Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 198

உன் ரகசிய ரசிகை நான் 198

by Layas Tamil Novel
159 views

Episode-198

மாதவியை இப்பொது உன் வீட்டிற்கு வந்து என்னுடன் அழைத்து வருகிறேன் என்று போதி சங்கவியின் வீட்டிற்கு கிளம்பினான்.

அவன் சொன்னது போலவே அடுத்த இருபது நிமிடத்தில் சங்கவியின் வீட்டு வாசலில் வந்து போதியின் கார் நின்றது.

பிதி அவசரமாக காரை விட்டு கீழே இறங்கி சங்கவியின் வீட்டிற்குள் நுழைய… அவனை வாசலிலேயே தடுத்து நிறுத்தி இருந்தான் அவள் வீட்டு வாட்சமன்.

அவள் வீட்டு வாசலில் நின்றவரே போதி மாதவி… மாதவி என்று கத்தினான்.

அவன் சங்கவியின் வீட்டிற்கு வந்ததில் இருந்து சங்கவி தன் பெறூம் ஜன்னல் வழியாக அவனை பார்த்துக்கோ கொண்டு இருந்தவள் அவன் மாதவியின் பெயரை சொல்லி சத்தமிடவும் நக்கலாக அவனை பார்த்து சிரித்தவள் வாட்ச்மனிற்கு கால் செய்து போதியை உள்ளே விட சொல்லிவிட்டு போனை வைத்தவள் திருப்பி தன் எதிரே நடுங்கிக் கொண்டு நின்று இருந்த மாதவியை பார்த்த சங்கவி.

ஏய்… என்ன டி… என்னை பார்த்து பயந்து நடுங்குற மாதிரி நடிக்கிறியா… உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சிருந்தும் என் வீட்டுக்கே வேளைகாரியா இங்கே வந்து இருப்ப…

இந்த வயசுல உனக்கு அவ்வளவு தைரியமா டி… என்னை பற்றி எல்லா விஷய்தயும் தெரிஞ்சு வெச்சிட்டு தைரியமா என்வாழ்க்கைவீட்லயே இத்தனை நாள் இருந்திருப்ப..

என்னை இவ்வளவு நாளும் நடிச்சு ஏமாத்தி இருக்கே இல்ல என்று அவள் குரல்வலையை பிடித்து நெருக்க…

மாதவி சங்கவியின் கையை பிடித்துக்கொண்டு கொண்டு அக்கா… அக்கா… வலிக்குது என்று கண்களில் நீர்வழிய கெஞ்சியவள் தயவு செய்து நான் சொல்றதை கேளுங்க அக்கா..

நான் உங்களை எதுவும் செய்துடா இங்கே வரலை அக்கா நான் சொல்றதை நம்புங்க என்றாள் மாதவி.

ஏய்.. ச்சி.. வாயை மூடு சும்மா இப்பவும் என்னை ஏமாத்தணும்ன்னு அழுது வடிஞ்சு நடிக்காத டி… இதை எல்லாம் போய் கீழே உனக்காக இவ்வளவு தூரம் வந்து இருக்கான் பாரு அவன் கிட்டே போய் காட்டு என்கிட்டே இது எல்லாம் எதுவும் வேகாது என்றவள் அவள் கழுத்தில் இருந்து தன் கையை எடுத்தவள் மாதவியின் முடியை கோத்தாக பிடித்து நான் சொன்னதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு தானே என்றாள் கனகல் சிவக்க… குரூரமாக மாதவியை பார்த்து.

மாதவி அவள் முகத்தை பார்த்து பயந்து போய் பீதி அடைந்தவள் நியாபகம் இருக்கு அக்கா என்றாள் நடுங்கியபடி.

அவள் முடியை பிடித்து அப்படியே தர தர வென இழுத்துக் கொண்டே நான் சொன்ன மாறி நடந்துக்கணும்.

வேற எதுவும் நான் சொன்னதை மீறி கொஞ்சம் பிசாகுற மாதிரி நடந்துச்சு அப்பறோம் நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்லை என்று சொல்லி தன் இடுப்பில் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை காட்டி சொன்னாள் சங்கவி.

