EPISODE 16
“அக்கா சாருக்கு எப்படி இருக்கு ? ” என்று தேன்மொழியிடம் கேட்டபடி ராஜனை தாண்டி உள்ளே நுழைந்தாள் இதழ்யா .
அவன் வாசலில் சதாசிவத்தின் ஆட்களிடம் ஏதோ வரவு செலவு பேசிக்கொண்டு இருக்க இதழ்யா மட்டும் உள்ளே நுழைந்தாள்.
“வா இதழு .. நைட் எல்லாம் வலி தாங்காம ஒரே புலம்பல் . டாக்டர் வந்து வழியை மறக்க ஊசி போட்ட அப்பறோம் தான் கொஞ்சம் தூங்கினார். இன்னும் எழுந்திருக்கல… ” என்று மணி 10 ஐக் கடந்தும் மருந்தின் வீரியம் குறையாமல் தூங்கிக்கொண்டு இருந்த சதாசிவத்தை பார்த்தபடி மிகவும் சோகமாக கூறினார்.
“சரி கவலை படாதீங்க அக்கா சாருக்கு சீக்கிரமே சரி ஆகிடும் ” என்று தேன்மொழியை சமாதானம் செய்தாள் இதழ் .
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில் உள்ளே நுழைந்த ராஜன் இதழ் அமர்ந்து இருந்த சேருக்கு அருகில் அவளை தாண்டி செல்ல போனவன் அப்படியே அவள் முதுகை உரசிக்கொண்டு செல்ல…
அதில் அதிர்ந்த இதழ் தன் முன் நல்லவன் போல வந்து நின்றவளை முறைத்தாள்.
“கருவாயன்… கருவாயன்… எவ்ளோ திமிர் பாரு இவனுக்கு, என்னை உரசிட்டே இருக்கனும். ஜீப்ல வரும்போதும் கையை வச்சிட்டு சும்மா இருக்கள… இங்கையும் வந்து என் உயிரை வாங்குறான்” என்று மனதிற்குள் திட்டினாள்.
அவள் முறைப்பதை கண்டும் காணாமல் சதாசிவத்திடம் சென்றவன் அவரை ஒரு முறை ஆராய்ந்துவிட்டு “அண்ணி நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் . அதுவரை இவளை பத்திரமா பார்த்துக்கோங்க ” என்றான் .
” சரி டா போயிட்டு சீக்கிரம் வந்திரு . முன்ன மாதிரி நீ தனி ஆள் கிடையாது நினைச்ச நேரத்துக்கு போயிட்டு உன் சவுகர்யத்துக்கு வீட்டுக்கு திரும்பி வரதுக்கு சரியா. உன் பொண்டாட்டி ஒருத்தி உனக்காக காத்துட்டு இருக்கா அதை மறந்துறாத ” என்றார்.
“மறக்க மாட்டேன் ” என்றவன் ஓரக்கண்ணால் இதழ்யாவை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான் ..
“அப்பாடா ..! தொல்லை விட்டது ” என்று ராஜன் கிளம்பியதை நினைத்து பெருமூச்சுவிட்டவள் .
“அக்கா நீங்க சாப்பிடுங்க . சார் எழுந்தா நான் பார்த்துக்கிறேன்” என்று தேன்மொழியிடம் வீட்டில் இருந்து எடுத்து வந்த உணவை காட்டி கூறினாள்.
“இல்ல இதழு அவர் நேத்து நைட்ல இருந்து எதுவும் சாப்பிடல… அவர் முதல்ல சாப்பிடட்டும் அப்பறோம் நான் சாப்பிடுக்கிறேன்” என்றார்.
“அக்கா நீங்க தென்பா இருந்தா தானே சாரை நல்ல கவனிச்சுக்க முடியும் . முதல்ல நீங்க சாப்பிடுங்க . சார் எழுந்ததும் அவருக்கு சாப்பாடு கொடுத்துக்கலாம் ” என்று தேன்மொழியை வற்புறுத்தி சாப்பிட சொன்னாள்.
தேன்மொழியும் அதற்கு மேல் மறுப்பு சொல்லாமல் கொண்ட வந்த உணவை சாப்பிட்டு முடித்தார்.
“கொஞ்ச நேரம் நீங்க படுத்து ரெஸ்ட் எடுங்க அக்கா . சார் எழுந்தா சொல்றேன் ” என்று தேன்மொழியை உறங்க சொன்னாள்.
அவருக்கும் சற்று ஓய்வு தேவைப்படுவது போல இருக்க… அங்கிருந்த மற்றொரு கட்டிலில் போய் கண்மூடி உறங்க ஆரம்பித்தார்.
இப்போது ரூமில் சதாசிவமும், தேன்மொழியும் உறங்கி இருக்க இதழ்யா அமர்ந்து இருந்த சேரை விட்டு எழுந்தவள் மெல்ல இருவரிடமும் வந்து அவர்கள் உறங்குவதை உறுதிசெய்து கொண்டு அந்த அரை கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி ராஜனும், சதாசிவத்தின் ஆட்களும் யாரேனும் அங்கு இருக்கிறார்களா என்று பார்த்தாள்.
அவர்கள் இருந்த அந்த வராண்டாவில் சிகிச்சை பெற அந்த மருத்துவமனைக்கு வந்தவர்கள் மட்டுமே சிலர் இருக்க… சதாசிவத்தின் ஆட்கள் யாரும் இல்லை.
“அப்பாடா! யாரும் இல்ல… ” என்று நிம்மதி பெருமூச்சுவிட்டவள் . மெல்ல வெளியே வந்து கதவை சுற்றிவிட்டு வேகமாக அங்கிருந்து நடக்க துவங்கி இருந்தாள் .
வந்த வேகத்தில் ஹோச்பிடலுக்கு வெளியே இருந்த ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்தவள் ஆட்டோவில் ஏறிக்கொண்டு திரிவரைடம் அவள் செல்ல வேண்டிய இடத்தை கூறிவிட்டு யாரும் அவளை பார்க்காத வண்ணம் பின்னால் நன்றாக சாய்ந்து அமர்ந்தாள்.
உள்ளுக்குள் ஒரு வித பயம், பதட்டம் இதழ்யாவை தொற்றிக்கொண்டது . வெளியே சென்று இருக்கும் ராஜன் வந்துவிட்டால், தூங்கிக்கொண்டு இருக்கும் தேன்மொழி எழுந்துவிட்டால் … என்ன ஆவது என்று இதயம் படபடவென அடித்துக்கொண்டது .
20 வது நிமிடத்தில் அவள் சொன்ன இடத்திற்கு ஆட்டோ வந்துவிட…” அண்ணா வெயிட் பண்ணுங்க நான் இப்போ வந்துடறேன் ” என்று இதழ்யா படித்துக் கொண்டு இருந்த காலேஜிற்குள் அவசரமாக நுழைய இதழ்யாவை பார்த்துவிட்டு வேகமாக அவளை ஓடி வந்து கட்டிக்கொண்டாள் வள்ளி .
பிறகு இதழ்யாவை விட்டு பிரிந்து நின்றவள் “ஏய் இதழு … எப்படி டி இருக்க… ஏன் டி இப்படி பண்ணின… அந்த ஆளை நீ காதலிக்கிறென்னு என்கிட்டே கூட சொல்லாம மறைச்சிட்டே இல்ல … ” என்று முறைத்தவள் கோபமாக காலேஜிற்குள் திரும்பி நடந்தாள்.
“வள்ளி… ஏய் நில்லு டி எங்க போற… ” என்று அவள் பின்னல் ஓடி வந்தவள் வள்ளியின் கை பிடித்து தன் பக்கம் திருப்பினாள்.
அவள் கோப முகமும் , அழுத விழிகளையும் பார்த்து பதறிய வள்ளி “ஏய் என்ன டி ஆச்சு ? ஏன் அழற..” என்று இதழ்யாவை தேற்றியவள் “ஆமா நீ ஒரு புது நம்பர்ல இருந்து எனக்கு கால் பண்ணுணியே அது யாரோடது . உன் புருஷனுதா ” என்றாள்.
“அது நான் இருக்க வீட்ல வேலை பாக்குற பாட்டியோடது ” என்ற இதழ் “நான் அந்த கருவாயனை பிடிச்சுப்போய் கல்யாணம் செய்திருந்தா அதை முதல்ல என் அண்ணிகிட்டேயும் , அதுக்கு பிறகு உன்கிட்டேயும் தான டி சொல்லி இருப்பேன். என்னை பத்தி நல்லா தெரிஞ்சா நீயே இப்படி கேக்குறியே… அவனை என்னோட புருஷன்னு சொல்லாத… எனக்கு கொஞ்சம் கூட வானை பிடிக்கவே இல்லை ” என்று அழுதாள் இதழ்யா .
“என்ன டி சொல்ற எனக்கு ஏதும் விளங்கள ” என்றாள் வள்ளி .
“வள்ளி நான் நடந்ததை எல்லாம் விபரமா அப்பறோம் சொல்றேன் . நீ எனக்கு ஒரு உதவி செய்யணும் ” என்றாள் இதழ்யா .
“என்ன டி சொல்லு …” என்ற வள்ளி இதழ்யாவை பார்க்க…
தான் வந்த காரணத்தை வள்ளியிடம் கூறிய இதழ்யா “நான் சொன்னதை செய்துட்டு நான் உனக்கு கால் பண்ணினேனே அந்த நம்பருக்கு ஒரு missed கால் விடு . நானே உனக்கு திரும்ப கூப்பிட்றான் . எனக்கு நேரம் ஆச்சு , நான் வீட்டுக்கு போயிட்டு அந்த கருவாயன் இல்லாத நேரமா பார்த்து உனக்கு கால் பண்ணி எல்லாத்தையும் சொல்றேன்”என்றவள் வந்த ஆட்டோவிலேயே ஹாஸ்பிடலுக்கு கிளம்பி இருந்தாள் இதழ்.
வள்ளிக்கு புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது இதழ் வந்து சென்றது .
“அந்த ஆளை பிடிக்கவே இல்லையான்னு சொல்றா… அப்பறோம் எப்படி அவங்க அம்மா , அப்பாகிட்ட அவ புருஷனை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணினேன்னு சொன்னா… ” என்று குழம்பியவள் இதழ் திரும்ப அவளுக்கு போன் செய்யும்போது மற்றவிபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தவள் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பி இருந்தாள்.
சென்ற வேகத்தில் திரும்ப ஹாஸ்பிடளுக்கு வந்த இதழ் செல்லத்தாயிடம் இருந்து வாங்கி வந்த பணத்தில் இருந்து ஆட்டோ டிரைவரிடம் எடுத்து கொடுத்துவிட்டு திரும்பி வேகமாக உள்ளே நடந்தவள் சதாசிவத்தை அட்மிட் செய்திருந்த தளத்திற்கு வர… மற்றொரு வழியில் இருந்து ராஜன் தன் சகாக்களுடன் வந்து கொண்டு இருந்தான் .
அவனை அங்கு பார்த்ததும் திக்கென்று இருந்தது இதழுக்கு “ஐயோ! இவன் என்ன அதுக்குள்ள வந்துட்டான் . இப்போ எப்படி நான் உள்ள போறது . என்னை மட்டும் இங்க பார்த்தா என்ன செய்வானோ ” என்று பயந்தவள் . “அவனோட ஆளுங்க கூட எதையோ சீரியசா பேசிட்டு இருக்கான். அவன் என்னை பார்குறதுக்குள்ள ரூமுக்குள்ள போய்டணும்” என்று வேகமாக சதாசிவத்தின் அறையின் முன்பு வந்தவள் வேகமாக கதவை திறக்க போக…
சரியாக அந்த நேரம் ராஜன் இதழை பார்த்துவிட்டான் . இதழும் ராஜன் தன்னை பார்த்ததை கவனித்துவிட்டவள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விக்கித்து நின்றாள்.
அவளிடம் வேகமாக வந்தவன் “இங்க என்ன பண்ற நீ … ” என்று இதழை மிரட்டும் தோரணையில் ராஜன் கேட்க…
பயத்தில் எச்சில் விழுங்கியபடி அவனை பார்த்தாள் இதழ்யா .
