Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான்37

உன் ரகசிய ரசிகை நான்37

by Layas Tamil Novel
613 views

தன் மீது துர்காவுக்கு அன்பும், மிகுந்த பாசமும் உள்ளது என்று ஆதி புரிந்து கொண்டான். ஆதி தன்னைப் பற்றி இவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறான் என்பதை நினைத்த துர்காவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அந்தச் சந்தோஷத்தின் வெளிப்பாடு அவள் கண்களில் இருந்து கண்ணீராக வெளிப்பட, அதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்று அனைவரும் தன்னை பார்க்கும் முன்னர் அங்கிருந்து ஓடிவிட்டாள்.

துர்கா மேடையில் இருந்து கீழே இறங்கிச் செல்வதை மட்டும்தான் மற்றவர்கள் பார்த்தார்கள். ஆனால், ஆதி பேசியதை அனைவரும் கவனித்ததால் துர்காவை யாரும் கவனிக்கவில்லை. அவள் அழுது கொண்டே சென்றதை யாரும் கவனிக்காதபோது…

மேடையில் இருந்த ஆதி அவளைப் பார்த்துக் கொண்டுதான் பேசிக் கொண்டிருந்தான் என்பதால், அழுது கொண்டு சென்ற துர்காவைக் கவனித்தவன், பேசி முடித்ததும் மைக்கை மேடையில் இருப்பவரிடம் கொடுத்துவிட்டு, மேடையில் இருந்து இறங்கி துர்காவைக் காண அவள் பின்னாலேயே சென்றான்.

இங்கு ஆதி, துர்கா அழுது கொண்டே சென்றதைப் பார்த்து அவள் பின்னாடியே சென்றதைக் கவனித்த கதிரும் விக்கியும் ஒருவரை ஒருவர் பார்க்க, விக்கி கதிரிடம், “நான் சொன்னேன் இல்லையா? கூடிய சீக்கிரத்தில் உங்க அண்ணன் துர்காவைப் பற்றி ஒரு அளவுக்குப் புரிந்து கொள்வான் என்று. இப்பதான் உங்க அண்ணன் துர்காவைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கான். இன்னும் கொஞ்ச நாளில் துர்காவை முழுசாப் புரிஞ்சுகிட்டு, அவளைத் தன்னோட மனைவியா ஏத்துக்கிட்டு வாழப் போறான் பாரு,” என்றான் விக்கி.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சங்கவி, “இந்த துர்கா கூட எப்படி ஆதி சேருகிறான் என்று நானும் பார்க்கிறேன். ஆதியை என்ன ஆனாலும் துர்கா கிட்ட சேர நான் விடவே மாட்டேன்,” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவள், யாருக்கும் தெரியாமல் ஆதியின் பின்னாலேயே சென்றாள்.

ஆதி, துர்கா அழுது கொண்டு கண்டிப்பாக தங்கள் ரூமிற்குத் தான் சென்றிருப்பாள் என்று நினைத்துக் கொண்டு தங்கள் ரூமுக்குச் செல்லப் போக, அப்போது திடீரென்று அவன் முன்னாள் வந்து சங்கவி அவனை வழிமறித்து நின்றாள்.

சங்கவியைக் கண்டதும் எரிச்சலான ஆதி தன் முகத்தைச் சுழித்துக் கொண்டவன், “ஏய்… இப்ப நீ எதுக்கு இங்க வந்த? முதல்ல வழி விடு. இப்ப எதுக்கு என்னை மறைச்சுட்டு நின்னுட்டு இருக்கே?” என்று ஆதி கோபத்தோடு சங்கவியைப் பார்த்துக் கேட்க,

“என்ன ஆதி, என்னைப் பார்த்து இப்படி எரிஞ்சு எரிஞ்சு விழற? நான் அப்படி என்ன பண்ணிட்டேன்? ஏதோ ஒரு அவசர புத்தியால் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்று நான் எல்லார் முன்னாடியும் சொல்லிட்டேன். அதுக்காக நீயும் நானும் பழகுனது பொய்யாயிடுமா? எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் தான் ஆதி. அந்த நேரத்துல நான் ஏதோ ஒரு பைத்தியக்காரத்தனமா யோசிச்சு உன்னை வேண்டாம்னு சொல்லிட்டேன். என்ன மன்னிச்சிரு ஆதி….. இப்பவும் சொல்றேன், நீ இப்ப ‘சரின்னு’ சொல்லு. நான் உன்னை இப்பவே கல்யாணம் பண்ணிட்டு உன் கூட வாழ நான் ரெடியாகத்தான் இருக்கேன் ஆதி,” என்று சங்கவி வெட்கம் விட்டு அவனிடம் வழிந்து கொண்டு கூற.

“ஏய்… சீ…. முதல்ல வழியை விடு! இன்னும் நீ என்னை பழைய ஆதியாகவே இருப்பேன் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறாயா? நீ இதைச் சொன்னாலும் நம்பிடுவேன்னு நினைச்சுட்டு இருக்கியா? அந்த ஆதி என்றைக்கோ காணாம போயிட்டான். இப்ப இருக்கிற ஆதி, தன்னைச் சுற்றி இருக்கிறவங்க யாரு, என்ன, என்னைப் பற்றி அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு நான் புரிஞ்சிருக்கேன். இப்ப வந்து மறுபடியும் அதையும் இதையும் சொல்லி என்னைக் குழப்பாமல் இங்கிருந்து முதலில் போ. எனக்கு வழி விடு,” என்று அவளைத் தாண்டிச் செல்லப் போக,

தன்னைத் தாண்டிச் சென்ற ஆதியை நினைத்து கோபம் கொண்ட சங்கவி, “ஏய் ஆதி! என்னையே வேண்டான்னு சொல்லித் தள்ளிவிட்டுட்டுப் போறியா? உன்னை கூடிய சீக்கிரம் என் காலில் விழ வைக்கிறேன்,” என்று சொன்னவள், திரும்பி வேகமாக ஓடி ஆதியைத் தாண்டிப் போய் அவன் எதிரில் நின்றவள், சட்டென்று அவன் எதிர்பார்க்காத போது அவனைக் கட்டிப்பிடித்து நின்று கொண்டாள்.

சங்கவி இப்படித் திடீரென்று வந்து தன்னைக் கட்டிப்பிடித்ததை எதிர்பார்க்காத ஆதி, சங்கவி திடீரென்று கட்டிப்பிடித்ததும் சற்றுத் தடுமாறிய ஆதி என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நிற்க, அவன் எதுவும் செய்யாமல் இருப்பதைப் பார்த்த சங்கவி அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டவள், நன்றாக ஒரு கையால் அவனை இறுக்கிக் கட்டிப்பிடித்துக் கொண்டு, தன் மறு கையால் அவன் முகத்தில் இருந்து மாஸ்கைக் கழட்டி விட்டு, அவன் சற்றும் எதிர்பாராத நேரம் எட்டி ஆதியின் இதழில் முத்தமிட்டு விட்டாள்.

இதைச் சற்றும் எதிர்பாராத ஆதி மேலும் அதிர்ச்சியாகி அவளைத் தன்னிடம் இருந்து பிரிக்கப் போராட, ஆனால் சங்கவி அவன் கையை நன்கு இறுக்கிப் பிடித்துக்கொண்டு நின்று இருக்க,

“பாத்தியா ஆதி! உனக்கு என்ன ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனாலதான் நான் உன்னை கட்டிப்பிடிச்சு உனக்கு முத்தம் கொடுத்ததும் நீ என்னைத் உங்கிட்ட இருந்து விலக்கி விடாமல் அப்படியே நின்னுட்டு இருக்க. உனக்கு என்னோட முத்தம் பிடிச்சிருக்கு, என்னையும் பிடிச்சிருக்கு. அதனாலதான் நீ இப்படியே இருக்க,” என்று சங்கவி கூற, ஆதிக்கு ‘இவள் என்ன லூசா? நான் அவளை என்னிடம் இருந்து விலக்கப் போராடுகிறேன். இவள் லூசு மாதிரி பேசிட்டு இருக்கா’ என்று நினைக்க.

இதையெல்லாம் செய்துவிட்டு சங்கவி ஆதியைப் பார்த்து கூறிவிட்டு, அவனை கட்டிப்பிடித்தவாரே, அவனைத் தாண்டித் தூரத்தில் யாருக்கும் தெரியாமல் நின்று இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த துர்காவைப் பார்க்க, துர்காவும் சங்கவியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டு நின்றிருக்க.

ஆதியைப் பார்த்துவிட்டு மேடையில் இருந்து அழுது கொண்டே ஓடிவந்த துர்கா, அங்கிருந்த கார்டனில் ஒரு பெஞ்சில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவள், “வெகுநேரமாகத்தான் இங்கு அமர்ந்து விட்டோம். தன்னை யாரும் தேடுவார்கள்,” என்று எழுந்து செல்லப் போக, அப்போதுதான் ஆதியை சங்கவி கட்டிப் பிடிக்க, அவர்களைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டாள்.

துர்கா தனக்குப் பின்னால் இருப்பது தெரியாத ஆதி, சங்கவியின் செயலுக்கு எதிர்வினை ஆற்றியதை ஆதி அறிந்தானே அன்றி துர்காவுக்கு அது தெரியவே இல்லை. அவன் அப்படியே நின்று இருக்கிறான் என்று நினைத்து, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த துர்காவின் அழுகை மேலும் அதிகரிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் சங்கவியையே பார்க்க, சங்கவியும் துர்காவைத்தான் பார்த்துக் கொண்டு ஏளனமாகச் சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

சங்கவி ஆதி இடத்தில் பேசியதை எல்லாம் கேட்ட துர்கா, ‘அப்போ ஆதிக்கு உண்மையாவே சங்கவியைத் தான் பிடிச்சிருக்கு. இவ்வளவு நாளும் அவளைத்தான் நெனச்சிட்டு இருக்கானா? நான் தான் தப்பா நினைச்சுட்டு அவன் வாழ்க்கைக்குள்ள வந்துட்டேனோ. சங்கவியின் வாழ்க்கைக்குள் தான் தெரியாமல் நுழைந்து விட்டேனோ?’ என்று கவலைப்பட்ட துர்கா, ‘இனிமேலும் ஆதிக்கும் சங்கவிக்கும் இடைஞ்சலாக நான் இருக்கக் கூடாது. எவ்வளவு சீக்கிரம் ஆதியைக் விட்டுப் பிரிய முடியுமோ நான் அவ்வளவு சீக்கிரம் ஆதியின் வாழ்க்கையை விட்டும் பிரிந்து போக வேண்டும்,’ என்று முடிவெடுத்தவள், இனி இங்கு நிற்பதில் பிரயோஜனம் இல்லை, சங்கவியும் ஆதியும் கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்பதைப் பார்க்க முடியாமல் அங்கிருந்து துர்கா சென்றுவிட்டாள்.

இதையெல்லாம் ஆதியைக் கட்டிப் பிடித்தவாறு பார்த்துக் கொண்டிருந்த சங்கவி, ‘என்னோட பிளான் ஒர்க் அவுட் ஆயிடுச்சு,” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்க.

அதுவரை அவளைத் தன்னிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்து கொண்டிருந்த ஆதி, வேகமாக அவளைத் தன்னிடம் இருந்து தள்ளிவிட, ஆதி தள்ளிய வேகத்தில் அவனை விட்டுத் தள்ளி கீழே போய் விழுந்தாள் சங்கவி.

கீழே விழுந்த வேகத்தில் ஏற்கனவே சங்கவி லேசாக ஆடை உடுத்தியிருந்ததால், அவள் விழுந்த வேகத்தில் அவள் அணிந்திருந்த பிளவுஸின் பின்புறம் கிழிந்து விட, அவள் மொத்த முதுகும் வெளியில் அப்பட்டமாகத் தெரியவும். ‘தான் என்ன செய்துவிட்டோம்’ என்று நினைத்தவன், சட்டென்று தன் கோட்டைக் கழட்டி சங்கவியின் மேல் போர்த்தி விட்டான்.

அவளுக்குத் தன் கோட்டைக் கழட்டிப் போட்டு விட்டவன், அவளைத் திரும்பியும் பார்க்காமல் தன்னறைக்குச் சென்றுவிட்டான். அவன் செல்லும் வரை அதே இடத்தில் அமர்ந்திருந்த சங்கவி, அவன் சென்றதும் அங்கிருந்து எழுந்தவள், தன் கைகளில் இருந்த தூசியைத் தட்டி விட்டவள், அவன் கோட்டை நன்றாக இழுத்துப் போட்டுவிட்டு அங்கிருந்து செல்லவும், அவளுக்கு எதிரே துர்கா வரவும் சரியாக இருந்தது.

துர்காவைப் பார்த்ததும் சங்கவி ஒரு முடிவுடன் அவள் எதிரே சென்று நிற்க, துர்கா அவளைக் கண்டதும் அவளைத் தாண்டிச் செல்லப் போக, அவள் கையைப் பிடித்து இழுத்து நிறுத்திய சங்கவி,

“பாத்தியா? நான் சொன்னேனே எப்படியும் ஆதியை நான் திருமணம் பண்ணிக்குவேன்னு. ஆனா அந்த விக்கி என்ன சொன்னான்? அதுக்கு வாய்ப்பே இல்லைன்னு தானே சொன்னான். இப்போ நீயே பார்த்துட்டியே, ஆதி என்னை எப்படி கட்டிப்பிடிச்சிட்டு நின்று இருந்தான்னு தானே நீயும் பார்த்துட்டு இருந்த. அவன் கட்டிப்பிடித்த வேகத்தில் என்னோட பிளவுஸ் கிழிஞ்சு போயிடுச்சு. அவ்ளோ ஆசை அவனுக்கு என் மேல,” என்று கூறியவள், தன் மேல் போர்த்தி இருந்த ஆதியின் கோட்டை விலக்கியவள், தன் முதுகை துர்காவுக்கு வெட்கமில்லாமல் காட்டிய சங்கவி, “பாத்தியா? என்னோட பிளவுஸ் எப்படி கிழிச்சிட்டான் ஆதி. பிளவுஸ் கிழிஞ்சும் கூட என்னை விடாமல் என் முதுகை ஆசையாக அவன் தடவிக்கொண்டே நின்றிருந்தான். நான் தான் வெட்கத்தில் அவனை விட்டுத் தள்ளி நின்றேன். அவனுக்கு என் மேல சின்ன வருத்தம் தான். நான் அத்தனை பேர் முன்னாடியும் ஆதியை வேண்டாம் என்று சொல்லிட்டேன்னு அவனுக்கும் என் மேல கோபம் இருக்குறது நியாயம் தானே. ஆனால், இப்போ என்னை புரிஞ்சுக்கிட்டான் என் ஆதி. அதனால தான் நான் அவனை ஆசையா கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்த அப்போ என்னை எதுவும் செய்யாமல் அவனும் பதிலுக்கு என்னைக் கட்டிப் பிடிச்சான், முத்தமும் கொடுத்தான். எவ்வளவு ஆசை இருந்தால் இந்த அளவுக்கு என்னோட பிளவுஸ் கிழியுற அளவுக்கு என்னைக் கட்டிப் பிடிச்சிருப்பான்னு நீயே பாரேன்,” என்று மறுபடியும் அவள் முதுகைக் காட்ட, “ச்சீ….” என்று தன் முகத்தைச் சுளித்து துர்கா வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

அவளைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தவள், “சீக்கிரமே நீ ஆதி கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கிட்டு அவனை விட்டுப் பிரிஞ்சு போறது நல்லது,” என்று சங்கவி கூற.

“சரி சங்கவி, நான் எவ்வளவு சீக்கிரம் ஆதியிடம் இருந்து டைவர்ஸ் வாங்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் டைவர்ஸின் வாங்கிட்டு போயிறேன்,” என்று கூறியவள் அவள் முன் அழுது விடக்கூடாது என்று அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டாள்.

தான் சொன்னதை எல்லாம் உண்மை என்று நம்பி துர்கா செல்வதைப் பார்த்த சங்கவி குரூரமாகச் சிரித்தவள், “சீக்கிரமே இவை எல்லாவற்றையும் நான் போய் உண்மை ஆக்கி காட்டுறேன் துர்கா. நீ அந்த ஆதியைக் விட்டுப் போற நாள் வெகு தூரத்தில் இல்லை,” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டவள் அங்கிருந்து தன் அறைக்கு உடை மாற்றச் சென்றுவிட்டாள்.

*****

இரவு வெகு நேரமானதால் அனைவரும் சென்றுவிட, கதிர் கீர்த்தியிடம் கண் ஜாடை செய்து அவளைத் தனியே அழைக்க.

அவனை விட்டுச் சற்றுத் தள்ளி இருந்த கீர்த்திகா, “ம்ஹும்…. முடியாது,” என்று மெதுவாகத் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து அவள் பெற்றோருடன் அறைக்குச் சென்று விட்டாள்.

அவள் சென்றதும், ‘ச்சே…. இவ இருக்காளே! அத்தனை பேர் முன்னிலையில் ‘எனக்கு அவளைப் பிடிக்கும்’ என்று என்னிடமே சொல்லிவிட்டுப் போனாள். ஆனால், தனியாகப் பேசலாம் ‘வா’ என்றால் மட்டும் வர மாட்டேன்கிறாளே,’ என்று தன் மனதிற்குள் பேசுவதாக நினைத்து வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருக்க, அதுவரை அவன் அருகில் பேசாமல் அமர்ந்திருந்த விக்கி,

“ஆமா! தனியா வந்தால் தானே நீ அந்தப் புள்ள வாயைப் பிடிச்சுக் கடிச்சுட்டுறியே? அப்புறம் எப்படி உன்னை நம்பிக் கீர்த்தி தனியா வருவா….” என்று விக்கி கூற.

“டேய் விக்கி! நான் பேசியதெல்லாம் உனக்குக் கேட்டுருச்சா…. ஆமா… நான் கீர்த்திகா வாயைக் கடிச்……ச்சே….. கீர்த்திகாவுக்கு முத்தம் கொடுத்தது உனக்கு எப்படி…..” என்று இழுக்க,

“ம்ம்ம்ம்…. சாயங்காலம் அவ யாரையோ சைட் அடிச்சதுக்கு நீ போட்டியே ஒரு சீன்…. அதை பார்த்து கூட அந்தப் புள்ளை நீ உண்மையாவே கோச்சுட்டேன்னு நினைச்சு உன் பின்னாடி கெஞ்சிட்டே வந்தாலே. அவ வந்ததும் நீ அவளைப் பிடிச்சு அதையும் இதையும் சொல்லி அவ வாயிலேயே கிரிக்கெட் ஆடுனியே, அதை எல்லாம் நின்னு நான் பார்த்துட்டு தான் டா சொல்றேன்.. நீ…. இருக்கியே! இங்க ஒருத்தன் நான் தனியா இருக்கேனே? அண்ணன் தம்பி மட்டும் ஆளுக்கு ஒரு ஆளா அக்காவையும், தங்கச்சியையும் கரெக்ட் பண்ணி ரொமான்ஸ் பண்ணிட்டு சுத்துறீங்களே…. அட நீங்கதான் இப்படி இருக்கீங்க அப்படின்னா, அந்த வசீகரனின் காதலி (Visalaatchi’s son-in-law) காங்க மொத்தமும் அப்படி தான் இருக்கு. ஸ்டேஜ்க்கு பின்னாடி ஒருத்தன், மரத்துக்குப் பக்கத்துல ஒருத்தன், ஸ்விம்மிங் பூல் ஓரத்துல ஒரு சந்துல ஒருத்தன், அட பாத்ரூம் போலாம்னா அங்க ஒருத்தன்னு ஆளுக்கு ஒரு ஆளைத் தள்ளிட்டு வந்து ரொமான்ஸ் பன்றானுங்க! சரி, இதை எல்லாம் பார்க்க முடியலையென்னு சொல்லிட்டு கார்டென்ல போய் நிம்மதியா கொஞ்ச நேரம் காத்து வாங்கலாம்னா, முதல்ல நீ உன் ஆளைத் தள்ளிட்டு வந்தே. இந்தக் கொடுமையைத் தாங்க முடியலைன்னு வேற கார்டென்ல நீங்க இல்லாத பக்கம் போய் உக்காரலாம்னா, அங்க ஒருத்தன் அந்த வெள்ளைக்காரி அது யாரு…. அஹ்ஹ்… அதான் அந்த ரித்திகா, அவளைக் கூட்டிட்டு வந்து என்னமா ரொமான்ஸ் பண்றான். அப்பா… அப்பா…. அப்பா…. என்னால முடியலை டா சாமி. இந்தக் கல்யாணத்துக்கு வந்தாலும் வந்தேன், எத்தனை ஜோடியைத்தான் நான் பார்க்கிறது. என் கண்ணே இதை எல்லாம் பாத்து பாத்து என் கணு ரெண்டும் அவிஞ்சே போயிருச்சு டா மாப்பிள்ளை,” என்று கூறி வடிவேலு போல கதிரின் தோளில் கையைப் போட்டு அழுவது போல பாவனை செய்ய.

விக்கியைப் பார்த்துச் சிரித்த கதிர், “சரி விடு டா… நாம இங்கயே ஒரு நல்ல பொண்ணைப் பார்த்து உனக்குப் பேசி முடிச்சிருவோம்,” என்று ஆறுதலாக விக்கியின் தோளைத் தட்டிக் கொடுக்க.

அவன் கையைத் தட்டி விட்டவன், “அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை,” என்றான் விக்கி.

“ஏன் டா…. விக்கி வேண்டாம்னு சொல்ற? அப்போ காலம் முழுக்க நீ இப்படிச் சிங்கிளாவே எங்க கூடயே இருக்கப் போறியா?” என்று கேட்க.

“எதுக்கு நான் காலம் பூரா உனக்கும் உங்க அண்ணனுக்கும் சேவகம் செய்யணும்? நீயும் உங்க அண்ணாவும் ரொமான்ஸ் பண்ணிட்டு சுத்திட்டு இருப்பிங்களா…. அது தான் என்கிட்ட நடக்காது. உங்க அப்பா எனக்கு ஒரு சொத்து எழுதிக்கொடுத்தாரே, அதை நான் இப்போதான் யூஸ் பண்றது. எனக்குன்னு ஒருத்தி வந்தாள் தானே நான் இதை எல்லாம் அனுபவிக்கிறதுக்கு?” என்றான்.

“அப்புறம் ஏன் டா, இங்க எதுவும் பொண்ணு பார்க்கலாம்னு சொன்னா ‘வேணாம்’னு சொல்ற?” என்று புரியாமல் கதிர் கேட்க.

“என்ன? எனக்கு ஊர்ல ஆல்ரெடி ஒரு ஆளை நான் பார்த்து வெச்சிட்டு வந்துட்டேன் டா… ஆனா அவளுக்குத் தான் என்னோட ஞாபகம் இருக்குமோ இல்லையோன்னு தெரியலை,” என்றான் கவலையுடன்.

“என்ன டா…. சொல்றே? ஆல்ரெடி ஆள்…. இருக்கா….? உன்னால நம்பவே முடியலையே,” என்று ஆச்சர்யமாக கதிர் கேட்க.

“ஏன் டா… எனக்கு எல்லாம் லவ்வர் இருக்கக் கூடாதா என்ன?” என்றான் விக்கி.

“ச்சே…. அப்படி சொல்லலை டா. எங்க கூடவே தானே இருக்க, அதான் எப்படின்னு ஒரு ஆச்சர்யத்துல கேட்டுட்டேன். சரி, அதை எல்லாம் விடு. யாரு அந்தப் பொண்ணு? எங்க இருக்காங்க? என்ன பண்றாங்க? என்னோட சிஸ்டர்?” என்று கதிர் ஆர்வமாக கேட்க.

“அவள் ஒரு தேவதை…..” என்றான் விக்கி. அவன் கூறியதைக் கேட்ட கதிர், “ஓஹோ! உங்க தேவதையின் பெயர் என்னவோ….?” என்று கேட்க.

“என் தேவதையின் பெயர் நிலானி….” என்றவன், அவளைச் சந்தித்த தருணங்களை விவரித்தான். “எப்போ அவளைப் பார்த்தேனோ, அவளைப் பாக்கணும், பேசணும்னு ஆசையா இருக்கு டா… ஆனா, அவள் என்னை நினைக்குராளா இல்லையா என்று தன் தெரியலை,” என்று சோகமாகச் சொல்ல.

“இப்போ என்ன, உனக்கு உன் ஆள் என்ன பண்றான்னு தெரியணும் அவ்ளோ தானே?” என்று கதிர் கேட்க, “ஆமா” என்று விக்கி அவனைப் புரியாமல் பார்க்க.

“சரி, என் கூட வா…” என்று கூற, “எங்கே டா…” என்றான் விக்கி. “உன் ஆளு என்ன பண்றான்னு தெரியணும்னா…. என்கூடப் பேசாம வா…” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல, விக்கியும் ஆர்வமுடன் அவன் பின்னே சென்றான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured