Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 90

உன் ரகசிய ரசிகை நான் 90

by Layas Tamil Novel
426 views

EPISODE 90

ஷிவுவின் ஆஃபீஸில் இன்று அவளுடன் வேலை பார்க்கும் நண்பனுக்குப் பிறந்தநாள் பார்ட்டி.

இரவு வர தாமதம் ஆகும் என்று சொல்லிவிட்டு நேராகப் பார்ட்டிக்குச் சென்றாள்.

அவளுடன் வேலை பார்க்கும் சிலரிடம் மட்டுமே தனக்குத் தகுந்தவர்களை மட்டுமே ஃபிரெண்ட் ஆக ஏற்றுக்கொண்டு உள்ளாள்.

அதில் ஷிவுவிடம் சற்று நெருக்கமாகப் பழகும் அஜயும் ஒருவன் சொல்லப்போனால் அவனிடம் மட்டும் தான் மிகவும் நெருக்கமான பழக்கம் அவளுக்கு உள்ளது.

ஷிவுவின் குணம் போலவே அஜயும் இருப்பான். அவளுக்கு ஆஃபீஸில் அவளுடன் நல்ல முறையில் சிநேகம் பாராட்டும் யாரையும் அவளுக்குப் பிடிக்காது.

அதனாலேயே இன்று இந்தப் பார்ட்டிக்கு வந்த பிறகும் யாருடனும் பேசாமல் தனியாக அமர்ந்து இருந்தவளின் அருகில் சென்று சில ஊழியர்கள் தாங்களாகவேப் பேச முயற்சிக்க…. அவளோ அவர்களிடமும் அளவாகத் தான் பேசினாள்.

அவர்களுடன் பட்டும் படாமல் பேசிக்கொண்டு அமர்ந்து இருந்த ஷிவுவைத் திடீர் என்று யாரோப் பின்னால் இருந்து அவள் கண்களைப் பொத்தித் தன்னை யார் என்று கண்டு பிடிக்கச் சொல்ல… கேட்கவும் அது ஒரு ஆண் குரல் என்றுத் தெரிந்தும் யார் என்றுத் தெரியாமல் அஜய் பெயரையும் சொல்ல… அவனும் இல்லை என்றான் பின்னால் நின்றவன்.

“எனக்கு யாருன்னு தெரியல நீங்களே சொல்லுங்க உங்க பேரை,” என்று சொன்னால் ஷிவு. அவள் கண்களில் இருந்து கையை எடுத்தவன் அவள் முன்னே வந்து நின்றான். அவன் தான் இன்றுப் பிறந்தநாள் கொண்டாடப் போகும் ரூபேஷ்.

அவள் முன்னே அவன் வந்து நிற்கவும் அவனைப் பார்த்ததும் ‘இவனா…. இவனா வந்து என் கண்களைப் பொத்தி நின்று என்னுடன் விளையாடுவது?’ என்று அவன் செய்ததுப் பிடிக்காமல் அவனை மனதிற்குள் திட்டியவள்.

அவனிடம் “ரூபேஷ் நீங்களா!!!! நான் உங்களை எதிர் பார்க்கவில்லை வேறு யாரோ என்று நினைத்தேன்….” என்றவள் தான் கொண்டு வந்து கொடுத்தப் பரிசுப் பொருளை அவன் முன் நீட்டி… “பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரூபேஷ்,” என்றாள் ஷிவு.

அவள் கொடுத்தப் பரிசை வாங்கிவிட்டு “தேங்க்ஸ் ஷிவு… வந்து நீண்ட நேரம் ஆகிவிட்டதா?” என்று கேட்டான்.

“இல்லை இப்போ தான் வந்தேன்,” என்றாள் ஷிவு.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்க அங்கு இருந்தவர்கள் அவர்களுக்குப் பேச இடம் கொடுத்துவிட்டு வேறு பக்கம் சென்றனர்.

அவர்கள் சென்றதும் அவள் அருகில் அமர்ந்த ரூபேஷ் ஷிவுவையேக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு ஷிவு இவர்கள் ஆஃபீஸில் சேர்ந்ததில் இருந்து அவளை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

எவ்வளவோ முறைப் பேச முயற்சி செய்தாலும் அஜய் ஷிவுவிடம் ஒருவரையும் நெருங்க விடாமல் அவன் மட்டுமே இவளிடம் பேசிக்கொண்டு இருப்பான்…

இன்று தான் அவன் இல்லாமல் இவள் மட்டும் தனியாக இருந்ததும் இன்று எப்படியாவதுத் தன் மனதில் உள்ளதை ஷிவுவிடம் சொல்லிவிட வேண்டும் என்று அவளிடம் வந்தவன் புதிதாகச் சில நிமிடம் பேசியவன் தன் பிறந்தநாள் கேக் வெட்ட அவளையும் அவனுடன் அழைத்துச் சென்றவன் அனைவருடனும் சேர்ந்து கேக் வெட்டித் தன் பிறந்தநாளைக் கொண்டாடியவன்.

அனைவர் முன்னிலையிலும் ஷிவு எதிர்பார்க்காத நேரம் அவள் முன் மண்டியிட்டுத் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு பாக்ஸை எடுத்து அவள் முன் நீட்டியவன் “ஐ லவ் யூ ஷிவு…. எனக்கு உன்னை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நான் உன்னைத் திருமணம் செய்துகொண்டு உன்னுடன் என் காலம் முழுதும் கழிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது,” என்று அவள் முன் மண்டியிட்டுச் சொல்ல…

இப்படித் திடீர் என்று அவள் முன் மண்டியிட்டு நிற்பவனைக் கண்டு அதிர்ந்தவள், அவன் இவளிடம் ப்ரொப்போஸ் பண்ணவும் மேலும் அதிர்ந்துப் போய் அவனைப் பார்க்க….

அவர்கள் இருவரையும் சுற்றி நின்று இருந்த அனைவரும் “ஓ….” என்று கத்த அரவாரம் செய்தவர்கள் ஷிவுவிடம் “ஓகே… சொல்.. ஓகே… சொல்…” என்று அனைவரும் கத்த…

அனைவர் முன்னும் தன்னை இப்படி ஒரு தர்ம சங்கடமான நிலையில் நிற்க வைத்து விட்டானே என்று நினைத்த ஷிவு அவன் மீது அளவு கடந்து கோபம் கொண்டாள்.. அது போதாது என்று அனைவரும் வேறு இவளைச் சம்மதம் சொல்லச் சொல்லிக் கத்திக் கொண்டு இருக்க… எரிச்சலான ஷிவு.

எதிரில் சிரித்த முகமாக இவள் முன் முட்டி போட்டு இருந்தவனைப் பார்த்து ஆத்திரம் அதிகம் ஆக …..அவன் அருகில் வந்தவள் கோபம் பொங்க அவனை ஓங்கி அறைந்து “நீ என்ன உன் மனதில் நினைச்சுட்டு இருக்கே….”

“இத்தனை பேர் முன்னிலையில் நீ எனக்குப் ப்ரொபோஸ் செய்தால் நான் வேறு வழி இல்லாமச் சரி என்று சொல்லிவிடுவேன் என்று நினைத்து விட்டாயா….”

“என்னிடம் இந்த வேலை எல்லாம் நடக்காது,” என்றவள் அவனைத் திட்டி விட்டு அங்கிருந்து வெளியேச் செல்லப் போக… அப்போதுச் சரியாக அஜய் உள்ளே வந்தான்.

ஷிவு கோபமாக இருப்பதைப் பார்த்துவிட்டு “என்ன ஆச்சு ஷிவு ஒரு மாதிரி இருக்கே?” என்று அக்கறையுடன் கேட்டான்.

ஷிவு இங்கு நடந்ததை எல்லாம் அவனிடம் சொல்லித் தன் ஆதங்கத்தை அவனிடம் சொல்ல…

“அட…..இதற்குத்தான் இவ்வளவு டென்ஷனா… அவனைப் பிடிக்கவில்லை என்றால் நீ பிடிக்கவில்லை என்று மட்டும் சொல்லி இருக்கலாமே. எதற்கு தேவையில்லாமல் அவனை அடித்த்து…. அதுவும் இவ்வளவுப் பேர் முன்னாடி பாவம் இல்லையா அவன்?” என்று ஷிவுவிற்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு இருக்க…

அப்போது அங்கு வந்த ரூபேஷ் “சாரி ஷிவு… நான் உன்னிடம் கொஞ்சம் இல்லை ஓவராகவே உரிமை எடுத்துக்கொண்டு நீ நிச்சயம் என் காதலை ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் இத்தனை பேர் முன்னிலையில் உன்னைச் சங்கடப் படும்படிச் செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடு,” என்றான்.

அவன் பேசியதைக் கேட்டுச் சற்று மனம் இறங்கினாலும் இத்தனை பேர் முன்னிலையில் தன்னைக் கெட்டவளாக ஆக்கி விட்டானே என்று அவன் மீதுச் சற்று வருத்தம் இருக்கத் தான் செய்தது.

அவளிடம் மன்னிப்புக் கேட்டவன் அவள் என்ன சொல்கிறாள் என்று கூட எதிர் பார்க்காமல் அங்கிருந்துச் சென்று விட்டான்.

சோகமாகச் சென்ற ரூபேஷைப் பார்த்து ‘நானும் சற்று அதிகமாகத் தான் செய்துவிட்டேனோ’ என்று ஷிவு அவனை நினைத்து முதன் முறையாக வருத்தப்பட்டாள்.

அவன் சென்றதும் இதுவரை ரூபேஷ் ஷிவுவிடம் பேசியதையும் அவன் சென்ற பிறகு அவனையேப் பாவமாகப் பார்க்கும் ஷிவுவைப் பார்த்தவன் ‘எங்கே இவள் ரூபேஷின் பக்கம் சாய்ந்து விடுவளோ?’ என்று நினைத்தவன்.

இனியும் இப்படியே இருந்தால் வேலை ஆகாது என்று நினைத்தவன். ஷிவுவுடன் அமர்ந்து கூல் ட்ரிங்க்ஸ் குடித்துக் கொண்டு இருந்தவன் அவளுக்குத் தெரியாமல் தான் பயன்படுத்தும் போதை மருந்தை வழக்கத்திற்கு மாறாகச் சற்று அதிகமாக அவள் கூல் ட்ரிங்க்ஸ்ஸில் கலந்துவிட்டான்.

அதுத் தெரியாமல் ஷிவுவும் அந்தக் கூல் ட்ரிங்க்ஸைக் குடிக்க ஆரம்பித்தாள். அவள் குடிப்பதைப் பார்த்துக் கொண்டே அஜய் அமர்ந்து இருக்க…

பார்ட்டி ஹாலில் அனைவரும் ரூபேஷின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக டான்ஸ் ஆட ஆரம்பித்தனர். அதைப் பார்த்துக் கொண்டு இருந்த ஷிவு அவளும் அங்கேச் சென்று ஆட வேண்டும் என்று நினைத்தவள் கூல் ட்ரிங்க்ஸைப் பாதி குடித்து இருக்க… போதை அதிகம் ஆக அருகில் இருந்த அஜயின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவர்களுடன் சென்று ஆட ஆரம்பித்தாள்.

அவளுக்கு மட்டும் போதை மருந்தை கொடுத்து அவள் போதையில் தன் மீது ஒட்டிக் கொண்டு ஆடுவதையும் அவள் உடல் அவன் மீது உரசுவதையும் குரூரமாக ரசித்துக் கொண்டே அவள் இடையில் அவன் கையை வைத்து அதைத் தடவிக்கொண்டு ஆடிக்கொண்டு இருந்தான்.

அப்போது அங்கு அஜயிடம் வந்த சிலப் பெண்கள் அவனைத் தங்களுடன் ஆட அழைக்க…. தானாகவே வந்து அழைக்கும் பெண்களைக் கண்டவனுக்கு மேலும் ஆசை அதிகம் ஆக… ஷிவுவை விட்டுவிட்டு அவர்களுடன் ஆடச் சென்றான்.

ஷிவு மட்டும் தனியாக ஆடிக்கொண்டு இருக்க…. அவள் ஏதோ சரி இல்லை என்று உணர்ந்தவன் அவள் அருகில் வந்து ஷிவுவின் கையைப் பிடித்து அங்கிருந்து அழைத்துச் செல்லப் போக…. அவன் கையைத் தட்டி விட்டவள் அவனைப் பிடித்து இழுத்து அவன் கழுத்தில் தன் கையை மாலையாகப் போட்டு… அவனையும் தன்னுடன் சேர்ந்து ஆட வைத்தான்.

சிறிது நேரம் அவள் போக்கிற்கு அவளுடன் சேர்ந்து ஆடிய ரூபேஷ் அவளை அங்கிருந்து அப்படியே அழைத்துச் சென்று அவள் டேபிளில் சென்று அவளை அமர வைக்க.

அவள் ஏற்கனவேக் கொடுத்திருந்த கூல்டிரிங்ஸை எடுத்து ஒரு வாய் குடித்தவள் பின் என்ன நினைத்தாலோ தெரியாமல் எதிரிலிருந்த ரூபேஷைப் பார்த்து “இந்தா இதைக் குடி,” என்று அவனிடம் நீட்டினாள்.

அவளைத் தயக்கத்தோடுப் பார்த்த ரூபேஷைப் பார்த்து “என்ன அப்படிப் பாக்குற? நான் குடிச்சிட்டுக் கொடுத்த கூல் ட்ரிங்க்ஸை நீ குடிக்க மாட்டியா….” என்றாள் பாவமாக….

பின் அவளே… “ஓ…. நான் குடிச்சுட்டு எச்சில் பண்ணிட்டேனா…. அதுதான் குடிக்க உனக்குக் கஷ்டமா இருக்கா…..” என்றவள்..

“நீ தானேக் கொஞ்சம் முன்னாடி என்ன லவ் பண்றேன்னு சொல்லிப் ப்ரொபோஸ் பண்ணினே… அப்பறோம் ஏன் நான் குடிச்சதை நீ குடிக்க மாட்டேங்குறே…” என்று பாவமாகப் போதையில் உளறினாள்.

அவள் ஏன் உளறுகிறாள் என்று யோசித்தவன் ஒருவேளை அவள் இங்கே பார்ட்டியில் பரிமாறும் மதுவைக் குடித்துவிட்டாளோ… என்று அவள் கையில் இருந்த கூல் ட்ரிங்க்ஸைப் பார்க்க… அதுச் சாதாரண கூல் ட்ரிங்க்ஸ் தானே… அதைக் குடித்துவிட்டா இவள் இப்படி உளறுகிறாள் என்று நினைத்துக் கொண்டே ஷிவுவைப் பார்க்க…

அவள் கையில் இருந்த கூல் ட்ரிங்க்ஸையும் அவளையும் பார்த்துக் கொண்டு இருந்த ஷிவு… அவனிடம்

“நீ மட்டும் இப்ப நான் குடிச்சதை நீ குடிக்கலைன்னா….. நீ உண்மையாவே என்னை லவ் பண்ணலைன்னு தான் அர்த்தம், நீ என்கிட்டேப் பொய் சொல்லி இருக்கேன்னு அர்த்தம்,” என்று சொல்லி அவனை உசுப்பேற்ற….

“இல்லை ஷிவு நான் உன்னிடம் நடிக்கவில்லை… நான் உண்மையாத் தான் உன்னை லவ் பண்றேன்,” என்றான் ரூபேஷ்.

“அப்போ நீ இந்தக் கூல் ட்ரிங்க்ஸைக் குடி…. நான் உன்னோட லவ்வை அக்செப்ட் பண்ணிக்கிறேன்,” என்று போதையில் என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் உளறினாள் ஷிவு.

அவள் அப்படிச் சொன்னதும் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவள் கையில் இருந்த கூல் ட்ரிங்க்ஸை வாங்கிக் கடகடவெனக் குடித்து விட்டான்.

அதைக் குடித்ததும் தான் உணர்ந்தான் அதுச் சாதாரணமாகக் குடிக்கும் கூல் ட்ரிங்க்ஸ் இல்லை என்று. அதில் ஏதோக் கலந்து இருக்கிறது என்றுப் புரிய.. யோசனையுடன் ஷிவுவைப் பார்க்க…

அவள் தனக்கு உடல் எல்லாம் ஏதோச் செய்கிறது. ரொம்ப வியர்கிறது என்றுத் தன் உடலில் உள்ள வியர்வையைத் துடைக்கிறேன் என்று சொல்லி அவள் உடையைக் களற்றப் பார்க்க..

அதைப் பார்த்ததும் பதறிப்போன ரூபேஷ் ஷிவுவைத் தடுக்கப் போக… அவள் அவன் கையைப் பிடித்துக்கொண்டு “எனக்குத் தூக்கம் வருது,” என்று சொல்லி அவன் கையில் சாய்ந்துப் படுக்கப் போனால்.

ரூபேஷிற்கும் போதை அதிகம் ஆக…. அவன் உடலில் ஏதோ ஒரு மாற்றம் உருவாவதை உணர்ந்தவன் அவர்கள் இருக்கும் நிலையில் அங்கு இருப்பதுச் சரி இல்லை என்று உணர்ந்தவன் ஷிவுவை அழைத்துக் கொண்டுப் போய் அவன் ஏற்கனவேத் தன்னுடைய ஃபிரெண்ட்ஸிற்கும் தனக்கும் புக் செய்தி வைத்து இருந்த ரூமிற்குச் ஷிவுவை அழைத்துச் சென்று அவன் ரூமிற்குள் வந்து கதவைச் சாற்றி விட்டு வந்து ஷிவுவை மெத்தையில் படுக்க வைத்தவன்.

அவளை ஒரு முறை ஏக்கமாகப் பார்த்துவிட்டு இங்கு இருந்தால் எதுவும் விபரீதம் ஆகி விடும் என்று அவளை அங்கேயே விட்டு விட்டு வெளியேப் போகலாம் என்று நகரப் போக….

மெத்தையில் படுத்து இருந்தவள் அவன் கையை எட்டிப் பிடித்து அவனை இழுத்துத் தன் மீதுப் போட்டுக் கொண்டாள்.

அவளை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவனுக்குப் போதை மருந்தின் விளைவிலும் அவள் மீது கொண்ட ஆசையிலும் அவன் உடலில் மாறுதல் ஏற்பட… அதை அடக்கச் சிரமப் பட்டுக்கொண்டு அவள் மேல் இருந்து எழுந்திருக்கப் போக…

ஷிவு அவனை எழுந்திருக்க முடியாமால் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு…. “நான் குடிச்ச ஜூஸ்சை நான் சொன்னதுக்காகத் தானே நீ குடிச்சே….” என்றாள்.

அவனும் ஆமாம் என்று தலையை ஆட்டினான். “அப்போ நிஜமாவே நீ என்னை லவ் பண்றியா ரூபேஷ்?” என்று அவன் கண்களைப் பார்த்துப் போதையில் கேட்க….

அவனும் “ஆமா ஷிவு எனக்கு உன்னைப் ரொம்பப் பிடிக்கும்…. உன்னோடத் திமிர் எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஷிவு…. ஐ லவ் யூ…. ஷிவு” என்று அவள் கண்களைப் பார்த்துச் சொல்ல….

ஷிவுவும் அவனைப் பார்த்து “ஐ லவ் யூ ரூபேஷ்,” என்றாள். அவள் இப்படிச் சொன்னதும் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கும் போதை அதிகம் ஆகிக்கொண்டே இருக்க…

அவள் லவ் யூ என்றுத் தன்னிடம் சொன்னதும்தான் தாமதம் இவ்வளவு நேரம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தவன் “ஷிவு…” என்று ஆசைப் பொங்கக் குனிந்து அவள் இதழில் முத்தமிட…

அவன் முத்தம் கொடுத்தது தான் தாமதம் அவனுக்கு ஈடு கொடுத்து ஷிவுவும் அவனோடு முத்தச் சண்டைப் போட ஆரம்பித்தாள்.

இருவருக்கும் காதல் போதையும், அவர்கள் அருந்திய போதையும் அதிகரிக்க… இருவரின் உடல் சூடாக… ஆடைகளைக் கலைந்து தங்கள் சூட்டைத் தணிக்கப் போராட ஆரம்பித்தனர்.

இங்குப் பார்ட்டியில் தன்னுடன் ஆடியப் பெண்களுடன் ஆட்டம் போட்டுவிட்டு வந்து ஷிவுவைத் தேடிய அஜய் அவள் எங்குத் தேடியும் கிடைக்காமல் போக… ஒருவேளை அவள் கிளம்பி வீட்டிற்கு கிளம்பி விட்டாளோ என்று நினைத்தவன். ‘ச்சோ…. இன்னைக்கு மிஸ் ஆகிட்டா…. இன்னோரு நாள் என்னிடம் மாட்டாமலாப் போய் விடுவாள் அப்போ பார்த்துக் கொள்ளலாம்’ என்று நினைத்துவிட்டு அங்கிருந்துக் கிளம்பினான்.

இரவெல்லாம் சரியாகத் தூங்காமல் காலையில் நீண்ட நேரம் கழித்துத் தான் எழுந்து காஃபி குடிக்கலாம் என்று எழுந்து முகத்தைக் கூடக் கழுவாமல் நைட் ட்ரெஸ்சுடன் டைனிங் ஹாலிற்கு வந்தவள் அங்கே விக்கி அமர்ந்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவன் துர்காவைப் பார்த்ததும்.

“வாங்க மேடம் ஒரு வழியா எழுந்து வந்துட்டீங்க போல…. ராத்திரியும் உங்க ரூமை விட்டு வெளியே வரலை போல… நானும் ரொம்ப நேரம் உனக்காக வெயிட் பண்ணிப் பார்த்துட்டுப் போய்த் தூங்கிட்டேன்,” என்றான் விக்கி.

“ஆமா டா… நைட் எல்லாம் சரியாத் தூங்கலை,” என்றாள் கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டே…

“ஏன் துர்கா தூங்கலை?” என்றான் விக்கி.

“நைட் எல்லாம் போன் பேசிட்டு இருந்தேன் டா…. அதனால் தான் சரியாத் தூங்கலை,” என்றாள்..

அவள் அப்படிச் சொல்லிவிட்டுத் தன் நாக்கைக் கடித்துக் கொண்டு ‘ஐயோ… உளறி விட்டோமே’ என்று கண்களைத் தேய்த்துக் கொண்டு இருந்தவள் அப்படியே நிறுத்தி ஒரு கண்ணால் விக்கியைப் பார்க்க…

அவள் சொன்னதைக் கேட்டு… சாப்பிட்டுக் கொண்டு இருந்த விக்கி சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அவளைச் ஷாக்க்காகப் பார்க்க…

அவனைப் பார்த்து அசடு வழியச் சிரித்த துர்கா… “ஈ….” என்றுத் தன் பல்லைக் காட்டி அவனிடம் “அது… அது… வந்து…. சும்மாத் தான் பேசிட்டு இருந்தோம் டா…. நீ ஷாக் ஆகிற அளவுக்கு எல்லாம் ஒன்றுமில்லை,” என்றாள்.

“ரொம்ப அசடு வழியாதப் பார்க்கச் சகிக்கலை….. உன் ஆளு கூட அந்த அளவுக்கு ஒட்டிக் கிட்டியா நீ….” என்றான் விக்கி.

“டேய் நீ நினைக்குற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை. நாங்க சும்மா…. எப்பவும் போலத் தானேப் பேசிக்கிட்டோம்,” என்றாள்.

“எப்படி முதல்ல இருந்து ஃபிரெண்ட்ஸ் மாதிரிப் பேசிக்குவீங்களே அப்படியா?” என்றான்..

அவளும் “ஆமா நாங்க இப்பவும் ஃபிரெண்ட்ஸ் தானே,” என்றாள்.

“உன்னை எல்லாம்,” என்று அவன் தலையில் அடித்துக் கொள்ள…

அவனிடம் நைட் இவளும் ஆதியும் பேசியதை எல்லாம் சொல்லவா முடியும். தெரிந்தால் அவ்வளவு தான் இவளை ஒரு வழி பண்ணிவிடுவான் என்றே அவனிடம் சொல்லாமல் ஏதோ சொல்லிச் சமாளித்தாள்.

அவள் இன்னும் அதே இடத்தில் நிற்பதைப் பார்த்தவன். தலையில் அடித்துக் கொண்டவன் “போ…. போய்ப் வந்த வேலையைப் பாரு,” என்றுச் சாப்பிட ஆரம்பிக்க…

“ஒரு காஃபி,” என்றுச் சொன்னவள் அவன் எதிரே அமர்ந்துத் தன் கால்களைச் சம்மணம் போட்டுக் கொண்டு டைனிங் டேபிள் மீது அமர்ந்தவள் அவன் தட்டில் இருந்த பிரெட் பீஸ் ஒன்றைத் எடுத்துச் சாப்பிடப் போக….

“ஏய்… லூசு…. பல்லு விளக்காமையா டி…. சாப்பிடுவே…” என்றுத் தன் தட்டை அவளிடம் இருந்து நகர்த்தி சைடாகத் திரும்பி அமர்ந்துச் சாப்பிட….

“டேய் ஏன்டா… திரும்பிகிட்டே… இன்னிக்கு சண்டே தானே… அதான் பல்லு விளக்க லீவ் விட்டுட்டேன்,” என்றவள் தன் வாயில் பிரேட்டை வைத்துக் கொண்டே அவன் தட்டில் இருந்து மறுபடியும் பிரேட்டை எடுக்கப் போக…..

அவள் எடுக்க வருவதைப் பார்த்ததும் சட்டென்றுத் தான் சாப்பிட்டுக் கொண்டு இருந்தத் தட்டை வேகமாக எடுக்க…. தட்டில் கைப் வைக்கப் போனவள் அப்படியேப் பொத்தேன்று டைனிங் டேபிளில் குப்புற விழுந்தாள்.

அவள் விழுந்ததும் வாயில் வைத்து இருந்த பிரெட்டை விழுங்கி விட… அவள் திரு திரு என விழித்துக் கொண்டே அவள் நிமிர்ந்துப் பார்க்க அவள் செய்கையைப் பார்த்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்த விக்கி பலமாகச் சிரிக்க…. அவனை முறைக்கவே அவனுடன் சேர்ந்து இன்னோரு சிரிப்புச் சத்தம் பலமாகக் கேட்க….

சிரிப்பு வந்தத் திசையைத் திரும்பிப் பார்க்க… அங்கே அவர்கள் இருந்த சேரில் இருந்து இரண்டு சேர் தள்ளி போதி அமர்ந்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

அவனை அங்குப் பார்த்ததும் அப்படியே அதிர்ச்சி ஆனவள் திரும்பி விக்கியைப் பார்க்க…. அவன் சிரிப்பை அடக்க முடியாமல் வாயில் உணவை வைத்து அடைத்துக் கொண்டு துர்காவைப் பார்க்க… அவனிடம் ஜாடை செய்து, “சொல்ல மாட்டியா… டா…” என்றாள்.

“நீ கேக்க மாட்டியா… டி…” என்றான் விக்கி.

அவனை முறைத்துக் கொண்டே டேபிளில் இருந்து எழுந்தவள் கீழே இறங்கிப் போதியைப் பார்த்து… “ஹலோ…. மிஸ்டர் போதி,” என்றாள் நெளிந்து கொண்டே…

அவள் நெளிவதைப் பார்த்துச் சிரிப்பை அடக்க முடியாமல் கஷ்டப்பட்டுச் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு “ஹலோ… குட் மார்னிங் மிஸ் துர்கா…” என்றான்.

அவளும் குட் மார்னிங் சொன்னவள் “நீங்கள் சாப்பிடுங்க நான் இதோ வரேன்,” என்று சொல்லிவிட்டு விக்கியைப் பார்த்து “வா…” என்று கண் ஜாடை காட்ட… அவன் “ம்ஹும்… நான் வர மாட்டேன் சாப்பிடணும்,” என்றுத் தன் தட்டைக் காண்பித்துச் சொன்னான்.

“என்னை அந்த ஆள் முன்னாடி அசிங்கப் படுத்திட்டுச் சாப்பிட்டிறியா?” என்று மனதிற்குள் திட்டியவள். அவனை முறைத்துக் கொண்டே அவன் அருகில் சென்று அவன் சாப்பிட வாய் அருகேத் தன் கையை கொண்டுப் போக… அவனைச் சாப்பிட விடாமல் அந்தக் கையைப் பிடித்துக்கொண்டு அவன் கையில் இருந்தத் தட்டைப் பிடுங்கிக் கீழே வைத்துவிட்டுப் போதியைப் பார்த்து விட்டு “ஈ….” என்று லேசாகப் பல்லை காட்டிவிட்டு விக்கியைத் தள்ளிக்கொண்டுச் சென்றவள்.

டைனிங் டேபிளில் இருந்துச் சற்றுத் தள்ளிச் சென்றவள். “டேய் இவரு எப்படி டா… இங்கே…” என்றாள்.

“உனக்கு விஷயம் தெரியாதா…. இவரு இப்போ நம்ம நியூவா ஸ்டார்ட் பண்ணின பிசினஸ்ஸில் நம்ம ஆதி கூடப் பார்ட்னர் ஆஹ் நேத்துத் தான் சைன் பண்ணிருக்காரு.”

“ஆதியும் போதியும் நல்லாவே ஜெல் ஆகிட்டாங்க. அவர் வெளியே ஹோட்டலில் தான் தங்கி இருந்திருக்காரு ஆதி தான் வற்புறுத்தி இங்கே தங்கச் சொல்லி இருக்கான்.”

“அவர் நேத்து நைட்டே வந்துட்டாரு… நீதான் உன் ஆசைப் புருஷன் கூட… நைட் எல்லாம் கடலை போட்டுட்டு கீழயே வரலையே,” என்றான் விக்கி.

அவன் இடுப்பைப் பிடித்துக் கிள்ளியவள் “டேய்…. அவருக்கு நான் கல்யாணம் ஆகிட்டேன்னு தெரியாது டா…” என்றாள்.

“ஏன் டி… தெரியாது?” என்றான் விக்கி.

“கதிர் தான் சொல்ல வேண்டாம் என்று சொன்னான்,” என்றவள் ஊரில் நடந்ததை எல்லாம் சொன்னாள்.

“அடப்பாவி இதை என்கிட்டே முன்னேயேச் சொல்ல மாட்டியா? நாம வேற… அவர் முன்னாடி இப்போதானே நாமப் பேசினோம்?” என்றவன் சற்று யோசித்துவிட்டு “நாம ஆதி பெயரைச் சொல்லாமச் சும்மாத் தானேப் பேசினோம்?” என்றவன் “சமாளிச்சுக்கலாம் வா…” என்றுச் சொல்லி அவளை அழைத்துக் கொண்டு டைனிங் டேபிள் வந்துச் சாப்பிட அமர்ந்தான்.

“சரி நான் மேலப் போய் ரெடி ஆகிட்டு வரேன்,” என்று துர்கா இருவரிடமும் சொல்லிவிட்டு மேலேச் செல்லப் போக…. “நீதான் இன்னிக்குச் சண்டே அதனால எல்லாத்துக்கும் லீவ்னு சொல்லிட்டு இப்போதானேப் பல்லு விளக்காம என் தட்டில் இருந்து எடுத்துச் சாப்பிட்டே,” என்று அவளைப் போதி முன் அசிங்கப் படுத்தினான்.

அவனை முறைத்துவிட்டு “உன்னை வந்துப் பேசிக்குறேன்,” என்று சொல்லி வேகமாக மேலேப் போனாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured