Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 193

உன் ரகசிய ரசிகை நான் 193

by Layas Tamil Novel
162 views

EPISODE 193

ராதாவும், கீர்த்திகாவும் தங்களுக்கு கிடைத்த தகவல்களை வைத்து ஆசிரமத்தில் இருந்து வெளியே சென்றவர்களை பற்றிய தகவல்கள் எல்லாம் சிங்காரதிடம் மட்டுமே இருக்கிறது என்று தெரிந்து கொண்டனர்.

துர்காவும், ஷிவுவும் சிங்காரத்தை தனிப்பட்ட முறையில் பேட்டி எடுக்க வேண்டுமென்று அவரை சந்தித்து முதலில் பொதுவான கேள்விகளை கேட்டுவிட்டு அதன் பிறகு எப்போது இந்த ஆசிரமம் முதன் முதலாக நிறுவப்பட்டது எங்கே நிறுவப்பட்டது என்று கேள்விகளால் ஆரம்பித்தனர்.

அவர்கள் எதிர் பார்த்தது போலவே சிங்காரமும் முதன் முதலில் மும்பையில் தமிழர்களுக்காக ஆரம்பிக்க பட்ட ஆசிரமம் என்றும் சில காரணங்களால் தமிழ்நாட்டிற்கு மாற்றிவிட்டதாகவும் அங்கு இருந்தவர்கள் அனைவரும் தங்களுடன் இங்கே வந்துவிட்டதையும் கூறினார்.

அப்போ நீங்க இங்கே ஆசிரமத்தை மாற்றி கிட்டதட்ட இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் இருக்கும் இல்லையா சார் என்றாள் ஷிவு.

ஆமாம் என்றவர் மேலும் இந்த ஆசிரமத்தை இவ்வளவு வருஷம் எந்த பிரச்னையும் இல்லாம நடத்திட்டு வந்தாதற்க்கு முதல் காரணம் அப்போது இருந்த ஒரு கலெக்டர் தான் அவர்தான் எங்களுக்கு இங்கே ஆசிரமம் நடத்த பெர்மிஸ்ஸின் வாங்கி கொடுத்து இதை ஒரு சேவையா செய்யணும் காசு பணத்திற்காக மற்றவர்களை போல இந்த ஆசிரமமா சென்றுவிடக் கூடாது என்று சொல்லி எங்களுக்கு நிறைய உதவியும், பாதுகாப்பும் கொடுத்தாங்க என்றார்.

சார் மும்பையில் இருந்து உங்க கூட வந்த ஆதரவு அற்றவர்கள் எத்தனை பேர் இருப்பாங்க என்று கேட்டாள் துர்கா.

அவர் யோசித்தவாறு சில எண்ணிக்கைகளை சொன்னவர் ஏன் அவர்களை பற்றி இப்போ கேட்குறீங்க என்றார் சந்தேகமாக.

அது இல்லை சார் ஆரம்பத்துல இருந்து உங்க கூட இந்த ஆசிரமத்துல நீங்க கஷ்டப்படும்போது இருந்து உங்க கூட நிறைய பேர் இருந்து இருப்பாங்க. அவங்களுக்கு தான் உங்களை பற்றி நல்லா விதமாக நிறைய விஷயங்கள் தெரியும்.

என்னதான் நீங்களே நிறைய விஷயங்கள் செய்து இருப்பதாக சொன்னாலும். மற்றவர் சொல்லி கேட்கும்போது இன்னும் அதிகமாக உங்களை பற்றி நல்ல விஷயங்களை வெளியே வரும்.

இதை எல்லாம் எங்க ஷோவில் போட்டால் தானே உங்க ஆசிரமத்தை பற்றியும் உங்களை பற்றியும் பல நல்ல தகவல்களை நாங்க எல்லாரும் கிட்டயும் கொண்டு போய் சேர்த்த முடியும் என்றாள் துர்கா.

நீங்க சொல்றதும் புரியுது மா… ஆனா அப்போ என்கூட இருந்தவங்களில் பெரும்பாளானவங்க இறந்துட்டாங்க.

