Home Uncategorizedமோகம் முத்தாடுதே 13

மோகம் முத்தாடுதே 13

by Layas Tamil Novel
426 views

EPISODE 13

பால் டம்பளருடன் தங்கள் அறைக்கு தயங்கி கொண்டே வந்து ரோஜா உள்ளே பார்க்க…

அப்போதுதான் குளித்துவிட்டு வெளியே வந்தான் அயன் . அவன் சட்டை இல்லாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு வந்ததை பார்த்ததும் ஐயோ..கடவுளே…என்று கத்தியவள் அவனை பார்க்காமல் திரும்பி நின்றுகொண்டாள்.

“ஏய், என்னடி திரும்பிட்ட?” என்றவாறே அவளை நோக்கி வந்தான் வீரா.

“டேய்… டேய்… அங்கேயே நில்லு. என் பக்கத்துல வராத. இருந்த டிரஸ் போட்டுட்டு வா. இப்படி அறையும் குறையுமா வந்து நிக்காத” என்றாள் வீராவைத் திரும்பியும் பார்க்காமல்.

“ஏன்? நான் இப்படி இருந்தா நீ என்னைப் பார்க்க மாட்டியா என்ன?” என்றான் வீரா.

‘உன்னை நான் ஏன்டா இப்படி பார்க்கணும்?’ என்று மனதில் நினைத்துக்கொண்டவள், “முதல்ல போய் டிரஸ் போட்டுட்டு வரப் போறியா இல்லையா?” என்றாள் அவன் பக்கம் லேசாகத் திரும்பிப் பார்த்து.

“அது என்ன நீ சொன்னா நான் செய்யணுமா என்ன? நான் இப்படியேதான் இருப்பேன். என்னடி பண்ணுவ, ரோஸ் மில்க்? பார்க்கிறேன், எவ்வளவு நேரம்தான் இப்படியே நிக்கப் போறேன்னு” என்றவன், அவள் பின்னால் நின்று இருந்தவன் வேண்டும் என்றே பூவிழியின் முன் வந்து, அவள் தன்னை பார்க்குமாறு நின்றான்.

அவனைப் பார்த்ததும் கண்களை இருக்க மூடியவள் வேறு பக்கம் திரும்பிக்கொள்ள… “என்னடி செல்ல ரோஸு? இப்படி என்னைப் பார்க்க மாட்டேன்னு அடம் பிடிக்குற? நீதானே என்னை முழுசாப் பார்க்கப் போற? இப்படி வெட்கப்பட்டு என்னடி பண்றது?” என்றான் அவளைப் பின்னால் இருந்து கட்டிக்கொண்டு.

இப்படி வெற்று மேனியில் வீரா தன்னைக் கட்டிக்கொள்வான் என்று பூவிழி சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. “டேய், இப்போ எதுக்குடா என்னைக் கட்டிப் பிடிச்ச? முதல்ல என்னை விடு. அத்தை இந்தப் பாலை உனக்குக் கொடுக்கச் சொன்னாங்கன்னுதான் நான் இங்கே வந்தேன். இல்லைனா நான் ஹால்லேயே தூங்கி இருப்பேன்” என்றாள் பூவிழி.

அவள் அப்படிச் சொன்ன அடுத்த நிமிடம், தன் பக்கம் பூவிழியைத் திருப்பியவன், “என்ன ரோசு, சொன்ன? உனக்கு இவ்ளோ பெரிய ரூம் இருக்கு. அப்போ உன் புருஷன் நான் இருக்க, அப்போ நீ இப்படி வெளியே போய் தனியாப் படுத்தா எல்லாரும் என்னை என்ன நினைப்பாங்க?” என்றான்.

“என்ன நினைப்பாங்க? எனக்கு உன்னைப் பிடிக்கலை. அதனாலதான் நான் வெளியே வந்து படுத்துக்கிட்டேன்னு நினைப்பாங்க. அவங்க எல்லாம் அப்படி நினைச்சா எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை” என்றவள், தன்னை கட்டிக்கொண்டிருந்தவனின் கையைப் பிரித்துவிட்டவள், தன் கையில் இருந்த பால் டம்ளரை அவன் கையில் கொடுத்து, “இந்தா, இதை நீ குடிச்சா குடி. இல்லாட்டி போ… பெரிய குழந்தை இவன். பால் சூடாக இருந்தால்தான் குடிப்பாராம். இதை வேற தினமும் நான் தான் இவனுக்குக் கொண்டு வந்து கொடுக்கணுமாம்னு இவன் அம்மா வேற ஆர்டர் போடுது” என்று புலம்பியவள், வீராவைத் தாண்டிச் சென்றவள், கட்டிலில் இருந்து தலையணையும், பெட்ஷீட்டையும் எடுத்துக்கொண்டு, அறையை விட்டு வெளியே செல்லப் போனாள்.

தன் கையில் இருந்த பால் டம்ளரையும், பூவிழியையும் பார்த்தவன், “ரோஸ் இல்லாம வெறும் மில்க் எனக்கு எதுக்கு?” என்று அதை வைத்துவிட்டு வேகமாக அவள் முன்பு வந்து, கதவைத் திறக்க விடாமல் குறுக்கே நின்றவன், “என்ன ரோசு, பெட்ஷீட் தலையோட எங்கே போறீங்க?” என்றான்.

“பார்த்தா தெரியலை? நான் ஹாலில் தூங்கப் போறேன்” என்றாள் பூவிழி.

“சரி… சரி… கீழேதானே போய் படுங்க… எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. உன் அம்மாவும், என் அம்மாவும் நீ ரூமுக்குள்ள தூங்காமல் வெளியே ஹாலில் தூங்கினா, கொஞ்ச நேரம் முன்னே நீ முகில்கிட்ட என்னை பிடிச்சுதான் கல்யாணம் செய்தேன்னு சொன்னது எல்லாம் பொய்யின்னு நம்பிருவாங்க. ஏற்கனவே உடம்பு முடியாமல் இருக்க உன் அம்மா, உனக்குப் பிடிக்காமல் கல்யாணம் நடந்திருச்சுன்னு நினைச்சு இன்னும் வருத்தப்படுவாங்க” என்றான்.

அதைக் கேட்டதும் கதவைத் திறக்க கை வைத்த பூவிழி அப்படியே நின்றாள்.

அவள் வெளியே போகாமல் நின்றுவிட்டதைப் பார்த்துச் சிரித்த வீரா, “என்ன, போகலையா?” என்றான்.

அவனை முறைத்துவிட்டு, “அதான் நான் கீழே போனா என் அம்மாவும் உன் அம்மாவும் வருத்தப்படுவாங்கன்னு சென்டிமென்டா என்னை லாக் பண்ணிட்டியே? இனி நான் எப்படிப் போக முடியும்?” என்றவள், அவனைத் தாண்டிப் போய் தரையில் போர்வையை விரித்தவள், தலையணையைப் போட்டுத் தரையில் படுத்துக்கொண்டாள்.

“ஏய்… ஏய்… ரோசு, ஏன்டி கீழே படுக்குற? நீ தூங்க இவ்ளோ பெரிய மெத்தை இருக்கு. அதில் தூங்காமல் இப்படித் தரையில் தூங்கினா என்னடி அர்த்தம்? அதுவும் இல்லாம இந்த வீராவோட பொண்டாட்டி தரையில் படுத்துத் தூங்கினா, அது எனக்குத்தான் அவமானம்” என்றவன் நொடியும் தாமதிக்காமல் பூவிழியைத் தூக்கிக்கொண்டு போய் படுக்க வைத்தவன், அவள் அருகில் தரையில் இருந்து ‘ஜம்ப்’ செய்து படுத்துக்கொள்ள…

“டேய்… என்னை விடுடா… உன்கூட எவன் தூங்குவான்? நான் கீழேயே படுத்துக்கிறேன்” என்று பூவிழி கட்டிலில் இருந்து எழப்போக… “எங்கே ரோசு போற?” என்றவன், அவள் கட்டியிருந்த சேலையைக் கண் இமைக்கும் நேரத்தில் கழட்டித் தூக்கி இருந்தவன், அவள் மார்பில் முகம் புதைத்துப் படுத்துக்கொண்டான்.

“அய்யோ… ஏன்டா என்னை இப்படிக் கொடுமையாய் படுத்துற? நான் தான் எனக்கு நீ கிட்டே வந்தாலே பிடிக்கலைன்னு சொன்னேனே… இப்படிப் பிடிக்காத என்னை கூட்டிட்டு வந்து ஏன் கொடுமை படுத்துற? தயவு செய்து என்னை விடு. நான் இந்த ரூம்லயே ஒரு ஓரமா தூங்கிக்கிறேன்” என்று அவனிடமிருந்து திமிறிக்கொண்டு எழுந்தாள்.

அவளை எழுந்திருக்க விடாமல் மீண்டும் கட்டிலில் படுக்க வைத்தவன், பூவிழியின் கன்னத்தைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பி, “இங்கே பாரு. நான் சொன்னதையே சொல்லிட்டு இருக்க மாட்டேன். என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. இப்படி என்னை விட்டுப் போறேன், கீழே படுகிறேன், வெளியே போய் தூங்குறேன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்காத. ஒழுங்கா என் கூட இங்கேயே தூங்குற வழியைப் பாரு. இல்லைன்னா நீ எங்கே தூங்கினாலும் அங்கே வந்து உன் சேலையைக் கழட்டித் தூக்கிப் போட்டுட்டு இப்படித்தான் வந்து உன்னைக் கட்டிக்கிட்டுப் படுத்துக்குவேன்” என்றான்.

அதைக் கேட்டு பூவிழி அதிர்ந்துபோய் அவனைப் பார்க்க… அவள் அதிர்ச்சியைக் கண்டுகொள்ளாதவன், பூவிழியின் மார்பில் முகம் புதைத்து கண்கள் மூடிப் படுத்துக்கொண்டான்.

பூவிழியின் தாய் மாமன் சுகந்தனையும் அவர் மகன் ராஜு இருவரையும் லாக்கப்பில் வைத்து ‘லாடம் கட்டிக்கொண்டு’ இருந்தனர்.

“அடிக்காதீங்க. வலிக்குது. ஐயோ அம்மா… நாங்க தப்பு பண்ணலை. எங்களைக் கூட்டிட்டு வந்து இப்படி கொடுமை படுத்துறீங்களே? பண்ணினது எல்லாம் அந்தப் பூவிழியும்தான், அவ அம்மாவும். அவங்களை விட்டுட்டு எங்களைக் கூட்டிட்டு வந்து இப்படி நியாயம் இல்லாம விசாரிக்கிறீங்கற பேருல எங்க ரெண்டு பேரையும் அடிக்கிறீங்களே? இதெல்லாம் நல்லா இருக்கா?” என்று போலீஸ்காரரிடம் சண்டைக்கு நின்றிருந்தார் சுகந்தன்.

“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் எங்களையே எதிர்த்துப் பேசுவ? உண்மையைச் சொல்லு. நியாயப்படி ஜெயில்ல இருக்க வேண்டியது நீயும் உன் மகனும்தான். ஒண்ணும் தெரியாத அம்மா, பொண்ணு மேலேயும் திருட்டுப் பழி போட்டு ரெண்டு பேரையும் ஜெயில்ல பிடிச்சுப் போடப் பார்த்திருப்ப. நீங்க பண்ணினதுக்குத்தான் இப்போ அனுபவிக்கிறீங்க. உண்மையைச் சொல்லுங்க. உங்ககிட்ட இருக்கிற நகை, பணத்தை எல்லாம் அவங்க திருடிட்டு வந்துட்டாங்களா? உங்களை ஏமாத்திட்டாங்களா? அவங்களை ஏமாத்தி ஒண்ணும் இல்லாதவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நினைத்தீர்களா இல்லையா?” என்று அந்தக் காவலர் ராஜுவைப் போட்டு அடித்துக்கொண்டிருக்க…

தன் மகன் அடி வாங்குவதைப் பார்க்க முடியாமல், “ஐயோ, என் பையனை விட்ருங்க. அடிக்காதீங்க. அவனுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பையன் பாவம்” என்று தன் மகனுக்கு வக்காலத்து வாங்கினார் சுகந்தன்.

“சொல்லுயா, வீட்டில் இருந்த பூவிழியை வீரா சார் உங்களை எல்லாம் அடிச்சுப் போட்டு மிரட்டி தூக்கிட்டு வந்துட்டாரா?” என்றார் அந்தக் காவலர், முட்டிக்குக் கீழே சுகந்தனை அடித்து.

“ஐயோ, இல்லைங்க. அவர் அப்படியெல்லாம் எதுவுமே செய்யல. அவ கழுத்துல தாலி கட்டி மண்டபத்தில் இருந்து கூட்டிட்டுப் போயிட்டாரு” என்றால் சுகந்தன்.

“அப்புறம், ‘விருப்பம் இல்லாமல் அந்தப் பெண் உன் வீட்டில் இருந்து இழுத்துட்டு வந்தாங்க’ன்னு யார் கம்ப்ளைன்ட் கொடுத்தது?” என்றதும் மீண்டும் அவரை அடித்து…

“சார், அடிக்காதீங்க. வலிக்குது” என்ற சுகந்தன், காவலரை பார்த்துக் கொண்டு இருக்க, “சொல்லுயா, அந்த ரசிகா பொண்ணும் பூவிழியோட அம்மாவும் வீட்டிலிருந்து நகை, பணத்தை எல்லாம் திருடிட்டு வந்துட்டாங்களா?” என்றார் மீண்டும் ராஜுவை அடித்து.

சுகந்தன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, மீண்டும் ராஜுவை அடித்த காவலர், “சொல்லுயா, அந்தப் பொண்ணும் அவங்க ரெண்டு பேரும் உன் வீட்டில் இருந்து நகை, பணத்தை எல்லாம் திருடிட்டு வந்துட்டாங்கன்னு சொன்ன? எவ்வளவு திருடினாங்க? எத்தனை லட்சம் வீட்டில் இருந்தது? எவ்வளவு நகை திருடு போயிருக்கு? சொல்லு” என்று மீண்டும் அடிக்க…

“என்ன சார் இது, அநியாயமா இருக்கு? என் வீட்டில் இருக்கிற பொருள், நகையும் காணாமல் போய்விட்டது என்று நான் கம்ப்ளைன்ட் பண்ண, சம்பந்தப்பட்டவர்களைக் கூப்பிட்டு வைத்து விசாரிக்காமல், கம்ப்ளைன்ட் கொடுத்த உங்களை வைத்து இப்படி கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் அடிச்சு கொடுமை படுத்துறீங்களே? எந்த ஊர்ல சார் இந்த மாதிரி அநியாயம் நடக்குது?” என்றார் சுகந்தன்.

“ஓஹோ, அப்போ நீ கொடுத்த கம்ப்ளைன்ட் உண்மை. அவங்க உன் வீட்டில் இருந்து நகை, பணத்தை எல்லாம் திருடிட்டாங்க அப்படித்தானே?” என்று தன் கையிலிருந்து லத்தியை உருட்டிக்கொண்டே சுகந்தனை நோக்கி காவலர் வர…

அதைப் பார்த்ததும் பயத்தில் சுகந்தனின் உடல் வெடவெடுத்துப் போனது. சுகந்தன் காவலரைப் பார்த்துப் பயந்துகொண்டு பின்னால் செல்ல, சரியாக அவர் ஒரு மூலையில் போய் அகப்பட்டுக் கொள்ளவும், காவலர் தன் கையில் இருந்த லத்தி உடைந்து தெறிக்கும் வரை சுகந்தனையும் அவர் மகன் ராஜுவையும் மாறி மாறி அடித்தார்.

அப்போது ஸ்டேஷன் வாசலில் ஒரு பெண்மணி, “ஐயோ, ஐயோ! இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா? கம்ப்ளைன்ட் கொடுக்க வந்த என் புருஷனையும் பிள்ளையையும் உள்ள புடிச்சுப் போட்டு இப்படி அடிச்சு கொடுமைப்படுத்துறாங்களே? இதைக் கேட்க யாருமே இல்லையா? போச்சு, அந்தப் பணக்காரன் சொன்ன பேச்சைக் கேட்டு என் புருஷனையும் மகனையும் இப்படி விசாரிக்கிறேன் என்கிற பெயரில் கூட்டிட்டு வந்து அடிச்சு துவைக்கிறார்களே? இதைக் கேட்க யாருமே இல்லையா?” என்று ஸ்டேஷன் முன்பு தன் சேலையை இடுப்பில் சொருகிக்கொண்டு மண்ணைத் தூக்கி வாரிக்கொண்டு கத்திக் கொண்டிருந்தார் சுகந்தனின் மனைவி மல்லிகா.

அவர் சத்தம் கேட்டு சுகந்தனை அடித்துக்கொண்டிருந்த காவலரும் மற்றவர்களும் ஸ்டேஷன் வாசலுக்கு வெளியே வர, அங்கே மல்லிகா, “நீங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா? உங்களுக்கெல்லாம் புள்ளை, குட்டிகளே கிடையாதா? இப்படித்தான் நியாயம் கேட்க வந்த மனுஷனைப் பிடித்து ஜெயில்ல வெச்சு அடிப்பீங்களா? இதெல்லாம் உங்களுக்கு அடுக்குமா? என் புருஷன் அடிச்ச கை பட்டுப்போக, என் புள்ளையைத் தொட்ட கை நொடிஞ்சு போக” என்று மண்ணைத் தூக்கி வாரி, மல்லிகா ஸ்டேஷன் முன்பு பிரச்சனை செய்துகொண்டிருக்க…

அந்த ஸ்டேஷனில் வேலை பார்த்த பெண் காவலர் இருவர், மல்லிகாவின் அருகில் வந்து, “என்னம்மா? என்னமோ இந்த உலகத்திலேயே சுத்தமான யோகியும் உன் பிள்ளையும் புருஷன்ங்குற மாதிரி பேசிக்கிட்டு இருக்க? அவங்க பண்ணின காரியத்தை எல்லாம் தூசி தட்டி எழுப்பினால், வயசுக்கும் ஜெயில் விட்டு வெளியேவே வர முடியாது. அத்தனை தப்பு பண்ணி இருக்காங்க. என்னமோ உன் புருஷன்தான் யோக்கியம் மாதிரி இப்படி வந்து ஸ்டேஷன் முன்னாடி நின்னு சத்தம் போட்டுட்டு இருக்க. ஒழுங்கா இங்கிருந்து கிளம்பப் போறியா இல்லையா?” என்று அவளை மிரட்டினார்கள்.

“ஆமாம். சொன்னாலும் சொல்லாட்டியும் என் புருஷனும் பிள்ளையும் உத்தமங்க. அவங்க எந்தத் தப்பும் பண்ணி இருக்க மாட்டாங்க. என் வீட்டில் இருக்கிற நகை, பணம் எல்லாம் காணாமல் போயிடுச்சுன்னு கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தா, கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தவங்களப் பிடிச்சு விசாரிச்சிட்டு இருக்கீங்க. அதுக்குக் காரணமான அந்த ஓடுகாலியே, பூவிழி, அவ அம்மா, அவ கூட இருக்காளே ஒருத்தி ஃப்ரெண்டுன்னு சொல்லி சுத்திக்கிட்டு, அவ… அவ மூன்று பேரையுமே பிடிச்சு விசாரிக்க வேண்டியதுதானே? அதை விட்டுட்டு ஒண்ணும் தெரியாத என் புருஷனையும் பிள்ளையையும் கூட்டிட்டு வந்து விசாரிச்சா நாங்க பார்த்துக்கிட்டு சும்மா இருப்போமா? முதல்ல அவங்க மூணு பேரையும் கூட்டிட்டு வந்து விசாரிங்க. அதுக்கப்புறம்தான் நான் இந்த இடத்தை விட்டுப் போவேன்” என்றார் மல்லிகா.

“ஓஹோ, அப்போ அவங்க மூணு பேரையும் கூப்பிட்டு வந்து விசாரிச்சாதான் நீ இந்த இடத்தை விட்டுப் போவ, அப்படித்தானே?” என்றார் ஒரு காவலர்.

“ஆமாம்” என்று அதற்கு மல்லிகா தலையாட்ட…

“சரி, முதல்ல நாங்க கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லு. உன் வீட்டில் எத்தனை பவுன் திருடு போச்சு? எத்தனை பணம் திருடு போச்சு?” என்றார் அந்தக் காவலர்.

“நூறு சவரன் நகைக்கு மேல இருக்கும். அத்தனையும் தூக்கிட்டு அந்த ஓடுகாலியோட அம்மாவும், ரசிகாவும் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் போயிட்டாங்க” என்றாள்.

“அப்படியா? நூறு பவுன் தானா? அந்தப் பெண்ணைப் பிடிச்சு விசாரித்ததில், ‘நூற்று ஐம்பது பவுனு’ சொல்லுச்சு என்கிட்ட. நீ என்னடான்னா நூறு பவுன் இருந்தா சொல்ற? அப்ப அந்த ஐம்பது பவுன்?” என்று காவலர் மல்லிகாவிடம் போட்டு வாங்க…

‘ஆஹா, இது தெரியாம அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டோமே? இப்ப என்ன பண்றது?’ என்று மல்லிகா திருதிருவென்று விழித்துக்கொண்டிருக்க…

“உன் வீட்டில் காணாமல் போன நகை, பணம் எல்லாம் இதுதான். வந்து பாரு” என்று மல்லிகாவை அழைத்துக்கொண்டு காவலர் ஸ்டேஷனுக்குள் சென்று, அவர்கள் வீட்டில் திருடு போன பணத்தையும், நகையையும் காட்ட…

அதை எல்லாம் பார்த்த மல்லிகாவின் முகம் சந்தோஷத்தில் பிரகாசிக்காமல் இருண்டு விட்டது. ஏனென்றால் அந்த நகை, பணத்தை எல்லாம் தன் தம்பி துரையிடம் கொடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்த மல்லிகா, வேண்டும் என்றே பொய்க் குற்றச்சாட்டு ரசிகாவின் மீதும், செண்பகத்தின் மீதும் வைத்திருந்தார்.

“நகையைப் பார்த்த சந்தோஷமாப் பேசுவேன்னு பார்த்தால், அப்படியே பெயர்ந்துட்ட? உன் தம்பி கிட்ட கொடுத்ததெல்லாம் இங்க எப்படி வந்துச்சுன்னு யோசிக்கிறியா?” என்றார் அந்தப் பெண்மணி.

அவரை தயங்கிபடியே மல்லிகா பார்க்க…

“அந்த லாக்கப்ல உன் புருஷனும் பிள்ளையும் இருக்காங்க. அதுக்குப் பக்கத்துல இருக்குற லாக்கப்லதான் உன் தம்பியை அடைத்து வைத்திருக்கிறோம். நீயும் அவன் கூடப் போய் உள்ள ஜெயில்ல கலி திங்கிறியா?” என்று அந்தப் பெண் காவலர் கேட்க…

தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதே என்று திருதிருவென்று விழித்த மல்லிகா, அடுத்த நொடி ஸ்டேஷனை விட்டு வெளியே ஓட… அதைப் பார்த்த பெண் காவலர்கள் மல்லிகாவைத் துரத்தி வந்து குண்டுகட்டாக ஸ்டேஷனுக்குள் தூக்கி வந்து, அவர் கையில் விலங்கு மாட்டி, அங்கே இருந்த ஜன்னல் பக்கம் ஓரமாக அமர வைத்திருந்தனர்.

“இங்க பாரு, மொத்த தப்பையும் குடும்பத்தோட சேர்ந்து செஞ்சுட்டு, அப்பாவியா இருக்கிற அந்த இரண்டு பொண்ணுக்கும் மேலேயும், அவங்க அம்மா மேலேயும் கம்ப்ளைன்ட் கொடுக்குறீங்க. உங்களுக்குச் சரியா இருக்கா?” என்று அந்தப் பெண் மல்லிகாவை எச்சரிக்க…

இதைக் கேட்டு மல்லிகாவும், அவளோடு சேர்ந்து அனைவருமே அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று பீதியில் அமர்ந்திருந்தனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured