Home Uncategorizedஎன்னை கொண்டாட பிறந்தவனே 27

என்னை கொண்டாட பிறந்தவனே 27

by Layas Tamil Novel
267 views

EPISODE 27

 தங்கள் இரு குடும்பத்தையும் சமாளிப்பதற்காக  ஹனிமூன் கிளம்பி வந்திருந்த வம்சிக்கும் தாமரைக்கும் என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை இருவரும் ஒருவித தயக்கத்தோடு அவர்களுக்காக வீரா ஏற்பாடு செய்திருந்த  இடத்திற்கு வந்தனர்.

கிரீஸ் வந்ததும் வீராவின் நண்பர் முத்து வந்து வம்சி, தாமரையை அழைத்துக்கொண்டு அவர்களுக்காக ஏற்பாடு செய்துவைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு அழைத்து சென்று இருந்தார்.

முதலில் அந்த வீட்டில் அவர்கள் இருவரையும் ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டு மாலை போல இருவரையும் santorini பீச் ரெசார்ட்டுக்கு அழைத்து செல்வதாக கூறினார்.

“அங்கிள் இந்த இடமே நல்லா தானே இருக்கு… அதுக்காக நீங்க மறுபடியும் வேற இடத்துக்கு போலாம்னு சொல்றிங்க.. எங்களுக்கு இதுவே ஓகே தான் ” என்றாள் தாமரை .

“என்ன மா நீ புரியாத பொண்ணா இருக்கியே.. ஹனிமூன்க்காக க்ரீஸ்க்கு வருவாங்க எல்லாம் santorini போய் தங்கி சுத்தி பாத்துட்டு தான் போவாங்க. அந்த இடம் ஹனிமூன் கபில்சிக்ககாகவேன்னு இருக்கு. நீங்க ரெண்டு பேரும் அங்க போய் பாருங்க.. ” என்றார் .

“அட போங்க அங்கிள் எங்க போய் தங்கி இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் ஊருக்கு திரும்பி போற வரைக்கும் ரூமை விட்டு எங்கையும் போகப்போறது இல்ல… சுத்தி பாக்க கூட அவ்ளோவா வெளியே போக மாட்டோம்னு நினைக்குறோம் . இதுல எங்க போய் நாங்க சுத்தி பாக்குறது ” என்று வெளியே செல்ல ஆர்வமில்லாமல் தாமரை நினைத்துக்கொண்டு அவரிடம் கூற…

ஆனால் வீராவின் நண்பரோ புதிதாக திருமணம் ஆனவர்கள் வெளியே செல்வதை தவிர்த்து ரூமுக்குள்ளேயே இருக்க தான் விருப்படுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு வம்சியையும், தாமரையையும் மாறி மாறி பார்த்தார்.

அவர் பார்வையின் அர்த்தமும் , தாமரை பேசியதை வைத்து அவர் தங்களை உண்மையான ஜோடிகள் என்று நினைத்துக்கொள்வதை உணர்ந்தவன் தாமரையிடம்  வந்து “குட்டிமா அவர் இதை எல்லாம் உன்கிட்டே கேட்டாரா … பேசாம இரு கொஞ்சம் “என்றவன் ” அங்கிள் நாங்க ஈவினிங் ரெடி ஆகிடறோம் . நீங்க எத்தனை மணிக்கு வருவீங்கன்னு மட்டும் எனக்கு ஒரு மெசேஜ் பண்ணிருங்க ” என்றான் வம்சி.

“அம்மு நான் தான் வேணாம்னு சொல்றேனே … நம்ம இப்போ இங்க வந்துட்டோம் இல்ல… இனி ஊருக்கு கிளம்புற வரைக்கும் நான் எங்கையும் வர மாட்டேன். நீயும் எங்கையும் போகல.. ரென்று பேரும் இங்கையே இருப்போம் ” என்றவள் திரும்பி முத்துவிடம் பேச வர…

அவள் வாயை மூடியவன் “அங்கிள் ஈவினிங் நீங்க மெசேஜ் பண்ணுங்க நாங்க ரெடி ஆகிடறோம் ” என்று அவரை அனுப்பி வைத்தான்

“நீங்க ரூமுக்குள்ள இருப்பிங்களோ… இல்ல ஊரை சுத்தி பார்க்க போவிங்களோ எனக்கு எந்த பிரச்னையும் இல்லை ரெண்டு பேரும் பேசி முடிவெடுத்தது நீங்களே எனக்கு கால் பண்ணுங்க . அதுக்கு பிறகு நான் கிளம்பி வரேன் ” என்று சொல்லிவிட்டு முத்துவும் கிளம்பினார்.

அவர் சென்றதும் தாமரை வாயில் இருந்து கையை எடுத்தவன் “என்ன குட்டிமா நீ இப்படியா அவர்கிட்டே பேசுவ.. அவர் நம்ம ரெண்டு போரையும் பத்தி என்ன நினைப்பார் ” என்றான் வம்சி.

“நான் என்ன அம்மு சொன்னேன். நம்ம இங்க என்ன ஹனிமூன் கொண்டாடவா வந்திருக்கோம் . ஜஸ்ட் நம்ம வீட்ல இருக்கவங்களை நம்ம ஹனிமூன் வந்திருக்குறதா நம்ப வைக்க இங்க வந்திருக்கோம் அவ்ளோதேனே அதுக்கு ஏன் இங்கையும் அணுகியும் அலையனும். பேசாம ரூம்லியே நல்லா தூங்கி எழுந்து ரெஸ்ட் எடுத்தா போகுது ” என்றாள்.

“அட லூசு குட்டிமா நீ அவர்கிட்டே நம்ம ரெண்டு பெரும் ரூமை விட்டே வெளிய வர மாட்டோம்னு சொல்லிட்டே.. அவர் நம்ம ரெண்டு போரையும் தப்பா நினைச்சிட்டு போறாருனு தெரியுமா ” என்றான் .

“ஏன் தப்பா  நினைச்சாரு.. ” என்று திரும்பி அவனிடமே கேள்வி கேட்டவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்று தெரியாமல் விழித்தான் வம்சி .

“என்ன அம்மு சொல்லு அவர் அப்படி தப்பா நினைக்குற அளவுக்கு நான் என்ன சொன்னேன். நீயும் நானும் ஹனிமூன் முடியுற வரைக்கும் எங்கையும் போகல… இந்த ரூமுக்குள்ளையே தான் இருப்போம்னு சொன்னேன். இதுல என்ன இருக்கு அவர் தப்பா….. பு…ரி..ஞ்சு..க்க.. ” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே தாமரைக்கு தான் என்ன நினைத்து சொன்னோமோ அதை முத்து தவறாக புரிந்துகொண்டார் என்று உணர்ந்ததுமே,,

“அச்சச்சோ… ” என்று நாக்கை கடித்தவள் வம்சியை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் தலையை தொங்கபோட்டுக்கொள்ள…

“ம்ம்ம்… இப்போ முகத்தை தொங்கப்போட்டு என்ன பிரயோஜனம் . பேசுறதுக்கு முன்ன யோசிச்சிருக்கணும் ” என்று சொன்னவன் தாமரை தலையில் லேசாக கொட்டிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றான்.

“ஷ்… ” என்று தலையை தேய்த்துவிட்டுக்கொண்டவள் .

தான் சொன்னதை நினைத்து தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.

….

கொஞ்ச நாட்களுக்கு தேவ்வை ஆபீஸ் வேலைகள் எதுவும் செய்யாமல் வீட்டிலேயே ஓய்வெடுக்க சொல்லி விட்டார் டாக்டர் ஹாஸ்பிடல் நேராக இந்த வீட்டுக்கு வந்த பிறகு  வீராவும் , விஜயும் அவனைப் பார்க்க வந்திருந்தனர் .

ஆபீஸ் எல்லாமே வீட்டில் ஓய்வெடுப்பதில்  தேவ்விற்க்கு துளியும் விருப்பம் இல்லை இருந்தும் யாரா  அவனை  அலுவலகம் செல்லக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாள் அவனும் மனைவியும் பேச்சை மீற முடியாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து இருக்க தன் மகளோடு சேர்ந்து  லுடோ விளையாடிக் கொண்டிருந்தான்  ஹாலில் அமர்ந்து .

அவர்கள் இருவரையும் பார்த்தபடி  உள்ளே நுழைந்த  வீராவுடன் வந்த விஜய் “என்ன மாம்ஸ் ஆபீஸ்க்கு முழுக்கு போட்டுட்டு உங்க பொண்ணு கூட  ஃபன்ல இறங்கிட்டீங்க போல இருக்கு” என்று சிரித்தான் விஜய்.

” பின்ன என்ன மாப்ள பண்றது என் பொண்டாட்டி ஆபீஸ் பக்கமே இனி போகக்கூடாதுனு சொல்லிட்டா…  கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்து தானே ஆகணும். எனக்கு தான் அங்க நான் இல்லாம என்ன வேலை போகுதுன்னு தெரியாம ரொம்ப கஷ்டமா இருக்கு. அதை இவ  புரிஞ்சுக்கவே மாட்டேங்குறா .. நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன்” என்று தனக்கு சாதகமாக பேசும்படி  கேட்டான் தேவ்  .

“ஏன் நீங்க  ஆபீஸ் போகலைன்னா என்ன.. அதான் உங்க பொண்ணு இருக்காளே அவளை அனுப்பி வைக்க வேண்டியதுதானே” என்றான்  வினோவை பார்த்து விஜய் .

“என்ன மாப்ள விளையாடாதீங்க இவளே இப்பதான் படிப்பு முடிச்சுட்டு வந்து இருக்கா வந்ததும் என் பொண்ணு ஆபீஸ்க்கு அனுப்பனுமா அங்க போய் என்ன பண்ண போற இவளுக்கு என்ன தான் தெரியும். அவ ரொம்ப சின்ன பொண்ணு மாப்பிள்ளை இந்த பிசினஸ் எல்லாம் அவன் எப்படி தனியா சமாளிப்பா நான் உன் கூட இருந்தால் ஆவது அவளுக்கு சொல்லிக் கொடுத்து பிசினஸ் பத்தி தெரிஞ்சுக்க வச்சிருப்பேன். வம்சி மாப்பிள்ளை அவரை என்னோட பிசினஸா டேக் கவர் பண்ண சொல்லி இருப்பேன் அவரும் இப்போ ஹனிமூன் போயிருக்கார். ” என்றான் தேவ்.

“என்ன மாம்ஸ் அவள பிசினஸ்  சம்பந்தமான படிப்பு தானே படிக்க வச்சிருக்கீங்க சும்மா படிக்க வச்ச மட்டும் போதுமா பிராக்டிக்கலா அவ அதையெல்லாம் கத்துக்க வேண்டாமா வேற எங்கேயோ போய் கத்துக்கறதுக்கு நம்ம   ஆபீசையே அவள பாத்துக்க சொல்ல வேண்டியது தானே” என்றான் மீண்டும் விஜய் .

“ஐயோ விஜய் மாம்ஸ் என்ன இது வந்ததும் வராதுமா என்ன என் அப்பா பிசினஸில் போட்டு விடுறீங்க அதெல்லாம் என்னால முடியாது சாமி நானே இப்பதான் வந்திருக்கேன்.  அப்பா இல்லாமல் நான் தனியா போய் கம்பெனி பார்த்து என்ன பண்ண போறேன் அங்க என்ன இருக்கு என்ன பண்ணனும்னு எனக்கு எதுவுமே தெரியாதே” என்றாள்  வினோ .

” மருமகளே அத பத்தி நீ ஏன் கவலைப் படுற … உனக்கு என்ன உங்க அப்பனோட பிசினஸ் பத்தி சொல்லிக் கொடுக்க யாராவது கைடு பண்ண ஒரு ஆள் வேணும் அவ்வளவு தானே” என்றான் வீரா.

“ஆமாம் என்பது போல வினோ தயக்கமாக தலையாட்ட …

” நீயே தனியாளா நின்னு உன்னோட அப்பா கம்பெனியை ரன் பண்ற அளவுக்கு உனக்கு கைடு பண்ண என்கிட்ட ஒரு ஆள் இருக்கு” என்றான் வீரா .

“என்ன  மாமா சொல்றிங்க ! அப்படி யாரும் இருக்காங்களா என்ன ? ” என்று ஆச்சர்யமாக வினோ கேட்டாள் .

“ஆமா வினோ அது வேற யாரும் இல்ல உன்னை ட்ரெயின் பண்ண போற அந்த ஆள் உன் விஜய் மாமா தான் ” என்று வீரா சொன்னதும் அதிர்ச்சியான விஜய் .

“அப்பா ! என்ன விளையாடுறிங்களா..? நான் எப்படி வினோவுக்கு …” என்று விஜய் மறுப்பு சொல்ல வர..

“விஜய் மாமா தான் எனக்கு சொல்லிக்கொடுக்க போறாருன்னா எனக்கு டபுள் ஓகே ” என்றாள் .

“பாரு வினோ உன்கிட்டே பிசினஸ் கத்துக்க எவ்ளோ ஆர்வமா இருக்கான்னு ” என்று வீரா விஜய்யை பார்த்தான் .

“அப்பா ஏற்கனவே ஆபீஸ் வொர்க்கையே என்னால தனியா சமாளிக்க முடியல.. வம்சி இருந்திருந்தா கூட மேனேஜ் பண்ணிக்கலாம் . ஆனா எப்படி … ” என்று ஏற்கனவே தனக்கு இருக்கும் மனநிலையில் எங்காவது நிம்மதியாக சென்று இருக்கலாம் என்று நினைத்து இருந்தவனுக்கு இப்போதும் மேலும் ஒரு வேலையை தூக்கி தன் தலையில் காட்டுகிறார்களே என்று இருந்தது அவனுக்கு .

“வம்சி இருந்திருந்தா அவனையே நான் வினோவுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி இருப்பேன் . இல்ல… தேவ் ஆஃபீஸை அவனையே பார்க்க சொல்லிருப்பேனே … ” என்றார் வீரா.

“வீரா விடு விஜய்யை கட்டாயப்படுத்த வேண்டாம். அவன் ஒருத்தனே எல்லா வேலையையும்  இழுத்துப் போட்டு பாத்துக்க முடியாதில்ல… ” என்று தேவ் விஜய்க்கு ஆதரவாக பேச…

“நீ பேசாம இரு டா வினோ சீக்கிரம் கத்துக்கற ஆள் தான். விஜய்க்கு அவ்ளோ டென்ஷன் எல்லாம் கொடுக்க மாட்டா.. ” என்ற வீரா .

“விஜய் நீ இப்போ வினோவை கூட்டிட்டு நேரா தேவ் ஆபீஸ் போய்ட்டு அங்க என்ன வேலை இருக்குன்னு பார்த்து அவளுக்கு பொறுமையா சொல்லிக்கொடு சரியா” என்றான்.

விஜய்க்கும் இதற்க்கு மேலும் மறுப்பு சொல்ல மனமில்லாமல் சரி என்று தலையை ஆட்ட…

“ஹே!! சூப்பர்!.. அப்போ நான் ரெடி போலாம் விஜய் மாமா… ” என்று ஓடி வந்து அவன் கைக்குள் தன் கையை கோர்த்துக்கொண்டாள் ,

அவளை திரும்பி விஜய் முறைக்க… தானாக தன் கையை விலக்கிக்கொண்டு அவனை விட்டு சற்று தள்ளி நின்றவள் “ஓகே நான் ஆபீஸ் போயிட்டு வரேன் ” என்று மூவரிடமும் சொல்லிவிட்டு விஜய்யுடன் ஆபீஸ் கிளம்பினாள் வினோ

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured