EPISODE 16
சுடச்சுட ஜெய்க்கு பால்கோவா பிடிக்கும் என்று அவன் தான் தன்னிடம் சொன்னதாக மீனு கூற, ஆனால் ஜெய்யோ அவளிடம் தன்னைப் பற்றிய எந்த விபரங்களும் கூறாமல் இவள் எப்படி இப்படி அப்பட்டமாக அனைவரிடமும் பொய் சொல்கிறாள் என அவள் மீது ஜெய்க்கு கோபமாக வந்தது.
அனைவரின் வற்புறுத்தலினால் வேண்டா வெறுப்பாக மீனு செய்து கொடுத்த பால்கோவாவை சாப்பிட ஆரம்பித்தவன் அதன் ருசிக்கு மயங்கி கண்கள் மூடி அவள் கொடுத்த பால்கோவா முழுவதுமாக சாப்பிட்டு முடித்தான்.
பால்கோவா சாப்பிட்ட பின்பும் கோபம் தனியாத ஜெய் கிச்சனிலிருந்து மீனுவை பார்த்து ” ரூமுக்கு வா உன்னிடம் பேச வேண்டி இருக்கு” என்று சொல்லிவிட்டு தன்வீல் சேரை இயக்கிய படி கீழே இருந்த மீனுவின் ரூமிற்கு சென்றான்.
மீனுவுக்கோ “பால்கோவா நல்லா தானே இருந்துச்சு. கண்ணை மூடி ரசித்து ருசிச்சு சாப்பிட்ட அப்புறமும் ஏன் இன்னும் கோபம் குறையல இவர புரிஞ்சுக்கவே முடியலையே” என யோசித்தபடி கிச்சனிலிருந்து தன் ரூமிற்கு செல்ல ஹாலில் இருந்த அனைவரும் ஜெய்யின் கோபத்தை நினைத்து பயந்து போயினர்.
ஆனால் குருவோ தன் மகள் எப்பேர்பட்ட கோபக்காரனையும் சமாளித்து விடுவாள் என மீனுவிற்கு சப்போர்ட் செய்து பேசிக்கொண்டு இருந்தார்.
இங்கே ரூமுக்கு வந்த மீனு ஜெய்யை பார்க்க அவளுக்கு முதுகு காட்டியபடி தன் வீல்சேரில் ஜன்னல் வழியே வெளியே வெரித்தபடி அமர்ந்திருந்தான்.
“இப்படி சும்மா சும்மா கோபப்பட்டா இவன் கூட எப்படி நான் சந்தோஷமா வாழறது. சரியான சிடு மூஞ்சியா இருப்பான் போலவே” என நினைத்துக் கொண்டே அவன் பின்னால் வந்து நின்ற மீனு “ம்க்கும்..” என தன் குரலை கனைத்து அவனுக்கு தான் வந்திருந்ததை சொன்னாள்.
ஜெய் எதுவும் பேசாமல் அப்படியே இருக்க.. “ஏதோ பேசணும்னு வர சொல்லிட்டு இப்படி முதுக காமிச்சு உட்கார்ந்துட்டு இருந்தா என்ன அர்த்தம். என் மேல கோபமா இருந்தா திரும்பி ரெண்டு வார்த்தை திட்டிடுங்க இப்படி எதுவும் பேசாம அமைதியா இருந்தா நான் என்னன்னு நினைக்கிறது” என்றாள் மீனு.
அவள் பேசி முடிக்கவும் ஜெய் தன் வீல் சேரை திருப்பவும் சரியாக இருந்தது. அவனை பார்த்தவள் ” ம்ம்.. சொல்லுங்க.. ஏன் என்னை தனியா பார்க்கணும்ன்னு சொன்னிங்க.. ” என்று தன் சேலை தலைப்பை கையில் வைத்து திருகிக்கொண்டே வெட்கத்துடன் கேட்டாள்.
அதை பார்த்த ஜெய் தன் சேரை அவள் அருகில் கொண்டு வந்தவன் சட்டென்று அவள் கையை பிடித்துக்கொண்டு ” இந்த பால்கோவாவை நீ எப்படி இவ்ளோ ருசியா செஞ்ச, அதே போல என் அம்மா எப்படி எனக்கு செஞ்சு கொடுப்பாங்களோ அப்படியே நீ செய்த பால்கோவா இருந்துச்சு. அதை சாப்பிட சாப்பிட எனக்கு என்னோட அம்மாவே செஞ்சு கொடுத்த மாதிரி அவங்க கையாள சாப்பிட்ட உணர்வு வந்துச்சு ” என்று குரல் தலு தலுக்க ஜெய் மீனுவின் கையை பிடித்துக்கொண்டு கேட்டான்.
அவள் பார்த்த இந்த இரண்டு நாட்களில் ஜெய் யாரிடமும் தானாக பொய் பேசியது இல்லை. அவன் எப்போதும் கோபமாக, கம்பீரமாக யாரிடமும் நெருங்கி பழகத்தாவனாக அவள் பார்த்த வரை இருந்தான். ஆனால் இன்று இந்த பால்கோவாவிற்காக தன்னிடம் இறங்கி வந்து பேசுபவனை பார்த்து மீனுவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனை அப்படியே மீனு பார்த்துக்கொண்டு நின்று இருக்க… மேலும் அவள் அருகில் நெருங்கி வந்த ஜெய் ” மீனு ப்ளீஸ் உனக்கு யார் இந்த ரெசிபி செய்ய சொல்லி கொடுத்தாங்க. எனக்கு இந்த ஸ்வீட் பிடிக்கும் அதுவும் சூடா சாப்பிட பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரிரியும். நான் எவ்வளவோ யோசிச்சு பார்த்துட்டேன். நானா உன்கிட்டே இந்த ஸ்வீட் பிடிக்கும்னு சொல்லவே இல்லை. நான் தான் சொன்னேன்னு நீ ஏன்? எல்லார்கிட்டயும் பொய் சொன்ன ” என்றான்.
” இல்லையே நான் பொய் எதுவும் சொல்லலையே.. உண்மையைதான் சொன்னேன் ” என்றால் மீனு.
அவளை குழப்பமாக பார்த்த ஜெய் ” ஐயோ மீனு இப்படி எல்லார்கிட்டயும் விளையாடின மாதிரி என்கிட்டயும் விளையாடாத. தயவு செய்து உண்மையை சொல்லு மீனு ” என்று அவள் கையை இருக்கமாக பிடித்துக்கொண்டு கேட்டான்.
” நீங்க எவ்ளோ கெஞ்சி கேட்டாலும் நான் சொன்னதையே தான் சொல்ல போறேன். சத்தியமா சொல்றேன் நீங்களே தான் இந்த ஸ்வீட்டை எப்படி செய்யணும்னு என்கிட்டே சொன்னிங்க. நான் பொய் சொல்லவே இல்லை. ” என்று தன் தலையில் அடித்து சத்தியம் செய்தால் மீனு.
” சரி நான் தான் உன்கிட்டே சொன்னேனே வெச்சுக்க.. எப்போ?எங்கே? சொன்னேன் ” என்றான் ஆர்வமாக அவள் முகத்தை பார்த்து.
” இப்போ என்ன உங்களுக்கு நீங்க இந்த ஸ்வீட் செய்ய எப்போ என்கிட்டே சொன்னிங்கன்னு தெரிஞ்சுக்கணும் அவ்ளோ தானே ” என்றாள் மீனு.
ஆமாம் என்று ஜெய் ஆர்வமாக மீனு சொல்லப்போவதை கேட்க அவளையே பார்த்தான்.
தன் கையை பிடித்துக்கொண்டு இருந்த ஜெய் முன்பு மண்டி இட்டு அமர்ந்தவள் அவன் தாடியை தன் ஒற்றை விரலால் வருடிக் காட்டி “நான் சொன்னதை செஞ்சுட்டு வாங்க எப்போ? எங்கே? எனக்கு ஸ்வீட் செய்ய சொல்லிக் கொடுத்தீங்கன்னு நான் உங்க கிட்டே சொல்றேன் ” என்றாள்.
அவளை வியாப்பாக பார்த்த ஜெய் “என்னை கல்யாணம் செய்துகிட்ட காரணத்தை கேட்டதுக்கு இந்த தாடியை ஷேவ் செய்ய சொன்னே, இப்போ ஸ்வீட் செஞ்ச காரணத்தை கேட்டதுக்கும் தாடியை எடுக்க சொல்றே.. எனக்கு ஒன்னுமே புரியலை. என் தாடிமேல உனக்கு ஏன் இவ்ளோ கடுப்பு அது என் முகத்துல தானே இருக்கு உனக்கு என்ன பாரமாவா இருக்கு” என்றான்.
” அது உங்க முகத்துல இருந்தாலும் பாக்குறது என்னவோ நான் தானே நீங்களே யோசிச்சுப்பாருங்க யாராவது தன் சொந்த கல்யாணத்து அப்போ தாடியோட.. தலை முடி கூட சரியா வெட்டாம சொகமா முகத்தை வெச்சிட்டு கல்யாணம் செய்துக்குவாங்களா? ” என்றாள்.
“நீ என்னை பார்க்காம தான் கல்யாணம் செய்துக்க ஓகே சொன்னேன்.. அப்போ நான் எப்படி இருந்தாலும் பரவாயில்லைனு தானே நீ இருக்கனும். இப்போ மட்டும் என்ன?” என்றான்.
“கல் ஆனாலும் கணவன் புள் ஆனாலும் புருஷன்னு சொல்ற மாதிரி என் புருஷன் எப்படியிருந்தாலும் பரவாயில்லைன்னு போற ரகம் கிடையாது நான். என்னோட புருஷனை எனக்கு பிடிச்ச மாதிரி நான் மாத்திக்குவேன். மாறலையின்னா மாறன் வைப்பேன் ” என்றாள் சற்று கர்வமாக.
மீனுவின் பேச்சிலேயே அவள் வழக்கமான பெண் இல்லை என்று அவனுக்கு புரிந்தது. அதற்காக இப்படியா? தனக்கு ஒருவிஷயம் தெரிய வேண்டும் என்று அவளிடம் கேட்டாள். அவள் சொல்வதை செய்துவந்தால் தான் கேட்டது கிடைக்கும் என்று சொல்கிறாளே என்று அவளையே பார்த்தபடி தனக்கு கீழே மண்டி இட்டு அவன் முகத்தை கன்னக்குழி தெரிய சிரித்த முகமாக பார்த்துக்கொண்டு இருந்த மீனுவை பார்த்தான்.
” என்ன அப்படி பாக்குறீங்க.. உங்க கேள்விக்கு எல்லாம் பதில் தெரியனுமா? நான் சொன்னதை எப்போ செய்ரிங்களோ அப்போ தான் சொல்வேன். அதுவரை என்கிட்டே இருந்து ஒரு சின்ன க்ளு கூட கிடையாது. ” என்றவள் அங்கிருந்து எழுந்து செல்ல போக..
“இப்படியே நான் கேட்கும் கேள்விக்கு எதையாவது சொல்லி சமாளிக்குறாலே இவ வழிக்கு நாம போகக் கூடாது. நம்ம வழிக்கு இவளை கொண்டு வரணும்” என்று அவனுக்குள் இத்தனை நாள் தூங்கிகொண்டு இருந்த ஆளுமை சிறிதாக வெளியில் எட்டி பார்த்தது.
உடனே எழுந்து செல்ல போன மீனுவின் கையை சட்டென எட்டிப்பிடித்தவன் தன் பக்கம் அவளை இழுக்க போக… ஜெய் கைபிடித்து இழுத்தத்தை மீனு சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவன் தொடுகை அவளை அப்படியே உறைய செய்ய.. அவள் அப்படியே நிற்க முயற்சிக்க ஆனால் ஜெய்யோ அவளை தன் புறம் இழுக்க நிற்க முடியாமல் தடுமாறி ஜெய்யின் மடியில் போய் பொத்தென விழுந்தாள். இல்லை இல்லை அவன் மடியில் வாகாக அமர்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
இதை இருவருமே எதிர்பார்க்கவே இல்லை. ஜெய்யின் கை அவள் இடுப்பை சுற்றி வளைத்து பிடித்து இருக்க மீனுவோ செய்வதரியாது ஜெய்யை திரும்பி அவன் கண்களை பார்க்க… இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதி இருவருக்குள்ளும் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்திக்கொண்டு இருந்தது.
மீனு சுதாரித்துக்கொண்டு அவன் மடியில் இருந்து எழுந்திருக்க போக.. அவளை நகரவிடமால் பிடித்துக்கொண்டவன்.” இப்போ நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் நீ பதில் சொல்ல போறியா? இல்லையா? ” என்றான் அவள் இடையில் அழுத்தம் கூட்டிக்கொண்டே.
இதை சற்றும் எதிர்பாராதவள் விக்தத்துப் போய் ஜெய்யை பார்க்க.. அவனோ எதுவுமே செய்யாதவன் போல அவளை பார்த்தான்.
“என்ன இது விடுங்க என்ன… நான் போகணும் ” என்று எழுந்திருக்க மீனு முயற்சிக்க.. எங்கே அவளால் போக முடிந்தால் தானே ஜெய் தான் இருக்கமாக பிடித்துக்கொண்டு இருக்கிறானே..
‘ நான் கேட்டதுக்கு பதில்… அப்பறோம் உன்னை விடுறேன் ” என்று ஜெய்யும் அவள் இடையை விடாமல் பிடித்துக்கொள்ள..
மீனுவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இருவரும் எதுவும் பேசாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது வெளியே ஹாலில் இருந்து “அக்கா… அக்கா… இங்கே வந்து பாரு ” என்று குரல் கொடுத்தபடி அவர்கள் அறையை நோக்கி பூஜா வர.. அவள் குரலை கேட்டதும் ஜெய்யின் கையை வேகமாக தன் இடையில் இருந்து விளக்கிவிட்டு அவன் மடியில் இருந்து எழுந்தவள் அவனை விட்டு இரண்டு அடி தள்ளி நின்று தன் நாக்கை வெளியே நீட்டி பலிப்பு காட்டியவள் “முடிஞ்சா வந்து பிடிங்க பார்க்கலாம்” என்று தன் அறையில் இருந்து சிரித்தமுகமாக வெளியே ஓட.. ஜெய்யும் சிரித்தபடியே “நான் வீல் சேரில் இருந்தா உன்னை துரத்திப் பிடிக்க முடியாதுன்னு நினைச்சுட்டியா? இப்போ பாரு ” என்றுவன் தன் வீல் சேரை வேகமாக மீனுவை துரத்துவதற்க்காக இயக்கினான்.
தன்னை துரத்தி வந்த ஜெய்யை திரும்பி பார்த்த படி ஹாளுக்கு ஓடி வந்த மீனு தனக்கு எதிரே வந்தவரை கவனிக்காமல் அவர் மீது மோதி விட்டான்.
மீனு தலையில் லேசாக அடித்துவிட “ஷ்..” என்று வலியில் தன் தலையை தேய்த்துவிட்டுக்கொண்டே தனக்கு எதிரே இருப்பவரை பார்க்க அவள் எதிரே இருந்த நபரை பார்த்த மீனு ஆச்சர்யமாக…
மீனுவின் அறையில் இருந்து வெளியே வந்த ஜெய் கீழே வர முடியாமல் படிகளின் விழும்பில் நின்று கீழே எட்டி பார்த்தவனுக்கு அங்கு நிற்பது யார் என்று தெரியவில்லை.
