EPISODE 19& 20
காலையிலிருந்து மிருதுளாவிடம் பேசி அவளை ஒரு வழியாக மீனு சமாதானம் செய்திருந்தாள்.
பூஜா மீனுக்கு திருமணமான விஷயத்தை நிவியிடம் சொல்லிவிட்டு வருவதாக அவர் வீட்டுக்கு சென்று விட மிருதுளா மீனு இருவரும் பூஜாவின் ரூமில் இருந்தனர்..
வெளியில் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வந்த மிருதுளா பூஜாவின் அறைக் கதவை சாற்றி விட்டு மீனுவிடம் வந்தவள்.
“இப்போ சொல்லு நீ எப்படி உன்னோட பீம் பாய தேடிப் பிடித்து கல்யாணம் பண்ணின… நான் உன் கூட அவர பார்த்ததும் ரொம்ப ஷாக் ஆயிட்டேன். ஆமா அவரோட காலுக்கு என்ன ஆச்சு? ஏன் அவர் வீல் சேரில் இருக்காரு” என கேட்டாள்.
“அவருக்கு அமெரிக்காவுல இருக்கிறப்போ ஏதோ ஒரு ஆக்சிடென்ட்ல கால் உடைஞ்சு போயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன். ஆனா சரியா தெரியாது அதனால தான் அவர் வீல் சேர்ல இருக்காரு” என்றாள் மீனு.
“சரி டி சொல்லு.. உனக்கும் அவருக்கும் எப்படி கல்யாணம் ஆச்சு அதை முதல்ல சொல்லு எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு. என்னால நம்பவே முடியல அமெரிக்காவில் பார்த்து சந்தித்த ஒருத்தர எப்படி தேடிப்பிடித்து இந்தியாவில் கல்யாணம் பண்ணின. இது ஏதோ படத்துல வர்ற கதை மாதிரி இல்ல இருக்கு” என்று சொல்லி சிரித்தாள்.
“உனக்கே தெரியும் நான் அவரை எவ்வளவு நாளா தேடிட்டு இருக்கேன். கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு நான் அவரை தேடுறது கைவிட்டு. என்னோட பெரியப்பா பொண்ணு ரியா இருக்காளே அவள உனக்கு தெரியும் தானே அவகூட அமெரிக்காவில் தான் காலேஜ்ல படிச்சிட்டு இருந்தா. நான் அங்கே வந்து கூட ரியாவ யதெச்சையா அவளை மீட் பண்ணப்போ உனக்கு நான் அவளை இன்ட்ரொடியூஸ் பண்ணி வச்சேன் ஞாபகம் இருக்கா?” என்றால் மீனு.
சிறிது நேரம் யோசித்த மிருதுளா “ஓ அவளா!! என்னவோ அமெரிக்காவிலயே அவ தான் பணக்காரி மாதிரி ஓவரா சீன் போட்டு இருந்தாளே . அவளை எப்படி நான் மறப்பேன்.”என்றாள்.
அவளே தான் அவளுக்கும் ஜெய்யிக்கும் தான் கல்யாணம் முதல்ல பிக்ஸ் ஆகி இருந்தது.அவ கல்யாணம் மண்டபத்துல வச்சு இவரோட ஊனத்த காரணமாக சொல்லி கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு மண்டபத்தை விட்டு ஓடி போயிட்டா. அப்போ மண்டபத்துல ஒரே பரபரப்பா இருந்தது. ” என்றாள்
” என்ன மீன்ஸ் சொல்ற நீ தேடிட்டு இருந்தவரை ரியா கல்யாணம் பண்ணிக்க இருந்தாளா? என்னால இதை நம்பவே முடியலையே” என்றாள் மிருதுளா.
“ஆமாம் பப்பி, ஆக்சுவலா இவதான் ஜெய்யை கல்யாணம் பண்ணிக்க வற்புறுத்தி ஆறு மாசத்துக்கு முன்னாடி அவங்க ரெண்டு பேருக்கும் என்கேஜ்மென்ட் எல்லாம் முடிஞ்சு மேரேஜ்க்கு டேட்டும் பிக்ஸ் பண்ணி இருக்காங்க. இதுக்கு இடையில ஆக்சிடென்ட் நடந்து இவரோட கால் ரெண்டும் பிராக்சர் ஆயிடுச்சு. அதனால தான் அவ இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொன்னா” என்றாள்.
“அப்புறம் என்னடி ஆச்சு நீ எப்படி அவர கல்யாணம் பண்ணிக்கிட்ட” என்றாள் மிருதுளா
” சொல்றேன் கேளு .என் அப்பாவோட ஆளுங்க மண்டபத்துக்கு விட்டு ஓடிப்போன ரியாவ கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்துட்டாங்க. ஆனா வந்தவ இவரை கல்யாணமே செய்துக்க மாட்டேன்னு பிடிவாதமா நின்னா. இவ்வளவு நடந்த பிறகும் இவளை கல்யாணம் பண்ணிக்க போறவர் ஏன் அவரோட ரூமை விட்டு வெளியே வரவே மாட்டேங்கிறாருன்னு அவர் என்ன பண்றாருன்னு பார்க்கலாம்னு நான் எதார்த்தமா மாப்பிள்ளை ரூம போய் எட்டிப் பார்த்தேன் ” என்றாள்.
“ம் அப்பறோம் ” என்று கதை கேட்பவள் போல மீனுவை பார்த்து திரும்பி அமர்ந்து கொண்ட விதத்துல “சொல்லுடி என்ன ஆச்சு?”” என்றாள்.
“அங்க போய் பார்த்து அப்போ தான் வீல் சேரில் வெளியே நடக்கிறது எல்லாம் கேட்டுட்டு தலைய தொங்கு போட்டு சோகமா உட்கார்ந்து இருந்தாரு ஜெய் . முதல்ல அவரோட முகம் எனக்கு சரியாவே தெரியல வெளியே நடக்கிறது எல்லாம் பார்த்துட்டு அவரோட ஃப்ரெண்ட் சூர்யாவும் தம்பி சந்தோஷம் அவரை சமாதானம் படுத்த ஏதேதோ சொல்லிட்டு இருந்தாங்க.”
“ஒரு கட்டத்துக்கு மேல அவரால பொறுமையா அங்கே இருக்க முடியல வெளியில ரியா வேற ரொம்ப அதிகமா பேசிட்டு இருந்தா. அவ பேசறது பத்தாதுன்னு அவ அம்மாவும் சேர்ந்து மண்டபத்திலேயே வச்சு அவரோட ஊனத்தை சொல்லி நிறைய பேசினாங்க. இவரு சந்தோஷ்கிட்ட இதுக்கு மேலயும் நான் ரியாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னை மாதிரி ஒரு முட்டாள் இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க அதனால நானே போய் எனக்கு ரியாவுக்கும் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லப்போறேன்னு வீல்ச்சார தள்ளிகிட்டு ரூம் விட்டு வெளியே வந்தார்.”
“அப்போ தான் அவரோட முகத்தை நான் சரியாவே பார்த்தேன். முதல்ல அவர பார்த்ததும் பெரிய ஷாக் எனக்கு. கிட்டத்தட்ட ஒரு வருஷமா தேடிட்டு இருந்தவரு இன்னிக்கி என் அக்காவை கல்யாணம் பண்ணிக்க இருந்ததை நினைச்சப்போ எனக்கு இதயமே வெடிச்சிடும் போல ஆயிடுச்சு. நல்ல வேலை இவரை வேண்டாம்னு ரியா சொன்னது ஒருவகையில் எனக்கு சாதகமா போயிடுச்சு. இவர் ரூம விட்டு வெளியே வரதுக்கு முன்னாடி வேகமா நான் அவங்க எல்லாரும் முன்னாடியும் போயி எனக்கு இவரை கல்யாணம் பண்ணிக்க சம்பந்தம்னு சொல்லிட்டேன்.” என்றாள்.
“என்னடி சொன்ன அத்தனை பேரும் முன்னாடியும் நீயாவே போய் இவர கல்யாணம் பண்ணிக்க சம்மதித்துவிட்டாயா? எப்படி திடீர்னு உனக்கு அது தோணுச்சு என்றால் மிருதுளா.
“நான் எதுக்காக அவரை தேடிக்கிட்டு இருந்தேன்னு உனக்கு நல்லா தெரியும். அப்படி இருக்கிறப்போ அவரை நான் ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததும் முதல்ல சந்தோஷப்பட்டேன். ஆனால் அவர் கால் உடைந்து வீல்ச்சார்ல சோகமா உக்காந்துட்டு இருக்கிறத என்னால பார்க்கவே முடியலடி. . இப்படி கால் உடைந்து போன ஒரே காரணத்துக்காக முடங்கி போயி உட்காந்துட்டார்னு நினைக்கிறப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்படி இருக்கிறவரை மேலும் கஷ்டப்படுற மாதிரி இந்த ரியா வேற மண்டபம் வரைக்கும் அவரை கூட்டிட்டு வந்துட்டு கல்யாணத்த வேண்டாம் என்று சொல்லிட்டா இவரை அப்படியே விட எனக்கு மனசு வரல அதனாலதான் ஆனது ஆச்சுன்னு தைரியத்தை வர படிச்சிட்டு என் அப்பா கிட்ட வந்து அவரை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன் முதல்ல அப்பா தயங்கினாலும் பிறகு நான் அந்த முடிவில் உறுதியா இருந்ததுனால அவரையே எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதித்து விட்டார்” என்று சொன்னால் மீனு.
“ஏய் மீனு நீ பளே ஆளு தாண்டி.. எப்படியோ நெனச்ச மாதிரியே அவரை கல்யாணம் பண்ணிக்கிட்ட. அந்த வகையில் எனக்கும் சந்தோஷம் தான். என்னடா உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சுன்னு நீ என்ன செய்யப் போறேன்னு உன்ன பத்தி நான் கவலைப்படாத நாளே இல்லடி.. ஆனா உன்னோட ஹஸ்பண்ட் தான் ஜெயின்னு தெரிஞ்ச பிறகு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொல்லி மிருதுளா மீனுவை கட்டிக் கொண்டால்.
மீனுவும் தன் தோழியை கட்டிக்கொண்டு அவள் முதுகில் தட்டிக் கொடுத்தவள்” நீ கவலைப்படாதடி அப்படியே இன்னைக்கு நான் அவரை பார்க்காமல் இருந்திருந்தால் நானும் என்னைக்காவது ஒரு நாள் அவரை கண்டிப்பா மீட் பண்ணி அவரையே நிச்சயம் கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன்” என்றாள் மீனு
” எனக்கு ஒரு டவுட்” என்றாள் மிருதுளா.
” என்னடி? ” என மீனு கேட்க.
” ஒரு வேளை ரியாவே உன் ஹஸ்பண்டை கல்யாணம் பண்ண சம்மதிச்சு இருந்தா. நீ மணமேடையில அவங்க ரெண்டு பேரையும் பார்த்து இருந்தா என்ன டி பண்ணி இருப்ப” என்றாள் மிருதுளா.
“சிம்பிள் ஏதாவது பொய் சொல்லி ஜெய் மேல பழியை போட்டு அவரையே என்ன கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி நான் நாடகம் ஆடியாவது அவரை கல்யாணம் பண்ணி இருப்பேனே ஒழிய கண்டிப்பா ரியா கழுத்துல தாலி கட்ட விட மாட்டேன்” என்றாள் மீனு.
மீனு சொன்னதைக் கேட்டு சிரித்த மிருதுளா “நீ செய்கிற ஆள் தாண்டி” என்று சொல்லி மீனுவின் கன்னத்தைப் பிடித்து கிள்ளினாள்.
“சரி சரி நம்ம பேசினது நமக்குள்ளேயே இருக்கட்டும் நீ பாட்டுக்கு வெளியே வந்து என் அம்மா அப்பா கிட்ட பேசும் போது எதையாவது உளறி வச்சு என்ன மாட்டி விட்டுடாத டி ” என்றால் மீனு எச்சரிக்கையாக.
“என்ன மீன்ஸ் என்ன பார்த்து இப்படி கேட்டுட்ட நீ அமெரிக்காவில் உன் ஹஸ்பண்டை மீட் பண்ண விஷயத்தையும் அங்கே உனக்கும் அவருக்கும் நடந்த விஷயத்தையும் இதுவரைக்கும் நான் யார்கிட்டயாவது மூச்சு விட்டிருப்பேனா? அதே மாதிரி இதையும் ரகசியமா வச்சிக்கிறேன். நான் யார்கிட்டயும் எதையும் உளர மாட்டேன் போதுமா,” என்றால் மிருதுளா.
“நீ தாண்டி ஏன் பெஸ்ட்டெஸ்ட் பிரண்டு” என்று அவளை கட்டிக்கொண்டாள் மீனு.
“ஆமா இந்த பெஸ்ட் பிரண்டு தான் காலையில வந்ததும் என்னை வீட்டை விட்டு போ போனு துரத்துனியாக்கும்” என்று செல்லமாக கோபித்துக் கொண்டால் மிருதுளா.
“ஏய் சாரி டி நான் தான் ஏன் இப்படி பண்ணினேன் உன்கிட்ட காரணத்த சொல்லி மன்னிப்பு கேட்டுட்டேனே. மறுபடியும் நீ அதையே என்கிட்ட சொல்லி காட்ற பாத்தியா?” என மீனு செல்லமாகச் சினுங்க.
“சரி ஓகே ஓகே நான் இனிமேல் அத பத்தி பேச மாட்டேன். ஓகே வா “என்றவள்
“ஏய் மீனு ரொம்ப பசிக்குது டி ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வாயேன்” என்று தன் வயிற்றை தடவி காட்டினால் மிருதுளா.
” அச்சோ வந்ததிலிருந்து என் பப்பிக்கு நான் எதுவுமே கொடுக்கலையா. சரிவா நம்ம ரெண்டு பேரும் போய் சாப்பிடலாம்” என இருவரும் அங்கிருந்து கிளம்ப போக.
அதுவரை பூஜாவின் அறைக்கு வெளியே வீல்சேரில் அமர்ந்திருந்த ஜெய்யும், அவனை தள்ளிக் கொண்டு வந்த சூர்யாவும் அவர்கள் இருவரும் வெளியே வருகிறார்கள் என்று தெரியவும் சூர்யா அவசர அவசரமாக ஜெய்யின் வீழ்ச்சாரை தள்ளிக்கொண்டு அவர்கள் பார்ப்பதற்கு முன்பாக ஹாலிற்கு போய்விட…
மீனுவும், மிருதலாவும் பேசிச் சிரித்தபடி பூஜாவின் அறையில் இருந்து ஹாலிற்கு வந்தவர்கள். அங்கே இருந்த சூர்யா, ஜெய் இருவரையும் பார்த்துவிட்டு ஷாக் ஆகிவிட்டனர்.
அவர்களை பார்த்த இருவரும் திரும்பி தங்கள் முகத்தை பார்த்துக்கொண்டு பிறகு எதுவும் காட்டிக் கொள்ளாதவர்கள் போல ஜெய்யிடம் வந்த மீனு ” நீங்க எப்போ வந்தீங்க எனக்கு நீங்க வந்ததே தெரியலையே” என்றாள்.
மீனு கேட்ட கேள்விக்கு சூர்யா மிருதுளாவை பார்த்து” நாங்க ரெண்டு பேரும் “என பதில் கூற வர…
அவன் கையைப் பிடித்து அமர்த்திய ஜெய் மீனுவை பார்த்து ‘நாங்க இப்போதுதான் வந்தோம்” என்றான்.
அப்போதுதான் மீனு ஜெய்யை நன்றாக கவனித்தாள் அவன் தலைமுடி எல்லாம் அழகாக முன்பு போல வெட்டப்பட்டு கிளீன் ஷேவ் செய்து பார்ப்பதற்கே மிகவும் ஸ்மார்ட் ஆக அவள் முன்பு அமர்ந்திருந்தான்.
அவனை அப்படி பார்த்ததும் மீனுவிற்குள் ஏதேதோ செய்தது படபடவென விழிகள் அடித்துக்கொள்ள அவன் முகத்தையே விழி விலகாமல் மீனு பார்த்துக்கொண்டு இருக்க..
அதை கவனித்த மிருதுளா “ஓஹோ… உன் ஆளு நீ சொன்னது போல கிளீன் ஷேவ் பண்ணிட்டு வந்துட்டாரு… அப்போ இன்னிக்கு நைட்ட்டு….” என்று மிருதுளா மீனுவை ஓட்ட…
அவள் பேசியதற்கு மீனு எந்த பதிலும் பேசாமல் இருக்க… அப்போதுதான் மீனுவை சரியாக கவனித்தாள் மிருதுளா.
அவர்கள் இருவரும் பிரீஸ் மோடில் இருக்க… இனி இங்கே இருந்தாள் சரியாக இருக்காது என எண்ணியவள் நாசுக்காக அவர்கள் இருவரையும் தனியே விட்டுவிட்டு அங்கிருந்து செல்ல போனால்.
ஆனால் சூர்யா மட்டும் அங்கேயே நின்று இருவரையும் “இவங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்பது போல நின்று இருக்க.
வேகமாக அவனிடம் வந்தவள் ‘சார் கொஞ்சமாவது டீசன்ட்டா இருக்க பழகுங்க. புதுசா கல்யாணம் ஆனவங்க ரெண்டு பேரும் இப்படி நின்னுட்டு இருக்குறது பார்த்துட்டு இன்னும் அங்கே நிக்கிறீங்க முதல்ல வாங்க.. ” என அவனை கைப்பிடித்து அங்கிருந்து இழுத்துச் சென்றாள் மிருதுளா.
சூர்யாவும் மிருதுளாவே வந்து தன்னிடம் பேசி தன்னை கைப்பிடித்து அழைத்துச் செல்லவும் அவனுக்கு காற்றில் மிதப்பது போல இருக்க…அவள் பின்னாலேயே சூர்யாவும் சென்றான்.
