EPISODE 194
துர்காவை காண ஆதி திருச்சி கிளம்ப அவனுடன் சேர்ந்து ரூபேஷ், கதிர், விக்கிரமன் நிலானி என்ன நால்வரும் கிளம்பினர்.
இவர்கள் வருவது துர்காவுக்கும் அவள் தங்கைகளுக்கும் தெரியாது.
இங்கு ஆசிரமத்தில் இருந்து கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று பிளான் செய்து கொண்டு இருந்தனர் நம்ம லிட்டில் சிஸ்டேர்ஸ்யும் துர்காவும் சேர்ந்து.
தங்களுக்கு வேண்டிய தகவல் அந்த லக்சரில் தான் இருக்க வேண்டும் அதை எப்படி எடுத்து பார்ப்பது என்று யோசிக்கையில் துர்கா யோசிக்காம இன்னிக்கு நைட் அவர் ஆபீஸ் ரூம்ல போய் நாமே எடுத்து பாத்துற வேண்டியதுதான் என்றாள்.
அவள் சொன்னதை கேட்டதும் ஷிவுவும், கீர்த்திகாவும் சரி என்று ஒப்புக்கொண்டனர்.
ஆனால் ராதா மட்டும் ஏதோ யோசனையிலேயே அமர்ந்து இருந்தால்.
அவள் அமைதியாக இருப்பதை பார்த்த துர்கா ஏய் ராதா என்ன ஆச்சு என்னமோ யோசனை இருக்கியே என்று கேட்டால்.
அது லெக்சரில் நைட்டு யாருக்கும் தெரியாம எப்படி ஆபீஸ் ரூம் குள்ள போய் அந்த செல்ல இருக்கிற நமக்கு தேவையான விஷயத்தை எப்படி தேடி கண்டுபிடிக்கிறது என்று யோசனை இருந்தேன் என்றால்.
அத பத்தி எல்லாம் நீயே யோசிச்சுட்டு இருக்க அதை நான் பார்த்துக்கிறேன் என்றாள் துர்கா.
இல்லக்கா இப்படியும் யாருக்கு தெரியாம தான் அந்த விபரத்தை எடுக்க போறீங்க…
கொஞ்சம் பொறுங்க ஏதோ வரேன் என்று கீர்த்திகாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
அவள் எங்கே கேட்டீர்கள் அழைத்துக் கொண்டு செல்கிறாள் என்று புரியாமல் துர்கா ஒருவர் மீது முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருக்க…
வெளியில் சென்ற சிறிது நேரத்திலேயே மூச்சு வாங்க ராதாவும் கீர்த்திகாவும் தங்கள் அறைக்கு ஓடி வர…
அவர்கள் மூச்சு வாங்க ஓடி வந்ததை பார்த்த துர்கா ஏய் என்ன ஆச்சு? ஏன் இப்படி தலை தெறிக்க ஓடி வரீங்க? எதுவும் பிரச்சனையா? என்று பதட்டமாக கேட்டால்.
அது எல்லாம் ஒன்னும் இல்ல அக்கா நாங்க ரெண்டு பேரும் அந்த பியூனுடை ரூமுக்கு தான் போயிட்டு வந்தோம் என்றால் ராதா.
பியுனோட ரூமுக்கா!!! இந்த நேரத்துல எதுக்குடி அங்க போனீங்க… மணி இப்பவே 10 ஆக போகுது, நீங்க ரெண்டு பேரும் இந்த நேரத்துல அங்க போறது யாரும் பார்த்து வச்சுட்டா நம்ம பிளான்ட் எல்லாமே கெட்டு போயிடும் என்று அவர்கள் இருவரையும் கடிந்து கொண்டால் துர்கா.
அக்கா இப்ப எதுக்கு நீ இப்படி பதட்டப்படற அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல நாங்க பியூன் ரூமுக்கு போறப்ப அவரு அங்க இல்ல அவரு ரவுண்ட்ஸ் போயிருக்கார் அவர் எப்பவுமே ரவுண்ட்ஸ் எல்லாம் முடிச்சுட்டு அவருடைய ரூமுக்கு வரதுக்கு 10:30-க்கு மேல ஆகிடுமாம் என்றால் ராதா.
அது எப்படி உனக்கு தெரியும் என்று கேட்டால் ஷிவு.
நான் காலையில இங்க இருக்குறவங்களையெல்லாம் பேட்டி இருக்கிற சாக்குல அவங்க கிட்ட இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் கேட்டு தெரிஞ்சு வச்சுக்கிட்டு அது இப்போ சமயத்துக்கு உதவுகிறதா? இல்லையா? என்றால் ராதா
சின்ன சின்ன விஷயத்தை தெரிஞ்சு வெச்சிக்காத இல்ல தப்பு இல்ல ஆனா அதை தெரிஞ்சு வச்சுக்கிட்டு இப்ப என்ன பிரயோஜனம் இப்ப எதுக்கு தேவையில்லாம நீ இப்படி உன்னோட ரூமுக்கு போயிட்டு வந்த என்றால் ஷிவு.
அங்கு ஒண்ணும் தேவையில்லாமல் பியூன் ரூமுக்கு போகல… காரணத்தோடத் தான் அவர் உனக்கு போனோம் என்ற ராதா கீர்த்திகாவை பார்க்க…
கீர்த்திகா இவ்வளவு நேரம் மறைத்து வைத்து இருந்த ஆபீஸ் ரூம் சாவியை தன் கட்டியிருந்த சேலைக்குள் இருந்து எடுத்தாள்.
சாவியை எடுத்து அவள் முகத்திற்கு நேராக தூக்கியவள் அவர்கள் அனைவரையும் பார்த்து சிரித்தபடி சாவியை ஆட்டி காட்டினால் கீர்த்திகா.
இது என்ன சாவடி என்று கேட்டால் துர்கா.
இதுதான் அந்த சொட்ட மண்டையில் சிங்காரத்தோட ஆபீஸ்ரூம் சாவி.
சிங்காரம் எப்பவுமே ஒன்பது மணிக்கு மேல ஆசிரமத்தில் இருக்க மாட்டாரு கிளம்பி அவர் வீட்டுக்கு போயிடுவாரு.
இந்த ஆசிரமத்தைச் சுற்றி ரவுண்ட்ஸ் எல்லாம் முடிச்சுட்டு பத்திரிக்கை மேல அவர் ரூமுக்கு போய் கதவை அடைச்சிட்டு படுத்தாருன்னா காலையில அஞ்சு மணிக்கு தான் வெளியே வருவார்.
நம்ம நைட்டு சிங்காரத்தோட ரூமுக்கு போய் அந்த பைல் எங்க இருக்குன்னு பார்த்து அதை தூக்கிட்டு வந்துருவோம். என்றால் கீர்த்திகா.
பரவாயில்லையே என் தங்கச்சிகளை என் கூட கூட்டிட்டு வந்தது எனக்கு பிரயோஜனமா தான் இருக்கு.
எத்தனை விஷயம் கேட்டு தெரிஞ்சு வச்சிருக்கீங்க ஆபீஸ் ரூம் சாவியை எடுத்துட்டு வந்து கொடுத்து பாதி வேலையை குறைத்து விட்டீர்கள் என்றால் துர்கா.
நாங்கல்லாம் யாரு என்று சொல்லி ராதாகவும் கீர்த்திகாவும் இல்லாத காவலரை தூக்கிவிட்டு துர்கா முன்பு கெத்துக் காட்டினர்.
சரி சரி லைட் நைட் ஒரு 12:00 மணிக்கு மேல நம்ம ஆபீஸ் ரூமுக்கு யாருக்கும் தெரியாமல் போய் அந்த பைலில் இருக்கிற விவரங்களை பார்த்துட்டு வந்துடலாம் இப்போதைக்கு கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடுங்க.
காலையிலிருந்து ரொம்ப எல்லாருமே அலைஞ்சிட்டோம் என்று சொல்லி தன் தங்கைகளை படுக்கச் சொன்னால் துர்கா.
நால்வரும் கதை பேசிக்கொண்டே படுத்துபவர்கள் தங்களையும் அறியாமல் உறங்கி விட்டனர்.
❤️
இனிய மாலை வகுப்பு முடிந்ததும் லேகா நேராக போதியின் ஆபீஸ் ரூமுக்கு சென்றவளிடம்.
போதி மாதவியை சந்தித்து அவளிடம் பேசுவதற்காக ஒரு போனை தயார் செய்து லேகாவிடம் கொடுத்து.
இதை எப்படியாவது மாதவிடாய் சேர்த்துவிட வேண்டும் என்று சொன்னான் போதி.
லேகாவும் போதி கொடுத்த மொபைலை வாங்கி தன் கைப்பைக்குள் வைத்தவள் அங்கிருந்து கிளம்பி நேராக
சங்கவியின் வீட்டின் முன்பு தயங்கிய படியே அவள் வீட்டை அண்ணாந்து பார்த்தபடி நின்று இருக்க …
மனதிற்குள் உள்ளே போகலாமா வேண்டாமா என்று பட்டிமன்றமே நடத்திக் கொண்டு இருந்தால் லேகா.
ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் தனியாக இவ்வளவு தூரம் வந்து விட்டோம்.
வந்ததும் வந்தோம் மாதவியை பார்த்து அவளுக்கு என்ன பிரச்சனை அவளை எப்படி இங்கிருந்து வெளியே அழைத்துச் செல்வது என்று அவளிடமே பேசினாள் தானே அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியும்.
கண்களை மூடி மூச்சை நன்கு உள் இழுத்து உள்ள விட்டவள்.
ஏய் லேகா உன்னால முடியும் மாதவி உன்னோட பெஸ்ட் பிரண்டு அவ ஏதோ ஒரு ஆபத்துல இருக்கா.
அவளுக்கு உன்னால் தான் உதவி செய்ய முடியும் அதுவும் இல்லாம போதி சார் என்ன நம்பித்தான் இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுத்து அனுப்பி இருக்கிறார் அவரோட நம்பிக்கையும் நான் கெடுத்திடக் கூடாது.
உன்னால கண்டிப்பா உள்ள போய் மாதவியை பார்த்து எந்த பிரச்சினையும் இல்லாம திரும்பி வர முடியும் தைரியமா இரு லேகா என்று தன் மனதிற்குள்ளேயே தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டு கண்களை திறக்க அவள் எதிரே சங்கவி நின்று இருந்தால்.
சங்கவியை ஓரிரு முறை மாதவியை அவள் காலேஜில் டிராப் செய்ய வரும்போது பார்த்திருக்கிறாள் லேகா.
தனக்கு தைரியம் சொல்லிக்கொண்டு கண்ணை திறந்ததும் தன் எதிரே சங்கமி நிற்பதை பார்த்ததும் லேகாவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.
தன் பயத்தை கஷ்டப்பட்டு மறைத்த லேகா தன் எதிரே நின்றிருந்த சங்கவியை பார்த்து அசடு வழிய சிரித்தால்.
அவளை ஒரு மார்க்கமாக பார்க்க சங்கவி யாருமே என்ன வேணும் உனக்கு என் வீட்டு முன்னாடி நின்னு கண்ண மூடி என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று அதிகாரமாக கேட்டால் சங்கவி.
ஐயோ இவ இந்த நேரத்துல இருக்க மாட்டான்னு விசாரிச்சிட்டு தானே நான் இங்கே வந்தேன் ஆனா இங்க வந்து பார்த்தா வாசல்லயே நந்தி மாதிரி இப்படி கையை கட்டி நின்னுட்டு என்ன கேள்வியை கேட்கிறாளே என்று மனதிற்கு புலம்பிய லேகா எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருக்க.
