Home Uncategorizedஎனை மாயம் செய்யும் ராட்சசன் 17

எனை மாயம் செய்யும் ராட்சசன் 17

by Layas Tamil Novel
237 views

EPISODE 17

பூஜா ஹாலில் இருந்து மீனுவை அழைக்க ஜெய் பார்த்து சிரித்தபடி ஹாளிற்கு வந்த பூஜா தெரியாமல் தனக்கு எதிரே இருந்த நபர் மீது மோதி விட “ஷ்…” தலையை தேய்த்துக் கொண்டே தனக்கு எதிரே இருந்தவளை பார்க்க மீனுவின் பின்னால் சிரித்து முகமாக வந்த ஜெய் படியின் விழும்பில் நின்று சற்று குனிந்து மீனுவுக்கு எதிரே நின்றவளை பார்த்து யார்? இந்த பெண் என்று யோசனையாக பார்த்தான்.

“ஹேய் என்ன டி மீன்ஸ்!! ஏன் என்ன பார்த்து இப்படி ஷாக் ஆகுற.,.”  என்று மீனு முன்பு சிரித்தபடி நின்று இருந்தாள் மிருதுளா.

மிருதுளாவை பார்த்த மீனு இன்னமும் பேய் அறைந்தவள் போல நிற்க… ஷிபான் சேலை கட்டிக்கொண்டு கழுத்தில் புது தாலி தலையில் மல்லிகைப்பூ என அல்ட்ரா மாடர்னாக வலம் வந்த மீனுவா இது என்று வாயை பிளந்துகொண்டு பார்த்துக்கொண்டு இருந்தாள் மிருதுளா.

“மிருதளா அக்கா என்ன என் அக்காவை அப்படி பாக்குறீங்க?  அவள நீங்க இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையா?  என்ன?  நீங்களும் அக்காவும் ஒண்ணா அமெரிக்காவுல ஒரு வருஷம் தங்கியிருந்தீங்களே ” என்று கேட்டபடி மிருதுளாவின் அருகில் வந்த பூஜா அவள் தோளைத் தொட்டு உழுக்க..

“அப்படி இல்ல பூஜா உன் அக்கா இப்படி டிரஸ் பண்ணி நான் பார்த்ததே இல்லயா… அதுவும் இல்லாம அவ கழுத்துல இந்த தாலி..” என மீனு கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த  திருமாங்கல்யத்தை தன் ஆள்காட்டி விரலால் தொட்டுக்காட்டி பூஜாவை கேட்க.

“உங்களுக்கு விஷயமே தெரியாதா? என் அக்காவுக்கு நேற்று காலைல தான் கல்யாணம் ஆச்சு” என்றாள் பூஜா.

“அப்படியா!! ஏண்டி என்கிட்ட உனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லவே இல்ல.  சொல்லியிருந்தா முன்னாடியே நான் பிளான் பண்ணி இந்தியா வந்திருப்பேனே.. ஆமா நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட மாப்பிள்ளை யாரு?  எப்படி இருப்பாரு ஆளு பாக்க ஹான்ஸம்மா இருப்பாரா?” என மிருதுளா  மீனுவை பார்த்து கண்ணடித்து கேட்க.

மீனு இன்னமும் எதுவும் பேசாமல் மிருதுளாவை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“அக்கா ஏன் எதுவுமே பேச மாட்டேங்குற மிருதுளா அக்கா உன்கிட்ட தானே பேசிகிட்டு இருக்காங்க.  நீ என்னவோ பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி அப்படியே அசையாம இருக்க என்ன ஆச்சு” என்று பூஜா மீனுவின் கையை பிடித்துக்கொண்டு கேட்டாள்.

இதுவரை சிலையாக நின்றிருந்த மீனு மிருதுளாவை பார்த்தவள் திரும்பி தன் பின்னால் வீல்ச்சாரில் சூர்யாவின் உதவியோடு வந்த ஜெய் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த ஜெய்யை பார்த்தாள்.

மீனு ஜெய்யை திரும்பி பார்க்கவும் அவளைத் தாண்டி மீனுவின் பின்னால் வீல் சேரில் அமர்ந்திருந்த ஜெய்யை பார்த்த மிருதுளா ஆச்சரியமானவள் மீனுவை கையைப் பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பியவள் “ஹேய் மீன்ஸ் கடைசில நீ இவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டியா? என்னால நம்பவே முடியலடி!!” என ஆச்சரியமாக மிருதுளா பேச.

அவள் சொல்லி முடித்த அடுத்த நொடி மீனு மிருதுளாவின் வாயை பொத்தியவள் பல்லை கடித்துக்கொண்டே…”கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு சும்மா இரு. எதுவும் உளறி கொட்டி என்ன மாட்டி விட்டுவிடாதடி” என மிருதுளாவிற்கு கேட்கும்படி சொன்னவள்.

அவள் வாயில் இருந்து கையை எடுத்த மீனு ” மிரு…. நீ எப்படி ஊர்ல இருந்து வந்த என்கிட்ட சொல்லி இருந்தா நானே உன்னை பிக்கப் பண்ண ஏர்போர்ட் வந்து இருப்பேனே” என்றாள் சகஜமாக.

“ஆமாமா சொல்லி இருந்தா மட்டும் வந்து இருப்ப”  என்ற மிருதுளாவின் பார்வை முழுவதும் ஜெய் மீதுதான் இருந்தது.

ஜெய்க்கோ மீனுவுடைய ஃப்ரெண்ட் உள்ளே வந்து தன்னை பார்த்ததும் சொன்னதுதான்  திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருந்தது. “கடைசியில நீ இவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டியா? ஏன் இப்படி ஒரு கேள்வியை மீனுகிட்ட கேட்கணும்” என யோசித்துக் கொண்டிருந்த ஜெய் மிருதுளாவிடம் பேச போக… அதை கவனித்து விட்ட மீனு மிருதுளாவிடம் ஜெய் பேசி விடக்கூடாது என மிருதுளாவின் கையைப் பிடித்தவள் “ஏண்டி இங்கயே நின்னுட்டு இருக்க. வா நம்ம மேல போய் பேசலாம்” என மிருதுளாவின் கையை பிடித்து வேகமாக தன்னோடு இழுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள்.

மீனு அவசர அவசரமாக மிருதுளாவை இழுத்துச் செல்வதை பார்த்த ஜெய்க்கு அவளை தடுக்க முடியவில்லை.  “ச்சே..அவ பிரண்டுகிட்ட  பேசுறதுக்குள்ள இழுத்துட்டு மேல ஓடிட்டாளே” என நினைத்தவன் மாடி ஏறி செல்லும் மீனுவை வீல் சேரை திருப்பிய படி பார்க்க.. 

ஜெய்யை பார்த்தபடியே தன் தோழி மிருதுளாவை இழுத்துக் கொண்டு மாடிக்கு ஓடிய மீனு ஜெய் அவளை பார்த்ததும் அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்து கண்ணடித்துவிட்டு ஓடிவிட்டாள்.

மீனு இப்படி செய்வாள் என்று ஜெய் எதிர்பார்க்கவே இல்லை. அவள் தன்னிடம் இருந்து ஏதோ மறைக்கிறாள் என்பது மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது. மிருதுளா மீனுவிடும்  சொன்ன விஷயத்தையும்,  தன்னிடம் மீனு மறைத்த விஷயத்தையும் முடிச்சு போட்டு பார்த்த ஜெய்க்கு ஒரு விஷயம் விளங்கியது போல தோன்ற அவன் முகம் பிரகாசமாக ஆனது.

அப்படி என்றால் மீனுவிற்கு தன்னை ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும் என அவன் புரிந்து கொண்டான்.

ஆனால் மீனு தன்னை எங்கே எப்போது சந்தித்தாள் என்று அவனுக்கு தெரியாதே அது மீனுவே சொன்னால் தானே தெரியும்.

இப்படி யோசனையோடு மாடிப்படி பார்த்தபடி ஜெய் அமர்ந்திருக்க அவன் அருகில் வந்த கஜேந்திரன். ஜெய் நானும் சந்தோஷும் நம்ம கன்ஸ்ட்ரக்சன் சைட் வரைக்கும் போயிட்டு அப்படியே நம்ம ஆபீசுக்கும் போயிட்டு வரோம் 

நான் சென்னைக்கு எப்போதாவது தானே வரேன். வந்தது வந்தாச்சு அந்த வேலையையும் முடிச்சிட்டு போகலாம்னு இருக்கேன் என்றார்.

சரிப்பா போயிட்டு வாங்க என்ற ஜெய் கஜேந்திரனை வழி அனுப்பி வைக்க அவருடன் சந்தோஷம் அவர்கள் ஆபீஸிற்கு சென்றான்.

குரு ஜெய் இடம் வந்து “மாப்பிள உங்களுக்கு எதுவும் வேணும்னா சொல்லுங்க. நான் ஜனனியையோ, பூஜாவையோ விட்டு எடுத்துட்டு வர சொல்றேன். மீனு அவ பிரெண்ட் கூட பேச போயிட்டா இப்போதைக்கு வரமாட்டா.  வேணும்னா நீங்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்குறீங்களா நான் வேணா உங்களுக்கு ரூமுக்கு போக ஹெல்ப் பண்ணட்டுமா?  என்று குரு கேட்க..

“இல்ல மாமா பரவாயில்ல அவ பொறுமையா பேசிட்டு வரட்டும். நீங்க எதுவும் வேலை இருந்தா பாருங்க எனக்கு வெளியே கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு . நானும் சூர்யாவும் வெளியே போயிட்டு வந்துடறோம்” என்றான்.

“சரிங்க  மாப்ள அப்போ மதியம் லஞ்சுக்கு வந்துடுங்க.  ரொம்ப நேரம் வெளியே இருக்க வேண்டாம். புதுசா கல்யாணம் ஆனவங்க வெளியே ரொம்ப நேரம் இருக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. அதனாலதான்…” என்று குரு தயக்கமாக ஜெய் இடம் கூற.

அவர் தயங்குவதை கவனித்தவன் மாமா நீங்க மீனு கிட்ட எவ்வளவு உரிமையா பேசி பழகுறீங்களோ அதே உரிமையுடன் என்கிட்டயும் பேசலாம், கேட்கலாம், பழகலாம்.  இப்படி தயங்கி தயங்கித் தான் என்கிட்ட பேசணும்னு எந்த அவசியமும் இல்லை. உங்களுக்கு என்ன திட்ற உரிமை கூட இருக்கு” என்று லேசாக  புன்னகைத்தபடி ஜெய் கூற.

ஜெய் மீனு கழுத்தில் தாலி கட்டியதிலிருந்து இப்போதுதான் குருவிடம் வாய்விட்டு பேசுகிறான் அதுவும் அவன் நல்ல விதமாக பேசுவதை பார்த்து குருவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.

ஜெய் சொன்னதை கேட்டு சந்தோஷமடைந்த குரு “சரிங்க மாப்பிள்ளை” என்றவர் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து கார் சாவியை எடுத்தும் கொடுத்து “மாப்பிள்ளை நீங்க வந்த காரை அப்பா தான் வெளியே எடுத்து போயிட்டாரே. நீங்க வெளிய போக கார் வேண்டாமா? இது என்னோட கார் தான் நீங்களும் சூர்யாவும் வேணா இந்த கார்ல வெளியே போயிட்டு வந்துடுறீங்களா?” எனக் கேட்டார்.

அவ்வளவு நேரம் அந்த இடத்தில் தான் இருக்கிறோமா இல்லையா என்பது போல இருந்து சூர்யா சட்டென குருவிடம் அந்த கார் சாவியை வாங்கியவன் சரிங்க அங்கிள் நான்  ஜெயை கூட்டிட்டு வெளியே போயிட்டு வந்துடறேன் என்று விட்டு ஜெய்யின் வீல் சேரை தள்ளிக்கொண்டு வெளியே கிளம்பினான்.

இங்கே மிருதளாவை மாடிக்கு இழுத்து வந்த மீனு “ஏய் உனக்கு கொஞ்சமாவது அறிவுன்னு ஏதாவது இருக்கா? இல்லையா? இப்படித்தான் எல்லார் முன்னாடியும் வந்து நான் ஜெய்யை கல்யாணம் பண்ணிக்கிட்டது பத்தி சொல்லி காட்டுவியா?” என்றாள் சற்று கோபமாக கேட்டாள்.

“ஹேய் மீன்ஸ் மிஸ்டர் ஜெய் தான் உன்னோட ஹஸ்பண்ட்ன்னு தெரிஞ்சதும் நீ இவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு தேடிக்கிட்டு இருந்தியே.  அதனால அவரை கண்டுபிடிச்சு அவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நினைச்சு தான் நான் அப்படி கேட்டேன். ஏன்? அப்படி நான் கேட்டதுல என்ன தப்பு?”  என்றாள் மிருதுளா.

“ம்ம்ம்… நீ மட்டும் இப்போ பேசின விஷயத்தை கீழே சொல்லி இருந்த அப்புறம் அவ்வளவு தான். எல்லாரும் என்ன பாக்குற பார்வையும் கேட்கிற கேள்விக்கும் நான் என்ன சொல்லி சமாளிக்கிறது. ஏற்கனவே ஒருத்தர் என்ன கேள்வியா கேட்டு டார்ச்சர் பண்ணிட்டு இருக்காரு. இதுல மத்தவங்களும் சேரணுமா?” என்றாள் மீனு.

” ஏன் மீன்ஸ் அப்போ நீ இவரை தேடி கண்டு பிடிச்சி உண்மையை சொல்லி கல்யாணம் செய்துக்கலையா? அப்போ உங்க ரெண்டு பேரோட கல்யாணம் எப்படி நடந்துச்சு.உன் ஹஸ்பன்ட்டை நீ எப்படி கண்டுபிடிச்சே” என்று அடுகாட்டுக்காக மிருதுளா ஆர்வத்தில் சற்று சத்தமாக கேள்வி கேட்க.

” ஹே மிரு மெதுவா பேசுடி. நீ பேறது கீழே வரைக்கும் கேட்கும் போல இருக்கு.  நீ பேசுறது மட்டும் அவர் கேட்டா அப்புறம் அவ்வளவுதான். ஏற்கனவே என்ன பார்க்காமலே எப்படி நீ என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்னு கேட்டுட்டு இருக்காரு . இதுல நீ சொன்னது வேற கேட்டுட்டா அவ்வளவுதான் அவர் கிட்டே நான் வசமா மாட்டிக்குவேன்.” என்றாள்.

“ஏன் டி இப்போ அவருக்கு நீ தேடின விஷயம் தெரிஞ்சா என்ன தப்பு. எப்படியும் அவருக்கு நீ அவரை காதலிச்ச விஷயமும், அப்பறோம் நீ அவர்கூட ஒன்னா…” என்று மிருதுளா பேச வர.. அதற்க்குள் மீனு பாய்ந்து வந்து மிருதுளாவின் வாயை பொத்தியவள்.

 ” ஏய் நீ கொஞ்சம் பேசாம இரு டி. நீயே எல்லாத்தையும் ஒளறி கொட்டி என்னை அவர் கிட்டே மட்டும் இல்லை என் வீட்டில இருக்கவங்ககிட்டயும் வசமா மாட்டி விட்டிருவ போல இருக்கே.. ” என்றவள்.

சோபாவில் போட்டிருந்த மிருதுளாவின் ஹாண்ட்பேக்கை எடுத்து அவள் கையில் திணித்த மீனு ” நீ முதல்ல இங்கே இருந்து கிளம்பு. நீ இங்கே இருக்க ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு தான் ஆபத்து.” என்று மிருதுளாவை அவள் வீட்டிற்கு கிளம்ப சொல்லி வற்புறுத்திக்கொண்டே கீழே அழைத்து சென்றாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured