EPISODE 22
இன்று தான் வீட்டிற்கு வந்து இருந்தான் விஜய் . அவன் உள்ளே நுழையும் போதே வீட்டுக்குள் ஒரே பாரப்பாக இருந்தது .
“தாமரை இதையும் மறக்காமல் பேக் பண்ணி வச்சுடு . அங்க போனா சாப்பிட எதுவும் நேரத்துக்கு கிடைக்குதோ என்னவோ பசிக்கிற நேரத்துல இதை சாப்பிடுங்க” என்று அதித்தி தான் செய்த நொறுக்கு தீனிகளை தாமரையின் கையில் திணித்தாள் .
“ஐயோ அத்தை இதெல்லாம் எதுக்கு அங்கேயே எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு மாமா சொன்னாங்க தேவையில்லாம இங்கிருந்து எடுத்துட்டு போய் ஏர்போர்ட்டிலேயே செக் பண்ணிட்டு இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க அம்மா என்ன பண்றது” என்றாள்.
“அதெல்லாம் வேண்டாம் சொல்ல மாட்டாங்க நீ இதை முதல்ல பேக் பண்ணு” என்று அவளிடம் அதிதி கட்டளையிட..
என்ன சொல்வது என்று தெரியாமல் வம்சி பார்த்த தாமரை வேறு வழியே இல்லாமல் அதிதி கொடுத்த ஸ்னாக்ஸ்களை ஒரு பையில் எடுத்து அடுக்கினாள் .
“வம்சி நீயும் தாமரையும் கிரீஸ் போவதற்கான பிளைட் டிக்கெட் அப்புறம் உங்க ரெண்டு பேரோட பாஸ்போர்ட் எல்லாமே இதுல இருக்கு” என்று ஒரு கவரை அவனிடம் நீட்டினார் வீரா.
வீரா கொடுத்த கவரை வாங்கி அதிலிருந்து ஷார்ட் டிக்கெட் எல்லாம் எடுத்து பார்த்து சரியாக இருக்கிறதா என்று செக் செய்தான் வம்சி .
“அப்புறம் சொல்ல மறந்துட்டேன் வந்துச்சு நீங்க கிரீஸ்க்கு போய் இறங்குனதும் உங்கள தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்து இருக்கிற வீட்டுக்கு உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போக செல்வம் வருவான் ” என்றார் .
” அப்பா செல்வமா! யாரை சொல்றீங்க? நம்ம விஎஸ் மார்க்கெட்டிங் ஓட செல்வத்தை சொல்றீங்க” என்றான் வம்சி
“ஆமாம் வம்சி அவனே தான் . நியாயமா செல்வம் இந்தியாவுக்கு கிளம்பி வர வேண்டியது. நான் தான் அவனை அங்கையே இருக்க சொன்னேன். அவனுக்கு கிரீஸில் இருக்கிற ஒவ்வொரு இடமும் அத்துபிடியாச்சே… மாசத்துல பாதி நாள் அவன் அங்க தான் இருக்கான். அதனால தான் கிரீஸ்க்கு உங்க ரெண்டு பேரையும் ஹனிமூன் அனுப்பி வைக்கவே பிளான் பண்ணினேன் ” என்றார் வீரா.
“அப்பா… ஏன் இப்படி பண்றீங்க .. எங்களுக்காக அவனை ஏன் அங்கே இருக்க சொன்னிங்க… நாங்க என்ன சின்ன பசங்களா . எங்களுக்கு அங்கே சுத்தி பார்க்க தெரியாதா? என்ன?” என்றான் வம்சி.
“அதனால என்ன ப்பா… அவன் நம்ம பையன் தானே ” என்று வீரா.
விஜய் வாசலில் நின்று இருப்பதை பார்த்த வீரா “விஜய் வந்துட்டியா … ஆபீஸ்ல ஒர்க் அதிகமா ப்பா… ஏன் நேத்து வீட்டுக்கு வரல ” என்று கேட்டபடி அவனிடம் சென்றார்.
“ஒர்க் கம்மி தான் ப்பா… நான் நேத்து கெஸ்ட் ஹவுசில் தங்கிட்டேன் ” என்றவன் தன் அறைக்கு செல்ல போக…
“விஜய் வா டா… வந்து சாப்பிடு லஞ்ச் எல்லாம் ரெடி ஆகிருச்சு ” என்று அதிதி அவனை அழைத்தார்.
“அம்மா எனக்கு வேணாம் பசிக்கல… ” என்று நகரப்போனவனை கை பிடித்து நிப்பாட்டிய வீரர் அவன் முகமும், பேச்சும் முன்பு போல இல்லாததை கண்டு “ஏன் விஜய் என்ன ஆச்சு ? ஏன் ஒரு மாதிரியா இருக்க..” என்றார்.
“அதெல்லாம் எதுவும் இல்லை பா… நான் நல்லா தான் இருக்கேன் . கொஞ்சம் சரியா தூங்கலை அதனால அப்டி இருக்கும் ” என்றான்..
“சரி விஜய் . அப்போ நீ போய் ரெஸ்ட் எடு ” என்று வீரா அவனை போக சொல்ல…
விஜய் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்து ஒரு முறையேனும் அவன் பார்வை தன் மீது விழாதா என்று ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு தாமரை பரிதவித்துக்கொண்டு நின்று இருக்க…
அவள் அருகில் நின்று இருந்த வம்சி அதை கவனித்துவிட்டு “என்ன விஜய் வீட்டுக்கு வந்தா அம்மா அப்பா கூட மட்டும் தான் பேசணும்னு இருக்கியா என்ன ? எங்க கூட எல்லாம் பேசக்கூடாதுன்னு முடிவு எடுத்துட்டியா? உன்கிட்ட சொல்லாம கொள்ளாம இந்த கல்யாணம் நடந்திருச்சின்னு எங்க ரெண்டு பேர் கூடையும் பேச கூடாதுன்னு இருக்கியா ?” என்று விஜய்யின் கவனத்தை தன் பக்கம் திருப்பினான் வம்சி.
விஜய் காதலித்த தாமரையை வம்சி திருமணம் செய்து கொண்டதை சுட்டிக்காட்டி அதனால்தான் அவன் இவர்கள் இருவரிடமும் முகம் கொடுத்து பேசுவதில்லை என்று வம்சி சொல்வது விஜய்க்கு புரியாமல் இல்லை .
தன் பெற்றோரின் முன்பு இந்த கேள்வியை கேட்டு விட்ட வம்சியை முறைத்த விஜய் அவன் அருகில் அவனையே விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்த தாமரையை பார்த்தான் .
விஜய் பார்வை தன் மீது விழுந்த மறுபடியும் சோகமாக இருந்த தாமரையின் முகம் மலர்ந்தது .
அவளை ஒரு நிமிடம் தான் பார்த்திருப்பான் அடுத்த நொடி தன் பார்வையை வம்சி பக்கம் திருப்பி இருக்க அந்த ஒரு நொடி பார்வையே தாமரைக்கு ஆயிரம் சூரியனை ஒன்றாக பார்த்த சந்தோசம் அவளுக்கு .
“ஆமா விஜய் வம்சி தாமரை ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு வந்ததிலிருந்து நீ வீட்டுக்கு சரியா வரதே இல்ல . முன்னெல்லாம் ஊர்ல இருக்கும்போது வேலா வேலைக்கு சரியா வந்து சாப்பிட்டு எங்க கூட வீட்ல இருப்ப… ஆபீஸ்க்கு போடான்னு விரட்டினால் கூட.. ஆபீஸ் வேலை எல்லாம் வம்சி பார்த்து பண்ணு சொல்லிட்டு . இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போறீங்களா அப்படின்னு சொல்லிட்டு என் மடியில தலை வைத்து படுத்துவேன் ஆனா இப்போ என்னடான்னா வீட்டு பக்கம் வரவே மாட்டேங்குற என்ன தான்டா ஆச்சு உனக்கு” என்றார் அதித்தி.
” அம்மா நான் வேணும்னே வீட்டுக்கு வரலைன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா.. அதுதான் இல்ல இவன் கல்யாணம் ஆனதிலிருந்து பிஸி ஆகிவிட்டான். அப்போ நான் தானே ஆபீஸ் பார்த்தாகணும். அவனும் ஆபீசுக்கு சரியா வரதில்லை. நானும் போகலேன்னா அப்புறம் ஆபீஸ் வேலை எல்லாம் யார் பார்க்கிறது . வம்சி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிட்டு ஆபீஸ் வரட்டும். அதுக்கப்புறம் நான் முன்ன மாதிரி வீட்டுக்கு வர பார்க்கிறேன்” என்றான்
“சரிப்பா… ஒரு வீக் பொறுத்துக்கோ நம்ம வம்சி ஹனிமூனுக்கு கிரீஸுக்கு போறான். அவன் போய்ட்டு வந்ததும் எப்படியும் ஆபீஸ்க்கு வர ஆரம்பிச்சிருவான் ” என்றார் வீரா .
அவர்கள் இருவரும் ஹனிமூன் செல்கிறார்கள் என்று சொன்னதுமே விஜய் பார்வை தானாக தாமரையை பார்த்தது .
அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தாமரை தலையை குனிந்து கொண்டாள்.
அதை பார்த்த அதிதி தாமரை ஹனிமூன் பற்றி பேசியதும் வெட்கப்படுகிறாள் என்று நினைத்துக்கொண்டு “ஏன் டி மருமகளே… நேத்து வம்சி ஹனிமூன் வேண்டாம்னு சொன்ன அப்போ நீ தானே அவனுக்கு முந்திட்டு ஹனிமூன் போறேன்னு சொன்ன… வரமாட்டேன்னு சொன்னவனையும் பேசி வரவெச்சிட்டு இப்போ என்ன என் மகன்கிட்ட விஜய்கிட்ட நீங்க ஹனிமூன் போறதை சொன்னதும் இப்படி வெட்கப்பட்டு தலையை குனிஞ்சு நிக்குற…” என்று அவளை கிண்டல் செய்தார்.
அதிதி பேசியதை கேட்டதும் தாமரை “அத்தை அது இல்ல… நானும் அம்முவும் … ” என்று தாமரை பேசவர…
அதற்குள் விஜய் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு அங்கு நிற்கமுடியாமல் வேகமாக தன் அறைக்கு சென்றான்.
தாமரையின் கண்கள் குளமாகியது அவளால் விஜய்யிடம் ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லை. தான் என்ன நினைத்து ஹனிமூன் செல்ல சம்மதித்தேன் என்று விஜய்யிடம் சொல்லி புரியவைக்க கூட தனக்கு ஒரு சந்தர்ப்பம் அமையாததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டாள் .
இங்கு அறைக்கு வந்த விஜய் தன் டையை கழட்டிபோட்டுவிட்டு சட்டையை கழட்டி கட்டிலில் வீசியவன் வீட்டிற்கு தெரியாமல் கப்போர்டில் தான் வாங்கி வைத்து இருந்த மதுவை எடுத்து அந்த மத்திய வேளையில் குடிக்க ஆரம்பித்தான்.
“ச்சே… இதுக்கு தான் வீட்டுக்கே வரக்கூடாதுன்னு நினைச்சேன். யார் எங்க போனா எனக்கு என்ன? இந்த அம்மா ஏன் இதை எல்லாம் என்கிட்டே சொல்லிட்டு இருக்காங்க . அவங்க ஹனிமூன் போனா என்ன ? போகலையினா எனக்கு என்ன ?” என்று புலம்பியபடி டம்பளரில் ஊற்றி குடிக்க வந்த மதுவை அப்படியே பாட்டிலோடு சரித்தான் .
முழு பாட்டிலையும் குடித்து முடித்தவன் இன்னமும் தாமரை பற்றிய நினைவுகளில் இருந்து தன்னை மீட்டெடுக்க முடியாமல் சிரமப்பட்டான்.
அவனால் தாமரையுடன் விஜய் சந்தோசமாக பேசிக் கழித்த நாட்களை மறக்கவே முடியவில்லை. கண்களை மூடினாள் தாமரை.. தாமரை… தாமரை பற்றிய நினைவுகள் மட்டுமே தான் வந்தது .
இங்கே வந்தாலே தாமரை பற்றிய நினைவுகள் அவனை வாடி வதைப்பதை தாங்க முடியாதவன் “இனியும் இங்கே இருந்தா நல்லா இருக்காது. கொஞ்ச நாளைக்கு நான் இந்த வீட்டு பக்கமே வரக்கூடாது. அபப்டியே வரணும்னு நினைச்சா தாமரை வீட்டில் இல்லாத அப்போ தான் வரணும் என்று முடிவு எடுத்தவன் ” உடனே எழுந்து தன் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே செல்ல போக…
அப்போது அவன் அறை கதவு தட்டும் சத்தம் கேட்டது . யோசனையாக யார் என்று நினைத்தவன் கண்ணாடியில் தன் கலைந்திருந்த முடியை சரி செய்துகொண்டு , சட்டை பட்டன்களை மாறிக்கொண்டே வந்து கதவை திறக்க…
அவன் அறை முன்பு வம்சி நின்று இருந்தான்.
அவனை கேள்வியாக பார்த்து விஜய்
“வா வம்சி ஏன் அங்கயே நிக்கிற உள்ள வா…” என்று தன் வாயில் கைவைத்து அவன் பேசும் போது மதுவின் வாடை வந்து விடாதபடி வம்சி உள்ளே அழைத்தான்.
விஜய் வம்சின் முகத்தை நேருக்கு நேராக பார்த்து பேசாமல் தன் முகத்தை திருப்பிக் கொண்டு வாயில் கைவைத்து பேசுவதை கவனித்த வம்சிக்கு புரிந்து விட்டது அவன் குடித்திருக்கிறான் என்று..
“ என்ன விஜய் குடிச்சிருக்கியா அதுவும் நம்ம வீட்ல பட்டு பகல்லையே குடிக்க ஆரம்பிச்சு இருக்கியா நீ… ஏதோ அப்பப்ப வொர்க் டென்ஷன்ல குடிப்பேன்னு நினைச்சேன். இப்ப என்ன முழு நேர குடிகாரனாவே மாறிட்டியா நீ” என்று அவன் அறைக்குள் வராமல் வெளியே நின்று கேட்டான்.
“அதெல்லாம் உனக்கு எதுக்கு. இப்போ எதுக்கு நீ இங்கே வந்த… நீயும், உன் பொண்டாட்டியும் ஹனிமூன் போகணும் தானே. அங்க போறதை விட்டுட்டு உனக்கு இங்கே என்ன வேலை. போ.. போய் உன் பொண்டாட்டி கூட ஹனிமூன் கொண்டாடுற வழியை பாரு வீணா என் ரூம்ல உனக்கி என்ன வேலை. உன் பொண்டாட்டி தான் உன்னை விட ஹனிமூன் போவ ரொம்ப ஆர்வம் காட்டுறான்னு அம்மா சொன்னாங்களே… போ… அவ… சாரி உன்னோட மனைவி உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா ” என்று விஜய் தன் ஆற்றாமையை நினைத்து எரிந்து விழுந்தான் வம்சியிடம்.
விஜய் அளவுக்கதிகமாக குடித்திருக்கிறான் என்று அவன் பேசியதை வைத்தே புரிந்து கொண்ட வம்சி
“அவன் பேசுனதை கேட்டியா.. இந்த நிலைமையில் நீ அவன்கிட்டே பேசணுமா தாமரை “ என்று தனக்கு எதிரே விஜய்யின் கதவை ஒட்டி இருந்த சுவற்றை ஒட்டி மறைந்து இருந்த தாமரையை பார்த்து கேட்டான்.
விஜய் பேசியதை கேட்டு அழுத விழிகளோடு இவ்வளவு நேரம் மறைந்து நின்று இருந்த தாமரை அவன் எதிரில் வந்து நின்றாள்.
அவளைப் பார்த்ததும் தான் பேசியதை தாமரை கேட்டிருப்பாள் என்று நினைக்கையில் விஜய் மனம் பதறியது.
