Home Uncategorizedஎன்னை கொண்டாட பிறந்தவனே 21

என்னை கொண்டாட பிறந்தவனே 21

by Layas Tamil Novel
316 views

EPISODE 21

நிலானி பேசியதை கேட்டு அதிர்ந்த அர்ஷ் “இன்னமும் உன் பேமிலி உன்னை புரிஞ்சுக்கவே இல்லையா?” என்றான்.

“ம்ஹும்.. ” என்று தலையை ஆட்டிவிட்டு ” என்னை புரிஞ்சுக்கல தான் அதனால தான் என் அக்கா புருசனுக்கே என்னை ரெண்டாந்தாரமா கல்யாணம் செய்து வெக்குறாங்க ” என்றாள் சுரத்தில்லாமல்.

“செகண்ட் மேரேஜ்ஜா ! ” என்று அதிர்ச்சியானான் அர்ஷ் .

“ம்ம்ம்…  ” என்றவள் அவன் அறையைவிட்டு வெளியே சென்றாள்.

அவள் முதுகையே வெறித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தான்.

அதே யோசனையோடு அமர்ந்து இருந்தவன் போன் அடிக்கவும் எடுத்துப் பார்த்தான் விஜய் தான் அழைத்து இருந்தான்.

அட்டெண்ட் செய்து காதில் வைத்தவன் “சொல்லு விஜய் ” என்றான்.

“நீ உடனே கிளம்பி கெஸ்ட் ஹவுஸ் வந்திடு … ” என்றான் விஜய் .

“ஏன் விஜய் நீ ஆபீஸ் வரலையா?” என்றான் .

“இல்லே டா நான் நேத்து நைட் கெஸ்ட் ஹவுஸ் வந்தது. இப்போ நானும் இனியாவும் ஹோச்பிடலில் இருந்து வீட்டுக்கு கிளம்பிட்டோம் . நீ நேரா கெஸ்ட் ஹௌஸ்க்கு வந்திடு ” என்று போனை கட் செய்தான்.

“டேய்.. டேய்… ” என்று கத்திய அர்ஷ் “ஹாஸ்பிடல்ல இருந்து கிளம்புறேன்னு சொல்றான் “யாருக்கு என்ன ஆச்சோ தெரியலை. விபரம் கேக்குறதுக்குள்ள போனை வேற கட் பண்ணிட்டான் ” என்று ஒன்றும் புரியாமல் புலம்பியவன் எழுந்து கெஸ்ட் ஹௌஸிற்கு கிளம்பினான்.

அங்கே அவன் காரை விட்டு இறங்கவும் விஜய் காரில் இருந்து இனியாவை தன் கைகளில் ஏந்தியபடி வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது .

அவள் வலது காலில் கட்டு போட்டு இருக்க… அவளை கைகளில் ஏந்திக்கொண்டு விஜய் சென்றதையும் பார்த்து ” டேய் விஜய் என்ன ஆச்சு இனியாவுக்கு … அவளுக்கு என்ன ஆச்சு ? ஏன் கால்ல கட்டு போட்டு இருக்கா?” என்று கேட்டபடி அவன் பின்னால் சென்றான்.

“அதை நீயே இனியாகிட்டே கேளு ” என்று அவளை தூக்கிகொண்டு போய் ஹாலில் இருந்த சோபாவில் அமரவைத்தவன் டீபாயை இழுத்துப்போட்டு அவள் காலை அதில் மெதுவாக வைத்தான்.

அவன் தூக்கிவந்ததில் வெட்கமும், கூச்சமுமாக இனியா அமர்ந்து இருந்தாள் .

“என்ன இனியா ஆச்சு உனக்கு , கால்ல எப்படி அடி பட்டிச்சு அதுவும் கால்ல கட்டு போடுற அளவுக்கு ” என்றான்.

“அதை தான் நானும் கேட்டேன் . அவ கால்ல அடிபட்டத்துக்கு நான் தான் காரணம்னு என்னையே சொல்றா டா… ” என்றான் விஜய்.

“என்னது அவ கால் உடைஞ்சதுக்கு நீ காரணமா!! ” என்று வாயை பிளந்தவன் “ஏன் இனியா இவன்கிட்டே எதுவும் வம்பு பேசி சண்டை போட்டுட்டியா.. கோபத்துல உன் காலை உடைச்சிட்டானோ?” என்று பேசிக்கொண்டே விஜய்யை பார்க்க…

விஜய் தன் கைச்சட்டையை மேலே ஏற்றிவிட்டுக்கொண்டே அரஷ்ஷை பார்த்தவன் “இனியா காலை நான் உடைக்கல … ஆனா எனக்கு இப்போ உன் காலை உடைக்கணும்னு தோணுதே…” என்று அர்ஷ் அருகில் சென்றான் .

“விஜய்… அங்கேயே நில்லு… நீ பக்கத்துல வந்தா எனக்கு தான் டேஞ்சர் ” என்று இனியாவின் அருகில் சென்று அமர்ந்தவன் .

“என்ன இனியா நான் கேட்டுட்டே இருக்கேன் பதில் சொல்லாம என் காலை இவன் எப்போ உடைப்பான்னு பாத்துட்டு இருக்கியா ” என்றான் .

“ஐயோ அண்ணா… அதெல்லாம் எதுவும் இல்லை . நேத்து நைட் நான் பேசாம தான்  தூங்கிட்டு இருந்தேன். நடு ராத்திரியில சார் தான் கீழே வந்திருக்காரு. அப்போ இருட்டா வேற போய்டுச்சு… கண்ணு முழிச்சி பார்த்ததும் நான் இவரை அடையாளம் தெரியாம ராகேஷ்ன்னு நினைச்சுட்டேன். பயந்து போய் ராகேஷ்ன்னு நினைச்சு இங்கே இருந்து தப்பிச்சு போகணும்னு இருட்டுல ஓடினேனா.. அப்போ குறுக்க இருந்த டேபிள்ள வேகமா இடிச்சுட்டேன் ” என்றாள்.

“ஏம்மா… ராகேஷ் எதுக்கு இங்கே வர போறான். அவனுக்கு நீ இங்கே இருக்குறது தான் தெறியாதே… தவிர அப்படியே அவன் இங்கே வந்தாலும் நம்ம கார்ட்ஸை தாண்டி யாராலும் உள்ளே வர முடியாது ” என்றான் அர்ஷ்.

“எனக்கும் தெரியும் அர்ஷ் அண்ணா… ஆனா நேத்து இருந்த பதட்டத்துல இதை எல்லாம் நான் யோசிக்கவே இல்லை ” என்றாள் பாவமான முகத்தோடு.

“அப்போ நேத்து நைட்டே உனக்கு கால்ல அடிபட்டிருக்கு… நான் தான் தெரிஞ்சதும் நீ என்கிட்டே அப்போவே சொல்லி இருக்கலாமே… எதுக்காக அபப்டியே தரையில் உக்காந்து இருந்த .. நான் காலையில் எதேச்சையா கண்விழிச்சு பார்த்த அப்போ நீ என் பக்கத்துல உக்காந்து இருந்ததை பார்த்து நான் குழம்பிப்போய்ட்டேன் ” என்றான்.

” உன்கிட்டே நான் பேசினா கேக்குற நிலைமையிலா நீங்க இருந்திங்க… எங்கே என்னை நீங்க பேசவிட்டாள் தானே ” என்று நேற்று அவளை பேசவிடாமல் விஜய் அவளுக்கு முத்தமிட்டதை நினைத்து சிவந்த முகத்தை அவனிடம் மறைத்துக்கொண்டு பேசினாள்.

“என்ன இனியா அவன் பேசுற நிலைமையில் இல்லையா?  அப்படினா அவன் குடிச்சிருந்தானா?” என்று சரியாக கேட்டிருந்தான் அர்ஷ்.

“ஆமாம் … ” என்று தலையை ஆட்டினாள் இனியா.

அர்ஷும், இனியாவையும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு திரும்பி விஜய்யை பார்க்க….

“என்ன ரெண்டு பெரும் அப்படி பாக்குறீங்க ..  நான் எப்பவும் ரூம்குள்ளயே  தானே இருப்பேன். நேத்து வேற கொஞ்சம் அதிகமா குடிச்சுட்டேன். அபப்டியே தூங்கிட்டேன் டா… திடீர்னு நடுராத்திரி தாகமா இருந்துச்சு ரூமில் தண்ணி இல்லை . அதன் கீழ் வந்தேன் . அதுவரை தான் எனக்கு நியாபகம் இருக்கு .அப்பறோம் எதுவுமே நினைவில் இல்லை” என்று இருவரையும் பார்த்தான் .

” அதான் ரூம் முழுக்க ட்ரிங்க்ஸ் அடுக்கி வெச்சிருக்கியே தாகம் வந்தா அதையே எடுத்து குடிக்க வேண்டியது தானே விஜய் . எதுக்கு தேவை இல்லாம இருட்டுல வந்து இனியாவை பயமுறுத்தின… நீ அப்படி செய்ததுனால பாரு இன்னிக்கு என் தங்கச்சி தான் காலை உடைச்சிகிட்டு கஷ்டப்படுறா ” என்று இனியாவின் தலையை பாசமாக வருடிக்கொடுத்தபடி கவலைப் பட்டான் .

அவளும் அர்ஷ் தன் மீது பாசமழை பொழிவதில் நனைந்தபடி அவனை பார்த்தாள் .

“டேய்.. டேய்… ரெண்டு பேரும் ரொம்ப ஓவரா சீன் போடாதீங்க… அவளுக்கு ஒன்னும் காலை வெட்டி எடுத்துடலை லைட்டா பிராக்சர் ஆகியிருக்கு ஒரு 15 டேஸ் கட்டு போடா சொல்லிருக்காங்க. நீ சீன் போடுற அளவுக்கு இனியாவுக்கு எதுவும் இல்லை சரியா ..” என்றான் இவர்கள் இருவரின் பாசத்தை பார்க்க முடியாமல்.

விஜய்யை இத்தனை நாள் அவளை பாதுகாக்கும் காவலனாக பார்த்த இனியாவிற்கு நேற்று நடந்த நிகழ்வுக்கு பிறகு அவனை அவள் பார்க்கும் பார்வையே மாறிவிட்டிருந்தது . ஒரு புறம் தன் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று கவலையாக இருந்தாலும். மறுபுறம் நேற்று நடந்ததை முற்றிலும் மறந்து இருந்த விஜய்யிடம் நடந்தை சொல்லி ஏற்கனவே காதல் தோல்வியில் புலம்பியவனிடம் , அவனுக்கும் இனியாவிற்கும் இடையில் நடந்ததை சொல்லி அவனை மேலும் கஷ்டப்படுத்த அவள் விரும்பவில்லை .

விஜய்யின் நிலை குறித்து யோசித்தபடி இனியா அமர்ந்து இருக்க… “இனியா இந்த டேப்ளேட்ஸை சாப்பிடு . சாப்பிட்றதுக்கு முன்னே இந்த டேப்ளேட்ஸ் போடணும்னு சொல்லிருக்காங்கல்ல… இன்ஜெக்க்ஷன் போட்றேன்னு சொன்னதும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஹாஸ்பிடலையே ரெண்டாகிட்டே.. இதையாவது ஒழுங்கா சாப்பிடு   ” என்று அவள் முன்பு ஒரு ட்ரேயில் மாத்திரையும் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு வந்து நீட்டி இருந்தான் விஜய் .

அக்கறையாக அவன் கொடுத்த மாத்திரையை வாங்கியவள் அவனையே பார்த்துக்கொண்டு  வாயில் போட்டு தண்ணீரை எடுத்து குடித்தாள். மாத்திரையை விழுங்கியதும் அதன் கசப்பை அப்போதுதான் உணர்ந்தவள் அடுத்த நொடி அப்படியே தன் எதிரே நின்று இருந்தவன் மீதே துப்பி விட்டாள்.

அதை சற்றும் எதிர்பார்க்காத விஜய் “ஏய்.. பாத்து சாப்பிடறது இல்லையா ? இப்படியா மேல வந்து துப்புவ… என்று தன் சட்டையில் இருந்த தண்ணீரை துடைத்துக்கொண்டே “இனியாவை திட்டினான் .

அவன் திட்டியதும் அதுவும் அர்ஷ் முன்பு வேறு திட்டிவிட்டான். உடனே அவளுக்கு முணுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது. “இதுக்கு தான் நான் ஹாஸ்பிடல் வரமாட்டேன்னு சொன்னேன். அங்க போனா ஊசி போடறேன் . மருந்து கொடுக்கிறேன் சாப்பிடுன்னு எனக்கு பிடிக்காதது எல்லாம் செய்யச்சொல்லுவாங்க . எனக்கு தான் எதுவும் பெருசா அடி படலையின்னு அந்த டாக்டர்சொன்னாரே.. அப்பறோம் எதுக்கு இதெல்லாம் ” என்று அழுதுகொண்டே புலம்பியவள் .

“எனக்கு இதெல்லாம் வேண்டாம் . எனக்கு மாத்திரை சாப்பிடவும் பிடிக்காது ” என்று அழுதுகொண்டே சொன்னாள்.

“ஆமா அதுவும் வேணாம் உனக்கு… இப்படியே எதையும் சாப்பிடாம இருந்தா சீக்கிரம் அடிபட்டது சரியா போய்டுமா … ஒழுங்கா மாத்திரையை முழுங்கு … இல்லே இன்னொரு காலையும் உடைச்சுவிட்டிருவேன் ” என்று அவளை அதட்டியவன் மற்றொரு மாத்திரையையும், தண்ணீரையும் எடுத்து அவள் முன்பு நீட்டினான் .

அவன் அதட்டலில் அழுகையை நிறுத்தியவள் “எனக்கு வேணாம் . எனக்கு இது பிடிக்கல கசக்காது ” என்று கண்களை தேய்த்துவிட்டுக்கொண்டே விஜய்யை பார்த்தாள் .

“மாத்திரை கசக்காம இனிக்குமா?… ” என்றவன் “இப்போ இதை நீ சாப்பிட போறியா? இல்லியா ?” என்று மீண்டும் அதட்டினான் .

அவன் அதட்டலில்  மீண்டும் இனியா அழ ஆரம்பிக்க… அதை பார்த்த அர்ஷ். “அவ தான் மாத்திரையினாலே பிடிக்காதுன்னு சொல்றாளே.. அப்பறோம் ஏண்டா அவளை கம்பெல் பண்ற..” என்றான்.

“அவளுக்கு பிடிக்கலைன்னா அபப்டியே விட்டுட சொல்றியா… இனியா இங்கே இருக்க வரைக்கும் அவ என்னோட பொறுப்பு. அவளை சரியா பாத்துக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு. அவ உடம்பு வீக்கா இருக்கா… அதான் லேசா அடிபட்டத்துக்கே அவளுக்கு கால் உடைஞ்சு போயிருக்கு. டாக்டர் இவளுக்கு BONE ஸ்ட்ரென்த் இல்லையின்னு சொல்லி டப்ளேட்ஸ் கொடுத்திருக்காங்க. இதெல்லாம் சாப்பிடாம இப்படியே இருந்து நாளைக்கு பெருசா எதுவும் வந்தா டஇனியாவை தேடி  யாரும் வந்தா அவங்களுக்கு நீயா வந்து பதில் சொல்லுவ… நான் தானே இனியாவை இங்கே கூட்டிட்டு வந்தேன் . நான் தானே பதில் சொல்லி ஆகணும் ” என்று கோபத்தில் அர்ஷ்ஷிடம் பேசினான் .

விஜய் பேசியதை பார்த்தது வாய் அடைத்து போனான் . “நான் எதுவும் பேசல விஜய் . நீயாச்சு இனியாவாச்சு … என்னை ஆளை விடுங்கடா சாமி ” என்றவன் “மல்லிகா அக்கா… என்ன டிபன் செய்திருக்கிங்க.. எனக்கு பசிக்குது ” என்று கிச்சனுக்கு சென்றான்.

தனக்கு ஆதரவாக அர்ஷ் பேசுவான் என்று எதிர்பார்த்த இனியாவிற்கு ஏமாற்றமே… கிச்சனுக்கு சென்றவனையே பார்த்துக் கொண்டு அவள் அமர்ந்து இருக்க… 

“எவ்ளோ நேரம் நான் இதை கையிலேயே வெச்சிருக்கிறது ” என்று விஜய்யின் அதட்டலில் அவன் பக்கம் திரும்பியவள் அவனை பாவமாக பார்க்க…

“இந்த மாதிரி முகத்தை வெச்சிருந்தா நான் அவனை மாதிரி பாவம் பாத்துட்டு விட்டுடுவேன்னு நினைக்காத… அதான் என்கிட்டே நடக்காது . ஒழுங்கா இப்போ இந்த மாத்திரையை சாப்பிடு ” என்றான்.

அவனை முறைத்துக்கொண்டு விஜய் கையில் இருந்த மாத்திரையை வாங்கியவள் வாய் வரை கொண்டு சென்றுவிட்டு மருந்தின் வாசத்தில் குடலை பிரட்டவும் வாந்தி எடுப்பது போல செய்தவள் “சார்.. எனக்கு வேண்டாம். வாந்தி வர மாதிரி இருக்கு. மாத்திரையை சாப்பிட்டு வாந்தி எடுத்துட்டா அப்பறோம் இந்த மாத்திரையும் வே்ஸ்டா  போய்டும் ” என்றாள்.

“வாங்கிட்டு வந்த மொத்த மாத்திரையும் வீணா போனாலும் பரவாயில்லை . நீ முழுசா ஒரு மாத்திரையை விழுங்குற வரைக்கும் நான் உன்னை விட மாட்டேன் ” என்றான்.

அவனை கொலை செய்வது போல் பார்த்த இனியா வேறு வழியே இல்லாமல் அவன் கொடுத்த மாத்திரையை வாயில் போட்டு தண்ணீரை போட்டு விழுங்க போக…  மீண்டும் அதன் கசப்பு தாளாமல் துப்பப்போனவள் விஜய்யை பார்த்தாள்.

“என்ன பாக்குற… எங்கையாவது மாத்திரையை துப்பினேன்னு வை .. அப்பறோம் உன்னை நான் என்ன செய்வன்னே தெரியாது ” என்று அதட்ட… அவன் அதட்டியதில் அடுத்த நொடி மாத்திரையை விழுங்கி இருந்தாள்.

இதை எல்லாம் கிட்சன் மேடையில் அமர்ந்து மல்லிகா அக்கா சூடாக தோசை ஊத்தி அவன் தட்டில் வைக்க.. அதை ரசித்து ருசித்து சாப்பிட்டபடி ஹாலில் விஜய்யிடம் மாட்டிக்கொண்ட இனியாவை பார்த்துகொண்டு அமர்ந்து இருந்தான்.

“பாவோம் சார் நம்ம இனியா சார் அந்த அதட்டு அதட்டுறாரு அந்த பொண்ணை. வேணம்னா விட வேண்டியது தானே… அதுக்குன்னு இப்படியா மிரட்டுறது ” என்று மல்லி விஜய்யிடம் மாட்டிக்கொண்ட இனியாவை நினைத்து அவள் மீது கரிசனப்பட்டார்

“அக்கா இனியா எவ்ளோ வீக்கா இருக்கான்னு அவன் சொன்னதை எல்லாம் நீங்களும் கேட்டுட்டு தானே இருந்திங்க… அப்பறோம் அவ உடம்பை பாத்துக்கணும்னா இப்படி எல்லாம் செய்தா தான் நடக்கும்னா அதை செய்து தானே ஆகணும் . அதுவுமில்லாம விஜய்க்கு இனியாவை இங்கே கூட்டிட்டு வந்தால் இருந்து  அவ மேல ஒரு தனி அக்கறை இருக்கு. விடுங்க எல்லாம் அவன் பார்த்துப்பான் . நீங்க தோசைக்கு இன்னும் கொஞ்சம் நெய் நிறைய ஊத்தி முருகலா சுடுங்க ” என்று சாப்பிட ஆரம்பித்தான் .

அப்போது ஹாலில் இருந்து மல்லிகாவை விஜய் அழைத்தான் . “சார் இந்த தோசையை மட்டும் நீங்களே ஊத்திக்கோங்க தம்பி கூப்பிடுது நான் போய் என்னனு கேட்டுட்டு வந்துடறேன் ” என்று ஹாலுக்கு ஓடினார் .

“அக்கா… மல்லிகா அக்கா… ” என்று கத்தியவன் இந்த வீட்ல ஒரு தோசை கூட முழுசா சாப்பிட முடியலை ” என்று புலம்பியவன் தனக்கான தோசையை ஊற்ற  ஆரம்பித்தான் .

“சொல்லுங்க தம்பி ” என்று விஜய் முன்பு வந்த மல்லிகாவை பார்த்தவன் “அக்கா இதுல இனியா மூணு வேலையும் சாப்பிட வேண்டிய டப்ளேட்ஸ் எல்லாம் இருக்கு. சரியா பாத்து வேளாவேளைக்கு டப்ளேட்ஸ் மறக்காம சாப்பிட வெச்சிடுங்க… அப்பறோம் டாக்டர்ஸ் இனியா வீக்கா இருக்கான்னு சொல்லிட்டு என்ன எல்லாம் சாப்பிடலாம்னு ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்திருக்காங்க. அதை பார்த்து அவளுக்கு செய்து கொடுத்திருங்க.. ” என்றவன் மாத்திரையையும் சீட்டையும் மல்லிகாவிடம் கொடுத்து விபரம் சொன்னவன் .

“அர்ஷ் ஆபீஸ் கிளம்பலாம் வா… ” என்று வாசலை நோக்கி கிளம்பினான் .

அப்போதுதான் முறுகலாக ஊற்றிய தோசையயை தன் தட்டில் வைத்து பிய்த்து ஒரு வாய் வைக்க போனான். விஜய் அழைத்ததும் சலித்துக்கொண்டவன் அந்த ஒரு தோசையை மொத்தமாக சுருட்டி சட்னியில் குழைத்து அப்படியே தன் வாயில் போட்டு தண்ணீரை குடித்தவன் விஜய் பின்னால் சென்றான்.

இங்கே மல்லிகா அர்ஷ்ஷை பார்த்து சிரித்துக்கொண்டு நின்று இருக்க.. இனியா விஜய்யை பார்த்தப்படி அமர்ந்து இருந்தாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured