் வரும்வரை அவளிடம் நீ சொல்லாதே…” என்றான்.
“டேய் இனியும் ஏன் துர்காகிட்டே நீ உன் காதலை மறைச்சு வெச்சு இருக்கே… அவ ஏற்கனவே ரொம்ப வருசமா உனக்காகவும் உன் காதலுக்காகவும் காத்துட்டு இருக்கா டா… பாவம் அவளைக் காக்க வைக்காதே,” என்று விக்கி சொல்ல.
“இத்தனை வருடம் காத்திருந்தவள் இன்னும் ஒரு ஒரு மாதம் காத்திருக்கட்டுமே…” என்ற ஆதி. விக்கியைப் பார்த்து அவனிடம் வந்து அவன் கழுத்தில் கிடுக்குப் பிடி போட்டு…
“நான் வரும் வரை எதுவும் துர்காவிடம் நீ சொல்லி அவளுக்கு எல்லாம் முன்கூட்டியே தெரிந்து விட்டது என்று மட்டும் எனக்குத் தெரிந்தது நீ அவ்வளவு தான்.”
“இங்க இருந்து இந்தியாப் போற அப்போ உன் பொண்டாட்டி இப்போ எப்படி கை கால் எல்லாம் கட்டு போட்டு எழுந்திருக்க முடியாமப் படுத்திருக்காங்களோ… அதே போல உனக்கும் எழுந்திருக்க முடியாத படி செஞ்சிருவேன் பார்த்துக் கோ…” என்று விக்கியை ஒரு மார்க்கமாகப் பார்த்துச் சொல்ல…
அவன் கையில் இருந்துத் தன்னை விடுவித்துக் கொண்ட விக்கி…
“எது….” என்று அதிர்ச்சியாக வடிவேலு ஸ்டைலில் சொன்னவன். “யே… அப்பா… சாமி… உன் பொண்டாட்டி கிட்டே உன்னோட லவ்வை நீயே வந்து சொல்லிக்க… நான் மூச்சே விட மாட்டேன் சரியா,” என்றான்.
விக்கியின் மாடுலேசனைப் பார்த்துச் சிரித்த ஆதி “அந்தப் பயம் இருக்கட்டும்,” என்றவன் “அப்பறோம் முக்கியமான விஷயம் உன்கிட்டேச் சொல்லணும் இங்கே வா…” என்றான்.
“நீ… என்ன சொல்றதா இருந்தாலும் அங்க இருந்தே சொல்லு நான் கேட்டுக்குறேன்,” என்று ஆதியைக் விட்டு விக்கி விலகி நிற்க…
“இப்போ நீ இங்கே வரப் போறியா இல்லை நான் உன் பொண்டாட்டிக்கு போன் போட்டு நீ இங்கப் பொண்ணுங்களோடக் கூத்து அடிச்சுட்டு இருக்கேன்னு சொல்லட்டுமா?” என்றான் ஆதி.
“டேய் என்ன டா நீ வர வர இப்படி மாறிட்டு வர… இரு டா சாமி நான் உன் பக்கத்துலயே வரேன்,” என்ற விக்கி ஆதியின் அருகில் பயந்து கொண்டுச் செல்வது போல அவன் அருகில் செல்ல….
“வாடா…. எதுவும் செய்ய மாட்டேன்,” என்று தன் அருகில் இழுத்தவன் நேற்று சங்கவியுடன் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னவன்.
“சங்கவியால் துர்காவிற்கு ஆபத்து இருக்கிறது. அவள் எனக்குத் தெரியாமல் துர்காவைக் கொல்ல ஆட்களை இங்கே செட் செய்து வைத்து இருக்கிறாள்.”
“நான் இல்லாத நேரத்தில் துர்காவிற்குக் எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் உன்னை இங்கே துர்காவுடன் விட்டுவிட்டுச் செல்கிறேன். நீ கொஞ்சம் நான் வரும் வரை கவனமாக இரு,” என்றான் ஆதி.
ஆதி சொன்னதை எல்லாம் கேட்டு சங்கவியைக் கொல்ல வேண்டும் என்று எழுந்த ஆத்திரத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டவன் “நீ கவலைப் படாமப் போய்ட்டு வா…. நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்றான் விக்கி.
இருவரும் பேசிக்கொண்டே ஸ்டடி ரூம் விட்டு வெளியே வர… அவர்கள் உள்ளே சென்று வெகு நேரம் ஆகிவிட்டதே இன்னும் காணோம் என்றுப் பதட்டத்தில் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தாள் துர்கா.
துர்காவைப் பார்த்ததும் “சரி நீ கீழே போ… நான் வரேன்,” என்று ஆதி விக்கியைப் போகச் சொல்ல….
“ஒரு நிமிஷம் இரு டா…” என்று ஆதியின் கையைத் தன் தோள் மீது இருந்து எடுத்துவிட்டவன்.
நேராக துர்காவிடம் சென்றவன் “உன்னோட உயிர் தோழனுக்கு நல்ல ஆப்பு வெச்சுட்டே….” என்று சொல்ல…
அவனைப் புரியாமல் பார்த்த துர்காவைப் பார்த்து “புரியலை… ம்ம்… எப்படிப் புரியும்…” என்றவன் திரும்பி ஆதியைப் பார்க்க… அவன் எதுவும் சொன்னால் ஊருக்குப் போன செய்திவிடுவேன் என்று. விக்கியை பிளாக் மெயில் செய்ய… ‘எல்லாம் என் நேரம் டா…’ என்று தன் தலையில் அடித்துக் கொண்டு அவர்கள் அறையை விட்டு வெளியேச் சென்றான்.
அவன் சென்றதும் ஆதி திரும்பி துர்காவைப் பார்க்க…. இவ்வளவு நேரம் விக்கியுடன் ஆதியின் அருகில் இருந்ததால் துர்காவிற்குப் பெரிதாக எதுவும் தெரியவில்லை.
இப்போதுத் தனியாக ஆதியுடன் அங்கு அறையில் இருக்கவும் துர்காவிற்குப் பதட்டம் தொற்றிக் கொண்டது…
அவள் பதட்டத்தை மேலும் அதிகம் ஆக்க…. அவளிடம் வந்தவன் “என்ன துர்கா ரெடியா…” என்றான்.
அவனைப் புரியாமல் பார்த்த துர்கா… “எ.. என்ன… ஆதி புரியலை,” என்றாள் துர்கா.
“புரியலையா…” என்று ஆதி கேட்க…
“ம்ஹும்…” என்றுத் தலையை இடவலமாக ஆட்டி ஆதியையேப் பார்த்துக் கொண்டு இருந்தவளை….
அவள் அருகில் நெருங்கி துர்காவின் இடுப்பில் கைக் கொடுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்துச் சட்டென்று இழுத்து அணைத்துக் கொண்டு….. “உன் காதலை…. நம் காதலைச் சொல்ல நீ ரெடியா?” என்று அவள் நெற்றி முட்டி கேட்டான் ஆதி.
