EPISODE 5
இதழ்யாவின் மொத்த குடும்பமும் சதாசிவத்தின் வீட்டிற்குள் படி ஏறி வர…. அவர்களை பார்த்ததும் “அப்பா… அம்மா… ” என்று ஓடப்போனவளை பிடித்து இழுத்து தன் அருகில் நிப்பாட்டிய ராஜன்.
“ஏய்… என்ன உங்க குடும்பத்தை பார்த்ததும் பாசம் பொங்குதோ… எங்கையாவது உனக்கு பிடிக்காம இந்த கல்யாணம் நடந்துச்சு , என்னை தூக்கிட்டு வந்து வலுக்கட்டாயமா தாலி கட்டிட்டாங்கன்னு உன் குடும்பத்து முன்னாடியும் , அந்த போலீஸ் ஆளுங்க முன்னாடியும் சொன்னேன்னு வை… நான் என்ன பண்ணுவேன் தெரியுமா ?” என்று அவன் சட்டையை லேசாக மேலே தூக்கி காட்ட அதில் ஒரு பெரிய பட்டா கத்தியை தன் இடுப்பில் சொருகி வைத்து இருந்தான் .
அதை பார்த்ததும் இதழ்யாவின் உதடு வறண்டு நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டது . இதயம் படபடக்க அவளை பார்த்தவன் . “அவங்க வந்து ஏதாவது கேட்டா என்ன சொல்லணும் தெரியும் தானே உனக்கு . இல்ல நான் மறுபடியும் அன்னிக்கு மிரட்டி சொல்லி கொடுத்த மாதிரி சொல்லனுமா ? அப்படி மட்டும் மாத்தி சொன்னேன்னு வை. இந்த் இடத்துலயே உன் குடும்பம் மொத்தத்தையும் கூண்டோட கைலாசம் அனுப்பிட்டு வந்திருக்குற ஜீப்பில் ஏறி ஜெயிலுக்கு போய்கிட்டே இருப்பேன். எனக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் . ஆனா உன் குடும்பம் உனக்கு இருக்காது அதை நியாபகத்துள வெச்சுட்டு பேசணும் சரியா ” என்றான் .
அதை கேட்டதும் ” இல்ல இல்ல… நான் ..நான் நீங்க சொல்லிக்கொடுத்த மாதிரியே பேசிக்கறேன் ” என்றவள் .
தன் குடும்பத்தை உள்ளே வரவிடாமல் தடுத்தவள் “எதுக்காக எல்லாரும் இங்கே வந்திருக்கீங்க.. உங்க பொண்ணு உயிரோட இருக்காளா ? இல்லையானு பார்த்துட்டு போலாம்னு வந்திங்களா ?” என்ற அவள் கேள்வியில் மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து போய் நின்றது.
இதழ் பேசிக்கொண்டே வாசலை தாண்டி வெளியே வந்தவள் எப்படியாவது தன் குடும்பத்தை இங்கிருந்து அனுப்பிவிட வேண்டும் என்று நினைத்தபடி அவர்களை பார்த்தாள் .
“இதழ்யா என்னமா பேசுற… ஏன் இப்படி எல்லாம் பேசுற… உன்னை இந்த ரௌடி கிட்டே இருந்து கூட்டிட்டு போகணும்னு தான் நான் போலீஸோட வந்திருக்கேன்” என்ற குமரன் .
“என்ன இதழ் உன் கழுத்துல தாலி இதை யாரு கட்டினது ” என்றார் அதிர்ச்சியாகி.
சகுந்தலா நேராக இதழ்யாவிடம் வந்து “இதழ்யா சொல்லு உன் கழுத்துல இந்த தாலியை கட்டினது யாரு ? உன்னை மிரட்டி இந்த கல்யாணத்தை செய்தது இதோ உன் பின்னாடி நிக்குறானே இவன்தானே.. இவன் தான உன்னை மணமேடையில் இருந்து தூக்கிட்டு போனான். இவனா உன் கழுத்துல தாலியை கட்டினான் . சொல்லு இதழ்யா ” என்று அவள் தோள்களை பிடித்து உலுக்கினார் .
த்ன் மேல் இருந்த சகுந்தலாவின் கைகளை தட்டிவிட்டு இதழ் “அண்ணி !! அவர் ஒன்னும் என்னை வலுக்கட்டாயமா தூக்கிட்டு வந்து தாலி கட்டல .. நானா விருப்பப்பட்டு தான் இவரை கல்யாணம் செய்திருக்கேன் ” என்றாள் .
இதழ்யா சொல்வதை கேட்டு மொத்தக்குடும்பமும் அதிர்ச்சியாகி அவளை பார்க்க… அங்கே வந்த இன்ஸ்பெஸ்க்டர் “நீங்க சொல்ற மாதிரி இவரை விரும்பி கல்யாணம் செய்துக்கிட்டதா இருந்தா அப்போ இதை விடியோவில் இருக்குறது பத்தி சொல்ல முடியுமா ?” என்று அவள் முன்பு தன மொபைலை நீட்டி அதில் இதழை மண்டபத்தில் இருந்து ராஜன் தூக்கி வருவதையும் . அவனிடம் இருந்து தப்பிக்க இதழ் முயற்சிப்பதையும் காட்டினார்.
அதில் உள்ளதை பார்த்ததும் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இதழ் விழித்தவள் பின் போலீசை பார்த்தது ” இந்த வீடியோவில் இருக்கறதை பார்த்து நீங்க எப்படி உண்மைன்னு நம்பி என்கிட்டே கேக்குறீங்களோ.. அதே போல என் வீடு ஆளுங்களும் நம்பனும்னு நான் வேணும்னே நாடகம் ஆடினேன் . அப்போதானே அவங்க என்ன பண்றதுனு தெரியாம குழம்பி போய் இருப்பாங்க . அந்த நேரத்துல நான் மண்டபத்தை விட்டு எந்த பிரச்னையும் இல்லமம தப்பிச்சு வரமுடியும் ,அதனால் தான் இந்த மாதிரி நான் நாடகம் ஆடினேன் ” என்றாள்
இதழ்யா சொல்வதை நம்புவதா ? வேண்டாமா ? என்று அவள் குடும்பம் மொத்தமும் குழப்பத்தில் அவளை பார்த்துக்கொண்டு நின்று இருக்க..
“அப்போ நீங்க விரும்பி தான் இவனை கல்யாணம் செய்துக்கிட்டிங்களா ? அவன் உங்களை கட்டாயப்படுத்தி தூக்கிட்டு வந்து உங்க கழுத்துல தாலி கட்டளை . அப்படித்தானே நீங்க சொல்றிங்க ” என்றார் இன்ஸ்பெக்டர் .
அவர் கேட்டதும் “இல்ல இன்ஸ்பெக்டர் இவன் யாருன்னே எனக்கு தெரியாது என்னை பலவந்தமா கடத்திட்டு வந்து என் கழுத்துல என் விருப்பம் இல்லாம தாலி கட்டிட்டான் ” என்று கத்தி சொல்ல வேண்டும் போல் தோன்றியது இதழ்யாவிற்கு .
ஆனால் எங்கே தான் உண்மையை சொல்லி அதனால் தன் குடும்பம் மொத்தமும் ஆபத்தில் மாட்டிக்கொள்ளுமோ என்று பயந்தவள் தன் அருகில் வந்து நின்ற ராஜனை பார்த்தாள் . அவனோ பார்வையாலேயே அவளை மிரட்டி தன் மீசையை முறுக்கிக்கொண்டு “அதான் கேக்குறாங்க இல்ல பாப்பா… சொல்லு … ” என்றான் தெனாவெட்டாக .
“சொல்லும்மா… எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லு. இன்ஸ்பெக்டர் இருக்காரு நம்ம குடும்பம் மொத்தமும் இங்க தான் இருக்கு. நீ பயப்படாம சொல்லு டி… ” என்று சகுந்தலா இதழ்யாவிடம் வந்து அவள் வாழ்க்கை கேட்டுவிடக்கூடாது என்று மீண்டும் அழுத்தி கேட்க,,,
“ஐயோ ! அண்ணி உங்களுக்கு எல்லாம் ஒரு முறை சொன்னா புரியாதா … நான் தான் சொல்றேனே எனக்கு இவரை பிடிச்சிருக்கு. எங்கே என்னோட காதலை உங்ககிட்டே சொன்னா வேணாம்னு மறுத்திருவிங்கன்னு தான் உங்க யார்கிட்டேயும் இவரை பத்தி சொல்லாம வந்து இவரை கல்யாணம் செய்துக்கிட்டேன். ” என்றவள்.
“சார் நான் இவரை விரும்பி தான் கல்யாணம் செய்துகிட்டேன். என்னை இவர் கடத்திட்டு வரல .. போதுமா?” என்றாள் இன்ஸ்பெக்டரை பார்த்த்து .
“ஏன் மா பார்த்தா நல்ல விபரமான பொண்ணா இருக்க… இவனே ஊருக்குள்ள கந்துவட்டிக்கு கட்ட பஞ்சாயத்து செய்றவன்கிட்டே அல்லக்கையா வேலை பாக்குறான் . இதோ இந்த் ஆளுகிட்டே பணம் வாங்கினவங்க யாரும் திருப்பி கொடுக்க முடியாம போயிடுச்சுன்னா அவங்க வீடு புகுந்து கிடைக்குறதை எடுத்துட்டு பணம் வாங்குனவனை அடிச்சு கையை காலை ஒடைச்சிட்டு வரவனை நீ கல்யாணம் செய்திருக்க… இப்படி அல்லக்கை வேலை பாக்குறவனை கல்யாணம் செய்துட்டு அவன் கூட எப்படி நீங குடும்பம் நடத்த போற… ” என்றார் இன்ஸ்பெக்டர் ராஜனை முரைத்துக் கொண்டே .
“ஹலோ போலீசு… என்னய்யா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி என் பாப்பா மனசை மாத்தலாம்னு நினைக்குறியா… அதான் இல்ல… என் பாப்பா லவ் அவ்ளோ ஸ்டார்ங் . நீ என்ன பேசினாலும் என் பாப்பா கரையாது அதை நியாபகத்துள வெச்சிட்டு பேசு சரியா ?” என்றவன் இன்ஸ்பெக்டரையும், இதழ்யாவின் குடும்பத்தையும் பார்த்து .
“இந்த இன்ஸ்பெக்டர் சொன்னது மாதிரி நான் அல்லக்கை வேலை தான் செய்யுறேன் இலேன்னு சொல்லல… எங்க அண்ணன்கிட்டே வட்டிக்கு பணத்தை வாங்கிட்டு கொடுக்க மாட்டேன்னு ஏமாத்திட்டு போறவன்கிட்டே கரெக்ட்டா நான் வசூல் பண்ணி கொடுக்கிறேன் , அவனுங்க ஒழுங்கா கொடுத்தா நான் ஒழுங்கா வாங்கிட்டு வருவேன். இல்ல எவனாவது வீம்பு பண்ணினா அப்பறோம் என் கை பேச வேண்டி வரும் . அதுக்காக நான் ஒன்னும் ரவுடி எல்லாம் கிடையாது . இங்க பாரு மச்சான் உன் தங்கச்சியை பத்தி நீ கவலையே படாத .. அவளை நான் உன்ன விட நல்லாவே பார்த்துப்பேன் சரியா ” என்றவன் இதழ் அருகில் வந்து அவள் தோளில் கைபோட்டு நின்று கொள்ள…
அதை பார்த்த சதாசிவம் ராஜனை பார்த்து இதழ் மீதிருந்த அவன் கையை எடுக்க சொல்லி ஜாடை செய்ய… சட்டென்று அவள் மீதிருந்து கையை விலக்கிக்கொண்டு சற்று தள்ளி நின்றான் ராஜன் .
” டேய் ராஜன் இவங்க எல்லாம் உன்னை பார்த்து எவ்ளோ கேவலமா பேசிட்டாங்க டா.. வார்த்தைக்கு வார்ததை நீ அவரை அண்ணான்னு கூப்டிரே இல்ல … இனி நீ அவருக்கு கீழ அல்லக்கையா வேலை பார்க்க வேண்டாம் . நம்ம ஏலத்துல எடுத்திருக்க மார்க்கெட்டை நீ எடுத்துக்க… அங்கே இருக்க 140 கடையும் உனக்கு எழுதி கொடுக்கிறேன் . அந்த கடை வாடகையை வாங்கி நீ தொழில் பண்ணு . இனிமேல் எவனும் உன்னை அல்லக்கையின்னு சொல்ல கூடாது . நீயும் இப்போ 140 கடைக்கு முதலாளி சரியா ” என்றார் தேன்மொழி .
அதை கேட்டதும் சதாசிவத்துக்கு அதிர்ச்சியானது . இருப்பதிலேயே அவருக்கு வாடகை , வட்டி என்று நிறைய வருமானம் வருகிறது . அதன் கான்ட்ராக்ட்டை ராஜன் பெயரில் தேன்மொழி மாற்றி தருவதாக சொன்னதில் அவருக்கு உடன்பாடு இல்லை . இருந்தும் இப்போது அதை பற்றி பேசுவது சரியாக இருக்காது என்று நினைத்தவர் அமைதியாக நின்றுவிட..
“அப்பறோம் என்ன இன்ஸ்பெக்டர் அந்த பொண்ணே அவளுக்கு பிடிச்சு தான் இந்த கல்யாணத்தை செய்துகிட்டான்னு சொல்றாளே அப்பறோம் என்ன இங்கயே நின்னுட்டு இருக்கீங்க . போங்க போய் ஆகுற வேலையை பாருங்க ” என்று தேன்மொழியின் அண்ணன் மணிகண்டன் கூற..
இன்ஸ்பெக்டர் அதற்கு மேலும் எதுவும் செய்யமுடியாது என்று புரிந்தவர் இதழ்யாவின் அண்ணனிடமும், அப்பாவிடமும் வந்தவர் . “உங்க வீட்டு பொண்ணு ஸ்டோரங்கா இருக்கும்போது இனி எங்களால எதுவும் செய்ய முடியாது. வேணும்னா நீங்க மறுபடியும் இன்னொரு முறை உங்க பொண்ணுக்கிட்டே பேசிப்பாருங்க. அவங்க மனசை மாத்த முடிஞ்சா உங்க கூட கூட்டிட்டு வந்திருங்க ” என்றார்.
“இல்ல இன்ஸ்பெக்டர் இனி அவ கிட்டே பேசி எந்த பிரயோஜனமும் இல்லை . அவ தான் தெளிவா சொல்லிட்டாளே இனி என்ன பேசி அவ மனசை மாத்துறது . நாங்க கொடுத்த கேஸை வாபஸ் வாங்கிக்கிறோம். என் பொண்ணு வாழப்போற வீடு இது . இங்க அவ சந்தோசமா இருந்தாலே எனக்கு போதும் ” என்ற குமரன் இதழ்யாவை பார்க்க .
“அப்பா எப்படியாவது என்னை இந்த கும்பல்கிட்டே இருந்து கூட்டிட்டு போய்டுங்க… எனக்கு இவனை பிடிக்கல… ” என்று உள்ளுக்குள் கதறினாள் இதழ்யா .
“அதான் என் மாமாவே சொல்லிட்டாரே அப்பறோம் என்ன பாப்பா வா நாம உள்ள போகலாம் ” என்று அவளை கூட்டிக்கொண்டு உள்ளே செல்ல..
“டேய் இருடா எதுக்கு இப்படி அவளை உள்ளே கூட்டிட்டு போறதுலையே குறியா இருக்கா… ஒரு நிமிஷம் இரு ” என்ற தேன்மொழி