ஏய் நான் உன்கிட்ட தான கேட்கிறேன் உனக்கு காது கேட்குமா கேட்காதா யாருன்னு எதுக்கு நீங்க வந்து இருக்க இன்று போல் உன்னை பார்த்தால் பிச்சை எடுக்க வந்தவரியும் தெரியல நல்ல நீட்டா டிரஸ் பண்ணிட்டு தான் வந்திருக்க…
இல்ல வேற எதுவும் டொனேஷன் எதுவும் கேட்டு வந்து இருக்கியா அப்படியே டொனேஷன் வேணும்னாலும் வீட்டுக்கு வெளியே நின்னு கேட்க வேண்டியது தானே உன்னை எப்படி அந்த வாட்ச்மேன் உள்ளே விட்டான் அவனை என்று கோபமாக சங்கவி வாட்ச்மேன் அழைக்க போக…
வேகமாக இடைமறித்த லேகா ஐயோ… அக்கா வாட்ச்மேன் எதுவும் சொல்லாதீங்க… நான் மாதவியோட ஃப்ரெண்ட் லேகா..அவ கூட ஒன்னா படிக்கிறேன்.
ரெண்டு மூணு நாலு காலேஜ் பக்கமே வரல என்னோட ரெக்கார்டு நோட் மாறி கிட்ட இருக்கு அதையும் நான் நாளைக்கு உள்ள முடிச்சு சப்மிட் பண்ணி ஆகணும்.
எப்படியும் அடுத்த நாள் காலேஜுக்கு மாதவி வந்துருவேன் என்று சொல்லித்தான் என்னோட ரெக்கார்ட் நோட் அவளிடம் கொடுத்து விட்டேன் ஆனால் அவ காலேஜுக்கு வரல அதனால்தான் சரி நீ அவளுக்கு எதுவும் உடம்பு சரியில்லையோ என்னவோ நேரில் பார்த்துவிட்டு அப்படியே ரெக்கார்ட் நோட்டையும் வாங்கிட்டு போலாம்னு வந்தேன் என்றால் லேகா.
நீ மாதவியோட பிரண்டா என்று லேகாவை ஏற இறங்க பார்த்த சங்கவி. உனக்கு எப்படி இந்த வீட்டு அட்ரஸ் தெரியும் என்று கேட்டால்.
ஐயோ எப்படி மடக்கி கேள்வி கேக்குற பாரு.. இது எங்க வீடு பெரிய அரண்மனை இது யாருக்கும் தெரியாது பாரு என்று மனதிற்குள் நினைத்தவள் அது ஒன்னும் இல்லக்கா நான் மாதவியை ரெண்டு மூணு தரம் இங்கதான் கொண்டு வந்து டிராப்பண்ணி விட்டு இருக்கேன்.
அதனால்தான் எனக்கு உங்க வீடு தெரியும் இல்லன்னா எனக்கு எப்படி தெரியும் என்றால் லேகா.
ஓஹோ என்ற வாரு ரேகாவை சந்தேகப் பார்வையாகவே பார்த்தவள் சரி வா… என்று சொல்லி அவளை தன்னுடன் அழைத்துச் சென்றாள் சங்கவி.
லேகாவை அழைத்து வந்த சங்கவி ஹாலில் இருந்த சோபாவில் அமர சொல்லிவிட்டு நீ இங்கே இரு நான் போய் மாதவியை அழைச்சிட்டு வரேன் என்று சொல்லி மாதவியின் அறைக்கு சென்றால் சங்கவி.
சரி என்று தலையாட்டிவிட்டு அமர்ந்திருந்த லேகா சங்கவியின் வீட்டை சுற்றி வேடிக்கை அமர்ந்திருந்தால்.
உள்ளே சென்ற சங்கவி சற்று நேரத்தில் மாதவியுடன் வெளியே வந்தால்.
இத்தனை நாள் தன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்த மாதவி அவளைப் பார்க்க அவள் தோழி லேகா வந்திருக்கிறாள் என்று சங்கவி சொன்னதும் ஏதோ ஒரு நம்பிக்கை வந்தது போல சந்தோஷமாக அவர் அறிய விட்டு வெளியே வந்தவள் லேகாவை பார்த்ததும் ஓடிச்சென்று கட்டிக்கொண்டால்.
லேகாவை பார்த்ததும் எழுந்த உணர்ச்சிகளை அடக்கி கொண்ட மாதவி தன் கண்களில் படிந்த கண்ணீரை சங்கவிக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டவள்.
ஏய் லேகா வாடி எப்படி இருக்க என்று கேட்டால் மாதவி.
நான் நல்லா தாண்டி இருக்கேன் பாரு என்று சொல்லி சிரித்த லேகா ஆமா நீ என் ரெண்டு மூணு நாளா காலேஜுக்கு வரல உனக்கு உடம்பு எதுவும் சரி இல்லையா என்று அவள் நிச்சயம் கழுத்தையும் மாறிமாறி தொட்டு பார்த்து கேட்டால் உண்மையான அக்கறையோடு லேகா.
அவள் அப்படி கேட்டதும் சங்ககியை பார்த்த மாதவி பின் லேகாவை பார்த்து கொஞ்சம் உடம்பு முடியல அதனால்தான் நான் தொடர்ந்து ரெண்டு மூணு நாளா காலேஜுக்கு லீவு போட வேண்டியதா போயிடுச்சு என்றவள்.
உக்காருடி எதுவும் சாப்பிடுறியா நான் உனக்கு எதுவும் செஞ்சு எடுத்துட்டு வரேன் வெயிட் பண்ணு என்று சொல்லி மாதவி அங்கு இருந்து செல்ல போக…
ஏய் அதெல்லாம் எதுவும் வேண்டாம் டி நான் எனக்கு ஏற்கனவே லேட் ஆயிடுச்சு நான் இங்கு வருவதை வீட்டில் சொல்லாமல் தான் வந்து இருக்கேன்.
சீக்கிரமா வீட்டுக்கு போகலேன்னா என் அம்மா என்ன தோலை உரிச்சிடும் என்றவள் என்னோட ரெக்கார்ட் நோட் கொடுத்துட்டேனா நான் சீக்கிரம் கிளம்புவேன் என்றால்.
அவள் ரெக்கார்ட் நோட் என்றதும் புருவம் சுருக்கி மாதவி லேகாவை பார்த்து ரெக்கார்ட் நோட்டா யாருடைய ரெகார்ட் நோட் என்ன ரெகார்ட் நோட் என்று கேட்டால் மாதவி.
அவள அப்படி கேட்டதும் இல்லை லேகாவிற்கு இதயமே வெடித்து விடும் போல இருந்தது.
ஐயோ நான் இப்ப நான் இப்பதான் இவ அக்கா கிட்ட ரெக்கார்டு நோட்டு வாங்க வந்தேன்னு பொய்யை சொல்லிட்டு உள்ள வந்தேன்.
இவ அத புரிஞ்சுக்காம எந்த ரெக்கார்ட் நோட்டுன்னு வேற கேக்குறாலே என்று சங்கவியை லேகா பார்க்க…
மாதிரி சொன்னதே கேட்டு சங்கவி புருவம் முடிச்சிட லேகாவை பார்த்துக் கொண்டு நின்று இருந்தால்.
ஐயோ… இவ வேற இப்படி பார்க்கிறாலே இவ பார்க்குறத பார்த்தா எங்க நான் சொன்னது பொய்யின்னு கண்டுபிடிச்சுடுவா போல இருக்கு என்று உள்ளுக்குள் பயந்த ரேகா அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.
ஏய் மாதவி என்னடி எந்த ரெக்கார்டு நோட்டுன்னு கேக்குற என்னோட ஒரே ஒரு ரெக்கார்ட் நோட் அதை நான் நாளைக்கு சப்மிட் பண்ணி ஆகணும் நீ கூட அதை பார்த்து எழுதிட்டு தரேன்னு வாங்கிட்டு அந்த ரெகார்ட் நோட் தாண்டி என்று மதவியின் கையைப் பிடித்து அழுத்தி சொல்ல..
அவள் சொன்னது இப்போதுதான் லேகாவிற்கு புரிந்தது அந்த ரெக்கார்ட் நோட்டா இருடி என்னோட பேக்ல தான் இருக்கு நான் போய் எடுத்துட்டு வந்துட்றேன் என்று சொல்லிவிட்டு மாதிரி உள்ளே செல்ல போக…
ஐயோ இந்த அறிவு கெட்டவளே வச்சுக்கிட்டு நான் என்ன பண்றது கொஞ்சமாவது ஏதாவது யோசிக்கிறாளா பாரு இவளை தனியா பார்த்து பேசி எதுவும் பிரச்சனையான்னு கேட்டு தெரிஞ்சுக்கத்தான் தான் நான் இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்து இங்கே வந்திருக்கேன்.
அது புரியாம என்னை இங்கேயே இருக்க வச்சுட்டு இவ போய் ரெக்கார்ட் நோட்டு எடுத்துட்டு வரேன்னு சொல்றாளே என்று கடுப்பான லேகா.
உள்ளே செல்லப்போன மாதவியை பிடித்து தன் அருகில் நிறுத்தியவள். ஏ லூசு நான் உன்னை தனியா பார்த்தேன் பேச தாண்டி இவ்வளவு தூரம் வந்திருக்கேன்.
அது புரியாம என்னை இங்கேயே விட்டுட்டு நீ பாட்டுக்கு உள்ள போற அறிவு கெட்டவளே என்று பல்லை கடித்துக் கொண்டு சங்கவிக்கு கேட்காத வண்ணம் திட்டினால் மாதவியை.
லேகா சொன்னதை கேட்டு மாதவி அசடு வழிய அவளை பார்த்து சிரிக்க…
இப்படி சிரிச்சு நின்னுட்டு இருக்காதடி எப்படியாவது என்ன ஒரு ரூமுக்குள்ள கூட்டிட்டு போ என்று லேகா அவள் காதை கடித்தால்.
அவர்கள் இருவரும் ஏதோ ரகசியம் பேசுவதை பார்க்க சங்கவி அங்கு என்ன ரெண்டு பேரும் சத்தம் இல்லாமல் பேசிக்கிட்டு இருக்கீங்க என்று அதட்ட…
அவள் அதட்டியதில் நடுங்கிய மாதவி அது… அது வந்துக்கா… லேகாவுக்கு பாத்ரூம் வருதாமா அதான் என்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தா பாத்ரூம் எங்கே என்று கேட்டால் என்றால் மாதவி பதறிய படி.
பாத்ரூம் தானே போகணும்னு சொன்னா பரலோகத்துக்கு ஒன்னும் போக மாட்டேன் என்று சொல்லலியே அப்புறம் எதுக்கு இப்படி இதை போய் ரகசியம் பேசிக்கிட்டு இருக்கீங்க..
போ…. உன் ரூமுக்கு கூட்டிட்டு போ என்று சங்கவி அதிகாரம் செய்ய..
நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் இன்னும் கொஞ்ச நேரம் நான் இங்கே இருந்தேன் கண்டிப்பா நான் பரலோகம் தான் போவேன் என்று மனதில் நினைத்த லேகா மாதவியை தள்ளிக்கொண்டு அவள் அறை எங்கே கேட்டபடி செல்லப் போக..
லேகா ஒரு நிமிஷம் நில்லு என்றால் சங்கவி
அவள் திடீரென்று அழைத்ததும் இருவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்ற இடத்தில் இருந்தே திரும்பி சங்கவியை பார்க்க…
அந்த ஹேண்ட்பேக் இங்கேயே வச்சுட்டு போ என்று பார்வையாலே சோபாவை காட்ட…
சரி என்று லேகாவின் தலை தானாக ஆடியபடி தன் தோளில் மாட்டியிருந்த ஹேண்ட் பேக்கை எடுத்து சோபாவில் வைத்துவள் மாதவி தள்ளிக்கொண்டு வேகமாக அவள் அறைக்குள் சென்றாள்.
