Home Uncategorizedஎன்னை கொண்டாட பிறந்தவனே 8

என்னை கொண்டாட பிறந்தவனே 8

by Layas Tamil Novel
366 views

EPISODE 8

“என்ன தாமரை சொல்றே… உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையினா நீ அப்போவே நமக்கு நடந்த கல்யாணத்தை தடுத்திருக்கலாமே . ஏன் இன்னைக்கு காலையில் கூட நமக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னே ஒரு வார்த்தை என்கிட்டே இதை பத்தி நீ சொல்லி இருக்கலாமே . நானே நம்ம வீட்டு ஆளுங்ககிட்டே எடுத்து சொல்லி உனக்கும் விஜய்க்கும் கல்யாணம் செய்து வெச்சிருப்பேனே… அப்போ எல்லாம் எதுவும் செய்யாம விட்டுட்டு இப்போ வந்து சொல்றியே தாமரை ” என்று ஆற்றாமையோடு அவளை பார்த்தான்.

அழுதுகொண்டு இருந்த தாமரை வம்சி சொன்னதை கேட்டவள் “மாமா அப்போ நான் முன்னமே சொல்லி இருந்தா நீங்க இந்த கல்யாணத்தை நிப்பாட்டி இருப்பிங்களா !”என்றாள்.

“கண்டிப்பா தாமரை… உனக்கு விருப்பம் இல்லாத ஒரு விஷயத்தை நான் எப்பவும் செய்யமாட்டேன் . தாத்தா உன் கழுத்துல என்னை தாலி கட்ட சொல்லும்போது முதல்ல எனக்கு தயக்கமா தான் இருந்துச்சு . நீ என்ன நினைக்குறன்னு நான் உன்னை தான் பார்த்தேன். தாத்தா என்னை கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்டதும் முதல்ல நீ தயங்குன அப்போவே நான் இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லலாம்னு தான் இருந்தேன். ஆனா கொஞ்ச நேரத்துல கொஞ்ச நேரத்துல நீ வந்து இந்த கல்யாணத்துக்கு சம்மதம்னு சொன்ன பிறகு தான் நான் உன்னை கல்யாணம் செய்துகவே சமமதிச்சேன் “என்று அவளை பார்த்தான்.

“ஐயோ… இப்படி ஒரு நல்ல வாய்ப்பை தெரியாம தட்டி கழிச்சுட்டேனே . நான் மட்டும் விஜய் மாமாவை விரும்புறதை உங்ககிட்டே சொல்லி இருந்தா இந்த நேரம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிருக்குமே… இப்படி எதுவம்  பேசாம விட்டு என் வாழ்க்கையில் நானே மண்ணள்ளி போட்டுட்டேனே ” என்று தலையில் அடித்துக்கொண்டு தரையில் அமர்ந்து கதறி அழுதாள் தாமரை .

அவள் அழுவதை பாரத்து செய்வதறியாது நின்று இருந்தான் வம்சி .

தரையில் அமர்ந்து இருந்தவள் அருகில் வந்தவன் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான் . தன்னை தானே அடித்து காயப்படுத்திக்கொண்டு இருந்த தாமரை கையை பிடித்து நிப்பாட்டியவன் “தாமரை அழாதே இப்படி எல்லாம் நடக்கும்னு நமக்கு  என்ன தெரியும் . அழாதே தாமரை “என்று அவளை சமாதானம் செய்ய முயன்றான் .

அழுது கொண்டிருந்தவள் தன் கைகளை பிடித்து இருந்த வம்சியை பார்த்து முறைத்தாள்.

அவள் முறைப்பதை பார்த்தவன் ஒன்றும் புரியாமல் “என்ன தாமரை ஏன் என்னை அப்படி பாக்குற.. என்ன ஆச்சு?” என்றான்.

“மாமா என்ன இது ? ” என்று பார்வையால் அவள் கையை பிடித்து இருந்த வம்சியின் கையை சுட்டி காட்டி கோபமாக கேட்டாள் .

அப்போது தான் அவள் கையை தான் பிடித்து இருப்பதை உணர்ந்தவன் பட்டென்று அவள் கையில் இருந்து தன் கையை விலக்கிக்கொண்டு “சாரி தாமரை… நீ அழுததை பார்த்ததும் ….”என்று அவன் நிறுத்த .

“மாமா ஊரு உலகத்துக்கு தான் நீங்க என் கழுத்துல தாலி கட்டி என்னை உங்க மனைவி ஆக்கிருக்கிங்க… ஆனா என் மனசு முழுக்க என் விஜய் மாமா தான் இருக்காங்க. என்னை தொடுற உரிமை கூட அவருக்கு தான் இருக்கு . இப்படி என்னை சமாதானம் செய்யுறேன்னு சாக்குல என்னை தொட்டு பேசுறது இதுவே கடைசியா இருக்கட்டும்” என்றாள் கோபமாக .

அவள் பேசிய வார்த்தைகள் வம்சிக்கு சுருக்கென்று இருந்தது . தான் ஒன்றும் அவளை வேண்டும் என்றே தொட்டு பேசவில்லையே . என் மனதில் தவறான எண்ணமும்  இல்லாதபோது தாமரை தன்னை ஏன் இப்படி பேசவேண்டும் என்று இருந்தது அவனுக்கு.

தன் மீது தாமரையின் எண்ணம் இவ்வளவு தானா என்று தோன்றியது அவனுக்கு உடனே அவளை விட்டு எழுந்தவன்  “தாமரை நீ நினைக்குற மாதிரி ஆள் நான் கிடையாது . உனக்கு விஜய்யை பிடிச்சிருக்கலாம் அதுக்காக என்னை தப்பா portrait பண்ணாதே. எனக்கும் தன்மானம் உண்டு “என்றான் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு .

அவன் பேசியதை கேட்டு  கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தவள்  “அப்படி தன்மானம் உள்ளவரா இருந்தா எனக்கு டிவேர்ஸ் கொடுங்க.”என்றாள்.

தாமரை இப்படி கேட்பாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை . அவளை திரும்பி அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் “உனக்கு அது தான் விருப்பம்னா நான் அதை செய்ய தயாரா இருக்கேன். நாளைக்கே நீயும் நானும் போய் டிவேர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டு வரலாம். விஜய்கிட்டே பேசிட்டு உனக்கும் அவனுக்கும் நமக்கு விவாகரத்து கிடைச்ச பிறகு நானே உங்க ரெண்டு பெருகும் நம்ம வீட்டு ஆளுங்ககிட்டே பேசி கல்யாணம் செய்து வைக்குறேன் ” என்றான்.

தான் வம்சியை திருமணம் செய்து கொண்ட முதல் நாளே அவனிடம் விவாகரத்து கேட்டதும் முடியாது என்று எதுவும் பிடிவாதம் செய்வான் என்று தாமரை எதிர்பார்த்திருக்க… ஆனால் வம்சியோ அதற்கு நேர் மாறாக அவளை விவாகரத்து செய்வதற்கு சம்மதம் தெரிவித்தது அவளுக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது .

” ரொம்ப சந்தோசம் மாமா” என்றாள் . பிறகு பெருமூச்சொன்றை வெளியிட்டவள் திரும்பி கட்டிலை நோக்கி நடக்க…

“தாமரை ஒரு நிமிஷம் ” என்று அவளை அழைத்தான்.

தாமரை திரும்பி வம்சியிற் கேள்வியாக பார்க்க..

“நமக்கு விவாகரத்து கிடைக்குற வரைக்கும் மத்தவங்களுக்கு இந்த விஷயம் எதுவும் தெரிய வேணாம். தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும் . நீயும் நானும் கலியில் முதல் வேலையா டைவர்ஸுக்கு அப்ளை பண்ணினதும் நானே விஜய்கிட்டே பொய் விபரம் சொல்லிட்றேன் . ” என்றான்.

அவன் சொன்னதற்கு சரி என்று தலையை ஆடியவள் சென்று மெத்தையில் இருந்த தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்து வம்சியை தாண்டி சென்றவள்  அவனுக்கு முதுகு காட்டி சோபியாவில் போய் படுத்துகொண்டாள் .

அவள் முதுகையே சிறிது நேரம் வெறித்துக்கொண்டு இருந்தவன் கட்டிலில் போய் யோசனையோடு படுத்துகொண்டான் .

…..

இனியாவை அழைத்து வந்து விஜய்யின் கெஸ்ட் ஹவுசிற்கு ணைப்பி வைத்ததோடு சரி இரண்டு தினங்களுக்கு மேலாகியும் அவளை பார்க்க விஜய் வரவில்லை. இனியாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளுக்கு இந்த வீட்டில் ஒரு வேலையும் கிடையாது.

வெளியே எங்கும் போய்விட்டு வரலாம் என்று அவளுக்கு தோன்ற சமையல்காட்டிற்கு வந்தவள் அங்கே சமையல் வேளையில் மும்முரமாக இருந்த முனியம்மாவிடம் வந்தாள்.

அவர் வேலை மும்முரத்தில் இனியவை கவனிக்கவில்லை. சமையல் காட்டின் வாசலில் நின்று பார்த்த இனியா முனியம்மைவை தொந்தரவு செய்யவேண்டாம் என்று கிளம்பி வெளியே வந்தாள்.

மாலை 7 மணி வீட்டை விட்டு வெளியே வநத இனியா வாசலில் காவலுக்கு இருந்தவரிடம் தான் அருகில் இருக்கும் கடைக்கு போய் வருவதாக கூறி சென்றிருந்தாள்.

மாலை நேர காற்று ஜில்லென்று வீச அதை அனுபவித்தவாறே சுற்றிலும் வேடிக் பார்த்துக்கொண்டு கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்து இருந்தாள்.

விஜயின் இந்த பங்களாவில் இருந்து கடற்கரைக்கு அரை மணி நேர நடைப்பயணத்தில் வந்துவிடும். அவள் நடந்து வந்தவள் அங்கே பீச்சை பார்த்ததும் குதூகலம் ஆகிவிட்டாள்.

அவள் இவ்வளவு அழகான நீண்ட பீச்சை இப்போதான் முதல் முறை நேரில் கண்டிருக்கிறாள் போல… அதை பார்த்ததும் ஆர்வமிகுதியால் கடலுக்குள் இறங்கி விளையாட ஆரம்பித்து இருந்தாள்.

அவள் வந்திருந்த கடற்கரை பகுதியில் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத இடம். அங்கே சில சமூகவிரோத கும்பல்கள் அடிக்கடி வந்து போவது உண்டு. அதே போல சில லோக்கல் ஏரியா ஆட்கள் நண்பர்களோடு சேர்ந்து குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பதற்கென்றே இந்த மாதிரி ஆள் இல்லாத இடமாக பார்த்து வருவது உண்டு.

இனியா வந்திருந்த வேளையில் அங்கு யாரும் வந்திருக்கவில்லை. அவளும் அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை . தண்ணீரில் தொப்பலாக நனைந்து விளையாடிகளைத்தவளுக்கு அப்போதுதான் தான் வந்து நீண்ட நேரம் ஆகிவிட்டது என்று புரியவே வேகமாக கடற்கரைக்கு வந்தாள்.

வந்தவள் தன் ஆடை முழுவதும் நனைந்து உடல் முழுதும் ஈரம் ஆகி உள்ளே அணிந்து இருக்கும் ஆடைகள் வெளியே தெரியுமளவிற்கு நனைந்திருப்பதை உணர்ந்தாள்.

“கடவுளே! எனக்கு அறிவு இருக்கா? இல்லையா? பாரு கொஞ்சம் கூட அறிவே இல்லாம தண்ணியை கண்டதும் ஓடி பொய் விளையாடினேன். இப்போ… என் டிரஸ் முழுசும் நனைஞ்சு போயிருச்சு. உள்ளே போட்டிருக்குறது எல்லாம் வெளியே தெரியுதே..இப்படியே நான் எப்படி வீட்டுக்கு போறது “என்று கடவுளிடம் பேசிக்கொண்டே கடற்கரை மணலில் நடந்து வர…

கடற்கரை காற்று வேறு அவள் ஈர உடலை தழுவிச் செல்ல அவளுக்கு குளிர் எடுக்க ஆரம்பித்திருந்தது. ‘ஷ்… ஆ..ஆஹாஹா… குளிருதே…. “என்று தன் கைகளை பரபரவென தேய்த்துவிட்டுக்கொண்டே தன் கன்னங்களில் வைத்தபடி வீட்டிற்கு கிளம்பினாள்.

கடற்கரை மணலை கடந்து சாலையில் கால் வைக்க எப்போது ஒரு வேன் அவளை இடிக்கும் வேகத்தில் வந்து இனியாவின் முன்பு வந்து நின்றது. அதில் பயந்த இனிய அவசரமாக பின்னால் நகர்ந்தவள் தடுமாறி மணலில் விழுந்தாள்.

வேனை திறந்து கொண்டு நான்கு இளைஞர்கள் வெளியே வர.. அவர்களை பார்த்ததும் இனியாவிற்கு பக்கென்று இருந்தது. ஒவ்வொருவரும் ஓங்கு தாங்காக வளர்ந்து இருந்தனர். அவர்களை பார்த்ததும் இனியாவிற்கு பயம் பிடித்துக்கொண்டது.

அந்த வேனில் இருந்து இறங்கிய ஒருவன் மணலில் விழுந்து இருந்த இனியாவிடம் வந்து அவள் முன்பு கை நீட்டினான். I

அவள் பயந்த விழிகளோடு அவனை பார்க்க…

கண்கள் மிரள… அழகிய 18 வயது நிரம்பிய இளம் பெண் ஒருத்தி அவனை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை கவனித்தவன் “ஏய் சிறுத்த குட்டி… என்ன அப்படி பாக்குற… இப்படியே மணல்ல படுத்துட்டு போஸ் கொடுக்கலாம்னு நினைப்பா… நல்ல ஒய்யாரமா ஊட்டுல படுத்திருக்குறை மாதிரி அப்படி படுத்திருக்க… அட உன்ன

தான். ஏய்.. சிறுத்த குட்டி ஒன்னத் தான் அட எழுந்திருங்குறேன்ல … ” என்றான்.

அவன் பேசியதில் பயத்தில் இனியாவின் கை தானாக அவனை நோக்கி நீண்டது. அவள் நீட்டியதும் அவளை வெடுக்கென்று மேலே இழுக்க… அவன் மீது மோதி தன்னை சமாளித்துக்கொண்டு நின்றவள். தன் எதிரே இருந்தவனின் முகத்தை பார்த்தாள்.

முகத்தில் அங்கங்கே தழும்புகள் ஒன்றிரண்டு இருக்க.. அது கூட அவனுக்கு அழகாக தான் இருந்தது. இமைக்க மறந்து இனியா அவனை பார்த்தப்படி நின்று இருக்க… “என்ன நான் அவ்ளோ அழகாவா இருக்கேன். என்னை அப்படி கண்ணை சிமிட்டமா பாக்குற.. “என்றான் அந்த இளைஞன்.

அவன் பேசியதும் தான் இனியாவுக்கு நினைவு வந்தது போல அவசரமாக அவனை விட்டு விலகி நின்றவள் தன் ஈரமான ஆடை உடலில் ஒட்டி இருக்க.. அதை அவர்கள் முன்பு மறைக்க முயன்று கொண்டே பின்னால் நகர்ந்தாள்.

அவள் கோலம் கண்டவனுக்கு அவள் நிலை உணர்ந்தவன் சட்டென்று தான் அணிந்து  சட்டையை கழட்டி அவளிடம் கொடுத்து இந்தா  போட்டுக்கோ … இப்படி  நனன்ஜிருக்க …” என்றான்.

அவன் நீட்டிய சட்டையை வாங்கி தன் மீது போர்த்திகொண்டவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி அங்கிருந்து ஓடினாள்.

“ஏய் சிறுத்த குட்டி… என்ன நான் கேட்டதுக்கு பதில் பேசாம போற… சொல்லிட்டு போ… நான் அழகா இருக்கேனா? இல்லையா?” என்று அவள் சென்ற திசை நோக்கி கத்தினான்.

அவன் குரல் கேட்டு ஓடிக்கொண்டே அவனை திரும்பிப் பார்த்த இனியா “நீ ஒன்னும் அழகா இல்ல… ஆனா பாக்குற மாதிரி தான் இருக்கே..”என்று அந்த இளைஞனை பார்த்து சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவள் தன்னை பார்த்து சிரித்துவிட்டு சென்றதையே பார்த்துக்கொண்டு நின்று இருந்தவனிடம்

“உனக்கு என்ன டா மாப்ள… நீ பாக்குறது ஹீரோ கணக்கா இல்ல இருக்கே… நம்ம ஏரியா புள்ளைங்க எல்லாம் உன்னை எப்போ டா அதுங்க வலைல விழவைக்கலாம்னு பாத்துட்டு இருக்காளுங்க. ஆனா நீ என்னவோ உன் சட்டையை கழட்டி கொடுக்குற… அந்த குட்டியையே இப்படி வெறிச்சிட்டு நிக்குற நீயே இப்படி ஒரு பொம்பள புள்ளைய பாக்குற… …அப்பறோம் இந்த குட்டி உன்னை கண்ணு சிமிட்டமா பார்க்காதா என்ன” என்று அவன் கூட்டாளி ஒருவன் கூறினான்.

“டேய் சும்மா இருக்க மாட்டே… நம்ம சேதுவாவது பொண்ணுங்கள பார்குறதாவது அதெல்லாம் கனவிலயும் நடக்காது. நீ உன் இஷ்டத்துக்கு எதையும் அடிச்சு விட்டுடாத டா… நம்ம சேது பாவம் ” என்று மற்றொருவன் கூறினான்.

“அய்யே… இப்போ இன்னாங்கடா வந்துச்சு உங்குளுக்கு. தொன தொணன்னு பேசிட்டு கீறீங்க… மூட்ட்டு போங்கடா “என்று அவர்கள் தலையில் தட்டியவன் இனியா சென்ற திசையை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றான்.

இங்கே சேது கொடுத்த சட்டையை தன் மீது போர்த்திக்கொண்டு அவனை பற்றிய நினைவுகளுடன் சிரித்தபடி வீட்டு கேட்டை தாண்டி உள்ளே செல்ல… அப்போது அவள் பின்னால் அதே வீட்டு கேட்டை தாண்டி நுழைந்தது.

யார் என்று இனியா பார்த்துக்கொண்டு இருக்க… அவள் முன்பு வந்து நின்ற அந்த காரில் இருந்து இறங்கிய விஜய் கோபமாக அவளிடம் வந்தவன் அவள் மேல் இருந்த சட்டையை பிடுங்கி வீசிவிட்டு அவளை கைபிடித்து வீட்டிக்குள் இழுத்துச்சென்றான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured