Home Uncategorizedஎன்னை கொண்டாட பிறந்தவனே 23

என்னை கொண்டாட பிறந்தவனே 23

by Layas Tamil Novel
310 views

EPISODE 23

ஹனிமூனுக்கு பேக் செய்துவிட்டு வம்சி வீராவுடன் பேசிக்கொண்டு இருக்க…  அதிதியுடன் சேர்ந்து கிச்சனில் இருந்தவள் ஹாலில் இவர்களுக்கு பரிட்சயமான குரல் கேட்கவும் இருவரும் கிச்சனில் இருந்து எட்டி பார்த்தனர்.

அங்கே யாராவும் , தேவ்வும் வந்திருந்தனர்.

“குட்டிமா … ” என்று அவர்களை பார்த்ததும் வம்சி கிட்சேன் பக்கம் திரும்பி அவளை அழைக்க…

அவன் அழைப்பதற்கு முன்பாகவே வெளியே வந்த தாமரை “அம்மா!! அப்பா!! ” என்று அவர்களை நோக்கி ஓடி வந்தாள்.

“பாருங்க மாமா… நான் கூப்பிட்றதுக்குள்ள உங்களை பார்க்க எவ்ளோ வேகமா வரான்னு… ” என்று வம்சி சிரித்தான் .

“ஆமா மாப்பிளை … எங்க பொண்ணுக்கு எங்க மேல அவ்ளோ பிரியம் ” என்றார் தேவ்.

“ஒரு வழியா ரெண்டு பேரும் வந்துட்டீங்களா… நீங்க லேட் பண்ணினதை பார்த்ததும் நாங்க கிளம்பரத்துகளையாவது ரெண்டு பெரும் வந்திருவிங்களான்னு யோசிச்சேன் ” என்றாள் தாமரை.

“ஒன்னும் இல்லை டா வரதுக்குள்ள ஒரு சின்ன வேலை வந்திருச்சு .. அதான் லேட்” என்றான் தேவ் .

“அப்படி என்ன வேலை வந்திருச்சு உங்களுக்கு என்னை பார்க்க வரதை விட்டுட்டு ” என்று முகம் சுருக்கினாள்.

“ஆமா ஆமா … எப்போ பாரு அம்மாவும் அப்பாவும் உன்னை பத்தி மட்டும் தான் யோசிக்கணும் . உனக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுக்கணும் . அதனால தான் அவங்களுக்கு இன்னொரு பொண்ணு நான் இருக்குறதையே ரெண்டு பெரும் மறந்துட்டாங்க. எப்போ பாரு தாமரை … தாமரைன்னு உன்னை பத்தி தான் பேசுறது…” என்று சொல்லிக்கொண்டே வாசலில் இருந்து உள்ளே வந்தாள் தாமரையின் தங்கை வினோதினி.

அவளை பார்த்ததும் அனைவரும் இன்ப அதிர்ச்சி ஆனார்கள் .

“ஏய் வினோ!! எப்போ டி வந்த… என்கிட்டே சொல்லவே இல்லை ” என்று தாமரை அவளை நோக்கி கட்டிக்கொள்ள செல்ல…

அவள் கையை தட்டிவிட்டவள் நேராக வம்சி இடம் சென்று “வாழ்த்துக்கள் மச்சான். என்கிட்டே கூட சொல்லாம என் அக்காவை கல்யாணம் செய்துக்கிட்டிங்க… ” என்றாள்.

” என்ன வினோ நீ.. எனக்கே என் கல்யாணம்னு தெரியாது . இதுல உனக்கு சொல்லாம விட்டுட்டேன்னு கேக்குறியே ” என்று சிரித்தான்.

“தெரியும் மச்சான் மாம், டாட் ரெண்டு பேரும் எனக்கு போன் பண்ணி சொன்னாங்க.. ” என்றாள்.

“ஏய் நான் எவ்ளோ ஆசையா உன்கிட்டே வரேன் நீ என்ன டி என்னை கண்டுக்காம நேரா அம்முகிட்டே போற… ” என்று வந்து வினோவின் காதை பிடித்து திருகினாள்.

“சட் அப் டி… என்கிட்டே நீ பேசாத உனக்கு கல்யாணம் ஆகி, ஊரை கூட்டி ரிசெப்சன் வெச்சு இதோ… இப்போ ஹனிமூன் வரை பேக் பண்ணி ரெடி ஆகி இருக்க… ஆனா என்கிட்டே ஒரு வார்த்தை கூட இதெல்லாம் நடந்திருக்குன்னு ஒரு போன் அடலீஸ்ட் ஒரு மெசேஜ் கூட பண்ணி சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல… எந்த முகத்தை வெச்சிட்டு என்கிட்டே நீ நார்மலா பேச வர.. ” என்று கோபமாக தாமரையிடம் சண்டையிட்டாள் வினோ.

“வினோ… ப்ளீஸ்… சாரி டி.. நான் வேணும்னு உனக்கு கால் பண்ணாம இல்ல… எனக்கு திடீர்னு கல்யாணம் ஆனதும் என்ன செய்றதுன்னே தெரியலை. யார்கிட்டேயும் என்னால  பிரீயா பேசக்கூட முடியல… அதான் அந்த டென்ஷன்ல உனக்கு நான் போன் பண்ணல ” என்று வருத்தமாக பேசினால் தாமரை.

“அம்மா வினோ பாவம் தாமரை . இப்போ ரெண்டு மூணு நாளா தான் கொஞ்சம் பழைய படி எல்லார்க்கோடாவும் பேசுறா இல்லேன்னா ரூமை விட்டே வரமாட்டா… வந்தாலும் யார்கூடவும் சரியா பேசாம தான் இருந்தா. உன் அக்கா தானே அவ பாவம் அவளை மன்னிச்சிரு டி… “என்று தன் மறுகளுக்கு பரிந்து பேசினார் அதிதி.

“சரி  சரி அத்தை ஏதோ நீ சொல்றியேன்னு நான் அமைதியா போறேன் . ம்ம்ஹும்… என்ன நான் என் மனசுல ஒரு கோட்டை கட்டி வெச்சிருந்தேன் . அது சரிஞ்சு போய்டுச்சேன்னு கொஞ்சம் வருத்தமா இருக்கு எனக்கு ” என்று சலித்துக்கொண்டாள்.

“என்ன டி அப்படி பெரிய கோட்டை கட்டி வெச்சிருந்தே ” என்றார் யாரா.

“அது ஒண்ணுமில்ல மா… அக்காவுக்கும் விஜய் மாமாவுக்கும் கல்யாணம் நடக்கும் . அப்படியே நானும் வம்சி மாமாவை எப்படியாவது உசார் பண்ணி அவரை கல்யாணம் செய்யலாம்னு இருந்தேன். ஆனா என்ன இப்போ ஜோடி மட்டும் மாறி போய்டுச்சு அதான் எனக்கு வருத்தம் ” என்று குறும்பாக பேசியவள் வம்சியையும், தாமரையும் பார்க்க..

தாமரைக்கு வினோ பேசியது கேட்டு அடடா இந்த  விஷயம் தனக்கு முன்னமே தெரியாமல் போய்விட்டதே… தெரிந்திருந்தால் எப்படியாவது வம்சிக்கு இவளை திருமணம் செய்து வைத்திருக்கலாமே என்று தோன்றியது . இனி அதை பற்றி நினைத்து  என்ன செய்வது என்று தன்னையே நொந்து கொண்டு அவளை பார்த்தாள் .

வம்சியும் மனதிற்குள் “ஆமா வினோ ஜோடி மாறி தான் போய்டுச்சு… விஜய்க்கு மனைவியாக வேண்டிய தாமரை என்னோட மனைவி ஆகிட்டா ” என்று நினைத்தபடி அவளை பார்த்த்தான்.

“என்ன வம்சி மாமா அபப்டியே பிரீஸ் ஆகிட்டீங்க நான் சொன்னதை கேட்டு … இப்பவும் எந்த ப்ரோப்ளேமும் இல்லை . என்னையும் நீங்களே கல்யாணம் செய்துக்கோங்களே… நானும் அக்காவும் மாதிரியே இந்த வீட்டுக்கு மருமகளா வந்துடறேன் ” என்றாள் .

“இப்போ என்ன டி உனக்கு இந்த வீட்டுக்கு மருமகளா வரணும் அதானே… பேசாம நீ விஜய்யை கல்யாணம் பண்ணிக்கோ… வேலை முடிஞ்சுது . எனக்கும் என் அண்ணன் பொண்ணுங்க ரெண்டு பேருமே என் வீட்டுக்கு மருமகளா வந்த சந்தோசம் இருக்கும் ” என்றார் அதிதி .

அதை கேட்டதும் தாமரைக்கு தூக்கி வாரி போட்டது . எங்கே தன் வாழ்க்கையில் மீண்டும் குழப்பம் நேர்ந்துவிடுமோ என்று அவளுக்கு பதற்றம் ஆகிவிட… அவள் முகத்தில் தெரிந்த பதற்றத்தை கண்டா வம்சி .

“அம்மா அவ தன சின்ன பொண்ணு அவகிட்டே என்ன பேசிட்டு இருக்கீங்க… நீங்க சொன்னா போதுமா விஜய் அதுக்கு சம்மதிக்கணுமே… சும்மா எங்க கல்யாணம் மாதிரி எடுத்தோம் கவுத்தோம்னு எந்த முடிவையும் நீங்களே எடுத்துறாதீங்க,.. விஜய்கிட்ட முதல்ல பேசி அவன் என்ன சொல்றான்னு கேட்டு முடிவு பண்ணிட்டு அப்பறோம் பேசுங்க ” என்றான் சற்று கோபமாக.

“டேய் உன்னை மாதிரி தான் டா உன் அண்ணனும் . இப்போ நான் அவனை கூப்பிட்டு வினோவை கல்யாணம் செய்துக்கோன்னு சொன்னா இங்கையே இப்பவே தாலி காட்டுவான் பாக்கறியா ” என்று அதிதி பேச..

“அத்தை!!… ” என்று தாமரை அலறியவள் எங்கே விஜய்யை வினோவிற்கு திருமணம் செய்துவைத்துவிடுவார்களோ என்று பயந்து போனாள்.

” என்ன தாமரை என்ன ஆச்சு ?” என்று யாராவும், அதிதியும் அவளை பார்க்க..

அவர்கள் இருவரையும் பார்த்து தாமரை பதில் பேச தெரியாமல் நின்று இருக்க..

“அம்மா இப்போ நாங்க ஹனிமூன் போகணுமா ? வேணாமா? எங்க ரெண்டு போரையும் வழி அனுப்புறத்தை விட்டுட்டு நீங்க திடீர்னு சம்பந்தம் பேச ஆரம்பிச்சுட்டீங்க… “என்றவன் .

“வினோவிடம் திரும்பி இப்போ உனக்கு கல்யாணத்துக்கு ரொம்ப அவசரமா … ஒழுங்கா படிப்பு முடிச்சுட்டு வந்து இதை பத்தி பேசு சரியா” என்றான் கடுமையாக .

“ஹலோ மாம்ஸ நான் என்னோட ஸ்டடீஸ் முடிச்சிட்டு தான் வந்திருக்கேன். அதனால் தான் என்னால் உங்க ரிசெப்ஷனுக்கு  கூட என்னால் வர முடியலை ” என்றாள்.

” சரி இப்போ தானே வந்திருக்க வந்ததும் வராததுமா எல்லாரையும் வம்பிழுக்கணுமா ..” என்றான்.

“ஓகே ஓகே கூல் மாம்ஸ் ” என்றவள் அத்தை எனக்கு ரொம்ப பசிக்குது என்று தன் வயிற்றை தடவிக்காட்டினாள் .

“நீ இன்னும் சாப்பிடலையா வினோ… ” என்ற அதிதி அவள் கைபிடித்து டைனிங் டேபிள் அழைத்து செல்ல… யாராவும் அவர்கள் பின்னால் சென்றாள்.

வீராவும் , தேவ்வும் பேசிக்கொண்டு இருக்க… தாமரை அதிதி பேசியதை நினைத்த்துக்கொண்டு நின்று இருக்க… அவளிடம் வந்த வம்சி “குட்டிமா அம்மா பேசினதை எல்லாம் மனசுல வெச்சிட்டு இருக்காதா… அவன் சும்மா போற போக்குல எதையாவது பேசிட்டு இருப்பாங்க ” என்று அவளை நார்மலாக்க நினைத்தான் .

அவன் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்த தாமரை  திரும்பிய “எனக்கு விஜய் மாமா கூட தனியா பேசணும். இப்பவே பேசணும் போல இருக்கு ” என்று கண்களில் கண்ணீரோடு அவனை பார்த்தாள் .

அவள் கண்ணீரை கண்டதும் வம்சியும் மனம் அவனையும் அறியாமல் பதறியது .

” ஏய்.. குட்டிமா எதுக்காக அழற… இப்போ என்ன நீ விஜய்ட்ட பேசணும் அவ்ளோதானே… வா ” என்று அவன் மாடிக்கு செல்ல.. அவன் பின்னே தாமரையும் சென்றாள்.

இவர்கள் இருவரும் ஏதோ ரகசியம் பேசுவதும் பின்பும் இருவரும் ஒன்றாக மாடிக்கு செல்வத்தையும்  சோபாவில் பேசிக்கொண்டிருப்பது போல பாவனை செய்துக்கொண்டு இருந்த வீராவும், தேவ்வும் இவர்கள் இருவரையும் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டனர் .

அதே போல் டைனிங் டேபிளில் வினோவிற்கு உணவு பரிமாறியபடி அதிதியும், யாராவும் பார்த்தவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு திரும்பிக்கொள்ள…

“ம்கூம்… இப்படி எல்லாம் திருட்டு தன்மை என் மாம்ஸையும், என் அக்காவையும் பார்க்க  கூடாது ” என்று தட்டில் இருந்த உணவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே பேசினாள் வினோ .

“ஏய் நீ சும்மா இருக்க மாட்டே… இந்த இதை சாப்பிடு ” என்று அவளுக்கு சாப்பிட உணவை எடுத்து அவள் வாயில் அடைத்தால் அதிதி.

இங்கே

தன் அறை வாசலில் நின்று இருந்த வம்சியிடம் விஜய் பேசியதை  மறைந்து இருந்து கேட்டுக்கொண்டு இருந்த தாமரை அவன் முன்பு அழுத விழிகளோடு அவன் முன்னே வர…

அவளை அங்கு எதிர்பார்த்திராத விஜய் அவசரப்பட்டு போதையில் வார்த்தையில் விட்டுவிட்டோமே என்று யோசனையோடு அவளை பார்க்க…

“நீ பேசிட்டு வா குட்டிமா நான் திங்க்ஸை எல்லாம் எடுத்து வைக்கிறேன் ” என்று சொல்லிவிட்டு விஜய்யை ஒரு பார்வை பார்த்தவன் பின்பு எதுவும் பேசாமல் அங்கிருந்து கீழே சென்றான் .

வம்சி தாமரையை சிறுவயதில் இருந்தே குட்டிமா என்று சொல்லி தான் அழைப்பான் அது விஜய்க்கும் நன்றாகவே தெரியும். அதை பற்றி அவன் பெரிதாக எடுத்துக்கொண்டது இல்லை . ஆனால் இப்பொது அதே பெயரை அளிக்கையில் விஜய்க்கு எங்கோ வலித்தது.

அவனுக்கு மனைவி ஆன பின்பு அவன் தாமரையை எப்படி அழைத்தால் எனக்கு என்ன என்று தன் மனதை கல்லாக்கியவன் .

“இப்போ எதுக்கு இங்கே வந்த … ” என்றான் கடுமையான குரலில் .

“ஏன் விஜய் மாமா அம்முகிட்டே இவ்ளோ கோபமா பேசுறீங்க… அவன் பாவம் நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் மாட்டிகிட்டு முழிக்குறான் . நீங்க வேற அவங்கிட்ட கோபமா பேசிட்டிங்க.. “என்று வம்சியை நினைத்து தாமரை கவலை பட..

“இப்போ எதுக்கு இதை எல்லாம் பேசிட்டு இருக்க… முதல்ல நீ எதுக்கு என் ரூமுக்கு வந்த . என்ன விஷயம் சீகிரியாம் சொல்லு எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு ” என்று தாமரை வம்சியை அம்மு என்று சொல்லி அழைப்பதை கேட்டு எரிச்சலுற்றவன் அவளிடம் தன் கோபத்தை காட்டினான்.

விஜய் இப்படி முகம் கொடுத்துபேசாமல் தன்னிடம் சிடுசிடுப்பதை கேட்டு தாமரைக்கு கண்ணீர் குளம் போல ஆகிவிட்டது .

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured