Home Uncategorizedஎனை மாயம் செய்யும் ராட்சசன் 13

எனை மாயம் செய்யும் ராட்சசன் 13

by Layas Tamil Novel
224 views

EPISODE 13

மீனு மெத்தையில் படுத்ததும் சீக்கிரமே உறங்கிவிட.. ஆனால் அவள் கொளுத்திவிட்டுச் சென்ற விஷயம் ஜெய்யை தூங்க விடாமல் செய்தது.

தன் மீது இரக்கம் கொண்டு  திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் எந்த காரணத்துக்காக மீனு தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள் என யோசித்து அவன் மூளை குழம்பி விடும் போல இருந்தது.

படுத்து உறங்கிக் கொண்டிருந்த மீனுவை பார்த்தான். ஏனோ அவள் முகத்தை பார்க்க வேண்டும் போல அவனுக்கு தோன்ற தன் வீல் சேரை இயக்கி கட்டிலை  சுற்றி வந்து அவளுக்கு முன்பு நின்றான்.

கண்கள் மூடி ஆழ்ந்த உறக்கத்தில்  இருந்தாலும் லேசான சிரிப்போடு அவள் முகம் இருந்தது.

அந்த முகமே அவள் சந்தோசமாக இருப்பதை காட்ட… “தூங்கும்போது கூட இப்படி சிரிச்சுக்கிட்டே தூங்குவாங்களா? அப்படி என்ன இவ சந்தோசமா இருக்கிறா தூக்கத்தில் கூட சிரிக்கிற அளவுக்கு” என யோசித்தபடி அவள் முகத்தையே பார்த்திருக்க அவள் சிரித்ததில் கன்னக்குழி லேசாக தெரிய அதை பார்த்ததும் ஜெய்க்கு அதை தொட வேண்டும் போல தோன்றியது.

மெல்ல குனிந்து தன் கையை அவள் முகத்தை நோக்கி நீட்டினான்.  அவள் கண்ணத்திற்கு அருகில் வரை தன் கையை கொண்டு சென்றவன், “இது சரியில்ல ஜெய் நீ தப்பு பண்ற” என அவன் உள்ளம் அவனுக்கு எச்சரிக்கை செய்தது. சட்டென்று தன் கையை பின்னால் இழுத்துக் கொண்டவன் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான்.

ஏற்கனவே நள்ளிரவில் கடந்து கொண்டு இருக்க அழைச்சலில் இருந்த ஜெயிக்கும் தூக்கம் வரவே தான் எங்கே படுப்பது என சுற்றிலும் பார்த்தான் அங்கே மீனுவின் அறையில் சோபா ஒன்று போடப்பட்டு இருந்தது. அது சாய்ந்து அமரும் சோபா போல அல்லாமல் சற்று வித்தியாசமாக சதுர வடிவில் கொஞ்சம் பெரியதாக இருந்தது. பார்ப்பதற்கு அது மினி பெட் போல இருக்க தான் அங்கேயே சென்று படித்துக் கொள்ளலாம் என தீர்மானித்தவன் அந்த சோபாவிற்கு அருகில் வந்தான்.

அந்த சோபாவிற்கு மிக அருகில் கொண்டு வந்து வீல் சேறை நிறுத்திவிட்டு முதலில் கீழே குனிந்து தன் கால்கள் இரண்டையும்   தூக்கி வீல்சேரில் இருந்து தரையில் வைத்தான். பிறகு வீழ்ச்சாரை பிடித்துக் கொண்டு மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக முன்னாள் நகர்ந்து வந்தவன் சோபாவில் ஒரு கையும் வீல் சாரில் ஒரு கையும் என ஊன்றி தன் உடலை மேலே தூக்க அப்போது சரியாக வீல் சேர் அவன் ஊன்றியதில் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தது. அவனால் அதை பேலன்ஸ் செய்ய முடியாமல் ஒரு கை வீழ்ச்சாரோடு அவன் உடலையும் சேர்த்து இழுத்துச் செல்ல போக.. 

தான் கீழே விழப் போகிறோம் என யோசித்தபடி என்ன செய்வது என்று தெரியாமல் ஜெய் தடுமாறினான்.

அதற்குள் அவன் கீழே விழாமல் வேகமாக வந்து அந்த சேரை நகர விடாமல் பிடித்துக் கொண்டாள் மீனு.

மீனு சேரை நகர்விடாமல் பிடித்துக் கொள்ளவும் ஜெய்  சோபாவில் இருந்து தன் கையை வீழ்ச்சாரில் வைத்து தன்னை முழுவதுமாக வீழ்ச்சாரில் பொருத்திக் கொண்டான்.

அவனுக்கு அப்போது தான் சற்று நிம்மதியாக இருந்தது. எங்கே கீழே விழுந்து மீனுவின் முன்பு அசிங்கமாகி விடுமோ என ஒரு பக்கம் தோன்றினாலும் அவளாகவே வந்து தன்னை கீழே விழாமல் பிடித்துக் கொண்டதே நினைத்தும் சற்று ஆறுதலாக இருந்தது.

“நீங்க தூங்கணும்னு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானே நீங்க பெட்ல படுக்க ஹெல்ப் பண்ணியிருப்பேனே… அதை விட்டுட்டு இங்கே வந்து அந்த சோபாவுல படுக்க போய் இந்த நேரத்துக்கு கீழே விழுந்து இருக்க மாட்டீங்களா? ” என்றாள் மீனு. 

நீ வந்து ஹெல்ப் பண்ணி தான் நான் படுக்கணுமா என்றான் ஜெய்.

இந்த ரூம்ல உங்களுக்கு ஹெல்ப் பண்ண என்ன தவிர வேற யாருமே இல்லையே என்றால் மீனு.

அவளை முறைத்தபடி ஜெய் பார்த்துக் கொண்டு இருக்க.,. “என்ன முறைச்சது போதும் முதல்ல நல்லா உக்காருங்க நான் உங்களை பெட்டுக்கு கூட்டிட்டு போறேன்” என்றாள் .

“அதெல்லாம் எதுவும் வேண்டாம் நான் பாத்துக்குறேன் நீ போய் தூங்கு.. தேவையில்லாம உன்னோட தூக்கத்தையும் நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன் நினைக்கிறேன்” என்றான் ஜெய்.

“அதான் டிஸ்டர்ப் பண்ணிட்டீங்களே அப்புறம் என்ன?” என்றவள் அவன் வீழ்ச்சாரை தள்ளிக் கொண்டு போய் பெட்டின் அருகில் நிறுத்தினாள்.

“இங்கேயா!! வேண்டாம் நீ இங்கேயே படுத்துக்கோ நான் போய் அந்த சோபாவுல படுத்துகிறேன் என்று ஜெய் தன் வீல் சேரை திருப்பி போக..

“அட இது என்ன  வம்பா இருக்கு நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?  நான் யாரோ மாதிரி என்னை இங்க தூங்க சொல்லிட்டு..நீங்க அங்க போய் சோபாவுல படுத்தா நல்லா இருக்குமா? அதுவும் கல்யாணம் ஆன முதல் நாளே இப்படி நீங்க பண்ணினா எனக்கு அது கஷ்டமா இருக்குமா? இருக்காதா?.. அப்போ உங்களுக்கு என்ன பிடிக்கலையா? நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டது உங்களுக்கு விருப்பம் இல்லையா?”  என்றாள் மீனு சற்று வருத்தமான குரலில்.

அவள் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் ஜெய் அமைதியாக மீனுவின் முகத்தை பார்க்க… ஜெய் எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்ததும் தன்னுடைய கேள்விக்கு அவனுடைய மௌனம் தான் சரியான பதில் என நினைத்துக் கொண்ட மீனு “அப்போ இவருக்கு உண்மையிலேயே நான் இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டது பிடிக்கல போல.. ஒருவேளை என் அக்காவை காதலிச்சிட்டு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு வருத்தத்தில் இருப்பாரோ இவர் மனசுல இன்னுமும் என் அக்கா தான் இருக்காளோ? ” என யோசனையில் மீனு ஜெய்யை பார்த்தாள்.

பிறகு அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நீங்க என் வீட்ல இருக்கீங்க உங்கள நான் நல்லபடியா கவனிச்சுக்கலைன்னா அது சரியா இருக்காது பேசாம வந்து பெட்டில் படுங்க என்றவள் அவன் சேரை அருகில் கொண்டு வந்து வைத்து நகராமல் இருக்க அதை லாக் செய்தவள் தன் கையை ஜெய் முன்பு நீட்ட… “என்ன இவ இப்படி இருக்கா நான் இவ கிட்ட முகம் கொடுத்து சரியா பேசலனாலும் விடாம என்னை பார்த்துக்குறதுலயே குறியா இருக்காளே” என  அவளை அதிசயம் போல பார்த்தவாறு தன் கையை தானாக அவள் முன்பு நீட்டினான்.

“ம்ம்ம்… குட் ” என்றவள் ஜெய் கையைப் பிடித்து தன் கழுத்தை சுற்றி தோளில் போட்டுக் கொண்டவள் அவன் இடையில் தன் ஒரு கையை கொடுத்து வீல்ச் சேரிலிருந்து எழுந்து கொள்ள… தன் முழு பலத்தையும் கொடுத்து மீனு  உதவி செய்ய.. அவளை சிரமப்படுத்தி விடக் கூடாது என்று அவசரமாக கட்டிலை பிடித்துக் கொண்டு எழுந்தவன் மீனுவின் உதவியோடு மெத்தையில் அமர்ந்தான்.

ஜெய் நன்றாக அமர்ந்து விட்டானா என்பதை உறுதி செய்தவள் வீல்சாரை மெத்தையிலிருந்து சிறிது தள்ளி வைத்துவிட்டு அவன் படுத்துக்கொள்ள உதவி செய்ய கீழே குனிந்து ஜெய்யின் காலைப் பிடிக்கப் போனாள் மீனு. 

“ஏய் என்ன பண்ற?” என ஜெய் பதட்டமாக கீழே குனிந்தவளின் கையை பிடிக்க..

அவளோ அவனை பார்த்தவள் மெல்ல சிரிக்க… அவள் புன்னகையை பார்த்தவன் அதன் பிறகும் எதுவும் பேசாமல். அமைதியானான்.

மீனு அவன் பாதங்கள் இரண்டையும் மென்மையாக பிடித்து கட்டிலில் தூக்கி வைத்தவள் அவனை பார்த்து கண்களாலேயே படுக்க சொல்லி சைகை செய்ய.. அவனும் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பை போல.. தலையணையில் தலை சாய்த்தான்.

அவனுக்கு மார்பு வரை போர்த்திவிட்டு “நல்லா. தூங்குங்க..” என்று அவன் காதோரம் சொன்னவள் பின் கட்டிலை சுற்றி வந்து அவன் அருகில் சற்றுத் தள்ளி படுத்துக்கொண்டாள்.

அவளையே கண்கொட்டாமல் தனக்கு முதுகு காட்டி படுத்து இருந்தவளை பார்த்தான். சிறிது நேரம் அவள் முதுகையே வெறித்துக்கொண்டு இருந்தவன் அவனையும் அறியாமல் உறங்கிப்போனான்.

இன்று தங்களுக்கு முதல் இரவு இருவரும் ஏதாவது மனம் விட்டு பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளலாம் என்ற எண்ணம் இருவரின் மனதிலும் துளியும் இல்லை போலும் இருவரும் நன்கு உறங்கி இருந்தனர்.

{“மம்ம்ஹும்… என்ன செய்ய.. இவங்க டிசைன் அப்படி போல…இல்லையா FRIENDS”}

காலையில் தன் அறையில் இருந்து எழுந்து வந்த பூஜா ” அம்மா காபி ” என்றபடியே ஹாலில் இருந்த சோபாவில் வந்து அமர்ந்து டிவியை போட்டவள் சோபாவில் அமர்ந்திருந்த தன் அப்பாவின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டு.. ” என்ன அப்பா இன்னைக்கு எங்கயும் போகலையா? காலையிலே ரிலாக்ஸ் ஆஹ் உக்காந்து டிவி பாத்துட்டு இருக்க… இந்த நேரம் உன் பொண்டாட்டி அதை வாங்கிட்டுவாங்க.. இதை வாங்கிட்டு வாங்கன்னு உன்னை கடைக்கு அனுப்பி இருப்பாளே… நானும்  எவ்ளோ தரம் சொல்லி இருக்கேன் நமக்கு என்ன காசுக்கு பஞ்சமா இதுக்கு எல்லாம் ஒரு நல்லா ஆளா பார்த்து வேளைக்கு வெச்சுக்கலாம்னு.. ஆனா நீதான் இதெல்லாம் நம்மளே செஞ்சு பழகணும்னு பழைய பஞ்சாங்கத்தை பிடிச்சிட்டு நிக்குற… ” என்றாள்.

“சரியா சொன்ன பூஜா நானும் உன் அப்பாகிட்டே எவ்ளோ முறை சொல்லி பார்த்துட்டேன். ஆனா அவர் கேக்குறதா இல்லையே… என்னவோ அவரே எல்லா வேலையும் செய்றவர் மாதிரி  பேசிட்டு இருப்பாரு … ஒரு நாள் கிட்சன்ல வந்து நின்னு நான் செய்ற வேலையில பாதி அவரை செய்து பார்க்க சொல்லணும். அப்போ தெரிரியும் நம்ம கஷ்டம் இவருக்கு ” என்று கிட்சனில் இருந்தவாரே பதில் சொன்னார் ஜனனி.

” பாத்தியா பா நான் கொஞ்சம் தான் ஸ்டார்ட் பண்ணினேன் ஆனா அம்மா மனசுல எவ்ளோ இருக்கு  பாரு.. அவங்க சொல்ற மாதிரி உன்னை ஒரு நாள் அடுப்படியில விட்டு வேலை வாங்கணும் அப்போதான் உனக்கு அம்மாவோட கஷ்டம் புரியும் ” என்றவள்.

” என்ன நானும் அம்மாவும் பேசிட்டு இருக்கோம் நீ எதுவும் பேசாம அமைதியா இருக்க.. ஏதாவது சொன்னா தானே நல்லா இருக்கும் ” என்று பூஜா எழுந்து தன் அப்பாவை பார்க்க… அதிர்ந்து போனவள் “அம்மா.. ” என்று அலறினாள். 

அவரும்  பூஜா அலறியதில் கிட்சனில் இருந்து வேகமாக எழுந்து வெளியே வந்தவர் ” என்ன டி… என்ன ஆச்சு ” என்றவாரே ஹாளுக்கு வந்தார்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured