ENNAI 29
“விஜய் நடந்த கல்யாணத்தை மாத்த முடியாது டா… அந்த பொண்ணு இப்போ இன்னொருத்தரோட மனைவி அவளையே இன்னும் நீ நினைச்சிட்டு இருக்குறதுல என்ன நியாயம் இருக்கு… நீ பேசாம அவளை மறக்க முயற்சி பண்ணு .உன் கவனத்தை வேற பக்கம் திசை திருப்பு. ” என்றாள்.
“நானும் அவளை மறந்துட்டு இருக்கணும்னு தான் நினைக்குறேன் ம்மா,,, ஆனா ஏதாவது ஒரு விஷயம் எனக்கு அவளை நியாபகப்படுத்திட்டே இருக்கு “என்றான் கண்களின் ஓரம் துளிர்த்த நீரை துடைத்துக்கொண்டே…
“உடனே மறக்க நினைக்குற விஷயமா இது விஜய். அவ உன்னோட காதலிங்குறதை மறந்திரு.. ஆனா அவ கூட நீ பேசினது , பழகினது இதை எதையும் மறக்க வேண்டிய அவசியம் இல்லை. உன்னோட காதலுக்கு நீ கொடுக்கற மரியாதையே அந்த நினைவுகளை பத்திரமா உன் மனசுல பொக்கிஷமா வெச்சு பாதுகாத்துக்குறது தான். நீயும் அவளும் பிரிஞ்சுபோய்ட்டா உடனே நீங்க பழகினது எல்லாம் பொய்யுன்னு ஆகிடுமா என்ன… அந்த பொண்ணோட காதலுக்கு நீ செய்ய வேண்டிய மரியாதை அவ உனக்கு கொடுத்த நினைவுகளை சந்தோசமா உன் மனசுல பாத்து காத்து வெக்குறது தான். அவளையோ .. அவளோட நினைவுகளையோ… நீ தூக்கி எரியுறதுல இல்ல டா ” என்றாள்.
அதிதி சொன்னதை கேட்டு அமைதியாக அமர்ந்து இருந்தான் . ஏதோ மனதில் இருந்த பாரம் அவனையும் அறியாமல் இறங்கியது போல இருந்தது. என்னவோ மனம் முழுவதும் ஒரு வித உணர்வு தோண்டியது. அது கவலையா.. அழுகையா… நிம்மதியா என்று அவனுக்கு தெரியவில்லை.
சேரில் இருந்து எழுந்தவன் “அம்மா நான் கிளம்புறேன் . நீ சொன்னது என் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு.. என் மனசை நான் சரி பண்ணிக்கணும். எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ” என்றவன் தன் மொபைலை எடுத்துக்கொண்டு கிளம்பி இருந்தான்.
“டேய்.. டேய்ய்.. ஒரு வாய் சாப்பிட்டு போடா… ” என்று உணவை கையில் எடுத்துக்கொண்டே அவன் பின்னால் வாசல் நோக்கி ஓடினாள் அதிதி . வாசல் வரை சென்றவன் நின்று அதிதியை திரும்பி பார்த்தவன் அவள் கையில் இருந்த உணவை ஊட்டிவிட சொல்லி வாங்கிகொண்டவன் . “அம்மா மனசு நிம்மதியோடு வந்து உன் கையாள சாப்பிடறேன். இப்போதைக்கு இது போதும் ” என்று கிளம்பி இருந்தான்.
வாசலில் நின்று செல்லும் மகனையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் நின்று இருந்த அதிதி திரும்பி உள்ளே செல்ல போக… வாசலில் கார் சத்தம் கேட்டது . விஜய் தான் திரும்ப வந்துவிட்டானா என்று திரும்பி பார்த்தவளுக்கு வீரா காரில் இருந்து இறங்கி வருவதை பார்த்ததும் சற்று ஏமாற்றமாக தான் இருந்தது.
ஒரு கையில் தட்டும் மரு கையில் உணவோடும் நின்று இருந்த அதிதியை பார்த்ததும் ” என்ன டி என் செல்ல குட்டி … நான் பசியோட வருவேன்னு சாப்பாடோட காத்துட்டு இருக்கியா?”என்றவரே அதிதியிடம் வந்தவன் அவள் கையில் இருந்த உணவை ஊட்டி விட சொல்லி வாயை திறந்தான்.
அவனை முறைத்த அதிதி “பிள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாடுவானாம்.. அந்த கதையா இருக்கு.. நீங்க செய்றது . இந்தாங்க பசிச்சா எடுத்து சாப்பிடுங்க…” என்று அவன் கையில் தட்டை திணித்துவிட்டு உள்ளே சென்றார்.
“ஏன் டி மருமகளே…என் மகன் எவ்ளோ ஆசையா ஊட்டி விட சொல்றானே… நீ என்னவோ புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி குறுக்கிட்டு போற.. அதான் புள்ள ஆசையா கேக்குறான் இல்ல எடுத்து ஊட்டி விட வேண்டியது தானே… ” என்றவாறு வீராவின் அம்மா மீனு வர.. அவரோடு மெதுவாக விக்ரமும் நடந்து வந்து கொண்டு இருந்தான்.
மீனுவின் குரல் கேட்டதும் வாசலை பார்த்த அதிதி வீராவை முறைத்தவள் “அத்தையும் வந்திருக்காங்கனு சொல்ல மாட்டிங்களா நீங்க.. ” என்று அவனை முறைத்தவள் “அத்தை நீங்க வந்ததை நான் கவனிக்கவே இல்லையே.. ” என்று வாசலுக்கு சென்றவள் விக்ரமை கைத்தாங்கலாக பிடித்து மெல்ல உள்ளே அழைத்து வந்தாள்.
“உனக்கு நான் எல்லாம் கண்ணு தெறிவேனா .. என் மகனையே நீ கண்டுகிறது இல்ல ரெண்டு புள்ள பெத்ததுல இருந்து எந்நேரமும் என் பேரன்களையே கவனிச்சிட்டு இருக்க.. என் மகனையும் அப்போ அப்போ கவனிக்க வேண்டியது தானே.. ” என்றார் மீனு.
“உங்க மகனை தானே கவனிக்குறேன். என்ன மகன் விஜய்க்கும் சீக்கிரதுலையே ஒரு கல்யாணத்தை பண்ணிவெச்சிட்டு அப்பறோம் உங்க மகனை மட்டும் கவனிச்சுக்கிறேன் . நீங்க இப்போ பேசாம உள்ள வாங்க ” என்றபடி உள்ளே வந்தவள் இருவரையும் சோபாவில் அமர சொல்லிவிட்டு உள்ளே சென்ற இருவருக்கும் குடிக்க சூடாக காபி போட்டு கொண்டு வந்தவள்.
“வீரா… நம்ம விஜய்க்கு வினோவை கல்யாணம் பேசி முடிச்சுடலாமா?” என்றாள்.
அதை கேட்டதும் வீரா , மீனு , விக்ரம் மூவரும் அதிதியை பார்க்க…
“இப்போதான் வம்சிக்கு கல்யாணம் பண்ணி இருக்கு.. இன்னும் ஓரு மாசம் கூட முடியல… அதுக்குள்ள எப்படி விஜய்க்கு ” என்ற வீரா…
“விஜய்கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்பறோம் நம்ம முடிவெடுக்கலாமே… ” என்றான் .
அதை கேட்டபடி விக்ரமும், மீனுவும் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு இருக்க…
“என்ன அப்படி பாக்குறீங்க… உங்களுக்கு உடம்பு முடியாலையின்னு காரணம் காட்டி வம்சிக்கும், தாமரைக்கும் கல்யாணம் செய்து வெச்சீங்கள்ல.. அதே மாதிரி ஒரு காரணத்தை சொல்லி விஜய்க்கும் , வம்சிக்கும் கல்யாணம் செய்து வெச்சிடலாம் ” என்று அவளே அவர்களுக்கு ஐடியா எடுத்து கொடுத்தாள்.
“என்ன ஆச்சு அதிதி உனக்கு ஏன் இப்போ விஜய் கல்யாணத்துக்கு இவ்ளோ அவசர படுற.. கொஞ்ச நாள் போகட்டுமே… இப்போ என்ன அவன் கல்யாணத்துக்கு அவசரம்” என்றான் வீரா.
“இங்க பாருங்க வம்சிக்கும், விஜய்க்கும் ஒரே வயசு தான். வம்சியை விட 5 நிமிஷம் முன்னாடி பிறந்தவன் விஜய் . நியாயப்படி அவனுக்கு தான் முதல்ல கல்யாணம் செய்து வெச்சிருக்கணும். நீங்க என்ன செய்விங்களோ.. ஏது செய்விங்களோ தெரியாது . விஜய்க்கும், வினோவுக்கும் சீக்கிரமே கல்யாணம் செய்றதுக்கான ஏற்ப்பட்ட பண்ணுங்க. என் மகனை கல்யாணத்துக்கு சமமதிக்க வெக்க வேண்டியது என்னோட பொறுப்பு ” என்று ஒரே முடிவாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட…
வீரா என்ன செய்வது என்று தெரியாமல் தன் பெற்றோரை பார்க்க… “உன் பொண்டாட்டி முடிவெடுத்துட்டா… இனி என்ன சொன்னாலும் யார் சொன்னாலும் அவ மனசை மாத்திக்க மாட்டா.. நீ இது விஷயமா விஜய்கிட்ட பேசிட்டு என்கிட்டே சொல்லு . நானும் அவன்கிட்டே பேசுறேன் ” என்ற விக்ரம் மீனுவை அழைத்துக்கொண்டு தங்கள் ரூமிற்கு சென்றனர் .
விஜய்க்கும் எப்படியும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும் என்று யோசித்த வீரா வம்சியும், தாமரையும் ஹனிமூனில் இருந்து திரும்பி வந்ததும் அனைவரையும் வைத்து விஜய்யிடம் இதுபற்றி பேசிவிடலாம் என்று நினைத்துக்கொண்டே.. கையில் இருந்த உணவை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.
இங்கே முத்துவின் முன்பு கொஞ்சம் கூச்சத்தோடு நின்று இருந்தாள் தாமரை காலை அவரிடம் தான் பேசியதை நினைத்து தான் இந்த கூச்சம்.
ஆனால் முத்துவோ தாமரை பேசியதை பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை . அவர்கள் இருவரையும் SANTORINI அழைத்து செல்ல வந்திருந்தார்.
“எல்லா திங்க்ஸும் எடுத்து வெச்சுட்டீங்க தானே… இங்க இருந்து SANTORINI போக எப்படியும் 2 மணி நேரம் ஆகிடும் ” என்றார்.
“எடுத்து வெச்சாச்சு அங்கிள் கிளம்பலாம் ” என்று வம்சி முன்னே செல்ல… அவன் பின்னாலேயே ஒட்டிக்கொண்டு தாமரை சென்றாள்.
“இப்போ இப்படி வந்து என்ன பிரயோஜனம் பேசுறதுக்கு முன்ன யோசிச்சிருக்கணும் ” என்றான்.
“அம்மு… நீ பேசாம போ… அவர் ஏதும் கேட்டுட்டு போறாரு… ” என்று அவன் சட்டையை பிடித்துக்கொண்டே பின்னால் சென்றாள் தாமரை .
அதை பார்த்து சிரித்த முத்து “அம்மாடி தாமரை… இந்த அங்கிள் உன்னை எதுவும் கேட்க மாட்டேன். நீ பிரியா உன் புருஷன் கூட பேசிட்டு என்ஜாய் பண்ணிட்டு வா டா… “என்றார்.
வம்சியை தன் கணவன் என்று முத்து சொன்னதும் சட்டென்று வம்சியின் சட்டையை விட்டவள் அவனைவிட்டு விலகி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
முத்து பேசியதை கேட்டு வெட்கபட்டுக்கொண்டு தாமரை வேகமாக செல்கிறாள் என்று அவர் நினைத்திருக்க…
ஆனால் தாமரை ஏன் விலகி செல்கிறாள் என்று நினைத்த வம்சிக்கு ஏனோ வருத்தமாக இருந்தது.
அவனும் காரில் ஏறிக்கொள்ள… அவர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்த விமான நிலையம் சென்றவர் . வம்சி , தாமரையை மட்டும் ஹெலிகாப்டரில் ஏற்றிவிட்டு இருவரையும் SANTORINI க்கு அனுப்பி வைத்தார்.
“அங்கிள் நீங்க வரலையா.. ” என்றான் வம்சி .
“இல்ல ப்பா… நீங்க ரெண்டு பேரும் புதுசா கல்யாணம் ஆனவங்க உங்களுக்கு இடைஞ்சலா இருக்கும் நான் வந்தா . நீங்க போயிட்டு வாங்க… நான் உங்களை பிக்அப் பண்ண ஊரை சுத்தி காட்ட அங்க ஒரு GUIDE அரேஞ் பண்ணிருக்கேன் ” என்றவர் தாமரையை பார்த்து சிரித்துக்கொண்டே…
அங்க சுத்தி பார்க்க அழகழகான இடங்கள் நிறைய இருக்கு… உன் புருஷனை கூட்டிட்டு ஊரையும் கொஞ்சம் சுத்தி பாரு மா… சும்மா ரூமுக்குல இருந்தாலும் போர் அடிக்கும் ” என்றார் .
அவரை முறைத்தவள் “எங்களுக்கு என்ன பண்ணனும்னு தெரியும் நீங்க ஏதும் சொல்ல வேணாம் “என்றாள் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு.
அவள் முறைபப்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை முத்து. இருவரையும் அனுப்பிவிட்டு அவர் கிளம்பினார்.
“என்ன குட்டிமா இது இப்படியா அவர்கிட்ட பேசுவ.. அவர் நமக்காக தானே இவ்ளோ ஏற்படும் பண்ணிருக்கார் ” என்றான் வம்சி.
“அந்த ஆளு பேசின பேச்சுக்கு நான் அவரை திட்டமா விட்டேனேன்னு சந்தோச படு அம்மு… சும்மா என் கோபத்தை கிளறி வேடிக்கை பாக்குறார். ஊர்க்கு போனதும் மாமாகிட்டே சொல்லி இந்த ஆளோட பிரெண்ட்ஷிப்பை கட் பண்ண சொல்லணும் ” என்றாள்.
அவள் பேசியதை கேட்டு சிரித்தபடி தாமரையின் சீட் பெல்ட் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்தவன் அவள் காதில் மாட்டி இருந்த இயர் பிளக் சரியாக இருக்கிறதா என்று பார்த்தவன் தன்னுடைய சீட் பெல்ட்டையும் சரி பார்த்தான்.
ஹெலிகாப்டர் அப்போது டேக்ஆப் ஆக… முதல் முறை தாமரைக்கு ஹெலிகாப்டரில் பயணம் என்பதால் அதன் சத்தம் அவளுக்கு பயத்தை கொடுக்க… அருகில் இருந்த வம்சியின் தோளில் தன் முகத்தை புதைத்தவள் பயத்தில் கண்களை இருக்க மூடிக்கொண்டு அவன் கையை இருக்க கட்டிக்கொண்டாள்.
அவளின் இந்த திடீர் நெருக்கமும் , அவன் கையை அவள் மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்து இருப்பதையும் வம்சி எதிர்பார்க்கவில்லை. அவள் பயத்தில் தான் தன் கையை கட்டிக்கொண்டு இருக்கிறாள் என்று வம்சிக்கு புரிந்தாலுமே… தாமரையின் நெருக்கம் அவன் மனதிற்குள் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது,
அவனையும் அறியாமல் அவன் கை தன்னை பிடித்து இருந்த தாமரையின் கையை ஆதரவாக தட்டி கொடுக்க.. அந்த கையையும் சேர்த்து இறுக்கி அணைத்துக்கொண்டவள் “அம்மு எனக்கு ரொம்ப பயமா இருக்கு… ‘ என்றாள்.
“ஏய் குட்டிமா இங்க பாரு ” என்று அவளை தன்னிடம் இருந்து விளங்கியவன் “நான் தான் உன்கூடவே இருக்கேனே… எதுக்கு பயப்படற… ரிலாக்ஸா இரு… இந்த இடம் எல்லாம் எப்படி இருக்குன்னு கொஞ்சம் வெளியே திரும்பி பார்” என்று அவள் கவனத்தை திசை திருப்ப முயற்சித்தான்.
அவன் கையை இன்னும் விடாமல் இறுக்கி காட்டிக்கொண்டே வெளியே மெல்ல தலையை திருப்பி பார்த்தாள்.
கிரீஸ் நகரின் பரபரப்பான மாலை பொழுது மிகவும் அழகாக காட்சி அளிக்க… அதை ரசித்தபடி வம்சியிடம் அந்த இடங்களை காட்டி அவனிடம் பேசிக்கொண்டு வந்தாள்.
அவள் கவனத்தை வேறுபக்கம் திருப்பியவனாள் தன் கவனத்தை திசைதிருப்பவோ… தன் மனதில் எழுந்த உணர்வுகளை கட்டுப்படுத்தவோ முடியவில்லை. அதற்கு வழி தெரியாமல் திணறிக்கொண்டு இருந்தான் வம்சி .
அந்த நேரம் விஜய்யிடம் இருந்து அவன் போனிற்கு ஒரு மெஸேஜ் வர… அதை கவனித்ததும் தன் மொத்த எண்ணமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது .
தாமரையும், தானும் இன்னும் 4, 5 மாதத்தில் விவாகரத்து வாங்கி விடுவார்கள் . அதற்கு பிறகு அவள் விஜய்யை திருமணம் செய்ய போகிறாள். இதற்கு இடையில் தனக்கு என்ன தேவையில்லாத எண்ணங்கள் தோன்றுகிறது என்று தன்னை தானே கேள்விகேட்டுக்கொண்டவன் . அவள் கையை மெல்ல தன்னிடம் இருந்து பிரித்துவிட்டு தாமரையை விட்டு தள்ளி அமர்ந்தான் . அவன் மனதில் எழுந்த எண்ணங்களையும் ஒதுக்கி வைத்தான்.
