EPISODE 3
தன்னுடைய முதுகலை படிப்பிற்காக முதல் நாள் கல்லூரிக்கு வந்த மீனு தன்னுடன் ஏற்கனவே பயின்றவர்கள் யாருமே தன்னுடன் கல்லூரியில் சேரவில்லை என்ற வருத்தம் அவளுக்கு ஒரு புறம் இருந்தாலும்.
தற்போது செந்திருக்கும் கல்லூரியில் தன்னுடைய சிந்தனைக்கு ஒத்துப் போகும் விதமாக நண்பர்கள் அமைப்பார்கள் என நம்பிக்கையில் தன்னுடைய அறைக்குள் நுழைந்தால்.
அவளைப் போலவே பறவைகள் பற்றிய ஆர்வம் நிறைந்த பலர் அவளுடைய வகுப்பறையில் இருந்தனர்.
அறைக்குள் நுழைந்த மீனுவை அந்த மாணவர்கள் பார்க்க…
அவர்களை எல்லாம் பார்த்து லேசாக புன்னகைத்த படி உள்ளே வந்தவள் தான் எங்கே அமர்வது என்ற யோசனையில் சுற்று மற்றும் பார்த்தாள்.
கடைசியில் ஒரு பெஞ்ச் காலியாக இருக்க அவர்களை எல்லாம் கடந்து அந்த பென்சில் சென்று அமர்ந்தாள்.
அவள் வந்த பிறகும் சில மாணவர்கள் அறைக்குள் புதிதாக வந்து கொண்டு இருந்தனர்.
ஒவ்வொருவராக மீனு ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தால். தனக்கு முன்னாள் அமர்ந்திருந்தவர்கள் அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள மீனுவும் தன்னை அவர்களோடு அறிமுகப்படுத்திக் கொண்டால் அதற்குள் அவர்களுடைய ப்ரொபசர் வந்துவிடவே பேசிக் கொண்டிருந்தவர்கள் சட்டென அவர்கள் ப்ரொபசர் உள்ளே வந்ததும் எழுந்து நின்றனர்.
கிட்டத்தட்ட அவர்களுடைய ப்ரொபஷன்கும் அவர்களுக்கும் நான்கைந்து வருடம் தான் வயது வித்தியாசம் இருக்கும். வந்து சேர்ந்திருந்த மாணவர்களை விட பார்ப்பதற்கு சற்று எளிமையாக தான் இருந்தார் அந்த ப்ரொபசர்.
அறைக்குள் வந்தவர் அனைவரையும் பார்த்து பொதுவாக ஒரு புன்னகையை எடுத்துவிட்டு ஹலோ என் பெயர் அர்ஜுன் உங்களுடைய இந்த ஆர்ணத்தாலஜி டிபார்ட்மெண்டுக்கு நான் தான் டிபார்ட்மெண்ட் செட்டா இருக்கப் போறேன் இந்த ரெண்டு வருஷமும் நீங்க என் முகத்தைத்தான் பார்க்கப் போறீங்க என்று சொல்லி சிரித்தான் அர்ஜுன்.
அவன் அவன் பேசுவதை கேட்டு வகுப்பில் உள்ளவர்கள் சிரிக்க சரி உங்கள பத்தி ஷார்ட்டா ஒரு இன்ட்ரொடக்ஷன் கொடுங்க பாப்போம் என்றான்.
யாரு பர்ஸ்ட் ஸ்டார்ட் பண்றீங்க என தன் உள்ளங்கைகளை பரபர என தேய்த்துக் கொண்டே அறையை சுற்றிப் பார்க்க…
மற்றவர்களைப் போலவே அவனையும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த மீனுவை போய் பார்த்தான்.
எங்கே நீங்க உங்கள பத்தி சொல்லுங்க பாக்கலாம் என்றான்.
தயங்கியபடியே எழுந்து நின்றவள் ஹலோ என் பேர் மீனு. சின்ன வயசுல இருந்தே எனக்கு பறவைகள் மீதான காதல் என்னை இந்த டிபார்ட்மெண்ட்ட தேர்ந்தெடுத்து படிக்க வச்சது.
இத்தனை வருடம் ஆகியும் அந்த ஆர்வம் இன்னமும் குறையாமல் அப்படியே இருப்பதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். அதே ஆர்வத்தோட இந்த இரண்டு ஆண்டையும் கடந்திடுவேன்னு நினைக்கிறேன் என்றாள்.
ஏன் உங்களுக்கு பறவைகள் மேல காதல் வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாமா? என்று கேட்டான் அர்ஜுன்.
நாங்க சின்ன வயசுல ஒரு கிராமத்துல தான் தங்கியிருந்தோம். அந்த கிராமத்தை ஒட்டி ஒரு மலையும் இருந்துச்சு…. அந்த மலையையும் எங்கு கிராமத்தையும் சுற்றி நிறைய பறவைகள் கூட்டம் நிறைய இருக்கும். பல வகையான பறவைகளை நான் அங்கே தான் பார்த்தேன். நான் மட்டும் இல்ல என்னுடைய ஊரச் சேர்ந்தவர்களை எல்லோருக்குமே அங்கே வர பறவைகள் மேல அதிகம் இருந்துச்சு அதனாலேயே எங்க ஊருக்குள்ள பட்டாசு வெடிக்கிறதோ… திருவிழா அப்ப சத்தமா பாட்டு வைக்கிறதோ… இந்த மாதிரி எதுவுமே இருக்காது.
பறவைகள் எல்லாம் எங்கே எங்க ஊருக்கு வராமல் போயிடுமோனு யாருமே இந்த மாதிரி விஷயங்களை செய்யாம கட்டுக்கோப்பா இருந்தாங்க அப்படிப்பட்ட ஊர்ல வளர்ந்ததாலோ என்னவோ எனக்கும் பறவைகள் மேலான காதல் தானாகவே வந்துருச்சுன்னு நினைக்கிறேன் தினமும் காலையில நான் அவங்களோட சத்தத்தோட தான் எழுந்திருப்பேன். அந்த பீலே தனி… அடிக்கடி புதுசு புதுசா சில பறவைகள் சீசன்ல எங்க ஊர்ல வந்து இளைப்பாறும் அப்படி அந்த பறவைகளை எல்லாம் பார்க்கும்போது இது என்ன மாதிரியான பறவை அப்படின்னு தெரிஞ்சுக்க ஆர்வத்துல முதன்முதலா பறவைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக என்னுடைய தேடலை தொடங்கினேன். அது அப்படி அப்படியே வளர்ந்து இப்போ இங்கே வந்து நிற்கிறது என்றால்.
அவள் சொல்வதையே அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுன் சிரித்தபடி நைஸ் என்றவன் அடுத்தடுத்த மாணவர்களை கேட்க பேச சொன்னான்.
ஒருவராக தங்களைப் பற்றியும் தாங்கள் ஏன் இங்கே படிக்க வேண்டும் என்பதை பற்றியும் விளக்கிக் கொண்டு இருக்க அப்போது வாசலில் எக்ஸ்க்யூஸ் என இரண்டு குரல்கள் கேட்டது.
வகுப்பறைக்கு வெளியே இருந்தவர்களை பார்த்தவன் முதல் நாளே கிளாஸ்க்கு லேட்டா என்று சொல்லி சிரித்தான்.
சாரி சார் என்று தலையை சொரிந்தபடி வாசலில் இருவர் நின்றிருக்க…. சரி உங்கள பத்தி ஏன் நீங்க ஏன் இந்த டிபார்ட்மெண்ட்ட செலக்ட் பண்னீங்கங்கிறதை பத்தியும் சொல்லிட்டு ரெண்டு பேரும் உள்ளே வாங்க என்றான் அர்ஜுன்.
என் பேரு மைதிலி எல்லாரும் என்ன திலின்னு தான் கூப்பிடுவாங்க… இந்த ஒத்தையெழுத்த விட்டுட்டு கூப்பிடறதுல அவங்களுக்கு என்ன சந்தோசம்னு எனக்கு இப்போவரையும் புரியல என்று சொல்லி சிரித்தவள்.
இந்த டிபார்ட்மெண்ட்ட தேர்ந்தெடுக்க பெருசா ஒரு காரணமும் என்கிட்ட இல்ல சார் எப்படியும் டிகிரி முடித்ததும் எனக்கு எங்க வீட்ல கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க அதுக்கு ஏன் நான் மாங்கு மங்குனு கஷ்டப்பட்டு படிச்சு ஓல்டு மெடல் வாங்கணும் அதனாலதான் இந்த ரெண்டு வருஷத்தை சும்மா வீட்ல இருந்து வீன் பண்ணனும்….அதனால தான் இந்த ரெண்டு வருஷம் காலேஜ்ல ரிலாக்ஸ்டா இருக்கலாம்னு இங்கே வந்து இருக்கேன் என்றாள்.
அப்போ டைம் பஸ்க்கு தான் நீ காலேஜ்ல சேர்ந்திருக்க படிக்க இல்ல… என்றான் அர்ஜுன்.
அது எப்படி சார் காலேஜ்ல சேர்ந்துட்டு பாஸ் ஆகாம போனா நல்லா இருக்காது அதுக்காகவா அது நான் கொஞ்சம் படிப்பேன் நீங்க கவலைப்படாதீங்க என்று சிரித்தால் மைதிலி.
டிபார்ட்மெண்டுக்கு ஒருத்தர் இந்த மாதிரி வந்துடுறீங்க… என்றவன் மைதிலி அருகில் நின்றிருந்தவனை பார்த்து சரி நீ உன்ன பத்தி சொல்லுப்பா என்றான்.
அர்ஜுனை பார்த்து சிரித்தவன் வகுப்பு வகுப்பிற்குள் இருந்த மாணவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு ஹலோ என் பேரு விக்ரம். எனக்கு போட்டோகிராபினா ரொம்ப இஷ்டம்… நான் ஒரு வயதிலே போட்டோ கிராபற ஆகணும்கிறது என்னோட ஆசை என்றான்.
அப்புறம் ஏப்பா எந்த டிபார்ட்மெண்ட்ட செலக்ட் பண்ண என்று கேட்டான் அர்ஜுன்.
வைஃபை போட்டோகிராபினா காட்டுக்குள்ள போய் எல்லாம் மிருகத்தையும் போட்டோ எடுப்பாங்கன்னு தான் சொல்லுவாங்க ஆனா எனக்கு அப்படி எல்லாம் மிருகங்களையும் எடுக்கிறது விட பறவைகளை போட்டோ எடுக்கிறது ரொம்ப பிடிக்கும் வெறுமனே அதுங்கள படம் பிடிக்கவில்லை எனக்கு விருப்பமில்லை அதனால்தான் பறவைகளைப் பற்றி படிச்சு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கப்புறம் என்னோட போட்டோகிராபியை ஸ்டார்ட் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன் என்றான் விக்ரம்.
பரவால்ல இன்ட்ரஸ்டிங் தான் என சொன்ன அர்ஜுன் சரி இரண்டு பேரும் போய் உட்காருங்க நம்ம கிளாஸ் ஸ்டார்ட் பண்ணலாம் என்றான்.
மைதிலி விக்ரமும் ஒன்றாக கிளாசிக்கல் நுழைந்தவர்கள் தங்கள் அமர இடம் பார்க்க மீனு மட்டும் தனியாக அமர்ந்திருக்க… அவர்களை பார்த்து மீனு தன் பென்சய் காட்டி வரச் சொல்லி செய்கை செய்தாள்.
இருவரும் சிரித்தபடி அவள் அருகில் வந்தவர்கள் அவள் அருகில் அமர்ந்தனர்.
சரி எல்லாரும் பற்றியும் ஓரளவுக்கு தெரிஞ்சுக்க கிட்டன்னு நினைக்கிறேன். போக போக இன்னும் நிறைய தெரிஞ்சுக்கலாம் என்ற அர்ஜுன் நம்ம கிளாஸ்ச ஸ்டார்ட் பண்ணலாமா? என்றான்.
அனைவரும் கூட சாக ஓகே சார் என்று சொல்ல..
சீனியர் ஆனாலும் அந்த ஸ்கூல் பழக்கம் இன்னும் யாரை வெட்டும் போகல போல என்று சொல்லி சிரித்தவன்.
ஏற்கனவே நாலு வருஷமா நீங்க நிறைய பறவைகள் பற்றி படிச்சிருப்பீங்க… அதனால உங்களுக்கு தியரட்டிகளா ரொம்ப கம்மியா தான் லெசன்ஸ் வரும் அதுக்கு பதிலா நம்ம ஃபீல்டு ஒர்க்கு தான் நிறைய பண்ண போறோம் நிறைய காடு மலைகள்ன்னு இந்த ரெண்டு வருஷமும் நாம சுத்தப் போறோம.
காடு மலைகள்ல இருக்கிற பல வகையான பறவைகளை தேடி கண்டுபிடித்து அதைகளை பத்தி நம்ம தெரிஞ்சுக்க போறோம் என்றான் அர்ஜுன்.
நீங்க அதிகமா வெளியே என்னோட சுத்த வேண்டி வரலாம் அதனால எல்லாத்துக்கும் இப்பவே தயாரா இருந்துக்கோங்க சின்ன பிள்ளைங்க மாதிரி நான் வெளியே வர மாட்டேன் வீட்ல விட மாட்டாங்க எனக்கு டிராவல் பண்ண ஒத்துக்காது அப்படி இப்படின்னு காரணம் சொல்லக்கூடாது இந்த ரெண்டு வருஷமும் நான் எங்கே எல்லாம் உங்கள கூட்டிட்டு போறேன் இன்னும் அங்க நீங்க எல்லாரும் கண்டிப்பா வந்தே ஆகணும் என்றான் அர்ஜுன்.
நீங்க ரெண்டு வருஷமும் எங்கள கூட்டிட்டு போவீங்க….ஆனா எங்க வீட்ல செலவு பண்ணி நீங்க கூப்பிட எடுத்துக்கெல்லாம் அனுப்பி வைக்க ஒத்துக்க மாட்டாங்க என்றால் பின்னால் இருந்து மைதிலி.
யாருமா அது என்றவன் குரல் வந்து திசையை பார்க்க மைதிலி பேசவும் நீ தானா உன் வீட்டில் உன்னை படிக்க வைக்கிறதுக்கு இவ்வளவு செலவு பண்றப்போ இதுக்கெல்லாம் செலவு பண்ண மாட்டாங்களா என்ன ஒழுங்கா வந்து சேரு என்றான்.
பின்பு அனைவரையும் பார்த்து முதல் ஆறு மாசம் நமக்கு இந்த ஒன்றரை வருஷத்துல என்ன எல்லாம் செய்யப் போறோங்குற தியரிட்டிக்கல் கிளாஸ் தான் இருக்கும். இந்த ஆறு மாசம் அத பத்தி நீங்க தரவா தெரிஞ்சுக்கோங்க அதுக்கு பிறகு தான் நம்ம பீல் ட்ரிப் போக போறோம் என்றான்.
பிறகு அவன் வகுப்பிற்கு ஆரம்பிக்க அனைவரும் மிகவும் கவனமாக தங்கள் முதல் நாள் கிளாசை அட்டென்ட் செய்தனர்.
இரண்டு மணி நேரம் தொடர்ந்து அர்ஜுன் வகுப்பெடுத்தான். அந்த இரண்டு மணி நேரமும் போர் அடிக்காமல் அவன் கிளாஸ் எடுக்க அனைவரும் ஆர்வமாக அதைக் கேட்டுக் கொண்டு இருந்தனர் இடைவெளி பெல் அடிக்கவும் அவர்களிடம் இருந்து விடைபெற்று அர்ஜுன் அங்கிருந்து சென்றான்.
அவன் சென்றதும் சக மாணவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர் பின்னால் பெஞ்சில் அமர்ந்திருந்த மீனுவும் விக்ரம் மைதிலி இடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களுடன் நட்பாகினால்.