பாதி பேர் பதினெட்டு வயதுக்கு மேல ஆனதும் ஆசிரமம் விதி படி அவங்க வாழ்க்கையை அவங்களே அமைச்சுக்கணும்னு சிலரை நாங்களே வெளியே அனுப்பிட்டோம் என்றார்.

அவங்க தான் சார் வேணும் அவங்க கிட்டே கேட்ட தான் உங்களையும், இந்த ஆசிரமத்தையும் பற்றி பல நல்ல தகவல்களை கொடுப்பாங்க என்றாள் துர்கா.

அவங்களை பற்றிய தகவல் என்று யோசித்தவர் ஒரு நிமிஷம் இருங்க என்றவர் எழுந்து சென்று காபோர்டில் இருந்த ஒரு பெரிய கோப்பை எடுத்து வந்தவர் சமீப வருடங்களில் யாரெல்லாம் இங்கிருந்து வெளியே சென்று இருக்கிறார்கள் என்று லிஸ்ட்டை எடுக்க ஆரம்பித்தார்.

கிட்டத்தட்ட முப்பது நபர்களுக்கு மேலாக தகவல்களை அவர்களிடம் சொல்ல சொல்ல ஷிவு அவர் சொன்னதை தன் கணினியில் குறிப்பிடுத்துக் கொண்டாள்.

அவர்களை பற்றிய தகவல்கள் என்ன செய்கிறார்கள் இதில் ஆண் எத்தனை பெண் எத்தனை, என்ன படிக்கிறார்கள் அல்லது வேலை செய்கிறார்களா என்று நிறைய தகவல்களை அவர் சொல்ல சொல்ல ஷிவு அனைத்தையும் பிரித்து குறிப்பிட்டுத்துக் கொண்டாள்.

அவர் சொன்ன தகவல்களில் இவர்களை எதிர்பார்த்தது போல செண்பகத்தின் பெண்ணைப் பற்றிய தகவல் மட்டும் அதில் இடம் பெறவில்லை.

அவர்களிடம் குறிப்பு கொடுத்து கொண்டு இருந்தவர் அந்த கோப்பில் வரிசையாக எழுதப்பட்டு இருந்த தகவல்களை பார்த்து சொல்லிக்கொண்டு கொண்டு இருந்த போது திடீர் என்று ஒரு இரண்டு மூன்று வரிசையாய் தாண்டி மற்ற தகவல்களை சொல்ல ஆரம்பித்தார்.

அதை கவனித்த துர்காவும், ஷிவுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அவர்கள தேடிவந்த தகவல் ஒருவேளை அந்த வரிசைகளில் இருக்கோமோ என்று யோசிக்கையில் அவ்வளவு தான் மா என்கிட்டே இருக்க லிஸ்ட் எல்லாத்தையும் உங்களுக்கு கொடுத்துட்டேன் வேறு எதுவும் வேண்டுமா என்று கேட்டார் சிங்காரம்.

சார் அது அந்த பைலில் என்று ஷிவு அவர் விட்டுவிட்ட தகவலை கேட்க வர… அவள் அருகில் அமர்ந்து இருந்த துர்கா ஷிவுவின் தொடையில் கை வைத்து அழுத்தி கேட்கவேண்டாம் என்று சைகை செய்ய…

ஷிவு அப்படியே அதற்கு மேல் எதுவும் பேசாமல் நிறுத்திவிட்டால்.

அவள் எதுவும் பேசாமல் பாதியிலேயே நிறுத்தியதும் என்னமா எதுவோ கேட்க வந்திங்க என்னனு சொல்லுங்க என்று சிங்காரம் கேட்க..

அது ஒன்னும் இல்லை சார் இவளை விட்டா நாள் பூரா உங்களை கேள்வி கேட்டுட்டே இருப்பா…

இன்னிக்கு நீங்க கொடுத்த தகவலே போதும் நாங்க கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்குறோம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றனர்.

அவர்கள் சென்றதும் அந்த பைலை எடுத்த இடத்திலேயே பத்திரமாக வைத்து பூட்டி சாவியை தன் ட்ராவில் வைத்து அதையும் பூட்டி அந்த சாவியை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வெளியே சென்றார்.

இதை எல்லாம் வெளியே வந்த துர்காவும் ஷிவுவும் சிங்காரதிற்கு தெரியாமல் மறைந்து நின்று பார்த்தவர்கள் பிறகு வந்து அந்த பைலை எடுத்து பார்த்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டனர்.

❤️

மாதவியுடன் பேசிக் கொண்டு இருக்கையில் திடீர் என்று அவள் போன் கட் ஆகிவிட அவளை அதற்கு பிறகு தொடர்பு கொள்ள முடியாமல் போய்விதே என்று குழப்பத்தில் இருந்தான் போதி.

ஒரு வேலை சங்கவி எதுவும் வந்து இருப்பாள் அதனால் போனை அணைத்து வைத்து இருக்கலாம் நாளை காலேஜ் வந்த பிறகு பேசிக் கொள்ளலாளம் என்று விட்டுவிட்டான் போதி.

அதன் பிறகு தான் துர்கா கேட்ட உதவியையும் செய்து கொடுத்த போதி மாதவியின் நினைவிலேயே ஒரு நாளை கடந்துவிட்டான்.

தான் மாதவியிடம் பேசி இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி விட்டதே அவளும் காலேஜிற்கும் வரவில்லையே எதுவும் பிரச்சனை நடந்துவிட்டதோ என்று யோசனையிலேயே மாதவியிடம் எப்படி பேசுவது என்று யோசித்த படி தன் கேபினில் அமர்ந்து இருந்தான்.

அப்போது அவனை பார்க்க மாணவி ஒருவர் வந்திருப்பதாக பியூன் வந்து சொல்லவும் அது மாதவியாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்து அவளை உள்ளே வர சொல்லி வாசலைப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் போதி.

அவன் கேபினை தட்டிவிட்டு உள்ளே வந்தது மாதவி இல்லை அவளுடைய வகுப்பு தோழி லேகா.

அவளை அங்கு எதிர்பாராத போதி வா லேகா என்ன விஷயம் என்றான்.

அது வந்து.. அது வந்து சார்.. என்று லேகா இழுக்க… என்ன லேகா சொல்லு ஏன் தயங்குற என்றான் போதி.

அது வந்து மாதவி ரெண்டு நாளா கிளாசிற்கு வரலை என்றாள் லேகா.

அவளிடம் தங்கள் காதலிக்கும் விஷடம் ஏற்கனவே மாதவி சொல்லி இருக்கிறாள் என்பதால். ஆமா லேகா நானும் அதை பற்றிய சிந்தனையில் தான் இருக்கேன்.

என்ன ஆச்சு மாதவிக்குன்னு எனக்கு தெரியலை என்றான் கவலையாக போதி.

ஆமா சார் அவ எப்பவும் இப்படி தொடர்ச்சியா லீவ் போடா மாட்டா.. எவ்வளவு முடியாம இருந்தாலும் கிளாசை சரியா அட்டென்ட் பண்ணிருவாங்க ஆனா இந்த ரெண்டு நாளா அவ வராம இருக்குறதை பார்த்த எனக்கு என்னவோ அவ சொன்னது போல தான் எதுவும் நடது இருக்கோம்ன்னு தோணுது என்றாள் லேகா.

சேரில் சாய்ந்த படி சோர்வாக அமர்ந்து இருந்த போதி லேகா சொல்வதை கேட்டதும்.

என்ன சொன்னா மாதவி உன்கிட்டே சொல்லு லேகா என்றான் போதி ஆர்வமாக.

அது வந்து சார் அவ தொடர்ந்து இரண்டு மூணு நாள் நான் காலேஜ் வரலையின்னா என்னை காலேஜ் போக விடாம வீட்டில் வைத்து பூட்டி இருப்பாங்க…

என்னை பற்றிய விஷயமா எதுவும் சங்கவி அக்காவுக்கு தெரிஞ்சிரிக்கணும் அப்படி தெரிஞ்சிருந்தால் தான் என்னை வெளியே எங்கயும் விடாம பூட்டி வெச்சிருப்பாங்கன்னு என்கிட்டே சொன்னா சார் என்றாள் லேகா.

அவள் சொன்னதை கேட்டதும் புருவம் சுருக்கிய போதி என்ன விஷயம் அவளை பற்றி தெரிஞ்சிருக்கும்னு சொன்ன அது என்னனு உனக்கு எதுவும் தெரியுமா என்றான் போதி.

ம்ஹும்… இல்லை சார் அது எதுவும் மாதவி என்கிட்டே சொல்லிக்கல, நானும் அவளாவே சொல்லட்டும்னு விட்டுட்டேன்.

அது தான் இவ்வளவு பெரிய தப்பாகிய்டுச்சோ… நான் எதுவும் அவளிடம் கேட்காமல் விட்டுவிட்டேன்னோன்னு இப்போ வருத்தமா இருக்கு என்றாள் லேகா.

அவள் சொன்ன விஷயங்களை வைத்து பார்த்தால் மாதவி ஏதோ ஒரு விஷயத்தை தனக்குள்ளே இருந்து அவளை பற்றிய உண்மையை மறைத்து வைத்து இருக்கிறாள் என்று தோன்றியது போதிக்கு.

அதே யோசனையோடு இருந்தவன் அமைதியாக இருக்க… லேகாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை தான் இங்கே இருக்கவா இல்லை போகலாமா என்று யோசித்தபடி நின்று இருந்தவள்.

சரி நாம் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லியாயிற்று இனி போதி பார்த்துக்கொள்வர் என்ற திருப்தியுடன் சார் நான் என்று… தான் கிளம்புவதற்காக போதியிடம் பேச வர…

இவ்வளவு நேரம் எதையோ யோசித்தவன் லேகா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா என்றான்.

என்ன சார் சொல்லுங்க நீங்க கேட்டு நான் இல்லையினு சொல்வேனா என்றவள் போதியின் முகத்தை ஆர்வமாக பார்க்க…

உனக்கு மாதவி இருக்கும் இடம் தெரியுமா என்று கேட்டான்.

இல்லை சார் அவ ஒரு நாளும் தன்னை பற்றியோ இல்லை தான் இருக்கும் இடம் பற்றியோ எதுவுமே சொல்லிக்கொண்டு கொள்ளவில்லை என்றாள் லேகா.

இவள் சொல்வதும் வாஸ்தவம் தான் தன்னிடம் கூட இதுவரை அவளை பற்றி முழுதாக எதுவும் சொல்லிக் கொள்ளவில்லையே என்று சற்று போதிக்கும் வருத்தமாக தான் இருந்தது.

லேகா மாதவி இருக்குற வீடு எனக்கு தெரியும் நீ நேரில் போய் என் சார்பில் அவளை பார்த்துவிட்டு வரமுடியுமா என்றான்.

முதலில் அவன் சொன்னதை கேட்டு சற்று அதிர்ச்சியான லேகா பிறகு மாதவியை சந்திக்க இதை விட்டாள் வேறு வழியும் இல்லை என்பதை நன்றாக உணர்ந்தவள் சரி என்று தலையாட்டினால்.

அவள் சரி என்று சொன்னதும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆவலாக அவள் அருகில் வந்த போதி மாதவியை பார்த்து என்ன செய்ய வேண்டுமென்று லேகாவிடம் கவனமாக சொன்னவன்.

அதை விட சங்கவியை பற்றியும் அவள் அப்பாவை பற்றியும் விவரமாக சொன்னான் போதி.

முதலில் மாதவியை சந்திக்க சம்மதித்த லேகா சங்கவியை பற்றி கேட்டதும் உள்ளுக்குள் சற்று பதட்டமாக தான் இருந்தது.

இருந்தும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள் சார் நான் போய்ட்டு வரேன் என்றாள் நெஞ்சை நிமிர்த்தி ஏதோ போருக்கு செல்வது போல நின்றாள்.

லேகாவை கிளாஸ் முடிந்ததும் மாதவியை பார்க்க வருவதற்கு முன் தன்னை சந்தித்து விடு பிறகு மாதவியை பார்க்க செல்லும்படி கூறினான்.

லேகாவும் சரி என்று தலையை ஆட்டிவிட்டு கிளாசிற்கு கிளம்பினாள்.

❤️

துர்கா கிளம்பி திருச்சிக்கு சென்றதில் இருந்து ஆதிக்கு தாங்கள் பத்திரமாக வந்துவிட்டோம் என்ற சொன்ன தகவலை தவிர வேறு எந்த தகவலும் அவனுக்கு சொல்லவில்லை.

அவள் அங்கே என்ன செய்கிறாளோ எது செய்கிறாளோ என்று யோசனையோடு அமர்ந்து இருக்க…

அவனை பார்க்க உள்ளே வந்த கதிரும், விக்கியும் ஆதி யோசனையோடு அமர்ந்து இருப்பதை பார்த்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு வந்தனர்.

அவனிடம் வந்து ஆதியின் தோளில் கைவைத்து என்ன ஆச்சு ஆதி என்றான் விக்கி.

ஒன்னும் இல்லை விக்கி செண்பகம் அத்தையோட காணாமல் போன பொண்ணை பற்றி விசாரித்துவிட்டு வருவதாக கூறி துர்கா கிளம்பி போனா…

ஆனா அவ போனதில் இருந்து அங்கு என்ன நிலவரம் என்று இப்பொது வரை எந்த தகவலும் இல்லை.

நான் கால் பண்ணி அவளிடம் பேசலாம் என்றாள். துர்காவாக கூப்பிடும் வரை என்னை அவளுக்கு கால் செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டாள் என்றான்.

கதிரும் ஆதி சொன்னதை கேட்டு துர்கா சொன்னது போல தான் நான் கீர்த்திகாவிற்கு கால் செய்த போதும் அவளும் இதே போல கூறிவிட்டு போனை வைத்துவிட்டால் என்றான் கதிர்.

இது எல்லாம் பரவாயில்லை டா… உங்க பொண்டாட்டிங்களாவது அங்கே இருந்துட்டு உங்களை அவங்களுக்கு கால் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டாங்க.

ஆனா என் பொண்டாட்டி இருக்க பாரு அவளை மட்டும் இங்கே தனியா விட்டுட்டு துர்கா ராதா, கீர்த்திகாவையும் கூட்டிட்டு போய்ட்டாங்க அப்போ அவங்களுக்கு நான் தங்கை கிடையாதா ஷிவு, கீர்த்திகா, ராதா மட்டும் தான் தங்கைங்களா?

என்னை அப்போ சும்மா தான் தங்கச்சின்னு சொன்னாங்களா என்று கேட்டு என்கூட அவங்க திருச்சி கிளம்பினதுல இருந்து பேசுறது இல்லை டா…

இதை நான் என்னனு சொல்லுவேன் என் நிலைமையை நான் வெளியே சொன்ன எல்லாரும் என்னை பார்த்து சிரிச்சிருவாங்க என்றான் முகத்தை கோவமாக வைத்துக் கொண்டு.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில் ஆதியின் அறைக் கதவை தட்டிக் கொண்டு அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் கதவை திறந்து கொண்டு வேக எட்டுக்களுடன் உள்ளே வந்த ரூபேஷ்.

நேராக ஆதியிடம் வந்தவன் ஆதி சார் என்னோட பொண்டாட்டி அதான் உங்க அத்தை பொண்ணு ஷிவு நான் கால் பண்ணினாலே எடுக்க மாட்டேங்குறா…

உங்களையும் உங்க பொண்டாட்டியையும் நம்பிதான் என் பொண்டாட்டி கர்ப்பமா இருந்தும் அனுப்பி வெச்சேன் ஆனா இப்போ அவ என்னோட போனையே எடுக்க மாட்டேங்குறா எனக்கு என்னவோ பயமா இருக்கு என்றான் ரூபேஷ்.

திடீர் என்று ஷிவுவின் மீதுக்காய் வந்தவனாக ரூபேஷ் பேசுவதை கேட்ட விக்கி.

கதிரின் காதில் ஏண்டா இவன் நேதுவரைக்கும் ஷிவுவை கண்டாலே எரிஞ்சு எரிஞ்சு விழுந்துட்டு இருந்தானே..

ஷிவுவையே வேணாம்னு தானே சொல்லி இஇருந்தான். ஆனா இன்னைக்கு என்ன திடீர்னு அவ மேல இவவ்ளவு பாசமழையா பொழியுறான். இதை எல்லாம் பார்த்தா நம்புற மாதிரியா இருக்கு என்றான் விக்கி.

நீங்க நம்பினாலும் நம்பவிட்டாலும் நான் என் பொண்டாட்டி மேல பாச மழையைதான் பொழியுறேன் என்றான் ரூபேஷ்

என்னடா கதிர் நான் உனக்காதில் சொன்னது இவனுக்கு எப்படி கேட்டுச்சு… ஒருவேளை இந்த காதுல சொன்னது அந்த காது ஓட்டை வழிய வெளியே லீக் ஆகி அவனுக்கு கேட்டிருச்சோ… என்று விக்கி கதிரை பிடித்து அவன் இந்த பாக்க காதில் இருந்து அந்த பக்க காதுவரை எதுவும் தெரிகிறதா என்று ப்பார்த்தான் விக்கி.

அவன் கையில் இருந்து தன் காதை பிரித்துக் கொண்ட கதிர் நீ என் காதுல வந்து ரகசியம் பேசினா பரவாயில்லை ஊருக்கே பேசுற மாதிரி சொன்ன ரூபேஷுக்கு இல்ல திருச்சியில் இருக்க அவன் பொண்டாட்டி ஷிவுவுக்கே கேட்கும் என்றான் தன் காதை தேய்த்து விட்டுக் கொண்டே பேசினான் கதிர்.

நீங்க அப்புறம் பேசுங்க எனக்கு இப்போ என் பொண்டாட்டிகிட்டே பேசணும், இப்பவே பேசணும் என்று ஆதியை பாபார்த்து ரூபேஷ் கெஞ்சிய படி நிற்க…

வாய்ஸ் தான் டெரர் மாதிரி இருக்கு டா… ஆனா பாடிய லாங்குவேஜ் எல்லாம் பார்த்தா கோவைசரளா கிட்ட மாட்டிகிட்ட வடிவேலு மாதிரி இல்ல இருக்கு என்றான் விக்கி.

அவனை முறைத்த ஆதி நான் என் பொண்டாட்டிய் பார்க்க திருச்சி போக போறேன் அவனவன் பொண்டாட்டியை பார்க்கணும்னா கிளம்பி என் கூட வாங்க என்றாப்படி எழுந்து ஆதி வெளியே செல்ல….

கதிரும், ரூபேஷும் ஆதி சொன்ன மறுன்னோடி அவன் பின்னால் செல்ல… அடப்பாவிங்களா பொண்டாட்டின்னதும் இப்படி கூட இருக்கவங்களையே கழட்டி விட்டுட்டு போறானுங்களே.

எனக்கும் என் பொண்டாட்டின்னா பிடிக்கும் நானும் உங்க கூட திருச்சிக்கு வருவேன் என்று சொல்லிக்கொண்டே விக்கியும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள…

டேய் விக்கி நிலானி தான் இங்கே இருக்காளே அப்புறம் நீ எதுக்கு திரிச்சி வர என்றான் கதிர்,

தெரியும் டா… போற வழியில் அவளையும் தூக்கிப் போட்டுட்டு போடலாம் என்று சொல்லி அவர்களுடன் கிளம்பினான் விக்கி.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured