EPISODE 10
மணமேடையில் மணப்பெண் கோலத்தில் மீனு அமர்ந்து இருக்க… மணமகன் அறையில் இருந்த ஜெய்யை கடினப்பட்டு சம்மதிக்க வைத்து மணமேடைக்கு தன் மகனின் வீல் சேரை தானே மிகவும் சந்தோசமாக தள்ளிக்கொண்டு வந்தார் கஜேந்திரன்.
தங்கள் மகளின் விருப்பத்திற்கு தடையாக இருக்க விரும்பாத குருவும், ஜனணியும் சந்தோசமாக அவள் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்க,. தன் அக்காவை திருமணம் செய்துகொள்ள போகும் மாப்பிள்ளையை பார்க்க மிகவும் ஆர்வமாக ஜெய்யின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த பூஜா கஜேந்திரன் வருவதை பார்த்தவள் வீல் சேரில் அமர்ந்து இருந்த ஜெய்யை பார்த்து சந்தோசமானவள்.
” அக்கா… மாமா செம்ம ஹண்ட்ஸம்மா இருக்காரு… அங்க பாரு ” என்று மீனுவிடம் குனிந்து பூஜா சிரித்தபடியே கூற…
அவள் சொல்வதை கேட்டு ஜெய் வந்து கொண்டு இருந்த திசையை நோக்கி ஆர்வமாக அதே சமயம் வெட்கத்துடன் குனிந்திருந்த தலையை லேசாக உயர்த்தி தன் கருவிழிகளை உயர்த்தி ஜெய்யை ஓரக் கண்ணால் பார்த்தாள்.
அவளை போலவே தன் நிலை அறிந்து தன்னை பற்றி எந்த விபரமும் தெரியாத, தன் முகத்தை கூட பார்க்காமலேயே தன்னை திருமணம் செய்துகொள்ள போகும் அந்த பெண் யார்? என்று ஆர்வமாக ஜெய் மணமேடையில் திருமண கோலத்தில் மிகவும் எளிமையாக தன் அம்மாவின் நகைகளை போட்டு அழகான நாணத்துடன் தன்னை ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டு இருந்த மீனுவை பார்த்தான் .
ஜெய் தன்னை பார்ப்பதை உணர்ந்ததும் சட்டென தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள் மீனு.
அவள் வெட்கப்படுவது ஜெய்க்கு சிரிப்பை வரவழைக்க… அதை காட்டிக்கொள்ளாமல் இருக்கிய முகத்தோடு அமர்ந்து இருந்தான் ஜெய்.
வீல் சேரை தள்ளிக் கொண்டு மண மேடைக்கு வந்த கஜேந்திரன் “அம்மாடி மருமகளே… ” என்று மீனுவையும், அவள் அருகில் இந்த திருமணத்திற்கு முழு மனதுடன் சம்மதம் தெரிவித்து சந்தோசமாக நின்று இருந்த குரு, ஜனனி அவர்களையும் பூஜாவையும் பார்த்து சந்தோசமானவர். “சம்மந்தி இவன் தான் என்னோட மகன் ஜெய் ” என்று தன் மகனை அறிமுகம் செய்து வைத்தார்.
அவர்கள் மூவரும் ஜெய்யை பார்த்து சந்தோசமாக சிரித்து அவனை வரவேற்க… ” ஹலோ மாம்ஸ்.. நான் பூஜா உங்க ஆளோட தங்கச்சி.. ” என்று ஜெய்யிடம் சகஜமாக பேச…
அதை கேட்டுவிட்டு தன் அருகில் நின்று இருந்த பூஜாவின் காலில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள் மீனு.
“ஷ்… அக்கா.. இப்போ எதுக்கு என் காலை கில்லுற.., நான் உண்மையை தானே சொன்னேன்.” என்று தன் காலை தேய்த்து விட்டுக்கொண்டே எழுந்து ஜெய்யிடம் தன் கையை நீட்டி ” 𝗪𝗘𝗟𝗖𝗢𝗠𝗘 𝗧𝗢 𝗠𝗬 𝗙𝗔𝗠𝗜𝗟𝗬 𝗠𝗔𝗠𝗦.. ” என்றாள் பூஜா புன்னகை முகமாக.
தன்னை இதுவரை பார்த்தவர்கள் எல்லாம் தன் ஊனத்தை பார்த்து பாவப்பட்டவன் என்பது போல பேசி இருக்க… ஆனால் இன்று இப்படி இருக்கும் தனக்கு தங்கள் மகளை சந்தோசமாக திருமணம் செய்துவைக்க காத்திருக்கும் மீனுவின் பெற்றோரையும், தன்னை பார்த்த மாத்திரத்திலேயே மாம்ஸ் என்று உரிமையாக கூப்பிடும் மச்சினியையும் பார்த்து ஜெய்க்கு வார்த்தைகளே வரவில்லை.
தன் முன்னே கை நீட்டி நின்று இருக்கும் பூஜாவை பார்த்துக்கொண்டு இருந்தான் ஜெய்.
” அட.. கையை குடுங்க மாம்ஸ்.. என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க..” என்று அவன் கையை பிடித்து குலுக்கினாள் பூஜா.
அவளையும், மீனுவின் பெற்றோரையும் பார்த்து லேசாக சிரித்தான் ஜெய்.
அப்போது ” பெரியப்பா… அண்ணனை மட்டும் தான் இன்ட்ரோ கொடுப்பீங்களா? அப்போ நான்.. நான் உங்க மகன் இல்லையா? ” என்று வந்து நின்றான் சந்தோஷ்.
அவனை அங்கு சிறிதும் எதிர்பார்த்திராத பூஜா அதிர்ச்சியாக அவனை பார்த்துக்கொண்டு இருக்க… சந்தோஷ் அவள் அதிர்ச்சியை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன் எதுவும் தெரியாதவன் போல நின்று இருந்தான்.
கஜேந்திரன் சந்தோஷ் தோளில் கை போட்டு… ” சம்மந்தி இது என் தம்பி மகன் சந்தோஷ். சின்ன வயசுல இருந்து எங்க வீட்ல தான் இருக்கான். சொல்ல போனா இவனை எல்லாரும் என்னோட ரெண்டாவது பிள்ளையா தான் நினைச்சிட்டு இருக்காங்க. எனக்கு ஒரு தம்பி இருந்தது, அவனுக்கு ஒரு மகன் இருக்கான்னு எல்லாரும் மறந்துட்டாங்க.. அந்த அளவுக்கு இவன் எங்க குடும்பத்தோட ஒன்றிட்டான். ” என்றார் கஜேந்திரன்.
“குருவும், ஜனனியும் சந்தோஷை பார்த்து வணக்கம் தெரிவிக்க… அட என்ன அங்கிள் நான் என்ன என் பெரியப்பா மாதிரி வயசனாவனா? வணக்கம் வெக்குறீங்க ரெண்டு பேரும் ” என்றவன் வணக்கம் வைத்த இருவரின் கையை பிடித்து குலுக்கியவன் அடுத்து பூஜைவின் கையை குலுக்க அவள் கையை பிடிக்க போக… சட்டென அவனுக்கு பூஜா வணக்கம் வைத்தாள்.
“ஏய் சில்லு வண்டு இரு டி உனக்கு இருக்கு ” பூஜாவை பார்த்து கண்களாலேயே மிரட்ட…
அவன் பார்வையை அலட்சியம் செய்த பூஜா வேறுப்புறம் தன் பார்வையை திருப்பிகொண்டாள்.
“சரி, சரி உங்க அறிமுகம் எல்லாம் பிறகு வெச்சுக்கோங்கோ.. நல்ல நேரம் முடிய இன்னும் 10 நிமிஷம் தான் இருக்கு சீக்கிரம் மாப்பிள்ளையை வந்து பொண்ணு கழுத்துல தாலியை கட்ட சொல்லுங்கோ…”என்று ஐயர் அவசரப்படுத்த..
சந்தோஷ் வீல் சேரை தள்ளிக்கொண்டு வந்து மீனு அமர்ந்து இருந்த மணமேடையில் போடப்பட்டு இருந்த சோபாவிற்கு அருகில் ஜெய்யை நிறுத்தியவன் ஜெய்யின் கையை பிடித்து அவனை கைத்தாங்களாக எழுந்திருக்க உதவியவன் தன் தோளில் ஜெய்யின் கையை போட்டு மெதுவாக சோபாவில் அமர வைக்க போக… அந்த நேரம் பார்த்து இதுவரை இங்கு நடப்பதை எல்லாம் வயிற்றிரிச்சளோடு சோபாவிற்கு அருகில் நின்று பார்த்துக்கொண்டு இருந்த சாந்தா நின்று இருக்க… அவர் அருகில் நின்று ஜெய்யை பார்த்து எரிச்சளில் நின்று இருந்த ரியா.. சந்தோஷ் ஜெய்யை வீல் சேரில் இருந்து தூக்க…சட்டென்று அவன் இடுப்பில் இருந்த வேஷ்டியை அவிழ்ந்து விட்டாள் ஜெய் கட்டி இருந்த வேஷ்டி இடுப்பைவிட்டு கீழே நழுவப் பார்க்க…
இதை சற்றும் எதிர்பார்காத ஜெய் செய்வதியது தன் வேஷ்டியை பிடிப்பதற்காக சந்தோஷ் தோளில் இருந்த தன் கையை வேகமாக வெளியே எடுக்க.. அப்போது துணை இல்லாமல் தனியே நிற்க முடியாத ஜெய் கீழே விழப்போனான்.
ஜெய் இடுப்பில் இருந்த வேஷ்டி ஒருபக்கம் நழுவவும், மறுபக்கம் அவன் பிடிமானம் இல்லாமல் விழப் போவதையும் மேடையிலிருந்த அனைவரும் பார்த்துவிட்டு பதற… மேடைக்கு கீழ் நின்று இருந்தவர்களும் அடுத்து என்ன? நடக்குமோ என்று பதறியபடி ஜெய்யை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அத்தனை பேர் முன்னிலையிலும் ஜெய் அவமானப்பட போகிறான் என்று ரியா ஆர்வமாக பார்த்துக்கொண்டு நின்று இருக்க…
ஆனால் அங்கு நடத்ததே வேறு… ஜெய் தவறி விழுவதை பார்த்து பதறிய படி அவன் அப்பா, சந்தோஷ் ஜெய்யை பிடிக்க முற்பட… மேடைக்கு கீழே தன் நண்பனின் திருமணத்தை பார்க்க நின்று இருந்த சூர்யா மேடையை கீழே இருந்தே ஏறிக் குதித்து ஜெய்யை நோக்கி ஓடி வர… மீனுவின் பெற்றோரும் மாப்பிள்ளை… என பதறிக்கொண்டு அவனை நோக்கி வேகமாக வர… பூஜாவும் “மாம்ஸ் பார்த்து..” என்று அவனிடம் வர…
இப்படி ஜெய்யிர்க்காக அவன் சொந்தங்கள் எல்லாம் ஓடி வர… அதற்குள் ஒரு கரம் சட்டென அவிழ இருந்த அவன் வேஷ்டியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறுகையால் அவன் இடுப்பை வளைத்து பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்து பிடித்துகொண்டே பதட்டமாக அவனை நிமிர்ந்து பார்த்து “ஒன்னும் இல்லை பதராதீங்க … நான் பிடிச்சுகிட்டேன்” என்று மீனு அவன் முகத்தை பார்த்து சொன்னாள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெய் தன்னில் பாதியாகப் போகும் மீனுவை அதிசயம் போல பார்த்தபடி அவள் மேல் தன் முழு எடையையும் போட்டு தடுமாறிக்கொண்டு இருந்தான் அவள் பார்வையாள் .
அதற்குள் சந்தோசுடன் சேர்ந்து சூர்யாவும் வந்து ஜெய்யை விழாமல் தாங்கி பிடித்துக்கொள்ள… மீனு சட்டென்று அவன் இடுப்பில் இருந்த வேஷ்டியை அவனுக்கு கட்டிவிட்டாள்.
அவள் கை தன் இடுப்பில் உரசவும் கூச்சத்தில் ஜெய் நெளிய.. “டேய் அசையாம நில்லு டா சிஸ்டர்க்கு வேஷ்டி கட்ட கஷ்டமா இருக்கும்ல…” என்றான் சூர்யா.
“வாவ் அண்ணி, நல்ல நேரத்துல என் அண்ணனையும் கீழ விழாம பிடிச்சுகிட்டீங்க… அப்படியே அவர் வேஷ்டியையும்” என்று சொல்லி சிரித்தான் சந்தோஷ்.
அவனை பார்த்து சிரித்துக்கொண்டே ஜெய் இடுப்பில் வேஷ்டியை தனக்கு தெரிந்த மாதிரி அவிழ்ந்து விழாத அளவுக்கு இருக்கமாக கட்டிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்து ” ஓகேவா..?” என்றாள்.
அவனும் ” ஆமாம்” என்பது போல பதிலுக்கு தலையை ஆட்டினான்.
அதன் பின் சந்தோஷை பார்த்து அவரை இப்படி உக்கார வைங்க என்று சோபாவை காட்டி ஜெய்யை அதில் அமர வைக்க உதவியவள். அவர்கள் அருகில் நின்று இருந்த சூர்யாவை பார்த்து “ஒரு நிமிஷம் இப்படி வாங்க..” என்று அவனை தன் பக்கம் அழைத்தாள்.
சூர்யா ஒன்றும் புரியாமல் அவள் அருகில் வர.. சூர்யா இந்த பக்கம் வந்ததும் அவனை தாண்டி நின்று இருந்த ரியாவிடம் வந்தாள். அங்கிருப்பவர்கள் இந்த திருமணத்தை வேண்டாம் என்று நிறுத்தியவளிடம் எதற்காக இப்போது மீனு செல்கிறாள் என்று அனைவரும் அவளையே பார்க்க…
அப்போது யாரும் எதிர்பார்த்திராத ஒரு செயலை மீனு செய்தாள். அவள் செய்வதை பார்த்து அனைவரும் ஸ்தம்பித்து போய்யினர்.
