EPISODE 91
இரவு முழுவதும் ஷிவு மற்றும் ரூபேஷ் இருவரும் ஒரே அறையில் கழித்தவர்கள், விடியும் போதுதான் களைப்பு மிகுதியால் தூங்கினர்.
காலையில் முதலில் கண் விழித்தது ரூபேஷ்தான். கண் விழித்ததும் தான் எங்கிருக்கிறோம் என்று யோசனையில் தன்னைச் சுற்றிப் பார்த்தான். நேற்று இரவு தான் புக் செய்த அறையில்தான் தங்கி இருக்கிறோமா என்று நினைத்தவன், எப்போது இங்கே வந்தோம் என்று யோசிக்கும்போதுதான், இரவு ஷிவுவுடன் நடந்த விஷயங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வந்தது.
அப்படியே அதிர்ச்சியில் திரும்பி தன் பக்கத்தில் பார்க்க, அவன் அருகில் ஷிவு இடுப்பு வரை போர்வை போர்த்திக்கொண்டு, பளிங்கு போல் உள்ள முதுகைக் காட்டிக்கொண்டு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். நேற்றுதான் அவளிடம் தன் காதலைச் சொன்னான். ஆனால் இன்று காலையில் கண் விழிக்கும்போது அவளுடன் ஒரே படுக்கையில், அதுவும் உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் இருப்பதைப் பார்த்ததும் ரூபேஷிற்கு தூக்கி வாரிப்போட்டது.
‘தான் என்ன காரியம் பண்ணிவிட்டோம்’ என்று தன்னைத்தானே நொந்துகொண்டவன், தனக்கும் ஷிவுவிற்கும் இடையில் இப்படி ஒரு விஷயம் எப்படித் தங்களின் அறியாமல் நடந்தது? இதற்கெல்லாம் யார் காரணம்? நாங்கள் இருவருமே ஒன்றாக இருந்தது சுயநினைவில் இல்லையே… அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் நான் அவளிடம் வரும்போது அவள் அரைபோதையில் தானே இருந்தாள். அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் வரை நான் நன்றாகத் தெளிவாகத்தான் இருந்தேன். என்னை வற்புறுத்தி அவள் ஜூஸைக் குடிக்க வைத்த பின்புதான் எனக்கு அதன் பிறகு என்ன நடந்தது என்று முழுவதுமாக மறந்து போனது.
முதலில் அவள் குடித்த ஜூஸில் என்ன கலந்திருக்கும் என்று யோசித்தவன், என்னவென்று செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். அருகில் தனக்கு நடந்தது எதுவும் தெரியாமல் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஷிவுவைப் பார்க்க… அவளுடன் இருந்த நினைவுகள் அவன் அசைபோட… அவன் உடலுக்குள் ஏதோ ஓர் உணர்வு ஏற்பட… அதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினான்.
எப்படியும் அவள் கண் விழித்தால் தன்னைக் கண்டு ‘தாட் பூட்’ என்று கத்துவாள் என்று நினைத்தவன், அவள் முதுகில் ஒரு போர்வையைப் போர்த்திவிட்டு, அவள் அருகில் சற்று நெருங்கிப் படுத்தவன் தன் மொபைலை எடுத்து அவளுடன் அவள் நினைவாக ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டான்.
திடீரென்று ஷிவு தன் கைகளால் அவள் வெற்று முதுகில் ஏதோ அரிப்பது போல இருக்க, தூக்கக் கலக்கத்தில் தன் முதுகில் அவள் கைகளைக் கொண்டுபோக முடியாமல் சிரமப்பட்டதைப் பார்த்த ரூபேஷ், அவள் அருகில் அமர்ந்து இருந்தவன் அவள் மேல் இருந்த போர்வையை விளக்கி, உள்ளே இருந்த அவள் கையை எடுத்துவிட்டு, அவள் முதுகில் எங்கு அரிக்கிறது என்று தெரியாமல் பொதுவாக ஒரு இடத்தில் அவளுக்குச் சொறிந்துவிட… அவளும் அவன் சொறிவதற்கு ஏற்ப தன் முதுகை கொடுக்க, அவன் மாற்றி மாற்றி அவள் சொன்ன இடத்தில் தீவிரமாக தன் வேலையைப் பார்த்தான்.
முதலில் தூக்கத்தில் ஏதோ நினைவில் ரூபேஷிடம் சொன்னாலும், பின் தூக்கம் கலைய, அவள் தன் பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க, அவன் கரும சிரத்தையாக அவளுக்கு முதுகு சொறிந்துகொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும் அதிர்ந்தவள் “ஆ…!” எனக் கத்திக்கொண்டே அவனைத் தள்ளிவிட்டு பெட்டிலிருந்து எழ… கீழே விழுந்த ரூபேஷ் தன் உடலில் துணி இல்லை என்பதை மறந்து தரையில் இருந்து எழ… ஷிவுவும் கத்திக்கொண்டு தன் மீது துணி எதுவும் இல்லை என்று தெரியாமல் அவளும் படுக்கையை விட்டு எழுந்து அமர…
அவன் பிறந்த மேனியாக ஷிவுவின் முன் நின்று இருப்பதைப் பார்த்த ஷிவு “ஆஹ்…!” எனத் தன் வாயில் கை வைத்துக் கத்த… அவள் தன்னை முழுவதுமாகப் பார்த்துவிட்டாள் என்று உணர்ந்ததும் ரூபேஷ் வெட்கத்தில் தன் முகத்தை மூடிக்கொள்ள…
அவன் செய்வதைப் பார்த்த ஷிவு தலையில் அடித்துக்கொண்டவள், “ஏய்… ரூபேஷ் முண்டம்…. முகத்தை எதுக்குடா மூடுற… முண்டம்… முண்டம்…. மூட வேண்டியதை மூடுடா… முண்டம்… முண்டம்…” என்று தலையில் அடித்துக்கொள்ள…
முகத்தை மூடிக்கொண்டு இருந்தவன் குனிந்து தன் இடுப்புக்குக் கீழ் கைவைத்து மறைத்துக்கொள்ள, அவன் இரண்டு கால்களையும் சேர்த்து வைத்துத் தன்னை மறைத்துக்கொள்ள பெரும் பாடுபட்டான்.
ஷிவு தன் மீது போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு, அவனையே கீழிருந்து மேலாகப் பார்க்க… “ஏய் ஷிவு! என்னடி அப்படி பார்க்கிறே… எனக்கு மறைக்க எதுவும் கொடு… இல்லை கண்ணையாவது மூடு, நான் ஏதாவது எடுத்து என்னைத் மறைச்சுக்கிறேன்,” என்று நெளிந்துகொண்டே சொல்ல…
“நான் ஏன்டா கண்ணை மூடணும்? என் கண்ணை நீ மூடச் சொன்னால் நான் மூடணுமா என்ன…” என்று அவள் பறந்து விரிந்த மார்பையும், லேசாக பீர் குடித்து தொப்பை போட்டது போல மேடிட்ட வயிறையும், அதைவிட அவன் தொடை அழகையும் கண்டு ‘ஆ’ என ஷிவு அவனை அப்படியே கண் சிமிட்டாமல் பார்க்க… ‘இவளை… எந்த நேரத்துல வீம்பு பிடிக்குறா பாரு… இப்படி கண்ணாலேயே என்னைக் கற்பழிச்சிருவா போல இருக்கே…. நான் எப்படி நின்னுட்டு இருக்கேன், கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம என்கிட்டே இருந்து கண்ணை நகர்த்தாமல் இருக்காளே,’ என்று நொந்துகொண்டவன், அருகில் இருந்த சிறு தலையணையை எடுத்து உடலை மறைக்க எட்டி அதை எடுக்கப்போக… இவன் நேரமோ என்னவோ அந்த தலையணை கையில் பட்டும் பிடிக்க முடியாமல் நழுவித் தள்ளிப் போய் விழுந்தது.
தன்னையே நொந்துகொண்டவன், “ஏய்… என்னடி… அப்படிப் பார்க்கிறே… எல்லாம் உன்னாலதான் நான் இப்போ இந்த மாதிரி இருக்கேன். ஒழுங்கா என்னோட டிரஸ் அங்க எங்கயாச்சும் இருக்கும் எடுத்துப் போடுடி…” என்றான்.
“டேய்! என்னடா… கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் ‘வாடி போடி’னு அதிகாரம் பண்ணுகிறே! வேணும்னா நீயே உன்னோட ட்ரெஸ்சைத் தேடி எடுத்துக்கோ…” என்றவள், “ஆமா… என்ன சொன்னே… என்ன சொன்னே… என்னாலதான் நீ இப்படி இருக்கியா? உன்னாலதான்டா… நான் இப்படி இருக்கேன். நான் உன்னோட லவ்வை அக்ஸப்ட் பண்ணலைன்னு சொல்லிட்டு, நேத்து நான் சாப்பிட்ட சாப்பாட்டில் எதையோ நீதான் கலந்திருக்கணும், அதனாலதான் நேத்து நடந்தது எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை,” என்றவள், “என்னடா கலந்து கொடுத்தே எனக்கு?” என்று அவனிடம் சண்டைக்கு நின்றாள்.
“யாரு… நானா… உனக்கு எதையோ கலந்து கொடுத்தேன்? ஏய்! எதுக்குடி இப்படிப் பொய் பேசுகிறே? நேத்து எதையோ குடிச்சிட்டு அந்த ஆதியோடவும், அவன் போன பிறகு தனியாகக் கண்டபடி இப்படியும் அப்படியும் ஆடி, எல்லாரும் உன்னை ஒரு மாதிரி பார்க்கிறாங்கன்னு நான் பாவம் பார்த்து உன்னைத் தனியாக் கூட்டிட்டு வந்தா…. நீ என்ன பண்ணின? நீ குடிச்சிட்டு வைத்த மிச்ச ஜூஸை என்னைக் குடி, குடினு வாயில ஊற்றிக் குடிக்க வைத்துட்டு… நான் இத்தனை இத்தனை வருஷமா என் பொண்டாட்டிக்காகச் சேர்த்து வைத்த என் கற்ப்பை நான் ‘வேண்டாம் வேண்டாம்’னு சொல்லியும் என்னை விடாமல் பிடித்து உன் பக்கத்துல போட்டு என்னைக் ரேப் பண்ணிட்டு…. இப்போ என்னவோ எல்லாமே நான் பண்ணின மாதிரி எவ்வளவு சீன் போடுகிறாய்,” என்று மூச்சுவிடாமல் பேசிவிட்டு மூச்சு வாங்க அவளைப் பார்த்துக் முறைத்தான்.
அவன் சொல்வதை எல்லாம் நினைவுபடுத்திப் பார்க்க, அப்போது அவளுக்கு முந்தின நாள் இரவு நடந்தது கொஞ்சம் கொஞ்சமாக நினைவிற்கு வர… “அப்போ நீ நான் சாப்பிட்ட ஜூஸில் எதுவும் கலக்கலையா…?” என்று அவனைப் பார்த்துக் கேட்க…
“ஏய்! இவ்வளவு நேரம் நான் மூச்சு வாங்க என்ன சொல்லிட்டு இருந்தேன் உன்கிட்டே? இத்தனையும் கேட்டு என்னையே திரும்பக் கேட்கிறே? கொஞ்சம் கூட உனக்கு இப்படி நடந்திருச்சுன்னு கவலைப்படுறியா நீ? இப்படி என்னை நிறுத்தி வெச்சுட்டு என்னை ரசிச்சிட்டு இருக்கே, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம?” என்றான் கடுப்பில்.
அவன் சொன்னதைக் கேட்டு அமைதியானவள், “இப்போ எதுக்குச் சும்மா கத்துறே… என்னவோ நீ மட்டும்தான் கெட்டுப்போன மாதிரி ஓவரா பேசிட்டு இருக்கே… உன்னைவிட பாதிப்பு எனக்குத்தான். நான் ஏதோ தைரியமான பொண்ணா இருக்கிறதுனால, ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்காமல் அமைதியா உன்கிட்டே பேசிட்டு இருக்கேன்,” என்றவள், “இங்கே நடந்தது உனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும். எப்படியும் நான் இந்தக் கம்பெனியில் இன்னும் ஒரு மாதத்திற்குத்தான் வேலை பார்க்கப் போகிறேன். அதன் பிறகு நீ யாரோ… நான் யாரோ… அதுவரை இத்தனை நாள் நாம ரெண்டு பேரும் எப்படி ஒருத்தரை ஒருத்தர் தெரியாத மாதிரி இருந்தோமோ, அப்படியே இனிமேலும் இருந்துக்கணும்,” என்றாள்.
அவனுக்கு இவளிடம் இனி என்ன பேசிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. கொஞ்ச நாள் அவள் போக்கிலேயே சென்று எப்படியும் அவள் மனதை மாற்றிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டவன் சரி என்று தலையை ஆட்டினான்.
பிறகு ஷிவு தன் பெட்ஷீட்டை உடலில் சுற்றிக்கொண்டு எழுந்து பாத்ரூம் சென்றாள்.
அவள் பாத்ரூம் சென்றதும் தான் ‘அப்பாடா’ என்று இருந்தது ரூபேஷிற்கு. உடலை மறைத்துக்கொண்டு நின்று இருந்தவன், அவள் உள்ளே சென்றதும் தன் கீழ் உறுப்பை மறைத்து வைத்திருந்த கையைத் தூக்கி, ‘அப்பாடா’ என்று நெட்டி முறித்து, பெட்டிற்கு அருகில் இருந்த தன் ஆடையை எடுக்கப்போக…
பாத்ரூமில் இருந்து வெளியே எட்டிப் பார்த்த ஷிவு, “என்னோட டிரஸ் எல்லாம் கிழிச்சு விட்டுட்டே… ஒழுங்கா நான் குளிச்சுட்டு வர்றதுக்குள்ள எனக்கு வேற டிரஸ் எடுத்து வெச்சுடு,” என்று சொன்னவள், அவனை கீழ் இருந்து மேல் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு “நாட் பேட்” என்று சொல்லிவிட்டுப் பாத்ரூமிற்குள் சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டாள்.
‘ஆத்தி! கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் என்னை எப்படிப் பார்க்கிறா…. இப்படி ஆகிருச்சேன்னு கொஞ்சமாவது வருத்தம் இருக்கா பாரு,’ என்று நினைத்தவன். ‘இவள்கிட்டே ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்’ என்று நினைத்துக்கொண்டே தன் ஆடையை எடுத்து வேகமாகப் போட்டுக்கொண்டான்.
இன்று ஆஃபீஸ் லீவ் என்பதால் காலை நேரம் வரை தூங்கி எழுந்த மது வாசற்கதவைத் திறந்து பால் பாக்கெட் எடுக்க வந்தவள், பால் பாக்கெட்டைக் கையில் எடுத்துக்கொண்டு உள்ளே செல்லப் போக… அப்போது எதிர் பிளாட் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் யாதேச்சையாகத் திரும்பிப் பார்த்தாள். சரியாக அப்போது கதவைத் திறந்து கொண்டு பவன் வெளியே வந்தான்.
வெளியே வந்ததும் அவன் பார்வை நேராக எதிர் பிளாட்டில் நின்று கொண்டிருந்த மதுவைத்தான் பார்த்தது. அவன் எதார்த்தமாகத்தான் எதிரே பார்த்தான். அவன் பார்த்ததும் வேண்டுமென்றே அவளைத்தான் பார்க்கிறான் என்று நினைத்துக்கொண்ட மது, அவனைக் கண்டு முறைத்துவிட்டு உள்ளே போனாள்.
அவள் தன்னைப் முறைத்துவிட்டு உள்ளே சென்றதைப் பார்த்த பவன், ‘இது என்னடா புதுசா எனக்கு வந்த சோதனை… வெளியே நிற்கிறது யாருன்னு பார்த்தது ஒரு குற்றமா? இந்த மேடம் இப்படி முறைச்சிட்டு போறாங்க… என்னைப் பார்த்தால் இவங்களுக்கு எப்படித் தெரியுது?’ என்று யோசித்துக் கொண்டே அவன் வீட்டின் வெளியே இருந்த நியூஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு போனான்.
உள்ளே வந்தவன் ஹாலில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டே பேப்பர் படித்துக் கொண்டிருக்க… அவன் அம்மாவிற்குக் காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்த துர்கா, அவர் கையில் கொடுத்து “இந்தாங்கம்மா, காபி சூடாறதுக்குள்ள குடிச்சிடுங்க…. நான் எதிர் வீட்டுக்கு போய்ப், அவங்க எழுந்திருச்சிட்டாங்களான்னு பார்த்துட்டு ஏதாவது வேலை இருந்தால் செஞ்சு கொடுத்துட்டு ஒரு ஒரு மணி நேரத்துக்குள்ள வந்திடறேன்,” என்று சொல்லிச் செல்லப் போக…
“அதெல்லாம் அவங்க எழுந்திருச்சிட்டாங்க. நான் இப்பதான் பேப்பர் எடுக்கப் போறப்பப் பார்த்தேன். அவங்க வீட்டுக்குள்ள போனதை,” என்று சொன்னான் பவன்.
பவனின் அம்மா துர்காவைப் பார்த்து, “ஏன் துர்கா…. நீ அவங்க வீட்டுக்கும்… இங்கேயும்…. வேலை செஞ்சுட்டு அங்கேயும் போய் வேலை செஞ்சுட்டு இங்கேயும் வர்றயே…. அந்தப் பொண்ணு உன்னை எதுவும் சொல்றது இல்லையா? அவங்களுக்கு வேலை செய்றதுக்கு எல்லாம் உனக்கு நேரம் கிடைக்குதா? ரெண்டு வீட்டிற்கும் மாறி மாறி வேலை செய்யிறியே,” என்றார்.
“அதெல்லாம் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைம்மா… அந்தப் பொண்ணுங்க ரெண்டும் தங்கமான பொண்ணுங்க… நான் என்ன பண்ணினாலும்… அவங்க சொல்ற வேலையை நான் செஞ்சு கொடுக்கிறதுனால அவங்க என்ன ரொம்ப வேலை எல்லாம் வாங்குறது இல்லை. மத்த வீட்ல வேலை பார்க்கிற மாதிரி எல்லாம் வேலை வாங்குவதில்லை அந்த மதுப் பொண்ணு…. நான் இங்கே வேலை எல்லாம் முடிச்சுட்டு அவங்க வீட்டுக்குப் போறப்பவே பாதி வேலையை முடிச்சு வெச்சிரும்மா… நான் போன பிறகு என்னுடன் சேர்ந்து என் கூடப் பேசிக்கிட்டே மற்ற வேலையும் அந்தப் பொண்ணு முடிச்சு எனக்கு வேலை சுலபமாகித் தான் கொடுத்துடுது… நான் எவ்வளவு ‘வேண்டாம்’னு சொன்னாலும் அந்தப் பொண்ணு கேட்கிறதே இல்லை. ரொம்பத் தங்கமான பொண்ணு,” என்று சொன்னார் துர்கா.
“ஆமா, அந்தப் பொண்ணு வீட்ல ரெண்டு பொண்ணு மட்டும் தான் இருக்காங்க. கூட ஆம்பளைங்க யாருமே இல்லையா?” என்று கேட்டார் பவனின் அம்மா.
“அந்த வீட்டில் மதுப் பொண்ணுதான் மூத்தப் பொண்ணும்மா… அதனுடைய தங்கச்சி நிலானி சின்னப் பொண்ணு. அந்தப் பொண்ணுக்கு இப்பதான் கொஞ்ச நாள் முன்னாடி கல்யாணம் ஆச்சு. அந்த நிலானிப் பொண்ணோட வீட்டுக்காரர் சொல்லித்தான் நான் உங்க வீட்டுக்கும் அங்கேயும் வேலைக்குப் போறேன்,” என்றாள் துர்கா.
“சின்னப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகி அவங்க வீட்டுக்காரர் தான் வேலைக்கு வெச்சாருன்னு சொன்ன அப்ப பெரிய பொண்ணுக்கு….” என்று கேட்டார் பவனின் அம்மா.
“அதை ஏன்மா கேட்கிறீங்க…. அந்த மதுப் பொண்ணு பார்க்க எவ்வளவு அமைதியா, சாந்தமா இருக்கும் தெரியுமா…. அந்தப் பொண்ணோட குணத்துக்கெல்லாம் அது வாழ்க்கையில் இப்படி எல்லாம் கஷ்டப்படணும்னு எழுதி வெச்சிருக்கு போல,” என்று சலித்துக் கொண்டாள்.
அதுவரை இவர்கள் இருவரும் பேசுவதைக் கண்டும் காணாதவன் போலப் பேப்பர் படித்துக்கொண்டு கேட்டுக் கொண்டிருந்தவன், மதுவைப் பற்றி துர்கா சொன்னதும் தன் பேப்பரை மடித்து வைத்துவிட்டுத் துர்காவைப் பார்த்து “ஏன் அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டான் ஆர்வமாக.
மது வீட்டுக்குச் செல்லப் போக இருந்த துர்கா இவர்கள் எதிர்வீட்டு விஷயத்தைக் கேட்கவும் அவர்களுக்குக் கீழே அமர்ந்தவள், பவனிடம் “அதுவா தம்பி… அந்த மதுப் பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு… ஆனா அது புருஷனை ‘வேண்டாம்’னு சொல்லி டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்துப் போட்டு கொடுத்துட்டு வேணாம்னு வந்திருச்சு. இந்த மதுப் பொண்ணும் அவ புருஷனும் லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணி இருக்காங்க. கல்யாணம் பண்ணி கொஞ்ச நாள் வரைக்கும் அந்தப் பொண்ணை அவன் நல்லாத்தான் பார்த்துட்டு இருந்திருக்கான். ஆனா கொஞ்ச நாள் ஆக ஆக அவனுடைய சுயரூபம் அவங்களுக்குத் தெரியவந்திருக்கு. அவன் மதுவோட தங்கச்சியை அவனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கச் சொல்லி நிலானியையும், மதுவையும் சேர்த்து டார்ச்சர் பண்ணி இருக்கான்,” என்ற துர்கா அதன் பின் நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் அவர்களிடம் கூறினாள்.
பவனின் அம்மா “பாவம் இந்தச் சின்ன வயசுல அந்தப் பொண்ணுக்கு எவ்வளவு கஷ்டம். கல்யாணம் பண்ணிட்டு போய்ப் பொண்டாட்டியை நல்லா வாழ வைக்காதவர்கள் எல்லாம் என்ன ஆம்பளைங்க… அக்கா நல்லா இருக்கணுங்கிறதுக்காகத் தங்கச்சி அவளுக்காக மாடியில் இருந்து குதிச்சுத் தற்கொலை பண்ணிக்கப் போயிருக்கு பாரு…. அக்கா தங்கச்சி இரண்டு பேரும் இந்த வயசுல எவ்வளவு கஷ்டத்தையும், அதே நேரம் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்காமல் எவ்வளவு ஒற்றுமையாவும் இருக்காங்க பாரு,” என்று பவனிடம் சொன்னார்.
இதுவரை மதுவைப் பற்றி எதுவுமே நினைக்கத் தோன்றாத பவனுக்கு, அவள் இத்தனை நாள் தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களைத் துர்கா சொல்லி கேட்கவும், அவன் மனதிற்குள் ஏதோ ஓர் உணர்வு மதுவின் மேல் தோன்ற, அது அவள் மீது கொண்ட பரிதாபமாக இருக்குமோ என்று தோன்றியது. ஏனோ அவள் கஷ்டப்படுகிறாள் என்று கேள்விப்பட்டதும் இவனுக்கு மனது வலித்தது. இவர்கள் மூவரும் அமர்ந்து நிலானியைப் பற்றியும், மதுவைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்க…
திடீரென்று அவர்கள் வீட்டிற்கு வெளியே இருந்து பயங்கரமாகச் சத்தம் கேட்கவும், துர்கா எழுந்து வேகமாகப் பவனின் வீட்டுக் கதவைத் திறந்து வெளியே பார்க்க…
அவர்கள் வீட்டுக்கு நேர் எதிரே மதுவின் வீட்டின் முன்பு ரவி நின்று மதுவின் வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். அவனை மதுவின் வீட்டிற்கு உள்ளே விடாமல் பாதுகாப்பிற்காகப் போடப்பட்டிருந்த அவர்களது வீட்டு டிரைவர் ரவியைத் தடுத்துக்கொண்டு நின்றிருந்தான்.
பவன் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு துர்கா வெளியே வரவும், மதுவின் வீட்டிற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்கிறது என்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த மது, ரவி அவள் வீட்டின் முன் நின்று இருப்பதைப் பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியாகி நின்றுவிட்டாள்.
அவனைப் பார்த்ததும் உடலெல்லாம் நடுங்கி வியர்க்க ஆரம்பித்தது மதுவிற்கு… வெளியில் சத்தம் கேட்கத் தன் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்த நிலானி, அங்கே ரவி நிற்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியானவள், நின்று கொண்டிருந்த மதுவின் கையைப் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அவள் பின்னே தன்னை மறைத்துக்கொண்டாள்.
அவர்கள் இருவரையும் பார்த்ததும், “என்னங்கடி….. ரெண்டு பேருக்கு என்னைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருக்குதா? இவனுக்கு எப்படிடா நீங்க இருக்கிற இடம் தெரிஞ்சிருச்சு அப்படின்னு யோசிக்கிறீங்களா…. இதெல்லாம் என்ன பெரிய விஷயமா உங்களை கண்டுபிடிக்கிறது,” என்று சொன்னான் ரவி.
அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் பயந்துகொண்டு ரவியைப் பார்க்க… மதுவைப் பார்த்த ரவி, “ஏண்டி! டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டா உடனே நான் உன்னை விட்டுப் போயிடுவேன்னு நீ நினைச்சியா…. அப்படி எல்லாம் உன்னைச் சீக்கிரமா விட்டுட்டுப் போக முடியுமா என்ன….. நீ தங்க முட்டை போடும் வாத்து…. உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுட்டு நான் போய்ப் வெளியே தனியாக் கஷ்டப்படணும்னு என்ன எனக்கு எழுதியா இருக்கு,” என்று சொன்னவன், “ஒழுங்கா மரியாதையாக இப்பவே கிளம்பி என் கூட வீட்டுக்கு வந்திடு. அப்படி நீ வரலைன்னு சொன்னால், நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது….. உன்னையும் உன் தங்கச்சியையும் பத்தி ஊர் முழுக்க… சொல்லி நாரடிச்சிருவேன். உன் தங்கச்சி கல்யாணம் பண்ணிட்டு அவ வீட்டுக்கு வந்ததும், அவ புருஷனை கைக்குள்ள போட்டுட்டு நீயும் உன் தங்கச்சியும் ஒரே வீட்டுல சந்தோஷமாக அவன் கூடச் சேர்ந்து இருக்கலாம்னு வந்துட்டியா என்ன…. அதையே தானடி… நானும் சொன்னேன், உன் தங்கச்சியையும் நான் கல்யாணம் பண்ணிட்டு வந்து நம்ம கூடவே வெச்சுக்கலாம்னு சொன்னேனே… ஆனா நீதான் கேட்க மாட்டேன்னுட்டே… உன் தங்கச்சியும் ‘அக்கா வாழ்க்கை எக்கேடு கெட்டுப் போனால் என்ன’னு மாடியில் இருந்து விழுந்து சாகப் பார்த்த…. உன் தங்கச்சி கீழ விழுந்ததும் இதுதான் சான்ஸ்னு நினைத்து ஒருத்தன் வந்து உன் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். இது தான் சாக்குன்னு அவன் கூட நீயும் ஒட்டிட்டு வந்துட்டே…. உனக்கு நான் ஒருத்தன் பத்தலையா… என்னைவிட வசதியா அழகா ஒருத்தனைப் பார்த்ததும் அக்காளும் தங்கச்சியும் அவனை மடக்கி கைக்குள்ள போட்டுட்டு ஜாலியாக இருக்கீங்களா என்ன,” என்று அவர்களை நாக்கில் நரம்பில்லாமல் பேச…
இதை எல்லாம் எதிர் பிளாட்டில் இருந்துகொண்டு பவனும் அவன் அம்மாவும் பார்த்துக்கொண்டு நின்று இருந்தார்கள்.
மதுவிற்கு ரவி பேசுவது எல்லாம் கேட்டு மிகவும் அசிங்கமாகப் போய்விட்டது. அதுவும் நேற்றுதான் கதிரின் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள். இப்போது தான் இருக்கும் நிலையைப் பார்த்துப் பவன் தன்னைப்பற்றி என்ன நினைப்பான்? நாளை வேலைக்குப் போனால் அவன் தன்னிடம் எப்படி நடந்துகொள்வான் என்று மதுவிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
ரவி மேலும் நாக்கில் விஷம் தடவி வார்த்தைகளால் அவளைக் காயப்படுத்திக் கொண்டிருக்க…. அவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்த மது எப்படியோ தன் தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டி ரவியைப் பார்த்து, “இதோ பாருங்க…. உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் வேண்டாம்னு சொல்லித்தான் நான் டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டு வந்துட்டேன்.. உங்களுக்கு எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. எங்களைத் தேடிட்டு இனிமேல் இங்கே வர வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க…. அப்படி மீறித் திரும்பவும் நீங்க இங்க வந்தீங்கன்னா நான் உங்க மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டி வரும்,” என்று சொன்னாள் மது.
இவ்வளவு நாள் தான் என்ன பேசினாலும்… எவ்வளவு அடித்தாலும்… தாங்கிக் கொண்டு திருப்பிப் பேசாமல் அமைதியாக இருந்த மது, இன்று அவனிடம் இவ்வளவு தைரியமாகப் பேசுவதைக் கேட்டு அவனால் அதைத் தாங்க முடியவில்லை. “என்னடி சொன்ன? என்னைப் போலீஸ்ல பிடிச்சுக் கொடுப்பியா நீ…” என்று அவளை அறையத் தன் கைய ஓங்க… அவன் அறைய வருகிறான் என்று பயந்து தன் கண்களை மூடிக்கொள்ள… நிலானியும் பயந்துபோய்க் கண்களை மூடிக்கொள்ள….
அப்போது “அம்மா….” என்று ரவி அலறும் சத்தம் கேட்கவும் இருவரும் கண் திறந்து பார்க்க… அவர்கள் எதிரே நின்று இருந்தவனைப் பார்த்து முதலில் அதிர்ந்தாலும், பின் அவனைப் பார்த்ததும் நிம்மதி அடைந்து இருவரும் தங்களுக்கு எதிரே நின்று இருந்தவனைப் பார்த்து அப்படியே நின்றனர்.
EPISODE 92
மதுவும், நிலானியும் இருக்கும் அபார்ட்மெண்ட்டைக் கண்டுபிடித்து எப்படியோ அங்கே வந்துவிட்ட ரவி, மதுவின் வீட்டின் முன் அவளையும், நிலானியையும் வைத்து மிகவும் அசிங்கமாகவும், தரக்குறைவாகவும் பேசிவிட்டான். இதை எல்லாம் அவள் எதிர் வீட்டில் நின்று கொண்டு பவன், அம்மா மற்றும் நிலானி மூவரும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர். ரவி பேசிய பேச்சுகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மதுவினால் அவன் வார்த்தைகளின் வீரியம் தாங்காமல் உடைந்து போனாள்.
மதுவைப் போலவே மனம் வருந்திய நிலானி, ரவிக்கு பயந்துகொண்டு மதுவின் பின்னால் ஒளிந்து கொள்ள… தான் ரவியைக் கண்டு பயந்துகொண்டு இருப்பதால் தான் தன் தங்கையும் தன்னைப்போலவே இருக்கிறாள் என்று நினைத்துக்கொண்ட மது தன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ரவியுடன் சண்டை போட்டாள். “உங்களுக்கு எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. எங்களைத் தேடிட்டு இனிமேல் இங்கே வர வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க…. அப்படி மீறித் திரும்பவும் நீங்க இங்க வந்தீங்கன்னா நான் உங்க மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டி வரும்,” என்று சொன்னாள் மது.
இவ்வளவு நாள் தான் என்ன பேசினாலும்… எவ்வளவு அடித்தாலும்… தாங்கிக்கொண்டு திருப்பிப் பேசாமல் அமைதியாக இருந்த மது, இன்று அவனிடம் இவ்வளவு தைரியமாகப் பேசுவதைக் கேட்டு அவனால் அதைத் தாங்க முடியவில்லை.
“என்னடி சொன்ன! என்னைப் போலீஸ்ல பிடிச்சுக் கொடுப்பியா நீ…” என்று அவளை அறையத் தன் கையை ஓங்க… அவன் அறைய வருகிறான் என்று பயந்து தன் கண்களை மூடிக்கொள்ள… நிலானியும் பயந்துபோய்க் கண்களை மூடிக்கொள்ள….
அப்போது “அம்மா….” என்று ரவி அலறும் சத்தம் கேட்கவும் இருவரும் கண்ணைத் திறந்து பார்க்க… அவர்கள் எதிரே நின்றிருந்தவனைப் பார்த்து முதலில் அதிர்ந்தாலும் பின் அவனைப் பார்த்ததும் நிம்மதி அடைந்து இருவரும் தங்களுக்கு எதிரே நின்று இருந்தவனைப் பார்த்து அப்படியே நின்றனர்.
ரவியின் கையை ஆக்ரோஷமாகப் பிடித்துக்கொண்டு, கண்கள் எல்லாம் சிவப்பேறி அவன் முன் கோபமாக நின்று இருந்தான் கதிர். அவனை அங்கு யாருமே எதிர்பார்க்கவில்லை. அதுவும் இன்று விடுமுறை நாள். இன்று அவன் தங்களைப் பார்க்க வந்திருப்பான் என்று சற்று நிம்மதியாக இருந்தது மதுவிற்கும், நிலானிக்கும்.
ரவியின் கையைப் பிடித்து அவனை மதுவின் அருகில் இருந்து இழுத்தவன், “ஏய்… யாருடா நீ…. வீட்ல தனியாக இருக்கப் பொண்ணுங்க கிட்டே வந்து வம்பு பண்ணிட்டு இருக்கே…” என்று அவனைப் பிடித்துத் தள்ளி விட்டான். கதிர் தள்ளிவிட்ட வேகத்தில் சற்றுத் தள்ளி நிலை தடுமாறித் தரையில் போய்க் கீழே விழுந்தான் ரவி.
மதுவின் அருகில் வந்த கதிர், “மது! உங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே…” என்றான்.
மது பதில் பேசுவதற்குள், தரையில் இருந்து எழுந்த ரவி வேகமாக வந்தவன் கதிரின் தோளைப் பிடித்துத் தன்னை பார்க்குமாறு திருப்பி, “டேய்! யாருடா நீ…. நானும் என் பொண்டாட்டியும் பேசிட்டு இருக்கும்போது குறுக்க வந்து பேசி என்னைக் கீழே தள்ளிவிட்டுட்ட…. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் நீ என் மேல கை வைப்ப,” என்ற ரவி கதிரை அடிக்கக் கையை ஓங்க…
அவன் கையைப் பிடித்து முறுக்கிய கதிர் மதுவைப் பார்த்து, “நான் இவரைத் தள்ளிவிட்டுட்டேன்னு உங்களுக்கு எதுவும் வருத்தமா?” என்றான்.
மது ‘இல்லை’ என்று தலையை ஆட்ட… “அப்போ நான் இவரை அடித்தால்… ‘ஏன்டா… என் புருஷனை அடிச்சே’ன்னு என் சட்டையைப் பிடித்துக் கேட்க மாட்டீங்களே…” என்றான் கதிர்.
“எப்போ என் தங்கச்சி உயிருக்கு போராடிட்டு இருக்க, அப்போ… கொஞ்சம் கூட கருணை இல்லாமல் என் தங்கச்சியைக் காப்பாற்ற வராமல் இருந்தானோ… அப்போவே இவன் குணம் இவ்வளவுதான் என்று தெரிந்துவிட்டது. அன்று நிலானியைப் பார்க்க ஹாஸ்பிடல் வரும்போதே இவன் வேண்டாம் என்றுதான் நான் முடிவு பண்ணிவிட்டு வந்தேன். அன்றே இவனுக்கு நான் டைவர்ஸ் பேப்பரிலும் கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டேன். அதனால் நீங்க இவனை என்ன பண்ணினாலும் நான் ‘ஏன்’னு கூடக் கேட்க மாட்டேன்,” என்றால் மது.
மது அப்படிச் சொல்லி முடித்ததுதான் தாமதம். ரவியின் கையைப் பிடித்து முறுக்கிக்கொண்டிருந்தவன், முறுக்கிய கையைத் திருப்பி இழுத்து அப்படியே எதிர்ப்புறம் அடித்து அவன் கையை உடைத்தான் கதிர்.
ரவி “ஆ….” என்று அலறிக்கொண்டு தரையில் விழ… அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும்.. தன்னை இத்தனை ஆண்டுகளாக அவன் படுத்திய கொடுமைக்கு இப்போது தேவைதான் என்று நினைத்த மதுவிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
ரவி கையைப் பிடித்து அலறிக்கொண்டு தரையில் இருந்து எழுந்தவன், “உன் தங்கச்சி புருஷன் கூடச் சேர்ந்து என்னை வேண்டாம்னு சொல்லி டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்துப் போட்டுட்டு இங்கே எங்க கூட வந்து இருக்க…. இப்போ இவன் யாரடி புதுசா உனக்கு சப்போர்ட் பண்ணிட்டு இப்படி வந்து என் கையை உடைக்ககிறான்,” என்று கை உடைந்த வலியோடு ஆத்திரத்தோடு கத்தினான் ரவி.
அனைவரும் தன் அருகில் இருப்பதால் மதுவிற்கு கொஞ்சம் தைரியம் வர, ரவியின் அருகில் வந்து, “அவர் யாராயிருந்தால் உனக்கு என்ன… இனிமேல் நான் இருக்கிற பக்கம் வந்தேனா உன் கை கால் இல்லாமல் உன் தலையையும் சேர்த்து வெட்டி போட்டுட்டுப் போயிட்டே இருப்பேன். இனிமேல் நான் இருக்கிற பக்கமே நீ வரக் கூடாது,” என்று அவனை எச்சரிப்பது போலச் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
மது இவ்வளவு கோபமாக ரவியிடம் பேசிவிட்டுப் போவதைப் பார்த்து ரவிக்கு அவளைப் பார்க்கவே சற்றுப் பயமாகத்தான் இருந்தது. இவ்வளவு நாள் ஒடுங்கிப் பாம்பாக நடந்து வந்தவள் இன்று சீறும் பாம்பைப்போல அவனிடம் பேசிவிட்டுச் சென்றதைப் பார்த்தவன், இப்போதைக்கு இவளிடம் இருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது என்று நினைத்தவன், கதிரை ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து தன் உடைந்த கையைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
மது உள்ளே செல்ல, வாசலில் நின்றிருந்த நிலானி கதிரைப் பார்த்து, “உள்ளே வாங்க அண்ணா,” என்று அவனை அழைத்துக்கொண்டு செல்லப் போக… நிலானியிடம், “நீ உள்ளே போம்மா, நான் இப்போ வந்துடுறேன்,” என்று சொன்னவன் திரும்பி பவனைப் பார்க்க, பவன் வேகமாக வந்து கதிரின் முன் நின்றான்.
கதிரின் நடுவில் வந்து நின்றிருப்பவன் கதிரையே பார்க்க, கதிர் அமைதியாகப் பவனை ஒரு பார்வை பார்க்கவும், “சொல்லுங்க சார், ஏன் என்ன இப்படி பார்க்கிறீங்க?” என்று கேட்டான்.
“இவ்வளவு நேரம் இங்கு நடந்தது நீ பார்த்துட்டுத்தானே இருந்த? நான் வர்றதுக்கு முன்னாடி இருந்தே அந்த ஆள் மது கிட்டே பிரச்சனை பண்ணிட்டுத்தானே இருந்தான். எதிர் பிளாட்டில் தானே நீ இருக்க? அதுவும் இல்லாம உன்னோட ஒண்ணா வேலை பார்க்குறாங்க அவங்க…. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது இப்படி பார்த்துட்டு இருக்கியே, உனக்குக் கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா? யாரோ முன்ன பின்னத் தெரியாத உங்களுக்குக் கூடச் சில பேர் ஓடி வந்து அவங்க கஷ்டத்தில் இருக்கும்போது உதவி செய்றாங்க. ஆனா மது உன்கூட வேலை பார்க்கிறார்கள். அதுவும் இல்லாம அவங்க இருக்குற அதே பிளாட்டுக்கு எதிரில் தான் நீயும் இருக்க. இந்த விஷயத்தைப் பார்த்துட்டு எதுவுமே பண்ணாம அப்படி நின்னுட்டு இருப்பது ஒரு ஆம்பளைக்கு அழகா?” என்று கேட்டான் கதிர்.
அவன் அப்படிச் சொன்னதும் பவனுக்குக் கோபம் வந்துவிட, “சார், கொஞ்சம் பார்த்துப் பேசுங்க. நீங்க நினைக்கிற மாதிரியான ஆள் ஒன்னும் நான் கிடையாது. நானும் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னுதான் நினைச்சேன். ஆனா அவங்க என்னப் பார்த்தாலே ஏதோ நான் அவங்க கிட்டத் தப்பா நடந்துக்கிற மாதிரியும், என்னைப் பிடிக்காத மாதிரியும் பார்க்குறாங்க. அவங்க என்ன நம்பிக்கை இல்லாம பார்க்குறப்போ நான் எப்படி சார் அவங்களுக்கு வந்து ஹெல்ப் பண்ண முடியும்,” என்று பவன் கேட்டான்.
“ஒரு பொண்ணுக்கு உன் மேல நம்பிக்கை இருக்கோ… இல்லையோ… அதையெல்லாம் நீ யோசிக்கவே யோசிக்காத… ஆனா உன் கண்ணு முன்னாடி ஒரு பொண்ணுக்குக் கஷ்டம் வரும்போது, அது உன் கூடப் பிறந்தவங்களா இருந்தாலும் அல்லது ரோட்ல யாராவது போறவங்களாவோ இருந்தாலும் இப்படித்தான் பார்த்துகிட்டு இருப்பியா? இனிமேல் இந்த மாதிரி எல்லாம் இருந்து பழகாத. சரியா?” என்றான் கதிர்.
“சரி சார், நான் பார்த்துக்கிறேன். இனிமேல் இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்,” என்று சொன்னவனைப் பார்த்து ‘குட்’ என்று தோளைத் தட்டிக் கொடுத்தவன். “சரி, நீ போ… விக்கி வரவரைக்கும் நீ இவங்களை கொஞ்சம் கவனமா பார்த்துக்க. உன்னால நேரடியா ஹெல்ப் பண்ண முடியலனாலும், கொஞ்சம் அவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் உன்னால் எப்படி கவனிச்சுக்க முடியுமோ அது மட்டும் செய்தால் போதும்,” என்று சொன்னான் கதிர்.
அதன் பின் பவனை அவன் பிளாட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு மதுவின் பிளாட்டிற்குள் சென்றான் கதிர்.
சங்கவியுடன் சுவிட்சர்லாந்து வந்திருந்த ஆதி, வந்த சில நாட்களாக மிகவும் பிசியாக இருக்கவும், அவனுக்கு துர்காவுடன் பேசவே நேரம் கிடைக்கவில்லை. சுவிட்சர்லாந்தில் இருக்கும் உற்பத்தியாளர்களைச் சந்தித்து, அவர்களிடம் தன்னுடைய பிசினஸில் அவர்களையும் இணைத்துக் கொள்வது குறித்து, தங்கள் பிசினஸைப் பற்றிய நிறைய முக்கியமான விஷயங்களை அவர்களிடம் சொல்லி, தங்களுடன் பிசினஸில் கொலாபிரேசன் செய்வதற்காக அவர்களது சம்மதத்தையும் வாங்கி விட்டான்.
உற்பத்தியாளர்களிடம் எப்படிப் பேச வேண்டும், அவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், ஒரு ஆர்டரை எப்படி அவர்களுக்குக் கொடுப்பது அல்லது அவர்களிடமிருந்து வாங்குவது, அதை எப்படி வெளியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்று ஒவ்வொன்றையும் சங்கவிக்குத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தான் ஆதி. அவளும் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆதியுடன் அவன் எங்கு சென்றாலும் சென்று, அவன் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் நுணுக்கமாகக் கவனித்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டாள் சங்கவி.
இங்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாக வேலை வேலை என்று சுற்றிக்கொண்டிருந்த ஆதிக்கு, தான் நினைத்த விஷயங்கள் ஓரளவு நடந்து பின் தான் சற்று ரிலாக்ஸ் ஆனான் ஆதி. இன்று வார விடுமுறை நாள் என்பதால் ஆதி அவனுடைய கார்ட்ஸ்களுக்கு இன்று ஒரு நாள் அவர்களை வெளியே சுற்றிப் பார்க்கச் சென்றுவிட்டுக் காலை வரும்படி அனுப்பி இருந்தான். அவர்கள் செல்ல மறுக்கவே, “இன்று நான் ரூமை விட்டே வெளியில் வரப் போவதில்லை,” என்று என்று அவர்களுக்கு உறுதி அளித்த பின் தான் அவர்கள் அனைவரும் வெளியே சென்றனர்.
இதை அறிந்துகொண்ட சங்கவி ஆதியை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு வெளியே சென்றாள். ஆதி சங்கவியிடம், “எனக்கு வெளியில் வர விருப்பம் இல்லை,” என்று எவ்வளவோ சொல்லியும் அவள் விடாமல் அவனை வற்புறுத்தித் தன்னுடன் வெளியில் அழைத்துச் சென்றாள்.
அவளுடன் வேண்டா வெறுப்பாக ஆதி வெளியே சென்றவன், “இப்போ எதுக்கு என்ன இங்க அழைச்சிட்டு வந்த?” என்று கேட்டான். அவள் அழைத்து வந்திருந்த இடம் அந்த ஊரிலேயே ஒரு பெரிய ஹோட்டல். அங்கு இருக்கும் உணவுகள் எல்லாம் நன்றாக இருக்கும் என்று சங்கவி ஏற்கனவே கேள்விப்பட்டதால், இன்று எப்படியாவது ஆதியுடன் வந்துவிட வேண்டும் என்று ஆதியை வற்புறுத்தி அவனை அந்த ஹோட்டலுக்கு அழைத்து வந்திருந்தாள் சங்கவி.
ஆதி வேண்டா வெறுப்பாக சங்கவியுடன் சாப்பிட்டவன், “கிளம்பலாமா?” என்று சங்கவியிடம் கேட்க… “இரு ஆதி, ஜூஸ் சொல்லி இருக்கேன். அதை முடிச்ச பிறகு போகலாம்,” என்றாள். தன் மனதிற்குள் சங்கவியை வறுத்து எடுத்துக்கொண்டு இருந்தான் ஆதி. ‘இன்றுதான் வேலை சற்றுச் சீக்கிரமாக முடிந்தது. இரவு போய்த் துர்காவுடன் பேசலாம் என்று நினைத்திருக்க…. இவள் வேறு அங்கு போகலாம் இங்கு போகலாம் என்று என்னை இம்சை செய்கிறாள்,’ என்று சங்கவியின் மேல் கோபம் கொண்டான் ஆதி.
ஜூஸ் வந்ததும் கொண்டு வந்து வைத்த பேரரை சங்கவி பார்த்து, “எல்லாம் ஓகேவா?” என்று ஆதிக்குத் தெரியாமல் ஜாடையாகக் கேட்க…. அந்த பேரர் சங்கவியிடம் ஒரு கிளாஸை மட்டும் கண்ணால் காட்டி ‘ரெடி’ என்பது போலக் கையைக் காட்டிவிட்டு, அவள் எதிரே ஒரு ஜூஸை ஆதி முன் வைத்துவிட்டு, மற்றொரு கிளாஸ் இருந்த ஜூஸை சங்கவியிடம் வைத்துவிட்டுச் சென்றான்.
சங்கவி ஜூஸை எடுத்துக் குடித்துக் கொண்டிருக்க, ஆதி தன் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான். சங்கவி ஆதியிடம், “சீக்கிரம் ஜூஸைக் குடி ஆதி, டைம் ஆச்சு போகலாம்,” என்று சொல்லவும். ஆதி ஜூஸில் தூக்க மருந்து கலந்து வைத்திருந்த ஜூஸை எடுத்து, அதில் இருந்த ஸ்ட்ராவை எடுத்து வைத்துவிட்டு அப்படியே மடமடவென்று முழுவதுமாகக் குடித்து முடித்தான். அவள் ஜூஸில் ஒரு துளி கூட மிச்சம் வைக்காமல் மொத்தமாகக் குடித்ததைப் பார்த்ததும் சங்கவிக்கும் மிகவும் சந்தோஷமாகப் போய்விட்டது. ஏனென்றால் அவள் போட்ட பிளான் சரியாக நடக்கப் போகிறது என்று சந்தோஷத்தில் தான் சங்கவி ஆதி ஜூஸ் குடித்ததைப் பார்த்துக் குஷியானாள்.
ஜூஸைக் குடித்து முடித்ததும் இருவரும் கிளம்பித் தாங்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வந்தனர். ஜூஸைக் குடித்ததில் இருந்தே ஆதிக்கு லேசாகத் தலை சுற்றுவது போல இருக்க… அதைக் காட்டிக்கொள்ளாமல் சங்கவியுடன் கிளம்பி ஹோட்டலுக்கு வந்தான். அவன் கிளம்பியதில் இருந்து தடுமாறுவதைக் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள் சங்கவி. ஆனால் அதை ஆதியிடம் காட்டிக்கொள்ளாமல் வந்தாள்.
ஹோட்டலுக்குள் வந்ததும் ஆதியின் தலை சுற்றுவது போல இருக்க… நடந்துகொண்டிருந்தவன் திடீரென்று கால்கள் இடறி கீழே விழப்போக… சங்கவி இதற்குத்தான் காத்திருந்ததுபோல… ஓடி வந்து விழாமல் தன்னோடு சேர்த்துக் பிடித்துக்கொண்டாள். அவர்கள் இருவரையும் பார்ப்பவர்களுக்கு, ஆதி குடித்து இருப்பது போலவும், சங்கவி அவனை கீழே விழாமல் பிடித்துக்கொண்டு செல்வது போலவும் தான் இருந்தது.
சங்கவி ஆதியின் கையைத் தன் தோள் மீது போட்டுக்கொண்டவள், “ஆதி! என்ன ஆச்சு… இவ்வளவு நேரம் நல்லா தானே வந்தே, இப்போ என்ன ஆச்சு?” என்றாள் எதுவும் தெரியாதவள் போல.
ஆதி தன் தலையைப் பிடித்துக்கொண்டே, “எனக்குத் தலை லேசாகச் சுற்றுவது போல இருக்கிறது சங்கவி… என்னை என்னோட ரூமிற்கு கொண்டு விட்டுவிடு,” என்றான் ஆதி.
“சரி ஆதி,” என்று சொன்னவள், அவன் பாக்கெட்டில் இருந்த ரூம் கீயை அவனிடம் இருந்து வாங்கிக்கொண்டு, அவன் ரூமைத் திறந்து ஆதியை அவன் மெத்தையில் படுக்க வைத்துவிட்டு, அவனிடம் “ஆதி! நீ நல்லாத் தூங்கு ஆதி. நான் காலை வந்து உன்னைப் பார்க்கிறேன்,” என்று சொல்லிவிட்டு அவன் அறையை விட்டு வெளியே வந்து கதவைக் லாக் செய்துவிட்டு அவள் அறைக்குச் சென்றாள்.
ஆதியும் மருந்தின் விளைவாக தன்னை மறந்து நன்றாகத் தூங்கிவிட… நள்ளிரவு போல… அவன் அறைக்கு வந்த சங்கவி, ஆதி அறைச் சாவியை அவனை உள்ளே கொண்டு வந்து விட்டுவிட்டு அதைத் தன்னோடு எடுத்துச் சென்றிருந்தாள். அதை வைத்து அவன் ரூம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவள், அவன் அறைக் கதவைச் சாத்திவிட்டு, அறை விளக்கை ஒளிர விட்டு நேராக ஆதியின் பெட்டிற்கு வந்தாள்.
அவள் வருவதற்கு முன்னாலேயே இரு ஆட்களை செட் செய்து ஆதியின் ஆடைகளை அவன் உடலில் இருந்து சட்டையைக் கழற்றிவிடச் சொல்லி அனுப்பி இருந்தாள். அவர்கள் வந்து சங்கவி சொன்னது போல… அவன் சட்டையைக் கலைந்துவிட்டு அவன் இடுப்பு வரை போர்வை போர்த்திவிட்டுச் சென்று இருந்தனர்.
இது எதுவுமே தெரியாமல் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்த ஆதியைப் பார்த்தவள், அவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்துவிட்டுத் தன் மேலாடையைக் களைந்துவிட்டு வெறும் உள்ளே போட்டிருந்த பனியனோடு அவன் அருகில் வந்து படுத்துக்கொண்டு, அவன் முகத்தையும் அவன் உடலையும் பக்கத்தில் பார்க்க… அவன் முகம் மற்றும் உடலைப் பார்த்தது அதில் இருந்த கோபுலங்களையும் (புடைப்புகளையும்/தழும்புகளையும்), புண்களையும் பார்த்து முகம் சுளித்தவள். “ச்சீ…. இவனை எப்படி இந்தத் துர்கா திருமணம் செய்துகொண்டு இத்தனை நாள் அவனுடன் இருக்கிறாளோ,” என்று அருவருப்பாக ஆதியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே முன்னகர்ந்தாள் சங்கவி.
அவனுடன் சிறிது நெருக்கமாக இருப்பது போலப் படுத்துக் கொண்டவள் தன் மொபைலை எடுத்து இருவரும் படுக்கையில் ஒன்றாக இருப்பது போல… பல புகைப்படங்களை எடுத்துவிட்டு அவன் பெட்டில் இருந்து வேகமாக எழுந்தவள். “உவ்வேக்…” என்று சொல்லிவிட்டு, “ச்சீ…” என்று அவன் உடலில் உரசிய தன் கைகளைத் தேய்த்துவிட்டவள், வேகமாக அவள் ஆடையை அணிந்து கொண்டு அவள் அறைக்குச் சென்றுவிட்டாள்.
அவள் சென்றதும் ஆதியின் ஆடையைக் கலைந்துவிட்டுச் சென்ற ஆட்கள் உள்ளே வந்து அவன் ஆடைகளைத் திரும்பவும் மாட்டிவிட்டுப் பழையபடி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டுச் சென்றனர். அடுத்த நாள் காலை சூரியன் யாருக்கும் காத்திருக்காமல் தன் கதிர்களை விரித்துக் கொண்டு உலகிற்கு வெளிச்சம் தர வந்தது.
காலை ஆதி எழுந்திருக்கையில் நேற்று அணிந்த உடையோடு படுத்து இருக்க… அதைப் பார்த்துவிட்டு நேற்று இரவு ஹோட்டல் வரும்போது தலை சுற்றுவது போல இருக்க… சங்கவி அவனைத் தன் அறைக்குக் கொண்டு வந்து படுக்க வைத்துச் சென்றது வரை அவனுக்கு நினைவில் இருக்க… அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எழுந்து வழக்கம் போல இன்று வேலையைப் பார்க்கச் சென்றான். சங்கவியும் நேற்று அவனுடன் அவன் அறையில் இருந்ததையோ… அவனுடன் மிக நெருக்கமாக அவனுடன் சேர்த்து போட்டோ எடுத்துக் கொண்டது வரை எதுவும் காட்டிக்கொள்ளாமல் எப்போதும் போல… அவனுடன் சேர்ந்து வேலைகளைப் பார்க்க வெளியில் சென்றாள்.
துர்கா இந்தப் புது இடத்திலும் ஒரு வார காலத்தில் போதியுடன் நன்கு பழக ஆரம்பித்திருந்தாள். அவள் காலை ஆட் ஷூட்டிங்கிற்கு கிளம்பிச் செல்லும் வரையும்… மாலை அவள் வந்த பின்னும் அவளுடன் நேரம் செலவிடுவதை அவன் மிகவும் விரும்பினான். துர்கா மட்டும் இல்லை, விக்கி, லதா, விவேக் மூவரும் போதியுடன் நன்கு நெருக்கம் ஆகிவிட்டனர்.
மாலை துர்காவின் ஷூட் முடிந்ததும் அனைவரும் வீடு வந்து இருக்க… அவர்கள் உள்ளே வரும்போது வீடே கமகம என்று மணந்தது. தாங்கள் திடீரென்று இந்தியாவில் அவர்கள் வீட்டில் இருப்பது போலத் தோன்றும் அளவு நம்ம ஊர் ஸ்டைலில் பிரியாணி மணம் அவர்கள் வீட்டையே நிறைத்திருந்தது. உள்ளே வந்த நால்வரும் நேராக சமையல் அறை பக்கம் செல்ல… அங்கே போதி அப்ரோன் கட்டிக்கொண்டு தீவிரமாகச் சமைத்துக் கொண்டிருந்தான்.
அவனை ஆச்சரியமாகப் பார்த்த துர்கா அவன் அருகில் வந்து…. “என்ன போதி! உனக்குச் சமைக்கத் தெரியும் என்பது எங்களுக்கு இப்போதுதான் தெரியுது. எங்களிடம் நீ சொல்லவே இல்லையே,” என்றாள் ஆச்சரியமாக.
“ரொம்ப எல்லாம் செய்யத் தெரியாது. கொஞ்சக் கொஞ்சம் என் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டு இருக்கிறேன். நான் இப்படி அடிக்கடி வெளிநாடு வந்து விடுவதால் எனக்கு வெளியில் சாப்பிட அவ்வளவாகப் பிடிக்காது, ஒத்துக்கொள்ளவும் செய்யாது. அதனால் என் அம்மாவிடம் கொஞ்சம் கொஞ்சமாகச் சமைக்கக் கற்றுக்கொண்டு இருக்கிறேன். இன்று அதை வைத்து தான் சிக்கன் பிரியாணி செய்து இருக்கிறேன்,” என்றான் போதி. “நீங்களும் தினமும் வேலை வேலை என்று வெளியில் அதிக நேரம் செலவிடுகிறீர்களா? சரியாகச் சாப்பிடவும் முடியாமல் இந்த ஊர் சமையலும் ஒத்துக் கொள்ளாமல் சிரமப்படுவதை நான் தினமும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன். அதனால் தான் நான் இன்று எனக்குத் தெரிந்த உணவுகளை என் கையாலேயே செய்து உங்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம் என்று செய்துகொண்டு இருக்கிறேன்,” என்றான் போதி.
அவன் பொதுவாக எல்லோருக்கும் சேர்த்து செய்து இருந்தாலும்… அவர்களிடம் எல்லோருக்கும் சேர்த்துத் தாம் சமைத்து இருக்கிறேன் என்று சொன்னாலும்… அவன் செய்தது முழுக்க… முழுக்க… துர்காவுக்காக மட்டும் தான். அவளோடு ஏதோ ஒரு விஷயத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அவள் மனதில் கொஞ்சங் கொஞ்சமாக இடம் பிடிக்க வேண்டும் என்பது போதியின் ஆசை. அதற்கு முதல் படியாக துர்காவுக்கு மிகவும் பிடித்த பிரியாணி செய்து இருக்கிறான்.
அவன் சொன்னதைக் கேட்டு லதாவும் விவேக்கும், “சார்! உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு. எங்களுக்காக ஒரு பிபி நிறுவனத்தோட சிஇஓ அவர் கையாலேயே எங்களுக்குச் சமைத்துத் தருவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்,” என்று சொன்னார்கள்.
போதி செய்த உணவுகள் அனைத்தையும் டைனிங் டேபிளில் ஆளுக்கு ஒருவராகக் கொண்டு வைக்க… டேபிள் முழுவதும் நிறைய டிஷ்கள் செய்து வைத்திருந்தான். அதைப் பார்த்து துர்கா முதல் கொண்டு வாயைப் பிளந்துகொண்டு நிற்க… அவர்களிடம், “எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துட்டு இருப்பீங்க…. எனக்குப் பசிக்குது. சீக்கிரம் வாங்க சாப்பிடலாம்,” என்று அழைக்க…
லதா போதியிடம் வந்து… “சார்… ஒரே ஒரு வாட்டி இந்த டிஷ் கூட நாம எல்லோரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கலாமா?” என்றால்.
விவேக் லதாவிடம், “நீ சாப்பாட்டைத் தானே எப்பவும் போஸ்ட் பண்ணுவே… இன்னிக்கு என்ன.. செல்ஃபி எடுக்கக் கூப்பிடுறே…” என்றான்.
“அது எல்லாம் ஹோட்டலில் சாப்பிட்டது… ஆனால் இன்று பிபி நிறுவனத்தின் தலைவர் மிஸ்டர் போதியே நமக்குச் சமைத்துக் கொடுப்பது என்றால் இந்த உணவுக்கு எவ்வளவு மதிப்பு என்று உனக்குத் தெரியுமா… நான் வெறும் உணவை மட்டும் போட்டோ எடுத்துப் போட்டால் எல்லோரும் எப்போதும் போல சும்மா பார்த்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் போதி சாருடனும், நம்ம கம்பெனினியின் மெயின் மாடல் துர்காவுடனும் ஒரே வீட்டில்…. ஒரே டைனிங் ஹாலில் அமர்ந்து உனக்குச் சாப்பிடுவது என்பது உனக்குப் புரியாது,” என்றுவிட்டு, “நீ இப்போ செல்ஃபி எடுக்காம எங்க கூட வர்றியா… இல்லை மூஞ்சியைத் தூக்கிட்டுப் போறியா…” என்று மூச்சு விடாமல் லதா பேச…
“அம்மா … தாயே… போட்டோ எடு… நான் உன் பக்கத்தில் ஒரு ஓரமாக இருந்து கொள்கிறேன். ஏதோ நெல்லுக்குக் கொஞ்சம் பாயும் தண்ணீர்… இந்தப் புல்லுக்கும் பாயட்டுமே….,” என்றுவிட்டு அவர்களோடு விவேக்கும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள… போட்டோ ஃப்ரேமிற்குள் அனைவரும் தெரிய வேண்டும். அனைவரும் நெருக்கமாக நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ள…
போட்டோ எடுக்கும்போது அனைவரும் ஒன்றாக இருந்து எடுக்க… துர்காவின் தோல் போதியின் மேல் உரச… அந்த நொடியை ரசித்தவாறே போட்டோவிற்கு போஸ் கொடுக்க… போட்டோ எடுத்துவிட்டுச் சாப்பிடச் செல்ல முதலில் ருசி பார்க்கிறேன் என்று ஆளுக்கு ஒன்றாக அங்கு இருந்த சிக்கன் லாலிபாப்பை எடுத்துக்கொள்ள… துர்கா எடுக்க வரும்போது லாலிபாப் தட்டை விக்கி எடுத்துக் கொள்ள… அவனிடம் இருந்து தட்டைப் பிடுங்கப் போராடித் தோற்றுப் போன துர்கா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர…
விக்கியிடம், “எப்போ பாரு துர்கா கிட்டே விளையாடுவதையே நீ வேலையா வெச்சு இருக்கே விக்கி,” என்று அவள் அருகில் வந்து சமாதானம் செய்ய… சட்டென்று போதியின் கையில் இருந்த லாலிபாப்பைப் பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து ஓட… அவளைத் துரத்திக்கொண்டே… போதியும் அவள் பின்னால் ஓடியவன், துர்காவை எட்டிப் பிடித்து அவள் கையைப் பிடித்துத் தன்னிடம் இழுத்து நிறுத்தியவன் அவள் கையில் இருந்த சிக்கன் லாலிபாப்பைப் பிடுங்கப் போக… அவளோ அவன் கையில் அந்த லாலிபாப்பைச் சிக்க விடாமல் தன் கையை இங்கும் அங்கும் ஆட்ட…
அவளிடம் இருந்து லாலிபாப்பைப் பிடுங்கப் போனவன் கால் இடறி சோபாவில் விழப்போக… அப்போது துர்காவின் கையையும் பிடித்துவிட… அவளோடு சேர்த்து போதியின் மேலே துர்கா விழப் போக… எங்கே தன் மீது துர்கா விழுந்து தான் வேண்டும் என்றே அவளை இழுத்து என் மீது போட்டுக்கொண்டேன் என்று தப்பாக நினைத்து விடுவாளோ என்று பயந்த போதி தன் மீது விழ இருந்த துர்காவின் கையை விட்டுவிட்டுச் சோபாவில் இருந்து கீழே விழ….
துர்கா சோபாவில் ‘பொத்தென்று’ விழுந்தாள். எழுந்த வேகத்தில் தன்னைச் சோபாவில் தள்ளி விட்டான் என்று எழுந்து கொண்டிருந்த போதியின் முதுகில் துர்கா அடிக்க ஆரம்பிக்க… அவளைத் தடுப்பதற்காக அவள் கையைப் பிடித்துத் தன்னை அடிப்பதை நிறுத்தியவன் எழுந்து துர்காவின் இரு கையையும் பிடித்துக்கொண்டு, “இப்போ அடி பார்க்கலாம்,” என்று சொல்ல…
அப்போது அவர்கள் அருகில் ஒரு உருவம் வந்து நிற்க… அது விக்கி என்று நினைத்து… “டைசி விக்கி எல்லாம் உன்னால தான்டா….” என்று அவனைத் திரும்பி முறைக்கப் போக…. தன் அருகில் நின்றவனைப் பார்த்ததும் துர்கா அப்படியே ஃப்ரீஸ் ஆகி நின்றுவிட… அவள் எதிரில் நின்று இருந்தவன் கண்களில் கோபத்தோடு போதி துர்காவின் கையைப் பிடித்திருந்ததைப் பார்த்துக் முறைத்தான்.
துர்காவின் கையைப் பிடித்துக்கொண்டே… தங்கள் எதிரே நின்று இருந்தவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே…. “அடடே வா…. ஆதி.. எப்போ வந்தே…. நீ இன்னிக்கு வர்றேன்னு சொல்லவே இல்லையே,” என்றான் போதி.
“நான் சொல்லாமல் வந்ததால் தான் இன்று இங்கு நடப்பதை எல்லாம் நேரில் பார்க்க முடிகிறது,” என்று துர்காவை முறைத்துக் கொண்டே சொன்னான் அவள் காதல் கணவன் ஆதி.
EPISODE 93
போதியைத் துரத்திக்கொண்டு வந்த துர்கா அவன் மேல் விழப்போக, தன் மேல் விழாமல் துர்காவைச் சோபாவில் தள்ளிவிட… சோபாவில் விழுந்த துர்காவும், போதியும் சண்டையிட்டுக் கொள்ள… அப்போது….
துர்காவின் கையைப் பிடித்துக்கொண்டே… தங்கள் எதிரே நின்று இருந்தவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே…. “அடடே வா…. ஆதி.. எப்போ வந்தே…. நீ இன்னிக்கு வர்றேன்னு சொல்லவே இல்லையே,” என்றான் போதி.
“நான் சொல்லாமல் வந்ததால் தான் இன்று இங்கு நடப்பதை எல்லாம் நேரில் பார்க்க முடிகிறது,” என்று துர்காவை முறைத்துக்கொண்டே, துர்காவைப் பிடித்து இருந்த போதியின் கையைச் சாதாரணமாகப் பிடிப்பது போலப் பிடித்து… துர்காவிடம் இருந்து அவனைப் பிரித்து, போதியின் தோள் மேல் கையைப் போட்டு அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றவன். “என்ன இன்னிக்கு வீடே கமகமன்னு மணக்குது? என்ன ஸ்பெஷல்?” என்று கேட்டுக்கொண்டே ஆதி போதியுடன் டைனிங் டேபிளுக்கு வர…
“ஒன்னும் இல்லை ஆதி. எல்லாரும் தினமும் வெளியிலேயே சாப்பிட்டுட்டு இருக்கோமா.. அதனால இன்னிக்கு ஒரு நாள் வீட்டில் சமைத்துச் சாப்பிடலாம் என்று நானே எல்லோருக்கும் சமைத்தேன். சமைக்கும் போது நீ இங்கு இல்லை என்று நினைத்தேன். ஆனால் ஆச்சரியமாக!! சொல்லாமல் கொள்ளாமல் இங்கே வந்திருக்கே…” என்று சொன்னவன். ஒரு தட்டில் செய்து வைத்திருந்த உணவுகளை ஆதிக்கு வைத்து அவனிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னான் போதி.
ஆதியைப் பார்த்ததும் “வாடா…. மச்சான்…” என்றவன், “என்ன நீ மட்டும் வந்திருக்கே… எங்கே உன் அசிஸ்டன்ட்?” என்றான் விக்கி.
அவனை முறைத்துவிட்டு, “எனக்கு இங்கே ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அதனால் சங்கவிக்கு துணையாக இங்கிருக்கும் மேனேஜரைச் சுவிட்சர்லாந்து அனுப்பிவிட்டு நான் சர்ப்ரைஸாக உங்களை எல்லாம் பார்க்கலாம் என்று வந்தேன். ஆனால் இங்கே நான் இருப்பதையே மறந்துவிட்டு நீங்கள் எல்லோரும் ஜாலியாக என்ஜாய் பண்ணிட்டு இருக்கீங்களே….” என்று டைனிங் டேபிளுக்கு வந்துகொண்டிருந்த துர்காவைப் பார்த்து ஆதி சொல்ல…
அவன் சொன்னது தன்னைத் தான் என்று புரிந்துகொண்ட துர்கா அமைதியாக வந்து தான் சாப்பிட்டுக்கொண்டு இருந்த இடத்தில் வந்து அமர்ந்தாள். ஆதியிடம் தட்டைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்லிவிட்டுப் போதி விவேக்கின் அருகில் அமர்ந்துகொள்ள… கைகழுவிவிட்டு வந்த ஆதி துர்காவின் அருகில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த லதாவைப் பார்க்க…
அவன் பார்த்ததும் புரிந்துகொண்ட லதா எழுந்து சென்று வேறு டேபிளில் அமர்ந்துகொள்ள… ஆதி நேராக வந்து துர்காவின் அருகில் இருந்த சேரை இன்னும் அவள் அருகில் தள்ளிப் போட்டு அமர்ந்துகொள்ள… அதைக் கவனித்த விக்கி… ‘இது என்ன, இவன் வந்ததில் இருந்து ஒரு மாதிரியாகவே இருக்கானே…’ என்று யோசிக்க…
அப்போது தான் போதியும் துர்காவும் சற்று நேரத்துக்கு முன்பு லெக்பீஸ்சிற்காக ஓடிப் பிடித்து விளையாடியதையும், போதியும் துர்காவின் கையைப் பிடித்துக் கொண்டிருக்க ஆதி போதியின் கையைச் சாதாரணமாக அவளிடம் இருந்து பிரித்து இங்கே அழைத்து வந்தது நினைவுக்கு வர… விக்கி திரும்பி ஆதியைப் பார்க்க ஆதி தன் தட்டிலிருந்த உணவைச் சாப்பிட்டுக்கொண்டே விக்கியைப் பார்த்து “என்ன?” என்று புருவம் உயர்த்தி கேட்கவும்.
‘உன் பொண்டாட்டி கிட்டே உட்கார்ந்து நீ சாப்பிடுற. எனக்கு என்ன வந்திச்சு,’ என்று நினைத்தவன். “ம்ஹும்…. ஒன்னும் இல்லையே… நீ சாப்பிடு…” என்று சொல்லிவிட்டுத் தன் தட்டில் இருந்து உணவைச் சாப்பிட ஆரம்பித்தான் விக்கி.
ஆதி தனக்கு மிக அருகில் வந்து அமர்ந்ததும் துர்காவின் நிலையைச் சொல்ல வேண்டுமா என்ன… அவள் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒன்று சேரப் பறப்பது போல இருந்தது. தட்டிலிருந்து உணவைச் சாப்பிடாமலேயே துர்கா அமர்ந்திருக்க அவளைப் பார்த்த போதி, “ஏன் துர்கா …. எதுவுமே சாப்பிடாமல் இருக்க. நான் செஞ்சது எதுவுமே நல்லா இல்லையா… உனக்கு எதுவும் பிடிக்கலையா? அப்படியே சாப்பிடாமல் வச்சிருக்க,” என்று போதி கேட்டான்.
“சேச்சே…. அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல போதி. உன்னோட சாப்பாடு மணமே சூப்பரா இருக்கு…. கண்டிப்பா டேஸ்ட்டாவும் தான் இருக்கும். நான் எதுவும் யோசனையில் அப்படியே உட்கார்ந்து விட்டேன். இதோ சாப்பிடப் போறேன் பாரு,” என்று சொல்லி போதி வைத்த உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்தாள் துர்கா.
அவர்கள் இருவரும் மிகவும் சகஜமாகப் பேசிக் கொண்டிருப்பதை, ‘ஆதி போதியை துர்கா… கதிரையும், விக்கியையும் போல…. போதியையும் தன் நண்பனாக நினைத்துத் தான் பழகுகிறாள்’ என்று தெரிந்துகொண்ட ஆதிக்குச் சற்று ஆறுதலாகத் தான் இருந்தது.
அனைவரும் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்க, துர்கா ஆதி அருகில் இருந்ததால் சரியாகச் சாப்பிட முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக உணவை எடுத்து வாயில் வைத்துக் கொறித்துக் கொண்டிருக்க…. துர்கா சரியாகச் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்த ஆதி மெதுவாக அவள் அருகில் சாய்ந்து துர்காவிடம், “ஏன் துர்கா! எதுவுமே சரியா சாப்பிடாமல் உட்கார்ந்திருக்க…. இப்போ சரியா சாப்பிடலைன்னா அப்புறம் திரும்பவும் பசிக்கும். நீ வேற பசி தாங்க மாட்டே…. நான் வேணா உனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடட்டுமா? நீ பொறுமையாகச் சாப்பிடுறியா?” என்று கேட்டான் ஆதி.
ஆதி இப்படித் திடீரென்று வந்து அவள் அருகில் பேசவும், அதுவும் இல்லாமல் ‘நான் உனக்கு ஊட்டி விடுகிறேன்’ என்று சொன்னதும், அதைக் கேட்ட துர்காவுக்குச் சாப்பிட்டுக்கொண்டு இருக்க அப்படியே புரையேறி விட்டது. துர்காவுக்குப் புரையேறியதும் அவள் தண்ணீரை எடுத்து குடிக்கப் போக… சட்டென்று ஆதி தண்ணீரைத் தன் கையில் எடுத்து அவள் வாயில் வைத்து அவளைக் குடிக்க வைத்தான். அவள் தலையை வேகமாகத் தட்டிவிட்டு அவளைச் சற்று ஆசுவாசப்படுத்தினான்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த போதிக்குத் துர்காவிடம் ஆதியின் இந்த நெருக்கம் அவனுக்கு ஏனோ பிடிக்கவில்லை. போதி துர்காவைக் கவனித்துக் கொண்டிருக்கும் ஆதியைப் புருவம் சுருக்கிப் பார்த்துக் கொண்டு இருக்க…
போதி ஆதியையும் துர்காவையுமே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த விக்கிக்கு… அப்போதுதான் ஆதிக்கும் துர்காவுக்கும் திருமணம் ஆன விஷயம் போதிக்குத் தெரியாது என்ற ஞாபகமே விக்கிக்கு வர… ‘இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆன விஷயம் வேற போதிக்குத் தெரியாதே…. அவன் வேற இவங்க ரெண்டு பேரையும் குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்கான். ஆனா அது தெரியாம ஆதி கூட இந்தத் துர்காவும் அப்படிப் பக்கத்துல உட்கார்ந்து இருக்காளே. இவளுக்காவது அறிவு வேண்டாமா….. போதிக்கு மட்டும் துர்காவுக்கு ஆதி கூடக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சுச்சுன்னா அடுத்து அவன் என்ன பண்ணப் போறான்னு யாருக்குத் தெரியும்?’ என்று யோசித்தவன்.
துர்கா இன்னமும் இருமிக்கொண்டிருக்க…. ஆதி அவள் தலையைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் பின் துர்காவின் முதுகை லேசாக வருடிக் கொடுக்க….. அவன் அப்படிச் செய்யவும் துர்காவுக்கு அவன் கை தன் முதுகில் படவும் அவள் முதுகுத்தண்டு சில்லென்று பரவ…. ஏதோ ஒரு நினைவில் ஆதியைப் பார்க்க…. ஆதியும் துர்காவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இவர்கள் இருவரும் தங்களைச் சுற்றி இருப்பவர்களை மறந்து கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க அதைப் பார்த்து விக்கி… ‘அச்சோ!!! விட்டால் நடு ஹாலிலேயே வெச்சு ரெண்டு பேரும் ஓவரா ரொமான்ஸ் பண்ணுவாங்க போல இருக்கே….. இதுக்கு மேல இங்க உட்கார்ந்து இதை பார்த்துட்டு இருந்தால் அவ்வளவுதான்… டேய் விக்கி…. எந்திரிச்சுப் போய் எப்படியாவது இவங்க ரெண்டு பேரையும் பிரிச்சுடுடா’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன் வேகமாக எழுந்து அவர்கள் அருகில் சென்றான்.
விக்கி எழுந்து சென்று தன்னிடமிருந்த தண்ணீர் டம்ளரை எடுத்துக்கொண்டு போய்க் ஆதியிடம், “நீ மட்டும் தான் என் ஃபிரெண்டிற்கு தண்ணி கொடுப்பியா……. நானும் தான் என் பிரெண்டுக்குத் தண்ணி கொடுப்பேன்,” என்று சொல்லி அவனிடம் இருந்த தண்ணீரைக் கொடுத்து, “இந்தா துர்கா… நீ குடி….” என்று சொல்லி அவளைக் குடிக்கச் சொல்லிவிட்டு ஆதியின் கையைத் தட்டி விட்டு விக்கி அவள் தலையைத் தட்டிக் கொண்டிருந்தான்.
துர்காவுக்கு என்ன செய்வதென்று புரியாமல் ஆதியைப் பார்த்துக்கொண்டு விக்கியிடம் இருந்து தண்ணீரை வாங்கிக் குடித்தவள். “எனக்குப் பரவாயில்லை…. நான் சாப்பிட்டுட்டேன்…. எனக்குப் போதும்… எனக்குப் பசிக்கல….” என்று சொல்லி ஏதோ உளறிவிட்டு எழுந்து கை கழுவச் சென்று விட்டாள்.
தன் அருகில் இருந்து துர்கா எழுந்து செல்வதைப் பார்த்து அவளைத் தன்னிடம் இருந்து அனுப்பி வைத்த…. விக்கியைத் திரும்பிப் பார்த்து ஆதி முறைக்க.
‘இவன் என்ன இப்போ நம்மளைப் பார்த்து முறைக்கிறான்? நான் வேற சும்மா இருக்காமல் புருஷன் பொண்டாட்டிக்கு இடையில வந்து அவங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ண வர அப்போ சரியாப் பிரித்து விட்டுட்டேன்னே.. இனி எனக்கு என்ன எல்லாம் செய்ய காத்திருக்கிறானோ…. கடவுளே!! இவன் கையில மாட்டிக்காமல் என்னைக் காப்பாத்திடு’ என்று சொல்லி விக்கி ஆதியைப் பார்த்து வழிந்துகொண்டே அங்கிருந்து கை கழுவச் சென்றான்.
இவர்களுக்கு முன்பாகவே லதாவும் விவேக்கும் சாப்பிட்டு முடித்துவிட்டு தங்கள் அறைக்குச் சென்றுவிட… இப்போது டைனிங் டேபிளில் ஆதியும் போதியும் மட்டுமே நேரெதிரே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். தான் ஊரிலிருந்து வரும்போது துர்காவின் கையைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த போதியைப் பார்த்து…. தன் மனதிற்குள் அவனைத் திட்டிக் கொண்டிருந்தான் ஆதி.
‘இவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் பொண்டாட்டி கையப் பிடிச்சு அவ கூட விளையாடிட்டு இருப்பான்….. நல்லாப் பழகுறானேன்னு சொல்லி அவனை இங்கே தங்க வச்சதுதான் தப்பா போச்சு…. இப்பப் பாரு துர்கா கூட எவ்வளவு க்ளோஸா பேசிட்டு விளையாடிட்டு இருக்கான். அவளும் விக்கி கதிர் கூடப் பேசுற மாதிரி இவன் கூடயும் பேசி விளையாடிட்டு இருக்கா…. இவங்க மூணு பேரும் துர்கா கூட நல்லாக் க்ளோஸா இருக்காங்க. இவளும் இவங்க விக்கி கதிர் கிட்டே சகஜமா பேசிப் பழகுற மாதிரி இந்த போதியோடவும் பழகுறா… ஆனா அவளைத் தொட்டுத் தாலி கட்டுன என் கூட மட்டும் அவ சகஜமா பேசவே மாட்டேங்குறா…. என்னை மட்டும் இன்னும் பக்கத்துல நெருங்கவே விட மாட்டேங்குறா…..’ என்று துர்காவையும் சேர்த்து கடுப்பில் திட்டிக் கொண்டிருந்தான் ஆதி.
ஆதியையே பார்த்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த போதி, ‘இவன் எப்படி வந்ததும் துர்கா…. கூட இவ்வளவு சகஜமா அவள் பக்கத்துல சேரை இழுத்துப் போட்டு…. ரொம்ப க்ளோஸா துர்கா கூடப் பேசி அவளுக்குத் தண்ணியைக் கொடுத்து தலையைத் தட்டிக் கொடுப்பதும்…. அவள் முதுகை நீவி விட்டதுமா இருக்கான். அந்தக் கதிரும் விக்கியும் மாதிரி இவனும் துர்கா கூட க்ளோஸா இருக்கான். ஆனா துர்கா என்கூடயும் விக்கி கூடையும் ஜாலியா பேசுற மாதிரி ஆதி கூடப் பேசவே இல்லையே… அவ ஆதியைப் பார்த்து ஏதோ பயந்த மாதிரியா இல்ல அவன் பக்கத்துல உட்கார்ந்து இருந்தா. அப்போ ஆதி தான் துர்கா கிட்டே க்ளோஸா இருக்க ட்ரை பண்றான். ஆனா துர்காவுக்கு நான் ஆதி இடம் க்ளோஸா இருக்க விருப்பம் இல்லை போல இருக்கு….. இல்லைன்னா இத்தனை வருஷமா கதிர், விக்கி கூடச் சகஜமா பேசுறா… ஏன் இப்பப் பழகி கொஞ்ச நாள் தான் ஆகுது என் கூடவும் இவ்வளவு சகஜமா இருக்கிறா…. ஆனா ஆதி கூட மட்டும் ஏன் தயங்கின மாதிரி இருக்கா…. அப்போ அவளுக்கு அவன் கூடப் பேசப் பிடிக்கலை அப்படி தான் இருக்கும்,’ என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டான் போதி.
போதியும் ஆதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே பேசாமல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். இங்கு நடப்பதை எல்லாம் கை கழுவும் இடத்திலிருந்து விக்கியும் துர்காவும் பார்த்துக்கொண்டே இருவரும் திரும்பி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள ….
விக்கி துர்காவைப் பார்த்து, “ஏய் துர்கா! என்ன இவங்க ரெண்டு பேரும் எதிர் எதிரில் உட்கார்ந்து சாப்பிட்டு இருந்தாலும். நேரம் ஆகியும் இரண்டு பேருமே எதுவும் பேசாமல் இப்படிப் பார்த்துக்கிட்டு இருக்காங்க.”
“ஆமாடா… எனக்கு வேற பயமா இருக்கு… ஆதி உள்ளே வர அப்போ நான் வேற போதி கூட ஓடிப் பிடிச்சுட்டு இருந்தேன். ஆதி எங்க ரெண்டு பேரையும் பார்த்து என்ன நினைச்சுட்டு இருப்பான்னு தெரியலையே,” என்று புலம்பினாள்.
“எத்தனை தான் நான் சமாளிக்குறது… கடவுளே… ஒரு பக்கம் துர்காவுக்குக் கல்யாணம் ஆகிருச்சுன்னு போதிக்குத் தெரியக்கூடாது…. இன்னொரு பக்கம் போதிக்கு ஆதிக்கும் துர்காவுக்கும் கல்யாணம் ஆன விஷயம் போதிக்குத் தெரியாதுன்னு ஆதிகிட்டே சொல்லணும். என் நிலைமையைப் பார்த்தியா துர்கா…” என்று விக்கி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு துர்காவைப் பார்க்க…
“எனக்குத் தெரியாதுப்பா… முதல்ல நீ போய் அவங்க ரெண்டு பேரையும் சமாளிச்சிட்டு வா… நான் இங்கே இருந்தால் பிரச்சினை ஆகும். நான் மேல ரூமுக்கு போறேன்,” என்று சொல்லிவிட்டு விக்கி கூப்பிட கூப்பிட.. அவனைத் திரும்பியும் பார்க்காமல் முடியாது என்பது போலக் கையை ஆட்டிக்கொண்டே தன் அறைக்கு ஓடிவிட்டாள்.
‘அடிப்பாவி! இவ கூட இருந்தால் ஆவது ஏதாவதி சொல்லி இவங்க ரெண்டு பேரையும் சமாளிக்கலாம்னு பார்த்தா…. ஒத்தை ஆளா என்னை இவனுங்க ரெண்டு பேரு கிட்டயும் மாட்டி விட்டுட்டாளே…’ என்று சொல்லிக்கொண்டு துர்கா சென்றதையே பார்த்துவிட்டுத் திரும்பிய விக்கி.. அவன் முன்னாள் போதியும் ஆதியும் கைகழுவ நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சிரித்தவன் “சாப்டாச்சா?” என்றான் பொதுவாக…
“ம்ம்ம்…” என்று ஒன்று போல…. இருவரும் விக்கிக்குப் பதில் சொல்லிவிட்டுக் கைகழுவச் சென்றனர். அவர்கள் இருவரும் கைகழுவிவிட்டு “குட் நைட்” சொல்லிக்கொண்டு அவரவர் அறைக்குப் போக… அவர்கள் இருவரும் தங்கள் அறைக்குச் செல்வதைப் பார்த்த விக்கிக்கு ‘அப்பாடா’ என்று இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.
போதி தன் அறைக்குச் செல்லப் போனவன் ஆதியைத் திரும்பிப் பார்க்க…. ஆதி மாடி ஏறிச் சென்று கொண்டிருந்தான். ‘மேலே துர்கா ரூம் தானே இருக்கு. இவன் எங்கே போறான்?’ என்று நினைத்தவன். திரும்பி ஆதி என்ன செய்கிறான் என்று பார்க்க.
தன் ரூமிற்குச் செல்லப் போக இருந்த போதி திடீரென்று திரும்பி வெளியே வருவதைப் பார்த்த விக்கி அவன் எங்கேயோ பார்த்திருப்பதைப் பார்த்து ‘இவன் இங்கே தூங்கப் போகாமல் யாரைப் பார்க்கிறான்?’ என்று போதி பார்க்கும் திசை பார்க்க, ஆதி படியேறி துர்கா ரூமுக்குச் சென்று கொண்டிருந்தான்.
ஆதி துர்காவின் அறைக்குச் செல்வதைப் பார்த்ததும் விக்கிக்கு இதயமே நின்று போவது போல ஆகிவிட்டது. தன் விழி இரண்டும் பிதுங்கி வெளியே வந்து விடும் போல இருந்தது… ‘ஆதி மேலே செல்வது கூட இப்போதைக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் போதி மட்டும் இந்த நேரத்தில் துர்காவின் அறைக்குச் சாவகாசமாகச் செல்லும் ஆதியைப் பார்த்தால் என்ன ஆவது’ என்று நினைத்தவன். தன் நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு “ஐயோ…. அது மட்டும் நடந்தால் அவ்வளவுதான். இத்தனைக்கும் காரணமான கதிர் மட்டும் என் கைல கிடைக்கட்டும். அவனை நான் ஒரு வழி பண்ணிடறேன்,” என்று நினைத்துக்கொண்டே மேலே பார்க்க….
துர்காவின் அறைக்கு மிக அருகில் ஆதி சென்று கொண்டிருக்க, அவனைப் பார்த்துப் பதட்டத்தில் விக்கி “ஆதி…..” என்று கத்திக்கொண்டே வேகமாக மாடிப்படி ஏறியவன், ஆதியின் கையைப் பிடித்து “ஒரு நிமிஷம் என் கூட வா….” என்று அவசர அவசரமாக துர்காவின் அறைக்கு அருகிலேயே இருந்த இன்னொரு அறைக்கு அவனை அழைத்துச் சென்றான்.
ஆதியை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த அறைக்கு விக்கி செல்வதைப் பார்த்த போதி, ‘துர்கா ரூமுக்குப் பக்கத்துல தான் இவனோட ரூமு இருக்கும் போல இருக்கு’ என்று நினைத்து போதி தன் அறைக்குள் சென்று விட்டான்.
போதி தன் அறைக்குச் செல்வதை நின்று பார்த்துவிட்டு ஆதியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்ற விக்கி ‘அப்பாடா! ஒருத்தன் உள்ளே போயாச்சு. இனி இவனைத்தான் சமாளிக்கணும். இதுதானே பெரிய வேலை,’ என்று நினைத்தவன். “இப்ப நீ எங்க போற ஆதி?” என்று கேட்டான் விக்கி.
“இது என்னடா கேள்வி? என்னோட ரூமுக்குத் தான் போறேன்,” என்று சொன்னான் ஆதி.
“நீ இப்போ உன் ரூம்க்குப் போக வேண்டாம்…” என்று சொன்னான் விக்கி.
“ஏண்டா இப்படிச் சொல்ற? என் ரூமுக்குப் போகாமல் அப்புறம் நான் எங்க போய்த் தூங்குறது?” என்றான் ஆதி.
‘ம்ஹூம்.. நீ உன் ரூமுக்குத் தூங்கவா போற…. நீ எதுக்கு போறேன்னு எனக்கு நல்லாத் தெரியும்டி…. உன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணத் தானே போற. அதெல்லாம் இப்போதைக்கு நடக்காது,’ என்று நினைத்துக் கொண்ட விக்கி. “அதுதான்டா உங்க ரூமுக்கு போய்த் தூங்கத் தானே போற. அதைச் செய்ய இந்த ரூம்லயே நீ இருந்துறேன். நீ பேசாமல் ஊருக்குப் போற வரைக்கும் இந்த ரூம்லயே தங்கிடு, இங்கேயே தூங்கிக்க…” என்று சொன்னான் விக்கி.
“டேய்! என்னடா லூசு மாதிரி பேசிட்டு இருக்க! இந்த ரூம்ல நான் மட்டும் தனியாத் தூங்கி என்னடா பண்ணப் போற? அங்க தான் துர்கா இருக்கா. நான் போய்ப் அங்கத் தூங்கப் போறேன். அவ நான் வருவான்னு பார்த்துட்டு இருப்பா….” என்று விக்கியைத் தாண்டி அவன் அறைக்கு ஆதி செல்லப் போக.
ஆதியைக் கஷ்டப்பட்டுப் பிடித்து இழுத்துத் தன் அருகில் நிற்க வைத்தவன். “டேய்! ஒரு நிமிஷம் நில்லுடா…. நான் சொல்றதை கேட்டுட்டு அதுக்கப்புறம் நீ போய் உன் பொண்டாட்டியைப் பார்க்கலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணிக்கோ,” என்று சொன்னான் விக்கி.
“என்னடா சொல்ற? எனக்குக் கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லு. நான் போய்ப் அங்கத் தூங்குறதுனால இப்ப உனக்கு என்ன பிரச்சனை வந்துச்சு?” என்று ஆதி கேட்க.
“அது….அது…. “துர்கா உன் பொண்டாட்டி இல்லை,” என்று சொன்னான் விக்கி.
அவன் சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியான ஆதி விக்கியைக் கோபத்தோடு திரும்பிப் பார்க்க … ஆதியின் கோபமான முகத்தையும் சிவந்த கண்களையும் பார்த்த விக்கிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. ‘ஐயோ….நான் வேற அவசரப்பட்டுச் சரியா சொல்லாமல்…. இப்படி உளறி வச்சிட்டேனே…’ என்று மனதிற்குள் புலம்பிய விக்கி.
“இப்படி முதல்ல முறைக்கிறத நிறுத்து. நான் தேவையில்லாமல் உளறிட்டேன். ஒரு நிமிஷம் இந்தச் சேர்ல உட்காரு…. முதலில் இந்தத் தண்ணியைக் குடி….” என்று அருகில் இருந்து தண்ணீரை அவனிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்ன விக்கி.
“எனக்குத் தண்ணியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். முதல்ல நீ என்ன சொல்ல வர, அது தெளிவாச் சொல்லு…. சும்மா எதையும் சொல்லி என்னை டென்ஷன் பண்ணிட்டு இருக்காத. நான் இப்போ இருக்கிற மூடுக்கு உன்னைக் கொலையே பண்ணாலும் பண்ணிடுவேன்,” என்று ஆதி சொல்ல.
“சரிடா நான் சொல்றேன். நீ கொஞ்சம் பொறுமையா இரு சரியா.. நான் முழுதாகச் சொல்லி முடிக்கிற வரைக்கும் நீ கோபப்படவோ, என்ன அடிக்கவோ, இல்லை எதுவும் பேசவும் கூடாது. அமைதியா நான் சொல்லி முடிக்கிற வரைக்கும் இப்போ உட்கார்ந்து இருக்க பார்த்தியா, அதே மாதிரி தான் உட்காரணும்,” என்று சொன்னான் விக்கி.
“சரி, நான் எதுவும் பேசல, எதுவும் சொல்லல. நீ முதல்ல சொல்லித் தொலை,” என்றான் ஆதி.
ஆதியைச் சேரில் அமர வைத்தவன் வேகமாகச் சென்று அவர்கள் அறைக் கதவைத் திறந்து வைத்துவிட்டு, ஆதியைக் விட்டு இரண்டு அடி தள்ளி வந்து நின்று கொண்டான் விக்கி. “டேய்! இப்போ எதுக்கு கதவைத் திறந்து வெச்சுட்டு அங்க நின்னுட்டு இருக்க…. என் பக்கத்துல வந்து பேசுவா…” என்று ஆதி கூப்பிட.
“ம்ஹூம்… நான் இங்கிருந்தே சொல்றேன். நீ அங்கிருந்து கேட்டுக்க. நீ என்னை எதுவும் செய்யறதுக்குள்ள நான் இந்த இடத்தை விட்டு ஓடிடுவேன். அதுக்காகத்தான் கதவைத் திறந்து வச்சிட்டு வந்து நிற்கிறேன். நீ பேசாமல் உட்காரு, நான் சொல்றேன்,” என்று சொன்னான் விக்கி.
அவன் சொல்வதெல்லாம் கேட்டு எதுவும் புரியாத ஆதி, ‘சரி கொஞ்ச நேரம் அமைதியா இருந்து பார்ப்போம். இவன் என்ன சொல்றான்னு கேட்கலாம்,’ என்று நினைத்தவன் விக்கியைப் பார்த்து “சரி சொல்லு,” என்று அமைதியாக இருந்தான் ஆதி.
“அதுவா அது… துர்கா இப்போ உன் பொண்டாட்டி இல்ல. அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகல,” என்று சொன்னான் விக்கி.
“டேய்! இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி துர்கா இப்போ என் பொண்டாட்டி இல்லன்னு… இதையே தானே நீ சொன்ன. திரும்பவும் எதுக்கு அதையே சொல்ற,” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான் ஆதி.
“கொஞ்சம் பொறுடா. நான் முழுசாச் சொல்லிடுறேன்,” என்று சொன்னவன். போதி இந்தியாவில் ஆதி வந்ததும் அங்கே வந்து துர்கா அவன் கம்பெனியில் நடக்கும் ஒரு ஈவென்டிற்கு மெயின் மாடலாகக் கேட்டிருப்பதையும், உன்னுடன் பார்ட்னர்ஷிப் வைப்பதற்காக பிசினஸ் டீல் பேச வந்ததையும் சொன்னான் விக்கி.
அதன் பின் போதியும் துர்காவும் கதிரும் மூவரும் பேச… அவன் துர்காவை மிஸ் என்று அழைக்கவும். போதி அப்படி அழைத்ததும் துர்காவுக்குத் திருமணமான விஷயத்தைத் துர்கா சொல்ல வரும்போது கதிர் துர்காவைத் தடுத்து ‘இப்போதைக்குப் போதி இடம் உனக்குத் திருமணமாகி இருக்கிறது என்று சொல்ல வேண்டாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொன்னதை விக்கி ஆதியிடம் சொல்லிவிட்டான்.
விக்கி சொன்னதைக் கேட்டதும் ஏற்கனவே கடுப்பிலிருந்த ஆதிக்கு, விக்கி சொன்ன விஷயங்களைக் கேட்டு மேலும் கடுப்பானவன் விருட்டென்று எழுந்திருக்கவும். ஆதி எழுந்த வேகத்தைப் பார்த்து விக்கி சடார் என்று அவனை விட்டு இரண்டடி தள்ளி நின்று, தன்னை அடிக்க ஆதி வருகிறான் என்று பாதுகாப்பிற்காகத் தன் கையை உயர்த்திப் பிடி நின்றான்.
“இதுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இதுக்கு எல்லாம் முக்கிய காரணம் உன் ஆருயிர் தம்பி கதிர் தான். நீ எதுவா இருந்தாலும் அவன்கிட்டே பேசிக்க…. எனக்கே இந்த விஷயம் இங்கே வந்ததுக்கப்புறம் தான் தெரியும். அதுவும் துர்கா சொல்லித்தான் தெரியும் சரியா…. எதுவா இருந்தாலும் நீ கதிர்கிட்டயும் உன் பொண்டாட்டி துர்கா கிட்டயும் கேட்டுக்க. எனக்கு இதுக்கும் சம்பந்தமில்லை. என் மேல கை வெச்சா அவ்வளவுதான்,” என்று சொல்லிக்கொண்டே பின்னாடி சென்றவன் வேகமாக வெளியில் ஓடி விட்டான் விக்கி.
விக்கி சொன்னதெல்லாம் ஆதியின் மூளைக்குள் ஓடிக்கொண்டே இருக்க… முதலில் கதிர் மீதுதான் ஆதிக்குக் கோபம் வந்தது. ஆனால் இப்போது அவனை எதுவும் செய்ய முடியாது என்பதால் அவன் கோபம் அப்படியே துர்காவின் மேல் திரும்பிவிட வெளியே வந்தவன் நேராக துர்காவின் அறைக்குச் சென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல…
அவன் வருவதற்குள் உடை மாற்றி விடலாம் என்று தன் மேல் அணிந்திருந்த ஷர்ட் பட்டன் பாதியை கழட்டிக்கொண்டு இருக்க… உள்ளே வந்தவன் துர்காவின் கழுத்தைத் அப்படியே பிடித்துக்கொண்டு போய்ச் சுவற்றில் சாற்றி நிறுத்தினான்.
EPISODE 94
விக்கி, ஆதிக்கும் துர்காவுக்கும் திருமணம் ஆன விஷயம் போதிக்குத் தெரியாது என்று சொன்னதெல்லாம் ஆதியின் மூளைக்குள் ஓடிக்கொண்டே இருக்க…
முதலில் கதிர் மீது தான் ஆதிக்குக் கோபம் வந்தது. ஆனால் இப்போது அவனை எதுவும் செய்ய முடியாது என்பதால், அவன் கோபம் அப்படியே துர்காவின் மேல் திரும்பிவிட, வெளியே வந்தவன் நேராக துர்காவின் அறைக்குச் சென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல…
அவன் வருவதற்குள் உடை மாற்றி விடலாம் என்று தான் அணிந்திருந்த ஷர்ட் பட்டனைப் பாதி கழற்றி இருக்க… கதவைப் படார் என்று திறந்து கொண்டு உள்ளே வந்தவன் துர்காவின் கழுத்தைத் அப்படியே பிடித்துக்கொண்டு போய்ச் சுவற்றில் சாற்றி நிறுத்தினான். துர்காவைப் பார்த்து, “நீ எப்படி நமக்குக் கல்யாணம் ஆகலைன்னு போதி கிட்டே சொல்லலாம்? உனக்குக் கல்யாணம் ஆகவில்லை என்று சொல்லி இருக்கிறாய் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? உனக்கும் எனக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று வெளியில் சொல்வதில் உனக்கு என்ன பிரச்சனை? ஒருவேளை நீ இப்போது திடீரென்று மாடலாகி விட்டதால் உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்று வெளியில் சொன்னால் உனக்கு எங்கே மாடலிங் சான்ஸ் எல்லாம் வராமல் போய்விடுமோ….. நிறைய சம்பாதிக்க முடியாமல் போய்விடுமோ…. என்று நினைத்து உனக்குக் கல்யாணம் ஆகவில்லை என்று வெளியில் காட்டிக் கொண்டிருக்கிறாயா?” என்று கோபத்தில் ஆதி கத்தியவன்.
அவள் தன் பக்கம் என்ன நடந்தது என்று சொல்வதற்குக்கூட இடம் கொடுக்காமல் ஆதி மேலும் அவள் மனம் நோகும்படி பேசினான். “இத்தனை நாள் இல்லாமல் நீ ஏன் துர்கா இப்படி இருக்க…. இந்த மாடல் மாடலிங்கில் சம்பாதித்துத் தான் நீ வாழ வேண்டும் என்று அவசியம் எதுவுமே இல்லையே! என்னிடம் இல்லாத பணமா? உனக்கு என்ன வேண்டும் என்று என்னிடம் ஒரு கண்ணசைவு செய். இந்த உலகில் எங்கு இருந்தாலும் நீ கேட்டதை நான் உன் காலடியில் கொண்டு வந்து அனைத்தையும் போடுகிறேன். அதற்காக நம்முடைய உறவை வெளியில் சொல்வதற்கு நீ ஏன் இவ்வளவு யோசிக்கிறாய்?” என்று சொன்னான் ஆதி.
தன் கோபத்தை எல்லாம் துர்காவின் மனதை வார்த்தைகளால் காயம் செய்து தணித்த ஆதி இப்போதுதான் சற்று கோபம் தணிந்ததாக, அவள் கழுத்தைப் பிடித்து இருந்த தன் பிடியைத் தளர்த்த… அவள் அணிந்து இருந்த சட்டை பாதி பட்டன் கழற்றியபடி இருக்க… அவள் அணிந்திருந்த உள்ளாடையும் அதையும் மீறி லேசாக வெளியே தெரிந்த அவள் மென்மைகளும் வெளியில் தெரிய… தான் எந்த நிலையில் இப்போது நின்று கொண்டிருக்கிறோம் என்பது கூட உணர முடியாத நிலையில் ஆதியின் பேச்சு துர்காவின் மனதை அவ்வளவு தூரம் காயம் செய்து இருந்தது.
அவள் நிறுத்தி வைத்த இடத்தில் அப்படியே அசையாமல் நின்று இருந்த துர்காவின் கண்களில் மட்டும் கண்ணீர் அருவி போலப் பாய்ந்து கொண்டு இருந்தது. அதைத் துடைக்கக்கூட மனமில்லாமல் ஆதியைப் பார்த்து நின்று இருக்க. அவள் இந்த நிலையில் நிற்பதைப் பார்த்த ஆதிக்குப் மனது ஏனோ வலிக்கத் தான் செய்தது. இருந்தும் அவள் செய்த காரியம் அவளைச் சமாதானம் செய்ய எழுந்த தன் மனதைத் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
துர்காவின் கண்ணில் இருந்து கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே இருக்க…. அதற்கு மேல் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக அவள் அருகில் சென்று அவள் முகத்தைப் பிடித்துத் தன் விரல்களால் அவள் கண்ணீரைத் துடைத்தவன். “ஏண்டி… ஏண்டி…. துர்கா இப்படிப் பண்ணின? உன்னை பிரிஞ்சு என்னால அங்கே இருக்கவே முடியல…. உன் ஞாபகமாவே இருக்கு… உன்னைப் பார்க்கணும்னு எவ்வளவு ஆசையா நான் இங்க வந்தேன்னு உனக்குத் தெரியுமா? எனக்கு இருக்கிற வருத்தம் உனக்குத் துளியும் கூட இல்லாமல் போயிடுச்சா…. நீ இங்கே இவ்வளவு ஜாலியாகச் சிரிச்சுப் பேசி விளையாடிட்டு இருக்க…. என்னைப் பத்தி ஞாபகம் உனக்குக் கொஞ்சம் கூட இல்லையா துர்கா? இதைக் கூட நான் பெருசா எடுத்துக்கலை…. நீ எப்பவும் உன் மனசுல இருக்குறதை யாருகிட்டயும் காட்டிக்க மாட்டியே…. அதனால தானே என்கிட்டயும் நீ என்னைக் காதலிக்கிறேன்னு சொல்லவே இல்லையே,” என்று அவள் கண்களைப் பார்த்துச் சொன்னவன்.
“உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகலைன்னு நீ எப்படி அந்தப் போதி கிட்டே சொல்லலாம்,” என்று கேட்டான் ஆதி சற்று நிதானமாக.
அவன் பேசும் வரை பொறுமையாக இருந்த துர்கா தன் மீது இருந்து அவன் கைகளை எடுத்து விட்டவள், “நீ பேசி முடிச்சிட்டியா ஆதி? நான் பேசலாமா?” என்றால்.
ஆதி அமைதியாக துர்காவைப் பார்க்க…… “நானா வந்து போதி கிட்டே எனக்கு உனக்கும் கல்யாணமாகவில்லை என்று சொன்னேனா…. உன்கிட்ட யாரு அப்படிச் சொன்னது?” என்று கேட்டாள் துர்கா.
“நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு வெளியே சொல்ல நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன்னு எனக்குத் தான் தெரியும் ஆதி. நீ எதுவும் தெரியாமல் இப்படிச் சும்மா கோபப்பட்டு வந்து யாரோ சொன்னதைக் கேட்டு என்கிட்டே கேட்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. நமக்குக் கல்யாணம் ஆனதை மறைக்கிறதுல எனக்கு எந்த லாபமும் கிடையாது. அதேபோல நான் மாடலிங் பண்ணித்தான் சம்பாதிக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை…. சொல்லப் போனால்.. எனக்கு அதில் விருப்பமே இல்லை. நீ சொன்ன ஒரே காரணத்துக்காக மட்டும் தான் நான் மாடலிங் பண்ணவே ஒத்துக்கிட்டேன் ஆதி. அப்படி இருக்க… நீ என்னை எப்படி இப்படி ஒரு கேள்வி கேட்கலாம். நான் பணத்திற்காக அலைபவளா ஆதி? உன் வாயால் எப்படி என்னை இப்படிச் சொன்னே ஆதி? ஏன் என் புருஷன் நீ இருக்கிறப்போ உன் கிட்ட என்ன வேணும் என்னால உரிமையா கேட்டு வாங்க முடியாதா…. நான் கேட்டா நீ முடியாதுன்னு சொல்லிடுவியா?” என்றாள் அவன் கண்ணைப் பார்த்து.
அவன் ‘இல்லை’ என்று தலையை ஆட்ட…. “ம்ம்ம்… பிறகு ஏன் இப்படி எல்லாம் என்னிடம் கேட்க உனக்கு மனசு வந்தது ஆதி?” என்று கண்ணில் கண்ணீரோடு கேட்டவளை என்ன சொல்லித் தேற்றுவது என்று ஆதிக்குப் தெரியவில்லை. அவசரப்பட்டு கோபத்தில் துர்காவைத் தேவை இல்லாமல் பேசிவிட்டோமோ… என்று இப்போது தான் நினைத்தான்.
“துர்கா… அது வந்து…” என்று ஆதி பேச வர… அவனைத் தடுத்த துர்கா, “டேய் ஆதி… நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளு,” என்று சொல்ல…..
“ஆதி நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா…. எப்போ பாரு டென்ஷன் ஆகிட்டே இருக்க… நீயும் டென்ஷன் ஆகிட்டு என்னையும் டென்ஷன் பண்ணிட்டு உனக்கு எப்போதும் இதே வேலையாகப் போய்டுச்சு… நான் பேசி முடியுற வரை எதுவும் திருப்பி நீ பேசினே அவ்வளவுதான் பார்த்துக்கோ…” என்று அவன் முன் தன் வெண்டைக்காய் பிஞ்சு விரலைகளை நீட்டி துர்கா சொல்ல…
நீண்ட நாட்கள் ஏன் நீண்ட வருடங்களுக்குப் பிறகு துர்கா தன்னை இன்று தான் டா… போட்டு கூப்பிடுகிறாள். தன்னிடம் வேலைக்கு வருவதற்கு முன்பு வரை அவள் தன்னிடம் விக்கி, கதிர் இடம் பேசுவது போலத் தான் பேசிக்கொண்டு இருந்தாள். எப்போது என்னிடம் வேலைக்கு வந்தாளோ அன்றில் இருந்து தனக்கு இருந்த ஒரு நல்ல தோழியை மிஸ் செய்து கொண்டு தான் இருந்தான் ஆதி. ஆனால் இப்போது தன்னிடம் பழைய படி பேசும் துர்காவைப் பார்த்து எதுவும் பேசாமல் ரசித்தபடி அமைதியாக நின்றான் ஆதி.
“நீ ஏன் ஆதி இப்படி இருக்க? உன்கிட்ட யாராவது ஒன்னு வந்து சொன்னா…. அதை அப்படியே நம்பிடுவியா நீ… சம்பந்தப்பட்டவங்க கிட்ட பொறுமையாகக் கேட்கிற பழக்கமே உனக்குக் கிடையாதா…. நீ இப்படி எப்போ பாரு டென்ஷனாவே இருக்குறதுனால தானே என்னால உன்கிட்டே ப்ரீயாவே…. பேச முடியுறதில்லை. உன்கிட்டே ஏதாவது சொல்ல வந்தாலே… நீ என்னன்னு மூஞ்சியை உம்முன்னு வெச்சிட்டுப் பேசினா… நான் சொல்ல வரதை எல்லாம் மறந்திடுவேன். இப்பக் கொஞ்சம் முன்னாடி நீ என்கிட்ட என்ன சொன்ன? சொல்லு, என்ன சொன்ன? நீ இல்லாமல் நான் நிம்மதியா இங்கச் சிரிச்சுப் பேசிட்டு விளையாடிட்டு இருக்கேனா… சொல்லு, என்னைப் பார்த்தா அப்படித் தெரியுதா உனக்கு. அன்னைக்கு நான் பேசின அப்போ என்கிட்டே போனை வைக்குறேன்னு கூடச் சொல்லாமல் கொள்ளாமல் திடீர்னு நீ போனை கட் பண்ணிட்டே.. நான் எவ்வளவு தவிச்சுப் போயிட்டேன்னு உனக்குத் தெரியுமாடா…. எருமை? நீ மட்டும் தான் நான் இல்லாமல் தவிச்சுப் போனியா…. இத்தனை வருஷமா உன்கிட்டே என்னோட காதலைச் சொல்ல வந்து ஒவ்வொரு முறையும் என் காதலை உன்கிட்டே சொல்ல முடியாமல் நான் தவிச்ச தவிப்பு உனக்குத் தெரியுமாடா… நீ பாட்டுக்கு அந்தச் சங்கவியை லவ் பண்றேன்னு வந்து என்கிட்டே சொன்ன. அப்போ என் மனசு எவ்வளவு துடிச்சுப் போய்டுச்சுன்னு உனக்குத் தெரியுமாடா… உனக்கும் சங்கவிக்கும் கல்யாணம் நின்ன அப்போ சந்தோசப்பட்ட முதல் ஆள் நான் தான். அது உனக்குத் தெரியுமா? தெரியாது. ஏன்னா நான் லவ் பண்ணினது உனக்குத் தெரிஞ்சா தானே… ஆனா உன்னோட அம்மாவுக்குத் தெரியும். அது உனக்குத் தெரியுமாடா… நான் உன்னை லவ் பண்றது உன்னைத் தவிர எல்லாரும் நான் சொல்லாமலேயே புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனா நீ இருக்கியே சரியான லூசு… டியூப் லைட்…. மரமண்டை… உனக்கு மட்டும் என் காதல் புரியவே இல்லை. இன்னொரு தடவை அவன் சொன்னான் இவன் சொன்னான்னு வந்து என்கிட்டே ஏதாவது கேளு. அப்போ தெரியும் உனக்கு நான் யாருன்னு… யாருடா வந்து உன்கிட்டே சொன்னது… எனக்குக் கல்யாணம் ஆகலைன்னு நம் போதி கிட்டே சொன்னேன்னு. அவனை இப்போ கூப்பிட்டு வந்து என் முன்னாடி நிறுத்தி, ‘நீ சொன்னதைச் சொல்லச் சொல்லு…’ அவன் வாயைக் கிளிக்கிறேன்,” என்றாள் ஆக்ரோஷமாக.
“முதல்ல இதுக்கு எல்லாம் காரணம் உன் தம்பி கதிர் தான். அன்னிக்கே நான் போதி கிட்டே எனக்குக் கல்யாணம் ஆகிருச்சுன்னு சொல்லலாம்னு சொன்னேன். அந்த அறிவு கெட்டவன் தான் நான் சொல்ல சொல்ல கேட்காமல் அதையும் இதையும் சொல்லி என்னை போதி கிட்டே உண்மையைச் சொல்ல விடாமப் பண்ணிட்டான்.. நான் உண்மையைச் சொன்னால் நம்ம கம்பெனிக்கு வரப் போற பெரிய ஆர்டர் எல்லாம் என்னால் வராமல் போயிடும்னு சொல்லி என் மனசை மாத்திவிட்டுட்டான்,” என்று மூச்சுவிடாமல் அவனிடம் எல்லாம் சொல்லிவிட்டு ஆதியைப் பார்க்க…
அவன் இவ்வளவு நேரம் தம் கட்டி பேசியதையும், தன்னை பேச்சு வாக்கில் தன்னை முட்டாள், அறிவுகெட்டவன் என்று கண்டபடி திட்டிவிட்டு…. மூச்சு வாங்கத் தன் முன் கவர்ச்சியாக நின்று இருப்பவளைப் பார்த்துப் பார்த்து ரசித்துக்கொண்டு நின்று இருந்தான். தன்னை காதலிக்கிறேன் என்று ஒரு வழியாகச் சொல்லி விட்ட துர்காவை எண்ணிச் சந்தோசத்தில் அவளையே பார்க்க.
அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்த துர்கா அவன் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்பதைப் பார்த்தவள். ‘என்ன இவன் எதுவுமே பேச மாட்டேன் என்கிறான்?’ என்று ஆதியைப் பார்க்க… ஆதி அவள் வேக மூச்சு எடுத்துக்கொண்டு கண்ணை உருட்டி உருட்டி பேசியதை ரசித்தவனின் கண்கள் அவள் கண்களைத் தாண்டி கீழே செல்ல… இதுவரை பேசியதில் அவள் தொண்டை காய்ந்து விட…. தன் உதட்டைத் தன் நாவால் ஈரம் செய்தவள் எச்சிலை விழுங்க… அவள் தொண்டைக் குழியில் வந்து நின்ற அவன் விழிகள்.
அதற்குக் கீழே செல்லத் துடிக்கும் தன் கண்களைக் கட்டுப்படுத்தப் போராடியவன். அவள் மார்பு ஏறி இறங்குவதைப் பார்த்ததும் தன் கட்டுப்பாட்டை இழந்தவனின் பார்வை கீழே செல்ல… அவன் பார்வை சென்ற இடத்தைக் கவனித்துக் கொண்டே வந்த துர்கா அடுத்து அவன் பார்வை செல்லும் இடம் தெரிந்ததும் சட்டென்று குனிந்து தன்னைப் பார்க்க அவள் சட்டை பட்டன் கழண்டு இருப்பதைக் கண்டதும் ஆதியை நிமிர்ந்து பார்த்தவள் ஆதியின் கண் கீழே இறங்கும் போது உடனே தன் இரண்டு கையையும் வைத்துத் தன் மார்பை மறைத்துக் கொள்ள…
அவன் முகம் அவள் செய்கையில் சுருங்கி விட…. அவனைப் பார்க்க முடியாமல் திரும்பி நின்று கொண்டாள். அதுவரை அமைதியாக இருந்த ஆதி துர்காவின் பின்னால் வந்து அவளை அணைத்துக் கொள்ள… துர்காவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நிற்க…. அவள் இடையில் இருந்து தன் கையை கொஞ்சம் கொஞ்சமாக அவள் உடலைத் தழுவிக் கொண்டே… மேலே கொண்டு வர அவன் தொடுகையில் துர்காவின் உடல் நடுங்க….. அதை உணர்ந்தாலும் துர்காவின் காதோரம் வந்து “துர்கா…” என்று அழைக்க…
துர்கா நடுங்கிய குரலில், “சொ… சொல்லு ஆதி,” என்று சொல்ல… “என்ன துர்கா உன் உடம்பும் குரலும் இப்படி நடுங்குது… நான் பக்கத்துல வந்தது உனக்குப் பிடிக்கலையா?” என்றான்.
அவன் அப்படி. கேட்டதும் ‘இல்லை’ என்று துர்கா தலையை ஆட்ட… “அப்போ நான் உன் பக்கத்தில் வருவது உனக்குப் பிடிக்கலையா?” என்று அவள் மீது இருந்து தன் கையை எடுக்கப் போக… அவன் தான் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டு விட்டான் என்பதை உணர்ந்த துர்கா அவன் கையைத் தன் மீது இருந்து எடுக்க விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, “ஆதி நான் ‘எனக்குப் பிடிக்கலை’ என்று தலையை ஆட்ட வில்லை. நீ இப்படி என் கிட்டே ‘யாரோ மாதிரி பிடிச்சிருக்கா இல்லையான்னு’ கேக்குறது தான் பிடிக்கலை,” என்று துர்கா சொல்ல…
அவள் அப்படிச் சொன்னதும் சந்தோஷமான ஆதி துர்காவை இருக்கி தன் உடலோடு சேர்த்து அணைக்க… அவன் கைகளுக்குள் இருந்த துர்கா நெளிந்து கொண்டு இருக்க… அவள் முதுகில் தன் இதழ்களால் ஈரம் செய்து கொண்டே… அவள் காது மடல் வரை வந்தவன் அவளைத் தன் புறம் திருப்ப… துர்கா இன்னமும் தன் மார்பின் குறுக்கே… கைகளைக் கொண்டு மறைத்து இருக்க அதைப் பார்த்துச் சிரித்தவன் அவள் முகத்தைத் தன் முகத்தருகில் கொண்டு வந்தவன் அவள் இதழை ஆசையோடு தன் விரல்களால் வருடியவன் அவள் இதழில் மென்மையாக முத்தமிட…
துர்கா கண்களை இருக்கி மூடிக்கொள்ள… அவளைப் பார்த்துக்கொண்டே அவள் இதழ் முழுவதும் தன் இதழுக்குள் சிறை செய்தவன் ஆசை தீர அவள் இதழ் தேனைப் பருகினான். இருவரும் முதன் முறையாக தங்கள் மனதில் இருந்த காதல் வெளிப்பட்ட சந்தோஷத்தில் தங்களுக்குள் இன்னும் ஆழமாக முத்தத்தின் மூலம் காதல் கடலில் மூழ்கிக்கொண்டு இருக்க…
துர்காவின் அறைக் கதவு திடீரென்று தட்டும் சத்தம் கேட்கவும். துர்காவுக்குத் தானே முதலில் கேட்டது…. ஆதியை முத்தமிட்டுக் கொண்டே அவன் தோளைச் சுரண்ட… அவளை ஆசையோடு முத்தமிட்டுக் கொண்டே “ம்ம்ம்ம்….” என்று சொல்ல… மறுபடியும் துர்கா அவனைச் சுரண்ட…. அவன் முத்தமிட்டுக் கொண்டு இருந்தவன் ‘ஒருவேளை துர்காவுக்குத் தான் விடாமல் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதில் மூச்சு முட்டுகிறதோ’ என்று நினைத்தவன்.
சட்டென்று அவள் இதழிலிருந்து தன் இதழைப் பிரித்தவன் அவள் முகத்தைப் பார்த்து “என்ன?” என்று தன் புருவம் உயர்த்தி கேட்க…. துர்கா தன் கைகளை வாசல் கதவு நோக்கி காட்டவும் அப்போதுதான் கதவு தட்டும் சத்தம் கேட்பதை உணர்ந்தான் ஆதி.
அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டே வாசல் கதவைப் பார்த்தவன் துர்காவிடம் “யார்?” என்று கேள் என்று ஜாடை செய்ய. அவன் கைக்குள் நெளிந்து கொண்டே… “யார்… யாரு…” என்றாள்.
“துர்கா நான் தான் போதி,” என்றான்.
போதி தான் தன் அறைக் கதவைத் தட்டுகிறான் என்று தெரிந்ததும். ஆதியிடம் இருந்து வேகமாக துர்கா பிரிய…. அவள் சட்டென்று பிரியவும் கடுப்பான ஆதி துர்காவைப் பார்க்க… அவளைப் பார்த்துக் கண்களாலேயே கெஞ்சியவள் “ப்ளீஸ்….” என்று மெதுவாகச் சொல்ல… “சரி போ….” என்று தலையை ஆட்ட…
“ஒரு நிமிஷம் வரேன் போதி,” என்று மட்டும் சொல்லிவிட்டு தன் சட்டை பட்டனை அவசர அவசரமாகப் போட….. அது வேறு அவளைப் பழி வாங்கியது… அவள் கைகள் பதட்டத்தில் நடுங்க சட்டை பட்டன் போட முடியாமல் அவள் தடுமாற…. அதைப் பார்த்துச் சிரித்த ஆதி அவள் அருகில் வந்து துர்காவின் கையைப் பிடிக்க…. அவன் அப்படிச் செய்ததும் தன் மார்பைத் துர்கா மறைத்துக் கொள்ள…
“நான் எதுவும் பார்க்க மாட்டேன்,” என்றவன் அவள் கண்களையே பார்க்க… துர்காவும் அவன் கண்களையே பார்க்க…. அவள் கைகளை மெதுவாக இறக்கி விட்டவன் அவள் உடலின் மேல் தன் சுண்டு விரல் கூடப் படாமல் அவள் சட்டை பட்டனைப் போட்டு விட்டான்.
இன்னும் துர்கா ஆதியின் கண்களையே பார்த்துக் கொண்டு இருக்க…. ஆதி அவள் சட்டை பட்டனைப் போட்டு விட்டவன் அவள் விழிகளைத் தாழ்த்தி அவள் சட்டையைக் காட்ட… அவளும் குனிந்து தன் சட்டையைப் பார்த்தவள் பட்டன் போட்டு இருந்ததைப் பார்த்துவிட்டு அவனைப் பார்த்து வெட்கத்துடன் மெல்லச் சிரித்தவள் “நான் போய்ப் போதி கிட்டே என்னனு கேட்டுட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டு அவள் அறைக் கதவைத் திறக்கப் போனவள் ஆதி அவள் செல்வதை ரசித்துக் கொண்டு அங்கேயே நின்று இருக்க…
துர்கா அவனிடம் “உள்ளே போ…” என்று மெதுவாக அவனைப் பார்த்து ஜாடை சொல்ல… “சரி,” என்று சிரித்துக் கொண்டே அவள் ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் சென்றான். அவன் உள்ளே சென்றதை உறுதி செய்து கொண்ட துர்கா தன் உடை சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை தன்னைக் குனிந்து பார்த்துக் கொண்டவள் தன் உடைகளைச் சரி செய்துவிட்டு கதவைத் திறந்து பார்க்க போதி துர்காவின் அறை முன் நின்று இருந்தான்.
கதவைத் திறந்து துர்கா போதியைப் பார்த்து கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தவள், “என்ன போதி இந்த நேரத்துல வந்திருக்க? இப்போதானே நான் மேலே வந்தேன். எதுவும் வேணுமா சொல்லு?” என்று கேட்டாள்.
“அது ஒன்னும் இல்ல துர்கா. உன்னோட போனை நீ கீழே மறந்து வச்சிட்டு வந்துட்டே…. நான் தண்ணி எடுக்க டைனிங் டேபிளுக்கு வந்தப்பதான் உன் போன் அங்கு இருக்கிறதைப் பார்த்தேன். அதுல ‘அம்மா காலிங்’னு வந்து இருந்துச்சு. அதனாலதான் நான் உன் போனை எடுத்துட்டு வந்து கொடுக்க உன் ரூமுக்கு வந்தேன்,” என்று சொன்னான் போதி.
“ஓ அப்படியா! சரி போதி,” என்று சொல்லி அவன் நீட்டிய போனை வாங்கிக் கொண்டவள் தன்னறைக்குள் செல்லப் போக….
“துர்கா ஒரு நிமிஷம்,” என்று சொன்னான் போதி.
“என்ன போதி சொல்லு?” என்று அவனைப் பார்த்துத் திரும்பி கேட்க, “நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத. நீ அழுதியா? துர்கா,” என்று கேட்டான் போதி.
“ஏன் போதி அப்படி கேக்குற? அதெல்லாம் ஒன்னும் இல்லையே…. நான் அழுகவே இல்லையே…” என்று சொல்ல.
“அப்படியா? எனக்கு உன் முகத்தைப் பார்த்தப்போ அழுதது போல தான் தெரிந்தது. அதனால்தான் கேட்டேன். உன் கண் மை கூட அழிஞ்சிருக்கு,” என்று போதி சொல்ல.
அவன் அப்படிச் சொன்னதும் தன் கண்களைத் தொட்டுப் பார்த்த துர்கா, “வந்துட்டேன்னா மேக்கப் ரிமூவ் பண்ணிட்டு இருந்தேன். நீ கூப்பிட்டது அப்படியே வந்துட்டேன். அதனால தான் அப்படிப் பாதியிலேயே விட்டுட்டு வந்ததுனால மை அழிந்தது போல உனக்குத் தெரிஞ்சிருக்கு,” என்று சொல்ல, “ஓ அப்படியா! சரி நீ போய்த் தூங்கு. நானும் போறேன்,” என்று சொன்னவன் படிகளில் இறங்கிச் செல்லாமல் அடுத்து இருக்கும் ஆதியின் ரூமிற்குச் சென்றான்.
அவன் செல்வதைப் பார்த்த துர்கா, “என்ன போதி உன்னோட ரூமுக்கு போகாமல் பக்கத்து ரூமுக்கு போற…” என்று சொல்ல. “உனக்குத் தெரியாதா? ஆதி அந்த ரூம்ல தான் தங்கி இருக்கான் துர்கா. நான் அவனைப் பார்க்கத்தான் போறேன்,” என்று சொல்ல.
“ஓ அப்படியா! சரி போ…” என்று சொல்லிவிட்டுத் தன்னறைக்குள் வந்தவள் ஆதி எங்கே என்று தேடிக்கொண்டு செல்ல… கதவு சாத்தும் சத்தம் கேட்டதும் ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்த ஆதி உள்ளே துர்கா மட்டும் வருவதைக் கண்டதும் அந்த அறையை விட்டு வெளியே வந்தவன். “நேராக அவன் எதுக்கு இந்த நேரத்துல உன் ரூமுக்கு வரான்?” என்று கோபமாகக் கேட்டுக்கொண்டே அவள் அருகில் வர…
“என்னுடைய போன் கீழே டைனிங் ரூமில் இருந்திருக்கு…. அவன் தண்ணி குடிக்க வந்த அப்போ என் போனிற்கு என் அம்மா போன் பண்ணி இருக்காங்க….. அவன் வந்து பார்க்கும்போது.. அதனால்தான் போனை கொண்டு வந்து என்கிட்டே கொடுக்க வந்தான்,” என்று சொல்ல…
“சரி,” என்று தலையை ஆட்டியவன் “அவன் போய்ட்டானா..” என்று ஆதி கேட்க… “ஓ….உன் ரூமிற்கு உன்னை பார்க்கத் தானே போயிருக்கான்,” என்று துர்கா சொல்ல.
“என் ரூமிருக்கா.. சரி,” என்று தலையை ஆட்டியவன். அதிர்ச்சியில் “துர்கா…. என்ன சொன்னே… அவன் என் ரூமிற்கு போயிருக்கானா?” என்று அதிர்ந்தவன் அவளைப் பார்க்க… தன் ரூமில் தான் ஆதி அமர்ந்து இருக்கிறான் என்றதை மறந்து “ஆமாம்,” என்று சொல்ல..
“ஏய் துர்கா… நான் தானே இங்கே இருக்கேனே… அவன் எப்படி அங்கே போய் என்னைப் பார்ப்பான்?” என்று சொல்ல… “அட ஆமால்ல… ஐயோ ஆதி! இப்போ என்ன செய்றது? உன் ரூமில் நீ இல்லை என்று தெரிந்ததும். நீ எங்கே என்று தேடினால் என்ன செய்வது?” என்று அவள் பதட்டம் ஆக…
“ஏய்…. நீ ஏன் இப்போ டென்ஷன் ஆகுறே… நான் பார்த்துக்கறேன்,” என்று சொன்னவன் சற்று நிதானமாக யோசித்தவன். “சரி நான் என் ரூமிற்கு போறேன். நீ நல்லாப் படுத்து ரெஸ்ட் எடு. நாம காலையில் பார்க்கலாம்,” என்று சொல்லிவிட்டு அவள் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே மெதுவாக எட்டிப் பார்க்க…. போதி ஆதியின் ரூமிற்குப் போய்க்கொண்டு இருந்தான்.
அவன் அந்தப் பக்கம் திரும்பிச் சென்று கொண்டு இருப்பதைப் பார்த்ததும் துர்காவிடம் திரும்பி “பை…” சொல்லிவிட்டு துர்காவின் ரூமை விட்டு வெளியே வந்தவன் அவள் ரூம் கதவைச் சாத்திவிட்டு அவன் அறைக்குப் போகாமல் நேராக படி வழியாகக் கீழே இறங்கியவன் சத்தமில்லாமல் விக்கியின் அறைக்குச் சென்று அவன் ரூமிக்குள் சென்றுவிட….
அங்கே போதி ஆதியின் அறைக்கு வந்து அவன் அறைக் கதவைத் தட்டிப் பார்த்துவிட்டு அவன் திறக்காமல் போகவே… ‘எங்கே போய் இருப்பான்? ஒருவேளை தூங்கி இருப்பானோ?’ என்று யோசித்துக் கொண்டே… கீழே இறங்கி வர… விக்கியின் அறைக்கு வெளியே நின்று விக்கியிடம் ஏதோ பேசுவது போல அறைக்குள் கையை வைத்துக் கொண்டு நின்று தன்னைப் போதி பார்க்கிறானா என்று பார்த்துவிட்டு அவன் தன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்ததும், “சரிடா… விக்கி நீ போய்த் தூங்கு. நான் என் ரூமிற்கு போறேன். எனக்குத் தூக்கம் வருது,” என்று சொல்லிவிட்டு அவன் அறைக் கதவைச் சாற்றிவிட்டுப் போதி வருவது தெரியாதவன் போல… மாடிப்படி ஏறி வந்தவன்.
தன் எதிரே போதியைப் பார்த்தவன் “என்ன போதி! மேல இருந்து வரே …?” என்றான் ஆதி எதுவும் தெரியாதவன் போல… “உன்னைப் பார்க்கத் தான் உன் ரூமிற்குப் போனேன். கதவைத் தட்டிப் பார்த்துட்டு நீ தூங்குறேன்னு நினைச்சுட்டேன் ஆதி. அதான் கீழே வந்தேன்,” என்றவன். “நீ எங்கே விக்கி ரூமில் இருந்து வரே… நான் மேல போகும்போது உன்னைப் பார்க்கவே இல்லையே…” என்றான் போதி.
“நான் இப்போதான் போனேன்,” என்று ஆதி உளறிவிட… போதி “என்ன…?” என்று புரியாமல் அவனைப் பார்க்க.. “அது.. அது… நான் கொஞ்சம் முன்னே தான் அவன் ரூமில் உள்ளே இருந்து வெளியே வந்தேன். அதனால நீ பார்த்து இருக்க மாட்டே,” என்று ஆதி சொல்ல…
“சரி ஆதி,” என்றவன் “ஒன்னும் இல்லை. நான் சும்மா தான் உன் ரூமிற்கு வந்தேன். நீ தூங்கு. நாம காலையில் பார்க்கலாம்,” என்று ஆதியிடம் சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் செல்ல ஆதியும் “சரி” என்று தன் அறைக்குச் சென்று விட்டான்.
EPISODE 95
கீர்த்திகா இரண்டு நாள் கழித்து ராதாவிடம் டியூஷன் வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளாசுக்கு வரும்போது சந்தோஷிடமும் வந்து, “சார் ஒரு இரண்டு நாள் கழிச்சு நான் டியூஷனில் ஜாயின் பண்ணிக்கிறேன். உங்களுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே…..” என்று கேட்க, “ஒன்னும் பிரச்சனை இல்லைம்மா, எப்ப வேணா வாங்க,” என்று சொல்லிவிட்டுக் கிளாஸ் நடத்த ஆரம்பித்தான்.
அவன் தீவிரமாகக் கிளாஸ் நடத்திக் கொண்டிருக்க, அனைத்து மாணவர்களும் அவன் கிளாஸ் நடப்பதைக் கவனித்துக் கொண்டிருக்க. ராதா மட்டும் அவன் பாடம் எடுத்துக் கொண்டிருப்பதைத் தன் காதிலே போட்டுக்கொள்ளாமல், தன் கண்களால் அவனை ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பாடம் ஆரம்பித்ததில் இருந்து ஒரு முறை கூட சந்தோஷின் பார்வை தப்பித்தவறியும் ராதா இருக்கும் இடத்திற்குத் திரும்பவே இல்லை.
‘நானும் ரெண்டு நாளாப் பார்க்கிறேன். இந்த வாத்தி என்னைக் கண்டுக்கவே மாட்டேன்னு சுத்திட்டு இருக்கான். டியூஷன் போனாலும் வந்தோமா… கிளாஸ் நடத்தினோமா… என்று இல்லாமல் இருக்கான். என் மேல லவ் இருக்குன்னு சொன்னவனா இவன்? அதுக்கான அறிகுறி கொஞ்சம் கூட இல்லை போலவே,’ என்று நினைத்தவள் இன்று இவனிடம் கேட்டே விட வேண்டும் என்ற முடிவோடு இருந்தாள் ராதா.
கிளாஸ் முடிந்ததும் சந்தோஷ் எல்லோருக்கும் நோட்ஸ் கொடுத்துவிட்டு ஸ்டாப் ரூம் சென்றுவிட… அவன் சென்றதும் ராதாவும் கீர்த்தியிடம் பாத்ரூம் செல்வதாகக் கூறிச் சமாளித்துவிட்டு ஸ்டாப் ரூம் சென்றாள். அங்கே அமர்ந்து மற்ற ஸ்டாப்களுடன் பேசிக்கொண்டு இருந்தான் சந்தோஷ். அவள் அவர்கள் அறை முன் நின்று இருக்க… அவளைப் பார்த்த ஸ்டாப் ஒருவர், “என்னம்மா வேணும்?” என்று கேட்க… “சார்ரை பார்க்க வந்தேன்,” என்று சொல்ல, “உள்ளே வாம்மா,” என்று சொல்லிவிட்டு அவர் அடுத்த கிளாசிற்குச் செல்ல…
மற்ற ஸ்டாப்களும் சென்றுவிட சந்தோஷிடம் வந்த ராதா எதுவும் பேசாமல் அவன் அருகில் நிற்க… அவளை நிமிர்ந்தும் பார்க்காமல், “என்ன வேணும்?” என்றான் சந்தோஷ்.
“உங்க கிட்டே கொஞ்சம் பேசணும்…” என்றாள் ராதா.
“என்ன?” என்றான் இறுகிய குரலில்.
“நீங்க ஏன் என் முகத்தைப் பார்த்துப் பேசவே மாட்டேங்குறீங்க…” என்றாள் ராதா.
“உன் முகத்தைப் பார்த்து நான் ஏன் பேசவேண்டும்?” என்றான்.
“இப்படி கேட்டால் நான் என்ன நினைப்பது?” என்றாள்.
“நீ நினைப்பதற்கு ஒன்றும் இல்லை…” என்றவன் அவன் சேரில் இருந்து எழுந்து அவன் கப்போர்டை திறந்து அதில் ஏதோ புக்கை தேடிக் கொண்டு இருக்க… அவள் வேகமாக அவன் அருகில் வந்து நின்றவள், “என்னை பாருங்க ஒரு நிமிஷம்,” என்றாள்.
அவன் திரும்பி அவளைப் பார்க்க…. ‘ஆத்தி… என்னைத் தள்ளி நின்னு பார்க்கிறப்போ இவ்ளோ உயரமா தெரியலை.. கிட்டே வந்தா ரொம்ப உயரமா தெரியுறானே.. நம்ம உயரத்துக்கு இவன் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்துப் பேசணும்னா ஸ்டூல் போட்டு ஏறித்தான் பேசணும் போலவே,’ என்று நினைத்தவள் தன் தலையைக் குலுக்கிக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்க்க… அவன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளை நிமிர்ந்ததும், “என்ன சொல்லு,” என்றான் உர்…. என்று முகத்தை வைத்துக் கொண்டு.
“நான் அன்னைக்கு நீங்க என் கிட்டே திடீர்னு கொஞ்சம் ஓவரா க்ளோஸா வந்து ஒரு மாதிரி நடந்துகிட்ட நாள தான் நான் ஒரு பயத்துல உங்க கிட்டே அப்படிச் சட்டென்று பேசிட்டேன். நான் பேசினது தப்பு தான். அதுக்காக நீங்க என்கிட்டே இப்படிப் பேசாமல், என்னைப் பார்க்காமல் இப்படி ஏன் அவாய்ட் பண்றீங்க…” என்றாள் அழுத்து விடுபவள் போல.
“நீங்கள் பேசினதில் கொஞ்சம் கூடத் தப்பு இல்லை. நான் தான் உங்க கிட்டே பொம்பளைங்களை கண்டாலே வழிஞ்சுட்டு போற பொறுக்கிங்க மாதிரி நடந்துகிட்டேன். அன்னிக்கே உங்க கிட்டே மன்னிப்பு கேட்டுட்டேன். இன்னொரு முறை வேணும்னாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்,” என்று சொன்னவன். “நான் பண்ணினது தப்பு தான். என்னை மன்னிச்சிருங்க,” என்றவன். “போதுமா மிஸ் ராதா… இல்லை உங்க காலில் வேணும்னாலும் விழுந்து கும்பிடட்டுமா சொல்லுங்க..” என்று அவள் காலில் சந்தோஷ் விழப் போக…
எங்கே சந்தோஷ் தன் காலில் விழுந்து விடுவானோ என்று பதறியவள் துள்ளி குதித்துப் பின்னே நகர்ந்துவள். “ஏன் இப்படி எல்லாம் நடந்துகிறீங்க…” என்று அழுதவள். “எந்த ஒரு ஆணும் தான் காதலிக்குற பொண்ணாவே இருந்தாலும் அவ அனுமதி இல்லாமல் தொட மாட்டான். அப்படி இருக்க அப்போ நீங்கள் உங்க காதலை என்கிட்டே சொல்லாமலேயே வந்து திடீர் என்று என்னைச் சீண்டி விளையாடினால் நான் உங்களை என்னவென்று நினைப்பது? அதனால் தான் நீங்க என்கிட்டே அப்படி நடந்துகிட்டதும் எனக்கு என்ன செய்றதுன்னு தெரியாமல் தான் உங்க கிட்டே அப்படிப் பேசி உங்களை அடிச்சுட்டேன். நான் உங்க கிட்டே அப்படி நடந்துகிட்ட பிறகு வந்து நீங்க என்னை காதலிக்குறேன்னு சொன்னா நான் என்ன பண்ணுவேன்? எனக்கு என்ன செய்யறதுன்னு புரியல. அதனால தான் அந்த அன்னைக்கு நான் எதுவுமே பேசாமல் கிளம்பி வீட்டுக்கு போயிட்டேன்,” என்று சொன்னாள் ராதா.
“இப்பச் சொல்லுங்க தப்பு என் மேலயா? உங்க மேலயா? நீங்க முதலிலேயே உங்க காதலை என்கிட்டச் சொல்லி இருந்தா… எனக்கு விருப்பம் இருக்கா… இல்லையான்னு….. நான் உங்ககிட்டச் சொல்லி இருப்பேனே. இப்படி ரெண்டு பேருக்கும் நிறைய மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் வந்திருக்காது இல்லையா…” என்று கேட்டாள் ராதா.
அவள் சொல்வதை எல்லாம் எந்த மறுப்பும் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்த சந்தோஷுக்கு அவள் சொல்வதில் இருந்த நியாயம் புரியத்தான் செய்தது. இருந்தும் அவள் தன்னை பெண்கள் பின்னால் அலைபவன் என்பது போலச் சொன்னது தான் இப்போது வரை அவன் மனதை மிகவும் கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறது.
தான் இவ்வளவு தூரம் தன் மனதில் இருப்பதை சொல்லியும் சந்தோஷ் எதுவுமே பேசாமல் இப்படி அமைதியாக நின்று இருந்ததைப் பார்த்த ராதாவிற்கு அவன் மேல் கோபம் வந்தது. “இங்கே பாருங்க. நீங்க நேரடியா என்கிட்ட நீங்க என்னை காதலிக்கிறேன்னு சொல்லிட்டீங்க…. எனக்கு உங்களைப் மாதிரி எல்லாம் பேசத் தெரியாது. என் மனசுல இருக்குறதச் சொல்லிடறேன் அவ்வளவுதான். நான் உங்ககிட்ட அன்னைக்கு அவ்வளவு பேசின பிறகு நீங்க என்கிட்ட இப்போ வர முகம் கொடுத்துப் பேசாமல் என்ன அவாய்ட் பண்ணிட்டுப் போறது எனக்குச் சுத்தமாப் பிடிக்கல. நான் பண்ணினது தப்பு தான் இல்லைன்னு சொல்லலை. நான் சின்ன பொண்ணு தானே? என்ன நீங்க மன்னிக்கக் கூடாதா… நான் பாவம் தானே…” என்றவள்.
“முன்ன மாதிரி என்கிட்ட நீங்க கொஞ்சிக் குலாவலைன்னாலும் பரவாயில்லை. ஆனா என்கிட்டே முகம் கொடுத்துப் பேசினாலே போதும்னு இருக்கு எனக்கு. இப்போ இப்படி மூஞ்சியைத் தூக்கி வைத்துவிட்டு நீங்க என்கிட்டே இருக்குறது எனக்குச் சுத்தமாப் புடிக்கல. நீங்க யாரோ… நான் யாரோ மாதிரி இருக்குறது எல்லாம் என்னால சுத்தமா முடியாது. ஒழுங்கா நாளையில் இருந்து என்கிட்ட நல்லாப் பேசலை அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது,” என்று அவனை எச்சரிப்பது போலத் தன் விரலை அவன் முன் ஆட்டி ஆட்டி சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றாள் ராதா.
இவ்வளவு நேரம் மலை எடுத்து ஓய்ந்தது போல நிற்காமல் பேசிவிட்டுச் சென்ற ராதாவையே இமை மூடாமல் பார்த்துக் கொண்டு இருந்தான் சந்தோஷ். ‘இவளுக்கு என்ன ஆச்சு? இப்படி மூச்சு விடாமல் பேசிட்டுப் போறா… இவ சொல்றதைக் கேட்டு நான் எப்பவும் போல இவ கிட்டே போய்ப் பேசினா அவ்வளவுதான். நாளைக்கே வேற ஏதாவது நான் பேசி மறுபடியும் இவ தைய்யா… தக்கான்னு குதிப்பா… ஐயோ… என்னால முடியாதுடா சாமி. இந்தச் சின்ன பிள்ளைங்க சாவகாசம் எல்லாம் எனக்குத் தேவையே இல்லைடா சாமி,’ என்று நினைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றான். ஆனால் ராதா மிகவும் சீரியஸ் ஆகத் தான் பேசுகிறாள் என்று அவனுக்குத் தெரியாமல் போய்விட்டது. நாளை என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல்…
கதிர் அடித்து விரட்டியதில் ரவி மதுவின் பிளாட் பக்கம் வருவதே இல்லை. அவளுக்கும் சற்று நிம்மதியாக இருந்தது. ரவியின் தொந்தரவு இனிமேல் தனக்கு இருக்காது என்று சற்று நிம்மதியாக இருந்தாள். வழக்கம்போல மது ஆபீஸிற்கு சென்றுவிட பத்மாவும், நிலானியும் மட்டும் தங்கள் பிளாட்டில் இருந்தனர். பத்மா சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்க…. நிலானி ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். முன்பை விட இப்போது அவள் உடம்பு சற்றுத் தேறியிருந்தது.
நிலானி படம் பார்த்துக் கொண்டிருக்க அவள் போன் திடீரென்று அடிக்கவும் அதை அருகில் இருந்த போனை எட்டி எடுத்தவள் யார் என்று பார்க்க…. விக்கி தான் அழைத்து இருந்தான். போனை கையில் வைத்துக் கொண்டு விக்கியின் காலை அட்டென்ட் செய்யலாமா? வேண்டாமா? என்று தனக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.
அவன் இங்கிருந்து நிலானியை விட்டு டென்மார்க் சென்றதிலிருந்து பலமுறை நிலானியின் போனிற்கு கால் செய்து அவள் போன் எடுக்கவே இல்லை. அவனும் விடாமல் தினமும் காலை… மாலை… இரவு… என மாற்றி மாற்றி போன் செய்து கொண்டே தான் இருக்கிறான். இவளுக்குத் தான் எடுப்பதற்கு மனமே வரவில்லை. திடீரென்று அவனிடம் எப்படிப் பேசுவது… என்ன பேசுவது…. என்று பதட்டத்திலேயே இருந்தால். மதுவும் எவ்வளவோ முறை சொல்லிப் பார்த்தும் அவள் கேட்பதாக இல்லை.
மது வீட்டில் இருக்கும்போது விக்கியிடம் இருந்து நிலானியின் போனிற்கு கால் வந்தால் மது தான் அட்டென்ட் செய்து விக்கியிடம் பேசுவாள். விக்கியும் மதுவிடம் நிலானியைப் பற்றி விசாரித்துவிட்டு ஃபோனை வைத்து விடுவான்.. இந்த விஷயம் பத்மாவிற்கும் தெரியும். அவளும் நிலானியிடம் அவளுக்குத் தெரிந்தது போல நாசுக்காகவும்… சில சமயம் நேரடியாகவும் சொல்லியும் இருக்கிறாள். ஆனால் நிலானிக்குத்தான் விக்கியிடம் பேசுவதற்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
போன் நீண்ட நேரம் அடித்துக் கொண்டிருக்க, கிச்சனில் வேலை செய்து கொண்டிருந்த பத்மா போன் நீண்ட நேரம் ரிங் போய் கட் ஆகி மறுபடியும் வந்து கொண்டிருக்கிற, யார் இந்த நேரம் போன் செய்கிறார்கள் என்று மணியைப் பார்க்க மணி 4 என்று காட்டியது. அதைப் பார்த்ததும் இந்த நேரத்தில் எப்படியும் நிலானியின் கணவன் தான் அவளுக்கு கால் செய்திருப்பான் என்று நினைத்தவள் வேகமாக கிச்சனில் இருந்து வந்தவள் நிலானியைப் பார்க்க…. நிலானி போனை கையில் வைத்துக்கொண்டு ஃபோனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பத்மா, “அட என்னமா நீ? இவ்ளோ நேரம் கையில வெச்சிட்டு போன் அட்டென்ட் பண்ணாமல் என்ன பண்ணிட்டு இருக்க…” என்று சொல்லி காலை அட்டென்ட் செய்து விட்ட்டு உள்ளே சென்றுவிட்டால்.
பத்மா போனை அட்டென்ட் செய்து கொடுத்ததும் நிலானிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தன் அக்கா இருந்தால் ஆவது அவளிடம் கொடுத்துப் போன் பேசச் சொல்லலாம். ஆனால் இன்று அவளும் இல்லாமல் போகவே வேறு வழியே இல்லாமல் போனை காதில் வைத்தவள் “ஹ….ஹலோ,” என்றால் நிலானி.
இவ்வளவு நேரம் தான் போன் செய்து போன் எடுக்காமலே இருக்கவே…. இப்போது நிலானி போன் எடுக்க மாட்டாள் என்று காலை கட் செய்யப் போன விக்கி நிலானியின் குரல் கேட்டதும் போனை காதில் வைத்து, “ஹலோ.. நிலா குட்டி…. நீ தான் பேசுறியா?” என்றான் ஆர்வமாக.
“ம்ம்ம்ம்… ஆமா நா… நான் தான் பேசுறேன்,” என்றால் தயங்கப் படியே நிலானி.
“அப்பாடி! ஒரு வழியா என்னுடைய இத்தனை நாள் முயற்சி இன்னைக்குத் தான் நிறைவேறி இருக்குது,” என்று சொல்லிச் சந்தோஷப்பட்ட விக்கி, “எப்படி இருக்க நிலானி? நல்லா இருக்கியா? உனக்கு இப்போ உடம்பு எல்லாம் பரவாயில்லையா?” என்று கேட்டான் விக்கி.
“ம்ம்ம்… நான் நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா??” என்று கேட்டாள் நிலானி.
“பார்ரா!!!! என் பொண்டாட்டிக்கு நான் நல்லா இருக்கேனா இல்லையா என்று எல்லாம் கேட்கத் தெரிந்திருக்கிறது!!!” என்று அவளைக் கிண்டல் செய்துவிட்டுச் சிரிக்க. அவன் தன்னைக் கிண்டல் செய்வதைக் கேட்டதும் நிலானிக்கும் சிரிப்பு வந்துவிட லேசாக அவளும் சிரித்தாள்.
“என்ன பண்ணிட்டு இருக்க நிலா குட்டி?” என்றான் விக்கி.
“ஹால்ல உட்கார்ந்து டிவி பாத்துட்டு இருக்கேன்…” என்று சொன்னாள் நிலானி.
“ஏன் நான் இத்தனை நாள் உனக்குப் போன் பண்ணியும் நீ ஒரு தடவை கூட எடுத்து என் கூடப் பேச மாட்டேன்னு சொல்லிட்ட….. ஏன் நிலானி உன் விருப்பம் இல்லாம நான் உன் கழுத்துல தாலி கட்டிட்டேன்னு என் மேல கோபமா இருக்கியா? அதனால தான் நான் போன் பண்ணும் போதெல்லாம் போனை எடுக்காமல் உங்க அக்கா கிட்ட கொடுத்துப் போன் பேச சொல்றியா?” என்று விக்கி சோகமாகக் கேட்க.
அவன் குரலிலேயே அவன் சோகமாக இருப்பது தெரிந்து கொண்ட நிலானி. அவசரமாக “ஐயோ அப்படியெல்லாம் இல்லைங்க…. எனக்கு நீங்கள் கால் பண்ற அப்போ என்ன பேசுறதுன்னு தெரியல. அதனாலதான் நீங்க போன் பண்றப்போ நான் போன எடுக்கல,” என்று சொன்னாள் நிலானி.
“என்கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியலையா? இல்ல பேசப் பிடிக்கலையா? நிலானி?” என்று கேட்டான் விக்கி.
“ஏங்க இப்படி எல்லாம் பேசுறீங்க…. உங்க கிட்ட பேச எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. எங்கே உங்ககிட்ட நான் பேசினா என் மனசு உடைஞ்சு அழுதுடுவேன்னு பயந்துட்டு தான் இவ்வளவு நாள் பேசாமல் இருந்தேன்,” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே நிலானி வெடித்து அழத் தொடங்கினாள்.
இவ்வளவு நாளும் நிலானி தன் மனதிற்குள் சேர்த்து வைத்திருந்த சோகம்….. அழுகை…. என அனைத்தும் சேர்ந்து விக்கியின் குரலை இப்போது கேட்டதும் அவளால் கண்ணீரை அடக்க முடியவில்லை.. அவள் கண்ணீர் விட்டுக் கதறி அழுவதை இந்த பக்கம் போனில் இருந்து விக்கியால் கேட்க மட்டுமே முடிந்தது. அவளை ஆறுதல் செய்ய முடியாமல் நிலானியை விட்டு வெகு தொலைவில் இருப்பதை நினைத்து விக்கிக்குக் கஷ்டமாக இருந்தது.
தன் உயிரையே மாய்த்துக்கொள்ள நினைத்து மாடியில் இருந்து கீழே விழுந்த நிலானியைக் காப்பாற்ற நினைத்து அவள் கழுத்தில் தாலியும் கட்டிவிட்டு…. தாலி கட்டிய கையோடு அவளிடம் சிறிது நாட்கள் கூட நேரம் செலவழிக்காமல் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று கூட தெரிந்து கொள்ளாமல் தான் இங்கு வந்து விட்டதை நினைத்து இப்போது தான் வருந்தினான் விக்கி.
அவனால் போனில் மட்டுமே இப்போது நிலானியிடம் ஆறுதல் சொல்ல முடியும் என்ற நிலையில் விக்கி இருக்க… நிலானி சிறிதும் இடைவெளி இல்லாமல் அழுது கொண்டே இருந்தாள். விக்கி இந்த பக்கம் சிறிது நேரம் அவள் அழட்டும் என்று அமைதியாக இருந்தவன். பின் அவள் அழுகை சற்று குறையவே, “ஏய் நிலாக்குட்டி… சொன்னா கேளுடி…. அழாத ப்ளீஸ்…. என்னால உன் பக்கத்தில் இருக்க முடியலையேன்னு இப்போ ரொம்ப வருத்தமா இருக்கு. நீ இப்படி அழுதுட்டு இருந்தாள் நான் எப்படி இங்கே நிம்மதியா இருக்க முடியும். ப்ளீஸ்…. நிலா குட்டி… அழாத…. என் நிலா குட்டி இல்ல…. என் செல்லம் இல்ல….,” என்று அவளைப் போனிலேயே தன்னால் முடிந்தது மட்டும் சமாதானம் செய்து கொஞ்சிக் கொண்டிருந்தான் விக்கி.
அவன் இப்படிப் போனிலேயே தன்னைச் சமாதானப்படுத்த நினைத்து இந்த அளவுக்கு இறங்கி வந்து கொஞ்சிக் கொண்டு இருக்க…. அவன் பேசும் விதத்தைப் பார்த்து அழுகை நின்று அதை ரசிக்கத் தொடங்கினாள் நிலானி.
“நிலானி….. நிலா குட்டி… என்ன எதுவுமே பேச மாட்டேங்குற? அழுகை நின்றுச்சா? நிப்பாட்டிட்டியா? நான் இப்போ உனக்கு வீடியோ கால் பண்ணவா? எனக்கு உன்னைப் பார்க்கணும் போல இருக்கு….,” என்று விக்கி அவளிடம் கெஞ்ச… நிலானி அவன் கெஞ்சுவதைத் தாங்க முடியாமல் “ம்ம்ம்….” என்று மட்டும் சொல்லிவிட்டுப் போனை கட் செய்து விட்டால்.
எப்படியோ அவள் தன்னுடன் இன்று பேசியும் விட்டால் இப்போது வீடியோ கால் செய்யச் சம்மதித்து விட்டால் என்று சந்தோஷத்தில் வேக வேகமாக வாட்ஸாப்ப் வீடியோ காலுக்குள் சென்று அவளுக்குக் கால் செய்தான் விக்கி. அவன் வீடியோ கால் செய்ததும் நிலானி தன்னைச் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுப் போனை அட்டென்ட் செய்தால்.
நிலானி சரியாக ஃபோனை அட்டென்ட் செய்ய… அப்போது தான் ஆபீஸ்சில் இருந்து வீட்டிற்கு வந்த மது ஹாலில் நிலானி யாருடனோ போன் பேசுவதைப் பார்த்தவள். ‘யாரிடம் பேசுகிறாள்?’ என்று கேட்க வாய் எடுக்க… நிலானியும் விக்கியும் போனில் பேசிக் கொண்டிருந்ததை இவ்வளவு நேரம் கிச்சனிலிருந்து ரசித்துக் கொண்டிருந்த பத்மா வாசலில் மது வருவதைப் பார்த்ததும் அவள் ஏதோ பேச வாய் எடுப்பதைப் பார்த்துவிட்ட பத்மா. அவசர அவசரமாகச் சத்தம் இல்லாமல் நிலானியைத் தாண்டி வாசலுக்கு வந்த பத்மா… மதுவின் வாயைப் பொத்தி மதுவைப் பார்த்து நிலானி போனில் தன் கணவனுடன் பேசிக் கொண்டிருப்பதை மதுவிடம் மெதுவாக கூறி… அவளைப் பேச வேண்டாம் என்று சொல்லி ஹாலில் இருந்து கிச்சனுக்கு நிலானியை டிஸ்டர்ப் செய்யாமல் மதுவை அழைத்துச் சென்றாள் பத்மா.
இருவரும் சமையல் கட்டுக்குள் வந்து நிலானிக்குத் தெரியாமல் கதவின் ஓரம் நின்று அவள் என்ன பேசுகிறாள் என்று கேட்பதற்காக மறைந்து நின்று இருக்க… அவர்கள் தன் பின்னால் இருப்பது தெரியாமல் நிலானி விக்கியை வீடியோ காலில் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். வீடியோ கால் அட்டென்ட் செய்துவிட்டு நிலானி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…. அவளையே வெட்கம் இல்லாமல் கண் வாங்காமல் ரசித்த விக்கி. “ஏய்….. நிலா குட்டி… ஏன் எதுவுமே பேச மாட்டீங்குற.. ஏதாவது பேசுடி….,” என்று சொன்னான் விக்கி.
“எனக்கு என்ன பேசறதுன்னு தெரியலங்க,” என்று சொன்னால் நிலானி.
“உனக்குப் பேசத் தெரியலையா? அப்போ நான் பேசட்டுமா?” என்று கேட்டான் விக்கி.
அவள் “ம்ம்ம்…. நீங்களே பேசுங்க…” என்று வெட்கப்பட்டு கொண்டே சொல்ல.
“ஐயோ… ஐயோ…. என் நிலா குட்டி முதல் முறையா என்கிட்ட வெக்கப்பட்டுட்டுப் பேசுறாளே…. இப்ப நான் என்ன செய்வேன். எனக்குத் தலையும் ஓடல…. காலும் ஓடலையே…. நிலா குட்டி எனக்கு உன்னை இப்பவே பாக்கணும் போல இருக்குது…. இந்த நேரம் பார்த்து இந்த ஆதி இவ்வளவு தூரம் கொண்டு வந்து வச்சுட்டான். என் பொண்டாட்டிகிட்டே என்னால ஃப்ரீயா ஒரு போன் பேச கூட முடிய மாட்டேங்குது,” என்று சலித்துக் கொண்டான் விக்கி.
‘போனிலேயே தான் வெட்கப்பட்டதற்கு இந்த அளப்பறை செய்கிறானே. அவன் முன் தான் இப்படி வெட்கப்படும் போது என்னவெல்லாம் செய்வானோ!!!!’ என்று நினைத்த நிலானிக்கு முகம் எல்லாம் சிவந்து விட… அவள் முகம் சிவந்து போனதை வீடியோ காலில் பார்த்த விக்கி. அவளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதறியவன். “நிலாக்குட்டி என்ன ஆச்சு உன் முகத்துக்கு? ஏன் இப்படிச் செக்க செவேல்னு சிவந்து இருக்கு?” என்று பதட்டமாகக் கேட்க..
