EPISODE 6
விஜய் காயம் அடைந்ததை பார்த்து பதட்டப்பட்ட தாமரை அவன் காயம் பற்றி விசாரித்துக்கொண்டு இருந்தவள் விஜய்யுடன் காலையில் பேசியதை சொல்லி விபரம் கேட்டுக்கொண்டு இருக்க… அதை கவனித்த வீரா “என்ன தாமரை நீ விஜய்க்கு காலையில் போன் பண்ணி பேசுனியா ? எப்போ? எதுக்கு பேசினே “என்றான்.
வீரா கேட்டதும் தான் அவரசத்தில் தான் பேசிவிட்டோம் என்பதை உணர்ந்த தாமரை பதில் சொல்ல தெரியாமல் விழித்தாள்.
“அப்பா காலையில் நான் தான் தாமரைக்கு கால் செய்து பேசினேன். நான் இந்தியா கிளம்பின விஷயத்தை அம்மாகிட்டே சொல்லலாம்னு அவங்களுக்கு கால் பண்ணினேன் கால் போகல . எப்படியும் தாமரை அம்மா அத்தை எல்லாரும் ஒண்ணா தான் இருப்பாங்கன்னு தாமரைக்கு கால் பண்ணினேன் . அதை தான் என்கிட்டே கேக்குறா “என்று தாமரையை தன் தந்தையின் கேள்வியில் இருந்து காப்பாற்றினான்.
“சரி சரி இப்போ என்ன பெரிய மாப்பிள்ளை என் பொண்ணுகிட்டே போன் பண்ணி பேசுனதுல உனக்கு என்ன வீரா இப்போ. பாரு ஜோசியர் வந்து எவ்ளோ நேரம் ஆச்சு வா… முதல்ல வம்சி மாப்பிளையதும், தாமரையுடைய ஜாதகத்தையும் கொடுத்து பார்க்க சொல்லலாம் “என்று தேவ் அழைக்க …
அனைவரும் ஹாலிற்கு வர… தன் ரூமுக்கு செல்ல இருந்த விஜய்யை இழுத்து தன் அருகில் அமர்த்திக்கொண்ட தேவ் “அட இரு விஜய் ஜோசியர் வந்திருக்காரே அவர் என்ன சொல்லுறாருனு கேப்போம் ” என்று விஜய்யை விடாமல் பிடித்துக்கொண்டான்.
அத்தி கொண்டு வந்து வம்சி, தாமரை ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுத்து இருவருக்கும் இன்று காலை திடீர் திருமணம் நடந்த விஷயத்தை சொல்லி அவர்களின் ஜாதகம் எப்படி இருக்கிறது என்று கேட்டனர்.
இருவரின் ஜாதகத்தையும் வாங்கி கணிக்க துவங்கினார் ஜோசியர் . சோபாவின் பின்னால் நின்று கொண்டு தாமரை தனக்கு எதிர் சோபாவில் அமர்ந்து இருந்த விஜய்யையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அதை விஜய்யும் கவனித்து கொண்டு இருந்தான் . தாமரையின் அழுது சிவந்திருந்த கண்களும் , வீங்கிய இருந்த முகத்தை பார்க்கையில் தன்னை போல தான் அவளும் இந்த திருமணத்தால் அதிகம் காயம் ஆகி இருக்கிறாள் என்று அவனால் உணர முடிந்தது .
அவளை அதற்கு மேலும் பார்க்க கஷடப்பட்ட விஜய் தன் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொள்ள…
தான் செய்து கொண்ட திருமணத்தால் விஜய் தன் மீது கோபமாக இருக்கிறான் . அதனால் தான் அவன் தன்னை பார்ப்பதை தவிர்க்கிறேன் என்று தாமரை நினைத்தவள் இதயத்தில் வலி மேலும் அதிகம் ஆனது .
வம்சி ஒரு பக்கம் விஜய் அருகில் அமர்ந்து இருந்தவன் தாமரையின் அலுத்து வீங்கிய கண்களை பார்த்து வருத்தப்பட்டான். “எல்லாம் இந்த தாத்தாவினால் வந்தது” . இப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டு ஹாஸ்பிடலுக்கு போய் படுத்துக்கொண்டார் . இங்கே சம்மந்தப்பட்டவர் மனநிலையை எப்படி பதித்திருக்கும் என்று அவர் துளியும் யோசிக்காமல் போனதை நினைத்து நொந்து கொண்டான் .
இவர்கள் இருவரின் ஜாதகத்தை கணித்த ஜோசியர் “பயனுக்கும் , பொண்ணுக்கும் இந்த சூழ்நிலை இல்லையினாலும் ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கல்யாணம் ஆகுறதுக்கான அமைப்பு இவங்க ரெண்டு பேர் ஜாதகத்துலயும் இருக்கு. அவங்க ரத்த சம்மந்தம் உள்ளவங்களால் தான் இந்த திருமணம் அவசர கதியில் நடந்திருக்கு “என்றார்.
இது திடீர் திருமணம் என்று அவரிடம் சொல்லி இருந்தாலும் யாரால் நடந்தது என்று விபரம் சொல்லாத போதிலும் வம்சி, தாமரையின் கொள்ளு தாத்தாவினால் தான் இந்த திருமணம் நடந்திருக்கிறது என்று அனைவரும் அறிந்ததே . அதை ஜோசியர் சொன்னதும் அவர் கணிப்பு எவ்வளவு துல்லியமாகி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டனர் .
“அதே போல.. பையனுக்கும் பொண்ணுக்கும் ஜாதக பொருத்தம் அமோகமா இருக்கு. ஜாதகப்படி பார்த்தா பொண்ணுக்கு ஏத்த மாப்பிள்ளையை தான் அந்த ஆண்டவன் சேர்த்து வெச்சிருக்கான்னே சொல்லலாம்.. ஆனா….” என்று அவர் இழுக்க…
வம்சி, தாமரை இருவரின் ஜாதக பொருத்தம் நன்றாக உளள்து கேட்டு அதிதி, யாரா இருவருக்கும் நிம்மதியாக இருந்தது . எங்கே இருவருக்குக்ம் பொருத்தம் சரியாக அமையாமல் போய்விடுமோ என்று உள்ளுக்குள் இருவருமே பயந்து இருக்க… ஜோசியர் சொன்னது கேட்டு சற்று நிம்மதி அடைந்தவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து திருப்தி பட்டுக்கொண்டனர் .
ஆனால் ஜோசியர் கடைசியில் எதோ சொல்ல தயங்குவதை பார்த்து சற்று யோசனையோடு அவரை பார்த்தனர்.
“என்ன ஜோசியர்ரே… ஆனான்னு ஏதோ சொல்லி நிப்பாட்டிடீங்க… என்ன விஷயம் சொல்லுங்க, எதையும் மரியாக்காதீங்க எதுவா இருந்தாலும் ஓப்பனா சொல்லுங்க இது எங்க பிள்ளைகளோடு வாழ்க்கை விஷயம் இதுல எந்த தப்பும் நடந்துறக்கூடாது “என்று வீரா கூறினான்.
“நீங்க பயப்படுற மாதிரி பெரிய விஷயம் ஒன்னும் இல்லை . நம்ம வம்சிக்கு இப்போ கொஞ்சம் நேரம் சரி இல்லை . அவர் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருக்கு” என்றார்.
அவர் சொன்னது கேட்டதும் பதறிய அதிதி “என்ன ஜோசியரே சொல்றிங்க.. என் புள்ளைக்கு நேரம் சரி இல்லையா . என்ன மாங்கல்ய தோஷம்னு சொல்றிங்க.. அவனுக்கு இந்த கல்யாணத்துனால எதுவும் பிரச்சனை வருமா “என்று தாய்க்கே உண்டான அக்கறையோடு கேட்டாள் .
“அம்மா.. அம்மா… அதெல்லாம் எதுவும் இல்லை . நீங்க கொஞ்சம் பொறுமையா நன் சொல்றதை கேளுங்க.. நம்ம வம்சி தம்பிக்கு ஜாதகத்துல மாங்கல்ய தோஷம் இருக்கு. இந்தமாதிரி பலன் இருக்கவங்க கோவில்ல முதல்ல வாழை மரத்துக்கு தாளில் கட்டி தோஷம் கழிச்சிட்டு அதுக்கு பிறகு பொண்ணு கழுத்துல தாலி கட்டுவாங்க . ஆனா தம்பி வாழைமரத்துக்கு தாலி காட்டாமயே பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டாரு “என்றார்.
“ஜோசியரே இப்போ என்ன செய்றது . இதனால என் பொண்ணுக்கு எதுவும் பாதிப்பு வருமா “என்று யாரா கேட்டாள்.
“அப்படி எல்லாம் எதுவம் இல்லை ம்மா… உங்க போனோட ஜாதகத்துல மாங்கல்ய பலன் நல்லா ஸ்ட்ரோங்கா இருக்கு. மாப்பிள்ளைக்கு எந்த ஆபத்து வந்தாலும் உங்க பொண்ணோட மாங்கல்ய பலத்தால அவரை அந்த ஆபத்துல இருந்து காப்பாத்திடும் நீங்க கவலை படாதீங்க.. “என்றவர்.
“மாப்பிளை வாழை மரத்துக்கு தாலி கட்டுறதுக்கு முன்னே பொண்ணு கழுத்துல தாலியை கட்டிட்டாரு. அதனால அவர் பொண்ணு கழுத்துல கடின தாலியை கழட்டி எந்த கோவில்ல தாலி கட்டினாரோ அதே கோவில் உண்டியல்ல போட்டுட்டு . அதே கோவில்ல அய்யரை வெச்சு முறையா ஹோமம் வளர்த்தி மறுபடியும் பொண்ணு கழுத்துல தாலியை கட்ட சொல்லிட்டா எல்லாமே சரியாகிடும் “என்றார்.
“அப்படியா பரவால்ல ஜோசியரே நான் கொஞ்சம் பயந்துட்டேன். நல்ல வேலை நீங்களே பரிகாரம் என்னனு சொல்லிட்டீங்க.. நீங்களே அவங்க கல்யாணத்துக்கும் அடுத்து நடக்க இருக்க சடங்குக்கு ஒரு நல்ல நாள் குறிச்சு கொடுத்திருங்க..”என்றாள் அதிதி.
ஜோசியர் சொன்னது எல்லாம் கேட்டு தாமரைக்கு இந்த கல்யாணமே செல்லாது.. ஆகாது என்று ஏதாவது சொல்லி தன்னை இந்த இக்கட்டான சூநிலையில் இருந்து காப்பாற்றுவார் என்று எதிர்ப்பார்த்தவளுக்கு அவர் சொன்ன பரிகாரம் கேட்டு தன் நிலையை நினைத்து தானே நொந்து கொண்டாள்.
அதிதி சொன்னது போல ஜாதகம் , பஞ்சாங்கம் பார்த்தது வம்சிக்கும் , ஹடாமரைக்கும் மறுபடியும் திருமணம் செய்ய ஒரு நல்ல நாள் பார்த்து குறித்தவர் அதை வீரா கையில் கொடுத்து “நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை , முகுர்த்த நாள் தான் அன்னிக்கே நான் சொன்ன பரிகாரத்தையும் , கூடவே கல்யாணத்தியும் செய்துடாலம். அதே போல இவங்க ரெண்டு பேருக்கும் சாந்தி முகுர்த்தத்திற்கும் வெள்ளிக்கிழமை நைட் 10 மணிக்கு மேல நல்ல நேரம் குறிச்சிருக்கேன் “என்றார்.
அவர் வம்சிக்கும் , தாமரைக்கும் சாந்தி முகுர்த்தம் என்று சொன்னதும் தாமரையின் பார்வையும், விஜய்யின் பார்வையும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டது. அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் தாமரை அதிதியின் அறைக்கு ஓடிவிட… “என் பொண்ணுக்கு சாந்தி முகுர்த்தம்னு சொன்னதும் வெட்கம் வந்திருச்சு “என்று தேவ் கூறினான்.
அதை கேட்டு மற்றவர்கள் சிரிக்க… ஆனால் தாமரையின் மனநிலையை விஜய் அறிந்திருக்க… அவனை போல் இல்லை என்றாலும் ஊர் அளவிற்கு தாமரையின் மனதை வம்சியால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த திடீர் திருமணம் அவளை கண்டிப்பாக பாதித்திருக்கும் வேளையில் அதற்குள்ளாக மறுபடியும் நாளை மறுநாள் திருமணம் அன்று இரவே சாந்தி முகுர்த்தம் என்றாள் அவள் என்ன செய்வாள்.
அதற்கு அவள் மனம் பக்குவப்பட நேரம் கொடுக்காமல் பெரியவர்கள் அவர்கள் இஷடத்துக்கு எல்லாம் பேசி முடிப்பது வம்சிக்கும் வருத்தமாக தான் இருந்தது இருந்தும் அவனால் எதுவும் செய்யமுடியாமல் இருந்தான்.
தாமரை அழுதுகொண்டே உள்ளே சென்றதை பார்த்த விஜய்க்கும் அங்கு இருக்க முடியவில்லை .வேகமாக எழுந்தவன் யாரிடமும் அதுவும் பேசிக்கொள்ளாமல் தன்னறைக்கு சென்றுவிட்டான்.
இன்னும் இரண்டு நாளில் வீட்டில் நடக்க இருக்கும் விசேஷத்தை எப்படி நடத்த வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்ததில் விஜய்யை யாரும் கவனிக்கவில்லை .
இங்கே அர்ஷ் இனியாவை அழைத்துக்கொண்டு விஜய்யின் கெஸ்ட் ஹௌஸிற்கு வந்தவன் அவளுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்துவிட்டு அவளிடம் புத்திகா வாங்க பட்ட செல்போனும் , சிம்கார்டையும் போட்டு activate செய்தவன் .
“இனியா இது உனக்கு தான் . இதுல என்னோட நும்பரும், விஜயோட நம்பரும் சாவே செய்து வெச்சிருக்கேன். உனக்கு எதுவும் வேணும்னா நீ எங்க ரெண்டு பேர்ல யாருக்கு வேணாலும் கால் பண்ணு “என்றவன் அவளிடம் அந்த போனை நீட்டினான்.
அர்ஷ் கையில் இருந்த மொபைலை தயக்கத்தோடு வாங்கிய இனியா அதை முன்னும் பின்னும் திருப்பி பார்த்தவள் “அண்ணா இந்த போன் ரொம்ப கோஸ்டலியா இருக்கும் போல.. எனக்கு இது வேணாம் . சாதாரண பட்டன் போன் இருந்தா வாங்கி கொடுங்க போதும் “என்று அநத போனை அவனிடமே நீட்டினாள்.
“என்ன இனியா இது இந்த காலத்து பொண்ணுங்க இந்தமாதிரி போன் யூஸ் பண்ண தான் விரும்புவாங்க . நீ என்னடான்னா இது வேணாம்னு பட்டன் போன் வாங்கி கொடுங்கன்னு கேக்குற..”என்றான் ஆச்சர்யமாக.
“அண்ணா.. இது .. என் தகுதிக்கு அதிகம் . தவிர நான் இங்கே என்ன நிரந்தரமா தங்கவா போறேன். .எனக்குன்னு ஒரு பாதுகாப்பான இடத்தை விஜய் சார் ஏற்பாடு பண்ணித்தரதா சொல்லி இருக்காரு . அபப்டி ஒரு இடம் கிடைச்சதும் உங்க யாருக்கும் தொந்தரவு கொடுக்காம நான் போய்டப்போறேன் அதான் இவ்ளோ காஸ்டலி போன் வேணாம் சாதாரண போனே போதும்னு சொன்னேன் “என்றாள் .
“இந்த இடத்தை விட்டு நீ வெளியே போனா பாதுகாப்பா இருப்பியான்னு சொல்ல முடியாது இனியா. என்னை பொறுத்தவரை நீ விஜய்யோட இந்த கெஸ்ட் ஹவுஸ் தான் உனக்கு ஷேப் . நீ இங்கையே இரு கொஞ்ச நாள் விஜய்யே உனக்கு ஏதாவது வழி பண்ணுவான் “என்றான் .
“சரிண்ணா “என்ற இனியா “அண்ணா எனக்கு ரொம்ப பசிக்குது “என்று தன் வயிற்றை தடவி காட்டினாள் .
“ஐயோ இரு இனியா நான் மறந்தே போய்ட்டேன் “என்றவன் ஸ்விக்கியில் அவள் என்ன சாப்பிடுவாள் என்று கேட்டு ஆர்டர் போட்டு வாங்கி கொடுத்து அவளை சாப்பிட வைத்தவன் . “சரி இனியா நான் கிளம்புறேன் நீ எதுனா கால் பண்ணு . நாளைக்கு காலையில் வீட்டு வேலையாளுங்க எல்லாரும் வந்துருவாங்க உனக்கு என்ன வேணுமோ அதை சொன்ன செஞ்சு கொடுப்பாங்க “என்றான்.
“ஐயோ எனக்கு நீங்க இவ்ளோ செய்து கொடுத்ததே போதும் . நானே எனக்கு வேணுங்குறதை செய்துக்குவேன் . எதுக்கு வேலைகாரங்க எல்லாம் “என்றாள்,
அவள் பேசியத்தை கேட்டு சிரித்த அர்ஷ் “ஹலோ மேடம் இங்கே அவன் எல்லாம் பல வருசமா வேளைக்கு இருக்காங்க . விஜய் ரிலாக்ஸ் பண்ண அடிக்கடி இங்கே வந்து தங்குவான் . அவனுக்காக இங்கே வேலை செய்ய ஆளுங்க இருக்காங்க . நீ பேசுறது எல்லாம் பார்த்தா என்னவோ உனக்காக தான் வேலையாளுங்களை வர சொன்ன மாதிரி பேசுற… இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல “என்றான்.
” விஜய் சாருக்காக இங்கே வேளைக்கு ஆள் இருக்காங்களா.. சாரி அண்ணா நான் கூட எனக்குன்னு நினைச்சுட்டேன் “என்று வழிந்தாள்.
“அசடு வழிஞ்சது போதும் கதவையும் உன் வாயையும் சாத்திட்டு போய் தூங்கு . விட்டா நீ பேசிக்கிட்டே இருப்ப எனக்கு டையர்டான இருக்கு நான் தூங்கணும் “என்று அங்கிருந்து கிளம்பினான் .
அர்ஷ் சென்றதும் கதவை சாத்திவிட்டு வந்தவள் அந்த பங்களாவை ஒருநிமிடம் பார்த்து வாயை பிறந்தவள் அங்கே ஹாலில் இருந்த சோபாவில் பொய் படுத்துகொண்டாள்