அதை பார்த்ததும் மாதவிக்கு மேலும் பயமா பிடித்து ஆட்ட… நான் நீங்க சொன்ன மாதிரியே செஞ்சுடறேன் அக்கா என்றாள்.

குட் என்ற சங்கவி விளங்கமாக சிரித்துக் கொண்டே அவள் முடியை பிடித்து இழுத்த படி மடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள் சங்கவி.

மாதவி… மாதவி… எங்கே இருக்க… மாதவி… என்று அஃத்திக் கொண்டே போதி சங்கவியின் வீட்டிற்குள் நுழைந்து கத்திக் கொண்டே வந்தான்.

வாங்க மிஸ்டர் போதி.. WELCOME TO மை SWEET HOME என்று சொல்லிக்கொண்டே மாதவையின் முடியை விடாமல் இழுத்துக் கொண்டு கீழே வந்தாள் சங்கவி.

மாதவியின் முடியை பிடித்து இழுத்துக் கொண்டு வந்த சங்கவியியை பார்த்து ஆத்திரம் கொண்ட போதி வேகமாக படிகளில் ஏறி சங்கவியின் அருகில் வந்து மாதவியின் முடியை பிடித்து இருந்த கையை விளக்க போக..

அவன் கை மாதவியை நோக்கி உயரும்போது தன் சட்டைக்குள் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து மாதவியின் நெற்றியில் வைத்தாள்.

இதை சற்றும் எதிர் பாராத போதி அப்படியே உறைந்து போய் நிற்க..

என்ன போதி இவ்வளவு நேரம் என்னவோ ஹீரோ மாதிரி வீரமா வந்தே.. இப்போ என் கையில் இருக்க துப்பாக்கியை பார்த்து அப்படியே ஸ்தம்பித்து போய் நிக்கிற என்றாள் நக்கலாக.

அவளை முறைத்தபடி நின்று இருந்த போதி மாதவியை பார்த்து மாதவி என்ன இதெல்லாம் நீ ஏன் இவளுக்கு பயந்துட்டு இங்க இருக்க…

நீ… இவங்க வீட்டில் வேலைக்கு தானே வந்தே மாதவி. அப்பறோம் ஏன் இவளுக்காக பயந்துட்டு இருக்க என்றான் போதி.

மாதவி எவும் பேசாமல் அமைதியாக இருக்க… அவ கிட்டே நீ என்ன பேசினாலும் நானா சொல்ற வரை அவ வாயில் இருந்து ஒரு வார்த்தையையும் உன்னால வாங்க முடியாது என்றவள்.

மாதவியை போதியின் மீது பிடித்து தள்ளிய சங்கவி. இந்தா உன் மாதவி நீதான் என்னவோ சொன்னியே… நீ வந்து மாதவியை உன்கூட கூட்டிட்டு போறேன்னு சொன்னியே..

எங்கே இப்போ அவ உன்கூட தான் இருக்கா எங்கே அவளை உன்கூட கூட்டிட்டு போ பாக்கலாம் என்றாள் திமிராக.

அவள் சொல்வதை கேட்டு மாதவியை பார்த்த போதி வா மாதவி இனிமேல் நீ இங்கே இருக்க வேண்டாம். எக்கூட வந்திடு நாம போகலாம் என்று சொன்னவன் அவள் பதிலையும் எதிர் பாக்காமல் மாதவியின் கையை பிடுத்து இழுத்துக் கொண்டு படிகளில் வேகமாக இறங்கினான.

அவன் இழுப்புக்கு சென்ற மாதவி ஒரு கட்டத்தில் நின்றுவிட… அவளை பெருய்யாமல் போதி திரும்பி பார்த்து என்ன ஆச்சு மாதவி வா போலாம் என்று அவள் கையை பிடித்து இழுக்க..

அவன் கையில் இருந்த தன் கையை உதறியவள் நான் எங்கயும் வரல போதி… என்னை இங்கேயே விட்டுடுங்க… என்று கண்களை மூடிக்கொண்டு கத்தினால்.

இதை சற்றும் எதிர்பாராத போதி மாதவி என்று குழப்பமாக அழைக்க..

அவன் முன்பு கை எடுத்து கும்பிட்டு தயவு செய்து நான் சொல்றதை கேளுங்க என்னை பத்தி கவலை படாமல் நீங்க முதல்ல இங்கே இருந்து போங்க…

நான் எங்கயும் வரலை என்று போதியிடம் கெஞ்சினால் மாதவி.

மாதவி என்ன ஆச்சு நீ அவளை பார்த்து பயப்படுறீயா? அவ அப்படி என்ன செய்துட்டா உன்னை எதுவும் சொல்லி மிரட்டுராளா என்றான் போதி.

மாதவி எதுவும் பேசாமல் அழுத படி நிற்க…

ஏன் மாதவி எதுவும் பேச மாட்டேங்குற.. அவ கையில் இருக்க துப்பாக்கியை பார்த்து பயந்துட்டியா?? அதை வெச்சு உன்னை கொன்னுருவேன்னு எதுவும் மிரட்டுறளா என்றான் போதி.

மாதவி இல்லை என்று தலையை ஆட்ட… பின்னே உன்னையும் என்னையும் பிரிச்சிருவேன்னு ட்ட்டுதுவும் சொன்னாளா என்றான் போதி.

மாதவி அதற்கும் இல்லை என்று அழுத்தபடி தலையை இட வலமாக ஆட்ட…

அப்பறோம் என்ன மாதவி நீ ஏன் இவளுக்கு எல்லாம் பயந்துட்டு இருக்க.. எது நடந்தாலும் வா பார்த்துக்கலாம் நான் இருக்கேன் நீ பயப்படாம என்கூ என்னை நம்பி வா.. என்று அவள் முன்பு தன் கையை நீட்டி மாதவியை அழைக்க..

மாதவி ஆல்டத்துக்கொண்டே போதியின் முகத்தை பார்த்தவள் என்னை மன்னிச்சிருங்க போதி என்னால இந்த வீட்டை விட்டு எங்கயும் வர முடியயாது.

என்னை பத்தி கவலை படுறதை விட்டுட்டு நீங்க இங்கே இருந்து முதல்ல போங்க… இன்னை எவ்வளவு நாளா உங்களுக்கு தெறியும் என்னை பத்தி எதுவும் உங்களுக்கு தெரியாது.

நான் சொல்றதை கேளுங்க போதி நான் இந்த சென்னைக்கு வந்தது ரெண்டு விசயத்துக்காக ஒன்னு என்னோட குடும்பத்தை தேடி இங்கே வந்தேன்.

ரெண்டாவது நான் இங்கே வந்ததுக்கு முக்கிய காரணமே நீயும் உன் குடும்பமும் தப்பி போதி என்றாள் அழுது கொண்டே.

மாதவி சொல்வதை நம்ப முடியாமல் போதி அவளையே பார்க்க..

நம்ப முடியலையா தி… என்றவள் நீயும் உன் குடும்பமும் ஒரு முறை நான் இருக்க ஆசிரமதுக்கு குடும்பத்தோட வந்து அங்கே இருக்கவங்களுக்கு எல்லாம் என்ன தேவையோ கேட்டு எல்லாருக்கும் வேணுங்குதை எல்லாம் கேட்டு செஞ்சு கொடுத்தீங்க..

நீங்க நான் இருக்க ஆசிரமதுக்கு வந்த அப்போ நான் பத்தாவது படிச்சிட்டு இருந்தேன்.

எல்லார் கிட்டயும் அவங்களுக்கு எல்லாம் என்ன வேணும்னு நீயும் உன் வீட்டில் இருக்கவங்களும் கேட்டீங்க.. அதேபோல உன் அம்மா வந்து என்கிட்ட கேட்டாங்க ,

நான் என் அம்மாவை பாக்கணும்னு சொல்லி அழுத்தைன் அவங்க கிட்டே.. நான் கேட்டத்தை பார்த்துட்டு உன் அம்மா என்னை கட்டி அனைச்சிட்டு நீ அம்மா பாசத்துக்காக ஏங்குறதுஎனக்கு புரியுது மா..

ஆனா எனக்கு என்ன சொல்லி உன்னை சமாதானம் செய்றது நீ கேக்குறதை கொடுக்குறதுனு தெரிரியல இருந்தும் நீ அம்மாவுக்காக இவ்வளவு ஏங்குற அப்போ என்னால ஒண்ணே ஒன்னு தான் செய்ய முடியும் என்றவர் நீ பேசாம என்கூட எங்க வீட்டுக்கு வந்துடு உன்னை நான் என் பொண்ணு மாதிரி பாத்துக்கிறேன்னு சொன்னாங்க.

நீயும் என் கையை பிடிச்சிட்டு என்கூட வந்திடுன்னு என்னை கூப்பிட்ட போதி. அந்த வார்த்தை நீ என்னை பாத்துக்கிறேன்னு சொன்னது எனக்கு அந்த நேரத்துல எவ்வளவு ஆறுதலா இருந்ததுன்னு உனக்கு தெரியாது போதி.

அந்த ஒரு வார்த்தை நீ சொன்ன அந்த ஒற்றை வார்த்தைக்காக தான் நானிங்க வந்தேன்.

வந்ததும் முதலில் ஒரு இடத்துல வேலை செய்துட்டு இருந்தேன் அவங்க மூலமா என் அம்மா இருக்க இடம் தெரிஞ்சு தான் சென்னைக்கு வந்தேன்.

ஆனா என்னால அவங்களை நேரா போய் பார்க்க முடியலை என்றவள் சங்கவியை திரும்பி பார்க்க..

அதுக்கு பிறகு என்ன சொல்லு… என்றாள் சங்கவி நக்கலாக.

மாதவி அதன் பின் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க..

சொல்லு மாதவி உன் அம்மா எங்கேன்னு கண்டு பிடிச்சுட்டியா அவங்க யாருனு சொல்லு.. அவங்க இருக்க இடத்தை கண்டு பிடிச்சுட்டியா சொல்லு நான் அவங்க எங்கே இருந்தாலும் நான் அவங்களை உன்கிட்டே கூட்டிட்டு வந்து சேர்த்துடறேன்.

இவ உன்னை உங்க அம்மா கிட்டே சேர விட மாட்டேன்னு எதுவும் சொல்லி பயமுறுத்துறாளா என்று கேட்டான் போதி.

அவன் அப்படி சொன்னதும் மாதவி பயந்து கொண்டே சங்கவியை பார்க்க..

சங்கவி சிரித்துக் கொண்டே கிழே இறங்கி வந்தவள் மாதவியிடம் வந்து அவள் தோளில் கையை போட்டு தன்னுடன் நடக்க வைத்துக் கொண்டே போதியிடம் நீ என்ன சொல்லி கூப்பிட்டாலும் அவ உன்கூட எங்கயும் வர மாட்டா..

நான் சொல்லாம இந்த வாசல் பாட்டியை கூட தாண்ட மாட்டா…

வீனா நீ இவகிட்டே கெஞ்சி உன் நேரத்தை வீண் பண்ணாத என்றவள் தன் அருகில் இருந்த மாதவியை பார்த்து சிரித்துவிட்டு திரும்பி போதியை பார்த்து நீ இப்போ இங்கே இருந்து வெளியே போறியா இல்லை இவ வாயாலயே உன்னை வெளியே போக சொல்லட்டுமா என்றாள்,

போதி மாதவியையும் சங்கவியையும் பார்த்தவன் மாதவியிடம் என்கூட வந்துடு டி.. என்று கெஞ்சினான்.

மாதவி அழுத்தபடி இல்லை என்று தலையை இடவலமாக ஆட்டி தான் அவனுடன் வரவில்லை என்று சொல்லி கை எடுத்து கும்பிட..

அடடடா… இந்த செண்டிமெண்ட் சீனை எல்லாம் என்னால பார்க்க முடியலை என்றவள் மாதவயின் மேல் இருந்து தன் கையை எடுத்துவிட்டு உள்ளே போ… என்றாள்.

மாதவி போதியை பார்க்க… அவனை ஏன் டி… பாக்குற… போடி உள்ளே என்று சொல்லி அவள் தோளில் கையை வைத்து தாலி அங்கிருந்த அறைக்குள் தள்ளி கதவைடைத்தால்.

இதை சற்றும் எதிர் பாராத போதி பதறிக் கொண்டு மாதவி இருந்த அறைக்கு செல்ல போக..

செக்யூரிட்டி என்று சங்கவி கத்த அடுத்த நிமிடம் அவள் வீட்டில் இருந்த செக்யூரிட்டி வந்து அவள் முன்பு நின்றான்.

இவனை பிடிச்சு வெளியே தள்ளு என்றாள் அஃரோசமாக.

போதியின் மீது கை வைக்க வந்தவனை திரும்பி போதி பார்க்க… அவன் பார்த்த பார்வையில் பயந்த செக்யூரிட்டி எதுவும் செய்யாமல் அமைதியாக நிற்க…

சங்கவியிடம் திரும்பி நான் இப்போ போறேன் சங்கவி என் மாதவியை நான் முறையோட வந்து இந்த வீட்டில் இருந்து அழைச்சிட்டு போவேன். அதுவும் அவ அம்மாவோட வந்து அழைச்சிட்டு போவேன் என்றவன் மாதவி இருந்த அறையை ஒருமுறை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

போ.. போ,… நீ எங்கே போஇ தேடினாலும் அவ அம்மாவை உன்னால கண்டே பிடிக்க முடியாது என்று நினைத்துக்கொண்டாள்.

❤️

துர்காவை பார்க்காமல் வரமாட்டேன் என்று ஆதி அங்கேயே இருந்துவிட..

இங்கு தங்கள் தேடி வந்த தகவல் தங்களுக்கு கிடைத்துவிட்டது என்று சந்தோசத்தில் இருந்தானர்.

ராதாவுடன் கோவித்துக் கொண்டு சந்தோஷ் முகத்தை தூக்கி வைத்திக் கொண்டு இருந்தான்.

அவனை ராதா சமாதானம் செய்யவே நீண்ட நேரம் ஆகிவிட அதிகாலை போல மற்றவர்கள் தூங்க ஆரம்பிக்க..

தான் தேடி வந்தாதகவல் கிடைத்துவிட்டது இதை முதலில் ஆதிகேற்கு சொல்ல வேண்டும் என்று தூங்காமல் இருந்த துர்கா தன் மொபைலை எடுத்துக்க கொண்டு தூங்குபவர்களை டிஸ்டர்ப் செய்யாமல் அறையை விட்டு வெளியே வந்தவள்.

சிறிது தூரம் காலாற நடந்து சென்றவள் அங்கே ஆசிரமத்தில் இருப்பவர்கள் காலையிலேயே அங்கே இவர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த பூங்காவில் நடை பயிற்சி செய்து கொண்டு இருந்தனர்.

சிலர் நடைப்பயிற்சியில் ஈடு பட்டு இருக்க… சிலர் ஒரு இடத்தில் கூடி யாருடனோ சத்தமாக சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர்.

இவ்வளவு காலையில் அபப்டி என்ன பேசி சிரிக்கிறார்கள் என்று ஆர்வமான துர்கா அவர்கள் அருகில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக செல்ல..

அங்கே அவர்களுக்கு நடுவில் அமர்ந்து சிரித்த முகமாக பேசிக் கொண்டு இருந்தாஹ் ஆதியை பார்த்து அப்படியே உறைந்து போய் நின்று விட்டாள்.

ஆதியிடம் போன் பேசலாம் என்று வந்தவலுக்கு ஆதியை நேரில் பார்த்திதும் இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது,

அவனை பார்த்ததும் சந்தோசத்தில் ஓடி சென்று ஆதியை பின் இருந்து அணைத்துக் கொள்ள..

ஆதியை துர்கா கட்டிக்கோ கொண்டதை பார்த்த மற்றவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரிந்து இருக்கிறது போல என்று அங்கிருந்து கலைந்துவிட…

தன் முதுகில் மொத்தமாக தன் எடையை போட்டு இருந்தவளின் கையை பிடித்துக்கொண்டு கொண்ட ஆதி துர்காவை அப்படியே தூக்கி உப்பு மூட்டை சுமந்து என்ன மேடம் எப்படி இருக்கீங்க..என்றான்.

நீ பக்கத்துல இல்லாம நான் எப்படி இருப்பேன் ஆதி என்றாள் அவன் காதில் ஊதியவரே…

அவள் சொல்வதில் சிரித்தவன் மிஸ் யூ.. டி செல்ல பொண்டாட்டி என்றான் ஆதி.

மீ டூ டா.. புருஷா என்றவள் அவன் முதுகில் இருந்து இறங்க போக….

எங்கே இரங்குற… இரு என்றவன் அவளை விடாமல் தூக்கிக்கொண்டே அந்த ஆசிரமம் வாயில் வரை வந்தவன் துர்காவை கீழே இறக்கி விட…

துர்கா சிரித்த முகமாக அவன் இறக்கிவிட்டதும் அவன் முன் வந்து சிறு பிழை தாயை பார்த்தது போல வந்து அவன் கை பிடித்து நிற்க…

என்ன துர்கா… வழக்கதுக்கு மாறா… உன் முகம் இன்னிக்கு ரொம்ப பிரகாசமா இருக்கு என்றான் ஆதி.

உன்னை பார்த்ததும் என் முகம் பிரகாசம் ஆகியிருச்சு ஆதி என்றாள் அதே சிரித்த முகத்தோடு.

சரி வா என்று அவள் கைபிடித்து அழைத்து சென்றவன் தன் காரிற்கு அழைத்து சென்றவன் அவளை காரின் பின் சீட்டில் அமர வைத்துவிட்டு தாணும் மறுபக்கம் வந்து ஏறி அமர்ந்து கதவை அடைத்துவிட்டவன்.

நொடியும் தாமதிக்காமல் துர்காவை தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டு வருடகணக்கில் பட்டினி இருந்தவன் போல துர்காவின் இதழை ஏக்கமாக பார்த்தவன் அடுத்த நொடி அவள் இதழை சிறை செய்து இருந்தான்.

துர்காவும் தகத்திற்காக ஏங்கியிருந்த கன்று போல அவன் கைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு அவனிடம் தன் இதழை கொடுத்துவிட்டு அவன் மடியில் அமர்ந்து இருந்தாள்.

நீண்ட நேரம் முத்தம் கொடுத்தத்தில் இருவருக்குமே மூச்சு விட சிரமமாக இருக்க..

ஒருவர் இதழை ஒருவர் விடுத்து மூச்சு வாங்க நெற்றி முட்டி ஒருவர் முகத்தை ஒருவர் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு நீ எப்போ இங்கே வந்த ஆதி. நான் உனக்கு கால் செய்ய தான் கார்டனுக்கு வந்தேன் அங்கே வந்து உன்னை பார்த்ததும் ரொம்ப சந்தோசமா ஆகிருச்சு என்றாள்.

நான் நேத்து நைட்டே நாங்க எல்லாரும் உன்னையும் மத்தவங்களையும் பார்க்கங்கே வந்தோம். அப்போ ராதா திருடன்.. திருடன்னு கத்துற சத்தம் கேட்டதும் வந்தவங்க எல்லாரும் தளை தெறிக்க வஙக வழியே திரும்பி ஓடிட்டாங்க…

நான் உன்னை பார்த்தா தான் நிம்மதியா இருக்கும்னு எங்கயும் போகாம இங்கேயே இருந்துட்டேன்.

காலையில் எல்லாரும் வாக்கிங் வரதை பார்த்துட்டு நானும் சும்மா வாக்கிங் வர மாதிரி உள்ளே வந்துட்டேன் என்றான் ஆதி.

சரி சொல்லு போன விஷயம் என்ன ஆச்சு எதுவும் தெரிஞ்சுதா செண்பகம் அத்தை பொண்ணு பத்தி எதுவும் உனக்கு தெரிஞ்சுதா என்றான் ஆதி.

போன காரியம் நல்ல படியா முடிஞ்சிது ஆதி . இந்தா என்று சொல்லி தான் ப்ளௌசிற்குள் இருந்து ஒரு துண்டு காகிதத்தை எடுக்க கையை அவள் ப்ளௌசிற்குள் விட போக..

ஆதி ஆர்வமாக துர்காவை பார்த்துக்கொண்டு இருந்தான்.

ச்சி… போடா.. அந்த பக்கம் திரும்பு அப்போ தான் நான் எடுத்து தருவேன் என்றாள் துர்கா அவன் மடி மீது இருந்தப்படி.

நான் தானே பாக்குறேன் இதுல என்ன உனக்கு வெட்கம் துர்கா… நான் என்னவோ இதுக்கு முன்னே உன்னை முழுசாபார்க்கைத மாதிரி இல்ல வெட்கப்படுற என்றான் ஆதி.

போ… ஆதி நீ வர வர ரொம்ப மோசம் ஆகிட்டே போற.. என்றவள் அவன் முகத்தை பிடித்து வேறு பக்கம் திருப்பியவள் தன் ப்ளௌசிற்குள் இருந்து நேற்று இரவு குறித்து வைத்து இருந்த செண்பகத்தின் பெண்ணை பற்றிய விபரத்தை எடுத்து ஆதியிடம் நீட்டினால்.

தன் முகத்தை திருப்பியவள் முகத்தை பார்த்து முறைத படி நீ வீட்டுக்கு வா உன்னை என்ன செய்றேன் பாரு என்றவன் அவள் நீட்டியா துண்டு காகிதத்தை வாங்கி அதில் இருந்த அட்ரசை புருவம் சுருங்க பார்த்தவன்.

இதுதான சரியா தெரிரியுமா என்றான் ஆதி தெரியும் ஆதி இந்த அட்ரஸ் தான் இது என்றாள் துர்கா.

சரி அப்போ நாம உடனே சென்னை கிளம்பனும். நமக்கு அங்கே இனிமேல் தான் நிறைய வேலை இருக்கு என்றான் ஆதி சரி ஆதி அப்போ நான் போய் எல்லாரையும் தயாராக சொல்லி கூட்டிட்டு வரட்டுமா என்று அவன் மடியில் இருந்து எழுந்திருக்க போனால் துர்கா.

எங்கே போற.. அவங்க கிட்டே நீ என்கூட சென்னை கிளம்பிட்டாதா இன்போர்ம் பண்ணிடு.. நானும் கதிர் கிட்டே விபரம் சொல்லி எல்லோரையும் கூட்டிட்டு சென்னை வர சொல்லிடறேன்.

நீயும் நானும் முதல்ல சென்னை கிளம்பலாம் என்றவன் துர்காவை மீண்டும் முத்தமிட்டுவிட்டு தன் மாட்டியில் இருந்து இறக்கி சீட்டில் அமர வைத்தவன் இனிதான் ரொம்ப விரு விருப்பா போக போகுது சீக்கிரம் நாம கிளம்பலாம் என்றாள் துர்கா.

என்ன ஆதி சொல்றே அப்படி என்ன விரு விருப்பா நடக்க போகுது என்றாள் துர்கா.

என்கூட சென்னை வா எல்லாம் புரியும் எண்டவன் இறங்கி டிரைவர் சீட்டில் அமர்ந்து துர்காவையும் முன்னாள் அமர சொன்னவன் அவள் அமர்ந்த பின்பு காரை நேராக ஏர்போர்டிற்கு செலுத்தினான்.

சென்னையில் என்ன அதிர்ச்சி காத்திருக்க போகிறதோ என்று யோசனையில் துர்கா அமைதியாக ஆதியுடன் கிளம்பினால் .

துர்கா கீர்த்திகாவிற்கு அழைய்தி விபரம் சொல்லி அனைவரையும் அழைத்துக் கொண்டு அடுத்த பிலைட்ட்டில் கிளம்பி வர சொன்னவள். விக்கி. கதிர் தங்கி இருக்கும் இடத்தை சொல்லி அவர்களையும் அழைத்து வர சொல்லி விபரம் கூறி போனை வைத்தாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured