Home Uncategorizedஎனை மாயம் செய்யும் ராட்சசன் 1

எனை மாயம் செய்யும் ராட்சசன் 1

by Layas Tamil Novel
509 views

EPISODE 1

“ஏய் மீனு எழுந்துருடி மணி பாரு என்ன ஆச்சுன்னு முதல் நாள் காலேஜ் போகப்போற இன்னைக்காவது நேரமே எழுந்து கிளம்பி போகணும்னு கொஞ்சமாவது நினைப்பு இருக்கா உனக்கு” என்று புலம்பிக்கொண்டே சமைத்துக் கொண்டிருந்தார் மீனுவின் அம்மா ஜனனி.

“ஏன் ஜனா இப்படி காலங் காத்தால கத்திக்கிட்டு இருக்க அவ இப்பதான் புதுசா காலேஜ் போறாளா என்ன… ஏற்கனவே நாலு வருஷம் படிச்சிட்டு மேற்படிப்பு  தானே படிக்க போறா… அவ எழுந்து கிளம்புவான் நீ டென்ஷன் ஆகாமல் வேலைய பாரு ” என்றார் மீனுவின் அப்பா குரு.

“ஏங்க இவ எழுந்து கிளம்பினா தானே அந்த குட்டி பிசாசு கிளம்பி காலேஜ் போவா… அவளுக்கு தாங்க இன்னைக்கு முதல் நாள் காலேஜ். உங்க பெரிய பொண்ணு நேரமே எழுந்து கிளம்பினா தானே சின்னவளும் கிளம்புவா” என்றார் ஜனனி.

“சரி சரி…நீ வேலையப்பாரு புலம்பாத நான் போய் ரெண்டு பேரையும் எழுப்பி கிளம்ப சொல்றேன்” என்றவர் தன் மகள்களை எழுப்ப அவர்கள் அறைக்கு சென்றார்.

அறைக்குள் வந்தவர் மூத்தவள் மீனுவையும் , அவள் தங்கை பூஜாவையும் பார்த்தார்.

மீனு குப்புற படுத்து தூங்கிக்கொண்டு இருக்க… அவள் முதுகில் தன் காலை போட்டு கட்டிலில் குறுக்காக படுத்திருந்தாள் பூஜா.

தன் மகள் உறங்கிக் கொண்டிருப்பதை ரசித்தவர் ” என்னடா ரெண்டு பேரும் இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க… அங்க உங்க அம்மா டென்ஷன் ஆகி கத்திக்கிட்டு இருக்கா… சீக்கிரம் எழுந்து ரெடி ஆகுங்க.. ” என்று அவர்கள் இருவரையும் எழுப்பினர்.

“அப்பா….இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் ரொம்ப தூக்கம் வருது…” என்றால் பூஜா நெளிந்து கொண்டே..

“என்னது இன்னும் கொஞ்ச நேரமா?.. மணி எட்டாயிடுச்சு நீங்க இப்போ எழுந்து கிளம்புனா தான் காலேஜுக்கு டைமுக்கு போக முடியும். ஒழுங்கா ரெண்டு பேரும் எழுந்திருங்க..” என்று அவர்கள் போர்த்தி இருந்து போர்வையை எடுத்தார்.

“அப்பா…” என இருவரும் ஒரு சேர அழைத்தபடி படுக்கையில் இருந்து எழுந்தனர்.

“போங்க… போங்க…போய் சீக்கிரம் ரெடி ஆயிட்டு வாங்க..” என்று அதே அறையில் மீனுவை ரெடியாகச் சொல்லிவிட்டு பூஜாவை தங்கள் அறைக்குச் சென்று குளித்து ரெடியாகி வரச் சொன்னார்.

இருவரும் குளித்து முடித்து ரெடியாகி வெளியே சாப்பிட வந்தனர் சுட சுட பொங்கலும் சாம்பார் வடையும் தயாராக இருந்தது.

“அம்மா இன்னைக்கு பொங்கலும் சாம்பாருமா?… வீடே கமகமக்குது “என்றபடி வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தால் பூஜா.

“ஆமாண்டி உனக்கு பிடிக்கும்னு தான் செஞ்சு வச்சு இருக்கேன் “என்றவர் தட்டில் உணவுகளை பரிமாறினார்.

“அப்போ எனக்கு எதுவும் செய்யலையா? அவளுக்கு மட்டும் தான் நான் செய்திருக்கீங்களா?” என்றபடி வந்து அமர்ந்தால் மீனு.

“அது எப்படி உனக்கு அம்மா செய்யாம விடுவேனா…” என்று சிரித்துக் கொண்டே சமையல் அறைக்குள் சென்று சுட சுட சப்பாத்தியும் குருமாவும் எடுத்து வந்து மீனுக்கு பரிமாறினார்.

இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்து கிளம்பி போக…

“ஏண்டி மீனு என்ன டிரஸ் இது வெறும் சட்டையும், பேண்டும் போட்டு இருக்க…  அது வேற அங்க அங்க கிளிஞ்சிருக்கு ” என்று பூஜாவை பார்த்தவர் . “

“அவளை பாரு  பனியனும் முக்கால் காலுக்கு ஒரு பேண்ட்டும் மாட்டி இருக்கா…. உனக்கு  கல்யாணம் பண்ணுற வயசு ஆகிருச்சு டி….நீ இன்னும் சின்ன பிள்ளை மாதிரி டிரஸ் பண்ணிட்டு வெளியே போனா உன்னை யாரடி பொண்ணு கேட்டு வருவா… அக்காவும் தங்கச்சியும் எப்ப பாரு ஆம்பள பசங்க மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு சுத்திட்டு இருந்தா பார்க்கிறவங்க எல்லாரும் என்னதான் பேசுவாங்க” என்றார்” ஜனனி.

“அம்மா இன்னமும் நீ அந்த காலம் மாதிரியே பேசிக்கிட்டு இருக்காத…நாங்க ஒன்னும் நீ சொல்ற அளவுக்கு மோசமான டிரஸ் பண்ணல” என்றால் மீனு.

“அக்கா,  அம்மா சரியான பட்டிக்காடு அவங்களை நாளைக்கு பம்புக்கு கூட்டிட்டு போகணும் அங்கே வந்து பார்த்த பிறகு தான் நம்ம பண்ணியிருக்கிற டிரஸ் எவ்வளவோ பரவாயில்லைனு சொல்லுவாங்க” என்றால் பூஜா.

“அது சரி  பப்புக்கு வருவாங்க இப்படித்தான் டிரஸ் பண்ணி இருப்பாங்கன்னு உனக்கு எப்படி தெரியும்?” என்றால் மீனு பூஜாவை சந்தேகமாக பார்த்து.

“ஐயோ அவசரப்பட்டு வாயை வச்சுட்டு சும்மா இருக்காம உளறி கொட்டிட்டோமே…”என்று பூஜா திடுதிருவென விழித்தால்.

“சொல்லுடி ஏன் இப்படி திருத்திருனு முழிக்கிற..” என்று மீனா பூஜாவின் அருகில் வர ..

” ஐயோ…. அக்கா… நீ அங்கேயே நில்லு… நானும் என் ஃப்ரண்ட் நிவியும் ஒருநாள் எங்க பிரண்ட் பர்த்டே பார்ட்டிக்கு போயிருந்தோம். அப்போ பக்கத்துல பார்ட்டி நடந்துட்டு இருந்துச்சு சரி பப்ள பார்ட்டி எல்லாம் எப்படி இருக்குன்னு நாங்க ரெண்டு பேரும் போய் பாக்கலாம்னு சும்மா அங்க போய் பார்த்தோம்” என்றாள்.

“நெஜமாத்தான் சொல்றியா? “என்றாள் மீனு சந்தேகமாக.

“அக்கா அப்பா மேல சத்தியமா சொல்றேன் சும்மா போய் பாத்துட்டு தான் வந்தோம் என்னை நம்பு வேணும்னா நீ நிவி கிட்ட போன் போட்டு கேளு… அப்ப தெரியும்” என்றால் பூஜா.

“ஏய் நீ பபுக்கு போ… போகாம இரு… அதுக்கு எதுக்குடி என் மேல சத்தியம் பண்ற… உன் மேல சத்தியம் பண்ண வேண்டியதுதானே ” என்றார் குரு.

“எதுக்கு ரிஸ்க்…ஒரு சேப்டிக் தாம்பா உன் மேல சத்தியம் பண்ணினேன்” என்று சொல்லி சிரித்தால் பூஜா.

“நல்ல பொண்ணுமா நீ” என்றார் குரு.

” சரி வாடி காலேஜுக்கு டைம் ஆகுது கிளம்பலாம்” என்று வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிக்கொண்டு மீண்டும் பூஜாவும் கிளம்பினர்.

தான் செல்லும் காலேஜின் வழியில் தான் பூஜாவின் காலேஜும் இருந்தது.  பூஜா  ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்  காலேஜில் படிக்கிறாள். அவளை அவள் காலேஜில் ராப் செய்துவிட்டு… தன் கனவு படிப்பான் “ORNOTHOLOGY” படிப்பதற்காக செல்கிறாள்.

பறவைகள் குறித்த அதன் வாழ்வாதாரங்களை பற்றி சென்னையில் மிகவும் பிரபலமான கல்லூரிக்கு செல்கிறாள்.

தன்னுடைய டூவீலரை கொண்டு வந்து பார்க் செய்துவிட்டு பேக்கை எடுத்து மாட்டியவள் காலேஜின் சுற்றுப்புறத்தை ரசித்து வாரே சந்தோஷமாக தன் வகுப்பை தேடி சென்றாள்.

இங்கே  காலேஜ் வாசலில் தன் தோழி நிவிக்காக காத்திருந்தாள் பூஜா.

” எப்பவும் நான்தான் எங்கயாவது போகணும்னா லேட்டா வருவேன். நானே இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டேன். ஆனா இந்த  நிவிக்கு என்ன ஆச்சு ஏன் இன்னும் அவ வரல… “என்று யோசித்துக்கொண்டு இருந்தாள் பூஜா.

” டேய் மச்சான் அங்க பாரேன் ஒரு பொண்ணு காலேஜ் வாசல்ல நின்னு யாருக்கோ வெயிட் பண்ணிட்டு இருக்க மாதிரி இருக்கு ” என்றான் சீனியர் மாணவன் குமார் தன் நண்பன் சந்தோஷிடம்.

அதுவரை மற்ற மாணவிகளை சைட் அடித்துக்கொண்டு இருந்த சந்தோஷ் குமார் சொன்னதும் காலேஜ் வாசலை திரும்பி பார்க்க…

அங்கே முட்டி வரை ஜீன்ஸ் ட்ராயரும், கை இல்லாத பனியனும் அணிந்து மாடர்ன் மங்கையாக குட்டி பெண் ஒருத்தி நின்று இருந்தாள்.

அவள் முகம் அவனுக்கு தெரியவில்லை…அவள் முதுகு தான் சந்தோஷ் கண்ணில் பட்டது. தன் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டை போட்டு இருந்தாள்.

“யாரு டா அவ… நம்ம காலேஜ்க்கு தான் வந்து இருக்காளா இல்ல எதும் ஸ்கூல் போற பொண்ணு வழி மாரி இங்கே வந்துட்டாளா? ” என்றான் சந்தோஷ்.

” தெர்ல டா மச்சான்… பாக்க நீ சொன்ன மாதிரி ஸ்கூல் போற பொண்ணு மாதிரி  தான் இருக்கா.. ” என்றான் குமார்.

“வாடா மச்சான் அது யாருனு விசாரிச்சிட்டு வரலாம் ” என்று குமாரை சந்தோஷ் அழைத்தான்.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே ஒரு பெண் அவசர அவசரமாக பூஜைவிடம் வந்தால்.

“ஏய் நிவி ஏன் டி இவ்ளோ லேட்.. நான் எவ்ளோ நேரமா இங்கே வெயிட் பண்ணிட்டு இருக்கேன் தெரிரியுமா… போறவறவங்க எல்லாம் என்னை ஒரு மாதிரி பாத்துட்டு போனாங்க டி… ” என்று செல்லமாக தன்  தோழியிடம் கோபித்துக்கொண்டாள் பூஜா.

“ஏய்.. பூஜ்… சாரி டி வர வழியில் பஸ் பிரேக் டவுன் ஆகிருச்சு.. அதான் லேட் ஆகிருச்சு ” என்றாள் நிவி.

“சரி வா… உள்ளே போலாம் ” என்று தன் தோழியின் கை பிடித்து காலேஜிற்குள் நுழைந்தாள் பூஜா.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured