EPISODE 20
பூவிழி வீராவுடன் ‘டீலிங்’ பேசிவிட்டு வந்ததிலிருந்து, தன்னுடைய இழந்த சொத்துக்களை எல்லாம் எப்படி மீட்பது என்று யோசனையில் மூழ்கி இருந்தாள்.
இரவு முழுவதும் அதை யோசித்ததாலோ என்னவோ, அவளால் சரிவரத் தூங்க முடியவில்லை.
அவள் தூங்காமல் படுக்கையில் புரண்டு படுத்துக்கொண்டிருப்பதை வீரா கவனிக்கத் தவறவில்லை. எப்போதும் அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டு தூங்கும் வீராவுக்கு, பூவிழியுடன் இந்த ‘டீலிங்’ பேசிய பிறகு அவள் தன்னை இனிமேல் தினமும் தூங்கும்போது தொந்தரவு செய்யக்கூடாது எனக் ‘கண்டிஷன்’ போட்டுவிட்டாள். வேறு வழியே இல்லாமல் வீராவும் அதற்கு ஒப்புக்கொண்டான்.
வழக்கம்போலக் காலை உடற்பயிற்சி செய்வதற்காக நேரமே எழுந்த வீரா, தன் அருகில் முகத்தை மூடிப் படுத்திருந்த பூவிழியைப் பார்த்தான்.
இரவு எப்போது தூங்கினாள் என்று அவனுக்குத் தெரியவில்லை. மெதுவாக அவள் அருகில் புரண்டு வந்து பூவிழியை நெருங்கிப் படுத்தவன், அவள் முகத்தில் போர்த்தியிருந்த போர்வையை விலக்கினான்.
கண்கள் மூடிப் படுத்திருந்த பூவிழியின் முகத்தை உற்றுப் பார்த்தான். இரண்டு ஆப்பிள்களை வெட்டி வைத்தது போல லேசாக மேடிட்ட கன்னங்கள், மலர்ந்த ரோஜாப்பூ போல அவள் உதடுகள் லேசாகத் திறந்திருக்க… அவள் உதட்டைப் பார்த்ததும் சுவைக்கத் தோன்றிய தன் எண்ணத்தைக் கட்டுப்படுத்தியவன், அவள் முகத்திற்கு அருகில் நெருக்கமாக வந்து தன் விரல்களால் அவள் உதட்டை லேசாகத் தடவி, உதட்டில் ஒற்றி முத்தம் வைத்தான்.
‘இப்படி ‘கண்டிஷன்’ போட்டு என்னைக் கட்டுப்படுத்தி வெச்சுவிட்டியேடி பொண்டாட்டி! இதுக்காகவே சீக்கிரம் உனக்குக் கிடைக்க வேண்டிய எல்லாச் சொத்துக்களையும் உன் கைக்குக் கிடைக்கிற மாதிரி பண்றேனா இல்லையா பாரு. அதுக்கப்புறம் நீ மொத்தமும் எனக்குத்தான்’ என்று நினைத்தவன் அவளைப் பார்க்க…
பூவிழியின் உதட்டை வீரா தீண்டியதில் ‘குறுகுறுப்பு’ ஏற்பட, தூக்கக் கலக்கத்தில் தன் உதட்டை மடித்துப் பற்களால் லேசாகக் கடித்தவள், அது தூக்கக் கலக்கத்தோடு வீரா படுத்திருந்த பக்கம் திரும்பி நெருக்கமாகப் படுத்தாள்.
இதை சற்றும் எதிர்பாராத வீரா நிமிர்ந்து பூவிழியின் முகத்தைப் பார்க்க… அவள் மூச்சுக்காற்று அவன் முகத்தில் சூடாகப் பரவியது. அவ்வளவு நெருக்கமாகப் பூவிழி அவன் அருகில் படுத்திருந்தாள்.
அவள் திரும்பிப் பார்த்ததில் சேலை சற்று விலகி அவள் இடையை அவனுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிட… அதைப் பார்த்ததும் அவள் இடை வரை சென்ற தன் கைகளை மீண்டும் பின்னுக்கு எடுத்துக்கொண்டான்.
அவன் தீண்டலில் தன்னோடு நெருங்கிப் படுத்திருந்த பூவிழி கண்விழித்து நகர்ந்துவிடுவாள் என்று அவளைத் தொடாமல் கைகளைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான்.
அவள் மேல் இருந்த போர்வை விலகி அவள் மேனியில் ஏசி குளிர் படவும், அவள் உடலில் குட்டி குட்டியாக வளர்ந்திருந்த ரோமங்கள் குளிரில் சிலிர்த்து விட்டது.
அதைக் கண்டதும், ‘சாதாரண ஏசி காற்றுக்கு இவ்வளவு உடல் இப்படிச் சிலிர்க்கிறது என்றால், தன்னுடைய சந்தோஷமாக ஒன்றாக இருக்கும் அந்த முதல் தருணத்தில் அவள் உடல் எப்படித் தன் தொடுதலில் சிலிர்த்துப் போகும்?’ என்று கற்பனையில் நினைத்துப் பார்த்தவனுக்கு உடல் முழுவதும் இரத்தம் சூடேறியது.
அதே நினைப்பில் தன் முகத்திற்கு அருகில் இருந்த பூவிழியின் முகத்தைப் பார்த்தவன், தன் மூக்கு நுனியால் அவள் மூக்கில் லேசாக உரசினான்.
அவள் அதில் தூக்கம் கலைவதுபோல உடலை அசைக்க, அவள் அங்கங்கள் அவன் மேனியில் உரசியது. அவள கட்டியிருந்த சேலை அன்று நேரம் பார்த்து முழுவதுமாக மார்பை விட்டு விலகி கீழே இறங்கிவிட…
‘லோ கட்’ அணிந்திருந்த ப்ளவுசையும் தாண்டி, திரண்டிருந்த அவள் மேடிட்ட மென்மைகள் அவன் கண்களுக்குப் பளிச்சென விருந்தானது.
அதைப் பார்த்ததும் வீராவின் பின்னால் ஒரு பூகம்பமே உருவானது.
சட்டென்று தன் கண்களை இருக்க மூடிக்கொண்டவன், ‘ம்ஹும்… இனியும் இவ பக்கத்துல படுத்து இருந்தால் அவ்வளவுதான். முதல்ல இங்கிருந்து வெளியே போகணும்’ என்று நினைத்தவன் கண்களைத் திறந்து பார்க்க… மீண்டும் அவள் சேலை விலகிய இடம் அவன் கண்களுக்கு விருந்தாக…
அவள் திரண்டிருந்த மென்மைகளைப் பார்த்தபடியே, “ரோஸ் மில்க்!” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கண்களை மூடியவன், ‘ஐயோ என்ன கொடுமைப்படுத்துகிறாளே ராட்சசி! பக்கத்துலயும் நெருங்க விட மாட்டேங்குறா. இப்படி தூக்கத்திலேயே என்னை ‘மூட்’ ஏத்துறாளே’ என்றவன் வேகமாக அவள் அருகில் இருந்து எழுந்திருக்க முயற்சிக்க, அந்த நேரம் பார்த்துத் தூக்கத்தில் பூவிழி வீராவின் இடை வரை தன் காலைத் தூக்கிப் போட்டாள்.
அவள் இப்படிச் செய்ததில் பூவிழி மேலும் நெருக்கமாக வீராவுக்கு அருகில் வந்து, அவன் கழுத்தோடு கட்டிக்கொண்டு படுத்திருக்க… சட்டை இல்லாமல் படுத்திருந்த அவன் மார்பில் அவள் அங்கம் லேசாக உரசிவிட…
அவ்வளவுதான், வீராவின் நிலை இப்போது பரிதாபத்திற்கு உண்டானது. கைகள் ஒருபுறம் பரபரத்துக்கொண்டிருக்க, தன் மார்பில் மோதிய அவள் மார்பின் மென்மைகளை உணர்ந்து அவன் உடல் சூடேறி காது மடல்கள் சிவந்துவிட்டது.
தன் இடையில் காலைத் தூக்கிப்போட்டு நெருக்கமாகப் பூவிழி படுத்திருக்க… முதலில் ஏற்பட்ட பூகம்பத்தால் அவன் கீழ் உடலில் வேதியியல் மாற்றம் நிகழ ஆரம்பித்திருந்தது.
தன் கைகள் இரண்டையும் இருக்க மூடி உணர்வுகளைக் கட்டுப்படுத்த முயன்றவன், பூவிழியின் முகத்தைப் பார்க்க, அவளோ அப்போதுதான் தூக்கம் கலைந்து லேசாகக் கண்விழிக்க ஆரம்பித்தாள். அவள் கண் விழிப்பதைப் பார்த்ததும் சட்டென வீரா கண்கள் மூடி அவள் அருகில் தூங்குவதுபோலப் பாசாங்கு காட்டிப் படுத்துக்கொண்டான்.
கண் விழித்ததும் பூவிழி தனக்கு மிக அருகில் கண்மூடிப் படுத்திருந்த வீராவின் முகத்தைத்தான் பார்த்தாள். அவன் முகத்தைப் பார்த்ததும் சட்டென அதிர்ந்தவள், “ஐயோ!” எனக் கத்த வந்தவள் சட்டென அவன் உறங்குவதைக் கண்டு வாயை மூடிக்கொண்டாள்.
லேசாகத் தன் தலையை உயர்த்திப் பார்க்க, அவன் மீது தன் காலைப் போட்டு, அவனுக்கு மிக அருகில் தான் படுத்திருப்பதை உணர்ந்ததும் அதிர்ந்தவள், சட்டென நிமிர்ந்து வீராவைப் பார்க்க… அவன் இன்னமும் கண்கள் மூடி உறங்கிக்கொண்டு இருந்தான். ஆனால், அவன் நடிப்பது நமக்கு மட்டும்தானே தெரியும்?
‘அடியே அறிவு கெட்டவளே! இவனைப் பக்கத்துலயே வராதன்னு சொல்லிட்டு இப்படித் தூக்கத்துல நீ அவன் மேல கையும் காலும் போட்டு இவ்வளவு நெருக்கமா படுத்திட்டு இருக்க… உனக்கெல்லாம் வெக்கமே இல்லையா? நீ இப்படி அவனை உரசிட்டுப் படுத்திருக்கிறதை அவன் மட்டும் இப்போ கண்ணு முழிச்சு பார்த்தான்னு வை… ‘ஏன் இவ்ளோ நெருக்கமா வந்து என் பக்கத்துல படுத்திருக்கே’ன்னு என்கிட்ட சண்டை எல்லாம் போட மாட்டான். இதுதான் சாக்குனு என்னைக் ‘கப்பு’னு கட்டிப்பிடிச்சு இருப்பான். நல்ல வேளை நல்லா தூங்குறான்’ என்று முணுமுணுத்தாள்.
அவன் முகத்திற்கு மிக அருகில் அவள் முகம் இருக்க, இப்படி முணுமுணுப்பது வீரா காதுகளில் தெள்ளத் தெளிவாக விழுந்தது. அவள் பேசுவதையெல்லாம் கேட்டு எழுந்த சிரிப்பை கஷ்டப்பட்டுத் தனக்குள் அடக்கிக்கொண்டவன், ‘ஏய் ரோஸ் மில்க், நான் என்ன செய்வேன்னு கரெக்டாக ‘கெஸ்’ பண்ணி வெச்சிருக்கடி! கண்டிப்பா நீ சொன்னதைத்தான் நான் செஞ்சுருப்பேன். அப்படியே உன்னை ‘கப்பு’னு கட்டிப்புடிச்சுக் கட்டிலில் இந்த நேரம் உருண்டுட்டு இருந்திருப்பேன்’ என்று நினைத்துக்கொண்டான்.
அவன் மீது இருந்து தன் காலை மெல்ல விலக்கிக்கொண்ட பூவிழி அப்போதுதான் அதை உணர்ந்தாள். சில்லென்று ஏசி குளிரில் அவள் உடல் சிலிர்த்திருக்க… அவள் மார்பில் சூடாக ஏதோ இதமாக வருடுவதை உணர்ந்தாள்.
மெல்லக் குனிந்து தன் மார்பைப் பார்க்க, வீரா மார்போடு அவள் மார்பு உரசிக் கொண்டிருப்பதை கண்டதும் அதிர்ந்தவள்… அதே அதிர்ச்சியோடு நிமிர்ந்து வீராவின் முகத்தைப் பார்க்க… அதுவரை அவள் முகத்தில் இருந்த உணர்வுகளை ரசித்துக்கொண்டிருந்த வீரா, பூவிழி தன்னை பார்க்கவும் சட்டென தன் கண்களை மூடிக்கொண்டான்.
அவன் இன்னமும் தூங்கிய நிலையிலேயே படுத்திருக்க, ‘நல்லவேளை இன்னும் அவன் தூக்கம் கலையல’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட… அதில் ஏறி இறங்கிய அவள் மார்பு அவன் மார்பில் மீண்டும் உரசியது.
சூடான தேகம் அவள் மார்பில் உரச, அதில் பூவிழியின் உடலில் ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்வு தோன்றி, அவள் உடல் முழுவதும் சூடேற… அதில் அவள் முகம் தக்காளிப் பழம் போலச் சிவந்துவிட்டது.
அவளையும் அறியாமல் வீராவின் இந்த நெருக்கம் அவளுக்கு நாணத்தை ஏற்படுத்த… அவனிடம் இருந்து விலக நினைத்தவள், அவளையும் மீறி அவளிடம் எழுந்த மாற்றங்கள் அவளைத் தன்னை மறக்கச் செய்தது.
மெல்ல… மெல்ல… வெட்கமும் அவள் முகத்தில் எட்டிப் பார்த்தது. அதே வெட்க முகத்தோடு நிமிர்ந்து வீராவைப் பார்த்தாள் பூவிழி.
கண்கள் மூடி அமைதியாக நல்ல பிள்ளை போலப் படுத்திருந்தவனை, அப்போதான் முதல்முறை பார்ப்பது போலப் பார்த்தாள்.
அவன் அழகிய முகம் இப்போதுதான் அவள் கண்களுக்குத் தெரிந்ததுபோல… அதையே ஆசையாகக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள்.
மெல்ல அவன் அடர்ந்த கேசத்தைப் பார்த்ததும் அதை கலைத்துவிட அவள் கைகள் மேலே உயர்ந்தன. அவன் தலைமுடி நுனியை அவள் விரல் தொட்டுவிட… சட்டென்று கையை விலக்கிக் கொண்டாள்.
இதயம் வேகமாக பூவிழிக்கு ‘படபட’வென அடித்துக் கொண்டது. அவள் இதயத்தில் யாரோ மத்தளம் வாசிப்பது போல வேகமாக அடிக்க… அதை வீராவும் உணர்ந்தான்.
‘ஏய் ரோஸ் மில்க்… உன் ‘ரோஸ் மில்க்’…’ என்று நினைத்தவன், அடுத்த கணமே தன் எண்ணம் தரிகெட்டு அலைவதை எண்ணி, எழுந்த எண்ணங்களைத் தனக்குள்ளேயே நிறுத்தியவன். கஷ்டப்பட்டு கண்கள் மூடி அவள் அருகில் அசையாமல் படுத்திருந்தான்.
கைகளை கீழே இறக்கி இருந்த பூவிழி, தன் பார்வையை அவன் முகத்தில் மேயவிட்டாள். அவன் மூடியிருந்த விழிகளைத் தாண்டி கீழே வந்த அவள் விழிகள், அவன் உதட்டில் வந்து நின்றது.
லேசாக ‘ட்ரிம்’ செய்யப்பட்ட மீசையைப் பார்த்ததும், ‘எப்போ பாரு மீசையை ‘ட்ரிம்’ பண்ணியே வெச்சிருக்கான் ராஸ்கல். கொஞ்சம் அழகாக மீசை வளர்த்து தாடி வளர்த்தால் இவனுக்கு இன்னும் அழகாக இருக்குமே…’ என்று முணுமுணுத்தவள்…
‘ஐயோ… நான் என்ன நினைச்சிட்டு இருக்கேன்? என்ன இப்படி எல்லாம் எனக்குத் தோணுது?’ என்று அவன் மீசையில் இருந்து தன் பார்வையை விளக்கப்போனவள் கண்களில், அவன் கீழ் உதட்டில் வரிவரியாக இருந்த தடித்த உதட்டின் மேல் ஒரு அழகான சிறிய மச்சம் அவள் கவனத்தை ஈர்த்தது.
அதைப் பார்த்ததும் பூவிழி புருவம் சுருங்கி அதை உற்றுப் பார்த்தவள், ‘இது எப்படி இவனுக்கு வந்துச்சு? இதுவரை நான் இந்த மச்சத்தை ஒருமுறை கூடப் பார்த்தது இல்லையே…’ என்று யோசித்தவள். அவன் உதட்டில் இருந்த அந்த மச்சம் நிஜம்தானா என்று சந்தேகம் கொண்டு, அவன் இதழைத் தன் விரலால் ஆர்வத்தில் அழுந்தத் துடைத்துவிட்டாள்.
அவள் செயல்களையெல்லாம் இவ்வளவு நேரம் பூவிழிக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்த வீரா… தன் உதட்டில் உரசிய அவள் விரல்களின் ஸ்பரிசத்தை முதல்முறை உணர்ந்தவனின் மூச்சு நின்றுவிடுவது போல உணர்ந்தான்.
அதை உணர்ந்த அடுத்த நொடி, ‘பட்’டென்று தன் கண்களை வேகமாகத் திறந்து, தன் உதட்டைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்கிறேன் என்று தன் விரலால் பூவிழி தீண்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தான்.
அவன் கண் விழித்ததைப் பார்த்ததும் பூவிழி அவசரமாகத் தன் கையை அவன் உதட்டில் இருந்து எடுத்தவள், வேகமாக அவனை விட்டு விலக முயற்சித்து எழுந்திருக்கப் போக… அவளை அடுத்த நொடி தன் கை வளைவில் கொண்டு வந்தவன், பூவிழியை இருக்க அணைத்து, குனிந்து அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.
இதை சற்றும் எதிர்பாராத பூவிழி அவன் மார்பில் கைவைத்து அவனிடமிருந்து விலகப் போக… ஆனால் வீராவோ அவளை விடாமல் இறுக்கிப் பிடித்தவன், தன் மற்றொரு கையை கீழே இறக்கி வந்தவன், அவள் பளிங்கு இடையில் கை கொடுத்து இறுக்கிப் பிடித்தான்.
அவ்வளவுதான், பூவிழி அவன் முதல் தீண்டல் தன் உடலை உரசவும், கண்களை இறுக்க மூடியவள், அவன் மார்பில் வைத்து இருந்த தன் கைகளை இருக்க மூடிக்கொண்டாள்.
பூவிழி இடையில் அவன் கைகள் செய்த ஜாலத்தில் மெய் மறந்து போனவள். இவ்வளவு நேரம் இறுக்கமாக வைத்திருந்த தன் இதழ் தானாக இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ள…
இதுவரை மூடிய அவள் இதழ்களில் முத்தம் வைத்துத் தன் ஆசையைத் தீர்த்துக்கொண்டவனுக்குத் தானாகவே வழிவிட்டதுபோல அவள் இதழ் பிரிந்து அவன் முத்தத்திற்கு வழி விட… அடுத்த நொடி தன் தடித்த நாவை அவள் உதட்டுக்குள் நுழைத்து அவள் சிறிய நாவைத் தீண்டினான்.
அந்தத் தீண்டலில் பூவிழியின் உடல் ‘ஷாக்’ அடித்ததுபோல துள்ளிக் குதிக்க… அவள் இடையில் கைவைத்து அழுத்தம் கூட்டி அவளைக் கட்டுப்படுத்தியவன். அவள் சிறிய நாவைத் தன் வாய்க்குள் இழுத்துச் சுவைக்க ஆரம்பித்தான்.
பூவிழியின் மூளை அவளை விழிக்க விடாமல்… தன் மனதிற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிக்கொண்டு, அவன் முத்தத்திற்கும் தீண்டலுக்கும் அவளை அறியாமல் அடிபணிய ஆரம்பித்தது.
