Home Uncategorizedமோகம் முத்தாடுதே 21

மோகம் முத்தாடுதே 21

by Layas Tamil Novel
443 views

EPISODE 21

நான் அப்போது, இந்த ஸ்டேஷன் ஹெட் கான்ஸ்டபிள் அய்யாக்கண்ணு கதவைத் தட்டிக்கொண்டு அர்ஜுன் அறைக்குள் நுழைய… ஃபைல்களில் கண்களை மேயவிட்டபடியே, “சொல்லுங்க, என்ன விஷயம்?” என்றான்.

“தம்பி, உங்களைப் பார்க்க ஒருத்தவங்க வந்திருக்காங்க. அவங்க ஏதோ முக்கியமான கேஸ் விஷயமா உங்ககிட்ட ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுக்கணும்னு சொன்னாங்க” என்றார்.

“ஏன், என்னைத்தான் பார்க்கணுமா? வெளியே கேஸ் எடுக்க யாரும் இல்லையா? நான் ஒரு முக்கியமான ஃபைலைப் பார்த்துட்டு இருக்கேன். சின்ன கேஸா இருந்தா நீங்களே பார்த்து அனுப்பி வையுங்க” என்றான் அய்யாக்கண்ணுவிடம்.

“நானும் அப்படித்தான் தம்பி நினைச்சுட்டு அவங்ககிட்ட பேசினேன். ஆனால், அவங்க என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டாங்களாம். என்னை நேரில் பார்த்துதான் சொல்லணும்னு அந்தப் பெண்கள் ரெண்டு பேரும் விடாப்பிடியாக நின்னுட்டு இருக்காங்க” என்றார்.

அவர் பெண்கள் என்று சொன்னதுமே, சட்டென அர்ஜுன் நிமிர்ந்து பார்க்க… அதைப் பார்த்து அய்யாக்கண்ணு, ‘பெண்கள்’ என்றதும் அர்ஜுன் கவனம் தன் பக்கம் திரும்பியதைக் குறித்துச் சிரித்தார்.

ஆனால், அவர் சிரிப்பு அடுத்த நொடியே மறைந்து போனது. சட்டென அர்ஜுன் பார்வையை கண்டதும் வாயை மூடிக்கொண்டார். அர்ஜுனின் பார்வை அவரையே பார்த்துக் கொண்டிருக்க, சட்டென தன் சிரிப்பைச் சமாளித்தவர், “நான் போய் அந்தப் பெண்கள் ரெண்டு பேரையும் வர சொல்லட்டுமா சார்?” என்றவர் அங்கிருந்து வேகமாக கேபினின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார்.

அவர் வெளியே வந்ததும் ஏற்கனவே அங்கே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த அந்த இரு பெண்களும், அய்யாக்கிட்ட வந்ததும் எழுந்து நிற்க, “போங்கம்மா” அய்யா அந்த இரு பெண்களையும் அனுப்பி வைத்தார்.

ஃபைலைப் பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுன், அவன் கேபின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து “கமிங்” என்றான். அப்போது அந்தக் கதவைத் திறந்துகொண்டு முதலில் பூவிழி உள்ளே நுழைய, அவள் பின்னால் தயக்கத்தோடு ரசிகாவும் அவன் கேபினுக்குள் நுழைந்தாள்.

தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருந்தவன் முகம் ரசிகாவைப் பார்த்ததும் பளிச்சிட்டது. மயங்கியபடி தன் கேபினுக்குள் வந்த ரசிகாவைப் பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுன், அவளுக்கு முன்னே வந்த பூவிழியை கவனிக்கத் தவறிவிட்டான். அதை பூவிழியும் கவனித்தாள்.

அவன் டேபிளுக்கு முன் வந்து நின்றிருந்த பூவிழி டேபிளைத் தட்டி, “அர்ஜுன், அர்ஜுன்… நானும் வந்திருக்கேன். கண்ணு தெரியுதா?” என்றாள்.

அவள் பக்கம் திரும்பிய அர்ஜுன், “ஐயோ அண்ணி சாரி. நான் எதுவும் யோசனையில் இருந்துட்டேன்” என்று, “உட்காருங்க” என்று இருவரையும் பொதுவாகப் பார்த்து, தனக்கு முன்பு போடப்பட்டிருந்த சேரைக் காட்டினான்.

பூவிழி அதில் அமர்ந்து கொண்டு திரும்பிப் பார்க்க… ஆனால், ரசிகா அப்புறம் தயங்கியபடி நின்றிருக்க, ரசிகாவின் கையைப் பிடித்துத் தன்னருகில் அமர வைத்தாள்.

“சொல்லுங்க அண்ணி, என்ன இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க? நான் காலையில வீட்டில்தான் இருந்தேன். எதுவா இருந்தாலும் நீங்க அங்கேயே சொல்லியிருக்கலாமே? ஸ்டேஷனுக்கு வரணுமா நீங்க?” என்றான்.

“வீட்டில் இருந்து உன்கிட்ட சொல்றது அவ்வளவு நல்லா இருக்காது. அதுதான் நான் இங்கேயே வந்துட்டேன்” என்றாள்.

“சொல்லுங்க அண்ணி, நான் என்ன செய்யணும்?” என்றான்.

“எங்களுக்கு நீ இரண்டு விஷயம் பண்ணித் தரணும்” என்றாள் அருகில் இருந்த பூவிழியைப் பார்த்துக்கொண்டு.

அவளோ, “அதெல்லாம் வேணாம். நீ முதல்ல விஷயத்தைச் சொல்லு” என்றாள் ரசிகா, பூவிழியிடம் ஜாடை காட்டி.

“என்னோட பூர்வீக சொத்து என் கைக்குத் திரும்பக் கிடைக்கணும். என்னையும் என் அம்மாவையும் எத்தனை வருஷமா கொத்தடிமை மாதிரி நடத்தின என் மாமா வீட்டில் இருக்கிற எல்லாருக்குமே தண்டனை வாங்கிக் கொடுக்கணும். அதுக்கு என்ன செய்யணும்னு கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன். அவங்க எல்லார் மேலேயும் ஏதாவது ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுக்கணுமா? வேற எதுவும் செய்யணுமா? எனக்குத் தெரியல. அதனால் தான் உன்கிட்ட கேட்கலாம்னு வந்தேன்” என்றாள்.

“அண்ணி, இந்த விஷயத்தைத்தான் அண்ணா பார்த்துக்கிறேன்னு சொன்னாரு. அதுக்கப்புறம் நீங்க தனியா வேற இதுக்கு வேலை பார்க்கணுமா? அதெல்லாம் எதுவும் தேவையில்லை. அண்ணா இந்த நேரம் எல்லா ‘பிராசஸையும்’ ஆரம்பிச்சிருப்பான். இன்னும் கொஞ்ச நாள்ல இது மொத்தமா முடிச்சுட்டு, உங்க முன்னாடி ‘டாகுமெண்ட்டோட’ வந்து ‘டாகுமெண்ட்டை’ கொடுக்கப் போறேன் பாருங்க” என்று சந்தோஷமாக அர்ஜுன் கூற…

‘அவன் அப்படிப் பண்ணக் கூடாதுன்னு தானே நான் அவசர அவசரமாக உன்னை பார்க்க வந்தேன்? அவனும் நானும் போட்டு இருக்கிற ‘டீலை’ நான் ஜெயிச்சே ஆகணும். இல்லனா அவன் கூடக் காலத்துக்கும் நான் ஒண்ணா இருக்க வேண்டி வரும். அதுல எனக்குக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை’ என்று நினைத்தவள்…

அர்ஜுனிடம், “இல்லை அர்ஜுன், ஒரு விஷயத்துக்கும் நான் வீராவை எதிர்பார்த்து இருக்கிறது இது என்னவோ போல இருக்கு. எனக்குத் தேவையான விஷயங்களை, எனக்குச் சேர வேண்டிய விஷயங்களை நானே முன்னாடி இருந்து முயற்சி செய்து வாங்கினா நானே எனக்கும் ஒரு திருப்தி இருக்கும். எல்லாமே சுலபமாகக் கிடைத்துவிட்டால் அந்தப் பொருளோட அருமை நமக்குத் தெரியாமேயே போயிடும். அதனாலதான் சொல்றேன். இதுக்கு ‘ப்ரொசிஜரா’ நான் என்ன எல்லாம் பண்ணணும்னு சொல்லு, அதைச் செய்கிறேன்” என்றாள் பூவிழி தீர்க்கமாக.

சிறிது நேரம் யோசித்தவன், “அண்ணி, புரியுது. உங்க தன்மானத்தை யார்கிட்டயும் விட்டுக் கொடுக்க நீங்க நினைக்கிறது இல்லைன்னு நீங்க பேசுறதுலேயே தெரிஞ்சுக்கிட்டேன்.

“நீங்க உங்க தாய் மாமா குடும்பத்து மேல முறையாக ஒரு ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுங்க. அவங்க உங்களை எந்த மாதிரி எல்லாம் கொடுமைப்படுத்தினாங்க? ஏன் அந்த மாதிரி நடந்துக்கிட்டாங்க? அதுக்கு எல்லாம் ஏதாவது ஆதாரம் இருக்கா? இந்த மாதிரி இருந்தா அவங்களை ‘வாரண்டோட’ அரெஸ்ட் பண்ணி, சில வருடமாவது ஜெயில்ல தூக்கிப் போட முடியும்” என்றான்.

“அர்ஜுன், அவங்க எங்களைக் கொடுமைப்படுத்தினது உண்மைதான். ஆனால், ஆதாரம் கேட்கிறாயே, நீ? அந்த மாதிரியெல்லாம் எதுவும் என்கிட்ட இல்லையேப்பா” என்றாள்.

“அண்ணி, நாம சட்டப்படி ஒரு காரியத்தைச் செய்யணும்னா அதுக்குக் கண்டிப்பா ஆதாரம் தேவைப்படும். அது இல்லைன்னா நம்மனால எதுவும் செய்ய முடியாது” என்றான்.

சிறிது நேரம் யோசித்த பூவிழி, “ஆதாரம் தானே? நான் ‘ரெடி’ பண்றேன். என்கிட்ட இருக்கு” என்றாள்.

“அப்படியா? அது என்ன ஆதாரம் அண்ணி?” என்றான் அர்ஜுன்.

தன்னிடம் இருக்கும் ஆதாரங்கள் பற்றி அர்ஜுனிடம் ஒளிவுமறைவு இல்லாமல் பூவிழி கூற, அவள் சொன்னதைக் கேட்கக் கேட்க அர்ஜுனுக்கு ஆத்திரமாக வந்தது. “என்னன்னு சொல்றீங்க? இவ்வளவு தூரம் அவங்க உங்க கிட்ட நடந்து இருக்காங்களா? அவங்களைச் சும்மா விடக் கூடாது. நீங்க கவலையே படாதீங்க. அவங்களை ஜெயிலுக்குள்ள புடிச்சுப் போட்டு, ‘மிக்ஸியில் முட்டித் தட்டி களி திங்க’ வைக்குறேன்” என்றான் சற்று கோபமாக.

“என் தாய்மாமன் குடும்பத்தில் இருக்கிற மூன்று பேர் மேல மட்டும் நான் ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுக்கணும். அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கு. அந்தப் பொண்ணு மேல மட்டும் நான் ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுக்க விரும்பல. ஏன்னா, அவங்க எங்களைக் கொடுமைப்படுத்தும் போதெல்லாம் அந்த வீட்டில் எனக்கும் என் அம்மாவுக்கும் ஆறுதலா இருந்தது அவ மட்டும்தான்” என்றாள்.

“அப்படியா அண்ணி? அந்த வீட்டில் அப்படிப்பட்ட ஒரு வீட்டில் உங்களுக்கு ஆறுதலா இருந்தது?” என்று கேட்டான்.

“உங்க பேரு ரியா. நான் என்னோட மாமா பொண்ணு. ரொம்ப நல்ல ‘டைப்’. அதிர்ந்து கூடப் பேச மாட்டாள். யாருக்கும் கெடுதல் நினைக்கிற குணம் அவளுக்குக் கிடையாது” என்றாள்.

பூவிழி சொல்வது எல்லாம் கேட்டவன், சில கேள்விகளை அவளிடம் கேட்டு குறித்துக்கொண்டு, கான்ஸ்டபிள் அய்யாக்கண்ணுவை அழைத்து, பூவிழியிடம் விவரங்களைக் கேட்டு எழுதி வாங்கிக்கொள்ளச் சொன்னான்.

அவள் எழுந்து வெளியே ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுக்கச் செல்லப் போக, “அப்போ, நீ இரண்டு விஷயம் சொல்லணும்னு சொன்னீங்களே, அந்த இன்னொரு விஷயம் என்ன?” எனக் கேட்டான்.

“அதுவும் அர்ஜுன். அதை ரசிகா சொல்லுவா. நான் போய்க் ‘கம்ப்ளெயிண்ட்’ எழுதி கொடுத்துட்டு வந்துடறேன். நீங்க பேசிக்கிட்டு இருங்க” என்று ரசிகாவைப் பார்த்து ‘சொல்லு’ என ஜாடை செய்ய… அவளோ, “ம்ஹும்… வேணாம். முடியாது” என்று தலையாட்டினாள்.

“ஏய், ஒழுங்காகச் சொல்லுடி! இன்னும் எத்தனை நாளைக்கு உன் மேல சுமத்தப்பட்ட பழியோடவே சுத்திக்கிட்டு இருக்கப் போற? திரும்பவும் நீ டாக்டராகக் கம்பீரமாக வலம் வர வேண்டாமா? இப்படியே வீட்டிலேயே இருந்துட்டு எல்லாருக்கும் சமைச்சுப் போட்டுட்டு நேரத்தைக் கடத்தலாம்னு நினைச்சிட்டு இருக்கியா? அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். ஒழுங்காக எல்லா விஷயத்தையும் அர்ஜுன்கிட்ட சொல்லு. கண்டிப்பா அர்ஜுன் உனக்கு ‘சப்போர்ட்’ பண்ணுவான்” என்று அர்ஜுனைத் திரும்பிப் பார்க்க…

இதுவரை இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை புரியாமல் பார்த்த அர்ஜுன், பூவிழி பேசியதை வைத்து ரசிகாவிற்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

அர்ஜுனிடம் திரும்பிய பூவிழி, “அர்ஜுன், இவ சிட்டியிலேயே மிகப்பெரிய மருத்துவமனை ஆன ‘ஃபார்ச்சூன்’ மருத்துவமனையில் ‘pediatrition’ (குழந்தைகள் நல மருத்துவர்) ‘ஒர்க்’ பண்ணிட்டு இருந்தா. அவ ரொம்ப ‘டிலைட்’, ‘டெடிகேட்டடு’ ஒரு டாக்டர். அதுவும் குழந்தைகளைக் கையாளும் போது எவ்வளவு கவனமா இருக்கணும்னு உங்களுக்கு நல்லா தெரியும். அந்தளவுக்கு ‘சின்சியரா’ அவ வேலை பார்ப்பாள். ‘இன்னைக்கு நான் இதைப்போல எல்லாத்தையும் நானே சொல்லிக்கிட்டு இருக்கணுமா?’ நான் போய் என் விஷயத்தைக் கவனிக்கிறேன். ஒழுங்காக நடந்ததை அர்ஜுன்கிட்ட சொல்லு. அவன் பார்த்துப்பான்” என்று, “அர்ஜுன், என்னன்னு கேட்டு கொஞ்சம் அதையும் பண்ணிக் கொடுத்துடு” என்றவள் வெளியே செல்லப் போக…

“எங்கேடி போற? இரு, நானும் வரேன். இல்லை, நீயும் இரு. நம்ம கிட்ட ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுத்துட்டு அதுக்கப்புறம் ஒண்ணாகப் போகலாம்” என்றாள்.

“நான் எங்கேயும் போகல. வெளியே தான் இருக்கேன். நான் ரெண்டு பேரும் சீக்கிரமா வீட்டுக்குப் போய் ஆகணும். நான் போக லேட் ஆச்சுன்னா இவனோட அண்ணனுக்கு மூக்கு வேர்த்துடும். எனக்கு ஃபோன் பண்ண ஆரம்பிச்சுடுவான். நீ பேசிக்கிட்டு இரு. நான் ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுத்துட்டு வரேன்” என்றவள் வெளியே சென்றாள்.

‘இவனிடம் தன்னை எப்படித் தனியாக விட்டு செல்கிறாளே! என்ன சொல்லி இவனிடம் பேசுவது?’ என்று தயக்கத்தோடு பூவிழியைப் பார்த்துக்கொண்டிருந்தவள், திரும்பி அர்ஜுனைப் பார்க்க… அவன் டேபிளில் கன்னத்தில் கை வைத்து ரசிகாவைக் ‘குறுகுறு’வென பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

“ஹாய் முயல்குட்டி… என்ன அப்படி முழிக்குற… உன் ஃப்ரெண்டு உன்னைத் தனியா என்கிட்ட விட்டுட்டுப் போயிட்டாளேன்னுதானே யோசிச்சிட்டு இருக்க? ‘என்ஜாய்!'” அவள் மனதைச் சரியாகப் படித்தவன் போல…

அதைக் கேட்டு அவள் ‘ஆமாம்’ என்று தலையாட்டி, உடனே அவசரமாக ‘இல்லை’ என்று மறுக்கவும் செய்தாள்.

“சரி, சொல்லு முயல்குட்டி. உனக்கு என்ன பிரச்சனை?” என்றான் அர்ஜுன்.

“இங்க பாரு. உன்னைவிட வயசுல மூத்தவ நான். இந்த மாதிரி ‘முயல்குட்டி’, ‘அப்படி’, ‘இப்படி’னு என்கிட்ட பேசுகிற வேலை வேண்டாம். ஒழுங்காக மரியாதை கொடுத்துப் பேசு” என்றாள் அவனைப் பார்த்து கோபமாக.

“ம்ச்… சும்மா என்னோட வயசு பெரியவா, பெரியவன்னு சொல்லிக்கிட்டு இருக்காதே. அதைக் கேட்டாலே எனக்கு இருட்டாகுது. உன்னைப் பார்க்கிறதுக்கு ஒண்ணும் அவ்வளவு வயசான பொண்ணு மாதிரி தெரியல. அழகாகச் ‘சிக்கு’னு சின்னப் பொண்ணு மாதிரி தானே இருக்க. உன்னை எப்படி கூப்பிடுவது எனக்குப் பிடிச்சிருக்கு” என்றான்.

அவனை முறைத்தவள், “நீங்க இப்படி பேசுவதாக இருந்தால், நான் கொடுக்க வந்த ‘கம்ப்ளெயிண்ட்’ விட்டுட்டு உங்க மேலதான் புகார் கொடுக்கணும். என்கிட்ட அத்துமீறி பேசுறீங்கன்னு சொல்லிட்டு” என்றாள்.

“என்ன இது? என் ஸ்டேஷனுக்கு வந்து என் மேலேயா ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுக்கப் போற?” என்று கேட்டவன் சிரித்தான்.

“அப்போ ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுக்கிறதுதான் கொடுக்கிறேன். இதையும் சேர்த்து எழுதி கொடுத்துடு” என்றவன் தான் இருந்த இடத்தை விட்டு அவள் அருகில் நெருங்கி வர… வேகமாக எழுந்து வருவதைப் பார்த்ததும் அதிர்ந்து சேரில் இருந்து எழுந்து வெளியே செல்லப் போக… அவள் கையை எட்டிப் பிடித்து இழுத்துத் தன் கைவளைவிற்குள் நிற்க வைத்தான் அர்ஜுன்.

அவனை அதிர்ந்த விழிகளோடு ரசிகா பார்க்க… அர்ஜுன் அவள் முகத்தை நோக்கி அவளுக்கு முத்தமிடக் குனிந்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured