EPISODE 1
ஏ இடிச்ச பச்சரிசி
புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ
சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க…
தை மாசம் வந்துடுச்சு
கால நேரம் சேந்துடுச்சு
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு
மேளச்சத்தம் கேட்டுடுச்சு
மேகம் கருத்துருச்சு
மாரி மழை பெஞ்சுடுச்சு
மண்ணில் மணம் ஏறிடுச்சு
மஞ்சள் நிறம் கூடிடுச்சு
என்ற பாட்டுக்கு இளசுகள் சேர்ந்து மணமேடையில் முன்பு ஆடிக்கொண்டு இருக்க… அவர்கள் பின்னால் அழகு பதுமையாய் மயில்வண்ண நிறத்தில் பட்டுடுத்தி மிகவும் எளிமையாக மேக்அப் போட்டு சரமாக மல்லிகை மணக்க அன்ன நடை நடந்து மெதுவாக குனிந்த தலை நிமிராமல் மேடை நோக்கி நடந்து வந்தாள் . எந்த ஒரு சந்தோசமோ , ஆர்வமோ எதுவும் அவள் முகத்தில் இல்லை . அமைதியாக மேடை நோக்கி வந்தாள் இதழ்யா .
“ஏய் முகத்தை கொஞ்சம் சிரிச்சா மாதிரி வெச்சிட்டு வாயேன் டி… அங்க பாரு எல்லாரும் உன்னையே தான் பார்க்குறாங்க ” என்று மாதவியின் நெருங்கிய தோழி வள்ளி .
“ஏய் எல்லாரும் பாக்குறாங்கன்னா அதுக்காக நான் பல்லை காமிச்சிட்டு வரணுமா ? என்னால எல்லாம் அப்படி வர முடியாது டி ” என்றாள் இதழ்யா .
“ஏய் நீ இப்படி வந்தா பாக்குறவங்க எல்லாரும் என்ன நினைப்பாங்க . உங்க வீட்டுல உனக்கு பிடிக்காம இந்த கல்யாணத்தை பண்ணி வெச்சுட்டாங்கன்னு நினைக்க மாட்டாங்களா ?”என்றாள்.
“நினைச்சா நினைச்சிட்டு போகட்டும். நான் அடுத்து படிக்கணும்னு எவ்ளோ சொல்லியும் கேட்காம எனக்கு இந்த கல்யாண ஏற்ப்பாட்டை பண்ணி வெக்குறாங்கள்ல .. அவங்களை பத்தி எல்லாரும் தப்பா நினைச்சா எனக்கு எந்த பிரச்னையும் இல்லை ” என்றால் இதழ்யா .
“ஏய் உனக்கு இப்போ படிக்கணும் தானே இப்போ என்ன கேட்டு போயிருச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் புருஷன் வீட்டுக்கு போய் கூட நீ படிக்கலாம் தான டி…” என்றாள் வள்ளி .
“அப்போ நீ போய் அவனை கல்யாணம் செய்துக்க .. ” என்று குனிந்த தலை நிமிராமல் மெல்ல நடந்தபடி வள்ளியை கடுப்பேற்றினாள் இதழ்யா .
“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை . ஒழுங்கா முகத்தை வெச்சிட்டு வா… உன்னை கட்டிக்க போறவரு உன்னையே பார்த்துட்டு இருக்காரு மேடையில் உக்காந்துட்டு ” என்று மேடையில் மணவறையில் அமர்ந்து இருந்த மாப்பிள்ளையை பார்த்த வள்ளி அவனும் அவளை பார்க்க லேசாக புன்னகைத்து வைத்தாள் .
“அவன் பார்த்தா பார்த்துட்டு போறான் போடி … ” என்று முன்பை விட முகத்தை உம்மென்று தூக்கி வைத்துக்கொண்டு மேடைஏறினாள் இதழ்யா .
மேடையேறியதும் ” இதழ் … என்ன இது முகத்தை இப்படி வெச்சிட்டு மேடையேறி வர… எல்லாரும் என்ன நினைப்பாங்க கொஞ்சம் சிரிச்ச மாதிரி வாயேன் ” என்று அவளை அதட்டாமல் செல்லமாக கண்டித்தார் அவள் அண்ணி சகுந்தலா.
அவரை வலி நிறைந்த ஒரு பார்வை பார்த்துவிட்டு தலை கவிழ்ந்து கொண்ட இதழ்யா “எனக்கு படிக்கணும் அண்ணி ..” என்றாள் மெதுவாக .
“கல்யாணம் முடியட்டும் நானே மாப்பிளை தம்பிகிட்டே பேசி நீ படிக்க ஏற்பாடு பண்றேன் . இப்போ கொஞ்சம் முகத்தை சந்தோசமா வெச்சிட்டு வா இதழ் … ” என்று அவளை அழைத்து வந்து மணமேடையில் அமர வைத்ததவர் ஐயர் கொடுத்த மாலையை வாங்கி அவள் கழுத்தில் போட்டுவிட்டு பின்னால் நின்று கொண்டார்.
இதழ்யா இனி தான் என்ன நினைத்தாலும் தன் வாழ்க்கையை யாராலும் காப்பாற்ற முடியாது என்று கனத்த இதயத்தோடு இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள தன்னைத் தானே தேற்றிக்கொள்ள முயன்று கொண்டு அமர்ந்து இருந்தாள் .
ஐயர் மந்திரங்களை சொல்லி அவள் கையில் பூஜை செய்ய மலர்களை கொடுத்து அவள் முன்பு பிடித்து வைத்து இருந்த மஞ்சள் பிள்ளையாருக்கு சமர்ப்பிக்க சொன்னார்.
அவள் அருகில் அமர்ந்து இருந்த புதுமாப்பிள்ளையும் பூஜைகளை அவளோடு சேர்ந்து ஆர்வமாக செய்துகொண்டு இருந்தான் முத்து .
இருவரும் அருகருகில் அமர்ந்து இருந்தாலும் முத்து மட்டுமே அடிக்கு ஒரு தடவை அவளை பார்த்தானே ஒழிய இதழ்யாவின் கடைக்கண் பார்வை கூட அவன் மேல் விழவில்லை. அவள் வெட்கப்படுகிறாள் என்று முத்து நினைத்துகே கொண்டான் .
அவளிடம் “இப்படியே வெட்கப்ட்டுட்டு என்னை பார்க்காம எவ்ளோ நேரம் இருக்க போற.. ” என்றான் நெருங்கி வந்து.
அதை கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் தன் பார்வையை தாழ்த்திக்கொண்டாள் .
மேடையில் அவரைகளை சுற்றிலும் வந்து கூடி இருந்த இரு குடும்பத்தினரும் இவர்கள் இருவரையும் பார்த்து ஜோடி பொருத்தத்தை சந்தோசப்பட்டனர் .
அனைத்து சண்டைக்கு சம்பிரதாயங்களும் முடிந்து தாலியை வள்ளியிடம் கொடுத்து அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வர சொன்னார் ஐயர்.
முதலில் இதழ்யாவின் அப்பா, அம்மா குமரன் , வாணி இருவரிடமும் மாப்பிள்ளையின் பெற்றோரிடமும் பிறகு வந்திருந்த மற்றவர்களிடமும் ஆசி வாங்கிவிட்டு வந்து ஐயரிடம் வந்து தட்டை நீட்டினாள்.
அதை வாங்கியவர் அட்சதை போட்டு மாங்கல்யத்தை ஆசிர்வதித்தவர் குமரன் வாணியை பார்த்து “தாலியை யார் எடுத்து கொடுத்து இவங்களை ஆசீர்வாதம் பண்ண போறாங்க” என்றார் தாலியை கையில் எடுத்துகே கொண்டே கேட்டார்.
“இதோ என் அம்மாவும், அப்பாவும் இருக்காங்க ஐயரே,,, என் அப்பாவுக்கு 80 வயசாகுது நல்லா வாழ்ந்தவங்க அவங்க ஆசீர்வாதம் பண்ணி கொடுத்தா போதும் “என்ற வாணி .
“அம்மா அப்பாவை கூட்டிட்டு வாங்க ” என்று அவரை அழைக்க …
மேடைக்கு அருகில் போடப்பட்டு இருந்த சேரில் அமர்ந்து இருந்தவரை மெல்ல கைத்தாங்கலாக பிடித்து மேடைக்கு அழைத்து வந்தார் . கைத்தடியுடன் மணமக்கள் அருகில் சென்று நின்றார்.
அவர் கையில் ஐயர் தாலியை கொடுக்க அதை வாங்கிய பெரியவர் “கடவுளே !! என் பேத்தி நல்ல படியா அவ புருஷனோடு சந்தோசமா வாழனும் ” என்று கண்மூடி மாங்கல்யத்தை கையில் வைத்துக்கொண்டு வேண்டியவர் கண்திறந்து தன் பேத்தியை பார்க்க…
இதழ்யா அங்கு இல்லை குழப்பமாக சுற்றிலும் பார்க்க… அப்போது அவர் முன்பு வாட்டசாட்டமாக ஒரு ஆள் நின்றவன் “என்ன பெருசு உன் பேத்தியை காணோம்னு பாக்கறியா … ” என்று நக்கலாக சிரித்தவன் “அங்க பாரு உன் பேத்தியை எங்க அண்ணன் எப்படி தூக்கி தோள்ல போட்டுட்டு போறாருன்னு ” என்றான் .
அவன் சொன்ன திசையை திரும்பி பார்க்க… இதழ்யாவை தோளில் தூக்கிப் போட்டுகொண்டு மேடையில் இருந்து இறங்கிக்கொண்டு இருந்தான்.
“ஐயோ ! என் பொண்ணை விடுடா … அவளை எங்க தூக்கிட்டு போற… என் பொண்ணை விடுடா ” என்று தூக்கி செல்பவனிடம் கெஞ்சிக்கொண்டே அவன் பின்னால் ஓடினார்கள் குமரனும், அவன் பின்னால் வாணியும் .
அவர்கள் கெஞ்சல்களை காதில் வாங்கிக்கொள்ளாமல் வேகமாக இறங்கியவன் யாரை பற்றியும் கவலைப்படாமல் மண்டபத்தை விட்டு வெளியேறி இருந்தான். அவனை செல்ல விடாமல் தடுத்தவர்கள் தரையில் ஐயோ … அம்மா என்று அலறிய படி கிடந்தனர் .
இதழ்யாவை தூக்கிவந்து தன் மஹிந்த்ட்ரா தோர் ஜீப்பில் தூக்கி போட்டு கதவை சாற்ற போக… “என்னை விட்டுடுங்க… ப்ளீஸ் என்னை எதுவும் செய்துடாதிங்க. நான் எங்கையும் வரல.. ” என்று அவனை கதவை சாற்றவிடாமால் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள்.
அவளை பார்த்து எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாதவன் சிரித்துக்கொண்டே அவள் கையை தட்டிவிட்டு கதவை சாற்றி லாக் செய்தவன் சுற்றிவந்து ஜீப்பில் ஏற … அவனோடு வந்த அவனது சகாக்கள் பின் இருக்கையில் ஏற… அடுத்த நொடி ஜீப் புயலாக அங்கிருந்து கிளம்பியது .
ஐயோ அம்மா என்று அலறியபடி பின்னால் சென்றவர்கள் எல்லாம் செய்வதறியாது நின்று இருந்தனர்.
திருமணத்திற்கு வந்து இருந்தவர்கள் தங்களுக்குள் நடந்ததை பேசிக்கொண்டு இருக்க…
குமாரனிடம் வந்த மாப்பிள்ளை “மாமா யாரு? அவன் எதுக்காக இதழ்யாவை தூக்கிட்டு போனான் ” என்று சாதாரணமாக வந்து அவரிடம் கேட்டான்.
அவனை என்ன செய்வது என்பது போல பார்த்தவர்
” அவன் தான் இந்த ஊர்ளையே பெரிய ரவுடி .” என்றார் .
“ரவுடியா! அவன் எதுக்காக இதழ்யாவை தூக்கிட்டு போறான் . அவன்கிட்டே நீங்க ஏதும் பணம் கிணம் வாங்கி இருந்திங்களா? இல்ல… இதழ்யாவுக்கும் அவனுக்கும் எதுவும் பழக்கம்… ” என்று சந்தேகமாக அவரிடம் கேட்க …
அவன் கேட்டதில் வலியோடு பார்த்தவர் “என் பொண்ணு அப்படி பட்டவ கிடையாது . அவளை வெளியே கடைத்தெருவுல எங்கையோ பார்த்துட்டு அவபின்னாடியே சுத்தி சுத்தி வந்தான்.” என்றார் .
“அப்போ அவனை பத்தி போலீஸ்ல கம்பளைண்ட் கொடுக்க வேண்டியது தானே … இப்போ பாருங்க பாவம் இதழ்யா அவ தான் அவன்கிட்டே மாட்டிக்கிட்டா ” என்று அந்த ரௌடியை எதிர்க்க தைரியம் இல்லாமல் இவ்வளவு நேரம் ஒதுங்கி நின்று இருந்தவன் இப்பொது வந்து அவரிடம் கேள்வி கேட்டுக் கொண்டு நின்று இருக்கிறான் .
“போலீஸ் எல்லாம் எதுவுமே அவனை செய்ய முடியலை … அவங்களை எல்லாம் பணத்தை கொடுத்தது வாயை அடைச்சிட்டான் “என்று தலை கவிழ்ந்தவர் தன் பெண்ணை எப்படி அவனிடம் இருந்து மீட்பது என்று தெரியாமல் கவலையில் அப்படியே மண்டப வாசலில் அமர்ந்துவிட்டார் .
இதழ்யாவை தூக்கி சென்ற அந்த ரவுடி யாருன்னு தானே யோசிக்கிறீங்க அவன் பேரு ராஜன் இப்போதைக்கு அதை பற்றி மட்டும் தான் சொல்ல முடியும் . மாற்றத்தை எல்லாம் அடுத்தடுத்த எபிசோடில் படிச்சு தெரிஞ்சுக்கோங்க சரியா…
ஆஹ் !! அப்பறோம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் ராஜன் இதழ்யாவை தூக்கிட்டு போறது இதோட சேர்த்து ரெண்டாவது முறை . அவன் இதுக்கு முன்னமே ஒரு முறை அவ எக்ஸாம் முடிச்சிட்டு வந்த அப்போவே தூக்கிட்டு போய்ட்டான் .
அப்போ தூக்கிட்டு போனவன்கிட்டே இருந்து எப்படி இதழ்யா தப்பிச்சு வந்திருப்பான்னு தானே யோசிக்கிறீங்க … அவ எங்கெங்கே தப்பிச்சு போனா … ராஜன் தான் அவளை திருப்பி கொண்டு வந்து இதழ்யா வீட்டுக்கே கொண்டு பொய் விட்டுட்டு வந்துட்டான்.
சரி அவன் ஏன் தூக்கிட்டு போனான் திரும்ப ஏன் திருப்பி கொண்டு வந்து அவளை அவ வீட்டுலையே விட்டுட்டு வந்தான். அப்பறோம் மறுபடியும் இப்போ எதுக்கு கல்யாண மண்டபத்துல சரியா இதழ்யா கல்யாணத்து அப்போ வந்து மறுபடியும் தூக்கிட்டு போறான் . என்னனு தெரிஞ்சுக்கலாம் வாங்க …
ராஜனின் ஜீப் ஒரு பெரிய மாளிகையின் முன் வந்து சர்ரென்று பிரேக் போட்டு நின்றது . ஜீப்பில் இருந்து இறங்கியவன் இதழ்யாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்ல…
கார் கதவை பிடித்துக்கொண்டு அவனோடு செல்ல மறுத்தவளை பார்த்தவன் அவள் கையை எடுத்திவிட்டு தூக்கி தோளில் போட்டுகொண்டு படியேறி உள்ளே சென்றான்.
“டேய் என்ன விடுடா .. என்ன விடு.. ” என்று அவன் தோள்களில் இருந்து கீழே இறங்க திமிறினாள் .
ஒரு பெரிய பங்காளவிற்குள் நுழைந்தவன் இதழ்யாவின் அந்த வீட்டின் மாஸ்டர் பெட் ரூமில் உள்ளே தள்ளி கதவை அடைத்துவிட்டு வெளியே வர.. அவனை ஏவிய சதாசிவம் அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தார்.
அந்த பங்காளவிற்க்கு சொந்தக்காரர் தான் சதாசிவம் “டேய் ராஜன் எங்க அந்த குட்டி.. அவளை பார்த்ததில் இருந்து என் கை பரபரக்குது ” என்று அவனிடம் வந்தார்.
“அண்ணா உங்க ரூம்ல தான் இருக்கா… நீங்க போங்க நான் பாத்துக்கிறேன் ” என்று அவரை அனுப்பிவிட்டு வாசலுக்கு வந்தான். அவருக்கு காவலுக்கு வெளியே நின்றான்.
“ஏய் குட்டி.. இன்னிக்கு நீ என்கிட்டே இருந்து மிஸ் ஆகா வாய்ப்பே இல்லை.. உன்னை அனுபவிக்க எவ்ளோ நாள் காத்துட்டு இருந்தேன் தெரியுமா… ” என்று ஆர்வமாக இதழ் இருந்த தன் பெட் ரூம் கதவை திறக்க…
அதுவரை பயத்தில் என்ன செய்வது , எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் அழுது கொண்டு இருந்த இதழ் சதாசிவத்தை பார்க்க.. அவளை மணக்கோலத்தில் தலையில் நிறை மல்லிகைப்பூவோடு பார்த்தவருக்கு அவள் மீது மேலும் ஆசை அதிகம் ஆனது. அவளை ரசித்துக்கொண்டே தன் அறைக்குள் செல்ல போக…
“அண்ணா..! ” என்று ராஜனின் குரல் அப்போது அவர் கதை கிழிக்க…
நின்றவர் திரும்பி குரல் வந்த திசையை பார்க்க வேகமாக அவரிடம் வந்தவன் அவரை உள்ளே நுழைய விடாமல் பிடித்து வெளியே இழுத்து வந்தான்.
