Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 88

உன் ரகசிய ரசிகை நான் 88

by Layas Tamil Novel
370 views

EPISODE 88

நிலானியின் வீட்டிலிருந்துப் புறப்பட்ட ஆதி அவனுடன் கீர்த்தியையும் ராதாவையும் அழைத்துக் கொண்டுப் போகும் வழியில் ராதாவையும், கீர்த்தியையும் இறக்கி விடுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றான்.

காரின் முன் சீட்டில் ராதா அமர்ந்து கொள்ள…. பின் சீட்டில் கீர்த்திகா அமர்ந்து ஆதியுடன் சென்றாள்.

செல்லும் வழியில் கீர்த்திகா எதுவும் பேசாமல் வர ராதா மட்டும் ஆதியிடம் பேசிக்கொண்டு வந்தாள்.

இவர்கள் இருவரும் பேசுவதைப் அமைதியாக கேட்டுக்கொண்டு வந்தாள் கீர்த்தி.

“எப்படி மாமா நீங்க கரெக்டா நாங்க வரும்போது வீட்டுக்கு வந்துட்டீங்க!! மது அக்காவைக் கொண்டு வந்து விடுவதற்காக வந்தீங்களா….” என்று கேட்டாள் ராதா.

“ஆமா ராதா எப்படியும் நான் நிலானியைப் பார்க்கணும். அதான் அப்படியேப் பார்த்துட்டுப் போயிடலாம்னு தான் மதுவைக் கொண்டு வந்து விட்டுட்டு அப்படியே நிலானியையும் பார்த்துட்டுப் போகத்தான் வந்தேன்.”

“இல்லைனா விக்கி கண்டிப்பா நைட் கூப்ட்டுக் கேட்பான். வீட்ல போய்ப் பார்த்தியா? எல்லாரும் எப்படி இருக்காங்க? எல்லாம் சரியா இருக்கான்னு? என்னைக் கூப்பிட்டுக் கேட்டு இருப்பான். அதனாலத் தான் நான் இங்கு வந்தேன்,” என்றான் ஆதி.

“சரி மாமா போற வழியில் என்ன அப்படியே என்னோட டியூஷன்ல இறக்கி விடுறீங்களா?” என்றுச் சொல்ல….

“நீதான் நல்லா படிக்கிறப் பொண்ணாச்சே. இப்பவும் எதுக்குச் சின்னப் பிள்ளைங்க மாதிரி நீ டியூஷன் போயிட்டு இருக்க? பேசாமல் வீட்டிலிருந்துப் படிக்க வேண்டியது தானே?” என்று சொன்னான் ஆதி.

“முதல்ல நானும் அப்படித்தான் சொன்னேன் மாமா. அப்பா தான் என்னைப் வலுக்கட்டாயமாகக் கொண்டு போயி அவர்கிட்ட டியூசன் சேர்த்து விட்டாங்க.”

“முதல்ல எனக்கும் பிடிக்காமல் தான் நான் டியூஷன் போனேன். ஆனா… இப்போ எனக்கு டியூஷன் போறது ரொம்பப் பிடிச்சிருக்கு. எங்க சார் நல்லப் பாடம் எல்லாம் சொல்லித் தராரு மாமா..”

“அதனாலதான் அப்பாவே இப்ப வேண்டாம் என்று சொன்னாலும் நான் டியூஷன் போறது நிறுத்தறதா இல்லை,” என்றுச் சந்தோஷைத் தன் மனதில் நினைத்துக் கொண்டு ஆதியிடம் சொன்னாள்.

“ஓ அப்படியெல்லாம் நல்லா உனக்கு டியூஷன் எடுக்கிறாரா உன்னோட சார்!! யார் அந்த சார்? எனக்கு அவரைப் பாக்கணும் போலத் தோணுது,” என்று ஆதி சொன்னான்.

“நீங்க என்னைத் டியூஷன்ல டிராப் பண்ண வருவீங்க இல்ல மாமா. வாங்க அப்போ நான் உங்களுக்கு அவரை இன்டர்டியூஸ் பண்ணி வைக்கிறேன்,” என்றுச் சொன்னாள் ராதா.

“சரி வரேன்,” என்றவன். “ஆமா உன்னோட பிரண்டு அதான் பின்னாடி உட்கார்ந்திருக்காளே அவளும் உன் கூடத் தானேப் படிக்கிறா…. நீ மட்டும் டியூஷன் போற உன் பிரண்டு டியூஷன் போகலையா?” என்று கேட்டான் ஆதி.

“இல்ல மாமா அப்பா என்னைத் திடீர்னு கொண்டு போய்த் டியூஷன் சேர்த்து விட்டதால நான் கீர்த்தி கிட்டக் கேட்கவே இல்லை.”

“அதுவும் இல்லாம நிலானிக்கு உடம்புச் சரியில்லைன்னு அவளைப் பார்க்கக் கீர்த்தி ஹாஸ்பிடல் வீடுன்னு இருந்ததனால் என்னால் அவகிட்டச் சரியா அதைப் பத்திப் பேச முடியல மாமா,” என்றுச் சொன்னவள்.

முன் சீட்டிலிருந்து திரும்பி கீர்த்திகாவைப் பார்த்து “ஏய் கீர்த்தி….. நீயும் என் கூடத் டியூஷன் வரியாடி?” என்று ஆர்வமாக் கேட்டாள் ராதா.

கீர்த்திகாவிடம் தன்னுடன் டியூசன் வருகிறாயா என்று ஆதி கேட்ட ஆர்வத்தில் திரும்பி ராதா கேட்டுவிட்டாள்.

ஆனால் கீர்த்திகாவை கேட்ட பின்பு தான் உணர்ந்தாள். கீர்த்திகாவும் இவளுடன் டியூசன் வந்துவிட்டால் சந்தோஷும் ராதாவும் தனியாகப் பேசிக் கொள்வதற்கு நேரமே வாய்க்காது என்று அவளுக்குப் புரிந்தது.

‘அவசரப்பட்டு கேட்டுவிட்டோமோ?’ என்று உள்ளுக்குள் நினைத்தாலும் ‘சரி நம்ம பிரண்டு தானே அவ வந்து என்ன பண்ணப் போறா?’ என்று நினைத்துக் கொண்டுப் பதிலுக்காகக் கீர்த்தியின் முகத்தைப் பார்க்க

கீர்த்திகா எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க “ஏய்…. கீர்த்தி… உன்னைத் தாண்டி கேட்டுட்டு இருக்கேன்… நீயும் என் கூடத் டியூஷன் வரியா?” என்று கேட்டாள் ராதா.

“நான் என் அம்மா கிட்டக் கேட்டுட்டு அதுக்கப்புறம் சொல்றேன் ராதா,” என்றுச் சொன்னாள் கீர்த்தி.

“ஏண்டி அம்மாகிட்டச் சொன்னாப் படிக்கிறதுத் தானே டியூஷன் போறேன்னு சொல்ற? அவங்க வேண்டாம்னா சொல்லப் போறாங்க?” என்று ராதா கேட்க.

“என் அம்மா கிட்டப் பர்மிஷன் வாங்குவது இருக்கட்டும், முதல்ல சார் கிட்டக் கேட்கணும் இல்லையா…. சார் கிட்டக் கேட்டு அவர் டியூஷன் வான்னு சொன்னாருன்னா அதுக்கப்புறம் நான் எங்க அம்மா கிட்டக் கேட்டுட்டுச் சொல்றேன்,” என்றுச் சொன்னாள் கீர்த்திகா.

“ஓ அப்படியா? அப்போ ஒன்னு பண்ணலாம்! இப்போ நீங்க என்னைத் டிராப் பண்ணத் தானே வரிங்க… அப்படியே நம்மச் சந்தோஷ் சாரை ஆதி மாமாக்கு இண்ட்ரடியூஸ் பண்ணி வச்சுட்டு…. உனக்கும் அப்படியே டியூஷன் சேர்க்குறதுக்காகவும் கேட்டரலாம் சரியா….” என்றாள் ராதா.

“அவருக்கு உன் அப்பாவைத் தெரிஞ்சதுனால உங்க அப்பா சொன்னதுனால உன்னை டியூஷன் எடுத்துக்கிட்டார் இல்லையா….”

“இப்ப நான் வந்து கேட்டா அவர் எதுவும் நினைக்கப் போறாரு. எனக்கு யோசனையா இருக்குது. அவர்கிட்ட டியூஷனுக்காகக் கேட்பதற்கு,” என்று கீர்த்திகா சொன்னாள்.

“கீர்த்தி அவர் அப்படியெல்லாம் நினைக்க மாட்டாரு…. நீ வந்து கேளு கண்டிப்பா உனக்கு டியூஷன் எடுக்க ஓகே சொல்லுவாரு,” என்றுச் சொன்னாள் ராதா.

இவர்கள் இருவரையும் பேசிக் கொள்வதைக் கார் ஓட்டிக்கொண்டேக் கேட்டுக் கொண்டிருந்த ஆதி.

“ராதா உன்னோட ஃப்ரெண்ட் கீர்த்திக்கு டியூஷன் போக இஷ்டம் இல்ல போல… அதனாலத் தான் ஏதாவது ஒருச் சாக்கு சொல்லிப் பார்க்கலான்னு சொல்றாங்க… அவங்களுக்குப் படிக்கிறதுல இன்ட்ரஸ்ட் இல்ல போல….. நல்லா ஊர் சுத்தச் சொன்னாச் சுத்துவாங்கன்னு நினைக்குறேன்.”

“நீ ஏன் அவங்களக் கம்பெல் பண்ற? விடு….. அவங்களுக்கு விருப்பம் இருந்தா டியூஷன் வரட்டும் இல்லாட்டி போகட்டுமே…” என்று கீர்த்திகாவைக் காரில் இருந்தக் கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டே சொன்னான் ஆதி.

அவனை அதேக் கண்ணாடி வழியாக முறைத்த கீர்த்தி. “ஏய் ராதா…. எனக்குப் படிக்க விருப்பம் இல்லைன்னு உங்க மாமாகிட்ட யாரடி வந்து சொன்னது.”

“அவர் பேசாமல் ரோட்டைப் பார்த்து காரை ஓட்டச் சொல்லு. சும்மா என்னைக் கிண்டல் பண்ற வேலை எல்லாம் வச்சுக்க வேண்டாம்னு சொல்லு.”

“எனக்குத் தெரியும் எப்படிப் படிக்கணும்… எப்பப் படிக்கணும்னு… இவரு எல்லாம் வந்து எனக்கு அட்வைஸ் பண்ணனும்னு அவசியம் இல்லை,” என்று அவனிடம்ச் சண்டை போடுவது போலப் பேசினாள் கீர்த்தி.

“அப்பப்பா ஏன் எப்பப் பார்த்தாலும் இரண்டு பேரும் எலியும் பூனை மாதிரிச் சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க…. உங்க கூட மட்டும் யாராவது வந்தாங்கன்னு வைங்க நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுறதைப் பார்த்து அவங்களுக்குத் தான் பிரஷர் ஏறும்,” என்று சொன்ன ராதா…

“மாமா… மாமா…. வீடு வந்துருச்சு. அங்கத் தான் காரை நிறுத்துங்க,” என்றுச் சொன்னாள்.

“எந்த வீடு ராதா?” என்று ராதாவிடம் கேட்டுவிட்டு அந்த வீட்டின் முன் சென்று காரை நிறுத்தியவன். “சரி ராதா நீங்க ரெண்டு பேரும் போய் உங்க சார் கிட்டத் டியூஷனுக்குக் கேட்டுட்டு வாங்க… எனக்கு ஒரு போன் முக்கியமான போன் பண்ண வேண்டி இருக்கு நான் பேசுறேன்,” என்றுச் சொல்லிவிட்டு அவர்கள் இருவரையும் உள்ளே அனுப்பி வைத்தார்.

“சரி மாமா நாங்க போயிட்டுச் சார் கிட்டப் பேசுறோம். நீங்க போன் பேசி முடிச்சிட்டீங்கன்னா உள்ள வாங்க,” என்றுச் சொல்லிவிட்டு ராதா கீர்த்தியை அழைத்துக் கொண்டுச் சந்தோஷின் மெயின் வீட்டின் மெயின் கேட்டைத் திறந்து கொண்டுக் கீர்த்திகாவை அழைத்துக்கொண்டுச் சந்தோஷ் வீட்டுக்குள் சென்றாள்.

ராதா டியூஷனுக்கு வருவாள் என்று வாசல் கதவைத் திறந்து வைத்து விட்டு ஹாலில் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டே டிவி பார்த்துக் கொண்டிருந்தான் சந்தோஷ்.

வாசல் அருகில் பேசும் சத்தம் கேட்கவும்…. காஃபி குடித்துக் கொண்டிருந்தவன் திரும்பிப் பார்க்க…. ராதாவுடன் கீர்த்திகாவும் உள்ளே வரப் புருவம் சுருக்கி அவர்கள் இருவரையும் பார்த்த சந்தோஷ்.

‘இவளை எதுக்குக் கூட அழைச்சுட்டு வந்து இருக்கா இவ….’ என்று யோசித்தவாறு சோஃபாவில் இருந்து எழுந்தவன் “வாம்மா….” என்று கீர்த்திகாவைப் பார்த்து அழைத்தவன் ராதாவை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் நின்றான்.

ராதாத் தன் பழக்கப்பட்ட வீட்டுக்குள் நுழைவது போலச் சகஜமாகப் பேசிக்கொண்டே உள்ளே வரக் கீர்த்திகாவிற்கு அவளுடன் உள்ளே வருவதற்குச் சற்றுத் தயக்கமாக இருக்க அவள் தயக்கத்தைப் புரிந்து கொண்ட சந்தோஷ்.

“ஃப்ரீயா வாம்மா ஏன் இப்படித் தயங்கிட்டு உள்ள வர… வாம்மா….” என்று அவளை அழைக்க அவளும் சிரித்துக் கொண்டே வந்தாள்.

அவன் முன் இருந்தச் சோஃபாவைக் காட்டி சந்தோஷ் உட்காரச் சொல்ல அங்கேத் தயங்கி வந்து அமர்ந்தாள் கீர்த்திகா.

அவர்கள் இருவரையும் பார்த்து காஃபி குடிக்கிறீங்களா? என்று கேட்டான். கீர்த்திகா “வேண்டாம் சார்,” என்றுச் சொல்ல…. ராதா “ஓகே சார்….” என்றுச் சத்தமாக முந்திரிக்கொட்டை போலப் பேச…. அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு “பரவால்ல உங்களுக்கும் சேர்த்துப் போட்டுட்டு வரேன் குடிங்க,” என்றுச் சொல்லி உள்ளேச் சென்றான்.

ஐந்து நிமிடத்தில் இரண்டு கப் காஃபியுடன் அவர்களை வந்து நின்றால் சந்தோஷ் இருவருக்கும் காஃபியைக் கொடுத்துவிட்டு அருகில் இருந்தச் சோஃபாவில் அமர்ந்தவன் “சொல்லுங்க கீர்த்திகா என்ன இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க அதுவும் உங்க பிரண்டு கூட,” என்று கேட்டுக் ராதாவை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டேக் கேட்டான்.

கீர்த்திகாப் பேச வாய் எடுப்பதற்குள் துடுக்காக “அது ஒன்னு இல்ல சார். நான் உங்ககிட்டத் தினமும் டியூஷன் வந்துட்டு இருக்கேனா….. அது பத்தி என் மாமா கிட்டச் சொல்லிட்டு வந்தேன். அப்போ அவர்தான் சொன்னாரு நீ மட்டும் ஏன் தனியா டியூஷன் போற….. உன் பிரண்டு வெட்டியாத் தானே ஊர் சுத்திட்டு இருக்கா. அவளையும் கூடக் கூட்டிட்டுப் போ டியூசனுக்கு என்றுச் சொன்னார். அதனாலத் தான் என் பிரண்டையும் இங்க டியூஷன் கூட்டிட்டு வரலாமான்னு உங்க கிட்டக் கேக்குறதுக்காக என் கூட இவளையும் கூட்டிட்டு வந்தேன்,” என்றுச் சொன்னாள் ராதா.

தன்னை வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறேன் என்று ராதாச் சொல்வதைக் கேட்டுக் கடுப்பான கீர்த்திகா அவள் இடுப்பில் கிள்ளிவிட….

“ஷ்… ஆஹ்…. வலிக்குது டி…” என்று வேண்டும் என்றே தன் இடுப்பைத் தேய்த்து விட்டுக் கொண்டே

“என் இடுப்புல அப்படி என்ன இருக்கோ… அதுமேலேயே எப்போப் பாரு கண்ணா இருக்குறது…” என்ற ராதா சந்தோஷைப் பார்த்துக் கொண்டேப் பேச..

அதுவரைத் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்த அவள் இடுப்பையேப் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் பேசியதுக் கேட்டதும் அவளை நிமிர்ந்துப் பார்க்க…. இவ்வளவு நேரம் தன்னைப் பார்த்துத் தான் பேசுகிறாள் என்றுத் தெரிந்ததும்.

‘ச்சே…. இவளுக்குத் தான் என்னைக் கண்டாலேப் பிடிக்காதே… என் பாலாய் போனக் கண்ணு அவ இடுப்பைத் தான் பாக்கணுமா? அதுவும் அவளுக்குத் தெரியுற மாதிரி?’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.

ராதா மறுபடியும் அவனைப் பார்த்து “சார் பார்த்ததுப் போதும்….. பதிலைச் சொல்லுங்க,” என்றாள் தன் இடுப்பைத் பார்த்ததை அவனிடம் ஜாடை காட்டி.

கீர்த்தி “என்ன டிப் பாத்ததுப் போதும்னு சொல்ற? புரியல,” என்றாள். “அது… அது… ஒன்னுமில்லை டி… சார் நாமப் பேசுறதை பார்த்துட்டு இருந்தாரா… அதான் பார்த்ததுப் போதும் உங்கப் பதிலைத் சொல்லுங்கன்னு சொல்ல வந்தேன்,” என்று மழுப்பினாள்.

பின் சந்தோஷைப் பார்த்துத் தன் கண்களை உருட்டி அவனிடம் பேசு என்று மிரட்டுவதுப் போல ராதா ஜாடை செய்ய… அவளின் இந்தக் புதிய விதமான செயலைப் பார்த்துக் குழம்பிப் போனவன்.

பின் தான் ராதாவை எதுவும் செய்து விடுவேனோ என்று நினைத்துத் தான் தன்னுடன் தன் தோழியைத் துணைக்கு அழைத்து வரக் கேட்கிறாள் என்றுச் சரியாக…. தப்பாகப் புரிந்து கொண்ட சந்தோஷ். அவளுக்குத் தன் மேலான அபிப்ராயம் எப்போதும் மாறுவதே இல்லை என்று நினைத்தவன்.

கீர்த்திகாவைப் பார்த்து “எனக்கு எதுவும் ப்ரோப்லேம் இல்லை கீர்த்திகா… பட் நான் ரெகுலரா டியூஷன் எடுக்குறது இல்லை… உங்களுக்கு ஃபிரெண்ட்டுக்காகத் தான் டியூசன் எடுக்குறேன். உங்க ஃபிரண்ட்டே உங்களுக்கு ரெகமெண்ட் பண்றாங்கன்னா அவங்களுக்கு நீங்க அவங்க கூட இருந்தா…. ஒருப் பாதுகாப்பா இருக்கும்னு நினைக்குறாங்க போல,” என்று ராதாவைப் பார்த்துச் சொன்னவன்.

“எனக்கு ஓகே. நீங்க நாளையில் இருந்து வந்திருங்க,” என்றான் சந்தோஷ்.

சந்தோஷ் சரி என்றுச் சொன்னதும் சந்தோஷம் ஆன கீர்த்திச் சந்தோசமாக “ஓகே சார் நான் என் அம்மா கிட்டச் சொல்லணும். சொல்லிட்டு அவங்க ஓகே சொன்னதும் நாளையிலிருந்து நான் டியூஷன் வந்துடுறேன் சார்,” என்றுச் சொன்னாள் கீர்த்திகா.

“சரிமா அப்போ நாளையிலிருந்து வந்துருங்க,” என்றுச் சொல்ல காஃபி குடித்துவிட்டு டேபிள் மேல் வைத்துவிட்டு கீர்த்திகா “ஓகே சார் நான் கிளம்புறேன்,” என்றுச் சொல்லிவிட்டு “ராதா நான் போயிட்டு வரேன்,” என்றுச் சொல்லி கிளம்பினாள்.

“இரு டி…. நான் ஆதி மாமாவுக்கு நம்ம சாரை இன்ட்ரடியூஸ் பண்ணி வெக்குறேன்னு சொன்னேன் இல்லையா…. நானும் வரேன்,” என்று கீர்த்திகைவுடன் ராதாவும் வெளியே வர….. சந்தோஷும் ‘யார் அந்த மாமா? அவனையும் பார்த்து விடலாம்’ என்று யோசித்தவாறே வெளியில் வந்தான். அவர்கள் பின்னே வெளியே வந்தான்.

அப்போது போன் பேசிவிட்டு வாசல் கதவு கேட்டைக் திறந்து கொண்டு ஆதி உள்ளே வர…..

ஆதியைப் பார்த்ததும் சந்தோஷ் ‘இவனை எங்கேயோ பார்த்தது போல இருக்கே’ என்று யோசனையில் புருவம் சுருக்கி அவனைப் பார்க்க ஆதியும் அதே யோசனையுடன் சந்தோஷைப் பார்த்துக் கொண்டே வந்தான்.

ஆதியைப் பார்த்ததும் ராதா வேகமாக ஓடிப்போய் அவன் கையைப் பிடித்து அவனுடன் நடந்து வந்தவள் நேராகச் சந்தோஷிடம் வந்து நின்று “இவர் தான் என்னோட ஆதி மாமா. நான் சொன்னேன் இல்லையா என் பிரண்டு உங்ககிட்ட டியூஷன் அனுப்பச் சொல்லிச் சொன்னாருன்னு. அதை இவர் தான் என்னோட அத்தைப் பையன். இவர் வீட்ல இருந்ததால் நான் இவரு வீட்லதான் நாங்க இருக்கோம்,” என்றுச் சொன்னாள் ராதா.

“நீங்க….” என்றுக் கேள்வியுடன் ஆதி சந்தோஷைப் பார்த்துக் கேட்க… சந்தோஷும் “நீங்க அன்று கோவிலில் என் அத்தையை….” என்று யோசனையுடன் சந்தோஷ் கேட்க.

“ஆமாம்,” என்று மட்டும் தலையை ஆட்டினான் ஆதி.

“அப்போ உங்களுக்கு ரெண்டுப் பேருக்கும் ஏற்கனவே ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சிருக்கா?” என்றாள் ராதா.

“ஆமா ராதா,” என்று அன்று கோவிலில் நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னான் ஆதி.

“அப்படியா மாமா!” என்று ஆச்சரியமாக் கேட்டவள் ஆதியின் கையைப் பிடித்துச் சந்தோஷிடம் “பார்த்தீங்களா எங்க மாமா எவ்வளவு நல்லவங்கன்னு,” என்று அவனிடம் ஆதியைப் பற்றிப் பெருமைப் பீற்றினாள் ராதா.

அவள் சந்தோஷைக் கடுப்பேற்றுகிறோம் என்றுத் தெரியாமலேயேப் பேசிக்கொண்டு இருக்க…. சந்தோஷிற்கு அவள் மேல் ஆத்திரமாக வந்தது… அதைக் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தான்.

அவள் ‘மாமா’ என்று உரிமையோடு ஆதியின் கையைப் பிடித்துப் பேசுவதைப் பார்த்த சந்தோஷிற்கு ஒருவேளை ராதாவிற்கு அவனைத்தான் பிடித்திருக்குமோ என்று தோன்றியது.

‘அதனால்தான் நான் அவளிடம் விரும்பும் போதெல்லாம் அவள் என்னை விட்டு விலகிச் சென்றாலும் அவளுக்கு அவள் மாமாவைத் தான் பிடித்திருக்கிறதோ…. என்னைப் பிடிக்கவில்லையோ…’ என்று சந்தோஷ் யோசித்தான்.

சந்தோஷிடம் ஆதியைப் பற்றி ராதா சொன்னதும் ஆதி சந்தோஷிடம் கைக் நீட்டி “**ஹலோ ஆதி,” என்றுச் சொன்னான்.

ஆதியின் குரல் கேட்டுத்தான் தன் யோசனை வந்து வெளியில் வந்த சந்தோஷ் அவன் கையைப் பிடித்துக் குலுக்கி “ஹாய் ஐ அம் சந்தோஷ்,” என்றுச் சொன்னான்.

“ராதாவை நான் இங்கே கூட்டிட்டு வரும்போது உங்களைப் பத்தித் தான் பேசிட்டு இருந்தா. அது தான் அப்படி யாரு அவளை இம்ப்ரஸ் பண்ற அளவுக்குப் பாடம் நடத்துகிறார் என்றுப் பார்க்கிறதுக்காக வந்தேன் வேறு ஒன்றும் இல்லை,” என்றுச் சொன்னான் ஆதி.

“நம்ம எவ்வளவுத் திறமையாப் பாடம் எடுத்தாலும் ஆனா அவங்களுக்கு எது புரியுதோ அவ்வளவு தான் புரியும். நம்ம எடுக்கிற பாடத்தை விட அவங்களுக்காகப் படிச்சுப் புரியிறப் பாடம்தான் ரொம்பப் பிடிக்கும் போல,” என்றுத் தான் அவன் மீது கொண்டக் காதலைச் சொல்லியும் தெரிந்து கொள்ளாமல் அவள் இருப்பதைச் ஜாடையாகச் சொன்னான் சந்தோஷ்.

சந்தோஷ் சொன்னதின் அர்த்தம் ஆதிக்கும் கீர்த்திகாவிற்கும் புரிந்ததோ… இல்லையோ…. ராதாவிற்கு நன்றாகப் புரிந்தது.

இருவரும் கைக் குலுக்கிவிட்டுச் சற்று நேரம் பொதுவாகப் பேசிவிட்டு ராதாவிடமும் சந்தோஷிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பிய கீர்த்திகாவைப் பார்த்து “நீங்க எப்படி என் கூட வரீங்களா இல்லை இங்கிருந்து பஸ்ஸில் போய்க்கிறீங்களா?” என்று வேண்டும் என்றே கேட்டான் ஆதி.

உடனே ராதா “மாமா நீங்க அவளைக் கொண்டு போய்க் வீட்டில் டிராப் பண்றதாச் சொல்லித்தானேக் கூட்டிட்டு வந்தீங்க…. இப்ப என்ன பஸ்ல போய்க்கிறியான்னு கேக்குறீங்க….”

“அதெல்லாம் முடியாது. நீங்க கீர்த்தியை வீட்லக் கொண்டுபோய் விட்டுட்டு அதுக்கப்புறம் நம்ம வீட்டுக்கு போங்க,” என்று உரிமையுடன் ராதா ஆதியிடம் பேசுவதைப் பார்த்த சந்தோஷிற்கு மனதிற்குள் அவள் மற்றவர்களிடம் எல்லாம் எவ்வளவுச் சகஜமாகப் பேசுகிறாள்.

‘என்னிடம் அப்படி ஒரு நாள் கூடப் பேசியது இல்லையே’ என்று வருத்தப்பட்டான் சந்தோஷ்.

தான் ஆதியுடன் சகஜமாகப் பேசுவதைப் பார்த்து விட்டுச் சந்தோஷின் முகம் வாடிவிட்டத்தைக் கவனித்த ராதாவிற்கு உள்ளுக்குள்ச் சந்தோசமாக இருந்தது.

‘தன் மீது இருக்கும் காதலில் தான் நான் ஆதி மாமாவிடம் சகஜமாகப் பேசுவது கூடச் சந்தோஷிற்குக் கஷ்டமாக இருக்கிறது போல’ என்று நினைத்தாள்.

இங்கே ராதா ஆதியுடன் பேசுவது சந்தோஷிற்கு மட்டும் கவலை அளிக்கவில்லை. இன்னொருத்திக்கும் தான் வயிறுப் பற்றிக்கொண்டு இருந்தது. வேறு யாராக இருக்கும்? கீர்த்தி தான்.

தன்னைப் ராதாவின் முன் வாய்க்கு வருவதை எல்லாம் பேசி கிண்டல் செய்வது ஒரு புறம் கடுப்பைக் கொடுக்க… ராதா ஆதியைக் தொட்டுத் தொட்டுப் பேசுவதைக் கண்டு ராதாவின் மேல் கோபம் வரவில்லை. அதற்கு மாற்றாக அவளுக்கு இந்த அளவு இடம் கொடுத்தது ஆதி தான் என்று அவன் மீது கோபம் வந்தது.

ஆதி பேசியதில் கடுப்பான கீர்த்தி, “ராதா நான் பஸ்லயே போயிக்குறேன். என்னால யாருக்கும் சிரமம் வேண்டாம்,” என்றுச் சொல்ல… “ஏய் நீ சும்மா இரு டி…” என்ற ராதா ஆதியிடம் “மாமாப் பேசாமல் அவளைக் கூடக் கூட்டிட்டுப் போறிங்களா இல்லையா…”

“நீங்க கூட்டிட்டுப் போகலைன்னா நான் உங்க கூடப் பேசவே மாட்டேன்,” என்றாள். “சரி சரி கோச்சுக்காத ராதா நான் கூட்டிட்டுப் போறேன்,” என்றவன்

“உன்னோட ஃபிரண்டு என்னுடன் கீர்த்தி வருகிறாளா இல்லையா?” என்று கேட்க… ராதா வலுக்கட்டாயமாகக் கீர்த்தியை இழுத்துக் கொண்டுப் போய்க் ஆதியின் காரின் முன் சீட்டில் அமர வைத்துவிட்டுக் ஆதியுடன் கீர்த்தியை அனுப்பி வைத்தவள் திரும்பிச் சந்தோஷைப் பார்க்க.

அவனோ மிகவும் சோகமாக இருப்பவன் போல முகத்தை வைத்துக் கொண்டு ராதாவிற்கு டியூஷன் எடுக்க உள்ளேச் சென்றான்.

‘நான் என் மாமாவுடன் பேசினது உனக்குப் பிடிக்கலையா வாத்தி… அவ்ளோ ஆசையா என் மேல… நான் தான்ப் புரியாமல் உன்னை அன்னைக்குக் கண்டபடிப் பேசிட்டேன்.’

‘நீயாவது அதுக்குப் பிறகு எனக்குப் புரிய வெக்குற மாதிரி எடுத்துச் சொல்லி இருக்கலாமில்ல.’

‘அதை விட்டுட்டு நான் சண்டை போட்டதும் இவரு எதுவுமே வேண்டாம்னு சொல்லி ஒதுங்கிப் போயிருவாரமா…. நாங்க சும்மா இருக்க முடியுமா?’ என்று நினைத்துக்கொண்டவல். ‘சரிப் பாப்போம். இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படி இருப்பேன்னு நானும் பாக்கிறேன் வாத்தி,’ என்று நினைத்துக் கொண்டே அவன் பின்னேச் சென்றாள் ராதா.

காரில் ஏறி கோபத்தோடு ஜன்னலை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருக்க….

அவள் தன் மீதுக் கோபமாக இருக்கிறாள் என்றுத் தெரிந்தும் அவளைச் சமாதானம் செய்யாமல் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேக் காரைச் செலுத்தியவன்.

அவள் வீட்டிற்குச் செல்லும் வழியாகச் செல்லாமல் வேறுப்புறம்ச் செல்ல…. தன் வீட்டிற்குச் செல்லும் வழி இது இல்லையே என்று ஆதியைப் பார்த்து “டேய்… என் வீட்டுக்குப் போற வழியில் போகாமல் இந்தப் பக்கம் ஏன்டாப் போறே…” என்று கோபமாகப் பேச..

அவன் எதுவும் பேசாமல் அமைதியாகக் கார் ஓட்ட… கீர்த்திகாவிற்கு மேலும் கோபம் தலைக்கு ஏற அவனை முறைத்தவள் அமைதியாக இருந்துவிட்டாள்.

யாரும் இல்லாத இடத்திற்கு வந்ததும் காரை நிறுத்திய ஆதி சீட் பெல்ட்டைப் பார்த்தான். அவள் கார் நின்றதும் அவனைத் திரும்பிப் பார்க்க….

அவள் சரியாக அவனைப் பார்க்கத் திரும்பும் போது அவள் கழுத்தில் கைக் கொடுத்துத் தன் அருகில் அவளை இழுத்து அவள் இதழைச் சிறை செய்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured