EPISODE -1 (ஊர் திருவிழா)
பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பாட விளையாட நான் மே..டை ஆகட்டுமா..
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா..
பாசமுள்ள பாண்டியரு..
பாட்டுக்கட்டும் பாவலரு.. என்ற பாடல் வீதியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. வீதிகளில் விழாக்கோலம் போல வண்ண காகிதங்களும், மாவிலை தோரணம், மற்றும் அனைத்து வீதி வளைவில் ரேடியோ குழாயில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, ஊர் திருவிழா விசேஷம் என சொல்லாமல் சொல்லியது ஜோடனைகள்.
“செம்பா! ஹே செம்பருத்தி குத்து விளக்கு ரெடியா?” ஜெயக்கொடி ஒரு பக்கம் கத்திக் கொண்டிருக்க,
“செம்பா கோலம் போட்டாச்சா?” என சங்கவி இன்னொரு பக்கம் தயாராகி கொண்டே வந்தாள். “ஹே செம்பா எங்கே இருக்க? அகிலா அக்கா பூஜையறையில் எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்க சொன்னாங்க! எங்கே போனா இவ? ” என தனலட்சுமி இன்னொரு பக்கம் தனது நகைகளை சரி செய்த படி பட்டு புடவையில் வந்தாள்.
ஆம் ஜெயக்கொடி சவுந்தரபான்டியன் குடும்பத்தின் இரண்டாம் மருமகள். தனலட்சுமி கடைசி மருமகள். சங்கவி அந்த வீட்டின் பெண் வாரிசு. ஆனால் யாரு இந்த செம்பா? ஹே தனம் அகிலா அக்கா வராங்க அடக்கி வாசி என சத்தமிட்டாள் ஜெயக்கொடி.
தனம் கண் காட்ட உடனே அவளது மகன் மணிகண்டன் “அம்மா பசிக்குது” என்றான். “இரு டா கண்ணா பெரிமா வரட்டும் அண்ணனுக்கு இன்னிக்கி கோவிலில் பரிவட்டம் கட்ட போறாங்க அது வரைக்கும் பொருத்து தான் ஆகணும்” என கூறினாள் தன லட்சுமி.
பவள மாலையும், வைர அட்டிகையும் கழுத்தில் மின்ன, நெற்றியில் சன்னமான திரு நீறு அதற்கு கீழ் சந்தனம், கைகளில் வைர வளையல் குலுங்க உயர் ரக காட்டன் பட்டு கண்களை உருத்தாமல் இருக்க அகிலாவின் கடுமை அனைவர் கண்களையும் உறுத்தியது. இந்த வீட்டின் மூத்த மருமகள் “அகிலாண்டேஸ்வரி” குடும்பத்தில் மட்டும் முதல் இல்லை ஆட்சி அடக்கம் அனைத்தும் அவர் தான். அவரின் கணவன் “ராஜபாண்டியன்” இறந்து 15 வருடங்கள் இருக்கும். அங்கே பேசி கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் அனைத்து வார்த்தைகளையும் உள்வாங்கி கொண்டே வந்தார் அகிலா.
“அக்கா!” என ஜால்ட்ரா தட்ட ஒரு கூட்டம். அதையெல்லாம் எட்டி தள்ளி நிறுத்தியவர். “எல்லாம் ரெடியா? செந்தூர பாண்டியன் எங்கே?” என கேட்கவும்.. அந்த நேரம் ஊர் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் பரிவட்டம் கட்டி பாண்டியனை அழைக்க வந்திருந்தார்கள்.
“அண்ணி எல்லாரும் வந்துட்டாங்க” என ராஜ பாண்டியனின் இரண்டாம் தம்பி செல்ல பாண்டியன் வந்து பணிவுடன் கூற.. அகிலாவின் பார்வை ஜெயக்கொடியின் மீது பாய்ந்தது. உடனே அவள் பதட்டத்துடன் அப்பாவை போய் கூட்டிட்டு வா என முத்து பாண்டியனை அழைக்க அனுப்பி விட்டாள்.
உடனே தனம் இது தான் நேரம் என “காலையில் இருந்து இந்த செம்பாவை கூப்பிடுறேன் ஆளையே காணோம்” என அகிலாவின் காது பட கூறினார். தனம் அகிலாவின் சித்தப்பா மகள் அப்படியே தொத்தி கொண்டு செல்ல பாண்டியனை திருமணம் செய்து கொண்டாள். அகிலாவின் இடத்துக்கு வர வேண்டும் என்ற எண்ணம்.
“செம்பருத்தி” என சத்தமாக அழைத்தார் அகிலாண்டேஸ்வரி.
“பெரிமா இதோ வந்துட்டேன்”என சொல்லிக் கொண்டே அவள் இறங்கினாள்.
பெரியம்மா என்ற வார்த்தை அகிலாவின் மனதில் பூகம்பத்தை ஏற்படுத்த கண்களால் எரிக்கும் அளவுக்கு கோபத்துடன் திரும்பி “யாரடி உனக்கு பெரியம்மா” என உள்ளுக்குள் கனன்று கொண்டே திரும்பி பார்த்தவரின் முகம் அடுத்த நொடி மாறி போனது.
“அம்மா நானும் பாப்பாவும் ரெடி” என கண்ணகுழி புன்னகையுடன் செந்தூர பாண்டியன் இறங்கினான். அவனுக்கு அருகில் செம்பா என்னும் செம்பருத்தி இருவரின் முக ஜாடையும் கிட்டத்தட்ட ஒன்று போல ஆனால் வாயும் வயிறும் வேறு தானே! செம்பருத்தியை பார்க்க பார்க்க அகிலாவிற்கு கோபமாக வந்தது அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கி கொண்டார்.
ராஜபாண்டியனின் வாரிசு என்று அடையாளம் காட்ட அவருக்கு இருந்ததைப் போலவே கண்ணகுழியை செந்தூரப் பாண்டியனும், தாடையில் குடும்ப மச்சத்தை செம்பருத்தி பெற்றிருந்தார்கள் அப்போ செம்பருத்தி அகிலாண்டேஸ்வரியோட பொண்ணா? நிச்சயமா இல்லை.
செம்பா மற்றும் செந்தூரப் பாண்டியன் இருவரும் அகிலாவின் அருகில் வந்தார்கள். உடனே அகிலா, “ஜெயக்கொடி” என்று அதிகாரமாக அழைத்தார்.
அக்கா இதோ வந்துட்டேன் என்ற வேகமாக ஜெயக்கொடி மற்றும் முத்துப்பாண்டியன் இருவரும் வந்து நின்றார்கள். அவர்களுடன் சங்கவி வந்தாள்.
அகிலா சங்ககியை பார்த்து “பாப்பா உள்ள போய் விளக்கு ஏற்று!” என்று கூற, “அம்மாஆஆ! நம்ம செம்பருத்தி இருக்கா! அவ தான நம்ம வீட்ல அடுத்த பொண்ணு. அவதான் எல்லாத்தையும் பண்ணனும்” என்று செந்தூரப் பாண்டியன் தன் தங்கைக்கு மரியாதையை நிலை நாட்ட கூறினான்.
“ம்ம் அவளும் தான்” என பற்களை கடித்தபடி “அப்படித்தானே செம்பா!” என்று அகிலா அவளைப் பார்த்து முறைக்க, எச்சிலை கூட்டி விழுங்கிய செம்பா “ஆமா பெரியம்மா” என்று பதட்டத்துடன் கூறினாள்.
“சரி சீக்கிரம் போங்க” என்று இருவரையும் கண்டித்து கூற, சங்கவி முன்னாள் நடக்க செம்பா அவளை பின்தொடர்ந்து பூஜை அறையில் விளக்குக்கு எண்ணெய் ஊற்றி திரி வைத்து பூ வைத்து பொட்டு என அனைத்தையும் செய்ய சங்கவி நோகாமல் விளக்குகளை ஒளிர வைத்தாள்.
சரி நம்ம கிளம்பலாமா என்று செந்தூரப்பாண்டியன் செம்பாவை பார்த்து கூற.. சென்பா உடனே அகிலாவை பார்த்தாள்.
“அதற்குள் எப்படி? ஆரத்தி எடுக்க வேண்டாமா?” என்று கண்காட்டினார். அதற்குள் 7 பெண்கள் பெரிய தாம்பூலத்தில் ஆரத்தி கரைத்து வெற்றிலையில் கற்பூரம் வைத்து செந்தூரப் பாண்டியனுக்கு ஆழம் கரைத்தார்கள்.
வெளியில் செண்டை மேளம் முழங்கிக் கொண்டிருக்க செந்தூரன் புன்னகையுடன் “அம்மா என ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று காலில் விழுந்தான்.
ம்ம் சித்தப்பா கிட்டையும் சித்தி கிட்டையும் ஆசீர்வாதம் வாங்கிக்கோ என்று கம்பீரக் குரலில் அவர் கூற, அருகில் இருக்கும் முத்துப்பாண்டி ஜெயக்கொடி இருவரின் காலிலும் விழுந்து சாஷ்டாங்கமாக ஆசீர்வாதம் வாங்கியவன். மாலை மரியாதையுடன் வெளியே வந்தான்.
அதற்குள் சென்பா அவள் தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுஸ் பக்கம் வந்து சேர்ந்தாள். அவனது பார்வை பின்னால் திரும்பிக் கொண்டே இருக்க “என்னப்பா பின்னாடி அப்படி என்னத்த பாக்குற?” என்று அகிலா அதட்டினார்.
“ அம்மா இன்னும் பாப்பா வரவே இல்லையே?” என்று செந்தூரன் கேட்க , “பாப்பாவா? இதோ சங்கவி நம்ம கூடதான வந்துட்டு இருக்கா! மணிகண்டன் கூட வந்தாச்சு. வேற யார் வேணும்? உனக்கு” என்று அகிலா கேட்டார்.
“என்னம்மா அவங்க எல்லாம் சரி தான் நான் நம்ம தங்கச்சியை பத்தி பேசிட்டு இருக்கேன். செண்பாவை பத்தி சொல்லிட்டு இருக்கேன் மா” என்று செந்தூரன் சொல்ல.. “செம்பா!! செம்பா!! செம்பாஆஆ!! என்று அகிலாவின் மனதுக்குள் பூகம்பம் வெடித்தது.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “உனக்கு விஷயம் தெரியாதா? பூஜை அறையில விளக்கு ஏற்றி வைத்திருக்கோம். அது அணையாம நம்ம வீட்டு பொண்ணு தான் பார்த்துக்கணும். நீ தானே சொல்லுவ. வார்த்தைக்கு வார்த்தை உன்னோட பாப்பான்னு. அது அவளோட பொறுப்பு. அதேபோல அவதான் இந்த வீட்டோட மூத்த பொண்ணுன்னு சொல்லுவியே. அதனால அவ இங்க இருந்து விளக்கை அணையாம பாத்துக்கிட்டோம். நம்ம பட்டாபிஷேகம் பரிவட்டத்துக்கு போகலாம்” என்று அழைத்துச் சென்றார்.
“அம்மா” என்று மீண்டும் செந்தூரன் அழைக்க.. அவர் காதில் போட்டு கொண்டதாக தெரிய வில்லை. செந்தூரனுக்கு இப்பொழுது என்ன செய்வது என்று மனம் பரி தவித்தது. உடனே போனை எடுத்து தங்கைக்கு அழைத்தான்.
உடனே தனலட்சுமி அகிலாவின் அருகில் வந்து “அக்கா அங்க பாருங்க செந்தூரன் என்ன பண்ணிட்டு இருக்கான்னு. அவளுக்கு போன் பண்ணி பேசுறான்.” என்று போட்டுவிட அகிலா தன் மகனை ஒன்றும் சொல்ல முடியாமல் முறைத்து பார்த்தார்.
செண்டை மேளம் ஒரு பக்கம் முழங்கிக் கொண்டிருக்க போன் அடித்தது அவசர அவசரமாக போனை எடுத்தாள் செம்பா.
“பாப்பா நீ வரலையா” என்று அந்த சத்தத்தில் கேட்க..
“எனக்காக நீ வேண்டிக்கோ அண்ணா! இங்க விளக்கு பார்த்துக்கணும்னு பெரியம்மா சொன்னாங்கல்ல நான் பாத்துக்கு” என்று மருகிக் கொண்டே கூறினாள்.
தங்கையில்லாமல் இந்த மாலையும் மரியாதையும் பரிவட்டமும் அவனுக்கு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை அவனது தங்கை பாசத்துக்கு இந்த மரியாதை ஈடாகுமா என்று தோன்றியது.
செந்தூரனுக்கு மனமே இல்லாமல் அனைத்தையும் முடித்துவிட்டு அவசர அவசரமாக கோவிலில் இருந்து கிளம்பினான்.
“செந்தூரா எங்க போற?” என்று அகிலாண்டேஸ்வரி கம்பீரமான குரலில் அழைக்க..
செம்பாவை பார்க்க..
– வருவான்.
EPISODE – 2 ( செம்பாவை பார்க்க போறேன்)
“சாமி எல்லாரும் நல்லா இருக்கணும். இந்த ஊரு செழித்து இருக்கணும். எல்லாரும் நோய் நொடி இல்லாம சந்தோஷமா இருக்கணும்” என்று பொதுநலமாக வேண்டியவன். அடுத்த நொடியும் சுயநலமாக வேண்டினான். அவனது சுய நல வேண்டல் கூட தங்கைக்காக மட்டுமே. “என் பாப்பா” என உதடுகள் சிரிப்பை தத்தெடுக்க கண்கள் மூடி இருந்தது.” என் செம்பருத்தி நல்லா இருக்கணும். என் தங்கச்சி ரொம்ப சந்தோஷமா இருக்கணும். அவளுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது. அப்படி ஏதாவது கஷ்டம் இருந்ததுனா! அவளுக்கு கொடுக்காத அது எல்லாத்தையும் எனக்கு கொடு” என்றும் “அவளோட வாழ்க்கை நல்லபடியா அமையனும். நீ தான் அதுக்கு அருள் புரியணும்” என்று சாமியிடம் வேண்டினான் செந்தூரப் பாண்டியன்.
தீபாராதனை காட்டப்பட்டது.. திருநீற்டன் குருக்கள் வந்து நீட்ட ஆரத்தி தட்டை நீட்ட அதை எடுத்துக் கொண்டு அழகாக கண்களை மூடி “தன் தங்கை நன்றாக இருக்க வேண்டும்”என்று நெற்றியில் பூசி கொண்டான். அடுத்த நிமிடம் பரிவட்டத்திற்கான வேலை நடைபெற ஆரம்பித்தது.
மேளதாளங்கள் மற்றும் மத்தளங்கள் முழங்க செந்தூரப் பாண்டியனுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட.. அகிலா கண்களில் பூரிப்புடன் தன் மகனை பார்த்துக் கொண்டிருந்தார்..இன்னொரு பக்கம் அருகில் அவனது சித்தப்பா செல்ல பாண்டியன் கொஞ்சம் பொறாமையுடனும் வருத்தத்துடனும் நின்று கொண்டிருந்தார். ஏனென்றால் கோவிலின் அறங்காவலர் பணியை வழி வழியாக செய்து வருவது சௌந்தர பாண்டியனின் குடும்பம் தான். அந்த பொறுப்பை தற்போதைக்கு எடுத்து செய்து சிரத்தை என சொல்ல முடியாது. பெருமை பீத்திக்கொண்டு செய்து கொண்டிருக்கும் நபர் செல்ல பாண்டியன் தான். ஆனால் மரியாதை மட்டும் தனது அண்ணன் மகனுக்கு கிடைக்கிறதே! என்ற பொறாமை வேறொன்றுமில்லை.
எப்பொழுதுமே செல்ல பாண்டியனுக்கு தன்னை பற்றி பெருமை பீத்திக் கொள்ளும் குணம் மிகவும் அதிகமாக இருக்கும் அதனால் அவர் பெருமூச்சு விட்டபடி பார்த்தார்.
“வந்ததும் வராததுமா, இப்படி அவசரமா எங்க செந்தூரா கிளம்புற?” என்று அகிலாண்டேஸ்வரி சிடுசிடுப்புடன் மகனிடம் கேட்க.. “நம்ம எல்லாரும் இங்க இருக்கும்போது செம்பா மட்டும் வீட்ல இருக்கா! அதனால நான் கிளம்புறேன்” என்று நகர்ந்தான்.
“செந்தூரா நில்லு… நில்லுன்னு சொன்னேன்” என்று அகிலா அதட்ட, தன் அன்னையின் அருகில் வந்தவன். “இனி எனக்கு இங்க என்னம்மா வேலை இருக்கு? உங்களுக்காக தான் இது எல்லாத்தையும் நான் கேட்டக்கிட்டு இருக்கேன். சொல்லப்போனால் இது எல்லாமே சித்தப்பாவுக்கு தான் மரியாதை கொடுக்கணும்.” என்று கூறினான்.
அகிலா பற்களை கடித்த படி “யார எங்க வைக்கணும்னு எனக்கு தெரியும். சரி அன்னதானத்தை தொடங்கி வச்சிட்டு போ” என்று எப்படியாவது செம்பாவையும் செந்தூரணயும் அவர்களின் பாசப்பிணைபபை பிரிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மட்டுமே அகிலாண்டேஸ்வரிடம் இருந்தது.
செந்தூரப் பாண்டியன் தன் அம்மாவை பார்த்துவிட்டு நேராக சங்கவியின் அருகில் சென்றவன். ” பாப்பா இன்னிக்கி உன்னோட கையால தான் நம்ம ஊர்ல அன்னதானம் நடக்கணும். வாங்க” என்று அழைத்து அன்னதானத்தின் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றவன். அனைத்து குடும்பங்களையும் அங்கு விட்டுவிட்டு கண்ண கண்ணிமைக்கும் நொடியில் சென்று விட்டான்.
அதே நரம் இங்கு வீட்டில் செந்தூரப் பாண்டியனின் படத்தை வருடி கொடுத்தவள் கண்களில் நீர் துளிகள். செம்பருத்தியின் நினைவுகள் கொஞ்சம் பின்னோக்கி சென்றது. அவளுக்கு நினைவில்லை ஒரு ஐந்து வயது இருக்கும் மங்கலான விஷயங்கள் மட்டுமே ஞாபகத்தில் இருந்தத. ஆனால் அவளது அம்மா வள்ளி உயிர் விடுவதற்கு முன் கிட்டத்தட்ட கோடி முறை இந்த விஷயத்தை கூறியிருப்பாள்.
சரியாக 13 வருடங்களுக்கு முன்னால் வள்ளி வாரத்திற்கு ஒருமுறை வள்ளியை பார்க்க வருவார் ராஜபாண்டியன்.
ஆம் ராஜபாண்டியனுக்கும் வள்ளிக்கும் திருமணத்திற்கு மேற்பட்ட உறவு. இருவரும் ரகசிய திருமணம் என்றால் அவள் ஊரார் சொல்லுவது போல சின்ன வீடு என்று கூறலாம். ஆனால் வள்ளி கெட்டவள் கிடையாது. மிகவும் நல்ல குணம் கொண்டவள். ராஜபாண்டியனுக்கும் வள்ளிக்கும் எதிர்பாராத விதத்தில் சில விஷயங்கள் நடந்து போக வள்ளியை கைவிட ராஜபாண்டியன் விரும்பவில்லை. அவளை தன் மனைவியாக ரகசியமாக வைத்துக் கொண்டார்.
ராஜபாண்டியனுக்கும் வள்ளிக்கும் செம்பருத்தி என்ற மகள் ஐந்து வயது இருக்கும் எப்பொழுதும் போலவே வள்ளியை பார்க்க வந்திருந்தார். “இல்லங்க என்னால் முடியாதுங்க” என்று வள்ளி தயங்க, “கண்டிப்பா இந்த முறை ஊரு திருவிழாவுக்கு வந்துட்டு போ! எனக்கு பரிவட்டம் கற்றதை பார்க்க உனக்கு ஆசை இல்லையா? எனக்கும் திருவிழாவுல செம்பருத்தி தூக்கி வைத்து கொஞ்சணும்னு, அவளுக்கு விருப்பமானது வாங்கி கொடுக்கணும்னு ரொம்ப ஆசை. கொஞ்சம் கொஞ்சமா வீட்ல சொல்லலாம் என்று பார்க்கிறேன் என்று கூறினார்.
அதைக் கேட்ட வள்ளி மறுக்கும் விதமாக எப்படி ஒத்துக்குவாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க? அகிலாண்டேஸ்வரி பற்றி உங்களுக்கு நிறைய பேர் தெரிஞ்சிருக்கும்! ஆனால் ஊர்ல வெளியூர்காரியா ஒருத்தியா எனக்கு அதைவிட தெரியும். அவங்க பெரிய குடும்பத்து பொண்ணு. நான் வேலைக்கார பொண்ணு என் கூட நீங்க இப்படி ஒரு உறவில் இருக்கிறது அவர்களுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? தெரியுமா? தயவு செஞ்சு இப்படி ஒரு குடும்பத்தை இருக்கிறதையே மறந்திடுங்க. என்னால வர முடியாது” என்று விடாப்படியாக கூறினாள்.
“நீ வேலைக்காரியா உன்னையே எதுக்கு நீ தாழ்த்தி பேசுகிற, படிச்சுக்கிட்டு இருந்த பொண்ணு உன் மேல தெரியாம அன்னைக்கு நடந்த அந்த சம்பவம்…. ” என்று அவர் ஆரம்பிக்க போதும்! பழைய கதை வேண்டாம். “அது நமக்குள்ள தெரியாமல் நடந்து இருக்கலாம். அதுக்கு நீங்க என்னை அங்கீகாரமா ஏத்துக்கிட்டிங்க. எனக்கு அதோட போதும்”
“இல்ல நீ வந்து தான் ஆகணும். எனக்கு செம்பருத்தி என்னோட குலதெய்வம் கோயிலில் வைத்த முடி எடுக்கணும்னு ரொம்ப ஆசை” என்று கூறினார்.
வள்ளி அமைதியாக இருக்க” நீ வந்து தான் ஆகணும். நீ வர உனக்காக வீடு ஏற்பாடு பண்றேன் நாலு நாளைக்கு முன்னாடியே வந்துடுங்க. திருவிழாவுல எப்படியும் நான் பாப்பாவ பாக்கணும். பட்டு சட்டை பாவாடை எல்லாம் போட்டுக்கிட்டு பாப்பா என் கண்ணு முன்னாடி இருக்கணும்னு ஆசை” என்று செம்பருத்தி தலையில் முத்தமிட்டு இருவரையும் பார்த்து அழுத்த பார்வை பார்த்துவிட்டு சென்றார்.
அவ்வளவுதான் அடுத்து ராஜபாண்டியனின் உயிர் பிரிந்த செய்தியை கேட்டு செய்தி தான் அவர்களை வந்து சேர்ந்தது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாளும் வள்ளி தன் கணவனின் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பு மற்றும் பாசத்தை வெளிப்படுத்தியவர். “ஒருக்காலும் இந்த சொத்துக்கும் சுகத்துக்கும் ஆசைப்படக்கூடாது செம்பருத்தி!” என்று மரணப்படுக்கையில் “அவர்கள் எதுவுமே கொடுக்கலனா கூட நீ வருத்தப்படக்கூடாது. நீ இந்த வேலைக்காரியோட பொண்ணு! என்ன கொடுக்கிறார்களோ அதை வாங்கிக் கொண்டு சந்தோஷமாக இரு செம்பா! நீ இந்த வீட்டு பொண்ணு கிடையாது. நீ வேலைக்கார பொண்ணுதான். அதை மனசுல வச்சுக்கோ. என்னைக்கும் அந்த பெரிய வீட்டுல வாழணும்னு நினைக்காத” என்ற ஆயிரம் முறை கூறிவிட்டு இறந்து போனார். அதன் பின் செம்பாவுக்கு தாய்க்கு தாயாக, தந்தையாக அண்ணனாக எல்லாமே செந்தூர பாண்டியன் தான்.
ஊர்க்காரர்கள் அனைவரும் ஆளாளுக்கு கண் காது மூக்கு வைத்து நிறைய பேசினாலும், செம்பருத்தியும் அந்த வீட்டு பெண் தானே! என்று மட்டுமே செந்தூரனின் மனதிலும் சரி முலையிலும் சரி நன்றாக பதிவாகி இருந்தது.
இங்கே கோவிலில்…எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டங்கள்? இத்தனை பிரச்சனைகள் ஏன் செம்பருத்தி முறையாக கோவிலுக்கு வராமல் இருக்கிறாள்? எல்லாம் தன் தந்தை செய்த தவறு என்று நினைத்தவன். அதே மனநிலையுடன் ஜிப்ஸியில் ஏறினான். நினைவுகள் அப்படியே பின்னோக்கி சென்றது.
சரியாக இதே திருவிழா கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன்பு இதே திருவிழாவிற்கு நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் அந்த சம்பவம் நடைபெற்றது. திடீரென்று கோவில் பணிகளை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த ராஜபாண்டியன் ஹாட் அட்டாக்கில் படியேறும் போது நிலை தடுமாறி தள்ளாட்டத்துடன் விழுந்து அங்கேயே உயிர் போனது.
“அய்யய்யோ பெரியய்யா கீழே விழுந்துட்டாரு” என்று அனைவரும் கத்த.. ராஜபாண்டியன் கண்ணீர் அஞ்சலி என்று அடுத்த அரை மணி நேரத்தில் செய்திகள் பரவ.. அந்த செய்திகள் கூடவே சேர்ந்து கொண்டு வந்தது இரண்டு செய்தி உருவங்களாக வள்ளி தன் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு அழுதப்படியே அந்த வாசலில் வந்து நின்றார்.
இந்த செய்தி சௌந்தரபாண்டி எனக்கு மறைமுகமா சௌந்தரபாண்டியனின் காதில் ராஜபாண்டியன்க்கு மறைமுகமாக ஒரு சின்ன வீடு இருக்கும் விஷயம் தெரிந்து போக, அது கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கரைந்து வள்ளி அவளின் கையில் ஐந்து வயது குழந்தையை சுமந்து கொண்டு அங்கு சம்பந்தமே இல்லாமல் அழுது கொண்டிருப்பதை பார்த்து ஊர் அனைத்தும் கதைக்கட்ட தொடங்கினார்கள்.
அதற்கு சௌந்தரபாண்டியன் சரியான தீர்க்கமான முடிவை யோசித்தார். ஏனென்றால் வள்ளியின் கையில் இருக்கும் ஐந்து வயது குழந்தையான செம்பருத்தியின் கன்ன தாடையில் ராஜபாண்டியனின் தாடையில் இருக்கும் குடும்ப மச்சம் இருக்க.. சௌந்தரபாண்டியனுக்கு விஷயங்கள் பிடிபட வேறு வழியில்லாமல் அந்த முடிவை எடுத்தார்.
அகிலாண்டேஸ்வரி தன் கணவனின் அருகில் “என்னை விட்டுப் போயிட்டீங்களே!”என்று அமர்ந்து கொண்டு இருக்க… அந்த நேரம் வள்ளி கையில் குழந்தையுடன் தன் புருஷனை ஜாடையில் கண்ணத்து மச்சத்தில் ஒரு குழந்தையுடன் வந்து நிற்கவும் உள்ளுக்குள் பேரிடியாக இறங்கியது.
– வருவான்
EPISODE – 3 ( செந்தூரா இவள் உன்னோட தங்கச்சி செம்பருத்தி)
“சவுந்தர பாண்டியையா இப்போ என்ன முடிவு எடுக்க போறார்ன்னு தெரியலையே? ஆனால் நான் இப்படி கொஞ்சம் கூட நினைக்கவே இல்ல டி! ராஜ பாண்டியைய்யா யாருக்கும் தெரியாமல் ஊருக்கு வெளியில் இப்படி ஒரு பொண்ணு கூட” என ஒருத்தி சொல்லிக் கொண்டிருக்க, இங்கே ஆண்கள் கூட்டத்தில் “பெரிய இடத்தில் இதெல்லாம் சகஜம் டா! எதுவும் இல்லாதவனே? ஒன்னு வச்சுக்க யோசிக்கும் போது, எல்லாம் இருக்கிற ராஜ பாண்டியய்யா சும்மா இருப்பாரா?, அவருக்கு எல்லாம் தானா வாய்ப்பு வந்து மேலேயே விழும்” என்று பேசிக்கொண்டிருக்க, கடைசியாக அவர்கள் பேசியது தான் அகிலாண்டேஸ்வரியின் காதில் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அப்படி என்ன சொன்னார்கள்? நடுத்தர வயது பெண்கள் அனைவரும் “நம்ம அகிலாண்டேஸ்வரி அம்மா கிட்ட இல்லாதது ஒண்ட வந்த இவள் கிட்ட என்ன இருக்கோ தெரியலையே? எதை பார்த்து ராஜ பாண்டி மயங்கினார்ன்னு தான் டி தெரியல” என ஒரு பெண் சொல்ல, இன்னொருத்தி “அவளோட பேரு வள்ளியாம்! முகத்தை பாரு? எவ்ளோ பாவமா வச்சிட்டு நம்ம அகிலா அம்மா வாழ்க்கைய மறைமுகமா முந்தி விரிச்சு வாழ்ந்திருக்கா! திறமை தான் டி! ஆனால் பாரு அய்யாவோட இறுதி சடங்கு அன்னிக்கு வந்திருக்கான்னா சொத்துக்கு வந்திருப்பா” என ஒரு சிலர் துக்கத்தில் பொய் கண்ணீர் வடித்த படி புறணி பேசினார்கள்.
அவிழ்த்து விட்ட கூந்தலுடன் மல்லி சரத்தை தலையில் வைத்திருந்த அகிலாவின் அருகில் இப்பொழுது வள்ளி அதே போல கணவன் என்ற உரிமையுடன் அருகில் அமர்ந்து ராஜ பாண்டியை தொட்டு அழுவது போல பிரம்மை தோன்ற உள்ளுக்குள் ராஜ பாண்டியின் மீது வெறுப்பும் ஏமாற்றமும் தோன்றியது. உயிரில்லாத அவர் அகிலாவை உயிரோடு புதைத்தது போல உணர்ந்தாள். அது மட்டுமா அகிலாவின் மனநிலைக்கு ஏற்ப சுற்றி இருக்கும் ஆட்கள் அனைவரும் தூபம் போடுவது போல, “மனுசன் ரெண்டு பொண்டாட்டி கட்டி வாழ்ந்திருக்கான் யா! தப்பில்லை என இன்னொரு பக்கமும், சின்ன வீட்டில் எதோ விசயம் இருப்பதால் தானே வச்சிருக்காரு” என நாக்கு மேல் பல்லு போட்டு பேசினார்கள். ஏன் என்றால் செத்தவர் இனி எழுந்து வரவா முடியும் என்ற தைரியத்தில் தான் இந்த பேச்சுகள் ஓடிக் கொண்டிருந்தது.
அந்த நேரம் பார்த்து தன் மச்சான் இறந்து போன விசயம் தெரிந்து 12 வயது மகன் துருவனை அழைத்துக் கொண்டு தன் மகளை பார்க்க ஓடி வந்தார் அசோகன். அங்கு நடந்த விடயங்களை கேட்க கேட்க அவருக்கு நெஞ்சம் பதைக்க அந்த பிரச்னை அடுத்த கட்டமாக பூதாகரம் போல வெடித்தது. அதே நேரம் தான் திருவிழா வேலையாக செல்ல பாண்டியுடன் டவுனுக்கு சென்ற 8 வயது செந்தூர பாண்டியன் வீட்டில் கூட்டம் இருப்பதை பார்த்து என்னாச்சு சித்தப்பா என கேட்டுக் கொண்டே வந்து சேர்ந்தான்.
அப்படி இப்படி என அனைவரும் ஒவ்வொன்றையும் பேச “இப்படியே பேசிக்கிட்டு இருந்தா எப்படி பெரிய வீட்டு காரியம் சட்டு புட்டுன்னு முடிவு எடுங்க. அய்யா சீக்கிரம் காரியம் முடிஞ்சா தான் திருவிழா நடத்தவா? வேண்டாமான்னு முடிவெடுக்க முடியும். ஏன்னா நாளைக்கு காப்பு கட்டி பூ சாட்டியே ஆகணும்” என ஒருவர் சொல்ல.. “சாமிக்கு பூ போட்டு பார்க்கலாம்” என ஊரின் பெரியவர்கள் ஆள் ஆளுக்கு சொல்ல.. என்ன சம்மந்தி இது. எல்லா உரிமையும் என் பொண்ணுக்கு தான் என அசோகன் ஆற்றாமையில் வார்த்தைகளாக வெடித்தார்.
இந்த இடத்தில் வள்ளியையும் அவளின் கையில் இருக்கும் குழந்தையையும் யாரும் கண்டு கொள்ள வில்லை. அங்கு என்ன நடக்கிறதே என்று தெரியாமல் ராஜ பாண்டியனின் பூத உடலை பார்த்து மா அப்பா மா என வள்ளியின் முகத்தை பார்த்து கைகளை நீட்டி கூறி கொண்டிருந்த செம்பருத்தியை பார்த்தான் செந்தூர பாண்டியன். அவனுக்கு அங்கு நடப்பது ஒன்றுமே புரிய வில்லை..
அங்கு அழுது கொண்டிருக்கும் வலியையும் செம்பருத்தி யையும் பார்த்த செந்தூரப் பண்டியன் யார் இவங்க அந்த பாப்பா நம்ம அப்பாவை பார்த்து அப்பான்னு சொல்லுது? என்று விசும்பலுடன் கேட்டான். இதைக் கேட்டதும் சரசு அம்மாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை ஒரு பக்கம் அழுகையாகவும் தன் மகன் இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டானே? என்று வருத்தமாகவும் இருந்தது அவருக்கு. இப்பொழுது பேரன் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? இந்த ஊருக்கு உதாரணமாக இருந்தவன் இப்பொழுது ஊரார் பேசும் வண்ணம் கொண்டு வந்து விட்டானே! கடைசி காலத்திலா இப்படி ஒரு அதிர்ச்சி? எதை நினைத்து நான் அழுவேன் என்று இருந்தது.
“ஆத்தா! சொல்லுங்க அவங்க யாரு? அந்த பாப்பா எதுக்கு நம்ம அப்பாவை பார்த்து கைகாட்டி அப்பா அப்பான்னு சொல்லுது? சொல்லுங்க ஆத்தா?” என்று அழுது கொண்டே கேட்டான் செந்தூரப் பாண்டியன்.
சரசம்மா தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். “ராசா இப்போதைக்கு அந்த பாப்பா உன்னோட தங்கச்சி” என்றார்.
“தங்கச்சியா?” என்று செந்தூரப் பாண்டியன் கேட்க, “ஆமா உன்னோட தங்கச்சி.. அப்பா நம்மளை விட்டு போய்ட்டான். ஆனால் நீ அவளை பத்திரமா பாத்துக்கணும்.சொல்றத மட்டும் கேட்டுக்கணும்.” என்றார்.
“ம்ம்” என தலையசைத்தான் செந்தூர பாண்டியன்..
ராசா அழ கூடாது என சொல்லிக் கொண்டே அவரும் சேர்ந்து அழுதவர் சேலையின் தலைப்பால் முகத்தை துடைத்துக் கொண்டு அவனது கண்களை துடைத்து விட்டவர். “அப்பா நம்மள விட்டு போயிட்டான். ஆனா நீ தான் அம்மாவுக்கு தைரியம் கொடுக்கணும். அவங்களை, பாப்பாவை எல்லாம் நீ தான் பார்த்துக்கணும். நீ நம்ம வீட்டு மூத்த பையன் தானே ராசா! என்று சரசம்மா அழுது கொண்டே பேரனுக்கு ஆறுதல் கூறினார்..
அதற்குள் இங்கு பிரச்சனை அடுத்த கட்டத்தை நெருங்கியிருந்தது. அசோகன் ஒரு பக்கம் பேச இன்னொரு பக்கம் ஊர்க்காரர்கள் பேச சவுந்தரபாண்டியன் அமைதியாக யோசனையில் இருந்தார் ஆளாளுக்கு நம்மளை பேசிட்டு இருக்கோம் சவுந்தரபாண்டி ஐயா வாய தொறந்தா தான் எல்லா பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வரும் என்று அனைவரும் சொல்ல செல்ல பாண்டியன் மற்றும் முத்துப்பாண்டியன் இருவரும் அருகில் வந்து என்னப்பா பண்றது என்று அவர்களின் பார்வை சென்ற இடம் வள்ளி மற்றும் செம்பருத்தி மீதுதான் படிந்தது.
சவுந்தரபாண்டியன் அங்கிருக்கும் அனைவரையும் பார்த்து “அடுத்த கட்டத்துக்கு போங்க! காரியத்துக்கான வேலையை ஆரம்பிக்கலாம். காப்பு கட்டுறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் முடிச்சிட்டு என்னோட மூணாவது பையன் செல்ல பாண்டியன் எல்லாத்தையும் முன்னேறுத்தி நடத்துவான்” என்றார்.
அனைவரும் ஒருவரின் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொள்ள, அகிலாண்டேஸ்வரி தன் மாமனார் என்ன பேசுகிறார் என்று கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இப்பொழுது கணவன் சென்று விட்டதில் ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும், அவர் செல்லும் போது இப்படி ஒரு தரித்திரத்தை கொண்டு வந்து விட்டு விட்டாரே என்று கோபமும் ஆத்திரமும் நிறைய இருந்தது. பற்களை கடித்த படி வெறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அய்யா என இன்னொருவர் ஆரம்பிக்க.. கையை நீட்டி தடுத்தவர். ஒரு பெருமூச்சை விட்டபடி “ஊர்ல இது போல நடந்தாலும் சரி ஊருக்கு ஒரு நியாயம் என்னோட வீட்டுக்கு ஒரு நியாயம் இல்ல. நானும் இந்த ஊரில் ஒருத்தன் தான். நியாயம் கிடைக்கும்ன்னு தான் எங்க வீட்டு படியேறி எல்லாரும் வராங்க. அதேபோல இந்த பொண்ணும் அவ கையில இருக்கிற குழந்தையும் எங்க வீட்டு படி ஏறி வந்திருக்காங்க. அந்த குழந்தை ராஜபாண்டியன்! அதாவது எங்க குடும்பத்தோட வம்சம்னு அவ முகமே சொல்லுது. அதனால?” என்று ஒரு நிமிடம் நிறுத்தினார்.
அகிலாண்டேஸ்வரியின் தீ விழி பார்வை சௌந்தர பாண்டியன் மீது படிந்தது. அசோகன் கைகளை இறுக்கி மடித்தபடி அடுத்த சவுந்திர பாண்டியன் என்ன பேச போகிறார் என கவனித்தார். அங்கு நடக்கும் அனைத்தையும் துருவன் உள்வாங்கிக் கொண்டு பார்த்திருந்தான். அதேபோலத்தான் செந்தூரபாண்டியானும் நின்றிருந்தான்.
பெரிய காரியத்தை விசாரிக்க வந்த அனைவரும், அவர்களுடன் சேர்ந்து ஊர் மக்கள் என சௌந்தர பாண்டியன் அடுத்து என்ன கூற போகிறார்? என்று பார்த்துக் கொண்டிருக்க அவர் கலக்கமான முகத்துடன் வள்ளியை பார்த்து “அந்த பொண்ண நாங்க எங்க வீட்டு பொண்ணா ஏத்துக்கிறோம்! அந்த பொண்ணு எங்க வீட்டு மருமக!” என்று சொன்னதும், அசோகன் பொங்கி எழுந்தார் .
“என்ன பேசுறீங்க? சம்பந்தி இனி உங்களை சம்மந்தின்னு கூட பார்க்க மாட்டேன். என் பொண்ணு தான் இந்த வீட்டோட மருமக! இத என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மரியாதை இல்லாத பேச்சுக்கள் பல மடங்காக உயர்ந்து, சவுந்திரபாண்டியனின் ஊர் காரர்கள் அடிக்க பாய, அதை பார்த்ததும் துருவன் பாய்ந்து கொண்டு முன்னாள் சென்றான்.
அகிலாவுக்கும் துருவனுக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் தன் அக்காவின் மேல் அத்தனை பாசம் அம்மாவைப் போல அகிலாவை நினைத்தான். அங்கு அவர்கள் பேசுவது ஓரளவுக்கு புரிந்தாலும் தன் அப்பாவின் முகத்தை பார்த்தவனுக்கு தங்களுக்கு எதிராக நடக்கிறது என்று அறிந்து கொண்டவன் பாய்ந்தான் அடிக்க.
அகிலாண்டேஸ்வரி அவ்விடத்தை விட்டு வேகமாக வீட்டுக்குள் சென்று விட்டாள். ராஜபாண்டியனின் பூத உடல் அங்கு தனித்திருக்க செம்பருத்தி அங்கு நடக்கும் கலவரத்தை கவனிக்காமல் “அப்பா” என்று அழைத்துக் கொண்டே தத்தி தத்தி அருகில் சென்று தன் தந்தையின் கால்களை பிடித்துக் கொண்டாள். அங்கு என்ன நடக்கிறது என்று அவளுக்கு தெரியவில்லை.
இதை ஒருகாலும் என்னால் ஒத்துக்க முடியாது என்று அசோகன் உச்ச ஸ்தானியில் கத்த, “உங்களுக்கு அவ்ளோ தான் மரியாதை.” கர்ஜனையான குரலில் கூறிய சௌந்தர பாண்டியன் “நான் சொல்றதுதான் எங்க ஊர்ல நடக்கும். இதுதான் என்னோட முடிவும் கூட” என்று அடக்கி முடித்தவரின் பார்வை செம்பருத்தியின் மீது பட்டது.
அதேபோல செந்தூரனின் பார்வையும் அங்கு தன் அப்பாவை தொட்டுக் கொண்டிருக்கும் செம்பருத்தியின் மீது தான் படிந்தது.
வருவான்
EPISODE – 4 ( என் பாப்பா அழ கூடாது அண்ணன் நான் இருக்கேன்)
சௌந்தர பண்டியன் அவரது முடிவை தெளிவாக தெரிவித்து விட அசோகனுக்கு மிகவும் அவமானமாகவும் தனது கௌரவம், கூடவே மகளின் பெண்ணின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே! என்று நினைத்து நொந்து போனவர். உடனடியாக ஈம சடங்கில் இருந்து கிளம்ப முடிவு செய்தார்.
அவசர பட்டு போக வேணாம் பண்ணையாரே! இது உங்க மகளோட துக்க வீடு! என்றார்கள் ஒரு சிலர். அகிலாவை நினைத்தவர் வேறு வழி இல்லாமல் ஓரமாக அமர்ந்தார். துருவன் தன் தந்தையின் கையை பற்றிக் கொண்டு அப்பா “நான் அக்காவை பார்க்க போகட்டா?” என கேட்க.. “இந்த வீட்டு வாசல்படிய நீ மிதிக்க கூடாது. நம்ம வெளியே இருந்த படியே போயினும்”என்றார்.
அசோகன் அப்படி கூறியதும் அதற்கு மேல் துருவன் பேசாமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். சவுந்தரபாண்டியன் அனைத்து காரியங்களையும் முன் நின்று ஏற்று செய்தார் நெஞ்சம் கனத்து போனது. அகிலாவிடம் பேச தோன்றியது. செந்தூர பாண்டியனது கைகளை பிடித்த படியே நடந்தவர் நேராக அகிலாவின் பக்கம் சென்றவர். மருமகளே என அழைக்க அவளோ உடனே எட்ட சென்று விட்டார்.
அந்த நொடியே ஊரார் அனைவருக்கும் தெரிந்து விட்டது. சவுந்தர பாண்டியன் வள்ளியை இந்த வீட்டின் மருமகளாக ஏற்று கொண்டது கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்று. ராஜ பாண்டியனின் பூத உடலுக்கு எதிரில் செம்பருத்தி தொட்டு “அப்பா எதிந்திருங்க” என மழலை மொழியில் பேசிக் கொண்டிருக்க, தூரத்தில் வள்ளி நின்று அழுது கொண்டிருந்தார். செந்தூர பாண்டியன் செம்பருத்தியை பாவமாக பார்த்தான்.
அடுத்தடுத்த நிகழ்வுகளில் அகிலாவை போலவே வள்ளிக்கும் அணைத்து சடங்கும் செய்ய பட்டது. அந்த நொடி அகிலா நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சி போல துடித்தாள். அன்று மதியமே காரியம் செய்ய பட்டு மொத்த சடங்கையும் முடித்தார்கள். ஊர் முழுவதும் மஞ்சள் நீர் தெளிக்க பட்டு, அடைப்பு இருக்கிறதா? என ஜாதகம் பார்த்து மூன்று நாட்கள் கழித்து ஊர் திருவிழா மிக மிக எளிமையாக நடந்தது. சாமியை பல்லக்கில் மட்டும் எடுத்து வீதி உலா நடத்தி மஞ்சள் நீராட்டத்துடன் திருவிழாவை முடித்தார்கள்.
இது அத்தனையும் செந்தூர பாண்டியன், அகிலாண்டேஸ்வரி என இருவரும் அவர்கள் பார்த்த, அனுபவித்த கோணத்தில் ஒரு பக்கம் யோசித்துக் கொண்டிருக்க, இனி தன் அண்ணன் தான் எல்லாமே என வள்ளி சொன்னதையும், தங்கையை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஆத்தா சரசு மற்றும் தாத்தா சவுந்திற பாண்டி கிடையில் கிடக்கும் போது சொன்னதையும் ஓட்டி பார்த்துக் கொண்டே வாகனத்தை ஓட்டிகொண்டிருந்தவனின் முன்னால் வந்து விழுந்தாள் ஒருத்தி.
யோவ் பார்த்து வர மாட்டியா? கண்ணை பொடனியில் வச்சிட்டு ஓட்டுவியாக்கும் என திட்டிக் கொண்டே ஆட்டு குட்டியை தூக்கினாள் அந்த பெண். வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு ஜீப்பில் இருந்து வெளியே குதித்தான் செந்தூர பாண்டியன்.
ஆட்டுக் குட்டியை வேகமாக ஓடி போய் அதன் மூக்கன்னா கயிற்றை பிடித்துக் கொண்டவள் பெரு மூச்சுடன் சாலையின் பக்கம் வந்தாள். “ஹே புள்ளை இந்த ஒத்த ஆட்டை தடத்துல நீ விட்டுட்டு என்னை சொல்றயே உனக்கு அநியாயமா தெரியலயா? ஆட்டை தடத்தில் விட்டது நீ!” என்றான் காட்டமாக.
ஓ உன்னோட தப்பை மறைக்க என் மேல் பழி போடுறயா? ஜீப் வச்சிருந்தா! பெரிய ஆளுண்ணு நினைப்போ? அதெல்லாம் இந்த தங்கத்து கிட்ட செல்லாது என்றவள் ஆட்டை தூக்கி கொண்டு வேகமாக சென்றாள். இந்தா புள்ளை நில்லு உன்னை பணையூரில் பார்த்ததே இல்லையே! நீ எந்த ஊறு மேல் வலைவா? கீழ் வலவா? என கேள்வி கேட்டுக் கொண்டே தடத்தில் இருந்து விவசாய வரப்பின் பக்கம் இறங்கினான் செந்தூரன்.
அய்யயோ? இவன் என்ன ஃபாலோ பண்ணிட்டு வரான். அப்புறம் நம்ப வலுவா சிக்கிப்போம் போச்சு என நினைத்தவள் வேகமாக இந்தாருங்க ஜீப்பை நிறுத்தி வச்சிட்டு வந்துட்டீங்க? இப்போ பஸ்சு வரும் என்ன பண்ணுவீங்க என குரல் கொடுத்தாள்.
உடனே செந்தூர பாண்டியன் நேராக ஜீப்பின் பக்கம் திரும்பியவன் மணியை பார்த்துக் கொண்டே ஜீப்பின் அருகில் வந்து திரும்பி பார்த்தான். அங்கே அவள் இல்லை ஆட்டு மந்தையுன்யும் அதை பார்த்துக் கொள்ள ஒரு தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள்.
அதுக்குள் எங்கே போயிருப்பா? அவளா வந்தாள். அவளா இடிச்சா! அவளா போயிட்டா! அடுத்த முறை கண்ணில் படட்டும் என்றவன் அங்கிருந்து கிளம்பினான் வீட்டை நோக்கி. மூச்சு வாங்க ஓடி வந்த மீனாட்சி ஒரு மரத்தின் பக்கம் ஓரமாக நின்று எட்டி பார்த்தாள். அப்பாடா கடுவன் வண்டி எடுத்திட்டு போயிட்டான். என நினைத்தவள் அந்த ஆட்டை கட்டி போட்டு பால் பீச்ச ஆரம்பித்தாள். ஹலோ ஒயிட்டி கொஞ்சம் மட்டும் கொடு அப்போ தான் ஃபேஸ் பேக் நல்லா வரும் போன தடவை மாதிரி சொதப்பிடாத என சொல்லிய படி ஒரு கிண்ணம் வழியாக பாலை பீச்சி எடுத்துக் கொண்டாள்.
ஆடு மே மே என கத்திக் கொண்டிருக்க, ஹே ஹே சத்தம் போடாதே ஒயிட்டி உனக்கு நாளைக்கு கல்லக்கா காட்டுக்கு கூட்டிட்டு போயி நிறைய சாப்பிட வைக்கிறேன் என மீனாட்சி எழுந்து கொள்ளவும் ஆட்டை தேடிக் கொண்டு ஆட்டின் உரிமையாள் பாட்டி ஓடி வந்தார். இந்தா டி சிறுக்கி திருட்டு கள்ளி என்னோட ஆடு தான் கிடைச்சதா! அடுத்த முறை ஆட்டு பக்கம் வந்த உன்னை பெரிய வீட்டுக்கு கூட்டிட்டு போய் பஞ்சாயத்தில் நிக்க வச்சு சந்தி சிரிக்க வச்சிடுவேன் என கத்திக் கொண்டிருந்தார் பாட்டி.
அட போ கிழவி என ஒரே ஜூட் விட்டாள் மீனாட்சி. எப்ப பாரு இந்த எடு பட்ட சிருக்கிக்கு இதே வேலையா போச்சு? வரட்டும் காலை உடைச்சு அடுப்பில் போடுறேன் என பேசிக் கொண்டே ஆட்டை பிடித்து வந்தார்.
மீனாட்சி ஆட்டு பாலை பத்திர படுத்திக் கொண்டு அத்தை மகளை பார்க்க சென்றாள். இன்னிக்கி அவளுக்கும் ஃபேஸ் பேக் போட்டு விடனும். என யாருமில்லா நேரம் பார்த்து சுவர் ஏறி குதித்து வந்தாள் திருட்டு கள்ளி என்பதை நிருபிக்கும் பொருட்டு. என்ன யாரையும் காணோம் என சுற்றிலும் பார்த்தவள். ஹே செம்பா! அடியே என கத்தினாள்.
மீனாட்சிஇஇ! நீ எங்கே இங்கே என புன்னகையுடன் எழுந்து அமர்ந்தாள் செம்பருத்தி.. யாரு டா இவள்? வள்ளியின் அண்ணன் ரவியின் மகள் “தங்க மீனாட்சி” படு சுட்டி அறுந்த வாலு. புதூறின் அடுத்துள்ள பெரியூரில் ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக பணி புரிகிறாள். செம்பருத்தியின் இன்னொரு நலன் விரும்பி இவள் தான். அகிலாண்டேஸ்வரி வீட்டுக்கு தெரியாமல் சிவன் கோவில், வாய்க்கால் மேடு, ராஜ பாண்டியனின் மாங்காய் தோப்பு என சனி ஞாயிறு கிழமைகளில் போய் சந்திப்பாள்.
ஹே என்ன டி இது? என செம்பா கேட்க.. இது ஆட்டு பாலு இதுல ஃபேசியல் செஞ்சா ஸ்கின் க்லோ ஆகும் அது தான் உனக்கும் எனக்கும் சேர்த்து எடுத்திட்டு வந்தேன் வா உட்காரு என்றாள் மீனாட்சி.
ஹே என்ன பண்ற? என செம்பருத்தி கேட்க..அதான் சொன்னேனே! உனக்கு பூசி விட வந்தேன் என மீனாட்சி கூற, போடி நானே பண்டிகைக்கு போக முடியலன்னு வருத்தத்தில் இருக்கேன்
அதுக்கு தான் உன்னை அழகு படுத்தி கூல் பண்ண தான் புதூரில் இருந்து ஓடோடி வந்தேன் டி! என சிரித்துக் கொண்டே கூறினாள் மீனாட்சி.
இங்கே பரிவட்டம் கட்டி அண்ணனை கூட்டிட்டு போகும் போது அண்ணன் முகம் பொக்குண்ணு இருந்தது. எல்லாம் என்னால தான். நானே அந்த வருத்தத்தில் இருக்கேன் நீ வேற முகத்துல அப்ப எதையோ தூக்கிட்டு வந்துட்ட என சலித்து கொண்டே பேசினாள் செம்பருத்தி.
ஆமா ஆமா உன் நொண்ணன் அப்படி தான் கடுவன் பூனை போல முகத்தை வச்சிருந்தான் என அவளின் முகத்தில் மஞ்சள் மற்றும் கடலைமாவு அதான் கூட ஆட்டு பாலை கலந்து முகத்தில் பூசி கொண்டிருந்தாள் மீனாட்சி.
என்ன நீ அண்ணனை பார்த்தியா? அங்கே பண்டிகையில் என கண்கள் விரிய கேட்டவள் உடனே ஹே என்ன சொன்ன? என் அண்ணன் உனக்கு கடுவன் பூனையா? நீ தான் டி காட்டு பூனை! இனி என் அண்ணனை எதுவும் சொன்ன அவ்ளோ தான் உன்னை? என மிரட்டினாள்.
பெரிய உலகத்தில் இல்லாத அண்ணன் தங்கச்சி! போடி என் கிட்ட மட்டும் வாய் வன்னாந்தாலி மாதிரி பேசுவா ஆனால் உன் அண்ணன் கிட்ட நீ படுற கஷ்டத்தை உன் பெரிமா பண்ற கொடுமைய சொல்ல வேண்டியது தானே என மீனாட்சி சொல்லி கொண்டிருக்கவே ஜீப் சத்தம் கேட்டது.
“அய்யயோ அண்ணன் வந்திடுச்சு டி மீனாட்சி” என செம்பருத்தி அதிர்ச்சியுடன் எழுந்து நின்றாள்.
அய்யயோ உன் அண்ணன் வந்துட்டானா? என மீனாட்சி கலவரத்துடன் செம்பாவை பார்த்தாள்.
என்ன டி மரியாதை இல்லாம சொல்ற என செம்பா அவளின் காதை திருக அருகில் வந்தாள்.
வருவான்
EPISODE – 5 ( மீனாட்சி மாட்டினாளா)
“அய்யய்யோ அய்யய்யோ! எதுக்கு டி உங்க அண்ணன் வந்தான்? ஏற்கனவே என்னோட ஆடு மேலே வண்டிய விட பார்த்தான். இப்போ எதுக்கு வீட்டுக்கு வரான்?” என நின்ற இடத்திலேயே குதித்தவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள் செம்பருத்தி.
ச்ச வரும் போது பாப்பாவுக்கு எதுவும் வாங்கிட்டு வராம வந்துட்டேனே? என நினைத்த செந்தூரன் இப்போ என்ன பண்ணலாம்? அவளுக்கு கண்ணாடி வளையல் ரொம்ப பிடிக்கும் வாங்கிட்டு போலாம் என வண்டிக்கு வந்தவன் பாப்பாவையே கூட்டிட்டு போலாம் இன்னும் சந்தோசபடும் என நினைத்தவன். அவள் தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுஸ் பக்கம் சென்றான்.
அவன் நடந்து வரும் காலடி சத்தங்கள் கேட்க.. போச்சு வரானே! வரானே! என நின்று கொண்டே குதித்தாள் மீனாட்சி.
செம்பருத்தி மெதுவாக வெளியே எட்டி பார்த்து விட்டு அங்கும் இங்கும் நடந்தாள். என்ன
“ஹே செம்பு செம்பு பிளீஸ் டி இப்போ என்ன பண்றது? உன்னை பார்க்க புதூரில் இருந்து அப்பா கிட்ட பொய் சொல்லி டிமிக்கி கொடுத்து ஓடி வந்தேன் டி!” என மீனாட்சி பொறிந்தாள்.
நீ இப்போ அங்கே போய் ஒளிஞ்சுக்க டி! ஆனால் அண்ணனை அவன் இவன்னு சொன்னதுக்கு இருக்கு உனக்கு? என ஆட்டுப்பால் கடலை மாவு பேஷியலை வேகமாக துண்டில் துடைத்த படி நின்றாள்.
“பாப்பா!” என அழைத்த படி உள்ளே வந்தான் செந்தூரன். அவனை பார்த்ததும் தாமரை மலர் போல முகம் மலர்ந்தவள். அண்ணா! என் என்ன அது அதுக் அதுக்குள்ள வந்துட்ட! என்ன அண்ணா இப்படி பொறுப்பில்லாமல் இருக்கலாமா? அங்கே பெரீமா தனியா இருப்பாக! என சொல்லிக் கொண்டே சமையலறை பக்கம் சென்றவள் அங்கு நின்று கொண்டிருந்த மீனாட்சியின் காதை பிடித்து திருகினாள் செம்பருத்தி.
“ஹ அவுச்” என மீனாட்சி சிணுங்க.. பாப்பா என்னாச்சு என வேகமாக சமையலறை நோக்கி வந்தான் செந்தூரன்.
அண்ணா என வேகமாக வெளியே வந்த செம்பருத்தி ஒன்னும் இல்ல ஒரு பூனை இங்கே சுத்திட்டு இருக்கு அதுண்ணு நினைச்சிட்டேன் என சமாளிபிகேசன் செய்தாள் செம்பருத்தி. தண்ணீரை வானம் பார்த்து குடித்தவன். அருகில் வைத்து விட்டு வா பாப்பா போலாம் உனக்கு கண்ணாடி வளையல் புடிக்குமே! என அழைத்தான்.
இல்ல அண்ணா அது பெரிமாவுக்கு ஹான் அவங்க மதியத்துக்கு மாவு இடிச்சு வைக்க சொன்னாங்க. கை குத்தல் தான் பண்ணனும். நானு சாயங்காலம் போறேன் என்றாள்.
அப்படியா சரி என்றவன். நீ எதுக்கு எப்போ பாரு இங்கேயே இருக்க? நானும் அம்மாவும் எத்தனை முறை சொல்றோம் அங்கே பெரிய வீட்டில் வந்துடுன்னு எனக்கு நீ தனியா இருக்கிறது பிடிக்கல பாப்பா என்றான் செந்தூரன்.
இங்கே உள்ளே நின்று கொண்டிருந்த மீனாட்சி செந்தூரன் பேசியதை கேட்டதும், ஆமா பெரிய அக்கறை கண் மூடி கடுவன் பூனை அம்மா கூடவே சுத்திட்டு இருக்கு. அம்மா பேச்சை தட்டுவதே இல்ல. உன் தங்கச்சிய உங்க அம்மா காரி எவ்ளோ கொடுமை பண்ணுது எப்போ தான் கண்ணை திறந்து பார்க்க போறியோ என
அண்ணா எனக்கு இந்த வீட்டில் இருந்தால் அம்மா கூடயே இருக்கிற போல இருக்கு. நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல. என சிரித்தவள் காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் வீட்டில் தான இருக்கேன் உனக்கு தெரியாதா? உனக்கு எப்படி தெரியும்? தேங்காய் மண்டி, ஆயில் மில்லு, அதில்லாம கரும்பு காடு அங்கே லோடு, அப்புறம் தோப்பு வேலைன்னு உனக்கு எவ்ளோ வேலை இருக்கு. அதனால் தான் உனக்கு ஒன்னும் தெரியல என புன்னகைத்தாள்.
போதும் விடு பாப்பா என மெல்ல புன்னகைத்தவன் முகம் திடீரென யோசனையுடன் மாறியது. “என்ன அண்ணா?” என செம்பருத்தி அவனது முகத்தை பார்த்தாள்.
“அது எதோ ஒரு வாசனை வருதே!”
என்ன வாசனை என அவளும் சுற்றிலும் அந்த இடத்தை முகர்ந்து பார்த்தாள். இல்லையே அண்ணா எனக்கு எதுவும் வரலையே? என தன் அண்ணனை பார்க்க, இல்ல பாப்பா ஹான் கண்டு புடிச்சிட்டேன். ஆடு வாடை அடிக்கிதி என செந்தூரணின் பார்வை மற்றும் நாசியின் கூர்மை அவ்வளவு துல்லியமாக இருக்க, அய்யயோ இந்த கடுவன் பூனை பயங்கர ஆளா இருக்கும் போலயே? இப்போ என்ன பண்ணுவேன் நான் என மீனாட்சியின் முகத்தில் முத்து முத்தாக வியர்த்தது.
பாப்பா? நம்ம வீட்டில் ஆட்டு வளக்குறாகளா என்ன? என தன் தங்கையை பார்த்தான் செந்தூரன்.
அய்யோ இந்த செம்பு என்ன சொல்ல போறாள்ன்னு தெரியலயே? என மீனாட்சி கைகளை பிசைந்த படி நின்றாள்.
“அது அண்ணா நான் தான் முகத்துக்கு போட்டேன்”என்றாள் செம்பருத்தி.
என்ன என செந்தூரன் கேள்வியாக கேட்க, ஆமா அண்ணா அது முகத்துக்கு போட்டால் வறண்டு இருக்கிற இடம் அது கூடவே முகத்துக்கு ஈர பசைய கொடுக்கும்ன்னு சொன்னாங்க அது தான் என பாதி உண்மையையும் தன் மாமன் மகள் மீனாட்சியை காப்பாற்றியும் விட்டாள்.
அப்படியா? இதுல இத்தனை விசயம் இருக்கா? என செந்தூரன் கேட்க.. ஆமா அண்ணா என முடியை காதுக்கு ஒதுக்கி கொண்டே கூறினாள்.
சரி பாப்பா என அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அகிலாவிடம் இருந்து அழைப்பு வந்தது. “மா! சொல்லுங்க?” என செந்தூரன் பதிலளித்தான்.
செம்பருத்தி சமையலறையை பின்னால் திரும்பி பார்க்க கள்ள பூனை மீனாட்சி எட்டி எட்டி பார்த்தாள். அய்யோ இவளை? என பதட்டத்துடன் நின்றாள்.
செந்தூரன் போனை வைத்ததும் பாப்பா அம்மா கூப்பிடுறாங்க நான் போய்ட்டு வரேன். வந்ததும் உன்னை என் கூட கட்டாயம் கூட்டிட்டு போவேன் நீ வரணும் என உறுதியாக கூறினான்.
சரி அண்ணா! என செம்பருத்தி அவனை வழி அனுப்பி வைத்தாள்.
செந்தூரன் இந்த பக்கம் சென்றதும் உள்ளே சென்றவள் ஹே என்ன டி அண்ணனை பத்தி என்ன சொன்ன? என மல்லுக்கு நின்றாள் செம்பருத்தி.
அடி போடி வெறும் வெட்டி வாயி! நான் நேரமாகுது உன்னோட மாமன் தேடுவாப்ல நான் கிளம்புறேன் என அவளுக்கு வீட்டில் இருந்து எடுத்து வந்த அல்வா புட்டை கொடுத்தாள்.
“ஐ அல்வா புட்டு” என செம்பருத்தியின் கண்கள் விரிந்தது. கொட்டிக்க இதை கொடுத்திட்டு போக தான் வந்தேன். உனக்கு போட்டு என் கிட்ட இப்போ ஆட்டு பால் தீர்ந்து போச்சு. மறுபடி நான் எந்த ஆட்டை பிடிக்கட்டும்? சரி வரேன் என கிளம்பினாள்.
“மீனு மீனு எனக்கு மீனு வேணும் டி!” என செம்பா அல்வா புட்டை சாப்பிட்டு கொண்டே கேட்டாள். என்ன? என மீனாட்சி அவளை பார்க்க, உன்னை சொல்லல! எனக்கு மீன் வேணும் ஆரஞ்சு கலர் மீனு டீவியில் பார்த்தேன் அழகா இருந்தது. இங்கே பெரிய மீன் தொட்டியில் வளர்க்க ஆசை என கண்கள் மின்ன கூறினாள் செம்பருத்தி.
அவளின் கையில் இருக்கும் அல்வா புட்டை பிடுங்கி சாப்பிட்டு கொண்டே “உன் அண்ணர் கிட்ட கேட்க வேண்டியது தானே!” என பார்த்தாள் மீனாட்சி.
அண்ணா கிட்ட கேட்டால் வெளியே குளமே வெட்டி கொடுத்திடும். இருந்தாலும் பெரிமாவுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான். என அவளின் பூ முகம் வாடி போக, மீனாட்சி அவளின் அருகில் வந்து தோலில் கை போட்டு கொண்டவள் சரி ஹார்டை டச் பண்ணிட்ட! அதுவும் என்னோட நியாபகமா என்னயவே கேட்டிருக்க? வாங்கி கொடுக்காமல் இருப்பேனா! இந்த மீனாட்சி உனக்கு உபயம் தருவாள் என அவளை சிரிக்க வைத்து விட்டு ஓடோடி விட்டாள்.
செம்பருத்தி சந்தோசமாக சிரித்தவள். மீனாட்சி சென்றதும் வீட்டு வேலைகளை செய்ய சென்று விட்டாள்.
இங்கே செந்தூர பாண்டியன் ஜீப்பில் கோவிலை நோக்கி சென்றான். தன் அம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்தான். அங்கே சமையல் அறையில் வாசனை கம கமவென நாசியை துளைத்தது. கைபக்குவம் செம்பருத்தி தான். எவ்வளவு நன்றாக சமைத்தாலும் செந்தூரன் இல்லாத நேரத்தில் உணவு மேஜையில் தட்டுகள் பறந்து விழும். செம்பருத்தியின் சமையல் அவ்வளவு சுவையாக இருப்பதே காரணம். ஆம் அகிலாவின் சிந்தையில் வள்ளி இப்படி சமையல் மந்திரம் போட்டு தான் தன் கணவனை இழுத்து கொண்டாள் என அடி மனதில் ஆழமாக பதிந்தது. சவுந்தர பாண்டியன் மற்றும் சாரசம்மா உயிருடன் இருக்கும் வரை வள்ளி பெரிய வீட்டின் சமையல் பொறுப்பை பார்த்து கொண்டார். அதில் இருந்து அகிலாவின் வஞ்சனை எண்ணங்கள் நன்றாக பதிந்து போனது.
ப்பா வாசனை தூக்குது! கோஸ் கூட்டு, சேனை கிழங்கு குழைய இஞ்சி பூண்டு வாசனை வர பொரியல், காட்டு மரத்து புளி, துவரம் பருப்பு, கத்தரிக்காய், மாங்காய், கேரட், உருளைக்கிழங்கு போட்டு உரைப்பாக சாம்பார் என நாக்கில் எட்சில் ஊறியது வீட்டில் நுழைந்த அனைவருக்கும்.
எல்லா வேலையும் முடிந்தது தானே மா! என செந்தூரன் கேட்டான்.
வேற ஒன்னும் இல்ல செந்தூரா! வா வந்து சாப்பிடு! கொஞ்சம் ஓய்வு எடு என அகிலா அழைக்க, இல்ல மா நான் செம்பருத்திய கோவிலுக்கு கூட்டி போலாம்னு இருக்கேன் என கூறினான்.
உடனே சமையல் அறையில் டம்மென பாத்திரம் கீழே விழும் சத்தம் கேட்டது. என்னாச்சு பாப்பா என வேகமாக உள்ளே ஓடினான் செந்தூரன்.
தம்பி என அகிலா தன் கொழுந்தன் முத்து பாண்டியை அழைக்க.. அண்ணி என முன்னால் வந்தார். செந்தூரன் சாப்பிடலன்னா கூட பரவாயில்லை. அவன் அந்த ஒண்ட வந்த நாயை கோவிலுக்கு கூட்டி போக கூடாது எதுவும் பண்ணுங்க என்று விட்டு அறைக்கு சென்று விட்டார்.
முத்து பாண்டி உடனே தேங்காய் மண்டியில் லோடு பிரச்னை செய்து செந்தூரனை அனுப்பி வைத்தார்.
அந்த நல்ல நாளில் செம்பருத்தி கோவிலுக்கு போக கூட கொடுத்து வைக்க வில்லை. ஒரு வேளை கடவுள் அவளை பார்க்க நினைக்க வில்லையோ என்னவோ.
அவள் கடவுளை பார்க்க நினைக்க வில்லை அதற்கு காரணம் செந்தூரன் தான் தாய்க்கு தாயாக இருக்கிறான். அவனது அன்பை வார்த்தைகளில் வெளிபடுத்த மாட்டான் செயலில் காட்டுவான்.
அன்று இரவே அப்படி ஒரு நிகழ்வு நடந்தது.
வருவான்.
EPISODE – 6 ( செந்தூரனது அன்புக்கு எல்லை இல்லை)
இப்போவே போகணுமா சித்தப்பா? என நொந்து கொண்டே கேட்டான் செந்தூரன். அது ஆமா ப்பா போயிட்டு வந்திடு டா! ஒரு நாள் கவனிக்கலன்னா? அவ்ளோ தான். செல்ல பாண்டி கோவில் வேலைய கவனிக்க அங்கேயே இருந்துட்டான். சரி நானே போறேன் விடு செந்தூரா என முத்து பாண்டி நகர.. இல்ல இல்ல சித்ப்பா நா.. நானே போறேன் என செந்தூரன் அங்கிருந்து நேராக சமையலறை பக்கம் சென்றான்.
அப்பாடா அண்ணி சொன்ன வேலையை நல்ல படியா செஞ்சுட்டோம் என சாப்பாடு வர காத்திருந்தார். இனி என்ன கழுத்து வரை ருசியான உணவை சாப்பிட்டு விட்டு நீட்டி கொண்டு தூங்குவது தான் அவரின் தலையாய வேலை. ஏன் என்றால் அனைத்து வேலைகளையும் செய்வது செந்தூர பாண்டியன் தான். வீட்டில் அதிகாரத்தை காட்டி ஆட்சி செய்வது அகிலா. வெளியில் பஞ்சாயத்து பொது காரியத்தை கவனித்து பெருமை தேடுவது செல்ல பாண்டியின் வேலை. வீட்டில் ராஜா வீட்டு கண்ணு குட்டி போல இருப்பது முத்து பாண்டியன் தான் தன் அண்ணியின் வார்த்தைகளுக்கு ஜின் ஜாங் அடித்து கொண்டு இருக்கிறார் இத்தனை வருடமும்.
பாப்பா என அழைத்தான் செந்தூரன். இது வழக்கமாக நடப்பது தான் என அறிந்தவள் புன்னகையுடன் என்ன அண்ணா? என பொய் கோபம் கொண்டு திரும்பி பார்த்தாள். தலையை சொரிந்து கொண்டே நெளிந்து நின்றான்.
அதில் அவனது சங்கடத்தை புரிந்து கொண்டவள். அண்ணா நீ என்னை கூட்டி போகலையேன்னு நினைக்காத. நான் பார்த்துக்கிறேன் ஆனால் சாப்பிட்டு போகனும். என பெரிய தட்டில் உணவை பிசைந்து வைத்திருந்தாள். ஆ என அவன் வாயை காட்ட உள்ளுக்குள் பயம் தொற்றி கொண்டது அவளுக்கு. இதை மட்டும் அகிலாண்டேஸ்வரி பார்த்தால் அவ்வளவு தான். அண்ணா அண்ணா என அழைத்து என் பையனிடம் இருந்து சொத்தை பிடுங்க நினைக்கிறாயா என மீண்டும் பழி சொல்லுக்கு ஆளாக நேரிடுமே என தோன்றியது.
“என்ன பாப்பா!” என செந்தூரன் கேட்க.. அண்ண ஆசையா கேட்குது ஊட்டி விடலாம் நாலு அடி தான அண்ணனுக்காக வாங்கிக்கலாம் என அவனுக்கு அவியல், பொரியல் என மொத்தத்தையும் ஊட்டி விட்டாள். ம்ம் பாப்பா சமைக்கிறது மாதிரி இல்ல..
பின்னர் என செம்பருத்தி கேட்க.. இது வள்ளி மா சமைச்சது போல இருக்கு என்றான். அதில் இருவரும் பேசி சிரித்து விட்டு வெளியே வந்தார்கள் இருவரும். அகிலாண்டேஸ்வரி மகனிடம் “செந்தூரா சாப்பிட்டு அப்புறம் வேலைய பார்க்க போ!” என்றாள்.
இப்போ தான் பாப்பா ஊட்டி விட்டது. நான் வயிறு full மா என்றவன். பாப்பா வரும் போது உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வாங்கிட்டு வரேன் என சிரித்துக் கொண்டே சென்று விட்டான். அதற்கு அடுத்து நடக்க போகும் விபரீதம் பாவம் அவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லையே.
உணவுகள் அனைத்தையும் கைகள் நடுங்க எடுத்து வந்து வைத்தாள் செம்பருத்தி. முத்து பாண்டியன் மற்றும் ஜெயக்கொடி இருவரும் அடுத்து என்ன நடக்க போகிறதோ என பார்த்தார்கள்.
அகிலா உணவு மேஜையை தட்டிய படி அமர்ந்திருந்தாள். அம்மா!! என செம்பருத்தி மெதுவாக அவருக்கு பரிமாற வர தட்டுகள் பறந்து விழுந்தது. அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் கண்டு கொள்ளாமல் அவர்களின் வேலையை தொடர்ந்தார்கள். இது ஒரு நாளாகவா நடக்கிறது? 365 நாட்களும் வருடத்தில் ஒரே விசயம் திரும்ப திரும்ப நடந்து கொண்டிருக்கிறது. செம்பருத்தி அப்படியே நடுங்கிய படி அம்.. என காத்து வராத குரலில் அழைத்தாள்.
அடுத்த நொடி அங்கிருக்கும் உணவு அனைத்தையும் ஆவேசமாக தள்ளி விட்டார் அகிலாண்டேஸ்வரி. செம்பருத்தியின் கண்களில் நீர் கொட்டியது. முத்து பாண்டி எட்சிள் விகுங்கினார். சமையல் வாசம் மூக்கை துளைத்தது. ஆனால் என்ன செய்ய தினம் தினம் இந்த சண்டைக்காட்சி முடிஞ்சதும் தான் தட்டுக்கு சோறு வரும் என வருத்தத்துடன் பெரு மூச்சை விட்டார் அவருக்கு இது ஒரு கவலை.
அவளின் முடியை பிடித்து இழுத்த அகிலா. “உன் கிட்ட என்ன டி சொன்னேன்! என்ன சொன்னேன்?”
அது அது வந்து பெரியம்மா அண் அண்ணா தான் கேட்டுச்சு. அதுதான் வேற வழியே இல்லாம ஊட்டி விட வேண்டியது தான் போச்சு என்று திக்கி திணறி கூறினாள். அவளை ஆவேசமாக கீழே தள்ளிவிட்ட அகிலாண்டேஸ்வரி “அண்ணனா? யாருக்கு யாரடி அண்ணன்? த்து!! உன் ஆத்தாக்காரி மாதிரி நீலி கண்ணீர், நடிப்பு நாடகம், சமையல் மந்திரம், எல்லாம் போட்டு என் பையன மனசு மாத்தி சொத்தையெல்லாம் அபகரிக்கற எண்ணம் இருந்தால் அதை இப்பவே மறந்துவிடு.
“இல் இல்ல பெரிமா!” என செம்பருத்தி அழைத்துக் கொண்டே பதில் பேச, என்ன பெரிமாவா? உங்கம்மா எங்கப்பனுக்கு பொறக்கலையே! இந்த முறை வச்சு கூப்பிடுற வேலையெல்லாம் செந்தூரன் இருக்கும் போது மட்டும் தான். அதை நியாபத்தில் வச்சுக்க. நீ இன்னொரு தடவை அவன் கூட நீ பேசறதையும் இல்ல உன்ன அவன் வெளியே கூட்டிட்டு போகணும்னு சொல்றதையும் பார்த்தேன் என்ன நடக்கும்னு தெரியாது என்று சொல்லிவிட்டு வேற வேகமாக அவரது அறைக்கு சென்றார்.
ஓ அண்ணி சாப்பிட்டதுக்கு அப்புறமா தான் நம்ம சாப்பிட முடியுமா கடவுளே! நினைத்த முத்துப்பாண்டியன் ஒரு பெருமூச்சை விட்டு ஜெய கொடியை பார்த்தார்.
இதுக்கு மட்டும் தான் லாயக்கு என அவர் முறைக்க, அதற்குள் அழுது வீங்கிய முகத்துடன் உணவு பதார்த்தங்களை மிகப்பெரிய தட்டில் வைத்துக்கொண்டு வந்த செம்பருத்தி அதை ஜெயக்கொடியிடம் நீட்ட , அவர் வழக்கம் போல அகிலாண்டேஸ்வரியை சமாதானம் செய்கிறேன் என்று சொல்லி உணவு தட்டை கொடுத்து சாப்பிட வைத்து விட்டு வெளியே வந்தார்.
அவர் வந்த அடுத்த நொடி முத்துப்பாண்டி நாக்கில் எச்சில் ஊற உணவு பதார்த்தங்களை போட்டு வேக வேகமாக உள்ளே தள்ளினார். ஜெயக்கொடி அவரை பார்த்து எப்ப தான் இந்த ஜென்மம் திருந்த போகுதோ? எப்போ பாரு சோறு! சோறு! சும்மா இருக்கிறது மட்டும்தான் வேலை. என்று சோர்வுடன் அவரது உணவு தட்டை பார்த்து சாப்பிட ஆரம்பித்தார்.
வழக்கம் போல இந்த நாளின் கோட்டா முடிந்தது என்பது போல அதன் பின் அகிலாண்டேஸ்வரி அமைதியாகிவிட்டார். அவளது ஒட்டுமொத்த வன்மத்தையும் வஞ்சனையையும் செம்பருத்தியின் மீது காட்ட வேண்டும் அதுதான் இப்பொழுது நடந்தது.
இரவு 9 மணி இருக்கும் செம்பருத்தி இன்று செய்த வேலையின் களைப்பில் சோர்வாக உறங்க கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
யாரது? இந்த நேரத்துல? இன்று கண்கள் நீங்க நீங்க எழுந்து கதவை திறந்தாள். புன்னகையுடன் நின்று கொண்டிருந்த செந்தூரப் பாண்டியனின் முகம் உடனே கவலையை தத்தெடுத்து கொண்டது. என்னாச்சு பாப்பா? நான் போகும்போது நல்லாத்தான இருந்த? இப்போ என்ன? கண்ணெல்லாம் வீங்கி இருக்கு? என்ன ஆச்சு அழுதியா என்று அவன் கேட்க செம்பருத்தி உடனே தன் கவலைகளை மறக்க முயன்று இல்லண்ணா! அது ரொம்ப களைப்பா இருந்துச்சா? கொல்லப்பக்கம் தண்ணி காய் வெச்சிட்டு இருந்தனா அப்போ புகை கண்ணுல பட்டு, கண்ணுல நீர் வீங்கி போச்சு என்று பொய் கூறினாள்.
அவன் அவளை பார்த்து யோசிக்க.. உடனே அவன் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு ஆமா என்னாச்சு? இந்த நேரத்துல வந்து இருக்கீங்க? சாப்பிட்டீங்களா? என்று உடனே உபசரிக்க ஆரம்பித்தாள்.
உடனே செந்தூரப் பாண்டியன் சிரித்தபடி, எப்ப பாரு என்ன பத்தி தான் உனக்கு கவலையா? உனக்காக நான் ஒரு விஷயம் கொண்டு வந்து இருக்கேன். ஒன்னு இல்ல ரெண்டு என்று கன்னக்குழி தெரிய சிரித்தான்.
என்னனா என்று கண்களில் ஆர்வம் என்ன தன் அண்ணனை பார்த்தாள். ஒரு பால் போஸ் எடுத்து அவள் பக்கம் நீட்டினான்.
என்ன இது? என்று செம்பருத்தி கேள்வியாக பார்க்க.. இது முழுக்க ஆட்டுப்பால் இருக்கு. நீதான சொன்ன! இது போட்டா முகம் நல்லா பளிச்சுன்னு ஆகுமாமே! என் தங்கச்சி எப்பவும் பேரழகு தேவதைதான்! இன்னும் நாளைக்கு மாப்பிள்ளை வரும்போது என் தங்கையை பார்த்ததும் மயங்கி விழுகணும்ல்ல. உனக்காக ஒரு லிட்டர் ஆட்டுப்பால் கொண்டு வந்துட்டேன் என்று நீட்டினான்.
ஆட்டுப்பாலா? ஒரு லிட்டரா? அது எத்தனை ஆட்டில் பீச்சி எடுத்திருப்பாங்க? ஆட்டில் இருந்து ஆட்டுக்குட்டிக்கு பால் மிகவும் கம்மியாகத்தான் சுரக்கும். ஆனால் ஒரு லிட்டர் என்றால்? அது எவ்வளவு அரிதான விஷயம் என்று செம்பருத்திக்கு நன்றாகவே தெரியும். அவள் அதிர்ச்சியுடன் தன் அண்ணனை பார்க்க,
செந்தூரப்பாண்டியன் சிரித்தபடி இன்னொரு விஷயம் கொண்டு வந்து இருக்கேன் என்று அவளிடம் நீட்டினான். இது என்ன என்று பார்த்தவர்களுக்கு கண்களில் கண்களெல்லாம் சிரித்து பூரித்து மின்ன ஆரம்பித்தது. அவளுக்கு பிடித்த கண்ணாடி வளையல்.. பாத்தியா? வானவில் கலர்ல ஏழு வண்ணத்துல உனக்கு வளையல் என்று எடுத்து நீட்டினான்.
அதை பார்த்து அவள் அண்ணா என்று ஆசையுடன் அழைக்க… உனக்கு புடிச்சிருக்கா? உன்னோட அளவு என்னன்னு தெரியும் மதியம் வளையலோட அளவு வாங்க தான் வந்தேன். திடீர்னு என்னமோ வேலை வந்திருச்சின்னு போயிட்டேன். இருந்தாலும் உனக்கு ஏதாவது வாங்கிட்டு வரலனா அந்த நாள் எனக்கு நிம்மதியா தூக்கமே வராது பாப்பா. என்று செந்தூரப் பாண்டியன் அவளை நினைத்து கூறிக் கொண்டிருக்க,
செம்பருத்தியின் கண்களில் நீர் வழிந்தது. என்னாச்சு பாப்பா என்று அவன் பதட்டப்பட, இல்லன்னா இதுக்காக.. உன் உன்னோட பாசத்துக்காக நான் எவ்வளவு கஷ்டத்த வேணாலும் தாங்குவேன். என்று கூறினாள்.
கஷ்டமா? என்று செந்தூரப் பாண்டியனின் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள் பரவ..
ஐயையோ உண்மையை நம்மளே உளறி விட்டோமோ! என்று உள்ளுக்குள் தோன்றியது அவளுக்கு.
என்ன பாப்பா கஷ்டம் என்று செம்பருத்தி பாண்டியன் செந்தூரப் பாண்டியனின் முகம் கொஞ்சம் கடுமையை தத்தெடுத்துக் கொண்டது
வருவான்
EPISODE – 7
என்ன பாப்பா கஷ்டம்? என்று செம்பருத்தியை பார்த்து செந்தூரப் பாண்டியனின் முகம் கொஞ்சம் கடுமையை தத்தெடுத்துக் கொண்டது.
அண்.. அண்ணா என செம்பாவின் உதடுகள் தந்தி அடித்தது. செந்தூர பாண்டியனின் கைகளில் இருந்த வளையல்களை டேபிலில் வைத்தவன். பாப்பா என்னாச்சு? என அழைப்புறும் கண்களுடன் கேட்டான்.
சாமி நான் என் அண்ணன் கிட்ட பொய் சொல்றேன். என்னை மன்னிச்சிடு. என கடவுளிடம் வேண்டிக் கொண்டவள். தன் அண்ணனின் கைகளை பிடித்து அண்ணா என்னை மன்னிச்சிடு என தன் அண்ணனிடம் மானசீகமாக மனதில் மன்னிப்பை வேண்டியவள் கண்களில் நீர் கோர்க்க, அம்மா என்னை விட்டு போகும் போது அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுன்னு நினைச்சேன். ஆனால் என்னை அப்பாவா அம்மாவா ரெண்டும் உன் கிட்ட பார்க்கும் போது என்னோட கஷ்டம் தூள் தூளா போச்சுன்னு சொல்ல வந்தேன். என அவன் கைகளை பிடித்து கொண்டாள்.
செந்தூரன் கண்கள் கலங்க தங்கையை பார்க்க, அவனது கைகளை கண்ணில் ஒற்றிக் கொண்டாள். அழ கூடாது பாப்பா! அப்புறம் என்னால நீ அழுவதை தாங்க முடியாது என அவளின் தலையை வருடி விட்டான்.
இனி அழ மாட்டேன் என கண்களை துடைத்து கொண்டவள். சரி சாப்பாடு சாப்பிட்டியா வா அண்ணா நான் சூடு பண்ணி எடுத்து வைக்கிறேன் என அழைத்தாள். இல்ல மா எனக்கு வயிறு பசிக்கல நீ கதவை பூட்டி தூங்கு நான் பார்த்துக்கிறேன் என வெளியே வந்தான்.
சரி என வெளியே வரை சென்று வழி அனுப்பினாள். சரி நீ மட்டும் தனியா எப்படி தூங்குவ? நான் வேணும்னா துணைக்கு சங்கவிய வர சொல்லவா? என கேட்டான்.
இல்ல இல்லன்னா ஒன்னும் பிரச்னை இல்ல. இப்போ பொம்மி வரேன்னு சொல்லிருக்கா! நானும் அவளும் தூங்குவோம். என்றாள் செம்பருத்தி.
அது யாரு பொம்மி என செந்தூர பாண்டியன் கேட்க, மணியம்மா இருக்காங்களே அது தான் நம்ம வீட்டில் வேலை செய்யறாங்களே! அவங்க பொண்ணு பொம்மி என்றாள் செம்பருத்தி.
சரி மா என்றவன் வெளியில் நின்றான். அண்ணா எதுக்கு இங்கேயே நிக்கிற என அவள் கேட்க, அந்த பொண்ணு வரட்டும் என்றான் செந்தூரன். இதை கேட்டவளுக்கு சிரிப்பு வந்தது. அண்ணா நான் சின்ன குழந்தை இல்ல நீ வீட்டுக்கு போ! இது நம்ம வீடு! என்றாள் செம்பருத்தி.
அது என செந்தூரன் தலையை சொரிந்து கொண்டு பார்க்க, போ அண்ணா என்றாள். ம்ம் என வேட்டியை மடித்து கட்டிய படி பெரிய வீட்டுக்குள் சென்றான். மேலே அவனது அறைக்கு சென்று பால்கனி பக்கம் வந்தான் செம்பருத்தி இன்னும் அதே இடத்தில் நின்று கொண்டிருக்க அப்பொழுது பொம்மி வந்தாள்.
தன் அண்ணனை பார்த்தவள் சிரிக்கும் படி கையில் சைகை செய்ய மீசையை முறுக்கிய படி எப்பொழுதும் போல கம்பீரமாக அவன் சிரிக்கும் சிரிப்பை உதிர்க்க குதூகலமானாள்.
இருவரும் பாசத்தை நிறைத்த மனதுடன் லேசாக உணர்ந்தவர்கள் அவர்களின் படுக்கைக்கு சென்றார்கள். என்ன உன் அண்ணன் கிட்ட பாசத்தை பரிமாரியாச்சா? என கிண்டலாக கேட்டாள் பொம்மி.
அண்ணனை பத்தி சொல்லாத எனக்கும் சரி உங்க வீட்டுக்கும் சரி ஏன் இந்த ஊருக்கே ஒரு கஷ்டம்ன்னா எங்க அண்ணன் அங்க வந்து நிக்கும் என தன் அண்ணா பற்றிய பெருமைகளை சொல்லிக் கொண்டே அசந்து உறங்கி விட்டாள் செம்பருத்தி.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. வழக்கம் போல செம்பருத்தியின் முகத்தில் தான் அவனது விழிப்பு அவள் இல்லை. செம்பருத்தி பூ மற்றும் நீர் மோர் இரண்டையும் அறையில் வைத்து விட்டு சென்று விடுவாள். இல்லையென்றால் யார் அகிலாண்டேஸ்வரியிடம் திட்டு வாங்குவது? அதனால் இந்த மாதிரியான ஏற்பாடு.
வழக்கம்போல செம்பருத்தி யின் வேலைகள் ஆரம்பித்துவிட்டது. பம்பரம் போல சுழன்று கொண்டிருந்தாள் அடுப்படியில். அத்தனை வேலையும் ஒருத்தியே செய்து முடித்தாள். அது அகிலாவின் உத்தரவும் கூட, திருவிழாவின் காரணமாக ஐந்து நாட்கள் ஊரில் கொண்டாட்டமாக இருக்கும். அதனால் அகிலாண்டேஸ்வரி, முத்துப்பாண்டியன் குடும்பம், செல்ல பாண்டியன் குடும்பம் என அனைவரும் பண்டிகையின் காரணமாக மிகவும் பிசியாக இருந்ததால், செம்பருத்திக்கு அவ்வளவாக வேலை பளு இல்லை.கொஞ்சம் நிம்மதியாக இருந்தது வேலா வேலைக்கு சமைத்து வைத்து விட்டு கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்.
அப்பொழுதுதான் மீனாட்சியின் நினைவு வர சிரித்துக் கொண்டவள். பிரிட்ஜில் இருந்து பால் போஷை திறந்து பார்த்தாள். அடியே! என்று நினைத்துக் கொண்டே அவளுக்கு அழைத்தாள். ஹே எங்கே இருக்க? என செம்பா கேட்க, எங்க இருப்பாங்க? ஸ்கூல்ல தான் இருக்கேன் என்று மீனாட்சி பதிலளித்தாள். உன் கிட்ட ஒரு என யோசித்தவள் இல்ல நீ நேர்ல வா உன்னிடம் ஒரு முக்கியமான நேர்ல உன்ன பாக்கணும் எப்ப வர என்று கேட்டாள்.
என்ன விஷயம்? உங்க அண்ணன் உன்ன 12 எடுத்து எழுத சொல்லி காலேஜ்ல சேர்க்க ஸ்டெப் எடுத்தானா? என்ன? என்று மீனாட்சி ஆர்வத்துடன் கேட்க.. செம்பருத்தியிடம் மௌனமே பதிலாக வந்தது. மீனாட்சி இகழ்ச்சியாக இதழ் வளைத்து அதை எப்படி நடக்கும் அவனுக்கு அதெல்லாம் பண்ண தெரியாது நீயும் ஒரு முட்டாள் அண்ணன் என்று சொல்லிட்டு இருக்க என்று கூறினாள்.
உடனே செம்பருத்தி கோபத்துடன் எங்க அண்ணனை பத்தி எதுவும் பேசாத உன்னை கூப்பிட்டேன் பாரு என்ன சொல்லணும். நீ ஒன்னும் வர வேணாம் போடி என்று போனை கட் செய்தாள். .
மீனாட்சி பேசும் பொருட்டு அடியே நில்லு நில்லு என்று சொல்ல சொல்ல போன் கட் ஆனது.
திரும்பத் திரும்ப மீனாட்சி அழைக்க கடுப்புடன் போனை எடுத்தாள் செம்பருத்தி. என்ன வேணும்? என்று அவள் கேட்க… ” சரி தெரியாம சொல்லிட்டேன். என்ன விசயன்னு சொல்லு” என்று மீனாட்சி பணிவுடன் கேட்டாள்.
செம்பருத்தி அமைதியாக இருக்க, மீனாட்சி மென்மையான குரலில் அதுதான் அதுதான் சாரி கேட்டேனே என்னை மன்னிச்சிடு. இப்ப என்ன விஷயம்னு சொல்லு? என்று மீண்டும் மன்னிப்பை இரைஞ்சுவது போல் கேட்க, உன்னை நேரில் பார்க்க தான் கூப்பிட்டேன் வேலை இருந்தால் வர வேணாம் நீ பாரு என சொல்லி விட்டு செம்பா போனை வைக்க போக.. செம்பு செம்பு இரு டி வரேன். நான் ஸ்கூல் முடிச்சிட்டு ஈவ்னிங் நேராக வீட்டுக்கே வரேன் என்றாள் மீனாட்சி.
“ம்ம்” என போனை வைத்தாள் செம்பருத்தி. அவளின் கண்கள் கலங்கி இருந்தது. மீனாட்சி சொல்வதில் எந்த தவறும் இல்லையே எல்லாமே சரி தான். ஆம் அகிலாண்டேஸ்வரியிடம் அனுமதி பெற்று தான் அவள் பத்தாம் வகுப்பை முடித்து அதன் பின் எப்படியோ அடித்து பிடித்து பனிரெண்டாம் வகுப்பில் வந்து சேர்ந்தாள். அந்த நேரம் தான் வீட்டின் விசேசத்தில் செம்பருத்தியின் சமையல் பக்குவத்தை தெரிந்து கொண்ட அகிலாவின் மூளை வேறு விதமாக யோசித்தது. இவளை விட கூடாது தனது வீட்டின் அடிமையாக இப்படியே சமையல் அறையில் முடங்கி இருக்க வேண்டும் என்று நினைத்து அழகாக உடல்நிலை சரியில்லை என ஒரு நாடகத்தை அரங்கேற்றி படிப்பை அத்துடன் மூட்டை கட்டி போட்டு விட்டாள் அகிலாண்டேஸ்வரி.
செம்பருத்தி ஆவலுடன் மீனாட்சிக்காக காத்துக் கொண்டிருந்தாள். மீனாட்சி நேராக தலைமையாசிரியர் அலுவலகம் சென்றாள். என்னம்மா? என தலைமை ஆசிரியர் கேட்க..
மீனாட்சி மிகவும் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு “சார் இன்னிக்கு இப்போ தான் போன் வந்தது. அத்தை பொண்ணுக்கு காய்ச்சல்”
சரி என்று அவர் அவளைப் பார்க்க, “அதனால கொஞ்சம் நீங்க முன்னாடியே பர்மிஷன் கொடுத்தீங்கன்னா, நான் அவளை டவுனுக்கு கூட்டிட்டு போயிட்டு ஊசி போட்டுட்டு வரணும். கூட யாருமே இல்ல என மீனாட்சி வறுத்த கடல் பார்வையை வீசினாள்.
அப்படியா மா என்று அவளது கவலை தலைமை ஆசிரியருக்கும் ஒட்டிக்கொள்ள, சரிமா அப்போ நீங்க கிளம்புங்க என்று கூறினார்.
சாரி சார்! எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. போன் வந்ததா அதனாலதான் சார். சாரி சார் என்று மீனாட்சி சொல்ல, ” இட்ஸ் ஓகே மா நீங்க போய் பாருங்க” என்று தலைமையாசிரியர் பர்மிஷன் கொடுத்து அனுப்பி வைத்தார்.
மீனாட்சி செம்பருத்திக்காக தங்க மீன்களை வாங்க சென்றாள். அவசர அவசரமாக பஸ்சை பிடித்து நேராக டவுன் சென்றவள் ஜோடியாக தங்க மீன்களை இரண்டு வாங்கினாள். பார்க்கவே அழகாக இருந்தது. ம்ம் இதை காட்டி செம்புவை மனசு மாத்திடனும் என அதற்காக குடுவையையும் வாங்கி கொண்டு புன்னகையுடன் கிளம்பினாள்.
ஆனால் அதற்கு முன் மீனாட்சி ஒரு கடுவன் பூனையிடம் மாட்டி கொண்டதே!
வருவாள்.
EPISODE – 8 ( யோவ் எதுக்கு யா மேலே வந்து இடிச்ச)
ரெண்டு ரெண்டு ஜோடி வாங்கிக்கோங்கம்மா ரொம்ப நல்லா இருக்கும் என்று கடைக்காரர் மீன்களை காட்டியபடி கேட்க..
இல்லனா எனக்கு ஒரு ஜோடி போதும் என்று அந்த மீன்களை ஆசையாக பார்த்த மீனாட்சியை இது அனைத்தைப் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தாள்.
சரிங்கமா இத நீங்க எதுல விட போறீங்க? வீட்டிலேயே fish tank வச்சிருக்கீங்களா? என்று கடைக்காரர் கேட்க, இல்லனா என்று உதட்டை பிதுக்கினாள் மீனாட்சி.
“அப்படியா சரி அப்போ இதுக்கு ஒரு கண்ணாடி ஜாடி கொடுக்கிறேன்” என அவர் எடுக்க, இப்பவே அதுல ஊத்தி குடுத்துடுவீங்களா? நான் ஊருக்கு கொண்டுட்டு போகணுமே! அதுவும் பஸ்ல. என மீனாட்சி சொல்ல, கடைக்காரர் சிரித்துக் கொண்டே இல்லம்மா மீனை கவர்ல தண்ணியோட கட்டி கொடுக்கிறேன். குடுவையை தனியா வசசுக்கோங்க! அப்புறம் இது மீன் சாப்பிடுறதுக்கு fish food என்று கடைக்காரர் கொடுத்தார்.
ம்ம் மூணுக்கும் பில் போடுங்க என பணத்தை நீட்டினாள். பிளாஸ்டிக் கவரில் தண்ணீருடன் அடைக்கப்பட்ட தங்க மீன்களை ஒரு கையிலும், தோலில் கை பையை மாட்டிக் கொண்டும், இன்னொரு கையில் கண்ணாடி குடுவையுடன் வெளியே வந்தவழுக்கு மிகவும் மலைப்பாக இருந்தது அதற்கு காரணம் பதினெட்டு ஊரு திருவிழா என்பதால் கடை தெருவில் மக்கள் கூட்டம் நெரிசலுடன் காணப்பட்டது.
கடவுளே எந்த பிரச்னையும் இல்லாம இந்த தங்க மீன் ரெண்டையும் தங்க மீனாட்சி செம்பருத்தி கிட்ட சேர்த்துடனும் சாமி நீ தான் ஹெல்ப் என அவள் சொல்லி வாய் மூட வில்லை. அவளின் பக்க வாட்டில் உரும்பும் புல்லட் டின் கண்ணாடி மோதி கூட்ட நெரிசலில் கையில் இருக்கும் குடுவையை பிடிக்க போராட அவளின் கை பை ஒரு பக்கம் நழுவ இன்னொரு பக்கம் பிளாஸ்டிக் கவரில் கட்டப்பட்ட மீன்கள் கீழே விழ சரியாக இருக்க, நிலை குலைந்த மீனாட்சி Noooo என கத்த அதற்குள் மீனையும் அவளையும் ஒரு கையில் வளைத்து பிடித்தான் செந்தூர பாண்டியன்.
ஹே என மீனாட்சி அதிர்ச்சியுடன் கத்தினாள், நிதானித்து கொண்டு மீனையும் கை பையையும் அவளிடம் நீட்டினான் செந்தூரன்.
அய்யயோ போச்சே ச்ச! யோவ் கண்ணை எங்கே பொடனியிலயா வச்சிருக்க? அய்யயோ என்னோட கோல்ட் ஃபிஷ்! என அலைப்புறும் கண்களுடன் ஆராய்ந்தால் மீனாட்சி.
அவளை ஏற இறங்க பார்த்தவன். என்ன அறிவு இருக்கானு கேட்டியே? உனக்கு அறிவு இருக்கா? இது உங்க அப்பன் வீடா? கடை தெருவில் எவ்ளோ கூட்டம்ன்னு பார்த்த தானே! உனக்கு கண்ணு தெரியல புள்ளை. அன்னிக்கு உன்னோட ஆட்டுக்குட்டிய என் ஜீப்பு மேல நீயே விட்ட. இன்னிக்கி நீயா என் புல்லட்டில் வந்து விழுந்தால் நான் என்ன பண்ண முடியும்? என்று தலையை கோதியப்படி அவளிடம் கூறினான் செந்தூர பாண்டியன்.
புள்ளையா! இந்தா யா? முதல்ல வண்டிய விட்டு இறங்கு. என்னோட மீன் ஜாடி உடைஞ்சு போச்சு உன்னால! மீன் புட்ஸ் அது கூடவே நசுங்கி கவர் பிதுங்கி போச்சு அதுவும் உன்னால! என மூக்கு புடைக்க கைகளை நீட்டி பேசினாள் மீனாட்சி.
ஹலோ என்ன விட்டா ஓவரா பேசிட்டு போற! நான் பொறுமையா போயிட்டு இருக்கேன். ஆனால் நீ ரொம்ப ஓவர் என அவளுக்கு இணையாக பேசினான். அந்த கூட்ட நெரிசலில் இவர்கள் இருவர் மட்டும் தனித்து தெரிந்தார்கள். பெயருக்கு ஏற்ப மிகவும் கம்பீரமாகவும் சட்டை கையை மடித்து விட்டு வேஷ்டியை மடித்து கட்டி இருந்தான் ஒரு செவலை காளை போல. தண்ணீரில் நீந்தும் மீன் தரையில் விழுந்தால் எப்படி துள்ளுமோ அதே போல இன்னொரு பக்கம் அவனுடன் மல்லுக்கு நின்று துள்ளி கொண்டிருந்தாள் மீனாட்சி.
பள்ளிக்கூடத்து டீச்சர் என்பதால் அவளது குரல் கொஞ்சம் கம்பீரமாகவும், சத்தமாகவும் தான் ஒலிக்கும் மாணவர்களையும் சிறு பிள்ளைகளையும் பாடம் நடத்தும் போது மிரட்டிய பழக்கத்தில் அவளது குரல் கொஞ்சம் ஓங்கி ஒலிக்க, கடைத்தெரு மக்கள் கூட்டம் அனைத்தும் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு சென்றார்கள்.
அதை கவனித்து செந்தூரப்பாண்டியன் ஐயோ இவ speaker-அ முழுங்குன மாதிரி இப்படி கத்துறாளே! என்று நினைத்தவன். ஹே இப்போ உனக்கு என்ன வேணும்? எதுக்கு இப்படி கத்துற நம்ம நடுரோட்டில் இருக்கும் என்று கூறினான் செந்தூர பாண்டியன்.
மீனாட்சி அவனைப் பார்த்து, “ஒழுங்கு மரியாதையா, எனக்கு கண்ணாடி ஜாடிய வாங்கி கொடுக்கிற. அது கூடவே மீனுக்கு போடுற ஃபிஷ் food ரெண்டும் வேணும். இப்பவே என்று கைகளை நீட்டி அவனிடம் பேசினாள்.
யார் இவள்? ஒரு பெண் முதன்முதலாக அவனிடம் கை நீட்டி பேசுவது இதுவே முதன்முறை. அவன் பார்த்த பெண்களில் எவளும் இதுபோல அவனிடம் பேசியதும் இல்லை நடந்து கொண்டதுமில்லை. இவளே முதல் ஆவாள்? இவள் கடைசியா? என இனிமே நகர நகர தான் தெரியும்.
கொஞ்சம் பொறு என வண்டியை ஓரமாக நிப்பாட்டியவன். அவளை அழைத்துக் கொண்டு அதே கடைக்குள் சென்றான். மீனாட்சி அவனுக்கு முன் சென்றாள். என்னமா ஒரு ஜோடி பத்தாதுன்னு உங்க ஜோடியோட கப்பில் fish வாங்க வந்துருக்கீங்களா! என்று கடைக்காரர் எதார்த்தமாக தான் கேட்டார்.
அவ்வளவு தான் அடுத்த நொடி கோரஷ்சாக என்ன? என்று மீனாட்சி மற்றும் செந்தூரப் பாண்டியன் இருவரும் திடுகிட்டு கடைக்காரரை முறைத்தார்கள்.
நீங்க ரெண்டு பேரும் தானே சேர்ந்து வந்தீங்க? என்று கடைக்காரர் கேட்க, அதில் கடுப்பான மீனாட்சி ரெண்டு பேரும் சேர்ந்து வந்தால், அவங்க ஜோடின்னு அர்த்தமா? தேவை இலலாம பேசாதீங்க! என்று மிரட்டினாள்.
செந்தூரப் பாண்டியன் அமைதியாக நின்று கொண்டிருந்தான். என்ன அமைதியா இருக்கீங்க? மறுத்து பேச மாட்டீங்களா? வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கீங்க? என்று அவனையே மிரட்டினாள் மீனாட்சி.
அவன் யார் என்ன ஏது என்று மீனாட்சிக்கு நன்றாக தெரியும். செம்பருத்திக்கு அவனது வீட்டில் நடக்கும் அநியாயத்தை நினைத்து தான் இப்படி பேசி கொண்டிருக்கிறாள். தங்கச்சியின் பாசம் என்று உருகி உருகி பாசத்தை கொட்டுபவன்.அவள் கஷ்டப்படுவதை இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றானே என்று ஆதங்கம் மட்டுமே. அதனால்தான் இப்படி குதித்து கொண்டிருக்கிறாள்.
மீனாட்சியின் இந்த பரிமாணத்தில் பயந்த கடைக்காரர். அய்யோ மண்ணிச்சிடு மா தாயே! நான் தெரியாமல் சொல்லிட்டேன்! சரி உங்க ரெண்டுபேருக்கும் என ஆரம்பித்தவர். இல்ல உங்களுக்கு என்ன வேணும்? சார் உங்களுக்கு என்ன வேணும் என்று பதட்டத்துடன் கேட்டார்.
மீனாட்சி அதே கோபத்துடன் மூக்கு புடைக்க செந்தூரப் பாண்டியனை பார்க்க, அந்த ஃபிஷ் ஜாடி வேணும் என்று கூறினான்.
அவ்ளோ தான சார் இதோ இப்போவே என்று பதட்டத்துடன் கடைக்காரர் எடுத்து வைத்தார். செந்தூரன் முன்னால் சொடக்கு போட்ட மீனாட்சி கூடவே ஃபிஷ் ஃபுட் யார் வாங்கி தருவா? என்று அவனிடம் எகிறி நின்றாள்.
கடைக்காரர் இருவரையும் மாறி மாறி பார்த்தவர். உடனே மீன் உணவுகள் எடுத்து வைத்தார்.
ம்ம் அவ்வளவுதான் பேக் பண்ணிடுங்க என்று கூறியவன் பணத்தை நீட்டினான். அதை வாங்கிக் கொண்டவர் ப்ராப்பராக பேக் சைடு மீனாட்சியிடம் நீட்டினார்.
அதை வாங்கிக் கண்டு வெளியே வந்த மீனாட்சி ஒரு சம்பிரதாயத்திற்காக கூட செந்தூரப் பாண்டியனிடம் ஃபிஷ் டேங்க் வாங்கி கொடுத்ததற்கு நன்றியையோ, மரியாதையோ கொடுக்காமல், பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தாள்.
செந்தூரப் பாண்டியன் அவளின் முதுகை வெறித்துப் பார்த்தான். எவ்வளவு கொழுப்பு இருக்கும்? சரியான ஆட்டக்காரியா இருக்கா? எந்த ஊர்க்காரின்னு தெரியல என்று நினைத்தவன். வண்டியை ஸ்டார்ட் செய்து அவளின் அருகில் சென்றான்.
இரண்டு மூன்று முறை ஹாரன் அழுத்தினான். அவள் திரும்பி பார்க்காமல் நடக்க, ஹே புள்ளை மீன் காரி என்று அழைத்தான்.
என்ன மீன் காரியா? என்னை பார்த்தால் நீன் காரி மாதிரியா தெரியுது? என்று மீனாட்சி பற்களை கடித்துக் கொண்டே திரும்ப, ஆமா போன முறை ஆட்டுக்குட்டியோட வந்த அதனால ஆட்டகாரி.. என்றான். “என்ன?” என மீனாட்சி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை பார்த்தாள்.
இல்லல்ல இந்த தடவை மீன் வெச்சிருக்க அதனால மீன் காரி என்று கூறினான்.
எதுக்கு என்ன அப்படி கூப்பிடுறீங்க ? நீங்க தேவையில்லாத வேலை பண்ணிட்டு இருக்கீங்க? என அவள் பொரிந்து தள்ளினாள்.
இரு இரு மா. ஒரு நிமிஷம் கொஞ்சம் பொறு பேயாட்டம் ஆடாத. என்ன புரியுதா? என்று அவளிடம் ஆளுமையுடன் பேசினான் செந்தூர பாண்டியன். அதில் கொஞ்சம் பயந்து தான் போனாள் மீனாட்சி.
வண்டியை முறுக்கிய படி உஷ்ணம் மூச்சுடன் அவளை பார்த்தவன். இனி இனிமே என் கண்ணுலையோ? என் வண்டி மேலேயோ நீ பட்டேன்னு வை இடிச்சு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன் என்று கூறினான்.
நானும் அதே மாதிரி தான். இனிமே நீங்க என் மேலயோ? இல்ல என்று எதையோ பேச வந்தவள் ஸ்ட்ரக் ஆகி அப்படியே நின்றுவிட.. அவளின் பாவனையை பார்த்ததும் செந்தூர பாண்டியனுக்கு சிரிப்பு வர அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முறைத்தபடியே தன் கெத்தை மெயின்டன் செய்தான்.
நான் எதுக்கு உங்க ஜீப் மேல வந்து விழப் போறேன்? நான் ஒன்னும் வரமாட்டேன் என்று விரைப்புடன் கூறியவள். கிடுகிடுவென நடக்க ஆரம்பித்தாள்.
அடுத்த சந்திப்பில் செந்தூர பாண்டியனின் ஜீப் முன் மீனாட்சி வந்து நிற்பாளா? என்ன? பார்ப்போம்
-வருவான்
EPISODE – 9 ( gold fish)
இவரோட வண்டியில விழ தான் காத்திட்டு இருக்கேனா நானு? வேற வேலை இல்ல irritating idiot என முனகி கொண்டே பஸ்ஸில் ஏறினாள் மீனாட்சி.
கையில் இருக்கும் அந்த ஒரு ஜோடி தங்க மீன்களை பார்த்ததன் தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது மனதுக்கு துடிப்புடன் நீந்தி கொண்டிருக்கும் அவைகளை பார்த்ததும் இந்த கூத்து கலவரத்தில் நான் செம்பருத்திவே மறந்து போயிட்டேன் என்று உடனே அவளுக்கு அழைத்தால் மீனாட்சி.
ஏய் எப்படி வரப்போற? சீக்கிரமா வாடி மீனு. நீ வர லேட் ஆச்சுன்னா நான் உன்னை பார்க்க முடியாது. எங்க பெரியம்மா வந்துட்டா, எனக்கு ஆறு மணியிலிருந்து ஓயாமல் வேலை 10 மணி வரைக்கும் இருக்கும் என்று சிணுங்கி கொண்டே கூறினாள் செம்பா.
இதோ பஸ்ல ஏறிட்டேன் டி செம்பு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவேன்.. கொஞ்சம் பொறுத்துக்கோ! அப்படியே என அவளின் உடையை பார்த்த மீனாட்சி. ஹே இன்னிக்கு நான் பொடவை கட்டி இருக்கேன் டி. செவுறேரி எல்லாம் குதிக்க முடியாது. என்றாள் சோர்வுடன்.
செம்பருத்தி சிரித்துகொண்டே “நான் வேணா ரெண்டு பக்கமும் முக்காலி போட்டு வைக்கவா? ஏறி குதிச்சிடு மெயின் கேட்டு வழியா நீ வந்த! நான் அவ்வளவுதான் சங்கு என்று கூறினாள்.
நீதான் வெளிய வாயேன்? என மீனாட்சி கேட்க, அதுக்கில்லை வேணாம் நீயே உள்ளே வா! என சொல்லிவிட்டு செம்பருத்தி அவளது பதிலுக்காக காத்திருக்க, சரி என்று மீனாட்சி போனை வைத்தாள்.
முக்கால் மணி நேரம் கழித்து களைப்புடன் வந்து சேர்ந்தாள் மீனாட்சி. வெளியில் இருந்து அவளுக்கு போன் செய்தவள் ஹே வந்துட்டேன் என கூற, செம்பா வீட்டை சுற்றி பார்வையை சுழல விட்டவள் மெதுவாக தோட்டத்து பக்கம் பார்த்தாள் அப்படியே கொள்ளை பக்கம் எட்டி பார்த்தாள். அனைவரும் திருவிழா கடை தெருவுக்கு சென்றிருந்தார்கள். இன்று இரவு பெரிய சாமி குடும்பம் சாமியிடம் வேண்டுதல் வைத்து இந்த வருடம் தெரு கூத்து போட ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஊர் மக்கள் அனைவரின் இன்று அதிகமாக கோவில் பக்கம் தான் சுற்றி கொண்டிருப்பார்கள்.
ஹே நான் பின் பக்க கதவு திறந்து வைக்கிறேன் சீக்கிரம் உள்ளே வா! என்றாள் செம்பா. சரி என பெரு மூச்சுடன் யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைந்த மீனாட்சி அப்படியே செம்பருத்தி தங்கி இருக்கும் வீட்டுக்கு பதுங்கி பதுங்கி பூனை போல நுழைந்தவள் மெல்ல கைப்பையை முக்காளி மேல் போட்டு விட்டு மெதுவாக மீனையும் மீன் தொட்டியையும் பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டு கட்டிலில் சரிந்தாள்.
ஹே என்ன டி வந்ததும் படுத்துக்கிட்ட? என வேகமாக சமையலறை பக்கம் சென்ற செம்பா புன்னகையுடன் பால் போஷை நீட்டினாள். என்ன இது? என சோர்வுடன் கேட்டாள் மீனாட்சி.
செம்பருத்தி கண்கள் மின்ன, ஹே வன்னாந்தாளி வாயாடி இங்கே பாத்தியா என நீட்டினாள். என்ன டி எதுவும் பாயசம், அப்படி இல்லன்னா ஆட்டுக்கால் சூப், எதுவும் இருக்கா அதுல? என கேட்டாள் மீனாட்சி.
“இதுல பால் இருக்கு” என செம்பா சொல்ல, மீனாட்சி புருவம் தூக்கிய படி இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா? அதை அப்படிக்கா வை நான் உனக்கு என மீனாட்சி ஆரம்பிக்க, ஹே இரு இருடி இதுல ஒரு லிட்டர் ஆட்டுப்பால் இருக்கு. அப்புறம் இங்கே பாரு கண்ணாடி வளையல். இதெல்லாம் அண்ணன் எனக்காக வாங்கி வந்தது என்றாள் செம்பருத்தி.
ஒரு லிட்டராஆஆஆ! என வாயை பிளந்த படி எழுந்து அமர்ந்தாள் மீனாட்சி. ஆமா நேத்து நான் முகத்தில் பூசிட்டு இருந்ததை பார்த்திட்டு உடனே நைட்டு கொண்டு வந்து கொடுத்தது. அப்டின்னா பார்த்துக்க என் அண்ணனுக்கு என் மேலே அம்புட்டு பாசம் பார்த்துக்கடி மீனாட்சிஈஈஈ! என கிண்டலுடன் கூறினாள் செம்பருத்தி.
சரி கொடுக்கட்டுமே! அதுக்கு காரணம் நான் தான்னு மறந்திட வேண்டாம் செம்பு என எழுந்தவள். அவளின் முன் ஜாடியை வைத்து இன்னொரு பையில் இருந்து தங்க மீன்கள் இரண்டையும் எடுத்து காட்டினாள்.
“ஐ மீனு! கோல்ட் ஃபிஷ் லவ்லி” என கண்கள் மின்ன செம்பருத்தி கூற, மீனாட்சி கர்வத்துடன் அந்த ஆட்டு பாலை இந்த தங்க மீன்கள் கொண்ட மீனாட்சி ஜெயித்து விட்டாள் என பார்த்தாள்.
இல்லையே அப்படி எல்லாம் இல்ல உன்னோட பொருளை விட என் அண்ணன் வாங்கி கொடுத்தது தான் எனக்கு ஒசத்தி என்றாள் செம்பருத்தி.
என்ன? உனக்கு இவ்வளவு செஞ்சும் உன் அண்ணன் தான் முக்கியம்ன்னா அப்போ என் கிட்ட பேச வேணாம் என முகத்தை தூக்கி கொண்டவள் வேகமாக அவளின் கை பையை எடுத்துக் கொண்டு விறு விறுவென கிளம்பி விட்டாள்.
ஹே ஹே இரு மீனா! ஹே மீனாட்சி நான் விளையாட்டுக்கு சொன்னேன் டி என அவள் அழைத்துக் கொண்டே செல்ல, செம்பருத்தி வேகமாக திரும்பி பார்க்காமல் சென்று விட்டாள்.
அய்யோ அதுக்குள் கோவித்து கொண்டாள். என பெரு மூச்சை விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். கொஞ்ச நேரத்தில் செந்தூரன் வந்தான். தங்க மீன்களின் அருகிலேயே அமர்ந்து கொண்டாள் செம்பருத்தி. ஆசையுடன் வைத்த கண் வாங்காமல் அந்த மீன்களை ஆசையுடன் பார்த்தாள்.
பாப்பா என அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் செந்தூரன். அவனது கண்களில் வட்ட மீன் கண்ணாடி குடுவை பட அதில் இருக்கும் மீன்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சி அதன் கூடவே co- incidence ஆ? இதை யார் கொடுத்தா? என இன்னொரு பக்கம் கேள்விகள் வர கூடவே அந்த நினைவுகளுடன் பெயர் தெரியாத சண்டைக்கோழி இல்லை இல்லை மீன்காரியின் நினைவுகள் தான். அதை கொஞ்சம் ஓரங்கட்டி வைத்தவன்.
என்ன பாப்பா இது? என தங்கையின் கண்களில் மின்னும் ஆர்வமும் உற்சாகமும் அவனுக்கும் ஒட்டிக் கொண்டது. அண்ணனின் கண்ணில் ஆச்ச்சிரியம் இருப்பதை பார்த்தவள். Gold fish அண்ணா. எனக்கு பிடிக்கும் ரொம்ப. இப்போ நான் இருக்க வீட்டில் எனக்கு துணை இந்த ரெண்டு ஆளும். பேர் கூட யோசிச்சி வச்சுட்டேன். அப்படியா என்ன பேரு? என ஆசையுடன் கேட்டான் செந்தூரன்.
இது பேரு red boy செந்தூரன் என் அண்ணன் என்றாள். அவன் கண்கள் விரிந்தது. என்ன பாப்பா நீ என்னோட பேர் வச்சிருக்க? என ஆச்சரியத்துடன் கேட்டான். செம்பாவின் கண்கள் விரிய நீ தானே அண்ணா டெய்லி தூங்கும் போது மட்டும் தான் என்னை நினைக்காமல் இருப்ப. யாருக்கு தெரியும்? நீ நைட்டு கூட என்னை நினைச்சிட்டு இருப்ப யாருக்கு தெரியும்? இதுக்கு மேலே நீ என்னை கவனிக்க தேவையில்லை. அதை இது பார்த்துக்கும் என்றாள் செம்பருத்தி.
சரி சரி என கண்ணக்குளி ததும்ப மெலிதாக சிரித்தான் செந்தூரன். அதன் பின் எழுந்தான். அண்ணா தண்ணி! என அவசரமாக நீட்டினாள். வாங்கி குடித்தவன் சரி தங்கம் இரு வரேன் என கிளம்பினான். சரி அண்ணா என அவளும் வேலையை பார்த்தாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் கொஞ்சம் பெரிய ஃபிஷ் டேங்க் அதில் நிறைய gold fish ஜோடிகள் அதன் கூடவே இன்னும் சில மீன்கள் மற்றும் ஃபில்டர் என செட் செய்து மீன்கள் விட பட்டன.
பெரிய வீட்டில் வேலையை முடித்து விட்டு அறைக்குள் வந்தவளது கண்கள் மின்னியது. இரண்டு மீன்களை பார்த்ததும் இப்பொழுது ஒரு பெரிய ஃபிஷ் டேங்க் மொத்தமும் மீன்களாக இருக்க சந்தோசத்துடன் தன் அண்ணனை தேடினாள் செம்பருத்தி.
அவளது எண்ணுக்கு போன் வந்தது. அண்ணா நீ இருக்கியே? என செம்பருத்தி பூரித்து கொண்டு பேச, செந்தூரன் கண்களுக்கு அவளின் முகம் அப்படியே கண் முன் தோன்றியது. பாப்பா உனக்கு எது வேணும்னாலும் என் கிட்ட கேளு! உன்னோட சந்தோஷம் தான் முக்கியம் என்றான்.
ம்ம் அண்ணா சரி அப்படியே பால்கனி பக்கம் வா நான் தூங்க போறேன். உன்னோட முகத்தை பார்க்கணும் என அழைத்தாள் செம்பருத்தி.
கண்ணகுழி ததும்ப வெளியே எட்டி வந்து நின்றான் செந்தூரன். ஓகே அண்ணா என அவன் முகத்தை காற்றில் சுற்றி நெட்டி முறித்தவள் தூங்க போறேன் என்றாள்.
பாப்பா இரு நாளைக்கு சாயங்காலம் நம்ம ஊரில் கபடி போட்டி நடக்குது. அதனால் நீ வரணும் இப்போவே சொல்லிட்டேன் அதுக்கு உன்னை தயார் படுத்திக்கோ! நாளைக்கு மட்டும் வேலை இருக்கு அப்படி இப்படின்னு சொன்ன? அப்புறம் அண்ணன் உன் கிட்ட பேசவே மாட்டேன் என்றான் செந்தூரன்.
இதை கேட்டதும் செம்பருத்தியின் முகம் பதட்டத்தில் மாறியது. எப்படி நான் இதை போய் பெரிமா கிட்ட கேட்பேன்? அய்யயோ என நினைக்கவே வயிற்றை கலக்கியது.
இப்படி செம்பருத்தி அவன் சங்கட படக்கூடாது என எப்படியெல்லாம் சமாளிக்க முடியுமோ அதை செவ்வென செய்து கொண்டிருந்தாள். அவளது குறிக்கோள் தன் அண்ணன் தன்னை நினைத்து சங்கட படக்கூடாது. தன்னால் இந்த குடும்பத்துக்கு எந்த பிரச்னையும் வர கூடாது என்பது மட்டுமே ஆகும். ஆனால் இதுவே அவளின் வாழ்க்கையை பணயம் வைக்க வழி செய்யும் என நினைக்க வில்லை.
வருவான்.
EPISODE – 10 ( செம்பாவின் smart பிளான்)
நாளைக்கு கபடி போட்டி நீ கட்டாயம் வர வேண்டும் என சொல்லி விட்டு நிம்மதியாக உறங்க சென்று விட்டான் செந்தூரன். என்ன பண்ணலாம்? இந்த முறை தப்பிக்க முடியாதே! கண்டிப்பா அண்ணன் கோவிச்சுக்கும். எனக்கு ஒரே ஆறுதல் அண்ணன் தான் இப்போ என்ன பண்றது? என தீவிரமாக யோசித்தாள் செம்பருத்தி.
“ஹான்” என ஒரு ஐடியா வந்தது. இந்த வீட்டில் கொஞ்சம் நல்லவர்கள் பட்டியலில் இருப்பது முத்து பாண்டி சித்தப்பாவும், ஜெயக்கொடி சித்தியும் தான். சிறு வயதில் சங்கவி நன்றாக தான் விளையாடி கொண்டிருந்தாள். அகிலாவை பார்த்து பயந்து தான் அதன் பின் தன்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டாள் என நினைத்தவள். “ஆனாலும் அவள் காரியத்திற்காக அவ்வப்பொழுது பேசுவாள். அதை பயன் படுத்தி நாளைக்கு எதுவும் முயற்சி பண்ணனும் இல்லன்னா! வேற என்ன பண்ணலாம்? ஹான் பல்லு வலின்னு அண்ணன் கிட்ட சொல்லிடுவோம்” என பல யோசனைகளை மூலையில் ஓட்டி பார்த்துக் கொண்டே இருந்தவள். “அய்யய்யோ! இதை எப்படி மறந்தேன்? இந்த மீனாட்சிபுள்ள வேற என் மேல கோபத்துல கிளம்பி போயிட்டாளே! என்கிட்ட பேசறது ரெண்டே ரெண்டு ஆளு தான். ஒன்னு எங்கன்னன். இன்னொன்னு அவதான். இப்போ இவளை வேற சமாதான படுத்தனுமா? எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ?” என்று நினைத்தவள் அப்படியே உறக்கத்தை தழுவினாள் செம்பருத்தி.
இங்கே பெரியூரில் இருக்கும் பண்ணை வீட்டில் காரசாரமாக ஆத்து மீனை பிடித்து அதில் தவாவில் வாட்டி எடுத்து அதனுடன் தென்னை மரத்தில் இருந்து இறக்கிய கள்ளை தனது நண்பன் கர்ணனுடன் குடித்துக் கொண்டிருந்தான் துருவன். இருவரும் நெருக்கமான சினேகிதர்கள். “என்னடா துருவா நாளைக்கு பணையூறில் கபடி போட்டி நடக்குது போல. உன்னோட அக்கா பையன் அதாவது உன்னோட மாப்பிள்ளை களத்துல இறங்குறான்னு எட்டு ஊர்லயும் பேசிக்கிறாங்க. எல்லாரும் டெம்போ கட்டிட்டு நாளைக்கு கபடி ஆட போறாங்களாம். நீ வரலையா?” என்று கேட்டான் கர்ணன்.
துருவன் தனது நண்பனை பார்த்துக் கொண்டே கள்ளு பானையை எடுத்து ஒரே மூச்சில் வாயில் வழிய குடித்து விட்டு கீழே போட்டு உடைத்தவன். “உனக்கு தெரியாதா கர்ணா? நான் ஏன் அங்க வர மாட்டேன்னு?” என்று தன் நண்பனை சிவந்த விழிகளில் பார்த்தான்.
கர்ணன் சிரித்தபடி அதுக்கு இல்ல. நாளைக்கு எல்லாரும் போறாங்க. நான் கூட போறேன் அதனால தான் உன்னை கூப்பிட்டேன் என்று சமாளித்தான்.
எங்க அப்பாவோட வார்த்தைக்கு கட்டுப்பட்டு தான் இதுவரைக்கும் அந்த ஊர் எல்லைக்குள்ள இன்னும் கால் வைக்காமலே இருக்கேன்..அந்த ராஜபாண்டியன் இழவுள! என் அப்பாவை என பற்களை கடித்தான் துருவன்.
“அவரு உன்னோட மாமா டா” என கர்ணன் கூற, “பெரிய மாமா! எங்க அக்காவுக்கு என்ன டா குறை? போய் சேரும் போது எங்க அக்காவை எல்லார் முன்னாடியும் அவமான படுத்திட்டான் அந்தாளு! சின்ன வீட்டை செட் பண்ணி அந்த பொம்பளையும் குழந்தையும் அந்த நேரத்தில் வந்த, அகிலா அக்காவையும் அப்பாவையும் அவமானப்படுத்தினதுங்க. அதை தட்டிக் கேட்ட கேட்க போன எங்க அப்பாவையும் என்னையும் அடிக்க பாஞ்சானுங்க! வெட்கம் கெட்ட ஊரு டா அது. நாயி வாய வச்ச தண்ணிய கூட குடிப்பானுங்க! அதனால் தான் அப்போ எங்க அப்பா சொன்னதுதான் இதுவரை கடைபிடித்து கொண்டு வரேன் அந்த ஊர்ல எக்காரணத்தை கொண்டும் நான் கால வைக்கவே மாட்டேன்.” என்று பற்களை கடித்தபடி கூறினான் துருவன்.
கர்ணன் போதையில் அடுத்து பேச வர, அதற்குள் துருவனின் போன் சினங்கியது. அதில் அவனது மனைவி சுதா என்று வர, போனை கோபத்துடன் ஹே வரேன் வைடி என்று அதிகாரத்துடன் கூறினான்.
யாரு போன்ல தங்கச்சியா? என்று போதையுடனே கேட்டான் கர்ணன்.
“என்னை கட்டிக்கிட்ட பிசாசு! அவளெல்லாம் பொண்ணே இல்ல பேயி! எங்க அம்மா சொத்துக்கு ஆசைப்பட்டு அந்த சிறுக்கிய என் தலையில கட்டி வச்சுட்டாங்க. அவ என்ன பெரிய உலகத்திலேயே இல்லாத மகாராணி மாதிரி என்னை அதிகாரம் பண்ண முயற்சி பண்றா டா! மினுக்கிட்டு திரியரா! ஒரு அடி போட்டனா பொட்டுன்னு போய்டுவா வேற வழியில்லாமல் பல்ல கடிச்சுக்கிட்டு இருக்கேன்.” என்று இன்னொரு கல்லு பானையை எடுத்து வாயில் சரித்தான் துருவன்.
அப்போ நீ வரலையா என்று கர்ணன் போதையில் கேட்க, நான் வரமாட்டேன் என சொல்லியபடியே மட்டையானவன். அதன் பின் எழுந்து தன்னை சரி செய்து கொண்டு மெதுவாக “நீ போய் விளையாடுறதா இருந்தா அவன தோக்கடி! அதுதான் எனக்கு வேணும்! என்ன பாத்தா மாமான்ற மரியாதை கூட அந்த நாயிக்கு இல்ல. ஏன் அந்த குடும்பத்துக்கு சரி அந்த ராஜபாண்டியனோட ரத்தத்துக்கும் சரி துளி கூட இல்ல. அவன எதுவும் பண்ண முடியாமல் இருக்கேன். எல்லாம் எங்க அக்காவுக்காக தான் பொறுத்து கிட்டு இருக்கேன்.” என்று தள்ளாடிய போதையின் மயக்கத்தில் கூறிய துருவன் தள்ளாடியபடி சென்றான் அவனது வீட்டுக்கு.
துருவன் சென்றதும் தந்திர புன்னகையை சிந்திய கர்ணன் , ” டேய் செந்தூரப்பாண்டியா உன்ன தோக்கடிக்காமல் விடமாட்டேன் டா. உன்னை ஜெயிச்சு அது கூடவே உங்க வீட்டு பொண்ணு கேக்க போறேண்டா! ” என்று போதையில் பிதற்றிக் கொண்டே கண்ணை மூடினான்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. காலையில் நேரமே எழுந்த செம்பருத்தி முதலில் மீன்களை பார்த்து கொஞ்சி விட்டு, அதற்கு உணவுகளை போட்டவள். ஆறு மணிக்கெல்லாம் குளித்து முடித்து நேராக பெரிய வீட்டுக்கு சென்றாள். காலையில் இட்லி சப்பாத்தி பூரி கிழங்கு என அனைத்தையும் செய்து முடித்தவள். சங்கவியிடம் பேச வேண்டுமே என்று அவளுக்கு திக்கான எருமை பாலில் பூஸ்ட் கலக்கிக்கொண்டு அவளது அறைக்குச் சென்றாள்.
சங்கவி! சங்கவி! என்று மென்மையாக அழைத்தாள். “எனக்கு தூக்கம் வருது டிஸ்டர்ப் பண்ணாத செம்பா! இல்லன்னா உன்ன பெரியம்மா கிட்டையே சொல்லிடுவேன்.” என்று அதட்டலுடன் பேசினார் குரல் வந்தது சங்கவியிடம் இருந்து.
அய்யோ சங்கவி உனக்காக திக்கா பூஸ்ட் போட்டு கொண்டு வந்துருக்கேன். என்று செம்பருத்தி சொல்லவும் சங்கவி வாசனையை பிடித்துக் கொண்டே எழுந்து அமர்ந்தாள்.
அவளது இந்த குணம் முத்துப்பாண்டியிடம் இருந்து வந்தது. சும்மாவே இருப்பது, சாப்பிடுவது, உறங்குவது, கல்லூரிக்குச் சென்றாலும் இதையேதான் செய்து கொண்டிருக்கிறாள் சங்கவி. படிப்பு ஏறவில்லை என்று ஜெயக்கொடிக்கு ஒரே கவலையாகி போனது. சீக்கிரம் இவளை யாராவது ஒருவரது கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால் நிம்மதியாக இருக்கும். இல்லை என்றால் படிக்க செல்கிறேன்! என்று பணத்தையும் அவளது வயதையும் விரயம் செய்பவள் படிப்பில் அறியர் வைத்து வீட்டில் தனது மானத்தை வாங்கினால் என்ன செய்வது? என்று வெசனத்துடன் இருந்தார் ஜெயக்கொடி.
என்ன பூஸ்ட்டா? நிறைய போட்டியா என்று சொல்லிக் கொண்டே செம்பருத்தியிடமிருந்து பெரிய அரை லிட்டர் டம்ளரை வாங்கினாள் சங்கவி.
வாசனையா இருக்கா? உனக்காக கெட்டியா காய்ச்சினன்! என்று கண்கள் மின்ன கூறினாள் செம்பருத்தி. அப்படியா! என்று தலையை சொரிந்து கொண்டே வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்தாள் சங்கவி.
அது உனக்கு ஏதாவது வேலை செய்யணுமா? சொல்லு? உன்னோட துணி எல்லாம் துவச்சு அயன் பண்ணியாச்சா? வேற ஏதாவது அழுக்கு துணி இருக்கா? என்று கேட்டாள் செம்பருத்தி. அதெல்லாம் எதுவும் இல்லை என்று குடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினாள் சங்கவி.
அப்படியா சரி என அவளை ஆராய்ந்த செம்பா. என்ன தலையை சொரிந்துகொண்டே இருக்க? பேன் எதுவும் இருக்கா? நான் வேணா சிடுக்கு எடுத்து சுத்தம் செஞ்சு, தலைக்கு எண்ணெய் வச்சு குளிக்க வைக்கட்டுமா? சீக்காய் போட்டு. அப்படியே உனக்கு தலையை வாரி விடட்டுமா? என்று தூபம் போட்டாள் செம்பருத்தி.
அதெல்லாம் ஒன்னுமில்ல என்னை தொந்தரவு பண்ணாத செம்பா. இல்லனா உன்ன பெரியம்மா கிட்ட சொல்லிடுவேன். என்று மிரட்டினாள் சங்கவி.
இதை கேட்டதும் செம்பருத்தி மென்மையாக சிரித்தபடி “இல்லை சும்மா கேட்டேன் உன்மேல இருக்கிற அக்கறைல தான் கேட்டேன்” என்று சமாளித்தாள். சரி என்று மீண்டும் மிச்சமிருக்கும் பூஸ்ட்டை குடித்துக்கொண்டிருந்தாள்.
சரி படிப்பு எல்லாம் எப்படி போகுது? ஏதாவது எழுதணும்னா சொல்லு? நான் எழுதி கொடுக்கிறேன். என்று அவள் சொல்லவும் உடனே சங்கவியின் முகம் பளிச்சிட்டது.
இப்போ என்ன சொன்ன? நிஜமாத்தான் சொல்றியா என்று உற்றுப் பார்த்தாள் சங்கவி. ஆமா எதுவும் எழுதிக் கொடுக்கிறது இருக்கா? சொல்லு? இது மாதிரி உனக்கு நான் நிறைய எழுதி கொடுத்துருக்கேன் தானே! என சொன்னாள் செம்பா.
ஆமா எனக்கு ரெண்டு அசைன்மென்ட் கொடுத்துருக்காங்க. அது கூட ரெக்கார்டும் இருக்கு. முடிச்சு தரியா நோம்பி வேற வந்துடுச்சா! எனக்கு முடிக்கவே நேரம் இல்ல. என்றாள் மிகவும் படித்து களைத்தவள் போல. செம்பருத்தி மனதுக்குள் சிரித்தபடி “அப்பாடி வழிக்கு வராடா”, “ம்ம் அப்படியா சரி! ஆனா அதுக்கு நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும்!” என்று சங்கவியை பார்த்தாள்.
உதவியா? என்ன உதவி? என்று சங்கவி கேட்க, இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடக்குது. அதுக்கு என்ன நீ கூட்டிட்டு போகணும். என அவளை பார்த்தாள் செம்பருத்தி.
“முடியாது என்னால” என்று வெடுக்கென சங்கவி கூற, அப்படியா? சரி அப்ப நீயே இந்த ரெக்கார்டையும் முடிச்சுக்கோ. எல்லாத்தையும் பாத்துக்கோ. என்று அரை லிட்டர் காலி செய்த டம்ளரை வாங்கிக்கொண்டு எழுந்து செல்ல, என்ன நானே முடிக்கவா? இப்பதான நீ எனக்கு முடிச்சு தரேன்னு சொன்ன? இப்போ மாத்தி பேசுற? என சங்கவி செம்பாவின் முன்னால் சென்று தடுத்து நிறுத்தினாள்.
ஆமா முடிச்சு தரேன்னு சொன்னேன் தான்.. ஆனா நீ என்னை கபடி போட்டிக்கு கூட்டிட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டியே என்று செம்பருத்தி பாவமாக கூற, அது பெரிமா கேட்டா! நான் என்ன சொல்லட்டும்? உனக்கே தெரியும் தானே! அவங்க கோபம் பற்றி என்று சங்கவி அவளிடம் கூறினாள்.
அதுக்கு தான் சங்கவி சொல்றேன். நான் உனக்கு துணையா வரேன். நீ பெரியம்மா அப்படி கேளு. உங்க அம்மா கிட்ட சொல்லி கேளு கண்டிப்பா ஒத்துப்பாங்க என்றாள் செம்பருத்தி.
அப்படியா எனக்கு பயமா இருக்கு செம்பா என்று சங்கவி கூற, அப்படின்னா நீயே எழுதிக்கோ நான் போறேன் என்ற அவள் நகர, இல்லை இரு என்று தயங்கிய சங்கவி.
சரி நான் பெரிமா கிட்ட பேசுறேன் என்று உறுதியாக கூற, சரி பேசிட்டு சொல்லு உன்னோட எழுத்து வேலைக்கு நான் கேரண்டி என சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் செம்பருத்தி.
செம்பாவை அழைத்து செல்வதை பற்றி சங்கவி கூறினால் அகிலா ஒத்து கொள்வாரா? இல்லை தடுப்பாரா? என்ன நடக்கும்?
வருவான்.
EPISODE – 11
செந்தூரன் நேரத்திலேயே தேங்காய் மண்டி மற்றும் ஆயில் மில் விஷயமாக கிளம்பி விட்டான். இன்று கபடி போட்டி இருக்கிறது. அதற்கு ஒருமுறை பிராக்டிஸ் செய்ய வேண்டும். அதன் கூடவே அனைத்து வீரர்களையும் தயார் செய்ய வேண்டும் என முதலில் அவனது வேலையை முடிக்க கிளம்பி விட்டான்.
உணவு மேஜையில் அகிலாண்டேஸ்வரி, சங்கவி, முத்துப்பாண்டியன், ஜெயக்கொடி செல்ல பாண்டியன், தனலட்சுமி மணிகண்டன் என அனைவரும் அமர்ந்து அமைதியாக சாப்பிட்டு கொண்டிருக்க, ” எப்படி பெரியமாவிடம் இதைப்பற்றி பேசுவது? என்று தயங்கிக் கொண்டே இருக்க, செம்பருத்தி சிக்னல் கொடுத்து “பேசு” என அவளுக்கு பூரி மற்றும் கிழங்கை வைத்தாள்.
“பெரியம்மா” என்று தயக்கத்துடன் சங்கவி அழைக்க, என்னடா செல்லம் என்று சிரித்தபடியே அகிலாண்டேஸ்வரி அவளை பார்த்தார்.
பெரியம்மா! அது வந்து இன்னைக்கு, சாயங்காலம் கபடி போட்டி நடக்குதில்ல.. நம்ம அண்ணா கூட கலந்துக்கரானே! என்று சங்கவி கூற, “ஆமாண்டா தங்கம்” என்று அகிலா சாப்பிட்டுக் கொண்டே சங்கவியை பார்த்தார்.
அதுக்கு தான் பெரிமா நான் செம்பருத்தி கூட்டிட்டு போகவா? என்று கூறிவிட்டாள்.
உடனே உணவு சாப்பிடுவதை தவிர்த்து மொத்த குடும்பமும் சங்கவியையும் அகிலாண்டேஸ்வரியையும் பார்த்தது. முத்துப்பாண்டியன் மனதில் “ஐயையோ இந்த பாப்பாவுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை? செம்பாவ பத்தி பேசினாவே எங்க அண்ணி ருத்ரகாளியா மாறிடுமே! இப்ப என்ன நடக்க போகுதோ? நான் வேற ரெண்டே ரெண்டு பூரி தான் சாப்பிட்டேன். இன்னைக்கு சப்பாத்தி கூட ரொம்ப டேஸ்டா இருக்கே! இட்லி இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே?”என்று வருத்தத்தில் உணவு தட்டையும் அகிலாவையும் பார்த்தார்.
சங்கவி அடுத்து பேச வர அவளை பேச விடாமல் “அது வந்து மா சங்கவி ஏதோ திருவிழாவுல நிறைய பொருள் வாங்கணும்னு சொன்னது. அதை எடுத்துட்டு போறதுக்கு வேலைக்காரங்க கூப்பிட்டது. எல்லாரும் லீவுல போயிட்டதனால, என்னை கூப்பிட்டது. நான் வரவே மாட்டேன்னு சொல்லிட்டேன். என சிரித்து கொண்டே கூறினாள் செம்பருத்தி..
அகிலாண்டேஸ்வரி செம்பருத்தி யையும் சங்கவியையும் மாறி மாறி பார்த்தார். அவரது மனதில் அங்கே போக பிடிக்கலயா? அப்போ நீ போகனும் டி! என நினைத்தார்.
சங்கவியின் மனதில் என்ன? நம்மகிட்ட ஒன்னு சொன்னா? இப்போ மாத்தி பேசுறாலே? பெரியமா வேற முட்ட கண்ணை போட்டுட்டு நம்மளை முறைச்சு பார்க்குதே! இப்போ என்ன நடக்கும்? என்று பதட்டத்துடன் பார்த்தாள்.
அகிலாண்டேஸ்வரி ஆளுமையாக சொடக்கு போட்டபடி செம்பருத்தி முறைத்து பார்த்து “எங்க வீட்ல பாப்பாவுக்கு வேலை செய்வதற்கு தான் நீ இருக்க. எப்படி வீட்டிலேயே சும்மா இருக்கன்னு சொல்ல முடியும்? போயி பாப்பா கூட அவளுக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கி கொடு. இந்த வீட்ல நீ வேலைக்காரிய இருக்க புரிஞ்சுதா? இங்க என்னையே எதிர்த்து பேசுற அளவுக்கு வந்துட்டியா?”என்று அகிலா குரலை உயர்த்தினார்.
அது மன்னிச்சிருங்கமா. தெரியாம சொல்லிட்டேன் என்று செம்பருத்தி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சங்கவியையும் பார்த்து “என்ன மன்னிச்சிடு” என்று செம்பருத்தி சிரிப்புடன் அவளுக்கு பரிமாறினாள்.
“அப்பாடா!! நல்ல வேலை இட்லி பூரி சப்பாத்தி எல்லாமே தப்பிச்சது” என முத்துப்பாண்டியன் மீண்டும் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினார். சங்கவி இன்னும் இரண்டு மூன்று பூரி சப்பாத்தியை நன்றாக சாப்பிட்டுவிட்டு உண்ட களைப்பு உறக்கம் தேட படுக்கையை நோக்கிச் சென்றாள். செம்பருத்தி அவளுக்காக மோர் கடைந்து எடுத்து வந்தவள். இது குடிச்சிட்டு தூங்கு இல்லனா வயிறு அப்ஸட்டாகி திரும்ப சாயங்காலம் போக முடியாமல் போயிட்டா என்ன பண்றது என கொடுத்தாள்.
ஆமா பெரிமா கிட்ட ஏன் பொய் சொன்ன? என்று சங்கவி கேட்க… இல்லையே உண்மைதான் சொன்னேன். நம்ம போலாம். உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ. நான் உன்னோட பொருளை எல்லாம் தூக்கிட்டு வரேன். என்று செம்பருத்தி கூற, சரி எனக்கு எழுதி கொடுத்துடுவ தான? என்று மொத்த ரெகார்ட் மற்றும் அசைன்மென்ட் அனைத்தையும் சங்கவி நீட்டினாள்.
செம்பருத்திக்கு அதை பார்த்ததும் களைப்பாக இருந்தது. இத்தனை எழுதாம இருக்கியா? என்று கேட்க, ஆமா நீ தானே எழுதிக் கொடுக்கிறேன்னு சொன்ன எல்லாத்தையும் எழுதி கொடுத்துவிடு. என்னோட கையெழுத்து மாதிரியே வேணும். என்று அவள் பக்கம் தள்ளினாள்.
ஐந்து ரெகார்ட் 3 அசைன்மென்ட் இருக்க பெருமூச்சு விட்டபடி அனைத்தையும் வாங்கிக் கொண்டு அவளது கெஸ்ட் ஹவுஸ் வீட்டுக்கு சென்றவள். ஒரு பக்கம் நோட்டு மற்றும் புத்தகங்களை ஓரமாக வைத்துவிட்டு மதிய உணவை சமைக்கச் சென்றாள். அனைத்தையும் தயார் செய்துவிட்டு, மீனாட்சிக்கு அடிக்கடி போன் செய்தாள். அந்த மீனாட்சி இன்னும் போன் எடுத்த பாடில்லை. இந்த மொத்த அசைன்மென்டையும் ரெக்கார்டிங் தனியாக முடிக்க முடியாது. துணைக்கும் மீனாட்சி வேண்டும் அதைவிட மீனாட்சி பேசாமல் இருந்தால், அவளுக்கு காய்ச்சலே வரும். அந்த அளவுக்கு மீனாட்சியை செம்பொருத்திக்கு மிகவும் பிடிக்கும். அண்ணனை ஒப்பிட்டு பார்க்கும் போது அண்ணன் தான் ஒசத்தி இருந்தாலும் மீனாட்சியின் சாயல் கொஞ்சம் வள்ளியை போலவே இருக்கும். அதைவிட மீனாட்சி அனைவரிடமும் துருதுருவென பழகும் குணம் கொண்டவள்.
மதியம் ஆரம்பித்து மாலை வரை ரெக்கார்டு எழுதியவள். முக்கி முக்கி இரண்டு மட்டுமே முடித்திருந்தாள். ஒரு பக்கம் கவலையாகவும் கை உடையும் அளவுக்கு வலி பின்னி எடுத்தது. இத்தனை படிப்பு வேலை வச்சிட்டு இருக்காளே? இவ எதுக்கு தான் படிக்கப் போறாளோ? நல்லவேளை இன்னும் ரெண்டு நாள் டைம் இருக்கு என்று பெருமூச்சு விட்டாள் செம்பருத்தி. வேறு என்ன செய்ய முடியும் கொத்தடிமையை விட மோசமான நிலையில் அல்லவா இருக்கிறாள் அவள்.
சரி மீனாட்சிக்கு கூப்பிடலாம் என்று மீண்டும் போனுக்கு அழைத்தாள். இந்த முறை மூன்றாவது அழைப்பில் எடுத்து விட்டாள் மீனாட்சி.
“ஹலோ மீனு குட்டி! அழகு மயிலு!” என கொஞ்சினாள் செம்பருத்தி. அந்த பக்கம் அமைதியாக இருக்க, என்ன மன்னிச்சிடு மீனாட்சி நா உன்கிட்ட கொஞ்சம் விளையாட்டா தான் பேசினேன். ஆனா உனக்கு கோபம் வந்துருச்சுல்ல பரவால்ல நீயாவது என்கிட்ட உரிமையா கோபப்பட இருக்கீங்க. இப்போ எனக்கு யாருமே இல்லன்னு எனக்கு இப்ப தோணவேயில்லை தெரியுமா என்று சென்டிமென்டை அள்ளி தெளித்தாள்.
ஹே போதும் போதும் நிறுத்துடி இப்ப எதுக்கு போன் பண்ண? என்று மீனாட்சி கேட்க, வீட்டுக்கு வரவே இல்ல. அதனால தான் போன் பண்ணேன் டி.
அடி பாவி உன்னை நேத்து தானடி வந்து பார்த்துட்டு போன? என்று மீனாட்சி அதிர்ச்சியுடன் கேட்க, அதில்ல இன்னிக்கு நீ கபடி போட்டிக்கு வரலயா? என்று செம்பருத்தி வினவினாள்.
ஏன் நீ வரப் போறியா என்று மீனாட்சி கேட்டாள். ஆமா நான் வரப்போறேன் என்று புன்னகையுடன் பதிலளித்தாள் செம்பருத்தி.
எப்படி இது சாத்தியமாச்சு? உங்க அண்ணன் கூட்டிட்டு வரானா? என்று கேட்க, செம்பருத்திக்கு கோபமாக வந்தது. ஆனால் இப்பொழுது அவளிடம் கோபத்தை காட்டிவிட்டால் காரியத்தை சாதிக்க முடியாது. ரெக்கார்டு மொத்தத்தையும் செம்பருத்தி எழுத முடியாது என கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டவள்.
இல்லை பெரியம்மா கிட்ட கேட்டு சங்கவியும் நானும் வரோம் என்று முடித்திருந்தாள். “அப்படியா சரி ஆனா எனக்கு வேலை இருக்கு என்று மீனாட்சி தட்டி கழிக்க, ப்ளீஸ் எனக்காக வாயேன் நான் தனியா இருப்பேன். சரி போ நீ வர வேண்டாம் என்று செம்பருத்தி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
சரி வரேன் வரேன் என்று போனை வைத்தாள் மீனாட்சி.
ஆடுகளத்தில் மொத்தம் எட்டு ஊரிலும் இருந்து ஒவ்வொரு அணிகளாக வந்திருந்தார்கள். கால் இறுதி, அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதோ நான்கு அணிகள் தான். அந்த நான்கு அணிகளில் இரண்டு இரண்டு அணிகளுக்கு போட்டி நடைபெற்று, கடைசியில் இரண்டு அணி மோதும். அதில் “பனையூர் பாய்ஸ்” என செந்தூரப் பாண்டியனின் குழு மற்றும் புதூரில் இருந்து கர்ணனின் குழு விளையாட போகிறது..
பெரியூர் இந்த கபடி போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு காரணம் பெரியூர் தான் அகிலாண்டேஸ்வரியின் பிறந்த ஊர். ஏற்கனவே ராஜபாண்டியனின் ஈமச்சடங்கில் பிரச்சனையானதிலிருந்து அகிலாண்டேஸ்வரி பெரியூருக்கு சென்று வருவதில் சிக்கலாகவும், கூடவே எந்த பேச்சு பரிமாற்றமும், இல்லாமல் போனதால் , அந்த ஊரிலிருந்து யாரும் கலந்து கொள்ள வரவில்லை.
இப்பொழுது செந்தூரப் பாண்டியன் ஒரு பக்கத்திலிருந்தும் கர்ணன் இன்னொரு பக்கத்தில் இருந்தும் மோத இருக்கிறார்கள். செந்தூரப் பாண்டியனின் அணிக்கு “பனையூர் பாய்ஸ்”என்று பெயரிடப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது.
கர்ணனின் குழுவுக்கு ” சூப்பர் சுறா” என்று பெயரில் அவர்கள் பதிந்து ஆடினார்கள்.
கபடியில் யார் ஜெயித்தார்கள்?
செம்பருத்தி கபடி போட்டிக்கு வந்து சேர்ந்தாளா? இல்லை பிரச்னை எதுவும் நடந்து தடை பட்டதா? அடுத்து
என்ன நடக்கும்?
வருவான்.
EPISODE – 12 ( கபடி கபடி)
கபடியில் போட்டியில் ஒரு குழுவில் மொத்தம் ஏழு பேர் கொண்ட வீரர்கள் இருப்பார்கள் செந்தூரப் பாண்டியனின் குழுவில் ஏழு பேர் அதேபோல் கர்ணனின் குழுவில் ஏழு பேர் இருந்தார்கள். செந்தூரப் பாண்டியனின் அணி நேர்மையாக விளையாடி ஜெயித்திருந்தது. ஆனால் கர்ணனின் அணியில் இருக்கும் அனைத்து முக்கியமான ஐந்து வீரர்கள் பணத்திற்காக சென்னையிலிருந்து வரவழைத்திருந்தான். கர்ணனுக்கு செந்தூரபாண்டியனை ஜெயிக்க வேண்டும். அதனால் இந்த குறுக்கு புத்தியில் அவனை ஜெயிக்க நினைத்தான். கடைசியில் அவன் ஜெயிப்பானா பார்ப்போமே அதையும்.
கோவிலுக்கு அருகில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை கபடி விளையாடுவதற்கு என பட்டிக்கட்டி தயார் செய்திருந்தார்கள். ஒரு பக்கம் மேடை அமைத்திருந்தது. அண்ணா எப்படியோ பைனல்ஸ்க்கு போய்ட்டோம் என்று அனைவரும் சொல்ல, கண்டிப்பாக நாம் முயற்சி பண்ணுவோம் வரது வரட்டும் பார்த்துக்கலாம் என்று செந்தூரப் பாண்டியன் தண்ணீரில் முகத்தை கழுவிக் கொண்டே கூறினான்.
நம்ம தான் அண்ணா ஜெயிப்போம் என்று தரணி கூற, செந்தூரன் அவனை பார்த்து , “அப்படி நினைக்க கூடாது தரணி.. என்னைக்கும் நம்மளோட முழு முயற்சியையும், நம்மளோட உழைப்பையும் மட்டும் தான் போடணும். வெற்றியை பற்றி என்னிக்குமே நினைக்க கூடாது. அப்படின்னு தோணி சொல்லி இருக்காரு என்று கூற, தரணிக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. உத்வேகத்துடன் ” கண்டிப்பா அண்ணா நீங்க சொல்ற மாதிரியே நம்மளோட முழு உழைப்பையும் போடலாம். நம்மக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும் ” என அனைவரும் தாரக மந்திரத்தை மனதில் நினைத்துக் கொண்டு தயாராக இருந்தார்கள்.
செந்தூரப் பாண்டியன் அந்த மக்கள் கூட்டத்தில் ஒருவரை தேடிக் கொண்டிருந்தான். அவனது விழிகள் ஏக்கத்துடன் மைதானத்தை ரவுண்ட் அடித்தது. அப்போ பாப்பா வரலையா என்னை ஏமாத்திட்டாலே என்று நினைத்துக் கொண்டிருக்க, அந்த நேரம் அண்ணா என்று இரண்டு குரல்கள். கண்ணகுழி தெரிய சிரித்துக் கொண்டே திரும்பினான் செந்தூர பாண்டியன்.
செம்பருத்தி மற்றும் சங்கவி இருவரும் அவன் எதிரில் இருந்தார்கள். அண்ணா நீ தான் ஜெயிப்ப உற்சாகத்துடன் கூற.. சங்கவியோ ஆமா அண்ணா என சொங்கிப் போய் கூறினாள்.
பாப்பா வந்துட்டியா? என்று செந்தூரன் செம்பருத்தியின் அருகில் வர, அண்ணா நீ தான் ஜெயிக்கணும் என்று சாமி திருநீற்றை நெற்றியில் பூசி விட்டாள்.
ம்ம் கண்டிப்பா நான் தான் ஜெயிப்பேன் என்று சொல்ல, தரணி செந்தூரனை பார்த்தான்.
ஒரு குட்டி புன்னகையை சிந்திய படி தம்பி இது தங்கச்சி சென்டிமென்ட் டா! என் தங்கச்சி என்ன நினைக்குதோ அதை தான் நான் செய்வேன் என்று அப்படியே அந்தர் பல்டி அடித்தான் செந்தூரப் பாண்டியன்.
செம்பருத்தி செந்தூரணுக்கு நெற்றியில் திருநீற்றை பூசி விடுவதையும் இருவரும் சிரித்துக் கொண்டு நிற்பதையும் தூரத்தில் இருந்து பார்த்த கர்ணனுக்கு யார் அது என ஆர்வம் மின்னியது சென்பருத்தியை பார்த்து.
இங்கே தரணி அடேங்கப்பா இது உலக மகா நடிப்புடா சாமி. இந்த அண்ணன புரிஞ்சுக்கவே முடியல என்று கூறினார்கள். ஆம் விளையாடும் போது மட்டும் தான் அவனை அண்ணா என்று அழைப்பார்கள். வெளியிடத்திற்கு வந்துவிட்டால் ஐயா தான். ஏனென்றால் அந்த ஊரில் பெரிய குடும்பம் அவனை செந்தூரபாண்டியனது குடும்பம் தான். பெயரில் மட்டும் பெரிய குடும்பம் அல்ல ஊருக்கு உதவுவது என்றால் சௌந்தரபாண்டியன் முதற்கொண்டு ராஜபாண்டியன், ஏன் செல்ல பாண்டியனும் கூட அனைவருக்கும் உதவுவார்.
அவரது எண்ணம் தன்னை பற்றி அனைவரும் பெருமையாக பேச வேண்டும் என்று ஆனால் உண்மையில் சௌந்தரபாண்டியனின் குடும்பத்தில் அனைவரும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். அது யாராக இருந்தாலும் சரி. அந்த வழியில் வந்த செந்தூரப்பாண்டியன் அனைவரிடமும் நட்புறவாகவும் நன்றாகவும் பழகுவதால் ஊர் மக்கள் அனைவரும் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள்.
பாப்பா நீ எங்க இருக்க? என்று செந்தூரன் கேட்க, அண்ணா நான் உன் பக்கம் தான் நிப்பேன். நீ ஜெயிக்கணும்! நீ தான் ஜெயிக்கணும். சரி நான் உன்னைய பார்த்துட்டு இருப்பேன் என்று கூறினாள்.
செந்தூரனை பக்கத்தில் இருந்து பார்க்கும் ஒரு நல்ல இடத்தில் இருவரும் நின்று கொண்டார்கள். இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? எனக்கு கொஞ்சம் பசிக்கிற மாதிரி இருக்கு என்று சங்கவி கேட்க, உனக்காக நான் கடலை மிட்டாய் வாங்கி வச்சிருக்கேன் இந்தா என்று அதுல பொரி உருண்டையும் இருக்கு. செம்பா கொடுக்க, கடலை மிட்டாய் பொறி உருண்டையுமா? முன்னாடியே நீ ஏன் சொல்லல என்று வாங்கி மெதுவாக தின்று கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கவி.
அந்த நேரம் பார்த்து இன்னொரு பக்கம் கர்ணனின் ஆட்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கண்களில் செம்பருத்தி மற்றும் சங்கவி இருவரும் பட செந்தூரணிடம் அவள் பேசியதில் இருந்து கர்ணனின் பார்வை செம்பருத்தி துலைத்து எடுத்தது. யார் இவ பயங்கரமா இருக்காளே? என்ன கண்ணு? என்ன மூக்கு? லட்சணமா இருக்காளே! அந்த கன்னத்து மச்சம் என்று மொத்த எண்ணமும் அவனது ஆண்மையும் நட்டு கொண்டது.
அவனது கவனம் அவளிடம் கபடி ஆட துடித்தது. இள பிசா இருக்கா? எந்த ஊர்க்காரின்னு தெரியலையே? கடவுளே இவ பனையூர் காரியா இருக்க கூடாது. அப்படி மட்டும் இருந்தால்? இன்னைக்கு நைட்டு இவ என் பண்ண வீட்ல தான் என்று ராவு கனவு கண்டான் கர்ணன்.
அவளின் அழகையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு சும்மா போக மனமில்லை. எனர்ஜிக்காக அவளை கொஞ்சம் உரசி விட்டு செல்லலாம் என்று நினைத்தவன் நேராக செம்பருத்தி அருகில் காலை தட்டியபடி அவனது ஜெர்சி உரையை பின்னால் தூக்கிப் போட்டுவிட்டு தலையை கோதியபடி அருகில் சென்றான்.
சட்டென ஒருவர் அருகில் மோத வருவது போல தெரிய வேகமாக விலகினாள் செம்பருத்தி. மிஸ் ஆகி போச்சே! குட்டி எந்த ஊரு? பார்க்க தளதளன்னு தக்காளி மாதிரி இருக்காடி என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன்.
ஏனுங்க! எந்த ஊரு என்று அருகில் சென்று கேட்டான். வெடுக்கென திரும்பியவள் யாரோ எவரோ என்று பார்க்க, உன்ன தான் எந்த ஊரு நீ என்று கண்ணடித்தான் கர்ணன்.
அய்யோ அண்ணா பார்த்துட்டா பிரச்னை ஆகிடுமே என பதட்டத்துடன் பின்னால் நகர்ந்தாள் செம்பருத்தி.
அட ரொம்பத்தான் மினுக்குரியே? உனக்கு என்ன வேணும்னு சொல்லு. பணம் வேணுமா? இல்லனா பட்டு புடவை, கொலுசு, வெள்ளியில் வேணுமா? தங்கத்துல வேணுமா? எதுவா இருந்தாலும் இந்த கர்ணன் தருவான். கொடுக்கறதுல வள்ளல் டி நானு. என்று மீசையை முறுக்கப்படியே சொன்ன கர்ணன். போட்டியில் முடியறதுக்குள்ள சொல்லு. போகும் போது நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போலாம் என்றான்.
செம்பருத்திக்கு அவனை பார்க்க பார்க்க பற்றி கொண்டு வந்தது. இவனை துண்டு துண்டாக வெட்டி போட்டால் என்ன தவறு என தோன்றியது. அதற்குள் போட்டி அறிவிப்பவர் அழைக்க, கர்ணன் அவளை பார்த்து கண்ணை சிமட்டிய படி சென்றான்.
செம்பருத்திக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பெரியம்மா சொன்னது சரிதானோ நான் வீட்டிலேயே இருந்திருந்தால் இந்த பிரச்சனை எல்லாம் வந்திருக்காது. என்னவோ? இப்போ இது மட்டும் பெரியம்மாவுக்கு தெரிஞ்சது மறுபடியும் அம்மாவையும் என்னையும் வச்சு தேவையில்லாம நிறைய பேசுவாங்க அய்யோ என்று முகம் எல்லாம் முத்து முத்தாக வியர்த்து வடிந்தது.
அதற்குள் மேட்ச் ஆட வீரர்களுக்கு அறிவிப்பு கொடுக்க சரி வா நம்ம மேட்ச் பார்க்கலாம். இனி வெளியே வரவே கூடாது. நம்ப கொஞ்ச நேரம் இருந்துட்டு உடனே கிளம்பிடலாம் என்று செம்பருத்தி மெதுவாக செந்தூரன் பக்கம் கவனத்தை செலுத்தினாள்.
ஒரு பக்கமாக நின்று கர்ணனை பார்க்க பார்க்க அருவருப்பாக இருந்தது. அதனால் ஒரு பக்கமாக நின்று கொண்டிருந்தாள். போட்டி ஆரம்பமானது. முதல் நாற்பது நிமிடங்கள் ஒவ்வொரு வீரரும் இரண்டு அணியிலிருந்தும் மாறி மாறி ரைடு வந்தார்கள்.
ஏய் இங்க பாருடி அண்ணனோட பக்கம் எல்லாருமே தோத்து போயிட்டாங்க. இப்போ அண்ணா மட்டும்தான் இருக்காங்க என்ன ஆகும்னு தெரியலையே? உன்கிட்ட வந்து பேசிட்டு போனானே அவன் பாரு அவனோட டீம்ல எல்லாருமே இருக்குறானுங்க என்று சங்கவி ஒரு கடலை மிட்டாய் நறுக்கென கடித்துக் கொண்டே பார்த்தாள்.
செம்பருத்தியின் பார்வை கபடியில் கவனம் செலுத்தியது கர்ணன் வெற்றி புன்னகையுடன் பரவாயில்லையே அந்த குட்டியை பார்த்ததும் நமக்கு வெற்றி தட்டிகிச்சோ என்னமோ! அப்போ கப்பு நமக்கு கூடவே அவளும் என வெற்றிப் புன்னகை சிந்தியவன் வாடா என்று கண்களால் சைகை செய்தான்.
செல்லம் கபடி ஆடலாமா என்று கர்ணன் கேலி பேச, அண்ணாஅவனுங்க ஆடுவானுங்கன்னு நினைச்சு பாக்கல மொத ரவுண்ட்ல எல்லாம் நம்ம தான் ஜெயிச்சோம். ஆனா இந்த தடவை எப்படி ஆச்சுன்னு தெரியல என்று தரணி வருத்தத்துடன் கூற, பரவால்ல நான் பாத்துக்குறேன் என்று அவர்களின் பக்கம் இறங்கினான் செந்தூரப் பாண்டியன்.
நாந்தான் வீரன்டா
நல்லமுத்து பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா
தங்கச் சிலம்பெடுத்துத்
தாலிகட்ட வாரன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு
செம்பருத்தி கடவுளிடம் வேண்டிக் கொண்டு அண்ணா தான் ஜெயிக்கணும் அண்ணா தான் ஜெயிக்கணும் என்று அனைவரின் கவனமும் போட்டியில் இருந்தது.
செந்தூர பாண்டியன் ஜெயித்தானா?
அடுத்து என்ன நடக்கும்?
வருவான்.
EPISODE -13 ( வேப்பம் பூவில் இப்பொழுது வாகை பூ வாசம்)
கபடி கபடி கபடி என சொல்லிக்கொண்டே களத்தில் இறங்கினான் செந்தூரப் பாண்டியன். அனைவரும் பனையூர் பாய்ஸ் தான் ஜெயிக்கணும் பனையூர் பாய்ஸ் செந்தூரன் செந்தூரா செந்தூரா என கத்த ஆரம்பித்தார்கள்.
கர்ணனுக்கு அங்கு இருக்கும் அனைவரைதான் அப்படியே கொளுத்தி போடும் பெரிய ஏற்பட, இங்கே கபடி கபடி கபடி என்று சொல்லிக் கொண்ட காலை தட்டி விட்டு முரட்டு காளையாக சீறி கொண்டு இருந்தான் செந்தூரப் பாண்டியன்.
சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆட்கள் ஒவ்வொருவராக அவுட் ஆகி துவண்டு விழுந்தார்கள்.. ஒரே நேரத்தில் ஆறு விரர்களையும் ஐந்து வீரர்களையும் தொட்டு தோற்கடித்தவன். அவனது பக்கம் வந்தான்.
அண்ணா என்று தரணி, சசி, மணி என அனைவரும் கத்தினார்கள் ஆனால் செந்தூரப் பாண்டியனிடம் பொறுமையே இருந்தது. கர்ணன் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என வெறியில் இருந்தான். இப்பொழுது கர்ணனின் பக்கத்தில் அவனும் புகழேந்தியம் மட்டுமே இருக்க, அண்ணா இப்ப என்ன பண்றது என்று தயக்கத்துடன் கேட்டான் புகழேந்தி.
அங்கே ஸ்பீக்கரில் இன்னொரு பக்கம் போட்டியை பற்றி கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அண்ணா தான் ஜெயிக்கும். நான்தான் சொன்னேன்ல என்று ஒரு பக்கம் செம்பருத்தி உற்சாகத்துடன் ஊக்குவித்துக் கொண்டிருந்தாள்..
கர்ணன் புகழேந்தியை பார்த்து நீ போ என்று அனுப்பி விட அவனும் சென்று உடனே அவுட் ஆகி வந்தான். இப்பொழுது கர்ணன் மட்டுமே இருந்தான். செந்தூரப் பாண்டியன் இறங்கினான்.. பாண்டியா பாண்டியா பாண்டியா என்று அனைவரும் கத்த ஆரம்பித்தார்கள். செம்பருத்திக்கு அளவே இல்லாத மகிழ்ச்சி கொட்டி கிடந்தது. களத்தில் காலை தட்டி விட்டு நெற்றியை வழியும் வியர்வையை துடைத்துவிட்டு மண்ணை அள்ளி கையில் நேர்த்தியாக தேய்த்து விட்ட செந்தூர பாண்டியன் “கபடி கபடி” என்று சொல்லிக் கொண்டே கர்ணனின் அருகில் சென்றவன்.என் தங்கச்சி கிட்ட வந்து பேசுறதுக்கு உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? யாருடா நீ? புடவை வேணுமா? பட்டு புடவை வேணுமா? தங்க கொலுசு வேணுமான்னு கேக்குற? அதை விட என பற்களை கடித்தவன். அவளை பண்ண வீட்டுக்கு கூட்டிட்டு கூட்டிட்டு போறேன்னு சொல்றன்னா உன்னை சும்மா விட்டால் தான் தப்பு. என் கண்ணு முன்னாடியே என் தங்கச்சி கிட்ட பேசுறனாஉன்ன நான் சும்மா விடுவேன்னு நினைச்சியா டா கபடி கபடி என்று நடுவில் கூறிக் கொண்டே அவனை சுற்றிவளைத்தான் செந்தூரன்.
கர்ணனுக்கு ஒன்றுமே புரியவில்லை உன்னோட தங்கச்சியா? உனக்கு தங்கச்சி இல்லையே என்று யோசித்தவனுக்கு துருவன் சொன்ன விஷயங்கள் நினைவுக்கு வர அப்போ ராஜபாண்டியனோட சின்ன வீட்டுக்கு பொறந்தவ தான் இவளா? என்று மனதில் ஓட “பாண்டியா நான் சொல்றத கேளு” என்று கர்ணன் பதிலளிக்க வர, கபடி கபடி என்று கூறிக் கொண்டே அருகில் வந்த செந்தூரப் பாண்டியன் கர்ணன் காலை நசிக்கிப் பிடித்து போதுமான அளவுக்கு நீ சொன்னதை கேட்டாச்சு என காலை வளைத்து உடைத்து தள்ளிவிட்டு இனி என் தங்கச்சி கிட்ட நெருங்கனும்னு நினைச்ச! உன்ன உரு தெரியாம அழிச்சிடுவேன். கபடி கபடி என்று சொல்லிக்கொண்டே வெற்றி வாகை சூடினான் செந்தூரப் பாண்டியன்.
ஹாஆஆ! என்று கர்ணன் உள்ளுக்குள் கத்திக் கொண்டான். அவனது ஊர்காரர்கள் பதட்டத்துடன் அவனை மெல்ல அழைத்துச் சென்றார்கள். விளையாட்டுல இந்த மாதிரி விசயம் சகஜம் என தூக்கினார்கள். அங்கு உற்சாகமும் கரகோஷங்களும் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, கர்ணனின் பார்வையில் செம்பருத்தி அழுத்தமாக பதிந்து போனாள். உன்ன சும்மா விட மாட்டேன் டி அதே போல உன்னையும் தாண்டா என்னோட கால உடைச்சிட்டு இல்ல என்று வலியில் முனங்கி கொண்டே அவனை புதூர்காரர்கள் தூக்கி சென்றார்கள்.
அண்ணா! அண்ணா நீ இருக்கியே நீ வேற லெவல் தெரியுமா? நா.. நான் நெனச்சேன் நீ தான் ஜெயிப்பேனு எனக்கு அப்பவே தெரியும் நா. என்னோட அண்ணா அண்ணாதான் என்று செம்பருத்தி முகத்தில் அவ்வளவு சந்தோஷம் நிறைந்திருந்தது. அதுவே செந்தூரனுக்கு பார்க்க பார்க்க மிகவும் திருப்தியாக இருக்க, பாப்பா என்று தலையில் வருடினான்.
சங்கவியும் அருகில் நின்று கொண்டிருந்தாள். இன்னைக்கு வேற லெவல் ட்ரீட் கொடுத்துட்ட போ உனக்கு என்ன வேணும் சொல்லு என்று செம்பருத்தி கேட்க, நான் என்ன கேட்டாலும் நீ மறக்க மாட்ட தானே என்று கேட்டான் செந்தூரப் பாண்டியன்.
நீ எது வேணாலும் கேளு நான் என்ன சமைச்சு தரணும்? உனக்கு என்ன வேணும்? என்னால முடிஞ்ச அத்தனையும் நான் உனக்கு பண்ணி தரேன் என்று கூறினாள் செம்பருத்தி. இதுவரை அந்த வீட்டில் வேலை செய்து மாடாக உழைத்து தேய்ந்தவளுக்கு புது துணி எடுத்து கொடுக்க கூட யாரும் முன் வர மாட்டார்கள். சங்கவி பழைய துணியை தான் அவள் அணிவாள். அதை செந்தூரன் ஏன் என்று கேட்டால் தங்கச்சியையும் அக்காவும் மாத்தி மாத்தி போட்டுருக்காங்க. இதுல என்னடா இருக்கு எதுக்கெடுத்தாலும் உனக்கு சந்தேகம் தான் என்று அகிலாண்டேஸ்வரி அசால்டாக சமாளித்து விட்டு செல்வார்.
செந்தூரனும் அதற்கு மேல் கேட்க மாட்டான். ஏனென்றால் செம்பருத்தி பர்பாமென்ஸ் அப்படி இருக்கும்.. செந்தூரன் அருகில் வந்து கேட்கவா என்று பார்த்தான்.
ம்ம் என்றவள். நீ என்ன கேட்டாலும் நான் செய்ய தயாரா இருக்கேன் என்று கூற, எனக்கு பெருசா ஆசை இல்ல நீ என்கிட்ட எல்லாத்தையும் வெளிப்படையா பேசணும்னு ஆசை. நீ உன்கிட்ட ஏதோ ஒரு தயக்கமும் ஒளிவும் மறைவும் இருக்குன்னு எனக்கு மனசுக்குள்ள தோனி கிட்டே இருக்கு. ஆனா அத நானா கேட்க கூடாது என்று தான் நினைச்சேன். அதுக்கு மேல நானும் மனுஷன் தானே. அதனால தான் இன்னைக்கு கேட்கிறேன். நீ எதையும் எதுவா இருந்தாலும் என்கிட்ட கேளு . உனக்கு செஞ்சு போடறதுக்கு தான் நான் இருக்கேன். நான் சம்பாதிக்கிறது எல்லாமே உனக்கு சங்கவிக்கு மணிகண்டனுக்கும் தான். உங்களோட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம் பாப்பா உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம் என்று கைகளை பிடித்தான்.
அந்த பாசத்தில் நெகழ்ந்து தான் போனாள் செம்பருத்தி. இவர்கள் ஒரு பக்கம் பாசப் போராட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கர்ணா ஹாஆஆஆஆ! வென வெளிப்படையாக மருத்துவ மனையில் கத்திக்கொண்டிருந்தான்.
துருவன் வேகமாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். முடியலடா துருவா என்னால நிம்மதியா மூச்சு கூட விட முடியல. வலி பின்னி எடுக்குது அவ்வளவுதான் இந்த கால வெட்டி எடுக்கணும் போல என்று கர்ணன் பற்களை கடித்தபடி கண்ணீர் சிந்தாமல் பேசிக் கொண்டிருந்தான்.
எப்படிடா ஆச்சு? கபடி ஆடும் போது போன் பண்ணி நீ தான் ஜெயிக்க போறேன்னு சொன்ன? இதுக்கு காரணம் யாருன்னு சொல்லு இப்பயே அவங்கள வெட்டி போட்டுட்டு வந்துடறேன் என ஆவேசமாக பேசினான் துருவன்.
கர்ணன் ஒரு பெருமூச்சை விட்டு வலியை இழுத்துப் பிடித்து, அது உன்னால பண்ண முடியாது என்று கூற, நீ சொல்லு! யாருன்னு சொல்லு. என்று துருவன் மீண்டும் கேட்க,நான் தான் சொல்றேன்ல உன்னால பண்ண முடியாதுன்னு என்று கர்ணன் வலியில் துடித்துக் கொண்டே கூறினான்.
அருகில் இருக்கும் புகழேந்தி, கர்ணன் அண்ணாவை இப்படி பண்ணினது உங்க அக்கா பையன். உங்க மருமக புள்ள தான் செந்தூரப் பாண்டியன் தான். இப்படி பண்ணி போட்டாரு என்று சொன்னான்.
இவன் சொல்றது உண்மையா என்று துருவன் கேட்டான்.
கர்ணன் அமைதியாக இருக்கவும், பற்களை கடித்த படி அவனை நான் சும்மா விடமாட்டேன் என்று பற்களை நரநரத்தான் துருவன்.
கர்ணன் ஒரு பெருமூச்சு விட்டபடி இப்போதைக்கு நீ எதையும் பண்ண வேண்டாம். நான் சரி ஆகிட்டு வரேன். என்னால உங்க குடும்பத்துல பிரச்சனை வர வேண்டாம் துருவா! நீங்க நால பின்ன ஒன்னு சேர்ந்துக்குவீங்க. அவன் உனக்கு அக்கா பையன். என்னால உங்களுக்கு பிரச்சனை வர வேண்டாம்m. என்று மென்மையாக தூண்டி விட்டுக் கொண்டிருந்தான்.
இப்போதைக்கு இதை பேச வேண்டாம் உனக்கு ஒன்னுனா என்னால சும்மா இருக்க முடியாது. நேரம் பார்த்து அவனை சும்மா விட மாட்டேன் என்று துருவன் சபதமிட்டு கர்ணனுடன் மாலை வரை அங்கே இருந்தவன்.. அதன்பின் கிளம்பினான்..
புகழேந்தி கர்ணனிடம் என்னன்னா இப்படி சொல்லிட்டீங்க? அப்போ உங்களுக்கு அந்த செந்தூரப்பாண்டியன பழிவாங்க வேண்டாமா? என்று கேட்க, கர்ணன் வலியிலும் கோரமாக சிரித்தவன் பழிவாங்கத்தான் அவனை தூண்டிவிட்டு இருக்கேன். அதைவிட அந்த செம்பருத்தி செந்தூரப்பாண்டியன் ரெண்டு பேரையும் சும்மா விட மாட்டேன். அவளை சின்னாபின்னமாக விடமாட்டேன். அதுக்கு தான் துருவன் இருக்கான் என்று சொன்னான்.
என்ன நான் சொல்றீங்க என்று புகழேந்தி கண்களை விரித்து கேட்டான்.
ஆமா இவன் கூட கூட்டு நாட் வச்சு இப்ப நான் என்ன சாதிச்சிட்டேன்? இவனோட வீக்னெஸ் என்னன்னு எனக்கு தெரியும். இவன பதம் பார்த்து அடிக்க போறேன். என்று கூறி நரநரத்தான் கர்ணன்.
கர்ணனின் நகர்வுகள் இப்படி இருக்க, இதனால் செந்தூரப் பாண்டியன் மற்றும் செம்பருத்தியின் அண்ணன் தங்கை உறவில் கர்ணன் மற்றும் துருவனால் அவர்களின் உறவில் ஏதேனும் விரிசல் விழுமா?
கர்ணனின் அடுத்த திட்டங்கள் என்ன?
அடுத்து என்ன நடக்கும்
வருவான்
EPISODE – 14 ( அகிலாவின் பூரிப்பு)
போட்டியில் வெற்றி பெற்ற செந்தூரப் பாண்டியனை அனைவரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடாத குறை ஒன்று மட்டும்தான். அவ்வளவு சந்தோஷத்துடன் ஊர் மக்கள் அனைவரும் செந்தூரப் பாண்டியனின் ரயிடை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இது ஒரு ஊரில் மட்டும் இல்லை. எட்டு ஊரிலும் செந்தூரப் பாண்டியனை பற்றி தான் பேச்சுக்கள். அதில் ஒரு சிலர் “அவங்க ஊர்ல ஜெயிக்கிறதுல என்ன பெருமை இருக்க போகுது? எல்லாம் ஏமாத்துறாங்க!” என்று பேச, அதில் மற்றொருவரோ “நீ உனக்கு என்ன தெரியும்? என்னத்த பாத்த? அந்த தம்பி களத்தில் இறங்கி கபடி கபடி என்று சொல்லிட்டு ரைடு போகும்போது இருந்த கம்பீரம், அதோட நிதானம் அழகை பார்த்தியா? அவ்ளோ ஆர்வமாவும் படபடப்பாகவும் இருந்தது. நானே அந்த காலத்தில் விளையாடுற மாதிரி அவ்ளோ ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போச்சு தெரியுமா?” என்று கூறினார்கள்.
மீனாட்சிக்கு அக்கம்பக்கங்களிலும் அருகிலும் செந்தூரபாண்டியனின் புகழ் பாடும் பேச்சைக் கேட்க கேட்க பற்றி கொண்டு வந்தது. ரவி வெளியில் யாரிடமும் பெரிதாக பேசவும் மாட்டார். அதற்கு காரணம் அவர்கள் பஞ்சம் பிழைக்கு வந்தவர்கள். அதாவது ரவியின் சொந்த ஊர் கணபதிபாளையம். அங்கிருந்து அப்படியே அப்படியே வேலை தேடி இங்கு புதூரில் செட்டில் ஆகிவிட்டார்கள். கணபதி பாளையத்தில் இருக்கும் பொழுது தான் வள்ளி பள்ளி பள்ளிக்கூடம் செல்லும் போது எட்டாம் வகுப்பு வரை வீட்டில் படிக்க வைத்திருந்தார்கள். அந்த நேரம் தான் ராஜபாண்டியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் அது எப்படி என்று தெரிவதற்கு முன்னால் பள்ளியை ராஜபாண்டியனுடன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுதாக ஊரில் பரவ ராஜபாண்டியனின் குடும்ப பின் புலன் எதுவும் அப்பொழுது அங்கிருக்கும் யாருக்கும் தெரியாது. ராஜ பாண்டியன் வள்ளியை அழைத்துக்கொண்டு சென்று விட, ரவிக்கு ஊரில் பெரும் அவமானம் ஆகிப்போனது.
அங்கிருந்து மெதுவாக அவர்கள் வந்து புதூரில் செட்டில் ஆகிவிட்டார்கள். ஆனால் அவர்கள் அங்கு செட்டிலான பிறகு தான் தெரிந்தது புதூரின் அருகில் இருக்கும் பனையூர் கிராமத்தின் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன் ராஜபாண்டியன் என்று. அதனால் வெளியில் ரவி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மிகவும் அமைதியாக அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருக்கிறார்.
ரவியின் மனைவி சுகந்தி இவர்களுக்கு அருண் மற்றும் தங்க மீனாட்சி என்று இரண்டு பிள்ளைகள் அருண் இன்ஜினியரிங் முடித்துவிட்டு கோயம்புத்தூரில் ஐடியில் வேலை செய்கிறான். மீனாட்சி தனியார் பள்ளியில் டீச்சராக பணிபுரிகிறாள். அவர்களின் குடும்பம் ஒப்பேத்த ரவி புதூரில் இருக்கும் கர்ணனின் ரைஸ் மில்லில் கணக்கு பிள்ளையாக வேலை செய்தார். அவர்களின் தயவில் தான் குடும்பத்தை ஓட்டினார். இப்பொழுது பிள்ளைகள் இருவரும் சம்பாதிக்க ரவி பெரிதாக வேலைக்கு செல்வதை குறைத்து. அவர் மிச்சம் பிடித்து வாங்கிய மூன்று சென்ட் நிலத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டும் குடும்பத்துடன் இருக்கிறார்.
எப்போ பாரு இவங்களுக்கு வேற வேலையே இருக்காதா? புறணி பேசுவதையே பொழப்பா வச்சிருக்காங்க. இப்போ இவன் வேற கபடி ஆடி கப்படிச்சிட்டானா? இத பத்தியே பேசிட்டு இருக்காங்க என்று கடுப்புடன் அமர்ந்திருந்தாள் மீனாட்சி.
என்னடி ஆச்சு உனக்கு சுகந்தி கேட்க, ஒன்னும் இல்லம்மா என்று மழுப்பிக் கொண்டே அடுத்த நாள் என்னென்ன பாடம் எடுக்கலாம் எப்படி சொல்லிக் கொடுக்கலாம் என்று youtube வீடியோவை பார்த்துட்டு இருக்கேன் என்றாள் மீனாட்சி.
இப்பொழுது அவளுக்கு செம்பருத்தியிடம் இருந்து அழைப்பு வர, பத்தாத குறைக்கு இவ வேற போன் பண்றாளா? அண்ணன் புகழாரம் ஏற்கனவே ஊரில் கொட்டி கிடக்குது. என அழைப்பை ஏற்றாள்.
நான் உன்ன கபடிக்கு வரதான் சொன்னேன். ஏண்டி வரல? என்று செம்பருத்தி கேட்க, ஏன் நீ வேணா எங்க அப்பா கிட்ட வந்து கேக்குறியா? என்று மீனாட்சி வெடுக்கென பதிலளித்தாள். அந்த பக்கம் செம்பருத்தி அமைதியாக இருக்க, மீனாட்சி நாக்கு கடித்துக் கொண்ட ஐயையோ நம்மளே இப்படி பேசிட்டாமே! என்று நினைத்த மீனாட்சி. சாரி மன்னிச்சுடு புள்ள எனக்கு ஸ்கூல்ல நிறைய வேலையா? ரொம்ப டயர்டா இருந்தது. அதனாலதான் வந்ததும் தூங்கிட்டேன் என்று சமாளித்தாள்.
செம்பருத்தி ஒரு மூச்சைவிட்டு சரி பரவால்ல நீ என்ன பாக்க வரலையா? என்று கேட்க, மீனாட்சி சலித்தபடி “எப்ப பாரு நானே தான் உன்ன பாக்க வரணுமா? ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாயேன்?” என்று கூப்பிட, நான் வந்தா மாமா என்ன வீட்டுக்குள்ள விடுவாரா? என்று செம்பருத்தி வெறுமையாக அவளை போலவே கேட்டாள்.
இப்பொழுது மீனாட்சிக்கு வெறுமையாக தோன்றியது. அவள் பக்கம் அமைதி நிலவியது. ரவிக்கு இது நாள் வரை மீனாட்சி சென்று செம்பருத்தி பார்த்து பேசுகிறாள், பழகுகிறாள் என்று தெரியும். ரவிக்கு வள்ளியின் மீது கோபமே தவிர செம்பருத்தியின் மீது இல்லை. அதற்காக தன் மகனை திருமணம் செய்து கொடுப்பார். அவளை கூட்டி கூட்டி வந்து அனைத்தையும் பாசம் காட்டுவார் என்றெல்லாம் நினைத்து விட முடியாது. செம்பருத்தியின் மீது பரிதாபம் மட்டுமே ரவிக்கு. ஏனென்றால் அத்தனை வினையை வள்ளி செய்துவிட்டு சென்றுவிட்டார். பெரிதாக அப்படி என்ன? ஒன்றே ஒன்றுதான் ஓடிப்போனது. அதுவும் சின்ன வீடாக இருந்தது. ரவிக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கொடுகொடுமையாக இருந்தது. ஏனென்றால் சிறு வயதில் வள்ளிக்காக எத்தனை தியாகங்களை செய்திருக்கிறார்.
ரவியின் சொந்த ஊர் கணபதி பாளையம் அங்கே உள்ள ஊர்காரர்களுக்கு மட்டுமே வள்ளியை பற்றி தெரியும். இப்பொழுது செந்தூர பாண்டியனும் செம்பருத்தியும் எப்படி இருக்கிறார்களோ? அந்த நட்பு பாசத்துடன் அந்த மாதிரி ரவிச் சந்திரனும் வள்ளியும் இருந்தார்கள்.
இங்கே மீனாட்சி போனில் சரி இன்னைக்கு வர முடியாதுடி. நான் வந்துட்டு போறதுக்கு எனக்கு ரொம்ப சிரமமா இருக்கு. அட்லீஸ்ட் நீ வாய்க்கால் வரைக்கும் வரலாமே! சிவன் கோயில் வரியா? கருங்கரடு வரியா? என்று கேட்க, பார்க்கலாம் என கவலையில் போனை வைத்தாள் செம்பா.
மீனாட்சி மனசு கேட்காமல் மீண்டும் அழைத்து உனக்கு ஏதாவது பிரச்சனையா? சொல்லு? செம்பு என கேட்க, அது எனக்கு ஒரு உதவி செய்றியா? என்று தயக்கத்துடன் வினவினாள்.
இதை கேட்டதும் மீனாட்சி திடிகிட்டு எழுந்து அமர்ந்தவள். என்னடி ஆச்சு? எதுவும் பிரச்சனையா ரொம்ப கொடுமை படுத்துறாங்களா? உங்க வீட்டுல? என கேட்க, அது எப்பவும் நடக்கிறது தான். இப்போ அந்த பிரச்சனை இல்ல. இந்த சங்கவி இருக்காலே! அவள் என மொத்த விசயத்தையும் எளிமையாக கூறி முடித்தாள் செம்பா.
மீனாட்சி கடுப்புடன் அப்போ உனக்கு என் மேல பாசம் இல்ல! என்கிட்ட இருந்து வேலை வாங்குறதுக்கு தான் என்ன கூப்பிடுற?! அப்படித்தானே! என்று கேட்க, செம்பருத்தி நாக்கை கடித்தப்படி அப்படியெல்லாம் இல்ல மீனாட்சி! பிளீஸ் டி! நான் என்ன பண்ண சொல்லு? வீட்டு வேலையும் பார்த்துகிட்டு காலையில நேரத்துல எந்துருச்சு எல்லாத்தையும் செஞ்சு , எனக்கு நேரமில்லை டி, நைட்டு எப்படா இந்த கண்ணுக்கு ஓய்வு கொடுப்பன்னு இந்த கண்ணே அழுதுடும் போல. அந்த அளவுக்கு என்னால முடியல. நான் வேற யார்கிட்ட கேக்குறதுன்னு எனக்கு தெரியல. நான் உதவி கேட்டா அது பெரியம்மாவுக்கு தெரிஞ்சது? மொத்தமா மாட்டிக்குவேன். அதனால தாண்டி நான் உன்கிட்ட கேக்குறேன். என்று செம்பருத்தி ராகம் பாட , அவள் பேசியதுக்கு மீனாட்சி பெருமூச்சை விட்டபடி இன்னும் எத்தனை ரெக்கார்டு எழுதனும் என்று கேட்டாள்.
அதுவா நான் ரெண்டு முடிச்சுட்டேன். கையெல்லாம் எவ்வளவு வலி தெரியுமா? என்னால கட்டை விரலை அசைக்கவே முடியல என்று செம்பருத்தி பாவமாக கூற, இந்த சங்கவிக்கு ஒரு கேடு வந்து தொலையாது? அவளை எல்லாம் எதுக்கு வீட்ல வச்சுட்டு இருக்காங்க?! ரெண்டு மிதி மிதிச்சு கல்யாணம் பண்ணி கொடுத்து தொலைய வேண்டியது தானே! என்று மீனாட்சி திட்டி தீர்த்தாள்.
ஹே என்ன டி பண்ற? எனக்கு பண்ணித்தரயா? இல்லையா? என்று செம்பருத்தி கேட்க , சரி நாளைக்கு காலைல நான் நேரத்திலேயே வரேன். என்கிட்ட ரெண்டு ரெகார்ட் கொடு. நான் ரெண்டு முடிச்சு கொடுக்கிறேன். அந்த ஒன்னை மட்டும் எப்படியாவது எழுதி ப்ளீஸ் புரிஞ்சுக்கோடி என்னையும்? என்று மீனாட்சி சொன்னாள்.
சரி என்று போனை வைத்தாள் செம்பருத்தி. இங்கே செந்தூர பாண்டியனுக்கு ஊரில் கடந்து வரும் அனைவரும் ஆரத்தி எடுத்து அனுப்பினார்கள். “தம்பி சூப்பரா ஆடி போட்டீங்க! அதுவும் கடைசி ஒரு ரைட் இருக்குது பாருங்க. வேற லெவல் என்று பெரிய மூத்தவர்கள் கூட சிறுவர்கள் மற்றும் நடுத்தர வயது உள்ளவர்கள் ஐயா நல்ல ஆடிட்டீங்க! அந்த புதூர்காரனோட முகம் அப்படியே வெளுத்து போச்சு. உங்களோட ஆட்டம் ரொம்ப பிரமாதமா இருந்தது” என்று அனைவரும் கூறினார்கள். அவர்களுக்கு ஒரு புன்னகையை மட்டுமே பதில் அளித்தவன். வீடு வந்து சேர்ந்தான்.
அகிலாண்டேஸ்வரி சந்தோஷமாக நுழைவு வாயிலில் காத்திருக்க, ஆரத்தி எடுத்துட்டு வா! என அதிகாரமாக சத்தமிட்டாள். அதற்குள் செம்பா வெற்றிலை பாக்கு, மிளகாய், ஆரத்தி எடுக்க தேவையான அனைத்தையும் வைத்து ஆழம் கரைத்து ஒரு தாம்பூலத்தில் எடுத்து வர, உடனே அகிலா, சங்கவி தனலட்சுமி ஜெயகொடி மூணு பேரும் வாங்கி சுத்துங்க என்று கூறினார்.
அங்கே வந்த செந்தூரப் பாண்டியனின் பார்வை செம்பருத்தி எங்கே என்று தான் கண் தேடியது. இப்படியே எத்தனை நாள் செந்தூரன் கேள்வி கேட்காமல் இருக்க போறான்? செம்பருத்தி படுகிற கஷ்டம் எலலாம் அவனுக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும்?
அடுத்து என்ன நடக்கும்?
வருவான்
EPISODE – 15 ( மீனாட்சியின் கோபம்)
வெற்றிவாகை சூடிக்கொண்டு கோப்பையுடன் வீட்டுக்கு வந்த செந்தூரப் பாண்டியனை, அகிலாண்டேஸ்வரியின் ஆணைக்கு இணங்க ஜெயக்கொடி, தனலட்சுமி, சங்கவி என மூவரும் திருஷ்டி கழிக்க ஆரத்தி தட்டை வைத்துக்கொண்டு புன்னகை முகமாக நின்றார்கள்.
ஆனால் அவன் எதிர்பார்த்த செம்பருத்தி அங்கு இல்லை. “பாப்பா எங்கே போச்சு?” என எடுத்ததும் அவனது நினைவுகள் தங்கையிடம் தான் சென்றது.
என்னடா செந்தூரா? திகைத்து போய் நிக்கிற? யாரை தேடுற? என்ற தனலட்சுமி கேட்க, அகிலாண்டேஸ்வரி அதட்டிக்கொண்டே “இன்னும் எவ்வளவு நேரம் என் பையன காக்க வைப்பீங்க? ஜெயக்கொடி ஆரம்பிங்க! என்று கூற, உடனே ஆழம் கரைக்கும் பாட்டை ஆரம்பித்தார்கள்.
செந்தூரப் பாண்டியன் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். செம்பருத்தி வெளியே வரவே இல்லை. அதற்கு காரணம் வேறு யார்? அகிலாண்டேஸ்வரி தான். அவள் ஆசையாக ஆழம் கரைத்து கரைக்கச் செல்ல, “ஹே எங்கடி போற? என்று அதிகாரத்துடன் அழைத்தார் அகிலா.
“அது அது வந்து அம்மா… அண்.. அண்ணா வந்து கபடியில் ஜெயிச்சிடுச்சு. பனையூர் மொத்தமும் ஊர்வலம் நடத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வராங்க. அதனால தான் ஆரத்தி எடுக்கறதுக்கு” என்று கண்களில் தவிப்புடனும் தன் அண்ணனுக்கு ஆழம் கரைக்க வேண்டும் என்று காலில் சுடுதண்ணீர் ஊற்றிக் கொள்ளாத குறையாக நின்றாள் செம்பருத்தி.
“அப்படியா சரி போ” என்று அகிலாண்டேஸ்வரி அனுப்பி விட செம்பருத்திக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. நிஜமாகவே இது “பெரியம்மா தானா?” என்று நினைத்தவள்.. அதே உற்சாகத்துடன் சென்று பெரிய தாம்பூலத்தில் வெற்றிலை கற்பூரம் மஞ்சள் நீர் உப்பு என அனைத்தையும் செய்து கொண்டு வந்தாள்.
“ஹே நில்லு டி”என்று அதட்டலுடன் கர்ஜித்தார் அகிலா.
“பெரியம்மா” என்று தயக்கத்துடன் திரும்ப.. “ச்ச வாய மூடு கன்னம் பழுத்திடும். இனி ஒரு தடவை அப்படி கூப்பிட்ட கழுத்தை திருகி போட்டுடுவேன்” என்று மிரட்டினார்.
தெரியாம சொல்லிட்டேன் என்று செம்பருத்தி வியர்க்க விறுவிறுக்க நின்றாள்.
“சங்கவி! … சங்கவி” என அகிலா அழைக்க பெரியம்மா என வந்து நின்றாள். ம்ம் தட்ட சங்கவி கிட்ட கொடு என்று கூறினார்.
செம்பா ஒன்றும் புரியாமல் அகிலாவை பார்க்க, “காது கேட்கலையா சங்கவி கிட்ட கொடுன்னு சொன்னேன்” என்று கூறினார்.
ஆசை காட்டி மோசம் செய்வது என்று கூறுவார்களே. அதுபோல ஆசையுடன் ஆரத்தி எடுக்க அனைத்தையும் செய்து கொண்டு வந்த செம்பருத்தியிடம் இருந்து பிடுங்கப்பட்டது அந்த உரிமை. ” நீ!! உன்னோட கைகள்! ரொம்ப ரொம்ப பாவப்பட்டது. அந்த கையால என் பையனுக்கு ஆரத்தி சுத்துற பாக்கியம் உனக்கு கேக்குதோ? இந்த வீட்ல மொத பொண்ணு, எங்க வீட்டு வாரிசு எல்லாமே சங்கவி தான்! இனி இந்த மாதிரி அதிக பிரசங்கத்தனமா ஒரு நல்ல காரியம் நடக்கும் போது முன்னாடி வந்து நிக்காதே! அதுதான் கரைச்சு கொடுத்துட்டல்ல கிளம்பு! எடுத்த காலி பண்ணு!” என்று அனுப்பி வைத்துவிட்டார் அகிலா.
ஒரு நான்கடிகள் சென்ற செம்பருத்தி மீண்டும் திரும்பி “அம்மா நான் எட்ட நின்னு பாக்கவா?” என்று கேட்க, அகிலாண்டேஸ்வரி ஏளனமாக சிரித்தபடி, ” நான் தான் சொல்லிட்டேனே உன்னோட பார்வையே திருஷ்டி பட்ட பார்வைதான். அதையும் மீறி நீ பார்த்தே ஆகணுமா? என்ன?” என்ற நகத்தை பட்டை தீட்டியபடி அவளைப் பார்த்தார் அகிலாண்டேஸ்வரி.
ஒரு பெருமூச்சு விட்ட செம்பருத்தி அவ்விடத்தை விட்டு நேராக அவள் தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்று விட்டாள். அவளை வெறுமையான வீடு தான் வரவேற்றது. அந்த இடத்தில் செந்தூரப் பாண்டியன் வாங்கி கொடுத்த மீன்கள் இருக்க, அதை பார்த்ததும் பொங்கி வந்த அழுகையுடன் மீனின் பக்கம் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
இதயம் வெடித்து விடுவது போல இருந்தது. “எனக்கு மட்டும் ஏன் தான் எங்கிருந்து இத்தனை கவலை வருது? நான் ஆசைப்பட்டது என்ன? நான் என்ன கேட்டேன்? பணம் பொருளுக்கா விருப்ப பட்டேன்? என் அண்ணனுக்கு ஆரத்தி எடுக்கனும்னு நெனச்சேன். அது கூட என்னால செய்ய முடியலையே! நான் ஏன் இந்த உலகத்துல பிறந்தேன்” என்று குமுறினாள்.
அதே நரம் இங்கு செந்தூரப் பாண்டியனுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தார்கள். தன்னிடம் வழிய வந்து பாசமாக பேசுபவரிடம் மட்டும்தானே ஆசையாக தன்னுடைய விருப்பங்களையும் தான் எண்ணத்ததையும் பேச முடியும். ஆனால் பெரிய வீட்டில் அப்படி யாருமே செந்தூரப் பாண்டியனிடம் பேசியது கிடையாது. இவ்வளவு ஏன் அகிலாவே பேச மாட்டார். அவரவர் வேலைகளை பார்க்க சென்று விடுவர். சங்கவி அவ்வப்பொழுது சாப்பிட்ட படி டீவி பார்த்து கொண்டிருப்பாள்.
முத்துப்பாண்டியன் சொல்லவே தேவையில்லை. அவரது அறையில் இருப்பார். தனலட்சுமி டிவியில் வரும் அனைத்து நாடகங்களையும் ஒன்று விடாமல் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார். மணிகண்டன் படித்துக் கொண்டிருப்பான். இல்லையெனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருப்பான். செல்ல பாண்டியனுக்கு அதிகமாக வெளி வேலை இருக்கும். அதனால் அவர் வீட்டில் இருக்க மாட்டார்..
வீட்டில் அனைத்து வேலைகளையும் ஒரு பெரும்பகுதியை செம்பருத்தி எடுத்துக் கொள்வாள். மற்றதை வீட்டில் இருக்கும் பணியாள் செய்வார்கள். அப்படி இருக்கையில் அத்தனை வேலைகளுக்கு நடுவில் செம்பருத்தி மட்டுமே செந்தூர பாண்டியனுக்கு என்ன வேண்டும்? ஏது வேண்டும்? என்று இயல்பாகவும் பேசுவது அக்கறையுடனும் நடந்து கொள்வதால், செந்தூரப் பாண்டியனின் மொத்த பாசமும் நேசமும் செம்பருத்தி மீது கொடை சாய்ந்தது.
வீட்டுக்கு வந்தவன் உடையை மாற்றி விட்டு கபடியில் வெற்றி பெற்ற கோப்பையை எடுத்துக்கொண்டு நேராக செம்பருத்தி பார்க்கச் சென்றான். நாளை மஞ்சள் நீராட்டு இன்றும் திருவிழாவிற்கு உண்டான கலை கொஞ்சம் கூட குறையவில்லை. ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடக்க இருப்பதால் அனைவரும் அங்கு சென்று விட்டார்கள்.
செம்பருத்தி மட்டும் வீட்டில் இருக்க பாப்பா என்று அழைத்துக் கொண்டே வெளியில் நின்றான். அண்ணா என்று கண்களை துடைத்துக் கொண்டே உள்ளே சென்றவள் வேகமாக தண்ணி சொம்பை வந்து நீட்டினாள்.
இப்போ என்ன பண்ணிட்டு இருந்த? என்று செந்தூரன் கேட்க அது வந்து என்று தயங்கினாள் செம்பருத்தி.
உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் என செந்தூரப் பாண்டியன் அழுத்தமாக செம்பருத்தியை பார்க்க, அண்ணா அது எனக்கு அப்பா நியாபகம் வந்துடுச்சு. அதனாலதான் அழுதேன் என்று பொய் கூறினாள்.
நீ விட்டுப் போனவங்களை நினைச்சு, எதுக்கு கவலைப்படுற? அப்போ உனக்கு வெவரம் கூட தெரியாது. ஏன் பாப்பா உனக்கு நான் ஏதாவது குறை வச்சுட்டேனா? என்று கேட்டான் செந்தூரன்.
அப்படி எல்லாம் இல்லையே! எங்க அண்ணனோட மேற்பார்வையில் நான் ராணி போல இருக்கேன் என்று பச்சையாக பொய் கூறினாள் செம்பருத்தி.
அப்புறம் எதுக்கு நீ அப்பாவோட ஞாபகம் வருதுன்னு சொல்ற? நம்ம தனிமையாவும், நமக்கு யாருமே இல்லைன்ற நேரத்துல தான் இப்படி நமக்கு தோணும். அப்போ நீ அப்படி நினைக்கிறியா பாப்பா? நீ பீல் பண்றியா? என்று செந்தூரன் அலைப்புறுதலுடன் கேட்டான்.
“அண்ணா! அண்ணா! அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. இதே போல பண்டிகை டைம்ல தான எல்லா பிரச்சனையும் வந்தது. அதனால எனக்கு அப்பா ஞபகம் வந்துடுச்சு” என்று செம்பருத்தி கூற, அவளின் எண்ண ஓட்டத்தை மாற்ற “பாப்பா அது எப்போவோ நடந்தது. இங்க பாரு நான் ஜெயிச்சுட்டேன். நீ வந்ததால தான் நான் ஜெயிச்சேன். என்று செந்தூரன் கண்ணகுளி தெரிய கூறினான்.
“இல்ல நீ வார்த்தைக்கு வார்த்தை என்ன தூக்கி வச்சு பேசுற! நாளைக்கு உனக்கு பொண்டாட்டி வந்துட்டா? உடனே பாசம் மொத்தமா அங்க மாறிடுமே என குரும்பாக சொன்னாள்.
“வாய்ப்பே இல்லை. அப்படி எல்லாம் நடக்கவே நடக்காது. எப்பவுமே எனக்கு முக்கியத்துவமே என்னோட பாப்பா தான். அப்படி என்னை போலவே உனக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பொண்ணை தான் நான் கட்டிப்பேன்” என இருபுறுவம் தூக்கினான் செந்தூரன்.
அப்படியா நம்பிட்டேன் போ அண்ணா என்று கிண்டலுடன் சிரித்தாள் செம்பருத்தி.
அட நிஜம்தான் பாப்பா என்று செந்தூரன் சொல்லி கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து செம்பருத்தியின் போன் சிணுங்கியது.
அண்ணா ஒரு நிமிஷம் என்று போனை எடுத்து காதில் வைத்தவள். தன் அண்ணனை பார்த்து விட்டு அப்படியே சமையல் அறை பக்கம் வந்தாள். எதுக்குடி போன் பண்ண என்று மெதுவாக மீனாட்சியிடம் கேட்டாள்.
என்னால நாளைக்கு வர முடியாது. அதனால இப்பவே நோட்டை கொடு. நான் வாங்கிட்டு போறேன் என்று மீனாட்சி சொன்னாள்.
” இப்பவா? நீ எங்க இருக்க? ” என்று செம்பருத்தி கேட்க, ” கொள்ளைப்பக்கம் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் வா”. என்று மீனாட்சி சொல்ல, “ஹே அண்ணன் வீட்டில் இருக்கான்டி என்னால வர முடியாது” என்று செம்பருத்தி கூற, “செருப்பு பிஞ்சிடும் நாயே! ஒழுங்கா வந்து குடு. இல்லன்னா நீயே எழுதிட்டு போ. நான் கிளம்புறேன்” என்று மீனாட்சி கடுப்புடன் கிளம்பினாள்.
அய்யோ அய்யோ என் மீனு குட்டி நீனு தான! இரு இரு வரேன் என்று சமாளித்தவள். வெளியே வந்தாள். செந்தூரன் தன் தங்கையே பார்த்துக் கொண்டிருந்தான். செம்பருத்தி மனதில் ஒருவேளை போன்ல யார் பேசினாஎன்னு அண்ணா கேட்டுடுவானோ? பயமா இருக்கே? என்று அவள் பதட்டத்துடன் இருக்க, செந்தூரன் அப்படி ஒரு வார்த்தையை கேட்கவே இல்லை. உடனே எழுந்தவன். “சரி பாப்பா நான் கிளம்புறேன்” என நகர்ந்தான்.
என்ன அண்ணா வந்ததும் போற? சாப்பிட்டு போயேன் என்று அவசர அவசரமாக பேசினாள் செம்பருத்தி.
சாப்பிடலாம் நீ பெரிய வீட்டுக்கு வா! இப்போ தேங்காய் மண்டி கணக்கு வழக்கு பார்க்கணும் என்று அவ்விடத்தை விட்டு புறப்பட்டான்.
ஹப்பா அண்ணா போயிடுச்சு என்று எழுந்தவள். நேராக கொள்ளை பக்கம் சென்று நான்கு ரெக்கார்டையும் நீட்டினாள்.
அதை வாங்கி பார்த்த மீனாட்சி “இத நான் எழுதிக் கொடுத்தா? நீ எனக்கு என்ன தருவ? என்று கேட்டாள்.
உனக்கு என்ன வேணும்? என்று செம்பருத்தி கேட்க, அதை நீ தான் சொல்லணும். நீ எனக்கு என்ன தருவ? என அவளை சீண்டும் நோக்கில் கேட்டாள். அதுவா வெயிட்டா ஒரு விஷயம் தரேன் என்றாள் செம்பருத்தி.
அப்படியா? என மீனாட்சி கேட்க, ம்ம் நீ ரொம்ப அழகாகிட்டே போற. இந்த தடவை கொடுத்த போல அடுத்த மாசமும் ஒரு லிட்டர் ஆட்டுப்பால் தரட்டுமா? என்று கேட்டாள் செம்பருத்தி.
உங்க அண்ணன் செல்வாக்கில் கிடைக்கும் ஆட்டுப்பால். எனக்கு ஒன்னும் வேண்டாம். அதுக்கு நான் அசிங்கமா இருப்பேன்டி. என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு கிளம்பினாள் மீனாட்சி.
இப்போ நான் என்ன சொன்னேன் எதுக்கு என் மேல இப்படி கோபப்படுறா? அண்ணனை பத்தி பேசினாலே இப்படி எரிஞ்சி எரிஞ்சு விழுறாளே? இந்த மீனாட்சி ரௌடியா இருக்கா! வாயாடி! இவளை அடக்கறதுக்கு ஆள் இல்லையே! அட கடவுளே என்று சலித்துக் கொண்டே செம்பருத்தி அவளது கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்து சேர்ந்தாள்.
இங்கே செம்பருத்தி நேராகச் சென்று மீனாட்சியை பார்த்தது. அவளிடம் நோட் புக் கொடுத்தது. இருவரும் பேசிக் கொண்டது என அனைத்தையும் டெரஸிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் செந்தூரன்.
அப்போ மீனாட்சி யாருன்னு நேராக்க போய் செம்பருத்தி கிட்ட கேட்பானா? ஆமா மீனாட்சி வாங்கி கொடுத்த கோல்ட் பிஷ் செம்பருத்தியோட அறையில இல்லையே? அது எங்க போச்சு?
வருவான்.
EPISODE – 16 ( மீனாட்சி Vs செந்தூரன்)
கர்ணனின் உடைந்த கால் பூரணமாக குணமாக ஆறு மாதம் மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டது. தனது வாழ்நாளிலேயே மிகவும் கொடுமையான பக்கங்களாக அவன் நினைத்தது அந்த கபடி போட்டியையும், இந்த மூன்று மாதங்களையும் தான். அவ்வளவு மோசமாக நகர்ந்தது. ஒவ்வொரு நிமிடமும் செந்தூரப் பாண்டியனின் மீது இருந்த கோபங்கள் பன்மடங்காக வளர தொடங்கியதே தவிர குறைந்த பாடில்லை. கூடவே சேர்த்து செம்பருத்தியும் பழிவாங்கும் எண்ணம் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது. நெருப்பைப் போல.
ஒரு வழியாக பூரணமாக குணமடைந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவனை வரவேற்பதற்காக கர்ணனின் தங்கை துர்கா , துருவன் மற்றும் அவனது மனைவி சுதா என அனைவரும் அங்கு காத்திருந்தார்கள். வீட்டுக்கு வந்ததும் துருவன் கர்ணனிடம் இப்போ பரவாயில்லையா? வலிக்குதா? ஒன்னும் பிரச்சனை இல்லையே? அடுத்து எப்போ டாக்டரை பார்க்க போகணும்? என்று பாசத்துடன் விசாரித்தான்.
எல்லாமே சரிதான் என்று விரத்தியுடன் பதிலளித்தான் கர்ணன். தன் நண்பனின் அருகில் வந்து அவனது கைகளை பிடித்துக் கொண்ட துருவன், ” உன்னோட வருத்தம் எனக்கு புரியுது. ஆனா அதுக்கான நேரத்தை பார்த்து காத்துக்கிட்டு இருக்கேன். கவலைப்படாத கர்ணா! ” என்று நம்பிக்கை அளிக்குமாறு அளிக்கும் பொருட்டு பேசினான்.
துருவனை பார்த்து சிரித்தபடி “எனக்கு என்ன கவலை? என்னோட நண்பன் துருவன் இருக்கும்போது. நான் நல்லா இருக்கேன். நீ எதையும் நினைத்து வருத்தப்பட்ட வேண்டாம்.” என்று கூறியவன்.
தன்னை இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டான் கர்ணன் துருவனும் அவனது மனைவி சுதாவும் மாலை வரை இருந்துவிட்டு கிளம்பினார்கள்.
இந்த மூன்று மாதத்தில் பெரிதாக அகிலாண்டேஸ்வரியின் வீட்டில் எந்த மாற்றமும் நிகழவில்லை. வழக்கம் போல தான் செம்பருத்தி வேலை செய்து கொண்டிருந்தாள். ஆனால் புதிதாக மாற்றம் கர்ணனிடம் இருந்து வந்தது. ஆம் நேராக செல்ல பாண்டியனை தனியாக சந்தித்த கர்ணன் சங்கவியை பெண் கேட்டான்.
செல்ல பாண்டியனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. “எனக்கு உங்க பொண்ண கட்டி கொடுக்கறதுல பிரச்சனையா” என்று கேட்டான்.
“இல்ல கர்ணா அது திருவிழாவுல கபடி போட்டியில் செந்தூரப் பாண்டியன் அது… உங்களோட கால ஒடச்சதா! அது அதுக்காக தான் எங்களுக்கு தயக்கமா இருக்கு. அப்படி இருந்தும் நீங்க பொண்ணு கேட்க வரது?” என்று தயங்கினார் செல்ல பாண்டியன்.
கர்ணன் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்து “அந்த கபடி போட்டியில் தான் நான் சங்கவியை பார்த்தேன். பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. அந்த கபடி போட்டியை வச்சு நிறைய சண்டையும் பிரச்சனையும் ஊருக்குள்ள நடந்துக்கிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன். அதனாலதான் அதை இந்த சம்பந்தத்தோட முடிச்சா. இரண்டு ஊருக்கும் சந்தோஷம் தானே. அதுதான் உங்க கிட்ட கேட்டேன்.” என்று சூசகமாக காயை நகர்த்தினான் கர்ணன்.
அதெல்லாம் ஒன்னும் இல்ல. “ஆனா வீட்டில் அண்ணி கிட்ட கேட்கணும்” என்று செல்லப்பாண்டியன் சொல்ல, “புரியுதுங்க ஆனா உங்க வீட்ல எல்லாத்தையும் எடுத்துக்காட்டி செய்றது எல்லாமே பெரியவருக்கு அடுத்து நீங்க தானே இருக்கீங்க..அதனால தான் உங்ககிட்ட சொல்லிட்டு பொண்ணு பாக்க வரலாம்னு நினைச்சேன்.” என்று கர்ணன் ஐஸ் கட்டிகளாக செல்ல பாண்டியனுக்கு வைத்து விட, அதில் குளிர்ந்து போனவர் “அப்படியா சரி நீங்க வாங்க. என்று கூறிவிட்டு, அந்த விஷயத்தை போய் அகிலாண்டேஸ்வரி இடம் கூறினார். .
“அப்படியா? அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க தம்பி?” என்று அகிலா கேட்க, “அண்ணி அவங்க குடும்பத்திலையும் செல்வாக்களையும் நாம இங்க எப்படியோ அதே போல புதூர்ல அவங்க. சின்ன சின்ன வாய்க்கா தகராறு, எல்ல சண்டை இதெல்லாம் இருந்தாலும், இந்த சம்பந்தம் முடிஞ்சா நம்ம பாப்பாவையும் பக்கத்திலேயே கட்டி கொடுத்த மாதிரி இருக்கும்.. அதே போல நம்ம ஊர் சண்டை எதுவும் வராம இருக்கும். நமக்கு செல்வாக்குல எந்த குறைவும் இல்ல. அதனால தான் உங்ககிட்ட கேட்டுட்டு வர சொல்லலாம்னு இருந்தேன்” என்று கூறினார் செல்ல பாண்டியன்.
“பையனை பத்தி எப்படி? குணநலன் விசாரிச்சீங்களா?” என அகிலா கேட்க, நம்ம செந்தூரன் அவரோட காலை ஒடைச்சத கூட பொருட் படுத்தாமல் நம்ம பாப்பாவுக்காக வராரு அண்ணி. இதிலேயே அவரோட தங்கமான மனசு தெரியுது அதை விட துருவனும் கரணனும் சினேகிதர்கள் என்று கூறினார்.
இது போதுமே! சரிங்க தம்பி வர சொல்லுங்க பாக்கலாம் என்று விவரங்களை ஜெயக்கொடியிடம் கூறினார். அகிலாண்டேஸ்வரி ஜெயகொடிக்குமே அது சரியாக பட அனைவரும் கர்ணன் பெண் கேட்டு வரும் நாளை நோக்கி காத்திருந்தார்கள்.
இங்கே தனது குடும்பத்தில் இவ்வளவு பெரிய விஷயம் நடந்து கொண்டிருப்பது கூட தெரியாமல்செந்தூரப் பாண்டியன் வழக்கம் போல அவனது ஆயில் மில்லுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பொழுது கருங்கரடு பக்கம் மிகவும் கூட்டமாக இருந்தது.
இருட்டு கட்டின நேரத்தில் இந்த இடத்தில இவ்வளவு கூட்டம்? வானம் வேற கருக்கிட்டு நிக்கிது. என்னாச்சு? என்ற வண்டியை ஓரங்கட்டி விட்டு இறங்கினான் செந்தூரன்.
“அது ஒன்னும் இல்லைங்கயா பஸ் கொஞ்சம் இன்ஜின்ல கோளாறு ஆயிடுச்சு. சரி பண்ணிட்டு தான் நகத்த முடியும். அதனால மாத்து பஸ் வர சொல்லி இப்பதான் போன் பண்ணி இருக்கிறோம். அதுவுமில்லாம வானம் வேற கருக்கி கட்ட நிக்குதுங்கயா” என்று கூறினார் பஸ்சின் பேருந்தின் ஓட்டுனர்.
அப்படியா இதுல நிறைய தாய்மார்கள் பொண்ணுங்க இருக்காங்களே! எவ்வளவு நேரம் அவங்க காத்திருப்பாங்க? வீட்டுக்கு நேரத்திலேயே போகணமே? என்று ஓட்டுனரிடம் பேசிக் கொண்டிருந்தான் செந்தூரன்.
ஆமாங்கய்யா ஆனா பஸ் வந்து திரும்ப எல்லாரையும் கூட்டிட்டு போய்விடறதுக்கு உள்ள மணி பத்து தொற்றும் என்று ஓட்டுனர் கூற, பெருமூச்சியை விட்டபடி அங்கு நின்று கொண்டிருந்தவன். சரி இதிலிருந்து பாதி பேரை என்னோட ஜீப்ல கூட்டிட்டு போகிறேன். என்றான் செந்தூரன்.
ஐயா ரொம்ப நன்றி ஐயா என்று கூறிவிட்டு ஓட்டுநர் பேருந்தில் இருக்கும் பயணிகளை அழைக்க, அதில் ஏழு பெண்கள் இருந்தார்கள். அதில் ஒருத்தி மீனாட்சி. யாரு லிப்ட் கொடுக்கிறது என்று கீழே இறங்கி வந்தவள் பார்வையும். அங்கு ஜிப்பில் அமர்ந்து கொண்டிருந்தவனின் பார்வையும் நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டது.
“இவனா? இவனோட தயவுள நான் வீட்டுக்கு போகணுமா? அதுக்கு நான் மணல்மேட்டுக்கு போவேன்! சுடு காட்டுக்கு போவேன்” என்று மனதுக்குள் கேவலமான ஒரு கவிதையை உருவாக்கினாள் மீனாட்சி.
அனைத்து பெண்களும் செந்துரனிடம் மரியாதை நிம்மதமாக பேசிவிட்டு பின்னால் ஏறிக் கொண்டார்கள். அதற்கு காரணம் முன்னாள் அமர பயம் என்றே கூறலாம்.
மீனாட்சி மட்டும் போகாமல் மீண்டும் பேருந்தில் ஏறினாள். ” எம்மா! எம்மா! உன்னதமா? என்று ஓட்டுனர் அழைக்க, என்ன? என்று அதட்டலுடன் கேட்டாள். பஸ்சு வரதுக்கு ரொம்ப லேட் ஆகு மா! அவங்க எல்லாம் ஆம்பளைங்க. எப்படியாவது போயிடுவாங்க. நீ மட்டும் தான் பொண்ணா இருக்க. பாரு வானம் வேற மின்னுது கருக்கலா இருக்கு. மழை எப்ப வேணாலும் கொட்டலாம். அதனால நீ போய் அய்யா கூட ஏறிக்கோ. அய்யா உன்ன புதூர்கிட்ட இறக்கி விட்டுடுவாரு” என்று கூறினார்.
மீனாட்சி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அங்கிருக்கும் பெண்கள் அனைவரும் அவளை பார்த்தார்கள். செந்தூரப் பாண்டியன் அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டான். பேருந்தில் இருக்கும் ஆண்கள் அனைவரும் “என்னமா போய் அங்க இறங்கிக்க. எப்ப பசு வரது? நீ எப்ப போறது? என்று கூற ஓட்டுநர் நடத்துனர் அங்கு அமர்ந்திருக்கும் பெண்கள் என அனைவரும் கூற, செந்தூரப் பாண்டியன் ஜிப்பை ஸ்டார்ட் செய்தான்.
ஐயா ஒரு நிமிஷம் அவங்க என்ற ஓட்டுநர் கூற, மீனாட்சி பேருந்தில் இருந்து இறங்கினாள். செந்தூரனும் அவள் தனது ஜீப்பில்தான் ஏற வருகிறாள். என்று நினைத்து காத்திருக்க போனை எடுத்து டார்ச் ஒளி வைத்தவள். நடக்க ஆரம்பித்தாள் ஊரை நோக்கி.
இந்த பொண்ணுக்கு கிறுக்கு புடிச்சிருக்கா? எப்படி இன்னும் 5 கிலோமீட்டர் நடந்து போகணும்? வானம் வேற முட்டிக்கிட்டு நிக்கிது. இப்படி தைரியமா போறாளே? என்று அனைவரும் அவளை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மீனாட்சி யாரைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை. செந்தூரப் பாண்டியன் அதற்குமேல் பொறுமையை இழந்து ஒரு பொண்ணு? அவளுக்கு இவ்வளவு திமிரு இருக்குன்னா? நான் வந்து அவளுக்கு அடங்கி போகணுமா? கொழுப்பெடுத்தவ! என்று நினைத்தவன். நேராக ஜிப்பை ஸ்டார்ட் செய்து சென்று விட்டான்.
“ஆனால் இந்த பொண்ணுக்கு இவ்வளவு ஆகாதுப்பா! இங்கேயே இந்த ஆட்டம் ஆடுறாளே! அங்க ஸ்கூல்ல பிள்ளைகளோட நிலைமை? என்ன நடக்குமோ? பெரிய டீச்சர் அலைகள் ஓய்வதில்லை டீச்சர்ன்னு நினைப்பு.” என்று பேருந்தில் அமர்ந்திருக்கும் அனைவரும் அவளை கேலி பேசினார்கள்.
மீனாட்சி பாதி தூரம் சென்றவள் உடனே தன் தந்தைக்கு போன் செய்து, ” அப்பா நானு எங்க கருங்கரடுக்கு முன்னாடியே இறங்கிட்டேன். பஸ்ல பிரச்சனை. அதனால நான் நடந்து வந்துட்டு இருக்கேன். நீங்க என்ன கூட்டிட்டு போக வர முடியுமா?” என்று கேட்க, பொசகட்டவளே! எதுக்கு நடந்து வர? பஸ்லையே வர வேண்டியதுதானே! மழை வேற இங்க கருக்கிக்கிட்டு நிக்குது. இப்போ வண்டி வேற ரிப்பேர் பண்ண நான் டவுன்ல விட்டுருக்கேன். உன்னை யாரு அதிக பிரசங்கித்தனம் பண்ண சொன்னது? என்று ரவி திட்டினார்.
மீனாட்சிக்கு வேறு வழி இல்லாமல் போனை கட் செய்தாள். தொடங்கியது. இடி மின்னல் ஒரு பக்கம் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. “ஐயோ பெரிய வேலுநாச்சி மாதிரி, ஜான்சி ராணியாட்டம் தனியா இறங்கி வந்துட்டேனே! இந்த பக்கமோ இருட்டு. அந்த பக்கமும் இருட்டு. எந்த பக்கம் நோக்கி பயணம் பண்றேன்னு தெரியலையே? அந்த செந்தூரன் முன்னாடி பில்டப் கொடுத்துட்டு முறைச்சு பார்த்துட்டு வந்தேன்.. இப்போ யாரு என்ன காப்பாத்துவா? கடவுளே! கர்த்தரே! ” என்று சொல்லிக் கொண்டாள்.
மீனாட்சி! நீ வெறும் மீனாட்சி இல்ல. தங்க மீனாட்சி. நீ போய் பயப்படலாமா? அது உன்னோட பேருக்கே அவமானம். என்று சொல்லிக் கொண்டவள் பயத்துடன் நடக்க ஆரம்பித்தாள். மழை பெய்ய ஆரம்பித்தது.
அடுத்து மீனாட்சியின் நிலை என்னவாகும்? அவள் எப்படி வீட்டுக்கு செல்வாள்?. நாளை கர்ணன் சங்கவியை பெண் பார்க்க வருகிறான்? என்று செம்பருத்திக்கும் செந்தூர பாண்டியனுக்கும் தெரிந்தால்? அடுத்து என்ன நடக்கும்?
வருவான்
EPISODE – 17 ( தங்க மீனாட்சி இல்ல gold fish)
“முருகா!!
முருகா!!
முருகா!!
காப்பாத்து முருகா!!
மழை வர கூடாது முருகா!! வெளிச்சம் வேணும் முருகா!!” என வெளிப்படையாக பாடியவள். “பயமா இருக்கே! என்ன பண்றது? சரி ஒரு பாட்டு போட்டு விடுவோம்! என்ன பாட்டு போட?” என்று போனை எடுத்துப் பார்த்தாள். அவளது நேரம் சார்ஜர் 20 என இருக்க, “செத்தடி மீனாட்சி நாளைக்கு உனக்கு சங்கு தான்” என்று நினைத்தவள். அப்பவே பில்டப் பண்ணாம, சீன போடாம, அவன் வண்டியில ஏறி இருக்கலாம்.” என்று நினைக்கும் நேரம் படபடவென்று இடியும் மின்னலும் அடித்தது. மீனாட்சிக்கு அழாத குறை தான் கண்களில் நீர் முட்டி கொண்டது.
அவள் செல்லும் வழியில் ஆங்காங்கே வயலில் ஒற்றை லைட் மட்டும் எரிந்து கொண்டிருக்க, அதைப் பார்த்துக் கொண்டே கொஞ்சம் தைரியத்தை வரவழைத்தபடி கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் நடந்து வந்துவிட்டாள். அதன் பின்பு தான் மெயின் ஆப்பு. நீண்ட தென்னந்தோப்பை கடக்க வேண்டும். அந்த தென்னந்தோப்பை பகலில் பார்ப்பதற்கே மிகவும் பயமாக இருக்கும். ஐயையோ இப்போ என்ன பண்ணுவேன் நான்? என அவள் பயந்து கொண்டே நடந்தாள்.
அந்த வழியாக நிறைய இருசக்கர வாகனங்கள் வந்து சென்று கொண்டும் தான் இருந்தது. ஆனால் பின்னால் இரண்டு சக்கர வாகனத்தில் வருவோர் போவோர். லிஃப்ட் கொடுக்கும் அளவுக்கு இல்லை.. இப்பொழுது தான் தென்னந்தோப்பு ஆரம்பம்..அந்த நேரம் பார்த்து இடியும் மின்னலும் சேர்ந்து தூர ஆரம்பித்தது. இதயம் வெளியே குதித்து விடும் அளவுக்கு பயம் என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டே ஓட ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட பேருந்தில் இருந்து அவள் இறங்கி நடக்க ஆரம்பித்து முக்கால் மணி நேரம் இருக்கும். தூரத்தில் ஒரு புல்லட் அவளை கடந்து சென்றது.
“ஒளி வந்துவிட்டது! வழி கிடைத்துவிட்டது” என்பது போல ஒரு நிமிடம் அசுவாசப்படுத்தி கொண்டு வெளிச்சத்தை பார்த்தாள். அது இருசக்கர வாகனம் பின்னால் யாரும் அமரவில்லை. அப்போ லிஃப்ட் கேட்கலாம். என நினைத்துக் கொண்டே எதிர்பார்ப்புடன் நின்றாள். ஆனால் அருகில் வரவரத்தான் அது யார் என்று தெரிந்தது “இவனா? இவன் எதுக்கு திரும்ப இந்த பக்கம் வரான்?”‘என்று நினைத்தாள் மீனாட்சி.
யார் அவன்? பாண்டியன் தான் செந்தூர பாண்டியன். “அய்யோ யோசிக்கிற நேரமாடி இது. சைக்கிள்ல ஒருத்தன் லிப்ட் கொடுத்தா கூட போற நிலையில தாணடி நீ இருக்க?” என்று மீனாட்சி என் மனம் கவுண்ட்டர் கொடுக்க, அவன் டவுன் பக்கம் போறானே அந்த பக்கமா நம்ம வீடு இருக்கு? இந்த பக்கம் தானே லெஃப்ட் கேட்க முடியும்.” என்று மீனாட்சி என் மனம் சொன்னது.
“அப்படியே இந்த பக்கம் வந்தா மட்டும் நீ போய் அவன்கிட்ட லிஃப்ட் கேட்டு தள்ளிடுவியா?” என்று மூளை கேட்க, ” அதை அப்புறம் பாத்துக்குவோம் என்று பெருமூச்சை விட்டு பாதி தென்னந்தோப்பை தாண்டி வந்திருந்தாள். அந்த நேரம் பார்த்து திடீரென்று இடி இடிக்க, பலத்த காற்றுடன் தென்னை மரங்கள் ஆடி அசைய, பேய் அசைவது போல அவளுக்கு ஒரு பிரம்மை தோன்றியது. “கடவுளே! முருகா முருகா முருகா என்று அழுது கொண்டே வேகமாக ஓட ஆரம்பித்தாள்.
போன் தண்ணீரில் நனைந்தால் பிரச்சனை வந்துவிடும் என்று அதை கையில் கெட்டியாக பிடித்துக் கொண்டவள் வேகமாக ஓடினாள். திடீரென புதூர் பக்கம் நோக்கி புல்லட்டின் சத்தம் அருகில் கேட்டது.
இப்பொழுது செந்தூரப் பாண்டியன் நினைத்தால் பனையூர் செல்லும் வழியில் மீனாட்சியை புதூரில் இறக்கி விட்டு செல்லலாம். ஆனால் அவன் நினைப்பானா? அது மீனாட்சியின் கையில் தானே இருக்கிறது.. அவள் அழுது கொண்டே நடையை குறைத்தபடி மெதுவாக சென்றாள்.
கொஞ்ச தூரம் சென்று புல்லட்டை நிறுத்தினான் செந்தூரன். ” அப்போ என்னை பிக்கப் பண்றதுக்காக தான் வந்திருக்கானா? என்று ஒரு நப்பாசை தோன்றியது. எதோ ஒரு உந்துதலில் அவனை நோக்கி சென்றாள். மீனாட்சி அருகில் வருகிறாள் என தெரிந்ததும் செந்தூர பாண்டியன் புல்லட்டை மீண்டும் ஸ்டார்ட் செய்து கொஞ்ச தூரம் சென்றான்.
நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட டா! என சாபமிட்ட மீனாட்சிக்கு தொண்டை அடைத்துக் அழுகை பொங்கி கொண்டு வந்தது. தன்னை ஆசுவாச படுத்தி கொண்டு மீண்டும் நடந்தாள். செந்தூரன் வேண்டும் என்றே மீண்டும் நின்றான். அவள் வருவதற்காகவே காத்திருந்த செந்தூரன் “வாடி வா” என நினைத்து சிரித்துக் கொண்டவன். மீண்டும் வண்டியை நகர்த்த, அதற்கும் மேல் பொறுமை இல்லாத மீனாட்சி நடுங்கிய குரலில் முருகா முருகா என்று கத்தினாள் , கதறினாள்.
விளையாட்டு போதும் டா என தனக்கு தானே சொல்லிக் கொண்ட செந்தூரன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிக் கொண்டான்.. மழை வேகமாக வரத் தொடங்கியது. வண்டியை தாண்டி மீனாட்சி நடக்க, “இவளை!!” என கோபம் கூடவே அவளின் பிடிவாத குணத்தை பார்த்து ஆச்சரியமும் வந்தது செந்தூரனுக்கு. “இன்னும் எவ்வளவு தான் வீம்புக்கு நிப்ப?” என்று கேட்டான்.
அவள் நடை பாதியிலேயே நின்றுவிட, இப்பதான் மேடம்க்கு காது கேக்குதோ? என்றான் எகத்தாலமாக. மழை நீர் முகத்தில் சட சடவென்று பட டார்ச் லைட்டை அவளின் முகத்தில் அடித்தான் செந்தூரன்.
அவள் முகத்தை திருப்பி கொண்டாள். உனக்கு எதுக்கு இத்தனை பிடிவாதம்? எல்லாரையும் அழைச்சிட்டு போற மாதிரி தானே உன்னையும் கூப்பிட்டேன். வரதுக்கு உனக்கு என்ன டி கேடு? என்று கேட்டான் செந்தூரன்.
” நான் எதுக்கு வரணும்? என்னால தனியா போக முடியும்” என்று மீனாட்சி முயலுக்கு மூன்று காலிலேயே நின்றாள்.” அப்போ நீ இப்ப தனியா போயிடுவியா? ” என்று செந்தூரன் கேட்க, அவளிடம் பதில் இல்லை. நடக்க ஆரம்பித்தாள். ஏய் அடுத்த தடவை வான்னு கூப்பிட மாட்டேன். கிளம்பிட்டு போயிட்டே இருப்பேன் டி! என்று ஒருமையில் அழைத்தான் செந்தூரன்.
அதில் வெடுக்கென நின்றவள். யாரை பார்த்து டீ சொல்ற? என்னை நீ டி சொன்னா? நான் உன்னை டா சொல்வேன் என்று மீனாட்சி சொல்ல, நீ எந்த நிலைமையில் இருக்க? அப்பயும் உன்னோட வாய் அடங்கல பாத்தியா? உன்ன மாதிரி ஒருத்திய நான் பார்த்ததே இல்லடி! என்று கூறினான் செந்தூரப் பாண்டியன்.
நானும் உன்ன மாதிரி ஒருத்தனா பாத்ததே இல்லடா என்று சொன்னவள். நடக்க ஆரம்பித்தாள் வீம்புடன்..
ஒழுங்கா வந்து ஏறிக்க? இல்லன்னா பாரு தென்னந்தோப்பு ஒரு மார்க்கமா ஆடுது. என்றான் செந்தூரன்.
பேய் பிடிச்சா என்ன புடிச்சிட்டு போகட்டும். ஆனா உன்னோட வண்டியில ஏற மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே நடந்தாள்.
திமிரு! கொழுப்பு! இவளை என்று பற்களை கடித்தவன் கடைசியாக ஒரு தடவை கூப்பிடுறேன் ஏற முடியுமா? முடியாதா? என்று கேட்டான்.
இதுக்கு மேல நீ வீம்பு பிடித்தால் அவன் கண்டிப்பாக விட்டு செல்வான். போய் ஏறிக்கோ என்று மீனாட்சியின் மனம் சொல்ல, நீ இவ்வளவு என்கிட்ட கெஞ்சி கேக்குறே! அதனாலதான் உன் வண்டியில ஏறுறேன். உனக்கு பயமா இருக்கிறதால தான் என்னை கூட்டிட்டு போறேன்னு தெரியும் என்று புல்லட்டில் ஏறிக்கொண்டாள்.
அவள் ஏறியதும் வேகமாக முறுக்கினான். அவனது முதுகில் பொத்தென அவளின் நெஞ்சம் சாய்ந்து கொண்டது. ஒழுங்கா உட்கார தெரியாதாடி உனக்கு? என்று செந்தூரன் அதட்ட, உனக்கு ஒழுங்கா ஓட்ட தெரியாதாடா? என்று மீனாட்சி ஏட்டிக்கு போட்டியாக பேசினாள்.
அதன்பின் அவர்களின் பயணம் அமைதியாக இருக்க, அதற்கு பதிலாக மழையும் காற்றும் புயலும் என அந்த சத்தம் காதை கிழித்தது. இருவரும் எதுவும் பேசவில்லை. பாதி தூரம் வந்து விட்டார்கள். செந்தூரப் பாண்டியன் வேண்டுமென்றே நீ பனையூர்ல மேல் வளைவு தான? என்று கேட்க, மீனாட்சிக்கு இப்பொழுது என்ன சொல்வது? என்று தெரியவில்லை.
இவன் பனையூருக்கு கூட்டிட்டு போனா? நான் அங்கிருந்து எப்படி புதூருக்கு வருவேன்? அய்யோ என்று உள்ளுக்குள் பதற்றம் பரவ, அவள் அமைதியாக இருந்தாள்.
கேட்டால் பதில் சொல்லணும்? இல்லனா மொத்தமா கூட்டிட்டு போயிடுவேன்? என்று செந்தூரன் இரு பொருள் பட சொல்ல, அதை அவள் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை.
புதூர் என நெடுஞ்சாலை துறையின் போர்ட் ஓர் ஆரம்பிக்கும் இடத்தில் இருக்க, அங்கே வண்டியை நிறுத்தினான். எதுவும் பேசாமல் இறங்கியவள் மனதில் அப்போ நான் புதூர்னு இந்த கடுவன் பூனைக்கு தெரியுமா? என பார்த்தவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
இப்ப கூட நன்றி சொன்னா? முத்து உதிந்துடுமா? இல்ல தங்கம் உருகிடுமா என்று கிண்டலாக கேட்டான்.
அவள் திரும்பிப் பார்த்து தேங்க்ஸ் என்று கூற, “கேட்டு தான் வாங்க வேண்டி இருக்கு போல” என்றான் செந்தூரன். அவள் அவனை பார்த்தபடி அதே இடத்தில் நிற்க, அவனும் வண்டியை ஆஃப் செய்து விட்டு நின்றான். இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ள, மழையில் நனைந்த வதனத்துடன் உடலோடு ஒட்டிய உடையுடன் ரம்யமாக காட்சியளித்தார்கள் அந்த இரவு நிற வெளிச்சத்தில்.
செந்தூரப் பாண்டியனின் பார்வை அவளின் முகத்தின் மீதும் ஆழ்ந்த பதிக்க ஏனோ இந்த முறை அவளால் நிமிர்ந்து அவனது முகத்தை பார்க்க முடியவில்லை. எட்டிக்கு போட்டி பேசுபவளால் நிமிர்ந்து பதிலளிக்க முடியவில்லை. குளிரில் நடுங்கிய உடலுடன் நின்று கொண்டிருக்க, அம்மணி பேர் என்ன? என்று மென்மையுடன் கேட்டான்.
அது என்று அவள் ஆரம்பிக்க,.. பிளீஸ் பொய் மட்டும் சொல்லாத என்று எடுத்ததும் கூறினான். “மீனாட்சி!.. தங்க மீனாட்சி!” என்றாள். உடனே செந்தூரப் பாண்டியன் கண்ணக்குழி மெதுவாக தம்பியதை மீனாட்சியின் கண்கள் நோட்டமிடத் தவறவில்லை.
இதயம் இருவருக்கும் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. அவள் இதற்கு முன்னால் அனுபவித்ததே இல்லை. ஒரு பெருமூச்சை விட்டான். அந்த சுவாசம் அவளை புயலை விடு தாக்கியது. அவள் குளிர்ந்த உதடுகள் நடுங்க நின்று கொண்டிருக்கும் அவளை பார்த்தவன்.
மீனாட்சி ம்ம் ஆனால் அதை விட கோல்ட் பிஷ் மேட்ச்சா இருக்கும் என்று சொன்னவன். வண்டியை கிளப்பி சென்று விட்டான்.
“கோல்ட் ஃபிஷ் ” என மீனாட்சியின் கண்ணம் சிவக்க உதடுகளும் சிரித்தது.உள்ளுக்குள் ஷாக் அடித்த உணர்வு மின்சாரம் பலவாறாக பாய்ந்தது இருவருக்குள்ளும்…
அடுத்து என்ன நடக்கும்?
வருவான்.
EPISODE – 18
“எதுக்கு என்ன பிக்கப் பண்றதுக்கு வந்தான்?” என்ற எண்ணம் செந்தூர பாண்டியனை நோக்கி சென்றது மீனாட்சிக்கு. அதுவும் கடைசியாக gold fishன்னு சொல்லிட்டு போனானே! அந்த கடுவன் பூனை என நினைத்தாள்
அதே நிலைதான் செந்தூரனுக்கும் ” நான் எதுக்கு அவளை நினைத்து கவலைப்படணும்? எதுக்காக அவளை பிக்கப் பண்ண போன?”:என்று இதுவே அவனது மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இரவு முழுக்க தூக்கமே இல்லை. புரண்டு புரண்டு படுத்தவன் நிமிர்ந்து பார்க்க தங்க மீன்கள் இரண்டும் கண்ணாடி குடுவையில் நீந்தி கொண்டிருந்தது.
அவளது அவள் வாங்கிய மீன்கள் தான் என்று அன்றே செந்தூரனுக்கு தெரியும் ஆனால் தன் தங்கை தன்னிடம் ஏன் மறைக்கிறாள் என்பதை நேரடியாக கேட்கவில்லை. அதை தெரிந்து கொண்டான் மீனாட்சி யார்? மீனாட்சிக்கும் செம்பருத்திக்கும் என்ன சம்பந்தம்? என்று அனைத்தையும் தெரிந்து கொண்டான். இத்தனை நாள் நாட்களும் காத்திருக்கிறான் செம்பருத்தி தன்னிடம் வந்து வள்ளியின் அண்ணன் மகள் மீனாட்சியை பற்றி வகூறுவாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் இதுவரை அவள் கூறவில்லை.
தனது தங்கை ஒரு பக்கம் அப்படியென்றால் தான் யார் என்று தெரிந்து கொண்டே தன்னிடம் இவ்வளவு கோபமாகவும், ஏட்டிக்கு போட்டியாக சேட்டை செய்யும் மீனாட்சியை ஏதாவது ஒரு இடத்தில் ஞாபகம் வந்து தான் தொலைகிறது அவனுக்கு. முதல் முறை செம்பருத்தி ஆட்டுபால் பேசியல் செய்த அந்த நொடியே வந்து போனவள் மீனாட்சி. அதாவது மனதுக்குள்..
அடுத்ததாக கடை தெருவில் பார்த்த தங்க மீன்கள் வீட்டுக்கு வந்ததும் செம்பருத்தியின் அறையில் இருந்ததும் உறுதியே செய்துவிட்டான் செந்தூரன். இருவருக்கும் ஏதோ ஒரு இணைப்பு இருக்கிறது. அது நட்பாக இருக்கலாம். என்று ஒரு எண்ணம் இருந்தது. நட்பு என்று இருந்திருந்தால், பொம்மியை பற்றி சொன்ன செம்பருத்தி கண்டிப்பாக மீனாட்சி பற்றி சொல்லியிருப்பாள் . அவள் ஏன் மீனாட்சி பற்றி சொல்லவில்லை? என்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்தான். மொத்த விடயமும் கிடைத்துவிட்டது.
ஆனால் தன் தங்கச்சி சொல்லாமல் எப்பொழுது சொல்கிறாளோ அதுவரை தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்தான். பிடித்திருந்தது அவளை.. மீனாட்சியை தான். அதற்கு காரணம் தங்கை. செம்பருத்திக்கு என்ன பிடிக்கும்? என்ன வேண்டும் என்று செந்தூரனுக்கு அடுத்து நினைப்பது மீனாட்சி என்ற அவர்கள் இருவரின் சம்பாஷனைகளை வைத்து தெரிந்து கொண்டான். அதை பார்க்க பார்க்க மிகவும் பிடித்திருந்தது. அது ஒரு ஆண்மகனாக அவனுக்குள் வேதியல் மாற்றங்களை நிகழ்த்தி இருக்கிறது என்று கூட கூறலாம்.
இப்படி இன்பமான நினைவுகளுடன் அந்த இரவை கழித்து காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்து கீழே வந்தவன் கண்ணில் பரபரப்புடன் சுற்றித்திரிந்த செம்பருத்தியும், அலங்காரத்துடன் தயாராகி இருந்த சங்கவியும்தான் முதலில் தெரிந்தார்கள்.
செந்தூரப் பாண்டியனின் புருவங்கள் இடுங்க இங்க என்ன நடக்குது? யாராவது வீட்டுக்கு வராங்களா? என்ற செம்பாவிடம் கேட்டான்.
மம் ஹிம் என உதட்டை பிதுக்கியவள். தீவிரமாக யோசித்து விட்டு “அண்ணா எனக்கு என்னமோ சங்கவிய பொண்ணு பாக்க வராங்கன்னு நினைக்கிறேன்” என்றாள்.
சங்கவியவா? சங்கவிய எதுக்கு பொண்ணு பார்க்க வரணும்? முதல்ல உனக்கு கல்யாணம் பண்ணிட்டு தான வீட்ல இரண்டாவது பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்! என்று அவன் முகம் கோபத்தை தத்தெடுத்து கொண்டது. அதில் பதட்டமான செம்பருத்தி, “அண்ணா சொல்றது கேளு பிரச்சனை பண்ணாத. ப்ளீஸ்!! பெரியம்மா ஒன்னு செய்றாங்கன்னா அதுக்கு காரணம் இருக்கும். என்று பெரிய தியாகச் செம்மல் போல அகிலாண்டேஸ்வரிக்கு பரிந்து பேசினாள்.
இல்ல! பாப்பா நீ கம்முன்னு இரு! என்ன நடக்குது இந்த வீட்ல? அம்மா அம்மா!! என்று கத்த ஆரம்பித்தான் செந்தூரன். எதுக்குடா கத்தற என்று கேட்டுக் கொண்டு பட்டு புடவையில் வந்தவர் கண்களில் செம்பருத்தி செந்துரனின் அருகில் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் கோபம் தலைக்கு ஏறியது.
பெரியம்மா அது அண்ணா உங்கள பாக்கணும்னு சொன்னாங்க. நானே கூட்டிட்டு வர்றதுககு நெனச்சேன். அதுக்குள்ள அண்ணாவே உங்களை என்று கூறியபடி அவ்விடத்தை விட்டு நகர முயற்சி செய்தாள். இஎங்கே போற? என அவளின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் செந்தூரன்.
அண்ணா என்ன பண்ற? கைய விடு? என்று பயந்து கொண்டே அகிலாவையும் செந்தூரனையும் மாறி மாறி பார்த்தாள் செம்பருத்தி. உள்ளுக்குள் நடுக்கம் பரவியது. அடுத்து என்ன நடக்கப்போகுதோ? என்று கண்ணீர் வராத குறை தான் அவளுக்கு. என்ன நடக்குது? இந்த வீட்ல என்று கர்ஜனையுடன் கத்தினான் செந்தூரன்.
அந்த சத்தத்தில் முத்துப்பாண்டியன் ஜெயக்கொடி செல்ல பாண்டியன் தனலட்சுமி என அனைவரும் ஹாளுக்கு வந்து சேர்ந்தார்கள்.
“நீ பேசறது ஒன்னும் புரியலையே? எதுவா இருந்தாலும் விளக்கமா நேரடியா பேசு செந்தூரா!” என்று அகிலாண்டேஸ்வரியின் குரல் முளங்கியது. சங்கவிய பொண்ணு பாக்க வராங்கலாமா? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு உங்களுக்கு தோணலையா? யார கேட்டு முடிவெடுத்தீங்க? என்று கோபத்தின் உச்சியில் நின்று பேசிக் கொண்டிருந்தான் செந்தூரன்.
அகிலாண்டேஸ்வரி தன்மகனை பார்த்து, ” இது ஜெயகொடி, முத்துபாண்டியன் ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு. ஒரு பெத்தவங்களா அவங்களோட முடிவுல என்னால தலையிட முடியாது. இப்போ உனக்கு என்ன வேணும்? அதை மட்டும் சொல்லு?” என்று சூசகமாக பேசினார் அகிலா.
செந்தூரனால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. உடனே அவன் தனது சித்தப்பா சித்தியை பார்த்தபடி “என்ன சித்தி? இப்படி பண்ணிட்டீங்க? நம்ம வீட்ல எனக்கு அப்புறம் செம்பருத்தி தானே! அப்போ அவளுக்கு கல்யாணம் பண்ணிட்டு தானே சங்கவிக்கு பண்ணனும். நீங்க ஏன் இப்படி திடுதிப்புன முடிவெடுத்தீங்க? அதுவும் என்கிட்ட சொல்லணும்னு கூடவா தோணல உங்களுக்கு?” என்று கேட்டான்.
ஜெயகொடிக்கும் முத்துப்பாண்டியனுக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் உடனே அகிலாவை பார்க்க, “ச்ச இதுங்க வேற! சுயமா யோசிக்கிற திறனை இல்லை. இப்படி பார்த்தே என்னை இவன்கிட்ட மாட்டிக் குடுத்துடுங்க போலயே! என்று நினைத்த அகிலா எதிரில் நின்ற செம்பருத்தி பார்வையால் எரித்து விட்டு “செந்தூரா நீ பேசுறத அப்புறமா பேசிக்கோ! முதல்ல மாப்பிள்ளை வீடு வரட்டும். அவங்க பொண்ண பார்த்துட்டு போனதுக்கு அப்புறம் செம்பருத்தியோட கல்யாணத்தை பத்தி பொறுமையா பேசிக்கலாமே! என்ன அவசரம்? நான் சொல்றது சரிதான தம்பி என்று செல்ல பாண்டியனை பார்த்தாள் அகிலா.
அண்ணி சொன்னா எல்லாமே சரிதான் என்று செல்ல பாண்டியனும், முத்து பண்டியனும் ஜால்ரா கொட்ட அதே போல அக்கா சொன்னா எல்லாம் சரிதான் என்று ஜெயக்கொடியும் தனலட்சுமி கூறினார்கள். இங்கு இந்த வீட்டில் அகிலா வைத்தது தான் சட்டம். அவள் என்ன நினைக்கிறாளோ அது மட்டும் தான் நடக்கும். அதை எதிர்ப்பவர்கள் அனைவருக்கும் செம்பருத்தி நிலைதான் என்று நன்றாகவே தெரியும். அதனால் யாரும் தேவையில்லாமல் அகிலாவிடம் மோத மாட்டார்கள்.
செந்தூரப் பாண்டியன் கோபத்துடன் நின்று கொண்டிருக்க, செம்பருத்தி அவனது கைகளை பிடித்தவள். “அண்ணா சொல்றத கேளு. இது நல்ல காரியம் நடக்கப் போற இடம். தேவையில்லாம பிரச்சனை பண்ண வேண்டாம். முதல்ல மாப்பிள நம்ம சங்கவிய பாத்துட்டு போகட்டும். அதுக்கப்புறம் பெரியம்மா சொன்ன மாதிரி பேசிப்போமே! நீ எதுக்கு பிரச்சனை பண்ற? போ அண்ணா போய் கெளம்பு” என்றாள்.
அதுக்கில்ல பாப்பா என்று அவன் பேச வர, அண்ணா சொல்றதை கேளு! பெரியம்மா சொல்றதில அர்த்தம் இருக்கும் என்று அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க, அவன் அறைக்கு சென்ற அடுத்த நொடி அகிலா செம்பருத்தி அருகில் வந்தவள். அதுக்குள்ள கல்யாண ஆசை வந்துடுச்சா உனக்கு? வெக்கமா இல்லையாடி? வேற எவனாவதும் கல்யாணம் பண்ணவணாம் பார்த்து உங்க அம்மா மாதிரியே வளைச்சு போட திட்டம் போட்டுருக்கியா? என் பையனிடம் என்னத்த போட்டு கொடுத்த? இப்படி என்னை எதிர்த்து பேசணும்னு தூண்டிவிட்டு வேடிக்கை பாக்குறியா? என்று அகிலா இஷ்டப்படி பேச, செம்பருத்தி கண்களில் கண்ணீர் வடிய, ஏன் பெரியம்மா இப்படி பேசுறீங்க? சத்தியமா அண்ணன் கிட்ட நான் எதுவுமே சொல்லல. என்னை நம்புங்க! பெரியம்மா இப்படி வார்த்தையால என்னை குத்தாதீங்க. நான் யாருக்குமே எந்த துரோகமும் செய்யல. நான் எதுவும் செய்யல என்று அவள் அழுதாள்.
.அகிலாண்டேஸ்வரி எகத்தாள பார்வையை அவளிடம் வீசி “நீ எதுவுமே செய்யல தான். அதுக்குன்னு உன்ன அப்படியே விட்டுட முடியுமா? நீ பொறந்ததே ஒரு சாபக்கேடு டி! உங்க அம்மாவால என் வாழ்க்கையே போயிடுச்சுடி! என்னோட மரியாதை, என்னோட கம்பீரம், எல்லாமே போயிடுச்சுடி! என்ற இஷ்டத்துக்கு பேசியவர். சங்கவிய பொண்ணு பாத்துட்டு போகட்டும் அதுக்கப்புறம் உன்னை நான் பார்த்துக்கிறேன்.” என்று கூறிவிட்டு இரண்டு அடி வைத்தவர்.
ஹான் முக்கியமான விஷயம் உன்னோட மயக்கர பார்வையை, ரொம்ப பாவமா முகத்தை வச்சுக்கிட்டு இங்க வந்து நுண்ணு சங்கவிய பார்க்க வந்த மாப்பிள்ளை முன்னாடி வளைச்சு போட திட்டம் போடாத! ஏன்னா உங்க அம்மாளோட புத்தி தான உனக்கும் வரும் . என்று அவளை சொற்களால் குத்தி கிழித்து விட்டு சென்றார் அகிலா.
செம்பருத்தி அழுது கொண்டே அங்கிருந்து வேகமாக அவளது கெஸ்ட் ஹவுஸ்சை நோக்கி ஓடினாள். இப்பொழுது தன்னை பூமி எடுத்துக் கொள்ளாதா? தனக்கு ஏதாவது நேர்ந்திடாதா? என்று ஆயிரம் எண்ணங்கள் அவளை சூழ்ந்து கொண்டது. வாழ்க்கையே நரகமா இருக்குமோ? நான் யாருக்கு என்னை பாவம் பண்ணேன்? எனக்கு இந்த உலகத்தில் வாழ தகுதியே இல்ல.. என புலம்பி கொண்டே தன் தாயின் புகைப்படத்தை பார்த்தாள்.
அதே நேரம் கர்ணன் அவனது குடும்பத்தாருடன் பழம் தட்டு என நிச்சயம் மோதரத்துடன் வீட்டுக்குள் நுழைவு வாயிலுக்குள் காரில் ஜம்பமாக வந்து இறங்கினான்.
வருவான்.
EPISODE – 19 ( அடித்து விரட்டப்பட்ட கர்ணன்)
செந்தூரன் அங்கும் எங்கும் நடந்தவன். “இது சரிப்பட்டு வராது சங்கவிய பொண்ணு பாத்துட்டு போனதுக்கு அப்புறம் அடுத்த நிமிஷமே நம்ம செம்பருத்திக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிடனும். அவளை ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கணும். என சொல்லிக் கொண்டே பீரோவை திறந்தான் அதில் ஒரு பெட்டியில் 100 சவரன் நகைகள் இருந்தது. எல்லாம் செம்பருத்திக்காக அவன் பார்த்து பார்த்து வாங்கியது. காசு மாலை நெக்லஸ் ,ஆரம் , அட்டிகை, வளையல், தங்க கொலுசு என அனைத்தும் இருக்க, 100 ஏக்கர் தென்னந்தோப்பை அது கூடவே தேங்காய் மண்டியையும் செம்பருத்தி பெயரில் எழுதி வைத்திருந்தான். சங்கவிக்கும் அதேபோல என்ன சொத்து பத்துக்கள் கொடுத்திருக்கிறானோ? அதேபோலத்தான் சங்கவிக்கும் பிரித்து வைத்திருந்தான்..
செம்பருத்தியின் மனதில் என்ன சமாதானம் சொன்னாலும் செந்தூனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தங்கை சொல்லிவிட்டாலே என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பார்ப்போம் இவ 10 நிமிடங்களில் கம்பீரமாக கிளம்பினான்.
இங்கே கீழே பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் அனைவரையும் வாங்க வாங்க உள்ள வாங்க என்று மரியாதை நிமித்தமாக தண்ணீர் கொடுத்து ஜெயக்கொடி மற்றும் தனலட்சுமி இருவரும் வரவேற்க, இரு கை கூப்பி செல்லபாண்டியன் மற்றும் முத்துப்பாண்டியன் மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து சோபாவில் அமர வைத்தார்கள்.
வீட்டை பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் கர்ணன். ” இவள வச்சு ப்ளே பண்ணி மொத்தமா அந்த செம்பருத்திய சின்ன வீடா செட் பண்ணிடனும்” என்று அவன் ஒரு திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான்.
அகிலாண்டேஸ்வரி மணிகண்டனை அழைத்து “தம்பி போயி அண்ணனை கூட்டிட்டு வா” என்று அனுப்பி வைத்தார். கர்ணன் கொஞ்சம் கம்பீரமாக அமர்ந்திருந்தான். அவனது மனதில் நல்லவேளை முன்னாடியே சொல்லிட்டு வந்தோம். அப்போ எந்த பிரச்சனையும் இல்லாமல் சமூகமாக போகும். அவங்க அம்மா சொன்னா அந்த செந்தூரன் கேட்பான். அத வச்சு உன்ன திருப்பி அடிக்கிறேன் டா! என்று நினைத்தவன். மிகவும் நல்லவன் போல அமர்ந்திருந்தான்.
மாப்பிள்ளை வீடு வந்தாச்சா என்று கேட்டுக் கொண்டே தனது தம்பி மணிகண்டனுடன் கீழே இறங்கிய செந்தூரனின் முகம் சட்டென மாறிப்போனது. இவன் தான் மாப்பிள்ளை? என்று கண்களில் கோபத்தின் சாயல் மின்ன சிவப்பேரி வேகமாக கீழே வந்தான் செந்தூரன்.
அகிலாண்டேஸ்வரி புன்னகையுடன் செந்தூரா இதுதான் மாப்.. மாப்பிள்ளை என்று சொல்ல வர அதற்குள் அங்கிருந்த நடுக்கூடத்தில் நின்றவன். ” உங்களுக்கு பத்து நிமிஷம் டைம். இங்க இருக்கிற அத்தனையும் எடுத்துக்கிட்டு வந்த வழியை பார்த்து போயிருங்க” என்று கோபத்தை கட்டுக்குள் வைக்க முயன்று தோற்றுப் போனவன். ஒரு வழியாக சமாளித்து பேசி முடித்தான் செந்தூரன்.
என்ன பேசிட்டு இருக்க என்று அகிலாண்டேஸ்வரி அதட்ட , செல்ல பாண்டியன் முத்துப்பாண்டியன் என அனைவரின் பார்வையும் செந்தூரனின் மீது படிந்தது. அதே கம்பீரத்துடன் தன் தாயைப் பார்த்தவன். “சொல்றது புரியலையா அம்மா? மறுபடியும் சொல்லட்டுமா? இந்த மாப்பிள நம்ம தங்கச்சிக்கு வேண்டாம். இவனோட குணம் சரியில்ல என்று மீண்டும் கூறினான்.
உடனே அகிலாண்டேஸ்வரி மாப்பிள்ளை வீட்டாரையும் கர்ணனையும் பார்த்து தப்பா நினைச்சுக்காதீங்க இவன் என்று பேச வர, அம்மா சொல்றதை கேளுங்க. இவன் வேண்டாம் என்று மீண்டும் கூறினான்.
தேவையில்லாம பேசாத செந்தூரா! இது ஜெயக்கொடியும் முத்து பாண்டியனும் எடுக்க வேண்டிய முடிவு. முக்கியமாக சங்கவியோட விருப்பம் இதுல அடங்கி இருக்கு. நீ தேவையில்லாம பிரச்சனை பண்ணாத என்று அகிலா தடுக்க செந்தூர பாண்டியனின் அதற்கு மேல் பொறுமையை இழந்து அங்கிருந்த தாம்பூலங்களை வேகமாக வீசியவன்.
இவனோட பண்ண வீட்டுக்கு தினமும் ஒரு பொண்ணு போகுது. அப்படி இருக்கிற ஒருத்தனுக்கு நம்ம சங்கவிய கட்டி கொடுக்கணுமா? நீங்களே முடிவு பண்ணிக்கோங்க? என்று ஆவேசமாக திரும்பினான் செந்தூரன் .
கர்ணனுக்கு கோபம் மின்ன அனைவரின் பார்வையும் அவனின் மீது திரும்ப கர்ணனின் பார்வை புகழேந்தியின் மீது பட்டது. உடனே அவன் அனைவரின் முன்னும் புகழேந்தி “பெருசா இதுல என்ன தப்பு இருக்கு? உங்க அப்பா பண்ணிடாத விசயத்தையா இதையா எங்க ஐயா பண்ணாரு? ஏதோ பார்த்த மாதிரி சொல்றீங்க? எங்க ஐயா அப்படிப்பட்டவர் கிடையாது.” என்று கூற.
கோபம் தலைக்கேறியது செந்தூரனுக்குm அதே நேரம் அகிலாவிற்கு மிகவும் அவமானம் ஆகிவிட செந்தூரப் பாண்டியன் வேகமாக புகழேந்தியின் அருகில் வந்து என்னடா சொன்ன? நாயே?! என்று அடிக்க பாய கர்ணனின் தந்தை முத்துச்சாமி ஏதோ நம்ம குடும்பத்தையும் மொத்தமா ஊர் பகையை மறந்து தான் பொண்ணு கேட்டு ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தோம். நல்லா இருக்கும் என்று நினைப்புல தான் நாங்க வந்தோம். ஆனா இப்படி வரதுக்கு முன்னாடி இத்தனைக்கும் உங்க கிட்ட சொல்லிட்டு தான் வந்தோம். இப்படி வீடு தேடி வந்தவங்கள அவமானப்படுத்தி அனுப்புவீங்கன்னு நாங்க எதிர்பார்க்கல. எங்க பையனோட குணத்த பத்தி உங்களுக்கு தெரியாது. ஆனா உங்களோட பொண்ணு எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு அனைவரும் இருந்து சென்றார்கள்.
மழை பெய்து ஓய்ந்தது போல மிகவும் அமைதியாக இருந்தது பெரிய வீடு. அகிலாண்டேஸ்வரிக்கு மிகவும் அவமானமாகவும் மனம் நொந்து போனது. இப்படி பழைய நினைவுகளை கிண்டி விட்டு செல்வார்கள் என்று நினைத்து பார்க்கவில்லை. அதைவிட அதற்கு காரணமான வள்ளி மற்றும் செம்பருத்தி என் மீது இன்னும் கோபம் தலைக்கு ஏறியது.
நீ எதுக்குடா அந்த வீட்டுக்கு பொண்ண கேட்டு போன? உனக்கு ஊர்ல பொண்ணே கிடைக்கலையா? என்று துருவன் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தான் கர்ணனை.
அப்படி இல்ல துருவா! உங்க மாமன் ராஜ பாண்டியன் வச்சிருந்த சின்ன வீட்டால பிரச்னை வந்து தானே நீயும் உங்க அக்காவும் பேசிக்காம இருந்தீங்க. நான் அந்த பகைய என்னோட கல்யாணம் மூலமா சரி பண்ணி உன் கூட பங்காளியாக முடிவு பண்ணேன் டா! உறவுகாரனா மாற நினைச்சேன். அதனால தான் சங்கவிய கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்து, பொண்ணு கேட்டு வீட்டுக்கு போனேன். ஆனா அங்க இப்படி ஆகும்ன்னு எதிர்பார்க்கல என வருத்தத்துடன் பேசினான் கர்ணன்.
துருவன் கோபமாக பனையூர் காரன் எவனுக்குமே மரியாதை கொடுக்க தெரியாதுடா, அப்படிப்பட்ட ஜென்மங்கள் இருக்கிற இடத்துக்கு நீ எதுக்கு போன? அந்த பனையூர் காரிய விட்டால் பொண்ணே கிடைக்காதா?” என கேட்டான்.
உன் கிட்ட சொல்லாமல் போனது தப்பு தான் டா விடு. இப்போதைக்கு எனக்கு கல்யாணம் யோகம் இல்ல போல கொஞ்சம் தள்ளி போடுறேன் என அந்த விசயத்தை விட்டு கொஞ்ச நாள் அமிக்கி வாசிக்க முடிவெடுத்தான் கர்ணன்.
இங்கே அகிலாவின் வீடு அமைதியாக இருந்தது. செம்பருத்தி நேராக செந்தூரனை பார்க்க சென்றாள். சொல்லு பாப்பா என மறுக்காமல் பதில் கொடுத்தான்.
அண்ணா பெரியம்மா நேத்துல இருந்து சரியா சாப்பிடவே இல்லை. நீ வந்து கொஞ்சம் என்னன்னு கேளு? என்று செம்பருத்தி கூற, செந்தூரன் அமைதியாக இருந்தான். அண்ணா! உன்ன தான் சொல்றேன். பெரியம்மா பசி தாங்க மாட்டாங்க. நேத்து என்ன நடந்தது? சங்கவிக்கு மாப்பிள்ளை பிடிச்சு போயிடுச்சா? என விசாரித்தாள்.
செந்தூரன் அவளை முறைத்தபடி யாருமே உன்கிட்ட எதுவும் சொல்லலையா? என்று கேட்க, “அதுவா? அது வந்து எல்லாரும் அவங்கவங்க வேலையில பிஸியா இருந்தாங்க. அதனால தான் நான் உன்கிட்ட வந்து கேட்டேன்!” என சமாளித்தாள்.அப்படியா என ஒற்றை பதிலுடன் முடித்து கொண்டான்.
சரி வா வா நான் உனக்கு சாப்பாடு போட்டு தரேன். நீ எடுத்துட்டு போய் பெரியம்மாவ சாப்பிட வச்சுட்டு தான் வரணும். எப்பவுமே பெரியம்மா பசி தாங்க மாட்டாங்க என்று அக்கறையாக கூறியவளை, வினோதமாக பார்த்தான். எப்படி பாப்பா நீ மட்டும் இப்படி இருக்க? என்று செந்தூரன் கேட்க, என்ன அண்ணா? எனக்கு புரியல என்று அவளும் அவனை பார்த்தாள்.
இப்படி எல்லார் மேலயும் பாசமா இருக்கியே? அம்மா சாப்பிடலன்னு கவலைப்படுறியே? உன்னை யாராவது உட்கார வச்சு சாப்பாடு போட்டு கவனிச்சத நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை என்று தீவிரமாக அவன் பேசிக் கொண்டிருக்க, “நான் இந்த வீட்டு பொண்ணு. நான் டைனிங் டேபிள் உக்காந்து சாப்பிடணும்னு எனக்கென்ன இருக்கு! நான் சமையல்கட்ல கூட உரிமையா திண்டு மேல ஏறி உக்காந்து சாப்பிடுவேன். என்று வழக்கம்போல தன் அண்ணனுக்கு தான் கஷ்டப்படுவது தெரியக்கூடாது என்ற படியே பேச்சை கொண்டு சென்றாள்.
செந்தூரப் பாண்டியன் ஒரு பெருமூச்சு விட்டு “நீயே கொண்டு போய் குடு” என்று மழுப்ப, இல்லல்ல நீ தான் போகணும் வா! என்று இழுத்துச் சென்று உணவை போட்டு கொடுத்து அனுப்பி வைத்தாள்.
செந்தூரன் உள்ளே சென்றதும் அகிலா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்க, அம்மா என்று அவன் பேச வந்தான்.
போதுண்டா எனக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்துட்ட! என்று அகிலா வருத்தத்துடன் கூறினார்.
நான் சொல்றதை கேளுங்கம்மா! அவன் ரொம்ப மோசமானவன் உங்களுக்கு அவனை பத்தி தெரியாது. சங்கவி விவரம் இல்லாத பொண்ணு. அதனாலதான் உண்மைய எல்லாத்தையும் முன்னாடியும் ஒடச்சு சொன்னேன் தப்புதான். நான் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கணும். என்று ஒரு வாயை பிசைந்து அவரின் முன்னால் நீட்டினான்.
அகிலா முகத்தை திருப்பிக் கொள்ள, மா வாங்கிக்கோங்கம்மா! என்று கொஞ்சவது போல பேசினான்.
அதற்கு மேல் கோபத்தை இறுக்கி வைக்க முடியாத அகிலா செந்தூரன் ஊட்டி விட சாப்பிட்டவர் அவனுக்கும் ஊட்டி விட்டார். எப்படியோ அந்த பிரச்சனை கொஞ்சம் கற்பூரம் போல கரைய ஆரம்பித்தது. ஆறப் போடப்பட்டது செம்பருத்தி அங்கும் இங்கும் உலாத்திக் கொண்டிருக்க, வெறும் தட்டோடு செந்தூர பாண்டியன் வெளியே வரவும், அப்பாடா என்று பெருமூச்சை விட்டுப் படி ” அண்ணா வா நீ சாப்பிடு என்று அழைக்க, அம்மாவே ஊட்டி விட்டுட்டாங்க என்று செந்தூரன் சிரித்துக் கொண்டே கூறினான்.
இதுக்கு தான் செம்பருத்தி வேணும்ங்கிறது. அதுக்கு தான் உன்ன கூப்பிட்டேன் என்று அவள் கூறிக்கொண்டே சமையலறை சென்றாள்.
செந்தூரப் பாண்டியனுக்கு மனதில் இவ வீட்டுக்காக வேலை செஞ்சுகிட்டும், அம்மாவை பார்த்துகிட்டு இருந்தா, பாப்பாவுக்குண்ணு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கே! அதனால நல்ல இடத்துல இவளை கட்டிக் கொடுக்கணும். அதுக்கு இன்னைக்கே மேட்ரிமோனியல் போகணும் என்று திருமண தகவல் மையம் சென்று செம்பருத்திக்காக வரன் பார்க்க சென்றான்.
வருவான்.
EPISODE – 20 ( செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி)
செந்தூரப் பாண்டியன் டவுனுக்கு சென்று செம்பருத்தியின் விவரங்கள் அனைத்தையும் மேட்ரிமோனியில் பதிவு செய்தவன் அதன் கூடவே தானாவதி குழுக்களில் அனைவரிடமும் விவரங்களை கொடுத்தான்.
செம்பருத்தியின் புகைப்படத்தை பார்த்த தரகர் ஒருவர், “பார்க்க லட்சுமி கடாட்சமா இருக்காங்க! உங்க தங்கச்சிய நல்லா பாத்துக்குற குணமான மாப்பிள்ளை மாதிரி அவங்களுக்கு ஏத்த ஜோடியா நிச்சயமா கிடைக்கும். சொல்ல போனால் வீடு தேடி வரும். நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க” என்று தரகர் கூற, ” என் தங்கச்சிக்கு எல்லாமே குறைவில்லாமல் நிறைவா செஞ்சு அனுப்புவேன். அதனால் என் தங்கச்சியை நல்லா பார்த்துக்கிறேன் மாப்பிள்ளை தான் வேணும். அப்படி இருந்தா கொண்டு வாங்க முக்கியமா என் தங்கச்சிக்கு யாரை பிடிக்குதோ! அவங்க கிட்ட அடுத்து மேற்கொண்டு பேசிக்கலாம்” என்று கூறிவிட்டு அவன் கிளம்ப கிளம்பலாமா
அந்த நேரம் கடைத்தெருவில் ஒரு பேன்சி ஸ்டோரிலிருந்து சார்ட் , கலர் பென்சில்ஸ், ஸ்கெட்ச் என அனைத்தையும் வாங்கிக்கொண்டு மீனாட்சி வெளியே வரவும் செந்தூரப் பாண்டியன் வரவும் சரியாக இருந்தது. இருவரும் பார்த்துக் கொண்டு மென்னகை சிந்தினார்கள். என்ன இந்த பக்கம்? என்று செந்தூரன் கேட்க, “நான் வேலை செய்ற ஸ்கூல்ல ஆனுவல் டே வரப்போகுது அதுக்கு கொஞ்சம் சார்ட் வொர்க் இருக்கு. அதான் வாங்குவதற்க வந்தேன்” என்றாள்.
“அப்படியா” என்றவன் அவளையே பார்க்க, “என்ன இந்த பக்கம் மைனர் மாதிரி கிளம்பியாச்சா?”என்று மீனாட்சி கேட்க, “ஆமா இங்க மேட்ரிமோனியல்ல சின்ன வேலை அதான் வந்தேன்” என்றான் செந்தூரன்.
“அப்படியா” என்றவள் கண்களில் ஏதோ ஒரு ஏக்கம் தெரிந்தது. ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. “அப்போ இவனுக்கு பொண்ணு பார்க்க இவனே வந்து பதிவு பண்ணிருக்கான். மாற்றிமோனில தான் பார்த்து கட்டனுமா? ஏன் இந்த பக்கத்து ஊர் பொண்ணு எல்லாம் கண்ணுக்கு தெரியாதா?’ என நினைத்தவள். “சரி எனக்கு பஸ்ஸுக்கு நேரம் ஆகுது அப்புறம் பார்ப்போம்” என்று நகர்ந்தாள்
“க்கும் தங்க மீனாட்சிய நான் கூட டிரா பண்ணுவேன். புதூரை தாண்டி தான் பனையூர் இருக்குது” என்று செந்தூரன் கூற, “இனி வண்டியில் வரது சரியா இருக்காது.” என்று அவள் வெளிப்படையாக கூறிவிட்டு நடந்தாள். “இனி தான் எல்லாம் சரியா நடக்குற ஃபீல் இருக்கு! ஏன் என்னாச்சு? அன்னைக்கு வந்தீங்க தானே இன்னைக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டான்.
“அன்னைக்கு எனக்கு உதவி தேவைப்பட்டது. உங்க கூட வந்தேன். இன்னைக்கு என்னால தனியா போக முடியும். அதேபோல இனிமே உங்க கூட வருது சரி இருக்காதுன்னு தோணுது.” என்று அவள் விறுவிறுவென நடக்க, “காரணம் என்னன்னு சொல்லிட்டு போங்க மீனாட்சி” என்று அழைத்தான்.
“வேற என்ன காரணம்? உங்களுக்கு தான் கல்யாணம் ஆகப் போகுதே. அப்போ உங்களோட பொண்டாட்டி I meant நாளைக்கு வரப்போறவ கிட்ட என்னை சேர்த்து யாராவது தப்பா சொல்லிட்டா? அதுக்கு தான்” என்று மீனாட்சி கூறினாள்.
“என்ன? எனக்கா? பொண்டாட்டி வர போகுதா?” என்று செந்தூரப் பாண்டியன் திடுக்கிட்டு பார்க்க, “ஆமா நீங்க தானே இப்ப சொன்னீங்க! உங்களுக்கு மேட்ரிமோனில பொண்ணு பாக்க வந்திருக்கேன்னு!” என்று மீனாட்சி கூற, “மக்கு மீனாட்சி” என கன்னக்குழி ததும்ப சிரிப்பை அடக்கியவன். “ஆமா கரெக்ட் தான்! பரவால்ல ஆனால் அப்படி சந்தேகப்படுற பொண்ண நான் கட்டிக்க மாட்டேன். நீங்க வரலாம் நான் டிரா பண்றேன்” என்றான் செந்தூரப் பாண்டியன்.
அது ஒத்து வராது. நீங்க உங்க வேலைய பாத்துட்டு போங்க என்று மீனாட்சி தட்டிக் கழித்தாள். “அப்போ எனக்கு வரப்போற பொண்டாட்டிக்கு தப்பான எண்ணம் இல்லை. உங்களோட மனசுல தான் தப்பு இருக்குன்னு தோணுது” என்று கூறினான் செந்தூரன்.
என்ன? என்று அதே இடத்தில் நின்றவள் விடுக்கென அவனைத் திரும்பிப் பார்க்க, “ஆமா நீங்க தானே வரலைன்னு சொன்னீங்க. அப்போ உங்ககிட்ட தான தப்பு இருக்கு.” என்றான்.
என்கிட்ட என்ன இருக்கு? என்கிட்ட எந்த தப்பும் இல்லை என்று கூறினாள் மீனாட்சி.
அப்படியா அதை நிரூபிச்சு காட்டுங்க என்று செந்தூரன் கேட்க, என்ன நிரூபிக்கணும்? எதுக்கு நிரூபிக்கணும்? என்று மீனாட்சி மூக்குப்புடைக்க பேசினாள்.
அப்பப்பா எதுக்கு இத்தனை கோபம்? கொஞ்சம் காம் டவுன் என்றவன். ” இப்போ என் கூட பைக்ல வரதுக்கு மேடம்க்கு என்ன? நான் உங்களை ஊருக்கு கடத்திட்டு போக மாட்டேன்! நீங்களே விருப்பப்பட்டு வரலாம்”என்று கூறினான்.
என்ன? என்று மீனாட்சி கேட்க, சும்மா சொன்னேன் வாங்க என்று அழைத்தான்.
அவள் தயங்கியபடியே நின்று கொண்டிருக்க, “அப்போ உங்க மனசுல என் மேல…”என்று செந்தூரன் சொல்ல.. “வரேன்” என்று கூறியவள். அவனுக்கு முன்னால் இரண்டு கட்டை பயை வைத்துவிட்டு, வண்டியில் ஏறிக்கொண்டவள். இருவரும் மோதி உரசாமல் இருக்க இடையில் அவளது கை பையை வைத்தாள்.
“அவ்வளவு உஷாரா அடியே!” என்று செந்தூரன் மனதில் நினைத்துக் கொண்டு வண்டியை கிளப்பினான்.
எப்பொழுதும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பவள். இன்று அமைதியாக வர, “என்னாச்சு மேடம் இன்னைக்கு ரொம்ப அமைதியா வரீங்க? நிசப்தம் பிராண சங்கடமா இருக்கு!”என்று கூறினான் செந்தூரன் பேச, “நமக்குள்ள பேச என்ன இருக்கு? அதனாலதான்… அண்ட் நீங்க ரோட்ட பார்த்து ஓட்டுங்க” என்று அதட்டினாள் .
“சரிதா அப்புறம் உங்கள பாத்தா ஓட்ட முடியும்? என்று கண்ணாடியில் அவளை பார்த்துக்கொண்டே வண்டியை ஓட்டினான். முகத்தில் அத்தனை ஏக்கமும் , கோபமும் கொட்டி கிடந்தது. கூடவே மீனாட்சியின் முகம் உப்பி இருந்தது.
கன்னம் இரண்டும் சர்க்கரை தடவிய பன் போல இருக்க, இனிப்பான உதடுகள் இரண்டும் ஈரப்பதத்துடன் இருந்தது. கண்களில் கோபம். புருவம் எப்பொழுதுமே சுருக்கி கொண்டு தான் இருப்பாள் போல.. நெற்றியில் கோபத்திற்கான சுவடுகள். முடி நீளம் தான் செம்பருத்தி போல, மொத்தத்தில் தண்ணீர் தெளிக்கபட்ட பன்னீர் ரோஜாவை போல தளதளவென்று இருந்தாள் மீனாட்சி.
“உஃப்” என கீழ் உதட்டை கடித்தபடியே அவளை கண்ணாடியில் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு ஓட்டினான் செந்தூரன்.
அவள் அமைதியாக இருப்பது ஏதோ புயல் அடித்து ஓய்ந்தது போல தோன்றியது. உடனே பேச்சு கொடுக்க ஆரம்பித்தான் செந்தூரன். எனக்கு வரப்போற பொண்டாட்டி எப்படி இருக்கணும்னு சொல்லட்டுமா? என்று கேட்க, “எனக்கு அந்த ஜி. கே எல்லாம் வேண்டாம்” என்று கூறிவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள் மீனாட்சி.
“அப்படியா சரி வேணாம்னா விடுங்க” என்று சாலையில் கவனம் செலுத்தினான். சிறிது நேரம் கழித்து “சரி எப்படி இருக்கணும் சொல்லுங்க” என்று மீனாட்சி கேட்க, அப்படி வாடி என செந்தூரனின் கன்னக்குழி தெரிய சிரித்தான். “இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க? நான் அப்படி என்ன காமெடியா கேட்டேன்?”என்று மீனாட்சி கேட்க, இல்ல நான் எனக்கு வரப்போறவள நினைச்சு சிரிச்சேன். என்றான்.
“ஓ அப்படியா?” என்று பற்களை கடித்துக் கொண்டே கேட்டாள் மீனாட்சி.
“எனக்கு வரப்போற பொண்ணு. என்ன பாத்துக்கிறதை விட என் தங்கச்சியை பார்த்துக்கணும். அதுதான் என்னோட முதல் கண்டிஷன்” என்று கூறினான்.
அடேங்கப்பா உங்களுக்கு தங்கச்சி வேற இருக்கா என்று மீனாட்சி கேட்க, “ஏன் உங்களுக்கு என்ன பத்தி தெரியாதா நான் யாருன்னு தெரியாதா?” என்று வண்டியை நிறுத்தினான். “அய்யோ” என முட்டை கண்களை படபடவென்று உருட்டியவள். “அது தெரியும் ஆனா தங்கச்சி இருக்கிற விஷயம் தெரியாது. திருவிழான்னு வருடத்தில் ஒருமுறை சாமி வீதி உலா வந்து மக்களுக்கு தரிசனம் கொடுப்பாங்க. ஆனா ஒரு தடவை கூட உங்களோட தங்கச்சி வெளிய வந்த நான் பார்த்ததே இல்லையே!” என்று மீனாட்சி கூற, ” பரவாயில்லையே என்ன விட என் தங்கச்சியை நிறைய தான் தெரிஞ்சு வச்சிருக்கீங்க” என்று செந்தூரன் வாரினான்.
“அய்யய்யோ இவன்கிட்ட வாயை கொடுத்து நம்மளே உண்மையை உளறிடுவோமோ பேசாத மீனாட்சி” என்று சொல்லிக் கொண்டாள்.
அதன் பின் பயணம் அமைதியாக செல்ல, மீனாட்சி இறங்கும் இடம் வந்தது ரொம்ப தேங்க்ஸ் என்ற உதட்டை சுழித்துக் கொண்டே கூறிவிட்டு அவளது பொருட்களை எடுத்துக்கொண்டு நகர, “பயப்பட வேண்டாம் நான் பொண்ணு பாக்க போகல என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்க போனேன்.. ஆனால் வரும்போது பொண்ணோட வந்தேன்.” என்று கூறிக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
“நான் எதுக்கு பயப்படனும்?” என்று இதயம் படபடக்க அவனைத் திரும்பி பார்த்தவள். “பொண்ணோட வந்தீங்களா?” என மீனாட்சி திடிக்கெட்டு கேட்க, “ஆமா எப்பயோ பார்த்தாச்சு பொண்ணோட தான் திரும்பி வந்துருக்கேன்.”என்றவன் நகர, ”அய்யோ கொஞ்சம் தெளிவா சொல்லிட்டு போறீங்களா? உங்க வருங்கால மனைவி எப்படி இருக்கான்னு சொல்லுங்க? நானும் பாத்துக்குறேன்” என்று பற்களை கடித்துக் கொண்டே கேட்டாள் மீனாட்சி.
“சொல்லியே ஆகணுமா?” என செந்தூரன் கேட்க, “இல்ல முகத்தை பார்த்தே ஆகணும்” என்றாள்.
“ ஓ என்னோட பொண்டாட்டி மேல மேடம்க்கு என்ன அவ்ளோ ஆர்வம்?”என்று கேட்டபடியே வண்டியை ஆப் செய்தான். “சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான்” என்று மீனாட்சி சொல்ல, “ம்ம் கூட்டிட்டு போய் காட்டுறேன் வாங்களேன் போலாம்” என்று அழைத்தான்.
“நான் நான்லாம் வந்து நேர்ல பார்க்க மாட்டேன்.” அட பரவாயில்ல வாங்க. அவ கொஞ்சம் கோபக்காரி தான் ஆனா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு என்று கூறியவன். வாங்க என்று செந்தூரன் அழைக்க, “என்ன விட எவ அழகாக இருக்கிறான்னு நானும் பார்க்கிறேன். எதுக்கு அன்னைக்கு கோல்ட் பிஷ்ன்னு என்கிட்ட சொல்லிட்டு போனான்?” என நினைத்தவள். அமைதியாக அவனுடன் சென்றாள்.
வாய்க்கால் பக்கம் அழைத்துச் சென்றவன். “இங்கே தண்ணி பக்கம் வாங்க” என்று அழைத்தான். “எங்க? இங்கே உங்க future பொண்டாட்டி துணி துவைக்கிறாளா?” என்று மீனாட்சி கேட்க, “இங்க வாங்க அவ குளிச்சிட்டு இருக்கா!” என்றான் செந்தூரன்.
மீனாட்சி அவனை முறைத்துப் பார்க்க அட “வாங்க” என்று கையைப் பிடித்து இழுத்து வந்தவன் தண்ணீரில் அவளை பார்க்குமாறு சொல்லி “இதோ என் பக்கத்துல ஜோடியா எனக்கு நெருக்கத்துல இருக்காளே! அவ தான் நான் கட்டிக்க போற பொண்ணுன்னு நான் பிக்ஸ் ஆயிட்டேன். நீ!” என அவளின் முகத்தை பார்த்தான் செந்தூரன்.
மீனாட்சி…?
வருவான்
EPISODE – 21 ( பதில் சொல்லிட்டு போ மீனாட்சி)
“தெரியுறாளா?” என செந்தூரன் கேட்க, “எங்கே ஒண்ணுமே தெரியலையே?” என தண்ணீருக்குள் எட்டி பார்த்துக் கொண்டே கூறினாள் மீனாட்சி.
“தெரியலையா? நல்லா பாரு! தெரியும் ” என புன்னகையுடன் மீண்டும் மீண்டும் கூறினான் செந்தூரன். மீனாட்சி கைப்பையை கழட்டி அவனிடம் கொடுத்துவிட்டு கொஞ்சம் குனிந்து “தண்ணிக்குள்ள உள்நீச்சல் அடிக்குதா நீங்க கட்டிக்க போற பொண்ணு! எனக்கு ஒண்ணுமே தெரியலையே” என்று சுற்றிலும் முற்றிலும் தேடினாள்.
“மேலே வா இப்போ காட்டுறேன். வா வா!” என கைகளை பிடித்தான். “ப்ச் அப்படியே சொல்லுங்க! அப்புறம் உங்க ஃபியான்சே பார்த்தால் தப்பா நினைச்சுக்கும்” என ஏறி வந்தாள்.
அட வாமா என கிடுக்கு பிடி கொடுத்து இழுத்தான். என்ன பண்றீங்க? என அவள் நகர, “இதோ என் பக்கத்துல, எனக்கு ஜோடியா, நெருக்கத்துல இருக்காளே! என்றவன் முகம் மீனாட்சியின் பக்கம் திரும்பி ” gold fish -அ தான் நான் கட்டிக்க போற பொண்ணுன்னு பிக்ஸ் ஆயிட்டேன்! ஆனால் நீ?” என அவளின் முகத்தை பார்த்தான் செந்தூரன்.
“நா.. நானா?” என கண்களில் ஒரு வித வியப்புடன் பார்த்தாள் மீனாட்சி. ம்ம் நீயே தான் என கண் சிமட்டினான். அழகாக ஏன் பெண்ணென்று பிறந்தோம் என்று நினைத்தவளுக்கு அதற்கான காரணம் இன்று கிடைத்து விட்டது போல ஒரு பெண்ணாக அவளின் உள்ளத்தில் செந்தூரன் சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் ஆக்சிடோசின் செரடோனின் காதல் ஹார்மோன்களை ஒரு நிமிடத்தில் உடலெங்கும் சுரந்தது என்று சொல்லலாம்.
மீனாட்சியின் கன்னங்கள் சிலிர்த்து எழுந்து கொள்ள, பட்டாசு போல வெடிக்கும் அவளின் வாய் இப்பொழுது தந்தி அடிக்க தொடங்கியது. இவன் உண்மையை தான் சொல்கிறானா? இல்லை பொய் சொல்கிறானா? என புரியாமல் விழித்தாள். தன் முன் நிற்பவன் எவ்வளவு பெரிய ஆள்? வீரம் பொருந்திய ஆண்மகன். அவனது முகத்தை காணவும் எட்டத்தில் இருந்து பார்க்கவும் கூட ஒரு தகுதி வேண்டும். அந்த அளவுக்கு எட்டாத தூரத்தில் இருப்பவன் செந்தூரன்.
இவனை யாருக்கு தான் பிடிக்காது. கம்பீரமான கண்கள் அதன் கூடவே கனிவும், கூர் நாசி, முரட்டு முறுக்கி விட்ட மீசையை சுமந்திருக்கும் இரு தடித்த உதடுகள். அடர்த்தியான கேசம், அழகான நெற்றி, நெருக்கமான ஒட்டிய புருவம் என அத்தனையும் இருந்தும் அவளது மனம் விழ சொல்லி அடம் பிடிப்பது என்னவோ அவனது கண்ணகுழியில் தான். உருண்டு திரண்ட உடலமைப்பு கிரேக்க சிற்பம் போல தன் எதிரில் நின்று தன்னை பிடித்திருக்கிறது என சுற்றி வளைத்து இப்பொழுது open statement விட்டுவிட்டு நிற்கிறான்.
ஹலோ டீச்சர்? என்ன அப்படி பார்க்கிறீக என்னோட விருப்பத்தை நான் சொல்லிட்டேன். நீங்க என கொஞ்சிய கண்பார்வை, குழைந்த பேச்சுடன் அவளை நோக்கினான் செந்தூரன். அத்.. அது.. அது வந்து நீ.. நீங்.. நீங்க சொன்னது எனக்கு புரியல. நேரம் ஆகுது நான் போறேன் என அவள் நகர, வெடுக்கென கையை பிடித்து அவன் பக்கம் இழுத்தான் மீனாட்சியை.
“என்ன பண்றீங்க? கைய விடுங்க!” என தயக்கமான குரல். மீனாட்சியிடம் இருந்து வந்தது. ப்ச் பதில் சொல்லிட்டு போ மீனாட்சி! ஆமா இல்ல எதுவும் சொல்லு இப்படி அவாய்ட் பண்ணிட்டு போகாத! என மெல்ல மெல்ல செந்தூரன் அவளை இழுத்தான். அவனது பிடிக்கு மெதுவாக நகர்ந்தாள்.
சொல்லு என குரல் மெதுவாக ஒலித்தது. “இல்ல இது ஒத்து வராது” என கூறினாள். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. உனக்கு என்னை பிடிச்சிருக்கா? அந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு வேற எதுவும் பேச வேணாம். Say yes or no என தெளிவாக இருந்தான் செந்தூரன்.
பிடிக்கல என மீனாட்சி முகத்தை திருப்பி கொண்டு கூறினாள்.
ஓகே என அவளின் கையை விட்டு விட்டான் செந்தூரன். இது பச்சை பொய் என நன்றாகவே அவனுக்கு தெரியும். அதற்கும் மேல் என்ன பேச முடியும். ஆனால் மாற்றம் என்று ஒன்று இருக்கிறதே! மெதுவாக நடந்தவள் திரும்பி பார்க்காதே என சொன்ன மூளையை மூலைக்கு தள்ளி விட்டு திரும்பி பார் என கட்டளையிட்ட மனதுக்கு கட்டு பட்டு ஒரே ஒரு முறை செந்தூரனை பார்த்தாள் மீனாட்சி.
அவன் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். கண்களை பட படவென உருட்டியவள் வேகமாக ஓடி விட்டாள். அவள் சென்றதும் உதட்டில் கன்னகுளி தெரிய புன்னகையை உதிர்த்தான். மீனாட்சி வேண்டாம் என சொல்லி விட்டால் அப்படியே விட்டு விடுவானா என்ன? படையெடுத்து பாண்டியனின் குலவாக மீனாட்சியை பற்றுவான் செந்தூர பாண்டியன்.
மீனாட்சி என் மனதில் திரும்பத் திரும்ப செந்தூரன் தன்னிடம் விண்ணப்பித்த அந்த காதல் மனுவே ஓடிக்கொண்டிருந்தது. ஏன் பிடிக்காதுன்னு சொன்னாள்? காரணம் இல்லாமையா? ” ஏற்கனவே தன்னோட அத்தை அந்த வீட்டுக்கு செந்தூரனோட அப்பாவ இரண்டாவதா திருமணம் செஞ்சு, அதுவே இப்போ முடியல, அப்படி இருக்கும் போது அகிலாண்டேஸ்வரிக்கு செந்தூரனது காதல் விவகாரமும், அவன் காதலிக்கிற பொண்ணு வள்ளியோட அண்ணன் பொண்ணுன்னு தெரிஞ்சா? என்ன நடக்கும்? அந்த அம்மா கொல்ல கூட தயங்காது. தன் கண்ணு முன்னாடியே செம்பருத்தி எவ்ளோ வேதனையும் கொடுமைகளையும் அனுபவிக்கிறா? இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அதைவிட பன்மடங்கு வீரியமிக்கது “சொல்லடி” ஆம் ஒவ்வொரு வார்த்தையா குத்தி கிழிச்சு, அவளையே அந்த அளவுக்கு கஷ்டப்படுத்தும் அந்த வீட்ல, நான் கல்யாணம் பண்ணிக்கணுமா என்கிற எண்ணம் தான் ஓடிக்கொண்டிருந்தது. தனிப்பட்ட முறையில் செந்தூரப் பாண்டியனை அவளுக்கும் பிடிக்கத்தான் செய்தது. பார்த்த முதல் தடவையே விழுந்துவிட்டாள் மீனாட்சி. இப்பொழுது தான் அவளுக்கு தெரிகிறது.. தன்னோட அத்தை வள்ளி அந்த பருவ வயதில் ராஜபாண்டியனின் மீது காதல் கொண்டதில் தவறு ஒன்றும் இல்லை என்று தோன்றியது. மீனாட்சிக்கு.
இங்கே செந்தூரன் எந்த ஒரு கவலையும் இன்றி வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு மீனாட்சி சொன்னதில் பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது எதிர்பார்த்த பதில் தான் என ஏற்கனவே நினைத்தான். அதற்குக் காரணம் வள்ளி சின்ன வீடாக ஊரார் தூற்றும் வகையில் இருந்த, அந்த வீட்டுக்கு திருமணம் செய்து கொண்டு வர எந்த பொண்ணும் யோசிப்பாள். ஆனால் செந்தூரப் பாண்டியன் இதுவரை பார்த்த பெண்களிலேயே மீனாட்சி மிகவும் வித்தியாசமானவள். பணமோ, பகட்டோ, அழகோ என எந்த ஒரு விஷயத்திலும் அவள் ஈர்க்கப்படவில்லை. அதாவது செந்தூரனிடம் வழிந்து போய் பேசி அவனிடம் காரியத்திற்காக எதையும் செய்ததே கிடையாது. அந்த வகையில் அவன் மிகவும் ஈர்க்கப்பட்டான்.
இதையே நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் யோசனையில் “ஓ ஸ்கூல்ல ஆனுவல் டே ஃபங்ஷன் வருதா? அங்க போய் ஒரு அட்டெண்டன்ஸ்ச போட்டுடனும்! நான் போய் லவ்வ சொல்லி என்னை நீ வேண்டாம்னு சொன்னல்லடி. இந்த தடவை நீயா வந்து எஎன்னை லவ் பண்றேன்னு சொல்லுவ! ம்ம் கண்டிப்பா சொல்ல வைப்பேன். அப்படி உன்ன சொல்ல வைக்கல… நான் செம்பருத்தியோட அண்ணன் செந்தூரப்பாண்டியன் இல்லடி” என்று மீசையை ஆளுமையாக முறுக்கி விட்டபடி அவனது வேலையை ஆரம்பித்தான்.
மீனாட்சி டீச்சராக பணிபுரிந்து கொண்டிருக்கும் அந்த தனியார் பள்ளியில், சில கட்டுமான பணிகள் மற்றும் ஆண்டு விழா நடத்துவதற்கான நன்கொடை கொடுக்கிறோம் என்ற பெயரில் தன்னை பள்ளியின் தாளாளருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டான் செந்தூரன். அவருக்கு அவனைப் பற்றி தெரியாமல் இருக்குமா என்ன? “நீங்க பனையூர் செந்தூரப் பண்டியன் தான! உங்க அப்பா எங்களுக்கு நல்ல பழக்கம் கண்ணு!” என்று தாளாளர் பதிலளிக்க, ” ரொம்ப நல்லதுங்க ஸ்கூல்ல ஆண்டு விழான்னு கேள்விப்பட்டேன். பனையூரில் இருந்து கூட எங்க ஊரு புள்ளைகள் படிக்க வராங்க. அதனாலதான் வந்து ஒரெட்டு பாத்துட்டு, அப்படியே பள்ளியோட வளர்ச்சிக்கு உதவலாம்ன்னு என்று கூறினான்.
அதை கேட்ட தாளாளருக்கு மிகவும் சந்தோஷமாகி போனது. ரொம்ப நன்றிங்க. கண்டிப்பா நீங்க ஆண்டுவிழாவுக்கு வரணும். இந்தாங்க பத்திரிகை என்று அவர் அழைக்க, “அப்படியா இல்லங்க அது முடிஞ்சா வர பார்க்கிறேன். எனக்கு வேலை இருக்கு” என்று செந்தூரப்பாண்டியன் தட்டிக் கழிக்க, அதெல்லாம் இல்லங்க வந்தால் நாங்க சந்தோசபடுவோம். நீங்க ஃபுல் டே இருக்க வேண்டாம். ஜஸ்ட் ஸ்டார்ட் பண்ணும்போது ஒரு அரை மணி நேரமாவது வந்திட்டு போங்க. இது எங்களோட விருப்பம். அதனால நீங்க கண்டிப்பா வரணும் என்று அவர் வேண்டி கேட்டுக்கொள்ள..
அப்படியா வந்துட்டா போச்சு! நான் போன் பண்ணிட்டு வரேன் எனக்காக ஸ்பெஷலா எதுவும் பண்ண வேணாமுங்க என கையெடுத்து கும்பிட்டான்.
கண்டிப்பாக என அவர்களும் கையெடுத்து கும்பிட, வராங்க ரொம்ப சந்தோஷம் என்று செந்தூரப் பாண்டியன் கண்ணக்குழி தெரிய கிளம்பினான்.
இனி ஆண்டு விழாவில் சந்திப்போம்.
ஆண்டு விழாவிற்கான ஹோஸ்டிங் வேலையை செய்வது மீனாட்சி தான்… அவன் வருகிறான் என்பது அவளுக்கு இன்பதிர்ச்சி தருமா? அவள் அதை எப்படி எடுத்துக் கொள்வாள்?
வருவான்
EPISODE -22 ( உங்களை பிடிச்சிருக்கு செந்தூரா)
செந்தூரன் தனது காதலை சொல்லிவிட்டு போனதிலிருந்து மீனாட்சி ஐந்து கிலோ குறைந்திருப்பாள். அவனைப் பற்றியே நினைத்து நினைத்து வாடிப் போய்விட்டாள். அவ்வப்பொழுது செம்பருத்தி ஃபோன் செய்து அவளிடம் பேச, சுரத்தே இல்லாமல் பதில் வந்தது.
எதுக்குடி எருமை இப்படி பதில் சொல்ற? இப்போ எனக்கு போன் பண்ணவே மாட்டேன்ற? என்னாச்சு? என்று செம்பருத்தி கேட்க, அது ஒண்ணுமில்ல செம்பு. எனக்கு ஸ்கூல்ல ஆண்டு விழா நடக்குது. அதனால நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன். என்று கூறினாள் மீனாட்சி.
அப்படியா சரி அப்போ நீ உன்னோட வேலைய பாரு எனக்கும் வேலை இருக்கு என்று கூறிவிட்டு போனை வைக்கப் போக, ஹே இரு இரு அம்மா என்ன வேலை என்று மீனாட்சி ஆர்வமாக கேட்டாள்.
அதுவா அண்ணனை பார்க்க தான்! காலைல எப்பவும் என்னை பார்த்துட்டு தான் கிளம்பும். இப்போ செகண்ட் கால்ல அண்ணன் தான் வருது என்று கூற, ” அப்படியா நீ பேசு பேசு” என்று மீனாட்சி கட் செய்யப் போக, ஹே ஹே இரு இரு கட் பண்ணாத!! என அவள் வேகமாக கூறினாள். என்னாச்சு என மீனாட்சி கேட்க, “எப்பவும் எங்க அண்ணனை பத்தி பேசினா அப்படியே கொத்து சேவல் மாதிரி சண்டைக்கு வருவ? இன்னிக்கு உனக்கு என்னாச்சு? எங்க அண்ணனை திட்டவே இல்லை என்ன? நல்லவளா மாறிட்டியா? என்று கேட்டாள். செம்பருத்தி.
அடியே வந்தன்னா வச்சுக்க காதையும் மூக்கையும் அறுத்து காக்கைக்கு போட்டுவிடுவேன். என்று மீனாட்சி மிரட்டினாள். “போடி பொசகெட்டவளே! நான் எங்க அண்ணன் கிட்ட பேசுறேன்” என்று கட் செய்து விட்டாள் செம்பருத்தி.
“ஐயோ எப்ப பாரு இவனோட நினைப்பாவே இருக்கே? நான் என்ன பண்ணுவேன்? ஒரு வேலை சரின்னு சொல்லி இருக்கலாமோ? இல்ல இல்ல வேண்டாம். ஏன் வேண்டாம்னு சொன்ன? உனக்கு தான் அவன புடிச்சிருக்கே?” என்று இன்னொரு மனம் சொல்ல, “டேய் செந்தூரப்பாண்டியா! இதுக்கெல்லாம் காரணம் நீதாண்டா!” என்று முணுமுணுத்துக் கொண்டவள். வேகமாக பள்ளிக்கு தயாரானாள்.
அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரவாரமாக ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளுடன் அனைத்தும் தயாராக இருக்க, மீனாட்சி பரபரப்பாக சுற்றித்திரிந்தாள்.
எல்லாரும் வந்தாச்சுல்ல என அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டு நின்றாள் மீனாட்சி. அந்த நேரம் அவசரமாக வந்தாள் மலர்கொடி. மீனாட்சியுடன் பணி புரியும் சக ஆசிரியை. “ஹே மீனாட்சி இந்த நிகழ்ச்சி நிரலில் இந்த பேரை ஆட் பண்ணிக்கோ இவங்களுக்கு ஒரு இன்ட்ரொடக்சன் கொடுத்திடு!” என்று ஒரு பேப்பரை நீட்டினாள்.
யார் இவங்க? என்று மீனாட்சி திறந்து பார்க்க, அதில் செந்தூரப் பாண்டியன் எனவும் (டொனேஷன்) நன்கொடை வழங்கியவர் என்று இருக்க, இது எப்போ நடந்தது? இவன் எப்ப வந்தான்? என்று அதிர்ச்சியுடன் உள்ளுக்குள் ஓடியது.
மலர்கொடி கண்கள் வெளியே வர “ஹே யாருன்னு தெரியும் தானே செந்தூரப் பாண்டியன்டி! இந்த வருஷம் பனையூரில் நடந்த கபடி போட்டியில், புதூர்காரன் கர்ணனோட காலை உடைச்சாரு. அப்படியே கபடி கபடின்னு சொல்லிட்டு அப்படியே தொடைய தட்டிட்டு மைதானத்தில் ஆடும் போது அந்த ஃபயர் இருக்கே? வேற லெவல் தெரியுமா? எவ்ளோ அழகா கம்பீரமா இருந்தாப்ள மனுசன் என பெரு மூச்சை விட்டவள். எவழுக்கு கொடுத்து வச்ச்சிருக்கோ!” என வெளிப்படையாக கூறினாள்.
மலர்க்கொடி செந்தூரனை பற்றி வர்ணித்து சொல்ல சொல்ல மீனாட்சிக்கு உள்ளுக்குள் நெருப்பாக கனன்று கொண்டிருந்தது. “எப்படி? இவள் செந்தூரனை வர்ணிக்கலாம்? அன்னைக்கு செம்பருத்தி அவ்வளவு தூரம் கபடி போட்டிக்கு வான்னு கூப்பிட்டாலே! நான் போகாம போயிட்டேனே! இந்த அளவுக்கு அங்க களத்துல ஆடி இந்த சிரிக்கிங்களோட மனசுல வலுவா பதிஞ்சு போயிட்டானே! செல்லாது செல்லாது அவன் என்னவன்.”என்று ஒரு பக்கம் சொல்லத்தான் செய்தது. “நீ எப்படி உரிமை கொண்டாட முடியும்? அதுதான் வேண்டாம்னு சொல்லிட்டல்ல இவ மட்டுமா வர்ணிப்பா? இங்க இருக்கிற அத்தனை டீச்சரும் வச்ச கண்ணு வாங்காம அவன தான் பாப்பாங்க. ஏன்னா இங்க இருக்கிற ஆளுங்களையே கம்பீரமானவன் அவன் மட்டும் தானே!” என்று மனமும் சேர்ந்து கூற சோர்வாகி போனாள்.
என்னடி பேந்த பேந்த முளிக்கிற? கரெக்டா பேசிடுவ தானே ஏன்னா மொத்த கூட்டத்திலும் நீதான் உன்னோட குரல் தான் ஒலிக்கும். பேசாம இந்த ஹோஸ்டிங் எனக்கு கொடுத்துடுறியா? நான் பண்ணட்டுமா என்று மலர்கொடி கேட்க, தாராளமா பண்ணு வாங்கிக்கோ! என்று நீட்டினாள்.
அய்யோ வேணா வேணா ஹெட் மாஸ்டருக்கு கம்பீரமா பேசுறவங்க தான் இதுக்கு செட்டாவாங்க. என்ன பண்றது? என மலர்க்கொடி பொறாமையில் கூறினாள்.
அடுத்தடுத்து மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் சிறப்பு விருந்தினர் என அனைவரும் தயாராக இருக்க, செந்தூரப் பாண்டியனும் மெதுவாக வந்து சேர்ந்தான். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் ஆண்டு விழா ஆரம்பமானது. மீனாட்சி அழகாக விழாவை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தாள். தலைமை ஆசரியர் , சிறப்பு விருந்தினர் என அனைவரும் சிறப்புரை ஆற்றி கொண்டிருக்க,
செந்தூரப் பாண்டியனின் கண்கள் அவளை ஒரு நொடி கூட பார்க்கவே இல்லை தன் கழுத்து செயினை முறுக்கி வாயில் கடித்த படி “என்னை பாக்கவே மாட்டின்றான்! அப்போ நான் வேணாம்னு சொன்னதும், என்னை தூக்கி போட்டுட்டானா? என்னை மறந்துட்டானா? ஐயோ என்று பெருமூச்சு விட்டபடி, அவள் திரும்பிப் பார்க்க, அங்கிருக்கும் ஆசிரியர்கள் அவர்களுக்குள் சிரித்தபடி சத்தம் இல்லாமல் செந்தூர பாண்டியனை பார்த்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் அருகில் சென்றவள். “என்ன அங்க வேடிக்க கையை நீட்டி நீட்டி பேசிட்டு இருக்கீங்க? என்று அதட்டலுடன் கேட்டாள். “என்னமோ பேசுறோம் பாத்தியா மனுஷன்! எப்படி இருக்காருன்னு? இந்த பக்கம் திரும்பவே இல்லையே! பொண்ணுங்கன்னா அவருக்கு shyயோ என்னவோ. ஆனால் பார்க்க பார்கக பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு” என்று ஒருத்தி கூற, மற்றொருவளோ “அன்னைக்கு கபடி போட்டியில் என ஆரம்பிக்க, அய்யய்யோ இவளுங்க கண்ணெல்லாம் நோண்டி போடணும். என்று வேகமாக போனை எடுத்தவள் சென்பருத்திக்கு அழைக்கும் நேரம். ஹே என மலர் கொடி அதட்டி கொண்டே உன்னை ஹெட் மாஸ்டர் பாக்குறாங்க! போ! என்று கூறினாள்.
உடனே மீனாட்சி அடுத்தடுத்து நன்கொடையாளர்கள் மற்றும் திறப்பு விருந்தினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடந்து கொண்டிருக்க, இப்பொழுது இதயம் வேகவேகமாக துடிக்க ஆரம்பித்தது செந்தூரப் பாண்டியன் M.B.A அவர்கள் நமது பள்ளிக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார் அவரை அன்புடன் மேடைக்கு அழைக்கிறோம் என பார்த்துக் கொண்டே அழைத்தாள்.
அதே கம்பீரத்துடன் மேடைக்கு வந்தவன் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு வணக்கம் சொன்னபடி சால்வையை வாங்கிக் கொண்டான். மீனாட்சி வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு ஓர கண்ணால் அவனை பார்த்தாள். ஆனால் செந்தூரப் பாண்டியன் பார்வை துளி கூட அவள் மேல் படாமல் இருக்க அவன் கிளம்பி விட்டான்.
ஆண்டுவிழா முடிந்து அனைவரும் செல்ல மணி 9 தொட்டது. வழக்கம் போல இன்றும் பேருந்துக்காக காத்திருந்தாள். அவள் பேருந்தில் ஏறும் நேரம் தொலைவில் செந்தூரப் பாண்டியனின் இருசக்கர புல்லட்டை பார்த்தாள். மடை திறந்து பாயும் நதியாக எண்ணங்கள் தறிகெட்டு ஓட, உணர்ச்சி பெருகியது. அனைவரும் பேருந்தில் ஏறிக்கொள்ள, புதூரம்மா வரலையா என கண்டெக்டர் கேட்டார். போயா! என முறைத்து கொண்டே கூறினாள்.
உன்னை கூப்பிட்டேன் பாரு! என நடத்துநர் அவளை வசை பாடி கொண்டே விசில் ஊதினார்.
வருவானா? என்ன கூப்பிடுவானா? என்று அவள் இதயம் தடக் தடக் என ரயில் போல ஓடியது. ஆனால் செந்தூரனது கடைக்கண் பார்வை கூட அவள் பக்கம் திருப்பாமல் நேராக சென்று விட்டான்.
இதற்கு மேல் பொறுமை இழந்தவள் “டேய் செந்தூர பாண்டியா” என்று கத்தினாள்.
அவனுக்கு கேட்டிருக்கும் என்று நினைத்தால் ஆனால் அவன் வெகு தொலைவில் சென்றிருந்தான். கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள அதே இடத்தில் நின்று அழ ஆரம்பித்தாள்.கைப்பையை இறுக்கிப்பிடித்தவள். அவன் சென்ற திசையே பார்த்துக் கொண்டிருந்தாள். புல்லட் சத்தம் எங்கோ கேட்டது. மீனாட்சியின் அழுகை மட்டும் நின்ற பாடில்லை. கர்சிப்பை எடுத்து கண்ணை துடைத்தபடி பெருமூச்சு விட்டவள். கைப்பையில் இருந்து வாட்டர் பாட்டில் எடுத்து தண்ணீர் குடித்துவிட்டு நிமிரும் நேரம் அவளின் முன்னால் நாக்கை கன்னத்துக்குள் அடக்கிக் கொண்டு, காதல் பார்வையை பார்த்துக்கொண்டே, கைகளை பின்னால் கட்டிக்கொண்டு , அவள் முன் நின்றான் செந்தூரப் பாண்டியன்.
இவன் எப்படி இங்கே என்பது போல மீனாட்சி என ஒரு பக்கம் நினைத்தாலும் கோபமாக அவனை முறைத்து பார்த்தாள் மீனாட்சி.
என்னை கூப்பிட்ட மாதிரி இருந்ததே என புருவத்தை தூக்கினான். என்னை அழ வச்சிட்டல்ல போடா! என கூறிக் கொண்டே கண்களை துடைத்தாள் மீனாட்சி.
என்னை பிடிக்கலன்னு சொன்னது ஏனாம்? என அருகில் வந்து நின்றான். அவளிடம் பதிலில்லை. பதில் சொல்லு டி ஏன் வேண்டாம்னு சொன்ன? என செந்தூரன் அவளின் முகத்தை பார்த்தான்.
மீனாட்சி மெல்லிய குரலில் பிடிச்சிருந்தது. ஆனால் வேணாம்னு தோணுச்சு. ஒத்து வருமான்னு தெரியல. நீங்க வேற நாங்க வேற என்றாள்.
டீச்சர் தப்பா பேசுறீங்க. இங்கே நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம். யாரை பத்தியும் கேட்கல.. ஜஸ்ட் இப்போ இந்த நிமிடம் என்ன தோணுது உண்மைய சொல்லு என கேட்டான் செந்தூரன்.
பிடிச்சிருக்கு என வெட்கம் பூச கூறினாள் மீனாட்சி.
இந்த விசயம் அகிலாண்டேஸ்வரிக்கு தெரிந்தால் என்ன நடக்கும்?
வருவான்.
EPISODE – 23 (முதல் முத்தம்)
அவளின் முகத்தை நிமிர்த்தியவன் இப்ப சொல்லு! என்ன பாத்து சொல்லு! என்னோட கண்ண பாத்து சொல்லு! என்று மென்மையாக அவளின் கன்னத்தை செந்தூரன். அவனது கைகளை கிண்ணங்களாக்கி ஏந்தி கொண்டான். சொல்லு என்று காதலுடன் அவன் நோக்க, பிடிச்சிருக்கு செந்தூரப்பாண்டியா! உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ லவ் யூ… நான் ஒத்துக்குறேன்! என்று அழகாக வெட்கத்துடன் கூறினாள் மீனாட்சி.
இருவரும் வேறொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். செந்தூரப் பாண்டியன் அவளின் அருகில் நெருங்கி ஒட்டியவன். நெற்றியில் முதல் முத்தத்தை பதித்தான். அவளின் தேகம் சிலிர்த்துக்கொள்ள, செந்தூரனின் உதடுகளுக்கு மோட்சம் கிடைத்தது போல இருந்தது. நெற்றி முத்தத்திற்கே மூச்சு வாங்கியது மீனாட்சிக்கு. அவள் படபடக்கும் விழிகளுடன் அவனைப் பார்க்க திராணியில்லாமல் தரையைப் பார்த்தாள்.
மீனாட்சி!! கோல்டு ஃபிஷ் என்று உதட்டை கடித்து சிரித்துக்கொண்டே அவளின் முகத்தைப் பார்த்தான்.
காற்றுக்கே கேட்காத குரலில் மெதுவாக “ம்ம்” கொட்டினாள் மீனாட்சி.
மீனாட்சி என அவன் அழைக்க, இந்த முறை அமைதியாக இருந்தாள். மீனாட்சிஇஇ! என்று மீண்டும் அழைத்தான்.
ஹே என்னை பாருடிஇஇ! நிமிர்ந்து பாரு என்று அவளின் முகத்தை நிமிர்த்த, வெட்கம் பிடுங்கி தின்னது பெண்ணவளுக்கு. “மீனாட்சி ஐயோ நீ பட்டாசா இருக்கிறது தான் பார்த்திருக்கேன். ஆனால் இப்போ என் கண்ணு முன்னாடி இருக்கும் இந்த மீனாட்சி வேற மாதிரி இருக்காளே ராட்சசி! எனக்கு தெரியலையே?” என்று அவன் கிண்டலடிக்க.. அவள் சினுங்கினாள்.
மீனாட்சி என்ன பாரு என்ற வேகமாக தலையை நிமிர்த்த , அவள் நன்றாக குனிந்து கொண்டாள். “ப்ளீஸ் என்னை விடுங்க” என்று மெதுவாக பேசினாள். நீ இப்ப பார்க்கற! உன்னோட முகத்தை பார்க்காமல் விடமாட்டேன் என்று அவளை அப்படியே தூக்கிக் கொண்டான்.
அய்யோ என்ன பண்றீங்க என்று கண்களில் கண்களில் மிரட்சியுடன் பார்த்தவள். என்னை இறக்கி விடுங்க என்று துல்லினாள். என்னை பாரு என செந்தூரன் முயற்சி செய்ய, ஒரு பெருமூச்சு விட்டபடி கடை இதழை கடித்துக்கொண்ட அவனைப் பார்த்தாள் மீனாட்சி. லவ் யூ டி எனக்கு உன்ன பிடிச்சிருக்கு! எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? என்ற உற்சாகமாக கூறினான் செந்தூரன்.
சரி என்னை இறக்கி விடுங்க. நான் வீட்டுக்கு போகணும் என்று அவள் சொல்ல நானே கொண்டு வந்து விடுறேன். என இருவரும் புல்லட் நிற்கும் பக்கம் சென்றார்கள். ஆமா எதுக்கு புல்லட்டை இங்கே நிறுத்திட்டு வந்தீங்க? என்று மீனாட்சி கேட்க.. அப்ப இங்க நிறுத்தாம இருந்திருந்தா! டேய் செந்தூரப்பாண்டியா நில்லடா அப்படின்னு நீ கத்திருப்பியா என்று கேட்டான்.
அச்சோ என நாக்கை கடித்தவள். பிராடு சரியான ஏமாத்துக்காரனா இருக்கீங்க என்று அவள் சொல்ல, யாரு!! நானா? நீயா? என்று கேட்டான்.
ந … ந.. நா… நான் என்ன ஏமாத்தினேன். என்ன சொல்றீங்க? என்ன? அப்படி என்ன ஏமாத்தினேன்? என்று மீனாட்சி கேட்க, ஒன்னும் இல்லை வாடி என்று வண்டியில் இருவரும் ஏறினார்கள். இந்த முறையும் அவள் அமைதியாக இருக்க, அவளின் கையை எடுத்து வயிற்றை சுற்றி வளைத்தபடி புல்லட்டை ஓட்டினான்.
நம்ம ரெண்டு பேரும் லவ் பண்ணுவோம்ன்னு நான் நினைச்சு கூட பாக்கல என மீனாட்சி சொல்ல, “நானும் தான் நினைச்சு கூட பாக்கல. இப்படி ஒரு வாயாடி கையில வந்து சிக்கிட்டேன். என்றான் செந்தூர பாண்டியன்.
நானா ஒன்னும் யாரையும் தேடி போகல. அவங்க தான் என்ன தேடி வந்திருக்காங்க என்று மீனாட்சி கூற, ஆமா நான் தான் மீனாட்சிய தேடி வந்தேன். இப்போ என்ன? எனக்கு இதுல வெட்கமோ கூச்சமோ எதுவும் இல்லை. ஊரறிய உன்ன கை பிடிக்கணும் என்று கூறினான் அவளுக்கு நம்பிக்கை தரும் விதமாக.
அந்த நொடி மீனாட்சிக்கு பயம் பரவ அவனிடமிருந்து கையை எடுத்துக் கொண்டாள். “என்னடி ஆச்சு எதுக்கு இப்ப கையை எடுக்கிற! என்று கையை இறுக்கிப்பிடித்து வண்டியை முறுக்கினான். அவன் மேல் வந்து விழுந்து ஒட்டினாள். “ப்ச் எதுக்கு இப்படி ஓட்டுறீங்க என்று மீனாட்சி திணற, இப்ப எதுக்கு கைய எடுத்த? நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நினைக்கிறியா? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? என்று செந்தூரன் கேட்க, அது அப்படி இல்ல. நம்ம குடும்பத்துக்கு இது செட் ஆகுமா? உங்க வீடு உங்க அம்மா எல்லாம் என்று அவள் சொல்ல வர, செந்தூரன் சிரித்துக்கொண்டே “அதை பத்தி நீ எதுக்கு கவலைப்படுற? எங்க அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் தான். ஆனா ரொம்ப நல்லவங்க. எனக்கு பிடிச்சத தான் செய்வாங்க. என்று கூறினான்.
மீனாட்சி சோர்வுடன் அப்படி நீங்க நெனச்சிட்டு இருக்கீங்க. உங்க அம்மாவ பத்தி உங்களுக்கு தெரியாது. என்று மனதுக்குள் நினைத்தாள்.
அதற்குள் புதூர் வந்துவிட இன்னிக்கு ரொம்ப சீக்கிரமாவே உன்னோட வீடு வந்துருச்சு! என்று சோகமாக முடித்தான் செந்தூரன். அதை கேட்டு மீனாட்சி சிரித்துக்கொண்டவள். அதுக்கு ஏன் சோகமா முடிக்கிறீங்க? என்றாள்.
ஆமா இப்போ நீ என்னை விட்டுட்டு போயிடுவல்ல என்று செந்தூரன் சொல்ல, இங்க இருக்குது பனையூர். வெறும் 2 கிலோமீட்டர் நீங்க நெனச்சா என்னை எப்ப வேணாலும் வந்து பார்த்துட்டு போகலாம். என்று கூறினாள் மீனாட்சி.
நான் அடிக்கடி வர முடியாது மேடம். நீங்க வேணும்னா தென்னந்தோப்பு, மாந்தோப்பு பக்கம் வந்தால் என்னை பார்க்கலாம் என்று செந்தூரன் கூறினான்.
அப்போ நான் என்னோட வேலைய விட்டுவிட்டு உங்களை தேடி வரணும்னு சொல்றீங்களா? என்று மீனாட்சி சொல்ல, அம்மா தாயே சண்டையில முடிக்காதடி. நமக்கு இரண்டு பேருக்கும் பொதுவாக ஒரு இடத்தை ஃபிக்ஸ் பண்ணிக்கலாம். அங்க மீட் பண்ணலாம். ஓகேவா மேடம்? தங்க மீனாட்சி? கோல்டு ஃபிஷ்! என்ற அவன் ஆசையாக அழைத்தான்.
சத்தியமா இது நீங்கதானா? என மீனாட்சி ஆச்சரியத்துடன் கேட்டாள்.
நானே தான் அதில் என்ன சந்தேகம்? என்றவன். எங்க பக்கத்துல வா இங்க கண்ணத்தில் ஏதோ இருக்கு என்று அவன் அழைக்க, என்ன என்று மீனாட்சி அருகில் வந்தாள் .
மீனாட்சி வந்ததும். செந்தூரன் அவளை இழுத்துப் பிடித்தவன். உதட்டுடன் உதடு பொருத்திக் கொண்டான். உள்ளுக்குள் மின்சாரம் பாய, நரம்புகள் எல்லாம் வெடித்து சிதறுவது போல ஒரு உணர்வு. இந்த நொடி, இந்த நிமிடம், இருவரும் இங்கு இல்லை. வானில் பறந்தார்கள். ரசாயன மாற்றங்கள் உதடு வழியாக பரிமாறிக் கொள்ளப்பட்டது. மேல் உதடு கீழ் உதடு என மெதுவாக பொறுமையாக, பதமாக, அவளின் உதட்டை சுவைத்தான். அவளும் மயங்கி கிறங்கி அவனுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தாள்.
அவனது சட்டையை ஒரு கையில் இழுத்து பிடித்துக் கொண்டவள். பின் கழுத்தில் ஒரு கையை போட்டு அவனது பிடரி முடியை பிடித்துக் கொண்டாள். ஒரே ஒரு முத்தம் ஆழ்ந்த முத்தம் அத்துடன் நிறைவு பெற இருவரும் பிரியவே மனமில்லாமல் பிரிந்தார்கள். இந்த உணர்வு அவளால் மறக்க முடியாதது. அவனுக்கும் தான்.
அவளின் உதட்டை தொட்டு பார்த்து துடைத்து விட்டவன். இந்த முத்தத்தை ஞாபகமா வச்சுக்கோ என்று சொல்லிக் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய, ஞாபகம் மட்டும் போதுமா பேசணும் என்று மீனாட்சி சொல்ல, கேடி கில்லாடி என்று மனதில் நினைத்துக் கொண்டவன்.
ஆல்ரெடி நம்பர் இருக்கு நானே கால் பண்றேன் டீச்சர் என்றான். மீனாட்சி ஆச்சரியமாக ஒருவேலை செம்பருத்தி கொடுத்திருப்பாளோ? என்ற மனதில் நினைத்தவள். என்னோட நம்பர் எப்படி? கிடைச்சது? என வினவினாள்.
நான் செந்தூர பாண்டியன்டி என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்து பறந்து விட்டான். அவளது இதய நாயகன்.
மீனாட்சி வெட்கத்துடன் வீட்டை நோக்கி நடந்தாள். செந்தூரப் பாண்டியன் நேராக வீட்டுக்கு சென்றதும் செம்பருத்தி பார்க்கச் சென்றான். இந்த சந்தோஷமான விஷயத்தை அவளிடம் சொல்ல வேண்டும் அல்லவா. பாப்பா என்று அழைத்தபடியே நுழைந்தான்.
அண்ணா என்று கண்களை தேய்த்துக் கொண்டே எழுந்து அமர்ந்தாள் செம்பருத்தி. “பாப்பா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல போறேன்” புன்னகையுடன் கொஞ்சம் வெட்கம் கலந்து பார்த்தான்.
என்ன அண்ணா? மாடு கண்ணு போட்டிருக்கா? சீப்பம் பால் எடுத்திட்டு வந்தியா? ஒரே சந்தோஷமா இருக்க? நல்ல விஷயமா என்ன வரவு? என கேட்டாள் செம்பருத்தி.
புதுவரவு தான் என சிரித்துக் கொண்டே கூறியவன் நான் ஒரு பொண்ண காதலிக்கிறேன் என்று கூறினான்.
அண்ணா என்று செம்பருத்தி முகத்தில் ஆயிரம் உணர்வுகள் கூடவே சந்தோஷம் மின்ன என்னன்னா சொல்ற? என உற்சாகத்துடன் கேட்டாள்.
மீனாட்சியை தான் விரும்புகிறேன் என்று செந்தூரப் பாண்டியன் தன் தங்கை செம்பருத்தியிடம் கூறுவானா?
அடுத்து என்ன நடக்கும்
வருவான்
EPISODE – 24 ( என் மடியின் மணவாளன் என தோன்றுதே)
“பாப்பா அது நான் ஒரு பொண்ண விரும்புறேன் என்று செந்தூரப்பாண்டியன் கூற, கண்களை அகலமாக விரித்த செம்பருத்தியின் முகத்தில் அத்தனை சந்தோஷ ரேகைகள். தன் அண்ணனின் மனதை கவர்ந்தவள் யார்? என தெரிந்து கொள்ளும் ஆர்வம் வேறு ஒரு பக்கம்.
அண்ணா என்று ஆர்வத்துடன் அவனது காதை குறும்பாக கிள்ளியவள். இத்தனை நாள் என்கிட்டே மறைசிட்ட பாத்தியா? என்று அவள் சிரித்துக் கொண்டே கேட்க, “எனக்கே அவளை விரும்புகிறேன்னு இந்த நாலு நாளா தான் பாப்பா தெரியும். என்று சிரித்துக் கொண்டே கூறினான்.
அப்படியா! யார் அந்த பொண்ணு? என கேட்க வந்தவளது முகம் கவலையானது. பாப்பா உனக்கு பிடிக்கலையா? நான் லவ் பண்றது? என்று செந்தூரன் கேட்க, அதெல்லாம் ஓகே அண்ணா! ஆனா இது பெரியம்மாவுக்கு தெரிஞ்சா என்னாகும்? தஉன்னோட காதலுக்கு ஒத்துப்பாங்களா? அதை நினைச்சா தான் பயமா இருக்கு. என்று செம்பருத்தி வெளிப்படையாக கூறினாள்.
செந்தூரப் பண்டியன் ஒரு பெருமூச்சை விட்டபடி அமைதியானவன். எனக்கும் கொஞ்சம் சந்தேகமா தான் இருக்கு. ஆனா அம்மா என்னோட விருப்பத்துக்கு எதிரா எதுவும் சொல்ல மாட்டாங்கன்னு தோணுது பாப்பா. அந்த தைரியத்துல தான் நான் இருக்கேன். என்று கூறினான்.
சரி அந்த பொண்ணு எப்படி இருக்கும்? எனக்கு நீ யாருன்னு சொல்றதை விட நேரில் காட்டுறியா? எங்க அண்ணி யாருன்னு நான் பார்த்துகிறேன்! என்று செம்பருத்தி சொல்ல, செந்தூரனுக்கு சிரிப்பு வந்தது.
எதுக்கு அண்ணா சிரிக்கிற? என புரியாமல் செம்பருத்தி கேட்க, நான் காட்டி தான் அவளை பாப்பா தெரிஞ்சுக்கணுமா? பாப்பாவால தான் எனக்கே அவளை தெரியும்! என நினைத்தவன். கண்ணுக்குழி தெரிய சிரித்துக் கொண்டே அவளை உற்றுப் பார்த்தான்.
என்னன்னா எதுக்கு அப்படி பாக்குற? சொல்ல மாட்டியா? என்கிட்ட? என்று செம்பருத்தி கேட்க, உன் கிட்ட நேர்ல காட்டலாம்னு இருக்கேன் என்றான் செந்தூரன்.
“நேரிலேயே காட்ட போரயா? ஜாலி ஜாலி சீக்கிரமே பாக்கணும். எனக்கு ஆசையா இருக்கு. ஐயோ லவ் எல்லாம் பண்ணுது எங்க அண்ணன்!” என்று சிரித்துக்கொண்டே உற்சாகமானாள் செம்பருத்தி.
அவள் இப்படி சொன்னதும் செந்தூரப் பாண்டியனுக்கு தன்னையும் மீறி கொஞ்சம் வெட்கம் எட்டிப் பார்க்க, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலையை கோதியப்படி கடந்தான். அண்ணா சரி முதல்ல அண்ணி பத்தி சொல்லு அப்புறம் காட்டுவ செம்பருத்தி கூற, முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டவன்.” முதல்ல உனக்கு நல்ல மாப்பிள்ளை கண்டுபிடிச்சு, இந்த வீட்டுக்கு எப்போ அழைச்சிட்டு வரேனோ அப்பதான் என்னோட காதல பத்தியும், அவள் யாருன்னும் உன்கிட்ட சொல்லுவேன் என்று கூறினான்.
“அண்ணா! என்ன அண்ணா! இப்படி சொல்லிட்ட?” என்று செம்பருத்தி சினுங்க, “முதல்ல தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுத்து கரை சேர்த்ததுக்கு அப்புறம் தான் அண்ணனுக்கு கல்யாணம். சோ அம்மா சொல்ற மாதிரி சங்கவி கல்யாணம் பண்ணட்டும். உனக்கு மாப்பிள்ளைய சல்லடை போட்டு சலிச்சிட்டு இருக்கேன் பாப்பா. நல்ல சம்மந்தமா வந்ததும். என் தங்கச்சியை நான் பெரிய இடத்துல கட்டி கொடுப்பேனாம்! அதுக்கப்புறம் என்னோட பொண்டாட்டிய உன் கிட்ட காட்டுவேணாம். கவலைப்படாதே உனக்கு புடிச்ச மாதிரி தான் ஒருத்திய தேர்ந்தெடுத்து வச்சிருக்கேன். உன்னோட வழிகாட்டுதல் படி தான்” என்று அவன் குறும்பாக சொல்ல, “அப்படியா? யாரது?” என்று செம்பருத்தி தீவிரமாக யோசித்தாள்.
“அந்த அளவுக்கெல்லாம் யோசிக்க வேண்டாம் பாப்பா. ஃப்ரீயா விடு” என்று செந்தூரன் சொல்ல, “அப்போ இனிமே டெய்லி போன் தான்!! ம்ம் பேசு பேசு அப்படியே என்னை மறந்திட போற!” என கிண்டலடித்தாள்.
அருகில் வந்து அவளின் காதை செல்லமாக பிடித்தான். “ஐயோ வலிக்குது’ என்று செம்பருத்தி கூற, “இல்லல்ல என் தங்கச்சியை நான் அடிப்பேனா! ஆனாலும் வாய் இப்போ அதிகம் எல்லாமே சேர்க்கை ” என செந்தூரன் சொல்ல, “ஆமா ஆமா சரி போயி தூங்கு அண்ணா” என்று இருவரும் உறங்கச் சென்றார்கள்.
அந்த இரவு மூவரும் மிகவும் சந்தோஷமாக உறங்கினார்கள் . செம்பருத்தி ஒரு பக்கம் தன் அண்ணன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறான். அவன் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என செம்பருத்தி ஒரு பக்கம் “சாமி எங்க அண்ணா யார விரும்புதோ, அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கணும். பெரியம்மா அதுல எந்த பிரச்சனையும் பண்ண கூடாது. நீ தான் சாமி கருணை காட்டணும். எங்க அண்ணன் சந்தோஷமா இருக்கணும். அது மாதிரி வலி பண்ண உனக்கு கெடா வெட்டி பொங்கல் வைக்கிறேன்.” என்று வேண்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள் நிம்மதியுடன்.
இந்த பக்கம் மீனாட்சி படுக்கையில் விழுந்தவள். “போன் பண்ணுமா? போன் பண்றேன்னு சொன்னது அந்த கடுவன் பூனை. ஆனால் இன்னும் போன காணோமே? இப்படி முத்தத்தை கொடுத்து என்ன புலம்ப விட்டுட்டு போயிட்டானே! படுபாவி!” என்று செந்தூரனை நினைத்துக் கொண்டே புரண்டாள்.
அந்த நேரம் பார்த்து அழைப்பு வர, வேகமாக அழைப்பை எடுத்து ஹலோ என்றாள் மீனாட்சி.
அம்மணி கடைத்தெருவிலிருந்து நீங்க மீன் வாங்கிட்டு போனீங்களே! கோல்ட் பிஷ்! அங்க இருந்து போன் பண்றோம்! என செந்தூரப் பாண்டியன் குரலை மாற்றிக் கொண்டே பேச, என்னை ஏமாத்த முடியாது கடுவன் பூனை! செந்தூரா! நீதான்னு எனக்கு தெரியும் என்று மீனாட்சி சிரித்துக் கொண்டே கூறினாள்.
யாரை பார்த்துட்டு பூனைன்னு சொல்ற? புலின்னு சொல்லுடி என்று செந்தூரன் மீசையை மிருக்கினான்.
“புலி இல்ல கால செவல காளை… ம்ம் இல்லல்ல நீ முரட்டுக்காளை என்று மீனாட்சி சொல்ல, “பாருடா இந்த மாதிரியெல்லாம் பேச தெரியுமாடி உனக்கு? நாய் மாதிரி வவ் வவ் அப்படின்னு குறைப்பன்னு நினைச்சேன் என்றான் செந்தூரன்.
அப்போ இதுக்கு தான் போன் பண்ணீங்களா? எனக்கு பேச ஒன்னும் இல்ல வையுங்க என்று அவள் சிலுப்பிக்கொள்ள, ” இருடி அப்புறம் முத்தமெல்லாம் பத்திரமா வந்திருச்சா?” என தலை கோதி கொண்டே கேட்டான்.
முத்தம்மா? எந்த முத்தம் ? என்று மீனாட்சி கேட்க, ” நான் கிளம்புறதுக்கு முன்னாடி கொடுத்தேனடி! மறந்துட்டியா? என்று செந்தூரன் கேட்க, “இப்போ எதுக்கு பேச்சு அங்க போகுது? அங்க இருந்து கொஞ்சம் இந்த பக்கம் வாங்க.” என்று மீனாட்சி சொல்ல, ” வெட்கமா” என்று மெதுவாக கேட்டான்.
போதும் போதும் எனக்கு தூக்கம் வருது என்று கூறினாள் மீனாட்சி.
“எனக்கும் தான் தூக்கம் வருது. பக்கத்துல வரியா நம்ம ரெண்டு பேரும் இருக்கி கட்டி பிடிச்சு படுத்துக்கலாம் அப்புறம் என்று அவன் சரசமாகவே பேசிக் கொண்டிருக்க, டேய் எனக்கு ஷாக் அடிக்குது செந்தூரா! இப்படி எல்லாம் பேசாத என்று உள்ளார்ந்த குரலில் கூறினாள் மீனாட்சி.
ஐயோ கொல்ற டி என்று சிணுங்கினான்.. சரி சரி அப்புறம் என்ன சாப்பிட்ட? வீட்டுக்கு போயிட்டு என்னன்ன பண்ண? என்று கொஞ்சலுடன் கேட்டாள் மீனாட்சி.
நானா? நான் வந்ததும் நேராக பாப்பா கிட்ட போயி, உன்ன பத்தி சொன்னேன் என்று கூறினான் செந்தூரன்.
என்ன என்று மீனாட்சிக்கு இதயத்துடிப்பு எகிற, எழுந்து அமர்ந்தவள். என்ன சொன்ன? என்று பதட்டத்துடன் கேட்டாள்.
செந்தூரன் சிரித்துக் கொண்டே “உன்ன பத்தி சொல்லிட்டேன்!”என்று கூறினான்.
“அதுதான் என்ன சொன்ன? என்னை I meant மீனாட்சிய லவ் பண்றேன்னு சொல்லிட்டியா? என்று குரல்கள் பதட்டத்துடன் ஒலிக்க, சில நொடிகள் அமைதி நிலவியது.
சொல்லு டா டேய் செந்தூரா!! என தவித்தாள் மீனாட்சி..
ஒரு தப்பு பண்ணிட்டேன் டி என செந்தூரன் சோகமாக சொல்ல, என் என்ன? என மீனாட்சியின் இதயம் எகிறி துடித்தது. அது உன் பேர சொல்ல மறந்துட்டேனே இப்ப போய் சொல்லவா? என்று செந்தூரன் அவளுக்கு விளையாட்டு காட்டினான்.
அவன் சொன்ன பதிலை கேட்டு கொஞ்சம் அசுவாச படுத்தி கொண்டவள் அப்படியே படுக்கையில் விழுந்தாள். “போகட்டுமா டி!” என அவன் கிளற, “ஐயோ ஐயோ அப்படியெல்லாம் பண்ணாத!” என்று மீனாட்சி வெடுக்கென கூறினாள். ஏன் என்னாச்சு சொல்லக்கூடாதா என்று செந்தூரன் கேட்க, ” அது அப்படி இல்ல கொஞ்சம் நாள் போகட்டுமே! ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.
அதன் பின் செந்தூரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, மீனாட்சி மெதுவான குரலில் லைன்ல இருக்கீங்களா? ப்ளீஸ் என்னங்க கொஞ்ச நாளைக்கு காத்திருப்போம் செந்தூரா என அழைத்தாள்.
“ம்ம்” என்றான். கோபமா? என மீனாட்சி கேட்க, நீ என்னை மாமானு கூப்பிடு அப்போதான் என்னோட கோபம் போகும் என்று செந்தூரன் சொல்ல, “நிஜமாவே சொல்ல போனா நீ எனக்கு மாமா தாண்டா” என்று மனதுக்குள் நினைத்த மீனாட்சி வெட்கத்துடன், “சரி கூப்பிடுறேன் என்று சிணுங்கினாள்.
கூப்பிடு மாமா சொல்லுடிஇஇஇ! என செந்தூரன் கேட்க, கொஞ்சம் தயக்கத்துடன் “மாமா ப்ளீஸ் சொல்லாதீங்க” என்றாள் மீனாட்சி. “நீ பக்கத்துல இருந்தா உன்னோட உதடு உன்கிட்ட இருக்காது” என்று கூறினான். செந்தூரன்.
அவனது ஆசைகள் அப்படியே கண் முன் தெரிந்தது. ம்ம் ஆசை தான். போதும் போதும் தூங்குங்க எனக்கு தூக்கம் வருது என மீனாட்சி போனை வைக்க போக, ” அப்போ ஒரு குட் நைட் கிஸ் குடு என்று செந்தூரன் கேட்ட, இச் இச் என்ற சத்தங்களுடன் அந்த இரவு இருவருக்கும் இனிமையாக முடிந்தது.
அடுத்த நாள் காலை அகிலாண்டேஸ்வரியின் வீடு தேடி சம்பந்தம் வந்தது வேறு யாராக இருக்க முடியும் பெரியோரில் தனியார் பள்ளி அதாவது செந்தூரப் பாண்டியன் சென்று வந்த பள்ளியின் தாளாளர் இளங்கோ தன் மகனுக்கு, பாண்டியனின் வீட்டு பெண்ணை கேட்டு வந்தார்கள்.
யார் அந்த பெண்?
செம்பருத்தியா? சங்கவியா? அகிலாண்டேஸ்வரியின் தலையீடு இதில் எப்படி இருக்கும்?
வருவான்.
EPISODE – 25 ( அகிலாண்டேஸ்வரியின் smart move)
அடுத்த நாள் செந்தூரப் பாண்டியன் மிகவும் நல்ல மனநிலைடன் எழுந்து அமர்ந்தவன் கண்களில் செம்பருத்தி உதட்டை பிதுக்க அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
என்னாச்சு பாப்பா என்று சோம்பல் முறித்துக் கொண்டே தன் தங்கையை பார்த்து கேட்டான்.
என்ன பண்ணிருக்க நீ? என்று செம்பருத்தி கேட்க, நான் என்ன பண்ணேன்? என்று கண்களை விரித்தான் செந்தூரன்.
“இந்த மீன் ரெண்டும் எப்படி இங்க வந்துச்சு?” என செம்பருத்தி கேட்க, எது பாப்பா? என கண்களை தேய்த்த படியே கேட்டான்.
இது இந்த கோல்ட் ஃபிஷ் என்ற செம்பருத்தி காட்டினாள்.
“அய்யய்யோ இதை எப்படி மறந்தேன்? இப்போ பாப்பாகிட்ட என்ன சொல்றது? என்று தயங்கியவன். சரி சமாளி டா செந்தூரா!” என்று சொல்லிக் கொண்டே “நீ தான பாப்பா சொன்ன! இது வந்து உன்னோட அண்ணி, அண்ணான்னு உங்க அண்ணிய பாக்குறதுக்காக தான் தூக்கிட்டு வந்தேன்.” என்று பிளேட்டை மாற்றி போட்டான்.
செம்பருத்தி கண்களை விரித்து அதுதான் அண்ணி பக்கத்திலே I mean அவங்க கூட பேசுற? நீதான் லவ் பண்றல்ல எதுக்கு fish-அ எடுத்துட்டு வந்த? என்று சிணுங்கியபடியே கூறினாள்.
ஓ ஓகே என்னைவிட என்று செந்தூரன் கூறி விட்டு திரும்ப, அய்யயோ அண்ணா அப்படியெல்லாம் இல்ல! நீ தானே எனக்கு பெரிய ஃபிஷ் டேங்க் வாங்கி கொடுத்திருக்க? எனக்கு அது போதும் அதை விட நீ தான் முக்கியம் என்று கூறினாள்.
ஹான் நம்பிட்டேன். நீ எடுத்துட்டு போ! எனக்கு வேண்டாம் என்று செந்தூரன் சொல்ல, பரவால்ல உன்னோட ரூம்லயும் மீன் இருக்கு. என்னோட ரூம்லையும் மீன் இருக்கு. நம்ம ரெண்டு பேரும் same pich என்று குழந்தை தனமாக கொஞ்சி விட்டு கீழே சென்றாள்.
யப்பா பாப்பா கிட்டருந்து தப்பிச்சோம் என குளித்து முடித்து பிரஷ் ஆகி அவனது அன்றாட வேலைக்காக தயாராகி கீழே வர, அந்த நேரம் பார்த்து அங்கே தாம்பூல தட்டுடன் தனியார் பெரியூரில் இயங்கிக் கொண்டிருக்கும் தாமரை என்னும் தனியார் பள்ளியின் தாளாளர் இளங்கோ வந்திருந்தார். “அட வாங்க வாங்க! நீங்க எங்க இங்க? என்று புன்னகைத்தபடி செந்தூரன் இறங்கி வர, “தம்பி ஒரு நல்ல விஷயம் பேசலாம்ன்னு தான் குடும்பத்தோட வந்தோம். அது சொல்லாம வந்துட்டோம் தப்பா எடுத்துக்காதீங்க” என்று தயங்க படியே இளங்கோ கூறினார்.
அப்படி எல்லாம் இல்லைங்க. வாங்க உட்காருங்க. பாப்பா தண்ணி எடுத்துட்டு வா என்றவன், “அம்மா! சித்தப்பா, சித்தி, எல்லாரும் வாங்க” என்று அனைவரையும் அழைத்தான்.
செந்தூரனின் மனதில் “அப்போ தானாபதி சொன்னது இவங்களா இருக்குமா? செம்பருத்திய சங்கவிக்கு முன்னாடியே பொண்ணு பாக்க வந்துட்டாங்க.” ரொம்ப சந்தோஷம் என நினைத்தான். செல்ல பாண்டியன் முத்துப்பாண்டியன், ஜெயக்கொடி, தனலட்சுமி என அனைவரும் ஒவ்வொருவராக வந்தார்கள்.
செம்பருத்தி தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து அனைவரிடமும் கொடுத்தாள். இளங்கோவின் மனைவி லதா அவரின் காதோரம் “இந்த பொன்ன தானங்க நம்ம பார்க்க வந்தது? ரொம்ப லட்சணமா அழகா! நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு” என்று சொல்லிக் கொண்டிருக்க… இளங்கோவின் பார்வை ஆழமாக செம்பருத்தியின் மீது படிந்தது..
யாரது என கேட்டுக்கொண்டே அகிலாண்டேஸ்வரி வந்தவர். “வாங்க நீங்க தாமரை ஸ்கூல் சேர்மேன் இளங்கோ தானங்க! வணக்கமுங்க” என்று சொல்லிக் கொண்டே வந்து கம்பீரமாக அமர்ந்தார்.
அவரைப் பார்த்ததும் இளங்கோ மற்றும் லதா இருவரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்தார்கள். பனையூரில் அகிலாண்டேஸ்வரியின் மரியாதை அவ்வளவு பெரிது. ” சரி என்ன விஷயம்ங்க!” என்று அகிலா கம்பீரமாக கேட்க , “நல்ல விஷயம் தானுங்க உங்க வீட்ல பொண்ணு இருக்கிறதா தானாபதி சொன்னார். அதான் பேசி பார்த்துட்டு நல்ல செய்தியோட போலாம்னு வந்திருக்கோம்ங்க.” என்று இளங்கோ கூற,
ஆமா தானாபதி சொன்னாரா என்று செந்தூரன் பேச வர, அகிலாண்டேஸ்வரி தன் மகனை பார்த்து ” ஒரு நிமிஷம் இரு அம்மா பேசிட்டு இருக்கேன்ல” என்று கூறியவர். ஜெயக்கொடி சங்கவி வர சொல்லு என்று அழைத்தார்.
உடனே இளங்கோ செம்பருத்தியையும் அகிலாண்டேஸ்வரியும் மாறி மாறி பார்த்தார். செந்தூரன் அவரது பார்வையை பார்த்து “எங்க வீட்டு மூத்த பொண்ணு. என்னோட தங்கச்சி. பேரு செம்பருத்தின்னு சொன்னாரா? நீங்க யாரை பார்க்க வந்திருக்கீங்க? தப்பா எடுத்துக்காதீங்க! கேட்டு தெரிஞ்சுக்க தான் என அவர்களை பார்த்தான்.
அகிலாண்டேஸ்வரி அவனை கண்டு கொள்ளாமல் சங்கவி வா வா என்றவர். ” இது எங்க வீட்டு வாரிசு சங்கவி! எங்க குடும்பத்தோட எனக்கு மறைத்து பேசி பழக்கம் இல்லைங்க. எங்க குடும்பத்தை பற்றி உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். இது என கொழுந்தனார் பொண்ணு சங்கவி என்று அழுத்தி கூறினார்.
இளங்கோவும் லதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். செந்தூரன் அதை அவமதிக்கும் பொருட்டு “ஏனுங்க தானாபதி செம்பருத்தி பத்தி சொன்னாரா இல்ல சங்கவிய பத்தி சொன்னாரா? என நான் தான் தானாபதி கிட்ட விவரங்களை கொடுத்திருந்தேன் என்றான்.
“செந்தூர பாண்டியாஆஆ!” என அதட்டலுடன் அவர் கர்ஜிக்க, மா நான் கேட்டத்தில் என்ன தப்பு? பதிலை அவங்க சொல்லட்டும் என்றான்.
யார் என்ன பதில் சொன்னாலும் சரி. உனக்கு அறிவு இருக்கா? இல்லையா? நான் உனக்கும் செம்பருத்திககும் எல்லாம் செஞ்சா? என்னோட குடும்பத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறதா முத்து பாண்டியனும் ஜெயக்கொடி நினைச்சுக்க மாட்டாங்களா? இந்த வீட்ல உன்ன விட எனக்கு சங்கவி மணிகண்டன் தான் ரொம்ப முக்கியம் என்று வந்தவர்கள் முன்னும் செம்பருத்தி அவர்கள் பெண் கேட்கக்கூடாது என்பதில் முனைப்புடன் பேசினார் அகிலாண்டேஸ்வரி.
வந்தவர்களுக்கு ஓரளவு புரிந்து விட்டது இளங்கோ தன் மனைவியை புரியாமல் பார்க்க, லதா இளங்கோவின் கையைப் பிடித்தவர். “அப்போ இந்த பொண்ணு சின்ன வீட்டு வாரிசு. நாம தான் தப்பா நினைச்சுகிட்டு வந்துட்டோம். நம்ம கிளம்பிடலாமா? நாம இப்போதைக்கு வேணான்னு சொல்லிட்டு போயிடலாம்!” என்று லதா சொல்ல… “அடி போக்கத்தவளே பனையூர்ல அதுவும் அகிலாண்டேஸ்வரி வீட்ல பொண்ணு கட்ட போட்டி போட்டுட்டு வராங்கடி! ஆனா நம்ம முந்திக்கிட்டோம். நம்ம முன் வாசல் வழியாக வந்த பெண்ணே கல்யாணம் பண்ணிட்டு போயிடலாம்! சொத்துக்கு சொத்தாச்சு. உனக்கு புரியுதா இல்லையா?” என்று அவர் அதட்டினார்.
லதா ஒரு பெருமூச்சு விட்டபடி ஆனால் மனோஜ் கிட்ட செம்பருத்தின்னு தானே பொண்ணு பேர் சொல்லி வச்சோம் என்றார்.
இளங்கோ பற்களை கடித்தபடி போட்டோவை அவன் என்ன பார்த்தானா? இங்க அகிலாண்டேஸ்வரியோட குரல் தான் ஒசந்து நிக்கும். அவங்களே சொல்லும் போது, சங்கவிய நம்ம பையனுக்கு கட்டிட்டு டீசன்ட்டா நம்ம நம்ம போலாம் என்று கூறினார்.
என்னங்க! எதுவும் வீட்ல எதும் கலந்து பேசி சொல்லனுங்களா? அகிலாண்டேஸ்வரி கேட்டார்.
நாங்க சங்கவியை பார்க்க தாங்க வந்தோம். என்னோட பையன் கோயம்புத்தூரில் ஐடி கம்பெனியில் வேலை செஞ்சுகிட்டு இருக்கான். அந்த வேலைய படிச்ச படிப்புக்கு வேலை செய்யணும்னு ஒரே அடம் அது தான் அங்கே இருக்கான். அது பெயருக்கு தான். ஆனால் இங்க சொத்து சொகம் நில புல எல்லாம் உங்க அளவுக்கு இல்லன்னா கூட ஓரளவுக்கு இருக்குதுங்க. சொந்தமா ஸ்கூல் வச்சிருக்கோம் என்று இளங்கோ கூறினார்.
நல்லதுங்க என்ற அகிலாண்டேஸ்வரி அப்படியே திரும்பி ஜெயக்கொடி, கொழுந்தனாரே! உங்களுக்கு சம்மதமா? செல்ல பாண்டியா தனலட்சுமி என்ன சொல்றீங்க? என்று அனைவரிடமும் அதே இடத்தில் கலந்து பேசினார்.
அண்ணி நீங்க எது சொன்னாலும் எங்களுக்கு சரிங்க என்று நால்வரும் பூம்பூம் மாடு போல தலையாட்டி விட, அப்போ அடுத்து வர முகூர்த்தத்திலேயே நிச்சயதார்த்தம் பண்ணிடலாம் என்று இளங்கோ கூறினார்.
பையனுக்கு இதுல சம்மதமா? என அகிலாண்டேஸ்வரி கேட்க , பையன் புடிச்சிருக்குன்னு சொன்னதும் தான் வந்தோம். இதோ நீங்க பயனோட போட்டோவ பாருங்க. உங்க பொண்ணுக்கு புடிச்சி இருந்ததனா நம்ப அடுத்து பேசிக்கலாம் என்று கூறினார் இளங்கோ.
மனோஜின் படம் சங்கவியிடம் நீட்ட பட்டது. ஜெயக்கொடி மெதுவாக அவளிடம் “நீ படிச்சு கிழிச்சதெல்லாம் போதும். இந்த பையன கட்டிக்கிட்டு இங்க பக்கத்துலயே செட்டில் ஆகிடு. என கூறினார்.
சரி என அகிலாண்டேஸ்வரியின் அருகில் சென்ற சங்கவி. எனக்கு புடிச்சிருக்கு உங்களுக்கு சரினா எனக்கும் சரிங்க பெரியம்மா. எனக்கு புடிச்சிருக்கு நீங்க எது சொல்றீங்களோ! அதை கேட்கிறேன் என்று கூறிவிட்டாள்.
அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையில் பிரம்மாண்டமாக மற்றும் முக்கிய நபர் அனைவரையும் அழைத்து ” பனையூரை சேர்ந்த ராஜ சௌந்தர பாண்டியன் சரசம்மாவின் மகன் வழி பேத்தியும், முத்துப்பாண்டி மற்றும் ஜெயக்கொடியின் மகளும் சங்கவிக்கும் மோரூரை சேர்ந்த மதிவாணன் முத்தாயி அவர்களின் பேரனும், இளங்கோ மற்றும் லதாவின் மகனுமான மனோஜ் இருவரின் சம்மதத்தின் பெயரில் பெரியோர்களால் நிச்சயதாம்பூலம் மாற்றப்பட்டு நிச்சயிக்கப்படுகிறது. என்று இரு வீட்டாரின் சம்மதத்துடன் சங்கவி மற்றும் மனோஜ் இருவருக்கும் நிச்சய விழா நடந்தது.
அந்த விழாவில் செந்தூரன் மிகவும் மன உளைச்சலுடன் சுற்றிக் கொண்டிருந்தான். ஏன் என்றால் நிச்சயத்திற்கு முன்னால் மாலையில் இருந்து அன்று காலை வரை அனைத்து வேலைகளையும் தலையில் போட்டுக்கொண்டு ஓடி ஓடி செய்த செம்பருத்தி இன்று நிச்சயத்தன்று வீட்டில் இல்லை.
உள்ளுக்குள் மிகவும் வேதனையாக இருந்தது செந்தூரனுக்கு. ஏதோ எங்கேயோ சரியா படவில்லை என்று தோன்றயது.
எனக்கு ஏன் இப்படி தோணுது. செம்பருத்தி கஷ்டப்படுற மாதிரியே என் மனசு ஏன் சொல்லிக்கிட்டு இருக்கு? அவளும் வாய் திறக்க மாட்டின்றா? கேட்டாலும் நல்லவிதமா தான் சொல்றா! இப்போ இதுக்கு நான் என்ன பண்ணட்டும் சாமி? என நினைத்துக் கொண்டிருக்க அந்த நேரம் திருமண புரோக்கர் தானாபதியிடமிருந்து போன் வந்தது.
அழைப்பை ஏற்றவன். மறுமுனை சொன்ன விசயத்தை கேட்டு அப்படியே நின்றான் செந்தூர பாண்டியன்.
தரகர் என்ன சொல்லியிருப்பார்?
அடுத்து என்ன நடக்கும்?
வருவான்.
Episode -26
“அண்ணே முத்தண்ணே ! அங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க அங்க பாருங்க மூட்டையிலிருந்து அரிசி எல்லாம் வீணா தரையில சிந்திக்கிட்டு இருக்கு அத முதல்ல ஆளுங்கள வர சொல்லி அள்ளி போட சொல்லுங்க ….அப்புறம் அரிசி எடுத்துட்டு போறவங்க அதுல கல்லும், மண்ணும் இருக்குன்னு நம்ம மேல தான் கம்ப்ளைன்ட் பண்ணுவாங்க முதல்ல அந்த வேலையை பார்க்க சொல்லுங்க அண்ணே. இப்படி பொறுப்பே இல்லாம இருந்தா எப்படி தான் நம்ம தொழில்ல முன்னேறது” என்று அவனுடைய அப்பா காலத்தில் இருந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் முத்தண்ணனிடம் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தான் துருவன்.
துருவன் பேசியதை கேட்டதும் அவசரமாக தான் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு “நான் சரியா கவனிக்கலை தம்பி நல்ல வேலை நீங்க பார்த்து சொல்லிட்டீங்க … அந்த வேலையை பார்க்கிறேன்” என்றவர் ஆட்களை அழைத்து தரையில் சிதறி கிடந்த அரிசியை அள்ளி மூட்டையில் போட சொல்லி வேலையை சென்று விட்டார் .
அவரிடம் பேசிவிட்டு தன் ஆபீஸ் ரூமிற்குள் துருவன் நுழைய அவனுடைய போன் ஒலித்தது பாக்கெட்டில் இருந்து போன் எடுத்து பார்க்க கர்ணன் தான் அவனுக்கு அழைத்திருந்தான் . போனை அட்டென்ட் செய்தவன் “ சொல்லு கர்ணா” என்றான் .
“துருவா என்னடா பண்ணிட்டு இருக்க? எதுவும் முக்கியமான வேலையில இருக்கியா?” என்றான் கர்ணன் .
“ரைஸ் மில்ல தான்டா இருக்கேன். சொல்லு என்ன விஷயம்” என்றான் துருவன் .
“நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் வழக்கமா நம்ம கள்ளு குடிக்கிற இடத்துக்கு சாயங்காலம் வந்துடுறியா? “ என்றான் கர்ணன்.
“ஏன் கருணா எதுவும் முக்கியமான விஷயமா போன்ல சொல்ல வேண்டியது தானே. நேரில் தான் சொல்லனுமா?” என்றான் துருவன் .
“ஒன்னும் இல்லடா மாப்ள ரொம்ப பெரிய விஷயம் எல்லாம் இல்ல நேர்ல பேசினா வசதியா இருக்கும்னு பார்த்தேன்” என்றான் கர்ணன் .
“சரிடா சுதாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக வேண்டி இருக்கு. இன்னைக்கு அவளுக்கு செக்கப்புக்காக போகணும் அவளை கூட்டிட்டு போய் செக்கப் முடிச்சிட்டு நான் கிளம்பி வந்துடறேன்” என்றான் துருவன்.
“சரிடா வராம விட்றாத நான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன்” என்று போனை கட் செய்தான் கர்ணன் .
ரைஸ்மிலில் இருந்த வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து வண்டியை நிறுத்தியவன் “சுதா!! சுதா!! எங்க இருக்க? ஹாஸ்பிடல் போகணுமே கிளம்பிட்டியா?” என்று பேசிக்கொண்டே வீட்டிற்குள் சென்றான்.
“நான் கிளம்பி ரொம்ப நேரம் ஆச்சு அப்படி அந்த ரைஸ்மில் என்னத்த கட்டிட்டு அலறீங்கன்னு தெரியல பொண்டாட்டி இந்த நிலைமையில் இருக்கும்போது கூட என்ன பக்கத்துல இருந்து பாத்துக்கணும்னு தோன்றதே இல்லை கொஞ்சமாவது என் மேல அக்கறை இருந்தா தானே” என்று வழக்கம் போல அவனை தன் வார்த்தைகளால் காயப்படுத்தி கொண்டே வாசலுக்கு வந்தாள் சுதா .
“இப்படி வேலை பாக்காம உன் பின்னாடியே என்னால சுத்திக்கிட்டு இருக்க முடியுமா. அதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறதுக்கு நீ சொன்ன நேரத்துக்கு சரியா வந்துட்டேனே. அப்புறம் ஏன் சும்மா புலம்பிட்டே வர முதல்ல கிளம்பி வா” என்றான் துருவனும் அவள் பேச்சைக் கேட்க முடியாமல் .
“ஆமா ஆமா அப்படியே பின்னாடி சுத்திட்டாலும்” என்று அவனை பார்த்தவள் தன் முகத்தை வெடுக்கென திருப்பிக்கொண்டு காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் .
“இவளை திருத்தவே முடியாது” என்று நினைத்தவன் தன் பைக் சாவியை வைத்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடல் கிளம்பினான்
கிட்டத்தட்ட ஹாஸ்பிடலுக்கு வந்து மூன்று மணி நேரத்திற்கு மேலான பிறகு தான் சுதாவை டாக்டர் செக்கப்ற்காக உள்ளே அழைத்தார், அதற்கு முன்பாக அவளுக்கு செய்ய வேண்டிய ஸ்கேன் ரத்த பரிசோதனை என அனைத்தையும் முடித்துவிட்டு இருக்க அதற்கே அவள் புலம்பி தள்ளி விட்டாள் .
உள்ளே டாக்டரை பார்க்க சென்ற துருவன், சுதா இருவரையும் பார்த்தவர் அவர்கள் இருவரையும் அமர சொல்லிவிட்டு சுதாவின் ரிப்போர்ட்டுகளை பார்த்தார். திருப்தியாக புன்னகைத்தபடியே ₹குழந்தையும் அம்மாவும் ரொம்ப நல்லா இருக்காங்க . குழந்தையோட வளர்ச்சி நல்லபடியா இருக்கு” என்றவர் சுதாவை பார்த்து “ நீங்க தான் கொஞ்சம் வழக்கத்தை விட அதிகமா வெயிட் போட்டு இருக்கீங்க. நான் சொன்ன மாதிரி தினமும் வாக்கிங் போறீங்களா? சாப்பாடு எல்லாம் நான் சொன்னது போல தான் சாப்பிடுறீங்களா? இல்ல வழக்கம்போல தானா?” என கேட்டார்.
“நல்லா சொல்லுங்க டாக்டர் நானும் எவ்வளவு முறை சொல்லி பாத்துட்டேன் அளவுக்கு அதிகமாக சாப்பிடாத உடம்பு வெயிட் போட்டுட்டா பின்னாடி பிரசவத்தில் உனக்கு தான் பிரச்சனை வரும்னு. ஆனா நான் சொல்றத எங்க கேக்குறா அவளுக்கு பிடிச்சதை செய்து தரச் சொல்லி சாப்பிடுறா அப்படி இல்லையின்னா ஆர்டர் பண்ணி அவளே சாப்பிட்டுக்கிறா சரி சாப்பிட்டாலும் பரவாயில்லை கொஞ்ச நேரம் காலைலயும் சாயங்காலமும் வாக்கிங் போகலாம் வான்னு கூப்பிட்டா அதுக்கும் சோம்பேறித்தனப்பட்டுட்டு வீட்டுக்குள்ளேயே இருக்கா என்று சலித்துக் கொண்டான்” துருவன் .
“என்னம்மா நீ இப்படி இருக்க ஒவ்வொருத்தவங்க வயிற்றில் இருக்க குழந்தைக்காக, அவங்களை வருத்திக்கிட்டு எப்படி உடம்ப பாத்துக்கிறாங்க நீ என்ன எதை பத்தியும் கவலைப்படாம இப்படி இருக்கியே” என்று டாக்டர் சுதாவை கடிந்து கொள்ள .
தன்னை பற்றி கோள் மூட்டிய துருவனை பார்த்து முறைத்த சுதா “சரிங்க டாக்டர் இனிமேல் நீங்க சொல்றது போல நடந்துக்கிறேன்”என்றவள் வெடுக்கென எழுந்து வெளியேசென்றாள். அவள் கோபமாக செல்வதை பார்த்த துருவன் பெருமூச்சு விட்டபடி “டாக்டர் அவ அப்படித்தான் நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க”என்று டாக்டரிடம் அவளுக்கு எழுதிக் கொடுக்க வேண்டிய மருந்துகள் எல்லாம் வாங்கி வெளியே வந்தவன் அவளோடு ஹாஸ்பிடல் விட்டு கிளம்பினான்.
காரில் துருவனிடம் சண்டையிட்டுக் கொண்டே வந்தாள் சுதா . டாக்டரிடம் அவளைப் பற்றி துருவன் கூறியது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை தன்னை எப்போதுமே குறை சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று வரும் வழி எல்லாம் அவனை திட்டி திர்த்தால் .
ஒரு வழியாக சுதாவை கொண்டு வந்து வீட்டில் சேர்த்துவிட்டு வீட்டுக்குள் கூட செல்லாமல் வேகமாக அங்கிருந்து கிளம்பினான்.
“வந்ததும் வராதுமா எங்க இவ்வளவு அவசரமா கிளம்புறீங்க” வழக்கம் போல மூக்கையன் தோட்டத்துக்கு தான் போறீங்களா?” என்றாள் கோபமாக .
கிளம்பி செல்ல இருந்த துருவன் சுதா கேட்கவும் நின்று அவளை திரும்பிப் பார்த்து “அந்த ஒரு இடத்தில் தான் எனக்கு கொஞ்ச நேரம் நிம்மதி கிடைக்கும்
அங்க கூட நான் போக கூடாதா? “என்றான் .
“நீங்க எங்க வேணா போங்க உங்களை யார் என்ன கேட்டாங்க போகும்போது எங்க போறன்னு சொல்லிட்டு போங்க, அப்படி என்ன வீம்போ தெரியல” என்றவள் அவன் பதிலுக்கு கூட காத்திராமல் திருப்பி வீட்டுக்குள் நடந்தாள் .
சொத்துக்கும் சுகத்திற்கும் ஆசைப்பட்டு சுதாவை தனக்கு திருமணம் செய்து தன்னுடைய வாழ்க்கையை இப்படி ஒரு சூழ்நிலையில் மாட்டி விட்டார்களே என்று நினைத்து நொந்து கொண்டான் .
வீட்டில் இருந்து கிளம்பிய துருவன் ஒருவித மனக்களக்கத்தோடு கர்ணன் வரச் சொன்ன தோட்டத்திற்கு கிளம்பி சென்று கொண்டிருந்தான் .
தன் ஊரான பெரியூரில் இருந்து கர்ணனின் ஊரான எல்லையில் அமைந்துள்ள மூக்கையின் தோட்டத்திற்கு சென்று கொண்டு இருந்தான் .
தனது புல்லட்டில் சென்று கொண்டு இருந்தவனில் யோசனை எல்லாம் தன்னுடைய வாழ்க்கை இப்படியே சென்று விடுமா சுதா மனது மாறி தன்னிடம் நன்றாக நடந்து கொள்ள மாட்டாளா என யோசனையிலேயே புல்லட்டில் போகி கொண்டு இருக்க, வழியில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் புல்லட்டை அந்த பள்ளத்தில் விட புல்லட்டோடு கவிழ்ந்து கீழே விழுந்தான்
மழை நீரால் அந்த பள்ளம் முழுவதும் தண்ணீர் தேங்கி சகதியாக இருக்க, அவன் விழுந்ததில் அந்த சகதியில் கையை ஊன்றி கீழே விழ அவன் உடலில் லேசாக சகதி பட்டுவிட்டது . “ச்சே … நிம்மதியா வண்டியை கூட என்னால ஓட்டிட்டு போக முடியல” என்று நொந்து கொண்டவன் கையை ஊன்றி எழுந்து தன் உடலில் இருந்த சகதியை தட்டி விட்டவன் குனிந்து பள்ளத்துக்குள் மாட்டியிருந்த தன் புல்லட்டை எடுக்க முயற்சித்துக் கொண்டு இருந்தான் .
அப்போது அருகில் உள்ள ஊருக்கு ஒரு வேலை விஷயமாக சென்றிருந்த செந்தூரப் பாண்டியன் தன் ஜீப்பை ஓடிக்கொண்டு அந்த வழியே வரும்பொழுது சாலையில் புல்லட்டை பிடித்துக் கொண்டு தள்ளாடியபடி புல்லட்டை நிமிர்த்த முடியாமல் துருவன் போராடிக் கொண்டிருந்தவனை பார்த்தான் .
பள்ளத்தில் மாட்டிக் கொண்டிருந்த புல்லட்டை எடுக்க துருவன் சிரமப்பட்டு கொண்டிருக்க, ஆனால் தூரத்தில் இருந்து பார்த்த செந்தூர பாண்டியனுக்கும் துருவன் போதையில் வண்டியை பள்ளத்துக்குள் விட்டு அதை எடுக்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருப்பது போல அந்த காட்சியை பார்த்தவனுக்கு தோன்றியது .
“என் அம்மா எவ்வளவு கம்பீரமா அந்தஸ்தோடு இருக்காங்க அவங்களுக்கு போய் இப்படியும் ஒரு தம்பியா, அவங்க பேர கெடுக்குறதுக்குனே வந்திருக்கான்”என்று நினைத்தவன் துருவனை கண்டும் காணாமல் அவனைத் தாண்டி ஜீப்பை ஒட்டிக்கொண்டு சென்றான் .
பள்ளத்தில் சிக்கிக்கொண்ட புல்லட்டை எடுக்க முன்னதாக இருந்த துருவனுக்கு தன்னை தவறாக நினைத்துக் கொண்டு முறைத்தபடியே அவனைத் தாண்டி செல்லும் செந்தூர பாண்டியனை கவனிக்க தவறிவிட்டான் .
ஏற்கனவே செந்தூர பாண்டியனுக்கும் துருவனுக்கும் ஆகாது துருவனை பற்றிய ஒரு சிறிய நல்ல அபிப்பிராயம் கூட செந்தூர பாண்டியனுக்கு கிடையாது,அப்படி இருக்க இது அவன் மனதில் பற்றிய தவறான எண்ணத்தை ஆழமாக பதித்து விட்டிருந்தது .
செந்தூரப் பாண்டியன் சென்ற சிறிது நேரத்திலேயே பள்ளத்திலிருந்து புல்லட்டை வெளியே எடுத்தவன் அதில் ஏறி அமர்ந்து புல்லட்டை ஸ்டார்ட் செய்து மூக்கையன் தோட்டத்திற்கு சென்றான்.
Episode -27
மூக்கையின் தோட்டத்திற்குள் தன் புல்லட்டோடு உள்ளே துருவன் நுழைய அங்கே அவனுக்காக ஏற்கனவே வந்து புகழேந்தியுடன் காத்துக் கொண்டிருந்த கர்ணன். அப்போது மூக்கையன் தோட்டத்திற்குள் சட்டை எல்லாம் சேரும் சகதியுமாக நுழைந்த துருவனை பார்த்தவன் . “ஏன்டா புகழு… என்னடா இது சட்டை எல்லாம் எப்படி சேர அப்பிகிட்டு வந்திருக்கான் . வர வழியில யார் கூடயும் சண்டை சச்சரவுன்னு வம்பு இழுத்துட்டு வந்துட்டானோ” என்றான் சந்தேகமாக .
“என்ன இப்படி சொல்லிட்டீங்க நம்ம துருவன் அப்படி எல்லாம் யார்கிட்டயும் தேவை இல்லாம வம்ப வளக்குற ஆள் இல்லை நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இருக்காது அண்ணே … பொறுங்க வரட்டும் என்னென்னு நம்மை கேட்டு விடுவோம்” என்ற புகழேந்தி தன் கையில் இருந்து கள்பானையை கர்ணனின் முன்பு வைத்தான் .
அதற்குள் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி சிரித்தபடி துருவன் வர “வாடா மாப்பிள்ளை என்ன இது கோலம் யாரு மண்டையும் உடைச்சிட்டு வர” என கர்ணன் சிரித்துக் கொண்டே கேட்க .
“அட ஏன் மாப்ள நீ வேற வர வழியில ஒரு பள்ளத்துக்குள்ள கவனிக்காம வண்டியை விட்டுட்டேன். வண்டியோடு சேர்த்து நானும் கீழே விழுந்துட்டேன். அதுல தான் இப்படி” என்று தன் போட்டிருந்த சட்டையை கழட்டி தான் அமர்ந்த சாருக்கு பின்னால் தொங்க விட்டான் .
துருவன் அமர்ந்ததும் புகழேந்தி அவளுக்கும் ஒரு கல்பானையை கொடுக்க அதை கையில் வாங்கியவன். “ஆமா என்ன கர்ணா அவசரமா என்ன வரச் சொன்னியே எதுவும் முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன என்ன விஷயம்” என்றான்.
“சொல்றேன் வந்ததும் வராததுமா பேசணுமா முதல்ல இந்த கல்லைக் குடி அதுக்கப்புறம் மத்தது பேசிக்கலாம்” என்று அவர்கள் சாப்பிடுவதற்காக வாங்கி வைத்திருந்த சைட் டிஸ்ஸை எடுத்து அவன் முன்பு நீட்ட அதிலிருந்து கருவாட்டு துண்டை எடுத்து வாயில் கடித்துக் கொண்டே கல்லை ஒரு மடக்கு விழுங்கினான் கர்ணன்
இருவரும் சிறிது நேரம் பொதுவான விஷயங்களை பேசிவிட்டு கல் அருந்தினார்கள்.
“அப்புறம் துருவா தங்கச்சிக்கு ஹாஸ்பிடல் செக்கப் எல்லாம் கூட்டிட்டு போனியே டாக்டர் என்ன சொன்னாங்க குழந்தையும் தங்கச்சியும் நல்லா இருக்காங்கன்னு சொன்னாங்களா” என கேட்டான் கர்ணன் .
“அதுக்கு என்ன மாப்ள ரெண்டு பேருமே நல்லா இருக்காங்கன்னு டாக்டர் சொன்னாங்க. உன் தங்கச்சி தான் சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பு ஏறிட்டே போகுதுன்னு டாக்டர் அவளை வாக்கிங் போகச் சொல்லி சாப்பாடெல்லாம் அளவா சாப்பிட சொல்லி இருக்காங்க” என்றான் .
“அட என்ன மாப்ள டாக்டர் அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள் இந்த நேரத்துல வாய்க்கு ருசியா ஏதாவது சாப்பிடணும் போல தோணிக்கிட்டே இருக்கும். இப்ப சாப்பிடாம எப்ப சாப்பிட போறாங்க. குழந்தை பிறந்ததும் தங்கச்சிமா டயட் இருந்து உடம்பை குறைக்கும்” என்றான் சுதாவிற்கு ஆதரவாக பேசி .
“ஆமாமா உன் தங்கச்சி தானே நீ விட்டு குடுப்பியா கூட பிறக்கலைனாலும். அது என்னவோ உனக்கு அவ மேல அவ்வளவு பாசம் ஏண்டா எனக்கு தெரியல” என்று சிரித்த துருவன் சரி சொல்லு “எதுக்காக என்ன வர சொன்ன … முக்கியமான விஷயம் பேசணும்னு வர சொல்லிட்டு அதை தவிர்த்து மத்ததெல்லாம் நீ பேசிக்கிட்டு இருக்க என்ன விஷயம் சொல்லு” கர்ணா என்றான்.
“துருவா பக்கத்து ஊரு அதுதான் உன் அக்கா அகிலாண்டேஸ்வரி இருக்க ஊரு பனையூர். அந்த ஊர்ல ஒரு பெட்ரோல் பங்கு டென்டருக்கு வருது அத பத்தி பேசத்தா உன்ன கூப்பிட்டேன்” என்றான்.
அகிலாண்டேஸ்வரி பெயரை சொன்னதும் அதுவரை சாதாரணமாக இருந்த துருவனின் முகம் மாறியது “இதை பேசுறதுக்கு தான் நீ அவசரமா என்ன வர சொன்னியா அந்த ஊர்ல பெட்ரோல் பங்க் ஏலம் விட்டால் என்ன.. விடாட்டி எனக்கு என்ன அதை என்கிட்ட பேசி என்ன ஆகப்போகுது” என்றான் கோபமாக .
“அட நான் சொல்றது முழுசா கேட்டுட்டு அப்புறம் பேசு துருவா” என்ற கர்ணன் . “அந்த பெட்ரோல் பங்க் இருக்கிறது என்னவோ பனையூர் எல்லையில தான். ஆனால் அந்த பெட்ரோல் பங்கில் நம்ம இரண்டு ஊரோட ஆளுங்களும் சுத்தப்பட்டுள்ள இருக்கிற கிராமத்தோட ஆளுகளும் அங்க தான் பெட்ரோல் அடிக்கிறாங்க. அப்படி பார்த்தா அந்த பெட்ரோல் பங்கில் தான் நல்ல லாபம் இருக்கு. இந்த டென்டரை ஏன் நீயும் நானும் சேர்ந்து எடுக்கக் கூடாதுன்னு எனக்கு ஒரு யோசனை வந்துச்சு அதனாலதான் உன்கிட்ட கலந்து பேசலாம்னு வரச் சொன்னேன்” என்றான் .
“இங்க பாரு மாப்ள எனக்கும் அந்த ஊருக்கும் ஆகாதுன்னு உனக்கு ஏற்கனவே தெரியும் ஏற்கனவே அக்காவுக்கு நடந்த பிரச்சனையால என் அப்பாவை அங்க இருக்குறவங்க அவமானப்படுத்தி துரத்தி அனுப்பிட்டாங்க. அதனாலயே நாங்க அந்த ஊர் பக்கமே தலை வைத்து படுக்கிறது இல்ல போதாததற்கு அந்த செந்தூரப்பாண்டி வேற என்ன பார்க்கிறப்ப எல்லாம் எதிரியாவே நடத்துறான். அப்படி இருக்கிறவங்க ஊருக்குள்ள போய் நான் இந்த டெண்டர் எடுக்கணும்னு எந்த அவசியமும் கிடையாது. வேறு எதுவும் வேலை இல்லைனா சொல்லு மாப்ள நான் கிளம்புறேன்” என்று துருவன் எழுந்திருக்க போக ..
“அட என்னடா நீ எதுக்கு எடுத்தாலும் மூக்குக்கு மேல உனக்கு கோபம் வந்துடுது பேசாம உட்காரு” என்று சொல்லி அவன் கையைப் பிடித்து சேரில் அமர்த்திய கர்ணன் புகழேந்தியை பார்த்து கண்ணசைக்க ….
“என்ன துருவன் அண்ணே நீங்க … அந்த செந்தூரப் பாண்டியன் உங்களுக்கு எதிரியா பாக்குறான்னா உங்களுக்கும் அவன் எதிரி தானே அவனுக்கும் உங்களுக்கும் தகராறு இன்னைக்கு நேத்தா நடக்குது எத்தனை வருஷமா நடந்துகிட்டு இருக்கு அவனை பழிவாங்கணும் அவனுக்கு சரியான பாடம் கற்பிக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பீங்க. அதுக்கு சரியான ஒரு வாய்ப்பு வரப்போ அதை வேண்டாம் எப்படி தட்டிக் கழித்து பொறுப்பில்லாமல் போனால் என்ன நியாயம்” என்றவன்.
துருவனின் முகத்தில் ஏதாவது தெரிகிறதா என்பது போல அவனை ஒரு நிமிடம் ஆழமாக பார்த்துவிட்டு கர்ணனை பார்க்க கர்ணன் மறுபடியும் “பேசு…பேசு..” என்று கையை அசைத்து கைகை காட்ட அதை துருவன் கவனிக்கவில்லை. ஆனால் அவன் சைதை காட்டியதும் புகழேந்தி மறுபடியும் துருவனிடம் “அந்த செந்துரிய பாண்டிய நீங்க பார்க்கணுமே என்னவோ இந்த சுற்றுப்பட்டு இருக்கிற கிராமம் மொத்தமும் அவனுக்குத்தான் சொந்தம்ங்கிற மாதிரி திமிரா வீம்பா எப்பவுமே சுத்திகிட்டு இருப்பான். அவன் பேச்சுக்கு கட்டுப்பட்டு சுத்தி இருக்கிற ஆளுகளும் இருக்காங்க அவனும் இந்த பெட்ரோல் பங்க டெண்டர் எடுக்க போறதா நாங்க கேள்விப்பட்டோம். ஏற்கனவே மெதப்புல சுத்திக்கிட்டு இருக்குறவனுக்கு இந்த பெட்ரோல் பங்கும் எடுத்து அவன் கைக்கு போயிடுச்சுன்னா அவனை கையிலேயே குடிக்க முடியாது அப்புறம் எப்படி நீங்க நினைக்கிறது எல்லாம் நடக்கும்” .
“அவன் ஒன்னும் உங்களை விட வசதியில ரொம்ப பெரியவன் கிடையாது பார்க்க போனா நீங்களும் அவனும் சரிசமமா தானே இருக்கீங்க. அவன் ஊர்ல அவன் ராஜா அண்ணா உங்க ஊர்ல நீங்களும் தானே ராஜா உங்க ஊர்க்காரவங்க உங்க பேச்சுக்கு கட்டுப்பட்டு தானே நடக்கிறார்கள் அப்படி இருக்கிறப்போ உங்களுக்குன்னு தனியா ஒரு அந்தஸ்து வேண்டாமா? வெறும் தோட்டத்துறவும் ரைஸ் மில்லையும் எத்தனை நாளைக்கு பாத்துக்கிட்டு இருப்பீங்க நீங்களும் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டாமா? நம்ம கர்ணன் அண்ணே சொல்றதையும் கொஞ்சம் யோசிங்க” என்றான்
செந்தூரப் பாண்டியனை பற்றி துருவன் மனதில் இருக்கும் எண்ணத்தை மேலும் தவறாக சித்தரித்துக் காட்டும் நோக்கத்தோடு செந்துறை செந்தூரப் பாண்டியனை பற்றி அவதூராக ஒன்று இரண்டாக திரித்து புகழேந்தி கூற அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டே கையில் இருந்த ஒரு கல் பானையையும் மொத்தமாக குடித்து முடித்தவன் பானையை வேகமாக தரையில் போட்டு உடைத்தவன் “ஆமா புகழேந்தி நீ சொல்றதும் ஒரு வகைல நல்லது தான் எத்தனை நாளைக்கு அவங்க கிட்ட இருந்து நான் ஒதுங்கியே இருக்கணும் எனக்கும் மான ரோஷம் இருக்கு நானும் அவன் முன்னாடி கௌரவமா வாழ்ந்திட்டா இருக்கேன். அவனுக்கு ஒன்னும் நான் சலச்சவன் கிடையாது” என்றவன் கர்ணன் பார்த்து “டேய் கர்ணா நாளைக்கு நீயும் நானும் பனையூருக்கு போறோம். அந்த டென்டருக்கு என்ன தேவையோ அதற்குண்டான வேலை எல்லாம் பாத்துட்டு வரோம் இந்த வருஷம் அந்த டெண்டர் நம்ம தான் எடுக்க போறோம்” என்றான் தீர்க்கமாக .
“அப்படி சொல்லுடா மாப்பிள இதுதான் நான் எதிர்பார்த்தேன். இதுதான் துருவனுக்கு அழகு எந்த ஒரு விஷயத்தையும் நேருக்கு நேரா மோதி ஜெயிக்கிறவன் தான்டா நீ அந்த செந்தூரபாண்டியன் எல்லாம் உனக்கு முன்னாடி எம்மாத்திரம் நாளைக்கு நீயும் நானும் போறோம்” என்றவன் புகழேந்தியை பார்த்து “டேய் இன்னொரு பானையை கொண்டு வந்து என் நண்பனுக்கு கொடுடா” என்றான்.
புகழேந்தியும் கொண்டுவந்து ஒரு பெரிய பானையை துருவன் முன்பு வைக்க அருகில் இருந்த கருவாட்டு துண்டுகளை எடுத்து வாயில் போட்டு அழகிய துருவன் வேகமாக அந்த கல் பானையை எடுத்து வாயில் கவிழ்க்க ஆரம்பித்தான் …
கல்லை குடித்துக் கொண்டே தங்கள் போட்ட தூபம் கொஞ்சம் கொஞ்சமாக எரிய ஆரம்பிப்பதை கண்டு உள்ளுக்குள் வஞ்சக புன்னகை சிந்தியவாறு வெளியில் எதுவும் தெரியாதவன் போல துருவனை பார்த்தபடி மொத்த பானையையும் கவிழ்த்தான் கர்ணன்
Episode-28
மூக்கையின் தோட்டத்தில் கல்லை அருந்தியவாரே அடுத்த நாள் பெட்ரோல் பங்கிற்கான டென்டருக்கு கோட் செய்வதற்கு செல் போவதாக கர்ணனும் துருவனும் பேசிக் கொண்டிருக்க… அங்கே அவர்களைப் போலவே கல் அருந்த வந்த பனையூர் கிராமத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் ஒருவர் இவர்கள் பேசுவதை கேட்டவர் இந்த விஷயத்தை உடனே அகிலாண்டேஸ்வரி இடம் சொல்ல வேண்டும் என்று அங்கிருந்து கிளம்பினார் .
நேராக அகிலாண்டேஸ்வரியை பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கு வர இன்னும் சில நாட்களில் சங்கவிக்கு நடக்கவிருக்கும் திருமணத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்க… அங்கே செம்பருத்தி மற்ற வேலை ஆட்களோடு உறுதியாக பரபரப்பாக அங்கே வேலை செய்து கொண்டிருந்தவள் கல் குடித்து
விட்டு எப்படி அகிலாண்டேஸ்வரி பார்ப்பது என்று தயங்கியவரே அவர்கள் வீட்டு வாசலில் முன்பு நின்றிருந்தவரை அப்போதுதான் செம்பருத்தி பார்த்தாள் .
கையில் இருந்த தோரணங்களை அருகில் இருந்த கட்டிலில் வைத்துவிட்டு எழுந்து வாசலுக்கு வந்தவள் . வாசலில் நின்றிருந்தவரை பார்த்து “அடடே தண்டபாணி ஐயா என்ன இவ்வளவு தூரம் வந்துட்டு வாசல்லயே நின்னுட்டு இருக்கீங்க. வீட்டுக்குள்ள வாங்க அம்மா உள்ள தான் இருக்காங்க” என்றாள்.
செம்பருத்தியை பார்த்ததும் ஒரு அடி பின்னால் நகர்ந்தவர் தன் தோளில் இருந்த துண்டை வாயில் வைத்து கல் அருந்திய வாசம் செம்பருத்திக்கு தெரிந்து விடக்கூடாது என்று அவர் மறைக்க முயற்சிக்க.. அதை பார்த்ததும் புரிந்து கொண்ட செம்பருத்தி “அம்மாவை பார்க்கணுமா? ஐயா” என கேட்டாள் . “ஆமாம்” என்று அவர் தலையாட்ட “ஒரு நிமிஷம் இங்கேயே இருங்க நான் போய் அம்மாவ வரச் சொல்றேன்” வேகமாக வீட்டுக்குள் சென்றாள் .
வீட்டுக்குள் வேகமாக செம்பருத்தி ஓடி வர வந்த வேகத்தில் அவள் அணிந்திருந்த பாவாடை தட்டி வாசல் படியில் பொத்தென தரையில் விழுந்தாள். அவள் விழுந்த சத்தம் கேட்டு ஹாலில் அமர்ந்து ஃபோன் பேசிக் கொண்டிருந்த செந்தூரப்பாண்டி அவசரமாக செம்பருத்தி இடம் வந்தவன் “என்ன செம்பா இது பார்த்து வரமாட்டியா? இப்படித்தான் கண்மண்ணு தெரியாம ஓடி வரணுமா.. கொஞ்சம் பொறுமையா வந்தால் தான் என்ன” என்று அவளை திட்டிக்கொண்டே தூக்கி விட்டான்.
“எனக்கு ஒன்னும் இல்ல அண்ணா ஓடி வந்ததுல பாவாடை தடுக்கி கீழ விழுந்துட்டேன் அவ்வளவுதான்” என்று தன் ஆடையை சரி செய்து கொண்டு கையில் இருந்த தூசியை தட்டி விட்டவள் உள்ளே செல்ல போக… அவள் கையை கவனித்த செந்தூரப்பாண்டி கீழே விழுந்ததில் அவள் முழங்கையில் காயம் ஏற்பட்டு லேசாக ரத்தம் கசிந்தது . “என்ன செம்பா இது உன் கைய பாரு ரத்தம் வலியுது” என்றவன் “வா முதல்ல மருந்து போடலாம்” என்றான்.
“அண்ணே இது என்ன பெரிய காயமாக உடனே மருந்து போடுறதுக்கு அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ சும்மா இரு” என்ற வழி செந்தூரபாண்டி இடம் “அண்ணா நம்ம தண்டபாணி ஐயா இருக்காருல்ல அவரு வாசல்ல வந்து நின்னுட்டு இருக்காரு அம்மாவ பாக்கணுமே நான் போயி அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன் அவர் வந்திருக்கிறார்” என்று அதுக்கப்புறம் நான் இதுக்கு மருந்து போட்டு இருக்கேன் என்றாள்.
“யாரு தண்டபாணி ஐயாவா அவர் எதுக்கு வாசலிலேயே நிக்கிறாரு உள்ள வர வேண்டியது தானே அதுவும் இந்த நேரத்தில் எதுக்கு வீட்டுக்கு வந்திருக்காரு” என்றான் புருவம் சுருக்கியபடி செம்பருத்தி சுற்றும் மற்றும் பார்த்தவள் செந்தூர பாண்டியை பார்த்து தன் கையை உயர்த்தி “இங்கே வா” என்று சைகை காட்டினாள். அவள் குறும்புத்தனமாக அழைப்பதை பார்த்து ரசித்தவன் “என்ன செம்பா” என்று அவள் முகத்தருகே தன் முகத்தை கொண்டு வந்தான் .
அவனுக்கு மட்டும் கேட்கும் படியாக “அண்ணா தண்டபாணி ஐயா ஃபுல்லா ஏத்துக்கிட்டு வந்திருக்காரு” என்று தன் கட்டை விரலை வாய்க்கு அவள் வாய்க்கருகே கொண்டு சென்று குடிப்பதை போல ஜாடை காட்டி கூறியவள். “அதனாலதான் அவர் வீட்டுக்குள்ள வராம வெளியவே நிக்கிறாரு ஏதோ முக்கியமான விஷயம் அம்மா கிட்ட பேசணும் போல இருக்கு அதான் வந்திருக்காரு. நீ இரு நான் போய் அம்மா கிட்ட சொல்லிட்டு வரேன்” என்றாள் .
செம்பா சொன்னதை கேட்டு சிரித்தவன் “இப்ப என்ன அம்மா கிட்ட போயி தண்டபாணி ஐயா வந்திருக்கிறதா சொல்லணும் அவ்வளவுதானே” என்றவன் தன் மொபைலை எடுத்து அகிலாண்டேஸ்வரிக்கு அழைத்தான் . அப்போதுதான் தன் அறையில் இருந்து சாப்பிடுவதற்காக கீழே இறங்கி வந்த அகிலாண்டேஸ்வரி கையில் இருந்த போன் அடிக்க அதை எடுத்து பார்த்தவர் அங்கே அவன் வாசலில் செம்பருத்தி கையைப் பிடித்தபடி அவள் கையில் இருந்த காயத்தை ஊதிவிட்டுக்கொண்டு நின்றிருப்பதை கவனித்தவர் உள்ளுக்குள் எள்ளும் கொள்ளும் வெடிக்க இறங்கி அவனிடம் வந்தார். “என்ன செந்தூரா வீட்டுக்குள்ள இருந்துட்டு எனக்கு போன் பண்ணி இருக்க” என்றார்
“அம்மா தண்டபாணி ஐயா உங்கள பாக்கணும்னு வெளிய வந்திருக்காரு அவர் உங்களுக்காக தான் காத்துட்டு இருக்காரு அதை சொல்லத்தான் உங்களுக்கு கால் பண்ணினேன்” என்றான் .
“சரி நான் பாக்குறேன்” என்றவர் செம்பருத்தி இடம் வந்து அவள் கையில் இருந்த காயத்தை பார்த்து “என்ன செம்பா கையில காயமா இருக்கு ரத்தம் வேற வருது” என்றார் அக்கறையாக இருப்பது போல நடித்து
அவர் பேசுவதை பார்த்து செம்பருத்தி பேசவே தயங்கியபடி நின்று இருக்க.. “உங்கள கூப்பிடத்தான் ஓடிவந்தமா கால் தடுக்கி கீழே விழுந்துட்டா ம்மா… அதுல தான் இந்த காயம் நீங்க போய் தண்டபாணி ஐயாவ பாத்துட்டு வாங்க. நான் இவளுக்கு மருந்து போட்டு விடுறேன்” என்றவன் செம்பருத்தி அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
செம்பருத்தி உள்ளுக்குள் கடித்துக் கொட்டுக் கொண்டே வாசலுக்கு வந்தவர் தண்டாயுதபாணி நின்று இருப்பதை பார்த்து “என்ன இந்த நேரத்துல வந்து இருக்கீங்க என்ன விஷயம் எதுவாயிருந்தாலும் உள்ள வந்து பேச வேண்டியதுதானே. இது என்ன வாசலுக்கு வெளியே நிக்கிறது. அதுவும் இல்லாம நான் வந்து தான் உங்களை பார்க்கணுமா” என்று சற்று அதிகார தோரணியில் அகிலாண்டேஸ்வரி பேசினார்.
“அம்மா ஒரு முக்கியமான விஷயம் பேசறதுக்காக தான் இந்த நேரத்துல வந்தேன். என்ன தப்பா நினைச்சுக்காதீங்க நான் நம்ம மூக்கையன் தோட்டத்திலிருந்து தான் வரேன்” என்று தண்டபாணி கூற …
அவர் மூக்கையன் தோட்டம் என்று சொன்னதும் புரிந்து கொண்ட அகிலாண்டேஸ்வரி “ம்ம்ம்…. சொல்லுங்க என்ன விஷயம்” என்றார் .
“அம்மா நம்ம மூக்கையும் தோட்டத்துக்கு நான் போயிருந்த போது அங்கே புதூரில் இருந்து கர்ணனும் அங்கு வந்திருந்தான்” என்றார் .
“அவன் அங்க வரலைனா தான் அதிசயம். அவன் அங்க வந்தா என்ன வராட்டி எனக்கு என்ன அதை எதுக்காக இப்ப என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கீங்க . இதை சொல்லத்தான் இந்த நேரத்துல இவ்வளவு தூரம் வந்திங்களா?” என்றார் கடுப்பாக .
“ஐயோ அப்படி எல்லாம் இல்லம்மா… அந்த கர்ணன் மட்டும் அங்கே வந்து இருந்தா நான் ஏன் அதை உங்ககிட்ட சொல்ல போறேன். அவன் கூட நம்ம தம்பி துருவனும் தான் வந்திருந்தார்” என்றார் .
“யாரு என் தம்பி துருவனா!!” என்ற அகிலாண்டேஸ்வரி துருவனுக்கும் கர்ணனுக்கும் பழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் இருவரும் ஒன்றாக கல் அருந்தும் அளவிற்கு நெருக்கம் என்று தற்போது தான் அவருக்கு தெரிந்தது அதை யோசனையோடு தண்டபாணி பார்க்க …
“ நம்ம தம்பி துருவன் தான் வந்திருந்தார். அவங்க ரெண்டு பேரும் நம்ம ஊர்ல பெட்ரோல் பங்க் டெண்டரை எடுக்க போறதா பேசிகிட்டு இருந்தாங்க. நம்ம செந்தூரபாண்டி தம்பியும் அந்த பெட்ரோல் பங்க்க டெண்டர் எடுக்கிறது நம்ம எல்லாருக்குமே தெரியுமே அதனாலதான் எதுக்கும் இருக்கட்டுமேன்னு உங்க காதல போட்டு வைக்கலாம்னு வந்தேன்” .
“தம்பி எடுக்க போற பெட்ரோல் பங்குக்கு அவங்களும் எதிர்த்து ஏலம் எடுக்க போறதா பேசிக்கிட்டாங்க … அவங்களுக்கு நம்ம தம்பியை கண்டா சுத்தமாவே பிடிக்கல நம்ம தம்பியை வாய்க்கு வந்ததெல்லாம் அந்த கர்ணனும் அவன் கூட இருந்த அவன் எடுப்பும் நமது துருவன் தம்பிகிட்ட தப்பு தப்பா சொல்லிக் கொடுத்துட்டு இருந்தாங்க. எனக்கு இதெல்லாம் கேட்டு சரியா படல அதனாலதான் அதை உங்க கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்” என்றார் .
அவர் பேசுவதை எல்லாம் யோசனையாக கேட்டுக் கொண்டிருந்த அகிலாண்டேஸ்வரி “சரி நான் பாத்துக்கிறேன் நீங்க கிளம்புங்க” என்றார். அவர் கிளம்ப போக “ஒரு நிமிஷம்” என்று அவரை அழைத்த அகிலாண்டேஸ்வரி “நீங்க இந்த விஷயத்தை செந்தூரபாண்டிகிட்ட சொல்ல வேண்டாம். ஏற்கனவே அவனுக்கும் துருவனுக்கும் ஆகாது. இந்த விஷயம் மட்டும் அவனுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடும் நானும் இதைப்பற்றி அவன்கிட்ட எதுவும் பேசிக்க மாட்டேன்” என்று சொல்ல… “நான் எதுவும் தெரியாத மாதிரி இருந்துக்கறேன் மா…”என்று தலையாட்டியவர் அங்கிருந்து கிளம்பினார் .
அவர் சென்ற பின்பும் நீண்ட நேரம் அங்கே ஏதோ யோசனையோடு அகிலாண்டேஸ்வரி நின்றிருந்தார் இத்தனை நாள் இல்லாமல் எதற்காக அதுவும் இத்தனை வருடம் கழித்து அந்த பெட்ரோல் பங்கை செந்தூரபாண்டி டெண்டர் எடுக்கும் வேளையில் கர்ணனும் துருவனும் சேர்ந்து அவனுக்கு எதிராக வேலை செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள் என்று யோசனையுடனே நின்று இருந்தார் .
அகிலாண்டேஸ்வரி யோசனையாக நின்று இருக்க.. அவர் பின்னால் இருந்து அவர் தோளை தொட்ட செந்தூரபாண்டி அம்மா!! என்று சற்று குரலை உயர்த்தி அழைத்தான். அவன் குரலில் திடுக்கிட்டவர் தாங்கள் பேசியதை எல்லாம் செந்தூரபாண்டியன் கேட்டுவிட்டானோ என்று அதிர்ச்சியில் திரும்பி அவனை பார்த்தார்
Episode- 29
செந்தூரன் அருகில் வந்து நின்றிருப்பதை பார்த்ததும் “இவன் எப்போ இங்க வந்தான்? ஒருவேளை தானும் தண்டபாணியும் பேசயதை எல்லாம் செந்தூரபாண்டின் கேட்டிருப்பானோ . ஏற்கனவே துருவனுக்கும் இவனுக்கும் ஏழாம் பொருத்தம் இந்த விஷயம் தெரிஞ்சிச்சின்னா இன்னும் பிரச்சினை பெருசாகுமே, இப்ப என்ன செய்றது” என்று யோசனையோடு செந்தூரப் பாண்டியனின் முகத்தை அகிலாண்டேஸ்வரி பார்க்க …
ஆனால் செந்தூரப் பாண்டியனோ “என்னம்மா ஏதோ யோசனைல நின்னுட்டு இருக்கீங்க, தண்டபாணி ஐயா எங்கே? கிளம்பிட்டாரா? என்ன சொன்னாரு? எதுக்காக இந்த நேரத்துல வந்திருக்காரு?” என மூச்சுவிடாமல் பேசினான் கேட்டான் .
அவன் பேசியதிலேயே தானும் தண்டபாணியும்,கர்ணன் துருவனை பற்றியும் பெட்ரோல் பங்க் விஷயத்தைப் பற்றியும் இவ்வளவு நேரம் பேசியது எதுவும் செந்தூர பாண்டியனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று உணர்த்தவர், “ஒன்னும் இல்லப்பா நம்ம சங்கவி கல்யாணம் வருது இல்லையா அதுக்கு எதுவும் விசேஷத்துக்கு தேவைப்படுதா? அவரோட ஒத்தாசை எதுவும் நமக்கு வேணுமானு கேட்டுட்டு போக வந்திருக்காரு நான் பேசி அனுப்பிட்டேன்” என்று சொல்லி சமாளித்த அகிலாண்டேஸ்வரி .
“நீ சாப்பிட்டியா?” என்று செந்தூரபாண்டியனிடம் கேட்க “இல்லம்மா இனிமேல் தான்” என்றான், “சரிப்பா நம்ம ரெண்டு பேரும் போய் சாப்பிடலாம் எனக்கும் பசிக்குது” என்று செந்தூரப் பாண்டியனை alaithavaaru வீட்டிற்குள் சென்றாள்.
தன் அம்மா தன்னிடம் இருந்து எதையோ மறைக்கிறார் என்று உணர்ந்த செந்தூரன் அதை அவரிடம் கட்டிக்கொள்ளமால் அமைதியாக இருந்துவிட்டான்.
மறுநாள் காலை கர்ணன் சொன்னது போல பனையூரில் இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு டெண்டர் கோட் செய்வதற்காக துருவன், கர்ணன்,புகழேந்தி மூவரும் கிளம்பிச் சென்றனர் .
சுற்றுப்பட்டு மொத்த கிராமத்திற்கும் பொதுவான அரசு அலுவலகத்திற்கு மூவரும் வந்திருந்தனர் . இவர்களைப் போலவே நிறைய பேர் இன்று அந்த பெட்ரோல் பங்க் டெண்டருக்காக அப்ளை செய்யnவந்திருந்தனர் . அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெட்ரோல் பங்க் டென்டரை ஏலம் எடுப்பதற்கான தொகையை கோட் செய்தவர்கள் அங்கிருந்த பெட்டியில் விண்ணப்பங்களை சேர்த்தனர் .
கர்ணன், துருவன் இருவருமே தாங்கள் ஏலம் எடுப்பதற்கான தொகையை கலந்து பேசி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டு இருந்தனர், அப்போது அதே பெட்ரோல் பங்கிற்கு கோட் செய்வதற்காக செந்தூர பாண்டியனும் அங்கு வந்தான், வந்தவன் அங்கே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து துருவனும், கர்ணனும் தீவிரமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் முகம் சுருக்கினான், “ இவனுங்க எங்க இங்கே இருக்கானுங்க… ஒருவேளை இவங்களும் இந்த பெட்ரோல் ஏலம் எடுக்க வந்திருக்காங்களோ” என்று யோசனையோடு உள்ளே சென்றவன். அங்கு இருந்த பியூனை அழைத்து அவர்கள் இருவரையும் காட்டி “ என்று கேட்டான், அவர்கள் கோட் செய்வதிற்காக வந்திருக்கிறார்கள் என்று சொன்னதும் “தான் நினைச்சது சரியா தான் போயிருச்சு ” என நினைத்த செந்தூரப் பாண்டியன் “யார் என்ன செய்தா எனக்கு என்ன நான் கோட் செய்திருக்கும் தொகையை யாருமே ஈடு செய்ய முடியாது” என்று நினைத்தவன். தான் ஏற்கனவே கொண்டு வந்திருந்த விண்ணப்பத்தை அங்கே வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் போட்டுவிட்டு கிளம்பினான் .
இங்கு செந்தூரப் பாண்டியன் வந்து சென்றதோ இவர்களைப் பற்றி விசாரித்ததோ, எதுவுமே துருவனுக்கு தெரியாது இவர்கள் டெண்டர் கோட் செய்து முடித்ததும். அந்த கவரை கொண்டு வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுவிட்டு வெளியே வந்தனர். துருவனிடம் “ இன்னும் ரெண்டு நாள்ல நமக்கு டெண்டர் கிடைக்கப் போகுது சந்தோஷமா, இந்த விஷயத்தை கொண்டாடணும்” என்றான் கர்ணன்.
“என்ன கர்ணா என்னவோ டெண்டர் நமக்கே கிடைச்ச மாதிரி இவ்வளவு கான்ஃபிடன்சா பேசுற, நம்மள மாதிரியே நிறைய பேர் டெண்டர் கோட் பண்ணி இருக்காங்க இல்ல.. யாருக்கு வருதுன்னு பார்ப்போம்” என்றான் துருவன் .
“நீ வேணா பாரு கண்டிப்பா இந்த டெண்டர் நமக்கு தான் கிடைக்கப் போகுது எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்றான் கர்ணன் .
தன் நண்பனின் நம்பிக்கையை நினைத்து சந்தோஷப்பட்ட துருவன் “சரி கர்ணா நீ சொன்னது போலவே இந்த டெண்டர் நமக்கே கிடைக்கும் நானும் உன்ன மாதிரியே நாம ஜெயிக்கணும்னு அந்த கடவுள் கிட்ட வேண்டுகிறேன்” என்றான் .
பெட்ரோல் பங்கிற்கான டெண்டரை கோட் செய்துவிட்டு யோசனையோடு வீட்டிற்குள் நுழைந்தான் செந்தூரப் பாண்டியன். ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த அகிலாண்டேஸ்வரி… செந்தூரபாண்டியன் முகம் ஏதோ யோசனையில் இருப்பதை கவனித்தவர் “செந்தூரா என்ன ஆச்சு? ஏதோ யோசனையிலேயே வர.. போன காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சா?” என கேட்டார் .
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லம்மா எல்லாமே நல்லபடியா முடிஞ்சுடுச்சு. இந்த வருஷம் டெண்டர் நமக்கு தான் கிடைக்கப்போகுது அதுல நான் உறுதியாக இருக்கேன்” என்றான்.
“நீ சொன்னது நல்ல விஷயம் தானே அப்ரோம் உன் முகம் ஏதோ யோசனையா இருக்கு. எதுவும் பிரச்சனையா?” என்றார் அகிலாண்டேஸ்வரி .
அலுவலகத்தில் கர்ணன் துருவன் இருவரையும் சேர்த்து வைத்து பார்த்ததை எப்படி தன் அம்மாவிடம் சொல்வது என்று யோசித்தான் அவரிடம் சொன்னால் அவருக்கும் தன்னை போலவே குழப்பமும் டென்ஷன் தான் அதிகமாகும், இத்தனை வருடத்தில் அவர் தம்பியை பற்றி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அவர்களை சென்று பார்த்ததும் கூட இல்லாத நிலையில். துருவனை பற்றி எதுவும் பேசி அம்மாவின் மனநிலையை கெடுக்க வேண்டாம் என முடிவு செய்தவன் “ஒன்னும் இல்லமா ரைஸ்மில்ல ஒரு முக்கியமான வேலை அதுக்கு போகணும் அந்த யோசனையில் தான் வந்தேன்” என்றான் .
“சரிப்பா முதல்ல வந்து சாப்பிடு அதுக்கப்புறம் நீ ரைஸ்மில்க்கு கிளம்பலாம்” என்று தன் மகனை அழைத்துக் கொண்டு போய் அவனுக்கு சாப்பிட தானே எடுத்து வைத்தார் . செந்தூர பாண்டியனும் சாப்பிட்டு முடித்தவன் ரைஸ் மில்லிற்கு கிளம்பி வெளியே வர… அங்கே செம்பருத்தி தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருப்பதை பார்த்தான் அவளை பார்த்ததும் இவ்வளவு நேரம் இறுக்கமாக இருந்த மனநிலை சற்று நிம்மதி அடையவே செம்பருத்தியை நோக்கி சென்றான்.
செந்தூரப் பாண்டியன் வருவதை பார்த்த்தும் அவனிடம் ஓடி வந்தவள் “அண்ணா நீ போன விஷயம் என்ன ஆச்சு? எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சா? கண்டிப்பா உனக்கு அந்த டெண்டர் கிடைச்சிருந்தானே” என்றாள் ஆர்வமாகவும் ஆசையாகவும் .
அவள் ஆர்வத்தை பார்த்து சந்தோஷமடைந்த செந்தூரப் பாண்டியன் “கண்டிப்பா நமக்குத்தான் டெண்டர் கிடைக்கும், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்றான். “அதானே என் அண்ணன் கை வச்ச எந்த வேலையும் தப்பா போனதில்லை. என் அண்ணன் தொட்ட இடம் எல்லாம் கண்டிப்பா வெற்றி தான் கிடைக்கும். உனக்காக நான் அந்த முப்பாத்தம்மன்கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன். கண்டிப்பா உனக்கு இந்த டெண்டர் கிடைக்கும் அண்ணா” என்றாள் செம்பருத்தி .
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் மீது அளவு கடந்து பாசம் வைத்திருக்கும் தன் அம்மா போலவே, செம்பாவும் தன்னிடம் பாசம் வைத்து இருப்பதை பார்த்து பெருமிதம் கொண்டான். தன் தாயும் தங்கையும் போன்ற ஒரு உறவு தனக்கு கிடைத்ததற்கு பெரும் பாக்கியம் அடைந்திருக்கிறேன், என்று மனதில் பெருமிதம் கொண்டான்.
இரண்டு நாட்கள் வேகமாக நகர்ந்தது, காலை 10 மணிக்கு பனையூரில் அமைந்து உள்ள அரசு அலுவலகத்திற்கு பெட்ரோல் பங்க் டெண்டர் எடுக்கும் விஷயமாக ஒவ்வொருவராக வரத் துவங்கியிருந்தனர் .
செந்தூரப் பாண்டியனும் அவசர அவசரமாக டெண்டர் அறிவிக்கும் இடத்திற்கு செல்வதற்காக கிளம்பி மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டு இருந்தான், பூஜை அறையில் பூஜை எல்லாம் முடித்துவிட்டு பெட்ரோல் பங்கின் டெண்டர் செந்தூரபாண்டிக்கு கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கையில் ஆரத்தித் தட்டோடு செந்தூர பாண்டியனின் முன்பு வந்து நின்றாள் செம்பருத்தி .
சிரித்த முகமாக மங்களகரமாக தன் தங்கை வந்து நிற்பதை பார்த்து சந்தோஷமடைந்து செந்தூர பாண்டியன்,அவள் நீட்டிய தட்டில் இருந்து விபூதியை எடுத்து தன் தங்கைக்கு வைத்துவிட்டு தானும் வைத்துக் கொண்டவன், “என்ன செண்பா இன்னைக்கு பூஜை எல்லாம் பலமா இருக்கு” என்றான் .
“ஆமா அண்ணா இன்னிக்கு நீ போற காரியம் நல்ல படியா முடியனும்னு அந்த கடவுள் கிட்ட பிரார்த்தனை பண்ணி பூஜை செய்தேன்” என்றாள் .
“நீ வேண்டுனதுக்காகவே கண்டிப்பா அந்த பெட்ரோல் பங்கோட டெண்டர் நமக்குத் தான் கிடைக்கும், எனக்கு அந்த நம்பிக்கை ரொம்பவே இப்போ வந்துடுச்சு” என்றான்.
அவர்கள் இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்பான,அகிலாண்டேஸ்வரி “இவ வேண்டிக்கிட்டு தான் என் பையனுக்கு எல்லாம் கிடைக்குனுமா? என் பையனோட மனசுக்கு எல்லாமே அவனுக்கு சாதகமாக தான் நடக்கும் வந்துடா பெரிய இவளாட்டம்” என்று செம்பருத்தியை மனதுக்குள் வறுத்தெடுத்தவர், சிரித்த முகமாக செந்தூரப் பாண்டியன் முன்பு வந்து, “என்ன செந்தூரா கிளம்பியாச்சா?” என்றார் .
“ஆமாம்மா கிளம்பிட்டேன் நேரம் ஆயிடுச்சு” என்றவன் “சரிமா நான் போயிட்டு அங்க ரிசல்ட் எப்படின்னு பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்றேன்” என்று கிளம்ப போக அப்போது செந்தூரப் பாண்டியனின் போன் அடித்தது .
அகிலாண்டேஸ்வரியிடம் பேசிக்கொண்டே போனை எடுத்த செந்தூரப்பாண்டியன் போனை பார்க்க ரைஸ் மில்லில் இருந்து தான் அவனுக்கு அழைப்பு வந்திருந்தது. போனை அட்டென்ட் செய்து காதில் வைக்க எதிர்ப்புறம் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தான் செந்தூர பாண்டியன்
“என்ன அண்ணா சொல்றீங்க அப்படியா? எப்படி கவனிக்காம விட்டீங்க… சரி பொறுங்க நான் நேரா அங்க தான் கிளம்பி வரேன்” என்று போனை வைத்தவன் திரும்பி, அகிலாண்டேஸ்வரியை பார்க்க “என்னப்பா ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க… யாரு போன் பண்ணி இருந்தா?” என்றார் அகிலாண்டேஸ்வரி .
“அம்மா நம்ம ரைஸ் மில்லில் இருந்து தான் போன் வந்துச்சு ரைஸ் மில்ல ஒரு அரவை மிஷின் ரிப்பேர் ஆகி இருந்ததுன்னு சொன்னேனே ஞாபகம் இருக்காமா? அத சரி பண்ண ஆள வரச் சொல்லி இருந்தேன், அந்த ஆளு என்ன பண்ணினான்னு தெரியல மோட்டர் போட்டுவிட்டு வேலை பார்த்து இருக்கான் மோட்டார்க்குள்ள, அவன் கையை சிக்கி காயம் ஆயிடுச்சின்னு போன் வந்துச்சு நான் ரைஸ் மில்லுக்கு கிளம்பிட்டேன் ம்மா …”
“வேணா செந்தூர நான் ரைஸ்மில்லுக்கு போய் பார்க்கிறேன்.டெண்டருக்கு நேரமாச்சு நீ கெளம்பு” என்றார் அகிலாண்டேஸ்வரி . “இல்லம்மா நீங்க ரைஸ் மில்க்கு போனா சரியா இருக்காது, ஒன்னு பண்ணுங்க நீங்க டெண்டர் நடக்கிற இடத்துக்கு போயிடுங்க நான் ரைஸ் மில்க் போய் அங்கே என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு வரேன்” என்றான் .
அவன் சொல்வதும் சரிதான் என்று தலையாட்டி, அகிலாண்டேஸ்வரி செந்தூரப் பாண்டியனை ரைஸ்மிலுக்கு அனுப்பி வைத்துவிட்டு செம்பருத்தி இடம் திரும்பி “என் மகன் ஒரு நல்ல காரியத்திற்காக சந்தோசமா வெளியே கிளம்பி போகும்போது அவன் முன்னாடி வந்து நிக்காதன்னு உன்கிட்ட எத்தனை முறை சொல்றது இப்ப பாரு உன் தரித்திரம் புடிச்ச மூஞ்சியால என் மகன் எவ்வளவு சிரமப்படுகிறான். இன்னிக்கு மட்டும் அந்த டெண்டர் என் மகனுக்கு கிடைக்காமல் போகட்டும் அப்புறம் வந்து உனக்கு இருக்கு”, என்று செம்பாவை முறைத்துவிட்டு அகிலாண்டேஸ்வரி டெண்டர் நடக்கும் இடத்திற்கு கிளம்பினார் .
Episode-30
ஒரே ஒரு முத்தம் தா… டி!!
அகிலாண்டேஸ்வரியிடம் “பெட்ரோல் பங்க் டெண்டர் விஷயம் என்ன ஆனது நமக்கு தான் அந்த டெண்டர் கிடைத்ததா” என்று ஆர்வமாக செந்தூரபாண்டியன் கேட்க.. அவன் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை பார்த்து செந்தூரபாண்டியனிடம் “எப்படி அந்த டெண்டர் தங்கள் கைவிட்டு போனதை சொல்வது” என யோசனையோடு அவர் நின்றிருந்தார்.
அகிலாண்டேஸ்வரியின் முகமாறுதலை கண்ட செந்தூரபாண்டியனுக்கு ஓர் அளவு புரிந்து விட்டது. அகிலாண்டேஸ்வரியே சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்காதவன் “பரவாயில்ல விடுங்கம்மா இந்த முறை நம்மளால அந்த டெண்டர் எடுக்க முடியலன்னா போகட்டும் பரவாயில்ல அடுத்த முறை கண்டிப்பா நான் எடுத்து விடுவேன் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்றால் செந்தூரபாண்டியன்.
வெற்றி தோல்வி இரண்டையுமே எப்பொழுதும் சகஜமாக எடுத்துக்கொண்டு தன் மனநிலையை ஒரே போல சமநிலையில் வைத்திருக்கும் தன் மகனை நினைத்து ஆச்சரியப்பட்டார் அகிலாண்டேஸ்வரி.
”உன்னை விடவும் செந்தூரபாண்டியன் மிகவும் பக்குவத்தோடு பேசுவதை பார்த்தவர் அவன் அருகில் வந்து செந்தூரபாண்டியனின் தோளில் கைவைத்து தட்டிக் கொடுத்தவர் பரவாயில்ல விடுப்பா நானும் அதைத்தான் உன்னிடம் சொல்லலாம் என்று நினைத்தேன் என்றார்.
“ சரி விடுங்கம்மா வாங்க எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு எடுத்து வைக்கிறீங்களா. நான் கை கால் கழுவிட்டு வந்துடுறேன்” என்றவன் அவரை வீட்டிற்குள் அழைத்து வந்தவன் தன் அறைக்கு செல்ல… அகிலாண்டேஸ்வரி நின்ற இடத்தில் இருந்து செந்தூரபாண்டியனை பார்த்துக்கொண்டு இருந்தவர் அவனுக்கு உணவு எடுத்து வைக்க சென்றுவிட்டார்..
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் செந்தூரன் காலையிலிருந்து எங்கும் செல்லாமல் வீட்டிலேயே தான் இருந்தான். அவனுக்கு வாய்க்கு ருசியாக விதவிதமாக செம்பருத்தி சமைத்து போட்டாள்.
தான் காலையில் எழுந்து வந்ததிலிருந்து செம்பருத்தி ஓய்வு உளைச்சல் இல்லாமல் எப்படி தனக்காக பார்த்து பார்த்து வேலை செய்வதை பார்த்தவனுக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. வேண்டாம் போய் சிறிது நேரம் ஓய்வெடு என்று சொன்னாலும் கேட்காமல் செந்தூரபாண்டியனை கவனிப்பதிலேயே குறியாக இருந்தாள்..
மாலை 6 மணி போல செந்தூரன் எங்கேயோ வெளியே செல்வதற்காக டிப்டாப்பாக உடைய அணிந்து தன் கூலர்சை கையில் வைத்து சுழற்றிய படி விசில் அடித்துக் கொண்டே கீழே இறங்கி வர… ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டில் உள்ளவர்கள் அவரவர் அறையில் அடைந்து கிடந்தனர். ஹாலில் அமர்ந்து டிவியில் போடப்பட்ட திரைப்படத்தை மும்முரமாக பார்த்துக் கொண்டிருந்த செம்பருத்தி படிகளில் இறங்கி வந்த செந்தூரனை பார்த்து ஆச்சரியமானாள்.
வேகமாக எழுந்து செந்தூரனிடம் வந்தவள் அண்ணே என்ன இந்த நேரத்துல எங்கேயோ கிளம்பிட்ட மாதிரி இருக்கு. அதுவும் இவ்வளவு நல்ல டிரஸ் பண்ணி இருக்க… என்றால் அவனை கீழும் மேலும் பார்த்துவாறு .
“ஐயையோ இந்த நேரத்துல யாரும் வெளியே இருக்க மாட்டாங்கன்னு நினைச்சு தானே யாரு கண்ணுலையும் படாம கிளம்பி போகணும்னு நினைச்சு வந்தேன். ஆனால் பாப்பா கண்ணுல மட்டும் நான் தப்பிக்கவே முடியாது சரியா என்ன மோப்பம் பிடிச்சிடுறா” என்று மனதில் நினைத்தவன் “அது…அது அது ஒன்னு இல்ல பாப்பா… காலையிலிருந்து வீட்டிலேயே இருந்து போர் அடிச்சதா அதான் நம்ம தோட்டத்து பக்கம் அப்படியே போயிட்டு வரலாம்னு கிளம்பினேன்”என்றான்.
“தோட்டத்துக்குத் தானே போற அதுக்கு எதுக்கு இவ்வளவு டிட்டப்பா டிரஸ் பண்ணி இருக்க. அங்க எப்படியும் வயல் வரப்புல தான் சுத்தி திரிய போற. அதுக்கு இவ்வளவு நீட்டா பேண்ட் சர்ட் போட்டுட்டு போகணுமா? சாதாரணமா வீட்டில் போடுற டிரஸ் போட்டுட்டு போனா ஆகாதா?” என்றாள் செம்பருத்தி உரிமையாக.
”இப்ப என்ன நான் இந்த டிரஸ் எல்லாம் போட்டுட்டு வெளியே போகக்கூடாதுங்கிறயா?” என்றவன் “சரி என் பாப்பாவுக்கு பிடிக்காததை நான் எப்பவும் செய்ய மாட்டேன். இரு நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்” என்று செந்தூரன் அதன் றைக்கு செல்ல போக…
அவன் கையைப் பிடித்து நிப்பாட்டிய செம்பருத்தி “அண்ணா நான் சும்மாதான் சொன்னேன். நீ இவ்வளவு டிப் டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு எங்க போறன்னு எனக்கு தெரியாது நினைச்சுட்டியா? அதுவும் இந்த நேரத்துல போறேன்னா கண்டிப்பா நீ அண்ணியை பாக்குறதுக்காக தான் போற” என்றாள்.
“அடப் பாவமே நான் என் ஆளு கூட பேச போறது இவளுக்கு எப்படி தெரியும் சரியா கண்டுபிடிச்சு கேட்கிறாளே!!” என்று விழித்தவாறு செந்தூரன் செம்பருத்தியை பார்க்க…
“என்னன்னா திருத்திருன்னு முழிக்கிற.. அப்போ நான் சொன்னது சரிதானே நீ அண்ணியை பாக்க தான் கிளம்பிட்ட கரெக்டா” என்றாள்.
ஆமாம் என்று சிரித்துக்கொண்டே செந்தூரபாண்டியன் தலையாட்ட…” சரி சரி சீக்கிரமா கிளம்பு நீ இந்த நேரத்தில் கிளம்பி போறது நம்ம வீட்டிற்கு யாராவது பார்த்துட்டா அப்புறம் அவ்வளவுதான் சீக்கிரம் கிளம்பு” என்று செந்தூர பாண்டியனை அவசரப்படுத்த தன் தங்கச்சி கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்தவன் “அண்ணன் சீக்கிரம் போயிட்டு வந்துடறேன் டா” என்று வேகமாக வெளியே கிளம்பினான்.
இங்கே பெட்ரோல் பங்க் டெண்டர் தங்களுக்கு கிடைத்துவிட்டது செந்தூரபாண்டிக்கு தெரிந்தால் அவன் தங்களிடம் எதுவும் தகராறு செய்வான் என்று எதிர்பார்த்த கர்ணனுக்கு ஆச்சரியமே இந்த விஷயத்தை கேள்விப்பட்டதிலிருந்து செந்தூரபாண்டியன் இதிலிருந்து மொத்தமாக ஒதுங்கிக் கொண்டான் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று.
அவர்கள் டென்டருக்கு எடுத்த பெட்ரோல் பங்க் நல்ல விதமாக செயல்பட ஆரம்பித்தது. அவர்கள் எதிர்பார்த்ததை விட சுற்றுப்பட்டு கிராமத்தில் இருந்த அனைத்து மக்களும் இவர்கள் பெட்ரோல் பங்கில் தான் தங்கள் வாகனத்திற்கும், உலவு ஓட்டும் டிராக்டர்களுக்கும் மற்ற வாகனத்திற்கும் பெட்ரோல், டீசல் போட இங்கே தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்க 24 மணி நேரமும் கர்ணன் துருவன் ஏலத்திற்கு எடுத்த பெட்ரோல் பங்க் பிஸியாகவே இருந்து அவர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டி தந்தது.
எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டு இருந்தது கர்ணனும் துருவனும் பெட்ரோல் பங்கை பார்ப்பதற்கும், அவரவர் தொழிலை பார்ப்பதற்குமே நேரம் அதிகம் செலவிடுவதால் இருவரும் கள்ளுக்கடை பக்கமே போய் நீண்ட நாட்கள் ஆனது .
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இருவருக்குமே பெரிதாக எந்த வேலையும் இல்லை மாலை வரை பெட்ரோல் பங்கில் இருவரும் நேரத்தை செலவிட… பெட்ரோல் பங்கில் வேலையாட்களை மற்றதை பார்க்கச் சொல்லிவிட்டு கிளம்பி மூக்கையின் தோட்டத்திற்கு சென்றனர்.
வழக்கம்போல அவர்களோடு புகழேந்தியும் சேர்ந்து கொண்டு கள்ளுக்கடையில் வேண்டியது சாப்பிடுவதும் வயிறு முட்ட கல் குடிப்பதுமாக இருந்தனர்.
அதிகமாக கல் அருந்தியதால் இருவருக்கும் போதை தலைக்கேறி இருக்க… “சரிடா மாப்பிள்ளை ரொம்ப நேரம் ஆயிடுச்சு உன் தங்கச்சி அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கா… அவ திரும்பி வரதுக்குள்ள நான் வீட்டுக்கு போயிடணும். இல்லையின்னா லேட்டா போனா கத்துவா நான் கிளம்புறேன் காலையில பார்க்கலாம்” என்று தடுமாறிய படியே துருவன் தன் புல்லட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
இங்கே மீனாட்சியை பார்ப்பதற்காக தன் தோட்டத்தில் காத்திருந்தான் செந்தூரன் . அவள் வருவதற்கு முன்பாகவே தோட்டத்திற்கு காவல் இருந்தவர்களை இரவு வரும்படி வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தான்.
“ நான் வந்து அரை மணி நேரத்துக்கு மேல ஆச்சு இந்த கோல்ட் பிஷ் ஆளையே காணோம். வரட்டும் இன்னைக்கு அவளுக்கு இருக்கு” என்று கைகளை பரபரவென தேய்த்துக்கொண்டு தோட்டத்தில் இங்கும் மங்கும் உலாத்திக் கொண்டிருந்தான்.
தோட்டத்திற்குள் நுழையும் போதே செந்தூரனை பார்த்த மீனாட்சி “ஏற்கனவே லேட் ஆயிடுச்சு இன்னைக்கு இவர எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலயே” என்று நினைத்துக்கொண்டே செந்தூரனை ரசித்தபடி அவனை நோக்கி நடந்து வந்தாள்.
மீனாட்சி உள்ளே நுழைந்ததும் தோட்டத்தில் காவலுக்கு வைத்திருந்த நாய்கள் குறைக்க ஆரம்பிக்க… அவற்றை அதட்டி அடக்கிய செந்தூரப் பாண்டியன் திரும்பிப் பார்த்தான். அங்கே பாவாடை தாவணியில் அழகாக தலை பின்னி மல்லிகை பூ சரம் வைத்து கையில் ஒரு ஒயர் கூடை உடன் அவனை நோக்கி சிரித்த முகமாக நடந்து வந்தாள் அவனது கோல்ட் பிஷ்.
மீனாட்சி பார்த்த சந்தோஷத்தில் அவளை நோக்கி வேகமாக வந்த செந்தூரன் அவளை அப்படியே இடையை கட்டிக்கொண்டு தலைக்கு மேல் தூக்கி கரகரவென சுற்றினான்.
”ஐயோ மாமா…என்ன இது என்ன இறக்கி விடுங்க. யாரும் நம்மள பாத்துட்டு போறாங்க. சீக்கிரம் இறக்கி விடுங்க” என்று செந்தூரனின் தோளில் அடித்தாள் மீனாட்சி.
“ பாத்தா பாத்துட்டு போகட்டுமே அப்படியாவதும் யாராவது போய் என் அம்மாகிட்ட நம்மள பத்தி வத்தி வைக்க மாட்டாங்களான்னு நானும் காத்துக்கிட்டு இருக்கேன். அதுக்கப்புறம் நம்ம காதலை என் அம்மாகிட்ட நான் போய் தயங்கி பேச வேண்டிய அவசியம் இருக்காது. என் கிட்டே இதை பத்தி கேட்டா ஆமா இவளத்தான் காதலிக்கிறேன். கல்யாணம் பண்ணவும் ஆசைப்படுகிறேன்னு என் அம்மாகிட்ட சொல்லிருவேன்” என்றான் செந்தூரன்.
அவளைப் பார்த்துக் கொண்டே சுற்றியவன் மெல்ல கீழே இறக்கிவிட்டு மீனாட்சியின் இடையை கட்டிக்கொண்டு செந்தூரன் நின்று இருக்க… அவன் கையை விலகிவிட்டு கூச்சதோடு தள்ளி நின்ற மீனாட்சி. “உங்க அம்மாகிட்ட மட்டும் பர்மிஷன் வாங்கினால் போதுமா? எங்க வீட்ல எல்லாம் கேட்க வேண்டியது இல்லையா? “ என்றாள்.
ஏன் கேட்கக்கூடாது “உங்க வீட்லயும் சம்மதம் வாங்கி தானே கோல்ட் பிஷ் என் வீட்டுக்கு தூக்கிட்டு வருவேன்” என்றவன். “ஆமா இன்னிக்கு ரொம்ப அழகா டிரஸ் பண்ணி இருக்க, தலையில பூவெல்லாம் வச்சிருக்க…என்னை பார்க்க வரதுக்கு தானே இந்த மேக்கப்”எல்லாம் என்றான்.
“என்னை பார்த்தா மேக்கப் போட்டுட்டு வந்த மாதிரி தெரியுதா உனக்கு. வீட்ல எப்பவுமே நான் தாவணி தான் கட்டி இருப்பேன் அதனாலதான் இந்த டிரஸ் போட்டுட்டு அப்படியே வந்துட்டேன். லேசா தல சீவி பூ வச்சேன் கண்ணுக்கு லைட்டா காஜல் அவ்வளவுதான். வேற எதுவுமே பண்ணல இத பார்த்துட்டு நான் மேக்கப் பண்ணி இருக்கேன்னு சொல்றிங்க…” என்றாள் பொய் கோபத்தோடு.
“சரி டி கோல்ட் பிஷ் வந்ததிலிருந்து இப்படி வழவழன்னு பேசிகிட்டு இருக்க சீக்கிரமா காரியத்தில் இறங்கலாம் வா” என்றான் .
“என்னது!! காரியத்தில் இறங்கலாமாவா!! என்ன சொல்றிங்க மாமா எனக்கு எதுவும் புரியல” என்றாள் மீனாட்சி மருண்ட விழிகளோடு.
அதை ரசித்த செந்தூரன் “உனக்கா ஒன்னும் புரியாது எல்லாம் தெரியும். ஆனா எதுவும் தெரியாத மாதிரியே என்கிட்ட கேள்வி கேட்க வேண்டியது” என்றவன். “உன்கிட்ட நான் எத்தனை நாளா கேட்டுட்டு இருக்கேன். ஒரே ஒரு முத்தம் தா டின்னு. இன்னிக்கு என்ன ஆனாலும் சரி உங்ககிட்ட இருந்து அந்த முத்தத்தை வாங்காமல் வெளியே விடுறதா இல்லை” என்று எட்டி அவள் இடையை பிடித்து தனக்கு அருகில் மீனாட்சியை இழுத்தான்.
செந்தூரன் செயலில் அரண்டு போய் மீனாட்சி அவனை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.
episode 31 நம்பிக்கையும் பாசமும் உடைந்தது .
சங்கவி , மனோஜ் நிச்சயதார்த்தத்தில் இருக்கும்போது செந்தூரபாண்டியனுக்கு தானாவதியிடம் இருந்து போன் வரவும் நிகழ்ச்சி நடந்த இடத்தை விட்டு சற்று தள்ளி வந்தவன் போனை அட்டென்ட் செய்து “சொல்லுங்க தானாவதி… என்ன விஷயம் ” என்றான்.”தம்பி அது.. அது வந்து… ” என்று அவர் தயங்க..”என்ன தானாவதி என்ன விஷயமா எனக்கு போன் பண்ணுணிங்க… ஏன் ஏதோ சொல்ல வந்து அதை சொல்ல தயங்குற மாதிரி பேசுறீங்க… என்ன விஷயம் சொல்லுங்க” என்றான் செந்தூரன்.
“தம்பி நான் சொன்னா தப்பா எடுத்துக்கக் கூடாது .. என்ன டா இது உங்க வீட்டு ஆளை பத்தி உங்ககிட்டயே நான் தப்பா சொல்றேன்னு என்னை பொல்லாப்பு சொல்லக்கூடாது” என்று இழுத்தார்.
“என்ன சொல்றிங்க நீங்க… என் வீட்டு ஆளுங்களை பத்தி என்ன சொல்ல வரீங்க” என்றான் புரியிலாமல்.
“தம்பி நம்ம செம்பருத்தி பாப்பாவுக்கு வரன் பாக்க போறயிடத்துல எல்லாம் பாப்பாவோட விஷயம் கேள்விப்பட்டு யாருமே நம்ம பாப்பாவை கல்யாணம் செய்த்துக்க ஒத்துக்க மாட்டேங்குறாங்க . நான் நம்ம ஊருல நம்ம தகுத்திக்கும் , அந்தஸ்துக்கும் ஏற்ப ஆளுங்களை தேடி போய் நம்ம வீட்டை பத்தியும், நம்ம பாப்பாவை பத்தியும் விபரம் சொல்லி சம்மந்தம் பேச வாய் எடுத்தாலே … ராஜ பாண்டியன் அய்யாவோட வீட்டு நேரடி வாரிசுக்கு தான் நாங்க சம்மந்தம் பேசுவோம்னு நம்ம பாப்பாவை அய்யாவோட… சின்ன… வீடு..” என்று அவர் விழுங்க…
செந்தூரப்பாண்டியன் “போதும் தானாவதி எனக்கு புரிஞ்சிருச்சு … செம்பருத்தியை கல்யாணம் செய்துக்க அவங்களுக்கு கொடுத்து வைக்கல… ” என்றவன் .”சரி நீங்க சொல்லவேண்டியது இவ்வளவு தானே …. இதுக்கு தானே நீங்க போன் பண்ணுணிங்க.. ” என்றான்.
“ஆமா தம்பி ஆனா…” என்று அவர் நிறுத்த, “ம்ச் … என்ன ஆனா ? ஆவன்னான்னு சொல்லவந்ததை சொல்லாம இழுத்தடிக்குறிங்க… இப்போ சொல்ல போறிங்களா ? இல்லை நான் போனை வெக்கட்டுமா… எனக்கு இங்கே நிச்சயதார்த்த வேலை தலைக்கு மேல கிடக்கு ” என்றான் சற்று எரிச்சலாக .
“தம்பி.. தம்பி… கோவப்படாதிங்க… நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிட்றேன் . நம்ம சங்கவிக்கு பார்த்த மாப்பிள்ளையை முதல்ல நம்ம செம்பருத்தி பாப்பாவுக்கு தான் நான் பேசி முடிச்சேன். அவங்ககிட்டே நம்ம செம்பருத்தியை பொண்ணு பார்க்க வர சொல்லி நான் தான் அனுப்பி வெச்சேன். ஆனா அவங்க அங்கே வந்து நம்ம செம்பருத்திக்கும் அவங்க பையனுக்கும் சம்மந்தம் பேசாம நம்ம சங்கவி பாப்பாவுக்கு சம்பந்தம் பேசி முடிச்சுட்டாங்க. அப்போ நீங்களும் அங்கே தான் இருந்திங்க… அவங்க அப்படி செய்ததுக்கு என்ன காரணம்னு நீங்க யோசிச்சு பார்த்திங்களா தம்பி ” என்றார் தானாவதி .
அவர் சொன்னதும் சிறிது யோசித்தவன் “அவங்க என் வீட்டுக்கு சம்மந்தம் பேச வரும்போது நானும் இங்கே தான் இருந்தேன். அவங்ககிட்டே நான் செம்பருத்தியை பத்தி பேசின அப்போ எனக்கு அவங்க சரியா பதில் சொல்லலை. அதுக்குள்ள அம்மாவும் என்னை பேசவிடாம செய்துட்டாங்க… சரி பெரியவங்க பேசி முடிவு எடுத்த அப்பறோம் நான் குறுக்க பேசினா நல்லா இருக்காதுன்னு அமைதியா இருந்துட்டேன். பேச்சுவார்த்தை எல்லாம் முடிஞ்சு இங்கு நிச்சயமும் நடந்து முடிஞ்சிருச்சு ” என்றான் செந்தூர பாண்டியன் .
“அதே தான் தம்பி எப்படி நீங்க சம்மந்தம் பேச வந்தவங்க கிட்டே பேசும்போது அகிலாண்டேஸ்வரி அம்மா உங்களை பேசவிடாம தடுத்து வந்த சம்பந்தத்தை சங்கவி பாப்பாவுக்கு பேசி முடிச்சாங்களோ அதே போல தன நம்ம ஊரு ஆளுங்க செம்பருத்தியை பொண்ணு கேட்க வந்தாளோ இல்லை சம்மந்தம் பேச நினைச்சாலோ நம்ம அம்மா அந்த சம்பந்தத்தை நடக்க விடாம செய்றாங்க. செம்பருத்தியை இந்த வீட்டோட வேலைக்காரியா அவங்க வெச்சிருக்குற அப்போ உங்க வசதியையும், அந்தஸ்தையும் பார்த்தது பொண்ணு எடுக்க வருவாங்க உங்க வீட்டுல வேலைக்காரியா இருக்குற செம்பருத்தியை எப்படி அவங்க சம்பந்தம் பேச ஒத்துப்பாங்க ” என்றார் தானாவதி .
“என் தங்கச்சியை வீட்டு வேலைக்காரின்னு யார் சொன்னது? அவ இந்த வீட்டோட எஜமானி அவ என் தங்கச்சி எனக்கு இந்த வீட்டுல என்ன உரிமை இருக்கோ அவளுக்கும் அதே உரிமை இருக்கு ” என்று கோபமானான் .
“தம்பி கோபப்படாதிங்க… நான் ஒன்னும் வேணும்னு செம்பருத்தியை பத்தி அப்படி பேசலை . நீங்க வேணும்னா ஊருக்குள்ள வந்து விசாரிச்சு பாருங்க நம்ம வீட்டுல செம்பருத்தின்னு ஒரு பொண்ணு இருக்குறது கூட இங்கே அவ்வளவா தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் பாப்பா உங்க வீடு வேலையால்னு எல்லாரும் நினைச்சிட்டு இருக்காங்க” என்றார் .
செந்தூர பாண்டியன் பதில் பேச முடியாமல் தவித்தான்.
“தம்பி நீங்க மட்டும் தான் உங்க அப்பாவோட சின்னவீட்டுக்கு பொறந்த செம்பருத்தியை தங்கச்சியா நினைச்சுட்டு அவங்க மேல பாசமா இருக்கீங்க.. இத்தனை வருசமா நீங்க வெளியூர்ல படிச்சிட்டு இருந்ததால இங்கே நடக்குற விஷயம் உங்களுக்கு எதுவும் தெரியாது. அந்த வீட்டுல இருக்குறவங்க எல்லாம் செம்பருத்தி பாப்பாவை நடத்துன விதம் எதுவும் உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பும் இல்லை. அதனால தான் நீங்க இன்னும் எதுவும் தெரியாம பேசிட்டு இருக்கீங்க… உங்க வீட்டுல உங்க அம்மா வெக்குறதுதான் சட்டம்னு எல்லாருக்கும் நல்லாவே தெறியும். அவங்களுக்கு செம்பருத்தியை சுத்தமா பிடிக்காது. நீங்க இருக்கும்போது வேணா அவங்க செம்பருத்தி மேல பாசமா இருக்குற மாதிரி காட்டிக்குறாங்க . ஆனா நீங்க இல்லாத அப்போ செம்பருத்தியை வேலைக்காரர்களை நடத்துறதை விட மோசமா நடத்துறாங்க. இந்த ஊருல இருக்கும் யாருமே செம்பருத்தியை கல்யாணம் செய்துக்க ஒதுக்கலையின்னு தான் நான் கோயம்பத்தூரில் இருந்து அந்த மனோஜ் தம்பியை சம்பந்தம் பேச அனுப்பி வெச்சேன். ஆனா அதுவும் நடக்கலை ” என்றார் சோகமாக.
தன் அம்மாவையும் , வீட்டில் இருக்கும் மற்றவர்களையும் பற்றி சொன்னதை எல்லாம் கேட்டு செந்தூர பாண்டியனுக்கு குழப்பமாக இருந்தது. “தானாவதி அப்போ செம்பருத்தி கல்யாணத்தை நடக்கவிடாம எங்க அம்மாதான் தடுத்து நிறுத்துறங்கக்கண்ணு சொல்ல வரீங்களா?” என்றான்
“ஆமா தம்பி அது தான் உண்மை நான் இப்படி சொன்னேன்னு உங்களுக்கு என் மேல கோபம் கூட வரலாம் . ஆனா நீங்களே நம்ம ஊருக்குள்ள வந்து செம்பருத்தியை பத்தி விசாரிச்சு பாருங்க.. இல்ல நம்ம ஊருல உங்க வசதி வாய்ப்புக்கு ஏத்தா மாதிரி இருக்க வீட்டுல நேரடியா சம்பந்தம் பேசுங்க… அப்போதான் நான் சொன்னது எல்லாம் உண்மையின்னு உங்களால நம்ப முடியும் ” என போனை வைத்தார்.
அவர் சொன்னது எல்லாம் கேட்டு குழப்பமாக நின்று இருந்த செந்தூரபாண்டியனின் கண்களில் செம்பருத்தி பட்டாள் . அவள் மாட்டுக்கொட்டகையில் சுத்தம் செய்துகொண்டு இருந்தாள். அழுக்கான வெளுத்துப்போன பாவாடை தாவணி அணிந்து கைகளுக்கு பிளாஸ்டிக் வளையலும், கழுத்தில் சந்தையில் விற்கும் 10 ருபாய் செயினும் போட்டுகொண்டு வேலை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அவளை பார்த்துவிட்டு அப்படியே திரும்பி வீட்டிற்குள் தன் வீட்டு ஆட்களையம் தன்னையும் குனிந்து பார்த்தான். அந்த ஊரிலேயே இவர்களை போல யாரும் வசதியாக இருக்கமுடியாது என்று அவர்கள் அணிந்திருந்த உடையிலும், நகையிலும் தெரிந்து விடும் அந்த அளவுக்கு ஆடம்பரமாக அனைவரும் இருந்தனர். அவர்களை போலவே இந்த வீட்டில் உரிமை இருந்த செம்பருத்தியோ மாட்டுக்கொட்டகையை சுத்தம் செய்து கொண்டு இருப்பதை பார்த்து அவன் மனது மேலும் அமைதியற்று போனது .
தானாவதி தன் அம்மாவை பற்றி சொன்னதை எல்லாம் கேட்டவனுக்கு அதை நம்புவதா? வேண்டாமா? என்று குழப்பமாக இருக்க. அப்போது நிச்சயதார்த்தத்தில் இருந்த அகிலாண்டேஸ்வரி வாசலில் இருந்த செந்தூரபாண்டியனை பார்த்த்தவர் அவனிடம் வந்தார்.
“என்ன செந்தூரா இங்கே நின்னுட்டு இருக்க… உள்ளே வா மாப்பிள்ளை வீடு ஆளுங்க எல்லாம் உன்னை தான் கேக்குறாங்க வா ” என்று அவன் கைபிடித்த்து அழைத்தார் .
“அம்மா எல்லாரும் இங்கே இருக்கிறாங்க ஆனா செம்பருத்தியை மட்டும் ஆளையே காணோமே ” என்றான் தன் தாய் அவன் கேட்டதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்று பார்ப்பதற்காக .
இதை கேட்டதும் அகிலாண்டேஸ்வரியின் முகம் கருத்தது. அதை செந்தூரபாண்டியனும் கவனித்தான்.
உடனே அகிலா, “அவ இவ்வளவு நேரம் உள்ளே தான் இருந்தா நீ பாக்கலையா செந்தூரா… இப்போ தான் போட்டிருந்த நகை எல்லாம் ரொம்ப உறுத்துதுன்னு அதை எல்லாம் கழட்டி வைக்க ரூமுக்கு போனா” என்று பொய் சொன்னார்.
அவர் பதிலை கேட்டு செந்தூரனுக்கு தன் தாய் மீது இத்தனை நாள் வைத்து இருந்த நம்பிக்கையும், பாசமும் முற்றிலுமாக உடைந்து போனது. வலியோடு பார்த்தான் செந்தூரன்.. அதை கவனிக்காத அகிலாண்டேஸ்வரி ” நீ வாப்பா வந்திருக்குறவங்களை எல்லாம் கவனி .. ” என சென்று விட்டார். சுட்டெரிக்கும் வெயிலில் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருந்தவளை பார்த்து தன் மனதில் ஏதோ நினைத்தவன் . ஏதோ முடிவு எடுத்தவனாக தன் வீட்டிற்குள் நுழைந்தான் .
செந்தூரபாண்டியனின் முடிவு என்னவாக இருக்கும்.
அகிலாண்டேஸ்வரிக்கு செந்தூரபாண்டியனுக்கு தன் மீது சந்தேகம் எழுந்துவிட்டது தெரிந்தால் என்ன செய்வார் .
பார்க்கலாம்…
EPISODE 32
யார் இவன் ?
நிச்சயதார்த்தம் முடிந்ததிலிருந்து செந்தூர பாண்டியனை கவனித்துக்கொண்டு தான் இருந்தார் அகிலாண்டேஸ்வரி அவன் எப்போதும் ஏதோ ஒரு யோசனையோடு வலம்வந்த வண்ணம் இருந்தான்.
ஒரு பக்கம் சங்கவியின் திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டு இருக்க.. அந்த வேலைகளை எல்லாம் எந்த குறையும் இல்லாமல் செய்துகொண்டு இருந்த செந்தூரன் மறுபக்கம் அகிலாண்டேஸ்வரியிடம் பேசுவதை குறைத்துக்கொண்டு இருந்தான். இதை பொறுக்க முடியாத அகிலாண்டேஸ்வரி வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த செந்தூரனை அழைத்தார் .
“சொல்லுங்க அம்மா.. “என்றான் சுரத்தே இல்லாமல் .
“ஏன் செந்தூரா என்னவோ போல இருக்க. நானும் உன்னை கவனிச்சிட்டு தான் இருக்கேன். நீ ஏதோ யோசனையிலேயே இருக்கியே என்ன ஆச்சு உனக்கு” என்றார் .
“அதெல்லாம் ஒன்னும் இல்லை மா… சங்கவி கல்யாண வேலையா வெளியே அலையுறதும் மில், தோட்டம்னு சுத்திட்டு அந்த வேலையையும் பாக்குறதுக்கு கொஞ்சம் சிரமமா இருக்கு “என்றான்.
“உன்னால முடியாலையின்னா நீ அம்மாகிட்டே சொல்லிருக்கலாமே! செந்தூரா … நான் உன் வேளையில் ஏதாவதை பங்கு போட்டு செய்திருப்பேன் . இல்லையா உன் சித்தப்பாங்க யார்கிட்டயாவது ஏதாவது வேலை சொல்லி அவங்களை அனுப்ப வேண்டுவது தானே … நீ ஏன் ஒருத்தனா எல்லா வேலையும் இழுத்துப்போட்டு உன்னை கஷ்டப்படுத்திக்குறே… ” என்றார் மிகவும் அக்கறையாக .
“சித்தப்பா கல்யாண வேலையா பிஸியா இருக்காரு … அவரை தொந்தரவு செய்ய வேணாம்னு விட்டுட்டேன் . அவர் பத்திரிக்கை கொடுக்க போயிட்டு நைட் தினமும் லேட்டா தானே வராரு . அதான் நான் மத்த வேலைகளை பார்த்துகிறேன். எல்லாம் நம்ம சங்கவிக்கு கல்யாணம் முடியுற வரை தானே..அதுக்கு அப்பறோம் வேலை குறிஞ்சிடும் ” என்றான்.
“சரிப்பா… ஒன்னு பண்ணலாம் நீ பேசாம கல்யாண வேலைகளை பாரு நான் நம்ம ரைஸ் மில்லையும் , தோட்டத்தையும் பார்த்துக்கிறேன் ” என்றார் அகிலா .
“இல்லை ம்மா உங்களுக்கு ஏன் சிரமம் . நானே பார்த்துகிறேன்” என்றான் .
“எனக்கு எந்த பிரச்னையும் இல்லை . நீ நாளையில் இருந்து கல்யாணத்துக்கு வேண்டிய வேலைகளை மட்டும் பாரு மத்ததை நான் பார்த்துகிறேன் ” என்றார் .
செந்தூரனும் சம்மதம் சொன்னான்.
அவர்கள் பேசிக்கொண்டு இருந்த நேரம் ஊருக்கு சென்றிருந்த வீட்டு வேலையாள் செல்லையா திரும்ப வந்திருந்தார் அவருடன் புதிய வாலிபன் வந்திருந்தான் .
அவர்கள் இருவரையும் பார்த்த அகிலாண்டேஸ்வரி “வா செல்லையா ஊருக்கு போனியே உன் அம்மா எப்படி இருக்காங்க ? அவங்க உடம்புக்கு இப்போ எந்த பிரச்னையும் இல்லையே ?” என்றார் .
“இல்லைம்மா… என் அம்மாவுக்கு உடம்பு ரொம்ப மோசமாகிருச்சு .. அவங்க படுத்த படுக்கையாகிட்டாங்க . அதனால் தான் நான் என் அம்மாவுக்கு குணம் ஆகுறவரைக்கும் லீவு கேட்கலாம்னு வந்தேன்.” என்றார் தயக்கமாக .
“என்ன செல்லையா இப்படி சொல்றா.. நம்ம சங்கவிக்கு கல்யாண ஏற்பாடு எல்லாம் செய்தாச்சு அது உனக்கு தெரியும் தானே … நீ இப்படி திடீர்னு லீவ் சொன்னா என்ன செய்றது . அதுவும் இந்த நேரத்துல நீ லீவு போடுட்டா உன்னோட வேலையை எல்லாம் யாரு செய்றது ” என்று அவரை கடிந்துகொண்டவர்.”ஏற்கனவே செந்தூரன் ஒத்தையாளா எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்துட்டு இருக்கான் . இப்படி திடீர்னு நீ லீவு போட்டுட்டா என்ன அர்த்தம் “என்றார் கோபமாக .
“அம்மா என்னை மன்னிச்சிருங்க… என் அம்மாவுக்கு முடியாலையினு தானே நான் லீவு கேக்குறேன் ” என்றார் செல்லையா
“அம்மா விடுங்க… பாவம் செல்லையா என்ன செய்வாரு ” என்று செந்தூரபாண்டியன் பரிந்து பேச…
அவனை ஒரு பார்வை தான் பார்த்தார் அகிலாண்டேஸ்வரி. உடனே செந்தூரபாண்டியன் அமைதியானான்.
திரும்பி செல்லையாவிடம் “இங்கே பாரு செல்லையா இன்னும் ஒரு மாசத்துல சங்கவிக்கு கல்யாணம் . அதுவரை நீ வேளைக்கு வந்துதான் ஆகணும். … அதுக்கு பிறகு லீவ் பத்தி பேசிக்கலாம் நீ போய் வேலையை பாரு” என்றார் சிறிதும் யோசிக்காமல்.
அவர் பேசியதற்கு மறுத்து பேசமுடியாமல் செல்லையா தவித்தார்.
“நீங்க எல்லாம் ஒரு முதலாளியா!! இவர் அம்மாவுக்கு உடம்பு முடியலையின்னு தானே லீவு கேக்குறாரு. கொஞ்சம் கூட யோசிக்காம நியாயம் இல்லாம லீவு தரமுடியாதுனு சொல்றிங்க… நீங்க எல்லாம் என்ன ஆளுங்களோ ச்சி…” என்று செல்லையாவுடன் வந்த அந்த வாலிபன் அகிலாண்டேஸ்வரியைக் கண்டு சிறிதும் பயமில்லாமல் பேசியவன் செல்லையாவிடம் திரும்பி .” அண்ணா நீங்க உதவி வேணும்னு கேட்டதுனால தான் நான் ஊருல இருக்கும் என் தோட்டத்தைவிட்டுட்டு உங்களுக்கு பதிலா இந்த வீட்டுக்கு வேளைக்கு வரவே சம்மதிச்சேன் . ஆனா இங்கே வந்து பார்த்தா இந்த அம்மா என்னடான்னா கொஞ்சமும் இரக்கமில்லாம,உங்க நிலைமை புரியாம இப்படி பேசுறாங்க . இப்படி பட்ட ஆளுங்ககிட்டே எல்லாம் என்னால வேலை பார்க்க முடியாது ” என்றான் அகிலாண்டேஸ்வரியை முறைத்தபடி .
தன்னைக் கண்டு சிறிதும் பயமில்லாமல் அந்த இளைஞனை பார்க்கையில் அகிலாண்டேஸ்வரிக்கு ஆத்திரமாக வந்தது . தன்னை எதிர்த்து பேசுபவனை பார்த்து கோபம் கொண்டவர் “டேய்… யாரு டா நீ!! என் வீட்டுக்குள்ளேயே வந்து என்னையே தப்பா பேச உனக்கு எவ்ளோ தைரியம்!! ” என்றவர் அவனை நோக்கி கையை ஓங்கிக்கொண்டு அடிக்க சென்றார்.
அவர் கையை பிடித்து தடுத்து நிறுத்திய அந்த இளைஞன் அவரை ஒரு புழுவை போல பார்த்தவன் ” இங்க பாருங்க… இந்த கையை ஓங்கறது அதட்டுறது எல்லாம் வேற யார்கிட்டயாவது வெச்சுக்கோங்க. இந்த சின்னய்யன்கிட்டே நடக்காது … ” என்று அவர் கையை விட்டவன்.”அண்ணா வாங்க போகலாம் … இப்படிப்பட்டவங்க வீட்டுல நீங்க வேலை பாக்கணும்னு எந்த அவசியமும் இல்லை . என்கிட்டே இருக்க அரை ஏக்கர் தோப்புல வர வருமானத்தை வெச்சு நான் உங்க அம்மாவையம் , உங்களையும் பாத்துக்கிறேன். இந்த அம்மாவுக்காகவா இத்தனை வருஷம் கல்யாணம் பண்ணிக்காம … உங்க அம்மாவைக் கூட சரியா வந்து பார்க்காம வேலை பார்த்தீங்க… ” என்றவன் செல்லையாவின் கையை பிடித்து அங்கிருந்து அழைத்தான்.
“தம்பி … என்ன இது … ” என்று அவனை பார்த்த செல்லையா. அகிலாண்டேஸ்வரியிடம் “அம்மா சின்னையா பேசினதை மனசுல வெச்சுக்காதிங்க… எனக்கு பதிலா நான் வர வரைக்கும் இங்க வேளைக்கு வரட்டும்னு தான் ஊர்ல இருந்து இந்த தம்பியை கூட்டிட்டு வந்தேன். இவன் கொஞ்சம் கோபக்காரன் அதான் நீங்க பேசினதை கேட்டுட்டு கோபமா பேசிட்டான் . அவனுக்காக நான் உங்ககிட்டே மன்னிப்புக்கேக்குறேன். நான் என் அம்மாவை அப்போ அப்போ ஊருக்கு போய் பார்த்துட்டு வந்துகிறேன் ம்மா… வேற யாரையாவது என் அம்மா பக்கத்துல இருந்து பார்த்துக்க சொல்லி ஏற்பாடு பண்ணிக்குறேன் “என்றவர் “சின்னையா நீ ஊருக்கு கிளம்பு நான் அம்மாவை வந்து பாத்துக்கிறேன் ” என்று அவனை அங்கிருந்து அனுப்பப் போனார்,
அதுவரை அமைதியாக இருந்த அகிலாண்டேஸ்வரி “செல்லையா உன்கூட கூட்டிட்டு வந்த இந்த தம்பி கொஞ்சம் அதிகமா தான் பேசிரிச்சு . இருந்தாலும் அந்த தம்பி பேசினதும் நியாயம்தானே … நான் ஏதோ அவசரத்துல உன்னை கொஞ்சம் கடுமையா பேசிட்டேன் . என்னை மன்னிச்சிரு செல்லையா … நீ போய் உன் அம்மாவை பக்கத்துல இருந்து பாரு. உனக்கு பதிலா இந்த தம்பி இங்கையே கொஞ்ச நாள் வேலை பார்க்கட்டும் ” என்றார் .
இவ்வளவு நேரம் அகிலாண்டேஸ்வரி பேசியதை எல்லாம் கேட்டு செந்தூர பாண்டியனுக்கும், செல்லையாவுக்கும் ஆச்சர்யமே … அதை விட இவர்கள் பேசுவதை கேட்டு அங்கு வந்திருந்த அகிலாண்டேஸ்வரியின் குடும்பம் மொத்தமும் ஆச்சர்யமானது .
அகிலாண்டேஸ்வரியையே ஒருவன் எதிர்த்துப் பேசி இருக்க அவனிடம் கோபம் காட்டாமல் தான் செய்தது தவறுதான் என்று முதல் முறையாக ஒத்துக் கொள்ளும் அவரின் போக்கை நம்ப முடியவில்லை.
அனைவரும் அமைதியாக இருக்க “என்ன செல்லையா நான் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசியும் எதுவும் பேசாம இப்படி அமைதியா நிக்கிற … அதான் நான் பேசினதுக்கு மன்னிப்பு கேட்டுட்டேனே அது போதாதா… வேணும்னா அந்த தம்பிகிட்டயும் நான் மன்னிப்பு கேட்கட்டுமா” என்றார் அகிலாண்டேஸ்வரி
“ஐயோ அம்மா அப்படி எல்லாம் இல்ல..” என்றவர் திரும்பி சின்னையாவை பார்க்க… இவ்வளவு பெரிய மனுஷியே இறங்கி வந்து மன்னிப்பு கேட்ட பின்பு முறுக்கிக் கொண்டு நிற்பதில் சின்னையாவுக்கும் துளியும் விருப்பமில்லை. செல்லையாவிடம் “அண்ணா நீங்க ஊருல போய் அம்மாவ நல்லபடியா பார்த்துக்கோங்க… நீங்க வர வரைக்கும் நான் இவங்ககிட்ட வேலைக்கு இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்றான்.
சின்னையா மறுப்பு சொல்லாமல் இங்கு வேலைக்கு இருக்க சம்மதித்ததும் செல்லையாவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது. “இந்த தம்பிக்காக மறுபடியும் நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். இந்த தம்பி பேசுனது நீங்க எதுவும் மனசுல வச்சுக்காதீங்க, கொஞ்சம் கோவக்கார தம்பி. ஆனால் தங்கமான பையன் எந்த வேலை கொடுத்தாலும் முகம் சுணங்காம அதை நல்லபடியா முடிச்சு கொடுத்துடுவான் வேலை செய்ற இடத்துக்கு நியாயமா நடந்துக்குவான்” என்றார் சின்னையாவை பற்றி நல்ல விதமாக .
“அப்படியா! நீ சொன்ன மாதிரி இந்த தம்பி நடந்துகிரானானு நானும் பாக்கத்தானே போறேன்” என்றவர் . ” பேச்சு மாறக்கூடாது செல்லையாவுக்கு பதிலா நீ இங்க வேலைக்கு இருக்க போற அவன் எப்ப திரும்பி இங்க வர வரைக்கும் . எந்த சூழ்நிலை வந்தாலும் நீ இந்த வேலையை விட்டு போகக்கூடாது சரியா” என்றார் அவனை அதட்டும் தொனியில் .
அவர் அதட்டலை கண்டு கொள்ளாதவன் “நான் வாக்கு கொடுத்தா கொடுத்தது தான். கொடுத்த வாக்கில் இருந்து எப்பவும் பின் வாங்க மாட்டேன் . செல்லையா என்னைக்கு இங்கே வேலைக்கு வராரோ அடுத்த நிமிஷமே நான் இந்த வேலையை விட்டு கிளம்பிடுவேன்” என்றான் சின்னையாவும் பதிலுக்கு .
அகிலாண்டேஸ்வரியை கண்டு பயந்து நடுங்கும் செம்பருத்தி முதல் முறையாக அவரை எதிர்த்துப் பேசி நெஞ்சை நிமிர்த்தி அவர் முன்பு நிற்கும் சின்னையாவை பார்த்து ஆச்சரியப்பட்டாள் . சின்னையா மிகவும் வித்தியாசமாக தெரிந்தான் செம்பருத்தியின் கண்களுக்கு.
செல்லையா அகிலாண்டேஸ்வரியிடமும் செந்தூரப்பாண்டியனிடம் சொல்லிவிட்டு வெளியே செல்ல… செந்தூரபாண்டியனும் உள்ளே சென்று விட்டான் .
செந்தூரபாண்டியன் சென்றதும் திரும்பி சின்னையாவை முறைத்தவர் “என்னையே என் வீட்டுக்குள்ளேயே வந்து இத்தனை பேர் முன்னாடி தைரியமா எதிர்த்து பேசிட்ட இல்ல. உன்ன எனக்கு கீழ வேலை பார்க்க வைத்து எப்படி உன் திமிரையும் கொட்டத்தையும் அடக்குறேன்னு பாருடா… அதுக்காக தான் செல்லையாவ அனுப்பிட்டு உன்ன வேலைக்கு வெச்சிருக்கேன். நீ பேசுவதற்காக நான் ஒன்னும் இறங்கி வந்து உன்னை வேலைக்கு வைக்கல சீக்கிரமே இந்த அகிலாண்டேஸ்வரி யார்னு உனக்கு புரிய வைக்கிறேன்” என்று நினைத்தபடி அகிலாண்டேஸ்வரி சின்னையனை பார்த்துக் கொண்டிருந்தார்.
EPISODE 33
செம்பருத்தியின் மனதிற்குள் சின்னையா …
ஏற்கனவே சின்னையா அவரை எதிர்த்து பேசி விட்டார் என்று கோபம் ஒரு புறம் இருக்க அதே கோபத்தோடு ஏய் செம்பா அங்க என்னடி பண்ணிட்டு இருக்க இங்க வா என்று அவளை அழைத்தார்.
அவர் குரல் கேட்டதும் கீ கொடுத்த பொம்மை போல் செம்பருத்தி வந்து நின்றாள்.
” இதோ இவன் செல்லய்யாவுக்கு பதிலா வேளைக்கு வந்திருக்கான் நீ தங்கி இருக்கிற இடத்திலேயே இவனுக்கும் ஒரு ரூமை ஒதுக்கி கொடுத்துடு” என்றவர். சின்னையாவை பார்த்து … “நான் எப்போ வெளியே கிளம்புறேன்னு கூப்பிட்டாலும் அடுத்த நிமிஷம் நீ என் முன்னாடி வந்து நிக்கணும் ஞாபகத்துல வச்சுக்கோ” என்றவர் சென்று விட ..
மாடிப்படி ஏறி செல்லும் அகிலாண்டேஸ்வரியை “யாருடா இந்த பொம்பள இந்த வாய் பேசுது இந்த வாய சீக்கிரமாவே அடக்கணும்” என்று நினைத்தபடி நின்றிருந்தான் சின்னையன் .
அவன் முகத்திற்கு நேராக கையை ஆட்டி அழைத்த செம்பருத்தி “என்ன எங்க அம்மாவையே அப்படி பாக்குறீங்க… நீங்க இப்படி அவங்கள முறைக்கிறத மட்டும் எங்க அம்மா பார்த்தா அவ்வளவுதான். அப்புறம் அதுக்கும் ஏதாவது உங்களை சொல்லுவாங்க பேசாம என்கூட வாங்க…” என்று அவனை அழைத்தாள்.
“என்ன உங்க அம்மா என் கண்ண இரண்டையும் நோண்டிடுவாங்களா? பார்க்கத் தானே கண்ணு இருக்கு. ரொம்பத் தான் உங்க அம்மாவுக்கு எல்லாரும் சேர்ந்து பில்டப் கொடுக்குறீங்கன்னு நினைக்கிறேன்” என்று சொன்னபடி அவள் பின்னால் சென்றவன் “ஆமா நீ யாரு? இங்க என்ன பண்ற?” என்று கேட்டான் .
“உங்கள மாதிரி தான் நானும்..” என்று விரக்தியாக இந்த வீட்டில் ஒருவராக இருக்க வேண்டியவள் வேலைக்காரர்களோடு ஒருவராக இருக்கும் செம்பருத்தி கூறினாள் .
அவள் சொல்லும்போது செம்பருத்தியின் குரலில் இருந்த ஏக்கத்தை கவனித்தான் . ஆனால் அவளிடம் எதுவும் கேட்கவில்லை வந்த அன்றே எதையும் கேட்டு செம்பருத்தியை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று அமைதியாக அவள் பின்னால் வேலை ஆட்கள் தங்கும் இடத்திற்கு சென்றான் .
வரும் நாட்களில் சங்கவியின் திருமண வேலைகளில் வீட்டில் இருப்பவர்கள் பம்பரமாக சுழன்று கொண்டு இருந்தனர். தான் வந்த நாளிலிருந்து அகிலாண்டேஸ்வரியை சின்னையா கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அவர் செந்தூரபாண்டியன் இருக்கும் போது செம்பருத்தி நடத்தும் விதமும் அவன் இல்லாத போது அவளை வேலைக்காரர்களை விட மோசமாக நடத்துவதையும் சின்னையன் கவனிக்க தவறவில்லை .
அவளை சிறிது கூட ஓய்வெடுக்க விடாமல் மாற்றி மாற்றி அகிலாண்டேஸ்வரி மட்டுமல்லாமல் அந்த வீட்டில் இருந்து அனைவருமே வேலை வாங்கிக் கொண்டிருந்தனர் .
ஏன் செந்தூரப் பாண்டியன் இருக்கும்பொழுது ஒருவிதமாகவும் அவள் இல்லாதபோது மற்றொரு விதமாகவும் செம்பருத்தியை வீட்டில் இருப்பவர்கள் நடத்துகிறார்கள் என்று சின்னையன் கவனிக்க தவறவில்லை
வீட்டில் உள்ள மற்ற வேலையாட்களிடம் செம்பருத்தி பற்றியும் செந்தூரபாண்டியனை பற்றியும் அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள உறவும் அகிலாண்டேஸ்வரி அவள் ஏன் இப்படி நடத்துகிறார்கள் என்பதையெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டான் சின்னையன் .
அவள் மீது அதிக அக்கறையும் கரிசனமும் ஏற்பட்டது செம்பருத்திக்கு அவ்வப்போது வேலையில் உதவுவதும் அவளை கவனித்துக் கொள்வதுமாக மற்ற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் சின்னையன்
சங்கவியின் திருமண நாள் நெருங்கி வந்துவிட வீட்டில் வேலைகள் கூடிக்கொண்டே சென்றது .
வீட்டு கதவு ஜன்னல்கள் எல்லாம் துடைத்துக் கொண்டிருந்த செம்பருத்தியிடம் அகிலாண்டேஸ்வரி “ஏய் செம்பா அங்க என்னடி பண்ணிட்டு இருக்க… இங்க பாரு ஹால்ல எல்லாம் கசகசன்னு கிடக்குது மாப்பிள்ள வீட்டிலிருந்து யாராவது வந்தா வீடு இப்படி அலங்கோலமா இருக்குன்னு நம்மளை தப்பா நினைக்க மாட்டாங்க. வா வந்து முதல்ல இதை சுத்தம் பண்ணு என்று அகிலாண்டேஸ்வரி அவளை ஏவினார் .
இதோ வரேன்மா என்று ஸ்டூலில் ஏறி ஜன்னலில் ஒட்டி இருந்த அழுக்கை துடைத்துக் கொண்டிருந்த செம்பருத்தி அடுத்த நிமிடம் கீழே இறங்கி ஓடி வந்தவள். ஹாலில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து ஓரம் வைத்துவிட்டு மளமளவென அங்கு சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் .
அவள் அந்த ஹாலை சுத்தம் செய்து முடிக்கும் போது அங்கு வந்த ஜெயக்கொடி ஏய் செம்பா ரூம்ல ஒரே அழுக்கா இருக்கு சுத்தம் பண்ணிடு.. அழுக்கு துணி எல்லாம் பாத்ரூம்ல இருக்கு அது எல்லாத்தையும் எடுத்துட்டு போய் துவைத்து காயப்போடு என்று அவளை அதிகாரம் செய்து கொண்டு அங்கே வந்தார் .
சரி என்று அதற்கும் மறுப்பு சொல்லாமல் ஜெயக்கொடியின் அறைக்குச் சென்று அவர் அறை முழுவதையும் சுத்தம் செய்தவள் அழுக்குத் துணியை எடுத்துக்கொண்டு துவைப்பதற்காக கொல்லைப்புறம் சென்றாள்
அப்போது அங்கு வந்த சங்கவி ஏய் செம்பா அங்க என்னடி பண்ணிட்டு இருக்க இங்க வா … ரெண்டு நாள்ல எனக்கு கல்யாணம் அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா. எனக்கு பெடிக்யூர் பண்ணி விட சொல்லி உன்கிட்ட எவ்வளவு முறை சொல்லிட்டேன். இதோ வர இதோ வரேன்னு தட்டி கழிச்சுட்டே இருக்க.. வா வந்து முதல்ல எனக்கு பெடிக்யூர் பண்ணி விட்டுட்டு அதுக்கப்புறம் போய் மத்த வேலையை பாரு என்றாள் சங்கவி அதிகாரமாக .
சங்கவி சின்னம்மா இந்த துணி எல்லாம் துவைத்து போட சொல்லி சொல்லி இருக்காங்க கொஞ்ச நேரம் பொறு நான் இதை எல்லாம் ஊறவெச்சிட்டு வந்து உனக்கு பெடிக்யூர் பண்ணி விடுறேன் என்றாள் செம்பருத்தி .
அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் விட்டா நீ அந்த வேலை இருக்கு இந்த வேலை இருக்குன்னு என்னை மறந்துடுவ முதல்ல நான் சொன்னதை செஞ்சுட்டு அதுக்கப்புறம் போய் மத்த வேலையை பாரு என்று அவளை செல்ல விடாமல் சங்கவி தடுக்க இவ்வளவு நேரம் அங்கே காரை துடைத்தபடி ஹாலில் நடப்பவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சின்னையன் இதற்கு மேலும் பொறுக்க முடியாதவனாக உள்ளே வந்தான்.
வந்தவன் ஹாலில் ஒய்யாரமாக அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த அகிலாண்டேஸ்வரியும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஜெயக்கொடியையும் தனலட்சுமி பார்த்தவன். ஏன் உங்களுக்கெல்லாம் கை கால் எல்லாம் எதுவும் இல்லையா நீங்களும் இந்த வீட்ல தானே இருக்கீங்க அவங்க அவங்க வேலையை அவங்க அவங்க செய்துக்க முடியாதா? இப்படி இந்த சின்ன பொண்ணு ஆளாளுக்கு மாத்தி மாத்தி வேலை வாங்கி அவளை சக்கையா பிழிஞ்சு எடுக்குறீங்க என்று செம்பருத்திக்கு ஆதரவாக அவன் பேச…
அதை பார்த்த செம்பருத்தி சின்னையனிடம் வந்து ஐயோ!! என்ன பண்றீங்க.. இப்ப எதுக்கு தேவையில்லாம பேசிட்டு இருக்கீங்க முதல்ல இங்கிருந்து போங்க என்று அவனை பிடித்து வாசல் பக்கம் தள்ளப் போனாள், ஏய்என்று அதட்டிய குரலில் அவளை அழைத்த அகிலாண்டேஸ்வரி கையில் இருந்த பேப்பரை கசக்கி செம்பாவின் மேல் வீசியவர் அவளை மாதிரியே நீயும் இந்த வீட்ல வேலைக்கு தான் இருக்கு அதை ஞாபகத்துல வச்சுக்க … உன் வேலை என்ன கார் துடைக்கிறது. போ போய் அந்த வேலையை பாரு… வீணா எங்களுக்கு புத்தி சொல்ற வேலையெல்லாம் வேண்டாம் போ என்றார்
ஏன் வேலைக்கு இருந்தா புத்தி சொல்ல கூடாதுன்னு எதுவும் எழுதி இருக்கா என்ன ஆளாளுக்கு இந்த பொண்ண போட்டு வேலை வாங்கிக்கிட்டே இருக்கீங்க. நானும் வந்த நாளில் இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன் அவ ஒருத்தியா கஷ்டப்பட்டு எத்தனை வேலை தான் செய்வா… அவங்க உங்க வேலையை அவங்க அவங்க செய்யக்கூடாதுன்னு இந்த வீட்ல என்ன சட்டமா என்றவன் சங்கவியை பார்த்து உன் கால்ல இருக்கிற அழுக்கை எடுத்து விட செம்பருத்தி தான் வரணுமா ஏன் அதுக்காக பியூட்டி பார்லர் எல்லாம் இருக்கே அங்க போக வேண்டியது தானே அவளை எதற்கு நீ வேலை வாங்குற என்று அவளை சத்தமிட, இதற்கு மேலும் பொறுக்க முடியாத அகிலாண்டேஸ்வரி சரி அவ மேல அப்படி என்னடா உனக்கு அக்கறை வந்துருச்சு என்று கோபமாக பேசியவர் அவனை நோக்கி வேகமாக வந்து சின்னையனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இதை செம்பருத்தி சின்னையனும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவனை அடித்ததும் செம்பருத்திக்கு மிகவும் வருத்தமானது இந்த வீட்டில் தனக்காக பரிந்து பேசும் ஒருவனை அப்போதுதான் அவள் முதன்முறையாக பார்க்கிறாள் . தனக்காக அகிலாண்டேஸ்வரியையே எதிர்த்து பேசி அவரிடம் அடி வாங்கி நிற்கும் சின்னையனை பார்க்கையில் இந்த உலகத்திலேயே அவன் மிக உயர்ந்தவன் போல தெரிந்தான்..
அகிலாண்டேஸ்வரி தன்னை அடித்ததையும் பொருட்படுத்தாத சின்னையன் நியாயத்தை யார் வேணா கேட்கலாம் அதுக்கு பணக்காரங்க ஏழைன்னு எந்த வித்தியாசமும் கிடையாது நான் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து கவனிச்சுட்டு தான் இருக்கேன் உங்க மகன் செந்தூரபாண்டியன் இருக்கிறப்போ செம்பருத்தி நீங்க நடத்துற விதமும் அவர் வீட்டு விட்டு வெளியே போன அடுத்த நிமிஷமே நீங்க எல்லாரும் சேர்ந்து இந்த பொண்ண வேலைக்காரிய விட மோசமா கொடுமை படுத்துவதையும் நான் கவனிச்சுட்டு தான் இருக்கிறேன் என்றான் .
அதை கேட்டு அகிலாண்டேஸ்வரி ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனார். செந்தூரபாண்டியன் இல்லாத நேரமும் தாங்கள் செம்பருத்தி நடத்துவதை இவன் கவனித்துக் கொண்டிருப்பதை நினைத்து அதிர்ச்சியானார் .
ஆனால் அந்த அதிர்ச்சி ஒரு சில நிமிடம் தான் நீடித்தது. இங்க பாரு இவளுக்கும் இந்த வீட்டுக்கும் 1008 சம்பந்தம் இருக்கு இதுல நாங்க அடிப்போம் அதற்கும் வேலை வாங்குவோம் . அது எங்களோட விருப்பம் அதைக் கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கு நீ இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்தவன் வந்தியா உன் வேலையை பார்த்துட்டு போய்கிட்டே இருக்கணும் தேவையில்லாம கேள்வி கேட்கிற வேலையெல்லாம் இங்க வேண்டாம் என்றார் அகிலாண்டேஸ்வரி அதிகாரமாக.
அவர் அகிலாண்டேஸ்வரியும் சின்னையனும் சண்டையிட்டுக் கொண்டிருக்க தனக்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசும் சின்னையனை ரசித்துக் கொண்டு நின்றிருந்தாள் செம்பருத்தி. அந்த நேரம் பார்த்து அங்கே வந்த செந்தூரபாண்டியன் இங்க என்ன சத்தம்… இது என்ன வீடா இல்ல சந்தை கடையா என்று சப்தமிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்
அவனை அகிலாண்டேஸ்வரி எதிர்பார்க்கவில்லை இவ்வளவு நேரம் தங்கள் பேசுவதை எல்லாம் செந்தூர பாண்டியன் கேட்டுவிட்டானா? செம்பருத்தி கொடுமைப்படுத்தும் விஷயம் அவனுக்கு தெரிந்து விட்டதா என்று அடித்துக் கொண்டது அவர் மனம் செந்தூரா!! அது… அது வந்து… என்று அகிலாண்டேஸ்வரி பேச தயங்க, செந்தூரனை பார்த்த சின்னையன் வாங்கய்யா வந்துட்டீங்களா நீங்களே வந்து இந்த அநியாயத்தை என்னன்னு கேளுங்க … என்று அவனை நோக்கி நடந்தான் சின்னையன் .
அதை கவனித்த அகிலா இங்கு நடந்த அனைத்தையும் செந்தூரபாண்டியனிடம் சொல்லிவிடுவானா என்று பதட்டமடைய செம்பருத்தியும் அதே நிலையில் தான் இருந்தாள்.
செம்பருத்தியை அவள் வீட்டில் உள்ளவர்கள் நடத்தும் விதத்தை சின்னையன் செந்தூரப் பாண்டியனிடம் சொல்லிவிடுவானா? அவன் சொன்னதை கேள்விப்பட்டு செந்தூரப் பாண்டியன் என்ன செய்யப் போகிறான்.
EPISODE 34
செம்பருத்திக்கு கல்யாணம்
ஐயா வந்துட்டீங்களா.. சரியான நேரத்துக்குத் தான் நீங்க வந்து இருக்கீங்க.. வாங்க வந்து நீங்களே இந்த அநியாயத்தை என்னன்னு கேளுங்க. என்று சின்னையன் செந்தூரப் பாண்டியனை நோக்கி செல்ல… அவன் அடுத்து பேச வருவதற்குள் அவனிடம் கோபமாக வந்து செந்தூரபாண்டியன் சின்னையனை ஓங்கி அறைந்து. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் அம்மாவையே நீ எதிர்த்து பேசுவ அவங்க இந்த வீட்டோட ராணி அந்த ராணிகிட்ட கேவலம் சம்பளத்துக்காக வேலை பார்க்கிறவன். நீ முதலில் ஞாபகம் வச்சிக்க அவர்கிட்ட குரலை ஒசத்தி பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதே என்றான் ஆக்ரோஷமாக.
அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை .ஐயா நான் என்ன சொல்ல வரேன்னு முழுசா தெரிஞ்சுக்காம என்ன அடிக்கிறீங்க .. அவங்க என்ன செய்தாங்க தெரியுமா என்றான கோபமாக சின்னையன் .
அவங்க என்ன வேணா செய்யட்டும் எனக்கு அத பத்தி எந்த கவலையும் கிடையாது இந்த வீட்டோட மகாராணி என்னோட அம்மா அவங்கள எதிர்த்து பேச இங்க யாருக்கும் இடமில்லை முதலில் இங்க இருந்து வெளியே போ நீ என்று வாசலை நோக்கி கைகாட்டி கூறினான் .
இதற்கு மேல் செந்தூரபாண்டியனிடம் பேசி எந்த பிரயோசனமும் இல்லை என்று உணர்ந்த சின்னையன் அகிலாண்டேஸ்வரியை திரும்பிப் பார்க்க அவர் திமிராக அவனைப் பார்த்து என் மகன் என்று பெருமையாக முகத்தை வைத்துக்கொண்டு நின்றிருக்க, அங்கு நிற்கு பிடிக்காமல் வேகமாக அங்கிருந்து வெளியேறினார் .
அவன் வெளியே சென்றதும் அகிலாண்டேஸ்வரியிடம் வந்த செந்தூரபாண்டியன் அம்மா இவனை எல்லாம் எதுக்கு பேச வச்சு பார்த்துகிட்டு இருக்கீங்க என்றவன் சங்கவி கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு .. இந்த நேரத்தில் எதுக்கு தேவையில்லாத வீண் பேச்சு என்றவன் தன் அறைக்கு சென்று விட… தனக்காக எந்த சூழ்நிலையிலும் தன்னை விட்டுக் கொடுக்காத தன் மகனை நினைத்து பெருமை கொண்டார் அகிலாண்டேஸ்வரி அதே பெருமையோடு திரும்பி செம்பருத்தி பார்த்தார்.
முதல் முறையாக செந்தூரபாண்டியனை நினைத்து கோபம் வந்தது அவளுக்கு . என்ன சொல்ல வருகிறான் என்று காது கொடுத்து கூட கேட்காமல் அவனை இப்படி இத்தனை பேர் முன்னிலையில் அடித்து வெளியே அனுப்பியதை நினைத்து அவன் மீது கோபம் வந்தது . அவளுக்கும் அங்கே நிற்க பிடிக்காமல் வேகமாக வெளியேறினாள் செம்பருத்தி .
அகிலாண்டேஸ்வரியிடம் வந்த ஜெயக்கொடியும் தனலட்சுமி.. அக்கா நம்ம செந்தூரன் அந்த வேலைக்காரனுக்கு நல்ல பதிலடி கொடுத்துட்டான் அவன்கிட்ட நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க அவன் வாய் ரொம்ப ஓவரா பேசுறானு இவன வேலைக்கு வச்சி இருக்கணுமா பேசாம அவனை வேலை விட்டு தூக்கிடலாமே என்றார் ஜெயக்கொடி .
ஆமாக்கா பேசாம அவனை வேலையை விட்டு நிறுத்திடுங்களேன் என்றார் தனலட்சுமியும்.
இன்னும் ரெண்டு நாள் தானே சங்கவி கல்யாணம் முடியட்டும் அதுக்கப்புறம் நானே அவனை வேலையை விட்டு துரத்திடுறேன் அதுவரைக்கும் அந்த நாய் இங்கேயே இருக்கட்டும் என்றவர் சென்று விட்டார் .
இங்கே தன் அறைக்கு வந்த செம்பருத்திக்கு சின்னையனை போய் பார்க்கலாமா வேண்டாமா என்று மனம் பரிதவித்தது தனக்காக அடிவாங்கியவனை பார்த்து ஆறுதலுக்காவது பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்தவள் அவன் அறையை நோக்கி கிளம்பினாள்.
அவன் அறைவரை தைரியமாக வந்தவள் அவனுடன் பேச தயங்கியபடி நின்று இருக்க … கதவை திறந்து கொண்டு வெளியே செல்வதற்காக சின்னையன் வர அவன் அறை முன்பு நின்று இருந்த செம்பருத்தி பார்த்தான்.
என்ன செண்பா இங்க என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்டான் .
உங்கள பாக்கலாம்னு தான் வந்தேன் என்றாள் .அப்புறம் ஏன் உள்ள வராம இங்கேயே நிற்கிற? என்றான். Qசெம்பருத்தி எதுவும் பேசாமல் நிற்க என்ன செண்பா ஏன் எதுவும் பேச மாட்டேங்குற எதுக்காக என்ன பார்க்க வந்த? என்றான் .
எனக்காக அகிலாண்டேஸ்வரி அம்மாகிட்ட தைரியமா பேசுனதுக்கு ரொம்ப நன்றி என்றாள் செம்பருத்தி.
அவங்க கிட்ட நீதான் நியாயமா எதிர்த்து பேசி இருக்கணும். உனக்கு பதிலா நான் பேசினதுக்கு தான் உங்க பெரியம்மாவோட மகன் அதான் உன் அண்ணன் என்னை நல்லா பதம் பார்த்துட்டாரு என்று தன் கன்னத்தை தேய்த்து விட்டுக் கொண்டே கூறினான் சின்னையன் .
அகிலாண்டேஸ்வரி செந்தூரபாண்டியனுக்கும் தனக்கும் இடையில் இருந்த உறவுமுறை சின்னையனுக்கு தெரிந்திருப்பதை நினைத்து ஆச்சரியமானாள் செம்பருத்தி இதெல்லாம் உங்களுக்கு எப்படி?… நான் இந்த வீட்டுக்கு வந்த கொஞ்ச நாள்லயே இங்க இருக்கிறவங்க எல்லார் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன் . நீ சொல்லலைன்னாலும் உன்ன பத்தி எல்லா விஷயமும் எனக்கு தெரியும் என்றான் அவளைப் பார்த்து .
தயவுசெய்து இங்க நடந்ததை எல்லாம் போய் என் அண்ணன் கிட்ட சொல்லிடாதீங்க அவருக்கு என் பெரியம்மா மேல ரொம்ப மரியாதை இருக்கு பெரியம்மா என்கிட்ட நடந்துக்குறது எல்லாம் பாத்துட்டு நீங்க போய் அதை என் அண்ணன்கிட்ட இன்னைக்கு சொல்ல பாத்துட்டீங்களே என்றாள்.
உனக்காகத்தானே நான் அவர்கிட்ட பேசப் போனேன் அவருக்கு தெரிய வேண்டாமா இந்த வீட்டில் இருக்கிறவர்கள் எல்லாம் அவர் தங்கச்சியை எப்படி நடத்துறாங்கன்னு என்றான் சின்னையன் .
இங்க பாருங்க இத்தனை வருஷமா இங்க நடக்கிறது எதுவும் என் அண்ணன் காதுக்கு போகாம. நான் பார்த்துக்கொண்டேன் இனியும் அப்படித்தான் இருக்கணும்னு நினைக்கிறேன் தயவு செய்து நீங்களா போய் எதுவும் சொல்லி என் அண்ணனுக்கும் பெரியம்மாவுக்கும் இடையில் பிரச்சனை பண்ணி விட்டுடாதீங்க என்றவள் எனக்காக அடி வாங்கினதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் எனக்கு இது வேற என்ன சொல்றதுன்னு தெரியல என்றவள் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டாள் .
செம்பருத்தியை என்ன சொல்லுவது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
…
சங்கவியின் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் அகிலாண்டேஸ்வரி திடீரென வீட்டில் உள்ளவர்களை கூட்டி இருந்தார். ஹாலில் அமர்ந்திருந்த அனைவருக்கும் அகிலாண்டேஸ்வரி எதற்காக அவர்களை அழைத்து இருக்கிறார் என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் .
அனைவரும் அங்கு கூடியிருக்க செம்பருத்தியும் அங்கு தான் இருந்தாள் . அவளைப் பார்த்து இங்கே வா என்று அழைத்தார் அகிலாண்டேஸ்வரி செம்பருத்தியும் சற்று பயந்தபடி அவர் அருகில் வந்து நிற்க .. அவள் கையில் ஒரு பையை கொடுத்து இதில் பட்டு சேலையும், நகையும் இருக்கு போய் ட்ரெஸ்ஸை மாற்றிக்கொண்டு இதில் இருக்கிற நகையெல்லாம் போட்டுட்டு வா என்றார் .
அவரை புரியாமல் செம்பருத்தி பார்க்க … என்ன நின்னுட்டு இருக்க போ என்று கூற அடுத்த நொடி அங்கிருந்து ஓடிவிட்டாள் செம்பருத்தி .
செந்தூரபாண்டியன் அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தான். என்னம்மா ஏதோ அவசரம்னு வர சொன்னீங்க என்ன விஷயம் என்று கேட்டபடி அவரிடம் வர வாப்பா வந்து உட்காரு என்றவர் கொஞ்சம் பொறு என அவனிடம் சொல்லிவிட்டு தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தார் .
எங்க இருக்கீங்க என்றார் போன் அட்டென்ட் ஆனதும் . உங்க வீட்டு வாசல்ல தான்மா இருக்கோம் என்று சொல்லவும் இதோ நானே வரேன் என்று எழுந்து அகிலாண்டேஸ்வரி வாசலுக்கு சென்றவர் திரும்பி உள்ளே வர அகிலாண்டேஸ்வரியுடன் 40 வயது ஒட்டிய ஒரு ஆணும் அவரோடு ஒரு வயதான தம்பதியும் உள்ளே நுழைந்தனர் .
அவர்களை அழைத்து வந்த அகிலாண்டேஸ்வரி சோபாவில் அமரச் சொன்னவர் செந்தூரா இவங்கள உனக்கு ஞாபகம் இருக்கா என்றார் அகிலாண்டேஸ்வரி . ஏன்ம்மா தெரியாது இவரு வரதன் தானே நம்ம பஞ்சாயத்து போர்டு ஆபீஸ்ல கிளர்க்கா வேலை பாக்குறாரு இவர் எனக்கு நல்லா தெரியும் என்று அந்த 40 வயது கூட்டிய ஆணை பார்த்து கூறினான்.
ஆமாப்பா அவர்தான் அவரோட அம்மா அப்பா தான் இவங்க என்று வரதன் அருகில் அமர்ந்திருந்த வயதானவர்களை காட்டிக் கூறிய அகிலாண்டேஸ்வரி இவங்களோட பையன் வரதனுக்கு நம்ம செம்பருத்தியை பொண்ணு கேட்டு வந்திருக்காங்க. நானும் நம்ம செம்பருத்தி இவருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிறேன்னு வாக்கு கொடுத்துட்டேன் என்றார் அகிலாண்டேஸ்வரி .
அதைக் கேட்டதும் செந்தூரபாண்டியனுக்கு அதிர்ச்சியானது.. அங்கு வந்த செம்பருத்தியும் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள். அம்மா என்ன சொல்றீங்க இவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு அவருக்கு போய் நம்ம செம்பருத்தி கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு வாக்கு கொடுத்துட்டேன்னு சொல்றீங்க என்றான் அதிர்ச்சி மாறாமல் .
இல்ல செந்தூரா இவரும் இவர் மனைவியும் பிரிந்து ரொம்ப வருஷம் ஆச்சு ஊர்க்காரவங்க முன்னாடி அவங்க ஒண்ணா இருக்கிறதா இத்தனை நாள் அவரு சொல்லிட்டு இருந்திருக்காரு. ஆனா உண்மையிலேயே இவரை கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணும் விவாகரத்து வாங்கி வாங்கி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகுது என்றவர். பஞ்சாயத்து போர்டில் ஒரு நல்ல பொசிஷன்ல இருக்காரு நம்ம செம்பருத்திக்கும் இது சரியா வரும்னு தான் நான் வாக்கு கொடுத்துட்டேன் நான் வாக்கு கொடுத்தால் மாற மாட்டேன் என்று உனக்கு நல்லா தெரியும் என்றார் அகிலாண்டேஸ்வரி உறுதியாக.
அம்மா கொஞ்சமாவது யோசிச்சு தான் பேசுறீங்களா நம்ம செம்பருத்தி இவருக்கும் 20 வருஷம் வித்தியாசம் இருக்கும் . இவருக்கு போய் அதுவும் இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்றது சரி இல்லை என்றான் கோபமாக ..
அவன் தான் சொன்னதற்கு மறுத்து பேசவும் அகிலாண்டேஸ்வரிக்கு கோபம் வர செந்தூரா!! என்று அவனை அதட்டியவர் . இவர்கள் பேசுவதையெல்லாம் பார்த்து உரைந்து போய் நின்று இருந்த செம்பருத்தியிடம் சென்றவர் . ஏய் செம்பா இங்கேயே நின்னுட்ட வா என்று அவள் கைப்பிடித்து அழைத்து வந்தவர். செம்பருத்தி அருகில் குனிந்து .. உன் அண்ணன் செந்தூரப் பாண்டியனும் உன் மாமா பொண்ணு மீனாட்சி ஒருத்தருக்கு ஒருத்தர் காதலிக்கிற விஷயம் எனக்கு தெரியும் . உன் அண்ணன் அவனுக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்னா நான் சொன்னவனுக்கு நீ கழுத்தை நீட்டுனா தான் உன் அண்ணன் கல்யாணம் அவனுக்கு பிடிச்சவளோட நடக்கும் என்று அவள் காதில் கிசுகிசுத்தவர் அவளை எச்சரிக்கும் விதமாக பார்த்துவிட்டு செந்தூரபாண்டியன் அருகில் அழைத்து வந்தார் .
செம்பருத்தி பட்டு சேலை கட்டி நகையெல்லாம் போட்டு அழகு தேவதையாக அவன் கண் முன் வந்து நின்று இருக்க அவளை பார்த்துவிட்டு அவளுக்காக தன் அம்மா ஏற்பாடு செய்திருந்த வரதனையும் பார்த்தான். அவளுக்கு அப்பா போல் இருந்த அந்த மனிதனைப் பார்த்து செந்தூரபாண்டியனுக்கு ஆத்திரம் தான் வந்தது . இவனுக்கு என் தங்கையா என்று அவனுக்கு கோபம் வர அகிலாண்டேஸ்வரியை பார்த்தான் .
இங்க பாரு செந்தூரா நம்ம ஊர்க்காரவங்க எல்லாரும் நான் என்னவோ செம்பருத்தி இந்த வீட்டு வேலைக்காரி மாதிரி நடத்திட்டு இருக்கேன்னு என் மேல பழி போடுறாங்க … ஆனால் அவளை நான் எப்படி பாத்துக்குறேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். அவ மேல இருக்கிற அக்கறையினால தான் இந்த கவர்மெண்ட் உத்தியோகத்தில் வேலை பார்க்கிறவரை அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறேன் என்றார் .
அம்மா அதுக்காக என்று செந்தூரன் பேச வர அவனை தடுத்து நிறுத்திய அகிலாண்டேஸ்வரி சரி உன் முன்னாடியே நான் செம்பருத்தி கிட்ட இவரை கல்யாணம் பண்ணிக்க சம்மந்தமான கேக்குற அவ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா நீ மறுப்பு சொல்லமாட்ட தானே என்றார் அகிலாண்டேஸ்வரி .
ஆனால் அம்மா என்று மறுபடியும் அவன் தடுத்துப் பேச வர செந்தூரா என்று மீண்டும் அவனை அகற்றி அமர்த்தியவர் செம்பருத்தியை பார்த்து சொல்லு செம்பா உனக்கு இவர கல்யாணம் பண்ணிக்க சம்மதமா சொல்லு என்று அவர் அவள் தோளில் கை போட்டு அழுத்தி அவளை எச்சரிக்கும் விதமாக கேட்டார்.
இந்த திருமணத்திற்கு செம்பருத்தி சம்மதம் சொல்வாளா ?
EPISODE 35
அகிலாண்டேஸ்வரி செம்பருத்தியிடம் அவர் ஏற்பாடு செய்திருந்த திருமணத்திற்கு சம்மதமா என்று கேட்க …
செம்பருத்தி அம்மா சொல்றதுக்காக நீ இதை ஒத்துக்கணும் அவசியம் கிடையாது உன் மனசுல என்ன இருக்கோ அத வெளிப்படையா சொல்லு . அண்ணா உனக்கு ஒரு நல்ல வரனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்றான் செந்தூரபாண்டியன் .
தன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் செந்தூரபாண்டியனை பார்த்தாள் . எனக்காக என் அண்ணன் எத்தனையோ விஷயம் செஞ்சு இருக்கு இந்த வீட்ல என்னை யாரும் ஏத்துக்காத போது என்ன அவர் தங்கச்சியா ஏத்துக்கிட்டு இத்தனை வருஷமும் இந்த வீட்டில் வைத்து என்ன நல்ல விதமா பாத்துக்கிட்ட என் அண்ணனுக்கு இதுவரைக்கும் நான் எதுவுமே செய்ததில்லை . நான் இந்த கல்யாணம் செய்துக்கிட்டா என் அண்ணன் நினைச்ச மாதிரி மீனாட்சியை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கும்னா இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சுதான் ஆகணும் என்று மனதில் திட்டமாக முடிவெடுத்தவள் .
அகிலாண்டேஸ்வரியை பார்த்து எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான் என்றாள்.
அவள் திருமணத்திற்கு சம்மதம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தான் சின்னையன் .
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தபடி உள்ளே வர …
செந்தூரபாண்டியனோ செம்பருத்தி திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டதை கேட்டு அதிர்ச்சியானான். அவள் கையைப் பிடித்து திருப்பியவன் இங்கு பாரு செம்பருத்தி என் அம்மா சொன்னதுக்காக எல்லாம் இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதம் சொல்லணும்னு எந்த அவசியமும் கிடையாது. உண்மையாவே உன் முன்னாடி நிக்கிற அந்த ஆள பாரு அவனுக்கும் உனக்கும் ஏழாம் பொருத்தம் அவனை எப்படி நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச தயவு செய்து வேண்டாம் என்று சொல்லு என்றான் அவளை உலுக்கி .
அண்ணா பெரியம்மா எப்பவும் எனக்கு நல்லது மட்டும்தான் செய்வாங்க அவங்க யோசிக்காம இதெல்லாம் செஞ்சி இருப்பாங்க நீங்க நினைக்கிறீங்களா பெரியம்மா என்ன நம்பி அவங்ககிட்ட வாக்கு கொடுத்துட்டாங்க. அவங்க வாக்கை மீறுறதுக்கு நானே காரணமாயிடக் கூடாது எனக்கு அவரை கல்யாணம் பண்ணிக்க பரிபூரண சம்மதம் என்று அவள் எதிரில் நின்றிருந்த அந்த 40 வயது நிரம்பிய நபரை பார்த்து… முன் நெற்றி பாதி வழுக்கை விழுந்திருந்த அந்த கிழவனை கூற அவன் வாயெல்லாம் பல்லாக செம்பருத்தியை பார்த்து நின்று இருந்தான் .
செம்பருத்தி யாரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று சொல்கிறாள் என்று பார்த்ததும் சின்னையனுக்கு அதிர்ச்சியும் ஆத்திரமும் ஒரு சேர வந்தது வேகமாக அங்கே வந்தவன் செம்பருத்தியை பார்த்து செம்பா உனக்கு அறிவு எதுவும் கெட்டுப் போயிடுச்சா என்ன ? இந்த கிழவனத்தான் … நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறியா உனக்கு என்ன புத்தி கெட்டுப் போயிடுச்சா என்றான்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க சின்னையா தேவையில்லாம எங்க குடும்ப விஷயத்துக்குள்ள தலையிடாதே நீ இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்தவன் . அதோட நின்னுக்க எங்க குடும்ப விஷயத்துக்குள்ள வராத என்ற அகிலா வரதனையும் அவன் பெற்றோரையும் பார்த்து … எங்க வீட்டு பொண்ணு உங்க பையன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டா என் பொண்ணு சங்கவிக்கு கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடியே செம்பருத்திக்கும் உங்க மகனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம் ஏன்னா அவளை விட மூத்தவ செம்பருத்தி இருக்கிறப்போ அவ தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணினா நல்லா இருக்காது அதனாலதான் சொல்றேன் நாளைக்கு நல்ல முகூர்த்தம் தான் நாளைக்கு செம்பருத்திக்கும் உங்க மகனுக்கும் கல்யாணத்தை வச்சுக்கலாம் என்றார்
இவ்வளவு அவசரமாக செம்பருத்திக்கு கல்யாணம் செய்து வைக்க அகிலாண்டேஸ்வரி ஏன் துடிக்கிறார் என்று செந்தூரபாண்டியனுக்கு புரியவில்லை. அவனைப் போலவே தான் மற்றவர்களுக்கும் இருந்தும் அகிலாண்டேஸ்வரியிடம் கேள்வி கேட்க யாரும் முன் வரவில்லை .
ஆனால் வீட்டில் இருப்பவர்களை போல அவரை எதிர்த்து கேள்வி கேட்காமல் அடங்கிப் போகும் ஆள் சின்னையன் இல்லையே. இப்ப எதுக்கு இந்த கிழவனுக்கு செம்பருத்தி கல்யாணம் பண்ணி வைக்க இவ்வளவு அவசரப்படுறீங்க … அவள கல்யாணம் பண்ணி இங்க இருந்து துரத்துவதற்கான உண்மையான காரணத்த சொல்லுங்க நீங்க எதையும் பிளான் பண்ணாம செய்ய மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் என்றான் சின்னையன் .
அவனை முறைத்த அகிலாண்டேஸ்வரி டேய் தேவையில்லாம பேசாத முதல்ல இங்கிருந்து வெளியே போ எனக்கு என்ன செய்யணும்னு தெரியும் என்கிட்ட கேள்வி கேக்குற உரிமை உனக்கு மட்டுமில்ல இங்க இருக்கிற யாருக்குமே கிடையாது என்று செந்தூரபாண்டியனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கூற …
அம்மா அவன் கேட்டதில்ல என்ன தப்பு இருக்கு நான் கேட்க வேண்டிய கேள்வியை தானே சின்னையன் கேட்கிறான். இப்போ எதுக்கு இவ்வளவு அவசரமா செம்பருத்திக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறீங்க? என்றான் கோபமாக .
என்ன செந்தூரா இந்த வேலைக்காரன் கூட சேர்ந்துட்டு நீயும் என்னை எதிர்த்து பேச துணிஞ்சிட்டியா யார் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றவர் செந்தூரனை முறைக்க …
தனக்காக பரிந்து பேசும் தன் அண்ணனையும் சின்னையனையும் பார்த்த செம்பருத்திக்கு சந்தோசமாகத்தான் இருந்தது . ஆனால் தன் அண்ணனின் சந்தோஷம் தன்னால் கேடக்கூடாது என்று நினைத்தவள் அவர்களின் குறுக்கே புகுந்து தயவுசெய்து நீங்க ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்களா நான் தான் எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்னு சொல்லிட்டேனே அப்புறம் ஏன் எனக்காக நீங்க ரெண்டு பேரும் பேசி அம்மாவை சங்கடப் படுத்துறீங்க என்று செம்பருத்தி கூற, செந்தூரபாண்டியனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
ஆனால் சின்னய்யன் செம்பாவின் கையைப்பிடித்து தன் பக்கம் இழுத்தவன் . சத்தியமா சொல்லு இந்த கிழவனை கல்யாணம் பண்ணிக்க நீ ஆசைப்படுறியா இப்போ எதுக்கு அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்ன? என்றவன் அகிலாண்டேஸ்வரியை ஒரு பார்வை பார்த்தவன் அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி இந்த அம்மா அதான் இந்த பெரிய மனுஷி உன்னை மிரட்டினாங்களா?
தயவு செய்து நீங்க கொஞ்சம் சும்மா இருக்கீங்களா இது எங்க குடும்ப விஷயம் தேவையில்லாம நீங்க மூக்கை நுழைக்காதீங்க உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு எனக்காக நீங்க எதுக்கு பரிந்து பேசணும் என்றவள் என் பெரியம்மா என்ன மிரட்டல நான் விருப்பப்பட்ட தான் அவங்க சொன்னதுக்கு சம்மதம் சொன்னேன் எனக்கு இவர் கல்யாணம் பண்ணிக்க எந்த பிரச்சனையும் இல்லை என்று செம்பருத்தியும் பிடிவாதமாகக் கூறினாள்.
அதான் செம்பருத்தி தெளிவா சொல்லிட்டாளே இந்த கல்யாணத்துல சம்மதம்னு. இவளுக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்க போறது உறுதி இதை யாராலும் தடுக்க முடியாது என்று அகிலாண்டேஸ்வரியும் பிடிவாதமாக கூறிவிட, உங்களுக்கு என்ன? இப்போ இவளுக்கு கல்யாணம் ஆனா போதும்தானே.. செம்பாவுக்கு கல்யாணம் பண்ணி அவளை இந்த வீட்டை விட்டு துரத்தணும் என்ற சின்னையன் செம்பருத்தியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்..
டேய் நில்லுடா அவளை எங்க கூட்டிட்டு போற என்று அகிலா சின்னையனை தடுக்க போக அதற்குள்ளாக அவரைத் தாண்டி அங்கு இருந்த பூஜை அறைக்கு அவளை அழைத்து வந்தவன் அங்கிருந்த அம்மன் படத்தில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் கயிறை எடுத்து சிறிதும் தாமதிக்காமல் செம்பருத்தியின் கழுத்தில் கட்டி விட்டான் .
அதை பார்த்து அகிலாண்டேஸ்வரி விக்கித்து போய் நிற்க செம்பருத்திக்கோ அதிர்ச்சிதான். இப்படி திடீரென தன் கழுத்தில் தாலி கட்டி விட்ட சின்னையனை பார்த்தவளுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அவள் மிரண்டு போய் அவனை பார்த்துக்கொண்டு நின்றிருக்க. அங்கிருந்து குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி வகுட்டில் வைத்து விட்டவன்.. மீண்டும் செம்பருத்தியின் கையைப் பிடித்து அழைத்து வந்து அகிலாண்டேஸ்வரியின் முன்பு நின்றான்..
இப்போ நீங்க நினைச்ச மாதிரியே செம்பருத்திக்கு கல்யாணம் ஆயிடுச்சு திருப்தியா உங்களுக்கு என்றான் .
அகிலாண்டேஸ்வரி சின்னையனின் இந்த செயலை கண்டு உறைந்து போய் நின்று இருக்க, செந்தூர பாண்டியனுக்கோ ஒரு பக்கம் செம்பருத்தியின் வாழ்க்கை தப்பித்ததை நினைத்து சந்தோஷமாக இருந்தது.
டேய் இந்த வீட்டு வேலைக்கார நாய் நீ.. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா எங்க பேச்சை மீறி இவ கழுத்துல தாலி கட்டுவ? என்று அவனை அடிக்க அகிலாண்டேஸ்வரி கையை ஓங்க …
அம்மா!! என்று கர்ஜனையாக அகிலாண்டேஸ்வரியை நோக்கி வந்த செந்தூரபாண்டியன். இன்னொரு வாட்டி என் மச்சான அடிக்க கைய ஓங்கினிங்க அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் என்றான் செந்தூரப் பாண்டியன் .
சின்னயனை மச்சான் என்று செந்தூரப் பாண்டியன் சொன்னதும் புரியாமல் அவனைப் பார்த்தார் . செம்பருத்தியும் குழம்பி போய் செந்தூரப் பாண்டியனை பார்த்தார்.
என்ன பாக்குறீங்க என்னைக்கு நீங்க செம்பருத்திகாக வந்திருந்த வரனை தட்டி கழித்து சங்கவிக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு செஞ்சீங்களோ? அன்னைக்கு உங்களை பத்தின எல்லா விஷயமும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். உங்களால தான் என் தங்கச்சி இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு இருந்துருக்கா. எனக்கு இது தெரியக்கூடாதுன்னு அவ மறைச்சிட்டு இந்த கஷ்டத்தை எல்லாம் தாங்கி இந்த வீட்ல இத்தனை வருஷமா வாழ்ந்திருக்கா ..
அப்படிப்பட்ட என் தங்கச்சியோட வாழ்க்கை என் கண்ணு முன்னாடியே அழிஞ்சு போக நான் விடமாட்டேன். அதனாலதான் என்னோட நண்பனை இந்த வீட்ல வேலைக்கு செல்லையன் மூலமா சேர்த்து விட்டேன் . எப்படியாவது செம்பருத்தி கூட பழகி அவ மனசுல இடம் பிடிச்சு அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் நெனச்சேன் .
ஆனா அதெல்லாம் முழுசா நடக்கிறதுக்குள்ள நீங்க இப்படி ஒரு காரியத்தை செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. எப்படி உங்களுக்கு செம்பருத்தி வாழ்க்கையை அழிக்க இவ்வளவு துணிச்சல் வந்தது. அவ அப்படி என்ன செஞ்சிட்டா இந்த சொத்துக்கள் எல்லாம் அவ பங்கு போட வந்திடக் கூடாதுன்னு தானே இப்படி வயசான கிழவனுக்கு அவளை கல்யாணம் பண்ணி இந்த வீட்டை விட்டு துரத்த நினைச்சீங்க நல்ல வேலை என் நண்பன் அவளை கல்யாணம் பண்ணிட்டான் என்று திருப்தி பட்டவன் .இந்த சொத்து சுகத்துக்காக தானே இத்தனை வருஷம் என் தங்கச்சியை கஷ்டப்படுத்துனீங்க என்றான் செந்தூரபாண்டியன் .
இல்லை என்பது போல அகிலாண்டேஸ்வரி தன் மகன் தன்னை பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு பேசுவதை தாங்க முடியாமல் அவனிடம் கூற …
அவர் தலையாட்டியதை சட்டை செய்து கொள்ளாத செந்தூரபாண்டியன் செம்பருத்தியிடம் வந்தவன் நீ எதுக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னு எனக்கு தெரியாது என்றவன் தன் நண்பனை பார்த்து டேய் தாஸ் நல்ல வேலை என் தங்கச்சியோட வாழ்க்கையை நீ காப்பாத்திட்ட என்று சொல்லி அவனை கட்டிப்பிடித்துக் கொண்டான் .
என்னடா இது உன் தங்கச்சி மேல உனக்கு இருக்கிற அக்கறையை விட என் கனவு காதலி மேல அக்கறை இருக்காதா.. காலேஜ்ல உன் கூட படிக்கும்போதெல்லாம் நீ உன் தங்கச்சி கிட்ட பேசுறப்போ இவள பார்க்காமலேயே நான் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். நானே உன்கிட்டே எப்படியாவது பேசி செம்பாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனச்சேன் நீ இப்படி ஒரு சந்தர்ப்பத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறப்போ நான் விடுவேனா? அதனாலதான் நீ விஷயம் சொன்னதும் சம்மதித்து நானும் உன் தங்கச்சி கல்யாணம் பண்ணிக்க இந்த வீட்ல வேலைக்காரனா வேஷம் போட்டுட்டு வந்தேன். என்றவன் செம்பருத்தியை பார்த்து உன் அண்ணன் சொன்னதுக்காக நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கல உண்மையாவே எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். உன்னை மனசார நான் நேசித்தேன். அதனால தான் இவ்வளவு உரிமையா உன் கழுத்துல தாலியும் கட்டினேன் என்றான்
செம்பருத்திக்கு இங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை அவள் மிரண்டு போய் தாசை பார்த்துக்கொண்டு நின்றிருக்க, நீங்க இப்படி அவசரப்பட்டுடீங்களே நான் இவரை கல்யாணம் பண்ணிக்கிலன பெரியம்மா அண்ணாவுக்கும் மீனாட்சிக்கும் கல்யாணம் செய்து வைக்க மாட்டேன்னு என்கிட்ட சொன்னாங்க நீங்க இப்படி அவசரப்பட்டு என் கழுத்துல தாலி கட்டி என் அண்ணன் வாழ்க்கையை கெடுத்துட்டீங்களே என்று இந்த நேரத்திலும் செந்தூரபாண்டியனின் வாழ்க்கையை நினைத்து செம்பருத்தி கவலைப்படாள்..
இங்க பாரு செம்பருத்தி உன் அண்ணன் ஒன்னும் கோழையோ முட்டாளோ கிடையாது . எனக்கு வேணும்ங்கறத என்னால செய்துக்க முடியும். எனக்காக நீ இத்தனை வருஷம் பட்ட கஷ்டம் எல்லாம் போதும் என் அம்மாவோட சம்மதத்தோடு தான் நான் மீனாட்சி கல்யாணம் பண்ணிக்கணும்னு இருந்தேன்.. ஆனா என்னைக்கு அவங்க உன் வாழ்க்கையை அழிக்க துணிஞ்சிட்டாங்களோ! அதுக்குப் பிறகு நான் யாரோ அவங்க யாரோன்னு முடிவு பண்ணிட்டேன். என்றவன் அகிலாண்டேஸ்வரியை பார்த்து இந்த சொத்து சுகத்துக்காக தானே இத்தனையும் நீங்க செஞ்சீங்க எனக்கு இதிலிருந்து சள்ளி பைசா வேண்டாம் என் தங்கச்சியும் மீனாட்சியும் எனக்காக இருக்காங்க கூடவே என் நண்பன் தாஸ் இருக்கான் . என்றவன். மீனாட்சி படிச்சிருக்கா நானும் படிச்சிருக்கேன் நாங்க ரெண்டு பேரும் வேலை பார்த்து எங்க வாழ்க்கையை நடத்த முடியும் . போதும் இத்தனை வருஷம் என்னால என் தங்கச்சி இந்த வீட்டில கஷ்டப்பட்டது இந்த வீட்டை நீங்களே வச்சுக்கோங்க நாங்க இந்த வீட்டை விட்டு போறோம் என்று செம்பருத்தியையும் அர்ஜுன் தாசையும் அழைத்துக் கொண்டு செந்தூரபாண்டியன் அங்கிருந்து செல்ல… அகிலாண்டேஸ்வரி தன்னை விட்டு செல்லும் தன் மகனை தடுக்க முடியாமல் நிராயுதபாணியாக நின்றார் .
அங்கிருந்து சென்றவன் நேராக மீனாட்சியை பார்க்கத்தான் சென்றான். கழுத்தில் தாலியோடு வந்து நின்று செம்பருத்தியையும் அவள் அருகில் நின்றிருந்த அர்ஜுன் தாசையும் பார்த்து ஆச்சரியமான மீனாட்சி ஒரு வழியா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருச்சு டி…நான் ரொம்ப சந்தோஷப்படுறேன் என்றாள் .
ஆனால் நான் சந்தோஷமா இல்லையே என்றாள் செம்பருத்தி . அவள் சொன்னதை கேட்டு மூவரும் செம்பருத்தியை பார்க்க என் அண்ணன் எப்போ உன் கழுத்துல தாலி கட்டுவாரோ அப்போதான் நான் முழுசா சந்தோசப்படுவேன் என்றாள் .
அதுக்கு என்ன என்றவன் மீனாட்சியின் பெற்றோரின் சம்மதத்தோடு அவர்கள் வீட்டிலேயே எளிமையாக மீனாட்சியின் கழுத்தில் தாலி கட்டி தங்கையின் ஆசையை தீர்த்து வைத்தான்.
இங்கு அண்ணன் தங்கை பாசம் மட்டும் வெல்ல வில்லை.. கூடவே செம்பருத்தியின் பெயரை கேட்டு காதலில் விழுந்த அர்ஜுனது காதலும், தன் அத்தை மகளுக்காக போராடிய மீனாட்சியின் காதலும் தான். இரண்டு ஜோடிகளும் அவர்களது சொந்த உழைப்பில் வாழவேண்டும் என எண்ணி அனைத்தையும் துறந்து சென்றார்கள். அவர்களின் வாழ்க்கை பயணத்தை நோக்கு. அர்ஜுன் செம்பாவை விருப்பப்படி படிக்க வைத்தான். தன் தங்கையின் சந்தோச வாழ்வை அருகில் இருந்து பார்த்தான் செந்தூரபாண்டியன்.
episode 36
அகிலாண்டேஸ்வரியிடம் இருந்து தனியே வந்துவிட்டான் செந்தூர பாண்டியன் இருவரும் இப்பொது சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டனர் அவரவர் படிப்பிற்கு ஏற்ப வேலையும் கிடைத்து சில மாதங்களாக இருவரும் வேலைக்கும் சென்று வருகின்றனர்
அர்ஜுன் தாசிற்கு இப்பொது கேனடாவில் வேலை கிடைத்திருக்கிறது இருவரும் மும்பை ஏர்போர்ட்டில் இருந்து கேனடா செல்ல இருப்பதால் அவர்களை மும்பைக்கு ட்ரெயினில் வழி அனுப்ப வந்திருந்தனர் செந்தூர பாண்டியனும் தங்க மீனாட்சியும்
டேய் மச்சான் என் தங்கச்சியை ராணி மாதிரி பத்துக்கறேன்னு எனக்கு வாக்கு கொடுத்திருக்க அதை மறந்துராத சரியா அவ கண்ணுல இருந்து ஒரு சொட்டு தண்ணி வரக்கூடாது புரிஞ்சுதா என்று தாஸை எச்சரித்தான் செந்தூர பாண்டியன்
இங்க பாரு டா அவ்ளோ அக்கறை இருந்தா நீயும் எங்க கூட பேசாம வந்திரு உன் தங்கச்சியை கிட்ட இருந்து பாத்துக்கலாம் இல்ல என்றான் தாஸ் நக்கலாக
போடா இவ்ளோ நாள் இந்த சின்ன ஊர்க்குள்ளையே செம்பா இருந்துட்டா இப்போ தான் அதுவும் உன் மூலமா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால தான் அவ வெளி உலகத்தையே பார்க்க போறா அங்கையும் நான் வந்தா அப்பறோம் என்னை கவனிக்குறது மட்டும் தான் வேலையா வெச்சிருப்பா என்று செம்பருத்தியின் தலையை வாஞ்சையாக வருடிக்கொடுத்தேன் செந்தூரன்
ம்ஹும் ஆரம்பிச்சுட்டாங்க அண்ணனும் தங்கச்சியும் என்று சலித்துக்கொண்ட மீனாட்சி ஏய் உனக்கு தான் இப்போ கல்யாணம் ஆகிருச்சு இல்ல டி போய் உன் புருஷனை கட்டிக்க இன்னமும் என் புருஷனையே ஒட்டிக்கிட்டு இருந்தா நான் எப்படி டி என் புருஷன் கூட ரொமான்ஸ் பண்றது என்று செம்பருத்தியை தாஸிடம் தள்ளிவிட்டாள்
அவன் மோதிய செம்பருத்தி அவசரமாக அவனை விட்டு விலகியவள் ஏய் மீனாட்சி என்ன டி இது என்று வெட்கப்பட்டாள்
என்ன என்ன டி நீ ஏன் அங்க நிக்குற இங்க வா என்று அவளை இழுத்து தன் கைக்குள் நிறுத்திக்கொண்டான் தாஸ்
அவன் கைக்குள் நெளிந்துகொண்டே நின்றவள் ஏங்க அண்ணா நிக்குறாரு அவர் முன்னாடி போய் என்று அவன் கையை எடுத்துவிடப் போக
டேய் மச்சான் உன் தங்கச்சியை பாரு நான் கிட்ட வந்தாலே இப்படி தான் எப்போப்பாரு சொல்லிட்டு இருக்கா பெரியம்மா இருக்காங்க அண்ணா இருக்கான் அவன் இருக்கான் இவன் இருக்கான்னு என்னை கிட்டயே விட மாட்டேங்குறா அப்பறோம் உனக்கு மருமகன் இன்னும் வரலையின்னு என்னை கேக்கக் கூடாது என்றான்
ஐயோ என்னங்க அண்ணாகிட்டே இதை எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க எனக்கு வெட்கமா இருக்கு என்று திரும்பி அவன் கை வளைவிற்குள் முகத்தை வைத்து மூடிக்கொண்டாள்
டேய் மச்சான் இப்போதான் டா உன் தங்கச்சி என்னை கட்டியே பிடிக்குறா என்று சத்தமாக தாஸ் கூற
ஐயோ வாயை மூடுங்க என்றவள் அண்ணா நாங்க கிளம்புறோம் என்று வேகமாக ட்ரெயினில் ஏறிக்கொண்டாள்
அவர்கள் இருவரையும் பார்த்து சந்தோசப்பட்ட செந்தூரன் தன் தங்கை புகுந்த வீட்டில் சந்தோசமாக வாழ்வாள் என்ற நம்பிக்கையில் அவர்களை வழி அனுப்பி வைத்தான்
ம்ஹும் பாவம் என் புருஷன் தங்கச்சியை பிரியுறதை நினைச்சு கண்ணு கலங்குரார் என்று செந்தூரனின் விழிகளில் கோர்த்து இருந்த கண்ணீரை தன் சேலைத்தலைப்பில் துடைத்துவிட்டாள்
அவள் கையை பிடித்து முறுக்கி அவள் முதுகுக்கு பின்னால் பிடித்து நிறுத்தியவன் என்ன டி சொன்ன என் தங்கச்சி கிட்டே அவ என்கூட ஒட்டிக்கிட்டு இருந்தா நீ ரொமான்ஸ் பண்ண முடியாதா இப்போ தான் என் தங்கச்சி கிளம்பிட்டாளே எங்க உன் மாமனுக்கு ஒரு முத்தம் கொடு பார்க்கலாம் என்றான்
ம்ஹும் போங்க மச்சான் எனக்கு வெட்கமா இருக்கு என்று செம்பருத்தியை போலவே மீனாட்சி வெட்கப்பட்டவள் எல்லாம் நமக்கு பஸ்ட் நைட் அன்னிக்கு பாத்துக்கலாம் அதுவரை நோ டச்சிங் அண்ட் நோ கிஸ்ஸிங் என்றவள் அவனை தள்ளிவிட்டு முன்னே நடக்க
ம்ஹும் என் அம்மா எப்போ மனசு மாரி இறங்கி வரது நமக்கு எப்போ டி முதல் இரவு நடக்குறது என்று அவள் பின்னால் சோகமாக சென்றான்
அது உன் அம்மாகிட்டே தான் கேக்கணும் என்ற மீனாட்சி சீக்கிரம் வாய்யா வந்து வண்டியை எடு இருட்டிற போகுது என்று வந்து அவன் வண்டியில் சாய்ந்து நின்று இருந்தாள்
எல்லாம் நேரம் டி எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கட்டும் அப்போ இருக்கு உனக்கு என்று அவள் இடையில் நறுக்கென்று கிள்ளிவிட்டு வண்டியை எடுத்தான்
ஷ் டேய் மச்சான் உனக்கு ரொம்ப கொழுப்பு ஆகிருச்சு என்று அவன் பின்னால் ஏறி அமர இருவரும் தங்கி இருந்த அபார்ட்மெண்டிற்கு கிளம்பி இருந்தனர்
லிப்ட்டில் ஏறி அவர்கள் வீடு இருந்த தளத்திற்கு வர லிப்ட் கதவு திறந்ததும் மீனாட்ச்சியின் பெற்றோர்கள் லிப்ட் முன்பே நின்று இருந்தனர்
அவர்களை பார்த்த இருவரும் சந்தோஷமானார்கள் அப்பா அம்மா எப்போ வந்திங்க சொல்லவே இல்ல எங்ககிட்ட என்றாள் மீனாட்சி
ஆமா அத்தை ஒரு போன் பண்ணி சொல்லி இருந்தா நாங்களே வந்து உங்கள பிக் அப் பண்ணிருப்போமே என்றான் செந்தூரன்
இல்ல மாப்பிள்ளை அது அது வந்து என்று மீனாட்ச்சியின் அம்மாவும் அப்பாவும் தயங்க என்ன ஆச்சு ரெண்டு பேருக்கும் ஏன் ஒரு மாதிரி முழிக்குறிங்க அவசரமா எதுவும் வருதா என்று சிரித்தாள் மீனாட்சி
ஏய் கொழுப்பு டி உனக்கு என்று அவளை அடித்த அவள் அம்மா மாப்பிள்ளை எங்களை மன்னிச்சிருங்க என்றான்
ஏன் அத்தை என்ன ஆச்சு எதுக்கு மன்னிப்பு கேக்குறீங்க என்றான் புரியாமல்
இல்ல மாப்பிள்ளை என்று அவர் பேச வர
நான் தான் உன்கிட்டே மன்னிப்பு கேக்கணும்னு அவங்களை வற்புறுத்தி என்னோட இங்க கூப்டு வந்தேன் செந்தூரா என்று அவர்கள் முன் வந்தார் அகிலாண்டேஸ்வரி
அவரைக் கண்டதும் செந்தூரனுக்கும் மீனாட்சிக்கும் அதிர்ச்சியானது இருவரும் இருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்
என்னப்பா நான் இங்க வந்தது உங்களுக்கு பிடிக்கல போல அதான் என்னை பார்த்தும் ரெண்டு பேரும் எதுவும் பேச மாட்டேங்குறீங்க என்றவர் மீனாட்சியின் பெற்றோரை பார்த்துவிட்டு நீட்டி நீங்க ரெண்டு இருந்து பேசிட்டு பொறுமையா வாங்க நான் கிளம்பறேன் என்று அவர்களை தாண்டி சென்றார் அகிலாண்டேஸ்வரி
சம்மந்தி இருங்க நாங்க அவங்ககிட்டே பேசுறோமே என்று அவரை தடுத்தவர்களை பார்த்து வலியுடன் சிரித்தவர் இல்ல வேணாம் என்னை பார்த்ததும் என் புள்ள ஓடி வந்து அம்மான்னு கட்டிப்பிடிச்சுப்பான்னு நினைச்சேன் ஆனா அவன் ஏன் டா என்னை பார்தோம்ங்குற மாதிரி அதிர்ச்சியா நிக்குறான் இதுக்கு மேலயும் நீங்க போய் அவங்களை சமாதானம் செய்றதுல என்ன ஆகிடப்போகுது நான் கிளம்பறேன் என்று அவர் திருப்பி செல்ல
ஆமா உங்க மேல பாசம் இல்லாம தான் கல்யாணம் பண்ணிட்டு வந்த நாளுல இருந்து இன்னி வரைக்கும் என் அம்மா மனசு மாரி எப்போ என்கிட்டே பேசுவார்களோ அப்போ தான் நமக்குள்ள எல்லாமேன்னு சொல்லி இப்போவரை தள்ளி இருக்காரு உங்க புள்ள அதை புரிஞ்சுக்காம நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க என்று அவர் முன் வந்த மீனாட்சி
இவ்ளோ தூரம் எங்களை தேடி வந்திருக்கீங்க அந்த அதிர்ச்சியில் நாங்க கொஞ்ச நேரம் நின்னுட்டோம் அதுக்குள்ள இவ்ளோ அளப்பறையா வாங்க அப்பறோம் ஊருக்கு போய்க்கலாம் என்று அகிலாண்டேஸ்வரி கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவர்கள் வீட்டின் முன்பு வந்தவள் யோவ் மச்சான் இன்னும் என்ன அங்கையே நின்னுட்டு இருக்க வா வந்து கதவை திற வந்தவங்களை எவ்ளோ நேரம் வெளியவே நிக்க வெக்குறது என்று அதட்டினாள் செந்தூரனை
அவள் பேசிய தோரணையில் ஓடி வந்து கதவை திறந்து விட்டவன் வாம்மா என்றான் அகிலாண்டேஸ்வரியை பார்த்து
அவரும் சந்தோசமாக தன் மகன் வீட்டிற்குள் நுழைந்தார்
முதலில் இருவரும் அமைதியாகவே ஹாலில் அமர்ந்து இருக்க அவர்களின் அமைதியை உடைத்து இருவரையும் முன்பு போல பேச வைத்தாள் மீனாட்சி செம்பருத்தியை இத்தனை ஆண்டுகளாக துன்புறுத்தியதற்கு செந்தூரனிடமும், கேனடாவில் இருக்கும் செம்பருத்திக்கு வீடியோ கால் மூலம் பேசி அவளிடமும் மன்னிப்பு கேட்டார் அகிலாண்டேஸ்வரி
கிட்டத்தட்ட ஒருவாரம் மூவரும் அங்கே இருந்து ஊரை சுற்றி பார்த்துவிட்டு வந்தனர் எவ்வளவோ செந்தூரனையம், மீனாட்சியையும் தன்னுடனேயே வர சொல்லி பார்த்துவிட்டனர் அகிலாண்டேஸ்வரியும், மீனாட்சியின் பெற்றோரும் ஆனால் இருவரும் இப்பொது இவர்கள் வாழும் வாழ்க்கை மிகவும் பிடித்துவிட்டதாகவும் கொஞ்ச காலம் இதை அனுபவித்து விட்டு வருவதாக கூறிவிட
அவர்களை அதற்கு மேலும் வற்புறுத்த விரும்பவில்லை அகிலாண்டேஸ்வரி
செந்தூரா அடுத்த வாரம் நம்ம ஊர்ல திருவிழா வருது அதுக்கு நீதான் வழக்கம் போல முன்ன நின்னு எல்லாமும் செய்யணும் அதுக்காகவாவது ஊருக்கு வா என்றார் அகிலாண்டேஸ்வரி
அவன் திரும்பி மீனாட்சியை பார்க்க என்னை ஏன் பாக்குறீங்க போகணும்னா நான் இப்பவே பேக் பண்ணிட்றேன் எனக்கு நோ ப்ரோப்லேம் என்றாள்
அதை கண்டு சிரித்தவன் சரிம்மா போலாம் என்றான்
அடுத்த நாளே ஊருக்கு பயணப்பட்டனர் மூவரும்
EPILOQUE
ஊருக்கு வந்ததில் இருந்து காலில் பம்பரத்தை கட்டிக்கொண்டு வேளைகளில் இறங்கி விட்டான் செந்தூரன்
மீனாட்சியும் மற்றவர்களோடு சேர்ந்து வீட்டு வேலைகளிலும் திருவிழா வேலைகளிலும் மும்மரமாகி விட்டாள்
இந்த வருடமும் செந்தூரனின் தலைமையில் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது
இரவு தாமதமாக தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் செந்தூரன் அவனுக்காக ஹாலிலேயே காத்திருந்த அகிலா வாப்பா வேலை எல்லாம் முடிஞ்சுதா என்றார்
ம்ம்ம் முடிஞ்சுது மா நீங்க ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க நேரம் ஆச்சு என்று வந்து அவர் அருகில் அமர்ந்தான்
அவ அப்போவே தூக்கம் வருதுன்னு போய்ட்டாப்பா நான் கூட சொன்னேன் உன் புருஷன் வருவான் நீ வெய்ட் பண்ணி அவனுக்கு சாப்பாடு போடுன்னு அதுக்கு அவ சொல்றா என் புருஷன் உங்களுக்கு புள்ளை தானே வேணும்னா நீங்க முழிச்சிருந்து அவருக்கு சாப்பாடு பரிமாருங்கன்னு சொல்லிட்டு தூங்க போய்ட்டா ப்ப்பா என்றார் கவலையாக
என்ன சொல்றிங்க ம்மா அவ அப்படி எல்லாம் பேசுறவ இல்லையே என்றான் சந்தேகமாக
ஓஹோ அப்போ நான் தான் வேணும்னு சொன்னேன்னு நினைக்குறியா எல்லாம் என் நேரம் நீ வரட்டும் உனக்கு சாப்பாடு போடணும்னு தூங்காம கொள்ளாம இந்த வயசான காலத்துல முழிச்சிருந்தேன் பாரு என்னை சொல்லணும் என்று கோபமாக எழுந்தார்
ஐயோ அம்மா நான் அப்படி சொல்லல நீங்க என்னை தப்ப புரிஞ்சுக்கிட்டீங்க என்றவன் மீனாட்சி உங்களையே எதிர்த்து பேசிட்டாளா எனக்கு அது தான் நம்ப முடியல இருந்த நான் அவளை என்னனு கேட்டுட்டு வரேன் என்று எழுந்தான்
அவ இந்த நேரம் நல்லா தூங்கிருப்பா நீ விடுப்பா காலையில பேசிக்கலாம் நீ முதல்ல வா வந்து சாப்பிடு என்றார்
இல்லம்மா அவளை என்னனு கேட்டுட்டு வந்துடறேன் என்று சற்று கோபமாக பேசினான் செந்தூரன்
அட வாப்பா அதான் காலையில பேசிக்கலாம்னு சொல்றேன் இல்ல இப்போ போய் நீ அவகிட்டே என்னனு கேக்க ஆரம்பிச்சா உன் பொண்டாட்டி சத்தம் போட்டு ஊரை கூட்டிருவா திருவிழாவுக்கு வந்திருக்க நம்ம சொந்தம் எல்லாம் தூங்கிட்டு இருக்கு அவங்களுக்கு இவ பண்றது எல்லாம் தெரிய வேணாம் நீ வா என்று அவனை சமாதானம் செய்து அழைத்து சென்று சாப்பிட வைத்தார் அகிலா
இன்னமும் கோபம் குறியாமல் அகிலா வைக்க வைக்க கோபத்தில் சாப்பிட்டு முடித்தவன் தன் ரூமிற்கு வந்தான்
அறைக்குள் வந்து கதவை சுற்றிவிட்டு விளக்கை போட்டவன் ஏய் மீனா மீனாட்சி எழுந்திரு டி என்று கட்டிலில் போர்த்தி படுத்திருந்தவளை வந்து எழுப்பினான்
அவள் எந்த சலனமும் இல்லாமல் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டு இருக்க ஏய் மீனாட்சி எழுந்திரு டி நான் கூப்பிடுறேன் இல்ல என்றான் கோபம் சற்றும் குறையாமல்
அது என்ன நான் கூப்பிடுறேன் இல்ல இவரு பெரிய சண்டியர் இவரு கூப்பிட்டதும் சொல்லுங்கன்னு வந்து நிப்பாங்களாக்கும் போய்யா என்றாள் மீனாட்சி
ஏய் வர வர உனக்கு வாய் ஜாஸ்தியாகிருச்சு எழுந்திரு டி என்று அவள் போர்த்தி இருந்த போர்வையை மொத்தமாக உருவி இருக்க முகம் வரை போர்த்தி படுத்திருத்தவள் மீதிருந்த போர்வை விளங்கியவன் அவளை பார்த்து ஸ்தம்பித்து போனான்
தலைக்கு கை கொடுத்து மிடுக்காக படுத்திருந்தவளை ஏற இறங்க பார்த்தான்
என்ன மைனர் சார் என்ன அப்படி லுக் விடறீங்க என்றாள்
என்ன டி கோலம் இது இப்படியேவா தூங்கின நீ என்றான்
நான் எங்க தூங்கினேன் இந்த மைனர் மாப்பிள்ளை வருவாருன்னு வெய்ட் இல்ல பண்ணிட்டு இருக்கேன் என்றவள் எழுந்து அமர்ந்தாள்
அம்மா நீ தூங்கிட்டேன்னு சொன்னாங்க என்றான்
ஓ அதுவா என்றவள் வேற என்ன சொன்னாங்க உங்க அம்மா என்று நின்று இருந்தவன் கையை பிடித்து இழுத்து கட்டிலில் அமர்த்தினாள்
ம்ம்ம் நீ என் அம்மாகிட்டே வாய் விட்டதை எல்லாம் சொன்னாங்க ஏன் டி பெரியவங்கன்னு மரியாதையை இல்லாம இப்படி தான் என் அம்மாகிட்டே பேசுவியா நீ அவங்க வயசுக்கு மரியாதையை கொடுக்க வேண்டாம் என்றான் கோபமாக
அவங்க மட்டும் எப்படி பேசினாங்க தெரியுமா எனக்கு தூக்கம் வருதுன்னு சொல்றேன் உன் புருஷன் வந்து சாப்பிட அப்பறோம் நீயும் சாப்பிடணும் அவர் தூங்குன அப்பறோம் தான் நீயும் தூங்கணும்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடறாங்க அப்பறோம் நான் சும்மா இருப்பேனா நானும் திருப்பி பேசிட்டேன் அவங்ககிட்டே என்றவள் ஆமா என்கிட்டே மட்டும் இவ்ளோ கேக்குறியே மச்சான் உன் அம்மாகிட்டே பேசுனியா என்றாள்
ஐயோ இது என்ன புது பிரச்சனை என் அம்மாவை கேட்டா இவளை கேளுன்னு சொல்ராங்க இவ என்னடான்னா இருக்குற மொத்த பழியையும் அவங்க மேல போடறாளே என்று இருவருக்கும் இடையில் இப்பொது தான் மாட்டிக்கொண்டதை எண்ணி நொந்துகொண்டான்
யோவ் என்னய்யா பேசாம நிக்குற உன் அம்மாகிட்டே ஏன் இப்படி என் பொண்டாட்டியை பேசுனாங்கன்னு கேளு போ என்றாள்
ஏய் இரு டி அவங்க பெரியவங்க நீ கொஞ்சம் என்று அவன் முடிந்திருக்கவில்லை
ஓஹோ அப்போ உன் அம்மா என்ன சொன்னாலும் நான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும் நீ எனக்கு சப்போர்ட் பண்ணி பேச மாட்ட அப்படி தானே என்று மூக்கை சிந்தியவள் போதும் போதும்யா உன்னை நம்பி கல்யாணம் பங்கிட்டு வந்தேன் பாரு என்னை சொல்லணும் நான் போறேன் என் வீட்டுக்கே போறேன் இனி உன்கிட்டே என்னால குப்பை கொட்ட முடியாது என்று அங்கிருந்து செல்லப் போனாள்
ஏய் கோல்ட் பிஷ் நில்லு டி இப்போ எதுக்கு இந்த சின்ன விசயத்துக்கு உன் வீட்டுக்கு போறேன்னு சொல்ற நில்லு டி என்று அவள் கையை பிடித்து நிறுத்தினான்
ச்சி விடு என் கையை இது சின்ன விஷயமா உனக்கு என்று மேல் மூச்சு வாங்கியவள் அவனை முறைத்துவிட்டு என் பின்னாடி வந்தா அப்பறோம் நடக்குறதே வேற என்று அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்
இங்கு என்ன நடந்தது என்ன ஆனது என்று தலையும் புரியாமல் வாழும் புரியாமல் நின்று இருந்தவன் மீனாட்சியை சமாதானம் செய்து அழைத்து வரலாம் என்று வேகமாக அறைக் கதவை திறக்க
என்ன மைனர் மாப்பிள்ளை என்னை தேடி வந்திங்களா என்று சிரித்த முகமாக கையில் பால் செம்புடன் நின்று இருந்தாள்
அவளை அதிர்ந்து பார்த்தவன் பதில் பேசாமல் நின்று இருக்க
என்னப்பா ஏன் அப்படி பாக்குற என் மருமகளை என்று அவள் பின்னால் இருந்து வந்தார் அகிலா
அம்மா நீங்களா இப்படி பேசுறீங்க என்று அவரிடம் பேச
நானே தான் செந்தூரா என்று சிரித்தவர் சும்மா நானும் என் மருமகளும் உன்கிட்டே விளையாடினோம் என்றவர் இன்னிக்கு உனக்கும் என் மருமகளுக்கும் பஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு பண்ணணும்னு நான் பேசிட்டு இருந்தேன் உன் பொண்டாட்டி தான் வந்து உன்கிட்டே எதையும் சொல்ல வேண்டாம் நீ வீட்டுக்கு வந்ததும் சர்பிரைஸ் பண்ணலாம்னு சொல்லி இது எல்லாம் செய்ய சொன்னா என்றவர்
சரி சரி நல்ல நேரம் ஆரம்பமாகிடுச்சு ரெண்டு பேரும் உள்ள போங்க என்று இருவரையும் பிடித்து அறைக்குள் தள்ளியவர் சீக்கிரம் ரெண்டு பேரும் அடுத்த வருஷம் எனக்கு ஒரு பேரக்குழந்தையை பெத்து கொடுத்திருங்க என்று அவர் கதவை சுற்றிவிட்டு சென்றுவிட
அடுத்த நொடி மீனாட்சியை திரும்பி முறைத்தவன் கொஞ்ச நேரத்துல ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஒரு வழி பண்ணிட்டீங்க இல்ல என்றான்
ம்ம்ம் ம்ம்ம் என்று தலையை மேலும் கீழும் தலையை ஆட்டியவள் இந்தாங்க மைனர் மாப்பிள்ளை இந்த பாலை குடிங்க என்று பால் செம்பை அவன் முன் நீட்டினாள்
அடிங்க திமிரு டி உனக்கு என்று செம்பை வாங்கி அருகே வைத்தவன் அவள் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான்
ஹக் பாத்துங்க மெதுவா என்றாள் வெட்கபட்டுக்கொண்டே மீனாட்சி
ஏய் இன்னும் நான் ஸ்டார்ட் பண்ணவே இல்ல டி என்று அவள் கன்னத்தை கடித்தவன் எவ்ளோ நாள் என்னை களைச்சு இருப்ப உனக்கு முத்தம் தர வர அப்போ எல்லாம் எவ்ளோ பேசிருப்ப டி என்ன இன்னிக்கு நல்லா வசமா வந்து மாட்டிகிட்டே பாத்தியா இனி உன்னால எதுவும் பண்ண முடியாது என்றான்
ஹ யாரு நான் நான் வந்து மாட்டிக்கிட்டேனா என்று சிரித்தவள் அதுக்கு வாய்ப்பே இல்ல மைனரே நீ தான் வந்து என்கிட்டே என்றவள் செந்தூரனை கிடுக்கி பிடி போட்டு கட்டிக்கொண்டவள் வாழ்க்கை முழுக்க நீ என்கிட்டே மாட்டிக்கிட்ட டி என் செல்லம் என்று அவன் நுனி மூக்கை கடித்து வைத்தாள்
ஷ் ஏய் வலிக்குது டி என்று அவள் சொன்னதை கேட்டு சிரித்துக்கொண்டே பேசியவன்
லெட்ஸ் ஸ்டார்ட் என்றான்
ம்ம்ம் என்று வெட்கப்பட்டாள் மீனாட்சி
அவளை அப்படியே தூக்கி சென்று கட்டிலில் கிடத்தியவன் தன் சட்டையை வேகமாக கழட்டிவிட்டு அவள் தாவினான்
மெதுவா டா என்று அவனை இழுத்து கட்டிக்கொண்டவள் பால் கொண்டு வந்தேன் அதை முதல்ல குடி அப்பறோம் மத்ததை ஆரம்பிக்கலாம் என்றாள்
எல்லாம் முடிச்சிட்டு அப்பறோம் மொத்தமா குடிச்சுகிறேன் டி அடுத்த ரௌண்டுக்கு எனர்ஜி வேணும் இல்ல என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க
இப்போ ஐயாவுக்கு எனெர்ஜி எந்த லெவெல்ல்ல இருக்கு என்றாள் மோகத்தில் கண்களை மூடிக்கொண்டே
முதல்ல உன்கிட்டே இருக்குற எனெர்ஜி மொத்தத்தையும் குடுக்குற அளவுக்கு என்கிட்டே தெம்பு இருக்கு என்று குதர்க்கமாக பேசியவன் கைகள் அவள் மாராப்பை விலக்கி அவள் மார்புக்கு நடுவே முகம் புதைத்தான்
கண்கள் மேலே செல்ல மோகத்தில் கீழ் உதட்டில் கடித்தவள் செந்தூரனை மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்தாள்
அடுத்தடுத்த காரியத்தில் இறங்கிவிட்டான் செந்தூரன் கலசங்கள் இரண்டையும் கையில் ஏந்தியவன் அதில் வராத தேனை அள்ளி அள்ளிப் பருகினான் அவளும் வேண்டும் மட்டும் இல்லை தனக்கு வேண்டும் அவளுக்கு அவனிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு அவனுக்கு கீழே படுத்திருந்தாள்
இருவரின் முனகல் சத்தம் அந்த அறையை நிறைத்தது இத்தனை நாள் இருவரின் விரதமும் முடித்து வைத்து இருந்தது இந்த முதல் இரவு கட்டிலில் அவளை பூ பந்தை போல கையாண்டான்
அவன் அசைவிற்கு எல்லாம் தன் உடலை வில்லாக வளைத்து நான் ஏற்ற ஏதுவாக அவனுக்கு கொடுத்திருந்தாள் மீனாட்சி
நீண்ட நேரம் கழித்து இருவரும் அசதியில் கட்டிலில் இளைப்பாறி இருக்க அந்த குளிர் நிறைந்த அறையிலும் இருவருக்கும் வியர்த்து கொட்டி சோர்வடைய வைத்திருந்தது கட்டிலில் அவன் மார்பை கடத்திக்கொண்டு படுத்திருந்தவளை தாண்டி மேஜையில் இருந்த செம்பை எடுக்க கையை நீட்டினான் செந்தூரன்
அவன் கையை எட்டி பிடித்தவள் இழுத்து தன் கலசங்களில் வைத்தவள் குறும்பாக சிரிக்க
தன் எனெர்ஜியை ஏற்றுக்கொள்ள செம்பில் இருந்த பாலை குடிக்காமலேயே அவளிடம் ஏற்றிக்கொண்டு இருந்தான் கோல்ட் பிஷ்ஷின் செந்தூரன்
