EPISODE 20
“என்ன ரெண்டு பேரும் இப்படி ஷாக் ஆகுறீங்க அப்படி என்ன சொல்லிட்டேன்” என்று வீராவின் முன் மிரண்டுபோய் நின்று இருந்த வம்சியையம், தாமரையையும் பார்த்தார்.
“டேய் என்ன டா அப்பா பேசிட்டு இருக்காரு எதுவும் பேசாம நின்னுட்டு இருக்க…” என்றார் அதிதி .
“அம்மா இப்போ எதுக்கு நாங்க ஹனிமூன் போறதுக்கு எங்களை கேட்காம நீங்க ரெண்டு பேரும் புக் பண்ணுணிங்க ” என்றான் கோபமாக
.
“இது என்ன டா உலகத்துல இல்லாத கொடுமையா இருக்கு… நியாயமா நீ தான் ஹனிமூன் போறதுக்கு புக் பண்ணி உன் பொண்டாட்டிய கூட்டிட்டு இந்த நேரம் கிளம்பி இருக்கணும் . சரி நீ திடீர்னு கல்யாணம் செஞ்சதுல இதெல்லாம் எங்க ஞாபகம் வச்சிருக்கியோ ஒன்னு தான் நானும் உன் அப்பாவும் பேசி உங்க ரெண்டு பேரையும் சர்ப்ரைஸ் பண்ணலாமுன்னு கிரீஸ் நாட்டுக்கு உங்க ரெண்டு பேரையும் ஹனிமூன் அனுப்பி வைக்கலாமென்று எல்லா ஏற்பாடையும் பண்ணிட்டு வந்து சொன்னா , நீ என்னவோ என்கிட்ட இப்படி கோச்சிக்கிற” என்றார் அதித்தி .
“அப்படி இல்லம்மா… உங்ககிட்ட கோச்சுக்கலை நான் . ஹனிமூன்க்கு இப்போ என்ன அவசரமா தான் கேட்கிறேன் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் தானே ஆகி இருக்கு. அதுக்குள்ள என்ன அவசரமும் கேட்டேன்” என்று அவர்கள் இருவரையும் பார்த்தான் .
” டேய் நீ புரிஞ்சுதான் பேசுறியா கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்ல தான்டா ஹனிமூன் போவாங்க .. நீ சொல்றத பார்த்தா ரெண்டு புள்ள பெத்ததுக்கு அப்புறம் தான் ஹனிமூன் போவேன்னு சொல்லுவ போல இருக்கு ” என்றார்
.
ஐயோ அம்மா நான் சொல்றது கொஞ்சமாவது புரிஞ்சுக்கோங்க என்று வம்சி பேச வர …
“அம்மு ஒரு நிமிஷம்…” என்று அவன் பேசுவதை இடைமறித்த தாமரை . வீரா அதித்தி இருவரையும் பார்த்து “நீங்க ரெண்டு பேரும் இப்ப எதுக்கு தேவையில்லாமல் டென்ஷன் ஆகுறீங்க. நாங்க ஹனிமூன் போகணும் அவ்வளவுதானே நாங்க போயிட்டு வரோம்” என்றாள் .
அதைக் கேட்டு வீராவும் அதித்தியும் சந்தோசப்பட ஆனால் வம்சியோ ஷாக் ஆகி அவளைப் பார்த்தான் .
“குட்டிமா நீ புரிஞ்சுதான் பேசுறியா!! அவங்க என்ன சொல்லிட்டு இருக்காங்கன்னு உனக்கு புரியுதா? இல்லையா” என்றான் .
“அம்மு அத்தையும் மாமாவும் இப்ப என்ன பெருசா சொல்லிட்டாங்க நம்ம ரெண்டு பேரையும் ஹனிமூன் தானே போக சொன்னாங்க. என்னவோ நம்ம ரெண்டு பேரையும் ஜெயிலுக்கு போக சொன்ன மாதிரி இவ்வளவு ஷாக் ஆகுற” என்றவள் வீராவிடம் திரும்பி மாமா நாங்க எப்போ கிளம்பனும் என்றாள்.
“நாளைக்கு காலைல டா” என்றான் வீரா.
“ஓகே மாமா அப்போ நான் போய் என்னோட திங்ஸ் எல்லாம் பேக் பண்றேன். நாங்க ரெண்டு பேரும் நாளைக்கு ஹனிமூன் கிளம்புறோம் “என்றவள் திரும்பி அவள் பேசுவது எல்லாம் நம்ப முடியாமல் வாய் அடைத்து போய் பார்த்துக் கொண்டிருந்த வம்சையை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவள் .
“அம்மு என்ன பாத்துட்டு இருக்க நீயும் வா… போய் திங்ஸ் எல்லாம் பேக் பண்ண வேண்டாமா.. மாமா வேற ஒன் வீக் நம்ம ஹனிமூன் பிளான் பண்ணி இருக்காரு. அதுக்கு தேவையானதெல்லாம் வாங்கணும் சீக்கிரம் வா” என்று அவனை வரச் சொல்லிவிட்டு அறைக்கு சென்றாள் .
அவள் முன்னே செல்ல வம்சிக்கு ஒன்றும் புரியாமல் கீ கொடுத்த பொம்மை போல அவள் பின்னால் சென்றான் .
இருவரும் ஹனிமூன் செல்வதற்கு சம்மதித்து விட்டதை நினைத்து சந்தோஷமடைந்த வீரா ” அதித்தி தாமரை எவ்வளவு பாஸ்ட்டா இருக்கா பாரு ஹனிமூன் போகணும்னு சொன்னையும் சரின்னு கிளம்பிட்டா .. ஆனா உன் பையன பார்த்தியா உன்ன மாதிரியே சரியான ட்யூப் லைட்டா இருக்கான். நீயும் இப்படித்தானே கல்யாணமான புதுசுல நான் எதை சொன்னாலும் மிரண்டு போய் என்ன பார்ப்ப… நம்ம ரெண்டு பேருக்கும் பஸ்ட் நைட் நடக்கிறதுக்கு எவ்வளவு நாள் ஆச்சு ஆனா என் மருமகளை பார்த்தியா” என்றான் வீரா .
“ஆமாமா உன்னோட தங்கச்சி பொண்ணு தானே தாமரை. அப்புறம் அவ எப்படி இருப்பா பாஸ்டா தான் இருப்பா.. இவ போற வேகத்தை பார்த்தா சீக்கிரமாவே நம்ம கையில ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து கொடுத்துடுவா போல இருக்கு” என்று சிரித்தாள் அதித்தி .
“அதென்ன என்னோட தங்கச்சி பொண்ணு அப்படி பாத்தா தாமரை உன் அண்ணனுக்கும் பொண்ணு தானே .. ” என்று அதித்தியை வம்புக்கு இழுத்தான் .
” உனக்கு என் வீட்டு ஆளுங்களை பத்தி பேசலனா பொழுதே போகாதே உன் கிட்ட பேசி நான் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல நாளைக்கு என் மகனும் மருமகளும் ஹனிமூன் போறாங்க. அவங்களுக்கு ஏதாவது சாப்பிட செஞ்சு கொடுக்கணும் நான் போய் வேலையை பாக்குறேன்” என்று வீராவே பார்த்து முறைத்தவள் தன் கழுத்தை வெடிக்கென திருப்பிக் கொண்டு கிச்சனுக்கு சென்றார் .
“ஏய் அவங்க ரெண்டு பேரும் ஹனிமூன் என்னவோ காசி ராமேஸ்வரம் போற மாதிரி சாப்பாடு கட்டி குடுக்கறேன்னு சொல்ற.. அதெல்லாம் எதுவும் வேண்டாம் அங்கேயே எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்கேன் இவங்க ரெண்டு பேரும் இங்கிருந்து கிளம்பினா மட்டும் போதும்” என்று பாரு அதிதியை வம்பு இழுப்பதற்காக கிச்சனை நோக்கி அவள் பின்னால் சென்றான் வீரா.
ஒரு பெரிய சூட்கேஸை எடுத்து வைத்து அதில் ஒரு வாரத்திற்கு தேவையான ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் தாமரை . “அம்மு எனக்கு தேவையான எல்லா திங்ஸையும் நான் எடுத்து வச்சுட்டேன். இன்னும் சில திங்ஸ் எல்லாம் வேணும் அத ஈவினிங் நீயும் நானும் போய் வாங்கிட்டு வந்துடலாமா ? ” என்று அவனிடம் பேசிக்கொண்டே வம்சியின் கபோர்டை திறந்து அவனுடைய ஆடைகளையும் எடுத்து வைத்து தொடங்கினாள்.
அவள் செய்வதையெல்லாம் பார்த்த வம்சுக்கு ஒன்றும் புரியவில்லை தாமரை புரிந்து தான் இதையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறாளா என்று யோசித்து வாரே அவள் செல்லும் இடமெல்லாம் அவள் பின்னால் சென்றான் வம்சி .
“என்ன அம்மு நான் போற இடமெல்லாம் என் பின்னாடியே வர ” என்றாள் தாமரை.
“தாமரை நீ என்ன பண்ணிட்டு இருக்க உனக்கு தெரியுதா இப்போ எதுக்கு அம்மா அப்பா கிட்ட நம்ம ரெண்டு பேரும் ஹனிமூன் போறோம்னு சொல்லிட்டு வந்த” என்றான்.
அவன் பேசியதை காதில் வாங்காதவள் “உன்னோட ஷர்ட் பேண்ட் அப்புறம் ரிலாக்ஸா வெளியே போறப்போ யூஸ் பண்றதுக்கான ட்ரெஸ்ஸஸ். எடுத்து வச்சிருக்கேன் இதெல்லாம் நீ அங்கே யூஸ் பண்ண போறியான்னு நீ ஒரு முறை செக் பண்ணிக்கோ.. வேற எதுவும் எடுத்து வைக்க மறந்துட போறோம்” என்று வம்சியிடம் பேசிக்கொண்டே அவனது உடைகளை ஒருமுறை சரிபார்த்து விட்டு எடுத்து பெட்டிக்குள் வைத்துக் கொண்டு இருந்தாள் .
“குட்டிமா ஒரு நிமிஷம் நான் சொல்றது கொஞ்சம் கேளு” என்று அவள் கையைப் பிடித்து வேலை செய்வதை நிப்பாட்டியவன்.
“இங்க பாரு நம்ம ரெண்டு பேரையும் எங்க அனுப்புறாங்கன்னு உனக்கு தெரியுமா? அவங்க நம்ம ரெண்டு பேரையும் ஹனிமூன் அனுப்புறாங்க . அது உனக்கு புரியுதா இல்லையா ஏற்கனவே நம்ம ரெண்டு பேரும் டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டு எனக்கு வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கோம் இந்த நேரத்தில் இதெல்லாம் நமக்கு தேவையா” என்றான் வம்சி.
தாமரை வம்சி ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் கையை பிடித்திருந்த அவன் கையை பார்வையால் சுட்டிக்காட்ட சட்டென அவன் கையை விட்டவன் “சாரி குட்டிமா” என்றவன் .
“நம்ம ஹனிமூன் போறதுக்கு ஓகே சொன்ன” என்றான் .
“அம்மு இப்ப மட்டும் அவங்க சொன்னதுக்கு நம்ம போகலைன்னு பிடிவாதம் பிடிச்சோம்னு வை அவங்க ரெண்டு பேருக்கும் நம்ம மேல சந்தேகம் வந்துடும் அவங்க ரெண்டு பேரை பொருத்தவரைக்கும் நம்ம கல்யாணம் திடீர்னு நடந்தாலும் நீயும் நானும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொண்டு வாழ ஆரம்பித்து இருக்கும்னு நினைச்சுட்டு இருக்காங்க. அப்படி இருக்கிறப்போ நம்ம ஹனிமூன் போக மாட்டேன்னு சொன்னா அவங்களுக்கு நம்ம மேல சந்தேகம் வராதா … அவங்களுக்கு நம்ம ஹனிமூன் போய் சந்தோசமா இருந்துட்டு வருவோம்னு நினைக்கிறாங்க அதையே நமக்கு எடுக்கணும் இப்போ இங்கு எப்படி இருக்குமோ அதேபோல தானே நம்ம ரெண்டு பேரும் அங்க போனாலும் எடுக்க போறோம் இதுக்கு எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகுற” என்றாள் மிகவும் கூலாக .
இந்த நேரத்தில் தாமரை இடத்தில் வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் தன் பெற்றோருக்காக அவர்கள் மனது புண்படக் கூடாது என்று தன்னோடு ஹனிமூன் வருவதற்கு சம்மதிப்பார்களா என்று தெரியாது . அவளை அதிசயம் போல மத்தபடி வம்சி நின்றிருக்க …
அவன் அருகில் வந்த தாமரை “இங்கே பாரு வம்சி நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் . இப்ப நம்ம ரெண்டு பேரும் கிரீஸ்க்கு டூர் போயிட்டு வந்ததா நினைக்கலாமே.. ஏன் ஹனிமூன் போறோம்னு நினைக்கணும்” என்றாள்
.
அவள் சொல்வதை சரிதான் தன் பெற்றோருக்காகவாவது கிரீஸ்க்கு செல்வது என்று முடிவு எடுத்தவன் “சரி குட்டிமா போகலாம்” என்று நான் அவளோடு சேர்ந்து தன்னுடைய பொருட்களை எல்லாம் சூட்கேசில எடுத்து வைக்க அவளுக்கு உதவினான்.
இங்கே அர்ஷ் ஆஃபீஸில் புழம்பிக் கொண்டிருந்தான். “
“ஒருத்தன் என்னடான்னா புதுசா கல்யாணம் ஆனதிலிருந்து ஆபீஸ் பக்கம் தலை வைத்து கூட படுக்கிறது இல்லை. இன்னொருத்தன் எதையோ பறிகொடுத்த மாதிரி ஆபீசுக்கு சோகமா வர வேண்டியது கடனுக்குன்னு ரெண்டு பைலில் கையெழுத்து போட வேண்டியது திரும்ப கிளம்பி எங்கேயோ போயிட வேண்டியது. இவனுங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிகிட்டு நான் தான் முழிக்கிறேன் . எனக்கு பர்சனல் டைம் வேண்டாமா நானும் எங்கேயாவது அடிக்கடி போயிட்டு வந்தா தானே எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் ” என்று தன் டேபிளில் மலை போல குவிந்திருந்த பைல்களை சரி பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது மேலும் சில பைல்களை கையில் ஏந்திய படி அவன் கேபினுக்குள் நுழைந்தாள் நிலானி .
அர்ஷ் தனியாக புலம்பி கொண்டிருப்பதை பார்த்தவள் ” என்ன சார் தனியா பேசிட்டு இருக்கீங்க” என்றபடி தான் கொண்டு வந்த பைலை அவன் முன்பு வைத்தாள்.
இவ்வளவு நேரம் புலம்பிக் கொண்டிருந்த அர்ஷ் அவன் கேபினுக்குள் வந்த நிலானியைப் பார்த்ததும் அவன் முகம் தானாக மலர்ந்தது .
“ஆமா மூன்… துணைக்கு ஆளில்லாமல் தான் தனியா பேசிட்டு இருக்கேன். நீ வேணா வரியா வாழ்க்கை முழுக்க என் கூட கம்பெனி கொடுக்க ” என்று அவளை வம்பு இழுத்தான்.
அவனை முறைத்தவள் “ரொம்ப தான் ஆசைப்படாதீங்க.. நீங்க நினைக்கிறது நடக்காது” என்றாள் சுரத்தே இல்லாமல் .
“என்ன வழக்கமா நான் ஏதாவது வம்பு இழுத்தா பதிலுக்கு ஏதாவது அவளும் உங்களுக்கு பேசி தெத்துப்பல் தெரிய சிரிச்சே ஆளை காலி பண்ணிருவாளே இன்னிக்கு என்ன ஆச்சு இவளுக்கு ” என்று நினைத்தவன் .
“கண்டிப்பா நடக்கும் நான் நினைச்சதை நடத்தியே காட்டுவேன் பாக்குறியா” என்றான்.
” என்ன சார் நீங்க சும்மா தமாஷ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. என்னை பார்த்தாலும் இதே மாதிரி தான் ஏதாவது வம்பு பேசிக்கிட்டே இருக்கீங்க . நீங்க சொல்றதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை . தேவையில்லாத கற்பனைகளை மனசுல வளர்த்திட்டு இருக்காதீங்க அது கண்டிப்பா நடக்கவே நடக்காது. என் வீட்ல ஏற்கனவே எனக்கு மாப்பிள்ளையை பிக்ஸ் பண்ணிட்டாங்க … இன்னும் ஒரு மாசத்துல எங்க கல்யாண தேதியை முடிவு பண்ணிடுவாங்க. இன்விடேஷனோட வரேன். வந்து என் கல்யாணத்துக்கு வாழ்த்து சொல்லிட்டு போங்க” என்று விரக்தியாக சிரித்துக் கொண்டே அவனிடம் கூறினான் .
இவ்வளவு நேரம் மலர்ந்திருந்த அர்ஷ்ஷின் முகம் நிலானி சொன்ன செய்தி கேட்டு அவன் முகம் சுருங்கிப் போனது . வேகமாக சேரை விட்டு எழுந்தவன் “என்ன நிலானி சொல்ற உனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சா என்கிட்ட இதுவரை ஒரு வார்த்தை கூட நீ உனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆனது சொல்லவே இல்லையே” என்றான் அதிர்ச்சியாக .
அவள் அமைதியாக அதிர்ச்சியோடு தன்னை பார்த்துக் கொண்டிருந்த அர்ஷை பார்த்தவள் . “எனக்கே இன்னைக்கு காலைல தான் தெரியும் சார் . திடீர்னு ஏன் அம்மா அப்பா என்கிட்ட வந்து இன்னும் ஒரு மாசத்துல உனக்கு கல்யாணம் ஆஃபீஸ்ல விஷயத்தை சொல்லி லீவ் கார்டு கேட்டாலும் சரி இல்ல வேலையை விட்டுட்டு வீட்டில் இருந்தாலும் சரின்னு ஒரே முடிவா சொல்லிட்டாங்க” என்றாள் சற்று வருத்தத்தோடு.
“என்ன சொல்ற நிலானி உனக்கு இன்னைக்கு தான் தெரியுமா ! அப்போ நீ மாப்பிள்ளைய பாக்கலையா? அவர் யார் என்னென்னவது உனக்கு தெரியுமா? தெரியாதா?” என்றான் .
” ஏன் தெரியாது அவரை கடந்த மூன்று வருடமாக எனக்கு நல்லாவே தெரியும் சார் ” என்றாள் .
” என்ன நிலான்னு சொல்ற இன்னிக்கு காலையில தான் உனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சுன்னு வந்து வீட்ல சொன்னாங்கன்னு சொல்ற அப்போ முறையா பொண்ணு மாப்பிள்ளை எதுவுமே பார்க்காமல் டைரக்ட்டா கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்களா நீ வேற உனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளையே மூணு வருஷமா தெரியும்னு சொல்றியே எனக்கு எதுவுமே புரியல” என்றான் .
சார் இதுல புரிஞ்சிக்க என்ன இருக்கு என்னோட அக்கா இறந்து ஒரு வருஷம் ஆகப்போகுது உங்களுக்கு ஞாபகம் இருக்கா என்றாள் .
“தெரியுமாவா … அது எப்படி நான் மறப்பேன். நீயும் அவங்களும் வண்டியில ஒண்ணா போகும்போது தானே உங்க ரெண்டு பேருக்கும் ஆக்சிடென்ட் ஆச்சு. ஆக்சிடென்ட் ஆனா ஸ்பாட்லயே உன் அக்காவோட உயிர் போயிடுச்சு நீ ஏதோ தெய்வமாதீனமா தப்பிச்சுட்டே.. ” என்றவன்
” ஆமா அதை ஏன் இப்போ பேசுற நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் நீ என்ன பதில் சொல்ற” என்றான் .
“அதுதான் சார் சொல்ல வரேன் என் அக்கா என் கூட வண்டியில் வரும்போது தானே இறந்து போயிட்டாங்க என் வீட்டில் இருக்கிறவங்க அவங்க இறந்ததுக்கு காரணம் நான் தானேன்ன ஒவ்வொரு நிமிஷமும் என்னை குத்தி காட்டிட்டு இருக்காங்க . நானும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்துட்டேன் ஆனா யாரும் என்ன புரிஞ்சிக்கிறதா இல்ல சொல்லப்போனால் என்னால கொலைகாரி பட்டமே கட்டிட்டாங்க ” என்றாள் .
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியானான் அர்ஷ் .
