EPISODE 10
இங்கே இதழ்யாவின் வீட்டில் செல்வம் தன அறையில் தூக்கம் வராமல் இங்கும் அங்கும் உலாத்திக்கொண்டு இருந்தான்.
“ஏங்க இப்படி குறுக்கும் நெடுக்கும் நடந்துட்டே இருந்தா என்ன ஆகிட போகுது . நீங்க இப்படி நடக்குறதுனால இதழ்யா கல்யாணம் பண்ணினதை மாத்திரை முடியுமா ” என்றார் சகுந்தலா .
“ஏய் கொஞ்ச நேரம் அமைதியா இருக்க முடியாதா உன்னால தொண தொணன்னு எதையாவது பேசிட்டு இருக்குறது ” என்று சகுந்தலாவை அடக்கினான் செல்வம் .
“ஆமா… என் வாயை அடக்குங்க ” என்று முணுமுணுத்த சகுந்தலா .
“அத்தை … அத்தை ” என்று தூக்கத்தில் அஞ்சன இதழ்யாவை நினைத்து உளறினாள்.
அதை கேட்ட செல்வம் தூங்கிக்கொண்டு இருந்த அஞ்சனாவிடம் வந்தவன் அநத பிஞ்சின் தொலை உலுக்கியவன் ” அவ தான் நம்ம எல்லாரையும் வேண்டாம்னு ஒதுக்கீடு அந்த அல்லக்கையை கல்யாணம் செய்துட்டு போய்ட்டாளே … இந்த வீட்டுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லைனு போனவளை பத்தி இனிமேல் இந்த வீட்டுல யாரும் பேசக்கூடாது ” என்று அதட்ட…
தூக்கத்தில் இருந்த குழந்தை இவன் அதட்டலில் விழித்து பயத்தில் அழ ஆரம்பித்தது .
“உங்களுக்கு அறிவு இருக்கா? இல்லையா? தூங்குறவளை எழுப்பி அவளை அதட்டிட்டு இருக்கீங்க.. விடுங்க அவளை” என்று அவன் கையில் இருந்த பிள்ளையை வாங்கிக்கொண்டு கோபத்தில் அவர்கள் அறையை விட்டு வெளியே வந்த சகுந்தலா வீட்டின் கொல்லைப்புறத்துக்கு பிள்ளையை அழைத்து சென்று சமாதானம் செய்து கொண்டு இருந்தார் .
“என்ன சகுந்தலா அஞ்சனாவுக்கு என்ன ஆச்சு? இந்த நேரத்துல ஏன் அவ அழுதுட்டு இருக்கா?” என்று கேட்டபடி தலை முடியை வாரி சுருட்டி கொண்டையிடப்படி கேட்டுக்கொண்டே அங்கு வந்தார் வாணி.
“இல்ல அத்தை அவ நல்ல தூங்கிட்டு தான் இருந்தா. உங்க பிள்ளை இதழ் மேல இருக்குற கோபத்தை கொண்டு வந்து தூங்கிட்டு இருந்த இவ கிட்டே காட்டினா புல்லை பயத்துல அழ ஆரம்பிச்சுட்டா . அங்க இருந்தா அவரு எதையாவது நினைச்சு சத்தம் போட்டுட்டு இருப்பாருன்னு அஞ்சனாவை இங்க தூக்கிட்டு வந்தேன் ” என்ற சகுந்தலா.
“நீங்க ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க. மாத்திரை போடலையா ? ” என்று வாணியை கேட்டாள் சகுந்தலா .
“இல்ல சகுந்தலா மாத்திரை போட தோணல… எப்போ இதழ் நம்ம எல்லாரையும் ஏமாத்தட்டிட்டு அந்த பையனை போய் கல்யாணம் பண்ணினாலோ அப்போவே என் மனசு சுக்கு நூறு வெடிச்சிருச்சு . நம்ம அவளுக்கு என்ன குறை வெச்சோம் . இப்படி மணமேடை வரை இன்னொரு குடும்பத்தை கூட்டிட்டு வந்து நம்மளை அவமான படுத்தின மாதிரியே அவங்களையும் அவமானப்படுத்திட்டா… அவங்க எல்லாம் அவரை எப்படி பேசிட்டு போனாங்கண்ணு நீயும் தான பார்த்துட்டு இருந்த . அதுலையே அந்த மனுஷன் பாதி உடைஞ்சுட்டாரு “
“இதுல இதழை தூக்கிட்டு போய்ட்டாங்களேன்னு நாம பதறிட்டு போலீசை எல்லாம் கூட்டிட்டு அங்க போனா . அவ ரொம்ப சாதாரணமா எல்லாமே பிளான் போட்டு செய்தேன் . இது என் வாழ்க்கை நான் பார்த்துகிறேன்னு சொல்லாம சொல்லிட்டாளே ” என்று புலம்பினார் வாணி .
குழந்தையை சமாதானம் செய்து கொண்டே வாணி பேசியதை எல்லாம் கேட்டு அமைதியாக ஏதோ யோசித்த படி சகுந்தலா அமர்ந்து இருக்க… அவர் அருகில் வந்து அமர்ந்த வாணி அஞ்சனாவை வாங்கிக்கொண்டு “என்ன சகுந்தலா யோசிச்சிட்டு இருக்க ” என்றார் .
“அத்தை எனக்கு என்னவோ நம்ம இதழ் அந்த ஆளை பிடிச்சு கல்யாணம் செய்திருக்க மாட்டான்னு தோணுது ” என்றார் .
“என்ன டி சொல்ற… பிடிக்காம கல்யாணம் செய்திருந்தா அப்பறோம் ஏன் நாம அவளை கூப்பிட்டதும் நம்ம கூட வரமுடியாதுனு சொல்லுவா… அவளை கூப்பிட நாம மட்டும் தனியா போகலையே .. கூடவே போலீசையும் சேர்த்து இல்ல கூட்டிட்டு போனோம் . அவங்ககிட்டேயாவது சொல்லி இருக்கலாமே அவ.. ” என்றார் ஆதங்கத்தில் .
“அதான் அத்தை எனக்கும் தெரியல… அந்த கருவாயன் முதல் தரம் நம்ம இதழை தூக்கிட்டு போனானே அப்போ கூட இதழ் அவனை லவ் பண்ணின மாதிரி காட்டிக்கலையே . அவனை எவ்ளோ திட்டினா … ஆனா இப்போ ஏன் அவனை காதலிச்சேன்னு சொல்றா… எனக்கு ஒண்ணுமே புரியல ” என்றார் சகுந்தலா.
“ஆமா சகுந்தலா நல்ல இதழ் பிறந்த அப்போ ரோஜா பூ மாதிரி ரோஸ் கலர்ல இருந்ததுனால தான் நானும் அவரும் அவளுக்கு இதழ்யான்னே பேர் வெச்சோம் . அப்படி தொட்டா சிவந்து போற மாதிரி என் புல்லை இருக்குற அப்போ அவளுக்கு திருஷ்டி போட்டு வெக்குற மாதிரி அந்த பையன் இருக்கான் அவன் பேரை கூட பாரேன் ராஜன் . பேருல கூட நம்ம இதழுக்கும் அவனுக்கும் பொருந்துதா பாரு ” என்று வருத்தப்பட்டார் .
“பாட்டி… அத்தை… அத்தை …” என்று அஞ்சனா அழ .
“அழாதடா கண்ணா உன் அத்தையை இனி நாம பாக்க முடியாது . அவ தான் நம்மள வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டாளே ” என்றார் .
“பாட்டி நா… நா… அத்தையை பார்த்தேன். அந்த மாமா எனக்கு சாக்லேட் எல்லாம் வாங்கி கொடுத்தாரூ..நான் அந்த மாமா கொடுத்த சாக்லேட்டை யாருக்கும் தெரியாம ஒளிச்சு வெச்சிருக்கேன் ” என்றவள் வேகமாக வாணியின் மடியில் இருந்து எழுந்து வீட்டுக்குள் ஓடினாள்.
ஒன்றும் புரியாமல் வாணி சகுந்தலாவிடம் “சகுந்தலா அஞ்சனா என்ன சொல்றா யாரை மாமான்னு சொல்லுறா ” என்று கேட்டார் .
“அத்தை எனக்கும் ஏதும் புரியல இருங்க நான் அவளை கூட்டிட்டு வந்து கேக்குறேன் “என்று சகுந்தலா madiyil இருந்து எழுந்திருக்க போக..
அதற்குள் வீட்டிற்குள் சென்ற அஞ்சனா கையில் ஒரு பெரிய சைஸ் டைரி மில்க் சாக்லேட்டை எடுத்து வந்தவள் .”இங்க பாத்தியா .. நான் எவ்ளோ பெரிய சாக்லேட் வெச்சிருக்கேன்னு ” என்று சந்தோசமாக சகுந்தலாவிடம் சாக்லேட்டை காட்டி சந்தோஷப்பட்டாள் அஞ்சனா.
“ஏய்! அஞ்சனா ஏது டி உனக்கு இவ்ளோ பெரிய சாக்லேட் . யாரு கொடுத்தா உனக்கு ” என்றார் .
“அம்மா … அம்மா… நான் காலைல அத்தை வீட்டுக்கு போனேனா… அங்க இருந்த மாமா தான் எனக்கு இந்த சாக்லேட் வாங்கி கொடுத்தாங்க ” என்றாள் மழலை மொழியில் .
வாணியும், சகுந்தலாவும் அஞ்சனா சொன்னதை கேட்டு நம்ப முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் படியில் நின்று இருந்த அஞ்சனாவை நெருங்கி வந்து .
“நீ எப்போ அத்தையை பார்க்க போன.. உன்னை யார் அங்க கூட்டிட்டு போனாங்க ” என்றார் சகுந்தலா .
“என்னை அத்தை வீட்டுல இருக்குற ஒரு அங்கிள் தான் கூட்டிட்டு போனாங்க. நான் நம்ம ஷிவானி கூட வெளியே விளையாடிட்டு இருந்தேனா … அப்போ…அப்போ… ஒரு அங்கிள் வந்து அத்தை உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்கனு என்னை அத்தைகிட்டே கூட்டிட்டு போனாங்க . நான் அத்தையை போய் பார்த்தேனே.. ” என்றாள்
“என்ன டி சொல்ற… உங்க அத்தையை அவ வீட்டுல போய் பார்த்தியா !” என்று இருவரும் ஒரு சேர அஞ்சனாவிடம் கேட்க…
அஞ்சனா தனக்கு தெரிந்ததை இருவரிடமும் மழலை மொழியில் கூறியவள் “அத்தையும், மாமாவும் தான் என்னை இங்கே கொண்டு வந்து விட்டாங்க. அத்தை என்னை வீட்டுல விடுற அப்போ ரொம்ப அழுத்துச்சு.” என்றாள்.
அங்கே ராஜன் இதழ்யாவை மிரட்டியது எதையும் அஞ்சனா சொல்லவில்லை. காரணம் வழி எங்கும் இதழ் அஞ்சனாவிடம் வேறு விஷயங்களை பேசி குழந்தைக்கு அங்கு நடந்ததை மறந்து போகும்படி செய்தவள் ராஜன் கொடுத்த சாக்லேட்டாய் அவளிடம் கொடுத்து மனதை மாற்றி இருந்தாள் .
“சகுந்தலா அஞ்சனா சொல்றதை பார்த்தா இதழ் உண்மையாவே அந்த பையனை காதலிச்சு இருக்கா போல ” என்றார் வாணி .
“தெரியல அத்தை அதை நம்ம இதழே வாயை திறந்து சொன்ன தான் உண்டு ” என்றார் சகுந்தலா.
“எப்படியோ அவ நல்லா இருந்தா சரி ” என்று அஞ்சனாவை தூக்கிக்கொண்டவர் .
“நீ போய் தூங்கு நான் இவளை என்கூட படுக்க வெச்சுக்கிறேன் ” என்று உள்ளே செல்ல..
ஏதோ யோசித்தவராக சகுந்தலா நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து இருந்தவர் .”எனக்கு என்னவோ இதழுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையினு திரும்ப திரும்ப தோணிட்டே இருக்கே… ” என்று யோசித்துக்கொண்டு இருக்க… அப்போது பெட்ரூமில் இருந்து செல்வம் சகுந்தலாவை அழைக்கும் சத்தம் கேட்டதும் எழுந்து உள்ளே சென்றார் .
“மெர்சலு… என்ன புது மாப்பிள்ளை மாதிரி பட்டு வேஷ்ட்டி பட்டு சட்டை எல்லாம் போட்டுட்டு பட்டையை கிளப்புற … ” என்று ராஜனுக்கு கீழே வேலை செய்யும் அவன் ஆட்கள் முதல் இரவுக்கு தயாராகிக் கொண்டு இருந்தவனை சதாசிவம் உடனே கிளம்பி வர சொல்லி இருக்க … கிளம்பிய கையோடு சதாசிவத்தை பார்க்க தேன்மொழியிடம் கூட சொல்லாமல் கிளம்பி வந்திருந்தான்.
அவனை இந்த கோலத்தில் பார்த்து தான் அனைவரும் அவனை ஓட்டிக் கொண்டு இருந்தனர்.
“புது மாப்பிளை தான் டா இந்த மெர்சலு… ” என்று காலரை தூக்கிவிட்டுக்கொண்டு உள்ளே சென்றான்.
ஹாலில் ட்ரிங்க்ஸ் அருந்தியபடி அவருக்கென்றே எப்போதும் இருக்கும் சிம்மாசனம் போன்ற சேரில் கோபமாக சதாசிவம் அமர்ந்து இருக்க அவரை பார்த்ததும் சட்டையை சரி செய்துகொண்டு “அண்ணா சொல்லுங்க என்ன விஷயம் எதுவும் வேலை வந்திருக்கா… யாரை தூக்கணும் ” என்று கேட்டுக்கொண்டே அவர் அருகில் வந்தான் .
அவனை திரும்பி பார்த்த சதாசிவம் மாப்பிள்ளை கோலத்தில் இருந்தவனை பார்த்து “என்ன டா மொத ராத்திரிக்கு தயாராகிட்ட போல ” என்றார் குடித்துக்கொண்டே .
“இந்த ஆளு கூப்பிட்டானு நான் இபப்டியே கிளம்பி வந்திருக்க கூடாது ” என்று நினைத்தவன் .
“நான் சொல்றதை அண்ணி என்னிக்கு கேட்டிருக்காங்க. இந்த ட்ரெஸ்ஸை கொடுத்து இதை நீ போட்டே ஆகணும்னு சொல்லிட்டாங்க. அவங்க பேச்சை நான் எப்படி மீறுறது அதான் மாட்டிகிட்டேன் ” என்றான் .
“ஏன் டா உன்னை சும்மா அந்த புள்ளையை கல்யாணம் பண்ணிக்கிட்டா மாதிரி நடின்னு சொன்னா . நீ உண்மையாவே அவளை கல்யாணம் பண்ணினவன் மாதிரி நடந்துட்டு இருக்கியா ? என்ன என்னை ஏமாத்திட்டு அவ கூட குடித்தனம் நடத்தலாம்னு எனக்கு தெரியாம எதுவும் பிளான் பண்ணுறியா நீ ” என்ற சதாசிவம் சேரில் இருந்து எழுந்து ராஜனிடம் வந்தவர் அவனை ஓங்கி அறைந்து இருந்தார் .
இதை சற்றும் எதிர் பாராதவன் இதழ்யாவிடம் நெருக்கமாக நடந்து கொண்டது சதாசிவத்திற்கு தெரிந்துவிட்டது என்று யோசித்தபடி அவரை பார்த்தான்