தன் முகத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்ட நிலானி “என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியலையே,” என்று சொன்னவள். தன் வீடியோ கால் திரையைத் தன் முகம் தெரியுமாறு திருப்பி அதில் தன் முகத்தைப் பார்க்க…. அவள் முழுவதும் தாமரைப் பூ போலச் சிவந்து இருக்க…. அதைப் பார்த்ததும் நிலானிக்கு மேலும் வெட்கம் வந்துவிட தன் ஒரு கையால் முகத்தை மறைத்துக் கொண்டவள், “நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்,” என்று சொல்லிப் போனை வைத்து விட்டாள்.
அவள் இப்படி எதுவும் சொல்லாமல் பட்டென்று போனை வைக்கவும் அவளுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று பதறிய விக்கி மறுபடியும் தன் ஃபோனில் அவளுக்கு வீடியோ கால் செய்ய…. நிலானி போனை எடுக்காமல் பக்கத்திலிருந்த டேபிளில் போனை வைத்துவிட்டு வெட்கத்தில் தன் இரண்டு கைகளாலும் முகத்தை மூடிச் சிரித்துக் கொண்டு அமர்ந்து இருந்தால்.
பத்மாவும் மதுவும் நிலானி வெட்கப்படுவதைப் பார்த்துக் கொண்டே பின்னால் இருந்து வந்தவர்கள் டேபிளில் இருந்த அவள் போனை எடுத்து வீடியோ காலை அட்டென்ட் செய்து நிலானியை அந்த வீடியோ காலில் விக்கிக்குக் காட்ட அவள் முகம் மூடிச் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த விக்கிக்கு அவன் முகத்தை மூடி ஏதோ அழுது கொண்டிருக்கிறாள் என்று நினைத்து விட்டு, “ஏய் நிலாக்குட்டி என்ன ஆச்சு உனக்கு? இப்ப ஏன் அழுகிற?” என்று கேட்கவும்.
விக்கியின் குரல் கேட்டதும் முகம் மூடிச் சிரித்துக் கொண்டிருந்த நிலானி கைகளை எடுத்து எதிரே பார்க்க அவள் முன் பத்மா நின்று இருக்க அவள் தோளில் கைப்போட்டு மது நின்று கொண்டு மறு கையால் நிலானியின் போனை அவள் முகத்திற்கு நேராகப் பிடித்துக் கொண்டு நின்று இருந்தாள். அவர்கள் இருவரும் தங்கள் வாயை மூடிக் கொண்டு சத்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்க…. அவர்களைப் பார்த்த நிலானிக்கு மேலும் வெட்கம் வந்துவிட… வீடியோ காலில் விக்கியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே தன் முகத்தை மூடிவிட்டு, “அக்கா போனை கட் பண்ணு ப்ளீஸ்….” என்று நிலானி கெஞ்ச…
“ம்ஹும் மாட்டேன். என் தங்கச்சி வெட்கப்படும்போது எவ்வளவு அழகா… இருக்கா… இதை என் தங்கச்சி வீட்டுக்காரர் பார்க்க வேணாமா…” என்று சொல்லி போனைத் தன் புறம் திருப்பி… “என்ன விக்கி? நான் சொல்றது சரிதானே… உங்க நிலாக்குட்டி வெட்கப்பட்டால் ரொம்ப அழகா இருக்கா இல்லையா?” என்று விக்கியிடம் கேட்க. அவளிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்த விக்கி, “மது நான் பிறகு பேசுகிறேன்,” என்று போனை வேகமாக கட் செய்துவிட்டான்.
அவன் போனை வைத்ததும் ஆளுக்கு ஒரு புறமாக வந்து நிலானியின் அருகில் அமர்ந்து அவள் இடுப்பைப் பிடித்துக் கிள்ளி, “இதனால் தான் உன் வீட்டுக்காரர் கூட நீ இவ்வளவு நாளாப் பேச மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தியா… இது தெரியாம நானும் பத்மாவும் உன்னை நினைத்து ரொம்பக் கவலைப் பட்டுட்டு இருந்தோமே,” என்று சொன்ன மது “இல்லையா பத்மா?” என்று கேட்க.
“அட ஆமா மது மா… நம்ம நிலானி இப்போ ஒன்னும் சின்னப் புள்ள இல்லை… அவ புருஷன் கூட போன்லயே ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டா… இனிமேல் நிலானி தனியா இருந்தால் நாம அவ இருக்கப் பக்கமே போக கூடாது. புருஷனும் பொண்டாட்டியும் போனில் பண்ற ரொமான்ஸை எல்லாம் நாம பார்க்க வேண்டி வரும்,” என்றால் பத்மா. இருவரிடமும் மாட்டிக்கொண்டு நிலானி ஒரு வழி ஆகிவிட்டால்.
EPISODE 96
துர்கா டென்மார்க் சென்று நீங்க நாட்கள் ஆகிவிட்டதால், ஆதியின் அம்மா அப்பாவை ஒரு முறை பார்த்து விட்டு வரலாம் என்று சொல்லி வடிவு கீர்த்தியுடன் ஆதியின் வீட்டிற்குச் சென்றார்.
அவர்களைப் பார்த்ததும், “அடடே!!! வாங்க சம்பந்தி…. எப்படி இருக்கீங்க?” என்று சொல்லி முதலில் வரவேற்றது விசாலாட்சிதான்.
“என்ன அண்ணி புதுசா சம்பந்தின்னு சொல்றீங்க… எப்பவும் போல என்ன பேர் சொல்லியே கூப்பிடுங்க…” என்று சொல்லிக் கொண்டு சிரித்த முகமாக உள்ளே வந்தார் வடிவு.
“ஆமா, நீ அண்ணின்னு உரிமையா நினைச்சு, துர்கா இருந்தாலும் இல்லாவிட்டாலும் அப்பப்போ எங்களை வந்து பார்த்துட்டுப் போயிருந்தா நானும் உரிமையா வா…. வடிவுன்னு கூப்பிட்டு இருப்பேன். ஆனா நீதான் யாரோ மாதிரி இப்பதானே வந்திருக்க,” என்று கோவித்துக் கொண்டார் விசாலாட்சி.
“ஐயோ அண்ணி…. நீங்க நினைக்கிற மாதிரி நான் அப்படி வரக்கூடாதுன்னு எல்லாம் இல்லை…. கொஞ்சம் வேலை இருந்துச்சு அதனால தான் என்னால வந்து பார்க்க முடியல… அதான் இப்ப வந்துட்டேனே இன்னும் ஏன் கோவிச்சுக்கிறீங்க அண்ணி,” என்று சென்று விசாலட்சியின் கையைப் பிடித்துக் கொள்ள, “சரி பரவால்ல இந்தத் தடவை நான் உன்ன விட்றேன். அடுத்த தடவை இதே மாதிரி பண்ணுனேன்னா…. அப்புறம் நான் உன் கூடப் பேசவே மாட்டேன் பாத்துக்கோ,” என்று சொல்லிவிட்டு அழைத்துக்கொண்டு போய் வடிவையும் கீர்த்திகாவையும் ஹாலில் அமர வைக்க, அப்போது சரியாக கனகாவும் செண்பகம்மும் வந்தனர்.
“அடடே!!! வடிவு வா…. எங்கே ரொம்ப நாளா இந்தப் பக்கம் ஆளையே காணோம். எப்படி இருக்க?” என்று கேட்டுக்கொண்டே கனகாவும் வர, செண்பகமும், “வா வடிவு,” என்று சொல்லிவிட்டுக் கீர்த்திகாவைப் பார்த்து, “நல்லா இருக்கியா மா…” என்று கேட்டார். வடிவு கனகாவிடம், “இப்பதான் வரேன் அக்கா,” என்று சொல்லிவிட்டுச் செண்பகத்திடமும் பெயருக்கு இரண்டு வார்த்தை பேசி விட்டு அமர்ந்தார்.
கனகாவிடம் கீர்த்திகா, “ராதா எங்கே? ஆன்ட்டி,” என்று கேட்டாள். “அவ மேலே ரூம்லதான் இருக்கா… நீ போய்ப் பாருமா,” என்று கீர்த்திகாவை மேலே அனுப்பிவிட்டு மற்ற நால்வரும் ஹாலில் இருந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.
கீர்த்திகா நேராக ராதா ரூமிற்கு வர… கதவைத் தட்டிவிட்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல… ராதா மிகத் தீவிரமாக டான்ஸ் பிராக்டிசில் ஈடுபட்டிருந்தாள். அவளை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று மெதுவாகக் கதவைச் சாத்திவிட்டு உள்ளே செல்ல…. ஆடிக்கொண்டிருந்த ராதா அவளைப் பார்த்துவிட்டு ஆடிக்கொண்டே, “வா….,” என்று அழைக்க, “நீ கண்டினியூ பண்ணு நான் வெயிட் பண்றேன்,” என்று ஜாடையில் சொன்ன கீர்த்திகா ராதா ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெளியில் சென்றிருந்த வெங்கடாசலம்மும் அவருடன் துரையும் வீட்டிற்கு வர…. அவர்கள் பின்னாலேயே ஆபீஸ் முடிஞ்சு ஷிவுவும் அப்போதுதான் உள்ளே வந்தாள். வெங்கடாசலம் வந்ததும் அமர்ந்திருந்த வடிவு எழுந்து, “அண்ணா நல்லா இருக்கீங்களா?” என்று அவரிடமும், துரையிடமும் நலம் விசாரிக்க. அவர்களும் வடிவின் நலம் விசாரித்துவிட்டு அவர்களோடு சேர்ந்து அமர்ந்து பேச ஆரம்பித்தனர். ஷிவுவும் வந்தவள் அவள் அம்மாவிடம் அமர்ந்து பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்க.
“பரவால்ல எல்லாரும் இங்கதான் இருக்கீங்க. அதனால நான் இப்பவே இந்தப் பேச்சை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்,” என்று சொன்ன வெங்கடாசலம் சிரித்துக் கொண்டே துறையைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.
“என்னங்க என்னமோ புதிர் போடுற மாதிரி பேசுறீங்க… அப்படி என்ன விஷயம் சொல்லணும்?” என்று ஆர்வமாகக் கேட்டார் விசாலாட்சி.
“புதிர் போடுற விஷயம் எல்லாம் எதுவும் இல்லை விசாலாட்சி,” என்று சொன்னவர், “நம்ம கதிருக்குப் பொண்ணு பாக்குற விஷயமாக நானும் துரையும் இப்போ வரும்போது பேசிட்டு வந்தோம்,” என்று சொன்னார்.
“என்னங்க சொல்றீங்க! திடீர்னு கதிருக்குக் கல்யாணம் பத்தி பேசிட்டு இருக்கீங்க,” என்று சொன்னார் விசாலாட்சி.
“அது ஒன்னும் இல்லை விசாலாட்சி. நானும் துரையும் என்னோட பிரண்டு ஒருத்தனைப் பார்க்கப் போயிருந்தோமா…. அவனோட பொண்ணு பத்தி தான் பேசிட்டு இருந்தான். அவன் பெண்ணிற்கு ஒரு நல்ல வரன் இருந்தால் பார்க்கலாம்னு நெனச்சிட்டு இருந்தேன் என்று சொல்லி நம்ம கதிரை அவங்க பொண்ணுக்காகக் கேட்டான்.”
“அப்படியா!!!! சரிங்க அவர் கேட்டதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க?” என்று கேட்டார் விஷாலாட்சி.
“எங்க வீட்டிலேயே கதிரைக் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு இருக்கு. அதனால நாங்க வெளியே பொண்ணு எடுக்குறதா இல்லை,” என்று சொல்லிட்டு வந்துட்டேன் என்று சொன்னார் வெங்கடாசலம்.
வெங்கடாசலம் ‘எங்க வீட்டிலேயே பொண்ணு இருக்கிறது’ என்று சொன்னதும் விசாலாட்சிக்குப் புரிந்து விட, அருகில் இருந்த ஷிவுவைத் திரும்பிப் பார்த்து, “ஆமாங்க நம்ம வீட்ல மருமகள வெச்சிக்கிட்டு நாம ஏன் வெளியில போய்த் தேடணும்,” என்று சொல்லி ஷிவுவின் தலையை வருட்டிக் கொடுக்க.
உடனே ஷிவு விசாலாட்சியிடம், “எனக்குக் கதிர் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லை,” என்றால் பட்டென்று.
ஷிவு இப்படி முகத்தில் அடித்தார் போல அனைவரும் முன்பும் சொன்னதும் அனைவரும் முகத்திலும் இதுவரை இருந்த சந்தோஷம் அப்படியே வடிந்து போய்விட்டது. ஷிவு அப்படிச் சொன்னதும் துரைக்குக் கோபம் வந்துவிட… “என்ன சொன்ன! கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லையா?” என்று அவளை அதட்ட எழுந்து செல்லப் போக…
துரையின் கையைப் பிடித்து அமர வைத்த வெங்கடாசலம், “அமைதியா இரு துரை. இப்ப எதுக்கு அவசரப்படுற… முதல்ல அவ என்ன சொல்றான்னு கேட்போம். அவ மனசுல இருக்கிறது தெரிஞ்சுகிட்டா தானே நம்ம அடுத்த விஷயத்துக்குப் போக முடியும்,” என்று சொல்லிவிட்டு. ஷிவுவைப் பார்த்து, “ஏன் கதிரைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்ற ஷிவு…. நீ வேற யாரையாவது விரும்புறியா?” என்று கேட்டார் வெங்கடாச்சலம்.
“ஆமாம் மாமா….,” என்றால் பட்டென்று.
வெங்கடாசலம் இப்படி கேட்டதும் அவள் மனதில் முதலில் எழுந்தது என்னவோ ரூபேஷ் நினைவு தான். ஆனால் அவள் திருமணம் செய்து கொள்ள நினைப்பது என்னவோ ஆதியைத் தான். அதனால் ஆதியை நினைத்து விட்டு வெங்கடாசலமிடம் சொன்னாள். “சரி ஷிவு அப்போ அந்தப் பையன் யாருன்னு சொல்லுமா? நான் வேணும்னா அந்தப் பையன் வீட்டில பேசுறேன்,” என்று சொல்ல.
“இல்லை மாமா இப்போதைக்கு வேண்டாம். நானே சமயம் வரும்போது சொல்றேன். அப்போ பேசுங்க. அப்போ உங்ககிட்ட தான் வந்து சொல்லுவேன். நீங்கதான் எனக்குச் சம்மதம் சொல்லணும்,” என்று சொன்னாள் ஷிவு.
“சரிமா,” என்று சிரித்துக் கொண்டே சொன்னவர். துரையிடம் திரும்பி, “இப்ப என்ன செய்யலாம்னு நீயே சொல்லு துரை. முடிவு நான் உன்கிட்டயே விட்டுட்டேன்,” என்று சொன்னார் வெங்கடாசலம்.
“மாமா எனக்கு உங்ககிட்ட சம்பந்தம் வச்சுக்கணும் அவ்வளவுதான். என் பெரிய பொண்ணு தான் உங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னு நினைச்சிருந்தேன். அதில் அவ மண்ணை அள்ளிப் போட்டுட்டா…. ஆனா என் இரண்டாவது பொண்ணு ராதா நான் சொன்னா பேச்சுக்கு மறுப்பேச்சு பேச மாட்டாள். என் இரண்டாவது பொண்ணு ராதாவை உங்க பையன் கதிருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க உங்களுக்குச் சம்மதமா?” இன்று வெங்கடாச்சலத்திடமும் விசாலாட்சி இடமும் கேட்க.
“எங்க ரெண்டு பேருக்கும் பரிபூரணச் சம்மதம் தான்,” என்று விசாலாட்சியை ஒருமுறை பார்த்துவிட்டுச் சொன்னவர். “ஆனால் எதற்கும் ராதாவிடமும் ஒரு முறை கேட்டு விடலாம்,” என்று சொன்னார் வெங்கடாசலம்.
வடிவும் கனகாவும் அவர்கள் பேசுவதெல்லாம் சந்தோசமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். விசாலாட்சியிடம் திரும்பி, “அண்ணி சீக்கிரமா கல்யாணச் சாப்பாடு போடப் போறீங்க,” என்று வடிவு சொல்ல… “ஆமா வடிவு நான் கூட இவ்வளவு சீக்கிரம் கதிருக்குக் கல்யாணம் பண்ணுவோம்னு நினைக்கவே இல்லை,” என்று சொல்லிச் சிரித்தவர். “ராதா என்ன சொல்றான்னு கேட்டுட்டுத் தான் அடுத்த முடிவு பண்ணனும். அவசரப்பட்டு நம்ம எதுவும் பேசிடக் கூடாது,” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே.
“என்ன என்கிட்ட கேட்டு முடிவு பண்ணப் போறீங்க?” என்று கேட்டுக்கொண்டு ராதாவும் கீர்த்திகாவும் படிகளில் இறங்கி வந்தனர். அவளைப் பார்த்ததும், “அடடே!!! வாம்மா ராதா… உன்ன இப்பதான் நாங்க கூப்பிடலாம்னு இருந்தோம். நல்ல வேலை நீயே கீழே வந்துட்ட…” என்று சொல்லி வெங்கடாசலம் அவளைப் பார்த்துச் சொன்னார். வடிவைப் பார்த்து, “ஆண்ட்டி நல்லா இருக்கீங்களா? எப்படி இருக்கீங்க?” என்று அவரிடம் கேட்ட்டுக்கொண்டே அவர் அருகில் சென்றாள் ராதா.
“நான் நல்லா இருக்கேன்டா…” என்று கூறி அவளைத் தன்னருகில் அமர வைத்துக் கொண்டார் வடிவு. வடிவின் அருகில் அமர்ந்து கொண்ட ராதா வெங்கடாசலத்தைப் பார்த்து, “சொல்லுங்க மாமா… என்கிட்ட கேட்டு என்ன முடிவு பண்ணப் போறீங்க?” என்று கேட்டாள் ராதா.
“எல்லாம் உன் கல்யாண விஷயமாத்தான் பேசக் கூப்பிட்டேன்,” என்று வெங்கடாசலம் சொன்னதும், இவ்வளவு நேரம் சந்தோசமாக இருந்த ராதாவிற்கு திடீரென்று ஏனோ மனது சந்தோஷை நினைக்க…. “எனக்குக் கல்யாணமா? இப்போ என்ன மாமா அவசரம்,” என்று ராதா கேட்க.
வெங்கடாசலமிடம் துரை, “மாமா…. நீங்க சொல்லாதீங்க நான் அவகிட்ட சொல்லிக்கிறேன்,” என்று சொன்னவர் துரை ராதாவைப் பார்த்து, “ராதா நான் நம்ம கதிருக்கு உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறதா என் மாமா கிட்ட வாக்கு கொடுத்துட்டேன். இந்த அப்பா வாக்குக்கு நீ மதிப்பு கொடுக்கிறதா இருந்தா இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லு,” என்று அவர் காராறாக ராதாவிடம் பேச.
கதிருக்கு ராதாவைத் திருமணம் செய்து கொடுக்கத் துரை சம்மதம் சொன்னதாகச் சொன்னதும் ராதாவை விட கீர்த்திகாவிற்குத் தான் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. கீர்த்திகாவின் இதயம் திக் திக் என்று அடித்துக் கொண்டு ராதா என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று அவளைப் பார்த்துக் கொண்டிருக்க… இங்கு ராதாவிற்கோ தான் சந்தோஷை மனதில் நினைத்துக் கொண்டிருக்கையில் தன் அப்பா தன்னிடம் கேட்காமல் வெங்கடாசலம் மாமாவிற்கு வாக்கு கொடுத்து விட்டதாகச் சொன்னதும் இப்போது தான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு அமர்ந்திருக்க.
துரையிடம் வெங்கடாசலம், “ஏன்டா அவ கிட்ட இப்படித்தான் சம்மதம் கேட்பியா? நீ இப்படி அதிகாரமா சொன்னா அவளுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எப்படித் தெரியும்,” என்று சொன்ன வெங்கடாச்சலம். ராதாவிடம் திரும்பி, “உனக்கு நீ நல்லா யோசிச்சு சொல்லுமா. உனக்கு இந்தக் கல்யாணத்துல பரிபூரணமா சம்மதம்னு சொன்னா தான் நான் அடுத்த விஷயங்களையே பேசுவேன். உனக்கு விருப்பம் இல்லைன்னு சொன்னா இந்தக் மாமா அப்படியே கல்யாணத்தை நிறுத்திடுவேன்,” என்று சொல்ல.
ராதா வெங்கடாச்சலத்தைப் பார்த்து, “மாமா அக்காவுக்குக் கல்யாணம் பண்ணாம எனக்கு,” என்று கேட்டவள். தன் மனதிற்குள் ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம் என்று ஷிவுவை இதில் இழுக்க…. “அவளைத்தான் முதலில் கேட்டோம். ஆனால் அவளுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை. வேறு ஒருவரை விரும்புறதா சொல்லிப் போய்விட்டால்,” என்று கோபமாகச் சொன்னார் துரை.
அவர் முகத்தைப் பார்த்ததும் ராதாவிற்கு அவரிடம் எதிர்த்துப் பேசத் துணிவில்லாமல் போய்விட்டது. என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்க… ராதா எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்து அங்கு இருந்த அனைவர்க்கும் ராதா என்ன பதில் சொல்லப்போகிறாள் என்று திக்…திக்…. என்று இருந்தது. எல்லோரையும் விட…. மிகவும் பயத்துடனும் பதட்டத்துடனும் இருந்தது கீர்த்திகா தான். “நீ நல்லா யோசிச்சு உன் முடிவை சொல்லு ராதா…” என்று விசாலாட்சி சொல்லவும்.
அப்போது தான் ஆஃபீஸில் இருந்து வீட்டிக்குள் வந்த கதிர். அனைவரும் ஒன்றாக ஹாலில் அமர்ந்து இருந்ததைப் பார்த்தவன் கீர்த்திகாவும் அவள் அம்மாவும் அங்கே இருப்பதைப் பார்த்துவிட்டுச் சிரித்த முகமாக உள்ளே வந்தவன். “என்ன எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து பேசிட்டு இருக்கீங்க…” என்று சொன்னவன் வடிவைப் பார்த்து, “வாங்க அத்தை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு,” என்று கீர்த்திகாவைப் பார்த்துப் பேச… அவளோ கதிரை ஏங்கும் கண்களோடு பார்த்துக்கொண்டு அவனிடம் இங்கு அவனுக்குத் தான் ராதாவுடன் திருமணப் பேச்சு நடந்து கொண்டு இருக்கிறது என்று எதுவும் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டு இருக்க… அதை அறியாதவன் பேசிக்கொண்டே வந்து அனைவருடனும் அமர…
வடிவு, “நல்லா இருக்கேன் கதிர். உங்களுக்குத் தான் எல்லாரும் கல்யாண விஷயமா பேசிட்டு இருக்கோம்,” என்று சொல்லவும். வடிவு ‘கல்யாண விஷயமா பேசிட்டு இருக்கோம்’ என்று பொதுவாகச் சொல்லவும் அவன் கீர்த்திகாவைப் பார்த்துவிட்டு, “என்ன அத்தை திடீர்னு என் கல்யாணத்துக்கு அவசரம்,” என்றான் வடிவிடம்.
“அப்படி இல்ல தம்பி நேரம் ஒன்னு கூடி வர, அப்போ நல்ல விஷயம் சீக்கிரமா நடக்குதுன்னா அது காலாகாலத்தில் செஞ்சா தானே எங்களுக்கும் சந்தோசமா இருக்கும்,” என்று சொன்னவர். “இவ்வளவு நேரம் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதமான்னு எங்க பொண்ணு கிட்ட கேட்டுட்டு இருந்தோம். இப்ப நீங்களே வந்துட்டீங்க. முதல்ல உங்களோட சம்மதத்தைச் சொல்லுங்க. எங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க உங்களுக்குச் சம்மதமா? நீங்க சம்மதம் சொல்லிட்டால் எங்க பொண்ணு அவளோட பதிலைச் சொல்லிடுவா,” என்று தன் அருகில் இருந்த ராதாவைப் பார்த்துச் சொல்ல.
அனைவர்க்கும் ராதாவைத் தான் வடிவு ‘எங்க பொண்ணு’ என்று சொல்லி கதிரிடம் சம்மதம் கேட்கிறார் என்று புரிந்தது. ஆனால் வடிவு ‘எங்கள் பெண்’ என்று சொன்னதும் வடிவு கீர்த்திகாவைத் தான் பொதுவாக ‘எங்கள் பெண்’ என்று அனைவரும் முன்னிலையும் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்ட கதிர், “எனக்குக் கல்யாணத்துக்குச் சம்பந்தம் தான் அத்தை,” என்று கதிர் சொல்லிவிட்டு எழுந்து உள்ளே செல்லப் போக…
“என்ன மாப்ள நீங்களே இப்படி வெக்கப்பட்டால் எப்படி,” என்று அவன் உள்ளே செல்லும்போது வடிவு சொல்ல, “போங்க அத்தை,” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட. திருமணத்திற்குச் சம்மதம் என்று கதிர் சொல்லி விட்டு உள்ளே சென்றதைக் கேட்டதும் கீர்த்திகாவிற்கு இதயமே வெடித்து விடும் போல ஆகிவிட்டது. தன்னை காதலித்து விட்டு, தன்னை முன்னாள் வைத்துக் கொண்டே தன் முன் ராதாவைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் என்று சொல்லிவிட்டுச் சந்தோஷமாக உள்ளே சென்ற கதிரைப் பார்த்த கீர்த்திகாவிற்கு மனம் சுக்கு நூறாக வெடித்துச் சிதறியது.
தன் கண்ணில் எட்டிப் பார்த்த கண்ணீரை இப்போதோ அப்போதோ என்று விழுந்துவிட இருந்த கண்ணீரைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டவள் யாருக்கும் தெரியாமல் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் கீர்த்திகா. கதிர் சம்மதம் சொல்லிவிட்டு உள்ளே சென்றதும் ராதாவைப் பார்த்த வடிவு, “அப்புறம் என்ன ராதா? கதிரே உங்களைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம்னு சொல்லிட்டுப் போயிட்டான். இனி உன்னோட முடிவுல தானே எல்லாமே இருக்கு,” என்று வடிவு ராதாவிடம் கேட்க அவள் அப்பாவைப் ராதா பார்க்க…. அவர் ராதாவையே முறைப்பது போலப் பார்வையாலேயே மிரட்டிச் சம்மதம் சொல்லச் சொல்லி அவளையே பார்க்க. அவருக்குப் பயந்து கொண்டு ராதா, “கதிர் மாமாவுக்குச் சம்மதம்னா எனக்கும் சம்பந்தம் தான்,” என்று சொல்லிவிட்டு எழுந்து தன்னறைக்கு ஓடிவிட்டாள்.
அனைவரும் ராதாவும் திருமணத்திற்குச் சம்மதம் சொல்லி விட்டாள் என்ற சந்தோசத்தில் இருக்க… இங்கே ராதாவிற்கு சந்தோஷைத் திருமணம் செய்ய முடியவில்லை என்று கவலையோடு சென்று தன் மெத்தையில் படுத்து அழுது கொண்டு இருக்க… தன் கண் முன்னாலேயே தன் காதலன் தன் தோழி ராதாவைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் சொல்லிவிட்டுச் சிரித்த முகமாக உள்ளே சென்றவனை நினைத்து மனதிற்குள் அவனை வெறுத்த கீர்த்திகா. அனைவர் முன்னிலையிலும் அழக் கூட முடியாமல் உள்ளுக்குள் வலியோடு வெளியே சிரித்த முகமாக அமர்ந்து இருந்தாள்.
தான் சொன்ன ‘சம்மதம்’ என்ற ஒற்றை சொல்லால் இங்கே இரு பெண்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பது தெரியாமல். தனக்குத் தான் எதிர் பார்க்காமலேயே கீர்த்திகாவுடன் திருமணம் நடக்கப் போகிறது என்ற சந்தோஷத்தில் தன் மொபைலில் உள்ள கீர்த்திகாவின் போட்டோவிற்கு முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தான் கதிர். பெரியவர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் அடுத்து நடக்கப் போகும் விசேஷத்திற்குச் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்க… வெங்கடாசலம் இதை முதலில் தன் மகனுடனும் மூத்த மருமகளிடமும் தான் சொல்ல வேண்டும் என்று ஆதிக்குக் கால் செய்தார்.
டைனிங் டேபிளில் எதிரெதிரே ஆதியும் போதியும் அமர்ந்து இருக்க…. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு எதுவும் பேசாமல் அமர்ந்து இருக்க… அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு இருவரும் என்ன பேசப் போகிறார்களோ… என்ன நடக்கப் போகுறதோ என்று பார்த்துக் கொண்டு விக்கி அமர்ந்து இருக்க… துர்கா இன்று போதியிடம் தனக்குத் திருமணம் ஆன விஷயத்தைப் போதியிடம் சொல்லிவிட வேண்டும் என்று சாப்பிடும் தட்டில் கோலம் போட்டுக் கொண்டு யோசனையில் அமர்ந்து இருக்க…. இங்கு என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாமல் இரு ஜீவன்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அங்கே மிச்சம் இருப்பது வேறு யார்? விவேக்கும், லதாவும் தான்.
இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டுத் தலை நிமிர அப்போது தான் மற்றவர்கள் யாரும் சாப்பிடாமல் இருப்பது தெரிந்தது. லதாவும், விவேக்கும் திரும்பி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு எழுந்தவர்கள் கைகழுவி விட்டு வந்து துர்காவிடம், “துர்கா… நாங்க ஷூட்டிங்க்கு முதல்ல போயி உனக்கு ஷூட்டிற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்து வைக்கிறோம் நீ பொறுமையாக வா,” என்று சொல்லிவிட்டு இருவரும் ‘விட்டால் போதும்’ என்று அங்கிருந்து ஓடிவிட்டனர்.
விக்கியும் எவ்வளவு நேரம் இவர்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டு இருப்பது என்று நினைத்தவன். “துர்கா…. நானும் கிளம்பட்டுமா? நீ பொறுமையா வரியா?” என்று கேட்டான். “நீயும் கொஞ்சம் என் கூட இரு விக்கி எனக்கு இங்கே முக்கியமான வேலை இருக்கு. முடிந்ததும் இருவரும் போகலாம்,” என்று துர்கா சொல்லிவிட்டு ஆதியைப் பார்க்க. துர்கா பேசியதைக் கேட்டு அவள் பக்கம் திரும்பிய ஆதி, “என்ன துர்கா….” என்று பார்வையாலேயே கேட்க… அவள் போதியைக் காட்டி அவனிடம் ஜாடையில் தங்களுக்குத் திருமணம் ஆனதைச் சொல்லப் போவதாக ஆதியிடம் சொன்னாள்.
இவர்கள் இருவரும் ஏதோ ஜாடை பேசிக் கொள்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று போதிக்குப் புரியவில்லை. ஆதி துர்காவிடம் இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்ல வருவதற்குள் “போதி நான் உன் கிட்டே ஒன்னு சொல்லணும்,” என்றாள் துர்கா. இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்த போதி துர்கா பேசியதைக் கேட்டு, “சொல்லு துர்கா…” என்றான்.
“அது… அது…. நான் …,” என்று துர்கா சொல்ல வர.. ஆதி எங்கே அவள் உண்மையைச் சொல்லி விடுவாளோ என்று சட்டென்று, “துர்கா….” என்று ஆதி பதட்டத்தில் கத்தி விட… அவன் இப்படி கத்தியதும் துர்கா பதறி ஆதியைத் திரும்பிப் பார்க்க… அவன் வேண்டாம் என்று தன் தலையை இட வலமாக ஆட்ட… தன் புருவங்களைச் சுருக்கி, “ஏன் ஆதி?” என்று தன் விரல்களை விரித்து அவனிடம் என்ன என்பது போலக் காட்ட… தன் இடது கையால் அவள் தொடையில் வைத்து அழுத்தி ‘இப்போது வேண்டாம்’ என்று தலையை ஆட்ட… துர்காவும் என்ன செய்வது என்று தெரியாமல் தலையை ஆட்டினாள்.
துர்கா தன்னிடம் ஏதோ சொல்ல வருவதும் ஆனால் ஆதி அவள் சொல்ல வரும்போது தன்னிடம் துர்காவைச் சொல்ல விடாமல் தடுக்கிறான் என்று போதிக்கு நன்றாகப் புரிந்தது. போதி துர்காவைப் பார்த்து, “என்ன துர்கா என்னவோ சொல்ல வரே… ஆனா ஆதி உன்கிட்டே ஏதோ சைகையில் சொல்றான். என்ன துர்கா சொல்ல வந்தே சொல்லு,” என்றான் போதி. துர்கா ஆதியைப் பாவமாகப் பார்க்க… ‘ஏதாவது சொல்லிச் சமாளி’ என்பது போல அவளைப் பார்க்க. மறுபடியும் இருவரும் ஜாடை பேசுவதைப் பார்த்த போதிக்கு நன்றாகப் புரிந்தது தன்னிடம் துர்கா ஏதோ சொல்ல வருவதை ஆதி சொல்ல விடாமல் தடுகிறான் என்று.
போதி சற்று அழுத்தமாக, “துர்கா… சொல்லு என்ன சொல்ல வந்தே என்கிட்டே…. ‘நான்’ன்னு சொல்லி நீ ஏதோ சொல்ல வந்தே என்ன?” என்றான்.
“அது வந்து போதி நான் ஒருத்தரை காதலிக்குறேன்,” என்றால் வேகமாக… அவள் தன் மனதில் ஆதியை நினைத்துக் கொண்டு ‘காதலிக்கிறேன்’ என்று சொல்ல…. துர்கா ஆதிக்குப் பயந்து கொண்டு தன்னைக் காதலிப்பதை மறைமுகமாகத் தன்னிடம் சொல்கிறாள் என்று போதி தவறாகப் புரிந்தி கொண்டான். அவள் அப்படிச் சொன்னதும் தன்னைக் காதலிக்கிறாள் என்ற சந்தோசத்தில் அதற்கு மேல் அவளிடம் எதுவும் கேட்காமல் அவன், “சரி துர்கா,” என்று மட்டும் சொல்லிவிட்டு எழுந்து செல்ல…
‘என்ன நான் ஒருவனைக் காதலிக்கிறேன் என்று சொன்னதும் நீ யாரைக் காதலிக்கிற? யார் அவர்?’ என்று ஏதாவது கேட்பான் என்று நினைத்த துர்காவுக்கு அவன் எதுவும் கேட்காமல் ‘சரி’ என்ற பதிலைக் கொடுத்துவிட்டுச் சென்றதைப் பார்த்து துர்காவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் கைகழுவி விட்டு, “ஆதி எனக்குக் கொஞ்சம் வெளியே வேலை இருக்கு. அதை பார்த்துவிட்டு நான் அப்படியே ஆபீஸ் போறேன்,” என்று சொல்லிவிட்டு வெளியில் போக…
இவ்வளவு நேரம் இங்கு என்ன நடக்கப் போகிறதோ என்று ஆர்வமாகப் பார்த்துக் கொண்டு இருந்த விக்கிக்கு இப்போது தான் அப்பாடா என்று சற்று நிம்மதியாக இருந்தது. “ஏன் துர்கா நீ சாதாரணமா போதி கிட்டே ஒருத்தரை லவ் பண்றேன்னு சொல்லிட்டே.. அவன் நீ யாரைக் காதலிக்குறேன்னு கேட்டிருந்தால் நீ என்ன சொல்லி இருப்பே அவன் கிட்டே?” என்று சொல்ல.
அவள் ஆதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஆதியைத் தான் காதலிக்கிறேன்னு சொல்லி இருப்பேன்,” என்றாள். அவள் அப்படிச் சொன்னதும் ஆதி திரும்பி துர்காவைப் பார்த்தவன், “முதலில் என்னைக் காதலிக்கிறேன் என்று என்னிடம் நேருக்கு நேராக என் கண்ணைப் பார்த்துச் சொல்லு.. அதன் பிறகு யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கோ,” என்றான்.
“அதைத் தான் நான் நேற்றே சொன்னேனே,” என்றாள் அவனிடம். “எப்படி என்கிட்டே சொன்னே… ‘ஐ லவ் யூ’ன்னு நீ என்னைப் பார்த்துச் சொன்னியா என்ன… இல்லை தானே. என்னைக் கண்டபடி திட்டிட்டு அப்படியே உனக்கு என்னைப் பிடிக்கும்னு சொன்னே… இதை எல்லாம் என்னால் அக்சப்ட் பண்ண முடியாது,” என்று ஆதி சொன்னான்.
“ஐ லவ் யூ என்று நான் உன்னிடம் சொல்லியே தான் ஆக வேண்டுமா?” என்றாள் அவனைப் பார்த்து. ஆதி “ஆமாம்,” என்றான். “அப்போ… நான் இவ்வளவு வருஷமா உன்கிட்டே சொல்ல எவ்வளவு முயற்சி பண்ணி இருப்பேன். ஆனா அப்போ எல்லாம் என்னை புரிஞ்சுக்காம அந்தச் சங்கவி கிட்டே நீ அவளை லவ் பண்றேன்னு சொல்லி என்கிட்டேயே ஐடியா கேட்டல்ல… அதனால நீ இப்போ உன்கிட்டே என்னைச் சொல்லச் சொன்ன அந்த மூணு வார்த்தையை நான் சொல்லனும்னா… நீ என்னை இம்ப்ரெஸ் பண்ற மாதிரி ஏதாவது செய். அப்போ நீ கேட்டதை நான் சொல்றேன்,” என்று சொல்லிவிட்டு எழுந்து கைகழுவச் சென்று விட்டால்.
இவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த விக்கி வாயில் வைத்து இருந்த உணவைச் சாப்பிடாமல் அப்படியே வாயைத் திறந்து கொண்டு இவர்கள் இருவரையும் அதிர்ச்சியாகப் பார்த்தவன் எழுந்து ஆதியிடம் வந்து, “டேய் ஆதி…. இங்கே என்னடா நடக்குது? நீயும் துர்காவும் தான் இப்படிப் பேசிக்கிறீங்களா? என்னால நம்பவே முடியலையே,” என்று விக்கி அதிர்ச்சியாக ஆதியிடம் கேட்க.
“அதெல்லாம் அப்படித்தான்,” என்று சொல்லிச் சிரித்தவன் துர்காவை எப்படி இம்ப்ரெஸ் செய்வது என்று யோசித்துக் கொண்டே எழுந்து சென்றான். அவர்கள் இருவரும் செல்வதையே அதிர்ச்சியாகப் பார்த்த விக்கிக்கு வாயில் வைத்து இருந்த உணவு தொண்டையில் அடைத்து விக்கிக் கொள்ள… வேகமாகத் தண்ணீரை எடுத்து குடித்தவன். ‘இனிமேல் இவங்க இருக்கப் பக்கமே தலை வெச்சுப் படுக்கக் கூடாது’ என்று முடிவு செய்து கொண்டான்.
EPISODE 97
துர்காவை எப்படி இம்ப்ரெஸ் செய்து அவள் வாயாலே தன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல வைக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தான் ஆதி. துர்கா ஷூட்டிங்கிற்க்குச் சென்று விட… விக்கி ஆதியுடன் இன்று ஆபீஸ் சென்றான். செல்லும் வழியில் விக்கி ஒரு வார்த்தை கூட ஆதியிடம் பேசவே இல்லை. அமைதியாக அவன் போனில் நோண்டிக் கொண்டு வந்தான்.
ஆதிக்கு என்னிக்கும் இல்லாமல் இன்று ஏன் இவன் அமைதியாக இருக்கிறானே என்று யோசித்த ஆதி, “என்னடா? என்ன ஆச்சு? கார்ல ஏறினதிலிருந்து நீ எதுவுமே பேசாமல் ரொம்ப அமைதியா இருக்க?” என்று கேட்டான் விக்கியிடம்.
“அது ஒன்னும் இல்லடா. இப்பதான் இங்க ரெண்டு இளம் காதல் ஜோடிகளை நான் பார்த்துட்டு வந்தேன். அவங்க ரெண்டு பேரும் இத்தனை நாளா இப்படிப் பேசிக்கிட்டது இல்லையா!!!! இன்னைக்கு அந்தக் காதல் ஜோடிகள் ரொம்பப் பேசிக்கிறாங்க. அதைப் பார்த்து தான் எனக்கு ஒரே ஷாக்!!! ஆகிடிச்சு. அதான் பேச வாய் வரவில்லை,” என்று சொன்னான் விக்கி.
அவன் இளம் காதல் ஜோடிகள் என்று சொன்னது தங்களைத் தான் என்று புரிந்து கொண்ட ஆதி சிரித்தவாறு, “டேய் சும்மா கிண்டல் பண்ணாதடா….” என்று சொல்லி பின்னால் இருந்து அவன் முடியைப் பிடித்து இழுக்க.
“டேய் ஆதி! உனக்கு என்னடா ஆச்சு? காலையில் எந்திரிச்சதிலிருந்து நானும் பார்த்துட்டு இருக்கேன். ஒரு மார்க்கமா தான் நீ பேசுற, நடந்துகிற,” என்று சொல்ல….
“நான் என்னடா ஒரு மார்க்கமா நடந்துக்கிறேன்? நான் எப்பவும் போலத் தான் இருக்கேன்,” என்றான் ஆதி.
“நீ சொல்ற மாதிரி எல்லாம் இல்லையே. வழக்கமா நீ இவ்வளவு பேசவே மாட்டே… எப்பவும் நான் எதுவும் உன்கிட்டே கேட்டா. ஆமா.. என்ன… சரி… ஓகே…. அவ்வளவுதானே உன் பதிலா இருக்கும். ஆனா இன்னைக்கு என்னமோ கொஞ்சம் அதிகமா பேசிட்டு இருக்க,” என்று கேட்டான் விக்கி.
“அதெல்லாம் ஒன்னும் இல்லையே. நான் நல்லாத்தானே பேசுறேன். எப்பவும் போலத் தானே பேசுகிறேன்,” என்று சொன்னான் ஆதி.
“சரிடா சாமி நான் நம்பிட்டேன். இதனால் தான் நான் வாயைத் திறக்கல. நான் ஏதாவது சொன்னால் நீ ‘இல்லவே இல்லை’ அப்படின்னு சொல்லுவ,” என்றான். “அது எல்லாம் இருக்கட்டும். துர்காவும் நீயும் சமாதானமாகிட்டீங்க போல. அவ உங்க கிட்ட பேசுறதும் நீ அவகிட்டே பேசுறதும் பார்த்தால் என்னமோ ரொம்ப நாள் நல்லப் பேச்சுப் பழகின மாதிரி ரொம்ப க்ளோசா பேசிக்கிட்டு இருக்கீங்க!!!! இத்தனை நாளா நீ அவகிட்ட சரியாப் பேசி நான் பார்த்தது இல்லையே… எப்ப பாரு சண்டை போட்டு இருப்ப… எப்படி இவ்ளோ சீக்கிரமா ரெண்டு பேரும் ராசி ஆனீங்க?” என்று கேட்டான் விக்கி.
விக்கி சொன்னதைக் கேட்டு நேற்று இரவு துர்கா அவனிடம் பேசியதை நினைத்துப் பார்த்தவன். துர்கா அவனைத் திட்டி, ‘உனக்கு அறிவு இருக்கிறதா? மக்கு, முண்டம், டியூப்லைட்‘ என்று சொல்லிப் பழைய படி பேசுவது கேட்டதிலிருந்து ஆதிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதை எல்லாம் நினைத்தவனுக்குத் தானாகச் சிரிப்பு வர, இதைப் பார்த்த விக்கி, “டேய் ஆதி! என்னடா சிரிக்கிற? ரொம்பப் பயமா இருக்கு. சிரிச்சிடாதடா,” என்று சொல்லி விக்கி ஆதியைக் நக்கல் அடிக்க….
“கொஞ்ச நேரம் பேசாமல் இருடா,” என்று விக்கியை ஆதி விக்கியிடன் கோபமாகப் பேசுவது போல நடிக்க…. இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து சிரித்து பேசிக்கொண்டு வர அப்போது ஆதிக்கு போன் அடித்தது. விக்கியுடன் பேசிக்கொண்டே போனை எடுத்துப் பார்க்க ஆதியின் அப்பா தான் அழைத்து இருந்தார்.
விக்கியிடம் சிறிது பேசிக்கொண்டே ஃபோன் அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டு, “சொல்லுங்கப்பா,” என்றான் ஆதி பேச. தன் மகனின் குரலில் தெரிந்த சந்தோஷத்தைக் கேட்டதும் வெங்கடாசலத்திற்க்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. “என்ன ஆதி!!!! ரொம்பச் சந்தோஷமா இருப்ப போல இருக்கே. இவ்வளவு நாள் இல்லாம உன்னோட வாய்ஸ் இவ்ளோ சந்தோஷமா இருக்கு. உன் பேச்சில் இவ்வளவு சந்தோஷம் தெரியுது,” என்று சொன்னார் வெங்கடாசலம்.
“அது ஒன்னும் இல்லப்பா. உங்க மகன் அவன் பொண்டாட்டி கூட இங்கே ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கான். அதனால தான் ஒரே சந்தோசமா சுத்திட்டு இருக்கான்,” என்று விக்கி சொல்ல… விக்கியின் குரல் கேட்டதும், “விக்கி! நீயும் ஆதி கூடத் தான் இருக்கியா? ரொம்பச் சௌகரியம் போயிருச்சு,” என்று சொன்னவர். “ஆமா, என்ன சொன்ன? என் மருமக கூட ஆதி சந்தோசமா இருக்கானா,” என்று சொல்லிச் சிரிக்க…
“ஆமாப்பா. ரெண்டு பேரும் பேசறது பார்த்தால் எனக்கு அப்படி தான் தோணுது,” என்று விக்கி சொன்னான்.
“ஏண்டா விக்கி? புதுசா கல்யாணமானவங்க அப்படி இப்படித்தான் இருக்கச் செய்வாங்க…. இதை எல்லாமா நீ பார்த்துகிட்டு இருப்ப,” என்றார்.
“அடப்பாவமே. நான் என்னமோ அவங்க பெட்ரூம்குள்ள போய் எட்டிப் பார்த்த மாதிரி இல்ல பேசுறீங்க அப்பா.. இவன் என் முன்னாடி டைனிங் ஹாலிலேயே வைத்து அவ்வளவு ரொமான்ஸ் பண்றான்,” என்றான் விக்கி.
விக்கி சொன்னதைக் கேட்டுச் சிரித்தவர், “ஆதி, நீங்க ரெண்டு பேரும் இப்பப் பிஸியா இருக்கீங்களா? பேசலாமா?” என்று கேட்டார் வெங்கடாசலம்.
“சொல்லுங்கப்பா. நாங்க ஆபீஸ் தான் போயிட்டு இருக்கோம்,” என்றான் ஆதி.
“அது ஒன்னும் இல்லப்பா. நம்ம கதிருக்குக் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். அதைத்தான் உன்கிட்டயும் துர்கா கிட்டயும் சொல்லிட்டு அப்புறம் அடுத்த வேலைகளைப் பார்க்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். அதுக்காக தான் உனக்குக் கால் பண்ணினேன்,” என்று சொன்னார்.
“என்னப்பா சொல்றீங்க? கதிருக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிட்டீங்களா? இந்தக் கல்யாணத்துக்கு கதிர் சம்மதம் சொல்லிட்டானா?” என்று கேட்டான் ஆதி.
“அவன் கிட்டே கேட்டுட்டுத் தான் கல்யாண ஏற்பாடே பண்றோம்,” என்றார் வெங்கடாச்சலம்.
“ரொம்பச் சந்தோசம் அப்பா… பொண்ணு யாரு?” என்று கேட்டான்.
‘கதிர் கீர்த்திகாவைத் தான் திருமணம் செய்து கொள்ள அவர்கள் வீட்டில் சம்மதம் வாங்கி விட்டானா!!! பரவாயில்லையே நம்ம பையன் இவ்ளோ சீக்கிரமா அவன் காதலுக்கு வீட்டில் ஓகே வாங்கிட்டானே,’ என்று நினைத்துக் கொண்டான் விக்கி.
“பொண்ணு வேற யாரும் இல்லப்பா நம்ம ராதா தான்,” என்று வெங்கடாசலம் சொல்லவும், அவ்வளவு நேரம் கீர்த்திகாவைத் தான் திருமணம் செய்யப் போகிறான் என்று நினைத்துக் கொண்டிருந்த விக்கி கதிர் திருமணம் செய்யப் போகும் பெண் கீர்த்திகா இல்லை ராதா என்று தெரிந்ததும் அதிர்ச்சி ஆனான்.
இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆதி வெங்கடாச்சாளத்திடம், “அப்பா, கதிர் கிட்டயும் ராதா கிட்டயும் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதமான நேரடியா கேட்டீங்களா,” என்றான் விக்கி.
“அவர்கள் இருவருக்கும் இந்தக் திருமணத்தில் பரிபூரணச் சம்மதம் என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகுதான் உங்க கிட்ட சொல்லக் கால் பண்ணினேன்,” என்று வெங்கடாசலம் சொன்னார்.
கதிரின் சம்மதத்தோடு தான் இந்தத் திருமணம் நடக்கிறது என்று கேள்விப்பட்ட விக்கிக்குக் கதிரின் மேல் அளவில்லாத கோபம் வந்தது. அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு விக்கி அமைதியாக அமர்ந்திருக்க… ஆதி வெங்கடாசலத்திடம், “அவங்க ரெண்டு பேருக்கும் சம்மதம் என்றால் அப்போ நீங்க அடுத்த வேலைகளைப் பார்த்திருங்க அப்பா. நாங்க சீக்கிரமா இங்க இருக்குற வேலையெல்லாம் முடிச்சிட்டு வந்துறோம். நீங்க டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டு எங்களுக்குச் சொல்லுங்க. நாங்க எவ்வளவு சீக்கிரம் இந்த வேலையை முடிச்சுட்டு வர முடியுமா அவ்வளவு சீக்கிரம் வந்துடறோம்,” என்று சொன்ன ஆதி, “நானே துர்கா கிட்டையும் சொல்லிடறேன்ப்பா,” என்று சொன்னான்.
“சரி ஆதி அப்போ நீயே துர்காவுக்குச் சொல்லிடு,” என்றவர், “சரி நான் போனை வைக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு வெங்கடாசலமும் ஃபோனைக் கட் செய்தார்.. விக்கிக்குக் கதிரின் திருமணச் செய்தி கேட்டதில் இருந்து அவன் மேல் அளவில்லா கோபம் வந்தது. ‘சும்மா இருந்த பெண்ணைக் காதல் செய்கிறேன் என்று துரத்தித் துரத்திக் காதலித்து விட்டு இன்று வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். இவனுக்கு எப்படி மனசாட்சி ஒப்புக் கொண்டது. காதலிக்கும் பெண்ணை விட்டுவிட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள எப்படி கதிர்க்கு மனது வந்தது. அவன் மட்டும் இப்போ என் கையில கிடைச்சா அவனை ஒரு வழி பண்ணிடுவேன்,’ என்று நினைத்துக் கொண்ட விக்கி ஆபீஸ் போனதும் அவனுக்குப் போன் பண்ணனும் என்று நினைத்துக் கொண்டான். ஆதி இருக்கும் போது இதையெல்லாம் பேச முடியாது என்று ஆபீஸ் சென்றதும் விக்கி கதிருக்குக் கால் செய்ய நினைத்தான்.
ஆதியுடன் ஆபீஸ் வந்ததும் ஆதியிடம், “நீ உள்ளே போ ஆதி. நான் ஒரு போன் பேச வேண்டி இருக்கு. ஒரு டூ மினிட்ஸ் வந்து விடுகிறேன்,” என்று சொல்லிவிட்டு விக்கி தன் போனை எடுத்துக் கொண்டு வேகமாகச் செல்ல…. ‘இவன் என்ன ரொம்பச் சீரியஸா போறான். அப்பா கதிருக்குக் கல்யாணம் என்று போன் பண்ணி சொன்னதிலிருந்து இவன் முகமே சரியில்லையே,’ என்று யோசித்துக் கொண்டே ஆதி ஆபிஸிற்குள் சென்றான்.
விக்கி போனே எடுத்துக்கொண்டு ஆஃபீஸை விட்டு வெளியே வந்தவன் கதிருக்குக் கால் செய்ய போன் ரிங் ஆகி கொண்டே இருந்தது. ஆனால் கதிர் எடுக்கவே இல்லை. இரண்டு மூன்று முறை அழைத்துவிட்டு, ‘சரி அவனே தன் அழைப்பைப் பார்த்துவிட்டு அழைக்கட்டும்,’ என்று ஆபீஸ் வந்து விட்டான்.
ஆதியின் வீட்டிலிருந்து வந்ததிலிருந்து கீர்த்திகா யாருடனும் எதுவும் பேசவே இல்லை. அமைதியாகத் தன்னறைக்குச் சென்று விட்டால். இரவாகியும் சாப்பிட கூட வெளியே வராமல் உள்ளுக்குள்ளேயே இருந்தால் கீர்த்திகா…. வடிவும் எவ்வளவோ கீர்த்திகாவைச் சாப்பிட அழைத்தும் அவள் தனக்குப் பசி இல்லை என்று சொல்லி வெளியே வரவே இல்லை. கதிர் தன் முன்னாலேயே ராதாவைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டதை நினைத்த கீர்த்திகாவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
கதிர் கீர்த்திகா கிளம்பிச் சென்றுவிட்டால் என்று தெரிந்ததும் அவளிடம் பேசலாம் என்று கதிர் கால் செய்தான். ஆனால் கீர்த்திகா இவன் அழைப்பைப் பார்த்துவிட்டு அதை அட்டென்ட் செய்யாமல் சைலன்டில் போட்டுவிட்டாள். கதிர் பல முறை கால் செய்தும் அவள் காலை அட்டென்ட் செய்யவில்லை. அவன் மெசேஜிற்கும் ரிப்ளை செய்யாமல் இருந்து விட்டாள். எப்போதும் தன் மெசேஜ் அல்லது கால் வந்தாள் அடுத்த நிமிடம் பதில் அளித்துவிடுவாள். இன்று என்ன ஆனது இவளுக்கு என்று நினைத்தவன் ‘ஒரு வேளை தூங்கி இருப்பாளோ…’ என்று யோசனையில் ‘சரி காலையில் அவளிடம் பேசிக்கொள்ளலாம்’ என்று போனை வைத்துவிட்டுத் தூங்கி விட்டான் கதிர்.
மறுநாள் காலை எழுந்த கதிர் தன் மொபைலை எடுத்து முதலில் கீர்த்திகா தனக்கு அழைத்து இருக்கிறாளா அல்லது மெசேஜ் எதுவும் செய்து இருக்கிறாளா என்று பார்ப்பதற்காக ஓபன் செய்து பார்க்க அவளிடமிருந்து எந்த அழைப்பும் மெசேஜும் வரவில்லை அவனுக்கு. அதற்கு மாறாக கதிரிடம் இருந்து தவற விட அழைப்புகள் வந்திருக்க ‘இவன் எதுக்கு இவ்வளவு தடவை கால் பண்ணி இருக்கான்’ என்று யோசித்துக் கொண்டு ‘ஒருவேளை அப்பா எனக்கும் கீர்த்திகாவுக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆனது அவங்க கிட்ட சொல்லி இருப்பாங்க. அதைக் கேட்டதும் எனக்கு விஷ் பண்றதுக்குக் கால் பண்ணினாலும் பண்ணி இருப்பான்’ என்று நினைத்துக் கொண்டே தன் மொபைலில் கதிருக்கு அழைப்பு விடுத்தான்.
கதிர் அழைத்த மறுநொடி போனை அட்டென்ட் செய்தான் விக்கி. “என்னடா ஒரு ரிங்லயே போனை எடுத்துட்டே!!!! அதிசயமா இருக்கு,” என்று கதிர் சொல்ல.
“அதுவா? நீ என் லவ்வர் பாரு. அதனால தான் நீ என்னக்குக் கூப்பிட்ட ஒரே ரிங்ல நான் போன் எடுத்துட்டேன்,” என்றான் விக்கி கடுப்பாக.
அவன் பேசிய தோரணையே சரி இல்லை என்பதை உணர்ந்த கதிர் விக்கியிடம், “ஏண்டா உன் வாய்ஸ் ஒரு மாதிரியா இருக்கு…. என்ன ஆச்சு?” என்று கேட்டான் கதிர்.
“நீ செஞ்ச காரியத்துக்கு உன்கிட்ட இப்படித்தான் பேச முடியும்,” என்றான் விக்கி.
“என்னடா சொல்ற? கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு. நான் என்ன அப்படி காரியம் செய்தேன் நீ என்கிட்டக் கடுப்பாப் பேசுற அளவுக்கு,” என்று கதிர் சீரியஸாகப் பேச.
“உனக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இருக்காமே!!!! சார் எங்க கிட்ட எல்லாம் சொல்லவே இல்லை,” என்றான் விக்கி.
அவன் தன் கல்யாணம் பற்றிச் சொன்னதும் கதிரின் அப்பாவின் மூலம் தனக்குத் திருமணம் என்று தெரிந்து கொண்டதால் தான் அவனிடம் சொல்லாமல் என் அப்பா சொன்னதனால் விக்கிக்குத் தன் மீது கோபமாக இருக்கலாம் என்று நினைத்தவன், ‘நானே முதலில் விக்கியிடம் சொல்லி இருக்க வேண்டும்’ என்று நினைத்தவன். “ஆமாண்டா. திடீர்னு நானே எதிர்பார்க்கல. நேத்து எல்லாரும் சேர்ந்து எனக்குக் கல்யாணம் பேசினதும் எனக்குக் கொஞ்சம் ஷாக் ஆஹ் இருந்துச்சு…. நான் சொல்லாமலேயே வீட்டில் என் மனதில் இருப்பதைப் புரிஞ்சுக்கிட்டாங்கன்னு எனக்கு ரொம்பச் சந்தோசமா இருந்துச்சு டா விக்கி. அந்தச் சந்தோசத்துலயே நான் உன்கிட்டப் போன் பண்ண முடியாமல் போயிருச்சு,” என்று சொன்னான் கதிர்..
“ஓ சாருக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆனது அவ்ளோ சந்தோசம் வந்துருச்சா…. ச்சி…. நீ எல்லாம் மனுசனா? உன் கூட பிரண்ட்ஷிப் வச்சுக்கிட்டதுக்காக நான் வெக்கப்படுறேன்,” என்றான் விக்கி.
“விக்கிக்கு என்ன ஆச்சு உனக்கு இன்னைக்கு ஏன் இப்படிச் சம்பந்தம் இல்லாமல் ஏதோ மாதிரி பேசுற,” என்றான் கதிர்.
“நீ பண்ணின வேலைக்கு வேற எப்படிடா உன்கிட்ட பேசச் சொல்ற,” என்றான் விக்கி கடுப்பாக.
“டேய் விக்கி நீ என்ன சொல்ல வரேன்னு எனக்குப் புரியவே இல்ல. கொஞ்சம் புரியும் படியா சொல்லு,” என்றான் கதிர்.
“நான் என்ன சொல்ல வரேன்னு உனக்குப் புரியவே இல்லையா…” என்ற விக்கி. “சரி எல்லாரும் உன்கிட்டக் கல்யாணத்துக்குச் சம்மதமான்னு கேக்குறப்போ நீ எப்படி கல்யாணத்திற்குச் ‘சரின்னு’ சம்மதம் சொன்ன,” என்று கேட்டான் விக்கி.
“இதுல என்னடா இருக்கு? நான் காதலிக்கிற பெண்ணையே என் வீட்டில் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு வந்து கேக்குறப்போ நான் மாட்டேன்னா சொல்லப் போறேன்,” என்றான் கதிர்.
கதிர் தன் லவ் பண்ணும் பெண்ணைத்தான் கல்யாணம் செய்யச் சம்மதம் கேட்டார்கள் என்று சொன்னதும் விக்கிக்கு அவன் கீர்த்திகாவைத்தான் காதலிக்கிறான் என்று விக்கிக்கு நன்றாகத் தெரியும். ஆனால் காலையில் வெங்கடாச்சலம் ஆதியிடம் பேசும்போது ராதாவைத் தான் கதிருக்குப் பேசி இருப்பதாகத் தானே சொன்னான் என்று நினைத்தவன், ‘இடையில் ஏதோ குழப்பம் நடந்திருக்கிறது’ என்று உணர்ந்த விக்கி.
“டேய் நீ கொஞ்சம் தெளிவாப் பேசு. உனக்கு இப்பப் பொண்ணு பார்த்து இருக்கிறது கீர்த்திகாவையா? ராதாவையா?” என்றான் விக்கி நேரடியாக.
“டேய் லூசாடா நீ…. ராதாவை எனக்குப் பொண்ணு பார்த்து இருந்தாங்கன்னா நான் எதுக்குடா இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கப் போறேன். கீர்த்திகாவை லவ் பண்ணிட்டு நான் எப்படிடா ராதாவை கல்யாணம் பண்ணிக்குவேன். அதுவும் இல்லாம ராதா என்னதான் என் மாமாவோட பொண்ணா இருந்தாலும் அவளை நான் அந்த மாதிரி நினைச்செல்லாம் பார்க்கல. அவளை என் தங்கச்சி மாதிரி தான்டா நினைச்சிருக்கேன். நான் போய் எப்படிடா அவளை கல்யாணம் பண்ணிக்குவேன். உனக்கு என்ன ஆச்சு இப்படித் தேவையில்லாம கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்க,” என்று கதிர் விக்கிடம் எரிந்து விழ.
“ஏண்டா ராதா உனக்குத் தங்கச்சி மாதிரி னு சொல்ற? அப்புறம் எப்படிடா ராதாவை கல்யாணம் பண்ணிக்க நீ சம்மதம் சொன்ன,” என்று கேட்டான் விக்கி.
“டேய் என்னடா உளர்ர…. நான் ராதாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லவே இல்லை. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது கீர்த்திகாவைத்தான்,” என்று சொல்ல…. “கதிர், அங்கு ஏதோ தப்பு நடந்து இருக்கு. நீ முதல்ல அங்க தெளிவுபடுத்திக்க. காலையில் அப்பா போன் பண்ணி ராதாவிற்கும் உனக்கும்தான் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்குன்னு என்கிட்டயும் ஆதிக்கு கிட்டயும் சொன்னாரு. அதற்கான வேலைகளை ஆரம்பிச்சாச்சு. சீக்கிரமாத் தேதி முடிவு பண்ணிட்டு எங்களுக்குக் கால் பண்றேன்னு சொல்லி இருக்காரு. முதல்ல நீ வீட்ல பேசு…. உனக்கு ராதாவைப் பார்த்து இருக்காங்களா இல்ல கீர்த்திகாவைப் பார்த்து இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கோ,” என்றவன் போனை வைத்தான் விக்கி.
விக்கி போனை வைத்ததும் கதிருக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. ‘ராதாவை நான் திருமணம் செய்து கொள்ளச் செய்து பேசியிருக்கிறார்கள் என்று சொல்கிறானே’ என்று யோசித்துக் கொண்டிருந்த கதிருக்கு இப்போதுதான் ஏதோ புரிந்தது போல தோன்றியது. ‘நேற்றில் இருந்து கீர்த்திகா கதிரின் போனிற்க்கும் பதில் அளிக்காததற்கு காரணம் ஒருவேளை அவளும் நான் ராதாவைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்திருக்கிறேன் என்று என் மீது கோபமாக இருக்கிறாளோ?’ என்ற நினைத்தவன், ‘முதலில் சென்று அவளைச் சமாதானம் செய்ய வேண்டும்’ என்று நினைத்தவன் கிளம்பி கீர்த்திகாவைப் பார்க்கச் சென்றான்.
ஷிவு இன்னும் ஒரு மாதத்தில் வேலை விட்டுச் செல்வதாகத் தான் தற்போதை வேலை செய்து கொண்டிருக்குமிருக்கும் ஆஃபீஸிற்கு முன்கூட்டியே விவரம் தெரிவித்து விட….. அனைவரும் வந்து அவளிடம், “ஏன் திடீரென்று இப்படி வேலையை விட்டுப் போக முடிவு எடுத்து விட்டாய்?” என்று காரணம் கேட்கவும் தன் மாமாவின் கம்பெனியிலேயே வேலை செய்யப் போவதாக ஷிவு அனைவரிடம் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொண்டாள்.
அவளிடம் வந்த அஜய், “அப்போ நீ உங்க மாமா கம்பெனியில் ஜாயின் பண்றதுக்காகவும், இந்தக் கம்பெனியில் இருந்து நீ விலகுவதற்காகவும் இன்னைக்கு நைட்டு நான் ட்ரீட் கொடுக்கிறேன். நீ இங்கிருந்து வேற புதுக் கம்பெனிக்குப் போறதுக்காக உனக்கு சென்ட் ஆஃப் பார்ட்டிக்கு என்னோட செலவுல நான் உனக்கு ட்ரீட் கொடுக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு, “எல்லாரும் வந்துருங்க கைஸ் என்று சொல்லிவிட்டுச் சென்றான்.“
இதையெல்லாம் தூரத்திலிருந்து கண்டும் காணாமல் கவனித்துக் கொண்டிருந்தான் ரூபேஷ். ஷிவு இங்கிருந்து சென்றுவிட்டால் இனி தன்னால் அவளை தினமும் பார்க்க முடியாது என்ற வருத்தம் ஒரு புறம் இருக்க…. அன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு அவள் சொன்னது அனைத்தும் ஞாபகத்திற்கு வர, ‘இனிமேல் அவளுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்கக் கூடாது. தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டது. இனியும் தன்னால் அவளுக்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது,’ என்று அந்தச் சம்பவம் நடந்த பிறகு ஆபீஸ் வந்த நாளிலிருந்து அவளிடம் இருந்து விலகியே இருந்தான் ரூபேஷ்.
அனைவரும் ஷிவுவுடன் பேசிக் கொண்டிருக்க ரூபேஷ் மட்டும் அவளை விட்டுத் தள்ளி இருக்க அவளுக்குப் புரிந்தது ‘தான் அன்று உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னதால்தான் அவன் இப்படி நடந்து கொள்கிறான்’ என்பதும் புரிந்தாலும். அவன் தன்னிடம் எப்போதும் போலச் சகஜமாகக் கூட பேசவில்லை என்று ஷிவுவிற்கு ஒரு புறம் வருத்தமாகத் தான் இருந்தது. பின் தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டவள், ‘அவன் இப்படி இருப்பது தான் தனக்கும் நல்லது அவனுக்கும் நல்லது’ என்று நினைத்துக் கொண்டாள். பின் அவளும் அவனைப் பற்றி எதுவும் சட்டை செய்யாமல் தன் வேலையில் மூழ்கினாள்.
மாலை வேலை முடிந்ததும் அனைவரும் அஜய் ஷிவுவிற்காக ஏற்பாடு செய்திருந்த சென்ட் ஆஃப் பார்டிக்காக கிளம்பிக்கொண்டிருக்க….. ரூபேஷ் மட்டும் கிளம்பித் தன் வீட்டிற்குச் செல்லப் போக அவனைப் பார்த்த ஷிவு, “எங்க போற? பார்ட்டிக்கு வரலையா?” என்று கேட்டாள்.
“நீங்க வேலை விட்டுப் போறீங்கன்னு சொல்லிட்டு உங்க பிரண்டு உங்களுக்காக பார்ட்டி வைக்கிறார் மேடம்…. நான் எதுக்கு அங்க வரணும்,” என்று சொன்னான் ரூபேஷ்.
“அவங்க எல்லாரும் நான் வேலை விட்டுப் போறேன்னு சொல்லி வருத்தமா எனக்குச் சென்ட் ஆஃப் பார்ட்டி வைக்கிறாங்க…. அது மாதிரியே என்ன வழி அனுப்ப இந்தச் சென்ட் ஆஃப் பார்ட்டிக்கு நீ வரலையா,” என்று கேட்டாள் ஷிவு.
“எனக்கு உன்னை என் மனசிலிருந்து அனுப்பவே வழி தெரியாமல் நான் கஷ்டப்பட்டு இருக்கும்போது உன்னைச் சென்ட் ஆஃப் செய்ய நான் வரணுமா? பேசாமல் போய்ட்டு என்னை கடுப்பேத்தாமல்,” என்றான் சற்று கடுமையாக. “நீ வேலையை விட்டுப் போனா என்ன போகாட்டி எனக்கு என்ன…. என்னை கொஞ்சம் டிஸ்டர்ப் செய்யாமல் போறியா ஷிவு. நான் உன்கிட்டக் கோபமா எதுவும் பேசிடப் போறேன்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான் ரூபேஷ்.
அவன் ‘தன் மனதை விட்டு அவளை அனுப்பச் சிரமப்படுகிறான்’ என்று சொன்னதுமே ஷிவுவிற்கு அன்று அவன் தன்னைக் காதலிக்கிறேன் என்று சொன்னதும் அதை அவள் வேண்டாம் என்று புறக்கணித்தும் அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் நடந்தது என்று அனைத்தும் அவள் நினைவில் வந்து போக….. ‘இவன் இப்படிப் பேசிவிட்டுச் சென்றால் என்ன செய்ய முடியும்’ என்று நினைத்தவள் பிறகு தன் தோழிகளுடன் அஜய் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்குச் சென்றாள்.
EPISODE 98
ஷிவு அவள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கம்பெனியிலிருந்து சீக்கிரமாக வேலை விட்டு நிற்பதாகச் சொன்னதனால் அஜய் அவளுக்குச் சென்ட் ஆஃப் பார்ட்டி கொடுக்கப் போவதாகச் சொல்லி ஆபீஸில் இருந்த அனைவருக்கும் பார்ட்டி ஏற்பாடு செய்து இருந்தான். ரூபேஷையும் அந்தப் பார்ட்டிக்கு ஷிவு அழைக்க ஆனால் அவன் வர மறுத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட ஷிவு தன் தோழிகளுடன் அஜய் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்குச் சென்றாள்.
அங்கே அவள் உள்ளே செல்லும் பொழுது அந்தப் பார்ட்டியை மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தான் அஜய். அதைப் பார்த்தவளுக்குத் தன் நண்பனுக்குத் தன் மீது எவ்வளவு பாசம் என்று நெகிழ்ந்து போனவள் நேராக அஜய்யிடம், “ரொம்ப தேங்க்ஸ் அஜய். இந்த ஊர்ல எனக்கு யாரையுமே சரியா தெரியாது. எனக்குக் கிடைத்த முதல் பிரெண்ட் நீ தான். என்கிட்ட நீ எவ்வளவு பாசமா அன்பா நடந்துகிற. இந்த மாதிரி ஒரு பிரெண்ட் கிடைக்க நான் ரொம்பச் சந்தோஷப்படுகிறேன் அஜய்,” என்று சொல்லி அவனிடம் நெகிழ்ச்சியோடு பேசினாள் ஷிவு. “உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் அஜய்,” என்றாள் கண்களில் லேசாகக் கண்ணீரோடு.
“ஏய் ஷிவு! இப்ப எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ணி பேசுற…. நீ ஃபீல் பண்ணி பேசுற அளவுக்கு எல்லாம் ஒண்ணுமே இல்ல. ஜஸ்ட் ஒரு சிம்பிளான பார்ட்டி தான் உனக்கு நான் அரேஞ்ச் பண்ணி இருக்கேன். நீயும் நானும் பிரெண்ட்ஸா இருக்கிறது எப்பவும் அப்படியேதான் தொடரும். நான் நினைச்ச நேரத்துக்கு உன்னை வந்து பார்க்கலாம்… நீயும் எப்ப வேணும்னாலும் என்னை பார்க்க வரலாம்… உனக்கு என்ன உதவி வேணும்னாலும் என்னத் தயங்காம கேளு ஷிவு. நீ எந்த நேரம் வேணுமானாலும் கால் பண்ணி என்னைக் கூப்பிடலாம். ஒரு பிரச்சினையும் இல்லை. நம்ம என்ன மொத்தமாகப் பிரிந்து போகப் போறோம். ஜஸ்ட் ஒரு பார்ட்டிக்காக இன்னைக்கு உன்னோட நீ ஹாப்பி இருக்கணும்னு இந்த மாதிரி அரேன்ஜ் பண்ணி வச்சிருக்கேன். அவ்வளவுதான்,” என்றான்.
“ரொம்ப தேங்க்ஸ் அஜய்,” என்று அவனிடம் சொல்லிவிட்டுத் தன் தோழிகளையும் அழைத்துக் கொண்டு அவனுடன் சேர்ந்து ட்ரிங் பண்ணச் சென்றாள்.
அவள் சென்றதும் ஷிவு சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த அஜய், ‘ரூபேஷோட பர்த்டே பார்ட்டில தான் நீ மிஸ் ஆயிட்டே ஷிவு. ஆனால் இன்னைக்கு நான் அந்த வாய்ப்பைத் தவற விடவே போறதில்லை. எனக்குத் தெரியும் நீ இந்த ஆபீஸ்ல இருந்து போனதுக்கப்புறம் என்கிட்டப் பேசவே மாட்டேன்னு. ஷிவு நீ சரியான சுயநலவாதின்னு எனக்கு நல்லாவே தெரியும். உன் வேலை முடிந்ததும் தேவையில்லை என்று கழட்டி விடுற டைப் தான் நீ….’ என்று நினைத்தவன். ‘உன்னை அடைந்தே தீருவேன் ஷிவு. அதுக்கு இன்னைக்கே நான் பிளான் போட்டுட்டேன்,’ என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டவன் அவன் ஏற்பாடு செய்து இருந்த பேரரை அழைத்து, “நான் சொன்ன ஏற்பாடு எல்லாம் ரெடியா?” என்று கேட்டான்.
“எல்லாம் ரெடியா இருக்கு சார். நீங்க சொன்னதும் நான் வேலையை முடிச்சிடுறேன்,” என்றான் அந்தப் பேரர்.
“சரி நீ போ. நான் சொன்ன பிறகு இந்தப் போதை மருந்தை அவள் எந்த ட்ரிங்க்ஸ் கேட்குறாளோ அதில் கலந்து கொடுத்துவிடு,” என்று சொல்லி ஷிவுவைக் காட்டி, “நான் சொன்னது அவங்களுக்குத் தான் கொடுக்கணும் சரியா. இதுல எதுவும் குளறுபடி நடந்திடக் கூடாது. அப்புறம் அப்படி ஏதாவது தப்பு நடந்துச்சு நீ அவ்வளவு தான்,” என்று மிரட்டி அவன் கையில் ஒரு கத்தை பணத்தைக் கொடுத்து அனுப்பினான் அஜய்.
பேரரை அனுப்பிவிட்டு நல்லவன் போலச் சிரித்துக் கொண்டே ஷிவுவின் அருகில் வந்தவன் அவள் அருகில் அமர்ந்து, “ஷிவு, அடுத்து உன்னோட பிளான் என்ன? உன் மாமா ஆபிஸ்க்கு போனதுக்கு அப்புறம்?” என்று கேட்டான்.
“அடுத்து என்னுடைய பிளான் இப்போதைக்கு என் மாமா ஆஃபீஸ்க்கு போறது மட்டும்தான். அதன் பிறகு கொஞ்ச நாள் கழிச்சு என் மாமாவையே கல்யாணம் பண்ணிக்க போறேன்,” என்று சொன்னாள் ஷிவு.
அவள் சொன்னதைக் கேட்டு, “என்ன சொல்ற ஷிவு!!! உன் மாமாவுக்குத் தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னியே. அப்புறம் எப்படி அவரை நீ கல்யாணம் பண்ணிக்கப் போற?” என்று கேட்டான் அஜய்.
“மாமாவுக்கும் அவரோட ஒய்ஃப்க்கும் இடையில இப்போ உறவு சுமூகமா இல்ல…. அவங்க கூடிய சீக்கிரமாப் பிரியத்தான் போறாங்க. அவங்க பிரிஞ்சதும் நான் என்னோட காதலை என் மாமா கிட்ட சொல்லி அவரை நான் நினைச்ச மாதிரியே சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கப் போறேன்,” என்று சொன்னாள் ஷிவு.
அவள் சொன்னதைக் கேட்டதும் தன் மனதிற்குள்ளேயே கணக்குப் போட்டுக் கொண்டான் அஜய். ஷிவுவின் மாமா மிகவும் பணக்காரர் என்பது அவனுக்கு ஏற்கனவே ஷிவு சொல்லித் தெரிந்திருந்தது. அவள் மாமாவிற்கும் அவன் மனைவிக்கும் பிரச்சினை என்று சொன்ன ஷிவுவைப் பார்த்தவன், ‘கண்டிப்பாக இவளால்தான் அவர்கள் இடையில் ஏதும் பிரச்சனை வந்திருக்கும்,’ என்று நினைத்தான். ‘தன் சொந்த மாமாவின் குடும்பத்துக்குள்ளேயே இவளால் பிரச்சனை வருகிறது என்றால் இவள் எப்படிப்பட்டவளாக இருக்க வேண்டும்,’ என்று தன் மனதில் நினைத்துக் கொண்டவன். ‘இவள் எப்படி இருந்தால் எனக்கென்ன. இன்று எப்படியாவது இவளை அடைந்து விட்டால், அதன் பிறகு ஷிவுவைத் திரும்பியும் பார்க்கப் போவதில்லை,’ என்று நினைத்துக் கொண்டவன் பேரரிடம் கண்ணைக் காட்ட….
அவன் அஜய் சொன்னது போல ஷிவு கேட்ட ட்ரிங்க்ஸ்ஸில் போதை மருந்தைக் கலந்து கொண்டு வந்து ஷிவுவின் முன் வைத்தான். “என்னாச்சு அஜய்? இன்னைக்குக் கவனிப்பு எல்லாம் ரொம்பப் பலமா இருக்கு,” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“பின்ன என் பிரெண்டுக்காகத்தான் இந்தப் பார்ட்டி. அப்ப என் பிரெண்டை நான் நல்லா கவனிக்க வேண்டாமா இல்லையா?” என்று அவளைக் கீழே இருந்து மேலாகப் பார்த்துக் கொண்டே சொன்னான் அஜய். அவன் பார்வையின் அர்த்தம் அறியாத ஷிவு சிரித்துக்கொண்டே அவளுக்காகக் கொடுத்த ட்ரிங்க்ஸ் எடுத்து குடிக்க ஆரம்பித்தாள். மற்ற தோழிகளோடு பேசிக்கொண்டே ட்ரிங்ஸைக் குடித்துக் கொண்டிருந்தாள் ஷிவு.
நேரம் ஆக ஆக பார்ட்டி களை கட்டியது. வந்திருந்தவர்கள் ஷிவுனுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு அனைவரும் மதுவை அருந்திக்கொண்டு டான்ஸ் ஆடத் தொடங்கினர். நேரம் நள்ளிரவைத் தாண்டி விட ஷிவுவிற்குப் போதை அதிகமானது. ஒவ்வொருவராகப் பார்ட்டி முடிந்ததும் சொல்லிக்கொண்டு கிளம்பி விட அஜய் ஷிவுவைக் கொண்டு போய் அவள் வீட்டில் விடுவதாகச் சொன்னதால் அவள் மட்டும் அஜய் உடனே இருந்து விட்டாள்.
அனைவரும் சென்றதும் அஜய் ஷிவுவைப் பார்க்க அவள் முற்றிலும் நினைவு இழந்து போதையில் ஒரு சேரில் தள்ளாடிய படியே அமர்ந்திருந்தாள். அவளிடம் வந்தவன், “ஷிவு, இன்னைக்கு நீ ரொம்ப அதிகமா குடிச்சிருக்க… இப்படியே நீ வீட்டுக்குப் போனால் உன் வீட்டுல இருக்குறவங்க எல்லாம் உன்னைத் தப்பா நினைக்க மாட்டாங்களா??” என்று அவளிடம் பேச்சைக் கொடுத்தான்.
“ஆமா அஜய். ஆனா நான் இன்னைக்கு நிறைய குடிக்கல. கொஞ்சமாத்தான் குடிச்சேன். ஆனா பாரு ரொம்ப மயக்கமா இருக்கிற மாதிரி இருக்கு எனக்கு. இப்படியே நான் வீட்டுக்குப் போனால் என் அம்மா என்னைக் கொன்னே போட்டுடுவாங்க. இப்ப நான் என்ன பண்றது,” என்று உளறிக் கொண்டே ஷிவு அஜயிடம் கேட்க.
“உன்னோட மொபைலில் இருந்து உன் அம்மாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி விடு. பார்ட்டி முடிய லேட் ஆகும். நான் காலையில தான் வருவேன்னு சொல்லிட்டு… அப்பத்தான் அவங்க உன்னை எங்கேயும் தேட மாட்டாங்க,” என்று சொல்ல தன் மொபைலை எடுத்து ஸ்கிரீன் அன்லாக் செய்து அவனிடம் கொடுத்து, “இந்தா அஜய் நீயே மெசேஜ் அனுப்பி விடு. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு,” என்று அருகில் இருந்த டேபிளில் தலை வைத்துப் படுத்துக்கொண்டாள்.
ஷிவுவின் மொபைலில் இருந்து அவள் அம்மாவிற்கு மெசேஜ் அனுப்பி விட்டுத் தன் பாக்கெட்டில் ஷிவுவின் போனை வைத்தவன் ஷிவுவைப் பார்க்க… அவள் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள். அவளைப் பார்த்துவிட்டு, “ஷிவு மை டார்லிங். இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த உடல் முழுவதையும் நான் பார்த்து அணுவானுவாகப் பொறுமையாக ரசித்து….. என் ஆசையை உன்னோட இருந்து தீர்த்துக் கொள்ளப் போகிறேன்,” என்றவன் ஷிவுவைக் கைத்தாங்களாக அழைத்துக்கொண்டு அவனுக்காகப் புக் செய்து இருந்த ரூமிற்கு அழைத்துச் சென்றிருந்தான்.
அவன் ரூமிற்குள் சென்றதும் ஷிவுவை மெத்தையில் படுக்க வைத்துவிட்டுக் கதவைச் சாற்றிவிட்டு உள்ளே வந்தவன். அவன் கண் முன் இறையாகக் காத்திருக்கும் ஷிவுவின் உடலை ஆடைகள் அணிந்து இருந்தும் தன் காமப் பார்வையால் அவள் உடலைத் துகில் உரித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு. அவள் மேல் காமம் அதிகம் ஆக… தன் பாக்கெட்டில் வைத்து இருந்த போதைப் பொருளை எடுத்து அஜயும் தன் உதட்டிக்குள் வைத்து அதன் போதையை கண் மூடி அனுபவித்தவன் போதை அவன் தலைக்கு ஏறியதும் வெறி பிடித்த கயவன் போல… கண்களைத் திறக்க… அவன் கண் முன் ஷிவு அரை குறை ஆடையில் படுத்து இருந்தவள் சற்று அரை மயக்கத்தில் பிரண்டு படுக்க… இவ்வளவு நேரம் அவள் முன் அழகையும் ஆங்காங்கே தெரிந்த அவள் உடலையும் ரசித்துகொண்டு இருந்தவன். அவள் பிரண்டு படுக்கையில் அவள் ஆடைகள் சற்று விலகி அவன் போதையை மேலும் ஏற்றி விட… “ஷிவு…” என்று அழைத்துக்கொண்டே அவள் மீது பாய்ந்தான்.
அவன் பாய்ந்து அவள் மேல் விழுந்த வேகத்தில் ஷிவு சட்டென்று அவனிடம் இருந்து விலகிவிட… மெத்தையில் போய் தொப்பென்று விழுந்தான் அஜய். அவன் போதையில் இருந்ததால் சட்டென்று அவனால் சுதாகரித்து எழுந்து கொள்ள முடியவில்லை…. தனக்குக் கீழே ஷிவு இல்லாததால் அரை மயக்கத்திலேயே தன் கைகளைக் கொண்டு படுக்கையில் அவள் அருகில் இருக்கிறாளா என்று தடவிப் பார்த்தான். படுக்கையிலும் அவள் இல்லாமல் போகவே தன் கண்களை நன்கு அழுந்தத் துடைத்துக் கொண்டு விழித்துப் பார்க்க அவன் எதிரே கோபத்தோடு கைகட்டி நின்று இருந்தால் ஷிவு. அவள் இருந்த தோரணை பார்த்தால் அவள் போதை மருந்து எடுத்துக் கொள்ளாது போலத் தான் அவனுக்குத் தெரிந்தது.
குழப்பத்திலேயே படுக்கையில் இருந்து தட்டு தடுமாறி எழுந்து அமர்ந்தவன் ஷிவுவைப் பார்த்து, “ஷிவு என் பக்கத்துல வா… ஏன் அங்கேயே நிற்கிற,” என்று அழைத்தான்.
“நான் உன் பக்கத்துல வரணுமா…. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா நான் குடிக்கிற ட்ரிங்ஸ்ல் போதை மருந்தைக் கலந்து கொடுத்திருப்ப…. என்ன இப்படி யாரும் இல்லாதபோது தனியா ரூமுக்கு கூட்டிட்டு வந்து என்கிட்டத் தப்பா நடக்கப் பாக்குற…. ச்சி… நீ இவ்வளவு சீப் ஆன ஆளா இருப்பேன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சே பார்க்கல. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்ன உன் பக்கத்துல வரச் சொல்லி கூப்பிடுவே…. உன்னை நான் என் ஃப்ரெண்டுன்னு சொல்லி எவ்வளவு நம்பினேன் தெரியுமாடா …. ஆனா நீ என்னடான்னா இப்படி ஒரு வேலையைப் பார்த்து வச்சிருக்கே ச்சீ…. நீ எல்லாம் ஒரு மனுசனா…” என்று அவன் முகத்தில் காரி துப்பினாள் ஷிவு.
“நான்தான் சீப் ஆனவன்னு தெரியுது இல்ல…. அப்புறம் என்னடி வாடி இங்கே,” என்று பெட்டில் இருந்து எழுந்து அவள் கையைப் பிடித்து இழுக்க…. “ச்சீ… விடுடா நாயே…. எவ்வளவு தைரியம் இருந்தா நீ என் கையப் புடிச்சு இழுப்ப…” என்று சொல்லிக்கொண்டு அவனைத் தன் பலம் கொண்டு பெட்டில் தள்ளிவிட்டு… கதவை நோக்கி ஓட… “எங்கடி ஓடுற… அதான் எல்லாம் தெரிஞ்சிருச்சு. நீ இங்கிருந்து தப்பிக்கவே முடியாது,” என்று அவள் பின்னால் சென்றவன். “இனி உன்னை யாரும் வந்து என்கிட்டே இருந்து காப்பாத்த முடியாது,” என்று அவள் அணிந்திருந்த பனியன் பிடித்து இழுக்க ஷிவு அவனிடம் இருந்து தப்பிப்பதற்கு ஓடப் பார்க்க, அவன் இழுத்ததில் அவள் பனியன் அப்படியே கிழிந்து இரண்டாக அவள் அணிந்திருந்த உள்ளாடை அவள் பளிங்கு முதுகோடு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட….
ஏற்கனவே போதையில் இருந்தவன் ஷிவுவை அடைய வேண்டும் என்று வெறியில் இருக்க…. அவள் முதுகு அவன் கண்ணில் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டிடவும். அதற்கு மேலும் அவளை விட முடியாது கதவைத் திறக்க முயன்று கொண்டு இருந்தவளை எட்டிப் பிடித்து அவளைக் கட்டிப் பிடித்து… அவள் உடலில் மறைத்து இருந்த கிழிந்து தொங்கிய பனியனை முழுவதுமாக வெறியில் கழற்றி வீசினான்.. அஜய் இப்படி அரக்கன் போலத் தன்னிடம் நடந்து கொண்டதை எண்ணி வருத்தம் அடைந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் அவளையும் அறியாமல் வழிந்து ஓடியது… அவனிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளப் போராடியவளால் அவன் பலத்திற்கு முன் அவளால் எதுவும் செய்ய முடியாமல் போகவே… தான் மார்பை இரு கைக் கொண்டு மறைத்தவள்.
அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள், “அஜய் ப்ளீஸ்… என்னை எதுவும் செய்துவிடாதே. நான் உன்னை எவ்வளவு நம்பினேன். உன்னை நம்பி இவ்வளவு தூரம் வந்த என்னிடம் நீ இப்படி நடந்து கொள்வது சரி இல்லை. என்னை விட்டுவிடு அஜய்… நான் வெளியில் போய் யாரிடமும் எதுவும் சொல்ல மாட்டேன் ப்ளீஸ்,” என்று கை எடுத்து கும்பிட்டாள்.
“உன்னை யாருடி இப்படி என்னை நம்பச் சொன்னது… உன்னை முதன் முதலில் ஆஃபீஸில் வைத்துப் பார்த்த போதே உன் மீது எனக்கு அளவு கடந்த ஆசை இருந்தது. ஒரு நல்ல சந்தர்ப்பதிற்காகக் காத்திருந்தேன். ஏற்கனவே அந்த ரூபேஷ் பர்த்டே பார்ட்டியிலேயே உன்னை அடைந்து இருக்க வேண்டியது. அன்று எப்படியோ நீ மிஸ் ஆகிட்டே… ஆனா இன்னைக்கு அதற்கு வாய்ப்பே இல்லை,” என்று தாவி அவளை அணைத்துக் கொண்டு அவள் முதுகில் தன் கைகளை வைத்துத் தடவிக் கொண்டே அவள் உள்ளாடையின் பின் புறத்தை இழுத்துக் கிழித்திருந்தான்.
அவனிடம் இருந்து தப்பிக்கப் போராடிக் கொண்டு இருக்க… அவளால் முடியவில்லை போகவே அவனைத் தன் மீது இருந்து தள்ளி விட்டுத் தான் முன் புறம் ஒட்டி இருந்த உள்ளாடையைத் தன் உடலில் இருந்து விலகி விடாமல் பிடித்துக்கொண்டு அவனிடம் தன்னை விட்டு விடச் சொல்லி கெஞ்சிக் கொண்டு இருந்தாள். அவள் தன்னிடம் கெஞ்சுவதை ரசித்துக் கொண்டே….. முடியாது என்று தலையை ஆட்டியவன் எட்டி அவள் கையைப் பிடித்தவன் அவள் உடலை மூடி இருந்த கையைப் பிடித்து இழுக்கப் போக… அப்போது சரியாக அவர்கள் இருந்த அறையைத் திறந்து கொண்டு அஜய் போதை மருந்தைத் ஷிவுவிற்கு கலந்து கொடுக்கச் சொன்ன பேரர் முகத்தில் காயங்களோடு உள்ளே வந்தான்.
அவனைப் புரியாமல் பார்த்துக் கொண்டே, “ஏய்… நீ… இங்கே.. என்ன பண்றே… எதுக்கு இங்கே வந்தே?” என்றவன். “ஆமா உன் முகத்தில் என்ன காயம்?” என்று சொல்லிக் கேட்டுக் கொண்டு இருக்க.. அந்தக் காயத்திற்கு நான் தான் காரணம் என்று அந்தப் பேரரின் பின்னால் இருந்து ரூபேஷ் வந்தான்.
அவன் உள்ளே வந்ததும் முதலில் ஷிவுவைத் தான் அவன் கண்கள் தேடியது. அவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் கீழே இருந்த தன் கிழிந்த பனியனை எடுத்துத் தன்னை மறைத்துக் கொள்ளப் போராடிக் கொண்டு இருந்தாள். அவள் இருந்த கோலத்தைக் கண்டதும் ரூபேஷிற்கு அஜயின் மேல் ஆத்திரம் வந்தது. ரூபேஷிற்கு முன்னாள் இருந்த பேரரை இழுத்து வெளியே தள்ளி கதவைச் சாற்றியவன். அஜயை ஓங்கி அவன் அடிவயிற்றிற்குக் கீழே உதைக்க…. அவன், “அம்மா…” என்று அலறிக்கொண்டு தான் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டே மயங்கித் தரையில் சரிந்தான்.
சுவற்றை ஒட்டித் தன் முதுகை மறைத்துத் தன் கைகளால் தன்னை மூடிக்கொண்டு அழுது கொண்டு இருந்தவளைப் பார்த்ததும் வேகமாகத் தன் சட்டையைக் கழற்றி அவள் மீது போட்டு அவள் கைகளை எடுத்துவிட்டவன் அப்படியே அவளைத் தன்னோடு சேர்த்து அணைக்க…. ரூபேஷும் தன்னிடம் தவறாக நடந்து கொள்ளப் பார்க்கிறான் என்று தவறாகப் புரிந்து கொண்ட ஷிவு அவனிடம் இருந்து தன்னைக் விலக்கிக் கொள்ளப் போராடிக்கொண்டே…. “விடுடா ராஸ்கல் என்னை. என்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லி நீயும் அவனைப் போல என்னிடம் தவறாக நடந்து கொள்ள நினைக்கிறாயே… ச்சி… எல்லாம் ஆண்களும் ஒரே மாதிரி தான் இருக்கிறீர்கள். சரியான சந்தர்ப்பம் வரும் வரை அனைவரும் நல்லவர்கள் போலத் தான் நடிக்கிறீர்கள்,” என்று அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் போராட…
அதுவரை ஷிவுவைத் தன் கைக்குள் வைத்து இருந்தவன் அவளுக்குத் தான் அணிவித்த தான் சட்டையின் பட்டனைப் போட்டுவிட்டவன். அவளைத் தன் மேல் இருந்து தள்ளி விட்டவன். “எல்லாம் ஆண்களைப் போலவும் என்னை நினைத்ததற்கு நன்றி. மற்றவர்களைப் போல… நானும் உன்னை அப்படி நினைத்து இருந்தாள் இன்று உனக்கு யாரோ ஒரு தெரியாத நபரிடம் இருந்து அன்று நீ என்னுடன் இருப்பதற்கு முன் உன்னுடைய ஜூஸ்ல் போதை மருந்தைக் கலந்து கொடுத்த விடியோவை அனுப்பி இருக்க மாட்டான். அதே போல உன்னைக் காப்பாற்ற இவ்வளவு தூரம் வந்தும் இருந்திருக்க மாட்டான்,” என்று சொன்னவன் அவளைத் திரும்பியும் பாராமல் வெளியே சென்று விட்டான்.
இன்று கல்லூரி ஆண்டுவிழா…. போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அனைவரும் போட்டிக்குத் தயார் ஆகிக் கொண்டு இருக்க… ராதாவை எப்படியும் இந்தப் போட்டியில் ஜெயித்து விட வேண்டும் என்று மாலா இன்று ராதா நடனம் ஆடுவதை எப்படியாவது குழருபடி செய்து அவளை இதில் தோற்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாள். ராதாவைத் தோற்கடிக்க மாலா இங்கு ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்க… ஆனால் இங்கே ராதாவோ எதிலும் நாட்டம் இல்லாமல் ஜடம் போல் இருக்க…. அவளுக்கு ஆடுவதற்கு மேக்கப் செய்ய மனமே இல்லாமல் கீர்த்திகா அவளைத் தயார் செய்து கொண்டு இருந்தாள்.
இவர்கள் இருவரும் இப்படி இருக்க… ராதா இன்று ஆண்டுவிழா போட்டியில் கலந்துகொள்கிறாள் என்பதால் விக்கியிடம் கெஞ்சிக் கூத்தாடி போனில் சம்மதம் வாங்கிவிட்டு வந்திருந்தாள் நிலானி. வீல் சேரைத் தள்ளிக் கொண்டு நிலானியுடன் பத்மாவும் வந்திருந்தாள். இருவரும் ராதா இருக்கும் அறைக்கு வர… அங்கே சோகமாக அமர்ந்து இருந்த ராதாவையும், கீர்த்திகாவையும் பார்த்த நிலானி, “ஏய்… என்ன ரெண்டு பேரும் இப்படிச் சோகமா உட்கார்ந்து இருக்கீங்க,” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள்.
அவளைப் பார்த்ததும் இருவரும் ஓடிச்சென்று நிலானியைக் கட்டிக்கொள்ள… இருவரையும் சேரில் இருந்த படியே நிலானி கட்டிக் கொண்டவள், “ஏய் என்னடி ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்,” என்று கேட்டாள். தன் மனதில் சந்தோஷை நினைத்துக் கொண்டு கதிரைத் திருமணம் செய்து கொள்ள… வீட்டில் சம்மதம் சொல்லிவிட்டேன் என்று சோகத்தில் ராதாவும். தான் காதலித்தவன் தன் கண்முன்னே வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் சொல்லிவிட்டான் என்று சோகமாக கீர்த்தியும் இருந்தார்கள். ஆனால் இருவரும் நிலானி கேட்டதற்கு எதுவுமே பதில் சொல்லாமல், “அதெல்லாம் ஒன்னும் இல்லடி நாங்க நல்லாத்தான் இருக்கும்,” என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு சொல்லிச் சமாளித்தனர்.
“ஒன்னும் இல்லாமல் தான் உங்க ரெண்டு பேரும் முகமும் இப்படி இருக்கா? ஆமா நீ காம்படிஷனுக்குப் பிரிப்பேர்ட்டா இருக்கியா? என்னா கொஞ்ச நேரத்துல ப்ரோக்ராம் ஆரம்பிக்கப் போகுது… நீ வேற சோகமா இருக்கியே…. நீ சவால் விட்ட மாதிரி ஜெயிச்சுடுவியா ராதா,” என்று கேட்டாள் நிலானி.
“இனி நான் ஜெயிச்சு என்னடி பண்ணப் போறேன்,” என்று விரக்தியாகப் பேசினாள் ராதா.
“ஏய் என்னடி இப்படிப் பேசுறே… இன்னும் கொஞ்ச நேரத்தில் ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆகப் போகுது. இப்போ வந்து இப்படிச் சொல்லிடு இருக்கே,” என்று நிலானி கடிந்து கொண்டவள். “ஏய் ராதா உளுக்குள்ள என்ன சோகம், கஷ்டம் இருந்தாலும் அது எல்லாம் கொஞ்ச நாள் தான் இருக்கும். நீ அதையே நினைச்சிட்டு இருந்தா என்ன ஆகப் போகுது.. உனக்கு வாய்ப்பு ஒரு முறை தான் வரும். அதைச் சரியாப் பயன்படுத்தி நீ நினைக்குறதை முதலில் அடைய முயற்சி செய். நீ எதுக்காக இந்தப் போட்டியில் கலந்துக்கிட்டியோ அதோட ரிசல்ட் என்னனு தெரியாம நீ இப்படிப் பாதியில் விருப்பம் இல்லாம இருக்குறது சரி இல்லை. என்ன எடுத்துக்கோ நான் என் அக்கா வீட்டுக்காரருக்குப் பயந்து மாடியில் இருந்து அவசரப்பட்டு குதிச்சு எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணிட்டேன். எனக்கு எதுவும் ஆகி இருந்தா இன்னிக்கு என் அக்காவோட நிலைமை எனக்கும்னு நினைச்சுப் பார்த்தாலே எனக்கு உள்ளுக்குள்ள எல்லாம் பதறுதுடி….,” என்றவள். “நீ எதுக்காக இந்தப் போட்டியில் கலந்துக்க நினைச்சியோ அதோட முடிவு என்னனு முதலில் தெரிஞ்சுக்கோ… அதன் பிறகு மற்ற விஷயங்களைப் பார்த்துக்கலாம்,” என்று ராதாவை உற்சாகப் படுத்தப் பேசினாள் நிலானி.
நிலானி பேசியதைக் கேட்டு கீர்த்திகாவிற்கும் ஒரு விதப் புரிதல் தோன்ற.. “ஏய் ராதா…. வா வந்து சீக்கிரம் ரெடி ஆகு…. மற்றதை எல்லாம் பிறகு பார்த்துக்கலாம். நீ தான் இதில் ஜெயிக்கணும்,” என்று ராதாவி உற்சாகப் படுத்தினால்.
EPISODE 99
ராதாவை உற்சாகம் ஊட்டும் விதமாகப் பேசி அவள் போட்டியில் கலந்து கொள்ள நிலானி பேசிய பேச்சில் தன் மனதில் இருந்த சோகத்தை எல்லாம் சிறிது நேரம் மூட்டைகட்டி விட்டு… போட்டிக்குத் தயாராக ஆரம்பித்தாள் ராதா. அவளுக்குக் கீர்த்திகாவும், பத்மாவும் உதவி செய்ய… நிலானி அமர்ந்து அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.
சந்தோஷ் நேற்று ராதா அவனுடன் பேசிவிட்டுச் சென்றதிலிருந்து ஒரே குழப்பத்தில் இருந்தான். அவள் பேசிய வார்த்தைகளை ஒவ்வொன்றாக நினைவுக்குக் கொண்டு வந்தவனுக்கு இப்போதுதான் ராதா சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தையின் அர்த்தம் புரிந்தது. தன்னிடம் முன்பு போலச் சகஜமாகப் பேச வேண்டும் என்று அவள் சொல்வதற்கு அர்த்தம் இப்போதுதான் புரிந்து கொண்டான். ‘முன்பு போல ராதாவிடம் சகஜமாகப் பேச வேண்டும் என்றால் என்ன அர்த்தம்? தான் ராதாவிடம் உரிமை எடுத்துப் பேசியது போலவே இப்போதும் பேசச் சொல்கிறாள் என்றா? முன்பு அவளிடம் நான் உரிமை எடுத்துப் பேசியது போலவே இப்போதும் பேசச் சொல்லியிருக்கிறாள். ராதாவிடம் நான் முகம் கொடுத்துப் பேசாமல் செல்வது அவளுக்குப் பிடிக்கவில்லை என்று தானே சொன்னாள்?’ என்று யோசித்தவன், ‘அப்போ அவ என்னோட காதலை ஏற்றுக் கொண்டாளா? அதைத்தான் மறைமுகமா என்கிட்ட முன்பு போலப் பழகுங்க அப்படின்னு சொல்லிட்டுப் போனாளா?‘ என்று இப்போதுதான் சரியாக யோசித்து இருந்தான் சந்தோஷ்.
ஆனால் இப்போது புரிந்து கொண்டு என்ன பிரயோஜனம். சந்தோஷ் ராதாவிடம் தன் காதலைச் சொல்லும் பொழுது அவள் அவனைப் புரிந்து கொள்ளவில்லை. ராதா சந்தோஷிடம் தன் காதலைச் சொன்ன பிறகு சந்தோஷும் இப்போது அவள் காதலை அதைப் புரிந்து கொண்டிருந்த வேளையில். விதி அவர்களைச் சேரவிடாமல் ராதாவிற்குக் கதிருடன் திருமணத்தை முடிவு செய்து விட்டிருந்தது.
இது தெரியாத சந்தோஷ் ராதாவைப் பார்த்து அவளிடம் பேச வேண்டும். அவளிடம் தன் காதலை நேருக்கு நேராகச் சொல்ல வேண்டும் என்று அவளைப் பார்க்கப் ப்ரோக்ராம் நடக்கும் இடத்திற்குச் சென்றான். சரியாக சந்தோஷ் ப்ரோக்ராம் நடக்கும் இடத்திற்குக் வரவும் ராதா மேடை ஏறவும் சரியாக இருந்தது. அவளிடம் பேச ஸ்டேஜிற்கு அருகில் சந்தோஷ் போக…. அதற்குள் ராதா ஸ்டேஜ்க்கு நடுவில் சென்று நின்றுகொள்ளவும் மாலாவும் அங்கு வந்துவிட்டாள்.
ராதா பரதநாட்டியமும் மாலா வெஸ்டர்ன் டான்சும் தேர்வு செய்து இருந்தனர் போட்டிக்காக. முதலில் ராதா ஆடி முடித்த பிறகு மாலா ஆட வேண்டும். இருவரும் மேடைக்கு வந்ததும் ஒருவருக்கு ஒருவர் கைக் குலுக்கி விட்டு மேடையில் இருப்பவர்களைப் பார்த்து வணக்கம் சொல்லிவிட்டுப் போட்டிக்குத் தயார் ஆனார்கள். மாலா மேடையில் இருந்து இறங்கிக்கொள்ள ராதா நடனம் ஆடத் தயாராக இருந்தால். அவள் தேர்ந்தெடுத்திருந்த பாட்டு ஜீன்ஸ் படத்தில் இருந்து “கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா….” என்ற பாடல். ராதா எதை நினைத்து இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்து இருந்தாலோ தெரியவில்லை. ஆனால் இப்போது இருக்கும் அவளது சூழ்நிலைக்கு ஏற்ப இந்தப் பாடல் சரியாகப் பொருந்திப் போய் விட்டது.
ஸ்டேஜிற்கு முன்னால் நின்றிருந்த சந்தோஷ் ராதா தன்னை ஒருமுறையாவது பார்க்க மாட்டாளா என்று அவள் பார்வைக்காக ஏங்கிக் கொண்டு நின்றிருந்தான் சந்தோஷ். பாட்டு ஆரம்பிப்பதற்கு முன்பு இரண்டு, மூன்று நபர்கள் வாளியில் மணலை எடுத்து வந்து மேடையில் கொட்டினர். அங்கிருந்த அனைவரும் புரியாமல் மேடையைப் பார்த்துக் கொண்டிருக்க போட்டியை நடத்துபவர் மைக்கில், “இப்போது ராதா இந்த மணலின் மேல் தன் மனதில் இருக்கும் உருவத்தைத் தன் கால் கட்டை விரலால் வரைந்து பரதமாடப் போகிறார்,” என்று சொன்னார்.
அவர் அப்படிச் சொன்னதும் அனைவரும் ஆச்சரியத்தில் கைதட்ட ஆரம்பித்தனர். சந்தோஷிற்கு அவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் பரதம் ஆடுவது ஒரு பெரிய கலை. அந்தக் கலையை ஆடிக்கொண்டே ஒரு உருவத்தை அதுவும் மணலில் வரைவது என்பது மரணத்தில் மிகவும் கை தேர்ந்தவர்களால் மட்டுமே முடியும். அதுவுமில்லாமல் மணலில் கால் கட்டை விரலில் வரைந்து ஆடுகிறாள் என்றால் அவளுக்குக் காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று அவன் பயந்தான்.
சந்தோஷிற்கு ராதா தன்னை ஒருமுறையேனும் தான் இருக்கும் திசையை பார்க்க மாட்டாளா… என்று இப்போது மிகவும் கஷ்டமாக இருந்தது. அவள் அவன் இருக்கும் திசையைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. ராதாவை மட்டும் போக்கஸ் செய்து ஒரு ஒற்றை விளக்கு மட்டும் இருந்து கொண்டு மற்ற விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டது. அவ்வளவு பெரிய மேடையில் அந்த ஒற்றை விளக்கு வெளிச்சத்தில் மணலில் கால் கட்டை விரலில் தன் மனதில் உருவத்தை நடனாடிக் கொண்டே வரையப் போகிறாள் ராதா.
அரங்கமே அமைதியாக இருக்க…. பாட்டு ஒலிக்கப்பட்டது. சரியாகப் பாட்டு ஒலிபரப்பாகும் நேரத்தில் ராதா மேடையில் எதிரில் அமர்ந்து இருந்தவர்களைச் சுற்றி ஒரு பார்வை ராதா பார்க்க…. சரியாக அவள் திரும்பவும் சந்தோஷும் பார்வைக்காகக் காத்துக் கொண்டிருந்தவன் ராதா அவனைப் பார்த்ததும் சிரித்த முகத்தோடு அவளைப் பார்த்து நின்று கொண்டிருந்தான். ராதாவிற்கும் முகத்தில் சந்தோஷம் ஒட்டிக்கொண்டது. சந்தோஷும் ராதாவைப் பார்த்ததும் அதே மனநிலையில் தான் இருந்தான். அவன் இப்படிச் சந்தோஷமாகத் தன்னைச் சிரித்த முகத்தோடு தன்னைப் பார்ப்பதை உணர்ந்த ராதாவிற்கு…. அவனிடம் நேற்றுப் பேசியதை உணர்ந்து இன்று தன்னிடம் காதலோடு பேச வந்திருக்கிறான் என்று புரிந்து கொண்ட ராதா அவனைப் பார்த்துச் சந்தோசமாகச் சிரித்தவள் சட்டெனக் கதிருடன் தனக்குத் திருமணம் பேசப்பட்டது உறுதியாகி இருப்பது நினைவில் வர அப்படியே அவள் முகம் சுருங்கி விட்டது.
தன்னைப் பார்த்ததும் ராதாவின் முகம் மலர்ந்ததும்…. அடுத்த நொடியே சட்டென்று அவள் முகம் சுருங்கி விட்டதையும் கவனித்தான் சந்தோஷ். ஏன் அவள் முகம் வாடிவிட்டது என்பது புரிந்துகொள்ள முடியாமல் நின்று இருந்தான் சந்தோஷ்.
பாட்டு ஒலிபரப்பாக ராதா நடனமாடத் தயாராக நின்று இருந்தால்.
ப பனி பனிபம பனிபம கமப
சகசனி பனிபம கமகச கமப
ப பனி பனிபம பனிபம கமப
சகசனி பனிபம கமகச கமப
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
இந்த வரிகள் பாடத் தொடங்கியதும் ராதா தன் காலின் கீழிருந்த மணலைத் தன் இரு பாதங்களால் தட்டி விட்டு அதை முதலில் வட்ட வடிவமாகப் பரப்பினாள். பரப்பிக் கொண்டே ஆடியவள் அடுத்து வந்த பாடல் வரிகளைச் சந்தோஷைப் பார்த்துப் பாடத் தொடங்கினாள்.
கண்ணோடு காண்பதெல்லாம்
தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால்
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை
சந்தோஷைப் பார்த்துக் கொண்டே அந்த வரிகளைப் பாடியவள் அவனைப் பார்த்துக் கொண்டு அடுத்த வந்த பாடல் வரிகளுக்கு சுழன்று சுழன்று நடனம் ஆடிக்கொண்டே தன் கால் கட்டை விரல்களால் மணலில் ஏதோ வரைந்து கொண்டு நடனமாடினாள். இதுவரை தான் ஆடிக்கொண்டிருந்த பரதநாட்டியத்தின் அபிநயத்திற்கு ஏற்பத் தன் முக பாவங்களைக் காட்டிக்கொண்டு ஆடிக் கொண்டிருந்த ராதாவின் முகம் திடீரென்று வலியில் இருப்பது போலத் தெரிய…
அதை கவனித்த சந்தோஷும் ஏன் ராதாவின் முகம் திடீரென்று இப்படி மாறுகிறது என்று யோசித்துக் கொண்டிருக்க…. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதும் தன் உதட்டை அவள் கடித்துக்கொண்டு ஏதோ வலியைப் பொறுத்துக் கொண்டிருப்பவள் போலவும் இருக்க அவனுக்குச் சந்தேகம் வந்தது. இதை எல்லாம் ஸ்டேஜின் ஓரத்தில் ராதாவை உற்சாகப்படுத்துவதற்காக நின்று பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திகாவும்… நிலானியும்… கூட அவள் முகபாவத்தையும் கவனிக்கத்தான் செய்தனர்.
ராதாவின் முகத்தில் இருந்த மாற்றத்தைப் பார்த்துக் கொண்டே கீழே பார்க்க அவள் கால் விரல்கள் அனைத்தும் ரத்தமாக இருந்தது. கீர்த்திகாவை அவசரமாக அழைத்த நிலானி அருகில் இருந்த கீர்த்திகாவை அழைத்து, “நீ கீர்த்தி ஒரு நிமிஷம் அங்க பாரு. ராதாவுடக் கால் முழுசும் இரத்தமா இருக்கு,” என்று பதறினாள்.
ராதாவின் காலில் இருந்த ரத்தத்தைப் பார்த்து விட்ட கீர்த்திகா மேடையில் பரதநாட்டியம் ஆடிக்கொண்டு இருக்க ராதாவிடம், “ஆடியது போதும் இங்கு வந்து விடு,” என்று சைகையில் சொல்லிக் கொண்டிருக்க அவர்களைக் கவனித்த ராதாவோ ம்ஹும் என்று கண்களை மூடித் திறந்து தலையை இட வலமாக ஆட்டினாள். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சந்தோஷிற்கு ராதாவிற்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் தான் தெரிந்தது. ஆனால் அவள் கால்களில் ரத்தம் வருவது அவனுக்குத் தெரியவில்லை.
ராதா யார் சொல்லியும் கேட்கப் போவதில்லை என்று புரிந்து கொண்டவன். மேடைக்குக் கீழே இருந்தவன் அப்படியே மேடை மீது ஏறிக் குதித்தவன் அப்போது தான் கவனித்தான் அவள் பாதம் முழுவதும் செக்கச் செவேல் என்று ரத்தமாக இருந்தது. அதைப் பார்த்ததும் பதறியவன் ராதாவை நோக்கி ஓடியவன் அவள் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவள் வலியில் துடிப்பதை கவனித்துக் கொண்டே வந்தவன் அவள் காலுக்குக் கீழே பார்த்தவன் அப்போது தான் அதைக் கவனித்தான். ராதா ஆடிக்கொண்டு இருந்த மணல் முழுவதும் கண்ணாடி போல மின்னிக் கொண்டிருக்க… கீழே பார்த்தவன் அவளை நோக்கி ஓடிக்கொண்டு இருந்தவன் அப்படியே நின்றுவிட்டான்.
துர்கா ஷூட்டிங்கில் பிசியாக இருக்க… ஆதி இன்னும் இரண்டு நாட்களில் திரும்பவும் சுவிசர்லந்து செல்ல வேண்டி இருப்பதால் இன்று போதிக்குத் தெரியாமல் அவளை எப்படியாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தான். ஆதி ஆபீஸ் வேலையெல்லாம் சீக்கிரமாக முடித்துவிட்டுத் துர்காவைப் பார்க்கக் கிளம்பும் வேளையில் சரியாக விக்கியும், போதியும் உள்ளே வந்தனர். அவர்களைப் பார்த்தது “புஷ்….” என்று ஆகிவிட்டது ஆதிக்கு.
“என்னடா நாங்க உள்ளே வரும்போது உன் முகம் தௌஸண்ட் வாட் பல்ப் மாதிரி பிரகாசமா இருந்துச்சு… எங்க ரெண்டு பேரையும் பார்த்ததும் அப்படியே உன் பல்பு ஃபியூஸ் போய்டுச்சு….,” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் விக்கி.
“அதனால் என் பியூஸைப் பிடுங்கிட்டியே,” என்று சொன்ன ஆதி, “இப்போ எதுக்கு ரெண்டு பேரும் நான் கிளம்புற நேரத்தில் வந்து தொல்லை பன்னிட்டு இருக்கீங்க,” என்றான் ஆதி.
“என்னது நான் உன்னைத் தொல்லை பண்றோமா!!!” என்று ஒன்று போலவே விக்கியும் போதியும் கேட்டுக் கொண்டே ஆதியின் டேபிளில் தங்கள் கைகளை ஊன்றி ஆதியைப் பார்க்க… தன் மாஸ்க்கை எடுத்துப் போட்டுக்கொண்டு சேரில் இருந்து எழுந்தவன் அவர்களைப் பார்த்து, “ஆமா தொல்லை தான் பண்றீங்க…. எதுவா இருந்தாலும் நாளைக்குப் பேசிக்கலாம். எனக்கு இப்போ ஒரு இம்போர்ட்டண்ட் ஆன மீட்டிங் இருக்கு. நேரம் ஆகிடுச்சு நான் கிளம்புறேன்,” என்று சொல்லிவிட்டு இவர்கள் இருவரின் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் அவன் கேபினை விட்டு வெளியே சென்றான் ஆதி.
ஆதி தங்களிடம் எதற்கு அவனைப் பார்க்க வந்திருக்கிறோம் என்று கூடக் கேட்காமல் கிளம்பிவிட்டானே அப்படி என்ன வேலை இருக்கப் போகிறது என்று இருவரும் ஒருவர் முகத்தில் ஒருவர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டனர். “சரி அவனுக்கு நம்ம கூட வரதுக்குக் கொடுத்து வைக்கல போல. நம்ம போய் பார்ட்டியை என்ஜாய் பண்ணுவோம் வா விக்கி…” என்று சொல்லி போதி விக்கியை அழைத்துக் கொண்டு இன்று ஒரு பார்ட்டிக்குச் செல்வதாகக் காலையிலேயே முடிவு செய்திருக்க அங்கே செல்லக் கிளம்பினர்.
விக்கி, போதியிடம் இருந்து தப்பித்த ஆதி தன் டிரைவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் தானே காரை எடுத்துக்கொண்டு துர்காவைப் பார்ப்பதற்காக அவள் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு ஆவலாகச் சென்றான். ஆதி காரைப் பார்க் செய்துவிட்டுத் துர்காவைப் பார்ப்பதற்காக ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்த இடத்திற்கு உள்ளே சென்றான்.
அவனைப் பார்த்ததுமே அங்கிருந்தவர்கள் எழுந்து மரியாதை செலுத்த…. லதாவும் விவேக்கும் ஆதியைப் பார்த்துவிட்டு அவனிடம் வந்தவர்கள். “என்ன சார் நீங்க இன்னைக்கு இவ்வளவு தூரம் இங்கே வந்திருக்கீங்க!!!!” என்று கேட்க.
“ஷூட்டிங் எல்லாம் ஒழுங்கா நடக்குதான்னு பார்த்துட்டுப் போகத்தான் வந்தேன்,” என்று ஆதி அவர்களிடம் கராராகப் பேசுவது போல பேசிக்கொண்டே சுற்றிலும் முற்றிலுமாகத் துர்காவைக் காணாமல் தேடிக் கொண்டிருந்தான். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் ஆதியின் கண்கள் ஷூட்டிங் நடந்த இடத்தில் யாரையோ தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்த லதா. “சார் என்ன சார் பார்த்துட்டு இருக்கீங்க? யாரையாவது யாரையும் தேடிட்டு இருக்கீங்களா?” என்று கேட்டாள் லதா.
“நான் யாரை வந்து இங்கே தேடப் போகிறேன். அதெல்லாம் ஒன்றும் இல்லை ஷூட்டிங் நடந்த இடத்தில் எல்லா வசதியும் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்தேன்,” என்று சொன்னான் ஆதி.
“அதில் எல்லாம் எந்தக் குறையுமே இல்ல சார். நம்ம கம்பெனியில் எந்த விஷயம் செய்தாலும் அதில் எந்தத் தவறுமே நடக்காது,” என்று விவேக் ஆதியின் கம்பெனி பற்றிப் பெருமை பேசிக்கொண்டு இருந்தான். அதை எல்லாம் காதிலே வாங்கிக் கொள்ளாத ஆதி அவர்களைக் கடந்து துர்கா எங்கே இருக்கிறாள் என்று தேடிக் கொண்டு சென்று கொண்டிருந்தான்.
அவன் பார்வையில் தெரிந்த பதட்டம் லதாவிற்கு அப்போதுதான் புரிந்தது. அவர் ஷூட்டிங்கை பார்ப்பதற்காக இங்கே வரவில்லை. துர்காவைப் பார்ப்பதற்காகத் தான் என்று புரிந்து கொண்டவள் வேகமாக ஆதியின் முன்னால் சென்று, “சார் நீங்க அந்தப் பக்கம் போனீங்கன்னா ஷூட்டிங் அரேஞ்மெண்ட்ஸ் பண்ணிட்டு இருகாங்க…. ஷூட்டிங் ஒரு அரை மணி நேரத்தில் ஸ்டார்ட் ஆகிடும் சார். அதுவரை நீங்கள் துர்கா இருக்க அறையில் வெயிட் பண்றிங்களா சார்… நாங்க ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ற அப்போ வந்து உங்களைக் கூப்பிடுகிறோம்,” என்று சொன்னதும் அவன் முகம் துர்கா இருக்கும் அறை என்று சொன்னதும் பிரகாசமாகிவிட “ஓகே” என்று அவளிடம் எதையும் காட்டிக் கொள்ளாதவன் போலச் சொன்னான்.
ஆதி சென்றதும் விவேக் லதாவிடம் வந்தவன், “ஏய் லூசு…. ஷூட்டிங் இன்னும் 10 மினிட்ஸ்ல ஸ்டார்ட் ஆயிடுமே, நீ எதுக்கு அவர்கிட்ட ஆஃப் அன் ஹவர்னு பொய் சொன்ன.. ஷூட்டிங்ல லேட் ஆயிடுச்சுன்னா ஆதி சார் அப்புறம் நம்மள தானே திட்டுவாரு,” என்று விவேக் சொல்ல.
“அட மக்கு! ஷூட்டிங் ஹாஃப் அன் ஹவர் என்ன ஹாஃப் அ டே லேட் ஆனாலும் ஆதி சார் எதுவும் சொல்லப் போறது இல்ல,” என்றால் லதா.
“என்ன சொல்ற? ஆதி சார் எதுவும் சொல்ல மாட்டாரா? ஏன்?” என்று விவேக் கேட்டான்.
“முன்ன பின்ன யாரையாவது லவ் பண்ணி இருந்தா தானே இந்த மரமண்டைக்கு ஏதாவது புரியும். நீதான் இன்னமும் சிங்கிளாவே சுத்திக்கிட்டு இருக்கியே,” என்று சொன்ன லதா. “ஆதி சார் இங்க வந்தது ஷூட்டிங்கில் எல்லாம் சரியா இருக்குதான்னு பாக்குறதுக்காக இல்ல. துர்காவைப் பாக்குறதுக்காகத்தான் இந்த ஷூட்டிங்கைச் சாக்கா வச்சுக்கிட்டு இங்க வந்து இருக்காரு. இது கூட உனக்குப் புரியலையா மக்கு பண்டாரமே…” என்று லதா விவேக்கைத் திட்டினாள்.
“நான் என்ன லவ் பண்ண மாட்டேன்னா சொன்னேன். எனக்குத் தான் ஒரு பொண்ணுமே செட்டாக மாட்டேங்குது. உனக்குத் தான் நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே… அதுல யாராவது ஒருத்தரை எனக்கு இண்ட்ரடியூஸ் பண்ணி வைக்கலாம் இல்ல,” என்று விவேக் கேட்க.
“ஓஹோ…. உனக்கு நான் இங்கே பார்க்கிற வேலை எல்லாம் பத்தாதுன்னு என்ன அந்த வேலையும் சேர்த்துப் பார்க்கச் சொல்றியா… அதுக்கெல்லாம் வேற ஆளப் பாரு போடா,” என்று சொல்லிவிட்டு விவேக்கிடம் வம்பு பண்ணிக்கொண்டே சென்றாள் லதா.
லதா சொன்ன அறையை நோக்கி ஆவலோடு சென்றவன் துர்கா இருக்கும் அறைக்குச் சென்றதும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே பார்க்க… அங்கே துர்கா அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்று தன் ஆடையின் பின்புறத்தில் உள்ள ஜிப்பைப் போட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும். “ஏய் லதா… வந்துட்டியா… உன்னை எவ்வளவு தடவை கூப்பிடுறது. இங்க பாரு இந்த ஜிப்பை என்னால போடவே முடியல… கொஞ்சம் நீ வந்து போட்டு விடேன்,” என்று பின்னால் யார் நிக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் பேசினாள் துர்கா.
சத்தம் இல்லாமல் துர்காவின் அருகில் வந்த ஆதி அவள் பின்னால் நிற்க… கண்ணாடி வழியாக ஆதி தன் பின்னால் வந்து நிற்பதைப் பார்த்துவிட்ட துர்கா தன் முதுகை மறைப்பதற்காகத் திரும்பிக் கொள்ள…. ஆதி அவள் அருகில் நெருங்கி வந்தவன், “ஏன் துர்கா திரும்பிட்ட… உன் முதுகை நான் பார்க்கக் கூடாதா…. லதா வந்து உனக்கு ஹெல்ப் பண்ற மாதிரி நான் உனக்கு ஹெல்ப் பண்ணக் கூடாதா…” என்றான் குறும்பாக அவளைப் பார்த்து.
“இல்ல இல்ல ஆதி நீ திடீர்னு வந்ததும் பதட்டத்துல,” என்று அவள் ஏதோ சொல்ல வர… “ஓ பதட்டத்தில் தான் என்னைப் பார்த்ததும் திரும்பிக்கிட்ட. என்கிட்ட உன் முதுகைக் காட்டக்கூடாதுன்னு திரும்பல அப்படித்தானே,” என்றான் ஆதி.
‘இவன் என்ன நான் என்ன சொன்னாலும் திருப்பி என்னையே மடக்குகிறான்,’ என்று நினைத்துக் கொண்ட துர்கா ஒன்றும் பேச முடியாமல் விழித்துக் கொண்டு நிற்க. “சரி திரும்பு. நானே உனக்கு அந்த ஜிப்பை போட்டு விடுறேன்,” என்று ஆதி அவள் அருகில் நெருங்கி வர……
“இல்ல வேணாம் ஆதி. லதா வருவா… நான் அவளைப் போட்டு விடச் சொல்லிக்கிறேன்,” என்ற அப்படியே துர்கா பின்னால் நகர்ந்து கொண்டே சென்ற துர்கா கண்ணாடியில் மோதி நகர முடியாமல் நிற்க்க….. அவளை இரு புறமும் கை கொடுத்து அணை கட்டியது போல நகர விடாமல் நிறுத்திய ஆதி. “ஏன் துர்கா….. நான் உன் முதுகை பார்க்கக் கூடாதா?” என்று சொல்ல அவள் அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தடுமாறிப் பதில் பேசாமல் நின்றாள்.
ஆதி கண்ணாடியில் தெரிந்த துர்காவின் முதுகைப் பார்த்துவிட்டு, “சரி நீ தான் எனக்கு உன் முதுகைக் காட்ட மாட்டேன்னு சொல்லிட்ட… பரவால்ல அந்தக் கண்ணாடியாவது உன் முதுகை எனக்கு நல்லா காட்டட்டுமே. இன்னும் கொஞ்சம் முன்னாடி தள்ளிவா…..” என்றான் ஆதி.
அவன் அப்படிச் சொன்னதும் சட்டென்று திரும்பி ஆதியைக் கண்ணாடியில் பார்த்தவள், “ஏன் ஆதி இப்படி பண்ற…” என்று வெட்கத்தில் நெளிந்து கொண்டே கேட்டாள். “இப்படி வந்து திடீர்னு என் பின்னாடி நின்னு நான் என்ன பண்ணுவேன். ப்ளீஸ்…. ஆதி கொஞ்சம் வெளியே நில்லேன். நான் என் ட்ரேஸை சரியாப் போட்டுக்கிறேன்,” என்று துர்கா நெளிந்து கொண்டே சொல்ல….
“ஏய் துர்கா…. என்ன நீ கட்டின புருஷனையே ரூம்மை விட்டு வெளியே போகச் சொல்ற… உன் முதுகைப் பார்ப்பதற்கு கூட எனக்கு உரிமை இல்லையா?” என்று அவன் கோபமாகப் பேசுவது போலத் துர்காவிடம் கேட்க.
ஆதி கோபப்படுவதைப் பார்த்த துர்கா கண்ணடி வழியாகவே அவனைப் பார்த்து, “ஆதி கோச்சிக்கிட்டியா?” என்று கெஞ்சலாகக் கேட்டாள். ஆதி நான் கோபமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு தன்னிடம் கெஞ்சலாகக் கேட்கும் துர்காவை ரசித்தவனுக்குச் சிரிப்புதான் வந்தது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் வேண்டுமென்றே அவன் முகத்தைக் கோபமாக இருப்பது போல வைத்துக்கொண்டு, “ஆமாம் நான் கோவிச்சுக்கிட்டேன். நீ தான் என்ன இந்த ரூமை விட்டு வெளியே போகச் சொல்லிட்டியே…. அதனால தான் எனக்குக் கோபம். சரி நீயே உன் டிரஸ் போட்டுக்க. நான் உனக்கு ஹெல்ப் பண்ணல்லாம் என்று வந்தேன் பார். என்னையே சொல்லணும்,” என்றவன். “நான் போறேன்,” என்று கோபமாகத் துர்காவிடம் சொல்லிவிட்டு அவளை விட்டுத் திரும்பி நடப்பது போல ஆதி செல்ல…..
அவன் நிஜமாகவே கோவித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே போகப் போகிறான் என்று நினைத்த துர்கா… வேகமாக அவன் கையைப் பிடித்து நிறுத்தியவள், “ப்ளீஸ் ஆதி போகாத. நான் எதுவும் தெரியாமல் சொல்லிட்டேன்,” என்று துர்கா அவனிடம் சொல்ல. தன் கையைப் பிடித்துப் போக வேண்டாம் என்று தடுத்து நிறுத்திவிடுவாள் என்று ஆதி எதிர்பார்த்தது போலவே துர்கா அவன் கையைப் பிடித்து நிறுத்த…. அவள் அப்படிச் செய்ததும் ஆதிக்குச் சந்தோசமாக இருந்தது. அவன் முகத்தில் தானாகச் சிரிப்பு வர…. திரும்பி அவளைப் பார்க்கும் போது முகத்தை உர்…. என்று வைத்துக் கொண்டு நின்றான்.
“ஆதி கோச்சுக்காதே ப்ளீஸ்…” என்றவள், “நீ… நீயே…. போட்டு விடு,” என்று சொல்லி வெட்கப்பட்டுக் கொண்டே அவன் புறம் தன் முதுகைக் காட்டிக்கொண்டு நின்றாள்.
‘அப்படி வா…. வழிக்கு,’ என்று நினைத்தவன் அவள் தோளில் கைவைத்து அப்படியே அவள் முதுகு நோக்கித் தன் கைகளைக் கொண்டு வந்தவன். தன் வலது கை ஆட்காட்டி விரலை அவள் முதுகுத் தண்டில் வைத்து மேல் இருந்து அப்படியே மெது மெதுவாக… தன் விரலைத் துர்காவின் முதுகில் இன்ச் பை இன்ச்சாக வருடிக் கொண்டே கீழே வர…. அவன் செய்த வேலையில் துர்கா துடி துடித்துப் போய் விட்டாள். அவள் முக பாவங்களைக் கண்ணாடியில் பார்த்து ரசித்தவன் இதற்கு மேலும் அவளை இம்சை செய்ய விரும்பாமல் அவள் ஜிப்பை போட வர… திடீர் என்று அவள் இருந்த அறைக் கதவு திறக்க…. யார் என்று திரும்பி பார்த்த ஆதி அப்படியே ஷாக் ஆனவன் துர்காவின் ஜிப்பை வெடுக்கென்று போட்டுவிட…. துர்கா “ஆ….” என்று அலறினாள்.
EPISODE 100
துர்காவின் ட்ரேஸ்ஸின் ஜிப்பை போட்டுக் கொண்டே கதவைத் திறந்து யார் வருகிறார்கள் என்று திரும்பிப் பார்த்த ஆதி. அங்கு கதவைத் திறந்து கொண்டு விக்கி நின்றிருப்பதைப் பார்த்தவன் அதிர்ச்சியாகி துர்காவின் ஜிப்பை வேகமாகப் போட்டுவிட, அது அவள் முதுகில் இருந்த தோலோடு சேர்த்து மாட்டிக் கொண்டது.
துர்கா தன் தோலில் ஜிப் மாட்டியதும் வலியில் துர்கா ஆவெனக் கத்த…. கதவருகில் நின்றிருந்த விக்கி கதவைச் சாற்றிவிட்டு வேகமாக உள்ளே வந்தவன். “ஆதி நீ இங்க என்னடா செய்றா!!! ஏதோ மீட்டிங் இருக்கு போகணும்னு அவசரமா கிளம்பி வந்தாயே அந்த மீட்டிங் துர்காவைப் பார்க்கத்தானா,” என்று நக்கலாகக் கேட்டான் விக்கி.
துர்கா வலி தாங்காமல் உடலை நெளித்துக் கொண்டு கை பின்னால் மாட்டி இருந்த இடத்தைத் தொட முடியாமல் போராட… ஆதி விக்கி சொல்வதைக் கேட்கும் நிலையில் இப்போது இல்லை. அவன் கவனம் முழுவதும் துர்கா வலியில் துடித்துக் கொண்டிருப்பதில் மட்டுமே இருந்ததால். விக்கியிடம், “அதெல்லாம் நான் அப்புறம் சொல்றேன். முதல்ல வெளியே போய் யாரும் உள்ளே வராமப் பார்த்துக்கோ….. எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு,” என்று ஆதி சொல்ல.
“டேய் ஆதி.. இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல. நான் இப்பதானே உள்ள வந்தேன். நீ உன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணு யாரு வேண்டாம்னா…. ஆனா அதை வீட்டில் போய் வச்சுக்க வேண்டியது தானே…. இப்படி நாலு பேர் வந்து போற இடத்துல ரொமான்ஸ் பண்றது மட்டும் இல்லாம என்னைப் போய் வெளியே கதவைச் சாத்திட்டு உள்ளே யாரும் வராம காவல் காக்கச் சொல்றியே அது எல்லாம் உனக்கே நல்லா இருக்கா,” என்று சூழ்நிலை புரியாமல் விக்கி வழக்கம் போல் உளறிக் கொண்டிருக்க….
“டேய் நான் என்ன சொல்றேன்னு மொதல்லப் புரிஞ்சுக்கடா…. நீ வேற கடுப்பேத்திட்டு முதல்ல வெளியே போய்க் கதவைச் சாத்து. துர்காவுக்கு டிரஸ் அவளோட தோலில் மாட்டிக்கிச்சு,” என்று ஆதி சொல்ல. தான் உள்ளே வரும்போது துர்கா ஆ… என்று கத்தியது விக்கிக்கு நினைவில் வர … “ஓ.. சரி.. சரி.. டா… நான் போய் வெளியே நிற்கிறேன். நீ என்னன்னு பாரு,” என்று வேகமாகச் சென்றவன் கதவைச் சாற்றி விட்டு வெளியே நின்றான்.
விக்கி சென்றதும் ஆதி துர்காவிடம், “சாரி துர்கா. நான் விக்கியைப் பார்த்த பதட்டத்தில் தெரியாமல் ஜிப்பை தோலோடு சேர்த்து மாட்டி விட்டுட்டேன்,” என்று ஆதி பதட்டமாகப் பேச. அவன் பதட்டத்தைப் புரிந்து கொண்ட துர்கா, “ஆதி அதெல்லாம் ஒன்னும் இல்ல. இது ஒரு சின்ன விஷயம் தான். இதுக்காக நீ ஏன் இப்படிப் பதட்டப்படுற,” என்று அவனைச் சமாதானம் செய்ய முயல….
“சரி துர்கா….. ஒரே நிமிஷம் திரும்பி நில்லு. நான் உன்னோட முதுகுல என்ன ஆச்சுன்னு பார்க்கிறேன்,” என்று ஆதி சொல்ல…. துர்கா கூச்சத்துடனும் வலியுடனும் அவனைப் பார்த்துக் கொண்டு திரும்பாமல் நின்றாள். “ப்ளீஸ்….” என்று ஆதி புருவம் சுருக்கி துர்காவை பாவமாக் கெஞ்ச…. வேறு வழி இல்லாமல் துர்கா அமைதியாகத் திரும்பி நின்று தன் முதுகை வெட்கத்தோடு ஆதியிடம் காட்டினாள்.
அவள் திரும்பி நின்றதும் துர்காவின் முதுகை மறைத்து இருந்த…. அவள் கூந்தலை எடுத்து முன்னே போட்டவன் குனிந்து அவள் தோலில் மாட்டி இருந்த ஜிப்பை பார்க்க…. லேசாக அவள் தோலில் ஜிப் தொடுத்துக் கொண்டு இருந்தது. அதை மெதுவாகத் தன் கைகள் கொண்டு ஜிப்பை கீழே இறக்க… அவள் தோலில் இருந்து ஜிப் பிரிந்து கீழே போய்விட…. அது பிரிந்த நேரத்தில் துர்காவிற்கு வலியை உண்டாக்க…. அவள் தன் கீழ் உதட்டை கடித்து “ஷ்….” என்று வலியைப் பொறுத்துக் கொண்டாள்.
அவள் வலியில் முனங்கியதை கவனித்து ஆதி, “துர்கா ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டான். துர்கா “ஆமாம்…” என்று தலையை மெதுவாக மேலும் கீழும் ஆட்டினாள். அவள் வலி பொறுக்க முடியாமல் கஷ்டப்படுவதைப் பார்த்த ஆதிக்குத் தன்மேலேயே கோபம் வந்தது. தான் மட்டும் சற்று கவனமாக இருந்திருந்தால் துர்காவிற்கு இப்படி காயம் ஏற்பட்டிருக்குமா… என்று நினைத்தவன் அவள் காயம் இருந்த இடத்தைப் பார்க்க அந்தக் காயம் ஒரு ஆள்காட்டி விரல் நீளம் அளவிற்குத் துர்காவின் முதுகில் காயமாகி இருந்தது.
அதைப் பார்த்ததும் ஆதிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்த அறையில் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எங்கே இருக்கிறது என்று தேடி எடுத்துக்கொண்டு வந்தவன். அதிலிருந்த ஆயின்மெண்ட் எடுத்து துர்கா முதுகில் அதன் விரலால் மெல்ல அவள் காயத்திற்கு மருந்து போட்டான். ஆதியின் கை துர்காவின் முதுகில் படும்போது எல்லாம் அவள் முதுகு சில்லென்றிருக்க…. கூச்சத்தில் நெளிந்து கொண்டே…. நின்றிருந்தால் துர்கா. அவன் கை பட்டு சில்லென்றாக, ஆனால் காயத்தில் மருந்து பட்டதும் அது துர்காவிற்கு எரிச்சலைத் தந்துவிட….. துர்காவிற்குக் காயத்தில் மருந்து பட்டதும் எரிச்சல் தாங்க முடியாமல் அவள் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.
அதைப் பார்த்த ஆதி மிகவும் பதறிப் போனவன் அவள் முன் வந்து நின்றவன் துர்காவின் முகத்தைத் தன் கைகளால் ஏந்தி அவள் விழிகளில் வழிந்த கண்ணீரைத் தன் கட்டை விரலால் துடைத்தவன். “சாரி துர்கா….. என்னாலதானே உனக்கு இவ்ளோ கஷ்டம். என்ன மன்னிச்சிடு,” என்று மிகவும் வருத்தத்துடன் ஆதி பேச…. “ஆதி அப்படியெல்லாம் சொல்லாதே. ஒரு சின்ன காயம் தானே. இதுக்காக ஏன் இவ்வளவு வருத்தப்படுற…. காயத்துல மருந்து பட்டதும் கொஞ்சம் எரிச்சல் ஆயிடுச்சு. அதனால தான் என் கண்ணுல தண்ணி வந்துடுச்சு. வேற ஒன்னும் இல்லை,” என்று ஆதியைச் சமாதானம் செய்ய துர்கா முயல. “சாரி துர்கா….” என்று மீண்டும் சொன்னவன் அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
அவன் வலது மார்பில் சாய்ந்து இருந்த துர்கா…. ஆதியை நிமிர்ந்து பார்த்தாள். ஆதி “என்ன?” என்று தன் புருவங்களை உயர்த்திக் கேட்க…. “ஆதி இன்னும் ஜிப்….” என்று துர்கா தயங்கிய படியே அவனிடம் சொல்ல… “என்ன துர்கா…. எனக்குப் புரியல,” என்றான் ஆதி. அவனிடமிருந்து தள்ளி நின்றவள், “டேய் லூசு…. ஆதி எனக்கு இன்னும் நீ ஜிப்பைப் போட்டு விடவே இல்லடா….” என்றாள் துர்கா.
“ஹே துர்கா…. ஏன் டென்சன் ஆகுற…. சரி போட்டு விடுறேன் கோச்சுக்காத திரும்பி நில்லு,” என்று சொல்லிச் சிரித்தவன். அவள் தோலில் மாட்டி விடாதவாறு கவனமாக ஜிப்பை மெதுமெதுவாக மேலே உயர்த்தி விட்டவன். துர்காவைத் தன்னைப் பார்க்குமாறு திருப்பிய ஆதி, “வரவர…. நீ என்ன ரொம்பத் திட்டுற துர்கா…. அன்றும் அப்படித்தான் நீ என்ன மரமண்டை… டியூப்லைட்… என்று சொல்லித் திட்டுன. இப்பவும் டேய் லூசுன்னு… சொல்றியா… இரு உன்னை,” என்று ஆதி குனிந்து அவளுக்கு முத்தமிடப் போக ….
“சீ போடா….,” என்று அவனைத் தன்னிடமிருந்து தள்ளிவிட்டவள் சிரித்துக்கொண்டே சென்று ரூம் கதவைத் திறந்து கொண்டு வெளியே செல்லப் போக….. அறைக்கு வெளியே விக்கியும் போதியும் நின்றிருந்தார்கள். போதியைப் பார்த்ததும் கதவருகில் நின்றுகொண்டு வெளியில் நின்று இருந்தவர்களை உள்ளே வரவிடாமல் தடுத்தவள். உள்ளுக்குள் இருந்த ஆதியிடம் தன் கைகளாலேயே இங்கே வரவேண்டாம் அங்கேயே நில்…. என்று சைகை செய்து சொன்னாள் துர்கா.
துர்காவின் பின்னால் வர இருந்த ஆதி துர்காவின் சைகையைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட…. துர்கா கதவைச் சாற்றிவிட்டு வெளியே வந்தவள். “நீங்க ரெண்டு பேரும் இங்கே என்னடா பண்ணிட்டு இருக்கீங்க….” என்று கேட்டாள். விக்கி துர்கா இப்போதுதான் தன்னைப் பார்ப்பது போல வேண்டுமென்று கேட்கிறாள் என்று புரிந்து கொண்டவன். “நாங்க இங்க எதுக்கு வருவோம். உன்னைப் பார்க்கத் தான் வந்திருக்கோம். உனக்கு ஷூட்டிங் முடிஞ்சுச்சா நாம் எல்லாம் வெளியே போலாமா,” என்று விக்கி கேட்டான்.
“ஒரு 10 மினிட்ஸ் ஷூட் இருக்கு…. விக்கி கண்டிப்பா நான் உங்க கூட வந்து ஆகணுமா,” என்று துர்கா ஆதிக்குக் கேட்குமாறு சத்தமாகப் பேச…. “கண்டிப்பா நீ வந்து தான் ஆகணும். நாங்க எங்க கூட ஆதியையும் வெளியே போலாம்னு கூப்பிட்டோம் ஆனா அவன்தான் ரொம்ப… முக்கியமான மீட்டிங் இருக்கு,” என்று அந்த வார்த்தையை மட்டும் அழுத்தம் கொடுத்துச் சத்தமாக ஆதிக்குக் கேட்குமாறு சொன்ன விக்கி… “வர மாட்டேன்னு சொல்லிட்டான். அதனாலதான் நாங்க ரெண்டு பேர் மட்டும் பார்ட்டிக்கு போனா நல்லா இருக்காதே. அதான் உன்னையும் லதா விவேக்கையும் அழைச்சுட்டுப் போலாம்னு வந்தோம்,” என்று விக்கி கூற.
“இல்ல விக்கி எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க ரெண்டு பேரும் வேணா லதாவையும் விவேக்கையும் அழைச்சிட்டு போங்க…. நான் வரலையா,” என்று துர்கா சொன்னாள். “உனக்கு ஷூட்டிங் முடிஞ்சதும் எந்த….. வேலையும் இல்லைன்னு நான் லதா கிட்டயும் விவேகிட்டயும் ஏற்கனவே கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன். நீ பேசாம சூட் முடிஞ்சதும் கிளம்பி என் கூட வரப்போறியா இல்லையா,” என்று போதி கேட்க… இதற்கு மேலும் இவனைச் சமாளிக்க முடியாது என்று புரிந்து கொண்ட துர்கா, “சரி அப்ப நான் சூட் முடிஞ்சதும் வரேன். போலாம்,” என்று சொல்ல “அப்படி வா வழிக்கு,” என்றான் போதி.
“சரி சரி நின்னு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காத… நீ சீக்கிரம் போய்ச் சூட் முடிச்சிட்டு வா…. அது வரைக்கும் நானும் விக்கியும் உன்னோட ரூம்ல வெயிட் பண்ணிட்டு இருக்கோம்,” என்று போதி சொல்ல. அதைக் கேட்ட துர்கா பதட்டமாக ‘இவன் என்ன என் ரூமில் இருக்கேன்னு சொல்றானே…. ஆதி வேறு உள்ளே இருக்கிறான். இவனை எப்படிச் சொல்லிச் சமாளிப்பது,’ என்று நினைத்தவள் விக்கியைப் பார்க்க. ஆனால் விக்கியோ…. அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தும் ‘எனக்கு என்ன’ என்பது போலத் துர்காவைக் கண்டு கொள்ளாமல் நின்றான்.
விக்கியை முறைத்துவிட்டு, “போதி நீயும் விக்கியும் என் கூட ஷூட்டிங் வாங்க….. நீங்க ரெண்டு பேரும் நான் சூட்டில் நடிக்கிறது இதுவரைக்கும் பார்த்ததே இல்ல தானே,” என்று போதியின் கை பிடித்து நடக்க…. “சரி” என்று போதியும் துர்காவுடன் கிளம்ப விக்கி மட்டும் அங்கே வராமல் நின்றான். தங்களுடன் வராமல் விக்கி அங்கேயே நிற்க….. “நீயும் வாடா,” என்று போதி விக்கியை அழைக்க…. “இல்லை நீங்க ரெண்டு பேரும் முன்னாடி போங்க. எனக்கு இங்க ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் முடிச்சுட்டு ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல பின்னாடி வந்துடறேன்,” என்று சொல்லி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தவன் நேராக துர்காவின் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல..
அதுவரை இவர்கள் பேசுவதை எல்லாம் ரூமுக்குள் நின்று கொண்டு கேட்டுக் கொண்டிருந்த ஆதி கதவு திடீரென்று திறக்கவும் ஒரு நிமிடம் அதிர்ச்சியானவன் பின் வருவது விக்கி தான் என்று தெரிந்ததும் “நீதானா….” என்று பெருமூச்சு விட….. “ஆமா நானும் போதியும் வந்து பார்ட்டிக்குப் போலாம்னு கூப்பிட்ட அப்போ…. எங்க கூட வராம…. உனக்கு ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்குன்னு சொல்லிட்டு நீ இங்க வந்து நீ துர்கா கூட என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டான் விக்கி.
“நான்….. நான் என்ன இங்க பண்றேன். நான் ஒன்னும் பண்ணலையே….,” என்று ஆதி சமாளிக்க. “டேய் டேய் ஆதி சமாளிக்காத டா….. எங்க கூட பார்ட்டிக்கு வரலைன்னு சொல்லிட்டு இங்கே வந்து நீ உன் பொண்டாட்டி கூட இங்கே இத்தனை பேர் வந்து போற இடத்துலயே ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டியா….” என்று ஆதியைக் கிண்டல் செய்ய.
“நான் எங்க ரொமான்ஸ் பண்ணினேன். அதுக்குள்ள தான் சிவ பூஜையில் கரடி நுழைந்த மாதிரி நீ உள்ள வந்துட்டியே. நீ வந்தது பத்தாதுன்னு போதா குறைக்கு இந்தப் போதியையும் சேர்த்து கூடக் கூட்டிட்டு சுத்திகிட்டு இருக்கே….,” என்று ஆதிக்கு அழுத்துக் கொள்ள…
“நீ போதி கிட்டதான் துர்காவைப் பார்க்கப் போறேன்னு சொல்ல முடியாது. சரி என்கிட்டயாவது துர்காவைப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு வந்து இருந்தா நான் போதியை ஏதாவது சொல்லிச் சமாளிச்சு இங்க கூட்டிட்டு வராம அப்படியே நேரா பார்ட்டிக்கு கூட்டிட்டுப் போயிருப்பேன் இல்லையா. அப்போ இது யார் தப்பு. உன்னோட தப்புதானே,” என்று ஆதியைப் பார்த்து விக்கி கேட்க…. ஆதியும் “ஆமாம்” என்று தலையை ஆட்ட….
“அப்போ நீ தான் இன்னைக்கு அனுபவிச்சு ஆகணும். நீ இங்கேயே இரு. நான் எங்க துர்காவைக் கூட்டிட்டுப் பார்ட்டிக்குப் போறோம்,” என்ற விக்கி வெளியில் செல்லப் போக…. விக்கியின் காலரை கொத்தாகப் பிடித்து இழுத்துத் தன் அருகில் நிற்க வைத்த ஆதி. “நீ என்ன பண்ணுவியோ…. ஏது பண்ணுவியோ…. எனக்குத் தெரியாது. உங்க கூட நானும் பார்ட்டிக்கு இப்போ வருவேன். ஏதாவது சொல்லிச் சமாளிச்சு என்னை உன் கூட நீ கூட்டிட்டுப் போற,” என்று விக்கியிடம் ஆதி ஆர்டர் போட…
‘எப்படியோ உன்ன விட்டுட்டு நாங்க பார்ட்டிக்குப் போனால் கண்டிப்பா நீ ஏதாவது பண்ணி எங்களப் பார்ட்டி என்ஜாய் பண்ண விடமாட்ட…. சரி வந்து தொல… நான் ஏதாவது சொல்லிச் சமாளிக்கிறேன்,’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, ‘எல்லாம் என் நேரம்டா…. கல்யாணம் ஆகி ஒரு வாரமா என் பொண்டாட்டி ஊர்ல விட்டுட்டு நான் இங்க தனியாத் தவிச்சிட்டு இருக்கேன். இவன் என்னடான்னா….. இவன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்றதுக்காக நான் இவனுக்கு என்ன எல்லாம் பண்ண வேண்டியதா இருக்கு,’ என்று தன் நினைத்த விக்கி. “அது ஒன்னும் இல்ல போதி. நம்ம எல்லாரும் பார்ட்டிக்குப் போறப்ப ஆதி மட்டும் வரலைன்னா நல்லா இருக்காது இல்லையா. அதனால நான் நான் போன் பண்ணி ஆதியைக் கண்டிப்பா இந்தப் பார்ட்டிக்கு வந்து ஆகணும்னு அடம் பிடிச்சேன். நான் கூப்பிட்டதுக்காக மட்டும்தான் இங்கே வந்து இருக்கான். வேற யாருக்காகவும் ஆதி பார்ட்டிக்கு வரல,” என்று ஆதியையும் துர்காவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு விக்கி சொன்னான்.
“எது எப்படியோ ஆதிக்கும் நம்ம கூடப் பார்ட்டிக்கு வந்தாச்சு. போலாமா….,” என்று போதி முன்னால் செல்ல அவனோடு சேர்ந்து அனைவரும் பார்ட்டிக்குக் கிளம்பினர்.
ராதா மேடையில் ஆடிக் கொண்டிருக்கும்போது அவள் ஏதோ வலியில் இருக்கிறாள் என்பதை அவள் முகம் பார்த்து அறிந்து கொண்ட சந்தோஷ் சற்றும் தாமதிக்காமல் மேடையின் முன் நின்றிருந்தவன் மேடையின் மேல் குதித்து ஏறி….. வேகமாக ராதாவின் அருகில் செல்லும் போது தான் கவனித்தான். அவள் பாதம் முழுவதும் ரத்தம் படிந்து சிவப்பு நிறத்தில் இருந்தது. அதைவிடவும் கீழே அவள் மணலில் வரைந்து வைத்திருந்து ஓவியத்தைப் பார்த்ததும் அவளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தவன் அப்படியே அதிர்ச்சியாகி சிலை போல அசையாமல் அப்படியே நின்று விட்டான்.
ராதா ஆடிக்கொண்டு அந்த மணலில் வரைந்திருந்த ஓவியத்தில் சந்தோஷ் ராதாவைத் தலைக்கு மேல் தூக்கி அவள் வயிற்றில் முத்தமிட்டுக் கொண்டிருந்த அந்தக் காட்சியைத் தான் மணலில் தத்ரூபமாக ராதா தன் கால் கட்டை விரலால் வரைந்திருந்தாள். இவ்வளவு நாள் கீர்த்திகா அவளுடன் டான்ஸ் பிராக்டிஸ்இல் இருந்தும் கூட இதைத்தான் ராதா வரைந்திருந்தால் என்று அவளுக்குத் தெரியவே தெரியாது.
ராதா வரைந்த தங்கள் முதல் நினைவைப் பார்த்துக் கொண்டே சந்தோஷ் ராதாவிடம் செல்லப் போக…. ராதா ஆடி முடித்ததும் அப்படியே மயங்கித் தரையில் சரிந்தாள். இவ்வளவு நேரம் அருமையாக ஆடிக் கொண்டிருந்த ராதா திடீரென்று மேடையில் மயங்கி விழுவதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற ஸ்டாப்புகளும் மேடைக்கு முன்னால் அமர்ந்திருந்த மாணவர்களும் பதட்டமாகி என்ன நடந்தது என்று தங்களுக்குள் பேசிக்கொள்ள… அந்த இடமே பதட்டமாக இருந்தது….
ராதா மயங்கியதைப் பார்த்து வேகமாக அவளிடம் சந்தோஷ் ஓட மேடையின் ஓரத்தில் நின்றிருந்த கீர்த்திகாவும் மற்ற ஸ்டாப்களும் ராதா மயங்கி விழுந்ததைப் பார்த்துப் பதறிப் போய் ஓடி வர …… கீர்த்திகாவும் மற்ற ஸ்டாப்புகளும் மேடைக்கு வருவது பார்த்ததும் அவர்கள் வந்து ராதா மணலில் வரைந்து வைத்திருந்த ஓவியத்தைப் பார்த்துத் தங்கள் இருவருக்கும் இடையிலான உறவைத் தெரிந்து விடுமோ…. என்ற அவசரத்தில் மணலில் ராதா வரைந்து வைத்திருந்த தங்கள் ஓவியத்தை வேகமாக கை கொண்டு அழித்தான் சந்தோஷ்.
தன் இரண்டு கைகளைக் கொண்டும் மணலில் இருந்த ஓவியம் முழுவதையும் அழிக்கும் போதே சந்தோஷிற்குக் கையில் ஏதோ குத்துவது போலத் தோன்ற….. ஓவியத்தை அழித்துக் கொண்டிருந்தவன் தன் கையே திருப்பிப் பார்க்க அவன் கை முழுவதும் சிறு சிறு கண்ணாடிச் சில்லுகள் அதிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அப்போதுதான் சந்தோஷிற்குப் புரிந்தது அந்த மணலில் யாரோ கண்ணாடித் துகள்களைக் கலந்திருக்கிறார்கள் என்று.
சந்தோஷின் இரு கைகளையும் உயர்த்தித் தன் கையில் இருந்த கண்ணாடிச் சில்லுகளையே பார்த்துக் கொண்டிருந்தான் சந்தோஷ். அவன் கையில் இருந்த ரத்தத்தைப் பார்த்ததும் மேடை வந்து கொண்டிருந்த கீர்த்திகா சந்தோஷ் இடம் சென்று, “சார் என்ன சார் உங்க கை எல்லாம் ரத்தமாக இருக்கு,” என்று கேட்க….
“அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். நீ போய் முதல்ல ராதாவைப் பார். அவள் மயங்கி இருக்கிறாள்,” என்று சொல்லவும் அவனிடமிருந்து ராதாவிடம் ஓடியவள் அவளைத் தூக்கித் தன் மடியில் படுக்க வைத்து ராதாவின் கன்னத்தைத் தட்டி அவளை எழுப்பும் முயற்சிக்க…. ஆனால் ராதாவின் கால்களில் காயம் பட்டு ரத்தம் நிறைய போயிருந்ததால் ராதா கண்விழிக்கவே இல்லை.
சந்தோஷ் மற்ற மேடையில் இருந்த ஸ்டாப்புகளிடமும் கீர்த்திகாவிடமும், “முதலில் ராதாவை ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போங்க….. எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு,” என்று சொல்ல…. “சார் உங்க கையிலயும் காயமா இருக்கு. நீங்களும் எங்க கூட ஹாஸ்பிடல் வாங்க…” என்று ஒரு ஸ்டாப் சந்தோஷை அழைக்க…. “இது ஒன்றும் பெரிய காயம் இல்லை. எனக்கு இங்கே ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு நானே ஹாஸ்பிடல் வந்து விடுகிறேன். நீங்கள் முதலில் செல்லுங்கள்,” என்று அவர்கள் ராதாவை அழைத்துக் கொண்டு செல்லச் சொல்லி வற்புறுத்தினான்.
ராதாவைத் தூக்கிக் கொண்டு ஸ்டாப்கள் செல்ல….. அவர்களோடு கீர்த்திகாவும் சென்றாள். மேடையை விட்டு கீழே இறங்கிய கீர்த்திகா…. நிலானையும் பத்மாவையும் பார்த்து, “நீங்கள் எங்க கூட ஹாஸ்பிடலுக்கு வர வேண்டாம். உனக்குச் சிரமமா இருக்கும் நிலானி. நீ வீட்டுக்குப் போ. நான் என்ன ஆச்சுன்னு உனக்குப் போன் பண்ணிச் சொல்றேன்,” என்று நிலானியைப் பத்மாவிடம் சொல்லிப் பத்திரமாக அழைத்துச் செல்லும்படி கூறிவிட்டு கீர்த்திகா ராதாவுடன் மருத்துவமனைக்குச் சென்றாள்.
ராதா மேடையில் இருந்து வெளியே செல்லும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்த சந்தோஷ் அவள் கண்ணை விட்டு மறைந்ததும் திரும்பி வேகமாக மேடை விட்டு இறங்கியவன் ஸ்டாஃப்களும் மற்ற போட்டியாளர்களும் இருக்கும் இடத்திற்கு விரைவாகச் சென்றான். அங்கே சென்றதும் அனைவரையும் பார்த்து கோபமாக….. “மேடையில் ராதா ஆடிய மணல்ளில் யாரு கண்ணாடித் துகள்களைக் கலந்தது? எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். இந்த உண்மை தெரியாமல் இங்கு இருக்கிற யாரையும் நான் வெளியே அனுப்புறதா இல்ல,” என்று அவர்கள் இருந்த ரூம் கதவைச் சாற்றிவிட்டு நின்றான் சந்தோஷ்.
அவன் இப்படி கேட்கவும் முதலில் யாருக்குமே புரியாமல் தங்களுக்குள் சந்தோஷ் என்ன சொல்கிறான் என்று பேசிக்கொள்ள…. அப்போதுதான் ராதை மயங்கிய விஷயமும் அவள் ஆடிய மணலில் கண்ணாடித் துகள்கள் கலந்து இருக்கிறது என்பதையுமே புரிந்து கொண்ட சிலர், “சார் நாங்க அப்படியெல்லாம் எதுவுமே செய்யல,” என்று முன்வந்து சந்தோஷிடம் சொல்ல. அவர்களை ஒருமுறை பார்த்தவன் பின் திரும்பி அனைவரிடமும், “நான் இப்போ ஒன்றிலிருந்து பத்து வரைக்கும் எண்ணுவேன். அதற்குள்ள இந்த வேலையைச் செஞ்சது யாரோ அவங்களாகவே முன்வந்து நான் தான் இதை செய்தேன்னு சொல்லி ஒத்துக்கணும். அப்படி இல்லன்னா நானா யார் இந்தத் தப்பைச் செய்தாங்கன்னு கண்டுபிடிச்சிட்டேன்னா… அவங்களுக்கான தண்டனை ரொம்ப ரொம்ப மோசமா இருக்கும்,” என்று சொல்லி விட்டு…. “ஒன்று…. இரண்டு….” என்று எண்ண ஆரம்பித்தான். சந்தோஷ் எண்ணிக் கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தங்களுக்குள் யார் இதைச் செய்திருப்பார்கள் என்று தங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க….
சந்தோஷ் “ஏழு…..எட்டு….” என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்திலிருந்து கையை உயர்த்தி “சார் நான் தான் இதைச் செய்தேன்,” என்று சொல்லி ஒருவன் முன்னே வந்து நின்றான். அவனைப் பார்த்துப் புருவம் சுருக்கிய சந்தோஷ், “நீயா இதைச் செஞ்ச?” என்று கேட்டான்.
